Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, December 28, 2013

புதினமான புதினா!?

புதினா வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியவற்றிற்கு உதவுகிறது. புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்க தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும்.

வாய் நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.

தலைவலி வந்தவர்கள் புதினா இலையின் சாற்றை பூசலாம். இளைப்புநோயையும், ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துக ன்றது. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினாக் கீரை குணப்படுத்துகிறது. வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

புதினா இலைகளை காய வைத்து சருகுபோல காய்ந்தபின் அதை எடுத்து, இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை அத்துடன் சேர்த்து உரலில் போட்டு நன்றாக தூளாகும் வரை இடிக்க வேண்டும்.

தூளான பின் எடுத்து, மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதைத் தினசரி உபயோகித்து வந்தால் பற்கள் முத்து போல பிரகாசிக்கும். பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.

Monday, December 23, 2013

இந்தியாவின் மிகப்பெரிய தீவிரவாதி!?

ஒரு மாநில முதல்வரை தீவிரவாதி என்றும் அசிங்க, அனாச்சார அயோக்கியத்தனங்கள் செய்தார் என்று சொல்ல ஒருவருக்கு துனிவுவேண்டும்,  உண்மையை  பேசிய பீகார் மந்திரி. 

இந்தியாவின் மிகப்பெரிய தீவிரவாதி நரேந்திர மோடி:-உண்மையை உடைத்துப்பேசிய பீகார் மந்திரி..! 

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை ஒரு மிகப்பெரிய தீவிரவாதி என்று பீகார் விவசாய மந்திரி நரேந்திர சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இது குறித்து அவர் கூரியதாவது: நாட்டின் மிகப்பெரிய தீவிரவாதி நரேந்திர மோடி, இதனால்தான் அவர் தீவிரவாதிகளிடமிருந்து நாட்டிற்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று பேசிவருவது இயற்கைதான். 

மற்றவர்களைக் கொல்லுகிற ஒருவர் எப்போதும் பயந்தே வழ்கிறார். அதனால், நாம் கொல்லப்படுவோமோ என்ற பயத்தில் எப்போதும் அவர் பாதுகாவலர்களுடனேயே சுற்றி வருகிறார். 

பீகார் பொதுகூட்டத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் பாரதிய ஜனதாவிற்கு தொடர்பு இருக்கிறது. விளம்பரத்திற்காக மோடி அதிகம் பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Thursday, December 19, 2013

பிரச்சினை சிக்கலா! ஓர் தீர்வு!!

காலை எழுந்ததும் சிலபேர் அங்கும் இங்கும் நடப்பார்கள். என்ன தினம் இதே வேலையாகீவிட்டது என்று தனக்கு தானே எரிச்சல் பட்டுக்கொள்வர் அதற்கு இதோ ஓர் தீர்வு. 

தினமும் சாப்பிடக்கூடிய பேரீச்சம்பழத்தில் என்ன பயன் இருக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா?. சாதாரணமா நினைச்சிடாதீங்க பேரீச்சம்பழத்தை. பேரீச்சம்பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி ரத்த விருத்தி செய்யும், எலும்புகளை பலப்படுத்தும், இளைப்பு நோயைக் குணப்படுத்தும் மேலும் இதயநோய் வராமல் தடுக்கும்.

மலச்சிக்கல்:பேரீச்சம் பழம் மலச்சிக்களை போக்கக்கூடிய சிறந்த உணவாகும். மலச்சிக்களால் அவதிபடுபவர்கள் பேரீட்சைபழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர மலச்சிக்கள் பிரச்சனைகள் தீரும். மலச்சிக்களை போக்ககூடிய பேரீட்சைபழத்தை சாப்பிட விரும்பினால் தண்ணீரீல் ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைத்து விட்டு பின்னர் பேரீச்சம் பழத்தை சாப்பிடவேண்டும். ஒரு நாள் ஊற வைத்துவிட்டு சாப்பிடும் போதுதான் பேரீச்சம் பழத்தின் முழுபலனையும் பெறமுடியும். அதிக நார்ச்சத்து கொண்டதால் மலத்தை இளக்கி மலச்சிக்கலை போக்கிடும்.

குடல் நோய்கள்: எண்ணற்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பேரீச்சம்பழம், உடலை சக்தியுடன் வைத்துக்கொள்ள உதவும் சிறந்த உணவாகும். தினமும் பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருபவர்கள் புத்துணர்வுடன் இருப்பதை காணலாம். தொடர்ந்து பேரீச்சம் பழம் உண்பவர்களுக்கு குடல் நோய்கள் மற்றும் இதயம் சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமடையும். வயிறு மற்றும் குடல் சம்பந்தமான அனைத்து நுண் கிருமிகளும் வெளியேறும்.

பெண்களுக்கு: பெண்களுக்கு தேவையான இரத்தத்தை உற்பத்தி செய்திட உதவும். இரத்த சோகையை தவிர்த்திடும். நன்கு பழுத்த உலர்ந்த பழங்களை சுத்தம் செய்து விதை நீக்கி உண்பது நல்லது. பழங்களை பாலில் கொதிக்க வைத்து மசித்து உண்ணலாம். பழங்களை இரண்டாக நறுக்கி தேனில் ஊறப்போட்டு வைத்துக் கொண்டு தினசரி இரவு உண்ணலாம். பிற உணவுகளில் இனிப்பு சுவைக்காக பேரீச்சம் பழங்களை அரைத்து கலந்து உபயோகிக்கலாம். பேரீச்சம்பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வர எடை மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.

சளி மற்றும் இருமல்: பேரீச்சம் பழம் சளி மற்றும் இருமலுக்கான சிறந்த மருந்தாக குழந்தைகளுக்கு பயன்படுகிறது. பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் அதிக பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு எலும்பும் பலப்படும்.

Sunday, December 15, 2013

காணாமல் போக காத்திருக்கும் இந்தியா!?

காஸ்மீர்
இந்தியர்களால் புறக்கணிக்கப்பட்ட மாநிலம்
இந்திய முஸ்லீம்களால் மறக்கடிக்கப்பட்ட மாநிலம்
கோரங்கள் எத்தனை ரகமோ
அத்தனையும் அங்கு சமர்ப்பணம்
அதிகாரம் முழுவதும் அரக்கனின் குணம்
அடக்குமுறையை எதிர்கொள்ளும் வீரர்களின் குளம்
சாதிக்க நினைக்கும் இளைஞர்களின் களம்
காஸ்மீர்

ஓநாய்கள் ஆட்டின் காவல் என்று
கதைகளில் கண்டோம்
காவலர் வேடமிட்ட ஓநாய்ககளை
காஸ்மீரில் கண்டோம்
இந்தியப்படைகள் என்று
இழிவானவர்களை கண்டோம்
அதன் இழிவுதனத்தை
காஸ்மீர் பெண்களின் ஓலத்தில் கண்டோம்

காஸ்மீர்
சிவப்பு ரோஜாக்களை வீதிகளில் கண்டோம்
அவை உருவாக காரணமான
சிவப்பு(ரத்த) ஆற்றை வீதி எங்கும் கண்டோம்
காவிகளின் சதியை
இந்திய காவலனின் வேடத்தில் கண்டோம்
காஸ்மீர்
குழந்தைகளின் வீரத்தை
அந்த காவலர்களின் எதிரே கண்டோம்

மத சார்பற்ற நாடாம்
இந்தியா ஆனால் காஸ்மீரின்
மண்ணில் மட்டும்
ஆண்களை அடக்கமாக்குமாம்
பெண்களை அடிமைகலாக்குமாம்
குழந்தைகளை குழியில் தள்ளுமாம்
அதை கண்டு குமுரியவனை
குழப்பவாதி என்று கூறுமாம்
எங்கே உங்கள் மத சாரர்பற்ற தன்மை
மதம் என்ற போர்வையில் காவிகள்
மட்டுமே வாழ்கிறார்கள்
இந்த திருநாட்டில்
காவல்துறையின் காவலோடு
கருப்படிந்த தேசம்
இந்தியா காணாமல் போகும்
நாள் நெருக்கத்தில்
அதற்காக காத்திருக்கும்
காஸ்மீர் ரோஜா 

Tuesday, December 10, 2013

முடியால் முடியும் மாரடைப்பை கண்டறிய!?

நமது தலை முடியில் உள்ள ஹார்மோனை வைத்து மாரடைப்பு வருமா என்பதை கண்டறிய முடியும் என கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

* தலைமுடியில் ஹார்மோன் கார்டிசால் அதிக அளவில் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் என்று அவர்கள் கூறியுள்ளதாக ஸ்டிரஸ் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. வேலை, குடும்பம் மற்றும் பணப் பிரச்சனைகளால் மாரடைப்பு உள்ளிட்ட இதயநோயகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.


* ஆனால், மாரடைப்பு எப்போது ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. இந்த நிலையில்தான் தலைமுடியில் உள்ள கார்டிசாலின் அடர்த்தியை வைத்து இதை கணிக்க முடியும் என ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

* வழக்கமாக ரத்த நிணநீர், சிறுநீர் மற்றும் உமிழ்நீரில் தான் கார்டிசாலின் அளவு கண்டறியப்பட்டது. இவற்றில் சில மணி நேரத்தில் இருந்து சில நாட்கள் வரை உள்ள கார்டிசாலைத் தான் அளக்க முடியும். 

* இதனால் நீண்ட காலமாக உள்ள அழுத்தத்தைக் கண்டறிய முடியாது. ஆனால் தலைமுடியில் உள்ள கார்டிசாலை வைத்து பல மாதங்களுக்கு முன்பே மாரடைப்பை கணிக்க முடியும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. 

* சாதாரணமாக நமது தலை முடி ஒவ்வொரு மாதமும் 1 செமீ வளர்கிறது. 6 செமீ நீளம் உள்ள முடியை பரிசோதனை செய்வதன் மூலம் நெடுங்காலமாக இருந்து வரும் அழுத்த அளவை அறியலாம்.

* இதுதொடர்பாக இஸ்ரேலில் உள்ள மெய்ர் மெடிகல் சென்டரில் அனுமதிக்கப்பட்ட, மாரடைப்பு ஏற்பட்ட 56 ஆண்களின் முடி மாதிரியையும், இதய நோயாளிகள் அல்லாத 56 ஆண்களின் முடி மாதிரியையும் பரிசோதித்தனர். 

இதில் மாரடைப்பு நோயாளிகளின் முடியில் கார்டிசால் அதிக அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாம்.

Friday, December 6, 2013

நச்சன சொன்ன நாசர்!?


பிரபல திரைப்பட நடிகர் நாசரை கல்லூரி விழா ஒன்றிற்குத் தலைமை தாங்க அழைத்திருந்தார்கள். நாசரும் சென்றிருந்தார். 

அப்போது கல்லூரி மாணவர்கள் பலர் அவரைச் சூழ்ந்துகொண்டு "உங்கள் பெயரில் "ரசிகர் மன்றம்' ஒன்றை நிறுவ விரும்புகிறோம். அதற்கு உங்கள் ஒப்புதல் வேண்டும்'' என்று கேட்டார்கள். எல்லோரின் எதிர்பார்ப்பிற்கும் மாறாக நாசர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை! காரணம்? அவரே சொல்கிறார்:


"இந்த ரசிகர் மன்றங்கள் அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டுபவர்கள் எல்லோரும் அநேகமாக இருபதிலிருந்து 25 வயதுக்குள்பட்ட இளைஞர்கள்தான். இந்தக் காலகட்டம்தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மிக முக்கியமான காலகட்டம். தன் எதிர்கால பிரகாசமான வாழ்வுக்கு அஸ்திவாரக் கல் நட வேண்டிய அருமையான நேரம். இந்தத் தருணத்தில் இன்னொரு மனிதனுக்குக் கொடி பிடிப்பதிலும், பாராட்டு விழா நடத்துவதிலும், போஸ்டர் அடித்து ஒட்டுவதிலும் இளைஞர்கள் தங்கள் பொன்னான நேரத்தைச் செலவழித்துத் தங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொள்வதை என்னால் அனுமதிக்க முடியாது''.

இளைஞர்களுக்கு சரியான நேரத்தில் சரியான புத்திமதி! சரியா!?

Wednesday, December 4, 2013

ந‌ண்ப‌ர்களோ காதல‌ர்களோ எ‌ச்ச‌ரி‌க்கை!?

ந‌ண்ப‌ர்களோ அ‌ல்லது காதல‌ர்களாகவோ இரு‌ந்து‌வி‌‌ட்டு ‌பி‌ரிய நே‌ர்‌ந்தா‌ல் ‌பி‌ரிவு ம‌ட்டு‌ம் துயர‌த்தை அ‌ளி‌ப்ப‌தி‌ல்ல ‌சில நேரஙக‌ளி‌ல் ந‌ண்ப‌ர்களோ அ‌ல்லது காதலரோ கூட துயர‌த்தை ஏற்படுத்தலாம்.

அதாவது, நண்பர்களாக பழகு‌ம் போதுஉங்களுடன் ஒ‌ன்றாக எடு‌த்து‌க் கொ‌ண்ட புகை‌ப்பட‌ங்களை‌க் கா‌ட்டி பெ‌ற்றோ‌ரிடமோ அ‌ல்லது கணவ‌ரிடமோ காண்‌பி‌த்து ‌விடுவே‌ன் எ‌ன்று ‌மிர‌ட்டுவது. காத‌ல் கடித‌ங்க‌ள் அ‌ல்லது வா‌‌‌ழ்‌த்து அ‌ட்டைகளை வை‌த்து‌‌க் கொ‌ண்டு ‌மிரட‌டுவது போ‌ன்றவ‌ற்‌றி‌ல்  ஈடுபடலா‌ம்.

மேலு‌ம் ‌சில‌ கொடூர மன‌ம் படை‌த்த ஆ‌ண்க‌ள், தனது நட்பை துண்டித்துக் கொள்ளும் தனது தோ‌ழி‌யி‌ன் புகை‌ப்பட‌த்தை இணையதள‌த்‌தி‌ல் போ‌ட்டு ‌விலை மாதராக ‌‌சி‌த்த‌ரி‌ப்பது போ‌ன்றவ‌ற்‌றி‌ல் ஈடுபடு‌கிறா‌ர்க‌ள். மேலும் அதில் செ‌ல்பே‌சி எ‌ண்ணையு‌ம் அ‌ளி‌த்து அவ‌ர்களு‌க்கு ‌பிர‌ச்‌சினையை உ‌ண்டு ப‌ண்‌ணி ‌அவர்கள் கஷ்டப்படுவதை பார்த்துசந்தோஷப்படுவார்கள்.

இதனா‌ல் அ‌ந்த பெ‌ண் ம‌ட்டும‌ல்ல குடு‌ம்பமே கவலை கொ‌ள்‌கிறது. சில குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்கின்றன. ‌சில‌ர் மு‌ன் வ‌ந்து இது கு‌றி‌த்து புகா‌ர் அ‌ளி‌த்தா‌ல் தவறு செ‌ய்தவ‌ர்களை த‌ண்டி‌க்க வா‌ய்‌ப்பு‌ம் ஏ‌ற்படு‌கிறது. ஆனா‌ல் இதுபோ‌ன்றவ‌ர்க‌ள் நமது பெய‌ர் வெ‌ளியே வ‌ந்து‌விடுமே எ‌ன்ற பயத்தில் புகா‌ர் அ‌ளி‌க்க மு‌ன்வருவ‌தி‌ல்லை.

எனவே, ஆணோ, பெ‌ண்ணோ, ந‌ண்பராக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி, காதலராக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி ‌உங்களை பற்றிய எல்லா விஷயங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளமால் ரகசியமாக வைத்து கொண்டு எ‌ச்ச‌ரி‌க்கையாக இரு‌ங்க‌ள்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!