Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, August 29, 2014

இணையத்தில் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்!?

இணையத்தில் கண்காணிக்கப்படுவதும், கவனிக்கப்படுவதும்தான் இப்போதைய இணைய யதார்த்தம். தேடியந்திரங்களில் துவங்கி மின்வணிக தளங்கள் வரை எல்லா விதமான தளங்களும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் கவனித்து குறிப்பெடுக்கின்றன.

அதாவது டிராக் செய்கின்றன. பொருத்தமான விளம்பரத்தை அளிக்கவும், பயனாளியின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு செயல்படவும் இவ்வாறு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் அரசுகள் இமெயில் வாசகங்களையும் தேடல் பதங்களையும் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டுமா? அதற்கான எளிய வழியை மொசில்லா (Mozilla) முன் வைத்துள்ளது. பிரபலமான இணைய உலாவியான பயர்பாக்ஸ் பின்னே இருக்கும் மொசில்லா அமைப்பு இதற்காக ‘லைட்பீம்’ (Light Beam) எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

பயர்பாக்ஸ் உலாவிக்கான சேர்க்கையாக (add on) அறிமுகமாகியுள்ள இந்த சேவையை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இணையத்தில் உலாவும்போது எப்படி எல்லாம் உங்களைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த கண்காணிப்பின் விவரங்களை இந்த சேவை காட்சிரீதியாக தோன்றச் செய்கிறது.

லைட்பீம் சேவையை உலாவியில் இயக்கியதும், இணையதளத்திற்கு செல்லும் போதெல்லாம் அந்த தளத்தில் இருந்து உங்களைப் பற்றிய விவரங்கள் எப்படி சேகரிக்கப்படுகின்றன என்பது வரைபட சித்திரமாக காட்டப்படுகிறது. எந்த தளங்கள் எல்லாம் தகவல்களை சேகரிக்கின்றன என்பதை இந்த வரைபடம் உணர்த்தும். முதல் தளத்தில் இருந்து அடுத்த தளத்திற்கு செல்லும் போது அந்த தளத்தில் எப்படி விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதும், இந்த தளங்களிடையே உள்ள பரஸ்பர தொடர்பையும் தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பிட்ட பகுதியில் கிளிக் செய்தால் கண்காணிப்பின் இயல்பு பற்றிய மேலதிக விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த வரைபடத் தோற்றம் தவிர, கடந்த 24 மணி நேரத்தில் எந்த தளங்கள் விவரங்களை சேகரித்தன என்பதையும் தெரிந்து கொள்ளும் வசதி இருக்கிறது.

இணையத்தில் கண்காணிப்பு எப்படி செயல்படுகிறது, நீங்கள் உலாவும் தளங்கள் எப்படி மற்ற தளங்களுடன் உங்கள் இணைய நடவடிக்கை விவரங்களை பகிர்ந்து கொள்கின்றன போன்ற விஷயங்களை இதன் மூலம் நீங்கள் புரிந்து கொள்ளலாம். கண்காணிப்பை அடையாளம் காட்டும் இந்த சேவை மூலமான தகவல்கள் எதுவுமே சேகரிக்கப்படுவதில்லை என்கிறது மொசில்லா. ஆனால் நீங்கள் விரும்பினால் இந்த விவரங்களை பகிர்ந்து கொள்ள முன் வரலாம். கண்காணிப்பு விவரங்களை புரிந்து கொள்வதற்கான பொது கையேட்டிற்கு இதன் மூலம் பங்களிக்கலாம் என்கிறது மொசில்லா.

கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கொல்யூஷன் எனும் வசதியின் நீட்சியாக இந்த லைட்பீம் உருவாகி இருக்கிறது.

Saturday, August 16, 2014

ஆரிய அயோக்கியதனத்திற்கு அளவில்லியா?

ஆரிய அயோக்கியதனத்திற்கு அளவில்லியா வரலாறையே திரித்தும் மறைத்தும் எழுதும் பார்பன பயங்கரவாதிகள் என்பது மிகையில்லை. திரிக்கபட்ட விஷ வித்துக்கள் விதைத்து பரப்பிய வரலாறை தோலுரித்த கதை. 

"திப்பு சுல்தான் 3000 பிராமணர்களை இசுலாத்தில் இணைய பலாத்காரம் செய்தபோது அவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டனர்." என்ற வரிகளை அன்று ராஜஸ்தான் மத்திய பிரதேசம் உத்திரபிரதேசம்  ஒரிசா பீஹார்,மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் உயர்நிலை கல்வி பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு நூலை படித்து அதிர்ந்தார் பி.என் பாண்டே. 

ஒரிசா மாநிலத்தின் முன்னாள் கவர்னரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ,வரலாற்று ஆய்வாளருமான பி.என் பாண்டே அவர்கள் 1928 இல் அலகாபாத்தில் மாவீரன் மைசூர் வேங்கை திப்பு சுல்தான் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்த போது ஆங்கிலோ -பெங்காலி கல்லூரியின் மாணவர் மன்றத்தின் வரலாற்று கழகத்தை தொடக்கி வைக்க அழைக்கபட்டிருந்தார் .அந்நிகழ்வில் உரையாற்ற ஆயத்தம் செய்தபோதுதான் மேற்கண்ட வரிகளை ,வரலாற்று புரட்டை கண்டு அதிர்ந்திருக்கிறார்.

கல்கத்தா பல்கலைகழகத்தின் சம்ஸ்கிருததுறை தலைவர் டாக்டர் .ஹரிபிரசாத் சாஸ்திரி பிராமணர் எழுதிய நூல் அது என்பதை அறிந்த பாண்டே எந்த ஆதாரத்தை கொண்டு இந்த தகவலை எழுதுனீர்கள் என விளக்கம் கேட்டு சாஸ்திரிக்கு கடிதம் எழுதுகிறார். பல கடிதங்களுக்கு பிறகு டாக்டர் .ஹரிபிரசாத் சாஸ்திரியின் பதில் கடிதத்தில் "மைசூர் கெசட்டில் இருந்து இதற்கான ஆதாரம் எடுக்கப்பட்டது " என தெரிவிக்கிறார். உடனே மைசூர் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் சர்.பிஜெந்திர நாத்சீல் அவர்களுக்கு " டாக்டர் .ஹரிபிரசாத் சாஸ்திரி அவர்கள் மைசூர் கெசட்டில் எடுத்ததாக கூறப்படும் செய்தி உண்மைதானா என உறுதிபடுத்த கோரி கடிதம் அனுப்புகிறார்.

துணைவேந்தர் அக்கடிதத்தை மைசூர் கெசட்டின் புதுபற்ற்ஹிப்பினை தயார் செய்து கொண்டிருந்த பேராசிரியர் .ஸ்ரீஹன்டையா அவர்களுக்கு அனுப்பி பதில் தர கோருகிறார்.அவர் மைசூர் கெசட்டினை ஆராய்ந்து இதுமாதிரியான சம்பவம் எதுவும் மைசூர் கெசட்டில் இடம்பெறவில்லை என பதிலளிக்கிறார்.அதுமட்டுமின்றி திப்புசுல்தானின் பிரதம மந்திரி புரணாயா என்பவர் பிராமணர் என்பதையும் ,சேனைதலைவர் கிருஷ்ணராவ் என்பதையும் தெரிவித்ததோடு ,திப்பு சுல்தான் 156 இந்து கோவில்களுக்கு வருடாந்திர செலவுகளுக்கு மான்யம் வழங்கிய பட்டியலையும் ,சிருங்கேரி மடத்தின் ஜகத்குரு சங்கராச்சாரிக்கும் திப்புவுக்கும் இருந்த நேச உறவினை வெளிபடுத்தும் ஆதாரங்களாக சிருங்கேரி மடத்திற்கு திப்பு எழுதிய 30 கடிந்தங்களின் புகைப்பட நகல்களை பி.என். பாண்டே அவர்களுக்கு அனுப்புகிறார்.

பேராசிரியர் ஸ்ரீஹண்டையாவிடமிருந்து பெற்ற ஆதாரங்களை கொண்டு அன்று பாடதிட்டதிற்க்கான நூல்களை தேர்வு செய்யும் கல்கத்தா பல்கலைகழகத்தின்துணைவேந்தருக்கு " பொய்யும் புனைந்துரையுமாக அமைந்துள்ள டாக்டர் .ஹரிபிரசாத் சாஸ்திரியின் நூலை பாடதிட்டதிலிருந்து நீக்கவேண்டும். அந்நூலை தடை செய்யவேண்டும் என எழுதுகிறார்.

அப்பல்கலைகழகத்தின் துணைவேந்தர் அஷ்டோஸ் முகர்ஜி உடனே நடவடிக்கை எடுத்து விஷம் விதத்தை அந்நூலை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கி தடை செய்தார்.

இப்போது சொல்லுங்கள் மனிதநேயமும் மத நல்லிணக்கமும் பேணிய மைசூர் வேங்கை திப்புவின் வரலாற்றை திரித்த காவிகயவர்கள் செய்தது நியாயமா... துரோகமா ? தர்மமா ..அநீதியா ?.

- B.N.Pande, 'Distortion of Medival Indian History' , Islam and Indian Culture page no 37 -39.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி தெரியும்
கப்பல் வாங்க உதவியர் ஒரு முஸ்லீம் என்பது தெரியுமா?

சுபாஸ் சந்திரபோஸின் INA தெரியும்,
INA கட்டமைக்க தன் சொத்தையே எழுதியவர் முஸ்லீம் என்பது தெரியுமா?
INA முக்கிய தளபதிகளில் முஸ்லீமும் இருந்தது தெரியுமா?
வேலூர் சிப்பாய் கலகம் தெரியும்
சிப்பாய் கலகத்தின் முன்னோடிகளும், வழி நடத்தியவர்களிலும் முஸ்லீம்களே முதன்மையாய் இருந்தது தெரியுமா?
ஆங்கிலேயனை எதிர்த்து தோல்வியுற்று
காட்டிலே அலைந்து இறந்த முஸ்லீம் ராணியை பற்றி தெரியுமா?
காந்திக்கு பக்கபலமாய் இருந்த ஆலோசகர்களில் முஸ்லீம்களும் இருந்தது பற்றி தெரியுமா?
தேசியக்கொடியை வடிவமைத்தது முஸ்லீம் என்பது தெரியுமா?
வெள்ளையனின் ஆங்கிலமொழியை கற்பது ஹராம் என பத்வா வழங்கி மொழியைகூட வெறுத்து ஒதுக்கியது முஸ்லீம்கள் என்பது தெரியுமா?
தன் சதவிகிதத்தை விட அதிக எண்ணிக்கையில் வெள்ளைக்காரனை எதிர்த்த சமுதாயம்
வெள்ளைக்காரன் கொடுத்த பதவிகளை, பட்டங்களை தூக்கி எறிந்த சமுதாயமே இந்திய முஸ்லீம்கள் என்பதை நினைவில் கொள்வோம்.
இந்தியன் என்று சொல்லடா......
தலை நிமிர்ந்து நில்லடா

Sunday, August 10, 2014

தினார்க்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்த!

தினார்க்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கிக் கிடக்கும் மீன் குஞ்சுகள் நாங்கள்.

பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகளிக்க முடியாமல் தங்களின் வாழ்த்துக்களை மனம் முழுக்க சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிட்டு கொஞ்சி மகிழ நேரில் இல்லாத காற்றலைகள் நாங்கள்.

இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் தன் பெற்றக்குழந்தையை நெஞ்சுருகக் கட்டித்தழுவ முடியாதொரு துர்பாக்கியசாலிகள் நாங்கள்.

கம்ப்யூட்டர் , ஸ்கைப். போனிலும் சொந்த பந்தங்களின் குரல் கேட்டு கேட்டு எங்கள் பாசம் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது... தொலைதூர பாசம் செய்தே/காட்டியே தொலைந்து போனவர்கள் நாங்கள்.

நான் இங்கே நல்லா இருக்கேன். என்று எப்போதும் சொல்லும் இயற்கை நிலை குரலுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்.

வியர்வையில் நாங்கள் வேலை செய்து துவண்டாலும் விடுமுறையில் ஊருக்கு போகும் முன் சென்ட் வாசனை திரவியங்கள் வாங்க மறப்பதில்லை நாங்கள்...(எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க...)

உனக்கென்ன! விமானப்பயணம், வெளிநாட்டு ராஜ வாழ்க்கை என்று ஊருக்கு போனதும் உள்ளூர் வாசிகள் எங்களை பார்த்து விடும் பெருமூச்சு வளைகுடா நாட்டின் அரபி நாட்டு வெப்பத்தை விட சற்று அதிகமாகவே சுடுகிறது! (இவர்கள் பேச்)

வெளிநாட்டு மூட்டை பூச்சி கடியை விட இவர்கள் கடியைதான் தாங்க முடியவில்லை.

கம்ப்யிட்டர்க்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள், நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை ஆனால் நாங்களும் களைத்துத்தான் போகிறோம்.

எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள். வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள் நாங்கள். திரைகடலோடி திரவியம் தேடும் திசைமாறிய பறவைகள் நாங்கள்..

ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதப்பட்டோம் எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு செய்திருக்கின்றோம்...இப்போதுதான் புரியத்துவங்கியது சேர்ந்தே நரைக்கவும் துவங்கியது...

நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை! வாலிபத்தை!! இழப்பீடு கிடைக்காத இழப்பு இது , நஷ்ட்டஈடு கிடைக்காத நஷ்ட்டம் இது..

அப்பாவின் அன்பு, குழந்தையின் மழலை, நண்பர்களுடன் அரட்டை இப்படி வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்கி தவிக்கும் எங்கள் நாக்கு

இங்க உள்ள பர்கர், பீசா, சன்விஜ், சாப்பிட்டு சாபிட்டு எங்கள் நக்கும் செத்து போச்சி பசி கொடுமைக்காக சாப்பிடுக்றோம்.

ஏதோ எங்கள் உடம்பில் கொஞ்சம் ஓட்டி கொண்டு இருக்கும் ரெத்தத்தை கூட மூட்டை பூச்சி குடித்து விடுகிறது .

எத்தனையோ இழந்தோம்.. எல்லாவற்றையும் இழந்த நாங்கள் இன்னும் இங்கே ஏன் இருக்கின்றோம்...

இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதாலா? இல்லை இழப்பிலும் சுகம் கண்டுகொண்டதாலா?"

சொந்த மண்ணில் சொந்தங்களோடு சோறு திண்பவன் யாரடா ? இருந்தால் அவனே சொர்க்கம் கண்டவனடா!

உங்கள் விரல் தொடும் தூரத்தில் நான் இல்லை என்றாலும்!' உங்கள் மனம் தொடும் தூரத்தில் நான் இருப்பேன் !

நீங்கள் இருப்பது தொலைவில் தான் ஆனால் என் இதயம் மட்டும் உங்களுடன் பேசிக்கொண்டிருகின்றது! (வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு சமர்ப்பணம்).

Saturday, August 2, 2014

வாழ்க்கையின் அறிந்துகொள்ள வேண்டிய 33 ?

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள்.

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்.

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்.

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்.

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்.

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்.

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை.

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்.

16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்.

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்.

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்.

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்.

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்.

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்.

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!