Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, July 26, 2014

பெண்களைக் குறி வைத்துத் தாக்கும்!?

பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் நோய்களில் தைராய்டும் ஒன்று. இது நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை அயோடின் குறைவே இதற்குக் காரணம்.கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது.

தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம், குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இன்றுள்ள சூழ்நிலைக்கு 100 க்கு 90 பேருக்கு தைராய்டு பிரச்சினை உள்ளது. உடல் வெயிட் போடுகிறது என்று தெரிந்தவுடன் முதலில் தைராய்டு டெஸ்டு எடுத்து பார்த்துவிட்டு தைராய்டு இல்லையென்றால் வெயிட் குறைவதற்கு எந்த சிகிச்சை நல்லது? என்று தேர்வு செய்து வெயிட்டை குறைப்பது நல்லது. தைராய்டு டி.எஸ்.எச் அளவு அதிகமாக உள்ளது என்று தெரிந்தவுடன் தைராய்டு குறைய ட்ரீட்மெண்ட எடுக்க வேண்டும். டி.எஸ்.எச் அளவு ரத்தத்தில் அதிகமானால் ஹை தைராய்டு (அதிகமான தைராய்டு), கம்மியானால் லோ தைராய்டு உடலில் அயோடின் சத்து குறைந்தால் வீக்கம் வேறு வந்து விடும். சில சமயம் சிறு, சிறு கட்டிகள் தோன்றி கேன்சரா என்று பயம் ஏற்படும். கட்டிகள் என்ன என்பதை ஸ்கேன் மூலம் பார்த்து தெரிவுப்படுத்திக் கொள்ளலாம்.

தைராய்டு சுரப்பி குறைவாக இருந்தால் ஆரம்பத்தில் தெரிந்தோ, தெரியாமல் இருக்கும். முதல் மாற்றம் மாதவிலக்கில் மாற்றம் ஏற்படலாம். (அதிகமாக அல்லது குறைவாக) உடல் பருமன் அதிகமாகி விடும்.

இளம் பெண்களுக்கு கருமுட்டையில் நீர் கட்டிகள் (பாலி சிஸ்டிக் ஓவரியன் டிஸ“ஸ்) இருக்கலாம். சில பெண்களுக்கு குழந்தை பிறப்புக்கு பிறகு தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கும். டெலிவரிக்கு பிறகு உடல் குண்டாவது முகம் பருமனாகிவிடும். கைகளில் வீக்கம், கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்படும். அதிக களைப்பு, குளிர்ச்சியை தாங்க முடியாமல் தோன்றும். கை, கால்கள் உளைச்சல், மூட்டுவலி, ஞாபக மறதி, மனச்சோர்வு அதிகமாகும். சிலருக்கு குரல் மாறும். எச்சில் முழுங்கும் போது வலி ஏற்படும். சருமம் வறண்டு பொலிவு இழந்து காணப்படும். மற்ற நாளமில்லா சுரப்பிகளும் வேலை செய்யாமல் முடி வளர்ச்சி இல்லாமல் முடி கொத்து கொத்தாக கொட்டி சிலருக்கு வழுக்கையே வந்து விடும். கரு முட்டைகள் சரியாக வளர்ச்சியில்லாமல் உடல் பருமன் காரணமாக குழந்தை பிறப்பை தடுத்து விடும்.

டென்ஷன் காரணமாய் தைராய்டு பிரச்சினைகள் வருகிறதென சொல்கிறார்கள் சிலர். சில குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் குறைபாட்டுடன் பிறப்பதுண்டு. ஆனாலும் இந்நோய் ஆண்களை விடப் பெண்களை 7 மடங்கு அதிகமாய் தாக்குகிறது. எனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்ப்பதோடு, உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

தைராய்டு சுரப்பி, அதிகமாக சுரந்தாலும், கழுத்து வீக்கம், உடல் சூடு, படபடப்பு, வியர்வை அதிகமாகும். நாக்கு வறண்டு, குமட்டல், வாந்தி கூட வரும். சிலருக்கு குறை பிரசவம், கருச்சிதைவு போன்றவை உண்டாகும். சிலருக்கு கண்கள் பெரிதாக வெளியில் விழும் மாதிரி தோன்றும். பார்வை மங்கும். இந்த தைராய்டு பிரச்சினைக்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என்று பலர் நினைத்து கொள்கிறார்கள். இல்லவே இல்லை. சித்தா மருந்திலிருந்து 3லிருந்து 6மாதம் வரை அவரவர் அளவுக்கேற்ப மருந்து எடுத்துக் கொண்டால் மேல் சொன்ன வியாதிகளை அனைவரும் தவிர்க்கலாம்.

சத்துபவுடர்: தனியா 100 கிராம், எள் 50 கிராம், மிளகு 10 கிராம், மிளகாய் 10, கறிவேப்பிலை போன்ற சாமான்களை வறுத்து பொடி செய்து வைத்து கொள்ளவும். உப்பும் சேர்த்துக் கொள்ளவும். தினமும் 1 பிடி சாதத்தில் 1 ஸ்பூன், நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடவும். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளவும். தினமும் சாப்பிட்டு வந்தால் பசி மற்றும் பித்த மயக்கம், தலை சுற்றல், வாந்தி, ருசியின்மை குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு கல்லீரல் பிரச்சினை நீக்கி பலப்படுத்துவது உறுதி.

Sunday, July 20, 2014

மோடிக்கு முக்கிய துணை போன சிஷ்யன் !?

மோடி அலைக்கு முக்கிய துணை போன அண்ணா ஹசாரேயின் சிஷ்யன் அரவிந்த்கேஜ்ரிவால். அண்ணா ஹசாரே ஓர் ஆர்.எஸ்.எஸ். சிந்தனைவாதி  அவரால் உருவாக்கப்பட்ட அரவிந்த்கேஜ்ரிவாலும் (ஆம் ஆத்மி) தேசியவாதியா ?... {ஒரு சின்ன டவுட்டு} அதான் இப்படி.

மோடி எங்கு போனாலும் நானும் அவர் பின்னாலேயே போவேன் என கூரிக் கொண்டு திரியோ திரியென {நாய்க்குட்டிபோல்} திருத்திருக்கிறார் அரவிந்த்கேஜ்ரிவால் அதுமட்டுமல்லாது போகும் இடங்களில் எல்லாம் அடியொஅடியென அடியும் {கைப்பிள்ளையைபோல்} வாங்கியும் இருக்கின்றார் இதன் உள்நோக்கம் தான் என்ன எனவே இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது என்ன தோன்றுகின்றது.

அன்னாஹசாரே இந்த தேர்தலில் சீனிலேயே வரவில்லை திரைமறைவில் இருந்து அரவிந்த்கேஜ்ரிவால் ஐ வைத்து இயக்கி இருக்கின்றார் என்றே தோன்றுகிறது. எனவே ஆம் ஆத்மி ஏன் பிஜேபியின் ஒரு ரகசிய கிளையாக இருக்கக் கூடாது.

நடந்து முடிந்த சம்பவங்களின் அடிப்படையாக வைத்துப் பார்த்தால் அப்படி தான் தோன்றுகிறது. காங்கிரசின் ஓட்டைப் பிரிக்க இவர்கள் இதுபோன்ற நரித் தந்திரத்தை உபயோகப் படுத்தி இருக்கின்றனர்.

ஆகமொத்தத்தில் ஆம் ஆத்மியும் காவிக் குட்டையில் ஊறிய மட்டையே.

ஆர்.எஸ். எஸ் செயல்படுத்த துடிக்கும் திட்டங்கள் ஆபத்தானது இதை உணராது தவறு செய்யும் ஒவ்வொரு இந்தியனும் வருத்தபடுவான்.  

குறிப்பு: சகோ இனி நீங்கள் எழுதும் பொது சாதரணமாக ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் என்று எழுதாமல் அவன் யார் எ(வ)ந்த மதம் என்ன கோத்திரம் என்பன வற்றையும் சேர்த்து எழுதுங்கள்.

அது எப்படியென்று பார்ப்போமா ஆர் எஸ் எஸ் இயக்கத்தை தொடங்கியவன்  வெறும் சர்வக்கர் என்று எழுதாமல் தீவிரவாத ஆர் எஸ் எஸ் இயக்கத்தை தொடங்கியவன் சர்வர்க்கர் என்கிற பார்ப்பன பயங்கரவாதி, காந்திஜியை சுட்டுகொன்றவன் கோட்சே மற்றும் அவனது கூட்டாளிகள் இருவரும் பார்பன பயங்கரவாதிகள், அதேபோல் மக்கா மஸ்ஜிதில் குண்டுவைத்த பிரியங்கா சிங் பெண் துறவி பாப்பாத்தி,  புரோகிதர் இப்படி நீண்டு கொண்ட  போகிறது பார்ப்பனன் பயங்கரவாதிகளின் அயோக்கியத்தனங்கள்.

Saturday, July 12, 2014

ஆபத்தை வரவழைக்கும் அமர்ந்த வேலை!!

நீண்ட காலம் வாழ ஆசையா… இதை உட்கார்ந்து படித்து கொண்டிருப்பவர்கள் எழுந்து நில்லுங்கள். ஆம். ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று மிரட்டுகிறது ஒரு ஆய்வு முடிவு. 

ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பொதுநல மருத்துவ பிரிவு பேராசிரியர் ஹைட் வான் டெர் பிளாஜ். இவரது தலைமையில் ஒரு குழு நடத்திய ஆய்வில் 2 லட்சம் பேர் பங்கேற்றனர். அதன் அறிக்கை ஏஐஎம் என்ற மருத்துவ இதழில் வெளியானது. அதில் இடம்பெற்ற விவரங்கள் :

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதே பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. பருமன், டயபடீஸ் ஆகியவை அவற்றில் முக்கியமானவை. ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு குறைவாக உட்கார்ந்தே இருப்பவர்களுடன் ஒப்பிடுகையில், 11 மணி நேரத்திற்கு அதிகமான நேரம் உட்கார்ந்து இருப்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது.

2 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட உடல் உழைப்பு, எடை, உடல் ஆரோக்கிய நிலை ஆகியவற்றின் அடிப்படையில் துல்லியமாக நடத்திய ஆய்வில் இது தெரிய வந்தது. ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்வது, நீண்ட நடைபயிற்சி ஆகியவையும் அவசியம்தான். ஆனால், அவற்றை விட மிக முக்கியமானது நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காராமல் இருப்பது. உட்கார்ந்தே இருந்தால் பல உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அலுவலக நேரத்தில் எத்தனை முறை முடியுமோ 20 முதல் 30 வினாடிகள் வரை எழுந்து நிற்கலாம். போன் பேசும் போது நிற்கலாம். லிப்ட், எஸ்கலேட்டரை தவிர்த்து படிகளில் ஏறலாம். இமெயில் , இன்டர்காம் தகவல் பரிமாற்றம் தவிர்த்து நேரில் சென்று பார்க்கலாம். ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை இருக்கையை விட்டு எழுந்து சில நிமிடங்கள் நடக்கலாம். குறைந்தபட்சம் உட்கார்ந்த பொசிஷனை மாற்றி தோள்பட்டையை அசைத்து, நீண்ட மூச்சிழுத்து விட்டு தசைகள் அழுத்தத்தை ரிலாக்ஸ் செய்யலாம். இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

* 45 வயதுள்ள 2 லட்சம் பேரிடம் 2008,2013வரை 5 ஆண்டு ஆய்வு நடத்தப்பட்டது.

* ஒரு நாளில் 3 மணி நேரம் வரை உட்கார்ந்திருப்பவரைவிட 6 மணி நேரம் உட்கார்ந்திருப்பவர் 15 ஆண்டுகளுக்குள் இறக்க நேரிடலாம்.


* பணி நேரம் மட்டுமின்றி ஓய்வை சேர்த்து ஒருநாளில் 90 சதவீத நேரத்தை பெரும்பாலோர் உட்கார்ந்தே செலவிடுகின்றனர். இது ஆபத்தானது.

Saturday, July 5, 2014

ஆபாச தளங்களை பார்க்காமல் பாதுகாக்க!?

அநேகமாக நம் எல்லோரது வீட்டிலும் லேப்டாப் இருக்கிறது இதனை நாம் மனைவி பிள்ளைகள் என எல்லோரும் தினசரி உபயோகப் படுத்துகிறோம். பல தகவல்களை Google ல் நாம் தேடும் போது யதேச்சையாகவோ அல்லது தவறான ஸ்பெல்லிங் ஏற்படும் போதோ ஆபாசமான தகவல்கள், மற்றும் படங்கள் என வந்து மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது என்பது உண்மையே இதனை சீர் செய்ய இந்த பதிவு மிகுந்த உபயோகமாக இருக்கிறது.


எனவே முடிந்தவரை பலருக்கும் இதை SHARE செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறேன் ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..? நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம்..


முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள். பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள். அல்லது http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்.. Safe serch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள். Locking Process நடைபெறும் பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள். 

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் . நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள். google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள்  Setting போய் பாத்துட்டு அட ஆமா இருக்கு'ல ன்னு சும்மா இருக்காம... setting correct' பண்ணுங்க. ஆமா!!.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!