Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, October 29, 2013

பன்னாட்டு வலைக்குள் விழும் விவசாயம்?

பன்னாட்டு நிறுவங்களை தடை செய்யச்சொல்வதன் நோக்கம் இதுதான் புரிந்துகொள்ளுங்கள்.  நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய செய்தி. 

10 ரூபாய்க்கு விற்றுகொண்டிருந்த தக்காளி ஏன் ரூ.35 முதல் ரூ.45 வரை விற்கிறது. இதற்கு அப்பாவி விவசாயிகளா காரணம்..? இல்லை, இல்லை. இந்த முதலாளித்துவ சமுதாயம் தான் காரணம். படிப்பதை நிறுத்தி விடாதீர்கள்..!! இதன் பின்னணி என்ன.?

தக்காளி 10 ரூபாய்க்கு விற்று கொண்டிருந்தது நல்ல உற்பத்தி தட்டுபாடு இல்லை. அதனால் மலிவு விலைக்கு விற்பனை ஆனது. இதை பொறுக்க முடியாத நமது அருமைமிகு கொள்ளை கூட்டம் விவசாயிகளிடம், " நான் உங்களுக்கு 1 கிலோ தக்காளிக்கு 12 ருபாய் தருகிறேன், அனைத்து தக்காளியையும் நானே வாங்கிகொள்கிறேன்" என்று கூறி விலை பேசி "ஆனால் நான் கேட்கிற போதுதான் நீங்க செடியில் இருந்து பறித்து தர வேண்டும், அது வரை தக்காளி, செடியிலேயே இருக்கட்டும்" என்று ஒரு நிபந்தனையும் போட்டார்கள். விவசாயிகள் என்ன செய்வார்கள், அவர்கள் ஏதோ லாபம் கிடைகின்றது என்று ஒப்புக்கொண்டனர். இது ஒரு வித்தியாசமான தக்காளி தட்டுப்பாட்டை உருவாக்கும் முறை. பல குடோன்களிலும் தக்காளியை கொண்டுபோயும் பதுக்கினார். பிறகு, தக்காளி தட்டுபாடு வராமல் என்ன செய்யும்.?

உடனே டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், ரிலையன்ஸ் ப்ரெஷ், காய்கறி கடைகளிலும் தக்காளி 45 ரூபாய் வரை விற்பனை ஆனது. இந்த கொள்ளையர்கள் கொத்து எடுத்து வயலுக்கு போய் சம்பாதிச்சார்களா ..? நீர் பாசனம் செய்து உற்பத்தி செய்தார்களா ..? பிறகு ஏன் இவர்களுக்கு மட்டும் இத்தனை லாபம்..? நமது நாட்டிலே ஒரு நாளைக்கு 30 நொடிக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்வதாக ஒரு அறிக்கை கூறுகின்றது. இப்படிப்பட்ட கொள்ளையர்களால் இத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து இருக்கிறார்கள்.

இங்கே உழைக்கும் விவசாயிகளுக்கு உண்மையான உரிய பணம் போய் சேருவது இல்லை..!! இப்படிபட்ட முதலாளித்துவ சமுதாய கொள்ளையர்களுக்கு யார் இடம் கொடுத்தது..? நாம் தான். தவறுகளை தட்டி கேட்க பெரிதாக யாரும் இல்லாதால்தான் அவர்கள் மட்டும் வளர்ந்து விவசாயிகள் தற்கொலை செய்வதற்கு காரணமாயிற்று.

இப்படி அவர்கள் மட்டும் வளர்ந்து கொண்டே போனால், நாம் இதை கவனிக்காமல் இருந்தால், நமக்கு கையில் பணம் இருக்கும், ஆனால் அரிசி, காய்கறிகள் வாங்க கடைகள் இருக்காது. உற்பத்தி செய்ய விவசாயிகள் இருக்க மாட்டார்கள், இறந்து விடுவார்கள்...!!இங்கே அரிசி, காய்கறிகள், தானியங்கள், பழங்கள் உற்பத்தி செய்கிறவர்களுக்கே அவை அனைத்தும் கிடைப்பதில்லை.

30 நொடிக்கு ஒரு விவசாயி இறக்கிறார் என்பது ஒரு தகவல் மட்டும் அல்ல.. இது ஒரு வலி. படித்து "உணர்ந்து" கொண்டவர்களுக்கு அந்த வலி தெரியும். (பன்னாட்டு நிறுவங்களை இந்தியாவில் கொண்டு வந்து அவர்கள் நிர்ணயிக்கும் விலையில் பொருட்களை வாங்கி பயன்பெறுங்கள் அவர்கள் நிர்ணயித்த வி(வ)லைக்கு விழுங்கள் !?.)

Saturday, October 26, 2013

நீ எல்லாம் ஒரு இந்துவா!?

"இந்து மதத்தை அசிங்கபடுத்துகிராயே நீ எல்லாம் ஒரு இந்துவா ..??" தங்களுக்குப் பெரிய சாதி என்கிற பட்டம், அந்தஸ்து இருந்தால் போதும் அதற்காக எந்தக் காரியத்தையும் செய்யலாம்.

சக இந்துவை மனிதாபிமானம் இன்றி தீண்டத் தகாதவன், இழி சாதி, கீழ் சாதி  என்றெல்லாம் சொல்லி அவமதிக்கிராயே நீ எல்லாம் ஒரு இந்துவா.. ??

சக இந்துவை கீழ் சாதி என்று சொல்லி அவனை தொட்டாலே தீட்டு என்று சேரிக்குள் தள்ளிவிட்டாயே நீ எல்லாம் ஒரு இந்துவா .. ??

சக கோவிலுக்குள் நுழைந்தால் அவனை கீழ் சாதி என்று சொல்லி உதைத்து வெளியே தள்ளுகிறாயே நீ எல்லாம் ஒரு இந்துவா ... ??

முதலில் நீ மனிதனாக மாறு பிறகு வந்து உன் மதத்திற்கு வக்காலத்து வாங்கு பார்ப
னே !?.

இன்று பார்ப்பனர்கள் எது எப்படிப் போனாலும் தங்களுக்குப் பெரிய சாதி என்கிற பட்டம், அந்தஸ்து இருந்தால் போதும் அதற்காக எந்தக் காரியத்தையும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்பதை உயர் தர்ம மாக அல்(ல)வா கொண்டிருக்கிறார்கள்.

@ சிந்திக்க: உன்னை கீழ்சாதி ன்று வெளியே தள்ளும் மதத்திலிருந்து வெளியேறு அல்லது பார்ப்பனனை வெளியேற்று.

Thursday, October 24, 2013

பருமனைக் குறைக்க பல வழிகள்!

உடல் எடை குறைய, பருமனைக் குறைக்க பல வழிகள்!

* இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, கால...ையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும். 

* கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும். 

* சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.

* பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.

* எலுமிச்சைச் சாறு ஒரு கரண்டி சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது. 

* நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.

* சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.

* நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

Tuesday, October 22, 2013

மோடியை எதிர்க்கும் முட்டாள்களே!?

பாரதீய ஜனதா முகநூல் பிரிவு என்னும் பக்கத்தில் இந்த படத்தையும் அது சம்பந்தமான கேள்விகளையும் கேட்டு இருக்கிறார்கள்.

அதற்கு பல நண்பர்கள் பதில் கேள்விகளை கேட்டும் எவரும் இது வரை பதில் அழிக்க வில்லை.

அதில் ஒரு நண்பர் கேட்ட கேள்விகளை இங்கு கொடுத்து இருக்கிறேன்.

மோடி தனிப்பட்டமுறையில் எனக்கு விரோதியல்ல.

1. இந்தியர்களின் எழுச்சி நாயகன் மோடி என்றால், இந்திய விடுதலைக்காக போராடியவனா அல்லது இந்திய மாநிலங்களின் உரிமைக்காக போராடிய போராளியா?

2. சாதியையும் ,மதத்தையும் ஒழித்து.மனித நேயத்தைகாக்க போராடும் போராளியா?

3. கோத்தா ரயில் எரிப்பு சம்பவம்,பெஸ்ட் பேக்கரி எரிப்பு போனற சம்பவத்துக்கும் மோடி கூறும் பதில் என்ன..!

4. மோடி குஜராத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறான் என்றால், அது தான் அவன் வேலை. அதற்காகத்தான் மக்கள் அவனை தேர்ந்தெடுத்தனர். உண்மையில் வளர்சிப்பதையில் சென்றுள்ளதா?

5. மோடி பிரதமர் ஆனால், இருக்கின்ற விலைவாசி குறைந்து விடுமா?

6. இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்திடுமா?

7. அமெரிக்காவின் அதிகாரம் குறைந்திடுமா?

8. இந்திய பண முதலைகளின் ஜால்ராதான் இந்த மோடி என்பதை மறவாதே நண்பா..!

நீ எமக்கு விரோதியல்ல..  உன் பதிவு எமமைப்போன்ற இன உணர்வாளர்ளை காயப்படுத்துகிறது.

நீ எவனுக்கு வேண்டுமானாலும் கூஜா தூக்கு,, ஆனால்....  எங்களையும் தூக்கச் சொல்லாதே,,,

நீ சொன்ன இந்தியர்களில் நானும் ஒருவன். ஆரியமும், அரைக்கால் டவுசரும் இதற்கு பதில் தருவாகளா.? பார்ப்போம்!?.

Sunday, October 20, 2013

கணவர் பணியாற்றுவோர் கவனம்! ஆய்வில்!!

இந்திய மனைவியர் தங்கள் கணவரிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள். அதற்கேற்றபடி கணவர்குலம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளிப்பட்ட அம்சங்கள்.

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமா? எந்நேரமும் நீங்கள் ஓர் அடிமை (அன்புக்கு?!) என்பதை மறந்துவிடாதீர்கள். மனதளவில் அடிமை என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டால் இதுதான் மகிழ்ச்சி என்ற எண்ணமும் தானாக வந்துவிடும்.

குடும்பத்தில் மனைவிதான் Boss. இதை மறந்துடாதீங்க பாஸூ. Boss is always correct என்பது முதலாளித்துவத்தில் மட்டுமல்ல, இந்தியக் குடும்பத்திற்குமான ’விதி’.

கணவர்களே, பேச்சைக் குறையுங்கள். மனைவி எப்போது என்ன பேசினாலும் அதனைக் கவனிக்க வேண்டியது உங்கள் வேலை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மனைவியர் தன்னைப் பற்றியே தன் கணவர் சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதனால் எப்போது என்ன யோசனையில் இருந்தாலும், “உன்னைப் பற்றித்தான் யோசித்துக்கொண்டிருந்தேன்” என்று சொல்லத் தயங்காதீர்கள். (அது பச்சைப் பொய் என்பது தெரிந்திருந்தாலும்).“இன்றைக்கு 
நாம வெளியிலே போகலாம்” என்று உத்தரவாதம் கொடுத்தீர்கள் என்றால் அதை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுங்கள். உங்களுக்கு அலுவலகம், அசைன்மென்ட், புராஜக்ட் என எதுவேண்டுமானாலும் முக்கியமாக இருக்கலாம். மனைவியருக்கு கணவன் கொடுத்த உத்தரவாதம்தான் முக்கியம். எனவே உணருங்கள்.

“பராவயில்லீங்க.. இன்னொரு நாள் நாம வெளியிலே போகலாம்” என்று மனைவியர் சொன்னால், அதனை கணவன்மார் உடனே அப்படியே நம்பி சும்மா இருந்துவிடக்கூடாது. மனைவியரின் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் ஓராயிரம் பொருள் உண்டு. ஆம் என்றால் இல்லை என்றும், இல்லை என்றால் ஆம் என்றும் பல அர்த்தங்கள் உண்டு. அதனை சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுபவனே சரியாகக் கணவன் பணி செய்பவன்.

நீங்கள் ஒரு பெண்ணைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறீர்கள் என்றால் அது உங்கள் மனைவியாக மட்டுமே இருக்கவேண்டும். தன்னைப்போல திறமையான ஒரு பெண்ணைத் தன் கணவர் பார்த்திருக்கவே மாட்டார் என்பதுதான் இந்திய மனைவியரின் மனநிலை. எனவே, அலுவலகத்தில் உங்களுடன் பணியாற்றும் பெண்கள் பற்றியோ, ஃபேஸ்புக் இன்பாக்ஸில் வந்து உரையாற்றும் பெண்கள் பற்றியோ பெருமையடித்து, உங்களுக்கு நீங்களே சூன்யம் வைத்துக் கொள்ளாதீர்கள்.

மனைவிக்கு என்ன உடை பிடிக்கும், என்ன நிறம் பிடிக்கும், யார் நடித்த படம் பிடிக்கும், ஹோட்டலில் என்ன டிஷ் பிடிக்கும் என்பதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கவேண்டியது கணவன்மார்களின் கட்டாயக் கடமைகளில் ஒன்று. மனைவியருக்கு நேற்று ஒன்று பிடிக்கும். இன்று வேறொன்று பிடிக்கும். ஆனாலும் அவர் கேள்வி கேட்கும் நேரத்தில் அவருக்கு எது பிடிக்கும் என்று சொல்லக்கூடிய திறமையான யூகிப்பாளராக நீங்கள் இருக்கவேண்டும். 

மறந்தும்கூட உங்கள் குடும்பப் பெருமைகளைப் பேசாதீர்கள். உங்கள் அப்பா, அண்ணன், தம்பி இவர்களைப் பற்றி பேசுவதைத் தவிருங்கள். உங்கள் அம்மா, அக்கா, தங்கையின் பெருமைகளை மூச்சுவிடவே கூடாது. அதேநேரத்தில் உங்கள் மனைவி அவரது குடும்பத்தினர் பற்றிப் பேச ஆரம்பித்தால் அவர் நிறுத்தும்வரை நீங்கள் தடுக்கவே கூடாது. கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

மனைவியின் மனமகிழ்ச்சி என்பது கணவனின் பொருளாதார ஆற்றலை சார்ந்தது. நேற்று நீங்கள் வைரத்தில் தோடு வாங்கிக்கொடுத்திருக்கலாம். உங்கள் மனைவியும் சந்தோஷம் அடைந்திருப்பார். ஆனால் பக்கத்து வீட்டுப் பெண்மணியோ, எதிர் வீட்டு அம்மணியோ வைர நெக்லஸ் அணிந்திருப்பதை உங்கள் மனைவி பார்த்துவிட்டால், அத்தனை சந்தோஷமும் காற்றுப்போன பலூனாகிவிடும். வைர நெக்லஸை நீங்கள் வாங்கித்தந்தே ஆகவேண்டும். அதற்குள் எதிர்வீட்டிலும் பக்கத்துவீட்டிலும் புது கார் வாங்கிவிட்டால், நீங்கள் அம்பேல்தான்.
இப்படியிருந்தால் எப்படித்தான் கணவராகப் பணியாற்றுவது எனக் கவலைப்படுகிறீர்களா? 

‘என் கணவர் எனக்கே எனக்கானவர்’ என்பதுதான் இந்திய மனைவியரின் மிகப்பெரும் பெருமிதமாக உள்ளது. அதனால் உங்கள் அன்பை வெளிப்படுத்தத் தயங்காதீர்கள். உனக்காகத்தான் வாழ்கிறேன் என்பதை சின்னச்சின்ன வெளிப்பாடுகள் மூலம் நிரூபியுங்கள். ‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துங்கள். காசா, பணமா? அன்பான வார்த்தைகளால் உங்களை நிரூபியுங்கள். உண்மையான அன்புக்கு ஈடுஇணை ஏதுமில்லை. குடும்பத்தின் சிறந்த பணியாளர் விருது உங்களுக்குக் கிடைக்கும்.

Thursday, October 17, 2013

ஜெயலலிதாவின் மின்சார ஸ்டண்டு!

பதவிக்கு வருமுன் ஓட்டுக்களை ஆட்டையைப் போட ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதி!

இலவச மும்முனை இணைப்புக்கள் அனைவருக்கும் வழங்கப்படும்.

தமிழ்நாட்டை கருணாநிதி இருண்ட கண்டமாக ஆக்கிவிட்டார் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றுவேன்.

இனி தமிழ்நாட்டில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

இன்றைய ஜெயலலிதாவின் மின்சார ஸ்டண்டு!

2 மின் திட்டங்களை செயல்படுத்த ரூ.1500 கோடி பணம் வேணும்: பிரதமருக்கு ஜெ. கடிதம்.

தமிழகத்தில் இரு மின்திட்டங்களை செயல்படுத்த ரூ.1500 கோடி ரூபாய் நிதி கேட்டு மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசு உதவி செய்தால் தான் மின்சாரம் கிடைக்கும் என்று கூறி ஓட்டுக் கேட்டு இருக்கவேண்டும்.

திமுக வெற்றி பெற்றிருந்தால் காங்கிரசுடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி இதை கருணாநிதியே எப்போவோ கேட்டு செய்து இருப்பாரே! இது நாள் வரை தமிழ்நாட்டில் மின்வெட்டு இருந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காதே.

ஆத்தா! எதுக்க இப்ப இந்த ஸ்டண்டு..? மத்திய அரசு பணம் கொடுக்காததால் தான் தமிழ்நாட்டில் மின்ன்சார வெட்டு அதிகமாகிப் போச்சு என்று தேர்தல் நேரத்தில் மோடிக்கு ஓட்டுக் கேட்கவா..?

தமிழக மக்கள் மரக்கட்டைகள் அல்லர், ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்று நியாபகப்படுத்துகிறோம்.

Tuesday, October 15, 2013

இனிமையான உறவு எது தெரியுமாங்க!?

கணவன் மனைவி ஒன்றாக வாழ்ந்து விட்டு இருவருக்குள்ளும் புரிந்து கொள்ளாமல் பிரச்சினையை பேசி தீர்க்காமல் பிரிகிறார்களே அவர்களுக்கு.

கணவன்-மனைவி உறவு எவ்வளவு இனிமையானது தெரியுமாங்க. அந்த உறவில் வரும் சின்னச் சின்ன ஊடல்கள், சண்டைகளுக்காக வக்கீலிடம் ஏங்க நீங்க போகனும். கோர்ட்டு கேசுன்னு ஏங்க நீங்க அலையனும். உங்களுக்கு உங்க பிரச்சினைகளை பேசித் தீர்க்க முடியாதா.?

உங்க ரெண்டு பேருக்கும் இடையில் சின்னச் சின்ன சண்டைகள் வரும் போது விவாகரத்து வரைக்கும் ஏங்க போக ட்ரை பண்னுரிங்க...?? பிரச்சினைகள் வரும் போது உங்களது பசுமையான பழைய நினைவுகளை ஒரு முறை நினைத்துப் பாருங்க.

அந்த நினைவுகள் எவ்வளவு அழகான சோலையாக இருக்கும் தெரியுமா...??? நீங்க ரெண்டு பேரும் ஒரு செடியில் பூத்த பூவாக இருப்பீர்கள் தெரியுமா..?? அந்த நினைவுகள் உங்களுக்கு சொர்க்கமாகவும் அந்த சொர்க்கத்தில் ஆதாம்-ஏவாலாகவும் நீங்கள் இருப்பீர்கள் தெரியுமா...??

உங்களுக்குல் சண்டைகள் வரும் போது ஒருத்தரோடு ஒருத்தர் மனம் விட்டுப் பேசுங்க. அவ யாருங்க உங்களுக்கு நீங்க தாலி கட்டிய மனைவி. அவரு யாருங்க உங்களுக்கு நீங்க கட்டிய கணவர். உங்க ரெண்டு பேரோட உறவுக்கு மேல ஒரு உறவு இந்த உலகத்தில் இருக்குமா சொல்லுங்க...??

நீங்க ஒருத்தரை ஒருவர் விவாகரத்து செய்யும் போது உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடாதா...??? உங்களுக்குத் தான் நிம்மதியான வாழ்க்கை அமையுமா....??? உங்க ரெண்டு பேரோட காதல் உங்கள் மனதில் ஏதோ ஒரு மூலையில் குத்திக் கொண்டு இருக்கும் அல்லவா புரிந்துகொள்ளுங்கள் ப்லீஸ்.  (சம்மாந்துறை அன்சார்).

எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும் கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது, தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.

Saturday, October 12, 2013

டிவி நிகழ்ச்சிகளில் அஜால் குஜால்!?

திரிபுரா மாநிலத்தில் சில ஜோசியர்கள் டிவியில் விளம்பர நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதேபோல் சாமியார்கள் என்றும் மந்திரவாதிகள் என்றும் தங்களை அழைத்துக்கொள்ளும் சிலரும் டிவியில் நிகழ்ச்சி நடத்துகின்றனர்.

இந்த நிகழ்ச்சிகளின் மூலம் இவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர் என்று திரிபுரா அரசு குற்றம் சாட்டியுள்ளது. 

சில மாதங்களுக்கு முன்பு அகர்தலாவில் உள்ள ஒரு வீட்டில் ஒரு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. குடும்பத்தின் நலனுக்காக சில சித்து வேலைகளை செய்ய வேண்டும் என்று கூறி பாபா கமல்ஜேடி என்ற மந்திரவாதியை அழைத்து வந்தனர். ஆனால் இந்த நபர் அந்த வீட்டில் இருந்த ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.

சாமியார்களும், மந்திரவாதிகளும், ஜோசியர்களும் கேபிள் டிவி நடத்துபவர்களிடம் நிகழ்ச்சி நடத்த உரிமை பெறுகின்றனர். 

இவர்கள் நகரில் உள்ள ஓட்டல்களில் அறை எடுத்து தங்கிக்கொள்கின்றனர். டிவி நிகழ்ச்சிகளில் இவர்கள் தங்களுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக விளம்பரம் செய்கிறார்கள். சில மந்திர, தந்திர நிகழ்ச்சிகளை டிவியில் செய்து காட்டுகின்றனர். தொலைபேசியில் கேள்வி கேட்டு இறுதியில் தங்களை நேரில் சந்திக்கும்படி சாமியார்களும், ஜோசியர்களும், மந்திரவாதிகளும் அழைப்பு விடுகின்றனர்.

இவர்களால் பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இத்தகைய டிவி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது. 

Wednesday, October 9, 2013

எவ்ளோ விஷயங்கள் வெது வெதுப்பான நீரில்!

வெது வெதுப்பான அல்லது வெந்நீர் குடிப்பதின் மூலம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்.

* சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்துவந்தால், வாயுத் தொல்லையே இருக்காது.

* அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.

* வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.

* வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது.

* நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.

* மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.

* கால் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு டப்பில் விட்டு, அதில் கல் உப்பையும் போட்டுக் கலக்கவும். அந்த வெந்நீரில், கால் பாதங்களைப் பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.

* பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால், நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.

* தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.

* சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு, ஒரு தம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

Monday, October 7, 2013

விழுங்கிய கடப்பாரைக்கு சுக்கு கசாயம்!?

பிரதமர் பதவிக்கு நிதீஷ்குமார் தகுதியானவர்-பாஜக தலைவர் சத்ருஹன் சின்ஹா புகழாரம்.

பீகாரில் 17 ஆண்டுகால நிதீஷ்குமார்-பாஜக கூட்டணி கடந்த ஜூன் மாதம் முடிவுக்கு வந்தது.அதை தொடர்ந்து மோடிக்கும் நிதீச்குமாருக்கும் அறிக்கை போர் நீடித்து வந்தது.

மோடி பிரதமர் பதவிக்கு லாயக்கற்றவர் என நிதீஷ் கூறிவந்த நிலையில் பாரதீய ஜனதாகட்சி தலைவர் சத்ருஹன் சின்ஹா பீகர் முதல்வரை புகழ்ந்து அறிக்கை விட்டுள்ளார்.

அதில் பீகாரின் முதல்வர் நிதீஷ்குமார் பிரதமர் பதவிக்குரிய அனைத்து தகுதிகளை உடையவர் எனவும்.அவரது பீகார் மாநில நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

இதனால் பாரதீய ஜனதா கட்சிக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மோடி ஒரு கேடினு சொல்ல இனியும் பலர் வருவார்கள்....! விழுங்கிய கடப்பாரைக்கு சுக்கு கசாயம் எல்லாம் வேலைக்கு ஆகாது காவிகளே !


மொத்தத்தில் காவி கூடாரம் தீப்பற்றி எரிகிறது.

Friday, October 4, 2013

தமிழ் மலையாளத்தில் வீர வரலாறு !

கோழிக்கோட்: குஞ்ஞாலி மரைக்காயர் வீர வரலாறு மலையாளத்திலும், தமிழிலும் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. மம்முட்டி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை அமல் நீரத் இயக்குகிறார். 40 கோடி ரூபாய் செலவில் இந்தப் படம் உருவாகிறது.

அடுத்த வருட ஆரம்பத்தில் கோழிக்கோட்டில் இந்தப் படம் வெளியிடப்படும். ஆகஸ்ட் சினிமா என்ற தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. முதலில் இந்தப் படம் மலையாளத்திலும், தமிழிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்படும். படம் வெளிவந்த பின்னர் தெலுங்கிலும், ஹிந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்படும்.

மொத்தம் நான்கு குஞ்ஞாலி மரைக்காயர்களின் வீர வரலாறுகள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. எந்தக் குஞ்ஞாலி மரைக்காயரின் வரலாறு இத்திரைப்படத்தில் இடம் பெறுகின்றது என்று படத்தின் வெளியீட்டாளர்கள் தெளிவு படுத்தவில்லை.

இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த வந்த போர்த்துக்கீசியர்களுக்கெதிராக தங்கள் உயிரை துச்சமாக மதித்து வீரத்துடன் குஞ்ஞாலி மரைக்காயர்கள் போரிட்டார்கள். இந்திய சுதந்திரத்தின் வித்துக்களாக இவர்கள் போற்றப்படுகிறார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் துவக்கப் புள்ளிகளே இவர்கள்தான்!

இந்தப் படம் வெளிவந்தால் அதிக செலவில் எடுக்கப்பட்ட வரலாற்றுப் படமாக இது இருக்கும்.


Tuesday, October 1, 2013

ரோஜா உதடுகளை பெற!!

உதடுகள் அழகாக ரோஜா போன்ற  சிவப்பாக இருக்கத்தான் அனைவரும் விரும்புவார்கள்,ஆனா அவைகளை பராமரிப்பதில்லை. உதடுகளின் வெடிப்புகளுக்குத் தகுந்த சிகிச்சையை செய்ய பலரும் முயல்வதில்லை. வெறும் உதட்டு சாயம் உதடுகளை அழகாக காட்டாது. முறையான எளிய வைத்தியத்தை மேற்கொண்டாலே போதும்.

உதடு வெடிப்புக்கு: சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும்.

இப்படிப்பட்டவர்கள் பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தாலும், உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

ரோஜாப்பூவின் இதழ்களை எடுத்து காய்க்காத பசும்பாலில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து எடுத்து நன்றாக பிசைந்து அதை உதட்டில் தடவி வந்தால் உதட்டின் வறட்சி, உதடு வெடிப்பு குறைந்து உதடு சிவப்பாகும்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!