Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, July 30, 2013

ஹிந்துக்கள் தீவிர மத வெறியர்களா!?

சுதிந்திரம் பெற்ற இந்தியாவில் தேசத் தந்தை என்று போற்றப் பட்ட காந்தியை படுகொலை செய்து விட்டு இஸ்மாயில் என்று பச்சை குத்தி முஸ்லிம்கள் மீது பழியை போட்டு மதக் கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்தவன் யார்??

மத வெறிப் பிடித்த காவி வெறியன்.ஆனால் பழியை சுமப்பது முஸ்லிம்கள். 

400 ஆண்டுகளுக்கு மேல் மக்களாள் வழிபாடு தளமாக பயன் படுத்தப் பட்டு வந்த பாபர் மஸ்ஜித் பள்ளிவாசலை ராமன் பிறந்த இடம் என்று சொல்லி அப் பள்ளியை தரை மட்டமாக்கியது யார்??

மதவெறிப் பிடித்த காவி வெறியர்கள் ஆனால் பழியை சுமப்பது முஸ்லிகள்.

ஹிந்து யாத்ரிகர்கள் சென்ற ரயிலை வேண்டுமென்றே கொளுத்தி அதை அப்பாவி முஸ்லிம்கள் மீது போட்டு குஜராத்தில் இனப் படுகொலையை நடத்தியது யார்??

மத வெறிப் பிடித்த காவி வெறியர்கள் ஆனால் பழியை சுமப்பது முஸ்லிம்கள்.

ஹைதரபாத்தில் முஸ்லிம்கள் வழிபாட்டு தளமான மக்க மஸ்ஜித் மீது தாக்குதல் நடத்தி 14 பேர் மரணம் அடையவும், 50 கும் மேற்பட்டோர் காயம் அடையவும் காரணமாக இருந்தவன் யார்??

மத வெறிப் பிடித்த காவி வெறியன் ஆனால் பழியை சுமப்பது முஸ்லிம்கள்.

ஹிந்துக்கள் வழிபடும் கோயிலின் உள்ளே பசு மாட்டு இறைச்சியை வீசி விட்டு முஸ்லிம்கள் மீது பழியைப் போட்டு மதக் கலவரம் ஏற்படுத்த நினைத்து மாட்டிக் கொண்டவன் யார்??

மத வெறிப் பிடித்த காவி வெறியன்.ஆனால் பழியை சுமப்பது முஸ்லிம்கள். 

கர்நாடகா மாநிலத்தில் இரவோடு இரவாக பாகிஸ்தான் நாட்டு கோடியை ஏற்றி அப் பழியை முஸ்லிம்கள் மீது போட்டு மதக் கலவரம் ஏற்படுத்த நினைத்து மாட்டிக் கொண்டவன் யார்??

மத வெறிப் பிடித்த காவி வெறியன் ஆனால் பழியை சுமப்பது முஸ்லிம்கள்.

மத சார்பற்ற நாடு என்று பீற்றிக் கொள்ளும் இந்தியாவில் ஆஸ்ட்ரேலிய நாட்டை சேர்ந்த ஒரு பாதிரியாரை அவர் கிறிஸ்தவ கொள்கையை மக்களுக்கு போதித்தார் என்ற காரணத்திற்காக அவரையும் அவர் குடும்ப உறுப்பினர்களையும் உயிரோடு வைத்து கொளுத்தி கொலை செய்தது யார்??

மத வெறிப் பிடித்த காவி வெறியன் ஆனால் பழியை சுமப்பது முஸ்லிம்கள்.

இப்படி சுதந்திர இந்தியாவில் அடுத்தவர் வழிபாட்டு தளங்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி, கலவரம் ஏற்படுத்த நினைத்து மாட்டிக் கொண்ட காவிக் கயவர்களின் சூழ்ச்சியின் பட்டியலை வரிசைப்படுத்தி கொண்டே செல்லலாம்.

ஆனால் இன்றுவரை இந்த காவிக் கயவர்களும் அவர்களை சார்ந்த சொம்பு நக்கிகளும் (ஆரியன்) மத வெறியர்கள் என்று திரித்து கூறுவது மாற்று கொள்கை கொண்ட மனிதர்களோடு நட்ப்போடும், பாசத்தோடும் பழக நினைக்கும் முஸ்லிம்களை கருவறுக்க துடிக்கிறார்கள் இந்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஏன்?.

இவர்களின் முகத்திரை மக்களிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கிழிந்து வருகிறது. விரைவில் ஹிந்துக்களே இவர்களை புறக்கணிப்பார்கள் இவர்கள் மத வெறி செயலுக்கு முற்றுப் புள்ளி வைப்பார்கள். (என்ன இந்த கொடிய செயலால் அனைத்து ஹிந்துக்களின் பெயரையும் கெடுக்கிறார்கள் ஹிந்துத்துவா தீவிரவாதிகள்).

Sunday, July 28, 2013

பல்லை பாதுகாப்பது எப்படி?

அவசர உலகத்தில் நாம் சிலவற்றை சரியாக கவனிக்க மறந்துவிடுகிறோம் அதில் பல்லும் ஒன்று அதை பேணுவது எப்படி.

கடைப்பிடிக்க வேண்டியவை:
1. தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். குறைந்தது இரண்டு நிமிடங்கள் மிருதுவான பல் துலக்கியைக் கொண்டு ஈறுகளில் முன்னும் பின்னுமாக இல்லாமல் 45 டிகிரி சாய்த்துப் பிடித்து மெதுவாகச் சுழற்றி துலக்க வேண்டும்.

2.  தவறாமல் உணவுக்குப் பின் வாயை அலசி படுக்கைக்குச் செல்லும் முன் பல் துலக்கும் பழக்கத்தைக் கொண்டு வரவேண்டும்.

3. தினமும் நாக்கைத் துலக்குவதுடன், ஈறுகளை குறைந்தது ஒரு நிமிடமாவது விரல்களால் மிருதுவாக அமுக்கி (மஸாஜ்) விடவேண்டும்.

4.  மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது பல்துலக்கியை கண்டிப்பாக மாற்ற வேண்டும்.

5. குளிர்பானங்களுக்கு பதிலாக அதிக அளவு தண்ணீர் அருந்துவதுடன் சத்தான கால்சியம், கனிமம், ஆரோக்கியமான வைட்டமின்கள் கொண்ட பால் பொருட்கள், கேரட், ஆப்பிள் போன்ற உணவுகளை உட்கொள்ளவேண்டும்.

6. பச்சிளங்குழந்தைகளுக்கு பால் கொடுத்த பின் மென்மையான ஈரத்துணியைக் கொண்டு குழந்தை வாயின் ஈறுகளைத் துடைத்து பற்களைப் பாதுகாத்திட வேண்டும்.

7. ஒவ்வொரு 6 மாத இடைவெளியில் பல் மருத்துவ நிபுணரிடம் பற்களை பரிசோதித்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:
1. ஈறுகள் பழுதாகும் விதமாக தீவிரமாக பல் துலக்குதல், கடுமையான பல்துலக்கியைப் பயன்படுத்துதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

2.அமிலம் கலந்த உணவுகள், பெப்சி, கோலா போன்ற மென்பானங்களைத் தவிர்ப்பதுடன், இனிப்பு மிகுந்த உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.

3.குழந்தைகளுக்கு பால் புட்டியில் பழச்சாறு கொடுப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

4.பச்சிளங்குழந்தைகளுக்கு உறங்கும்பொழுது பால், பழச்சாறு ஆகியவற்றை புட்டியில் வைத்து புகட்டும் பழக்கம் வேண்டாம். உணவு ஊட்டிய பின் தண்ணீர் கொடுத்து தூங்க வைக்கவேண்டும்.

5.எக்காரணத்தைக் கொண்டும் பற்களைக் கொண்டு பாலித்தீன் உறைகள், புட்டி மூடிகளைத் திறக்க வேண்டாம்.

6.  பல் வலி ஏற்படும்பொழுது விக்ஸ், கோடாலித் தைலம், ஜண்டு பாம் போன்ற வலி நிவாரணக் களிம்புகளை முகத்தில் தேய்த்தல் கூடாது..

Thursday, July 25, 2013

வீட்டில் இருந்தபடி வில்லங்கத்தை பெற!!

பொதுவாகவே ஈ சி (EC - Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம்.

ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. 

இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?

ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு.

இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும். சென்னை, கடலூர், கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் நம்ம திருநெல்வேலி அலுவலகங்களுக்கும் இது பொருந்தும். அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.

அது போக பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்கு சார்ஜ் 1ருபாய். கொரியரில் அனுப்ப ஒரு காப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.

அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது

உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப் பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும்.

அதற்கான இணைய தள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஈ.சி சர்டிபிகேட் ஆங்கிலத்தில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0

ஈ.சி சர்டிபிகேட் தமிழில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1

டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன்
http://www.tnreginet.net/igregn/webAppln/cert_document.asp

திருமணத்தை பதிவு செய்ய
http://www.tnreginet.net/english/smar.asp

சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/schit.asp

சொசைட்டி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/society.asp

லேண்ட் வேல்யூ சர்டிபிகேட் பெற
http://www.tnreginet.net/Guidelinevalue2012/gvaluemainpage2011.asp

Monday, July 22, 2013

ஆயுதம் ஏந்தியவன் ஆயுதத்தால் அழிந்தான்?
ஆயுதம் ஏந்தியவன் ஆயுதத்தால் அழிந்தான்?


அன்பிற்கினிய சொந்தங்களே இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து கீழ்தரமான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுக்கொண்டும், அதன் படி செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு தேசபக்த அமைப்பை பற்றி தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

மக்கள் பிரச்சனையை பேச சட்ட சபைக்கு அனுப்பினால் அங்கு அமர்ந்துக்கொண்டு ஆபாச படம் பார்ப்பதும், அமைச்சர் என்ற பெயரில் விபச்சாரத்தில் ஈடுபடும் பா.ஜா.காவையும், அதன் தாய் அமைப்பு என சொல்லப்படும் பயங்கரவாத அமைப்பான RSS அமைப்பை பற்றியும் இங்கு நான் கொஞ்சம் சொல்ல நினைக்கிறேன். 

நீங்கள் இந்த புகைப்படத்தில் பார்ப்பது RSS அமைப்பை சேர்ந்த 
பயங்கரவாதி ஒருவன் அப்பாவிகளை வெடிக்குண்டு வைத்து கொல்வதற்காக பயங்கரமான வெடிகுண்டுகளுடன் மோட்டார் சைக்கிளில் போகும் போது எதிர்பாராத விதமாக வெடித்து அவன் இறந்த செய்தியே.

இந்த காவி பயங்கரவாதிகளின் வரலாறு தான் என்ன,. தேச தந்தை காந்தியை கொன்றது முதல், இன்றைக்கு நடக்கும் குண்டுவெடிப்புகள் வரை அனைத்திற்கும் இந்த RSS அமைப்பு தான் முழு பொருப்பு என்பதை யாராலும் மறுக்க முடியுமா?

ஆனால் இவர்கள் அனைத்து சம்பவங்கலிலும் முதலில் தப்பித்து விட்டு இறுதியில் குட்டு உடைந்து மாட்டிக்கொள்வது தான் இவர்கலின் ஈனச்செயல்.

இந்தியாவில் மூன்றுமுறை தடை செய்யப்பட்ட அமைப்பு என்று இதை சொன்னால் நம்புவீர்களா நம்பி தான் ஆக வேண்டும். அவ்வளவு பயங்கரமானவர்கள் இந்த காவி தீவிரவாதிக
ள்.

எடுத்துக்காட்டாய் இந்தியாவில் நடந்த சில குண்டு வெடிப்புகளை பார்ப்போம்:

அஜ்மீர் தர்காவில் அக்டோபர் 11, 2007ல் குண்டு வெடித்து 3 பேர் கொல்லப்பட்டனர். இது ஹூஜி, எல்-இ-டி அமைப்புகளைச் சேர்ந்த ஜிகாதி பயங்கரவாதிகளின் கைவண்ணம் என்ற புலனாய்வு அதிகாரிகளின் கதையை பத்திரிகைகளும் ஆர்வத்துடன் பரப்பி வந்தன. கைது செய்யப்பட்டவர்களில் அப்துல் ஹபீஸ் ஷமீம், குஷிபுர் ரஹ்மான், இம்ரான் அலி ஆகியோர் அடங்குவர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் போலீஸ் தேவேந்திர குப்தா, விஷ்ணு பிரசாத், சந்திரசேகர் பட்டிதார் என்ற மூன்று பேரை கைது செய்தது. Rss உறுப்பினரான குப்தாதான் அந்த குண்டை வெடிக்கச் செய்த மொபைல் தொலைபேசியையும் சிம் கார்டையும் வாங்கினார் என்று தெரிய வந்தது. குண்டு வெடிப்புக்கு சில வாரங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட சுனில் ஜோஷி திட்டமிட்டவர்களில் முக்கியமானவர் என்று அறிவிக்கப்பட்டது.

பெங்களூர் குண்டுவெடிப்பும் மொபைல் மூலம் வெடிக்க வைக்கப்பட்டதே. அதற்கு இன்னும் விசாரனை முடியவில்லை.

ஹைதராபாத் மே 18, 2007ல் ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர்; 50 பேர் காயமடைந்தனர்.’உள்ளூர் உதவியுடன் ஹர்கத்-உல்-ஜிகாத்-எ-இஸ்லாமி (HuJI) என்ற அமைப்புதான் இதைச் செய்திருக்க வேண்டும்’ என்று ஹைதராபாத் போலீஸ் சொன்னது. 80 முஸ்லீம்கள் அடைத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு 25 பேர் குற்றம் செய்ததாக ஒத்துக் கொள்ள வைக்கப்பட்டனர்.ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு, ‘அஜ்மீர் குண்டு வெடிப்பிலும் மெக்கா மசூதி குண்டு வெடிப்பிலும் ஒரே மாதிரியான மொபைல் போன்-சிம் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன’ என்பது சி.பி.ஐ. விசாரணையில் தெரிய வந்தது. ‘பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ்-டி.என்.டி. வெடிமருந்து கலவை இந்திய இராணுவத்தில் பயன்படுத்தும் விகிதத்திலானது’ என்றும் தெரிய வந்தது. இப்ராஹிம் ஜூனைத், ஷோயிப் ஜாகிர்தார், இம்ரான் கான், முகமது அப்துல் கலீம் உள்ளிட்ட பலர் விடுதலை செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் டாங்கே மற்றும் ராமச்சந்திரா கல்சங்காரா பற்றிய தகவல் சொல்பவர்களுக்கு ரூ 10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று ஜூன் 2010ல் போலீஸ் அறிவித்தது. லோகேஷ் ஷர்மா என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவை அச்சுறுத்தும் காவி பயங்கரவாதிக
ளின் அசிங்கம் மற்றும் அயோக்கியத்தனங்களை இனி வரும் காலங்களில் தேசபக்த முகத்திரையை கிழித்து இதன் பயங்கரவாத நடவடிக்கையை மக்கள் முன்னிலையில் வைப்போம். 

Friday, July 19, 2013

குத்தாட்டகாரியின் கு(கி)றுக்கு புத்தி?

குத்தாட்டகாரியின் கொடுரச்செயலை கேட்க நாதியில்லை? வஞ்சக எண்ணத்தை இன்னமும் புரிந்து கொள்ளாத முட்டாள்களை என்ன சொல்வதென்று புரியவில்லை. 

ஆட்சி நிர்வாக அறிவுள்ள ஒரு நல்ல அரசாக இருந்தால் நாட்டில் தலைவிரித்தாடும் விலைவாசியை கட்டுபடுத்தி ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பலனடையும் வகையில் விலை குறைப்புக்கு வகை செய்து குறைந்த விலையில் உணவுப்பொருள் கிடைக்க வழி செய்திருக்க வேண்டும். 

ஆனால், அதை கட்டுபடுத்தும் நிர்வாக அறிவில்லாத, வக்கில்லாத, வழி தெரியாத ஜெயா, மக்களின் கோபத்தை, வெறுப்பை, திசை திருப்பும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த அம்மா இட்லி கடை, அம்மா காய்கறிகடை, அம்மா தண்ணீர் பாட்டில் போன்ற தற்காலிக காமெடி திட்டங்கள் என்பதை யோசிக்க மறுக்கிறார்கள். (இதில் ஒன்றை மறந்து விட்டார் அம்மா  சாராய கடை இந்த திட்டம் உண்மையாக மக்களுக்கான திட்டமாக இருந்தால் நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும், நிஜமான ஏழ்மை நிலையில் இருக்கும் கிராமப்புறங்களிலும் நடைமுறை படுத்தியிருக்கவேண்டும். ஆனால், எந்த அரசாலும் இது சாத்தியமில்லை என்பதுதான் நிஜம்.

வரப்போகும் தேர்தலில் ஓட்டுக்காக மட்டுமே தொடங்கப்பட்ட இந்த தற்காலிக திட்டங்கள் தேர்தலுக்கு பிறகு முடங்கப்போவது உறுதி. நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசிடமிருந்து பெறும் நிதியை இந்த மாதிரி உருப்படாத தற்காலிக திட்டங்களுக்கு செலவு செய்து விட்டு நாட்டின் அடிப்படை வளர்ச்சிக்கான திட்டங்கள் முடக்கப்படுதால் வருங்கால தலைமுறை அவதிப்படப்போவதை யாரும் சிந்திப்பதில்லை, 
அல்லது சிந்திக்க மறுக்கிறார்கள்?.

Wednesday, July 17, 2013

தி கிரேட் நாய் சர்க்கஸ் தென்னிந்தியாவில்?


அறிய வாய்ப்பை நழுவ விட்டுவிடாதீர்கள். தி கிரேட் நாய் சர்க்கஸ் மறந்துவிடாதீர்கள். பார்த்தவர்கள் எவரும் பாராட்டாமல் செல்லவில்லை இந்த நாயை.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு தெரு நாயின் சர்க்கஸ் வெறும் 5ரூபாய்க்கு அதுவும் வெறும் 5ரூபாயில்.


ஆச்சரியமாக இருக்கிறாகிறா? ஆம்! இந்த மத வெறி நாய் கடித்துதான் குஜராத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தார்கள்.

ஆச்சரியம் ஆனால் உண்மை அதுவும் தென்னிந்தியாவில் என்பதை அவசியம் சொல்லி தான் ஆக வேண்டும்.

வெறும் 5 ரூபாய் டிக்கெட் எடுத்து மதவெறி பிடித்த ஒரு நாயின் பல சாகசங்களை நேரிலேயே கண்டு மகிழலாம்.

நீங்கள் படத்தில் பார்ப்பது போன்று (மோடி) பல நாய்களை நேரிலேயே பார்க்கலாம்.

நின் இடத்திலேயே காலில் விழுவதும், பட்டென்று சக நாய்களால் அசிங்கப்படுத்தபடுவதும் இன்னும் என்னற்ற சாகசங்கள்..

மறந்துவிடாதீர்கள், மறந்து இருந்து விடாதீர்கள். 

இந்தியாவின் ஒட்டுமொத்த வெறிநாய்களும் சொறிநாய்கலின் தலைமையில் பங்கு பெறும்.

தி கிரேட் மோடி நாய் சர்க்கஸ்- பாரதிய ஜல்ஸா பார்ட்டி.

= தமிழக சொறிநாய் பிரிவு -  ஹெச்,ஐ,வி. பார்ப்பன கும்பல்கள் சங்கம். 
குறிப்பு: இந்த சொறி நாய்தான் (மோடி) நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு அலைகிறது பிரதமர் பதவிக்கு ஏனென்றால் மூவர்ண தேசிய கொடியை எடுத்துவிட்டு ஒரே கலர் காவியை திணிக்கத்தான் அலைகிறதும் இந்த தெரு நாய் (நாய்கள் மன்னிக்க).

Monday, July 15, 2013

நாமும் இப்படி செய்து பார்த்தால் என்ன?

நண்பர்களே இரண்டு நிமிடம் ஒதுக்கி இந்த பதிவை படித்து உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். வீட்டிலேயே தயாரிக்கலாம் மின்சாரம்.

குறைந்த செலவில் வீட்டிலேயே காற்றாலையை அமைத்து மின்சாரம் தயாரித்து வருகிறார்கள் இரண்டு இளைஞர்கள்.

தமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின்சாரத் தட்டுப்பாட்டினால் பொதுமக்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் தங்கள் மின்சாரத் தேவைகளுக்காக, ஜெனரேட்டர் மற்றும் இன்வெர்ட்டர் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். மின்சாரத் தட்டுப்பாட்டைத் தீர்க்க புது முயற்சியாக, உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்த சுரேஷ், ராமு என்ற இரு இளைஞர்கள், ஆறாயிரம் ரூபாய் செலவில் காற்றாலையை உருவாக்கியுள்ளனர்.

சுரேஷ், ஐ.டி.ஐ. படித்தவர். ராமு, எலெக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார். பெரிய காற்றாலைகள்போல் இல்லாமல், வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைத்து இயக்கக்கூடிய வகையில் இந்தக் காற்றாலையை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.

சுரேஷ் வீட்டின் மொட்டை மாடியில் 15 அடி உயர கம்பம் வைத்து அதில் 3 பி.வி.சி. பிளாஸ்டிக் பைப்புகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இறக்கைகளைப் பொருத்தியுள்ளனர். அதில் டைனமோவைப் பொருத்தி இறக்கைகளை சுழலுமாறு வடிவமைத்துள்ளனர். டைனமோவின் ஒரு பகுதியில் சிறிய அளவிலான சக்கரத்தை ஒரு பெல்ட் மூலம் இணைத்துள்ளனர். இதனால் காற்றின் வேகத்திற்கு ஏற்றவாறு இறக்கைகள் சுற்றும்போது அதன் மூலம் டைனமோ மின்சாரம் இயக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.

எங்கள் வீட்டில் மின்சாரத் தட்டுப்பாட்டைப் போக்க காற்றாலை மூலம் புதிய மின் உற்பத்தியை தொடங்கத் திட்டமிட்டோம். ஆனால், காற்றாலையை உருவாக்க, எங்களுக்குப் போதுமான உதிரி பாகங்கள் கிடைக்கவில்லை. இதனால் நாங்களே உதிரி பாகங்களை உருவாக்கினோம். பி.வி.சி. பிளாஸ்டிக் பைப்களை வெட்டி இறக்கையாக மாற்றினோம். அதேபோல கிரைண்டரில் பயன்படுத்தும் சக்கரத்தை இதில் பயன்படுத்தியுள்ளோம். டைனமோவில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை, ஒரு மின் கம்பியின் உதவியுடன் பேட்டரியில் சேமிக்கிறோம்" என்கிறார் சுரேஷ்.

ஜெனரேட்டர், இன்வெட்டர் போன்ற சாதனங்களை வாங்கினால் அதிக செலவாகும். வெறும் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவழித்து காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம். இதை அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தலாம்" என்கிறார் ராமு.

மின்தட்டுப்பாடு இல்லாத நேரத்தில்கூட, சுரேஷின் வீட்டில் அவர் தயாரித்திருக்கும் காற்றாலையிலிருந்து பெறப்படும் மின்சாரமே பயன்படுத்தப்படுகிறது. இதனால், மாதம் ரூ.600 மின் கட்டணம் செலுத்தி வந்த சுரேஷ், தற்போது 300 ரூபாய் மட்டுமே கட்டணம் செலுத்துகிறார்.

தேசிய நெடுஞ்சாலைகள், கடலோரப் பகுதிகளில் அதிக அளவு காற்று அடிப்பதால், அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் அனைத்து தேவைகளுக்கும், காற்றைக் கொண்டு தயாரிக்கும் மின்சாரத்தையே பயன்படுத்தலாம். இதற்குத் தேவையான பொருள்களை நிறுவனங்கள் செய்து கொடுத்தால், இன்னும் குறைவான செலவில், அதிகளவில் உற்பத்தியைக் கொடுக்க முடியும்" என்கின்றனர் இந்த இளைஞர்கள்.

சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் இந்த இளைஞர்களை ஊக்குவிப்பதுடன் மக்களுக்கும் உதவும் நோக்கத்துடன் செயலில் இறங்க விண்ணப்பிக்கும் தமிழ் உள்ள
ம்.

Friday, July 12, 2013

வர்ணங்களில் வாட்டர் சப்ளை செய்யும் மாநிலம்?

அகமதாபாத்: இந்தியாவின் அடுத்த பிரதமருக்கான பி.ஜே.பி.யின் வேட்பாளர் என்று விளம்பரப்படுத்தப்படும் நரேந்திர மோடி முதலமைச்சராக இருக்கும் குஜராத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் எடுப்பதிலும்கூட - ஜாதி வாரியாக நேர ஒதுக்கீடு - தண்ணீர்க் குழாயில்கூட நான்கு வர்ணம் என்னும் மனுதர்மக் கொடி பறக்கிறது.

மனுதர்மம் குறிப்பிடுகிறது முதலில் பார்ப்பனன், பிறகு சத்திரியன், அடுத்து வைசியர், இறுதியாக சூத்திரர்கள் பகுத்தறிவற்ற விலங்குகளிடம்கூட இல்லாத இந்த பாகுபாட்டை ஆரியர்கள் தங்களின் வயிறு வளர்க்க உழைப்பில்லாமல் வாழ்நாள் முழுக்க உண்டுகொழுக்க வழிகண்டு அதை சட்டமாக எழுதி வைத்தனர். சில ஆண்டுகளாக அடங்கி இருந்த இந்த மனுதர்ம கோடரி மீண்டும் தன்னுடைய மழுங்கிப்போன கூர் முனையை தீட்டிக்கொண்டு புறப்பட்டுள்ளது. கூர்முனையை தீட்டுவது மனுவின் புதல்வராக தன்னை உலகிற்கு காட்டிக்கொள்ளும் (இந்து மக்களின் பாதுகாவலன்) மோடியின் மாநிலமான குஜராத்தில்தான் அதுவும் தலைநகரின் அருகில் அகமதாபாத்தில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள தன்வாதா (ப்ஹவியா வட்டம்) இந்த ஊரில் உள்ள பஞ்சாயத்துத் தண்ணீர் தொட்டியில் ஜாதீய பாகுபாட்டை நேரடியாக பறைசாற்றும் வாக்கியம் உள்ளது. முக்கியமாக தலித்துகளுக்கு எதிரான ஜாதி வன்மம் இதில் அடங்கியுள்ளது. இப்படி பாகுபாடு பார்ப்பது தேசிய குற்றவியல் சட்டப்படி தண்டனைக்குட்பட்டது. 

ஜாதிவாரியாக நேரம்: காலை 9 மணிமுதல் 10 மணிவரை பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதி படேல் இனத்தவருக்கு மட்டும்.

காலை 10 முதல் 12 (மதியம்) மணிவரை பர்வாதா வங்கிரீஸ் மற்றும் கும்பார்.

நண்பகல் 12 முதல் (மதியம்) ஒரு மணிவரை தலித் இனத்தவருக்கு என எழுதியுள்ளனர். 

இந்தக் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் நிமிஷா தோனியா என்ற பெண் ஆவார், ஆனால் அவர் வீட்டில் ரொட்டி சுடுவதை தவிர வேறு ஒன்றும் செய்வதில்லை; பஞ்சாயத்து நிர்வாகம் அனைத்தையும் அவரது கணவர் ப்ரதாப்சிங்தோனியா தான் நிர்வகிக்கிறார்.

இந்த வாசகம் எழுதியதைக் குறித்து அவர் பெருமைப்படுகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு இதில் என்ன தவறு இருக்கிறது? பரம்பரை பரம்பரையாக நாங்கள் செய்து வந்ததைத்தான் செய்கிறோம். இதில் ஜாதிவன்மம் என்று பெயர் சொல்லி நீங்கள் தான் புதிய பிரச்சினையை கிளப்புகிறீர்கள். இந்த ஊரில் உள்ள எந்த தலித்தாவது இது குறித்து ஒன்றுமே சொல்வது கிடையாது. எங்கள் ஊர்மக்களுக்கு தெரியும், எப்படி வாழ்வது என்று. பத்திரிக்கையாளர்களான நீங்கள் வந்து புதிதாக எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கவேண்டாம், என்கிறார். பஞ்சாயத்துத் தலைவர் எங்கே?

உங்கள் மனைவி தானே பஞ்சாயத்துத் தலைவர், அவர் எங்கே எனக் கேட்டதற்கு, அவர் எதற்கு, அதுதான் நான் இருக்கிறேனே, என்று சர்வசாதாரணமாகக் கூறியவர், மேலும் ஒரு அதிர்ச்சியான செய்தியை சொல்கிறார். இங்கு மட்டுமல்ல; குஜராத்தில் எந்த ஊருக்கும் சென்று பாருங்கள் இப்படித்தான் இருக்கிறது. இது குறித்து நகர நிர்வாக அதிகாரியுடம் கேட்டபோது, அவர் நகரத்தின் அருகில் இருப்பதால் வேலைக்குச் செல்பவர்கள், பள்ளிக் கூடம் செல்பவர்களுக்கு ஜாதிப்பாகுபாடு என்கிறார்.

குழாய்களிலும் ஜாதிப்பிரிவு: அதுமட்டுமல்ல இந்த ஊரில் குடிநீர் எடுத்துச்சொல்லும் குழாய் கள் கூட தொட்டியில் இருந்தே 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. உயர் ஜாதிக்காரர்களுக்கு அவர்களின் தெருவிற்கென தனியாகக் குழாய் கள். அவை; அவர்களின் வீட்டின் குளியலறை வரை நீள்கிறது. பிற் படுத்தப்பட்டோருக்கு என்று தனியாக குழாயும், தலித் மக்களுக்கு என்று தனியாக குழாயும் உள்ளது. தலித் மக்கள் ஊருக்கு வெளியில் வாழ்வதால் அங்கு ஒரே ஒரு குழாய் தான் அதுவும், எல்லோருக்கும் சென்ற பிறகு தண்ணீர் திறந்து விடப்படுவதால் ஒரு நாளைக்கு சில குடங்கள் கூட தலித் குடும்பத்தின ருக்கு கிடைப்பதில்லை, தன்வாதா கிராமத்தில் மற்ற இனத்தாரை விட தலித் மக்கள்தான் அதிகம் வசிக்கின்றனர்.

எட்டாண்டுகளாக இதே நிலைதான்: இதுகுறித்து அந்தக் கிராம தலித் குடும்பத்தார் கூறும் போது புதிதாக பஞ்சாயத்து வந்தபிறகு கடந்த 8 ஆண்டுகளாக இந்த நிலைதான், முதலில் ஊரில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது; ஆகையால் நாங்கள் தூரத்தில் உள்ள குளங்களில் சென்று தண்ணீர் கொண்டு வருவோம். ஆனால் இன்று குழாய் போட்ட பிறகு ஏதோ தண்ணீர் கிடைக்கிறது. இந்தப் பாகுபாட்டை கூறி நியாயம் கேட்டு கிளம்பினால், எங்களுக்கு இப்போது கிடைப்பதும் கிடைக்காமல் போகும் என்றார். மேலும் சில நாள்களாக எங் களுக்கு மறைமுகமாக மிரட்டல்கள் வர ஆரம்பித்து விட்டன. உங்க ளுக்குத் தண்ணீர் கிடைக்கிறதா? கிடைக்கவில்லை என்றால் கூறுங்கள்; அதை விட்டுவிட்டு புகார் கூறுவது போன்ற நடவடிக்கை எடுத்தால் இருக்கிற தண்ணீரும் கிடைக்காமல் போய்விடும் என் கிறார்கள். நகரத்திற்கு செல்லும் பேருந்தில்கூட எங்களுக்கு இடம் கொடுக்க மறுக்கிறார்கள், கேட்டால் என்ன கலெக்டர் வேலைக்கா செல்கிறீர்கள்? தெருக்கூட்டத்தானே செல்கிறீர்கள்? அதற்கு அவசரமாக போகத்தேவையில்லை என்று சொல்கிறார்கள், என அந்தக் கிராமத்தை சேர்ந்த தலித் குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

இது உணர்த்துவது என்ன? மனிதர்களை மொழியால், இனத்தால், நிறத்தால், தேசத்தால் ஒருபோதும் ஒன்றுபடுத்த முடியாது. ஒரே கடவுள் என்ற அடிப்படையிலும், மனிதர்கள் அனைவரும் ஆதம், ஹவ்வா என்ற ஆண், பெண்ணிடமிருந்து உருவானவர்கள் என்ற அடிப்படையிலும் மட்டுமே 
ஒன்றுபடுத்த முடியும்.

Tuesday, July 9, 2013

உணவுக்கு பின் குளிர்பானம் அருந்துவது சரியா?

"உணவு" உட்கொண்ட உடன் ஜில் தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு காரணம் உண்ட உணவில் உள்ள எண்ணெய். கொழுப்புகளை ரத்த நாளங்களில் இந்த கொழுப்பு படியச் செய்வதே இதற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர்களான ஜப்பானிய பெண்களின் சராசரி அதிகபட்ட ஆயுட்காலம் 92. ஆண் ஜப்பானியர்கள் 84 வயது வரை உயிர் வாழ்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களின் உணவுப் பழக்கம். பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். உணவு உண்ட உடன் வெதுவெதுப்பான வெந்நீர் உட்கொள்வதும், கிரீன் டீ அருந்துவதும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. (கொழுப்பு உறைந்து விடும்).

நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் இன்றைக்கு பெரும்பாலும் பிரிட்ஜில் வைத்த ஜில் தண்ணீரை அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கிராமமோ, நகரமோ இன்றைக்கு குளிர்ந்த நீர்தான். கோடை காலம் தொடங்கிவிட்டது இனி காலை உணவில் தொடங்கி இரவு உணவு வரைக்கும் நம் நாட்டவர்கள் உபயோகிப்பது ஜில் தண்ணீர்தான் தான். இவ்வாறு குளிர்ந்த நீர் அருந்துவது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். இது இதயத்தை பாதிக்கிறது. புற்றுநோய்க்கும் வழி வகுக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

உணவு உண்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால், சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம்’ என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்"..!!
*இதயநோயாளிகள் பாதிப்பு*, மாரடைப்பு நோய் உள்ளிட்ட இதயநோய்க்கு ஆளானவர்கள் சாப்பிடும்போது கூல் வாட்டரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஜில் தண்ணீர் குடிப்பதனால் வேறு பல தீமைகளும் ஏற்படுத் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்கள் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே ஜில் தண்ணீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள் அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.

Saturday, July 6, 2013

இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் தமிழகம்?

சென்னை: கடந்த ஆண்டு இந்திய சாலை விபத்து மரணங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என தேசிய குற்ற ஆவணங்கள் மையம்(நேசனல் க்ரைம் ரிக்கார்ட்ஸ் பீரோ) கூறுகிறது.

கடந்த ஆண்டு இந்திய அளவில் 4.40 லட்சம் சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன அவற்றில் 1.39 லட்சம்பேர் இறந்திருக்கின்றனர்.  தமிழ்நாட்டில் நிகழ்ந்த 67,757 விபத்துக்களில் 16,175 பேர் இறந்தனர். இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதற்கான காரணங்களை ஆராயும் சென்னைச் செய்தியாளர் கோபாலனின் பெட்டகம் அதற்கு முந்தைய ஆண்டு, 2011லும் தமிழ்நாட்டில்தான் மிக அதிக அளவில், 65,873 விபத்துக்கள், 15,422 மரணங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் 2012ல் ஒவ்வொரு மாதமும் மிக அதிகமான சாலை விபத்துக்கள் நிகழ்ந்ததும் தமிழ்நாடு, மஹாராஷ்டிரம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் தான் எனவும் ஆவண மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் நீண்டகாலம் பணியாற்றி புதுடெல்லி, திருவனந்தபுரம் உள்ளிட்ட மாநகரங்களின் சாலைப்போக்குவரத்து மேம்பாட்டுப் பணிகளுக்குத் தலைமை வகித்த என்.எஸ்.ஸ்ரீனிவாசன் குடிபோதையில் ஓட்டுவது, போதிய பயிற்சியின்மை, தேவையில்லாத வேகம் இவற்றாலேயே விபத்துக்கள் என விளக்குகிறார்.

மேலும் வாகன ஓட்டிகள் தவறு செய்தாலும் அவர்களை மன்னித்து காப்பாற்றும் வகையில் சாலைகள் வடிவமைக்கப்படவேண்டும் என வலியுறுத்துகிறார் ஸ்ரீனிவாசன்.மாநில போக்குவரத்து திட்டமிடல் மையத்தின் தலைவர் காவல்துறையின் கூடுதல் டைரக்டர் ஜெனரல் எஸ்.ராஜேந்திரன் மற்ற மாநிலங்களைப்போலல்லாமல் தமிழ்நாட்டில் விபத்துக்கள் அனைத்தும் உடனடியாகப் பதியப்படுவதால் அதிக விபத்துக்கள் என்பதான தோற்றம் நிலவுகிறது என்றார். ஆனால் நாம் சரிவர கண்காணிக்கிறோம் என்பதைத்தான் புள்ளி விவரங்கள் காட்டுவதாக அவர் கூறினார்.

மற்றபடி தேசிய நெடுஞ்சாலைகளில்தான் மிக அதிகமான விபத்துக்கள் நிகழ்வதாகவும் அவற்றைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.மேலும் ஓட்டுநர்களுக்குப் பயிற்சி அளிப்பது, அவர்களது கண்பார்வை நிலையினை கண்காணிப்பது எல்லாவற்றிற்கும் மேலாக பாதுகாப்பான சாலைகளை வடிவமைப்பதுஇப்படிப் பல தளங்களில் அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்து செயல்பட்டு விபத்துக்களைக் குறைத்து பாதுகாப்பான சாலைப் பயணத்தினை உறுதிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் ராஜேந்திரன்.

Wednesday, July 3, 2013

லஞ்சத்தை ஒழிக்க ரூபாய் நோட்!!

இந்தியாவை சேர்ந்த பிசிக்ஸ் புரபசர் ஒருவருக்கு டக்கென ஒரு ஐடியா உதித்தது லஞ்சத்தை ஒழிக்க ஏன் பூஜ்ஜியம் ரூபாய் நோட்டை தயார் செய்ய கூடாது என நினைத்தார் உடனே உருவாக்கியும் விட்டார். 

ப்ரின்டிங் பிரஸ்ஸில் இதை கலர் ப்ரின்ட் எடுத்தார். லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகளிடம் இந்த நோட்டை லஞ்சமாக கொடுக்க சொல்லி நண்பர்கள், உறவினர்களிடம் சொன்னார். இந்த கான்செப்டுக்கு பலத்த வரவேற்பு இருந்தது.அவர் இதை யதேச்சையாய் ஐந்தாம் தூண் என்ற என்.ஜி.ஓ அமைப்பிடம் சொன்னார்.

அந்த அமைப்பின் தலைவர் விஜய் ஆனந்த் என்பவருக்கு இந்த ஐடியா பிடித்து போக உடனே அவர் 25,000 நோட்டுகளை அச்சடித்தார்.அதை வட இந்தியாவெங்கும் வினியோகம் செய்ய நோட்டுகள் பரபரவென மக்களிடையே பரவின அதன் பின் நோட்டுகளை மக்கள் அதிக அளவில் கேட்க இதுவரை சுமார் பத்துலட்சம் நோட்டுக்களை அச்சடித்து மக்களிடையே வினியோகித்துள்ளது இந்த அமைப்பு

ரெவென்யு டிபார்ட்மெண்டில் லஞ்சம் கேட்டதால் நடையாய் நடந்து அலுத்த பெண் ஒருவர் லஞ்சம் கேட்ட அதிகாரி ஒருவரிடம் இந்த நோட்டை கொடுத்தார்.உடனே அந்த அதிகாரி சீட்டை விட்டு எழுந்து நின்று இரு கைகளையும் கூப்பி இவரிடம் மன்னிப்பு கேட்டு வருடகணக்கில் நகராமல் இருந்த பைலை முடித்து கொடுத்தார் இந்த நோட்டு இத்தனை பெரிய மாஜிக்கை ஏற்படுத்தும் என அந்த அம்மையார் நம்பவே இல்லை.

ஏன் இந்த நோட்டு வட இந்தியாவில் இத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது? லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் இந்த நோட்டை பார்த்தால் முதலில் பயந்துவிடுகிறார்கள் என்கிறது உலகவங்கி.அடுத்து லஞ்சம் என்பது சட்டபடி தண்டனை கிடைக்கும் குற்றம்.லஞ்சம் கொடுக்க வசதியற்ற மக்கள் இழப்பதற்கு ஏதுமில்லை என்ர நிலையில் இந்த நோட்டை தருகின்றனர். அலுவலகங்களில் இப்படி ஏராளமான ஏழை எளிய மக்கள் இந்த நோட்டுக்களை அளித்து வருவதால் அதிர்ந்து போன அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை நிறுத்தி விட்டு சொன்ன வேலையை செய்து தருகின்றனர்

இந்த பூஜ்ஜியம் ரூபாய் நோட்டு கான்செப்ட் தமிழ்நாட்டிலும் கிடைக்கின்றது. இந்த
9094024005 .(FACT INDIA) கைபேசி எண்ணில் தொடர்புகொண்டாள் இந்த பூஜ்ஜியம் ரூபாய் நோட்டு கிடைக்கும் என நினைக்கிறேன்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!