Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, April 30, 2013

இப்போது புரிகிறதா ஏன் இதை செய்கிறார்கள்?

ராமாயணம், ர(த்)தயாத்திரை, கரசேவை, விநாயகர் ஊர்வலம், சாகா பயிற்சி & பேரணி, சங் பரிவாரக்காரர்கள் மீதான தாக்குதல் செட்டப்புகள், மதக்கலவரங்கள், குண்டுவெடிப்புகள், பாலியல் வன்கொடுமை, பாகிஸ்தான் சதி... இவை ஏதும் இல்லாமல் இனி ஒரு மக்களைவை தேர்தலை பாஜகவால் சந்திக்க முடியுமா..? 

ஒருவேளை அப்படி சந்தித்தால்..?,  அடுத்த மக்களவையில் வெறும் ரெண்டே... இரண்டு பாஜக எம்பிக்கள் மட்டுமே இருப்பார்கள்.

காரணம், மேலே சொன்ன அவ்ளோவும் நடக்கும் முன்னர் (1989க்கு முன்னர்) இரண்டு பிஜேபி MP க்கள் தான் பார்லிமென்டில் இருந்தார்கள்.

ஆக, அவைதான் பாஜகவின் தேர்தல் வெற்றியின் ரகசியம்
எங்கெல்லாம் பாஜக தேர்தலில் வெற்றி பெற நினைக்கிறதோ, அங்கெல்லாம் மேலே சொன்னவைகளுல் சில நடக்கின்றன. அதைத்தொடர்ந்து பந்த்-கடையடைப்பு-தீவைப்பு -வன்முறை-தடியடி-துப்பாக்கிச்சூடு- என்று என்னவெல்லாமோ நடந்து... இறுதில் பாஜக அங்கே தேர்தலில் வெற்றி பெறுகிறது..!

'
கோவை-கன்னியாகுமரி-தென்காசி' தமிழ்நாட்டை பொருத்தமட்டில், பாஜக கால் பதிக்க விரும்பும் இந்த மூன்று மக்களவை தொகுதிகளில் உள்ள அப்பாவி மக்கள்தான்... பாவம்.

இதற்கெல்லாம் காரணம் தேடினால் ஆரியன் என்ற அவாக்களின் கைவரிசை இருக்கும் ஆதலால் அடியோடு ஆரியத்தை இந்தியாவை விட்டு ஒழித்தாலே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்பது திண்ணம்.

Monday, April 29, 2013

கண்டதும் காதல் வலையில் வீழ்வது யார்?

நியூயார்க்:பெண்களை விட காதல் வசப்படுவதில் ஆண்கள் முதலிடம் வகிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. எதிர் பால் இனத்தவரிடம் வெகு சீக்கிரம் வீழ்வது பெண்களை விட ஆண்களே முன்னிலை வகிக்கின்றனர். 48 சதவீதம் இளைஞர்கள் முதல் பார்வையிலேயே காதலில் வீழ்கின்றராம். ஆனால், பெண்களோ 28 சதவீதம் பேர் மட்டுமே முதல் பார்வையில் காதல் வசப்படுகின்றனர். புதிய நூற்றாண்டில் காதல் மற்றும் உறவுகள் குறித்து அறிவதற்காக நடத்தப்பட்ட ஆன்லைன் ஆய்வில் இந்த சுவராஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன. புதிய தலைமுறையினரின் மாறிய பாலியல் அணுகுமுறையும் , உறவுகளும் அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தபப்ட்டது.10 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
பாலியல், ஈர்ப்பு, இதர உடல்ரீதியான சிறப்புகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு 1300 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் சர்வேயில் பங்கேற்றவர்களிடம் அளிக்கப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற 74 சதவீதம் பேரும் தங்களின் இணையின் மீது திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தனர்.15 சதவீதம் பேர் சொந்த இணையை தவிர தவறான உறவையும் வைத்துள்ளனர். மூன்றில் ஒரு பகுதி ஆண்களும், 19 சதவீதம் பெண்களும் திருமணம் அல்லாத முறைகேடான உறவுகளில் விருப்பம் உள்ளவர்கள். கைகளை சேர்த்து பிடித்தல், செல்லப்பெயர் கூறி அழைத்தல், நான் உன்னை விரும்புகிறேன் என்று கூறுதல், முத்தமிடல் ஆகியன தனது இணையிடம் அன்பை வெளிப்படுத்த பெரும்பாலோர் கடைப்பிடிக்கும் வழிமுறைகளாம்.
தகவல் பரிமாற்றம் உறவை வலுப்படுத்துவதாகவும், இது குறையும் வேளையில் உறவு சீர்குலைவதாகவும் ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

Saturday, April 27, 2013

ரேஷன் கார்டுகளை நிமிடத்தில் புதுப்பிக்க!!

ரேஷன் கார்டுகளை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளும் வசதிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. 

ரேஷன் கார்டுகள் ஸ்மார்ட் கார்டு முறைக்கு மாற்றப்பட உள்ளன. இதற்கு போதிய அவகாசம் தேவைப்படுவதால் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளே 2012 வருடத்துக்கும் செல்லும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் அந்தந்த கடைகளில் சென்று கார்டை கொடுத்து 2012ம் ஆண்டுக்கான இணைப்புத்தாளை பொருத்தி, கடையில் கையொப்பம் மற்றும் ‘சீல்’ பெற வேண்டும். அப்போதுதான் கார்டுகள் செல்லுபடியாகும் என்று அரசு அறிவித்தது. புதுப்பித்தலுக்கு முதலில் ஜனவரி 31, 2012 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அந்த கெடு இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. தற்போது மார்ச் 31, 2012 வரை புதுப்பித்துக் கொள்ளலாம். பொதுமக்கள் நலன் கருதி ஆன்லைனில் புதுப்பிக்கும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும், சிவில் சப்ளைஸ் துறை சார்பில்http://www.consumer.tn.gov.in/ என்ற பெயரில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் ‘கார்டு புதுப்பித்தல் 2012’ என்ற பகுதிக்கு சென்று ரேஷன் கார்டின் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பிறகு அட்டையின் நிறம், குடும்பத்தில் சேர்க்கப்பட வேண்டியவர், நீக்கப்பட வேண்டியவர், சிலிண்டர்கள் விவரம் போன்ற தகவல்களோடு, தொலைபேசி எண் போன்ற விவரங்களையும் இணைய தளத்தில் பூர்த்தி பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பின்னர், ‘கமெண்ட்ஸ் என்ன?’ என்ற கேள்வி வரும். விருப்பம் இருந்தால் கமெண்ட்ஸ் எழுதலால். இல்லாவிட்டால், ‘இல்லை’ என்று எழுதி, ‘சப்மிட்’ செய்தால் சில நொடிகளிலேயே நமது ரேஷன் கார்டு புதுப்பிக்கப்பட்டு, துணை ஆணையர் கையெழுத்துடன் இணையதளத்தில் ரசீது வருகிறது. 

இந்த ரசீதை கார்டின் பின்பக்கத்தில் ஒட்டிக் கொள்ள வேண்டும். அவரவர் பகுதிக்குட்பட்ட ரேஷன் கடைக்கு சென்று, ஆன்லைன் பதிவு விவரங்களை எடுத்துச் சொல்லி, கார்டில் கையெழுத்து மற்றும் சீல் பெற்றுக் கொள்ள வேண்டும். வேலைப் பளு, குடும்ப சூழ்நிலை காரணமாக பலர் தங்கள் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ள நேரம் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முறை மூலம் ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்கப்பட்டு ரசீதும் கிடைத்துவிடுவதால் மக்கள் இந்த முறையை பெரிதும் வரவேற்கின்றனர்.

Friday, April 26, 2013

இணைய தளத்தால் இணைந்து இழக்க கூடாததை இழந்த மாணவி?

முகநூலில் முகத்தை காட்டியதன் விளைவு (பேஸ்புக்) காதலால் சிக்கி சீரழிந்த கல்லூரி மாணவி. (பெண்களின் கவனத்திற்கு).

இணையதள காதலால் பல இளம் பெண்கள் சீரழிந்து வருகிறார்கள். பலரது சோகக்கதையை அறிந்த பிறகும் இணையதள மோகத்தில் சிக்கிக் கொள்ளும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வரிசையில் சென்னையில் ஒரு கல்லூரி மாணவி சீரழிந்து கதறிக்கொண்டு இருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அந்த பெண் செல்வி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). எம்.பி.ஏ. படித்து கொண்டு இருக்கும் அவர் புராஜக்ட் செய்வதற்காக சென்னை வந்துள்ளார்.

தேனாம்பேட்டை பகுதியில் தங்கி இருக்கும் செல்வி அங்குள்ள கம்ப்யூட்டர் மையத்திற்கு அடிக்கடி செல்வார். அப்போது பேஸ்புக் மூலமாக கோகுலகிருஷ்ணன் என்பவரின் நட்பு கிடைத்தது. இவர் அந்த கம்ப்யூட்டர் மையத்தின் உரிமையாளரின் நண்பர் ஆவார்.

பேஸ்புக் மூலமாக புராஜக்ட் தொடர்பாக செல்வியும், கோகுலகிருஷ்ணனும் பல தகவல்களை பரிமாறிக்கொண்டனர். இதனால் கோகுலகிருஷ்ணன் மீது செல்விக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இந்த நிலையில் ஒருநாள் புராஜக்ட்டுக்கு உதவி செய்வதற்காக செல்வியை, கோகுலகிருஷ்ணன் ஆட்டோவில் வெளியே அழைத்து சென்றார். ஆட்டோ நேராக அம்பத்தூர் சென்றது. அங்கு ஒரு கட்டிடத்தின் அருகே சென்றதும் ஏற்கனவே நின்ற நண்பர்களிடம் செல்வியை அவர் அறிமுகம் செய்தார். பின்னர் அவர்களை அனுப்பி விட்டார்.

செல்வியை மட்டும் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அறையில் பூட்டி வைத்து கற்பழித்தார். இதற்கு உடந்தையாக கம்யூட்டர் மைய உரிமையாளர் இருந்தார். அப்போது அவர்கள் செல்வியை ஆபாசமாகவும் படம் எடுத்துள்ளனர். அவர்களின் பிடியில் சிக்கிய செல்வி கதறி உள்ளார். உடனே கோகுலகிருஷ்ணன் எதுவும் தெரியாததுபோல் வெளியே சென்று விடு இல்லை என்றால் எனது நண்பர்களுக்கும் உன்னை விருந்தாக்கி விடுவேன் என்று மிரட்டினார். இதனால் செய்வது அறியாமல் திகைத்த செல்வி கண்ணீருடன் வெளியேறினார். அதன்பிறகு கோகுலகிருஷ்ணன் ஆபாச செல்போன் படத்தை காட்டியே செல்வியை மிரட்டினார்.

சீரழிந்த செல்வி அவரிடம் நியாயம் கேட்டார். அப்போது உன்னை திருமணம் செய்கிறேன் என கூறி சமாளித்தார். பின்னர் ஒருநாள் செல்வியும், அவரது உறவினர்களும் கோகுலகிருஷ்ணனை தேடி சென்றுள்ளனர். அப்போது ஏற்கனவே ரகசியமாக வேறொரு பெண்ணை கோகுலகிருஷ்ணன் திருமணம் செய்த குட்டு உடைந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி கண்ணீருடன் நடந்த சம்பவத்தை மனுவாக எழுதி இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இணையதளம் மூலம் ஏமாறும் இளம்பெண்களுக்கு செல்வி சீரழிந்த கதையும் ஒரு சாட்சியாக இருக்கட்டும்.

Thursday, April 25, 2013

இந்தியர்கள் யார்? வந்தவர்கள் யார்??

அனைத்து முஸ்லிம் மற்றும் மாற்று மத சகோதரர்களுக்கும்.... முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் போக்கு இன்று நேற்று அல்ல., பல காலங்களாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 

முஸ்லிம்களை தீவிரவாதியாக கருதுகிற போக்கு தமிழர்களுடையதோ. அல்லது ஒட்டு மொத்த இந்தியர்களுடையதோ அல்ல.. இவர்களின் மனதில் நச்சுக்கருத்துக்கள் விதைக்கப்பட்டுள்ளது. நச்சுக்கருத்துக்களை விதைத்தவர்கள்....விபச்சார ஊடகத்துறையும்... சதை வியாபாரம் செய்யும் சினிமாத்துறையும்...சுயநல காவிக்கரை படிந்த சில அரசியல்-வியாதிகளாலும் தான். முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல , தீவிரவாத முத்திரை குத்தப்பட்டுள்ளனர் என்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் இப்பொழுது பரவலாக எழத்தொடங்கியுள்ளது. மக்கள் இப்போது கேள்வி கேட்க துவங்கியதை.. சிந்திக்க துவங்கி இருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் வந்தேறிகள் அல்ல...இங்கு இருக்கும் பெரும்பான்மையான இந்துக்களும் வந்தேறிகள் அல்ல. இந்தியாவில் இருக்கும் மற்ற பெரும்பான்மையான மதத்தவர்களும்..மற்ற பல்வேறு கொள்கையாளர்களும், நம்பிக்கை கொண்டவர்களும்....வந்தேறிகள் அல்ல..ஆரிய பார்ப்பனர்கள் தான் உண்மையான வந்தேறிகள்....உண்மையிலேயே உங்கள் கூற்றில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்.. இந்திய முஸ்லிம்களுக்கும்...பார்ப்பனர்களுக்கும்... DNA மரபணு சோதனை செய்து இதை தெரிந்து கொள்ளலாம்..முஸ்லிம்களின் மரபணு அவர்கள் சார்ந்துள்ள....வசிக்கின்ற மாநில மக்களுடன்...சமயத்தவர்களுடன்...மற்ற மதத்தவர்களுடைய மரபணுக்களுடன் ஒத்து போகும்.....ஆரிய வந்தேறி பார்ப்பனர்களின் மரபணுவோ.. காலம்காலமாக விரட்டப்பட்டு வரும்...நாடில்லா நாடோடி யூத மக்களுடன் மட்டுமே அவர்களுடைய மரபணு ஒத்துபோகும்...வரலாற்று ரீதியாக வேண்டாம்....மரபணு மூலமாகவே எங்களால் நிருபிக்க முடியும் நாங்கள் மண்ணின் மைந்தர்கள் என்று....நாங்கள் வந்தேறிகள் என்று நிருபிக்க உங்களில் யாருக்க்காவது அந்த தைரியமோ ....ஆண்மையோ உள்ளதா கூறவும்...?--

இஸ்லாம் முகலாயர் காலத்தில் தான், படையெடுப்பின் போது தான் இந்தியாவில் பரவியது எனபது எந்த அளவு தவறான கருத்தோ... அதே போன்றது அரபிகள் 1400 வருடங்களாக தான் (அதாவது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு பிறகுதான்) அரபிகள் இந்தியாவிற்கு வியாபார ரீதியாக வரத்தொடங்கினர் என்பதும் அபத்தமானது..

முஹம்மது நபி (ஸல்) ஓர் இறைகொள்கையை (இஸ்லாத்தை) அரபியருக்கு போதனையை முன்னெடுக்கும் முன்பே அரபியர்கள் இந்தியாவோடும் மற்ற உலக சாம்ராஜ்யங்கள்..சிற்றரசுகள் உட்பட மற்ற கலாச்சார மக்களுடன் வியாபார ரீதியாக தொடர்பில் இருந்தனர்...அக்கால அரபியர்கள் ஓர் இறைக்கொள்கையாளர்களாக (முஸ்லிம்களாக) இருக்கவில்லை... அவர்கள் நெருப்பு வணங்கியாகவோ....யூத..கிருத்துவ..மத நம்பிக்கையாளர்களாகவோ... இன்னும் தத்தமது சுய,நம்பிக்கையை பின்பற்றுபவார்களாகவும் தான் இருந்துள்ளனர்.

இஸ்லாம் இந்தியாவில் இருவேறான சூழ்நிலைகளில் அறிமுகமானது எனபது தான் உண்மை...ஒன்று... இஸ்லாமிய ஓர் இறைகொள்கைகள் அரபியர்கள் மத்தியில் எழுச்சிபெற்று இந்திய வணிகத்தில் ஈடுப்பட்ட அதே அரபியர்களின் மூலமாக பரவியது...அராபிய வணிகர்களின் நேர்மை..கலப்படமின்மை, பொய்யின்றி, செய்த வர்த்தகம்...நம்பகத்தன்மை. இவையே இந்திய மக்களுக்கு வித்தியாசமானதாகவும். ஆச்சரியமாகவும்.. ஒரு அறிமுகமாகவும்..மேலும் அராபியர்களின் கொள்கை கோட்பாடுகளை (இஸ்லாத்தை) அறிவதற்கு ஆவலை தூண்டுவதாகவும் இருந்தது.

மற்றொன்று இந்தியாவின் மீது முகலாயர்கள் ஆட்சி அதிகார வளயத்தை, எல்லைகளை விரிவுபடுத்திய போது இஸ்லாத்தின் அறிமுகம் இந்திய மக்களுக்கு கிடைத்தது... இதிலும் இஸ்லாத்தை எற்றுகொண்டவர்களின் நோக்கத்தை இரண்டு வகையாக அறியலாம் ...ஒன்று.. தானே இஸ்லாத்தின் கொள்கைகளை ஏற்று கொள்வது. மற்றொன்று ஹிந்துமத.. பார்ப்பன ஆசான்களாக கொண்ட இந்து அரசர்களின் கொடுமைகளிலிருந்து விடுதலை பெரும் நோக்கத்தில் இஸ்லாத்தை தழுவியது என இரண்டு வகையாக வேறுப்படுத்தி உண்மை நிலையை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம் ...அன்றைய காலக்கட்டத்தில்.. ஆரிய பார்ப்பனர்கள் ஹிந்து மத அரசர்கள் பின்னாளில் மத குருமார்களாக இருந்து பார்ப்பன அல்லாத ஏனைய மக்களை, மற்ற நம்பிக்கை கொண்டவர்களை...ஆட்டிப்படைத்தனர்.

ஏனைய தாழ்ந்த சமூகத்தினரை வஞ்சித்து வந்ததும யாவரும் அறிந்ததே...இந்தியாவில் தோன்றிய புத்த மதம் அழிந்ததே ஆரிய பார்ப்பனர்களாலும். அரசர்களாலேயுமே ஆகும்..பெருவாரியான பௌத்தர்கள் அன்றைய காலக்கட்டத்தில் உயிருக்கு அஞ்சி...இஸ்லாத்தை ஏற்றுகொண்டனர் எனபது தான் உண்மை...மற்ற தாழ்ந்த சமூக மக்கள். விடுதலை ஒன்றையே நோக்காக கொண்டு இஸ்லாத்தை சகோதரத்துவத்தை ஏற்றனர்.

சாதாரண வஞ்சிக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் மட்டும் இன்றி கேரளத்தில் "சேரமான் பெருமாள் பாஸ்கர ரவி வர்மா" போன்ற அரசர்களும் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்..(நிலவு இரண்டாக பிளந்த சம்பவத்தை தொடர்ந்து ...அரபியர்கள் மூலம் முஹம்மது நபி (ஸல்) அவர்களை.. இஸ்லாத்தின் கொள்கைகளை ஏற்றவர்..

(1) பெரும்பான்மையான முஸ்லிம்கள்....இந்தியாவில் வசித்த மாற்று மத கொள்கைகளை பின்புலமாக கொண்டவர்களே.

(2) அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களே இஸ்லாத்தை ஏற்றனர்.

(3) அவர்களின் தாகம் சுய மரியாதை. விடுதலை தான் பிரதானமாக இருந்தது.

(4) இஸ்லாத்தின் கொள்கைகளை அறிந்து, புரிந்து ஏற்றவர்களும் சிலரே....இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பதே வடிக்கட்டிய பொய்யாகும்..வாளால் ஒருவனின் மனதை மாற்ற முடியுமா..?

தாழ்த்தப்பட்ட மக்களின் காதுகளில் ஈயத்தை காய்ச்சி ஊத்துவதும் அவர்களை மிருகங்களை விட கேவலமாக நடத்தியதையும் எதிர்த்தவர்கள் முகலாயர்கள்... இஸ்லாத்தின் மூலமாக அடிமை முறையிலிருந்து ஒரு விடுதலைக்கான துவாரத்தை.. வாய்ப்பை ஏற்ப்படுத்தியவர்கள் தான் முகலாயர்கள்... (NOTE: சகோதரர்களுக்கு என்னுடைய கருத்துக்களை பதிவுகளை நீங்கள் மற்றவருக்கு பதிலாக மறுபதிவு செய்யலாம் ...உங்களுடைய கருத்துக்களையும் சேர்த்து கொள்ளுங்கள்......தவறானதை சுட்டி காட்டுங்கள் திருத்தி கொள்கிறேன்..)

{இந்தியாவில் வெள்ளைக்கார ஆட்சி இருந்தபோது வில்லியம் பென்டிக்தான், தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், இறந்த கணவனோடு, உடன் கட்டை ஏற்றும் பழக்கத்தை தடை செய்தார். அதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர், 1510 ம்ஆண்டு போர்த்துக்கீசியர் ஆண்ட இந்திய பகுதிகளில் அல் புகர்க் என்பவர், சதி என்ற பெயரில் இறந்த கணவனோடு உயிர் உள்ள மனைவியை கொளுத்துகிற கொடுமையை முற்றிலுமாக ஒழித்தார். 
வந்தேறிகள் யார்..? யார் அந்நியன்..?.   ...ஆரியனே அந்நியன்..!! (நன்றி:வே மதிமாறன்) 

Wednesday, April 24, 2013

வல்லாரை ஒருத்தருகிட்டையும் சொல்லாதே!?

வல்லாரை ஒருத்தருகிட்டையும் சொல்லாதே என்று முன்னோர்கள் இத்தாவர வகைப்பற்றி  சொல்ல கேள்விபட்டிருக்கிறோம், அதன் காரணம் இதுவோ. தாம்பத்யம் நினைவாற்றலுக்கு.

ஞாபக சக்திவல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம், பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிட ஞாபகசக்தி பெருகும். வல்லாரை கீரையை அடிக்கடி சமைத்து உண்டு வந்தாலும் நினைவாற்றல் அதிகரிக்கும்.

வல்லாரை இலை தூள் 100 கிராம், வசம்பு 15 கிராம் இடித்து தூள் செய்து ஒன்றாக கலந்து தினசரி 5 கிராம் தேனுடன் சாப்பிட்டு வந்தால் மந்தபுத்தி மாறும்.

நாள்தோறும் பெரிய நெல்லி ஒன்றை தவறாமல் உண்டு வந்தால் நம் மூளை நல்ல நிலையில் இயங்கும். பீர்க்கன்காய் வேர் கஷாயம் சாப்பிட்டால் மூளை பலம் பெறும். உடலுக்குப் பலம் கொடுக்கும்.

பாதாம்பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, மாதுளம்பழம் இவைகளை தினமும் சாப்பிட்டு வர அறிவு விருத்தி, எலும்பு வளர்ச்சி, பித்த சம்பந்தமான வியாதி நீங்கும்.

காச நோய்க்கு மிளகு வைத்தியம்
: காசநோய் தீர மிளகு வைத்தியம் சிறந்ததாகக் கருதப்படுகிறது. அதாவது, தேள் கொடுக்கு இலை, பூ ஆகியவற்றை சிறிது சீரகம், 6 மிளகுடன் அரைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து ஆட்டுப்பால் விட்டு குடிக்க வேண்டும். இதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று 48 நாட்கள் சாப்பிட்டு வர காச நோய் குணமாகும்.

இம்மருந்தை உண்ணும் போது புகைப்பிடித்தல், மது, காபி, டீ அருந்துதல் போன்றவைகளைத் நிச்சயமாகத் தவிர்க்க வேண்டும்.

மேக நோய்க்கும், நீரிழிவுக்கும் ஏற்றது
: மேக நோய்க்கும், நீரிழிவு நோய்க்கும் புங்கம் பூவில் தயாரிக்கப்படும் மருந்து மிகவும் ஏற்றதாக விளங்குகிறது. அதாவது, புங்கம் பூவை நிழலில் உலர்த்தி நெய்விட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். இதனை இடித்து சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இந்த தூளை 1 அல்லது 2 கிராம் அளவு தேனில் கலந்து காலை, மாலை இருவேளையும் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர வேண்டும். இப்படி செய்தால் எவ்வளவு கடுமையான மேக நோயாக இருந்தாலும் குணமாகிவிடும்.

இந்த மருந்தை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்., 
அதுமட்டுமல்ல தினம் உணவில் சேர்த்து வந்தால் தாம்பத்யம் பெருகும். ஆதால்தான் யாரிடமும் சொல்லாதே என்றார்களோ.

Tuesday, April 23, 2013

குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கலைஞர்!

வாழ்க்கை ஒரு வட்டம் என்பது மிக சரியாக இருக்கிறது. முதலில் நாடக கம்பென்யில் சேர்ந்து பின்பு வெள்ளித்திரைக்கு தாவி கடைசியாக அரசியலில் முதல் அமைச்சர் பதவி உள்பட அனைத்து பதவிகளையும் சகல அதிகாரங்களுடன் அனுபவித்து வந்தவரின் அரசியல் செல்வாக்கு பாதாள அளவு குறைந்துள்ளது.  

1. எனது மகளின் தாயார் என்றாலும் எனது மனைவி என்று சொல்ல மாட்டேன்.

2. மத்திய அரசாங்கத்திற்கு கண்டனம் ஆனால் ஆதரவு வாபசில்லை ,

3. தண்டவாளத்தில் தலை வைப்பேன் ஆனால... ரயில் வராது .

4. பிரபாகரனை ஆதரிக்கவில்லை , ஆனால் இறந்த புலிகளுக்கு இரங்கற்பா வாசிப்பேன் .

5. சாமியார்களை கண்டிப்பேன் ஆனால் சாய்பாபாவிடம் குங்குமம், விபூதி வாங்கிக் கொள்வேன் .

6. வெரும் 10 கோடியில் ஆரம்பித்த கலைனர் டிவிக்கு பல வட இந்திய நிறுவனங்களிடமிருந்து (ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் லாபம் அடைந்த) 214 கோடி வாங்கி இருப்பார், ஆனால் இதை CBI கண்டு பிடித்து கேட்டால் கடன் வாங்கினேன் என்பேன் இரண்டே நாளில் திருப்பியும் கொடுத்து விடுவேன்.

7. கண்ணகிக்கு சிலை எழுப்புவேன் , ஆனால் தெருவிற்கு ஒரு மனைவி, துணைவி, இணைவி, அணைவி, குழவி, கலவி ......என வைத்துகொள்வேன்.

10. டெசோ ஈழத்திற்கு போராடும் , ஆனால் தனி ஈழ தீர்மானங்கள் இருக்காது.

11. இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை சுடுவதை வன்மையாக கண்டிப்பேன் ஆனால் இந்த துபாக்கி சூடு சம்பவங்களுக்கு காரணமான் கட்சி தீவை இந்திரா இலங்கையு கொடுக்கும் போது முதலில் எதிர்த்து பின்னர் சற்காரிய கமிசன் ஊழல் வழக்குகள் தூசு தட்டபடும் என சொன்ன உடன் சம்மதித்து விட்டேன் .

12. தமிழ் தமிழ் என கத்துவேன் ஆனால் தெலுங்கு வருட பிறப்பிற்கு தமிழ் நாட்டில் அரசு விடுமு
றையை அறிவித்து விடுவேன்.

11. ஊழலுக்கு நான் நெருப்பு என்பேன் ஆனால் என் குடும்பத்து உருப்பினர்கல் அனைவரின் சொத்துகளையும் கூட்டினால் உலக முதல் பணக்காரன் நான் தான்.

12. தமிழ் மக்கள் இந்தி படிக்க கூடாது என்பேன் ஆனால் பேரன் தயாநிதிக்கு இந்தி நல்லா தெரியும் என கூறி மத்திய அமைச்சர் பதவி வாங்கி கொடுப்பேன்

13. அன்பழகனை கட்சியில் இரண்டாலம் இடத்தில இருக்கிறார் என்பேன் ஆனால் துணை முதல்வர் பதவியை மகன் ஸ்டாலினுக்கு தான் கொடுப்பேன்.

14. தமிழ் மக்கள் கடுமையான மின் வெட்டினால் பாதிக்கவடுவதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை என்பேன் ஆனால் மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரத்தை தமிழ் நாட்டிக்கு ஒதுக்க கூடாது என கண்டிபாக மத்திய அரசிடம் திரை மறைவில் சொல்லி விடுவேன்.

15. வால் மார்ட் தமிழகத்தில் வந்தால் கடும் போராட்டம் நடத்துவேன் என்பேன் ஆனால் ஓட்டெடுப்பின் போது FDI க்கு ஆதரவாக ஓட்டை போட்டு விடுவேன்.

16. போர் நின்றுவிட்டது என்று பிரணாப் தான் தவறான செய்தியைக் கொடுத்தார் என்பேன் , ஆனால் அவர் ஜனாதிபதி ஆவதற்கு நான் முதல் ஆளாக முன்மொழிவேன் .

17. தமிழர்கள் டெல்ஹியில் உயர் பதவியில் வருவதை தான் நான் எப்போதும் விரும்புவேன் என்பேன் ஆனால் டாக்டர் அப்துல் கலாம் இரண்டாவது முறையாக குடியரசு தலைவராக வர இருந்த நிலையில் அவருக்கு ஆதரவு இல்லை என்பபேன்.

18. "அரசியல் சட்டத்தைக் கொளுத்துவோம்" - ன்னு வீராப்பு பேசுவேன் அதே மாதிரி கொளுத்தி கைதாகி தண்டனை கடுமையாக இருக்கும்,,,, சிறை செல்ல வேண்டி எண்டு தெரிந்த நிலையில் "வெறும் காகிதத்தைத்தான் கொளுத்தி" என்று காமெடி செஞ்சிட்டு வெளியே வந்து விடுவேன்.

17. BJP யை மத வாத கட்சி என்பேன் ஆனால்  பின்னால் இருந்து ஹிந்துதுவாவுக்கு ஆதரவு அளிப்பேன்.

18. ராஜபக்சேவை எதிர்ப்பேன் , ஆனால் போராட்டமில்லை.

19. அதே வரிசையில் , இப்பொழுது டீசலுக்கு இரட்டை விலை முறைஇகு எதிர்ப்பு தெரிவிப்
பேன் இது தொடபான அமைச்சரவை கூட்டத்தில் இரண்டை வரி விதிக்க ஆதரவு தெரிவித்து விடுவேன்.

Monday, April 22, 2013

பயங்கரவாத நாடுகளுக்கு சொந்தமானதல்ல!?

காஷ்மீர் மக்களிடம் சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்புநடத்துவதாக சொல்லி, 1947 முதல் இன்றுவரை இந்தியா ஏமாற்றி வருகிறது.

இன்று காஷ்மீரிலே நிற்கும் இராணுவ, துணை இராணுவப் படையினரின் எண்ணிக்கை சுமார் 7 இலட்சம் பேர். 

இந்திய கொலைகார ராணுவத்தால் கொல்லப்பட்டவர்கள் மட்டும் 68,000 பேர்.

இதுவரை 10,000க்கும் அதிகமானோரை காணவில்லை. 1 இலட்சத்துக்கும் அதிகமானோர் சித்திரவதையால் ஊனமாகி இருக்கிறார்கள்.

காஷ்மீரிய பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்புணர்வுகள் எண்ணிலடங்காதவை.

இந்திய, பாகிஸ்தான் பயங்கரவாத அரசுகளுக்கு காஷ்மீர் சொந்தமானதில்லை. காஷ்மீர் ஒரு தனி நாடு என்பதை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை.

Sunday, April 21, 2013

குஜராத் மின்சார சாக் அடிக்கும் உண்மைகள்?

நாட்டிற்கு எல்லா மதங்களையும் அனுசரித்து வழிநடத்தகூடிய பிரதமர்தேவை. ஒரு மதத்தவரை ஏற்றியும் மற்ற மதத்தவரை தூற்றியும் இங்கு யாராலும் ஆட்சி செய்துவிட முடியாது. 

குஜராத்தில் வளர்சி என்பது பத்திரிக்கைகளில் மட்டுமே என்பதை மீண்டும் நிரூபிக்கும் ஆதாரம். மின்சார உற்பத்தியிலும் மக்களுக்கு வழங்குவதிலும் கேவலமான நிலை தான் குஜராத்தில். இருந்தும் இந்த செய்திகளை எல்லாம் திட்டமிட்டு மறைக்கும் மீடியாக்கள் மோடியை புகழ்வதை மட்டும் நிறுத்துவதாக இல்லை.இவர்கள் பொய்யை பரப்ப செலவழிக்கும் காலத்தை மோடி குஜராத்தில் செய்த இனப்படுகொளைகளில் கொல்லப்பட்ட மக்களின் தற்போதைய நிலையை மக்கள் மன்றத்தில் விளக்கினால் நன்றாக இருக்கும். ஆனாலும் நமது பத்திரிக்கைகள் என்றைக்கும் மக்கள் மன்றத்தில் உண்மையை பாரப்பப் போவதில்லை. காரணம் ஹிந்துத்துவ அரசியல்.

சிறுபான்மைமக்களை ஒடுக்கி சர்வாதிகார ஆட்சியை நிறுவிவிடலாம் என்று கனவுகாண்பவர்கள் எமர்ஜன்சி காலத்தில் இந்திராகாந்திக்கு ஏற்பட்டநிலையை சிந்தித்துபார்க்கவேண்டும். அரசியலில் சமரசம் செய்துகொள்வது என்பது சாதாரண விஷயமாகும்.ஆனால் மதசார்பற்ற நிலையை மட்டும் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளமாட்டோம். அதற்காக ஆட்சியை இழக்க நேரிட்டாலும் பரவாயில்லை. 

இந்நாட்டில் முஸ்லீம்களும் ஹிந்துக்களும் சம உரிமை உள்ளவர்கள். நாம் ஒற்றுமையாக வாழ்வதை அங்கிகரிக்கும் பிரதமர்தான் நமக்குதேவை.மதங்களுக்கிடையில் பிரிவினையை உண்டாக்கி அதில் குளிர்காய நினைக்கும் சக்திகளை மக்கள் ஒருநாள் துடைத்தெரிந்துவிடுவார்கள்." என்று வரலாற்று சிறப்புமிக்க கருத்துக்களை நிதீஷ்குமார் கூறியுள்ளார். 

ஐக்கிய ஜனதா தளத்தின் கூட்டத்தில் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சியின் நிலைபாட்டை விளக்கியும் மோடியின் பொய் பிரச்சாரங்களை கடுமையாக விமர்சித்தும் பேசிய விஷயங்கள் தேசிய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. ஆனால் தமிழக ஊடகங்களால் இது முற்றிலும் இருட்டடிப்பு செய்ய பட்டுள்ளது.

அவர் பேசியவற்றின் சாராம்சங்கள் இதோ: "பிகாரில் நான் ஆட்சிக்கு வந்தபோது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டும் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியும் இருந்தது. ஆனால் என்னுடைய கடின உழைப்பால் இன்று பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளேன்.ஆனால் ஊடகங்கள் அதனை பாராமுகமாக இருந்துவருகிறது. நான் (மோடியைபோல்)மாநிலத்தை முன்னேற்றிவிட்டேன் என்று சொல்லிவிட்டு நகரங்களில் பெரிய பெரிய கட்டிடங்களை கட்டிவிட்டு கிராமங்களை இருளடைய செய்துவிடவில்லை. 

முன்னேற்றம்,  என்பது மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதாகும். அதனை செய்யாமல் கட்டிடங்களை எழுப்பி யாருக்கு என்னபயன்? இன்று (குஜராத்தில்)மின் உற்பத்தி செயலிழந்து போய்விட்டது. பலகிராமங்களில்அடிப்படை வசதியான தண்ணீர்வசதி இல்லை.பெரும்பாலான மக்கள் பசிபட்டினியில் வாடுகின்றனர். ஒரு மாநிலத்தில் தண்ணீர் மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகளில் இவ்வளவு தட்டுப்பாடு இருக்குபோது அதனை எவ்வாறு முன்னேற்றமாநிலமாக அங்கிகரிக்க முடியும். இதுபோன்ற முன்னேற்றத்தைத்தான் நான் மோடியிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறாரா?. இந்த லச்சனத்தில்தான் தமிழகத்துக்கு மின்சாரம் தருவதாக தமிழக ஆட்டகாரியிடம் கேட்டார் அசிங்க பிடித்த நர மாமிச மோடி.

Saturday, April 20, 2013

பிள்ளை வரம் தரும் banana kiss சாமியார்!!

கோவை: சாமியார்கள் பிள்ளை வரம் என்று சொல்லி மந்திரித்து கொடுப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்(து)த சாமி(யோ)யார் வாயில் வாய் வைத்து (உலக)ஊத்திக்கொண்ட நாயன்கன்போல் கிஸ் அடித்து பிள்ளைவரம் தருகிறார்.

Banana English Kiss கொடுத்து குழந்தை பாக்கியம் (Kiss சாமியார்)

கோவை மாதம்பட்டி குப்பனூரில் அற்புத சாமியார் அவதரித்திருக்கிறார் தன் வாயில் வாழைப்பழத்தை உரித்து போட்டு பெண்களில் வாயில் கமல் பாணியில் செலுத்தி குழந்தை பாக்கியம் கொடுக்கிறார். 


இப்படி இதுபோல எங்காவது அருள் வழங்க முடியுமா? எல்லாம் இந்தியாவுலதான்.

Friday, April 19, 2013

புகை பழக்கம் உண்டா? சத்தியமா இல்லவே இல்லை!?

புகை பிடிக்கும் பழக்கம் உங்களிடம் உண்டா??

சத்தியமா இல்லவே.. இல்லைனு சொல்றீங்களா.... 

ஒரு நிமிஷம் இதப்படிங்க.

Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு.


ஒரு சிகரெட்லயே 2...mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..

அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!!

இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படிதான் பாராட்றது..?

" என்னங்க இது அநியாயமா இருக்கு..? நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?"-னு தானே கேக்க வர்றீங்க..?

ம்ம்... என்னங்க பண்றது..?

காசுக்காக மக்களுக்கு கவர்மென்ட்டே சாராயம் விக்கிற நாடுங்க இது.

இங்கே போயி நியாயமாவது, தர்மமாவது..!

Thursday, April 18, 2013

கோடிகளை குவிக்கும் நிதி சகோ" வின் பட்டியல்?

கீற்று கொட்டகையிலிருந்து கோடிகளுக்கு அதிபதியான சகோதர்கள் சகோதரா.

படத்தில் இருப்பது சிறுவயதில் தாயார் மல்லிகா மாறனுடன் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன்.

கோடிக்கணக்கான பணத்துக்கு அதிபதிகளாக இருக்கும் இந்த சகோதரர்களுக்கு சொந்தமாக இருக்கும் நிறுவனங்கள் என்னென்ன தெரியுமா ?

வேலூர் முரசு ப்ரைவேட் லிமிட்டெட்., இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி.

கோவை முரசு ப்ரைவேட் லிமிட்டெட்., இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி.

கே.எஸ் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிட்டெட்., இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி.

கல் பப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்., இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி, ஆர்எம்அர் ரமேஷ்.

சேலம் முரசு ப்ரைவேட் லிமிட்டெட்., இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி.

கல் கேபிள்ஸ் ப்ரைவெட் லிமிட்டெட்., இயக்குநர்கள் கலாநிதி மாறன், கே.சண்முகம்.

சன் அகாடமி ப்ரைவேட் லிமிட்டெட்., இயக்குநர்கள் உதயநிதி, கலாநிதி மாறன், எஸ்.செல்வம், கே.சண்முகம்.

ஜெமினி டிவி ப்ரைவெட் லிமிட்டெட்., இயக்குநர்கள் கலாநிதி மாறன், ஏ.மனோகர் ப்ரசாத், பி.கிரண், காவேரி கலாநிதி.

கல் கம்யூனிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டேட்., இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி.

கல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (மெட்றாஸ்) ப்ரைவேட் லிமிட்டெட்., இயக்குநர்கள் கலாநிதி மாறன், எஸ்.செல்வம் மற்றும் காவேரி கலாநிதி.

கேபிகே பப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்., இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி.

குங்குமம் நிதியகம் ப்ரைவேட் லிமிட்டெட்., இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி மற்றும் எஸ்.செல்வம்.

உதயா டிவி ப்ரைவேட் லிமிட்டெட்., இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி மற்றும் எஸ்.செல்வம்.

குங்குமம் பப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்., இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி மற்றும் எஸ்.செல்வம்.

நெட்வொர்க் கேபிள் சொல்யூஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்., இயக்குநர்கள் கலாநிதி மாறன் மற்றும் கே.சண்முகம்.

சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்., இயக்குநர்கள் கலாநிதி மாறன் மற்றும் எஸ்.செல்வம்.

சன் டைரெக்ட் டிவி ப்ரைவேட் லிமிட்டெட்., இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி.

டிஎம்எஸ் என்டர்டெய்ன்மென்ட் ப்ரைவேட் லிமிடெட்., இயக்குநர்கள் ப்ரியா தயாநிதி மற்றும் முகம்மது இஷ்ரத்.

எச்.எஃப்.ஓ என்டர்டெய்ன்மென்ட் ப்ரைவேட் லிமிட்டெட்., இயக்குநர்கள் ப்ரியா தயாநிதி மற்றும் முகம்மது இஷ்ரத்.

டிகே என்டர்ப்ரைசஸ் ப்ரைவேட் லிமிட்டெட்., இயக்குநர்கள் கலாநிதி மாறன் மற்றும் ப்ரியா தயாநிதி.

சன் ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட்., ட்ரஸ்டிகள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி.

எஸ் & எஸ் டெக்ஸ்டைல்ஸ்., செல்வி செல்வம், காவேரி கலாநிதி, ப்ரியா தயாநிதி.

எம்எம்எஃப் ட்ரஸ்ட்., ட்ரஸ்டீஸ் கலாநிதி மாறன் மற்றும் மல்லிகா மாறன்.

கல் ரேடியோஸ்., இயக்குநர்கள் கலாநிதி மாறன்.

சவுத் ஏஷியா எப்.எம்., இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி.

இந்தப் பட்டியல் 2006 அன்று உள்ளபடி. இதற்குப் பிறகு மேலும் பல நிறுவனங்களைத் தொடங்கியிருக்கிறார்கள் சகோதரர்கள். கடைசியாக அவர்கள் தொடங்கிய தொழில் நிறுவனம்தான் ஸ்பைஸ் –ஜெட் விமான சேவை...Extra, Extra.

Wednesday, April 17, 2013

சீருடை அணிந்த திருடர்கள்....!!!

காக்கி உடையணிந்து...மக்களை காக்கவேண்டிய, கவ்வல் (காவல்) துறை சூறையாடும். காட்சிகள். சமீபத்தில் மகாராஷ்டிர துலேயில் கலவர நாளன்று நடந்தேறியுள்ளது.

இந்த கவ்வல் துறை கயவர்களுக்கு ஊதியம் போதவில்லை என்றால்.. தனது அம்மாவையோ.... அல்லது மனைவியையோ.. அல்லது சகோதரிகளையோ "வைத்து" தனது ஊதியத்தை பெருக்கி கொள்ளலாம்.....அதை விட்டு எரியுற வீட்டிலே பிடிங்குனதேல்லாம் இலாபம்....என்ற நோக்கில்....வேலியே பயிரை மேயும்....காட்சிகள்...நடைபாதையில் தள்ளுவண்டி வைத்து, "வயிற்று" பிழைப்புக்காக வியாபாரம் செய்யும்... ஏழை என்றும் பாராமல்....இருப்பதை உருவும்...சீருடை அணிந்த திருடர்கள்.

காவிகளுடன் கைகோர்த்து சிறுபான்மையினருக்கு எதிரான பல கலவரங்களில் காவிகளை அடக்க துப்பில்லாமல் தப்பித்து ஓடும் அப்பாவிகளை முதுகில் சுட்டு கொன்று குவித்த சம்பவங்கள் ஏராளம்.....காக்கி உடையணிந்து...காக்கவேண்டிய....கவ்வல் துறையே....குறிப்பிட்டு முஸ்லிம்களின் பொருளாதரத்தை... சூறையாடும் காட்சிகள்.

கவ்வல் துறையே இப்படி என்றால்...இந்திய இராணுவத்தின் இலட்சணம் இதைவிட மிகக் கேவலமானது....அப்பாவிகளை சித்திரவதை செய்து கொன்று குவிப்பதும்...இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டவர்கள் அனைவரையும்....இந்திய இராணுவமும்......ஊடகமும்...தீவிரவாதிகளாக சித்தரித்து, கற்பனையாக ஒரு அமைப்பின் பெயரை புனைந்து....செய்திகளை பரப்புவதும் இந்தியாவில் வாடிக்கையாகிவிட்டது ஒருபக்கம்.....அந்த பொய்களை படித்து இந்திய இராணுவத்தை மெச்சும் "தேசபக்த ஆட்டுமந்தைகள்" இன்னொரு பக்கம்.

"அனைத்து காவலர்களும் கயவாளிகள் அல்லர்....ஆனால் அனைத்து கயவாளிகளும் காக்கி சீருடையிலேயே உள்ளனர்..." இந்திய இராணுவத்தில்..காவி கயவர்கள்.

Tuesday, April 16, 2013

எடை குறைக்க விரும்புவோர் சாப்பிடுங்கள் எக்! ஆய்வில்!!

முட்டை சாப்பிட்டால் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு சத்து அதிகரிக்கும் என்ற கருத்து பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் உடல் எடையை குறைக்க முட்டை ஒரு சிறந்த மருந்தாக திகழ்கிறது என ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

இங்கிலாந்தில் உள்ள சர்தே பல்கலைக்கழக நிபுணர்கள் சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதில் காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் உணவு சாப்பிடும்போது ஒரு முட்டை எடுத்துக் கொண்டால் போதும். தானாக உடல் எடை குறைந்து விடும் என கண்டறிந்துள்ளனர்.

ஏனெனில் முட்டை சாப்பிடும்போது முழு உணவு உட்கொண்ட திருப்தி ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து நொறுக்கு தீனிவகைகள், பிஸ்கட், கேக் மற்றும் சாக்லேட்டுகளை சாப்பிடும் எண்ணம் வராது. அதனால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே கருத்தைதான் பேராசிரியர் புரூஷ் கிரிப்பினும் கூறியுள்ளார். எனவே உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி கூடங்களுக்கு அலைந்து திரிய வேண்டாம். சாப்பாட்டின் போது தினமும் ஒரு முட்டை சாப்பிட்டாலே போதும்.

Monday, April 15, 2013

பாலகர்களுக்கு பயிற்சி அளிக்கும் பரதேசிகள்!?

இருக்க இடம் கொடுத்தால் மடத்தை பிடுங்குவார்கள் என்பது இந்த கூட்டத்திற்கு மிக கட்சிதமாக பொருந்தும், இடம் கொடுத்ததால் வந்த வினை இருக்கும் நாட்டிற்கு எதிராக சதி செயலில் ஈடுபட எல்லாவித ராணுவ பயிற்சியும் கற்று கொடுக்கிறார்கள் இளம் சிறுவர்களுக்கு.  

R.S.S சாஹா பயிற்சி முகாம்களில் துப்பாக்கி பயிற்சி எடுப்பது குறித்து (சிறுவர்கள், பெரியவர்கள் வயது வித்தியாசமின்றி )பத்திரிக்கைகளில் படங்களுடன் செய்திகள் வந்தது. இதற்கெல்லாம் சிகரம் வைச்ச மாதிரி, குஜராத கலவரத்தில் ராக்கெட் லாஞ்சர் டைப் வெடிகுண்டுகள் பயன்படுத்தியதாக தெஹல்கா விடியோவில் பேசினான் ஒரு எம்.எல்.ஏ. இப்போ போதாக்குறைக்கு RSS தீவிரவாத கும்பல் IT துறையில் வேறு நேரடியாக நுழைந்துவிட்டது.
இப்படி ஒரு அதி பயங்கரவாத கும்பாலா இருந்தாக் கூட இவனுக்கு இந்த அரசு எல்லா பாதுகாப்பும் வழங்கும். ஏன்னா இந்த அரசே ஒரு பார்ப்பனிய அரசுதான். இது தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறாங்க சில பார்ப்பன எதிர்ப்பாளர்கள். அவிங்கள் நினைச்சாதான் பாவமா இருக்கு.

பார்ப்பினியம் தெளிவாக உள்ளது, இந்த அரசாங்க அமைப்பை நம்பி தனது செயல்பாடுகள் இல்லை என்பதில். மாறாக இந்த அரசின் இயல்பில்தான் தனது பலத்திற்கான ஊற்று மூலம் உள்ளது என்பது அதற்கு தெளிவாக தெரிந்த காரணத்தினால்தான் அரசாங்கம் அமைக்கும் விசயத்தில் ஏற்படும் பின்னடைவுகளை அது பொருட்படுத்துவதில்லை.

ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் இந்தியாவில் பார்ப்னியத்தை வீதிகளில் 
வைத்து உதைக்காத (சந்தித்து அடிக்காத) வரை பார்ப்பனியத்துக்கு கவலையில்ல.

இந்தியா எதிர்நோக்கும் அபாயம் (சீனா, ரஷ்ய, பாகிஸ்தான்) அண்டை நாடுகளல்ல இந்த ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகளால்தான் என்பது எப்போது விளங்கப்போகிறதோ அன்றுதான் வல்லரசாகும், அதுவரை புள்ளரசுதான்.

Sunday, April 14, 2013

ஆரோக்கியமும் அழகும் உங்க பக்கம்தான்!

கீழ்க்காணும் உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்க மருந்தாகும் உணவு வகைகள்.

1. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!

2. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

3. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

4. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

5. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

6. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,
கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

7. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

8. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

9 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

10. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.

11. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

12. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

13. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

14. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

15. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

16. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

17. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.

Saturday, April 13, 2013

வெறி நாயும் சொறி நாயும்?

செம்மறி ஆட்டுக் குட்டியின் மூளைப் பகுதியில் இருந்து தயாரித்துக் கொண்டிருந்த 'ஆன்ட்டி ரேபிஸ் வேக்சின்' எனும் வெறிநாய்க்கடிமருந்து மேனகா காந்தியின் கைங்கர்யத்தால் கைவிடப்பட்டு விட்டது. இதனால் மருந்து தட்டுப்பாட்டால் பலமனித உயிர்கள் இறக்கும் அபாயம் எற்பட்டுள்ளது, மனிதஉயிர்களை சிறிதும் அக்கறை இல்லாமல் மிருகங்களை மட்டுமே இவள் நேசிப்பதாலோ என்னமோ இவள் பெத்தது இரத்த வெறி பிடித்த மிருகமாக அலையுது 

இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் தலையை வெட்ட வேண்டும்” , இது கை (காங்கிரஸ் சின்னத்தைக் குறிப்பிட்டு) அல்ல. தாமரையின் சக்தி. இது இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் தலைகளை வெட்டி எறியும் ஜெயம் ஸ்ரீராம் "ஓர் இந்துவுக்கு எதிராக எவனாவது கையை உயர்த்தினால், கீதை மீது சத்தியமாக அவனது கையை இந்த வருண் வெட்டுவான், இந்துக்கள் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும். ” -இப்படி இவள் பெற்ற வெறிநாய் வருண் காந்தி குரைக்குது .இதுக்கு நாய் நலவிரும்பி மேனகாவின் கருத்து என்ன தெரியுமா?


" வருண் புயல் மாதிரி; அடுத்த சஞ்சய் வருண்தான்" தைரியசாலியான என் மகனை பற்றி பெருமைப்படுகிறேன்" .

அவசரநிலை காலகட்டத்தில் முஸ்லிம்களின் டெல்லிக் குடியிருப்புகளை மட்டும் குறிவைத்து புல்டோசரால் அழித்தொழித்து, புகழ்பெற்ற டெல்லி ஜாமியா மஸ்ஜிதில் துப்பாக்கி சூடு நடத்தி, டெல்லி முஸ்லிம்களின் மனங்களில் அழியா வடுவை ஏற்படுத்தியவன் இவன் தந்தை சஞ்சய் காந்தி,அதனால் தான் அடுத்த சஞ்சய் வருண் என்று பெருமை பேசுகிறாள் இந்த நாய் நலவிரும்பி.

தெருநாய்களை கொல்லுவதை அனுமதிக்க மாட்டேன் ..தாய் மேனகா இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் தலையை வெட்ட வேண்டும்”-- மகன் வருண் தைரியசாலியான என் மகனை பற்றி பெருமைப்படுகிறேன்" – மேனகா

இந்த வெறி நாயை பெத்த சொறி நாய்க்கு நாயைவிட கேவலமாக  தெரிகிறார்கள் 
முஸ்லிம்கள்.


Friday, April 12, 2013

சவூதியில் பணிபுரிபவர்களின் கவனத்திற்கு!!

சவூதியில் வேலைபுரிபவர்களின் கவனத்திற்கு. கீழ்காணும் விஷயங்களில் கவனமாக இருங்கள்.

சவூதி உள்துறை அமைச்சக விதிமுறைகள் மீறல் அபராதங்களின் புதிய பட்டியலை 08.04.2013 அன்று வெளியிட்டுள்ளது., இந்த விபரங்கள் பின்வருமாறு:

1. இக்காமா காலாவதி ஆகும் தேதிக்கு (Expiry Date) 3 நாட்கள் முன்னதாக இக்காமாவை புதுப்பிக்க (Renewal) சமர்ப்பிக்க வேண்டும்.

மீறினால்:
இக்காமா கட்டணத்தின் இருமடங்கு செலுத்த வேண்டும்.

2. அரசு அதிகாரிகள் இக்காமா-வை காண்பிக்கச் சொல்லி கேட்கும்போது தகுந்த காரணங்கள் அன்றியே காண்பிக்க வேண்டும்.

மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்.

3. எக்ஸிட்-ரீஎன்ட்ரி விசாவையோ அல்லது ஃபைனல் எக்ஸிட் விசாவையோ பயன்படுத்தாமல் இருந்தால் முறையாக கேன்ஸல் செய்ய வேண்டும்.

மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்.
4. இக்காமா தொலைந்து விட்டால் தொலைந்த 24 மணி நேரத்திற்குள் புகார் செய்ய வேண்டும்.

மீறினால்:
முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்.

5. ஃபேமிலி விசாவில் குடும்பத்தோடு வசிப்பவர்களின் மனைவியோ பிள்ளைகளோ சவூதியில் பணி புரிய அனுமதி இல்லை.

மீறினால்:
முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம் மற்றும் யார் இக்காமாவில் ஃபேமிலி விசா உள்ளதோ அவர் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார்.

6. விசிட், பிஸினஸ் அல்லது உம்ராஃஹஜ் விசாவில் வருபவர்கள் அவர்களது விசா தேதி காலாவதி ஆகும் முன் சவூதியை விட்டு வெளியேறி விட வேண்டும். மேலும் உம்ராஃஹஜ் விசாவில் வந்தவர்கள் மக்கா ஜெத்தா மற்றும் மதீனாவைத் தவிர வேறெந்த நகரங்களும் செல்லக்கூடாது.

மீறினால்:
சிறை மற்றும் அபராதம்; மேலும் சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார். மேலும் யார் இக்காமாவில் விசிட் விசா எடுக்கப்பட்டதோ அவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார்.

7. விசிட் விசாவில் வந்து சவூதியில் வேலை பார்க்க அனுமதி இல்லை.

மீறினால்: சவூதியில் இருந்து வெளியேற்றப்படுவார். அவருக்கு வேலை கொடுத்தவர் ‘வெளிநாட்டவராக’ (இக்காமா வைத்திருப்பவர்) இருந்தால் அவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படலாம்.
8. இக்காமா ஃ விசா ஆகியவற்றை டூப்ளிகேட்டாக செய்தல் அல்லது செய்ய உதவுதல் இதர ஆவணங்களை ஃபோர்ஜரி செய்வது விசாக்களை விற்பது ஆகியவை கடுங்குற்றமாகும்.

மீறினால்:
SR 10000 அபராதமும் (அல்லது) 3 மாத சிறைத் தண்டனையும் (அல்லது) இரண்டும் விதிக்கப்பட்டு இருவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவர்.

9. ஹஜ், ஃஉம்ரா விசா தேதி காலாவதி ஆனவர்களை வேலைக்கு அமர்த்துவது; அவர்களுக்கு இருக்க இடம் கொடுப்பது; புகலிடம் அளிப்பது; வாடகைக்கு வீடு கொடுப்பது அவர்களை வாகனங்களில் அழைத்துச் செல்வது முதலானவை குற்றமாகும்.

மீறினால்: உதவியவருக்கு SR 10000 அபராதம் மற்றும் ஒரு மாத சிறைத் தண்டனை. மேலும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார். எத்தனை பேருக்கு அவ்வாறு உதவினோமோ அத்தனை முறை அபராதம் மற்றும் சிறைத் தண்டனை கூடும்.

10. தன்னுடைய கஃபீல் ஃ நிறுவனத்திற்கு வேலை செய்யாமல் பிற கஃபீல்ஃநிறுவனம்ஃசொந்த தொழில் செய்வது – பணி புரிவது குற்றம். மேலும் தன்னுடைய கஃபீலிடமிருந்து ரிலீஸ் லட்டர் வாங்கி தற்போது பணிபுரியும் நிறுவத்தில் ‘கஃபாலத் – ஸ்பான்ஸர்ஷிப்’ மாற்றாமல் வேலை செய்வதும் குற்றம்.

மீறினால்: இக்காமா கேன்ஸல் செய்யப்பட்டு சவூதியிலிருந்து வெளியேற்றப்படுவார். வெளியேற்றப்பட்ட தேதியிலிருந்து இரு வருடங்களுக்கு சவூதிக்கு புது விசாவில் திரும்ப முடியாது.

11. தொழிலாளியின் கஃபீல் ஃ நிறுவனத்தில் வேலை செய்யாமல் தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்ய வாய்ப்பளிக்கும் வெளிநாட்டு முதலாளிகள் (இக்காமா உள்ளவர்கள்) குற்றமிழைத்தவர் ஆவர்.

மீறினால்:
SR 5000 அபராதம் அல்லது ஒரு மாத சிறைத் தண்டனை அல்லது இரண்டும்.

12. மாதா மாதம் அல்லது வருடத்திற்கு பணம் பெற்றுக் கொண்டு தொழிலாளர்களை சொந்தமாக தொழில் செய்ய அனுமதிப்பதும் அல்லது பிற நிறுவனங்களில் வேலை செய்ய அனுமதிப்பதும் (கூலி கஃபீல்) குற்றமாகும்.

மீறினால்: கூலி கஃபீலுக்கு முதல் முறை – SR 5000 அபராதம் ரூ ஒரு மாத சிறைத் தண்டனை; இரண்டாம் முறை – SR 20000 அபராதம் இரு மாத சிறைத் தண்டனை; மூன்றாம் முறை – SR 50000 அபராதம் மூன்று மாத சிறைத் தண்டனை. எத்தனை பேர்களை அவ்வாறு அனுமதித்தாரோ அத்தனை முறை அபராதமும் சிறைத்தண்டனையும் கூட்டப்படும்.

13. இக்காமா இல்லாதவர்களையோ இக்காமா காலாவதி ஆனவர்களையோ விசா முடிந்தவர்களையோ வாகனத்தில் கொண்டு செல்வது குற்றமாகும்.

மீறினால்: முதல் முறை – SR 10000 அபராதம் ரூ ஒரு மாத சிறைத் தண்டனை; இரண்டாம் முறை – SR 20000 அபராதம் மூன்று மாத சிறைத் தண்டனை; மூன்றாம் முறை – SR 30000 அபராதம் ஆறு மாத சிறைத் தண்டனை. மேலும் இக்காமா கேன்ஸல் செய்யப்பட்டு சவூதியிலிருந்து வெளியேற்றப்படுவார்.

14. வேலை செய்யாமல் ஓடி விட்டதாக ஒரு தொழிலாளி மீது தவறாக சவூதி முதலாளி (கஃபீல்) ஹுரூப் கொடுத்தல் குற்றமாகும்.

மீறினால்:
SR 5000 அபராதம் மற்றும் அவரது நிறுவனம் பிளாக் லிஸ்ட் செய்யபடும்.
15. ஹுரூப் கொடுக்கப்பட்டவரை (ஓடி வந்தவரை) வேலைக்கு அமர்த்துதல் குற்றம்.

மீறினால்: ஹுரூப் கொடுக்கப்பட்டவருக்கு SR 2000 அபராதம் அல்லது இரு வாரம் சிறைத் தண்டனை மற்றும் இக்காமா கேன்ஸல் செய்யப்படும். வேலைக்கு அமர்த்தியவரின் பொறுப்பில் சவூதியை விட்டு அனுப்பப்படுவார். வேலைக்கு அமர்த்திய சவூதிக்கு முதல் முறை SR 2000 அபராதம் அல்லது இரு வாரம் சிறைத் தண்டனை; இரண்டாம் முறை SR 3000 அபராதம் அல்லது ஆறு வாரம் சிறைத் தண்டனை.

16. ஹுரூப் கொடுக்கப்பட்டவரை (ஓடி வந்தவரை) அரசாங்கமோ அல்லது அவரது கஃபீலோ பிடித்தால், ஹுரூப் கொடுக்கப்பட்டவர் கைது செய்யப்படுவார். சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார். வெளியேற்றத்திற்கான செலவினை அவரை வேலைக்கமர்த்தியவர் ஏற்க வேண்டும். ஓடி வந்து சொந்தமாக தொழில் செய்தால் அவரது செலவிலேயே வெளியேற்றப்படுவார். ஓடி வந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டால் கஃபீல் செலவில் அனுப்பத் தேவையில்லை. அரசே அனுப்ப ஆவண செய்யும்.

17. தொடர்ந்து எந்த காரணமுமின்றி எந்த தகவலும் இன்றி இரு நாட்களுக்கு வேலைக்கு வராமல் இருப்பது கூடாது; அவ்வாறு வேலைக்கு வராமல் இருக்கும் தொழிலாளியைப் பற்றி உடன் ஜவஸாத்தில் அவருடைய கஃபீல்ஃநிறுவனம் புகார் செய்ய வேண்டும்.

மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!