Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, June 29, 2013

பவருக்கு பாலாபிசேகம் செய்த ப எங்கே?

ஏம்ப்பா ரசிக சிகாமணி எங்கப்பா போனீங்க உங்க சூப்பர் ஸ்டார் ஓய்வுக்கு அதிகமாக இமயமலை அடிவாரத்துக்கு சென்றுவருவார். ஆன்மிகவாதியாக இது வேறு கதை. விசயத்துக்கு வாரேன்.

உத்தரகாண்ட் மழை வெள்ளத்தால் அங்கு உள்ள மக்களும் மற்ற மாநில மக்களும் சிக்கி சின்னபின்னமாக உள்ளார்கள் இறப்பு இழப்பு அதிகமாக இருப்பதாக தகவல்.

இவர்களுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் ஆட்சியாளர்களும் உதவி செய்கிறார்கள் நர மாமிச மோடி வேறு பறந்து பறந்து உதவி செய்யவில்லை என்றாலும் செய்வதாக காட்டும் 
பார்ப்பன ஊடகங்களே இருக்கும்போது உங்க சூப்பர் ஸ்டார் ஏன்? மவுனமாக உள்ளார் ஒரு வேலை கர்நாடக மக்கள் யாரும் பாதிப்புக்கு உள்ளானால் எதும் உதவி செய்திருப்பாரோ..? தமிழர்கள்தானே என்று வாய் முடி விட்டார்போல் யார் கண்டா.!!

தலைவனுக்காக மொட்டை போட்ட பொடிபசங்கள் எங்கே..? தலைவனுக்காக பால் அவிஷேகம் செய்த வேட்டி பயலுகாக எங்கே? தன் தாய் தகப்பன் பேச்சை கேட்காமல் தலைவன் பேச்சை கேட்கும் தருதலைகள் எங்கே.! எங்கே..!! எங்கே..!!!

இந்த தலைவன் மட்டும் அல்ல இன்னும் உதவி செய்யாத அனைத்து நடிப்பு தலைவனுக்கு
ம் இது பொருந்தும்.

ஒரு நடிகனோ அல்ல அரசியல்வாதியோ செத்தால் தான் உயிரா? மற்றவர்கள் எல்லாம்..???.

Friday, June 28, 2013

முகத்தை நனைய வைத்த முகநூல் செய்தி!

இவருக்கு கண் தெரியாது. நடக்க முடியாது. ஆனாலும் இவர் பிச்சை எடுக்கவில்லை. பிச்சை என்று சொல்வதை விட மற்றவர்களிடம் எதையும் எதிர் பார்த்து இருக்கவில்லை என்று சொல்லலாம். குற்றாலம் பேருந்து நிலையம் அருகில் நான் கண்ட அற்புதமான மனிதர். (முகநூல் செய்தி)

இவர் உழைத்து உண்கிறார். எப்படி என்று நினைக்கிறீர்களா.!!

அவருக்கு உடலில் மட்டும் தான் ஊனம் உள்ளத்தில் அல்ல. அவர் பேனா விற்கும் வியாபாரியாக இருந்து தன்னுடைய தேவைகளை நிறைவேற்றி கொள்கிறார். 

இன்று எத்தனையோ பேர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்து உழைத்துஉண்ண மறுக்கின்றனர். கை கால்கள் நன்றாக இருப்பவர்கள் கூட அடுத்தவர்களின் தயவை எதிர் பார்த்து இருக்கின்றனர். தன்னால் நடக்க முடியாத பார்க்க முடியாத நிலையிலும் உழைத்து சாப்பிடும் அவரை நினைக்கும் போது நிச்சயமாக அவரை பாராட்டியே ஆக வேண்டும். 

அவரிடம் சென்று இரண்டு பேனாக்களை வாங்கி கொண்டு 15 ரூபாயை கையில் கொடுத்தேன். ஒரு பேனா ஆறு ரூபாய் தான் என்று சொல்லி மீதி காசை என்னிடம் கொடுத்தார். அதற்கு நான் சில்லறையை நீங்களே வைத்துகொள்ளுங்கள் என்று சொன்னேன். அதற்கு அவர்..வேண்டாம் எனது பேனாவிற்கான விலையை மட்டும் கொடுங்கள் என்று சொல்லி வலுகட்டாயமாக சில்லறையை என் கையில் கொடுத்து விட்டார். 

அவரை நினைக்கும்போது என் மனதில் ஒரு உணர்ச்சிபெருக்கு தோன்றியது. பிறகு அவருக்கு ஒரு காபியும் வடையும் வாங்கி கொடுத்தேன். அதை குடித்து விட்டு மீண்டும் அவர் தனது பயணத்தை தொடர்ந்தார். தன்னம்பிக்கைதானே தாரக மந்திரம். 

Tuesday, June 25, 2013

மோடி தீர்த்தம் குடிக்கும் மாலை மலர்!?

மாலை மலர் இணையதளத்தில் "உத்தரகாண்டில் தவித்த 15,000 குஜராத் பக்தர்கள் மீட்பு" என்ற தலைப்பில் ஒரு செய்தி. 

உத்தரகாண்ட் இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் இராணுவமும் தன்னார்வலர்களும் படாதபாடு பட்டுக்கொண்டிருப்பதாக செய்திகள் நேரடிக் காட்சிகளாகவே வந்துகொண்டிருக்கும் நிலையில், ஒரேயடியாக குஜராத்தைச் சேர்ந்த 15,000 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சொந்த இடம் அழைத்து வரப்பட்டதான அச்செய்தி மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால், 

செய்தியின் உள்ளே வாசித்தபோது இப்படியும் பத்திரிக்கைகள் மக்களின் காதில் பூச்சுற்றுமா என்ற ஆச்சரியமே மேலோங்கியது. மீட்கப்பட்ட பக்தர்களைக் குஜராத் அழைத்து வந்தது தொடர்பாக செய்தியினுள் மாலை மலர் குறிப்பிட்டுள்ள வாக்கியம் கீழே: "சுமார் 80 டொயோட்டா இன்னோவா கார்கள் வரவழைக்கப்பட்டன. அதில் ஏற்றப்பட்ட பக்தர்கள் டேராடூன் வந்தனர். அங்கிருந்து அவர்கள் 4 சிறப்பு விமானம் மூலம் குஜராத் போய் சேர்ந்து விட்டனர்.

மேலும் 25 ஏ.சி. பஸ்கள் மூலம் குஜராத் பக்தர்களில் மற்றொரு குழுவினர் டெல்லி அழைத்து செல்லப்பட்டனர்." ஒரு இன்னோவா காரில் 15 பக்தர்களை அடித்துத் திணித்து கொண்டு வந்ததாக கணக்கிட்டாலும் 80 x 15 = 1200 பேர். ஒரு ஏ சி பஸ்ஸில் 50 பேர் எனக் கணக்கிட்டாலும் 25 x 50 = 1250 பேர் மொத்தம் 2450 பேர் தான் வருகிறது. சரி இன்னோவா காரில் 25 பேர் என்றும் ஏ சி பஸ்ஸில் 100 பேர் என்றும் கணக்கிடுவோம்.அப்படிப்பார்த்தாலும் 4750 பேர் தான் வருகிறது. எப்படியோ, 5000 பேர் போனார்கள் என்றே வைத்துக் கொள்வோம். 

இன்னும் 10000 பேர் எப்படி போய் இருப்பார்கள் என்று புரியவில்லை. கணக்கு எங்கோ இடிக்குது. என்னமா கலர் கலர் ரீல் விடுறீங்க. காசு வாங்கிட்டு எழுதுங்க. அதுக்காக இப்படியா.? முடியல! இதையே தினமல(ம்)ர், "இந்த வேகம் யாருக்கப்பா வரும்.... 15000 பேரை மீட்ட 'ரேம்போ மோடி'" என்ற தலைப்பில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளது. 

"இதற்கென 80 டோயோட்டா இன்னோவோ கார்கள் வரவழைக்கப்பட்டன. இதில் பக்தர்கள் ஏற்றி டேரோடூனுக்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் இவர்கள் 4 விமானம் மூலம் டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை அழைத்து வர 25 சொகுசு பஸ்கள் தயார் நிலையில் இருந்தன . மொத்தம் 15 ஆயிரம் குஜராத்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மோடி தானே களத்தில் இறங்கி தமது மாநில மக்களை மீட்டு வந்த சம்பவம் இம்மாநில மக்களின் பெரும் பாராட்டை பெற்றுள்ளது." மீட்பு இடத்திலிருந்து 80 இன்னோவா கார்களில் டேராடூன் வரை. 

டேராடூனிலிருந்து 4 விமானங்களில் டெல்லி வரை. டெல்லியிலிருந்து 25 சொகுசு பேருந்துகளில் குஜராத்திற்கு! அப்படி எடுத்துக்கொண்டாலும், 4 விமானம் 15,000 பேரை டெல்லி கொண்டு வர எத்தனை முறை வந்து திரும்பியிருக்கும். 25 பேருந்துகள் டெல்லியிலிருந்து குஜராத்திற்கு 15000 பேரை ஏற்றி செல்ல எத்தனை முறை வந்து திரும்பியிருக்கும். 80 இன்னோவாக்கள் உத்தர்காண்டிலிருந்து டேராடூனுக்கு 15000 பேரைக் கொண்டு செல்ல எத்தனை முறை வந்து திரும்பியிருக்கும்? மோடி ரேம்போவோ, சில்வஸ்டர்ஸ்டாலனோ, ஹிட்லரோ - யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். மோடியின் விளம்பர காசுக்கு, கொஞ்சம் கூட மானம் சூடு சுரணையின்றி சுய அறிவை மொத்தமாக இழந்து துதிபாடும் இப்பத்திரிக்கைகளின் மாமா வேலைக்கு என்ன பட்டம் கொடுக்கலாம் என்பதுதான் தற்போதைய கேள்வி!?. மாட்டு தீர்த்தம் குடித்தா அவா, ஆனால் இப்போ????  (அருள், கத்தார்.)

Saturday, June 22, 2013

தூங்கினால் அதிகம் உடல் குண்டாகுமா! ஆய்வு தகவல்!?

வாஷிங்டன்: உடல் எடையை குறைக்க பலர் கடுமையாக போராடுகின்றனர். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருத்துவ சிகிச்சை என பலவித நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அப்படி இருந்தும் தாங்கள் விரும்பியபடி உடல் எடை கணிசமான அளவு குறையவில்லையே என வருத்தப்படுகின்றனர்.

இதனால் பிபி, சுகர் உள்ளிட்ட நோய்கள் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது. இதனைத் தடுப்பதற்காக உலகளவில் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. உடல் குண்டாவதை தடுக்க உணவு கட்டுப்பாட்டு முறையை கையாள வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உடல் எடையை அதிகரிக்காமல் குறைக்க 'அயர்ந்த தூக்கமே நல்ல மருந்து' என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வாஷிங்டன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் நதானியல் வாட்சன் தலைமையிலான குழுவினர் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், 'உடல் குண்டாவதற்கு மரபணு கோளாறே காரணம் என தெரியவந்தது. அவற்றின் நடவடிக்கைகளை செயல் இழக்க செய்ய இரவில் தினமும் 9 மணி நேரம் நன்றாக அயர்ந்து தூங்க வேண்டும். குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க வேண்டும்' என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவு, குண்டாகி வரும் இந்தியர்களுக்கு பொருந்துமா? என்பதை இங்குள்ளோர்களிடம் ஆய்வு நடத்தினால் மட்டுமே தெரியவரும்.

Thursday, June 20, 2013

அரசின் அயோக்கியத்தனமும் காவிகளின் கபோதித்தனமும்!?

அரசின் அயோக்கியத்தனத்திற்கும், காவிகளின் கபோதித்தனத்தையும் எடுத்துக்காட்டுவதே இப்பதிவின் நோக்கம். (காவிகளின் கரம் எப்படியெல்லாம் பரவி கிடக்கிறது மத சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில்?).

ஹைதராபாதில் "அஷ்-ஷிஃபா" என்ற பெயரில் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் இப்ராஹீம் அலி ஜுனைத், போலீசின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்க ஓடுகிறார்.. ஓடுகிறார்... போலீசின் மரணப் பிடியிலிருந்து மானவப்பருவத்திலிருந்­தே தப்பித்து??? ஓடிக் கொண்டே இருக்கிறார்.

நீரிழிவு நோய்க்கான மருந்துகளை சொந்தமாக தயாரித்து மருத்துவ சேவை செய்து வரும் யூனானி டாக்டரின் மருத்துவமனைக்குள் (நோயாளிகள் உள்ளே இருப்பதையும் பொருட் படுத்தாமல்) அதிரடியாக நுழைந்த இரண்டு புலானாய்வு அதிகாரிகள், சகட்டு மேனிக்கு கேள்விகள் கேட்டு, டாக்டரை நோயாளியாக்கி இருக்கையில் போட்டு விட்டு சென்றனர்.

சபாரி கோட் சூட்டுடன் வந்த இருவரில், ஒருவர் செல்போன் பேசிக் கொண்டும், மற்றவர் சிறிய அளவிலான நோட்டில் குறிப்பெடுத்துக் கொண்டும் இருந்தார்.

வந்தவர்கள், மிரட்டும் தொனியில் பல்வேறு கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்துச் சென்றுள்ளனர்.

தில்குஷ் நகர் குண்டு வெடிப்பை நடத்தியது யார்? பின்னணியிலிருப்பது யார் யார்?? மஜீத் என்பவர் தற்போது எங்குள்ளார்?

இந்தியாவை விட்டு மஜீத் எப்போது சென்றார்? தற்போது அவர் சவூதி அரேபியாவில் உள்ளாரா?? என பல கேள்விகளை எழுப்பினர், தேசிய புலனாய்வுத்துறை(NSA) அதிகாரிகாரிகள்.

மஜீத் என்ற இளைஞர், மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில், டாக்டர் இப்ராஹீம் அலியுடன் சேர்த்து (அநியாயமாக) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சக கைதியாவார்.

இவர்களை கைது செய்தது தவறு, என்று உள்ளூர் காவல்துறை முதல் உள்துறை அமைச்சர் வரை (முஸ்லிம் இளைஞர்கள் அப்பாவிகள் என) ஊரறிய ஒப்புக் கொண்டு விடுதலை செய்யப்பட்டனர்.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்து மருத்துவமனையில்சேர்த்தவர், டாக்டர் இப்ராஹீம் அலி ஜுனைத்.

2007 மே மாதம் 18ந்தேதி ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடித்தது, மறுநாள் 19ந்தேதி, மனித உரிமை அமைப்புக்கள் உள்ளிட்ட உண்மை அறியும் குழுவில் இடம் பெற்று மக்களை சந்தித்து சம்பவம் குறித்த தகவல் சேகரித்து விட்டு வீட்டுக்கு திரும்பிய இவரை 20ந்தேதி கைது செய்தனர்.

7 நாட்கள் வரை சட்ட விரோத காவலில் வைத்து மிருகங்களை விட கொடுமையாக சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார்.

ஆந்திர உயர் நீதிமன்றத்தில் "ஆட்கொணர்வு" மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி கைது செய்தனர்.

6 மாத சிறை வாசத்தின் காரணமாக மருத்துவ படிப்பின் இறுதியாண்டு தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டது.

உயர் நீதிமன்ற தலையீட்டை அடுத்தே, அவர் பரீட்சைக்கு அனுமதிக்கப்பட்டு முதல் வகுப்பில் தேர்வானார்.

2003ம் ஆண்டில், 18 வயது கூட நிறைவடையாத பள்ளிப் பருவத்திலேயே 3 மாதம் சிறைகொடுமைக்கு ஆளானவர் தான் இந்த டாக்டர்.

உள்ளூர் பாஜக எம்.எல்.ஏ.,வான "இந்திர சேன ரெட்டி" என்பவர், ரியல் எஸ்டேட் மாபியா கும்பலுடன் சேர்ந்துக் கொண்டு "வக்ப் வாரியத்துக்கு சொந்தமான" முஸ்லிம் கப்ருஸ்தானை ஆக்கிரமிக்க முயற்சித்தபோது,போராட்டத்தில் ஈடுபட்ட இப்ராஹீம் உள்ளிட்ட முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார், பாஜக எம்.எல்.ஏ.

முஸ்லிம்களின் மயான பூமியை ஆக்கிரமிக்கும் எண்ணத்துடன் அங்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலையை அகற்றக் கோரும் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு பாடம் கற்பிப்பேன் என அப்போதே கொக்கரித்தார், பாஜக எம்.எல்.ஏ.

அந்த வழக்கில் சிறை சென்று 3 மாத படிப்பு பாதிக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தாலும், அன்று முதல் போலீசின் தொடர் கண்காணிப்பிலிருந்து வரும் டாக்டர் இப்ராஹீம் அலி, சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகி வருகிறார். 

அடுத்தது இவர்? .... போலீசுக்கு விரைவில் இரையாகப் போகும் முஸ்லிம் மருத்துவர்??

Monday, June 17, 2013

தலைவலிக்கு தானாக மருந்து எடுப்பது சரியா?

வலிப்பு நோய், தலைவலி, நரம்பு தளர்ச்சி, மறதிநோய், பக்கவாதம் ஆகிய நோய் குறித்த சந்தேகங்களுக்கு கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை நரம்பியல் நிபுணர் டாக்டர் அருள்செல்வன்  அளித்த பதில்கள் வருமாறு :  நரம்புதளர்ச்சி நோயின் அறிகுறிகள் என்ன?. நடை, பாவனை மெதுவாக இருக்கும். தள்ளாட்டம், தடுமாற்றம் ஏற்படும் அடிக்கடி கீழே விழுவார்கள். கை, கால் நடுக்கம், இறுக்கம் ஏற்படும்.

பக்கவாதம் ஏற்பட காரணம் என்ன? அவசர சிகிச்சை என்ன? ஒரு பக்க கை, கால் செயலிழத்தல் பக்கவாதம் எனப்படுகிறது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு, சிகரட், மது பழக்கம், உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது. மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் கொழுப்பு படிவதால் ஏற்படுகிறது. 70 சதவீதம் ரத்த ஓட்டம் தடைபடுவதாலும் 30 சதவீதம் ரத்த கசிவாலும் ஏற்படுகிறது. பக்கவாதம் ஏற்பட்டவர்களை நான்கரை மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் ரத்த ஓட்டத்தை சரிசெய்வதற்கான ஊசி மருந்தை போட்டால் பக்கவாதத்தை போக்க முடியும். காலதாமதமாக சிகிச்சைக்கு வந்தால் +பக்கவாதம் சரியாக பல மாதங்களோ, ஆண்டுகளோ ஆகும். அப்படியே ஆனாலும் முழுமையாக சரியாகாது. பக்கவாதம் வந்தவர்களை விரைந்து குறித்த காலத்திற்குள் சிகிச்சை எடுத்தால் 100 சதவீதம் சரியாகும். இவற்றிற்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம்.

வலிப்பு நோய் உள்ளவர்கள் அன்றாட வாழ்வில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்ன?

உயரமான இடத்தில் வேலை பார்க்க கூடாது. அப்போது வலிப்பு வந்தால் கீழே விழுந்து படுகாயம் ஏற்படும். நீர் நிலைகளில் நீச்சல் அடிக்க கூடாது. நீச்சலடிக்க முடியாமல் உயிரிழக்க நேரிடும். நெருப்பு அருகில் இருக்கக்கூடாது. தீயில் சிக்கும் அபாயம் உள்ளது. விரதம் இருக்கக்கூடாது. இதனால் உடலில் சர்க்கரை அளவு குறைந்து மூளையில் மின் அதிர்வுகள் ஏற்பட்டு வலிப்பு ஏற்படும். தேவையான அளவு தூங்கி, நேரம் தவறாமல் உணவு உண்ண வேண்டும்.

வலிப்பு நோய் பரம்பரை நோயா: ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு பரம்பரையாக ஏற்படலாம்.நரம்பு தளர்ச்சி பரம்பரை நோயா: நரம்புத்தளர்ச்சி பெரும்பாலானோருக்கு வருவதற்கு காரணம் டோபமைன் எனும் வேதிப்பொருள் குறைவாக சுரப்பதால் வருவது. இதற்கு பரம்பரை காரணமல்ல.

என் வயது 45. ஒரு ஆண்டாக தலைவலிக்கிறது. சில இடங்களில் ஸ்கேன் செய்து பார்த்தோம் குறை எதுவும் தெரியவில்லை என்கிறார்கள்...வேறு காரணம் இருக்குமா?

மூளையில் வீக்கம் இருப்பது கூட தலைவலிக்கு காரணமாக இருக்கலாம். மூளையில் வீக்கம் இருப்பது சிலருக்கு ஸ்கேனில் தெரியாது. நரம்பியல் நிபுணரின் தேர்ந்த அனுபவத்தில் கண்ணில் லைட் அடித்து பார்த்தால் அதை கண்டுபிடிக்க முடியும். அதற்கு பின்னர் சிறப்பு ஸ்கேன் மூலம் மூளையின் வீக்கத்தை கண்டு பிடிக்கலாம். அதற்குரிய சிகிச்சைகளை மேற்கொண்டு மூளையின் வீக்கத்தை சரி செய்து, தலைவலியை போக்கலாம். மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் 2 உள்ளது. ஒரு ரத்தக்குழாய் மூளைக்கு செல்லும், மற்றொன்று மூளையிலிருந்து இதயத்திற்கு செல்லும். மூளையிலிருந்து இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் ஒரு இடத்தில் ரத்தம் உறைந்திருந்தாலும் தலை வலிக்கும். அதை கண்டு பிடிக்க வேண்டும். அப்படி இருந்தால் மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்த்து அறுவை சிகிச்சை இல்லாமல் மருந்து மூலம் உறைந்த ரத்தத்தை கொஞ்சம், கொஞ்சமாக கரைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கலாம். ஒரு வாரத்தில் குணமாகும்.

கருத்தடை மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு, அம்மாத்திரை ஏற்படுத்தும் பின்விளைவாக பெண்கள் சிலருக்கு மூளையிலிருந்து இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் ரத்தம் உறைவு ஏற்படும். முதலில் ரத்த உறைவை சீராக்கிய பின்னர், கருத்தடை மாத்திரை சாப்பிடுவதை தவிர்த்து மாற்று கருத்தடை முறைகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்குவோம். ஒரு ஆண்டுக்கு மேலாக தலைவலி இருப்பது மூளையில் வீக்கம், ரத்தக்குழாயில் ரத்தம் உறைவு காரணமாக இருக்க வாய்ப்புள்ளதால், உடனடியாக கே.எம்.சி.ஹெச்.நரம்பியல் நிபுணரை அணுகவும்.

நான் 2 மாதத்திற்கு முன்பு பைக்கில் செல்லும் போது கீழே விழுந்தேன். தலையில் லேசாக அடிபட்டது. வலி இல்லை. ஆனால் இப்போது சில நாள்களாக தொடர்ந்து வலிக்கிறது. தற்போதைய தலைவலிக்கு 2 மாதத்திற்கு முன்பு நடந்த விபத்து காரணமாக இருக்குமா?

சிலருக்கு விபத்து ஏற்படும் போது தலையில் அடிபட்டால் உடனடியாக எந்த பாதிப்பும் ஏற்படாது. 2 அல்லது 3 மாதத்திற்கு பிறகு மூளையில் ரத்தக்கசிவோ, கட்டியோ ஏற்படலாம். உடனடியாக நரம்பியல் நிபுணரை பார்த்து ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும்.

அதிக நேரம் கம்ப்யூட்டர், டி.வி.யை பார்த்து கொண்டிருந்தால் தலைவலி வருவது ஏன்?

அதிக நேரம் கண் விழித்து கம்ப்யூட்டரோ, டிவியோ பார்ப்பதால் கண்ணை சுற்றியுள்ள தசைகளுக்கு அதிக வேலைப்பளு ஏற்படும். தலையின் பக்கவாட்டு பகுதிகள், தலையின் பின்புற தசைகள் இறுக்கமடையும், டென்சன் ஏற்பட்டு தலைவலி வரும்.

தலைவலிக்கு மாத்திரைகள் தொடர்ந்து உட்கொள்வதனால் ஏதேனும் பின்விளைவுகள் உண்டா?

தலைவலி வந்தவர்கள் தானாக மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று, தாங்களாக சில மாத்திரைகளின் பெயர்களை சொல்லி வாங்கி சாப்பிடுகிறார்கள். அடிக்கடி சாப்பிட்டால் அந்த மாத்திரையின் பின்விளைவாக கிட்னியை பாதிக்கும். தலைவலி அடிக்கடி வந்தால் டாக்டரின் பரிசோதனைக்கு பின்னர், காரணங்களை கண்டறிந்து அதற்குரிய மாத்திரைகளை அவர் பரிந்துரைப்பார். அவற்றை சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் தலைவலி வருவது தொடராது.

Saturday, June 15, 2013

அன்புடன் அந்தரங்கத்தை போல...?

தினமலர் வாரமலர் இதழில் "அன்புடன் அந்தரங்கம்" பகுதியில் வரும் கதை அதே போல் இப்போது பார்ப்பன சமூகத்தை சேர்ந்த குடும்பத்தில் நடந்த அந்தரங்கத்தை நண்பருக்கு மெயிலில் அனுப்பியதை இங்கு சுருக்கி தந்துள்ளோம். 

எந்த மானமுள்ள ஆண்மகனாவது, மனைவி அடுத்தவனுடன் வாரம் ஒருமுறை உறவு கொள்வேன் என்று சொல்வதை ஒப்புக்கொள்வானா?
வலுடன் இன்னும் குடும்பம் நடத்துவனா? அளவில்லையா?

"நான் மயிலாப்பூரைச் சேர்ந்த ஆசாரமான குடும்பத்தைச் சேர்ந்த பிராமணப் பையன். கடந்த 4 ஆண்டுகளாக, கலிபோர்னியாவில் குடும்பத்துடன் வசிக்கிறேன். என்னுடன் வேலை பார்க்கும் ஒரு தலித் நண்பனை வீட்டில் தங்க வைத்திருந்தேன். அவன் என் மனைவியை மயக்கி செக்ஸ் வைத்துக்கொண்டான் நான் வீட்டில் இல்லாதபோது இப்படி கதை தொடர்கிறது."  

என் மனைவியிடம் எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டேன். அவள் கேட்பதாக இல்லை. அவனது காலை பிடித்து கெஞ்சி கேட்டு விட்டேன். "உன் மனைவி இப்படி இருக்கும் போது, நான் என்ன செய்ய முடியும். நீ வெளியே போகச் சொன்னால், இப்போதே போய் விடுகிறேன். அவள் உயிருக்கு நீதான் பொறுப்பு...' என்கிறான். வாரம் ஒரு முறை, அவனிடம் உறவு கண்டிப்பாக வேண்டும் என்று என்னிடமே சொல்கிறாள். அதற்கும் ஒத்து கொண்டு தான், ஒரே வீட்டில் இருந்து வருகிறோம். குடும்ப மானம் வெளியில் செல்லக்கூடாது என்று தான் இவ்வளவையும், மனதுக்குள் புதைத்து, உயிரற்ற உடம்பாக சுற்றி வருகிறேன் வாரம் ஒரு முறை கள்ளக்காதலனுடன் உறவு இருந்தே வேண்டும் என்று கணவனிடமே கூறுவது உச்சம். (மிச்ச ஆறுநாளும் என்ன செய்வாளாம்?).

"அந்தரங்கம்" "ஆலோசனை" என்று போட்டு இவைபோன்ற கள்ளக்காதல், ஓரினப் புணர்ச்சி, விலக்கப்பட்ட உறவுக்குள் புணர்ச்சி, கல்யாணத்துக்கு முன் கற்பிழந்தது, கல்யாணத்துக்குப் பின் கணவனை வஞ்சிப்பது, மாமனாரின் இன்ப வெறி என "சுயமைத"க் கதைகளை உண்மைபோல வெளியிடுகின்றன. இந்தக் கேவலமான பிழைப்பில் முன்னணியில் நிற்பது தினமல(ம்)ர்.

ஏனெனில், காசுக்காக எத்தகைய விபச்சாரம் செய்யவும் தயங்காத ஊடக எழுத்து விபச்சாரிகளான இவர்களுக்கு (பிராமண) சொந்த சமுதாயத்தின் மானம்கூட மதிப்பற்றதுதான்; பணத்திற்காகத் தன்னுடைய அந்தரங்கத்தையே பிரசுரிக்கும் கும்பலுக்கு இது சாதாரண விஷயம் தான்! பரபரப்பான விற்பனைக்கு வழிவகுக்கும் என்பது தினமலரின் வியாபாரத் தந்திரம்.

குறிப்பு: தனது கணவர் வேலைக்கு சென்றதும் தனக்கு துணை தொலைக்காச்சியும், இணைய தளமும்தான் என்கிறார் அப்பெண். (தொலைக்கச்சியில் சீரியல், இணையதளத்தில் தமிழ் பத்திரிக்கைகள்) ஆதலால் காசுக்காக கண்டதையும் கரைச்சு விடும் ஆரிய விபச்சார  நாளேடுகளை விட்டுவிட்டு தரமான பத்திரிக்கைகளை வாங்கி படியுங்கள் இதுதான் ஒரே வழி.

Wednesday, June 12, 2013

"சில்வர் நைட்ரோ ஆக்சைட்" இது என்னங்கே?

"சில்வர் நைட்ரோ ஆக்சைட்" இது என்ன என்று கேட்கிறீர்களா? இதை நாம் அன்றாடம் பார்க்கிறோம் பயன்படுத்துகிறோம் ஆனால் இது நமது உடலுக்குள் சென்றால் புற்று நோய்ப் போன்ற பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் என்ற விபரீதத்தை அறியாமல் இருக்கிறோம்.

இதை நாம் எங்கு பார்க்கிறோம் பயன்படுத்துகிறோம் என்று கேட்கிறீர்களா? வேறு எங்கும் இல்லை நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைலை ரீசார்ஜ் செய்வதற்கு பயன்படுத்தும் ரீசார்ஜ் கார்டுகளில் உள்ள எண்ணை மறைப்பதற்கு இந்த சில்வர் நைட்ரோ ஆக்சைடைப் பயன்படுத்துகிறார்கள். இதைத்தான் நாம் ரீசார்ஜ் செய்யும்போது கை விரல்களால் சுரண்டி அதில் தெரியும் எண்ணை ரீசார்ஜ் செய்கிறோம், ஆனால். 

நம் நகங்களால் இதை சுரண்டும்போது நமது நக இடுக்கில் நுழையும் இந்த சில்வர் நைட்ரோ ஆக்சைட் நமது வயிற்றுக்குள் சென்று புற்று நோய் போன்ற நோய்கள் வருவதற்கு வழி வகுக்கிறது. எனவே கை நகங்களால் ரீசார்ஜ் கார்டுகளை சுரண்டுவதை தவிர்த்து நாணயம் போன்றவற்றைப் பயன்படுத்தி ரீசார்ஜ் கார்டுகளை சுரண்டுங்கள் நோயற்ற வாழ்க்கையை பேணுங்கள்.

Monday, June 10, 2013

விஷ வீரியத்துக்கு மருத்துவ உதவி!

பாம்பு கடித்துவிட்டால் , பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.

"பாம்பு கடி" பற்றிய சில தகவல்கள்..

1. கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்படுகிறதா.. இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல.

2. கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா.. ..??? கடித்த இடம் சற்றுதடித்து(வீங்கி) காணப்படுகிறதா.. ?? கடுமையான வலி இருக்கிறதா..??? இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும்.


முதலுதவி: 1. இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.


2. காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.

3. பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது . அவர் பதற்றமடையும்போத ும் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.

4. பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல்முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகி றது

5. இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துக ின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்.

6. பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.

7பாம்பு கடித்துவிட்டால் பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை"அட்மிட்" செய்வதில்லை. எனவேகால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும.

8. இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.

பாம்பு கடித்தால்.. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும். 

Saturday, June 8, 2013

நியாயத்தை பேசுங்கன்னா! நொட்டை பேசறீங்களே நோன்னைகளா!?

ஐநா வில் அமெரிக்க தீர்மானம் தொடர்பாக அத்வானி தெரிவித்த கருத்து, காவிகளின் உண்மை நிலைமையை வெட்ட வெளிச்சமாக காட்டிவிட்டது.

இலங்கையில் சிங்களவரை நாம் விட்டு கொடுக்க முடியாது. அவர்கள் ராமர் விட்டு வந்த அனுமன் படையின் வாரிசுகள்.அங்குள்ள தமிழர்கள் ராவண படையை சேர்ந்தவர்கள் சிங்களமும், தமிழும் சமஸ்கிருதத்தின் குழந்தைகள். இந்தியா இலங்கையை முழுமையாக ஆதரிக்க வேண்டும்.

# இனி காங்கிரசுடனோ , பி ஜே பி உடனோ மத்தியில் கூட்டணி வைத்து இங்கு உள்ள தமிழக கட்சிகள் ஓட்டு கேட்டு வந்தால் பால அடிக்கணும்.#

இலங்கை பற்றிய ..பாராளுமன்ற தீர்மானம்.. இன்னொரு நாட்டுக்கு எதிரானது!....எனவே அருண்ஜேட்லி!..சீதாராம் யெச்சூரி!..முலாயம்!.மாயாவதி!அப்போ!...பாகிஸ்தானுக்கு திரான.தீர்மானத்தை அதே,.பாராளுமன்றத்தில் ..கேக்கறீங்களே!....அதுமட்டும் ....உங்க ...மச்சான்.... நாடா?

நியாயத்தை பேசுங்கடான்னா.., நொட்டை பேசறீங்களே நோன்னைகளா !

இனிமேல் தமிழ் நாட்டில் அத்துவானி வருகிறான் களவாணி வருகிறான் என்று வரவேற்பு கொடுக்க போனால் ரஜினியா இருந்தாலும் சரி காவிகளின் உண்மை நிலையை வெட்ட வெளிச்சமாக காட்டிவிட்டது.

Thursday, June 6, 2013

யார் கடவுள்!?

கடவுளை படைக்கும் கடவுளை பாருங்கள்., தேவை இல்லாத விஷயங்களால் அறிவு மழுங்கடிப்பட்டு மக்களின் வாழ்நாள் முழுவதும் வீணடிக்கப்படுகிறது.

இந்த கல்லுதான் இந்த உலகத்த படைச்சதுன்னு, ஒரு கும்பல் நம்மள யோசிக்க விடாம அடிமை படுத்தி வச்சிருகாங்க.

விலை இல்லா அரிசினு வீணா போன அரிசிய நமக்கு குடுத்துட்டு பாலையும், நெய்யையும், இந்த கல்லு மேல கொட்டி நம்ம உழைப்பை எல்லாம் வீணாக்குறாங்க.

லட்சக்கணக்கான சாமிகள் உள்ள நாட்டில்.

ஜாதி, மதம், குலம், கோத்ரம், சாமி, சம்ப்ரதாயம், ஜோசியம், ஜாதகம், பூஜை, புனஸ்காரம். வருஷம் பூரா கோவில் திருவிழா, பண்டிகை, நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எம கண்டம்.

சாமியார்கள், மகான்கள் போன்ற தேவை இல்லாத விஷயங்களால் அறிவு மழுங்கடிப்பட்டு மக்களின் வாழ்நாள் முழுவதும் வீணடிக்கப்படுகிறது.

யார் கடவுள் சிலையா? அல்லது சிலையை செய்தவனா? 

பார்ப்பனன் மனிதனை ஏமாற்ற கொண்டு வந்ததுதான் இந்த ஆட்ச்சார சடங்குகள், இதனால் எத்தனை எத்தனை விடுமுறைகள் அரசுத்துறை, பள்ளி, கல்லூரி மற்றும் வங்கிகள் எல்லா விடுமுறைகளையும்  கூட்டி, கழித்து பார்த்தால் வருசத்தில் பாதி நாட்கள்தான் வேலை நாட்கள். கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் அவா"க்களின் ஆட்ச்சார (ஏமாற்று வேலை) அசிங்கம் புலப்படும்.

Tuesday, June 4, 2013

வெளி நாடுகளிலிருந்து திரும்பும்போது!

வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊருக்கு போகும்போது விமான நிலையத்தில் பதட்டம் வேண்டாம்.

1. இந்திய விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கும் முன்னரே எழுந்து ஓடவேண்டாம். சில சமயம் நம் அவசரத்தால் Hand Luggage மறக்க நேரிடும்.

2. முதல் வெளிநாடு imigration கவுன்ட்டர் சென்றதும் அவர்கள் பாஸ்போர்ட்- ல் exit சீல் பதிந்துள்ளனரா என்பதை பார்க்கவும்.

3. நம் விமான நிலையத்தில் Imigration கவுன்ட்டர்களில் - நம் சில லகுட பாண்டிகள் நம்மை பார்த்ததும் எராளமான பார்வையும் - குதர்க்கமான கேள்விகளையும் கேட்பார்கள் பயப்ப வேண்டாம். மேலே சொன்னது போன்று இங்கேயும் Exit முத்திரை இருக்கிறதா என்று பார்க்கவும்.. என் சகோதருக்கு இது போன்று தான் முத்திரை குத்தாமல் அனுப்பிவிட்டனர் அவரும் குழந்தைகள் வெளியே காத்திருக்கின்றனர் என்கின்ற அவசரத்தில்  பார்க்காமல் போய்விட்டார்., பிறகு என்ன திரும்ப சென்னை விமான நிலையம் வரும்போது நீ எப்படி வெளில போனேன்னு 3 மாதம் கழித்து கேட்கின்றனர்.

அடப்பாவிகளா! அத உங்க அப்ப்ரண்டிச்ட கேளுங்க ஆபீசர்ஸ்.. பிறகு என்ன தனி ரூமில் வைத்து Enquiry செய்து பழிய சீல் தேதியில் முத்திரை இட்டு குவைத் அனுப்பி வைத்தனர். கவனமாக கையாளவேண்டும் சகோதர்களே.

4. எல்லாம் முடிந்ததும் பாஸ்போர்ட்டை - பத்திர படுத்திவிட்டு உங்கள் Luggage எடுக்க செல்லவும்.

5. விமான நிலையம் உள்ளேயும் வெளியேயும் சில சில காக்கிகள் என்ன பொட்டில என்னனு கேப்பாங்க உண்மையை சொல்லி வெளியேறுங்கள். மீறி பணம் கேட்டல் அருகில் உள்ள
Airport Authority ஆபீசரிடம் புகர் தெரிவியுங்கள் என்னெரால் நீங்கள் வயதையும் அடமானம் வைத்து பிழைத்து வந்த பொருள் என்பதை நினைவில் கொள்க இவர்களுக்கு பிச்சை போடாதீர்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!