Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, May 31, 2014

ஆங்கில மருந்தில்லா மருத்துவம் இதோ!!

அடிக்கடி ஆங்கில மருந்து எடுத்துக்கொள்பவர்களுக்கு மருந்தில்லா மருத்துவம் அதை தான் இப்போ பார்க்கபோகிறோம்இதோ.
* தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும்.
* சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் ஆஸ்துமா, ஜீரம் முதலியவற்றை நீக்கும்.
* கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது.
* வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும்.
* தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவு பெறும்.
* அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.
* சாதாரண வாய்வுப் பிடிப்பிற்கு சுக்கையும், பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் போதும்.
* அடிக்கடி காபி, டீ ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக குடிப்பதும், அடிக்கடி பட்டனி கிடப்பதும், சிகரெட், மது குடிப்பதாலும் குடற்புண் விரைவில் ஏற்படும்.
* கூடுமான வரையில் தாளிப்பு இல்லாமல் உணவு உண்பதே நல்லது.
* மைதா மாவினால் செய்த உணவுகளைக் குறைத்தாலும் அல்லது நீக்கினாலும் உடல் பருமன் குறையும்.
* நாம் நம் உடம்பிற்கு ஒரே சோப்பையே எப்போதும் பயன்படுத்த வேண்டும். சோப்பை அடிக்கடி மாற்றுவதால் சரும வியாதிகள் ஏற்படும்.
* நெய்க்காக வெண்ணையைக் காய்ச்சும் போது அரை ஸ்பூன் வெந்தையத்தைப் போட்டு இறக்கினால் நெய் மணமாக இருக்கும்.
* மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆசனக்கடுப்பு, மூல நோய் குணமாகும்.
* கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் குடித்தால் அஜீரணம் சரியாகிவிடும்.
* முள்ளங்கி கீரையில் வைட்டமின் சத்து உள்ளது. இக்கீரை தொற்று நோய்களை விரட்டி அடிக்கும்.
* உடல் எடை குறைந்தவர்கள் வாழைப்பழம் தினமும் இரவில் உண்டு வந்தால் எடை கூடும்.
* எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரியில் வைத்தால் சிறிய பூச்சிகள் நெருங்காது.
* குளிக்கும் சோப்பைத் தலைக்கு தேய்கக் கூடாது. முடி கொட்டி, விரைவில் நரைத்து விடும்.
* இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்துக்குப்பதில் சோயா மொச்சையை பயன்படுத்தினால் அதிக சத்தான இட்லி கிடைக்கிறது.

Saturday, May 24, 2014

ஈழ வியாபாரத்தில் கொள்ளை லாபம்!?

மோடி பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவின் வருகை உறுதியாகிவிட்டது! -செய்தி.

ஈழ வியாபாரத்தில் கொள்ளை லாபம் கண்டு கொழுத்துப்போன கருப்புத்துண்டு கோமாளி வைகோ, காந்திக்கும் கோட்சேவுக்கும் பிறந்த அவமானக்குழந்தை தமிழுருவிமணியன் ஆகியோர் எங்கிருந்தாலும் மேடைக்கு வாங்க சாமி. இதுபற்றி காவிகளிடம் கேட்டால் இது சார்க் நாடுகளின் நட்புறவு மேம்பட என்பார்கள், இதையேதான் காங்கிரஸும் செய்தது, அப்போது கொந்தளித்தீர்கள்.
நாளை மோடியும் இலங்கை செல்வான், ராஜபக்சே தோட்டத்தில் மாலை உலா வருவான். இலங்கைக்கு காங்கிரஸ் செய்து வந்த எல்லாம் விஷயங்களையும் மோடியும் செய்வான், இன்னும் சில வாரங்களில் தமிழக மீனவன் தாக்கப்படுவான், கச்சத்தீவிலிருந்து விரட்டியடிக்க படுவான்,

பெட்ரோல் விலை சீறாக உயரும்,சமையல் கேஸ்விலையும் அவ்வண்ணமே பாயும், விவசாயி தூக்கில் தொங்குவான், அம்பானி தங்கத்தட்டில் உண்ணுவான், அடானி மின்கொள்ளையடிப்பான், ஏழை ஏழையாகவே மடிவான், முதலாளி பெருமுதலாளியாவான், ஆதிவாசி விரட்டப்படுவான், பழங்குடியன் புரட்டப்படுவான்,

மலைகளும் .இயற்கை வளங்களும் டாடாவின் மடியிலே கொட்டப்பட்டு ஆளும் வர்க்கம் சன்மானங்கள் பெறுவர். இதையெல்லாம் மக்கள் அறிவர், போராடத்துணிவர், நாடெங்கும் மோடி அலையை மக்களின் எதிர்ப்பு அலை விழுங்கும், அப்போது இருக்கவே இருக்கு வாஜ்பாய் உத்தி. பாகிஸ்தான் மீது போர் தொடுக்கப்படும், போராடிய மக்களெல்லாம் திசைதிருப்பப்பட்டு தேசபக்தியில் மூழ்கடிக்கப்படுவர்,

4 ஆண்டுகளிலேயே பாராளுமன்றம் கலைக்கப்படும், மக்களின் உணர்ச்சியை துணைக்கு வைத்துக்கொண்டு மீண்டும் மோடி அதிகாரம் பிடிப்பான்! இதுதான் சங்பரிவார் உத்தி.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் நடந்தே தீரும்,அவமானத்தால் கழுவில் தொங்காமல் இந்த வைகோவும் மணியனும் அப்போதும் வாழ்வார்கள்!!.
@ ஊடகங்களின் மாய வெளிச்சத்தை வைத்துக்கொண்டு சிந்தனைகடத்தல் நடத்தித்தானே ஆட்சிக்கு வரமுடிந்தது? பொராமையோ காழ்ப்புணர்ச்சியோ கொண்டு அலைந்த நிலையில் நாம் அல்ல.சிரிது காலம் பொருமை காக்கலாம். எந்த கழிவை காங்கிரஸ்மீது பூசிவிரட்டினார்களோ அதே கழிவை இவர்கள் உண்ணுகிறார்களா என பார்ப்போம்.

இனி  மோ(கே)டி தறுதலைகளை தமிழ்நாட்டில் கால் வைக்க அனுமகாதீர்கள்  தமிழ் உணர்வு உங்களிடமிருந்தால். இருவருமே இனப்படுகொலையாலன்கள் மறுக்க, மன்னிக்க முடியா உண்மை.

Sunday, May 18, 2014

கரியை முகத்திலும் பூசிக்கொண்ட இந்தியர்கள்!?

பெரும் தொழில் நிறுவனங்களை நடத்தும் ‘கார்ப்பரேட்’ நிறுவனங்களுக்கு 2005-2006 ஆம் ஆண்டில் இந்திய அரசு தள்ளுபடி செய்த வரியைக் கணக்கிட்டால் சராசரியாக ஒரு நிமிடத்துக்கு ரூ.7 மில்லியன்.
தங்கம்-வைரத்துக்கு தள்ளுபடி செய்துள்ள வரி கடந்த 36 மாதங்களில் ‘2 ஜி’ அலைவரிசை ஊழலுக்கு சமம்.
2005-லிருந்து 2013 வரை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட வருமான வரி, சுங்க வரி, ‘கஸ்டம்ஸ் டூட்டி’ ரூ.31,111,69 (ரூபாய் 31 லட்சத்து 111 ஆயிரத்து 69 கோடி ரூபாய்)(2005 ஆம் ஆண்டிலிருந்து, 2013 ஆம் ஆண்டுக்குள் தள்ளுபடி விகிதம் 130.53 சதவீதம் அதிகரிப்பு)
தங்கம், வைரம் மற்றும் நகைகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ.3,14,456 கோடி.
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இவ்வளவு பெரும் தொகையை தள்ளுபடி செய்த நிதியமைச்சர் ப.சிதம்பரம், இந்தியாவில் தனி நபர் நேரடி வருமான வரி 5.5 சதவீதமாகவும், மறைமுக வருமான வரி 4.4 சதவீதமாகவும் மிக மிகக் குறைவாகவே உள்ளது என்றும் கவலைப்படுகிறார். தள்ளுபடி பற்றி அவர் கவலைப்படவில்லை! நாட்டை “தேசபக்தர்கள்” கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து விட்டார்கள்!
காங்கிரஸ் அரசிடமிருந்து யார் யாரெல்லாம் தள்ளுபடிகளையும் , சலுகைகளைப் பெற்றார்களோ அவர்கள்தான் இந்த தேர்தலில் மோடியை முன்னிலைப் படுத்தியவர்கள். 10 ஆண்டுகள் காங்கிரசை வைத்து அவர்கள் ஆடிய ஆட்டம்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அத்துனை ஊழல்களுக்கும் முழுமுதற்காரணம். ஆனால் மக்களால் காங்கிரஸ் தூக்கி எறியப் படலாம் என்று அனுமானித்தவர்கள் மோடியை வைத்து அடுத்துவரும் ஆட்சியில் விளையாடத் தயாராகி விட்டனர்.
இந்த கூத்து தெரியாமல் சாமானிய இந்தியன் கரியை தன் விரலில் மட்டுமல்ல முகத்திலும் பூசிக்கொண்டான். பாவம் இந்தியன் !! நானும் தான்!! (ந. கிருஷ்ணன்).

@ஒவ்வொரு ஊரிலும் ஆங்காங்குள்ள பெரிய குற்றவாளிகளை நாம் தலைவர்களாக்கி இருக்கின்றோம். அங்கு அவர்கள் விஷமம் (சதி) செய்து கொண்டிருப்பார்கள். 

Sunday, May 11, 2014

ரசிகர்களை நன்கு அறிந்த ரஜினி கலைஞர்!!


என்னை பொறுத்தவரை கலைஞர் அவர்களுக்கும், ரஜினிகாந்த் அவர்களுக்கும் அதிக வித்தியாசமில்லை.

* இருவருமே அவர்களின் ரசிகர்களின்/தொண்டர்களின் பலத்தை தன் குடும்ப வளர்ச்சிக்காக மட்டுமே பயன் படுத்துபவர்கள்.

* இருவருமே "நீங்கதான் எனக்கு எல்லாமே" என்று தமிழர்களை ஏமாற்ற தெரிந்தவர்கள்.

* இருவருமே யாருக்குமே வழி விடாமல் இன்னும் பதினாறு வயசு என கற்பனையிலேயே இருப்பவர்கள்.

* இருவருமே "இதுதான் எனக்கு கடைசி (படம்/தேர்தல்) என்று எப்போது தேர்தல்/படம் வந்தாலும் சொல்பவர்கள்.

* இருவருமே வியாபார யுக்தி தெரிந்தவர்கள்.

* இருவருமே தக்க சமயத்தில் ஒதுங்கி பாதுகாப்பான இடத்திற்கு நகர்ந்து விடுபவர்கள்...

* இருவருமே அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடி வாழ்க்கையை தொடங்கி இன்று கோடிகளில் புரள்பவர்கள்.

* இருவருமே எத்தனை ஆதாரங்கள் காட்டினாலும் சொன்னாலும் "என் தலைவன் தான் சிறந்தவன்" என்று மூச்சை பிடித்து பேசும் செம்மேறி ஆட்டுகூட்டத்தை சேர்க்க தெரிந்தவர்கள்.More info plz visit: 

http://dinaex.blogspot.com/2013/05/blog-post_18.html?m=0

Sunday, May 4, 2014

முதல் உண்மை செய்தி வெளி வருகிறது!?

உண்மையிலேயே ஒன்றும் புரியலே! எல்லா மீடியாக் காரனும் காவல் துறை விசாரணையை தொடங்கு முன்னே அவனவன் இஷ்டத்திற்கு பேசுறான். பாகிஸ்தான் சதி. ஜாகிர் ஹுஷைன் பங்கு என்று. இதிலே வேறே ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் எல்லா ஊடகங்களிலும் வந்து வழக்கம் போல முஸ்லிம்கள் மேலே பழியை போடுறாங்க!. என்னையா நடக்குது இங்கே!.கைது செய்யப்பட்டுள்ள ஜாகிர் ஹுசைனுக்கும் சென்னை ரயில் குண்டு வெடிப்புக்கும் தொடர்பில்லை. 

முதல் உண்மை செய்தி வெளி வருகிறது: ரயிலில் இருந்து வேகமாக இறங்கி ஓடிய ஒருவர் மீது இப்போது சந்தேகம் திரும்பியுள்ளது.அவர் தான் குற்றவாளி என்று கூற முடியாது. அவரது நடவடிக்கை சந்தேகத்தை கிளப்பியது. அவர் விசாரணைக்கு ஒத்துழைத்தால் நல்லது. இதுவரை குண்டு வெடிப்புக்கான காரணம் தெரியவில்லை. CBCID IG மகேஷ்..செய்தியாளர்களிடம் பேட்டி.
இந்தியாவில் குண்டு வெடிக்குது என்றால் பிடிபடுகிறவன் முஸ்லிமாக இருந்தால் மட்டும் போதும் வேறு எந்த ஆதராமும் தேவையில்லை காவல் துறைக்கு அவனை குற்றவாளி என்று நிருபனவாகும் முன் இஸ்லாமிய தீவிரவாதம் சொல்லிவிடும் வந்தேறி ஊடகங்கள். 

ஊடகங்களே! உங்களின் இந்த போக்கினை இனியாவது மாற்றிக் கொள்ளுங்கள். இல்லையெனில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்திற்கு பகையாளி ஆவீர்கள்.

துரோகிகளே! இனி மக்களை இலகுவாக ஏமாற்றிவிடலாம் என்கிற போக்கு இனியும் முடியாது. .நீளமான தாடி வைத்திருப்பவர்களையும், தொப்பி அணிந்த எல்லோரையும் சந்தேகிப்பது என்பது, நெத்தியில் பட்டையும், கழுத்தில் திருநீறு கொட்டையும், காவியும் அணிந்து கொண்டிருக்கும் எல்லோரையும் சந்தேகிப்பதற்கு சமம்.

எங்கே குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும், இந்திய முஹாஜிதீன்கள் என்ற ஒரு போலி முகவரி உளவுதுறைக்கும், விபச்சார பத்திரிக்கையும் எப்படி கிடைக்கிறது? எந்த வித விசாரணைய்யையும் தொடங்காமல் இந்திய முஹாஜிதீன்கள் என்ற ஒரு பொய் அமைப்பின் மீது இவர்கள் பழி போட காரணம் என்ன?

இவை அனைத்துக்கும் காரணம், இந்த இந்திய முஹாஜிதீன்கள் என்பது இந்திய உளவுத்துறையால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை பாத்திரம். உண்மையில் அது ஆஸ் எஸ் எஸ் அமைப்பே இந்திய முஹாஜிதீன் என்பது. உளவுத்துறையில் காவிகளின் கைங்காரியம் என்பதை இதிலிருந்து நாம் விளங்கிக்கொல்லாம்.
இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!