Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, September 29, 2013

வளைந்த‌ முதுகில் நிமிர்ந்த பா(ட்டி)ரதம்!

மூம்பையிலிருந்து தமிழகம் வந்துக் கொண்டிருந்த ரயிலில் பிச்சைக்காரர்கள் தொல்லை மிக அதிகமாக இருந்தது. முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளுக்கு கூட ஒருவர் மாற்றி ஒருவர் பிச்சை கேட்டு வந்துக் கொண்டிருந்தார்கள். இதில் சில இளம் பெண்கள் குழந்தைகளை வேறு சுமந்துக் கொண்டு வந்து பிச்சை கேட்டார்கள். அந்த குழந்தைகள் எப்போதும் தூங்கிக் கொண்டிருந்தன. செய்திகளில் வருவது போல் போதை மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுத்து தூங்க வைத்துவிடுகிறார்களா தெரியவில்லை.

இப்படி பிச்சைக் கேட்டு வந்துக் கொண்டிருந்தவர்களுக்கு இடையே ஒரு பாட்டி பூ விற்றுக் கொண்டு வந்தார்கள். நான் அந்த பாட்டியிடம் பூ இரண்டு முழம் வாங்கி எதிரில் இருந்த வயதான தம்பதிகளுக்கு கொடுத்தேன். பாட்டியின் பூக்கள் விற்று விட்ட படியால் கொஞ்சம் உட்காரலாமா என்று கேட்டார். நான் அவருக்கு இடமளித்து அவரோடு பேசத் தொடங்கினேன். அவரோ கன்னடத்தில்தான் பேசினார். கன்னடத்தில் எனக்கு அத்தனை பயிற்சி இல்லாதபடியால் எதிரில் இருந்த வயதான தம்பதிகள் மூலம் நான் கேள்வி கேட்க பாட்டி, தயங்கி தயங்கி பதில் சொன்னார்.

அதன் பின்னர் பாட்டிக்கு தெலுங்கு தெரியும் என்று தெரிந்துக் கொண்டு நான் அவரோடு தெலுங்கில் உரையாடினேன். பாட்டிக்கு சொந்த ஊர் மந்தராலயா பக்கத்தில் உள்ள அனந்தபூர் என்றார். பாட்டியின் பெயர் நர்ஸம்மா, வயது எவ்வளவு என்று தெரியாதாம். கணவர் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன என்றும், தன் குழந்தைகளை இப்படி பூ விற்றே வளர்த்ததாயும் சொன்னார். சில வருடங்களுக்கு முன் பாட்டியின் ஒரு மகள் இறந்துவிட்டதால், அந்த மகளின் கணவன் (மருமகன்) வேறு ஒரு திருமணம் செய்துக் கொண்டு வேறெங்கோ சென்றுவிட்டானாம். அவன் விட்டு சென்ற‌ இரண்டு மகள்களை பாட்டிதான் வளர்க்கிறாராம்.

பூ விலை மிக அதிகமாக இருப்பதால் பெரிய வருமான‌ம் இல்லை என்றார். ஒரு நாளைக்கு சராசரியாய் நாற்பது முதல் ஐம்பது ரூபாய் கிடைக்குமாம். அதை வைத்துதான் இத்தனை காலமாய் குடும்பம் நடத்துகிறாராம். இப்போது பெரிய பேத்திக்கு பதினைந்து வயது ஆகிவிட்ட படியால் அவளும் அக்கம் பக்கத்தில் வீட்டு வேலை செய்து சம்பாதிக்க தொடங்கியுள்ளதாய் சொன்னார். கடைசி வரை சுயமரியாதையோடு சொந்த காலில் வாழ்ந்தால் போதும், வேறு ஒன்றும் வேண்டாம் என்றார் நர்ஸம்மா.

இளமையோடு இருப்பவர்களே பிச்சை எடுத்து திரியும் சூழ்நிலையில் தள்ளாத வயதில் கூட பாட்டியின் சுயமரியாதை என்னை ஆச்சரியப்படுத்தியது. ஒரு நூறு ரூபாய் தாளை அவரிடம் கொடுத்து, உங்கள் மகன் கொடுப்பதாய் நினைத்துக் கொள்ளுங்கள் என்றேன். அதை பணிவாக மறுத்துவிட்டு, ஏதாவது பழம் வாங்கி கொடுங்கள் என்றார். ஆப்பிளும் ஆரஞ்சும் வாங்கி தர, சந்தோஷமாய் வாங்கிக் கொண்டார் பாட்டி. மந்தராலயா ஸ்டேஷன் வந்ததும் விடை பெற்றார் நர்ஸம்மா பாட்டி. கூண் போட்டு நடந்த அவரின் வளைந்த‌ முதுகுகளில் நிமிர்ந்த பாரதம் தெரிந்தது.

Thursday, September 26, 2013

மோடிக்கு மகுடி ஊதும் ஜால்ராக்கள்!!

மோடிதான் அடுத்த பிரதமர் இந்தியா முழுவதும் மோடி அலை வீசுகின்றது.மோடிக்கு ஆதரவு ஊற்றெடுத்து பெருகி ஓடிக்கொண்டிருக்கின்றது என்று அநேக பில்டப்புகளை கொடுத்து ஊடகங்கள் செய்யும் அட்டூழியங்கள்தான் தற்போது அதிக பக்கங்களை ஆக்கிரமிக்கும் செய்தியாக உள்ளது. கருத்துக்கணிப்பில் மோடிதான் முன்னணியில் உள்ளார் என்று கூறி கருத்து திணிப்பை இப்போதிருந்தே மீடியாக்கள் செய்ய ஆரம்பித்துவிட்டனர். 

மோடி என்ற நரமாமிசப் பிரியரை பிரதமராக்காமல் ஓயமாட்டோம் என்று மீடியாக்கள் உறுதிமொழி ஏற்றதுபோல அவைகளின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன. அரியானாவில் மோடி உரையாற்றக்கூடிய நிகழ்ச்சியை தமிழ்நாட்டிலுள்ள தந்தி டிவி நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடிய அளவிற்கு மோடிக்கு ஆதரவாக மகுடி ஊதி வருகின்றனர் நமது மீடியாக்கள்.

திருச்சியில் பா.ஜ.க. சார்பாக நடைபெறவுள்ள மாநாட்டில் மோடி உரை நிகழ்த்த உள்ளார். அந்த மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் குவிய உள்ளார்கள் என்று இவர்கள் காட்டும் பில்டப்புகள் எல்லை கடந்து செல்கின்றன. மோடிக்கு மிரட்டல் உள்ளதால் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தேவை; அவர் குண்டு துளைக்காத மேடையில் நின்று உரையாற்றப்போகின்றார். அவருக்கு ரஜினி ஆதரவு தரப்போகின்றார்; இதற்கென தனியாக பாடல் ரிங்டோன்களை பா.ஜ.க. அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து தனியாக பிரச்சார சிடிக்கள் வெளியிடப்பட்டுள்ளன; சாமானியர்கள்; தொழிலாளர்கள்; தொழில் அதிபர்கள் என அனைத்து தரப்பு மக்களுடைய ஆதரவும் மோடிக்குத்தான் என்று இவர்கள் மோடியை புகழ்ந்து தள்ளி எழுதுவதைக்காணும் போது தமிழகத்தையும் குஜராத்தாக மாற்றாமல் ஓயமாட்டார்கள் போலும் என்ற சந்தேகம் நமக்கு எழும்புகின்றது.

குஜராத் போன்று ஒட்டுமொத்த இந்தியாவையும் மாற்றுவதுதான் இவர்களுக்கு விருப்பமாம். ஆம்! குஜராத்தில் எப்படி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை மோடி கருவறுத்து இரத்த ஆறு ஓட்டினாரோ அதுபோல இந்தியா முழுவதும் இரத்த ஆறு ஓடவிடவேண்டும் என காவிக்கரை படிந்த மீடியாக்கள் எதிர்பார்க்கின்றனர் போலும். மோடி கலந்து கொண்டு உரையாற்றவுள்ள திருச்சி மாநாட்டிற்கு வருகை தருவதற்காக ஒரு லட்சம் பார்வையாளர்கள் ஆனலைன் வாயிலாக தங்களது பெயர்களை 10ரூபாய் பணம் கட்டி பதிவு செய்துள்ளனர் என்று கதையளந்தது தான் இதில் உச்சகட்ட ஜால்ராவாக இருந்தது.

1லட்சம பேர் அளவிற்கு ஆனலைன் வாயிலாக இவர்களது மாநாட்டிற்கு வருகை தர பதிவு செய்யக்கூடிய அளவிற்கா இவர்களது தொண்டர்கள் கணினியுடனும், இணையதளத்துடனும் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். அந்த அளவிற்கா அனைத்து விஷயங்களையும் இணையதளத்தில் அப்டேட்டாக இவர்கள் வைத்துள்ளார்கள் என்று ஆச்சர்யப்பட்டுப்போய் அவர்களது இணையதளத்தை விசிட் செய்தோம்.

பிஜேபியின் தமிழக இணையதளத்தில் நிகழ்ச்சிகள் என்ற பகுதியில் அவர்களது அன்றாட நிகழ்ச்சிகள் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. அதில் கடைசியாக அப்டேட் செய்யப்பட்ட நிகழ்ச்சியை பார்த்தால் காரித்துப்பி விடுவீர்கள். ஆம்! கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி மின்வெட்டைக் கண்டித்து மாணவர்களிடம் கையெழுத்து வாங்கிய செய்திதான் கடைசியாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

அதாவது கிட்டத்தட்ட ஒன்னே முக்கால் ஆண்டுகளுக்கு முன்பாக அப்டேட் செய்யப்பட்டதுதான் இவர்களது லேட்டஸ்ட் செய்தியாம். இந்த லட்சணத்தில்தான் இவர்களது இணையதள அப்டேட் இருக்கின்றது என்றால் இத்தகைய சூரப்புலிகள்தான் ஆன்லைன் வாயிலாக ஒரு லட்சம் பேர்களை பதிவு செய்துள்ளார்களாம். கேட்பதற்கே மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களைத்தான் ஒன்றுமில்லாத விஷயங்களைக்கூறி, பொய் செய்திகளைப் புனைந்து மிகப்பெரிய சாதனை மன்னர்களைப் போல காட்ட முயல்கின்றனர். இதிலிருந்த இந்த மீடியாக்களின் கோர புத்தி தெளிவாகின்றது.

மோடியை கதாநாயகனாக சித்தரிக்கும் இதே வேலையில் அந்த நரபலி நாயகன் செய்த மிருக வெறிச்செயல்களை, இரத்தம் குடித்த கொடூரத்தை வசதியாக மறைத்து இந்த காட்டுமிராண்டியை மனித நேய விரும்பியைப்போல காட்டி மனித நேயத்தை குழிதோண்டி புதைக்கும் வேலையையும் இந்த மீடியாக்கள் செய்து வருகின்றனர்.

இவற்றையெல்லாம் காணும்போது இதற்கு முன்பு வாஜ்பேய் ஆட்சிக்காலத்தில் இந்தியா ஒளிர்கின்றது என்று சொல்லி காட்டப்பட்ட பில்டப்புகள் தான் நமக்கு ஞாபகத்திற்கு வருகின்றன. இந்தியா ஒளிர்கின்றது; நாடு முழுவதும் வாஜ்பேயி அலை வீசுகின்றது. வாஜ்பேயிதான் அடுத்த பிரதமர். இவரைப்போல ஒரு சாது கிடையாது; இவர்தான் உலக அளவில் இந்தியாவை தூக்கி நிறுத்தினார் என்றெல்லாம் சொல்லி தேர்தல் பிரச்சாரம் செய்தனர். கடைசியில் வாஜ்பேயி மண்ணைக்கவ்வினார். பா.ஜ.க. படுதோல்வி அடைந்தது. அதுபோலத்தான் இவர்கள் மோடிக்கு கொடுக்கும் பில்டப்புகளும் இறைவனின் அருளால் புஷ்வாணமாகிப்போகவுள்ளது என்பதை தற்போதைக்கு சொல்லி வைக்கின்றோம். 
கடையநல்லூர் மசூது.

நினைவில் கொள்ளுங்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஊழல் மட்டும்தான் நடக்கும். ஆனால் மத(ம்) பிடித்த தீவிரவாதி மோடி ஆட்சிக்கு வந்தால் உயிருடன் வாழவே முடியாது.

Tuesday, September 24, 2013

ஓடிப் போகும் பெண்களே உஷார்!!

பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும், உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.

உங்களுடைய தோழிகள் அந்நிய ஆணோடு ஓடிப்போக போகிறாள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, தோழிகளே சற்று சிந்தியுங்கள், உங்கள் தோழிகளை நரக படுகுழியில் தள்ளிவிட நீங்களும் ஒரு காரணமாக ஆகிவிடாதீர்கள், நீங்கள் நினைத்தாள் மட்டுமே ஒடிபோவதை தடுத்து நிறுத்தலாம்.

நீங்கள் அதுபோல விஷயம் தெரியவந்தால் உடனே அப்பெண்ணின் பெற்றோர்களுக்கோ, அல்லது உறவினருக்கோ தயவு செய்து அறிவித்து விடுங்கள். ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும், நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள்.

இன்னும் சிலப்பெண்கள் எனக்கு தாய், தகப்பனும் வேண்டாம், அண்ணன் தம்பியும் வேண்டாம் உங்களுடைய சொத்தும் வேண்டாம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு போலி அன்பு காட்டி நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது நீ இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்றெல்லாம் சொல்லி ஆக்கிரமிக்கபடுகிறாள்.

இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள். இறுதியில் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள்.

அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறாள்.. இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான். ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம்.

உங்கள் பிள்ளைகளுக்கு நேரடியாகவே அழகான முறையில் எடுத்துசொல்லுங்கள் இது போன்ற தவறுகள் இனி நடப்பது முற்றிலுமாக அகற்ற படவேண்டும் சிறப்பு கண்காணிப்பு நடத்த படவேண்டும் பெற்றோர்கள் பெண்களை விழிப்போடு தொடர்ந்து கவனிக்கப்படவேண்டும். பாதிக்க பட்ட பெண்கள் மற்றும் இனி’வரும் காலங்களில் இது போன்று சில மிருகங்களிடம் தன்னுடைய வாழ்க்கையே துளைத்து விட கூடாது என்பதே இந்த கட்டுரையின் நோக்கமே தவிர ஆண்களை குறை கூறுவதற்கு இல்லை .காதலில் உண்மையானவர்களையும் நம் கண் முன்னே பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் பெண்களை போதை பொருளாக நினைத்து அவர்களை பேதைகளா ஆக்க படுவதை தான் வன்மையாக நாம் கண்டிக்கிறோம்.

Sunday, September 22, 2013

வன்மம் மிகுந்த வந்தேறி ஊடகங்கள்!!

“மேற்கு வங்கத்தில் 27 துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சாம் சரன் கோவையில் கைது அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த சில ஆண்டுகளாக அவர் வேலை பார்த்து வந்துள்ளார்”.

இது பத்திரிகைச் செய்தி இதை வைத்துக்கொண்டு சில ஊடகப் பொருக்கிகள் வெளியிடும் அவதூறு இருக்கி்றதே... வன்மம் மிகுந்தது.

காவல்துறையை பொறுத்த அளவில், இலங்கையில் இருந்து தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள் யாராக இருந்தாலும், அது குழந்தையாக இருந்தாலும் விடுதலைப்புலி.

அதேபோலத்தான் இந்த ஊடகப் பொருக்கிகளுக்கு வட இந்தியாவில் இருந்து வேலை நிமித்தமாக யார் வந்தாலும் அவர்கள் மாவோயிஸ்ட்டுகள், தீவிரவாதிகள், திருடர்கள், கொள்ளையர்கள்.

இந்தப் பொருக்கிகள், ‘மாவோயிஸ்ட்டுகள், தீவிரவாதிகள், திருடர்கள், கொள்ளையர்கள்’ என்று யாரை கை காட்டுகிறான்கள் என்று பார்த்தால், இங்குள்ள நிறுவனங்களில் கிட்டத்தட்ட கொத்தடிமை வேலை பார்க்கும் தொழிலாளர்களைத்தான்.

மேம்பால வேலைகள், பில்டிங்குகள் உள்ளிட்ட கட்டுமான நிறுவனங்களில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளிகளையும் இவர்கள் விட்டு வைப்பதில்லை.

இங்குள்ள நிறுவனங்கள், அந்த வடநாட்டு தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சி கொழுப்பு சேர்த்துக்கொள்வது குறித்து, தரகு தொழில் பார்க்கும் இந்த ஊடகப் பொருக்கிகள் ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை.

இப்போது சாம் சரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதால், தமிழ் நாட்டில் இருக்கும் ஒட்டு மொத்த வடமாநிலத் தொழிலாளர்களும் கூற்றவாளிக் கூண்டில் மீண்டும் ஒருமுறை நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இனி, விசாரனை என்ற பெயரில் காவல்துறையால் அவர்கள் பிழிந்தெடுக்கப்படுவார்கள்.

காவல்துறை என்ன எழுதிக் கொடுக்கிறதோ, அதை நான்கைந்து எக்ஸ்ட்ரா பிட்டோடு எழுதி வாந்தியெடுக்கும் இந்த ஊடகப் பொருக்கிகள். 
வெப்பன் ஜிஹாத், லவ் ஜிஹாத் என்று எழுதி எழுதி புளித்துப் போனதால், புதுமையாக "பாலியல் ஜிஹாத்" என்ற ஒன்றை கண்டுபிடித்துள்ளது தினத்தந்தி. பாலியல் ஜிஹாத் என்ற பெயரில் அந்த நாளேடு வெளியிட்டுள்ளது.

இப்போ நமது கேள்வி இந்துக்கள் புனிதமாக கருதும் பகவத் கீதை எழுதிய பார்ப்பனர்கள்தான் என்பது அனைவரும் அறிந்ததே மேலே நாம் படித்ததுபோல் கீதையிலும் இதுபோன்று பொய்யையும் புரட்டையும் எழுதி இருக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் அறிவுள்ளவர்களே சிந்தியுங்கள்.  

Thursday, September 19, 2013

காலை உணவில் கவனம் தேவை!

பொதுவாக உண்ணும் உணவு செரிமானமாவதற்கு இரைப்பையில் சுரக்கும் அமிலம் தான் உதவியாக உள்ளது. ஆனால் இந்த அமிலமானது அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது, அவை இரைப்பையை அரிக்க ஆரம்பித்து, வயிற்றில் எரிச்சலை உண்டாக்குகிறது. இவ்வாறு வயிற்றில் ஏற்படும் அதிகப்படியான எரிச்சலைத் தான் அமில சுரப்பு அதாவது acidity என்று சொல்வார்கள். 

இத்தகைய அமில சுரப்பு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, வறுத்த மற்றும் காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது, அதிகமாக புகைப் பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்றவைக் குறிப்பிடத்தக்கவை. மேலும் காலை உணவைத் தவிர்ப்பது, வெறும் வயிற்றுடன் நீண்ட நேரம் இருப்பது, கொழுப்பு உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது போன்ற வையும் அமில சுரப்பை ஏற்படுத்தக்கூடியவையே. இத்தகைய அமில சுரப்பைச் சில அறிகுறிகள் கொண்டு அறியலாம்.

அவை நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி, உணவு உண்ட பின் ஒரு மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேரத்திற்குள் வயிற்றில் வலி அல்லது எரிச்சல் ஏற்படுவது, அடிக்கடி ஏப்பம், வாயில் கசப்பு சுவையை உணர்வது, அடிக்கடி பசி எடுத்தல் போன்றவை. ஆகவே இத்தகைய அறிகுறிகள் இருந்தால், அப்போது உடனே அதனை குணப்படுத்துவதற்கான முயற்சி யில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அவை பெரும் பிரச்சனையை உண்டாக்கிவிடும். அதிலும் அமில சுரப்பைப் போக்குவதற்கு எங்கும் செல்ல வேண்டாம். அதனை சரி செய்ய பல இயற்கை முறைகள் உள்ளன. அவைகளைப் பின்பற்றி வந்தாலே, அமிலசுரப்பை எளிதில் குணப்படுத்தலாம்.

தண்ணீர் - தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் இரண்டு கோப்பை தண்ணீர் குடித்து வந்தால், அமில சுரப்பு வராமல் தடுக்கலாம்.

முட்டைகோஸ் - இதன் சாறை நாள்தோறும் அருந்தி வந்தால் அமில சுரப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மோர் - மோருடன் ஒரு மேசை கரண்டி கொத்துமல்லி சாறு கலந்து தினமும் குடித்து வந்தால், அமில சுரப்புக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

கிராம்பு - கிராம்பு மிகவும் காரமாகத் தான் இருக்கும். இருப்பினும் அதனை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், அமில சுரப்பு பிரச்சனையைப் போக்கலாம்.

தேன் மற்றும் ஆப்பிள் – உணவு உண்ணுமுன் ஒரு மேசை கரண்டி தேனுடன், இரண்டு மேசை கரண்டி ஆப்பிள் சாறு கலந்து குடித்தால், அமில சுரப்பு வராமல் தவிர்க்கலாம்.

புதினா சாறு - உணவைச் சாப்பிட்டு முடித்த பின், கொதிக்கும் நீரில் புதினா இலையைப் போட்டு கொதிக்க விட்டு, பின் குளிர வைதது குடித்தால், அமில சுரப்புக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.

இளநீர் - பல மருத்துவ குணம் கொண்ட இளநீரை, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அமில சுரப்பு குணமடையும்.

வெள்ளரிக்காய் - வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. அத்தகைய வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், அமில சுரப்புக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

துளசி இலை - அமில சுரப்பு, வாயு தொல்லை, குமட்டல் போன்றவற்றிற்கு துளசி இலை ஒரு சிறந்த நிவாரணியாகும்.


குறிப்பு: உடம்புக்கு எப்படி ஓய்வு தேவையோ அதேபோல் குடலுக்கும் ஓய்வுதேவை ஆதலால் இரவில் குறைவாக உண்பது அதுவும் படுக்கை செல்ல ஒரு மணி தியாலங்களுக்கு முன் உணவு உண்பது ஆரோக்கியமானது. (அதிக உணவு சாப்பிடுபருக்கு காலையே சிறந்தது).

Tuesday, September 17, 2013

அரங்கேற்றப்பட்ட நாடகம் அம்பலம்!

தான் செய்த  படுபாதாக செயலை மறைக்க எப்படியெல்லாம் பாடுபடுகிறது காவி கும்பல்.

ஜெயய்ப்பூரில் அரங்கேற்றப்பட்ட நாடகம் அம்பலம்!!

மோடியின் கூட்டத்துக்காக முஸ்லிம்கள் அணியும் தொப்பி - ஸ்கார்ப் - புர்கா ஆர்டர்.

ராஜஸ்தான் மாநிலம் 'ஜெயய்ப்பூரில்' நாளை (10/09) நடந்த நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்துக்காகத்தான் இவ்வளவும்.

முஸ்லிம்கள் அணியும் தொப்பி, பெண்கள் அணியும் ஸ்கார்ப் - புர்கா போன்ற ஆடைகள் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, ராஜஸ்தான் பாஜக தலைவரான 'வசுந்தரா ராஜே'விடம் கேட்கப்பட்டபோது, இதை ஒப்புக் கொண்ட வசுந்தரா ஆம், மோடியின் கூட்டத்துக்காக என்றார்.

பேரணியில் கலந்துகொள்பவர்கள் முஸ்லிம்கள் அணியும் தொப்பியும் பெண்கள் பர்தா அணிந்தும் வரவேண்டும் என பாஜக மேலிட ஆலோசனையின் பேரில்  "டிரஸ் கோட்" முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

கேட்டால் 'அஜ்மீர் தர்கா' யாத்ரீகர்கள் பேரணியில் பெருமளவில் கலந்து கொண்டதாக செய்தியில் வெளியிட செய்ய திட்டம் தீட்டி செயல்பட்டுள்ளனர்.

ஹிந்து ஆண்கள், பெண்கள் இருபாலரையும் முஸ்லிம்கள் அணியும் தொப்பி, புர்கா அணிவிக்கப்பட்டு 'ஆள்மாறாட்டம்' செய்தும், கூட்டத்தை காண்பிக்கும் முயற்சியில் ராஜஸ்தான் பாஜக ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதற்காக, 8,000 தொப்பி, 12,000 புர்கா, சில ஆயிரம் ஸ்கார்ப் களுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் 'மோடியின் கூட்டத்தில் அலை மோதிய முஸ்லிம்களின் கூட்டம்' என்ற தலைப்பில் மீடியாக்களின் விளம்பரம் பெற்று, முஸ்லிம்களும் பாஜக பக்கம் வரத்துவங்கி விட்டது போன்ற ஒரு மாயை ஏற்படுத்தும் முயற்சியில் உள்ளனர்.

குறிப்பு : மோடியின் 'ஹைதராபாத்' கூட்டத்துக்காக முதலில் பதிவு செய்ததே ஒரு முஸ்லிம் பெண்கள் போல  அனிந்து வந்த இந்து  பெண்கள்தான், இது காவிகளின் பித்தலாட்டமும், ஆரிய விபச்சார  ஊடகத்தின் பில்டப்பும்.

@மோடி என்கிற அயோக்கியனை பிரதமராக்க எத்தனை அயோக்கியத்தனங்கள்.

Sunday, September 15, 2013

உண்மையான கொள்ளைக்காரன் யார்?


ஒரு வங்கியில் கொள்ளை அடிக்கும் பொழுது கொள்ளைக்காரன் " யாரும் நகராதீர்கள், பணம் நாட்டின் உடையது, உங்கள் உயிர் உங்களுடையது " என்றான்.

எனவே அனைவரும் அமைதியாக இருந்தனர்,இது தான் "மனம் மாற்றும் கருத்து.

ஒரு பெண் மேசையில் படுத்திருந்தாள், ஒரு கொள்ளைக்காரன் "நங்கள் கற்பழிக்க வரவில்லை கொள்ளையடிக்க வந்திருக்கிறோம், ஒழுங்காய் கீழே உக்காரு " என்றான்.

இது தான் "தொழில் முறை யுக்தி", கவனம் சிதறாமல் இருப்பதற்கு.


கொள்ளையடித்து விட்டு வீட்டுக்கு திரும்பும் போது ஒருத்தன் கேட்டான் "எவ்வளவு பணம் இருக்குது னு எண்ணுவோம்".

இன்னொருவன் " அட முட்டாளே, டிவி'ல நியூஸ் போடுவாங்க அதுல பாத்துக்கலாம்" என்றான்.

இது தான் "அனுபவம்" என்பது, திறமைகளை விட பெரியது.

அவர்கள் கொள்ளை அடித்து சென்ற பிறகு வங்கி மேலாளர், ஊழியரிடம் காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள் என்றார், ஆனால் அவன் "நாம ஒரு 10 கோடி எடுத்துட்டு, மொத்தம் 50 கோடின்னு கணக்கு சொல்லிடலாம்" என்றான்.

இது தான் "அலைகளை நோக்கி நீந்து" என்பது.

அதை கேட்டு மேலாளர் சொன்னார், "மாதா மாதம் கொள்ளை நடந்தால் நல்லா இருக்கும்"

இது தான் "அலுப்பின் வெறுப்பு", வேலையை விட சொந்த சந்தோசம் தான் முக்கியம் இவர்களுக்கு.

மறுநாள் டிவி'யில் 100 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது என்று செய்தி வந்தது. அந்த கொள்ளைக்காரன் ஆக்ரோஷத்துடன் "நாங்கள் உயிரை பணயம் வைத்து 30 கோடி தான் கொள்ளை அடித்தோம், ஆனால் அவர்கள் 70 கோடி கொள்ளை அடித்துவிட்டனர், கொள்ளை அடித்தவனை விட படித்தவனே மிக கேவலமாக நடந்து கொள்கிறான்"

இதுவே "அறிவு தங்கத்துக்கு நிகரானது" என்று சொல்லப்படுகிறது.

அந்த வங்கி மேலாளர் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தார், கொள்ளை சம்பவத்தால் தான் இழந்த பங்கு சந்தையை மீட்டார்.

இது தான் "வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது".

இப்பொழுது சொல்லுங்கள், இதில் யாரு உண்மையான கொள்ளைக்காரன்.

Friday, September 13, 2013

தெரிந்து கொள்வோமா தடய அறிவியல்!

தடய அறிவியல் அல்லது தடயவியல் (Forensic Science) என்பது அறிவியலின் உதவியுடன் குற்றச்செயல்களை ஆராயும் ஓர் துறையாகும். குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் தடயங்களை எடுத்து, அவற்றை சோதனைச் சாலைகளில் ஆராய்ந்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அளவிலான சாட்சியங்களாக தடயவியல் வல்லுனர்கள் மாற்றுகின்றனர். 

குருதி, எச்சில், மயிர், வாகனச் சக்கரங்கள் மற்றும் காலணிகளின் அச்சு, கைரேகை, காலடி தடங்கள் வெடிபொருட்கள், உடலின் பிற திரவங்கள், மதுபானங்கள் போன்றவற்றை தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து முக்கியமான துப்புகளைத் தருகின்றனர். அறிவியல் பூர்வமான ஆதாரங்களாக இவை அமைகின்றன. இது தவிர கையெழுத்து மோசடிகள் குறித்து ஆராய்வதும் இத்துறையில் அடங்கும். வழக்குகளை தீர்க்க உதவும் தகவல்களைச் சேகரித்து தடயவியல் வல்லுனர்கள் காவல்துறைக்கு உதவுகின்றனர். 

மருந்தியல், சோதனை, கள அறிவியல் என்ற மூன்று வகையில் தடவியல் பணி அமைகிறது. காவல்துறை, சட்டஅமலாக்க துறை, பல்வேறு வகையான சட்ட அமைப்புகள், அரசு மற்றும் தனியார் துப்பறியும் நிறுவனங்கள் முதலியன தடய அறிவியல் துறையை நாடுகின்றன.

[1]தற்காலத்தில் பெண் தடய அறிவியல் ஆய்வாளர்கள் இப்பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்: Police forensic investigation in Ashton-under-Lyne, England, using a tent to protect the crime scene. இன்று நவீன தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்படும் சைபர் குற்றங்கள், மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படும் மருந்துகளை கொண்டு நடத்தப்படும் குற்றங்கள் என குற்றத்தின் வளர்ச்சிக்கேற்ப இந்தக் குற்றங்களைக் கண்டறிய காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் உதவியாக இருப்பது தடய அறிவியல் ஆகும். கொலை, பாலியல் ரீதியான தொந்தரவுகளை டி.என்.ஏ மூலம் கண்டறிவது, குண்டுவெடிப்பு நடைபெற்ற இடங்களில் கிடைக்கும் தடயங்களை வைத்து அது எந்த மாதிரியான குண்டு என்று கண்டறிவது, ஒரு சில வழக்குகளில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி அல்லது ஆயுதம் எந்த வகையைச் சேர்ந்தது என்பது பற்றிய பல்வேறு முக்கிய தடயங்களை கண்டறிய தடய அறிவியல் வெகுவாக உதவி வருகிறது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள், போதைப் பொருட்கள் பயன்பாடு போன்ற குற்றங்களைக் கண்டுபிடிப்பதிலும், தடய அறிவியலின் பங்களிப்பு மகத்தானதாக இருந்து வருகிறது.

(2)[தொகு]தடய அறிவியல் துறையின் பயன்பாடுகள்: நடந்த குற்றத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கு, உண்மையை கண்கண்டறிதல், சரியான நபர்களை அடையாளம் காணுவதற்குத் தேவையான தடயங்களை எடுத்து அறிவியல் பூர்வமாக நிரூபித்தல் ஆகியவை தடய அறிவியலின் பணியாகும். மேலும் தடயவியல் வல்லுநர்கள் நேரடியாக எந்த வழக்கிலும் நுழைய முடியாது. காவல் துறை இவர்களது தேவையை கருதி அழைக்கும் போது குற்றம் நடந்த இடத்துக்கு செல்வர். குறிப்பிட்ட குற்றத்துக்கு என்று மட்டுமல்லாமல் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குண்டுவெடிப்பு, விபத்தில் இறந்த மற்றும் சிதைந்த உடல்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தடய அறிவியல் துறை மேற்கொள்கிறது.

[3][தொகு]தடயவியல் நிபுணரின் தகுதிகள்: தடய அறிவியலில் நிபுணருக்குத் தனித்திறனும், தடயங்களை மூன்றாம் கோணத்தில் பார்க்கும் அறிவும் தேவைப்படும். தருக்க சிந்தனையும், ஆர்வமும் உள்ளவராக இருக்க வேண்டும். இயற்பியல் அல்லது உயிரியல் பாடப் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். புள்ளியியல் தொடர்பான விவரங்களும் அறிந்திருப்பது பயன்தரும். விசாரணையின் போது நடுநிலைமை வகிப்பதும், மனப்பற்றின்மை, மத சார்பின்மை இல்லாதவராக இருப்பதும் தடயவியல் நிபுணருக்குரிய இன்றியமையாத தகுதிகளில் ஒன்று.

[4] [தொகு]பிரிவுகள்: தடய அறிவியலில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அவைகளுள் சில: கைரேகை, நுண்ணுயிரியல், உளவியல், பல்லமைப்பியல் (பல், ஈறு அமைப்பியலும் நோய்களும் பற்றிய துறை, (Odontology) நோக்குறியியல் (Pathology) [தொகு]தமிழகத்தில் தடய அறிவியல்.

ஆசியாவிலே சென்னையில் தான் முதன்முதலில் (1849-ம் ஆண்டு) தடய அறிவியல் துறை ஆரம்பிக்கப்பட்டது. சென்னை உட்பட ஒன்பது மண்டல அலுவலங்கள் இருக்கிறது. மேலும் 33 இயங்கும் தடய அறிவியல் (Mobile Forensic Science Laboratory) அலுவலகங்கள் இருக்கிறது. சென்னை அலுவலகத்தில் மட்டும் அனைத்து 14 சோதனைகளையும் செய்யும் வசதி இருக்கிறது.

[5] [தொகு]இந்திய கல்வி நிறுவனங்கள்: இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் தடயவியல் தொடர்பான கல்விகள் வழங்கப்படுகின்றன. மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் தடயவியல் அறிவியல் தொடர்பான மூன்றாண்டு பி.எஸ்சி. படிப்பு வழங்கப்படுகிறது. தில்லி பல்கலைக்கழகத்தில் குற்றத்தடயவியல் மாந்தவியல் (Forensic Anthropology) பிரிவில் பட்டயப்படிப்பு அளிக்கப்படுகிறது. கர்நாடக பல்கலைக்கழகத்தில் (Karnatak University) பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு குற்றவியல் மற்றும் கைரேகை அறிவியல் (Criminology and Forensic Science) விருப்பப் பாடமாகத் தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை அண்ணா பலகலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம் உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள புந்தேள்கண்ட் (Bundelhkand) பல்கலைக்கழகம், ஆக்ராவில் உள்ள பீமாராவ் அம்பேத்கர் (Bhimrao Ambedkar) பல்கலைக்கழகம். ஐதராபாது ஒசுமானியா பல்கலைக்கழகம். பாட்டியாலாவில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகம். ஒரிசாவின் (ஒடிசாவில்) புவனேசுவரில் உள்ள உத்கால் (Utkal) பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தடயவியல் தொடர்பான படிப்புகள் வழங்கப்படுகின்றன.

Wednesday, September 11, 2013

சோபன் பாபுவுடனான நெருக்கத்தை விவரிக்கும் ஜெயா!?

உருண்டோடும் உலக வாழ்வில் எத்தனையோ விஷயங்கள் கால வெள்ளத்தில் கரைந்து போகின்றன.

சோபன் பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது? அப்போது – ‘குமுதம்’ வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஜெயலலிதாவே, “ நானும் அவரும் கணவன் மனைவியாக குடித்தனம் நடத்துகிறோம்” – என்று பதிலளித்தார். அப்படியானால் – “உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதா?”- என்று ‘குமுதம்’ நிருபர் கேட்டார்.

’’திருமணம் செய்துகொண்டால்தான் கணவன் – மனைவி என்றாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் இணைந்து ஒன்றாகவே வாழ்கிறோம்” – என்றார் ஜெயலலிதா.


I Don"t bleave husband and wife. just Living ToGather is the best. Jaya. 

நாம் கேள்வி இப்படி ஒழுக்கமற்றவரை  தமிழக முதல்வராக தேர்ந்தேடுத்துக்கிறோமே இது சரியா? மேலும் தமிழக எம் எல் ஏ. க்கள் இவருக்கு குனித்து கும்புடு போடுகிறார்களே இது எவ்வளவு கண்டிக்கத்தக்க செயல் சிந்திப்பார்களா!?

Monday, September 9, 2013

மோடியை கைது செய்யுங்கள்! பரபரப்பு!?

போலி என்கவுண்டர் வழக்குகள் தொடர்பாக தற்போது சிறையில் உள்ள குஜராத் முன்னாள் டி.ஐ.ஜி வன்சாரா, அம்புகளை விட்டு விட்டு அம்பை ஏவிய நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவைக் கைது செய்யுமாறு எழுதியுள்ள ராஜினாமா கடிதம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. (காவிபயங்கரவாதி மோடியை அம்பலப்படுத்தி அப்ரூவர் ஆகும் வல்சரா!. எங்களை ஏவிய மோடியை கைது செய்யுங்கள் குஜராத் டி.ஐ.ஜி வன்சாரா பரபரப்பு கடிதம்.

யார் இந்த வன்சாரா?. 2007ல் சிறையில் அடைக்கப்படும் வரை குஜராத்தின் ‘Super Cop’ ஆக எல்லா அதிகாரமும் பெற்று திகழ்ந்தவர் தான் டி. ஜி. வன்சாரா குஜராத் மாநில டி.ஜி.பியாக இருந்த வன்சாரா நரேந்திர மோடிக்கு நெருக்கமானவராகவும் என்கவுண்டர் சிறப்பு அதிகாரிகளின் தலைவராகவும் இருந்தவர்.

சொஹ்ராபுதீன் என்கவுண்டர் வழக்கில் 2007ல் கைது செய்யப்பட்ட இவர் தற்போது இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக சிறையிலடைக்கப்பட்டுள்ள வன்சாரா, மனம் வெறுத்து தம் பதவியை ராஜினாமா செய்து எழுதியுள்ள தன் பத்து பக்க ராஜினாமா கடிதத்தில், மோடியின் வலதுகரமான அமித் ஷாவையும் மோடியையும் கடுமையாக விமர்சித்துள்ளார். அவரின் 10 பகக கடிதத்திலிருந்து வாசகர்களுக்காக சில முக்கிய துளிகள் மட்டும்:

1) குஜராத்தில் 2002 முதல் 2007 வரை நடைபெற்ற அனைத்து என்கவுண்டர்களும் அரசு உத்தரவின் படியே நடைபெற்றது. அரசின் உத்தரவையே காவல்துறை அதிகாரிகள் நிறைவேற்றினர்.

2) குஜராத் மாநிலத்தில் மட்டும் தான் 32 காவல்துறை அதிகாரிகள் என்கவுண்டர் வழக்குகள் தொடர்பாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுவிக்க அரசு எம்முயற்சியும் எடுக்காதது, அரசு தன் புதைகுழியைத் தானே தோண்டுவதற்குச் சமமானது.

3) காவல்துறை அதிகாரிகளுக்கு மத்தியில் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டதோடு காரியம் முடிந்தவுடன் அவர்களை உதாசீனப்படுத்தியவர் அமித்ஷா.

4) நான் கடவுளாக நினைத்திருந்த மோடிக்காக தான் இது வரை மெளனம் காத்தேன். ஆனால் அமித் ஷாவின் தீய சகவாசத்தின் காரணமாக என் கடவுள் என்னைக் காப்பாற்ற வரவில்லை.

5) டெல்லிக்குச் செல்லும் அவசரத்தில் உள்ள மோடி முதலில், தாம் திறமையான முதல்வர் என்று பெயரெடுத்திருப்பதற்குக் காரணமான 32 காவல்துறை அதிகாரிகளுக்குச் செலுத்த வேண்டிய கடனைத் திருப்பி செலுத்தட்டும்.

6) அமித்ஷாவை விடுவிக்க மிக அதிகப்பணம் ஊதியமாக கொடுத்து சிறந்த வழக்கறிஞரான ராம் ஜெத்மலானியை அமர்த்திய மோடி, தாம் உயர காரணமான காவல்துறை அதிகாரிகளை விடுவிக்க தவறி விட்டார்.

7) அரசின் உத்தரவை அமுல்படுத்திய நானும் என் சக காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளும் தவறெனில், நாங்கள் சொன்னதைச் செய்த அம்புகள் மட்டுமே. எங்களை இயக்கிய (காவிபயங்கரவாதி மோடி, அமித் ஷா போன்றோரை) அரசைச் சிறையில் அடைத்து தண்டனை வழங்குங்கள். இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Saturday, September 7, 2013

விஜய் ஜெயாவை சந்தித்திருந்தால்?

விஜய் நடித்த தலைவா படத்துக்கு சிக்கல் வந்தது அனைவரும் அறிந்ததே, படத்தை வெளியிடவேண்டி ஜெயாவிடம் விஜய் பேசியிருந்தால் எப்படி இருக்கும் அதுதான் கீழே.

ஜெயா:  இனிமேல் இது மாதிரி செய்வியா.

விஜய்: இல்லம்மா மாட்டேன்.

ஜெயா:  உங்கப்பா அண்ணா.. நீ என்ன எம்.ஜி.யாரா?

விஜய்: இல்லம்மா எங்கப்பா சும்மா..  நான் நம்பியாறு.

ஜெயா:  ஒருதடவ முடிவெடுத்துட்டா நீங்க பேசுறத நீங்களே கேட்க்க மாட்டீங்களாமே.

விஜய்: யாரோ தப்பா சொல்லி இருக்காங்க. நீங்க எடுக்குறதுதான் முடிவு அதை நான் கேட்டு நடப்பேன்.

ஜெயா:  இஸ் இட் டைம் டு லீட் ?

விஜய்: நோ மேடம் இட் இஸ் டைம் டு எஸ்கேப்.

ஜெயா:  அந்த பயம் இருக்கட்டும் ஆமா.


Thursday, September 5, 2013

ஆண்மைக்கு டாப் டென்!?

இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது இத்தகைய பிரச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் தான் காரணம். 

மேலும் கருவுறுதல் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களு தான் இருக்கும். எனவே இந்த மாதிரி பிரச்சனை என்றதும் பெண்கள் மட்டும் நல்ல சரியான உணவுகளை உண்டால் மட்டும் போதாது, ஆண்களும் தான் ஒரு சில உணவுகள் மற்றும் செயல்களை மேற்கொள்ள வேண்டும்.

பொதுவாக இந்த மாதிரியான பிரச்சனை வந்தால், அனைவரும் உடனே மருத்துவரிடம் சென்று அதற்கான தீர்வை சரிசெய்ய முயல்வார்கள். ஆனால் அவ்வாறு சென்று என்ன தான் சிகிச்சை மேற்கொண்டாலும், ஒரு சில உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் உணவுகள் மூலமும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். 

குழந்தை பெற நினைப்பவர்கள். மது, மாது, சிகரெட் பிடிப்பவராக இருந்தால், உடனே நிறுத்திவிட வேண்டும். ஏனெனில் அவையும் குழந்தை பிறப்பிற்கு தடையை ஏற்படுத்தும். இப்போது எந்த உணவுகளை ஆண்கள் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவை அதிகரிக்கலாம் என்று பார்ப்போமா!!!

1. பூண்டு இந்த உணவு ஆண் மற்றும் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின் பி6 இருப்பதால், இது இருபாலரும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதற்கான உணர்வை அதிகரித்து, கருவுறுதலுக்கு வழிவகுக்கும்.

2. மாதுளை இந்த சுவையான சிவப்பு நிற பழத்தை சாப்பிட்டால், ஆண்களின் விந்தணு அதிகரிப்பதோடு, அதன் சக்தியும் அதிகமாக இருக்கும்.

3. வாழைப்பழம் வாழைப்பழத்தில் விந்தணுவின் அளவையும், சக்தியையும் அதிகரிக்கும் வைட்டமின் பி1, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் புரோட்டீன்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, இதில் ப்ரோமெலைன் என்னும் நொதிப்பொருள் இருப்பதால், அவை உடலில் உள்ள உறவில் ஈடுபடுவதற்கான உணர்ச்சியை அதிகரிக்கும்.

4.பசலைக் கீரை பசலைக் கீரையில் ஃபோலிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. இது விந்தணுவின் உற்பத்தியை அதிகரித்து விந்தணுவில் உள்ள டி.என்.ஏ -வைப் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த உணவில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. எனவே தான், பசலைக் கீரை ஆண்களின் ஆண்மைத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது.

5. மிளகாய் மிளகாய் என்றதும் நம்பமுடியாது. ஆனால் உண்மையில் மிளகாய் விந்தணுவை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்களுள் ஒன்று. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், இவை எண்டோர்பின்கள் என்னும் ஒருவித சந்தோஷம்ன உணர்வைத் தூண்டக்கூடிய ஹார்மோன்களை விடுவிக்கும். இதனால் உடல்தளர்வடைந்துவிடும். மேலும் இதில் வைட்டமின் சி, பி, ஏ மற்றும் ஈ சத்துக்களும் உள்ளன.

6. தக்காளி இது பொதுவாக சமையலில் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் ஒன்று. இந்த உணவுப் பொருளில் விந்தணுவை ஆரோக்கியமாக்கவும், அதிகரிக்க செய்யும் கரோட்டினாய்டு லைகோபைன் உள்ளது. அதிலும இதனை பருப்புகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இல்லையெனில் தினமும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடிக்கலாம். இதனால் இயற்கையாகவே விந்தணுவின் அளவானது அதிகரிக்கும்.

7. தர்பூசணி தர்பூசணிப் பழத்தில் லைசோபைன் மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், விந்தணு அதிகரிப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

8. வைட்டமின் சி உணவுகள் வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதாலும், ஆண்கள் தங்களது விந்தணுவின் அளவை அதிகரிக்கலாம். அதற்கு வைட்டமின் சி நிறைந்துள்ள உணவுகளான சிட்ரஸ் பழங்கள் சரியானதாக இருக்கும்.

9. ஆப்பிள் பழங்களில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஆப்பிள் முதன்மையானது. அத்தகைய பழத்தை பெண்களை விட ஆண்கள் அதிகம் சாப்பிட்டால், விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். அதிலும் ஆப்பிள் சீடர் வினிகரை சாப்பிட்டால், நம்பமுடியாத அளவில் தீர்வு கிடைக்கும்.

10. முந்திரி ஸ்நாக்ஸில் சிறந்த உணவுப் பொருள் ஸ்நாக்ஸ் தான். அத்தகைய நட்ஸில் முந்திரிப் பருப்பு மிகவும் சுவையுடன் இருக்கும். எனவே இதனை ஆண்கள் மற்றும் பெண்கள் அவ்வப்போது ஸ்நாக்ஸாக சாப்பிட்டால், இதில் அதிகமாக இருக்கும் ஜிங்க் சத்து, கருவுறுதல் தன்மையை அதிகரிக்கும.

ன்ன விந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுககளை உண்டு பார்த்திடலாமா. 

Tuesday, September 3, 2013

தமிழை காத்த தமிழன்!

ஷாருகான் நடிக்கும் இந்தி படத்தில் தமிழ் பேசும் நாயகியின் தந்தையாக நடிக்க பெரும் தொகையுடன் சத்யராஜை அணுகியிருக்கிறார்கள்.

அப்போது சத்யராஜ் போட்ட சில கண்டிஷன்கள்தான் அவர் மேல் இருந்த மரியாதையை மேலும் பல மடங்கு உயர்த்தியது.

அதாவது ’ நான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடத்தப்படக்கூடாது?

நீங்கள் அபடியே படப்பிடிப்பை அங்கு நடத்தினாலும் நான் அங்கு வரமாட்டேன்! 

படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் கூட இலங்கையி நடத்தக்கூடாது!

தமிழ் நாட்டையோ தமிழர்களையோ கிண்டல் செய்வது மாதிரியோ இழிவு படுத்துவது மாதிரியோ காட்சிகள் அமையக்கூடாது? 

என்று பல கண்டிஷன்களைப் போட்டதோடு அதை காண்டிராக்ட் அக்ரிமென்டிலும் சேர்க்கச் சொல்லியிருகிறார் சத்யராஜ்.

காசுக்கு மாரடிக்கும் நடிகருக்கிடையில் தமிழை காத்த தமிழன் சத்யராஜ் 
வாழ்த்துக்கள்.

Sunday, September 1, 2013

ஊதி உலகை மறந்த சாதுக்கள்!?

விவேகா ஆனந்தன் என்ற ஒரு காவி டவுசருடன் விவாதம் செய்கையில் ஹரித்துவாரில் அம்மணமாக அலையும் (ஆ)சாமிகளை பற்றி கேட்க்கையில் அவன் அதற்கு பதில் சொன்னான் அவர்கள் உலகை துரந்தவர்கள் என்று.உலகை துறந்தவர்கள் எதற்கடா உலகில் சட்டத்திற்கு புறம்பாக பயிரிடப் பட்டு தாயரிக்கப்டும அபின், கஞ்சா போன்ற போதை மருந்துகளை பயன்படுத்துகிறார்கள் என்று கேட்டதற்க அந்த முண்டாசு மண்டையன் சொல்றான் அதனால் எந்த பாதிப்பும் யாருக்கும் ஏற்படாது என்று.

போதை மருந்துகளை பயன்படுத்தினால் யாருக்கும் எந்த பதிப்பும் ஏற்படாது என்றால் சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் எதற்கு போதை மருந்து கடத்தினால் மரணதண்டனை விதிக்கிறார்கள்??

போதை மருந்துகளை பயன்படுத்தினால் யாருக்கும் எந்த பதிப்பும் ஏற்படாது என்றால் அரபு நாடுகளில் எதற்கு 15 வருடம் கடும் காவல் தண்டனை பிறப்பிக்கிறார்கள்.??

போதை மருந்துகளை பயன்படுத்தினால் யாருக்கும் எந்த பதிப்பும் ஏற்படாது என்றால் கொரியா மற்றும் சைனா நாடுகளில் கண்டதும் சுட ஏன் உத்தரவு தருகிறார்கள்.??

போதை மருந்துகளை பயன்படுத்தினால் யாருக்கும் எந்த பதிப்பும் ஏற்படாது என்றால் அமெரிக்காவில் உயிரை பறிக்கும் ஊசியைப் போட்டு தண்டனை கொடுக்க ஏன் சொல்கிறார்கள் ??

போதை மருந்துகளை பயன்படுத்தினால் யாருக்கும் எந்த பதிப்பும் ஏற்படாது என்றால் ஜிம்பாப்வே போன்ற ஆப்ரிக்க நாடுகளில் தொக்கு தண்டநை ஏன் தருகிறார்கள்.??

அட உலகத்தை ஏன் சுற்றுவானே இந்தியாவிலும், இலங்கையிலும் கூடத்தான் போதை மருந்துகள் தடை செய்யப்பட்டும் அதை பயன்படுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை என்று சட்டம் உள்ளது.

முட்டாளே!! உலகமே உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தடை செய்த ஒரு பொருளை பக்தியின் பெயரால் செய்கின்றீர்களே உங்களை விடவா இந்த உலகில் வேறு மூடர்கள் காட்டு மிராண்டிகளும் இருக்கப் போகிறார்கள்??.

மனிதன் உடலுக்கு தீங்கை விளைவிக்கும் பொருள் மூலமாகவா இறைவன் உங்களை அவரை நெருங்க கட்டளை விதித்துள்ளார்.??

சல்லடை ஊசியை பார்த்து சொன்னதாம் உனக்கு ஒரு ஓட்டை இருக்கு என்று. கொஞ்சமாவது நீ உன் மூளையை பயன்படுத்தி இருந்தால் மக்களை பிரித்தால உருவாக்கப்பட்ட ஆரிய பார்ப்பன மதத்தில் நீ இருந்திருக்க மாட்டாய் என்று வரும்போது செல்லிவிட்டு வந்தேன்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!