Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, January 5, 2011

இந்தியா அவசரப்படக்கூடாது!

ஜன.5:  ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் இடம்பெற இந்தியா அவசரப்படக்கூடாது என்று சீனா கருதுகிறது.
 
ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவை சீரமைத்து விரிவாக்க வேண்டும் என இந்தியா,ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த மாற்றங்களை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கொண்டு வரவேண்டும் என்றும் இவை கூறிவருகின்றன.

ஆனால் ஐ.நா. பாதுகாப்புக் குழுவை விரிவாக்குவதில் சீனாவுக்கு எந்த அவசரமும் இருப்பதாகத் தெரியவில்லை. சீன அரசின் கருத்தை வெளியிடும் அதிகாரபூர்வமான நாளிதழ் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறயிருப்பதாவது.

""ஐ.நா.வில் சீர்திருத்தங்கள் ஒரே இரவில் ஏற்பட்டு விடாது. அவை சில ஆண்டுகளிலும் ஏற்படாது. செயற்கையாக ஒரு காலக்கெடுவை ஏற்படுத்திக் கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. ஐ.நா.வில் சிக்கல் நிறைந்த விஷயங்களைத் தீர்க்க நிறைய கால அவகாசமும் பொறுமையும் தேவை,''  என்கிறது அந்த தினசரி.

இந்தியாவைக் குறிப்பிடாமல் "சிறிய, நடுத்தர அளவு நாடுகளுக்கு' பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று அந்த நாளிதழ் கருத்து தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பாதுகாப்புக் குழுவில் இடமளிக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது. ஆனால் அவசரப்படுவது சிறுபிள்ளைத்தனம் என்றும் தெரிவித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்புக்குழுவில் இப்போது அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா ஆகிய 5ல நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர்.

Tuesday, January 4, 2011

பாலிவுட் படங்களில் நடிக்கும் விளையாட்டு வீரர்கள்

புதுடில்லி : பாலிவுட் படங்களில் நடிக்க விளையாட்டு வீரர்களின் படையெடுப்பு தொடர்ந்து வருகிறது. டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் மற்றும் பாக்சிங் நட்சத்திரம் விஜேந்தர் சிங் ஆகியோர் இந்திப் படங்களில் நடிக்கின்றனர். தி ஒன், பாடியாலா எக்ஸ்பிரஸ் ஆகிய 2 படங்களில் விஜேந்தர் சிங் நடித்து வருகிறார். விஜேந்தர் கடந்த 2008ம் ஆண்டு பீஜிங்ககில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊர் நாறும் எம் எல் ஏ?

பிகாரில் பாஜக எம்எல்ஏ ராஜ்கிஷோர் கேஷரி கொல்லப்பட்டது துயரமானது எனத் தெரிவித்த காங்கிரஸ் கட்சி, இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது. 

இந்தக் கொலையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இது துயரமான சம்பவம். இதுதொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பிகார் மாநில காங்கிரஸ் கட்சி செய்தித்தொடர்பாளர் பிரேமச்சந்திர மிஷ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.தன்னை எம்எல்ஏ பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று நடந்த சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாட்னா உயர்நீதிமன்றத்தில் தற்போது பணியில் உள்ள நீதிபதியைக் கொண்டோ அல்லது ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டோ விசாரணை நடத்த வேண்டும். பாலியல் புகார் அளித்திருந்தும் எம்எல்ஏவை சந்திக்க அந்தப் பெண் எந்தக் காரணங்களினால் அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்து சுயேச்சையான விசாரணை ஒன்றும் நடத்தப்பட வேண்டும் என பிரேமச்சந்திர மிஷ்ரா தெரிவித்தார்.

சச்சின் ஸ்டில் குட் !!!

தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 362 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி தனது முதல் இன்னிங்சில், 2 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்திருந்தது. காம்பிர் 65, சச்சின் 49 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.

நழுவிய சதம்:நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. சச்சின், காம்பிர் ஜோடி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஸ்கோர் சீராக உயர்ந்தது. இந்த ஜோடியை பிரிக்க, தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் செய்த, எந்த முயற்சியும் பலிக்கவில்லை. மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 176 ரன்கள் சேர்த்து சாதித்தது. இந்நிலையில் காம்பிர், 93 ரன்களுக்கு (13 பவுண்டரி) அவுட்டாகி, சதமடிக்கும் வாய்ப்பை தவற விட்டார்.

"மிடில் ஆர்டர்' சரிவு:பின் சச்சினுடன் லட்சுமண் இணைந்தார். வழக்கத்துக்கு மாறாக லட்சுமண், சற்று அதிரடியாக விளையாடினார். இவர் 15 ரன்கள் எடுத்த நிலையில், துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார். கடந்த போட்டியில் ஏமாற்றிய இளம் வீரர் புஜாரா (2), மீண்டும் சொதப்பினார். கேப்டன் தோனி "டக்' அவுட்டானார்.

சச்சின் சதம்:ஒருமுனையில் தொடர்ந்து விக்கெட் சரிந்த போதும், மறுமுனையில் சச்சின் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டிசோட்சபே ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் விளாசிய சச்சின், மார்கல் பந்தில் "மிரட்டல்' சிக்சர் அடித்து, சர்வதேச டெஸ்ட் அரங்கில் 51 வது சதத்தை எட்டினார்.

கேப் டவுன் டெஸ்டில் அபாரமாக ஆடிய சச்சின் சதம் கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 51 வது சதம் அடித்து, மீண்டும் அசத்தினார். இவரது சதம் கைகொடுக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. தென் ஆப்ரிக்கா சார்பில் ஸ்டைன், 5 விக்கெட் கைப்பற்றினார்.

சச்சின் மீண்டும் அசத்தல்சர்வதேச டெஸ்ட் அரங்கில் சமீபத்தில் 50 வது சதம் அடித்து சாதனை படைத்த சச்சின், நேற்று 51வது சதம் கடந்து (177 போட்டி), மற்றொரு சாதனை படைத்தார். தவிர, 442 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று, 46 சதம் அடித்துள்ள சச்சின், ஒட்டுமொத்தமாக 97 சதம் அடித்து அசத்தியுள்ளார்.
டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த, "டாப்-3' வீரர்கள்:
வீரர்/அணி போட்டி ரன்கள் சதம்1.சச்சின் (இந்தியா) 177 14,678 51
2.காலிஸ்(தெ.ஆப்.,) 145 11,838 39
3.பாண்டிங்(ஆஸி.,) 152 12,363 39

Monday, January 3, 2011

இந்தியா,.. இது நாடா ? சுடுகாடா?

சொந்த நாட்டிலேயே தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு இல்லை என்று மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மருத்துவர் விநாயக் சென்னின் மனைவி இலினா சென் கூறினார்.

 இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: ""என் கணவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த விதமான அடிப்படை ஆதாரமும் இல்லை. ஆனால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு நியாயமற்றது.  விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு மனு செய்யுமாறு எங்களுக்கு பலர் அறிவுறுத்தினர். 

ஆனால் விசாரணை நியாயமாக நடைபெறும் என்ற நம்பிக்கையில் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. குற்றச்சாட்டுகள் அனைத்தும் திட்டமிட்ட சதிச் செயல்கள். நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பதன் மூலம் என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயக்கூடும்.  என்னை பாதுகாத்துக் கொள்ள ஏதேனும் ஜனநாயக நாட்டின் தூதரகத்தில் அரசியல் அடைக்கலம் கேட்பதே இப்போது எனக்கு தெரிந்த ஒரே வழியாக உள்ளது. சொந்த நாட்டிலேயே எனக்கு பாதுகாப்பில்லை. எனக்கு 20, 25 வயதுகளில் 2 மகள்கள் உள்ளனர். என் கவலை எல்லாம் அவர்களைப் பற்றிதான் உள்ளது.  எங்கள் குடும்பத்திற்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் உள்ளனர். அதனால் நான் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் ஏஜெண்ட் என்று அவதூறு பிரசாரத்தை சிலர் மேற்கொண்டுள்ளனர். முஸ்லிம் நண்பர்கள் அதிகம் இருந்தால் அதை சட்ட விரோதமாக பார்க்கும் நிலை நாட்டில் நிலவுகிறது. என் கணவருக்கு பிறகு இப்போது நானும் அவதூறு குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளேன்'' என்றார் இலினா சென்.  

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் மக்கள் உரிமைகளுக்கான இயக்கம் என்ற அமைப்பின் தலைவருமான மருத்துவர் விநாயக் சென்னுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் சென்ற மாதம் ராய்ப்பூர் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது

ஐ. நா. வில் இந்தியாவுக்கு இடம் உண்டா ?

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினர்களாக 10 நாடுகள் தேர்ந்தெடுக்கப் பட உள்ளன. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் மொத்தம் 15 உறுப்பினர்களைக் கொண்டது. சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய ஐந்தும் நிரந்தர உறுப்பினர்கள். இவற்றுக்கு, "வீட்டோ' என்ற சிறப்பதிகாரம் உண்டு. நிரந்தரம் அல்லாத உறுப்பினர்களாக 10 நாடுகள் தேர்ந்தெடுக்கப்படும். இவற்றின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள். இவை ஐந்து ஐந்தாக இரண்டு பிரிவுகளாகத் தேர்ந்தெடுக்கப்படும். அதன்படி, 2010-2011க்கான ஐந்து உறுப்பினர்களாக, போஸ்னியா, பிரேசில், கேபோன், லெபனான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் ஏற்கனவே உள்ளன. தற்போது, இந்தியா உள்ளிட்ட நாடுகள் 2011-2012க்கான ஐந்து நாடுகளாகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

2010 - தேசத் துரோக?

ஜனநாயக நாடுகள் மிகவும் அபூர்வமாகவே தங்களது குடிமகன்கள் மீது தேசத்துரோக வழக்கை சுமத்தும். தேசத்துரோகம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு ஒருவேளை வரைவிலக்கணம் இல்லாததன் காரணமாகயிருக்கலாம். ஆனால், வலதுசாரி ஹிந்துத்துவாவின் நிர்பந்தத்தின் காரணமாக இந்தியாவின் ஜனநாயகம் சர்வாதிகாரமாக மாறிவருகிறது.

இந்தியாவின் சில மாநிலங்களில் சுவரொட்டியை ஒட்டுவதுகூட தேசத்துரோக வழக்காக சில இளைஞர்கள் மீது தொடுக்கப்பட்டது.

கடந்த 2010 ஆம் ஆண்டின் இறுதியில் பிரபல மருத்துவரும், மனித உரிமை ஆர்வலருமான பினாயக்சென்னின் மீதும் தேசத்துரோக வழக்கு பதிவுச் செய்யப்பட்டு ஆயுள் தண்டனையை விதித்தது செசன்ஸ் நீதிமன்றம்.

இதற்குமுன் பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய் மற்றும் கஷ்மீர் தெஹ்ரீக்-இ-ஹுர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானி ஆகியோர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவுச்செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் வழக்குப் பதிவுச் செய்தால் ஏற்படும் பின்விளைவுகளைக் குறித்து பயந்த மத்திய உள்துறை அமைச்சகம் தொடர் நடவடிக்கைகளை கைவிட்டது.

பா.ஜ.கவைச் சார்ந்த ஒருவர் தாக்கல் செய்த புகார் மனுவின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்குப் பதிவுச்செய்ய டெல்லியில் ஒரு கீழ் நீதிமன்றம் உத்தரவிட்ட பொழுதிலும் இரண்டுபேரும் உணர்ச்சியைத் தூண்டும் உரைகளை நிகழ்த்தவில்லை என போலீஸ் அறிக்கையை சமர்ப்பித்தது.

கேரள மாநிலம் களமசேரியில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பஸ் எரிப்பு வழக்கின் பெயரால் பி.டி.பி கட்சித் தலைவர் அப்துல்நாஸர் மனைவி சூஃபியா மதனி மீது தேசத்துரோக வழக்கு பதிவுச் செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் பதிவுச் செய்யப்பட்ட தேசத்துரோக வழக்குதான் நகைப்பிற்கிடமானது. கர்நாடகா மாநிலத்தில் செயல்படும் பி.யு.சி.எல் என்ற மனித உரிமை அமைப்பு வெளியிடும் செய்திப் பத்திரிகையில் ஏராளமான தேசத்துரோகச் செய்திகள் அடங்கியுள்ளன எனக் குற்றஞ்சாட்டி விஜயநகர போலீசார் அப்பத்திரிகையை வெளியீட்டாளருக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், அப்பத்திரிகை கடந்த 2007 ஆம் ஆண்டே வெளியீட்டை நிறுத்தியிருந்தது.

அதனைவிட கேலிக்கூத்தான சம்பவம் தமிழகத்தின் சேலத்தில் நடந்தேறியது. ஆதிவாசிகளை அவர்களின் வாழ்விடத்திலிருந்து விரட்டியடிப்பதைக் கண்டித்து வெளியிட்ட மடக்கோலையை குடியரசுதினத்தில் விநியோகம் செய்தது தேசத்துரோக வழக்காக பதிவுச் செய்யப்பட்டது.

தேஜஸ்

Sunday, January 2, 2011

கட்டுப்பாடு கார்களுக்கு

இந்தியாவில், கார் வைத்திருப்பவர்கள் தங்கள் கார் எந்தளவுக்கு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பராமரிக்க வேண்டும் என்பதற்கான, "ஸ்டார்' ஒழுங்கு முறை சான்றிதழை அரசு கொண்டு வருகிறது. பெட்ரோலிய அமைச்சகத்துக்கு கீழ் இயங்கும் எரிபொருள் சிக்கனத் துறை, வரும் ஆண்டில் கார் தயாரிப்பாளர்களுக்கும், வைத்திருப்பவர்களுக்கும் கட்டாய எரிபொருள் சேமிப்பு மற்றும் முழுமையான பயன்பாட்டிற்கான சான்றிதழ்களை வழங்குகிறது. இந்த சான்றிதழ்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்படும்.

ஏற்கனவே, 2006 முதல், "ஸ்டார்' குறியீடு வழங்கும் முறை உள்ளது. முதலில் மின்சார உபகரணங்களுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த குறியீடு தற்போது கார்களுக்கும் வருகிறது. இந்த நடைமுறை வருவதற்கு சில காலம் ஆகலாம் என தெரிகிறது. இருப்பினும், கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து, உரிய சான்றிதழ்(ஸ்டார்) பெற்ற பின்னர் தான் விற்பனைக்கு அனுமதிக்கப்படும். இது குறித்த பேச்சு வார்த்தை, கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் நடந்து வருகிறது. 

தற்போதைக்கு, கனரக மற்றும் டூவீலர் போன்ற வாகனங்களுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. முதலில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியவுடன் அடுத்ததாக மற்ற வாகனங்களுக்கு எப்படி நடைமுறைப்படுத்தலாம் என்பதை ஆலோசிக்கலாம் என தெரிகிறது. எரிபொருள் சிக்கனத் துறை, ஒவ்வொரு வாகனத்திற்கும் நிரந்தரமான குறிப்பிட்ட எரிபொருள் சேமிப்பு திறன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. கார்களின் தரங்களுக்கு ஏற்ப, "ஸ்டார்' குறியீடு வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான கார்களை வாங்கிக் கொள்ள முடியும். தற்போதைக்கு நீண்ட கால அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தவிருக்கிறது. 

வரும் 2015ம் ஆண்டிற்குள் ஓரளவு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தலாம் என தெரிகிறது. இந்தியாவில், 13 மில்லியன் கார்கள் இந்திய சாலைகளில் தினந்தோறும் இயங்குகின்றன. இதில், மோசமான பராமரிப்புகள் காரணமாக சுற்றுச்சூழலுக்கு அதிகம் மாசு விளைவிக்கும் கார்களும் அடங்கும். இந்த சான்றிதழ் கொண்டு வருவதன் மூலம் ஓரளவிற்கு சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க முடியும் என்று அரசு கருதுகிறது.

எங்கும் எதிலும் லஞ்சம்!

கோவை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் பிறந்த குழந்தைகளை காண்பிக்க, ஊழியர்கள் லஞ்சம் கேட்டு நிர்பந்திப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆண் குழந்தையாக இருப்பின் 500 ரூபாயும், பெண் குழந்தையாக இருப்பின் 250 ரூபாயும் பறிப்பதாக கூறி மருத்துவ அதிகாரியை முற்றுகையிட்ட உறவினர்கள், சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

கோவை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் 150 படுக்கைகள் உள்ளன. ஏழை, எளிய மக்களுக்கு இங்கு இலவசமாக பிரசவம் பார்க்கப்படுகிறது. தினமும் 25 -30 தாய்மார்களுக்கு பிரசவம் நடக்கிறது. குழந்தை பிறந்ததும் இவ்வார்டிலுள்ள தாய்மார்களுக்கும், உறவினர்களுக்கும் உடனடியாக காண்பிக்கப்படுவதில்லை என்றும், பிறந்தது ஆண் குழந்தையாக இருப்பின் 500 ரூபாயும், பெண் குழந்தையாக இருப்பின் 250 ரூபாயும் ஊழியர்களால் லஞ்சமாக வசூலிக்கப்படுவதாக பல ஆண்டுகளாகவே புகார் உள்ளது. இது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணும் வகையில், அரசு மருத்துவமனை நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பிரசவம் நடந்ததும் என்ன குழந்தை என்பதை வெளிப்படையாக அறிவிக்கும் வகையில், ஒலிபெருக்கி வசதிகளும் பிரசவ வார்டில் ஏற்படுத்தப்பட்டன. மேலும், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். உயரதிகாரிகளால் கண்காணிப்பு அதிகரிக்கப்படும் போது மட்டுமே, லஞ்ச முறைகேடுகள் குறைகின்றன. நாளடைவில் கண்காணிப்பு தளர்ந்ததும் மீண்டும் லஞ்சம் தலைதூக்குகிறது. பொதுமக்களின் புகாருக்கு இதுவரை நிரந் தர தீர்வு காண முடியாமல், அரசு மருத்துவமனை நிர்வாகம் திணறி வருகிறது.

இந்நிலையில், பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க தொண்டாமுத்தூரைச் சேர்ந்த செந்தில் என்பவர் சென்றார். அவரிடம், ஊழியர்கள் 500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியடைந்த உறவினர்கள் திரண்டு, அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் டாக் டர் சிவப்பிரகாசத்தை முற் றுகையிட்டு பிரசவ வார்டு ஊழியர்கள் மீது சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

இணையதளம் மூலம் வங்கி கணக்கு பணப்பரிமாற்றம்

இணையதளம் மூலம் வங்கிக் கணக்கில் இருந்து பணப்பரிமாற்றம் (இ-ஃபண்ட்) செய்ய வங்கி கணக்கு எண்ணை மட்டும் பயன்படுத்தினால் போதும். கணக்கு வைத்திருப்பவரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தேவையில்லை.  இணையதளம் மூலம் பணப்பரிமாற்றம் வேகமாக நடைபெற வேண்டும். பரிமாற்றம்  செய்வதை எளிதாக்குவது, இந்த சேவையை மேலும் பலரும் பயன்படுத்தும் வகையில் இந்த புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) வழிகாட்டுதலின் பேரில் இந்த முறை அமலுக்கு வந்துள்ளது. இணையதளம் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும்போது அதனைப் பயன்படுத்துபவர்கள் இரண்டு முறை வங்கிக் கணக்கு எண்ணை பதிவு செய்தவுடன் பணப்பரிமாற்றம் எளிதாக நடைபெறும். கணக்கு வைத்திருப்பவரின் பெயர், வங்கிக் கிளை போன்ற விவரங்கள் தேவைப்படாது.


பெயர், வங்கிக் கிளை போன்றவற்றை சரிபார்த்து பணம் அந்த கணக்கில் சென்றடைய காலதாமதம் ஏற்படுகிறது. இனி இந்த காலதாமதம் ஏற்படாது. இந்தியாவில் ஒரே பெயர் பல்வேறு எழுத்துகளைப் பயன்படுத்தி எழுதுவதால், சில குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதனாலும் பெயரைக் குறிப்பிடும் முறை நீக்கப்படுகிறது.

வெற்றிலையின் மருத்துவ குணம்

 1. இருமல்-சளி நீங்க:

இருமல், சளி தொல்லை உள்ளவர்களுக்கு வெற்றிலை சிறந்த மருந்து, 2 வெற்றிலை, நடுநரம்பு நீக்கிய 5 ஆடாதொடா இலையுடன் 10 மிளகு, ஒரு பிடி துளசி இலைகளை சேர்த்து ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ள வேண்டும். அதனுடன், 300 மில்லி நீர்விட்டு மூடிய பாத்திரத்தில் நன்றாக கொதிக்க வைத்து 75 மில்லி ஆனவுடன் வடிகட்டி குடிக்க வேண்டும். இதேபோல் தினமும் 2 அல்லது 3 வேளை சளி, இருமல் இருக்கும்வரை குடிக்கலாம். இப்படி செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

*2. ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி:

சித்த மருந்துகடைகளில் கிடைக்கும் சுவாசகுடோரி மாத்திரை இரண்டுடன் 2 மிளகும் சேர்த்து, அதை ஒரு வெற்றிலையில் வைத்து வாயில்போட்டு நன்கு மெல்லவேண்டும். தினம் 2 வேளை இவ்வாறு மென்றால் ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி படிப்படியாக குணமாகும்.

*3. காணாக்கடிக்கு:

எந்த பூச்சி கடித்தது என்று தெரியாமல் ஏற்படும் பாதிப்பான காணாக்கடிக்கு நடுநரம்பு நீக்கிய வெற்றிலை 5, மிளகு 10 ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து, 200 மில்லி நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அது 50 மில்லியாக ஆனவுடன் தினமும் 2 வேளை சாப்பிட்டு வர காணாக்கடி விரைவில் குணமாகும்.

*4. உற்சாக உணர்விற்கு:

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பு தூண்டப்படுகிறது. அத்துடன், ஒருவித உற்சாக உணர்வும் கிடைக்கிறது.


*5. வாத நோய் நீங்க:

வாத நோய்களை குணமாக்கும் "வாத நாராயணா" எண்ணெய் தயாரிப்பில் வெற்றிலைசாறும் ஒரு முக்கிய மூலப்பொருளாகும்.

*6. செக்ஸ் உணர்விற்கு:

பெரும்பாலான ஆசிய நாடுகளில் வெற்றிலைக்கு செக்ஸ் உணர்ச்சியை தூண்டும் மற்றும் நரம்பு வலுவேற்றும் சக்தி இருப்பதாக கருதப்படுகிறது.

*7. தீப்புண் குணமாக:

தீப்புண் குணமாக வெற்றிலையில் நெய் தடவி லேசாக வதக்கி புண்ணின் மீது பற்றாக போட வேண்டும். விரைவில் அந்த புண் குணமாகும்.

*8. நுரையீரல் பலப்பட:

வெற்றிலைச்சாறு 5 மி.லி. யுடன் இஞ்சிச் சாறு 5 மி.லி. கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது. இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அருந்தி வருவது நல்லது.

*9. வயிற்றுவலி நீங்க:

2 தேக்கரண்டி சீரகத்தை மூன்று தேக்கரண்டி வெண்ணெய் விட்டு நன்கு மைபோல் அரைத்து, 5 வெற்றிலை எடுத்து காம்பு, நுனி, நடுநரம்பு நீக்கி வெற்றிலையின் பின்புறத்தில் அந்த கலவையைத் தடவி சட்டியிலிட்டு வதக்கி பின்பு 100 மிலி நீர்விட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆறியபின்பு வடிகட்டி கசாயத்தை அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும். மாந்தம் குறையும்.

*10. சர்க்கரையின் அளவு கட்டுப்பட:

வெற்றிலை - 4

வேப்பிலை - ஒரு கைப்பிடி, அருகம் புல் - ஒரு கைப்பிடி

சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி. தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி.யாக வற்ற வைத்து ஆறியவுடன் வடிகட்டி தினமும் மூன்று வேளை உணவுக்கு முன் 50 மி.லி. குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.

*11. விஷக்கடி குணமாக:

உடலில் உள்ள விஷத்தன்மையை மாற்ற வெற்றிலை சிறந்த மருந்தாகும். சாதாரணமான வண்டுக்கடி, பூச்சிக்கடி இருந்தால் வெற்றிலையில் நல்ல மிளகு வைத்து மென்று சாறு இறக்கினால் விஷம் எளிதில் இறங்கும்.

*12. இருமல் குறைய:

வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு, இருமல், மூச்சுத் திணறல் குணமாகும்.

*13. அஜீரணக் கோளாறு அகல:

வெற்றிலை 2 அல்லது மூன்று எடுத்து அதனுடன் 5 நல்ல மிளகு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சிறுவர் களுக்கு உண்டாகும் செரியாமை நீங்கும். வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக கழுவி அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழுங்கி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

*14. தோல் வியாதிக்கு:

100 மி.லி. தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு சூடாக்கி வெற்றிலை சிவந்தவுடன் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு சொறி, சிரங்கு படை இவைகளுக்கு தடவி வந்தால், எளிதில் குணமாகும்.

*15. தலைவலி நீங்க:

வெற்றிலைக்கு மயக்கத்தைப் போக்கும் குணமுண்டு. மூன்று வெற்றிலைகளை எடுத்து அதைக் கசக்கி சாறு எடுத்து கிடைக்கும் சாறில் கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்து, நெற்றிப் பகுதியில் பற்று போட்டால் தலைவலி பறந்துபோகும்.

*16. தீப்புண் ஆற:

தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்டலாம்.

*17. அல்சர்:

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

*18. தேள் விஷம்:

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

***பிற நாட்டில் இதன் பயன்கள்:

நம் நாட்டில் மட்டுமில்லை வெற்றிலை சில சம்பிரதாயங்களுக்காகவும் பிற நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1. சீனர்கள் வெற்றிலையை இடது கையால் வாங்க மாட்டார்கள். நம் நாட்டிலும் இப் பழக்கம் இருந்து வருகிறது.

*2. சுமித்ராவில் மனைவியை விட்டுப் பிரிய விரும்பும் கணவன் வெற்றிலையை அவளிடம் கொடுத்துத் "தலாக்" என்று மூன்று தடவை கூறி விட்டால் விவாகரத்து ஆகிவிட்டதாக அர்த்தம்.

*3. தூக்கிலிடுவதற்கு முன்பு குற்றவாளிகளுக்கு வெற்றிலை பாக்கு கொடுக்கும் வழக்கம் மியான்மரில் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

*4. சிறையில் அடைபட்டுக் கிடக்கும் கைதிகளுக்கு மலேரியா போன்ற நச்சுக் காய்ச்சல் வராமல் இருக்க அவர்களுக்கு வெற்றிலை கொடுப்பது நெதர்லாந்து நாட்டின் வழக்கம்.

*5. சண்டை போட்டுக் கொள்பவர்கள் சமாதானம் அடைய வெற்றிலை மாற்றிக் கொள்வது மலேசியா வழக்கம்.

*கணேஷ் அரவிந்த்.

நித்யானந்தா பிறந்த தினத்தில் நடிகைகள்!!!

39வது பிறந்த நாள் விழாவில் நடிகை ஜூஹி சாவ்லா, மாளவிகா ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து கூறி ஆசிர்வாதம் பெற்றனர்.

சாமியார் நித்யானந்தா மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் வேளையில், நித்யானந்தா - நடிகை ரஞ்சிதா தொடர்பான "சிடி வெளியாகி பத்து மாதங்களுக்குப் பின்னர், அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 30ம் தேதியன்று, ராம்நகர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் லெனின் கருப்பன் மீது, நடிகை ரஞ்சிதா புகார் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு வரும் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. மறுநாள், பெங்களூரில், நடிகை ரஞ்சிதா பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். சாமியார் நித்யானந்தாவுடன் இருக்கும் பெண் நானல்ல என்று மறுப்பு தெரிவித்தார்.

தற்போது திடீரென, லெனின் கருப்பன் தன்னை கற்பழிக்க முயற்சித்ததாகவும், 80 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும்  ரஞ்சிதா கூறியிருப்பது ஏன் என்று சி.ஐ.டி., போலீசார் சந்தேகிக்கின்றனர். ஐதராபாத் போரன்ஸிக் லேப்பில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட "சிடி உண்மையானது. அதில் எந்த திருத்தங்களோ, எடிட்டிங்கோ செய்யப்படவில்லை என்று அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த அறிக்கைகள் அனைத்தும், சி.ஐ.டி., போலீசார் வசம் பத்திரமாக உள்ளன.

இதற்கிடையில், சாமியார் நித்யானந்தா தனது 39வது பிறந்த நாளை பிடதி ஆஸ்ரமத்தில் கோலாகலமாக கொண்டாடினார். அப்போது நடிகைகள் ஜூஹி சாவ்லா, மாளவிகா உட்பட சிலர் நித்யானந்தாவை தனியாக சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து, ஆசீர்வாதம் பெற்றுள்ளனர்.

முதுமையிலும் சுறுசுறுப்புக்கு...


பீட்ரூட் ஜூஸ் பருகினால், முதுமையிலும் சுறுசுறுப்புடன் வாழ முடியும் என, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. மனிதர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் அளவை, நைட்ரேட் சத்து வெகுவாக குறைப்பதாக, ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில் தெரிந்தது.

இதை அடிப்படையாகக் கொண்டு, நைட்ரேட் சத்து நிறைந்த பீட்ரூட் ஜூசை முதியவர்களுக்குக் கொடுத்து, பிரிட்டன் எக்ஸ்டர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இதில், வாரத்திற்கு ஆறு நாட்கள் பீட்ரூட் ஜூஸ் அருந்தியவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து ஆய்வுக்கு தலைமை வகித்த விஞ்ஞானி கேட்டி லான்ஸ்லி கூறியதாவது: முதியவர்கள் சிறிய வேலை செய்தாலும், அவர்கள் மிகுந்த சோர்வடைந்து விடுவர். இதற்கு முக்கிய காரணம், வயதாகும்போது அவர்களது உடலில் உள்ள ரத்த நாளங்கள் சுருங்கிவிடும். இதனால், திசுக்களுக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் உடல் சோர்வடைந்துவிடும். எனவே, ஆய்வில் கலந்துகொண்ட முதியவர்களுக்கு ஆக்சிஜன் தேவையை குறைப்பதற்காக, பீட்ரூட் ஜூஸ் கொடுத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் சத்து, அவர்களது ரத்த நாளத்தை விரிவடையச் செய்தது.  ரத்த ஓட்டம் எளிமையாக நடந்ததால், திசுக்களுக்கு வழக்கமாக தேவைப்படும் ஆக்சிஜன் அளவு 12 சதவீதம் குறைந்தது. மேலும், பீட்ரூட் ஜூஸ் அருந்திய முதியவர்கள் உடற்பயிற்சி மற்றும் நடைபயற்சி மேற்கொண்டாலும், அவர்கள் சோர்வடையாமல், வழக்கத்தைவிட  சுறுசுறுப்பாக இருந்தனர். இவ்வாறு கேட்டி லான்ஸ்லி கூறினார். ஆனால், பீட்ரூட் பற்றிய தனி ஆய்வுத் தகவல் இது என்பதால், எல்லாரும் இதை அப்படியே பின்பற்றுவதா என்பது குறித்து,  டாக்டர்கள் கருத்தைக் கேட்டு முடிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.

அசோக்.S

சவூதியில் வெள்ளப்பெருக்கு!

மக்கா மாகாணத்திற்குட்பட்ட அல்லித் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய சவூதி அரேபியாவைச் சார்ந்தவர்கள் நான்கு பேர் இறந்துவிட்டனர். கடந்த வியாழக்கிழமை இப்பகுதியில் கனத்த மழை பெய்ததைத் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கிய நான்குபேரும் காணாமல் போயினர். இவர்களின் உடல்கள் கடந்த வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

ராணுவத்தினரும், அப்பகுதி மக்களும் காணாமல் போனவர்களை தேடினர். அல்ரவ்தாவில் இரண்டுபேரின் உடல்கள் கிடைத்தன. இதர இருவரின் உடல்கள் வாதி அல் அயாரிற்கு சமீபத்திலிருந்து கிடைத்ததாக அல்லித் பகுதியைச் சார்ந்த ஸஈத் அல்மெஹரபி தெரிவிக்கிறார்.

வியாழக்கிழமை கனத்த மழை பெய்ததைத் தொடர்ந்து அல்லித் பகுதியில் அணைக்கட்டிலிருந்து வெள்ளம் கரைப்புரண்டு ஓடுகிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி நிலைமை மோசமானது என அவர் தெரிவிக்கிறார்.

வெள்ளப்பெருக்கில் சிக்கிய பங்களாதேஷைச் சார்ந்தவரை வெள்ளிக்கிழமை காப்பாற்றியதாக அவர் தெரிவிக்கிறார். ஜித்தாவில் பல சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளப் பெருக்கை எதிர்கொள்ள அதிகாரிகள் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தி:தேஜஸ்

உள்ளாட்சித் தேர்தல், இலங்கையில்

நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி உள்பட 300 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்த அரசு முடிவெடுத்துள்ளது.உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் ஜனவரி இறுதியில் நிறைவடையவுள்ளது. இதனால் பதவிக்காலம் நிறைவடைவதற்கு இரு வாரத்துக்கு முன்பே உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்படும். மார்ச் மத்தியில் தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் மைத்திரிபாலா சிறிசேனா கூறினார்.இலங்கையில் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற 30 ஆண்டுகாலப் போர் 2009-ல் முடிவுக்கு வந்தது. இதை தமக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக அதிபர் மகிந்த ராஜபட்ச கருதினார். நாட்டில் தமக்கு ஆதரவான சூழல் நிலவுவதை அறிந்த அவர், நாடாளுமன்றத் தேர்தலை முன்னக்கூடியே நடத்த முடிவெடுத்தார். அதன்படி நாடாளுமன்றத்தை முன்னதாகவே கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.ஆனால் இந்தத் தேர்தலில் மாபெரும் முறைகேடு நடந்ததாகக்கூறி ஐக்கிய தேசிய கட்சி, ஜனநாயக தேசிய கூட்டணி ஆகிய இரு எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மகிந்த ராஜபட்ச திட்டவட்டமாக மறுத்தார். தேர்தல் மூலம் மக்கள் மத்தியில் எனக்கு உள்ள செல்வாக்கு நிரூபணமாகியுள்ளது என்று தெரிவித்தார்.மகிந்த ராஜபட்சவின் நடவடிக்கையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்கள், நாடாளுமன்றத் தேர்தலை விரும்பவில்லை. இதை அவர்கள் தேர்தலைப் புறக்கணித்து வெளிப்படுத்தினர். ஈழத்தமிழர் பகுதியில் மிகக் குறைந்தளவே வாக்குப்பதிவானது.இலங்கையில் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் ராஜபட்ச கொடுத்த வாக்குறுதிகளை காப்பற்றவில்லை. இன்னும் கணிசமான ஈழத்தமிழர்கள் முகாம்களில் உள்ளனர்.  ஈழத்தமிழர்கள் தொடர்ந்து துயரையே அனுபவித்து வருகின்றனர். இதனால் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் ஈழத்தமிழர்களுக்கு ஆர்வம் இல்லை. இதை ராஜபட்சவும் நன்கறிவார். உள்ளாட்சித் தேர்தலிலும் தமது கட்சிக்கு பெரும்பாலான ஈழத்தமிழர்கள் வாக்களிக்கமாட்டர்கள் என்பதும் அவருக்குத் தெரியும்.இருப்பினும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி, தமது கட்சிக்கு இப்போதுள்ள செல்வாக்கை அறிந்துவிட வேண்டும்  என்பதில் அவர் உறுதியாகவுள்ளார். புலிகளுக்கு எதிரானப் போர் நிறைவடைந்த பின்னர் நடக்கவிருக்கும் முதல் உள்ளாட்சித் தேர்தல் இது. இத்தேர்தல் மூலம் இலங்கையில் கட்சிகளுக்கு உள்ள செல்வாக்கு தெரியவரும். இதனால் இத்தேர்தலை ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளன. வெற்றிக் கனியை பறிக்க வேண்டும் என்பதில் இப்போதே முனைப்பு காட்ட ஆரம்பித்துவிட்டன

(இலங்கை ஜனநாயக நாடு என்று சொன்னால் ,சிரிக்கப்போகிறார்கள்அங்கு சர்வாதிகார ஆட்சி தான் நடக்கிறது.யுத்த நெறிகளை மீறி,அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த பாவத்தை மக்கள் இன்னும் மறக்கவில்லை)

மீண்டும் நித்தியானந்தா,ரஞ்சிதா

பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு மீண்டும் நித்தியானந்தா ஆசிரமத்திற்கு நடிகை ரஞ்சிதா வந்து, நித்தியானந்தா சாமியாரிடம் ஆசி பெற்றுச் சென்றுள்ளார். பெங்களூருவில் உள்ள நித்தியானந்தாவின் பிடுதி ஆசிரமத்தில் ‌சாமியாரின் 34வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நித்தியானந்தாவின் சொற்பொழிவை ‌ஆர்வமுடன் கேட்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை ரஞ்சிதாவும், அவரது தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் கலந்து கொண்டு நித்தியானந்தாவிடம் ஆசி பெற்றனர்.

சாமியார் நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் நடிகை ரஞ்சிதா, அங்கிருந்தபடியே வக்கீல்கள் மூலம் தனது கருத்தை மீடியாக்களிடம் பகிர்ந்து வந்தார். 

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு முதன் முறையாக அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது , நான் நித்தியானந்தாவின் லட்சக்கணக்கான பக்தர்களில் ஒருத்தி. ஆசிரத்திற்கு மீண்டும் சென்று ஆசிர்வாதம் ‌பெறுவேன், என்று கூறியிருந்தார். இந்நிலையில்தான் அவர் நித்தியானந்தா ஆசிரமத்திற்கு சென்றிருக்கிறார்.

Saturday, January 1, 2011

“ரகசியத் தவிப்பு” - ஆண்களுக்கு மட்டும்!

இந்தியாவில் திருமணத்திற்குத் தயாராகும் இளம் பெண்களின் மனதில் பல ஆயிரக்கணக்கில் இன்பக் கனவுகள் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒரு கனவையாவது இளைஞர்களால் புரிந்துகொள்ளமுடியுமா என்பது மிகவும் சந்தேகமே.   

தற்காலத்து நவநாகரீக மங்கைகளின் திருமணக் கனவில் சிக்கும் இந்திய இளைஞர்களின் வாழ்வு கண்டிப்பாக நாசமாகிப் போய்விடும் என்பது உறுதி. இளைஞர்களின் வாழ்வையே அழிக்கும்அளவிற்கு இளமங்கையர் போடும் அந்தத் திட்டம்.

இந்தியாவில் பல திருமணங்கள் இப்படி ஒரு “கணக்கோடுதான்” ஆரம்பிக்கிறது. பிறகு அந்தக் “கணக்கை” நிறைவு செய்யப் பயன்படும் ஒரு சூத்திரம்தான் (Formula) அரசாங்கம் கொடுத்திருக்கும் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் எனப்படும் மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் (IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act, etc.).

கைதேர்ந்த மருமகள்கள் தாங்களாகவே இந்த ஃபார்முலாக்களில் ஒன்றைப் பயன்படுத்தி தங்களது கணக்கை நன்றாக முடித்துக்கொள்கிறார்கள். வேறுசில மருமகள்கள் கணக்கிற்கு தனிப்பயிற்சி எடுத்துக்கொள்வதுபோல வழக்கறிஞர்களை நாடினால் அந்த வழக்கறிஞர்கள் இந்தக் “கணக்கிற்கு” ஏற்ற ஃபார்முலாவாக இருக்கும் சட்டப்பிரிவை பரிந்துரை செய்து “கணக்கை” நன்றாக முடித்துத் தருகிறார்கள்.

இந்தியாவில் நடக்கும் திருமணம் மற்றும் அதற்குப் பிறகு வரும் பிரச்சனைகளை சற்று கூர்ந்துநோக்கினால் இந்தக் கணக்கு எப்படி செயல்படுத்தப்படுகிறது என்று தெளிவாகப் புரியும். கணவனின் சொத்துக்களை எப்படி தன்வசப்படுத்துவது என்ற திட்டத்துடன் மணமுடிக்கும் பெண்கள் திருமணஉறவை ஒரு வியாபார ஒப்பந்தம் போல செயல்படுத்திக்கொண்டு சில மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது எண்ணத்தை வெளிப்படுத்துவார்கள். அது சரியாக செயல்படாமல் போகும்பட்சத்தில் தங்களது ஆயுதமான “வரதட்சணை தடுப்புச் சட்டங்களை” கையில் எடுப்பார்கள். கணவன் மற்றும் அவனது குடும்பத்திலுள்ள அனைவர் மீதும் “வரதட்சணைக் கொடுமை” செய்ததாக புகார் கொடுத்துவிட்டு போலிஸை கொஞ்சம் “கவனித்தால்”போதும் உடனடியாக கணவன் அவனது குடும்பத்தோடு சிறையில் அடைக்கப்படுவான்.

கணவன் குடும்பத்தோடு சிறையில் அடைபட்டிருக்கும் காலகட்டம்தான் பேரம் பேசுவதற்கான ஏற்ற தருணம். இந்த சமயத்தில் மருமகளின் தரப்பிலிருந்து ஒற்றர்கள் சென்று கணவனிடம் பேரம் பேசுவார்கள். “இந்த” அளவிற்கு பணம் கொடுத்தால் வழக்கை முடித்துக்கொள்ளலாம் என்று ஆலோசனை சொல்வார்கள். இந்தக்கட்டத்தில் பல கணவன்கள் பயந்துகொண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு தப்பித்தால் போதும் என்று தலைதெறிக்க ஓடிவிடுவார்கள். இதற்கு அஞ்சாத கணவன்கள் அடுத்த கட்டத்தில் சிக்கிக்கொள்வார்கள்.

ஒருவழியாக சிறையிலிருந்து ஜாமின் பெற்று வெளியே வந்து வழக்கை நடத்திக்கொண்டிருக்கும்போது மீண்டும் ஒரு முறை மருமகள் தரப்பிலிருந்து ஒற்றர்கள் தூதுசெல்வார்கள். விவாகரத்து கொடுத்து, வரதட்சணை வழக்கை திரும்பப் பெறுவதற்கு “இந்த” அளவு ஒரு தொகை கொடுக்கவேண்டும் என்று பேரம் பேசுவார்கள்.

பொய் வழக்கில் சிக்கி குடும்பத்தோடு சிறையில் சில நாட்கள் இருந்த அனுபவமும், நீதிக்காக நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் நாயாக அலைந்து நீதி கிடைக்குமா, கிடைக்காதா என்ற ஏக்கப்பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் அனுபவமும் எந்த ஒரு வைராக்கியக்காரக் கணவனையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிடும். இந்த தக்க தருணத்தைப் பயன்படுத்தி மருமகள் தரப்பு தங்களது “கணக்கை” சரியாக முடித்துக்கொண்டு உல்லாசமாக தங்களது “திருமணக் கனவு” நிறைவேறிய முழுத்திருப்தியுடன் தனது அடுத்தக் “கனவினை” நிறைவேற்றிக்கொள்வதற்காக “கணவனால் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளான அபலை” என்ற பெயருடன் புதிய ஆளைத் தேடி புறப்பட்டுவிடுவார்கள்.

இதுதான் திருமணம் என்ற பெயரில் இந்தியாவில் சமீப ஆண்டுகளாக பல திருமணங்களில் நடந்துகொண்டிருக்கும் சட்டத்தின் துணையோடு நடக்கும் விபச்சாரம். அதைப் பற்றி டில்லி உயர்நீதிமன்றம் அப்பட்டமாக வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட், டிக்கெட் விலை

 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் அனைவரும் வாங்கும் வகையில் குறைவான விலையிலேயே இருக்கும் என்று உலகக் கோப்பை போட்டிக்கான இயக்குநர் ரத்னாகர் ஷெட்டி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் வரும் பிப்ரவரியில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை அனைவரும் நினைவுகூரும் வகையில் மிகச்சிறப்பாக நடத்துவதற்காக ஐசிசி தலைவர் சரத் பவார் தலைமையிலான ஏற்பாட்டுக் குழு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. போட்டியை நடத்தும் நாடுகள் மட்டுமன்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் போட்டியைக்    கண்டுகளிக்கும்    வகையில்    ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.போட்டிகள் நடைபெறவுள்ள மைதானங்களில் சிறப்பான முறையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் டிக்கெட்டும் குறைவான விலையில் உள்ளதால் ஏராளமானோர் போட்டியைக் காண மைதானத்திற்கு வருவார்கள்.2010-ம் ஆண்டு முதல் ஊக்கமருந்து தடுப்பு விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறையும் (யூடிஆர்எஸ்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்."2011-ம் ஆண்டில் மிகப்பெரிய சவால்கள் ஐசிசி-க்கு உள்ளன. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அதில் முக்கியமானது. அடுத்து வரும் ஆண்டுகளில் நடைபெறவுள்ள போட்டிகளின் விவரங்களை நாங்கள் இறுதி செய்துள்ளோம். அதேபோல் புதிய விதிமுறைகளும் இப்போது தெரிவிக்கப்பட்டுள்ள படியே இறுதி செய்யப்படும் பட்சத்தில் திட்டமிட்டபடி 2013-ம் ஆண்டில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைபெறும். அதற்கான பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன என்று ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி ஹாரூன் லோர்கட் தெரிவித்துள்ளார்.

2011 காலண்​டர் வேண்​டாம்,​​ 2005 போதும்!


2011-ம் ஆண்டு காலண்டரும் 2005 காலண்டர் போலவே தேதி-கிழமை மாறாமல் வருகிறது.


புத்தாண்டு என்றவுடன் புது காலண்டர், புதிய டயரிதான் எல்லோர் நினைவுக்கும் வரும். எங்கிருந்தாவது ஒரு புதிய காலண்டர் கிடைக்காதா என்று பறப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஓசி டயரி கிடைக்கவில்லையே என ஏங்குபவர்கள் இன்னொருபுறம். ஆனால் 2011 காலண்டர் கிடைக்கவில்லையா? கவலையைவிடுங்கள்! அதில் அப்படியொன்றும் புதுமை இல்லை. காரணம் 2005-ம் ஆண்டு காலண்டரும், வரப் போகும் 2011-ம் ஆண்டு காலண்டரும் ஒன்று போல இருக்கிறது – நாள் தேதி மாறாமல்.



இரண்டு ஆண்டுகளும் சனிக்கிழமை தொடங்குகிறது. அதாவது ஜனவரி 1 வருவது சனிக்கிழமையில். அது போலவே ஒவ்வொரு மாதத்தின் தேதிகளும் ஒற்றுமையுடன் வருகின்றன. இரண்டு வருடங்களிலும் ஜனவரி 26 குடியரசு தினம் புதன்கிழமையன்று வருகிறது. சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 திங்கள்கிழமை வருகிறது.



இது குறித்து மத்தியப்பிரதேச மாநில உஜ்ஜயினியில் உள்ள ஜீவஜி வானியல் நிலையத்தின் இயக்குநர் ராஜேந்திர பிரகாஷ் குப்தா கூறியபோது, “”காலச்சக்கரத்தின் சுழற்சியில் இதுபோன்ற ஒரு சுவையான நிகழ்வு நடந்துள்ளது,” என்றார்.



இரு ஆண்டுகளிலும் காந்தி ஜெயந்திக்கு விடுமுறை கிடையாது.
காரணம், அது வந்த நாளும் வரப்போகும் நாளும் ஞாயிற்றுக்கிழமை!
வருடம் முடிவது – அதாவது டிசம்பர் 31- வருவது சனிக்கிழமை.
அப்படியானால் 2012-ம் ஆண்டு தொடங்குவது ஞாயிற்றுக்கிழமை
எனவே 2012 ஆங்கிலப் புத்தாண்டுக்கு விடுமுறை கிடையாது!
 

பத்திரிகை நிருபரை தேடும் மோடியின் ( கேடி ) போலீஸ்

குஜராத் இனப்படுகொலையின் போது கோத்ராவுக்கு அருகிலுள்ள பந்தர்வாடாவில் முஸ்லிம்களை கூட்டுப்படுகொலைச் செய்து குழி தோண்டி புதைத்த சம்பவத்தை வெளிக்கொணர்ந்த பத்திரிகையாளர் ராகுல் சிங்கின் மீது வழக்குத் தொடர்ந்து அவரை தேடுகிறது குஜராத் மோடி அரசின் போலீஸ்.

ராகுல் சிங்கைத் தவிர மனித உரிமை ஆர்வலர் டீஸ்டா செடல்வாட்டின் தலைமையில் குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடும் சிட்டிசன் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸின்(சி.ஜெ.பி) முன்னாள் உறுப்பினர் ரயீஸ் கான் உட்பட ஐந்து நபர்கள் மீது குஜராத் போலீஸ் வழக்குத் தொடர்ந்துள்ளது.

ராகுல் சிங்கை விசாரிப்பதற்கான சம்மனுடன் குஜராத் போலீஸ் அவருடைய வீட்டிற்கு நான்கு வேன்களில் படையெடுத்தனர். இதனால் அந்த இடத்தின் சுற்றுப்புற சூழல் பரபரப்பானது. அந்த நேரத்தில் ராகுல் வீட்டில் இல்லை. பந்தர்வாடாவில் கூட்டுப்படுகொலைச் செய்து குழித்தோண்டி சம்பவத்தை செய்தியாக வெளியிட்டக் காரணத்தால் ராகுலிடம் விசாரணைச் செய்வதற்கு கைதுச் செய்ய வந்துள்ளதாக போலீஸ் அவருடைய வீட்டினரிடம் தெரிவித்தனர்.

ஆனால், ராகுலின் தந்தையும், ஹிந்துஸ்தான் டைம்ஸின் போபால் எடிசன் ரெஸிடண்ட் எடிட்டரான என்.கே.சிங் சம்மன்ஸை கைப்பற்றவில்லை. தேசிய மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களின் பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து விசாரித்ததால் போலீசார் அவ்விடத்தை விட்டு அகன்றனர். ராகுல் சஹாரா தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றிய வேளையில்தான் இச்சம்பவம் வெளியானது. அதன் பிறகு அவர் போபாலில் டைம்ஸ் நவ்வில் பணியாற்றினார். தற்பொழுது அவர் டெல்லியில் ஹெட்லைன் டுடேயில் பணியாற்றி வருகிறார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படு கொலையின்போது பந்தர்வாடாவில் அநியாயமாக கொல்லப்பட்ட 27 முஸ்லிம்களின் உடல்களை லூனாவாதாவில் பனாம் நதிக் கரையில் பெரிய குழியைத் தோண்டி மொத்தமாக புதைத்தனர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள். ஆனால், கடந்த 2005 ஆம் ஆண்டில் இனப்படு கொலையால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த நதிக் கரையில் மண்ணைத் தோண்டும் வேளையில் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவர்களில் சிலர் இச்சம்பவத்தை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர்.

தொடர்ந்து ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் அமைப்பு இவர்களுக்கு சட்ட உதவியை அளித்து வருகிறது.

செய்தி:மாத்யமம்

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!