Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, May 31, 2013

பெட்ரோல் நிரப்பிய பின்பு சரி பார்த்ததுண்டா?

எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர்பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.

பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால் அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். 

நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்று மண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும். வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால் பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்கமுடியும்.

அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்., கொஞ்சம் அவதானித்து பெட்ரோல் நிரப்பினால் அளவு சரியாக இருக்கும் பணமும் மிச்சப்படும் இதை கடைபிடிக்கலாமே.

Wednesday, May 29, 2013

ஈழ தமிழனுக்கு ஒரு நியாயம் உள்ளூர் தமிழனுக்கு ஒரு நியாயமா?

ஈழத்தில் நடந்தால் மட்டும்தான் அது இன படுகொலையா?

ஈழத்தில் நடந்தால் மட்டும்தான் அது இன அழிப்பா?

ஈழத்தில் நடப்பதர்க்கு மட்டும்தான் சர்வதேச விசாரனை தேவையா?

அங்கே ஈழ தமிழர் மட்டும்தான் உங்கள் தொப்புள் கொடி உறவா?

இங்கே உள்ள தமிழன் உங்களுக்கு தீண்டதகாதனா?

ஈழ தமிழனுக்கு ஒரு நியாயம் உள்ளூர் தமிழனுக்கு ஒரு நியாயமா?

ராஜபக்சேவை எதிர்த்தால் அவன் இங்கே வந்து உங்களை ஒன்றும் செய்ய போவது இல்லை என்ற தைரியத்தில் நீங்கள் அவனுக்கு எதிராக குறள் கொடுப்பதுபோல நடிக்கிறீர்களா?

இங்கே உள்ள ஜாதி வெறியன் (
மரம் வெட்டி ராமதாஸ்) எதிர்த்து ஒரே ஒரு கண்டண குறள் கொடுத்தால் உங்கள் குடி மூழ்கிவிடாதே?

ஏன் பயமா? உங்கள் வீட்டையும் எரித்து விடுவார்கள் என்று இன்னும் எத்தனை காலம் உங்கள் வாய் ஊமையாக இருக்கும்?

நூறு ஆண்டு கோழையாக வாழ்வதை விட ஒரே ஒரு நாள் போராளியாக வாழ்வது மேல்.

-ஈரோட்டு பூகம்பம்.

Monday, May 27, 2013

இந்திய குடிமகனுக்கு அவனது மொழியில் குடியுரிமை சீட்டு இல்லை!?

பாஸ்போர்ட் என்னும் கடவுச் சீட்டு என்பது குடியுரிமைக்கான ஒரு முக்கியமான ஆவணம் ஆகும். இந்தியாவை பொறுத்தவரை அந்த ஆவணம் இந்திய குடியுரிமை பெற்றவர்களின் சொந்த மொழியில் இல்லை என்பது எவ்வளவு பெரிய இழி நிலை. 

ஆங்கிலேயர் ஆட்சி முடிந்து ஹிந்தியர்களின் ஆட்சி இந்தியாவில் தொடங்கப்பட்ட காலம் முதல் இந்தியாவில் அனைத்து மொழியின மக்களுக்கும் அவர்கள் மொழி மறுக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. கடவுச் சீட்டு எந்த மாநிலத்தில் வழங்கப்படுகிறதோ அந்த மாநில மொழியில் தானே விவரங்களில் இருக்க வேண்டும். மாறாக அனைத்து மாநிலங்களிலும் வழங்கப் படும் கடவுச் சீட்டுகளிலும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியல் மட்டும் தான் விவரங்களை அச்சிட்டு கொடுத்து வருகிறது இந்திய அரசு இது எவ்வளவு பெரிய மொழித் தீண்டாமை கொள்கை.

இந்தியாவில் உள்ள பல கோடி மக்களுக்கு இந்தி மற்றும் ஆங்கிலம் தாய் மொழி அல்ல. அப்படி இருக்கும் போது, அவரவர் தாய் மொழியில் கடவுச் சீட்டு இல்லை என்றால் அவர்களும் இந்திய நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள் என்பதை அவர்கள் எப்படி உணர்வார்கள்?

தமிழினப் படுகொலை செய்யும் இலங்கையில் கூட தமிழ் மக்களுக்கு புரியும் வகையில் அவர்கள் கடவுச் சீட்டில் தமிழ் மொழி உள்ளது. குடிவரவு ஆவணங்கள் அனைத்தும் தமிழ் மொழியில் உள்ளது. ஐம்பது இலட்சம் தமிழ் மக்கள் இருக்கும் இலங்கையில் தமிழ் மொழியில் கடவுச் சீட்டு உள்ளது. ஆனால் பத்து கோடி தமிழ் மக்கள் வாழும் இந்தியாவில் தமிழ் மொழியில் கடவுச் சீட்டு இல்லை. மேலும் இந்தியாவில் கடவுச் சீட்டு மற்றும் ஏனைய குடிவரவு ஆணவங்கள் எதுவும் தமிழில் கொடுக்கப் படுவது இல்லை என்பது இந்திய அரசின் ஹிந்தி ஆதிக்க மனப்பான்மையை தான் காட்டுகிறது.

இந்த நிலையை மாற்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மொழிக்கும் அதிகாரமும் ஆட்சி மொழிக்கான அங்கீகாரமும் முக்கியத்துவமும் கொடுக்கப் படவேண்டும் . அதற்கு இந்தி அல்லாத வேற்று மொழியினர்கள் குரல் எழுப்ப வேண்டும். இந்திய அரசின் மொழித் தீண்டாமைக் கொள்கையை உடைத்தெறிய வேண்டும். கடவுச் சீட்டு, வருமான வரி அட்டை போன்ற முக்கிய குடியுரிமை ஆவணங்கள் அவரவர் மொழியிலேயே இருத்தல் அவசியம் இதற்கான முன்னெடுப்புகளை மாநில அரசும் எடுக்க வேண்டும்.

பி.கு : அப்பாவி இந்திய தமிழர்களின் கவனத்திற்கு. இந்தியாவிற்கு தேசிய மொழி என்று எதுவும் கிடையாது. இந்தியாவில் தமிழ் உட்பட 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாகும். ஆனால் இந்தியை மட்டுமே இந்திய அரசு பயன்பாட்டில் வைத்துள்ளது. ஏனைய மொழிகளுக்கு எந்த வித மதிப்பும் கொடுப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. (
ராஜ் அலை).

Sunday, May 26, 2013

துயரம் தெரியாதவர்கள் துரோகம் என்று புலம்புகிறார்கள்?

அந்த பனிமலையில் இந்திய ராணுவத்தின் ஆக்கிரமிப்பால் தினம் தினம் கொல்லப்படும் மக்களின் துயரம் தெரியாத இந்திய தேசிய வாதிகள் புலம்பி தவிக்கிறார்கள் பிரிவினைவாதிகள் என்று.

1947க்கு பிறகு காஸ்மீரின் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு இனைக்கப்பட்ட துரோக கதை உங்களுக்கு என்ன தெரியுமா.

நேருவின் பொதுவாக்கெடுப்பு வாக்குறுதியும், இன்றுவரை பாகிஸ்தானும் வேண்டாம் இந்தியாவும் வேண்டாம் என அந்த மக்கள் சுதந்திர காஸ்மீரத்திற்காக போராடுவதும் உங்களுக்கு தெரியுமா.

அங்கே போராடுவது பெரும்பாண்மையான மக்கள் முஸ்லீம்கள் என்ற காரணத்தால் அந்த போராட்டம் உங்களுக்கு ஒவ்வாமையாக தெரிகிறது.

ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் ஒருங்கினைப்பை ஏற்படுத்துவதும் ஒருவருக்கு ஒருவர் துயரங்களை பகிர்ந்துகொள்வதும் ஒரு தேசிய இனம் இன்னொரு தேசிய இனத்திற்காக குரல் கொடுப்பதும் தாங்கமுடியாத இந்திய வாதிகள் மோசமான பரப்புரையை நாம் தமிழருக்கு எதிராக பரப்புகிறார்கள்.

யாசின் மாலிக்கை அழைப்பதின் மூலம் எப்படியான விமர்சனங்களை எதிர்கொள்ளவேண்டும் என தெரிந்தே ஒரு துனிச்சலான முயற்சியை செய்திருக்கும் நாம் தமிழர் கட்சி தன் மீதான முஸ்லீம் விரோத கட்சி என்ற பார்வையையும், அதன் மீதான பொய் பரப்புரைகளையும் உடைத்திருக்கிறது. முஸ்லீம்களை நாம்தமிழர் கட்சிக்கு எதிராக கொம்பு சீவி விடும் தங்கள் முயற்சிகள் நிறைவேற்ற முடியாதவர்கள் கிடந்து புலம்புகிறார்கள்.

கடலூர் கூட்டத்தில் யாசின் மாலிக் பங்கேற்றது ஒருசிலருக்கு தவறாக தோன்றுகிறது. அது ஏன்? அவர் முஸ்லிம் என்பதாலா அல்லது அவர் வேறு இன மக்களுக்காக போராடுபவர் என்பதலா என்று புரியவில்லை.

இந்தியாவும் வேண்டாம் பாகிஸ்தானும் வேண்டாமென்று காஷ்மீரை தனி நாடாக கேட்பது இவர் செய்த குற்றம் என்றால் ஈழத்தில் நடந்த கொடுமைகளுக்காக நாம் தனி நாடு கேட்டதும் குற்றம் தானே.

இலங்கை ராணுவம் ஈழத்தில் கொலைகளும் கற்பழிப்புகளும் செய்ததை போல் தான் காஷ்மீரில் இந்திய ராணுவம் செய்கிறது செய்துவருகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் விதவைகள் அதிகம் வாழும் மாநிலமே காஷ்மீர் தான்.

இலங்கை ராணுவம் தவறு செய்தாலும் இந்திய ராணுவம் தவறு செய்தாலும் தவறு தவறுதான் அதை ஒப்புகொள்ள சிலருக்கு மனம் மறுக்கிறது அது ஏன்? காஷ்மீர் விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசின் மாலிக் தமிழகத்திற்கு வருகை தந்தது காவிகளுக்கு தலையில் வெந்நீரை அள்ளி ஊற்றியது போல கிடந்து குதிக்கிறார்கள்.

தமிழகம் இன விடுதலையை நோக்கி மாத்திரம் முன்னேறி செல்லவில்லை காவிகளிடம் இருந்து விடுதலையையும் சேர்த்து விரும்புகிறது. அதற்கான முன்னெடுப்புகளில் ஒன்று தான் இன்று சீமானுடன் யாசின் மாலிக்.

தமிழன் வாழும் இடத்தில் தமிழ் அவனை ஆளட்டும்! இசுலாமியன் வாழும் இடத்தில் அவன் இசுலாமியனாக வாழட்டும்!!.


Saturday, May 25, 2013

அறுவை சிகிச்சை இல்லாமல் பைபாஸ்!?

நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும் உணவில் (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான் ஆச்சரியம். 

தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்.

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார். 

மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள் ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்:

1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும் நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

நண்பர்களே! இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்., ஏனென்றால் மருத்துவமனை வாங்கும்  பெருந்தொகையால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும். 

Friday, May 24, 2013

தமிழக மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!?

தமிழகத்திற்கு மாற்றம் வேண்டும் எண்ணிய தமிழக மக்கள் அனைவருக்கும் சரியான மாற்றத்தை  தந்துள்ளார் தமிழக முதல்வர். இதில் இரண்டு ஆண்டுகள் இருட்டில் மூழ்கிய தமிழகத்தை மூன்றாவது ஆண்டுக்கு இழுத்து செல்லப்போகிறார் ஆடல் அழகி ஜெயா.

ஆட்சி நிர்வாக அறிவு எதுவும் தெரியாத மடையர்களை அமைச்சர்களாக வைத்துக்கொண்டு மக்களை முட்டாளாக்கி, நாட்டை இருட்டாக்கி ஊருக்கு ஊர் இட்லி கடை திறந்ததை தவிர நீண்டகால மக்கள் நலத்திட்டம் என்று சொல்லிக்கொள்ள வக்கற்ற ஜெயாவின் அதிமுக ஆட்சியின் இரண்டு இருட்டு ஆண்டுகள் நிறைவு.

ஆட்டக்காரியின் குணம் அறியாது ஓட்டளித்
த காரணத்தினால் இன்னும் மூன்று ஆண்டுகள்(?) அவதிப்பட போகும் தமிழக மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 

Wednesday, May 22, 2013

சிறுமியை பாலியலுக்கு பயன் படுத்திய பார்ப்பன குருக்கள்?

வேலூர் குடியாத்தம் பகுதியில் உள்ள பாண்டியன் நகரைச் சேர்ந்த சிறுமி ராஜேஸ்வரி, வயது ஐந்து. இவளது தந்தை ராஜா. இந்தச் சிறுமி சாலையம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள்.

செப்டம்பர் 19-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை என்று தந்தை குடியாத்தம் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். இடையில் கடந்த புதன்கிழமை இந்த பகுதியில் உள்ள கிணற்றில் ஒரு சிறுமியின் பிணம் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அந்தச் சிறுமி ராஜேஸ்வரி என்று உறுதி செய்யப்பட்டது.

பின்னர் போலீசார் அந்தச்சிறுமியின் குடியிருப்புப் பகுதியருகே விசாரணை செய்திருக்கின்றனர். மேலும் பள்ளி அருகேயும் விசாரணை செய்திருக்கின்றனர்.

பள்ளி அருகே மூன்று கட்டிடங்கள் தாண்டி குமார குருக்கள் எனும் 46 வயது ஆஞ்நேயர் கோயிலின் பார்ப்பனப் புரோகிதர் குடியிருக்கிறான். இவன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரேயே இது போன்ற புகாரில் சிக்கி கைதாயிருக்கிறான். வீட்டு முகப்பில் அப்பாவி போன்று அமைதியாக இருந்த இந்த பார்ப்பன குருக்களை பிடித்து விசாரித்த போது உண்மை வெளியே வந்திருக்கிறது.

வாசலில் நின்றிருந்த சிறுமியை சாக்லெட் கொடுத்து கடத்தி சென்ற கடவுளுக்கு பூசை செய்யும் இந்த பார்ப்பன குருக்கள் அவளை பலமுறை வன்புணர்ச்சி செய்து அதன் போக்கிலேயே அந்த சிறுமி மூச்சுத் திணறி செத்துப் போயிருக்கிறாள். பிறகு எதுவும் நடக்காதது போன்று அந்தச் சிறுமியின் பிணத்தை கிணற்றில் வீசியிருக்கிறான்.

இப்போது இந்தத் தலைப்பில் ஏன் பார்ப்பன குருக்கள் என்று போட்டிருக்கிறீர்கள் என்று சிலர் கொதிக்கலாம். இதே வேலையை ஒரு ஆட்டோ டிரைவர் செய்தால் அவரது தொழிலைக் குறிப்பிட்டு போடுவதை யாரும் மறுக்க மாட்டார்கள். அந்த நீதிப்படி இங்கே அந்த கயவனது தொழிலைக் குறிப்பிட்டு போட்டிருக்கிறோம்.

அடுத்து இத்தகைய கொடிய பாதகங்களை சமூகத்தில் பலரும், பல தொழில் செய்பவர்களும் செய்யக்கூடிய ஒன்றுதான். ஆனால் இங்கே தனது சாதி மற்றும் தொழிலின் அடிப்படையில் பக்தர்களின் நம்பிக்கையை பெற்று அவர்களின் சார்பாக கடவுளுக்கு பய பக்தியோடு பூஜை செய்யும் ஒருவன் செய்திருக்கிறான், எனவே மற்ற குற்றவாளிகளைப் போல இவனையும் ஒரு குற்றவாளி என்று ஒதுக்கிவிட முடியாது.

ஐந்துவயது சிறுமியை பல முறை வன்புணர்ச்சி செய்து மூச்சுத்திணற வைத்து கொல்லுமளவுக்கு வெறி கொண்ட இந்த கயவன் எத்தகைய கொடிய பண்புடன் வாழ்ந்திருக்கிறான்?

கோவையில் சேட்டு வீட்டு குழந்தையை கொன்றவர்களை விசாரணை எதுவுமின்றி என்கவுண்டர் செய்த போலீஸ் இங்கேயும் செய்ய வேண்டும் என்று 
பார்ப்பன தினமணியோ, பார்ப்பன தினமலரோ, இந்து முன்னணியோ கோருமா? கோரமாட்டார்கள். ஏனென்றால்  அவன் அவா "க்கள் (குடுமி பாசம்).

Monday, May 20, 2013

இப்படியும் அந்தரங்கத்தை படம் பிடிக்கலாம்?

வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள்.

யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை?எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை? பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்?

அது எப்படி சாத்தியமாயிற்று?

புனேயில் உள்ள Asian School Of Cyber Law வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆம் அவளது அறையில் உள்ள வெப்கேமிராதான் அவளை படம் பிடித்திருக்கின்றது.

செய்வதையெல்லாம் செய்துவிட் ஒரு ஓரத்தில் அப்பாவியாய் அமர்ந்திருந்திருக்கிறது அந்த வெப்கேமிரா.

மீடியாத்துறையில் பணிபுரிகின்ற அந்தப் பெண்ணின் பெயர் அனி ஜோலகர் தனது ப்ராஜக்ட்டுக்காக சில படங்களை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்திருக்கின்றாள்.

ஆனால் அவளுக்குத் தெரியாமலையே கணிப்பொறியில் ட்ரோஜன் என்கிற வைரஸ் /புரோகிராம் வந்து அமர்ந்து கொண்டது

அந்த ட்ரோஜன் என்கிற புரொகிராமின் மூலம் அவளது கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள வெப்கேமிராவை ரிமொட் முறையில் இயக்கி அவளது அந்தரங்களை படம்பிடித்து அவற்றை ஆபாச இணையதளத்திற்கு விற்றுக் கொண்டிருந்திருக்கின்றான் எவனோ ஒருவன்.

உலகத்தின் இன்னொரு மூலையில் தனது நிர்வாணப்படங்களும் அந்தரங்கங்களும்திரைப்படமாக்கப்படுகின்றதை அறிந்து அதிர்ச்சியானாள்அனி ஜோலகர்.

இணையத் தொடர்புடன் உள்ள அந்த கணிப்பொறியின் வெப்கேமிராவை பெரும்பாலும் அவள் ஆன் செய்தே வைத்திருக்கின்றாள்.

இணையத்தில் உலவிவிட்டு அணைக்காமல் அப்படியே இருந்துவிட்டதுதான்; அவள் செய்த தவறு. கணிப்பொறி இடப்பெயர்ச்சி இல்லாமல்தானே அமர்ந்திருக்கின்றது அதுவென்ன செய்திட முடியும் என்று நீங்கள் சாதாரணமாய் இருந்துவிடமுடியாது. புரிந்து கொள்ளுங்கள் அது நம்மை நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றதுவெப்கேமிரா மூலம்.

கொஞ்ச நேரம் கழித்து உபயோகிக்கத்தானேபோகின்றோம் அதற்குள் எதற்கு இணையத்தொடர்பை துண்டிக்கவேண்டும் என்று அலட்சியப்படுத்தினால் நம் அந்தரங்கங்கள் உலகத்தின் பார்வைக்கு வந்துவிடும்.

தங்களது அறையினில் வெப்கேமிராவை வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாய் இருக்கவேண்டும்.இணையத் தொடர்பு அவசியம் இல்லையெனில் அதன் இணைப்பையும் வெப்கேமிராவின் இணைப்பையும் துண்டித்துவிடுங்கள். இந்த விழிப்புணர்வினைதங்களுக்கு தெரிந்தவரையிலும் மக்களுக்கு தெரியப்படுத்தினால்தான் அவர்கள் விழிப்புணர்வு அடைவார்கள்’

‘தேவையில்லாமல் வெப்கேமிராவை ஆன் செய்து வைத்திருப்பது அல்லது அதன் தேவைகள் இல்லாவிட்டாலும்அதனை கணிப்பொறியுடன் இணைத்து வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.பாதிக்கப்பட்ட பெண்கள் நிறையபேர் சமூக சூழலுக்குப் பயந்து அதனை புகார் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது.’

இணையத்தில் இருந்து படங்களோ அல்லது வேறு சில பைல்களோ டவுண்லோடு செய்யும்பொழுது ட்ரேஜன் ஹார்ஸ் (Trojan Horse) என்கிற வைரஸ் அல்லது வேறு ஏதேனும் வைரஸ் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்குத் தேவையான ஆன்டி வைரஸ் புரொகிராம்களை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல தேவையில்லாத அல்லது கவர்ச்சியான விளம்பரங்களுடன்வருகின்ற மின்னஞ்சல்களையும் தவிர்த்து விடுங்கள்.

ஆகவே நண்பர்களே கணிப்பொறி உபயோகிக்காத நேரங்களில் அதனை அணைத்துவிடுங்கள். இணையத்தொடர்பும்வெப்கேமிரா தொடர்பும் துண்டிக்கப்பட்டிருகின்றதா என்று தயவுசெய்து ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

இணையத்தில் உலவும்பொழுது மட்டும் இணையத்தொடர்பினைஇணைத்துவிட்டு மற்றநேரங்களில் அந்த தொடர்பினை கணிப்பொறியிலிருந்து எடுத்துவிடுங்கள். அதுபோலவே வெப்கேமிராவும்.யாருடனும் அவசியம் என்றால் மட்டும் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவற்றை கணிப்பொறியுடன் இணைக்காமலேயே வைத்திருங்கள்.இல்லையென்றால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் படம் எடுக்கப்பட்டுக்கொண்டிருப்பர்கள். அந்த நபர் உங்களுக்கு பக்கத்து அறையில் அல்லது பக்கத்து கண்டத்தில் கூட இருக்கலாம்.

Saturday, May 18, 2013

சூப்பர் ஸ்டார் பற்றி அறியாதது!?

"ன் ஒரு துளி வியர்வைக்கும் ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா, தமிழனல்லவா. ன் உடல் பொருள் ஆவியைத் தமிழுக்கும், தமிழற்கும் கொடுப்பது முறையல்லவா ரசினிகாந்.

வெங்காலூர் (பெங்களூர்) அனுமந்தபுரம் பகுதியில் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற இயற் பெயருடன் தெரு எங்கும் பொறுக்கி திரிந்து பின்பு பஸ் கண்டாக்டராகி,  கன்னட மராட்டியன்  இன்று தமிழ்நாட்டில் ''உச்ச விண்மீன்'' (சூப்பர் ஸ்டார்) எனும் பட்டதுடன் உலாவரும் காக்கை வலிப்பு நடிகனான ரசினிகாந்து.

தமிழினத்தை இழித்துப் பழித்துப் பேசியும், தமிழர்களிடம் நரி மிரட்டல் (ப்ளாக் மெயில்) செய்து பணம் பறித்தும், தன்னை வளர்த்துக் கொண்ட வட்டாள் நாகராஜின் கன்னட சலுவளி இயக்கத்திற்கு இன்னமும் கப்பம் கட்டிவரும் (வாழ்நாள்) உறுப்பினர்தான் இந்த ரசினிகாந்து.

எம்.ஜி.ஆர். நடித்த காஞ்சித் தலைவன் தமிழ்படம் பெங்களூரில் கெம்புக்கவுண்டர் சாலையில் திரையிடப்பட்டபோது சுவரொட்டிகளின் மீது சாணி பூசி, அரங்குகளின் மீது கற்களை வீசி காலித்தனம் புரிந்த காடைதான் இந்த ரசினிகாந்து ! அன்று முதல் இன்றுவரை தமிழ், தமிழர் நாட்டின் தனி நலன்களில் அக்கரையேதும் காட்டாத துக்கிரிதான் இந்த ரசினிகாந்து.

கலைப் பித்தம் தலைகேறிய தமிழர்களிடையே பெரிய நடிகன் என வலம் வந்து கோடிகணக்கிலே பணம் குவித்து அதை முழுவதுமாய் கருநாடகத்திலே முதலீடு செய்து கன்னட வெறியர்களுக்கு மட்டுமே வேலை வழங்கும் ஒரு காரியக் கிறுக்கன்தான் இந்த ரசினிகாந்து.

காவிரிச் சிக்கலில் கன்னடர்களால் தமிழர்கள் வஞ்சிக்கப் பட்டபோது தமிழர்களான பாரதிராசா சத்தியராசு, போன்றவர்கள் நடத்திய கண்டனப் பேரணியை புறக்கணித்து, மட்டம்தட்டி, ஓரம்கட்டி, கன்னட இன வெறியன் நடிகன் அம்பரீஷ் (இவன் கர்நாடக மாண்டியாவில் தேர்தலில் நின்றபோது பல கோடிகள் செலவு செய்தது ரசினிதான். 1991 இல் காவிரிக் கலவரம் நடைபெற்றபோது பல்லாயிரம் தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது கன்னட வெறியர்கள் சார்பாக நடந்துகொண்டதும் இந்த ரசினிதான், அனைத்துலக அரசியல் வேசியான சுப்ரமணிய சாமி போன்றவர்களின் ஏவலின்படி தனித் தவில் வாசித்து  அந்த போராட்ட வேகத்தை மந்தபடுத்தி, அதன் கூர்மையை மழுங்கடித நயவஞ்சகன், உண்ட வீட்டிற்கும், ஒண்ட வந்த நாட்டிற்கும் இரண்டகம் புரிந்த பித்தலட்டகாரன்.

உரிமையை பிச்சயாக்கி காவிரியாற்றிலே தண்ணீர் வரவேண்டுமா? இல்லை செந்நீர் வரவேண்டுமா? என்று பேசி, கன்னட வெறியர்களின் வன்கொலை வெறி உணர்சிகளை தூண்டிவிட்டு அதிலே குளிர்காய்ந்த கயவந்தான் இந்த ரசினிகாந்து! வெளுத்ததெல்லாம் பாலாகாது; என்பதை தமிழர்களே சிந்தியுங்கள்.

தமிழர்களின் கண்ணெதிரே நச்சத்திரமாக பளபளக்கும் ரசினியின் முகம் ஒப்பனைமுகம்! அதன் உண்மை குணம் வேறு.

கன்னடர்கள் ஆடிய காவிரிக் கலவரத்தில் வீடு வாசல்களை, சொத்து சுகங்களை இழந்த கருநாடகத் தமிழர்களுக்கு இன்றுவரை ஒரு சல்லிகாசு கூட இழப்பீடாக வழங்கப்படவில்லை. அதனை சுட்டிகாட்டவும் , தட்டிகேட்கவும் எந்த ஒரு
வந்தேறி நாய்களுக்கும் வாயில்லை!!. தங்கவயல் தமிழர்கள் பசியால் வாடி செத்து மடிந்தது ரசினிக்கு தெரியாது. ஆனால் வாட்டாள் நாகராசையும் , அசோகையும், அம்பரீசையும் தான் ரசினிக்கு தெரியும் !!

ஆனால்,
தமிழர் நாட்டில் வந்தேறிகள் ஆளவும், வாழவும் தமிழர்களே வழிவிடுகின்றனர். வந்தேறிகளை எசமான் ஆக்கும் மனநிலை மட்டும் மாறவில்லை.

தன்மானமுள்ள
தமிழர்களே: நீங்கள் பிரித்தாளும் சூழ்சிக்கு பலியாகாதீர்கள். தமிழினத்தின் எதிர் காலத்தை திரையரங்கத்தில் தேடாதீர்கள்! இனமானத்தை வந்தேறிகளிடம் அடகு வைக்காதீர்கள் !! திராவிடச் சூது உங்களை இருளில் மாய்த்து விடச் செய்யும். தனித் தமிழர் தேசியத்தை அறிந்துகொள்ளுங்கள். இன பற்றுகொள்ளுங்கள். மொழிப் பற்றுகொள்ளுங்கள். எந்த ஒரு தமிழனுக்காக மலையாளிகள் இருவர் மோதிக் கொள்வதில்லை! கன்னடர்களோ, தெலுங்கர்களோ மோதிக் கொள்வதில்லை!! தமிழ் பேசத் தெரியாத, தமிழினத்தின் மீது ஒட்டும் உறவும் பற்றும் இல்லாத வந்தேரிகளுக்காக நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும். ஏவல் நாய்களா நீங்கள் ?

இன பற்றையும் மொழிப் பற்றையும் 
ஆரிய வந்தேரிகளிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்!!

எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே! இங்கு பிறப்பினும் அயலான் அயலானே என்ற பாவேந்தரின் எச்சரிக்கை வரிகளை நாமும் சிந்திப்போம்!தமிழர் நாடு தமிழர்
க்கே. (ஆரியன் வந்தான்!  சாதியையும் சாத்திரத்தையும் விதைத்தான் ஏமார்ந்தான் தமிழன்).

Friday, May 17, 2013

மக்களை (ஏ)மாற்றும் மானம் கெட்டவன்?

நரமோடியின் அனுதாபிகள் பலர் நரமோடி ஒரு பிரமச்சாரி என்று இன்றும் நம்பி வருகின்றனர்.  காவி  கொடி பிடிக்கும் கூட்டங்களும் பணம் பெற்று பொய்களை மட்டும் பரப்பிவரும் ஊடகங்களும். இன்றும். நரமோடியை ஒரு அயோக்கியனை அவதார புருஷராகவே சித்தரித்து வருகின்றது.   

உண்மையில் நரமோடி...யசோதா பாய் மோடி (ஜஷோடாபென் மோடி) என்னும் பெண்ணை மணமுடித்து பின் அவரை கைவிட்ட கதையை....2009-இல் வெளிவந்த பத்திரிகை மூலம் வெளிச்சத்திற்கு வந்தது ...ஆனால் மற்ற பெரும்பான்மையான காவி....ஊடகங்கள்...இதனை வழக்கம் போல் "பத்திரிக்கை தர்மமாக" கருதி...முக்கியத்துவம்கொடுக்கப்படாமல்...இரட்டடிப்பு செய்துவிட்டன... யசோதா பாய் மோடி...மணமுடிக்கும் முன்னர் நரமோடி தடைசெய்யப்பட்ட பால்ய விவாகத்தை....தான் சார்ந்த ஹிந்துமத கொள்கையின் அடிப்படையில்...முன்னரே....முடித்து இருந்ததும்...அப்பத்திர்க்கையின் மூலமே அன்று வெளிச்சத்திற்கு வந்தது.

மனைவி யசோதா பாய் மோடி ...பானஸ் காந்தா மாவட்டம்...ரஜோஷனா கிராமத்தில்...ஒரு ஆசிரியையாக.....பணிபுரிந்து....வருவதும்...ஒரே ஒரு அறை மட்டும் உள்ள ஒரு சிறிய வீட்டில்...பலவாழ்வாதார...கஷ்டங்களுக்கிடையே தனிமையில் வசித்துவருவதும்...அப்பத்திரிக்கையின் மூலமே....வெளிச்சத்திற்கு வந்தது.

நரமோடி சாதாரண நபராக இருந்து பின்னர்...மனைவியை கைகழுவி விட்டது வரை அப்பத்திரிக்கையின் மூலம்கொண்டுவரப்பட்டது...மனைவியோ கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்...ஒரு நாள் தன்னை நாடிவருவார்...என்று தான் நம்புவதாக அந்த பத்திரிக்கைக்கு தெரிவித்து இருந்தார்.. நரமோடியின்....வெறுப்பையும்..கோபத்தையும் தான் சம்பாதிக்க நேரிடும் என்ற அச்சத்தால்.. தான் இதுவரை உண்மைகளை....கூற முயலவில்லை என்றும் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

பொண்டாட்டிக்கு ஒரு நல்ல புருஷனாக இல்லாதவர்...நாட்டிற்கு நல்ல பிரதமராக இருக்க முடியுமா..? மனைவியின் உணர்வுகளை புரியாமல்...அவளை கைகழுவியவர்....இன..மத..மொழி..என பல்வேறு இந்தியமக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள இயலுமா...? ஒரு சிறு மாநிலத்திலேயே...முஸ்லிம்களை..அவர்களின் மத நம்பிக்கைகளை...அனுசரித்துபோகும்..மனப்பக்குவம் இல்லாதவர்....நடுநிலையாக....மக்களை...ஆளத் தெரியாதவர்....அரவணைத்து செல்ல தெரியாதவர்...மாநில முதல்வராக....இருந்து...முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்களை ....முன்னின்று நடத்தியவர். பல்வேறு....சமயத்தவர்களும்...நம்பிக்கைகளையும்...கொண்ட பல மாநிலங்கள் ஒருங்கிணைந்த நம் இந்திய நாட்டை எந்த...அடிப்படையில்...அமைதியாகவும்...நேர்மையாகவும்....ஆளப்போகிறார் என்று... நரமொடியின் அனுதாபிகளும்...காவி ஊடகமும்....தான் பதில் சொல்ல வேண்டும்.... சொல்வார்களா...?

நமது கேள்வி: ஒரு பெண்ணை காப்பாத்த தெரியாத ஒருவருக்கு நாட்டை ஒப்படைத்தால் என்ன நடக்கும் அறிவுள்ளவரே சிந்தியுங்கள் 

Thursday, May 16, 2013

கச்சா எண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் என்ன தொடர்பு ?

கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!! பிறர் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே.

சரி .., வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ? தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை பின் எப்போது தான் கூடுகிறது ?கச்சா எண்ணெய் விலை கூடும் போது தான் விலை கூடுகிறது .. கச்சா எண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு ?

தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.

மினரல் ஆயில் என்றால் என்ன ? பெட்ரோலியப் பொருகளின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும்.

கச்சா எண்ணையிலிருந்து அதீத கடைசி பொருளே இந்த மினரல் ஆயில் ஆகும் .கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24 வகையான பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “மினரல் ஆயில்’. இதற்கு நிறமோ, மணமோ இருக்காது.இதன் அடர்த்தி அதிகம். எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம்.

பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான்

தேங்காய் எண்ணெய் என்று நாம் இது வரை நம்பி இருக்கிற -மினரல் ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய் இவைகள் johnson baby oil, amla hair oil, clinic plus, ervamartin hair oil, etc.. பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது பக்கங்கள் பத்தாது.


மினரல் ஆயில் சேர்த்தல் பக்க விளைவுகள் வருமா ?
1.தோல் வறண்டு போகும், முடி தனது ஜீவன் இழந்து வறண்டு போகும்.
2.முடி கொட்டும், முடி சீக்கிரம் வெள்ளையாகும்.
3.அரிப்பு வரும்.
4.ஆராய்ச்சிகள் குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கிறது.

தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள் ..டப்பாக்களில் அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய் யை வாங்காதீர்கள்.

குறிப்பு -நல்ல தேங்காய் எண்ணெய் முடியை நன்கு வளர வைக்கும் ..கலப்படமில்லா தேங்காய் எண்ணெய் முடி வளர கருக்க உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை.

Wednesday, May 15, 2013

விந்தணு வீரியத்தை குறைக்கும் பழக்கம்?

ஒரு பெண்ணைத் தாயாக்க (அதாவது தன் மனைவியை தாயாக்க) வேண்டுமானால் ஆணுக்கு கீழ்க்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும் என்கிறது விஞ்ஞானம்.

1. உடலுறவின்போது வெளிப்படும் விந்தின் அளவு குறைந்தது 2 மில்லி லிட்டர் இருக்க வேண்டும்.

2. விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை 20 மில்லியன் இருக்க வேண்டும்.

3. 70 சதவீதத்திற்கு மேலான உயிரணுக்கள் உயிர்த்தன்மையுடன் இருக்க வேண்டும்.

4. 30 சதவீதத்திற்கு மேலான அணுக்கள் உருச்சிதைவில்லாமல் இருக்க வேண்டும்.

5. விரைவாக ஊர்ந்து செல்லும் அணுக்களின் எண்ணிக்கை 25 சதவீதத்துக்கு மேலாக இருக்க வேண்டும்.


இப்படி இருந்தால் மட்டுமே அப்பாவாதற்கு அவர் முழுத்தகுதி உடையவர் ஆவார்


புரதச் சத்து, வைட்டமின் ஈ மற்றும் பி காம்ப்ளக்ஸ் குறைவான உணவுகளை உண்டு வரும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதேபோல் விந்தணு வீரியத்தை குறைக்கும் மது, சிகரெட் புகைக்கும் ஆண்களுக்கும் ஆண்மைக் குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. ஏனெனில் சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின், உயிரணுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு, விந்தணுக்கள் ஊர்ந்து செல்லும் தன்மையையும் பாதிக்கிறது. எனவே அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் மது, சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது. எனவே மேற் சொன்னவைகளை கடைப்பிடித்து (மது, புகை) தம்பத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Monday, May 13, 2013

அக்கறை கொண்ட அரசா ஜெயா அரசு!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஒரு அரசும் மக்களுக்கான நலத்திட்டம் தீட்டும் பொழுது அந்த திட்டம் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் மனதில் கொண்டுதான் தீட்டப்பட வேண்டும். 

ஆனால், நகர்ப்புற ஓட்டுக்களை தக்கவைக்க குறுகிய கண்ணோட்டத்தில் கொண்டுவரப்பட்ட ஜெயாவின் கவர்ச்சி திட்டமான "ஒரு ரூபாய் இட்லி" திட்டம் மாநிலத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நடைமுறைபடுத்தப்படுவதை பாராட்டும் சிலருக்கு என்ன வகையான மனப்போக்கு என்பது புரியவில்லை. உண்மையாக மக்களின் மேல் அக்கறை கொண்ட அரசாக இருந்தால் இந்த திட்டத்தை முதலில் விவசாயம் இல்லாமல் அவதிப்படும் மிக ஏழ்மையில் இருக்கும் கிராமப்புறங்களில் அறிமுகபடுத்தி இருக்க வேண்டும்.

இந்த திட்டமே வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு ஓட்டுக்காக உருவாக்கப்பட்ட ஒரு குறுகிய கால திட்டம் என்பதும், இந்த திட்டத்தை ஒருபோதும் யாராலும் நாடு முழுதும் அமல்படுத்த முடியாது என்பது ஜெயாவுக்கும் தெரியும். சில மாதங்களாக ஜெயாவால் அவசரம் அவசரமாக அறிவிக்கப்படும் திட்டங்களை நீங்கள் கூர்ந்து கவனித்தால் ஜெயாவின் மோசடியான உள்நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும்.

ஜெயாவின் மோசடிக்கு ஒரே ஒரு உதாரணம், ஆட்சிக்கு வந்து மூன்று மாதத்தில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக ஆக்கப்படும் என்ற பச்சை பொய்யை நம்பி மக்கள் ஏமாந்து இன்றுவரை அவதிப்படுவதே போதுமானது.

@ ஆட்சி நிர்வாகம், மக்களுக்கான நீண்ட கால திட்டம் பற்றி எதுவும் சிந்திக்க தெரியாத ஒரு சராசரி முன்னாள் கவர்ச்சி நடிகை ஜெயாவுக்கு நாடு முழுதும் அமல்படுத்த முடியாத ஒரு ரூபாய் இட்லி போன்ற கவர்ச்சி திட்டங்களை அறிவிக்கும் அளவுக்குத்தான் அறிவு இருக்கும், அல்லது முந்தைய ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு முடியும் தருவாயில் இருக்கும் திட்டங்களை திறந்து வைத்து தன்னால் உருவாக்கப்பட்ட திட்டம் என்று கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் அறிவித்துக் கொள்ள முடியும்.

Sunday, May 12, 2013

அரைக்கால் டவுசரை கண்டு அச்சப்படும் இந்தியா?

நாட்டின் முதுகெலும்பாக இருக்கவேண்டிய உள்துறையோ ஒரு அமைப்பை கண்டு அச்சபடுகிறது என்றால் அது மிகை இல்லை.

ஆர்.எஸ்.எஸ்ஸின் மையங்களில் ஆயுதபயிற்சியை கண்டுகொள்ளாத காவல்துறை,உள்துறை மற்றும் இந்திய அரசு. 

இந்துத்துவா தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் மையங்களில் நடக்கும் ஆயுதப்பயிற்சிகளை மத்திய, மாநில அரசுகளும் காவல்துறை, உளவுத்துறையும் கண்டுகொள்ளாமல் உள்ளன.

நாக்பூர், புனே மற்றும் போன்ஸாலா ராணுவ பள்ளிக்கூடத்தில் மிகச்சிறந்த ஆயுதப்பயிற்சிகள் தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற தளபதிகள் சிலரும் இப்பயிற்சி மையங்களில் பயிற்சிகளை அளிக்கின்றனர். மாலேகான் - நந்தத் ஆகிய இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய குற்றவாளிகள் போன்ஸாலாவின் ஆசிரியர்கள் ஆவர். தண்டயுத்தா, களரி, ஆயுத பயிற்சி முறைகள், நெருப்பு வளையத்தின் உள்ளே குதிக்கும் ராணுவ பயிற்சி முறைகள் உள்ளிட்ட பயிற்சிகள் இம்முகாம்களில் அளிக்கப்பட்டு வருகின்றன. இம்முகாம்களில் பங்கேற்று பின்னர் ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்து வெளியேறிய பலர் ஊடகங்களில் இத்தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

21 நாட்கள் நீண்ட முகாம்களில், இதில் பங்குபெறும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களை தவிர வேறு ஆர்.எஸ்.எஸ் காரர்களை கூட உள்ளே நுழைய அனுமதிப்பதில்லை. தற்போது கேரளா மாநிலத்தில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் ஆயுதப் பயிற்சி முகாமில் தமிழகத்தைச் சார்ந்தவர்களும் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. கேரள மாநிலம் பெரும்பாவூர் வளையன் சிறங்கரா என்.எஸ்.எஸ் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் 378 பேரும், பாறசாலையில் உள்ள பாரதீய வித்யா பீடம் செண்ட்ரல் பள்ளிக்கூடத்தில் 343 பேரும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கேரள மாநிலத்தில் உள்ள முக்கிய ஆயுத பயிற்சி மையமான வியாஸா வித்யாபீடத்தில் 342 பேரும் பங்கேற்பதாக ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ ஏடே கூறுகிறது.

வெளி மாநிலங்களைச் சார்ந்தவர்கள் பங்கேற்கும் பயிற்சி முகாம் பேராமங்கலம் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீதுர்கா விலாஸம் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் நடைபெறுகிறது.

தற்போது நடைபெற்று வரும் பயிற்சி முகாம்களில் ஆயுத பயிற்சியை அளிப்பது வெளிமாநிலங்களைச் சார்ந்த ஆயுத பயிற்சியாளர்கள் என்றும், இம்முகாம்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய தலைவர்கள் பங்கேற்பதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன., 
பயங்கரவாத அரைக்கால் டவுசரை கண்டு உளத்துறை அமைச்சகமே அச்சப்படுவதாக மனித ஆர்வகளர்களின் கருத்து.(இந்த பயங்கரவாத அமைப்பிடம் உள்துறை அமைச்சர் சிண்டே மன்னிப்பு கேட்டதை நினைவில் கொள்க).

Saturday, May 11, 2013

ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்?

எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...

இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்

ஆண் என்பவன் யார்?

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான்.

அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.

பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான்.

தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.

அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான்.

எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான்.

அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது.

எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.

இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்
து கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.

பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.

அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள். ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள்.

அமைதி கொள்வோம். இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்.

Friday, May 10, 2013

விரல் உறிஞ்சும் பழக்கம் உண்டா குழந்தை!?

கட்டைவிரலை உறிஞ்சும் பழக்கம் கொண்ட குழந்தைகளுக்கு மனதில் ஒரு வித பயம், தனிமையில் இருக்கிறோம் என்கின்ற செயல்பாடுகளின் காரணமாகவே குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுகின்றனர். அதிகமான இளம் குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுவதால் பசி உணர்விலிருந்து விடுபடுவதற்கானவழியாக கருதுகின்றனர்.

கட்டை விரலை உறிஞ்சும் அதிக குழந்தைகள் உணவில் கவனம் செலுத்துவதில்லை.. இதனால் குழந்தைகளுக்கு எடை குறைவாகவே உள்ளது.. இது குழந்தைகளுக்கான ஒரு ஆறுதல் நடவடிக்கை மட்டுமே. இதை குழந்தைகள் வழக்கமாக கடைபிடிக்க அனுமதிக்ககூடாது.. குழந்தைகளின் விரல் உறிஞ்சும் பழக்கதால் பெற்றோர்கள் எப்படி நிறுத்துவது என கவலை படுகின்றனர்.

நான்கு வயது வரை குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுவது பிரச்சனையில்லை அதற்கு மேல் குழந்தைகள் விரல் உறிஞ்சினால் பற்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். நான்கு மற்றும் ஐந்து வயதிலிருந்து கட்டை விரலை உறிஞ்சும் பழக்கம் தொடர்ந்தால் பற்களில் வெடிப்பு ஏற்பட்டு அதுவே தீவிர பிரச்சனையாக மாறும்.

குறிப்பிட்ட வயதிற்கு மேலாகியும் இந்த பிரச்சனை தொடர்வதால் பற்கள் நெருக்கமாக மற்றும் வளைந்து ஏதேனும் பொருட்களை கடிப்பதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். குழந்தைகள் பேசுவதில் பிரச்சனை உருவாகலாம். அல்லது ஏதேனும் விழுங்குவதிலும் பிரச்சனை ஏற்படக்கூடலாம். முன் பற்கள் புடைப்பு மற்றும் இடப்பெயர்ச்சிஏற்படும்.

பற்களின் வடிவக்கேடு குழந்தையின் முகதோற்றம் பாதிக்கும். மேலும் உணர்ச்சிகரமான சிக்கல்களை ஏற்படுத்தும். பெரும்பாலான குழந்தைகளின் இந்த நடவடிக்கை தங்கள் புகுமுக பள்ளி ஆண்டுகளில் இது ஒப்பீட்டளவில் பாதிப்பை விளைவிக்காது. குழந்தைகள் வாயில் கட்டை விரலை வைக்கும் போது கிருமிகள் வாய்வழியாக வயிற்றுக்குள் நுழைந்து விடும் என்பதை அவர்களுக்கு தெரிவியுங்கள்.

உங்கள் குழந்தைகள் கட்டை விரலை சப்பும் பழக்கத்தை விடவில்லை எனில் உங்கள் குழந்தையின் மீது கூடுதல் கவனம் செலுத்தி கவனிக்க வேண்டும். ஆரோக்கியமாக குழந்தைகள் இருக்க மன அழுத்தம் ஏதேனும் இருப்பின் அதை சரிசெய்ய வேண்டும். மேலும் உங்கள் குழந்தையின் குறிக்கோள்களை முன்னேற்றங்களை பாராட்டுங்கள் அவர்களுக்கு ஏதேனும் வெகுமதி அளித்து பாராட்டு தெரிவிப்பின் குழந்தையின் மனநிலை மாறுபடும். மருத்துவரிடம் சென்று பல்லுக்குகிளிப் ஒன்று வாங்கி மருத்துவரின் ஆலோசனையுடன் மாட்டிவிடுங்கள்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!