Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, June 28, 2014

ஆப் கீ பார் ஆப்பு வைச்சான் பார்!?

ஆப் கி பார் மோடிக்கா சர்க்காரே தான் வேணும்ன்னு ஓட்டுப்போட்டவிங்க எல்லாம் இப்ப இஞ்சித் திண்ண குரங்கு மாதிரியே முழிக்கிறாங்க. 

எலக்‌ஷனுக்கு முந்தி பத்து பேர் கூடி நின்னு பேசற வாய்ப்பிருக்குற இடத்துல எல்லாம் வாண்டனா ஒரு ஆள் மோடியைப் பற்றி பேச ஆரம்பிக்க மற்றவர்கள் விருப்பப்பட்டோ வேறு வழியின்றியோ அதை ஆமோதித்து தலையாட்டும் நிலை இருந்தது.

ஆனா இப்பல்லாம், பத்து பேர் சேர்ந்து நின்னா மோடி பத்திய பேச்சை யாருமே எடுக்கற மாதிரியே தெரியல.

ராஜபக்‌ஷேவ இந்தியா கூப்பிட்ட மேட்டரு, காஷ்மீர் பிரச்சினை, அயோத்தி பிரச்சினை. கல்வியில் காவிமயம். இதெல்லாம் ஏன் ஹிந்தி தினிப்பு மேட்டர் வரைக்கும் கூட சில பேர் கோமணத்தை இழுத்துப் பிடிச்சி அரைஞான் கயித்துல சொறுவ முயற்சித்தாலும்.

வாராவாரம் ஏறுற பெட்ரோல், டீசல் விலையும், இப்போ அறிவிச்சிருக்குற ரயில் கட்டண உயர்வும் கோமணத்தை அம்போன்னு விட வச்சிடிச்சி. சர்க்கரை கிலோக்கு ரூபாய் 3உயர்த்துகிறது மத்திய அரசு ஆவின்பால் ரூபாய் 6 உயர்த்துகிறது மாநில அரசு.

அப்புறம் ஏண்டா டீதூளையும், காபிதூளயும் உசத்தமா இருக்கீங்க? சாயா கடை அண்ணாச்சி, இத்துனூண்டு பிளாஸ்டிக் கப்ல கொடுக்கிற சாயா ரேட்டையும் உசத்திடுங்க.

தமிழ்நாட்டுல ஓஹோன்னு ஓடுன முதல்வன் படம்... ஹிந்தி ரீமேக்குல ஃபெயிலியர் ஆயிடிச்சி...   அது பத்தி டைரக்டர் ஷங்கர் கிட்ட கேட்டப்ப...   இந்தியாவுல ஒரு குறிப்பிட்ட மாநிலத்துல இருக்குற பிரச்சினையை மையமா வச்சி அங்க ஜெயிச்சாலும், ஒட்டுமொத்த இந்தியாவுக்கு அதே ஃபார்முலா ஒத்துவராதுன்னு புரிஞ்சிக்கிட்டேன்..  அப்டீன்னு சொன்னார்.

மோடி.  குஜராத் வேற...   ஒட்டுமொத்த இந்தியாங்கறது வேற. முதல்ல நீ ஒரு இந்தியனா மாறனும்...   அதைவிட முதல்ல மனுசனா மாறு முதல்வன் படத்தை இந்தியா முழுக்க ஓட்ட முடியாது.

அதே போல உன் குஜராத் தீவிரவாதத்தை இந்தியா முழுக்க செய்ய நினைப்பது இந்தியாவை பல துண்டுகளாக  உடைப்பதற்கு சமம் நினைவில் கொள் மதம் பிடித்தவனே.

@ future.  ஆப்பு. Wait & see??

Saturday, June 21, 2014

உலகுக்கு உணர்த்திவிட்டது சமூக வளை!?

ஊடகங்கள் துணையின்றி முக்கியவத்தை உலகுக்கு உணர்த்திவிட்டது சமூக வளைதளங்கள்.

சப்தமில்லாமல் உலகை ஒன்று படுத்திவிட்டது இலங்கை தமிழ் முஸ்லிம்கள் மீதான அத்துமீறல்கள் குறித்து எந்த ஒரு ஊடகமும் செய்தி வெளியிடாது இருந்தபோது, முகநூல், வாட்ஸப், டிவிட்டர் போன்ற சமூக வளைதளங்கள் மூலமே செய்திகள் காட்டுதீ என பரவின. தாக்குதலுக்கு உள்ளான ஒரு சகோதரனின், அந்த அழுகுரல் ஆடியோ பதிவு அனைவரையும் சென்றடைந்துள்ளது.

இலங்கை, இந்தியா மட்டுமல்லாமல், ஐரோப்பா, அமெரிக்கா, மற்றும் அரபு நாடுகள் வரை தங்கள் கண்டனத்தை பதிவு செய்ய காரணமாக இருந்தது இந்த சமூக வளைதளங்களே.

போராட்ட களத்திற்கு புயலென புறப்பட வைத்ததும் இந்த தளங்களே!

விபச்சார ஊடங்கள் இலங்கை கலவரத்தை மறைக்கவே முற்பட்டன. காரணம் அவர்கள் தமிழர்களாக இருந்தாலும் முஸ்லிம்கள் ஆயிற்றே!முகமூடி ஊடகங்கள் துணையின்றி, இது போன்ற வளைதளங்கள் மூலமும் சாதிக்க இயலும் என்பது தெளிவாக தெரிந்துவிட்டது. இனி தெளிவாக ஒரு முடிவு எடுப்போம், நமக்கென ஒரு ஊடகம் எப்படி முக்கியம, அதே போன்று சமூக வளைதளங்களில், நமது செயல் திறனும் செழுமையாக்கப்பட வேண்டும். 
ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இனி அவைகளை இன்பாக்ஸிலேயே வைத்துக்கொள்ளுங்கள்.

Saturday, June 14, 2014

ஊடக விபச்சாரம் ஒரு சிறப்புப் பார்வை!?

நடந்த சம்பவம் : டீ "க்கடையில் "பல்பு" வெடித்து ....டீமாஸ்டர் "நகம் " துண்டானது. 

தினகரன் டீ "க்கடையில் "பல்பு " வெடித்து...டீமாஸ்டர் "விரல் " துண்டானது. போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.......!!

தினத்தந்தி : டீ "க்கடையில் "பாய்லர் " வெடித்து...டீமாஸ்டர் "கை யே " துண்டானது. தாடிக்காரர்களின் சதியாக இருக்கலாம் என்று போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

தினமணி : டீ "க்கடையில் "பாய்லர் "வெடித்து... டீமாஸ்டர் கவலைக்கிடம்..இப்பவோ. அப்பவோ. னு இழுத்துக்கிட்டிருக்கு. இந்த நாச வேலைக்கு காரணமான தீவிரவாதி "ஜாகிர் உசேன் " யை போலீஸார் தேடிவருகிறார்கள்.

தினமலர் :  டீ "க்கடையில் சக்தி வாய்ந்த "பாம் " வெடித்ததில் டீமாஸ்டர் உட்பட இரண்டு பேர் பலி..! அதாவது...? செத்தேபோய்டாங்க. இந்த நாசவேலைக்கு காரணமான தீவிரவாதி ஜாகிர் உசேன் " பிடிபட்டான்.....? அவனிடம் விசாரணை செய்ததில் அவன் தலிபான் இயக்கத்தை சேர்ந்தவன் என்று தெரியவந்துள்ளது. இவனிடம் பறிமுதல் செய்யப்பட்ட "தீப்பெட்டி "யில் ஒரு குச்சி குறைவாக உள்ளதால். அந்த குச்சியை வைத்துத்தான் "பாம் "யை பற்ற வைத்திருக்கிறான் என்று இவனை கைது செய்து இவன் கூட்டாளிகளை பிடிக்க. போலீஸார் தீவிர.வேட்டையில் இறங்கியுள்ளனர்.

அட பொறம்போக்குகளா. நடந்ததை நடந்தமாறி எழுதுங்கடா. ஏன்டா "பேனா "வை வெச்சு "பேய்க்கதை " எழுதுறீங்க.

சிறுபாண்மையினருக்கு எதிராக தொடர்ந்து விஷம பிரச்சாரம் செய்து வரும் விபச்சார ஊடகங்களான தின மலர், மாலை மலர், தினமணி,  தினத்தந்தி  ஆகிய செய்தித்தாள்களே வாங்குவதே இன்றே தவிருங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக.

பேனாவை வைத்து பேய் கதை எழுத பார்ப்பன பயங்கரவாதிகளால் மாத்திரமே முடியும்.

இந்தியாவில் நான்கு சம்பங்கள்: முதலாவது காந்தி படுகொலை, இரண்டாவது சீக்கியர்கள் படுகொலை, மூன்றாவது பாபர் மசூதி இடிப்பு, நான்காவது குஜராத் இஸ்லாமிய இன அழிப்பு. இந்த சம்பவங்களையும், இதற்கு காரணமானவர்களையும், மனிதன்மை இருக்கும் வரை யாரும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது.


Saturday, June 7, 2014

அம்மனாக நடித்தவர் அம்மணமாக!?

அன்பார்ந்த வாசகர்களே! "இந்து மதத்தை இழிவுபடுத்துபவர்கள் யார்?" என்ற தலைப்பில் ஒரு சிறு கட்டுரையை எழுத எண்ணம் தோன்றியது, காரணம் தமிழ் நாட்டில் ஃபாஸிச வெறி பிடித்த காவிக்கூட்டமான "இந்து முன்னனி" அமைப்பைச்சார்ந்தவர்கள் சமீபகாலமாக பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதில் முக்கியமாக இவர்கள் எடுத்துக்கொண்ட ஒரு போராட்டம் தான் "இந்து மதத்தை இழிவுபடுத்துபவ‌ர்களை எதிர்த்து போராட்டம்" என்ற ஒன்று. உண்மையில் யார் இந்து மதத்தை இழிவுபடுத்துகிறார்கள்? என்பதை விளக்குவதற்காகத்தான் இதை எழுதுகிறேன். இதனை படிக்கும் இந்து மதத்தை பின்பற்றக்கூடிய நண்பர்கள் யாராக இருந்தாலும் சற்று சிந்திக்க வேண்டுகிறேன்.

இந்து மதம் ஒரு பழைமையான மத வழிபாடு என்பது அனைவரும் அறிந்ததே! நமது இந்திய திரு நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே அதாவது கிறிஸ்தவ மதமும், இஸ்லாமிய மதமும் இந்த நாட்டிற்குள் நுழைவதற்கு முன்னாலேயே இந்து மதம் தான் இந்த இந்திய நாட்டில் இருந்து வந்தது என்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

பல தெய்வ கொள்கையை ஏற்றுக்கொண்டு, பகவத்கீதை, ரிக், யஜூர், சாம, அதர்வன வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் போன்றவற்றை புனித நூலாக ஏற்றுக்கொண்ட மக்களைத்தான் இந்துக்கள் என்று அழைக்கின்றோம். நம்முடைய தலைப்பிற்குச் செல்வதற்கு முன்னால் "இந்து" என்ற வார்த்தை எவ்வாறு புழக்கத்திற்கு வந்தது என்பதை நாம் சற்று ஆராய வேண்டும். மேலே குறிப்பிட்ட எந்த ஒரு வேத நூல்களிலும் "இந்து" என்ற வார்த்தையை நம்மால் காண இயலாது, காரணம் "இந்து" என்ற சொல் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டதில்லை. அரேபியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னால் "இந்து" என்ற வார்த்தை புழக்கத்திலேயே இல்லை.

அரேபியர்கள் நம் இந்திய திரு நாட்டை ஆயிரம் வருடங்களுக்கு முன்னாஹ் "ஹிந்த்" என்று தான் அழைத்து வந்தார்கள். "ஹிந்த்" என்பது சிந்து நதிக்கரையின் அருகில் வசிக்கக்கூடிய மக்களை அழைப்பதற்கான பதமாக இருந்ததே தவிற ஒரு குறிப்பிட்ட மதத்தினரை அழைக்கக்கூடிய வார்த்தையாக இருக்கவில்லை. ஆக "ஹிந்த்" மற்றும் "இந்து" ஆகிய இரு வார்த்தைகளும் ஒன்று தான் என்பதை நாம் சொல்லித்தெரியவேண்டிய அவசியம் இல்லை.

சுருக்கமாகச் சொல்லப்போனால் "இந்து" என்பதற்கு ஒட்டுமொத்த இந்தியர்களை அழைக்கக்கூடிய வார்த்தையே தவிற மதத்தை பின்பற்றுபவர்களை அழைக்கக்கூடிய வார்த்தை இல்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. நம்முடைய இந்த கூற்றிற்கு வழு சேர்க்கும் விதமாக இந்து மதத்தில் மாபெரும் அறிஞராக விழங்கிய‌ சுவாமி விவேகானந்தரின் கூற்றும் அவ்வாரே உள்ளது. அவர் கூறும் போது "இந்துக்கள் தங்களை இந்துக்கள் என்று அழைக்கக்கூடாது மாறாக "வேதந்திஸ்ட்" அதாவது "வேதத்தை பின்பற்றக்கூடியவர்கள் "என்று தான் அழைக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்து மதத்தில் நான்கு பிரிவுகள் உண்டு என்பதை அனைவரும் அறிவர்.

1. பிரம்மன்., 2.வைஷ்ணவன்., 3.சத்ரியன்   4. சூத்திரன்.

இதில் பிரம்மன் என்று அழைக்கப்படக்கூடிய பிராமணர்கள் தான் உயர்ந்த குலம் என்றும் சூத்திரர்கள் தீண்டத்தகாதவர்கள் என்றும் இந்து மத வேதங்கள் கூறுகின்றன. இந்த தீண்டாமைக்கொள்கை இந்தியாவில் ஆரியர்களின் வருகைக்கு பின்னால் தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆரியர்கள் தங்களை உயர்ந்த குலத்தவராக ஆக்கிக்கொண்டு மற்றவர்களை அடிமைப்படுத்தி துன்புறுத்தும் விதமாக இந்த கொள்கை பரப்பப்பட்டது. காலங்காலமாக நடைமுறையில் இருந்து வரும் இந்த தீண்டாமை கொள்கையினால் இந்த மதத்திலிருந்து நிறைய மக்கள் வெளியேறி கிருஸ்தவ மதத்தையும், இஸ்லாமிய மார்க்கத்தையும், புத்தமதத்தையும் ஏற்றுக்கொண்டார்கள். இன்னும் சிலர் இவர்களின் இந்த கொள்கையை புறந்தள்ளி நாத்திகர்களாகவும் மாறினர்.

இந்தியாவில் பெரும் தலைவர்களான ராஜா ராம் கோகன் ராய் போன்ற எண்ணற்ற தலைவர்கள் இந்த தீண்டாமைக் கொள்கைக்கு எதிராக போராடினர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு வரலாறு.

தற்போது இதே கொள்கையை மீண்டும் நிலை நாட்ட வேண்டும், என்ற ஓரே அடிப்படையில் ஒட்டுமொத்த இந்துக்களுக்காகவும் போராடுகிறோம் என்று கூறி அப்பாவி இளைஞர்களை மூளை சலவை செய்து தீவிரவாத செயல்களுக்கும், மதக்கலவரங்களுக்கும் பயன்படுத்தும் கூடாராமாக ஆர்.எஸ்.எஸ். இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆர்.எஸ்.எஸ்-ன் தமிழக‌ அமைப்பான "இந்து முன்னனி" தமிழகத்தில் நாச வேலைகளை செய்வதில் முன்னிப்பாக செயல்பட்டு வருகின்றனர், இதற்கு உதாரணம் தான் தென்காசியில் அவர்களது அலுவலகத்தில் அவர்களே குண்டு வைத்த சம்பவம்.

தற்போது இவர்கள் "இந்து தர்மம் காப்போம்!", "இந்து மத கோயில்களை காப்போம்!", "இந்து மதத்தை இழிவுபடுத்துபவர்களை எதிர்த்து போராட்டம், பிரச்சாரம்" என்ற தலைப்பில் ஏதோ இவர்கள் ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதி போன்று தங்களை காட்டிக்கொள்கிறார்கள். இன்று திராவிடம் பேசும் தமிழர்கள் தந்தை பெரியார் முதல் இன்று வரை இருக்கக்கூடிய திராவிட தமிழர்கள் இந்து மதத்தில் உள்ள மூட நம்பிக்களை எதிர்க்கிறார்களே தவிற ஒட்டு மொத்த இந்து மதக்கொள்கைகளை எதிர்த்ததில்லை. ஆனால் இவர்களை இந்துக்களின் எதிரிகளாக பாவித்து கொண்டு அப்பாவி இந்து இளைஞர்களிடம் தவறான செய்திகளை பரப்பி அவர்களை சூடேற்றி தவறான பாதைகளில் அழைத்துச் செல்லும் மகா கேடுகெட்ட இயக்கம் தான் இந்த "இந்து முன்னனி". இவர்கள் முழுக்க முழுக்க பிரம்மணிஸ தீண்டாமைக்கொள்கையை நடைமுறைப்படுத்த துடிக்கும் இவர்கள் தங்களுடைய திட்டங்களை நடைமுறைப்படுத்த தலித் மக்களைத்தான் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இவர்களது இந்த சூழ்ச்சியை அறிந்து கொள்ள முடியாதவர்களில் இவர்களின் வலையில் சிக்கிவிடுகின்றனர்.

யார் இந்து மதத்தை இழிவு படுத்துகிறார்கள்?

புத்தமதத்தைச்சார்ந்தவர்களோ, கிருஸ்தவ மதத்தைச்சார்ந்தவர்களோ, இஸ்லாமிய மதத்தைச்சார்ந்தவர்களோ, அல்லது நாத்திகவாதிகளோ இந்து மதத்தை இழிவுபடுத்தவில்லை மாறாக இந்து மதத்தை பின்பற்றக்கூடியவர்களே இழிவு படுத்துகிறார்கள்.

இவர்கள் பல வழிகள் மூலம் அறியாமையிலேயே தங்களது கடவுள்களை இழிவுபடுத்தி வருகின்றனர். அதில் இரண்டு விதமான செயலகளைப்பற்றி நாம் பார்போம்.

1. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்:  இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தமிழ கலாச்சாரத்தின் விழா கிடையாது. மாறாக வடமாநிலங்களில் குறிப்பாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் நடைபெற்று வந்த ஒரு விழாவாகும். தமிழகத்தில் "தமிழ் கடவுள்" என்று இந்துக்களால் அழைக்கப்படும் முருகப்பெருமானை தான் வணங்கி வந்தனர் இந்துக்கள்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே நகரில் தான் ஆர்.எஸ்.எஸ் இப்படிப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவை அறிமுகப்படுத்தியது. இந்த விழாவின் நோக்கமே மதக்கலவரத்தை ஏற்படுத்துவதற்காகத்தான். இந்த ஒரு விழாவை பிரபலப்படுத்தி ஒட்டு மொத்த இந்திய தேசத்திலும் பரவச்செய்து அதன் மூலம் மதக்கலவரங்களை ஏற்படுத்த வேண்டுமெ என்பதே ஆர்.எஸ்.எஸ்-ன் நோக்கம்.

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்த விழாவில் ஏதாவது ஒரு அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடக்கூடும் என்ற அச்சத்திலேயே அரசாங்கம் அதிக அளவில் பாதுகாப்பு அளித்து வருகிறது. யாரிடம் இருந்து யாருக்காக இந்த பாதுகாப்பு என்றால் இந்த விழாவை நடத்தக்கூடிய ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, இந்து முன்னனி, பஜ்ரங்தள் போன்ற பாஸிச பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காகத்தான். இதில் இழிவு படுத்த என்ன இருக்கிறது? என்று எண்ணுகிறீர்களா? இவ்விழாவின் போது இவர்களால் கடவுளாக கருதப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு நேர்ந்த கதி தெரியுமா? கீழே உள்ள புகைப்படங்களை பாருங்கள். இவையெல்லாம் இந்து மதத்தை இழிவு படுத்தக்கூடிய செயல் இல்லையா? 

"இந்து முன்னனி" அமைப்பிற்காக வக்காளத்து வாங்குபவர்களும் இந்த விழாவினை கொண்டாடுபவர்களும் சற்று சிந்திக்க வேண்டும்.

2. இந்து மதத்தைப் பற்றி வெளியிடப்படும் திரைப்படங்கள்: இந்து மதக்கடவுள்களைப் பற்றி நிறைய தமிழ் சினமாப் படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் பல திரைப்படங்கள் வெற்றி பெற்று இந்துமதப்பெண்களிடம் அதிக அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதை நாம் அறிவோம். ஆனால் அதில் ஒன்றை அவர்கள் சிந்திக்க தவறி விடுகிறார்கள். அதில் பெண் கடவுளாக நடிப்பவர்கள் விபச்சாரிகளாகவும், மற்ற படங்களில் படு மோசமான ஆடைகளை அணிந்து ஆண்களுக்கு இச்சை ஊட்டக்கூடிய வகையில் நடித்து வருகிறார்கள். 

ஒரு ஆன்மீகப்படத்தை பார்கச் செல்லும் ஒருவன் அந்த சினிமாவில் தோன்றும் பெண்ணை கடவுளாக மதிக்கிறான் அதே பெண் மற்றொரு படத்தில் கவர்ச்சியாக நடிக்கும் போது அவள் மீது ஆசை கொள்கிறான். அவன் எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும். ஆனால் ஒரு படத்தில் "அம்மன்" வேடத்தில் நடித்து விட்டு மற்றொரு படத்தில் "அம்மனமாக" நடிக்கும் கேடுகெட்ட நடிகைகள் இந்து மதத்தை இழிவு படுத்தவில்லையா? என்றைக்காவது இந்த ஃபாஸிச வெறிபிடித்த "இந்து முன்னனி" தீவிரவாதிகள் இதனை எதிர்த்து போராட்டம் செய்தது உண்டா?

இந்து மதத்தை இழிவுபடுத்துகிறவர்கள் இவர்களே! தவிற மேறு எவரும் இல்லை. இந்து மதத்தை இழிவுபடுத்துவோரை எதிர்த்து போராட்டம் என்று கூறுவதெல்லாம் ஏமாற்று வேலை. இவர்களுடைய நோக்கமே இந்திய திருநாட்டில் அமைதியை சீர்குழைக்க வேண்டும் என்பது தான். இப்பேற்பட்ட தேச துரோகிகளை இனம் கண்டு கருவோடு வேறருக்க ஒவ்வொரு இந்துவும் தயாராக வேண்டும், விழிப்படையவேண்டும் அதன் மூலம் நம் தாய் நாட்டை வளமான நாடாக மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பு :- (இதை விட மோசமான புகைப்படங்கள் உண்டு! நாகரீகத்தை கருத்தில் கொண்டு வேறு வழி இன்றி இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளேன், மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக)

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!