Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, January 9, 2011

எம்மக்களுக்கு எதைச்செய்யப்போகிறாய்? அரசே!!!

                                                     என்று விடியும் எங்களுக்கு?

இலங்கை அரசுடன், தமிழ் தேசிய கூட்டணியை சேர்ந்தவர்கள் இன்று பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான சண்டை முடிந்த பிறகு பல்வேறு அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளவர்களை மீண்டும் குடியமர்த்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக, தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் சுரேஷ் பிரேம சந்திரன், சம்பந்தன், சேனாதிராஜா எம்.பி., உள்ளிட்டவர்கள் இன்று அரசுடன் பேச்சு நடத்துகின்றனர்.இலங்கை அரசின் குழுவில் வெளியுறவு அமைச்சர் பெரிஸ், நிர்வாகத்துறை அமைச்சர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே, நீர்பாசனத்துறை அமைச்சர் நிர்மல் சிரிபாலா டிசில்வா ஆகியோர் உள்ளனர். இன்றைய கூட்டம் மிக முக்கியமானதாக கருதப்படுவதாக சுரேஷ் பிரேம சந்திரன் தெரிவித்துள்ளார்.

(முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலையில், இலங்கையின் வீழ்ச்சியை யாரேனும் தடுப்பதற்கு முயன்றால் என்னைப் போல் அவர்களுக்கும் சிறைத் தண்டனையே கிடைக்கும். அனைத்துவிதமான அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு போராட வேண்டிய கட்டாயத்தில் நாட்டு மக்கள் உள்ளனர்.)

எல்லா அரசியல்வாதிகளும் கிருமினல்கல்தான்!

அரசியலில் கிரிமினல்கள் பங்கேற்பது அதிகரித்து வருகிறது. தேர்தல் முறையில் இது மோசமான ஒன்று. ஜனநாயகத்தில் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், தேர்தலின் தரத்தை மேம்படுத்தவும் அரசியல் கிரிமினல் மயமாகும் பிரச்னை குறித்து, பார்லிமென்டும், அரசும் மறு ஆய்வு செய்ய வேண்டும். 

கொலை, கற்பழிப்பு மற்றும் பணம் பறித்தல் போன்ற மோசமான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டோர், தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். இந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.மேலும், மோசமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அதில் தண்டிக்கப்பட்ட எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களையும் உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும். பொது நலன் கருதி இந்தத் தடையை விதிக்க வேண்டியது அவசியம்.


தற்போதுள்ள சட்ட விதிகளின்படி, ஒருவர் கோர்ட்டால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் மட்டுமே, அவர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கிறார். ஒருவருக்கு எதிராக வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் போது, அவர் சிறையில் இருந்தால் கூட தேர்தலில் போட்டியிடலாம். ஓட்டு போட தகுதியில்லை என்றாலும், தேர்தலில் போட்டியிட அவருக்கு தகுதியுண்டு.கொலை, கற்பழிப்பு, பணம் பறித்தல் போன்ற மோசமான கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டோரை, 

அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு மேலான தண்டனை பெறக்கூடிய குற்றங்களைச் செய்தோரை, அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை கோர்ட்டில் நிலுவையில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.இதை செய்யும்படி, மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்தது. மேலும், தேர்தலுக்கு ஆறு மாதத்திற்கு முன்னதாக, இப்படிப்பட்ட குற்ற வழக்குகளைச் சந்தித்தோருக்கு தடை விதிக்கலாம் என்றும்தெரிவித்தது.

எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., பதவியில் இருக்கும் போது, சிலர் தாங்கள் செய்த குற்றங்களுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றும், பதவியில் தொடர்கின்றனர்; அந்தப் பதவிக்குரிய சலுகைகளையும் அனுபவிக்கின்றனர். அவர்களை யாரும் தகுதி நீக்கம் செய்வதில்லை.அதே நேரத்தில், சாதாரண நபர் ஒருவர் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டு விட்டால், அவர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுவதில்லை. இது பாரபட்சமான நடவடிக்கை. இதையெல்லாம் சரி செய்ய வேண்டும்.எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., பதவியில் இருப்போர், கோர்ட்டால் தண்டிக்கப்பட்டு விட்டால், அவர்கள் தற்போதைய சபையில் மட்டுமே பதவியில் தொடர முடியும். அப்பீல் மனு நிலுவையில் இருந்தாலும், எதிர் காலத்தில் தேர்தலில் போட்டியிட முடியாது என, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது வரவேற்கத்தக்கது.


கடந்த லோக்சபாவில் இடம் பெற்ற எம்.பி.,க்களில், கிரிமினல் வழக்குகளில் சிக்கியோர் 128 பேர். இவர்களில் 58 பேர், மோசமான குற்றச்சாட்டுகளை சந்தித்தவர்கள். கிரிமினல் வழக்குகளை சந்திக்கும் எம்.பி., க்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது கவலை தரும் அம்சம்.பீகார் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், வெற்றி பெற்ற 243 எம்.எல்.ஏ.,க்களில், 141 பேர் (59 சதவீதம்) கிரிமினல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள். இவர்களில் 85 பேர், கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடையவர்கள். கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய யாரையும், வரும் 2014 சட்டசபை தேர்தலில் நிறுத்த மாட்டோம் என பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இது ஒரு நல்ல முன்னு தாரணம். அனைத்து கட்சிகளும் இதை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு குரேஷி கூறினார்.

தூக்குவதும்,.. தூக்கி எரிவதும் நம் கலை!

ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம், கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் நடந்தது. முதல் நாள் ஏலத்தில் இந்தியாவின் காம்பிர் அதிகபட்சமாக ரூ. 11.04 கோடிக்கு ஏலம் போனார். நேற்று ஆஸ்திரேலியாவின் அறிமுகம் இல்லாத இளம் "ஆல் ரவுண்டர்' டேனியல் கிறிஸ்டியனுக்கு(27) பலத்த போட்டி காணப்பட்டது. ஆஸ்திரேலிய அணிக்காக 3 "டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் சிறப்பான பீல்டர். இவரை தட்டிச் செல்ல கொச்சி, டெக்கான் அணிகள் மாறி, மாறி ஏலத்தொகையை அதிகரித்துக் கொண்டே சென்றனர். முடிவில் 4.14 கோடி ரூபாய் கொடுத்து இவரை டெக்கான் அணி தட்டிச் சென்றது. முதலில் கிறிஸ்டியனுக்கு அடிப்படை விலையாக 23 லட்சம் மட்டுமே இருந்தது. இறுதியில் இதைவிட 18 மடங்கு அதிகமான தொகை கிடைத்தது. இதேபோல வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவை, டில்லி அணிரூ. 3.40 கோடிக்கு வாங்கியது. மூன்றாவது அதிகபட்சமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முனாப் படேல், ரூ 3.17 கோடி கொடுத்து மும்பை அணி பெற்றது. தவிர, உள்ளூர் போட்டிகளில் அசத்தும் வேணு கோபால் ராவ் (டில்லி) 3.17 கோடி ரூபாய் பெற்றது, வியப்பாக இருந்தது.


கங்குலி பரிதாபம்: நேற்றைய ஏலத்தின் முடிவில், இரண்டாவது சுற்றில் 10 அணிகளின் உரிமையாளர்கள் விருப்பத்தின் பேரில் 28 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதிலும் கங்குலி இடம்பெறவில்லை. இதையடுத்து, ஐ.பி.எல்., போட்டிகளில் கங்குலியின் பங்கேற்பு முடிவுக்கு வந்துள்ளது. இதேபோல, ஜெயசூர்யா, கெய்ல், லாரா, பவுச்சர், சுவான் ஆகியோரும் 2வது சுற்று ஏலத்தில் இல்லை.

"லக்கி' கைப்: முதல் சுற்று ஏலத்தில் முகமது கைப் ஏலத்தில் எடுக்கப் பட வில்லை. 2வது சுற்றிலும் இவரை எடுக்க யாரும் முன்வரவில்லை. இதற்கு பின் புனே, டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் கைப் வேண்டும் என கேட்டன. இறுதியில் மல்லையா (பெங்களூரு), ரூ. 59 லட்சம் கொடுத்து கொண்டு சென்றார்.

கொள்ளைக்கொண்ட "ஹாப்பி லைஃப் சீரீஸ்" நிகழ்ச்சி

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக கத்தர் நாட்டில் செயல்பட்டுவரும் இந்திய ஃபெடர்னிடி ஃபாரம் அமைப்பு சார்பாக நடத்தப்பட்ட "ஹாப்பி லைஃப் சிரீஸ்" தொடர் நிகழ்ச்சியில் பரிமாறிய உள்ளத்தைத்தொடும் கருத்துக்களும், மக்களின் பங்களிப்பும் சிறப்பிக்க வைக்கின்றன.

குழந்தைகள் சந்திக்கும் மனோரீதியான பிரச்சனைகள் முதல், குடும்பத்தில் ஏற்படும் மனக்கசப்புகள் வரையிலான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக இந்திய ஃபெடர்னிடி ஃபாரம் கத்தரில் இதுத்தொடர்பான தொடர் நிகழ்ச்சிகளை ஏற்பாடுச் செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியினை தலைமையேற்று நடத்துபவர் ஆக்ஸஸ் கைடன்ஸ் அண்ட் கவுன்சிலிங் சென்டரின் ஒருங்கிணைப்பாளரான டாக்டர்.சி.ஹெச்.அஷ்ரஃப் ஆவார்.

நேற்று முன்தினம் தோஹா குவாலிட்டி ஹைஃபர் மார்க்கெட் அரங்கில் நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சியில் 450 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை ஹைஃபர் மார்கெட்டின் எம்.டி ஸம்சுத்தீன் துவக்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்திய டாக்டர் சி.ஹெச்.அஷ்ரஃப், சந்தோஷமான குடும்பத்தில்தான் ஆரோக்கியமான குழந்தை பிறக்குமென்றும், இத்தகைய சந்தோஷமான சூழலை உருவாக்குவது சிரமமான காரியம் அல்ல எனவும் கூறினார்.  இந்நிகழ்ச்சிக்கு முன்பு திருமணத்திற்கு தயாராவது தொடர்பான உளவளப்படுத்துதல்(கவுன்சிலிங்) நிகழ்ச்சியில் 300 பேர் கலந்துக்கொண்டனர்.

செய்தி:தேஜஸ்

Saturday, January 8, 2011

பொங்கலுக்கு விடுமுறை : கருணாநிதி வலியுறுத்தல்

கேரள மாநில எல்லையோர பகுதிகளான பாலக்காடு, திருவனந்தபுரம், இடுக்கி, பத்தனம்திட்டா ஆகிய பகுதிகளில் தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், கேரள அரசு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என, பாலக்காட்டில் உள்ள, "கேரள மாநில தமிழ் பாதுகாப்பு குழு' வலியுறுத்தி வருகிறது.தமிழகத்தில் சென்னை, நீலகிரி, கன்னியாகுமரி, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், மலையாள மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக, தமிழக அரசு ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையின் போது உள்ளூர் அரசு விடுமுறை அறிவித்திருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

எனவே, கேரள மாநில தமிழ் பாதுகாப்பு குழுவின் கோரிக்கையை பரிசீலனை செய்து, பொங்கல் பண்டிகைக்காக உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

ஆண் குழந்தை பெண்ணாக மாறிய அதிசயம்!

லண்டன் : ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பின் திருநங்கைகளாக மாறுபவர்கள் குறித்து நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். 

ஆனால், பிறந்து ஒரு மாதமேயான ஆண் குழந்தை, பெண் குழந்தையாக மாறிய விசித்திரத்தைக் கேட்டதுண்டா? தென் ஆப்ரிக்காவில் தான் இந்த விசித்திர சம்பவம் நடந்துள்ளது. 

தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர்கள், கென்னத்-மாடெலிஷியா தம்பதியர். இவர்களுக்கு கடந்தாண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த போதே, அது ஆண் குழந்தை தான் என்று டாக்டர்களும்  உறுதிப் படுத்தியிருந்தனர். அக்குழந்தைக்கு கென்னி ஹிஸ்ஹாக் என்று கென்னத் தம்பதியர் பெயரிட்டனர்.

பிறந்து நான்கு வாரங்களான நிலையில், கென்னியின் பிறப்புறுப்பில் மாற்றங்கள் காணப்பட்டன. இதனால் கவலையடைந்த பெற்றோர், கென்னியை டாக்டரிடம் காண்பித்தனர். கென்னியைப் பரிசோதித்த டாக்டர், கென்னி பெண் குழந்தையாக மாறி வருவதாகத் தெரிவித்தார். கென்னியின் உடலில் நொதியின் பற்றாக்குறையால், ஹார்மோன்கள் வழக்கத்துக்கு மாறாக சுரக்க ஆரம்பித்ததே இதற்கு காரணம் என்பது பரிசோதனையில் தெரியவந்தது. அதனால் கென்னிக்கு இது தொடர்பாக ஓர் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கென்னியின் பெயரை மெக்கென்சி என்று பெற்றோர் மாற்றியுள்ளனர்.

பொருளாதார மந்த நிலை?

1970 - 1979 = சிலோன் (இலங்கை) பர்மா, மலேசியா, மாலத்தீவுகள்

1980 - 1989 = வளைகுடா நாடுகள், சிங்கப்பூர்

1990 - 1999 = அமெரிக்கா

2000 - 2007 = இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான்...

2008 - 2010 = ???

ஏறத்தாழ 30 வருடங்களாகத் தொடர்ந்த திரை கடல் ஓடி திரவியம் தேடும் பயணங்கள் கடந்த இரு வருடங்களில் வெகுவாகக் குறைந்ததற்கு சர்வதேச பொருளாதார மந்தநிலை காரணமென்று சொல்லப்பட்டாலும், உண்மையில் நம்மவர்களின் 'அறிவாதார' மந்தநிலையும் ஒரு காரணம். ஆங்கிலேயரை விரட்டும் உத்தியாக அவர்களின் மொழியைப் புறக்கணிப்பபதும் தேசபக்தி என்று நம்பியதால், சர்வதேச மனிதச் சந்தையில் பின்தங்கியவர்களின் சந்ததியினர், ஹிந்தி எதிர்ப்பு என்ற திராவிட மாயையில் சிக்குண்டு தேசிய மனித வளத்திலும் பின் தங்கினோம்.


பள்ளிப்படிப்பில் SSLC என்பது வாழ்க்கையின் முக்கிய கட்டம்.குறைந்த பட்சம் SSLC தேரியவர்களே வாழ்க்கையிலும் தேரியுள்ளனர் என்பது என் கணிப்பு. (சில விதி விலக்குகள் தவிர) SSLC தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களை வைத்தே +1 இல் எந்த குரூப் எடுப்பது என்ற வாழ்க்கையின் அதிமுக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் காலகட்டம் அது.

+2 இல் நல்ல மதிப்பெண் பெற்றவர்வர்கள் வசதிக்கேற்ப டாக்டராகவோ, என்ஜினியராகவோ ஆகலாம். சுமாரான மதிப்பெண்கள் பெற்று செல்வ வசதியிலும் பிந்தங்கியவர்களின் நிலைதான் கொஞ்சம் பரிதாபத்திற்குறியது. தெளிவான குறிக் கோளின்றி B.Sc., M.Sc.,    என்று  படித்துவிட்டு மெடிக்கல்ஸ் ஷாப்பில் உட்கார்ந்திருக்கும் பலரைப் பார்க்கும்போது மனதிற்கு கஷ்டமாக இருக்கும். ஏனெனில் தற்போதைய காலகட்டத்தில் மருந்தாளுனர் (Pharmacist) ஆவதற்கு 10+2 வருடங்கள் படித்தாலே போதும்.

சில வருடங்களுக்கு முன்பு அபூதாபியிலிருந்து துபை வந்துகொண்டிருந்தபோது அருகிலிருந்த நுன்னுயிரியல் (மைக்ரோபயாலஜி) படித்த ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். வேலை நிமித்தம் நேர்முக அழைப்பிற்குச் சென்று வருவதாகச் சொன்னார்.வேலை, சம்பளம் இன்னபிற குறித்து விசாரித்தபோது மாதம் 1500 திர்ஹம் சம்பளம் என்றார்.(அப்போது கம்பெனி டிரைவர் வேலைக்கு சுமார் 2500 திர்ஹம் கிடைத்துக் கொண்டிருந்தது). அவர் பேச்சிலிருந்து பூமிக்கடியில் உயிர்வாழும் மண்புழு, பூமியின் எந்த சீதோசன நிலையிலும் தாக்குப்பிடித்து வாழ்கிறது என்பதால், அதிலிருந்து நோய் எதிர்ப்புச் சக்திக்கான எதிர் உயிரியல் மருந்து குறித்த ஆராய்ச்சியை கல்லூரி ப்ராஜெக்ட்டில் தனிநபராகச் செய்திருக்கிறார் என்பதை அறிந்து அதிர்ச்சியடைதேன்.

படிப்பு முடிந்து தன்னுடைய எதிர் உயிரியல் மருந்து ஆய்வை சுயமாகவோ அல்லது ஸ்பான்சர்ஷிப் மூலமாகவோ மேம்படுத்தியிருந்தால் மருந்து நிறுவனங்கள் குறைந்தது அவருடையை ஆய்வை நல்ல விலைக்கு வாங்க முன்வந்திருக்கும்.(துபாய்க்கு விசிட்டிங்கில் வருவதற்கு ரூ.50,000-70,000 செலவு செய்திருந்தார்.) இதை யெல்லாம் தற்போது குறிப்பிட வேண்டிய அவசியம் என்னவென்றால் நம்மவர்களில் பலர் எவ்வித குறிக்கோளும் இல்லாமல் ஏதாவதொரு டிகிரி படித்து விட்டால் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கிறோம்.இலட்சக்கணக்கில் செலவு செய்து  படிக்க வைக்கும் பெற்றோருக்கும்  தம் பிள்ளைகள் படித்து முடித்துவிட்டு என்ன செய்வார் என்று யோசிப்பதில்லை என்பது கசப்பான உண்மை.

*******
எல்லாம் சரி, வாழ்க்கையில் முன்னேற குறிக்கோளுடனான கல்வி மட்டும் அவசியமில்லை என்பதற்கும் நம்மிடையே பலர் உதாரணமாக இருக்கிறார்களே என்றும்கூட சிலர் கேட்கலாம். நான் அறிந்த பலர், என்னதான் லட்சம் கோடி என்று சம்பாதித்திருந்தாலும் அதற்காக இழந்தவைமுன் இவையெல்லாம் ஒரு பொருட்டேயல்ல என்றும் சொல்லக்கேட்டிருக்கிறேன்!

இன்று பொருளாதார ரீதியில் தன்னிறைவடைந்தவர்களிடம் அவர்களின் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எதுவென்று கேட்டால் நிச்சயம் கல்வியின் அருமை பற்றியும் படிக்கச்சொல்லி குட்டிய, திட்டிய ஆசிரியர்களின் பெருமைபற்றியும் மணிக்கணக்கில் பேசுவர்.

***********
சரி, இப்படி ஆளாளுக்கு லெக்சர் எடுத்தால் மட்டும்போதுமா? முந்தைய தலைமுறையினர் இழந்த இழப்புகளை அடுத்த தலைமுறையும் இழக்க வேண்டுமா? என்னதான் தீர்வு என்றும் கேட்கலாம்.

வாழ்க்கையின் முக்கிய கட்டங்களான SSLC, +2 வகுப்புகள் தொடங்குவதற்கு முன்னரே என்ன படித்தால் எத்தகைய பயன்கள் என்ற நிகழ்கால கல்வி நிலவரங்களை சம்பந்தப்பட்ட துறைசார் வல்லுநர்கள் மற்றும் உள்ளூர் பிரபலங்களை சிறப்பு போதகராக (GUEST LECTURE) அழைத்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.இன்ஷா அல்லாஹ் வரும் கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் இதுகுறித்த திட்டங்களையும் சான்றோர்கள் முன்வைப்பார்கள் என்று நம்புகிறேன்.

குறிப்பு: எந்தக் கல்வியுமே வீணல்ல என்று நம்புபவன் நான். மேற்சொன்ன உதாரணங்களில் யாரையும் குறைத்து மதிப்பிடும் நோக்கமில்லை.நமதூரில் கல்வி விழிப்புணர்வு மாநாட்டு வாரம் என்பதால் வாசகர்களின் கருத்துப்பரிமாற்றத்திற்காக எழுதியது. 
அபூ அஸீலா 

உங்கள் கம்ப்யூட்டர் 20 மடங்கு வேகமாக இயங்க வேண்டுமா ?

கம்ப்யூட்டரை 20 மடங்கு வேகமாக இயங்க செய்யும் நுண்கருவியை (சிப்செட்) பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கம்ப்யூட்டர்களின் வேகத்தை பன்மடங்கு அதிகரிப்பது குறித்து, பிரிட்டனை சேர்ந்த கிளாஸ்கோ பல்கலைக்கழக விஞ்ஞானிகளும், அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். இதில், தற்போதுள்ள நுண்கருவிகளை விட, 20 மடங்கு அதிக வேகத்தில் கம்ப்யூட்டரை இயங்க செய்யும் வல்லமை படைத்த புதிய நுண்கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து ஆய்வுக்கு தலைமை வகித்த கிளாஸ்கோ பல்கலைக்கழக பேராசிரியர் வான்டர்பவ்டே கூறியதாவது: தற்போதுள்ள கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் "பிராசசரில்' உள்ள நுண்கருவிகள் இரண்டு, நான்கு அல்லது 16 வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் திறன் படைத்தது. ஆனால், புதிய நுண்கருவி 1,000 செயல்பாடுகளை தனித்தனியே செய்யும் வல்லமை படைத்தது. இந்த நுண்கருவி பொருத்தப்பட்ட "பிராசசர்' ஆய்வக சோதனையில், ஒரு வினாடியில் ஐந்து ஜிகாபைட் (ஜி.பி.,) தகவல்களை பரிமாறும் திறனை வெளிப்படுத்தியது. சாதாரண நுண்கருவிகள் அடங்கிய "பிராசசரை' விட, இந்த புதிய நுண்கருவி பொருத்தப்பட்ட "பிராசசர்' கம்ப்யூட்டரை 20 மடங்கு அதிக வேகத்தில் இயங்க செய்தது.

இந்த நுண்கருவி சந்தைப்படுத்தப்பட்டால், கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போதும் ஏற்படும் காலதாமதங்கள் தவிர்க்கப்படும். மேலும், சாதாரண நுண்கருவிகளை விட இந்த நுண்கருவி, குறைந்த மின்சாரத்தை நுகர்வதால், சுற்றுச்சூழலுக்கும் மிக உகந்ததாக அமையும். அடுத்த சில ஆண்டுகளில் இந்த நுண்கருவி சந்தைப்படுத்தப்படும். இவ்வாறு வான்டர்பவ்டே கூறினார்.

காம்பிருக்கு ரூ. 11.04 கோடி!


 நான்காவது ஐ.பி.எல்., தொடரில் "கோடிகளின் நாயகனாக' இந்திய வீரர் கவுதம் காம்பிர் ஜொலிக்கிறார். நேற்று நடந்த ஏலத்தில் இவரை அதிகபட்சமாக 11.04 கோடி ரூபாய் கொடுத்து கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. இன்றும் ஏலம் தொடர்ந்து நடக்க உள்ளது.

 இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த மூன்று முறை "டுவென்டி-20' தொடர் நடந்தது. நான்காவது தொடர் வரும் ஏப். 8ல் துவங்குகிறது. இதில், பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் இரண்டு நாட்கள் நடக்க உள்ளது. நேற்று பெங்களூருவில் முதல் நாள் ஏலம் நடந்தது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் உள்ளிட்ட 10 அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.  இவர்களுடன் ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர்களாக உள்ள கும்ளே (பெங்களூரு), பிளமிங்(சென்னை), ஜெப் லாசன் (கொச்சி), டேரன் லேமன் (டெக்கான்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


ஒவ்வொரு அணியும் ரூ. 45 கோடி வரை செலவிடலாம், மும்பை, சென்னை அணிகள் சச்சின், தோனி, ரெய்னா, ஹர்பஜன் உள்ளிட்ட தலா 4 வீரர்களை தக்கவைத்துக்கொண்டதால், இவர்கள் ரூ. 20 கோடி வரை செலவிடலாம் என்ற விதிப்படி, நேற்று காலை 11 மணிக்கு ஏலம் துவங்கியது.


காம்பிருக்கு அதிகம்:
முதல் வீரராக இந்திய அணியின் இளம் வீரர் காம்பிர் ஏலத்தில் அறிவிக்கப்பட்டார். இவரை ஏலத்தில் எடுக்க புனே, மும்பை அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. பின் திடீரென கோல்கட்டா அணி அதிக தொகைக்கு ஏலம் கேட்டு ரூ. 11.04 கோடி கொடுத்து, காம்பிரை தட்டிச் சென்றது.
கடந்த முறை நடந்த ஏலத்தில் இங்கிலாந்தின் பீட்டர்சன், பிளின்டாப் இருவருக்கும் தலா ரூ. 7.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்ததே, அதிக தொகையாக இருந்தது. இதை காம்பிர் நேற்று முறியடித்தார். கடந்த தொடரில் டில்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட காம்பிர், இம்முறை கோல்கட்டா அணியின் கேப்டனாக விளையாட உள்ளார். 


யூசுப்பிற்கு போட்டி:
இரண்டாவதாக "டுவென்டி-20' "ஸ்பெஷலிஸ்ட்' யூசுப் பதானுக்கும் போட்டி நிலவியது. கடைசியில் இவரையும் ரூ. 9.66 கோடி கொடுத்து கோல்கட்டா அணி வாங்கிச் சென்றது. இதே தொகைக்கு உத்தப்பாவை, புனே அணி ஏலத்தில் எடுத்தது.

 
1. காம்பிர் (கோல்கட்டா)    ரூ. 11.04 கோடி
2. யூசுப் பதன் (கோல்கட்டா)    ரூ. 9.66 கோடி
3. உத்தப்பா (புனே)    ரூ. 9.66 கோடி
4. ரோகித் சர்மா (மும்பை)    ரூ. 9.07 கோடி
5. இர்பான் பதான் (டில்லி)    ரூ. 8.74 கோடி
6. யுவராஜ் சிங் (புனே)    ரூ. 8.28 கோடி
7. சவுரப் திவாரி (பெங்களூரு)    ரூ. 7.25 கோடி
8. ஜெயவர்தனா (கொச்சி)    ரூ. 6.90 கோடி
9. டேவிட் ஹசி (பஞ்சாப்)    ரூ. 6.35 கோடி
10. ஸ்டைன் (டெக்கான்)    ரூ. 5.44 கோடி

போலிஞ்சரை தக்கவைத்த சென்னை
கடந்த 2010ல் நடந்த மூன்றாவது ஐ.பி<.எல்., தொடரில் சென்னை அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக விளங்கியவர் போலிஞ்சர் (ஆஸி.,). நேற்றைய ஏலத்தின் போது இவரை அணியில் எடுக்க, பெங்களூரு, சென்னை இடையில் கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் சென்னை அணி ரூ. 3.18 கோடி கொடுத்து, மீண்டும் போலிஞ்சரை தக்கவைத்தது.

முதல் நாளில் தேர்வானவர்கள்
நேற்று நடந்த நான்காவது ஐ.பி.எல்., தொடரில் 72 வீரர்கள் ஏலத்தில் தேர்வு பெற்றனர். மொத்தம் 10 அணிகளில், முதல் நாளில் தேர்வு பெற்ற வீரர்கள் விபரம்.


சென்னை சூப்பர் கிங்ஸ்  வீரர்    தொகை
அஷ்வின்    ரூ. 3.86 கோடி
பத்ரிநாத்    ரூ. 3.63 கோடி
போலிஞ்சர்    ரூ. 3.17 கோடி
மைக்கேல் ஹசி    ரூ. 1.93 கோடி
பிராவோ    ரூ. 91 லட்சம்
சகா    ரூ. 45 லட்சம்

டெக்கான் சார்ஜர்ஸ்  வீரர்    தொகை
ஒயிட்    ரூ. 4.99 கோடி
சங்ககரா    ரூ. 3.17 கோடி
பீட்டர்சன்    ரூ. 2.95 கோடி
பிரக்யான் ஓஜா    ரூ. 2.27 கோடி
இஷாந்த் சர்மா    ரூ. 2.04 கோடி
அமித் மிஸ்ரா    ரூ. 1.36 கோடி
டுமினி    ரூ. 1.36 கோடி
சிகர் தவான்    ரூ. 1.36 கோடி

டில்லி டெர் டெவில்ஸ்  வீரர்    தொகை
டேவிட் வார்னர்    ரூ. 3.40 கோடி
மார்னே மார்கல்    ரூ. 2.15 கோடி
ஜேம்ஸ் ஹோப்ஸ்    ரூ. 1.59 கோடி
ஆரோன் பின்ச்    ரூ. 1.36 கோடி
நமன் ஓஜா    ரூ. 1.23 கோடி

கிங்ஸ் லெவன் பஞ்சாப்  வீரர்    தொகை
கில்கிறிஸ்ட்    ரூ. 4.08 கோடி
தினேஷ் கார்த்திக்    ரூ. 4.08 கோடி
பியுஸ் சாவ்லா    ரூ. 4.08 கோடி
அபிஷேக்    ரூ. 3.63 கோடி
பிரவீண் குமார்    ரூ. 3.63 கோடி
பிராட்    ரூ. 1.81 கோடி
ஹாரிஸ்    ரூ. 1.48 கோடி

கொச்சி  வீரர்    தொகை
முரளிதரன்    ரூ. 4.99 கோடி
ஜடேஜா    ரூ. 4.31 கோடி
ஸ்ரீசாந்த்    ரூ. 4.08 கோடி
ஆர்.பி.சிங்    ரூ. 2.27 கோடி
பிரண்டன் மெக்கலம்    ரூ. 2.15 கோடி
ஹாட்ஜ்    ரூ. 1.93 கோடி
லட்சுமண்    ரூ. 1.81 கோடி
பார்த்திவ்        ரூ. 1.32 கோடி
ஸ்டீவன் ஸ்மித்    ரூ. 91 லட்சம்
ரமேஷ் பவார்    ரூ. 82 லட்சம்

கோல்கட்டா நைட் ரைடர்ஸ்  வீரர்    தொகை
காலிஸ்    ரூ. 5.06 கோடி
மனோஜ் திவாரி    ரூ. 2.15 கோடி
சாகிப் அல் ஹசன்    ரூ. 1.93 கோடி
பிரெட் லீ    ரூ. 1.81 கோடி
மார்கன்    ரூ. 1.59 கோடி
ஹாடின்    ரூ. 1.48 கோடி

மும்பை இந்தியன்ஸ்  வீரர்    தொகை
சைமண்ட்ஸ்    ரூ. 3.86 கோடி
டேவே ஜேக்கப்    ரூ. 86 லட்சம்
பிராங்ளின்    ரூ. 45 லட்சம்

புனே வாரியர்ஸ் வீரர்    தொகை
மாத்யூஸ்    ரூ. 4.31 கோடி
நெஹ்ரா    ரூ. 3.86 கோடி
ஸ்மித்    ரூ. 2.27 கோடி
பெர்குசன்    ரூ. 1.36 கோடி
பெய்னே    ரூ. 1.22 கோடி
நாதன் மெக்கலம்    ரூ. 45 லட்சம்

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்    தொகை:
ரோஸ் டெய்லர்    ரூ. 4.53 கோடி
போத்தா    ரூ. 4.31 கோடி
டிராவிட்    ரூ. 2.27 கோடி
கோலிங்வுட்    ரூ. 1.13 கோடி

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர்    தொகை:
டிவிலியர்ஸ்    ரூ. 4.99 கோடி
ஜாகிர் கான்    ரூ. 4.08 கோடி
புஜாரா    ரூ. 3.17 கோடி
நான்ஸ்    ரூ. 2.95 கோடி
தில்ஷன்    ரூ. 2.95 கோடி
வெட்டோரி    ரூ. 2.49 கோடி

மனமாற்றத்திற்கு காரணம் சக முஸ்லிம் கைதி - சுவாமி அஸிமானந்தா

புதுடெல்லி,ஜன.8:மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தைச் சார்ந்த சுவாமி அஸிமானந்தா, 

தான் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்ததற்கு காரணம் இதே வழக்கில் பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள ஒரு முஸ்லிம் இளைஞருடனான நல்லுறவுதான் காரணம் என தெரிவித்துள்ளார்.

மாஜிஸ்ட்ரேட் முன்பாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சுவாமி அஸிமானந்தா இதுக்குறித்து கூறியதாவது: "நான் ஹைதராபாத்தில் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்படும்பொழுது சக கைதிகளில் ஒருவர் அப்துல் கலீம் என்பவராவார்.

சிறைக்குள்ளே வைத்து கலீம் எனக்கு நிறைய உதவிச் செய்துள்ளார். எனது பொருட்களை எடுத்து வைக்கவும், உணவு மற்றும் தண்ணீர் கொண்டு தந்ததும் கலீம் ஆவார். கலீம் போன்ற நிரபராதிகள் சிறையில் வாடுவதைக்கண்டு இவ்வழக்கில் பிராயசித்தம் செய்வதற்காக எனது மனசாட்டி என்னைத் தூண்டியது.

அதனடிப்படையில்தான் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்தேன் என அஸிமானந்தா கூறியுள்ளான்.

செய்தி:தேஜஸ்

Friday, January 7, 2011

மூட்ஸ் அதிகம் விற்பனை

காண்டம் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் மூட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் காண்டம்கள் ஐக்கிய அரபு நாடுகளில் அமோகமாக விற்னையாகி வருகிறது என ஏசி நீல்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு முதல் வளைகுடா நாடுகளில் தன்னுடைய விற்பனையை துவக்கியது. முதன்முதலாக ஓமன் நாட்டில் தன்னுடைய விற்பனையை துவங்கி, பின்னர் சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன் போன்ற நாடுகளில் சந்தையை விரிவுபடுத்தியது.

ஐக்கிய அரபு நாடுகளின் சுகாதார அமைச்சரவையின் உத்தரவுப்படி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட பிராண்டாக மூட்ஸ் உள்ளது. அதே போல் குவைத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 500 கடைகளிலும்மூட்ஸ் எளிதாக கிடைக்கிறது என்று எச்எல்எல் லைப் கேர் லிமிடெட் நிறுவனத்தின் சேர்மனும், நிர்வாக இயக்குனருமான அய்யப்பன் தெரிவித்துள்ளார்.

மேலும் இங்கிலாந்து, அயர்லாந்து, பிலிப்பைன்ஸ், இலங்கை, டிரினிடாட், டொபாகோ போன்ற இடங்களிலும் மூட்ஸ் விற்பனை அதிகரித்துள்ளது. என அவர் தெரிவித்தார்

கிரிக்கெட் வீரர்கள் ஏலம்

நான்காவது ஐ.பி.எல்., தொடருக்கான ஏலம் இன்று பெங்களூருவில் துவங்குகிறது. மொத்தம் 350 வீரர்கள் உள்ள இந்த ஏலத்தில், ரூ. 408 கோடி வரை செலவிடப்பட உள்ளது. ஒவ்வொரு அணியும், எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளனர் என்பது குறித்து அதிக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக "டுவென்டி-20' தொடர் நடந்தது. நான்காவது தொடர், உலககோப்பை முடிந்த, 6 நாட்களில் (ஏப்., 8) துவங்குகிறது. இதில் சென்னை, மும்பை, டில்லி போன்ற 8 அணிகளுடன் சேர்த்து, புதியதாக புனே கொச்சி என மொத்தம் 10 அணிகள் இம்முறை பங்கேற்கின்றன.

புதிய ஏலம்:
கடந்த 3 தொடர்களில் பங்கேற்ற வீரர்களில் ஒப்பந்தம் முடிந்ததால், அடுத்த தொடருக்கான புதிய ஏலம் இன்றும், நாளையும் பெங்களூருவில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (தோனி, ரெய்னா, முரளி விஜய், ஆல்பி மார்கல்), மும்பை இந்தியன்ஸ் (சச்சின், ஹர்பஜன், போலார்டு, மலிங்கா) அணிகள் தங்களது 4 வீரர்களை தக்கவைத்துக் கொண்டன. ராஜஸ்தானின் வார்ன், வாட்சன், பெங்களூருவின் விராத் கோஹ்லி மற்றும் டில்லியின் சேவக் ஆகியோரை அந்தந்த அணிகள் தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்தன.

முழுத் தொகை:
இன்றைய ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ரூ. 45 கோடி வரை செலவிடலாம் என்ற விதி <உள்ளது. இதில் கோல்கட்டா, டெக்கான், பஞ்சாப் அணிகள் அனைத்து வீரர்களையும் விடுவித்துள்ளதால், இந்த அணியின் உரிமையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை முழுவதையும் பயன்படுத்தலாம். 4 வீரர்களை தக்கவைத்துள்ள மும்பை, சென்னை அணிகள் ரூ. 20 கோடியை மட்டும் பயன்படுத்தலாம்.

"டாப்' பட்டியல்:
கடந்தமுறை இருந்த நட்சத்திர அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டு, "கிரேடு' (பிரிவு) முறை கொண்டுவரப்பட்டது. இதன் படி முதல் பிரிவில் உள்ள 21 வீரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 1.81 கோடி வரை கிடைக்க வாய்ப்புள்ளது. இதில் இந்தியாவின் டிராவிட், யுவராஜ், கங்குலி, வெஸ்ட் இண்டீசின் கெய்ல் ஆகியோருடன் இங்கிலாந்தின் பிராட், ஆஷஸ் நாயகன் ஆண்டர்சன், சுவான், பீட்டர்சன், இலங்கையின் தில்ஷன், ஜெயவர்தனா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இரண்டாவது பிரிவில் (ரூ. 1.36 கோடி) காலிஸ், முரளிதரன், யூசுப் பதான், ஜாகிர் கான், டெய்ட், சங்ககரா ஆகியோரும், 3வது பிரிவில் (ரூ. 91 லட்சம்) காம்பிர், ஹசி, போலிஞ்சர், உத்தப்பா, ஜெயசூர்யா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். நான்காவது பிரிவில் (ரூ. 45 லட்சம்) தமிழகத்தின் அஷ்வின், மார்கல், தமிம் இக்பால் ஆகியோர் உள்ளனர்.

கும்ளே விலகல்:
நான்காவது தொடருக்கான ஏலத்தில் இருந்து சமீபத்தில் கும்ளே விலகினார். இருப்பினும் இவர், பெங்களூரு அணியின் ஆலோசகராக தொடர உள்ளார். இந்த அணி காலிஸ், முரளிதரனை அணி குறிவைத்துள்ளதாக தெரிகிறது. தவிர, ஆஸ்திரேலியாவின் பாண்டிங், கிளார்க், ஜான்சன், ஹைடன், இங்கிலாந்தின் ஹைடன் ஆகியோரும் இன்றைய ஏலத்தில் இல்லை. தவிர, பாகிஸ்தான் வீரர்களுக்கு, அனுமதி மறுக்கப்பட்டது.

யார் எந்த பக்கம்?
டில்லி தக்கவைத்துள்ள சேவக், கேப்டன் பொறுப்பை ஏற்க மறுக்கிறார். காம்பிரையும் இந்த அணி விடுவித்து இருப்பதால், கேப்டன் பொறுப்புக்கு கில்கிறிஸ்ட், சங்ககராவை குறிவைத்துள்ளன. காம்பிர், இஷாந்த் சர்மா தவிர, ஆன்ட்ரூ சைமண்ட்ஸ், ஷான் டெய்ட், ஸ்டைன் மற்றும் தினேஷ் கார்த்திக்கையும் ஏலத்தில் எடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மாணவிகளை கவர்ந்த ஸ்ரீசாந்த்
புதியதாக வந்துள்ள கேரளாவை தலைமையிடமாக கொண்ட கொச்சி அணிக்கு பயிற்சியாளராக இருக்க, ஆஸ்திரேலியாவின் ஜெப் லாசன் சம்மதித்துள்ளார். தவிர, கேரளாவின் செயின்ட் தெரசா கல்லூரி உட்பட அனைத்து பெண்கள் கல்லூரி மாணவிகளும், கொச்சி அணிக்கு ஸ்ரீசாந்த்தை தேர்வு செய்ய விரும்புகின்றனர்.

 "டாப்-10' வீரர்கள்
நான்காவது தொடருக்கான ஏலத்தில் கெய்ல், மெக்கலம் உள்ளிட்ட வீரர்களுக்கு அதிக மவுசு காணப்படுகிறது. இவர்களுக்கு குறைந்தபட்ச தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைக் காட்டிலும் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என தெரிகிறது.
1. பிரண்டன் மெக்கலம் (ரூ. 1.81 கோடி)
2.கெய்ல் (ரூ. 1.81 கோடி)
3. டிராவிட் (ரூ. 1.81 கோடி)
4. யுவராஜ் (ரூ. 1.81 கோடி)
5. கில்கிறிஸ்ட் (ரூ. 1.81 கோடி)
6. ஆண்டர்சன் (ரூ. 1.81 கோடி)
7. பீட்டர்சன் (ரூ. 1.81 கோடி)
8. காலிஸ் (ரூ 1.35 கோடி)
9. முரளிதரன் (ரூ 1.35 கோடி)
10. ஸ்டைன் (ரூ. 91 லட்சம்)
சீனியர்கள் வாய்ப்பு
இந்த ஏலத்தில் வெஸ்ட் இண்டீசின் ஓய்வு பெற்ற வீரர் லாரா, டாப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது எல்லோரும் வியக்கும் வைத்துள்ளது. இவ்வரிசையில் இன்றைய ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஓய்வு பெற்ற சீனியர்கள் விபரம்:

பெயர்/அணி    வயது
1.லாரா (வெ.இண்டீஸ்)    41 வயது 8 மாதம்
2. ஜெயசூர்யா (இலங்கை)    41 வயது 6 மாதம்
3. கில்கிறிஸ்ட்(ஆஸி.,)    39 வயது 2 மாதம்
4. கங்குலி (இந்தியா)    38 வயது 6 மாதம்
5. கிப்ஸ் (தெ.ஆப்.,)    36 வயது 11 மாதம்
5. ஸ்டைரிஸ் (நியூசி.,)    35 வயது 6 மாதம்
6. மெக்ராத் (ஆஸி.,)    35 வயது 3 மாதம்

மீண்டும் விக்கிலீக்ஸ் தகவல்

டெல்அவீவ், ஜன : கடுமையான தடைகளின் காரணமாக துயரத்தில் ஆழ்ந்துள்ள காஸ்ஸாவின் பொருளாதார நிலைமையை அழிவின் விழும்பில் நிறுத்துவோம் என இஸ்ரேல் கடந்த 2008 ஆம் ஆண்டு கூறியதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹமாஸின் கட்டுப்பாட்டிலுள்ள காஸ்ஸாவில் 13 லட்சம் ஃபலஸ்தீன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சர்வதேச அளவில் இப்பிரச்சனை கவனத்தை ஈர்க்காத வகையில் காஸ்ஸாவின் பொருளாதார நிலையை மிகவும் படுபாதாளத்திற்கு கொண்டுசெல்வதுதான் இஸ்ரேலின் திட்டம் என அமெரிக்க தூதரக செய்திகள் கூறுகின்றன.

2008 ஜனவரியில் அன்றைய பிரதமர் யஹூத் ஓல்மர்ட் ஆற்றிய உரையில் இதனை வெளிப்படையாகவே குறிப்பிட்டிருந்தார். இதனடிப்படையில் காஸ்ஸாவில் குறைந்த அளவிலான உணவுப் பொருட்களையும், மருந்துகளையும்தான் இஸ்ரேல் கொண்டுசெல்ல அனுமதியளித்துள்ளது.

இஸ்ரேலின் தடையினால் காஸ்ஸா ஒரு சிறைச்சாலைப் போன்று ஆகிவிட்டது என மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. 35 சதவீதம் பேருக்கு காஸ்ஸாவில் வேலைவாய்ப்பு இல்லை. உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கை இது.

விக்கிலீக்ஸ் கசியச்செய்த இரண்டரை லட்சம் கேபிள் செய்திகளும் தங்களிடம் வசமுள்ளது எனவும், வரும் நாட்களில் இதனை வெளிப்படுத்துவோம் என இச்செய்தியை வெளியிட்ட நார்வே நாட்டு பத்திரிகையான அஃப்டன் போஸ்டன் தெரிவித்துள்ளது.

செய்தி:தேஜஸ்

Thursday, January 6, 2011

பயங்கரவாதத்துக்கு எதிராக மலேசிய அரசு

பள்ளி மற்றும் கல்லூரிகள் சிலவற்றில், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாடங்கள் போதிக்கப்படுகின்றன என, அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. 

மலேசிய உள்துறை அமைச்சர் ஹிஷாமுதீன் இது குறித்து கூறியதாவது: மலேசியாவில் உள்ள தமிழ், சீக்கிய  பள்ளி மற்றும் கல்லூரிகள் சிலவற்றில், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலான பாடங்கள் போதிக்கப்படுகின்றன. இதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால், எங்கள் புலனாய்வுத்துறை இவற்றை உன்னிப்பாக கவனித்து வருகிறது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் காணப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்.

கல்விக் கூடங்கள் பயங்கரவாத பயிற்சிக் கூடங்களாக செயல்படுகிறதா என்பது குறித்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், தற்போதைக்கு பயங்கரவாதத்தால் மலேசியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை என்பதற்காக நாங்கள் அலட்சியமாக இருந்து விட மாட்டோம். இவ்வாறு ஹிஷாமுதீன் கூறினார்.

காவி நாடகம்போடும் பா ஜ க

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்; மறுத்தால், விவசாயிகளின் கள் இறக்கும் போராட்டத்துக்கு தமிழக பா.ஜ., முழு ஆதரவு தரும்,'' என பா.ஜ., மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார். ஏழை இந்து மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும், நதி நீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும், விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும், கோவில் வருமானத்தை ஆன்மிக வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக பா.ஜ., சார்பில் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் தாமரை யாத்திரை நடக்கிறது. சூலூர் பஸ் ஸ்டாண்ட் வந்த யாத்திரையை ஒன்றிய அமைப்பாளர் செந்தில்குமார் தலைமையில் தொண்டர்கள் வரவேற்றனர்.

அப்போது, பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தமிழத்தில், ஏழைகளுக்காக தொடர்ந்து இலவச திட்டங்கள் வழங்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். ஆனால், அரசே "டாஸ்மாக்' மூலம் உள்நாடு, வெளிநாட்டு மதுவை விற்கிறது. கூலித் தொழிலாளர்கள் அதிகளவு பணத்தை மது குடிப்பதற்காக செலவு செய்கின்றனர். மது குடிப்பதால் மக்கள் நோயாளிகளாகவும் மாறி வருகின்றனர். விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும். 

குறிப்பு : எல்லாம் சரி உங்க ஆட்சியல செய்வீங்களா?

அரசு மருத்துவமனைகளில் இலவச சேவை! 110,.108

அரசு மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடல்களை, உரியவர்களின் வீடுகளில் கொண்டு போய் சேர்க்க, "ஆம்புலன்ஸ் 110 இலவச சேவை'யை, அரசு துவக்க உள்ளது.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த சுகாதார திட்ட அதிகாரி விஜயகுமார், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனை இணை இயக்குனர்கள், கண்காணிப்பாளர்களுடன், டெலிகான்பரன்ஸ் முறையில், ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில், குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள், எடை குறைவாக, நோயுள்ள குழந்தைகளை பராமரிக்க, ஒவ்வொரு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையிலும் சிசு பராமரிப்பு மையம் துவக்குவது. விபத்தில் சிக்கி, உயிருக்கு போராடுபவர்களையும், பிரசவத்திற்கு வருபவர்களையும் காப்பாற்றுவதற்காக, 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுவது போல, விபத்து மற்றும் நோய் வாய்ப்பட்டு, மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் இறப்பவர்களின் உடல்களை, அவர்களின் வீடுகளுக்கு கொண்டு செல்வதற்கு, "110 இலவச ஆம்புலன்ஸ் சேவை'யை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

முதல் மலையாள விருது விஜய்,. க்கு

மலையாளத்தில் ஆண்டுதோறும் ஏசியாநெட் விருதுகள் வழங்கப்படுகிறது. இதில் முதல்முறையாக தமிழ் நடிகர் விஜய் விருது பெறுகிறார்.

மலையாளத்தில் ஆண்டுதோறும் ஏசியாநெட் பிலிம் விருதுகள் வழங்கப்படுகிறது.  இந்தாண்டு 2010ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு சிறந்த நடிகர் விருதும், மற்றொரு மெகாஸ்டார் மோகன்லாலுக்கு கோல்டன் ஸ்டார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான விருது பாடிகார்ட் படத்தில் நடித்ததற்காக நடிகை நயன்தாரா அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் இந்தவிருதுபட்டியலில் நமது இளைய தளபதி விஜய்யும் சேர்ந்துள்ளார்.  சிறந்த தமிழ் நடிகருக்கான விருது விஜய்க்கு அளிக்கப்பட உள்ளது. ஏசியன்நெட் விருது வரலாற்றில் ஒரு தமிழ் நடிகருக்கு விருது வழங்குவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக மலையாளத்தில் விஜய்யின் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவர் நடித்த படங்கள் அங்கு ஹிட்டும் ஆகியுள்ளது. மேலும் கேரளாவில் விஜய்க்கு ரசிகர்களின் ஆதரவும் பெருகி வருகிறது. அதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில், விஜய்க்கு சிலை வைத்து தமிழ் ரசிகர்களை மிஞ்சும் வகையில் செய்தனர்.

இந்த விழா வருகிற ஜன.,9ம் தேதி கொச்சியில் நடைபெற இருக்கிறது.

இஸ்ரேல் காஸ்ஸாவில் 3 ஆயிரம் டன் குண்டுகளை வீசியுள்ளது

காஸ்ஸா,ஜன:கடந்த 2008 ஆம் ஆண்டு 22 நாட்கள் நீண்ட கொடூரமான காஸ்ஸா தாக்குதலின்போது இஸ்ரேல் காஸ்ஸாவின் மீது பேரழிவை ஏற்படுத்தும் 3 ஆயிரம் டன் குண்டுகளை வீசியுள்ளது.

ஆயுதக்கிடங்கில் சேமித்து வைத்திருந்த கொடூரத் தன்மைக் கொண்ட குண்டுகளை காஸ்ஸா போரின்போது ஃபலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் வீசியதாக காஸ்ஸா போலீஸ் எக்ஸ்ப்ளோசிவ் என்ஜினீயரிங் டைரக்டர் மேஜர் தெஹ்ஸின் ஸாத் கூறியதாக ஃபலஸ்தீன் இன்ஃபர்மேசன் மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பல்வேறு வகையான குண்டுகளை சாதாரண மக்களையும், வாகனங்களையும் குறிவைத்து இஸ்ரேல் வீசியதாக தெஹ்ஸின் ஸாத் கூறுகிறார்.

கேன்ஸர், மலட்டுத்தன்மை போன்ற கொடூரமான நோய்களை உருவாக்கும் தன்மைக் கொண்ட வெள்ளை பாஸ்பரஸ், டங்ஸ்டன், யுரேனியம் உள்பட சர்வதேச அளவில் தடைச் செய்யப்பட்ட வெடிப்பொருட்களை இஸ்ரேல் காஸ்ஸாவின் மீது பிரயோகித்தது.

தரைமார்க்கம், வான்வழி, கடல்வழி என மூன்று வாரம் நீண்ட கோரமான தாக்குதலில் 1400 ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 1600 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டது.

காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய கொடூரமான மனித உரிமை மீறல்கள் குறித்து முன்னாள் தென்னாப்பிரிக்க நீதிபதி கோல்ட்ஸ்டோன் தலைமையிலான ஐ.நா விசாரணைக் குழு கண்டறிந்திருந்தது. விசாரணைக் கமிஷன் தாக்கல் செய்த 575 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் காஸ்ஸா போரின்போது இஸ்ரேல் நடத்திய கொடூரங்களின் 7 உதாரணங்களை மேற்கோள் காட்டியிருந்தது.

செய்தி:தேஜஸ்

Wednesday, January 5, 2011

வாக்காளர் பட்டியலில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு

ஜன. 5: வெளிநாடு வாழ் இந்தியரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதில் காலதாமதமாகும் என்று தெரிகிறது.வாக்குரிமை கோரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நேரில் வந்து தங்களது பெயரைப் பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளதே இதற்கு காரணம்.பல லட்சக்கணக்கான இந்தியர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். 

இவர்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.இதில் என்ன மாதிரியான நடைமுறைகளைப் பின்பற்றுவது என்பது தொடர்பாக அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இடையே மாறுபட்ட கருத்து உள்ளது. வாக்காளராக பதிவு செய்ய வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

அரசு தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் நேரில் வந்து பதிவு செய்ய வேண்டும் என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பல சுற்று பேச்சு நடத்தியாகிவிட்டது. வெளிநாடு இந்தியர்கள் நேரில் வருவது சாத்தியமில்லாதது என்பதை எடுத்துச் சொல்லியாகிவிட்டது. ஆனாலும் தேர்தல் ஆணையம் பிடிவாதமாக உள்ளது என்று வெளியுறவுத் துறை  அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

சவூதி அரேபியாவில் மட்டும் 15 லட்சம் இந்தியர்கள் உள்ளனர் என்றார் அவர்.வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க உரிய விதிகளை வகுப்பது தேர்தல் ஆணையத்தின் பணிதான் இருந்தாலும் நடைமுறை சாத்தியமானதாக இருக்க வேண்டும் என்று வெளிநாடு வாழ் இந்திய நலத் துறை அமைச்சர் வயலார் ரவி கூறினார்.இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாட்டினருக்கு அடுத்த மக்களவைத் தேர்தலில் வாக்குரிமை அளிக்கலாம் என்று பிரதமர் தெரிவித்திருந்தார். அதாவது வேறு நாட்டில் குடியுரிமை பெறாத, வேலை நிமித்தமாகவோ கல்விக்காகவோ வெளிநாட்டில் வசிக்கும் இந்தியருக்கு இந்த வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதே நோக்கம் என்றார்.

இந்தியா வருகிறது., கென்ய அணி


உலக கோப்பை தொடருக்காக பயிற்சி போட்டிகளில் பங்கேற்க, கென்ய அணி இந்தியா வருகிறது.

வரும் பிப்., 18ல் துவங்கும் உலக கோப்பை தொடரில் கென்யா பங்கேற்கிறது. இதற்கான வீரர்கள் தேர்வுக்கு முன்பாக, இந்தியாவில் குஜராத், பரோடா அணிகளுக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் பப்டிஸ்ட் கூறுகையில்,"" உலக கோப்பை தொடருக்கான நல்ல பயிற்சியாக, இந்த பயிற்சி போட்டிகள் எங்களுக்கு அமையும். தவிர, உலக கோப்பை அணியை முடிவு செய்யவும் உதவும்,'' என்றார்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!