Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, January 30, 2014

பலவித மருத்துவ குணங்கள் உள்ள கிராம்பு!!

கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

1) கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.

2) உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

3) ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

4) கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.


5) நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

6) சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

7) கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

8) முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

9) கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

10) 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

11) தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

12) கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

13) கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

14) சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.

Sunday, January 26, 2014

குப்பை தொட்டியாகும் இந்தியா !?

ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் வசிக்கும் நண்பர் ஒருவர், சமீபத்தில் சென்னை வந்து இருந்தார். பெங்களூரு அவரது சொந்த ஊர். ஜெர்மனியில் குடியேறி 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அங்கு, "பென்ஸ்' மோட்டார் தொழிற்சாலையில், "பிட்டர்' ஆக வேலை செய்கிறார். உடைந்த தமிழில் பேசுவார்.

பிட்டராக இருந்தாலும் விபவரமானவர்; பல சப்ஜெக்ட்களிலும் ஞானம் உள்ளவர். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, பலஅரிய தகவல்கள் கிடைத்தன.

அது தம்பி... இப்போது இந்தியாவுலே பென்ஸ் கார் 45 லட்ச ரூபாய்க்கு கூட கிடைக்குது. ஆஹா ஜெர்மன் நாட்டு கார்ன்னு பணக்காரங்களும், பெரிய தொழில் அதிபர்களும் போட்டி போட்டுக்கிட்டு வாங்கறாங்க. இந்தக் கார்ல இருக்கிற பல முக்கியமான பாகங்கள், கியர் பாக்ஸ் உட்பட, இந்தியாவுலே, "டாட்டா' கம்பெனியிலே செஞ்சு, ஜெர்மனிக்கு வருது. நாங்க, அதை அங்கே பூட்டி, பல நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம்!.

இதுக்கு காரணம் என்ன தெரியுமா? ஜெர்மனியிலே அந்த பாகங்களை உற்பத்தி செய்ய ஆகும் செலவில் கால்வாசி செலவு தான் ஆகிறது இந்தியாவில். நாங்கள், எங்களுக்குத் தேவையான டிசைன் மற்றும் மூலப் பொருட்களைக் கொடுத்து விடுகிறோம்... இங்கே லேபர், "சீப்!' அது ஜெர்மானியர்களுக்கு பெரிய, "அட்வான்டேஜ்' ஆகிப் போகிறது.

இந்தியாவில் லேபர் எவ்வளவு, "சீப்' என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் கேட்டுக்க தம்பி...' என்றவர், தம் சட்டைப் பையில் இருந்து, ஒரு காகிதத்தை எடுத்துப் படித்துக் காட்டினார்.

ஒரு ஜெர்மன் தொழிலாளிக்கு குடுக்கற சம்பளத்திலே இரண்டு அமெரிக்க தொழிலாளியை வேலைக்கு அமர்த்தலாம்... இல்லே, தைவான் நாட்டுத் தொழிலாளி ஐந்து பேரையோ, பிரேசில் நாட்டு தொழிலாளி எட்டுப் பேரையோ வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும். ஆனா, இந்தியாவின் கதையோ அபாரம்... ஒரு ஜெர்மன் தொழிலாளியின் சம்பளத்தில் 128 இந்திய தொழிலாளிகளை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம்ன்னா பாரேன்.

இந்திய தொழிலாளியின் குறைந்தபட்ச சம்பளம் மணிக்கு 25 ரூபாய்ன்னா, ஜெர்மன் தொழிலாளியின் சம்பளம் மணிக்கு 1,150 ரூபாய்! அப்புறம் ஏன் ஜெர்மன் தொழில் அதிபர்கள், புதிய பொருளாதாரக் கொள்கை வந்த பின்னே இங்கே மூலதனத்தைக் கொட்டத் தயங்கப் போறாங்க.

கடந்த, 20 ஆண்டுகளில், இந்தியாவில் பல தொழில்களில் முதலீடுகளை செய்துள்ளனர் ஜெர்மானியர்கள்... ஆனால், இதில் சோகமான விஷயம் என்னவென்றால், சுற்றுப்புறச் சூழ்நிலைக்கும், உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடிய பாதுகாப்பு அம்சங்கள் குறைந்த, ஜெர்மன் சட்டப்படி அங்கு தடை செய்யப்பட்ட தொழில்கள் தான் இங்கு வந்துள்ளன,' என்றார் அந்த நண்பர்.

புதிய பொருளாதாரக் கொள்கையின் மூலம் வெளிநாட்டு மூலதனத்தை இங்கே குவிப்பதை மட்டுமே அரசு கருத்தில் கொள்ளாமல், நம்நாடு குப்பைத் தொட்டிகளின் சங்கமமாகாமல் பார்த்துக் கொள்வதும் மிக, மிக அவசர அவசியம். 

Tuesday, January 21, 2014

'வைபை'க்கு டாட்டா காட்ட வருகிறது!

இனி இன்டர்நெட் பயன்படுத்த 'வைபை' வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். ஒரு பல்பை போட்டால் 'லைபை' வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். 

பல காலமாக குழந்தைகளுக்கு டிஜிட்டல் பொம்மை முதல் வீடியோ கேம் வரை, பல்பு முதல் பட்டாசு வரை எல்லாவற்றையும் மலிவு விலையில் அள்ளிக்குவிக்கும் சீனா தான் இப்போது இந்த 'பல்ப்' மூலம் இன்டர்நெட் வசதியையும் கண்டுபிடித்துள்ளது.

ஒரு வாட் பல்பை வாங்கி எரிய விட்டால் போதும், அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு உயிர் வந்துவிடும். லைட்டை ஆப் செய்து விட்டால் இன்டர்நெட்டுக்கான 'லைபை' போய் விடும். ஒரு பல்பு எரியவிட்டால் நான்கு கம்ப்யூட்டர் வரைக்கும் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.

விநாடிக்கு 150 மெகாபைட் வேகம் கொண்டதான இந்த ”லைபை” குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. வர்த்தக ரீதியாக பயன்படுத்த முழு அளவில் தயாரிக்கப்படும் என்று இதை கண்டுபிடித்த ஷாங்காய் பல்கலைக்கழக பேராசிரியர் சிநான் கூறினார். லெட் வகை பல்பில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் அலைக்கற்றைகள் எழுப்பப்பட்டு, இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படுகிறது. சீனாவில் ஷாங்காயில் கடந்த நவம்பர் 5 ம் தேதி  சர்வதேச கண்காட்சியில் இந்த 'லைபை' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வழக்கமான "வைபை' வசதி, ரேடியோ அலைகளை கொண்டு ஏற்படுத்தப்படுகிறது. அதன் மூலம் இன்டர்நெட் உயிர்பெறுகிறது. ஆனால், இந்த ஒரு வாட் பல்பை வைத்து சீனா, இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளது. மலிவு விலை பொருட்களை கண்டுபிடித்து உலக நாடுகளில் சந்தையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ள சீனா வின் 'லைபை' கண்டுபிடிப்பால் தொழில்நுட்ப புரட்சி ஏற்படும் என்று தெரிகிறது.

சீனாவில் மட்டும் 60 கோடி பேர் இன்டர்நெட் வசதி வைத்துள்ளனர். அவர்கள் எல்லாம் 'வைபை'யில் இருந்து தங்கள் சொந்த நாட்டு கண்டுபிடிப்பான 'லைபை'க்கு மாறி விடுவர். மேலும், உலக நாடுகளில் பலவும் இந்த வசதிக்கு மாறினால், 'வைபை'க்கு டாட்டா காட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று கணக்கு போடுகிறது சீனா.

Wednesday, January 15, 2014

அழிவின் அடையாள தமிழக அரசு!?

குடிநீரை அரசு விற்பது என்பது சரிவின் துவக்கம். மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவது அரசின் கடமை. அதற்கு வழியில்லை என்று அரசே ஒத்துக்கொள்வதுதான் மலிவுவிலை குடிநீர் வழங்கும் முடிவு. 

தனியார் கம்பெனிகளுடன் போட்டிபோட்டு நான் குறைந்த விலையில் தண்ணீர் தருகிறேன் என்று அரசு கூறுவது அழிவின் அடையாளம். 

மத்திய அரசின் தேசிய நீர்க்கொள்கையின் வரைவை வாசித்துப் பார்த்தால் ஏற்படும் அதிர்ச்சி சொல்லிமாளாது. நீரை தனியார்மயமாக்குவதை எதிர்க்கும் நாம் நீரை விற்பனைப் பண்டமாக்க அரசே முயல்வதை அதைவிட இருமடங்கு எதிர்க்க வேண்டும். மக்களை இப்படிப் பழக்கப்படுத்திவிட்டால், நீர் அரசியலை எளிதாகச் செய்யலாம் என்பது அரசுகளின் திட்டம். அதற்கு நாம் இரையாகிவிடக் கூடாது.  

மக்களின் நுகர்வு மனநிலையை குறிவைத்து நடக்கும் இந்த வியாபாரத்தை செய்வது அரசுக்கு அழகல்ல. தந்திரத்தின் ஒரு பகுதியே இது. குடிநீர், மருத்துவம், கல்வி இவற்றை இலவசமாக அளிக்க முடியாத ஓர் அரசு கையாலாகாத அரசு.

ஆனால்., நம் ஊரில் இம்மூன்றுமே தான் முக்கியமான வியாபாரம். இன்னும் என்னவெல்லாம் மலிவு விலையில் கிடைக்கப்போகிறதோ? இலவசமாய் தரவேண்டியவற்றை காசு கொடுத்துவாங்க வைப்பதும், காசு கொடுத்து வாங்கவேண்டியவற்றை இலவசமாய் வாங்க வைப்பதுமான அரசு தான் நமக்கு வாய்த்திருக்கிறது.

பாசிசத்தின் காரிருள் இந்நாட்டின் ஆட்சி, அதிகார, நீதி, ஊடக துறைகளையெல்லாம் சூறையாடி வரும் வேளை..!?

Friday, January 10, 2014

பிஞ்சுக்கு உள்ள அக்கறை நமக்கில்லையே!?

நாட்டு நலனில் இந்த நாலாங் கிளாஸ் படிக்கும் பிஞ்சுக்கு உள்ள அக்கறை நமக்கில்லையே!

பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி, மதுவிலிருந்து மீண்ட தந்தையுடன் சேர்ந்து மதுரை கலெக்டர் அலுவலகம் எதிரே உண்ணாவிரதம் இருக்கும் நாளாம் வகுப்பு சிறுமி ஜோதிமணி.

தமிழக அரசே! இந்த பிஞ்சுவின் குரலை செவிமடுப்பாயா? அல்லது சிறார்கள் சிறையில் தள்ளுவாயா?.


மதுவுக்கு எதிரான போராட்டம்; சகோதரி நந்தினி திருச்சி மகளிர் சிறையிலும், அவரது தந்தை மதுரை மத்திய சிறையிலும் அடைப்பு!

மெல்லக் கொல்லும் மது அரக்கனுக்கு எதிராக போராடியது ஜனநாயக நாட்டில் குற்றமா? கொடுமையா?, தமிழக அரசே!?.

Sunday, January 5, 2014

பாலுணர்வை தூண்டக்கூடிய சாக்கலேட்!!

பாலுறவையும், பாலுறவு உணர்ச்சிகளையும் தூண்டக்கூடிய சாக்கலேட், ஸ்டிராபெர்ரி, பல்வேறு வகையான மூலிகைப் பொருட்களுடன் தற்போது நம்பமுடியாத வகையில் இணைந்திருப்பது கழுதைகளின் தோலில் இருந்து தயாரிக்கப்படும் மாத்திரைகள்.

ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம். நம்பித்தான் ஆக வேண்டும்.

சீனாவில் பாரம்பரிய மருந்துகளைத் தயாரிப்பதற்கு கழுதைகளின் தோலை பதப்படுத்தி அதில் இருந்து எடுக்கப்படும் பொருள் பயன்படுத்தப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

இந்த மருந்தானது, பெண்களின் பாலுணர்வைத் தூண்டுவதாகத் தெரிய வந்துள்ளது. தற்போது ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு மருந்து நிறுவனம் ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் கழுதை தோல்களை பாரம்பரிய மருந்துகளை தயாரிப்பதற்காக பயன்படுத்தி வருகிறது.

தென் அமெரிக்காவில் நீண்டகாலமாக கழுதை தோலில் இருந்து மருத்து தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவிலும் இந்த தயாரிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

சிட்னியைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் ஜான் பிளெமிங், வெளிநாடுகளில் கழுதைகளை விற்பனை செய்வதற்காக கழுதை வேட்டையை விரும்புவதாகக் கூறியுள்ளார்.

மருந்து நிறுவனங்களுக்கு கழுதையின் தோல் தேவைப்படுவதாகவும், அதில் இருந்து வடிகட்டுதல் மூலம் பெறப்படும் ஒருவகைப் பொருளைக் கொண்டு பாரம்பரிய மருந்துகளை அந்நிறுவனங்கள் தயாரிப்பதாகவும் தெரிகிறது.

ழுதை தோலில் இருந்து எடுக்கப்படும் பொருள் `எஜியாவோ' என்றழைக்கப்படுகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் `நு பாவ்' என்ற மருந்து பெண்களின் பாலுறவு உந்துதலைத் தூண்டுவதுடன், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியைப் போக்க உதவுவதாகவும் தெரிய வந்துள்ளது. கழுதை தோல் ஒன்று (பதப்படுத்தப்பட்டது) 30 அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.


Wednesday, January 1, 2014

இரட்டை முக துர்கா நாக்பாலின்!?

உத்தர பிரதேச அரசால் பணி இடை நீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் பெண் அதிகாரி துர்கா நாக்பாலினை மணல் கொள்ளையர்களுக்கு எதிராக போராடிய வீரநாயகியாக ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் மற்றும் பலரும் வீரபரிவேசம் கெட்டும் போது காதல் பூர்கிராமவாசிகளுக்கு துர்காவை பற்றி சொல்ல விரும்புவது வேறொன்றாக இருக்கிறது.

70 சதவிகிதம் இசுலாமிய மக்கள் தொகை கொண்ட காதல்பூர் கிராமத்தில் இசுலாமிய வணக்கத்தலத்தை இடித்து தகர்க்க ஜூலை 27ம் தேதி தலைமை தாங்கியது துர்கா நாக்பால் என்று கிராமத்தார்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

டெல்லியோடு சேர்ந்த கிரேட்டர் நோய்டாவில் கெளதம்பூத் நகரில் அமைந்திருக்கிறது உலகளவில் சர்சை செய்யப்பட்ட விவாதத்தின் மைய பகுதியான காதல்பூர் கிராமம்.

காதல்பூருக்கு வருகை தந்த ஜமாத்தே இசுலாமிய செயலாளர்களான முஹம்மது அஹ்மது, எஞ்சினியர் முஹம்மது சலீம் ஆகியோரோடு கிராம மக்கள் நடந்த சம்பவங்களை தெளிவு படுத்தினார்கள்.

சப்- டிவிசன் மாஜிஸ்டிரேட் என்ற நிலையில் எச்சரிக்கை அறிக்கை கூட அளிக்காமல்சம்பந்தபட்ட அரசு அதிகாரிகளிடம் அணுமதி வாங்கவில்லை என்ற காரணம் கூறி பள்ளி வாசலின் சுற்று சுவர்களையும் மேல் தளத்தையும் துர்காவின் உத்தரவிற்கிணங்க இடிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனாலும் பள்ளிவாசல் கட்ட கிராம பஞ்சாயத்தின் அணுமதி வாங்கப்பட்டு இருக்கிறது என்று கிராம தலைவி அப்ரோஸ்வின் கணவர் முஹம்மது செரீப் தெரிவித்தார்.துர்காவின் நடவடிக்கைகள் எங்களை திடுக்கிட செய்தது என்றும் செரீப் தெரிவித்தார்.

காதல் பூரில் கட்டுமாண பணியில் இருக்கும் பள்ளிவாசல் அணுமதி வாங்காமல் கட்டப்பட்டு வருகிறது என்றும் பள்ளிவாசல் இடிக்கப்பட நேரலாம் என்றும் துர்கா முன்னரே அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து பள்ளி வாசலை சட்டப்படி பதிவு செய்து கொள்ள சிறிது கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அதுவரை நாங்கள் கட்டுமாண பணிகளை மேற்கொள்ள மாட்டோம் என்றும் கிராம மக்கள் துர்காவிடம் கோரிக்கை மணுவும் அளித்து இருந்தார்கள்.

பள்ளிவாசல் கட்ட முன் அணுமதி வாங்க வேண்டும் என்ற சட்ட அறிவு இல்லாத கிராம மக்கள் சட்டப்படி அணுமதி வாங்கும் வரை கட்டுமாண பணிகளை மேற்கொள்ள மாட்டோம் என்றும் துர்காவிடம் சம்பவ சமயத்தில் உறுதியும் அளித்து இருந்தார்கள்.

ஆனால் இதனை ஒன்றும் காதில் வாங்கி கொள்ளாமல் ஐ.ஏ.எஸ் அதிகாரி ..!? துர்கா பள்ளிவாசலை இடிக்க உத்திரவிட்டு இருக்கிறார்.

பள்ளிவாசலின் சுற்று சுவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவையாகும்.இரண்டு மாதங்களாக பள்ளிவாசலின் கட்டுமாண பணிகள் முன்னெடுத்தும் செல்லப்பட்டு வருகின்றன.

பள்ளிவாசல் இடிக்கப்பட்ட சம்பவத்தில் துர்காவிற்கு குற்றமற்றவர் என்ற மாவட்ட நீதிபதியின் அறிக்கையை நாங்கள் ஏற்று கொள்ள போவதில்லை என்று தெரிவிக்கும் கிராம மக்கள்.விசாரனை மேற்கொண்ட மாவட்ட நீதிபதி சம்பவ இடத்தை கூட பார்வையிடாமலும், கிராம மக்களுடன் பிரச்சனை குறித்து ஆராயமலும் ஒரு தலைபட்சமாக தீர்ப்பு வழங்கி இருக்கிறார் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
.
சம்பவ இடத்தை பார்வையிடாமல் விசாரனை அறிக்கையை எங்கனம் வழங்கினார்? என்று கிராம முக்கியஸ்தர் அஹ்மத் கேள்வியை உயர்த்துகிறார்.

மணல் கொள்ளையர்களுக்கு எதிராக நடந்து கொண்டதால் தான் துர்கா தண்டிக்கப்பட்டார் என்பதை கிராம மக்கள் நம்பவில்லை.மாறாக அகம்பாவத்துடன் பள்ளிவாசலை இடித்தற்கான தண்டனையே துர்காவிற்கு கிடைத்திருக்கிறது என்று கிராம மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

மேல் தளம் தகர்ப்பட்ட பள்ளிவாசலில் தற்போது பந்தல் அமைத்து பள்ளிவாசலாகவும் நிலை நிறுத்தி இருக்கிறார்கள் கிராம மக்கள்.

இதனிடையில் வக்பு போர்டு உறுப்பினர் ஒருவர் துர்காவிற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கைவிட்டு இருப்பது, கிராம மக்களை ஆத்திரமடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!

@ இசுலாமியன் என்றால், அதிகார வர்க்கம் அவன் சவத்தையும் தோண்டி எடுத்து குத்தும்!.

கோயபல்சுகளின் ஊடகங்களின் தராதரத்திற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு இத்தகைய ஊடகங்களில் வரும் செய்திகளை நம்புபவர்களை பொய்யான வாழ்க்கையில் திட்டமிட்டு தள்ளுகிறது. தராதரமற்ற ஊடகங்களை மக்கள் புறம் தள்ளாதவரை நாட்டில் அமைதி என்பது கானல் நீரே. 


ஊடகங்கள் சரியான செய்தியை தருகிறதா?ஐ.ஏ.எஸ் அதிகாரி..!? துர்கா நாக்பாலின் இரட்டை முகம்!.

 

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!