Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, January 28, 2011

ஆர் எஸ் எஸ்,க்கு ஆதரவு, நிதி புலனாயவேண்டும்?

புதுதில்லி, ஜன.28 குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர்களுக்கு பாஜக ஆளும் மாநிலங்கள் அடைக்கலம் தருகின்றன என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளின் செயல்பாட்டை அவர் "சங்கி தீவிரவாதம்" என்றும் வர்ணித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தில்லியில், மனித உரிமை அமைப்புகள் தொடர்பாக இன்று நடைபெற்ற தேசிய கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், இஸ்லாமிய இளைஞர்கள் தவறுதலாக தீவிரவாத வழக்குகளில் கைது செய்யப்படுகின்றனர் என்றும் அவர் கூறினார்.

ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் சார்பு நிறுவனங்களுக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்பது குறித்து விசாரணை நடத்தவேண்டும். சுவாமி அசிமானந்த் போன்றவர்களுக்கு குஜராத் அடைக்கலம் வழங்குகிறது." என்றும் திக்விஜய் சிங் குறிப்பிட்டார்.

அஜித்துடன் இணைகிறார் அனுஷ்கா

பில்லா 2 படத்தின் சூட்டிங் ஏப்ரலில் தொடங்கவிருப்பதாகவும், அப்படத்தில் அஜித் ஜோடியாக அனுஷ்கா நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி யுள்ளன. அஜித் நடித்த பில்லா ரீ-மேக் படம் திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அஜித்தின் அதிரடி நடிப்பும், நயன்தாரா - நமீதாவின் கவர்ச்சியும், ஒளிப்பதிவும் படத்திற்கு வெற்றியை தேடித் தந்தது.

பில்லா வெற்றிக்கு பிறகு பில்லா பார்ட் 2 படம் எடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் அஜி்த அடுத்த படங்களில் பிஸியாகி விட்டதால் பில்லா 2 தள்ளிப்போனது. இந்நிலையில் இப்போது மீண்டும் பில்லா பற்றிய பேச்சு எழுந்துள்ளது. டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சுரேஷ் பாலாஜி தயாரிக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏப்ரல் மாதம் பில்லா 2  படத்தின் சூட்டிங் தொடங்குகிறது. அஜித் ஜோடியாக நடிக‌ை அனுஷ்கா நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே பில்லா தெலுங்கு பதிப்பில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, January 27, 2011

அவசர உலகத்தில்,.கொஞ்சம் இதை படியுங்கள்!

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த அவசர உலகில் Fast Foods எனப்படும் அவசர உணவுகளின் தேவைகள் அதிகரித்து விட்டன. அதற்கேற்றாற் போல் வீதிக்கு வீதி, முக்குக்குமுக்கு அவசர உணவு விடுதிகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன.

பாரம்பரியமான உணவுகளை ஆற அமர ரசித்து ருசித்துச் சாப்பிடும் காலம் மெல்ல மெல்ல மலையேறி வருகிறது. இன்று அவசர உணவுகளை அள்ளி விழுங்கிவிட்டு ஓடும் அவல நிலையே எங்கும் நிலவுகிறது. குறிப்பாக குழந்தைகளை இந்த வகை உணவுகள் அதிகம் கவர்கின்றன. விளைவு - சிறு வயது முதல் அவர்களுக்குப் பலவித நோய்கள் தாக்குகின்றன. குறிப்பாக உடல் பருமன் (Obesity) ஏற்படுகிறது.

இதனாலேயே பிரிட்டிஷ் அரசு தொலைக்காட்சிகளில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் அவசர உணவுகளின் விளம்பரங்களை 2006-ம் ஆண்டு தடை செய்தது.

நகர வாழ்க்கையும், அவசர உணவுகளும் இணைக்க முடியா ஜோடிகளாக மாறிவிட்டன.

2006-ம் ஆண்டு மட்டும் உலக அவசர உணவுச் சந்தையின் வளர்ச்சி 4.8 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய சந்தையான இந்தியாவில் வருடத்திற்கு 4.1 சதவீதம் இது வளர்ச்சியடைந்து வருகின்றது.

அவசர உணவின் ஜாம்பவானான மெக்டோனால்ட் 6 கண்டங்களில், 126 நாடுகளில் தனது கிளைகளைப் பரப்பியுள்ளது. மொத்தம் 31,000 கடைகள் அதற்கு உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எந்த அளவுக்கு அவசர உணவுகளின் சந்தைகள் அதிகரித்து வருகின்றன என்பது இதன் மூலம் விளங்கும்.

மெக்டோனால்டுக்கு அடுத்து அவசர உலகின் ஜாம்பவானாக விளங்கும் பிஸ்ஸா ஹட் 97 நாடுகளில் கால் பதித்துள்ளது. அவசர உணவுகளில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதன்மையானதாக வருவது அமெரிக்காதான்.

கடந்த 2003ல் எடுத்த கணக்கெடுப்பின்படி, உடல் பருமன்தான் அமெரிக்கர்களின் உடல்நலப் பாதிப்புகளுக்கு தலையாய காரணம் எனக் கண்டுபிடித்துள்ளார்கள். இதனால் ஒவ்வொரு வருடமும் சுமார் நான்கு லட்சம் அமெரிக்கர்கள் மரணிக்கிறார்களாம். சுமார் 6 கோடி பேர் உடல் பருமனுள்ளவர்களாக அமெரிக்காவில் உள்ளனர். சுமார் 12.7 கோடி பேர் அதிக எடையுள்ளவர்களாக இருக்கின்றனர்.

அவசர உணவுகள் ஏற்படுத்தும் விளைவுகளைப் பார்த்தீர்களா? இந்த நிலை நமது நாட்டுக்கும் வரவேண்டுமா?

MSAH

இந்திய இருட்டு சட்டம்!

புலிகள் இயக்கத்திற்கு தடை விதித்தது செல்லும் என தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வைகோ தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 10ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது.

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ தாக்கல் செய்த மனுவுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு:சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் படி, பாதிக்கப்பட்ட நபராக மனுதாரரை கருத முடியாது. அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தான் பாதிக்கப்பட்டதை ஆதாரங்களுடன் விளக்காமல் இருக்கும் வரை இந்த ரிட் மனு விசாரணைக்கு உகந்ததல்ல.அவர் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் கூட ஐகோர்ட்டுக்கு உள்ள அதிகாரவரம்பை பயன்படுத்த வேண்டும் என கோர முடியாது. தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. டில்லியில் இது அமைந்துள்ளது.

இம்மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு தகுதியில்லை. எனவே, இதை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.வைகோ தாக்கல் செய்த மனு: விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு, 1992ம் ஆண்டு மே மாதம் மத்திய அரசு தடை விதித்தது. அதன் பின், அவ்வப் போது தடை நீட்டிக்கப்பட்டது. கடைசியாக, கடந்த மே மாதம் தடை நீட்டிக்கப்பட்டது. தடை விதிக்க போதிய காரணங்கள் உள்ளதா, இல்லையா என்பதை முடிவு செய்ய, தீர்ப்பாயத்திற்கு இந்த வழக்கு அனுப்பப்பட்டது.தீர்ப்பாயத்தில், என் மனுவை தாக்கல் செய்தேன். சென்னை, ஊட்டியில் தீர்ப்பாயம் நடத்திய விசாரணையில், கலந்து கொண்டேன். சாட்சிகள் தாக்கல் செய்த மனுக்களின் நகல்களை எனக்கு தீர்ப்பாயம் வழங்கவில்லை. தடை செய்ததற்கு ஆதாரமாக சரியான காரணங்களை மத்திய அரசு காட்டவில்லை, என தீர்ப்பாயத்தில் கூறினேன்.

என் கருத்தை தீர்ப்பாயம் நிராகரித்து விட்டது. புலிகள் இயக்கத்தின் மீதான தடையை உறுதி செய்ய, போதிய காரணங்கள் உள்ளது என தீர்ப்பாயம் முடிவுக்கு வந்துள்ளது. புலிகள்ஆதரவு அமைப்பு, தனி நபர்கள், அனுதாபிகள் ஆகியோரின் நடவடிக்கைகளை காரணம் காட்டி, புலிகள் இயக்கத்தை சட்டவிரோத அமைப்பு என அறிவிக்க முடியாது.
புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களால், குறிப்பிட்ட செயல்கள் செய்யப்பட்டன என்பதை நிரூபிக்க, மத்திய அரசு தரப்பில் எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை. எனவே, கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஹாட்டாபிக்ஸ்!நயன்

நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள ரூட் கிளியர் ஆனதில் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறாராம் பிரபுதேவா. பிரபுதேவா வாங்கி கொடுத்த வீட்டில் தான் கேரளாவில் குடி இருக்கிறாராம் நயன்.

நயன்தாரா-பிரபுதேவா காதலுக்கு ஆரம்பத்தில் தடைபோட்ட தன் ‌பெற்றோர் வீட்டிற்கு கூப்பிட்டும், அவங்க வீட்டில் தங்காமல் பிரபுதேவா கேரளாவில் தனக்கு காதல் பரிசளித்த வீட்டிலேயே தனிக் குடித்தனம் இருக்கிறாராம் நயன். இதுதான் கோலிவுட்டில் நயன்-பிரபு பற்றி லேட்டஸ் ஹாட்டஸ்ட் தகவல்கள்!

எல்லாம் சரி, முதல்மனைவி ரமலத்தை முறைப்படி பிரிய பிரபுதேவா 30கோடி செலவு செய்தாரமே, இந்த சங்கதி நயனுக்கு தெரியுமா?

இணையத்தளத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட்

மும்பை, ஜன.27: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) யாகூ இந்தியா ஆகியவை இணைந்து அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடங்குகிறது.

iccevents.yahoo.com என்ற பெயரில் இந்த இணையதளம் தொடங்கப்படுகிறது.

கிரிக்கெட் போட்டிகள் மற்றும் அதுதொடர்பான தகவல்கள், ஆட்டம் நடைபெறும்போது அதுதொடர்பான விவரங்கள், விடியோ காட்சிகள் உள்ளிட்ட விவரங்களை இந்த இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

இணையதளம் மூலம் கேப், டி சர்ட் உள்ளிட்ட பொருள்களையும் வாங்கிக்கொள்ளலாம். இந்தத் தகவல்களை ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

3 ஜி,அதிநவீன வசதி.,ஏர்டெல்

சென்னை : கர்நாடகாவைத் தொடர்ந்து அதிவேக டேட்டா டவுன்லோட், வீடியோ அழைப்புக்கள், நேரடி டிவி ஒளிபரப்புக்கள் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடனான 3 ஜி சேவையை சென்னை மற்றும் கோவையில் ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. டாடா, ரிலையன்ஸ் கம்யூனிக்கேஷனை தொடர்ந்து 3ஜி உரிமம் பெற்ற 3வது நிறுவனம் ஏர்டெல் ஆகும். இவை தவிர பிஎஸ்என்எல்., எம்டிஎன்எல் உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்களும் இச்சேவைக்கான உரிமத்தை பெற்றுள்ளன. ஏர்டெல் வாடிக்கையாளர்கள் சிம் கார்டை மாற்றாமலேயே இந்த வசதியை பெற முடியும் எனவும், லேப்டாப் பயன்படுத்துவோரும் இந்த சேவையை பெறலாம் எனவும் பாரதி ஏர்டெல் தலைவர் அடுல் பின்தல் தெரிவித்துள்ளார்.

Wednesday, January 26, 2011

முயற்சி திருவினையாக்கும், யூசுப் தன்னம்பிக்கை

உலக கோப்பை தொடரில் ஏற்படும் நெருக்கடி குறித்து கவலையில்லை. இந்திய ரசிகர்கள் எந்த சூழ்நிலையிலும் எங்கள் பக்கம் இருந்து ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன். என இந்திய வீரர் யூசுப் பதான் தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தது. செஞ்சுரியனில் நடந்த கடைசி போட்டியில், எழுச்சி கண்ட யூசுப் பதான், தென் ஆப்ரிக்க வீரர்களின் "ஷார்ட் பிட்ச்' பந்துகளை, விளாசி அதிரடியாக சதம் அடித்தார். இதனிடையே எதிர்வரும் உலக கோப்பை தொடர் குறித்து யூசுப் பதான் கூறியது.

தென் ஆப்ரிக்கா தொடரில் சீனியர்' வீரர்கள் சச்சின், சேவக், காம்பிர் ஆகியோர் இல்லாத நிலையிலும் எங்களது தன்னம்பிக்கை அதிகமாக இருந்தது. ஒவ்வொருவரும் கடுமையாக போராடினோம். இதற்கு முக்கிய காரணம் பயிற்சியாளர் கிறிஸ்டன் தான். அங்குள்ள சூழ்நிலைகளை நன்கு அறிந்த அவர், மிகவும் உதவியாக இருந்தார். அணி நிர்வாகமும் பல திட்டங்களை செயல்படுத்தியது.

இதற்கேற்ப, கடைசி போட்டியில் வென்று, ஒருநாள் தொடரை வெல்ல முடியும் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது. என்ன செய்ய? நினைத்ததெல்லாம் நடப்பது இல்லையே. இருந்தாலும், கடந்த சில தொடர்களை விட, தென் ஆப்ரிக்க மண்ணில் இம்முறை வியக்கத்தக்க வகையில் விளையாடினோம். ஒருநாள் தொடரை வென்று இருந்தால் முத்தாய்ப்பாக இருந்து இருக்கும். அடுத்து உலக கோப்பை தொடர் வரவுள்ள நிலையில், அது குறித்து தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க முடியாது.

உலக கோப்பை தொடரில் நெருக்கடி குறித்தெல்லாம் அதிக கவலையில்லை. இறைவன் கொடுத்த இயற்கையான திறமையை நம்பினால் போதும், மற்றவை தானாக நடக்கும். இந்திய அணிக்காக எந்த சிக்கலும் இல்லாமல் விளையாட வேண்டும். அணி வெற்றி பெறும் வரை, களத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என நினைத்துள்ளேன்.

உலககோப்பை தொடரில் சிறப்பான மற்றும் மோசமான நேரங்களில் ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். போட்டியில் தோற்கும் நேரங்களில், இழந்த தன்னம்பிக்கையை மீண்டும் பெற இந்த ஆதரவு உதவும். இத்தொடரில் இந்திய ரசிகர்கள் எப்போதும் எங்கள் பக்கம் இருப்பார்கள் என, உறுதியாக நம்புகிறேன்.

உள்ளூர் மற்றும் ஐ.பி.எல்., போட்டிகளில் பல இடங்களில் களமிறங்கி பேட்டிங் செய்து, அணியை தோல்வியில் இருந்து மீட்டு, வெற்றிபெறச் செய்துள்ளேன். சர்வதேச அளவில் நியூசிலாந்து அணிக்கு எதிரான சதம், நம்பிக்கையை அதிகரித்தது. ஆனால் தென் ஆப்ரிக்காவில் கடைசி வரை களத்தில் இருந்து, எந்த போட்டியிலும் வெற்றி தேடித் தராதது மிகவும் ஏமாற்றமாக இருந்தது. எதிர்வரும் உலக கோப்பை தொடரில் இதை நிறைவேற்றுவேன் என நம்புகிறேன்.
இவ்வாறு யூசுப் பதான் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர் முதல் ஸ்பெக்ட்ரம் வரை

முதல்வர் கருணாநிதி மஞ்சள் துண்டு போட்டிருப்பதோடு தமிழ்நாட்டிற்கும் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து விட்டார், என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கடும் குற்றம் சாட்டினார். திருக்கழுக்குன்றம் அடுத்த காட்டூர் கிராமத்தில், ஒன்றிய கவுன்சிலர் ராஜா- வெண்ணிலா ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்து வைகோ பேசியதாவது: திருக்கழுக்குன்றத்தில் நடந்த தி.மு.க., கூட்டத்தில் எம்.ஜி.ஆர்., கணக்கு கேட்டதால் அவரை கட்சியை விட்டு கருணாநிதி நீக்கினார். என்னையும் கொலைப்பழி சுமத்தி வெளியேற்றினார்.

தமிழகத்தில் தற்போது பாதுகாப்பு இல்லை. போலியோ சொட்டு மருந்து போட்டுவிட்டு பாதுகாப்பாக குழந்தைகள் திரும்ப முடியாது. பெண்களும் பாதுகாப்புடன் செல்ல முடிவதில்லை. உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பில்லை. உங்கள் நிலத்தை அபகரிக்கும் நிலைதான் உள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் நகரத்து மக்களுக்கு மட்டும்தான் தெரியும் என, உளவுப் பிரிவு போலீசார் அரசுக்கு கருத்து சொல்லி வருகின்றனர். நகர மக்கள் செய்தித்தாளை மேலோட்டமாக படித்தும், "டிவி' பார்த்தும் விட்டு விடுகின்றனர். கிராம மக்களோ,முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை படித்து விட்டு விவாதிக்கின்றனர்.

பின்னர் நிருபர்களிடம் பேசும்போது: ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில், 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக, உச்சநீதிமன்றம் சவுக்கடி கொடுத்த பின்னரே, சி.பி.ஐ., விசாரணை செய்வதாக பாவலா காட்டுகிறது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல், இமயமலையையே மறைக்கப் பார்க்கின்றனர்.

மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுக்கிறார். கார்கில் வீரர்களுக்கு வீடு ஒதுக்கியதில் காங்கிரஸ் கட்சியினர், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் என பல தரப்பினரும் ஊழல் செய்துள்ளனர். காமன்வெல்த் விளையாட்டிலும் 71 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளனர். காங்கிரஸ் அவர்களை பாதுகாக்கிறது. காங்கிரஸ் ஆட்சி வீழும். இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர் பட்டம்,சச்சினுக்கு

டெண்டுல்கர் உட்பட நான்கு பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க, புதுச்சேரி பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. புதுச்சேரி பல்கலைக் கழக அகடமி கவுன்சில் கூட்டம், துணைவேந்தர் தரீன் தலைமையில் நடந்தது. இதில், நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளக்குபவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதன்படி இந்தாண்டு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், உலக அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த வாங்முக்தா முத்தையா, வேதியியல் துறையில் சிறந்து விளங்கியதற்காக அண்மையில் நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராம கிருஷ்ணன், மருத்துவத் துறையின் பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் செரியன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக் கழக செயற்குழுவில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு, ஜனாதிபதியின் மேற்பார்வைக்கு அனுப்பப்பட உள்ளது. மார்ச் மாதம் நடைபெற உள்ள பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில், டெண்டுல்கர் உட்பட நான்கு பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க அனைத்து ஏற்பாடுகளை, புதுச்சேரி பல்கலைக் கழகம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

Tuesday, January 25, 2011

வரதட்சணை கொடுமை, சபாஸ் போலீஸ்

அமெரிக்காவுக்கு தப்பிச்செல்ல இருந்த கணவனை, தகுந்த நேரத்தில் போலீசில் முறையிட்டு மடக்கினார் மனைவி. சாப்ட்வேர் இன்ஜியரான கணவன், மும்பை ஏர்போர்ட்டில் குடியுரிமைப்பிரிவு அதிகாரிகளிடம் சிக்கி திருதிருவென விழித்தார். இவரை விசாரணைக்காக கோவைக்கு அழைத்து வர தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

கோவை, ராமநாதபுரம், டி.நகர், அய்யப்பன் கோவில் வீதியில் வசிப்பவர் சுமித்ரா(29) எம்.பி.ஏ., பட்டதாரி. இவருக்கும் திருச்சி, முசிறியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சரவணகுமார்(31) என்பவருக்கும், 2006ல் ஆடம்பர திருமணம் நடந்தது. பெண் வீட்டார் 50 சவரன் நகை கொடுத்து, 10 லட்ச ரூபாய் செலவில் திருமணத்தை விமரிசையாக நடத்தினர். திருமணம் நடந்த போது, சுமித்ரா கோவையிலுள்ள தனியார் வங்கியிலும் சரவணகுமார் பெங்களூரிலுள்ள விப்ரோ நிறுவனத்திலும் பணியாற்றினர். அடுத்த சில நாட்களிலேயே சரவணகுமாருக்கு அமெரிக்காவிலுள்ள நிறுவனத்தில் வேலை கிடைத்து அங்கு சென்றுவிட்டார். அதன்பின், கோவையிலுள்ள மனைவி சுமித்ராவுக்கு போன் செய்த அவர், "உனது மாத சம்பளத்தை என் வங்கிக் கணக்கில் தவறாமல் செலுத்த வேண்டும் ஏற்கனவே, நீ வாங்கிய இரண்டு மாத சம்பளம் 50 ஆயிரம் ரூபாயை வங்கியில் செலுத்து' என, கட்டளையிட்டார். பணத்தின் மீது கணவன் குறியாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த சுமித்ரா, அதன்படியே செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2009, மே மாதம் கோவைக்கு வந்த சரவணகுமார், மனைவியையும் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும், சரவணகுமாரின் உண்மையான முகம் வெளிப்பட்டது. "நீ, படித்துவிட்டு வீட்டில் சும்மா இருக்க வேண்டாம்' எனக்கூறி, மனைவிக்கு அங்கேயே வேலை தேடினார். இதற்காக, சுமித்ராவின், "பயோ-டேட்டோ'வை பல்வேறு நிறுவனங்களும் இணையதளம் வழியே அனுப்பினார். வேலைக்குச் செல்ல மறுத்த சுமித்ரா, தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்ததும் அடித்து துன்புறுத்த துவங்கினார். கருக்கலைப்பு செய்யாவிடில், விவாகரத்து செய்துவிடுவேன் எனவும் மிரட்டினார். மிரண்டு போன சுமித்ரா, கருக்கலைப்பு செய்து கொண்டார். கணவரின் தொல்லை தாங்காமல் அடுத்த சில நாட்களிலேயே கோவை வந்துவிட்டார். தன் நோக்கத்துக்கு உடன்படாததால் ஆத்திரமடைந்த சரவணகுமார், மனைவியுடன் போனில் பேசுவதை தவிர்த்தார்; தன் மொபைல் போன் எண்களையும் மாற்றிவிட்டார். கணவருடன் தொடர்பு கொள்ள முடியாமல் சுமித்ரா பரிவித்து வந்த நிலையில், எவ்வித தகவலும் தெரிவிக்காமல் கோவை வந்திறங்கினார் சரவணகுமார். அவருடன் சேர்ந்து வாழும் முயற்சியில் ஈடுபட்ட சுமித்ராவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அதிருப்தி அடைந்த அவர், போலீசில் முறையிடுவதாக எச்சரித்துள்ளார். போலீசார் கைது செய்துவிடுவார்களோ என உஷாரான சரவணகுமார், அமெரிக்காவுக்கு தப்பிச் செல்லும் முயற்சியில் இறங்கினார். இதுகுறித்து, கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் அளித்த சுமித்ரா, அமெரிக்காவுக்கு தப்பிச்செல்லும் முன் தன் கணவரை பிடிக்க வேண்டுமென்றும், அவர் வரதட்சணை துன்புறுத்தலில் ஈடுபட்டார் என்றும் தெரிவித் திருந்தார். ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சரவணகுமார் அமெரிக்காவுக்கு தப்பிச் செல்லும் முயற்சியை முறியடிக்கும் விதமாக, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து, முக்கிய விமான நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது பாஸ்போர்ட் மற்றும் போட்டோ விவரங்கள் பரிமாறப்பட்டன. இந்நிலையில், கடந்த 21ம் தேதி அமெரிக்காவுக்கு செல்வதற்காக மும்பை விமான நிலையம் சென்ற சரவணகுமாரை, அங்குள்ள குடியுரிமைப்பிரிவு அதிகாரிகள், விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்; காவலில் வைக்கப்பட்டார். இதுகுறித்த தகவல் கோவை மாநகர போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. சரவணகுமாரை கோவைக்கு அழைத்துவர, கமிஷனர் சைலேந்திரபாபு உத்தரவுப்படி, தனிப்படை போலீசார் மும்பை விரைந்துள்ளனர்.

பா.ஜ.க வுக்கு வைத்த ஆப்பு! ரயில்வே??

மும்பை: ஸ்ரீநகரில் லால்சவுக்கில் தேசிய கொடியை ஏற்றுவதற்காக ரெயிலில் புறப்பட்ட கர்நாடகா மாநில பா.ஜ.க தொண்டர்கள் தூக்கத்திலிருந்து விழித்த பொழுது தாங்கள் பயணித்த ரெயில் வந்த வழியிலேயே வேகமாக திரும்பிச் செல்வதை கண்டனர்.

நீண்டகால மக்கள் போராட்டத்தினால் அமைதியை இழந்த கஷ்மீர் சில நாட்களாக அமைதியாக உள்ளது. அமைதியை குலைப்பதையே வழக்கமாகக் கொண்ட பாசிச சங்க்பரிவாரின் அரசியல் முகமூடியான பா.ஜ.கவின் லால்சவுக்கில் தேசியகொடியை ஏற்றும் நாடகம் மீண்டும் கஷ்மீரில் அமைதியை குலைத்துவிடும் என கருதி மத்திய-மாநில அரசுகளின் உத்தரவின்பேரில் பாதுகாப்பு ஏஜன்சிகள் தலையிட்டு 1800க்கும் அதிகமானோரை ஏற்றிச் சென்ற ரெயிலை திருப்பி அனுப்பினர்.

சிறப்பு ரெயில் மூலம்தான் பா.ஜ.க மற்றும் அக்கட்சியின் இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சா தொண்டர்கள் ஸ்ரீநகருக்கு புறப்பட்டிருந்தனர்.

ஜம்முகஷ்மீருக்கு வெளியேயிருந்து போராட்டக்காரகள் எவரும் உள்ளே நுழையாமலிருக்க மாநில அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதிக மானோர் கஷ்மீருக்கு வந்தால் பிரச்சனை இன்னும் மோசமாகும் எனக் கருதி மத்திய பாதுகாப்பு ஏஜன்சிகளும், ரெயில்வே பாதுகாப்பு படையும் மாநில போலீசாரும் இணைந்து பெங்களூரிலிருந்து புறப்பட்ட ரெயிலை திருப்பி அனுப்பினர்.

பெங்களூரிலிருந்து புறப்பட்ட ரெயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மஹராஷ்ட்ரா மாநிலத்தை வந்தடைந்தது. அஹ்மத் நகருக்கு அடுத்துள்ள தவ்த் ரெயில்வே ஸ்டேசனுக்கு ரெயில் வந்தபொழுதே முன்னரே தயாராக்கிய திட்டத்தின் படி 2 பெட்டிகள் ரெயிலுடன் இணைக்கப்பட்டது. அவற்றில் 200 போலீசார் ஏறினர். தொடர்ந்து ரெயில் அடுத்துள்ள ஸரோல-கஸர் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டது. அங்கு ரெயில் எஞ்சின் பிரித்தெடுக்கப்பட்டு ரெயிலுக்கு எதிர் பக்கம் பொருத்தப்பட்டது.

இங்குதான் ரெயில் பெங்களூருக்கு திரும்பிச் செல்வதாக அறிவிப்புச் செய்யப்பட்டது. விழித்திருந்த சிலர் அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டனர். ஆனால், காலம் கடந்துவிட்டது. ரெயில் கர்நாடகா மாநிலம் குல்பர்காவை நோக்கி வந்துக்கொண்டிருக்கும் பொழுதுதான் தூங்கிக் கொண்டிருந்த நபர்களுக்கு ரெயில் பெங்களூரை நோக்கி திரும்பிச்செல்வது புரிந்தது.

பாவத்திற்கு பரிகாரம்? ரஞ்சிதா

நீண்ட இடைவெளிக்கு பின் நடிகை ரஞ்சிதா, பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரது நடை, உடை, பாவனை அனைத்தும் சாமியார் நித்யானந்தாவை போன்றிருந்தது.

சாமியார் நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகளின் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா, சில மாதங்களாக எங்கிருந்தார் என்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த டிச, 31ம் தேதி பெங்களூரில் தனியார் ஓட்டலில் நிருபர்களை சந்தித்து தன் மீது எந்த தவறும் இல்லை என தன்னிலை விளக்கம் அளித்தார்.

பின்னர் வெளியில் தலை காட்டாமல் இருந்த ரஞ்சிதா, நேற்று பெங்களூரு, காக்ஸ்டவுனில் பாரதிநகர் மக்கள் நல சங்கத்தினரின், இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். காலை 10.30 வருவார் என, அறிவிக்கபட்டிருந்த நிலையில், காலதாமதமாக, 11.15 மணிக்கு ரஞ்சிதா வந்தார். அவருடன் ஆசிரம பெண் ஒருவர் உடன் வந்தார். இதிலிருந்து அவர், ஆசிரமத்தில் தான் தங்கியிருக்கிறார் என உறுதி செய்யமுடிந்தது. ரஞ்சிதா காரை விட்டு இறங்கியதும், நேராக அங்கிருந்த காக்ஸ்டவுன் கங்கம்மா கோவிலுக்கு சென்று, சாமி தரிசனம் செய்தார். இலவச சேலை வழங்கிய ரஞ்சிதா மூதாட்டிகளிடம் சிரித்தபடி நலம் விசாரித்தார். மூதாட்டி ஒருவர், ரஞ்சிதாவை, தலையில் இருந்து, கால் வரை தடவிக்கொடுத்து நலம் விசாரித்தார். ஜந்து நிமிடம் மட்டுமே அங்கிருந்த ரஞ்சிதா, புறப்பட்டுச் சென்றார்.

அவரிடம் நிருபர்கள் பேட்டி கேட்டதற்கு, மீடியா என்னை மிக அதிகமாக விளம்பரம் செய்துவிட்டது. வேறு சொல்வதற்கு என்ன இருக்கிறது என்று சிரித்தபடி கூறியபடி சென்றார். நிருபர்கள் மீண்டும் பேட்டி கேட்ட போது, நான் போனில் பேசுகிறேன் போன் செய்யுங்கள் என்று கூறிவிட்டு சென்று விட்டார். நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் இறுதி வரை சாமியார் நித்யானந்தா போன்றே நடிகை ரஞ்சிதா நடந்து கொண்டார்.

எதிப்புகளை மீறி எகிறிய, காவலன்!

பெரிய பெரிய நிறுவனங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் சினிமா தயாரிப்பில் இறங்கியுள்ள நிலையில், அந்நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல் சிறுபட்ஜெட் படங்கள் பல பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன. அப்படியே ரீலிஸ் ஆனாலும் அது கடலுக்குள் எதிர் நீச்சல் போட்ட கதையாகவே இருக்கிறது. எதிர்நீச்சல் போட்டு ஜெயிப்பது என்பது? எவ்வளவு பெரிய விஷயம் என்பது தெரியும்தானே!

அப்படி பெரிய நிறுவன படங்களுடன் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றிருக்கிறது காவலன் படம். படப்பிடிப்பில் ஆரம்பித்த பிரச்னை படம் முடிந்து பெட்டிகளை தியேட்டருக்கு அனுப்பும் வரை நீடித்துக் கொண்டே இருந்தது. ஆரம்பத்தில் அசினுக்கு எதிர்ப்பு என்று கிளம்பிய சிலர், பின்பு விஜய்க்கு எதிராக பிரச்னையை திசை திருப்பினார்கள். இது ஒருபுறமென்றால் படத்தை ரீலிஸ் செய்ய விடாமல் கடைசி நேரத்தில் பண நெருக்கடி‌யும் ஏற்படுத்தப்பட்டது. இதுவரை விநியோகஸ்தராக, தயாரிப்பாளராக பல வருட அனுபவம் பெற்ற விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரையே நிலைகுலையச் செய்யும் அளவுக்கு மலை‌போல வந்த பிரச்னைகளையும், சவால்களையும் திறம்பட எதிர்கொண்டு பொங்கல் தினத்தில் படத்தை ரீலிஸ் செய்து விட்டனர். ரீலிஸ் முயற்சியில் பெற்ற வெற்றி, பட ரிசல்ட்டிலும் கிடைத்து விட்டது.

இத்தனைக்கும் காவலனுடன் போட்டியிட்ட முதல்வர் கருணாநிதி கதை, வசனத்தில் உருவான இளைஞன் உள்ளிட்ட படங்களுக்கு டி.வி. சேனல்கள் மற்றும் எப்.எம். ரேடியோக்களில் 10 நிமிடத்துக்கு ஒருமுறை விளம்பரப்படுத்தப்பட்டது. இன்னமும் விளம்பரங்கள் தொடர்கின்றன. காவலன் விளம்பரம் வெளியிடுவதற்கும் சிலபல சிக்கல்கள் உருவாக்கப்பட்டதால் எந்தவித விளம்பரமும் இல்லாமல் களத்தை சந்தித்து வெற்றி பெற்றது.

காவலனுக்கு பல சிக்கல்களால் விளம்பரம் செய்ய இயலாமல் போனது. ஆனால் இதேபோல இதற்கு முன்பு சில படங்கள் எந்தவித விளம்பரங்களும் இன்றி வெற்றியடைந்திருக்கின்றன. நாடோடிகள் படம் ரீலிஸ் ஆகும்வரை டி.வி., எப்.எம்.களில் விளம்பரப்படுத்தப்பட வில்லை. பட ரிசல்ட் வந்த பிறகுதான் படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி என்று விளம்பரம் கொடுக்கப்பட்டது. அதேபோலதான் மொழி, அபியும் நானும் உள்ளிட்ட படங்களுக்கும். விளம்பரத்தின் துணையின்றி வெற்றி பெற்ற படங்கள் அத்தனையும் தரமான படங்கள் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

நந்தலாலா, தா, தென்மேற்கு பருவக்காற்று போன்ற பல தரமான படங்கள் சரியான தியேட்டர் கிடைக்காததாலும், விளம்பரங்கள் இல்லாததாலும் வெற்றி நூலிழையில் கைவிட்ட படங்கள். இதி்ல தா படத்தை மீண்டும் ரீலிஸ் செய்யும் திட்டத்துடன் அதன் தயாரிப்பாளர்கள் அதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்கள். மைனா என்ற வெற்றிப்படம், உதயநிதி ஸ்டாலின் என்ற பெரிய தயாரிப்பாளர் மூலம் வெளியானதால் வெற்றி பெற முடிந்தது. அந்த படத்தை அவர் வாங்கி வெளியிடாமல் இருந்திருந்தால் தா, நந்தலாலா, தென்மேற்கு பருவக்காற்று போன்ற படங்களின் நிலைதான் மைனாவிற்கும் ஏற்பட்டிருக்கும் என்பது விவரமறிந்தவர்களின் கருத்து.

எந்தவித கதையம்சமும் இல்லாத படத்தில் இடம்பெறும் ஒரு சில நல்ல வசனங்களை மட்டும் எடுத்து விளம்பரமாக்கி, அந்த விளம்பரத்தை நிமிடத்திற்கு நிமிடம் டி.வி. மற்றும் எப்.எம். ரேடியோக்களில் வெளியிட்டு படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டி விடுகிறார்கள். விளம்பரத்தை நம்பி படத்தை பார்க்கப் போன பலருக்கு தலைவலி வந்ததுதான் மிச்சம். சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் இந்த விவகாரத்தை சற்று மறைமுகமாக சாடிய சங்கத்தலைவர் இராம.நாராயணன், டி.வி., விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும், என்று ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றினார். எப்போதும்போலவே அந்த தீர்மானமும் ஏட்டிலேயே தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கும் என்பது மற்ற சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு தெரியாதா என்ன?

பண பலம், அதிகார பலம் உள்ள பெரிய நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் இன்று தமிழ்சினிமா தலைகீழாக போய்க் கொண்டிருக்கிறது என்று கூறும் முன்னணி இயக்குனர் ஒருவர், ‌ரீலிசுக்கு தயாராகி நூற்றுக்கணக்கான படங்கள் தியேட்டர் கிடைக்காமல் பெட்டிக்கும் முடங்கிக் கிடக்கிறது என்கிற அதிர்ச்சி தகவலையும் தெரிவிக்கிறார்.

Monday, January 24, 2011

உலகிலேயே 122வது மாடியில் அமைக்கப்பட்ட உணவு விடுதி

துபாய் : உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபாவின் 122வது மாடியில் அமைக்கப்பட்ட உணவு விடுதியின் திறப்பு விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. இதன் மூலம் உலகில் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள உணவு விடுதி என்ற பெருமையை இது பெற்றுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில், உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா அமைந்துள்ளது. இது மொத்தம் 828 மீ., உயரம் கொண்டது.

இதில், 442 வது மீ., உயரத்தில் 122 வது மாடியில் நேற்று புதிய உணவு விடுதி ஒன்று திறக்கப்பட்டது. இதன் மூலம் உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த உணவுவிடுதி இது என்ற பெருமையைப் பெற்றுள்ளது. கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள சி.என்.டவர் கட்டடத்தில் அமைந்துள்ள 360 உணவு விடுதிதான் இதுவரை உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த உணவு விடுதி என்ற இடத்தைப் பெற்றிருந்தது.

புர்ஜ் கலிபாவின் உயரமான புதிய உணவு விடுதியில் அடுத்த இரண்டு நாட்களுக்கான பதிவு அனைத்தும் முடிந்து விட்டன. இந்த விடுதியில் இருந்து துபாயின் அனைத்துப் பகுதிகளையும் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விடுதியில் தனியாக அமர்ந்து சாப்பிட பதிவு செய்வதற்கு எட்டாயிரம் ரூபாயும், டீ சாப்பிடுவதற்கு 4,500 ரூபாயும், முற்றத்தில் அமர்ந்தபடி மதுபானம் மற்றும் நொறுவைகள் சாப்பிட இரண்டாயிரத்து 500 ரூபாயும் வசூலிக்கப்படுகின்றன.

கிறிஸ்டன் பணி தொடருமா?

உலக கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ்டன் விலகுவது உறுதியாகியுள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளராக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தமானவர் தென் ஆப்ரிக்காவின் கிறிஸ்டன். இவரது பயிற்சியில் இந்திய அணி, டெஸ்ட் தரவரிசையில் நம்பர்-1' இடத்தை பெற்றது. ஒருநாள் வரிசையில் 2ம் இடம் பெற்றது. இதனிடையே, வரும் உலக கோப்பை தொடருடன், கிறிஸ்டனின் பதவிக்காலம் முடிகிறது.
இதற்குப் பின், தனது குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புவதால், பதவியில் நீடிக்க விருப்பமில்லை என கிறிஸ்டன் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) நிர்வாகி ஒருவர் கூறியது

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு கிறிஸ்டன் பயிற்சியாளராக தொடர வேண்டும் என அனைவருமே விரும்புகின்றனர். ஏனெனில் இவரது பயிற்சியில் இந்திய அணி சிறப்பான வெற்றிகளை பெற்றது. இந்த வெற்றிகள் அனைத்திலும் அவருக்கும் பங்குள்ளது. அணியில் ஒற்றுமை ஏற்படுத்தி, வலிமையானதாக மாற்றினார்.

மீண்டும் பதவியில் தொடர்வது குறித்து அவரிடம் நீண்ட நேரம் பேசினோம். ஆனால், உலக கோப்பை தொடருக்குப் பின், பதவியில் இருந்து விலகுவது என்ற முடிவில் உறுதியாக உள்ளார். குடும்பத்தினருடன் நேரம் செலவிட வேண்டும் என்ற, அவரது முடிவுக்கு நாங்கள் மரியாதை தருகிறோம்.

நெத்தியில் பட்டையும் திருநீறு கோட்டையும்!

கோத்ராவிற்க்கப்புறம் குஜராத்தில் நடந்தது தற்செயல் அல்ல. ஏதோ கட்டுப்படுத்த முடியாத, திட்டமிடப்படாத சமூக வன்முறையுமில்லை. வேண்டுமென்றே ஒரு இன மக்களை அழிக்கப் போடப்பட்ட செயல் திட்டம். ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட படுகொலைகள்.

திட்டமிட்டபடி, தொலை நோக்குப்பார்வையுடன் நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற எந்த வித்தியாசமுமின்றி முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் குறிவைக்கப்பட்டது. பெருமளவில் காவிக்கும்பல் ஒரே நோக்கத்தின்கீழ் ஒன்று சேர்ந்தது. எந்த வகையிலேனும் முஸ்லிம்களை கொல்லவேண்டும். குத்தி, கிழித்து முடமாக்கப்பட்டபின் உயிரோடோ, இல்லாமலோ தீக்கிரையாக்கியது, இந்தப் பரதேசி நாய்களுக்கு என்ன யோக்கியதை உள்ளது? தாய்மையை-பெண்மையை மதிக்கும் இந்த வெறி நாய்களின் யோக்கியதை குஜராத்தில் பல்லிளித்தது. வயிற்றில் குழந்தையுடன் இருந்த ஒரு தாயின் வயிற்றைக் கீறி, சிசுவை எடுத்து கண்டம் துண்டமாக வெட்டி தீக்கிரையாக்கியதோடு, அத்தாயையும் கொடூரமாகக் கொன்று விட்டு அதனைக் கூறி புளகாங்கிதப்பட்ட வெறி நாயின் குதூகலத்தை சமீபத்தில் தெஹல்கா வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. இது தான் இந்த வந்தேறிப் பன்னாடை வெறி நாய்கள் தாய்மைக்குக் கொடுக்கும் மரியாதை, கண்ணியம்.
இதில் பங்கெடுத்துக்கொண்ட காவிக் கும்பல்களில் சிலர் தெஹல்காவிடம், இஸ்லாம் எரியூட்டுவதை அனுமதிக்கவில்லை என்பதால் முஸ்லிம்களை உயிரோடு எரித்துக் கொல்வதிலேயே ஆனந்தமடைந்ததாக சொன்னார்கள்.

பெப்ருவரி 27 க்குப்பிறகு, மூன்று நாட்கள் குஜராத்தின் பிஜெபி அரசை இந்துத்வ காவிக்கும்பல் கையிலெடுத்துக்கொண்டு, காட்டுமிராண்டித்தனத்தின் உச்சக்கட்டதிற்க்கு இட்டுச்சென்றது. ஆர்எஸ்எஸ், விஹெச்பி, பஜ்ரங்தள், கிசான் சங்க், அகிலபாரதீய வித்யார்தி பரிஷத், பிஜெபி, கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட கொலைப்படை உருவாக்கப்பட்டது. மாநிலமெங்கும் பள்ளிவாசல்கள், தர்காக்கள் அழிக்கப்பட்டன. 73 முஸ்லிம் வழிபாட்டுத்தலங்கள் அஹமதாபாதில் மட்டும் தீக்கிரையாக்கப்பட்டது. சபர்கந்தாவில் 55 ம் வடோடராவில் 22ம் பின்னர் கொளுத்தப்பட்டது.

மஹாத்மாவின் பூமிக்கு நீங்கா களங்கத்தை ஏற்படுத்திய இந்த காவிக் கும்பல் அடியாட்கள் இரு வகைப்பட்டனர். திரைமறைவிலிருந்து சதித் திட்டம் தீட்டிய கட்சிநிர்வாகிகள் மற்றும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சிசுக்கொலைகள் நடத்திய காலாட்படை. சிலசமயம் தலைவர்களே காலாட்படையிலும் தைரியமாக பங்கெடுத்தார்கள்…

தெஹல்கா.காம்.

காசுமேல காசுவந்து தேர்தலில் கொட்டுகிற!

மேலவை தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் கமிஷனர் அறிவித்த பின் தான், அடுத்த கட்ட நடவடிக் கைகளை துவக்க முடியும். பட்டதாரி தொகுதிகளில் போட்டியிட, பட்டதாரிகளாக இருக்க வேண்டு மென்ற அவசியம் இல்லை. சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள எவரும், பட்டதாரி தொகுதிகளில் போட்டியிடலாம். சென்னை அயனாவரத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சமுதாய கூடத்தை பொறுத்தவரை, அந்த கூடத்தை நடத்துவதற்கான டெண்டர் ஆறு மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது.

பீகார் சட்டசபை தேர்தலின் போது பின்பற்றப்பட்ட கடுமையான விதிமுறைகள், தமிழகத்திலும் பின்பற்றப்படும். சட்டசபை தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை தவிர, இதர அடையாள ஆவணங்களை அனுமதிக்க வேண்டிய அவசியம் இருக்காது, என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், நிருபர்களிடம் கூறியதாவது தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் வெளியான போதிலும் பட்டியலில் தொடர்ந்து பெயர் சேர்க்கப்படும். தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன் வரை பெறப்படும், விண்ணப்பங்களுக்கு,வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். மனு தாக்கலை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளுக்கு பத்து நாட்கள் முன் வரை, பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். சிலர் அடையாள அட்டைகளை தொலைத்துள்ளனர். அவர்கள் விண்ணப்பித்து புதிய அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.தற்போது, தமிழகத்தில், 99.88 சதவீத வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. எனவே, மற்ற அடையாள ஆவணங்களை காண்பித்து ஓட்டுப் போட வேண்டிய அவசியம், வரும் தேர்தலில் இருக்காது.தேர்தலில், பண பலம், ஆட்பலம் போன்றவற்றை தடுக்க, பீகார் தேர்தலின் போது பின்பற்றப்பட்ட வழிமுறைகள் பின்பற்றப்படும்.

இதுதவிர, புதிய வழிமுறைகளையும், இன்னும், 15 நாட்களுக்குள் தேர்தல் கமிஷன் வெளியிடும். ஒவ்வொரு வேட்பாளரும், வங்கிக் கணக்கை துவக்கி, அதன் மூலம் தான் அனைத்து செலவுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படும். பினாமி மூலம் செலவுகள் செய்தாலும், வங்கி பரிமாற்ற முறைகள் கண்காணிக்கப்பட்டு, அவ்வாறு தேர்தலுக்காக செய்யப்படும் செலவுகள், அந்தந்த வேட்பாளரது கணக்கில் சேர்க்கப்படும். கட்சி செய்யும் செலவுகளும், வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப் படும். கடந்த முறை சட்டசபை தேர்தலுக்கான பொதுத் தேர்தல் மார்ச் முதல் தேதி அறிவிக்கப்பட்டது. ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளதால், அனைத்துக்கும் சேர்த்து ஒரே சமயத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.

ஓட்டுப் போட்டதும், அவர்கள் யாருக்கு ஓட்டுப் போட்டனர் என்பதற்கான அத்தாட்சி ரசீது பெறும் வகையில் மாற்றம் செய்ய வேண்டுமென பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அவ்வாறு செய்தால், ஓட்டுரிமையின் ரகசியம் வெளியாகிவிடும்.எனவே, இவ்விஷயத்தில் எந்த மாதிரியான ஆவணங்கள் வழங்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்து, புதிய கருவியை கண்டுபிடித்தல் போன்றவை குறித்து பரிந்துரைக்க, ஓய்வு பெற்ற ஐ.ஐ.டி., இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வல்லுனர் குழுவின் அறிக்கை வந்த பின், இதுபற்றி முடிவு செய்யப்படும்.

இடைத்தேர்தல் போல, பொதுத் தேர்தலின் போது அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் பதிவு செய்யப்படும் வீடியோ காட்சிகளை, இணையதளம் மூலம் பெறுவது கடினமானது. எனவே, பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் மட்டும் இந்த கண்காணிப்பு முறை அமல்படுத்தப்படும். இவ்வாறு பிரவீன் குமார் கூறினார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரி்மை அளிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு பரிந்துரை அனுப்பியுள்ளது என்று மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் வயலார் ரவி நேற்று தெரிவித்தார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைச்சர் வயலார் ரவி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது; தற்போது அமலில் உள்ள சட்டவிதிப்படி வெளிநாட்டில் 6 மாதங்களுக்கு மேல் தொடர்ந்து வசிக்கும் இந்தியர்களுக்கு வாக்குரிமை கிடையாது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரி்மை அளிப்பது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய பாஸ்போர்டு வைத்திருந்தால் அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கலாம். இதற்காக அவர்கள் இமெயில் மூலம் வி்ண்ணப்பிக்கலாம். இந்த வாக்காளர்களின அடையாளத்தில் சந்தேகம் ஏற்பட்டால் வழக்கமான முறையில் அரசியல் கட்சிகள் புகார் கொடுக்கலாம் என மத்திய அரசு கருதுகிறது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மத்திய சட்ட அமைச்சகமும், வெளிநாட்டு இந்தியர் விவகாரத்துறை அமைச்சகமும் பரிந்துரைத்துள்ளன. தேர்தல் ஆணையம் இது பற்றி பரீசிலித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு பின் விரைவில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Sunday, January 23, 2011

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மற்றுமொரு விருது

புது தில்லி, ஜன. : சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் நடக்கவுள்ள உலக பொருளாதார அமைப்பு மாநாட்டில் பிரபல இசை அமைப்பாளரும் ஆஸ்கர் விருது பெற்றவருமான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிரிஸ்டல் விருது வழங்கப்பட உள்ளது.

கலை, இசைத் துறையில் இவரது அரிய பங்களிப்பை கெüரவித்து இந்த விருது வழங்கப்படுகிறது.

வரும் 26ம் தேதி டாவோஸில் தொடங்கும் இந்த மாநாடு 5 நாள்கள் நடைபெறும். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கமல் நாத் உள்ளிட்ட 6 அமைச்சர்கள், திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா முதலியோர் இதில் பங்கேற்கின்றனர், ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலக பொருளாதார அமைப்பில் இடம்பெற்றுள்ள சிஐஐ (இந்திய தொழிலகக் கூட்டமைப்பு) சார்பில் 139 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

11 நாடுகளின் தொழிலதிபர்கள், அதிபர்கள், பிரதமர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள், ஆன்மிகத் தலைவர்கள் என சுமார் 2500 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!