Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, July 31, 2012

அலர்ஜி என்று அல்லல்படும் சமந்தா?

நடிகை சமந்தா நடித்த நான் ஈ படம் தமிழ், தெலுங்கில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகிறது. இந்த மகிழ்ச்சியை அவரால் கொண்டாட முடியவில்லை. ஏனென்றால் தோல் அலர்ஜியால் அல்லல்படுகிறார். தமிழ் திரையுல ஜாம்பவான்களான இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், ஆகியோர் தங்கள் படங்களில் நடிக்க சமந்தாவை அழைத்தனர். மணிரத்னம் படத்துக்கு...

Monday, July 30, 2012

மாணவிகளை பாலியலுக்கு அழைத்து வர மறுத்ததால் தாக்குதல்?

மங்களூர்: கலாச்சாரத்தை பாதுகாக்கும் பேர்வழிகளாக காட்டிக்கொண்டு மங்களூர் ஹோம் ஸ்டே ரிசார்டில் பாலியலுக்கு அழைத்து வர மறுத்த மாணவிகளை தாக்கிய வழக்கில் எட்டு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத செயல்கள் நடப்பதாக குற்றம் சாட்டி ஹிந்து ஜாக்ரண் வேதிகா என்ற ஹிந்துத்துவா தீவிரவாத...

Sunday, July 29, 2012

ஆரோக்கியமானது பாப்கா(ர்)ன்! விஞ்ஞான தகவல்!!

சினிமா தியேட்டருக்கோ அல்லது பொது இடங்களுக்கோ செல்லும் போது, அங்கு விற்கும் பாப்கானை வாங்கி சாப்பிடாதவர்கள் இருக்க முடியாது. பாப்கான் நமக்கு நெருக்கமான பொருளாகி விட்டது. இதை கொரிக்க கூடிய ஒரு உணவாக மட்டுமே நாம் பார்க்கிறோம். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் பாப்கானை சத்து நிறைந்த சீர்படுத்தப்படாத தங்கம்...

Saturday, July 28, 2012

கமலின் விஸ்வரூபமா! விஜய்யின் துப்பாக்கியா?

நடிகர் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தின் போட்டோக்கள் இணையதளத்தின் பல இடங்களில் உலா வந்துகொண்டிருக்கின்றன. ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் செய்யும் வகையில் ‘துப்பாக்கி’ படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய வேண்டும் என முழு வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது துப்பாக்கி டீம். துப்பாக்கி...

Friday, July 27, 2012

பற்றி எரிவதை பார்த்துக்கொண்டு இருக்கும் மத்திய மாநில அரசுகள்?

புதுடெல்லி: அஸ்ஸாம் மாநிலம் கொக்ராஜர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வகுப்புவாத கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர முதல்வர் தருண் கோகோய் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் என்றும், நீதி விசாரணை நடத்தவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீடு, பணமும் இழந்தவர்களுக்கு அவசர நிவாரண...

Thursday, July 26, 2012

இனி யோசித்துதான் பெண்களிடம் கேள்வி கேட்கவேண்டும்! ஆய்வில்!

லண்டன்: ஆண் மற்றும் பெண்களிடம் கேட்கும் கேள்விகளையும், அதற்கு அவர்கள் பதிலளிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் மற்றும் சரியான பதிலை அடிப்படையாக வைத்து லண்டனில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பெண்களின் அறிவு வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதாக...

Wednesday, July 25, 2012

கள்ளச்சாமிக்கு ஆதரவு அளிக்கும் ஆதினம்!

எத்தனை எதிர்ப்புகள் கிளம்பினாலும் மதுரை இளைய ஆதீனப் பொறுப்பில் இருந்து அவரை மாற்றும் எண்ணம் எனக்கு இல்லை. நித்யானந்தர் என்னை வசியப்படுத்தி விட்டதாகக் கூறுகிறார்கள். என்னை யாரும் வசியப்படுத்தவில்லை. யாராலும் வசியப்படுத்தவும் முடியாது. எனக்குத்தான் மற்றவர்களை வசியப்படுத்தும் ஆற்றல் உள்ளது. இதையடுத்து,...

Tuesday, July 24, 2012

உடலை கவனிக்காவிடில் உயிருக்கு அச்சுறுத்தல்! ஆய்வில்!!

லண்டன்: உடற்பயிற்சி இன்மையும் புகைப்பிடித்தல் போலவே உயிருக்கு அச்சுறுத்தல் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. புகைப்பிடித்தல் மற்றும் உடல் பருமனால் ஏற்படும் மரணங்களுக்கு சமமாக உடற்பயிற்சி குறைவும் உலகெங்கும் மக்களை கொல்வதாக மருத்துவ இதழான ‘த லான்செட்டில்’ வெளியான ஆய்வு அறிக்கை கூறுகிறது. வாரத்திற்குக்...

Monday, July 23, 2012

பாதுகாப்பற்ற பாலஸ்தீனை விட்டு வெளியேறும் மக்கள்!

கெய்ரோ: எவ்வித ஆவணங்களும் இல்லாமல் வருகை தரும் ஃபலஸ்தீன் மக்கள் எகிப்தில் நுழையவும், தங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமை காலை முதலே ஏர்போர்ட்டுகளிலும், இதர இடங்களிலும் ஃபலஸ்தீன் மக்கள் விசா இல்லாமலேயே நுழைய துவங்கியுள்ளனர். கெய்ரோ ஏர்போர்டின் பாதுகாப்பு பிரிவு இத்தகவலை தெரிவித்துள்ளது....

Sunday, July 22, 2012

இதற்காக பல வாரங்களை செ(சி)லவிடும் பெண்கள்!?

லண்டன்: பிரிட்டனில் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம், சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. ஆயிரத்துக்கும் அதிகமான பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு ஆண்டில் 91 மணி நேரமும், வாழ்நாளில் 43 வாரங்களும் ஒப்பனைக்காக பிரிட்டன் பெண்கள் செலவிடுவது தெரியவந்துள்ளது. ஒப்பனை செய்யாமல் வீட்டை விட்டு...

Saturday, July 21, 2012

விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டதா அதற்கான முதல் உதவி

மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே கீழ்க்கண்ட அவசர மருத்துவதத்தைப் பின்பற்றவும். பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம். கண்ணாடி விரியன்: பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும். நல்ல பாம்பு: வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச்...

Friday, July 20, 2012

நித்திக்கு காய் அடிப்பு?

கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற கற்பழிப்பு வழக்கு தொடர்பாக நித்யானந்தா வரும் 30ம் தேதியன்று மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று ராமநகரம் ஜூடிஷியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கான நோட்டீஸ் நித்யானந்தாவுக்கு இந்த வாரம் அனுப்பப்பட்டது என்று சி.ஐ.டி. போலீசார் கூறினார்கள். பல்வேறு...

Thursday, July 19, 2012

உண்ணா நோன்பு முழு சுறுசுறுப்பில் மூளை இயங்கும்! ஆய்வில்!!

லண்டன்: இந்தியர்கள் ஏதாவது ஒரு காரணத்துக்காக விரதம் என்ற பெயரில் சாப்பிடாமல் இருப்பதுண்டு. அப்படி விரதம் இருப்பதால் நினைத்த காரியம் நடக்கிறதோ இல்லையோ, "நினைப்பு தவறாமல்' இருக்கும் என்கிறது லண்டனில் நடந்துள்ள மருத்துவ ஆய்வு. அல்சமீர், பார்க்கின்சன் வியாதிகள் முதியோருக்கு வருவதைத் தடுப்பது எப்படி...

Wednesday, July 18, 2012

தமிழ் தெர்தா நடிகையை கழட்டிவிடும் சுந்தர் .சி

சமீபமாக வெளிவந்த கலகலப்பு படத்தை சுந்தர்.சி தான் இயக்கி இருந்தார். கலகலப்பான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சுந்தர்.சி அடுத்து விஷால் நடிக்கும் மத கஜ ராஜா (எம்.ஜி.ஆர்) படத்தை இயக்க இருக்கிறார். இதில் நடிகை ராதாவின் மகள் ஹீரோயினாக நடிக்கிறார். இனி வரும் படங்களில் தமிழ்...

Tuesday, July 17, 2012

சென்னை மெரினாவில் காதல் ஜோடியிடம் காசு கறந்த வாலிபர்கள் ?

சென்னை: மெரினா கடற்கரையில் காதல் ஜோடிகளை குறிவைத்து ஒரு கும்பல் பணம் பறிப்பதாக போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதுபற்றி கமிஷனர் திரிபாதியிடமும் நேரில் சிலர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கடற்கரையில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கிழக்கு மண்டல இணை கமிஷனர்...

Monday, July 16, 2012

எதிர்ப்பை மீறி இந்தியா வருமா பாகிஸ்தான் அணி?

பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட அனுமதி அளித்த பிசிசிஐக்கு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். சிவசேனாவும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னாள் கேப்டன் என்ற முறையில் கருத்து தெரிவிக்க கவாஸ்கருக்கு உரிமை உள்ளது என்று பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார். சிவசேனா...

Sunday, July 15, 2012

செல்போன் சில்மிஷம்! சீரழியும் சிறார்கள்!!

"டச் ஸ்கிரீன்' மொபைல் போன்களில், வக்கிர உணர்வைத் தூண்டும் விதமாக, ஆபாச விளையாட்டுகள் இருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்தியாவில், மொபைல் போன்கள், பட்டி தொட்டி வரை பரவ, சீன மொபைல்களே காரணம். நோகியா, சாம்சங், மோட்டரோலா உள்ளிட்ட மொபைல் போன் நிறுவனங்கள், ஒரு புதிய தயாரிப்பை உருவாக்கி, மார்க்கெட்டில்...

உணவில் மீன் சேர்த்துக்கொண்டால் இரத்த புற்று நோயை தவிர்க்கலாம்!

மீனிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் இரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் தன்மையுடையது என இந்திய ஆராய்ச்சியாளர் சந்தீப் பிரபு கூறுயுள்ளார். மீன்களில் உள்ள ஒமேகா-3 என்னும் அமிலத்தில் இருந்து தயாரிக்கப்படும் டெல்டா-12-ப்ரோடாக்லாண்டின் ஜே3 அல்லது டி12-பிஜிஜே3 என்ற சேர்மம் ரத்த புற்றுநோய்க்கு காரணமாக...

Friday, July 13, 2012

ஹாலிவுடை கொண்டுவரும் முயற்சியில் யோஹன் டீம்!

விஜய்-கவுதம் மேனன் கூட்டணி, விரைவில் யோஹன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தின் மூலம் இணைய உள்ளது. படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை உலகளவில் கொண்டு செல்ல இயக்குனர் திட்டமிட்டுள்ளார். அதன் முதற்படியாக படத்துக்கு யோஹன் என பெயரிடப்பட்டுள்ளது. இது உலகளவில் நன்கு பிரபலம் அடைந்த பெயர்....

பொருளாதாரமோ தளர்ச்சி! அரசியல் கட்சிகளோ அபார வளர்ச்சி??

புதுடெல்லி: இந்திய தேசம் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைந்துள்ள சூழலில் முன்னணி அரசியல் கட்சிகளின் கஜானா நிரம்பி வருகிறது. ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் பெற்ற தொகை 1,662 கோடி ரூபாய். முக்கிய எதிர்கட்சியான பா.ஜ.கவுக்கு 852 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. த அசோசியேசன்...

Thursday, July 12, 2012

ஈழத்திற்கு உதவுமா இப்படம் தல..?

தல நடித்து இன்னும் இரு தினங்களில் ரிலீஸ் ஆக இருக்கும் பில்லா-2வின் கதையும், அஜித்தின் ஆஸ்தான ஹீரோ அல்பச்சுனோ நடித்து 1983ம் வருடத்தில் ஹாலிவுட்டில் வெளிவந்த ஸகார்பேஸ் படத்தின் கதையை தழுவிதான் எடுக்கப்பட்டிருக்கிறதாம். அதில் ஹீரோ அல்பச்சுனோ கியூபா நாட்டிலிருந்து அமெரிக்காவில் அகதியாக தஞ்சம் புகுந்து,...

Wednesday, July 11, 2012

பெண் முதல்வரால் பெண்களுக்கு எதிரான குற்றம் குறைவா?

தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. கடந்தாண்டில் மட்டும், கடத்தல், பலவந்தப்படுத்துதல் தொடர்பான சம்பவங்கள், முந்தைய ஆண்டை விட, 19 சதவீதம் அதிகரித்து உள்ளது. பெண்களுக்கு, சமுதாயத்தில் ஓரளவு அங்கீகாரம் கிடைத்தாலும், அவர்கள் மீதான அடக்குமுறைகள், தொடர்ந்து கொண்டே...

Tuesday, July 10, 2012

சிறுபான்மையினர் பயத்ததுடன் வாழும் முதல் மாநிலம்! கேசுபாய்!?

அஹ்மதாபாத்: குஜராத் மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க முதல்வரும், முன்னணி தலைவர்களில் ஒருவருமான கேசுபாய் பட்டேல், குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியை சராமாரியாக குற்றம் சாட்டியுள்ளார். பா.ஜ.க வின் முன்னணி அமைப்பு ஒன்று நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு அவர் கூறியது: “உங்களுக்கு தெரியும், இங்கு...

Monday, July 9, 2012

கர்ப்பிணி பெண்கள் கவனிக்க வேண்டியவை!

லண்டன்: பெண்கள் கர்ப்ப காலங்களில் சரியான முறையில் உணவுக்கட்டுப்பாட்டை பேணுவது அவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஆரோக்கியத்திற்கு ஒரு சேர நன்மை விளைவிக்கும் என பிரிட்டீஷ் மெடிக்கல் இதழில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது. உணவுக் கட்டுப்பாடு குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பு அளிப்பதுடன் பிரசவ வேளையில்...

Sunday, July 8, 2012

புதிய மாடல்கள் மேல் பிரியப்படும் விஜய்!!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரியம் இருக்கும் ஆனால் தளபதிக்கோ டிரைவிங் செய்வதென்றால் செம பிரியம், அதுவும் புது மாடல் கார்கள் என்றால் சொல்லவேண்டியதில்லை. அதனால், தன் நட்புவட்டார நடிகர்கள் யாராவது, புதிதாக கார் வாங்கி இருப்பதாக சொன்னால், படப்பிடிப்பு இல்லாமல் ஓய்வாக இருக்கும் நாளில், அந்த காரை தனது வீட்டுக்கு...

Saturday, July 7, 2012

நவம்பரில் உலாவவிட்ட வைரஸ் வரும் 9ல் ஆக்டிவ்! ஓர் எச்சரிக்கை!!

வாஷிங்டன்: ஏய் வைரஸ் வரப்போகுதாமே என்ன செய்யப்போகிறாய் என்ற பேச்சுத்தான் தற்போது எங்குப்பார்த்தாலும் தகவல் பரிமாறக்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் இணையத்தை முடக்கி உங்களின் கணினியை செயல் இழக்கச்செய்து விடும். இது புதிதாக தாக்குதலை தரப்போவதில்லை என்ற நிம்மதியான தகவல் வல்லுநர்கள் தெரிவித்தாலும் ஏற்கனவே...

Friday, July 6, 2012

ரத்த தானம் யார் கொடுக்க கூடாது? தானம் கொடுக்கும் முன்பு!?

உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி.சி. வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள்...

Thursday, July 5, 2012

அபாயத்தை நோக்கி இருக்கிறோம்! அமெரிக்க ஆய்வு மையம்!!

பருவநிலை மாறுபாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அமெரிக்காவின் தேசிய வளிமண்டல ஆய்வு மையம் ஒரு ஆய்வு நடத்தியது. ஆராய்ச்சி மற்றும் இதில் தெரியவந்த தகவல்கள் பற்றி விஞ்ஞானிகள் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளனர்: ’’இயற்கை மற்றும் மனித இடர்பாடுகளால் பருவநிலையில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன....

Wednesday, July 4, 2012

வெற்றி அடைந்த போராட்டம் வாயடைத்த ஜெயா! ஸ்டாலின்!!

சென்னை: சிறை நிரப்பும் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஸ்டாலின் மாலை விடுதலை செய்யப்பட்டார். மாலையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், அரசின் அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் தி.மு.க.,வினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் போலீசாரின் தகவல்படி 93 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்....

பதவி விலகுவாரா ப. சிதம்பரம்!!

டெல்லி: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் அப்பாவி கிராமவாசிகளை சுட்டுக் கொலைச் செய்துவிட்டு 20 மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றதாக சி.ஆர்.பி.எப் படையால் கூறப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று...

Tuesday, July 3, 2012

இல்லத்தரசிகள் இக்கொடுமைகளுக்கு ஆளாவதேன்?

புதுடெல்லி: இந்தியாவில் ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கு ஒருமுறை தற்கொலை நிகழ்வதாக அரசு அறிக்கை கூறுகிறது. தற்கொலை செய்வோரில் ஐந்து பேரில் ஒருவர் இல்லத்தரசிகள் என்று அவ்வறிக்கை கூறுகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட ’இந்தியாவில் விபத்து மரணங்களும், தற்கொலையும்(‘Accidental Deaths and Suicides in India...

Sunday, July 1, 2012

நித்திக்கு 144..,

கொடைக்கானல்: தியான முகாம் நடத்துவதற்காக கொடைக்கானலில் முகாமிட்டுள்ள நித்யானந்தாவுக்கு, ஓட்டலை விட்டு வெளியில் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் அட்டுவம்பட்டி "ஸ்டெர்லிங்' ஓட்டலுக்கு, நேற்று இரவு 10 மணிக்கு, நித்யானந்தா, ஏழு சீடர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர்....

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!