Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, April 18, 2015

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்ற ஆன்டி-ஆக்ஸிடன்!?

உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் இஞ்சி கலந்த டீ-யின் மூலம் பெற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

குளிர் மிகுந்த நேரத்தில் ஒரு கப் சூடான இஞ்சி டீயை விட சிறந்த பானம் எதுவாகவும் இருக்க முடியாது. அதிக அளவு வைட்டமின் சி, மெக்னீசியம், மற்றும் இதர கனிமங்களை கொண்ட இஞ்சி வேரை சாப்பிடுவது உடம்பிற்கு நன்மை விளைவிக்கும்.

மிகுந்த சுவையை கொடுக்கும் இந்த இஞ்சி டீ, உங்களுக்கு மிகவும் பிடித்த பானமாக மட்டுமல்லாமல் அது குளிர் காலத்தில் வரும் உடல் தொடர்பான பிரச்சனைகளுக்குபெரும் தீர்வாகவும் உள்ளது. ஆகையால் இதை ஒரு மருந்துப் பொருளாகவும் இஞ்சியைக் கருதுகின்றனர்.

அதிலும் இஞ்சி டீ யை செய்ததும், அதனுடன் பெப்பர் மின்ட் (மிளகு கீரை), தேன் ஆகியவற்றை கலந்து டீயை அருந்தலாம். இதனால் இஞ்சியின் சுவை சற்றே மறைந்து காணப்படும். அதுமட்டுமில்லாமல் டீயின் சுவையும் மிகைப்படும். இப்போது நாம் ஏன் இஞ்சி டீயை அவசியம் குடிக்க வேண்டும் என்பதற்கான பதில் இதோ.

செரிமானத்தை மிகைப்படுத்தும் செரிமானத்தை மிகைப்படுத்தி உண்ட உணவை ஈர்த்துக் கொள்ள உதவி செய்கின்றது. அதிலும் நிறைய சாப்பிட்ட பின் இதை அருந்துவது உகந்தது.

வீக்கத்தை குறைப்பது தசை மற்றும் இதர பிடிப்புகளை தீர்க்கும் வீட்டு மருந்தாக இவை அமைகின்றது. இஞ்சியின் தன்மை வீக்கத்தை குறைப்பதே ஆகும். இஞ்சியை டீயாக மட்டுமல்லாமல் வீக்கமுள்ள இடங்களில் ஒரு பச்சிலை போன்று இடுவதும் வீக்கத்தை குறைத்து நிவாரணம் தரும்.

சுவாச பிரச்சனைகளை நீக்குதல் தொண்டை அடைப்பு மற்றும் சளி சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் இஞ்சி டீயாகும். அந்தந்த காலத்திற்கேற்ப வரும் சளி, இருமல் ஆகியவற்றால் வரும் சிரமங்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும்.

இரத்த ஓட்டத்தை சீர் செய்யும் வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இஞ்சி டீயில் இருப்பதால், அவை இரத்த ஓட்டத்தை சீர் செய்ய உதவுகின்றன. இது கொழுப்புகளை இரத்த குழாய்களில் தங்க விடாமல் பார்த்துக் கொள்கின்றது. இதனால் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகளிடமிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.

மாதவிடாய் பிரச்சனைகளை நீக்குவது பெண்களே! கொடுமையான மாதவிடாய் பிரச்சனைகளில் தவிக்கின்றீர்களா? உங்களுக்கு ஒரு தீர்வு இதோ! சூடான இஞ்சி டீயை ஒரு துணியில் நனைத்து அடி வயிற்றில் போட்டால் அது தசைகளை இளைப்பாற செய்து ஆறுதல் தரும். அதுமட்டுமல்லாமல் ஒரு கப் இஞ்சி டீயில் தேன் கலந்து குடிப்பது மேலும் நன்மை தரும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

மன அழுத்தத்திலிருந்து நம்மை காக்கின்றது இஞ்சி டீக்கு அமைதிப்படுத்தும் தன்மை உண்டு. ஆகையால் மிகுந்த மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவற்றை குறைக்க உதவும். இதற்கு அதில் உள்ள அதிக அளவு குணமாக்கும் தன்மையும், வலுவான நறுமணமும் தான் காரணம் என்று எண்ணப்படுகின்றது.

Sunday, April 12, 2015

இந்துக்கள் மீது கை வைத்தால்!?

ஆந்திர மாநிலத்தில் திருப்பதி சேஷாலம் வனப்பகுதியில் செம்மரத்தை திருட்டுத்தனமாக வெட்டினார்கள் என தமிழகத்தை சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்களை ஆந்திர காவல்துறை சுட்டுக் கொன்றிருக்கிறது. ஆனால் அவர்கள் அப்போது மரம் வெட்டியதற்கான எந்தவொரு அறிகுறியுமில்லை. அரசால் முன்னரே கைப்பற்றப்பட்டு சிவப்பு சாயம் பூசப்பட்ட செம்மரக்கட்டைகளை என்கவுண்டர் செய்த இடத்தில் பரப்பி போலியாக காவல் துறை ஆதாரங்களை உருவாக்கி இருக்கின்றனர்.

முறையான எந்தவொரு விசாரணையுமின்றி, அந்த கூலித்தொழிலாளர்கள் ஆந்திர மாநில காவல் துறையால் என்கவுண்டர் செய்யப்பட்டிருப்பது மிக கடுமையாக கண்டிக்கத்தக்கது. அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து, நீதிமன்றத்தில் முறையாக விசாரித்து தண்டனை அளித்திருக்க வேண்டும். ஆனால் காவல் துறையே தண்டனை வழங்கும் பொறுப்பை கையில் எடுத்திருப்பது ஜனநாயகத்திற்கும் நீதித்துறைக்கும் ஆரோக்கியமான வழிமுறையாக இருக்காது.

திட்டமிட்ட என்கவுண்டர் : கடந்த நான்கு நாட்களில் மட்டும் 27 என்கவுண்டர்கள், 20 தமிழர்கள், 7 இஸ்லாமியர்கள்.  போலி என்கவுண்டர் நடத்திய காவல் என்ற காவித்துறையை பற்றி எந்த வேசி ஊடகங்கள் வாய் திறக்கவில்லையே ஏன் செத்தது முஸ்ஸிம் என்பதாலா?

இருவருக்கும் பொதுவான எதிரி யார்? .20 மாட்டை வெட்டியிருந்தால் இந்நேரம் காவி இந்துத்துவா கொழுந்துவிட்டு எரிந்திருக்கும். செத்தது சாதாரண (தமிழர்கள்) மனிதன்தானே.

"இந்துக்கள் மீது கைவைத்தால் நான் ஹிட்லர் ஆவேன்னு" கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு நாய் குலைத்ததே எங்கே அந்த பார்பனிய HIV  ராஜா?.

தமிழனாகிய நமக்கு இதுவேதான் முடிவாகுமா ஒட்டுமொத்த தமிழனும் ஒன்றுகூடி நின்றால் ஒரு நாதாரி நாயும் நம்மல ஒன்னுமே பன்ன முடியாது.

இந்திய அரசு கொண்டு வரும் கருப்பு சட்டங்கள் எல்லாம் முஸ்லிம்களுக்கும், அநியாயத்தை கண்டு கொதித்தெழும் நியாயவான்களுக்கும்தான்.

இப்படியான சட்டங்கள் பார்ப்பனர் மீதோ அல்லது பாஷிச சங்கபரிவார் மீதோ இதுவரை பாய்ந்ததுண்டா?.

1992 ஆரம்ப காலங்களில் அப்போதைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த தடா சட்டம். 2000 பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி கொண்டு வந்த பொடா சட்டம். 2009 பின் காங்கிரஸ் கூட்டணி கொண்டுவந்த UAPA கருப்பு சட்டம்.

காங்+ பாஜக = பார்பனிய குள்ளநரி கூட்டம்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!