Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, November 30, 2013

சொலைவனமாக மாற்றிய பெருமை இவருக்கு!

தன் ஆட்சியின் கீழ் ஒரு பாலைவனத்தை சோலைவனமாக மாற்ற முடியும் என்று முயற்சித்து வெற்றியும் கண்டுள்ளார் மறைந்த லிபிய அதிபர் முஅம்மர் க(த்)தாஃபி. 

இவர் காலாத்தில் லிபியா:

1. லிபியாவில் மிசாரக்கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.

2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.

3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது, லிபியாவில் வாழும் அணைத்து மக்களும் வீடுகள் பெரும் வரை தனக்கோ தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாஃபி சபதம் பூண்டிருந்ததால் அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர்

4. அந்த நாட்டில் மனம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர், அதாவது இலங்கை பணம் சுமார் 56 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணத்தை இலவசமாக வழங்கியது.

5, லிபியாவில் கல்வி மற்றும் மருத்துவம் முற்றிலும் இலவசம், கடாஃபி அதிகாரத்தை கைப்பற்றும் பொழுது லிப்ய மக்களில் எழத வாசிக்கத் தெரிந்தோர் வெறும் 25% மட்டுமே, ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததன் பின் அது 83% உயர்ந்தது.

6. எந்த ஒரு லிப்யனும் விவசாயம் செய்ய விரும்பினால் அவன் விவசாயம் செய்யும் இடத்தில வாழ்வதற்கு அவசியமான ஒரு வீடும், விவசாயம் செய்வதற்கு தேவையான காணி நிலமும் விவசாய உபகரனம்களும், விதைகளும் பசளைகளும் இன்னும் இதற்கு அவசியமான அனைத்தும் முற்றிலும் இலவசம்.

7. லிப்யர்களுக்கு லிபியாவில் மருதுவ வசதி பெறுவதற்கோ அல்லது வெளிநாட்டில் மேற்படிப்பு தொடர்வதட்கோ வசதி இல்லை எனில் அந்த நாட்டு அரசு இலவசமாக அவர்களுக்கு உதவிகள் வழங்கும்.

8. எந்த ஒரு லிபியனும் ஒரு வாகனம் வாங்கும் போதும் அதன் பெருமதியின் அறைவாசித்தொகையை அந்நாட்டின் அரசு இலவசமாக வழங்கும்.

9. அந்தநாட்டில் ஒரு லிட்டர் பெற்றோலின் விலை வெறும் $0.13 மட்டுமே.

10. லிப்யா உலக வங்கிகளிடம் இருந்து இதுவரை கடன் எடுத்ததில்லை.

11. உயர் கல்வி கற்று பட்டதாரி ஆகும் மாணவர்கள் தமக்குரிய வேலை வாய்ப்பு கிடைக்காது போகும் பட்சத்தில் , அவர்களுக்குரிய தகுந்த தொழில் கிடைக்கும் வரை அந்தத் தொழிலுக்குரிய சம்பளத்தை அந்த அரசு மாத மாதம் வழங்கி வந்தது.

12. அந்த நாட்டிற்கு கிடைக்கும் எண்ணெய் வருமானத்தில் ஒரு தொகையை அந்த நாட்டுமக்களின் வங்கிக் கணக்கில் சேமிப்பில் இடும் அந்த அரசு.

13. ஒவ்வொரு குழந்தை பிரச்சவிதின் போதும் அந்தத் தாயிற்கு அந்த நாட்டு அரசு 5000 அமெரிக்க டாலர் நாணயத்துக்கு பெறுமதியான லிபிய திநாரை வழங்கும் அதாவது இலங்கை பணம் ஆறு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா.

14. 40 ரொட்டிகள் வெறும் $ 0.15 தினார் மட்டுமே.

15. 25% லிப்யர்கள் பல்கலைக்கழக பட்டதாரிகளாவர்.

16. உலகிலேயே மிகப்பெரிய செயற்க்கை ஆரை உருவாக்கி லிபியாவின் பாலை நிலத்தை பசுமையாக்கியவர் என்ற பெருமை கடாபிக்கு உண்டு.

இவ்வளவு செய்தும் அவரது முடிவு உலகின் கண்களுக்கு மோசமாக அமைந்ததற்கு காரணம் என்னவென்பதை படைத்த ஒருவனே அறிவான்.

Wednesday, November 27, 2013

நம்மலுடைய கட்டாய கடமை!

நம்மலுடைய வீட்டை நாம் சுத்தமாக வைத்து இருக்கிறோம், அதை போல் நம் சுற்றத்தையும் சுத்தமாக வைப்பது நம்மலுடைய முக்கிய கடமை ஆகும். நாளைய நம்மளுடேய் சந்ததிகளுக்கு நாம் என்று எதாவது நல்லது செய்வது என்றால் நீர், நிலம், காற்று போன்றவற்றை சுத்தமாக வைத்தாலே போதும்.

ஏப்ரல் 22 நாள், உலக பூமி தினம் (World Earth Day)." ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு " .இந்த விதி எல்லாவற்றுக்கும் பொருந்தும். இயற்கை மட்டும் விதிவிலக்கா என்ன? இன்றைய இயந்திரச் சூழலில் நமக்கும் இயற்கைக்குமான உறவைப்பற்றி சிந்திக்க நேரமின்றி சதா ஓடிக்கொண்டே இருக்கிறோம். இயற்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட நம்மால் வாழ முடியாது . இதை உணர மறக்கிறோம். எல்லாவற்றுக்கும் ஒரு விதமான கவர்ச்சி தேவைப்படுகிறது. நம்மை தாங்கிக் கொண்டிருக்கும் பூமியைப்பற்றிச் சிந்திக்கக்கூட நமக்கு " உலக பூமி தினம் " என்று ஒரு நாள் தேவைப்படுகிறது . 

பூமியின் முதல் எதிரி யார்? சந்தேகமே இல்லாமல் மனிதன் தான். இன்று பூமி இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு இருப்பதற்கு நாமும் , நம் வாழ்க்கை முறையும்தான் காரணம் . அறிவியல் என்ற பெயரிலும், கண்டுபிடிப்புகள் என்ற பெயரிலும் தினமும் பூமியைக் காயப்படுத்துகிறோம். இயற்கையோடு இணைந்த அறிவியலால் மட்டுமே மனித குலத்திற்கு நன்மை ஏற்படும். இயற்கைக்கு எதிரான அறிவியல் சிறிய நன்மையையும், பெரிய தீமையையும் கொண்டிருக்கும். நமது ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் இயற்கைக்கு எதிராகவே உள்ளது. இயற்கையின் தன்மைக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகள் அமைவதில்லை நமது பயன்பாடும், வர்த்தகமும் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன விளைவு, பூமியே ஒரு பெரிய குப்பைத்தொட்டி ஆனதுதான் மிச்சம்.

இன்று நாம் பயன்படுத்தும் பொருள்களில் எத்தனை மண்ணில் மட்கக்கூடியவை. மிகவும் குறைவு. பயன்படுத்தியபின் தூக்கி எறி ( Use and Through ) கலாச்சாரம்தான் இன்றைய உலகை இயக்குகிறது, இந்தக் கலாச்சாரம் பொருள்களுக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் தான் ஒரு மனிதனை எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்து விடக்கூடியச் சூழல்தான் இன்று உள்ளது. நிலம், நீர், காற்று என்று பாகுபாடில்லாமல் அனைத்தும் மாசடைந்துள்ளது. நம் மீது நாமே குப்பைகளை அள்ளிப்போட்டுக்கொண்டு குப்பைகளுடனே வாழ்கிறோம். நம் வீட்டில் இருப்பது மட்டும் நம் குப்பையல்ல, பூமியில் எங்கு குப்பை இருந்தாலும் அது நம் குப்பைதான், அதற்கு நாம் மட்டுமே காரணம்.

இதற்கு என்ன செய்யலாம் ?, Reduce - குறைக்க வேண்டும் : பிளாஸ்டிக் மற்றும் பூமிக்கு எதிரான மண்ணோடு மண்ணாக மட்காத அனைத்தையும்.

Reuse - மீண்டும் பயன்படுத்த வேண்டும் : நாம் பயன்படுத்தும் அனைத்து பொருள்களையும் எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்திய பிறகுதான் குப்பைக்கோ மறுசுழற்சிக்கோ போட வேண்டும்.

Recycle - மறுசுழற்சி செய்ய வேண்டும் : மண்ணில் மட்கும் தன்மை இல்லாத பொருட்களை கண்டிப்பாக மறுசுழற்சி செய்ய வேண்டும் . அது மிகச் சிறிய பொருளாக இருந்தாலும் சரி.

Restore - மீண்டும் சேமிக்க வேண்டும் : இயற்கையின் எந்தப் பொருளைப் பயன்படுத்தினாலும் அந்தப்பொருளை மீண்டும் உருவாக்கி சமநிலையைக் காக்க வேண்டும். உதாரணமாக ஒரு மரத்தை வெட்டினால் மீண்டும் ஒரு மரத்தை நட வேண்டும். இயற்கைச் சமநிலை பாதிக்கப்படும் வரை நம்மால் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாது.

முடிந்த அளவுக்கு இந்த விசயங்களை உங்கள் அன்றாட வாழ்க்கைக்குள் கொண்டு வாருங்கள் . நான் ஒருவன் மட்டும் மாறுவதால் என்ன நடந்து விடப்போகிறது ? என்று ஒருபோதும் எண்ண வேண்டாம். நாம் எல்லோரும் ஒன்று படுவோம். பூமியைக் காப்பாற்றுவோம். தீதும் நன்றும் பிறர்தர வாரா.

Sunday, November 24, 2013

படுக்கை அரை காட்சிக்கு10 லட்சம் ?


‘யு டியூப்பில் வெளியிடுவேன்’ என மிரட்டல் மனைவியை நிர்வாணமாக படம் பிடித்து 10 லட்சம் கேட்ட டாக்டர் கைது திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்.

திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் அருகே உள்ள செருவைக் கல் பகுதியை சேர்ந்தவர் வித்யாதரன். இவரது மகன் ஜெயகிருஷ்ணன் (27). பல் டாக்டரான இவர் தற்போது கோதமங்கலத்தில் உள்ள பல் மருத்துவ கல்லூரியில் எம்.டி.எஸ். படித்து வருகிறார். கடந்த செப்.15ம் தேதி இவருக்கும் அடூர் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. 


மனைவியுடனான படுக்கையறை காட்சிகளை அவருக்கு தெரியாமல் ஜெயகிருஷ்ணன் வீடியோ எடுத்துள்ளார். மேலும் அவரை நிர்வாணமாக்கி புகைப்படமும் எடுத்துள்ளார். இவை அனைத்தையும் லேப்டாப்பில் பதிவு செய்தார். மனைவியை மது குடிக்கவும், ஆபாச படங்கள் பார்க்கவும் ஜெயகிருஷ்ணன் வற்புறுத்திள்ளார். இதற்கு மனைவி மறுக்கவே அவரை கொடுமைப்படுத்த தொடங்கினார். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு மனைவியை எர்ணாகுளத்துக்கு அழைத்து சென்ற ஜெயகிருஷ்ணன் நடுரோட்டில் அவரை இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்தவற்றை அந்த பெண் கூறினார். அவர்கள் உடனடியாக அங்கு வந்து அவரை அழைத்து சென்றனர். இந்நிலையில், மனைவியின் பெற்றோரை தொடர்பு கொண்ட ஜெயகிருஷ்ணன், எனக்கு ரூ.10 லட்சம் தராவிட்டால் உங்களது மகள் என்னுடன் இருக்கும் படுக்கையறை காட்சிகள், நிர்வாண புகைப்படங்களை யு டியூப்பில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். 

இதில் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் நாசரூதீன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, ஜெயகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்து லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரை பறிமுதல் செய்தனர்.

Thursday, November 21, 2013

உணர்வு! செல்பேசி ரிங் அடிப்பது போல?

சிட்னி: 21ம் நூற்றாண்டில் பல ஆயிரம் பேருக்கு தொற்றியுள்ள ஒரு நோய் என்றால் அது பெனோமேனன் நோய்தான்.

அதாவது உங்கள் அருகில் அல்லது உங்கள் பாக்கெட்டில் இருக்கும் செல்பேசி ரிங் அடிப்பது போல உணர்ந்து அதை எடுத்துப் பார்க்கிறீர்கள். ஆனால் அதில் எநத அழைப்பும் வந்திருக்கவில்லை. இதுபோல பலரும் பல சமயங்களில் செய்திருப்போம். ஆனால் இதுவும் ஒரு வகை நோய் என்கிறது மருத்துவ உலகம்.

செல்பேசியை தொடர்பு கொள்ள வரும் எலக்ட்ரிக்கல் சிக்னல்கள், மனித உடலில் உள்ள நரம்புகளை தாக்கும் போது போன் அடிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதாக சிட்னி பல்கலைக்கழகத்தின் சைக்காலஜி பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

Sunday, November 17, 2013

அமெரிக்காவையே அசத்திய ஆச்சரிய மனிதர்!!

20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த வரலாற்று நாயகர்களில் ஒருவர் தான் இந்த மால்கம் x என்ற சகோதரர். அமெரிக்காவில் தலைவிரித்து ஆடிய இனவெறிக்கு எதிராக போராடி அதில் வெற்றியும் கண்ட ஒரு வரலாற்று நாயகன்.

சிறுவயதில் தந்தையை இழந்து, தாய் மனநிலை பாதிக்கப் பட்டு, கல்வி நின்று போய் தவறான வழிக்கு சென்ற மால்கம் x ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு குற்றத்திற்காக 10 ஆண்டுசிறை தண்டனை வழங்கப் பட்டு சிறையில் அடைக்கப் படுகிறார். (அங்குதான் அவருக்கு இஸ்லாம் அறிமுகமானது).

சிறையில் இருந்து விடுதலையாகி 1952 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தன்னை நேசனல் ஆஃப் இஸ்லாம் என்ற இயக்கத்தில் ஐக்கியப் படுத்திக் கொண்டு இனவெறிக்கு எதிராக போராடியவர்.

ஆப்ரிக்க அமெரிக்கர் (கருப்பர்கள்) இனத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் அனைவரும் அவர்களுக்கு கீழே தான் என்றும் முக்கியமா வெள்ளையர்கள் அனைவரும் சாத்தான்கள் என்ற எண்ணம் கொண்டிருந்த சகோதரர் மால்கம் x அவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை ஏற்படுகிறது.

அது அவர் இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் புனிதப் பயணமான ஹஜ் பயணத்தை மேற்க் கொள்கிறார். அங்கு அவர் பார்த்த காட்சி அவரை உறைய வைத்து விட்டது. "வெள்ளையர்கள்,கருப்பர்கள் என மக்கள் எந்த வித நிறம் இனம் பாராமலும் பழகிய காட்சி அவருக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது.

ஆப்ரிக்க அமெரிக்கர்கள் தான் சிறந்தவர்கள் என்ற அவரின் எண்ணமும்,வெள்ளைக்காரர்கள் மீதான அவரின் தவறான எண்ணமும் மாறி மனிதர்கள் அனைவரும் சமம் என்ற கொள்கைக்கு அவரை வரசெய்தது.

அதற்கு பிறகு யாரையும் இழிவாக கருதாமல் இஸ்லாம் காட்டி தந்த வழிமுறையோடு தொடர்ந்து கறுப்பின மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வந்த சகோதரர் மால்கம் x. மக்களும் சாரை சாரையாக தங்களை இஸ்லாத்தில் ஐக்கியப் படுத்திக் கொண்டு மால்கம் x அவர்களின் பின்னால் அணி திரள ஆரம்பித்தார்கள்.

1965 ஆம் ஆண்டு மக்கள் மத்தியில் இஸ்லாமிய உரை நிகழ்த்திக் கொண்டிருந்த வேளையில் மர்ம நபர்களால் சுட்டுக் கொள்ளப் பட்டார்.

#இதுதான் இஸ்லாத்தின் மகிமை.நபி(ஸல்) அவர்கள் கொண்டுவந்த கொள்கை இன்றளவும் செய்து கொண்டிருக்கும் ஒரு அற்புதம்.எந்த கொள்கையாலும் செய்ய முடியாத அறபுதம்.

நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் மக்களே அறிந்து கொள்ளுங்கள் ஒரு கருப்பன் வெள்ளையனை விடவோ, ஒரு வெள்ளையன் கருப்பனைவிடவோ, ஒரு அரபி அரபி அல்லாதவனை விடவோ எந்த சிறப்பும் இல்லை.உங்கள் இறை அச்சம் மட்டுமே உங்களை இறைவனிடத்தில் நீங்கள் யார் சிறந்தவர்கள் என்று நிரூபிக்கும் என்ற நபி(ஸல்) அவர்களின் அறிவுரை இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்ற ஒவ்வொரு முஸ்லிமும் இன்றளவும் கடைப் பிடிக்கும் கொள்கை.

இறைவன் நாடினால் மரணிக்கும் வரை நான் உட்பட எந்த ஒரு முஸ்லிமும் இந்தக் கொள்கையை விட்டு விலகமாட்டோம்., சகோதரர் மால்கம் x அவர்களை பற்றி மேலும் தகவல் தெரிந்து கொள்ள : http://www.ethirkkural.com/search/label/Malcolm%20X.

(மேலே உள்ள படம்: இதை பார்க்கும் பொழுதே உடல்கள் சிலிர்க்கிறது இந்த இடத்தில தான் பிறை 8 அன்றில் இருந்து பிறை 10 அன்று ஹஜ் கடமை பூர்த்தியாகும் வரை ஏழை பணக்காரன், கருப்பன் வெள்ளையன்,அரேபியன் அரபி அல்லாதான் என எந்த வித வித்தியாசமும் இல்லாமல் இங்கு அமைக்கப் பட்டுள்ள கூடாரங்களில் தங்க வேண்டும்.

அனைவருக்கும் இங்கே ஒரே மாதிரியான இருப்பிடம், உடை என இறைவன் முன் எவனுக்கும் எந்த சிறப்பும் இல்லை என்ற உணர செய்யும் ஓர் அற்புதமான இடம்.மனிதர்களின் அகம்பாவம் அழிந்து போக செய்யும் இடம்).

Friday, November 15, 2013

குடி குடியை கெடுக்கும் குளிர் பானம் உடல் நலத்தை கெடுக்கும்!

பாரிஸ்: மனித வாழ்க்கையில் முக்கிய அம்சமாக மாறிவிட்ட குளிர்பானங்கள் (சாஃப்ட் ட்ரிங்க்ஸ்) நீரிழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உடலுக்கு அதிகமான அளவில் சர்க்கரை கிடைப்பது குளிர்பானங்கள் மூலமாகும். இக்காரியத்தில் ஐஸ் க்ரீம், மிட்டாய்களை குளிர்பானங்கள் பின்னுக்குத் தள்ளிவிட்டன. க்ரெடிட் நியூஸ் ரிசர்ச் இன்ஸ்ட்யூட் நடத்திய ஆய்வு இதனை தெரிவிக்கிறது.

ஒரு கப் குளிர்பானத்தில் எட்டு ட்யூஸ்பூன் சர்க்கரை அடங்கியிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது மனித உடலில் சாதாரணமாக இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவை விட அதிகமாகும். உடல் பருமனுக்கு காரணம் குளிர்பானங்கள்தாம் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சர்க்கரை திரவ நிலையில் உடலுக்குள் சென்றால் விரைவாக உடலுக்குள் கரைந்து பெரிய அளவில் கலோரி ஒன்றிணைந்து உடலுக்குள் நுழைவதற்கு காரணமாகிறது. ஆகையால் பெரும்பாலோருக்கு டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் ஏற்பட காரணமாகிறது.

உலக மக்களின் 20 சதவீதம் பேரும் உடல் பருமனாக உள்ளார்கள். அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் குளிர்பானங்களின் பயன்பாடு அதிகமாகும். சீனர்கள்தாம் குறைந்த அளவில் சர்க்கரையை உபயோகிக்கின்றனர். தினமும் ஏழு ஸ்பூன் சர்க்கரையை மட்டுமே அவர்கள் பயன்படுத்துகின்றனர். குடி குடியை கெடுக்கும் குளிர் பானம் உடல் நலத்தை கெடுக்கும் புதுமொழி, ஆதலால் குளிர் பானத்திற்கு பதிலாக வென்ணீர் குடியுங்கள் உணவுக்கு பின்.

Monday, November 11, 2013

வாழ்க்கையை திருப்பி தர முடியுமா உங்களால்??

மேல் படத்தை நன்கு அவதானியுங்கள் எந்த குற்றமும் புரியாமல் சந்தேகத்தின் பெயரிலேயே பல வருடங்கள் ஜெயில் வாழ்க்கை இவருடைய இளைமையை திருப்பி தர முடியுமா கா(வி)வல்துறை அல்லது இந்திய அரசாங்கம்?.

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : 12 ஆண்டுக்குப் பிறகு 'நிரபராதி' என 'முஹம்மத் ஹனீப்' விடுவிப்பு!

ஊர் திரும்ப பணமில்லாமல் மேலும் 2 மாதம் ஜெயிலில் வேலை செய்த அவலம் !!

சோக கதை கேட்டு தாய் உள்ளிட்ட கிராம மக்கள் கண்ணீர் !!!

அப்பாவி விடுதலைப் பற்றி எந்த ஒரு ஊடகமும் பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை. முஸ்லிம் பெயரில் ஒருவன் சிக்கினால் மட்டும் முதல் பக்கத்தில் செய்தி போட்டு காசு பார்க்கும் விபச்சார ஊடகங்கள் கைது செய்யப் பட்டவர்  அப்பாவி என்று விடுவிக்க பட்டால் அச் செய்தியை பற்றி கண்டுக் கொள்வதே இல்லை .

காவல்துறை யாரை தீவரவாதிகள் என்று பிடிக்கிறதோ அவர்கள் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப் படும் வரை அனைவரும் அவர்களை தீவிரவாதி என்று தான் சொல்ல வேண்டும்.அவர்களுக்கு யாரும் சப்போர்ட் செய்ய கூடாது.அப்படி செய்தால் அவர் தேச துரோகி என்று கூப்பாடு போடும் போலி நியாயவான்களே.

இவரின் 12 வருட வாழ்க்கையை திருப்பி தர முடியுமா உங்களால்??

இவர் அனுபவித்த சொல்லனா துயரங்களுக்கு நிவாரணம் தர முடியுமா உங்களால்??

தொலைந்த அவரின் இளைமையை திருப்பி தரமுடியுமா உங்களால்??

அவர் தாய் பட்ட வேதனைகளுக்கு ஆறுதல் சொல்லி அவரின் மனதை தேற்ற முடியுமா உங்களால்??

இது முதல் முறையா நடக்கிறது நமது நாட்டில் .நாட்டில் இதுவல்லவே முஸ்லிம்களுக்கு எதிரான தொடர்கதையாக இருக்கிறது.

நாட்டை சூரையாண்டவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்க அப்பாவிகள் ஆண்டுக் கணக்கில் சிறைவாசம் அனுபவித்து விட்டு தங்கள் வாழ்க்கையை இழந்து நாடு ரோட்டில் நிற்பதா?? இந்த அவல நிலை, நிச்சயம் சத்தியம் வெல்லும்.
 

Friday, November 8, 2013

மதமோ! இந்துக்களை ஏமாற்ற IPS அதிகாரி!?

மோடி போன்ற ஒரு ஃபாசிஸ்டுக்கு நிச்சயம் மதமோ மத நம்பிக்கைகளோ பொருட்டல்ல என்பதை அழுத்தமாகச் சுட்டிக்காட்டினார் மருதையன். ராமர் கோயில் கட்டுவேன் என்று அன்று அத்வானி சொன்னதற்குக் காரணம் உண்மையிலேயே ராமர்மீது அவருக்கு இருந்த பக்தி அல்ல; வகுப்புவாதத்தைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் அடைவதற்காகவே அவர் அப்படிச் சொன்னார். அந்த வகையில் அத்வானி, மோடி உள்ளிட்ட இந்துத்துவப் பரிவாரங்களின் அரசியல் என்பது இந்துக்களை ஏமாற்றி, அவர்களுடைய இறை நம்பிக்கையை ஏமாற்றி மேற்கொள்ளப்படும் அரசியல் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

தன்னுடைய அரசியல் லாபத்திற்காக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து போலி என்கவுண்டரில் கொலை செய்து வந்த மோடி, தன்னுடைய கட்சியில் செல்வாக்கு பெற்ற தலைவராக உருவாகி வந்த தன் அரசியல் எதிரியான முன்னால் உள்துறை அமைச்சர் ஹரேன் பந்த்யாவை கொலை செய்து விட்டு பழியை முஸ்லிம் இளைஞர்கள் மீது போட்டுள்ள விபரம் தற்போது வெளியாகியுள்ளது .

மார்ச் 2003 இல் அகமதாபாத் லா கார்டன் பகுதியில் வைத்து ஹரேன் பந்த்யா சுட்டுக்கொல்லப்பட்டார் .இக்கொலை வழக்கில் ஹைதராபாத்தை சேர்ந்த அஸ்கர் அலி மற்றும் 12 பேர் கைது செய்யப்பட்டனர் .

ஹரேன் பாண்டியாவின் தந்தை வித்தல்பாய் ''தன் மகன் அரசியல் எதிரியான மோடியால் கொலை செய்யப்பட்டதாகவும், இவ்வழக்கில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள தாகவும் குற்றம்சாட்டினார். அப்பொழுது மத்தியில் இருந்த BJP அரசு மோடியை காப்பாற்றியது.

2011 ம் ஆண்டு குஜராத் உயர் நீதி மன்றம் அஸ்கர் அலி உள்ளிட்ட 12 பேரை விடுதலை செய்தது.


ஹரேன் பாண்டியாவின் மனைவி ஜக்ருதி விடுதலையான அஸ்கர் அலியை நேரில் சந்தித்து போது ''போலீசார் அவரை அடித்து துன்புறுத்தி அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டதையும் கண்டறிந்து ,தன் கணவரின் கொலையில் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார் .

இந்நிலையில் சொராபுதீன் போலி என்கவுண்டர் கொலையில் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஒரு IPS அதிகாரி '' ஹரேன் பாண்டியா கொலை பற்றியும் யார் கொலை செய்ய சொன்னார்கள் என்பதை பற்றியும் சிபிஐ அதிகாரிகளிடத்தில் கூறியுள்ளார். இக்கொலை வழக்கில் மோடி கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

குஜராத்தில் நடைபெறுவது அம்பானி, டாடா போன்ற பெரும் முதலாளிகளுக்கான அரசு மட்டுமே; வளர்ச்சி என்று சொல்லப்படுவது அவர்களுக்கான வளர்ச்சி மட்டுமே என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தார் மருதையன். மோடியும் கூடாது, காங்கிரஸ், மூன்றாவது அணி ஆகியவற்றாலும் பலனில்லை என்றால் என்னதான் வழி? ஒன்று, தேர்தல் புறக்கணிப்பு. இரண்டாவது, புரட்சி. ‘மக்கள் எழுச்சியடைந்து வீதிக்கு வந்தால்தான் மாற்றம் சாத்தியம். புரட்சி என்பது நாமே தேர்ந்தெடுப்பதல்ல. அதைவிட்டால் வேறு வழியில்லை என்னும் நிலைக்கு நம்மை இன்று கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது இன்றைய சூழல்.’(பொய்யைப் பரப்பியே ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று மனப் பால் குடிக்கிறார்கள்).

Monday, November 4, 2013

கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டிய மாதம்!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் கவனத்துடன் நடக்க வேண்டியது அவசியமாகிறதுமேலும் மருத்துவர்களே, இந்த காலங்களில் பெண்களை நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டுமென்றும் பரிந்துரைப்பார்கள். 

கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த சத்துக்கள் தான் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது. அதிலும் புரோட்டீன் கருவின் வளர்ச்சியை சீராக வைக்கவும், கால்சியம் குழந்தையின் எலும்புகள் வலுவோடு இருப்பதற்கும் உதவும். எனவே கர்ப்பிணிகள், இந்த காலங்களில் இந்த சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். சரி, இப்போது கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் எந்த உணவுகளையெல்லாம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போமா!!!

பசலைக் கீரை: பசலைக் கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாயின் உடலில் இரத்தமானது அதிக அளவில் உற்பத்தியாவதோடு, கருவில் உள்ள சிசுவிற்கும் அதிக அளவில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும்.

பாதாம்: பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே அதிக அளவில் கர்ப்பிணிகள் சாப்பிட, கருவிற்கு தேவையான புரோட்டீன் சத்தானது கிடைக்கும்.

சிக்கன்: கர்ப்பிணிகளுக்கு சிக்கன் ஒரு பாதுகாப்பான உணவு. ஏனெனில் இதனை முதல் மூன்று மாதங்களில் அதிகம் உணவில் சேர்த்தால், இந்த காலத்தில் ஏற்படும் காலை மயக்கம் மற்றும் சோர்வானது நீங்கும். மேலும் சிக்கனில் இரும்புச்சத்தானது இருப்பதால், உடலில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.

அஸ்பாரகஸ்: கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் மட்டும் உடல் இயங்காது. அந்த சத்து உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி நிறைந்து உணவுகளையும் சாப்பிட வேண்டும். இத்தகைய வைட்டமின் டி சத்து, அஸ்பாரகஸில் அதிகம் உள்ளது. மேலும் இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், காலை மயக்கமானது நீங்கும்.

வெண்டைக்காய்: பலர் இந்த காலத்தில் வெண்டைக்காயை அதிகம் தேர்ந்தெடுத்து சாப்பிடமாட்டார்கள். ஆனால் இதில் நிறைய சத்துக்கள் உள்ளன. அதிலும் பிரச்சனையில்லாமல் நடப்பதற்கான ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், கர்ப்பிணிகள் இதனை சாப்பிட்டால், நீரிழிவு பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும்.

ப்ராக்கோலி: சாதாரணமாகவே ப்ராக்கோலியில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளது. அதிலும் இதனை கர்ப்பிணிகள் அதிகம் உணவில் சேர்த்தால், அதில் உள்ள இரும்புச்சத்து, தாயின் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

முட்டை: முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆகவே கர்ப்பிணிகள் தினமும் 2 முட்டைகளை சாப்பிட்டு வருவது, தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்லது.

சால்மன்: பொதுவாகவே மீனில் ஒமோக-3 ஃபேட்டி ஆசிட், கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது நல்லது. ஆனால் அவற்றில் சால்மன் என்ற மீனில் மற்ற மீன்களை விட, அதிகமான அளவில் இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ளன.

தயிர்: பால் பொருட்களில் ஒன்றான தயிரில் கால்சியம் அதிகம் இருக்கிறது. மேலும் கர்ப்பமாக இருக்கும் போது சில பெண்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய எரிச்சலை தணிக்கும் வகையிலும், உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும், தயிரை அதிகம் சாப்பிடுவது நல்லது.

Friday, November 1, 2013

ஏன் ஆதரிக்கிறேன் ஆதரிக்கச்சொல்கிறேன்!?

கடவுளே இல்லை என்று சொல்லும் பொழுது பிறகென்ன மதம்....? எந்த மத நம்பிக்கையும் கிடையாது. அணைத்து மதங்களும் படிப்படியாக களைந்து பிடுங்கி ஏறிய வேண்டும். இந்த உலகில் இருந்தே, ஏனென்றால் மதங்களை வைத்துதானே மக்களை கொள்கிறார்கள் அதிலும் குறுப்பிட்ட மதத்தவர்களை.

இதன் முன் தேவையாக இன்று உலகம் முழுக்க அடிமை சமூக....கொடுங்கோல் அரசிடம் இருந்து முழு விடுதலை வேண்டி போராடிக் கொண்டிருக்கிறார்கள் இஸ்லாமியர்கள்.

இன்று உலகெங்கும் இஸ்லாமிய மதம் மிக கொடூரமாக ஒடுக்கப்படும் மதமாக உள்ளன... தமிழர்களைப் போலவே...!.

நான் ஏன் இஸ்லாமியர்களை ஆதரிக்கிறேன் மேலும், ஆதரிக்கச்சொல்கிறேன் விஷயம் ரொம்ப சிம்பிள்.

ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் என்ற மூன்று பெரிய மனித வளர்ச்சிக்கான அடிப்படையை தூக்கி எரிந்து விட்டு இஸ்லாமிய மதவாதம் தான் அனைத்திற்கும் காரணம் என்று கூக்குரல் இடுகிறது  குல விரோதிகள்.

பிரித்தானியர்களால்....ஐரோப்பியர்களால்....யூத வெறிகொண்ட இஸ்ரேல், இந்திய பார்ப்பனிய  சாதி வெறி கொண்டவர்களால் இன்று உலக மக்கள் படும் துன்பங்களுக்கு அவர்களின் அத்துணை பிரச்சனைகளுக்கும் முதலும் முடிவுமான பிரச்னை இஸ்லாமிய மதமும் அதனை ஏற்றுக் கொண்டவர்களும் தான் என்று சொல்கிறார்கள் மேற்கண்ட மனித குல விரோதிகள்.

(இது தான் யூத இனவெறி) இன்றைய தேவையே.?  வெளிப்படையான அரசு..  99 சதவீத மக்களுக்கான அரசு. அதி உயர் ஜனநாயகம்...!

இவைதான் இற்றைய தேவை. இவற்றை தர மறுப்பதோடு அல்லாமல் இஸ்லாமிய மதமே அனைத்திற்கும் காரணம் என்று கூறும் இவ(வா)ர்கள். (இந்த அசிங்கங்க அய்யோக்கியத்தன எண்ணம் கொண்டவர்கள்).

யார் ஒருவரும் சமூக ஜனநாயகத்திற்கு.மனித குலத்திற்கு எந்த பங்களிப்பையும் செய்து விட முடியாது என்று கூறுகிறேன் நான்...!(சங்கிலிக்கருப்பு ).

@ மேற் சொன்ன மனித குல எதிரிகள் யார் என்று பார்த்தால் சட்ரென்று விளங்கிவிடும் உன்னவந்த வீட்டிற்கும் ஒண்ட வந்த நாட்டிற்கும் துரோகம் செய்கிறார்களே அவர்கள்தான், யார் அவர்கள் ஒன்று இஸ்ரேல் (பாலஸ்தீன்), மற்றொன்று ஆரியன் (பார்ப்பனர்கள்) இந்தியா.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!