Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, February 21, 2015

வாழ்க்கையில் வெற்றி பெறலாம் வாங்க!?

பலரது வாழ்க்கையில் வெற்றிபெற என்ன செய்யலாம்  என்று யோசித்தே பாதி வாழ்க்கை முடிந்து விடுகிறது ஆனால், இங்கு சுருக்கமாக சில வழிமுறைகளை தந்துள்ளோம்.

1- பிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் காரியத்தை பிடித்ததாக மாற்றிக் கொள்ளுங்கள். விரைவில் நீங்களே ஒரு மாற்றத்தை உணர்வீர்கள்.

2- வாழ்க்கையில் எதற்கும் பயப்படாதீர்கள்.வேலை பாதுகாப்பு என்பதை கருதி ஒரே இடத்தில் இருந்து விடாதீர்கள். புதிய முயற்சிகளால் மட்டுமே முன்னேற்றத்தை உணர முடியும்.

3-மற்றவர்களையும் உங்களுக்காக உழைக்க வைக்கும் புத்திசாலித்தனம் இருந்தால் மட்டுமே நல்ல ஒரு leader ஆகா முடியும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

4- கீழே விழுவது வேகமாக எழுவதற்காகவே, அதனால் விழுவதைப்பற்றி கவலை படாதீர்கள். அது வெற்றியின் ஏணிப்படி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

5- வெற்றிக்கு நேரம் அவசியம் என்பதால், நேரத்தை உருப்படியாக செலவிட தெரிந்து கொள்ளுங்கள்.

6- எதற்கும் கவலை படுவதை விட்டு விட்டு எப்பொழுதும் பாசிடிவ் எண்ணங்களுடன் இருங்கள்.

7- வெற்றிக்கான முதல் சாவி உழைப்பு தான். அதனால் தினமும் குறைந்தது 10 முதல் 12 மணி நேரம் உழையுங்கள்.

8- முடியாது, கஷ்டம், நடக்காது போன்ற சொற்களை உங்கள் அகராதியில் இருந்து தூக்கி எறியுங்கள்.

9- வாய்ப்புக்களை தவற விடாதீர்கள். சரியான நேரத்தில் நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

10- நீங்கள் என்னதான் உழைத்தாலும் சில நேரங்களில் அதிர்ஷ்டம் தேவை. இறைவனை நம்புங்கள். உங்கள் வெற்றியினை இறைவனுக்கு காணிக்கை ஆக்குங்கள்.

11- வாழ்க்கையில் சந்தோஷம் என்பது பணத்தினால் மட்டுமே வருவது இல்லை. அதனால், உலகில் அனைத்து விஷயங்களையும் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

12- நாளை பார்க்கலாம் என்று எதனையும் தள்ளிப் போடாதீர்கள். அது நடக்காமலே கூட போய்விடக்கூடும்.

13- துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடிய தைரியம் வேண்டும்.

14- வெற்றி உடனடியாக கிடைத்து விடாது. ஒவ்வொரு படியாக, மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறுங்கள்.

15- தொழிலில் பல சிக்கல்களும் இடயூருகலும் வரும் என்றாலும் கூட, நீங்கள் அஞ்சாமல் மன தைரியத்துடன் அவற்றை சந்திக்க வேண்டும். Good luck.


Saturday, February 7, 2015

விசித்திர உலக உயிரினங்கள்!?

அறிந்து கொள்ளுங்கள்:  இறால் மீனுக்கு இதயம் அதன் தலையில் உள்ளது.
.
கடலில் வாழும் நட்சத்திர மீன்களின் உடலில் மூளை என்ற பகுதி கிடையாது.
.
நம்மால் இரண்டு கண்களிலும் ஒரே காட்சியைத்தான் காண முடியும். ஆனால் ஓணான்களால் இரண்டு கண்ணில் இரண்டு வெவ்வேறு காட்சிகளைக் காண முடியும்.
.
வெட்டுக் கிளிக்கு காதுகள் காலில் உள்ளன.நண்டுகளுக்குப் பற்கள் வயிற்றில் உள்ளன.
.
உலகில் எல்லா பிராணிகளும் முன் பகக்கமாகவே நடக்கும். ஆனால் நண்டு மட்டுமே பக்கவாட்டில் நடக்கக் கூடியது.
.
உல‌கி‌ல் ‌கி‌ட்ட‌த்த‌ட்ட இருபதா‌யிர‌ம் வகை ப‌ட்டா‌ம் பூ‌ச்‌சிக‌ள் உ‌ள்ளன.பெ‌ண் ப‌ட்டா‌ம்பூ‌ச்‌சிக‌ள் மு‌ட்டை‌யி‌ட்ட உடனே இற‌ந்து‌விடு‌ம்.
.
உல‌கி‌ல் இரு‌க்கு‌ம் உ‌‌யி‌ரின‌ங்க‌ளி‌ல் அ‌திக வகைகளை‌க்கொ‌ண்டது ‌மீ‌ன்க‌ள்தா‌ன்.ந‌ண்டுக‌ள் கு‌ட்டிகளை ஈ‌ன்றதுமே இற‌ந்து ‌விடு‌ம். இதனா‌ல் தா‌ய் ந‌ண்டு எ‌ன்ற ஒ‌ன்று இரு‌க்காது.
.
உல‌கி‌ல் வாழு‌ம் ‌வில‌ங்குக‌‌ளிலேயே ‌மிக‌ப்பெ‌ரியது ‌நீல‌த்‌தி‌மி‌ங்கல‌ம். இத‌ன் உட‌ம்‌பி‌லிரு‌ந்து 120 பேர‌ல்க‌ள் வரை எ‌ண்ணெ‌ய் எடு‌க்‌கிறா‌ர்க‌ள்.
.
சீனா‌வி‌ல்தா‌ன் முத‌ன் முத‌லி‌ல் த‌ங்க ‌மீ‌ன் காண‌ப்ப‌ட்டது.
.
அ‌ழி‌வி‌ன் ‌வி‌ளி‌ம்‌பி‌ல் ‌நி‌ற்கு‌ம் உ‌யி‌ரினமாக‌க் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டிரு‌ப்பது இ‌ந்‌திய கா‌ண்டா‌மிருக‌ம்.
.
அகில உகத்தையும் அற்புதமாக படைத்த  அவனுக்கே எல்லா புகளும்.

Sunday, February 1, 2015

கடிகாரத்தை போல இயங்கும் உடல் உறுப்புகள்!?

நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும். தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும்
பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.

காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.

காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம். காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும்.
நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம். இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.

பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம். இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.

பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.

இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல. உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை
இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.

இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம். இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.

கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.

மிகவும் பயனுள்ள தகவல்கள். அனைவரும் ஷேர் செய்தால் பயன் பெறுவர்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!