Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, March 30, 2014

குஜராத்தை கொடுத்தற்கே இவ்வளவு!?

கேரளாவைச் சேர்ந்த பெண் சாமியார் அமிர்தானந்தமாயிக்கும் அவரது சீடர்களுக்கும் இடையேயான பாலியல் தொடர்பு குறித்து அவரது அந்தரங்க செயலாளராகப் பணியாற்றிய 'கெயில் ட்ரெட்வெல்' என்பவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

கேரளாவின் கைரேலி பீப்பிள் என்ற தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "அமிர்தானந்தமயி முக்கிய சீடர்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதை நான் நேரில் கண்டுள்ளேன். என்னை மடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தவர் பாலு என்ற அமிர்தசுரபானந்தா சுவாமி ஆவார். அமிர்தானந்தாமயி உடன் தவறான உறவை இவர் வைத்துள்ளார்.

பின்னர் நான் மடத்தை விட்டு வெளியேறியபோது மடத்தின் நிர்வாகிகள் என்னை பின் தொடர்ந்தனர். ஆஸ்திரேலியாவில் எனக்கு சொந்தமாக 15 ஆயிரம் டாலர் செலவில் ஆசிரமம் கட்டி தருவதாக அமிர்தானந்தாமயி-யின் மடம் வாக்குறுதி அளித்தது. மடத்திற்கு எதிராக நான் வழக்கு தொடருவேன்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கெயில் ட்ரெட்வெல் தான் எழுதிய 'ஹோலி ஹெல்’என்ற நூலில் அமிர்தானந்தமாயி குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடியின் ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள்.

மகளிர் தினத்தில் இதை ஏன் பதிவிடுகிறேன் என்றால் மோடியிடம் குஜராத்தை கொடுத்தற்கே இவ்வளவு கொடுமை மகளிர்க்கு இழைக்கப்படுகிறது என்றால் நாட்டை கொடுத்தால் எப்படியிருக்கும் என்று மகளீரே தாங்கள் யோசிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.

கேரள பெண் செக்ஸ் சாமியார் சீடர்களுக்கிடையே உள்ள பாலியல் தொடர்பு அம்பலமாகி உள்ள நிலையில் இந்த குஜராத் கேடி தன்னை பிரமச்சாரி என்று சொல்லி கொள்ளும் இந்த மதம் பிடித்தவன்  (மோடி) இப்படிபட்ட அசிங்கங்களுடன் உட்கார்ந்து இருப்பதும் எவ்வளவு கேவலத்திலும் கேவலம், சிந்திப்பீர் நாட்டை கொடுத்தால் என்னாகும் என்று?.


Sunday, March 23, 2014

ரசத்தின் ரகசியம் இதுதாங்கே!?

பலருக்கு சமையல் என்றாலே அலர்ஜிதான் போங்க  ரசத்தின் ரகசியம் இதுதாங்கே. நம் இன்றைய வாழ்வில் உடலுக்கு நன்மை தராத எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளையும், கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவையும் தான் அதிகமாக எடுத்துக் கொண்டு வருகிறோம். அப்படிப்பட்ட சூழலில் வாரத்தில் ஒரு நாளாவது இதுபோன்ற மருத்துவ குணமுள்ள உணவை எடுத்துக் கொண்டால் நல்லது. இது ஒரு மருத்துவ குணமுள்ள ரசம். ஜலதோஷம், தொண்டை கரகரப்பு, உடல்வலி, அஜீரணம் இவற்றால் அவதிப்படுபவர்கள் இந்த ரசத்தை சாப்பிடலாம். மற்றவர்களும் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். 


கண்டந்திப்பிலி ரசம்: தேவையானப் பொருட்கள், கண்டந்திப்பிலி – ஒரு மேசைக்கரண்டி, தக்காளி – ஒன்று, கொத்தமல்லி – ஒரு கொத்து, வேக வைத்த பருப்பு – கால் கப், புளி தண்ணீர் – அரை கப், உப்பு – ஒன்றரை தேக்கரண்டி, மிளகு, சீரகப் பொடி – ஒரு தேக்கரண்டி, மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி, நெய் – 2 தேக்கரண்டி, எண்ணெய் – ஒரு தேக்கரண்டி.

தக்காளியை கழுவி விட்டு நீளவாக்கில் நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 

கொத்தமல்லியை ஆய்ந்து கழுவி எடுத்துக் கொள்ளவும். 

கண்டந்திப்பிலியை பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு எண்ணெய் சட்டியில் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை ஊற்றி, அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டங்களைப் போட்டு கரண்டியை வைத்து நன்கு மசித்து விடவும்.

அதனுடன் மிளகு, சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் ஒன்றரை தேக்கரண்டி கண்டந்திப்பிலிப் பொடி போட்டு 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.

ரசம் ஒரு கொதி வந்ததும் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பை அதனுடன் சேர்த்து கலக்கி விட்டு 3 நிமிடம் கொதிக்க விடவும். பருப்பு சேர்ப்பதால் ரசம் நன்கு சுவையாக இருக்கும். ரசம் 3 நிமிடம் நன்கு கொதித்து நுரைத்து வரும் போது மேலே கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

பிறகு இரும்பு குழிக்கரண்டி அல்லது சிறிய வாணலியில் 2 தேக்கரண்டி நெய் அல்லது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடவும்.

கடுகு வெடித்ததும் மீதம் உள்ள கண்டந்திப்பிலி பொடியை போட்டு தாளித்து அதை ரசத்தில் ஊற்றி அதே கரண்டியை வைத்து ரசத்தை கலக்கி விடவும்.

இப்போது சுவையான கண்டந்திப்பிலி ரசம் தயார். உடல் அலுப்பினை போக்குவதற்கு இந்த கண்டந்திப்பிலி ரசம் கைகண்ட மருந்து.

Sunday, March 16, 2014

ஸ்ட்ரிக்ட்லி ஓவர் 18 ப்ளீஸ்!?

(எச்சரிக்கை: பதினெட்டு வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் படிக்கவும்...!) ஒன்லி 18 ப்ளீஸ்.

"புத்தாண்டு" வந்த புராணக்கதை...!

நாரதருக்கு ஒருமுறை விரகதாபம் அதிகமாகிவிட்டது. கிருஷ்ணனிடம்" நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் உல்லாசமாக இருக்கிறீர்களே… எனக்கு ஒரே ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டார். 

அதற்கு கிருஷ்ணன், "நான் உடன் இல்லாமல் வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள்” என்றார்.

உடனே நாரதர், அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியவில்லை. 

கிருஸ்ணனரின் ஆண்மைத் திறத்தை (!)க் கண்டு அவர் மீதே மோகம் கொண்டார் நாரதர். இதை கிருஸ்ண்ணிரடமும் சொன்னார்.

அதற்கு கிருஸ்ணர், “யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய். பிறகு என்னிடம் வா" எனச் சொல்ல, நாரதரும் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார்.

அதன் பின், கிருஷ்ணரும் நாரதரும் அறுபது வருடங்கள் கூடி வாழ்ந்தனர். அவர்களுக் , அறுபது பிள்ளைகள் பிறந்தன. அவர்கள்தான் பிரபவ தொடங்கி அட்சய முடிய உள்ள அறுபது வருடங்கள்! (ஆதாரம்: அபிதான சிந்தாமணி - 1392ஆம் பக்கம்).


விஷயம் என்னவென்றால் பார்ப்பண பயங்கரவாதிகளால் உருவாக்கப்பட்டதுதான் இந்(து)த மதம் ஆணோடு ஆண புணர்வது, பெண்ணுடன் பெண் புணர்வு. இதைதான் கோயிலில் சிற்பமாக காண சகிக்காத அசிங்கங்களை அரங்கேற்றி இருக்கிறார்கள் பார்ப்பன பயங்கரவாதிகள். இப்பதிவு யார் மனதையும் புண் படுத்துவதற்கு அல்ல புரிய வைப்பதற்கு.

Sunday, March 9, 2014

வாழ்க்கை ஒரு வட்டம்!?

ஒரு ஊரில் ஒரு குயவன் அவன் தாய், மனைவி, மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தான். குயவனின் மனைவிக்கு அவளது மாமியாரைப் பிடிக்கவில்லை.

அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பத் துணிந்தாள். குயவனை தினமும் நச்சரித்தாள்.

அவனது அம்மாவை பக்கத்தில் ஒரு வீட்டில் குடியமர்த்தும் படி சொன்னாள்.

வெகு நாட்கள் குயவன் அவள் சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்தான்.

மனைவி விடாமல் நச்சரித்தாள். அவனது அம்மாவிற்குத் தனியாக இருந்தால் ஒரு குறையும் வராது என்றும், அவரது சாப்பாட்டுத் தேவையைத் தான் கவனித்துக் கொள்வதாகவும் சொன்னாள். ஒரு நாள் குடியானவனுக்கு நச்சரிப்புத் தாங்க முடியவில்லை.

அம்மாவைப் இருபது அடி தள்ளியிருந்த ஒரு வீட்டில் குடியமர்த்தினான்.

மனைவி மாமியாரிடம் குயவன் செய்த தட்டு ஒன்றைக் கொடுத்து, வேளாவேளைக்குத் தன் வீட்டுக்குத் தட்டை எடுத்து வந்தால் அதில் உணவு நிரப்பித் தருவதாகவும், அதை மாமியார் அவர் வீட்டுக்கு எடுத்துச் சென்று மகிழ்ச்சியாகச் சாப்பிடலாம் என்றும் கூறினாள்.

மாமியாருக்கு இது அவமானமாகத் தோன்றினாலும், தன் மகனுக்காக வாயைத் திறக்காமல் மருமகள் சொன்ன வழியில் வாழ்ந்து வந்தாள்.

பேரனுக்குப் பாட்டி வீட்டை விட்டுப் போனது அறவே பிடிக்கவில்லை. அவன் அம்மாவுக்குத் தெரியாமல் சில சமயம் பாட்டி வீட்டிற்குச் சென்று விளையாடுவான்.

அவன் வளர வளர குயவன் மண்பாண்டம் செய்வதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். சில சமயம் குயவன் வேலை செய்யாத mபோது அவனது இயந்திரத்தை மகன் இயக்கிப் பார்க்க ஆரம்பித்தான். ஒரு நாள் மகனுக்கு அப்பாவைப் போலவே மண்பாண்டம் செய்ய வந்தது. மிகச் சிறு வயதிலேயே அவன் அப்பாவின் தொழிலைக் கற்றுக் கொண்டான்.

அவன் முதல் முதலில் தன் அம்மாவுக்கு அருமையான தட்டு ஒன்றைச் செய்தான். அதை அவன்அம்மாவிடம் கொடுத்த போது அவள் மகனின் திறமையை நினத்து பெருமைப் பட்டாள். தனக்கு அவன் முதலில் பொருள் செய்து கொடுத்ததை எண்ணி அளவில்லா மகிழ்ச்சி அடைந்தாள்.

தனது சிறிய மகனை இவ்வாறு கேட்டாள்: "மகனே! நீ செய்த தட்டு மிக அருமை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது .

எத்தனையோ பாண்டங்கள் இருக்கும் போது ஏன் எனக்கு ஒரு தட்டைச் செய்து தர வேண்டும் என்று உனக்குத்,தோன்றியது?" மகன் குழந்தைத் தனமாகச் சொன்னான்:

"அம்மா! ஒரு நாள் நான் அப்பாவைப் போலக் கல்யாணம் செய்து கொள்வேன். அப்போது நீ பாட்டியைப் போல பக்கத்து வீட்டுக்குப் போய் விடுவாய் அல்லவா. அப்போது உனக்கு என் மனைவி தினமும் சாப்பாடு கொடுக்க ஒரு தட்டு வேண்டுமல்லவா! அதைத்தான் உனக்கு நான் இப்போது செய்து கொடுத்தேன்"  


@ வாழ்க்கை ஒரு வட்டம்! இன்று நீ பிறறுக்கு செய்வதை நாளை பிறர் உனக்கு செய்வர்.

Sunday, March 2, 2014

இதயம் வலிமை பெறும் இதழ் !!

செம்பரத்தம் பூ: இந்தப்பூவில் 5 பூவின் இதழ்களை 200 மில்லி நீரில் விட்டுக் கஷாயமாக்கி சர்க்கரை கூட்டி 2 வேளை 5 நாட்கள் பருகி வர இதயம் வலிமை பெறும்.

தும்பைப்பூ: இம்மலரை கஷாயம் வைத்துப் பருகுவதால் காய்ச்சல் நீங்குவதோடு தொண்டைக்கட்டும் இளகும். இம்மலரை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வாரம் ஒரு முறை தலைமுழுகி வர ஜலதோஷம் சீதள சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்.

மாதுளம் பூ: உலர்ந்த பூவை இடித்துத் தூள் செய்து வேளைக்கு 10 கிராம் தயிரில் போட்டு கலக்கி தினம் 2 வேளை பருகி வர இரத்தபேதி, சீதபேதி நீங்கி சிறுகுடலுக்குப் பலத்தைக் கொடுக்கும். பெண்களின் கருப்பை சுத்தம் அடையும்.

மருதோன்றி பூ: உறக்கம் வராமல் தவிப்பவர்கள் இந்த மலரை தலையணைக்குப் பக்கத்தில் வைத்து உறங்கச் செல்ல 10 நிமிடத்தில் உறக்கம் வரும்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!