Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, March 31, 2013

வறண்ட இந்தியாவை குளிப்பாட்டும் கோக்!?

விற்பனை ஜனநாயகமல்ல, விற்பனை சர்வாதிகாரம்!. தங்களது ஆதிக்கத்தை திணிக்க இவர்கள் சாம, தான, பேத, தண்டம் என சகல வழிகளிலும் போர் நடத்தினர். ஐஸ்வர்யாராய், ஷாருக்கான், விஜய், தெண்டுல்கர் ஆகியோர் பல்லிளிக்கும் விளம்பரங்களைப் பார்த்து வாய் பிளக்கும் நெஞ்சங்களுக்கு இந்நிறுவனங்ளின் கோர முகம் தெரியாது.

இந்திய இயற்கை வளத்தின் சராசரி நிறம் எதுவாகவிருக்கும்? செம்மண், கரிசல், வண்டல், பசுமை என நீங்கள் கருதினால் அது தவறு. கடந்த 10 ஆண்டுகளில் பெப்சியும் – கோக்கும் இணைந்து நீலத்தையும் – சிவப்பையும் இந்தியாவின் தேசிய நிறமென மாற்றிவிட்டன. பெட்டிக் கடைப் பெயர்ப் பலகைகள், பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகள், தொலைக்காட்சி விளம்பரங்கள் எங்கும் எதிலும் போப்சி – கோக் மயம். மாநகரத் தெருக்களில் கோலாக்களின் லாரிகள் அட்டையாய் ஊர்கின்றன. பெப்சியின் மூடிகளை சேகரித்து பரிசுப் பொருள் வாங்க அலையும் மேட்டுக்குடி சிறுவர்களுக்கு அது ஓய்வு நேரத் தொழிலாகிவிட்டது.

ஓராண்டில் ஒரு அமெரிக்கன் குடிக்கும் குளிர்பான பாட்டில்களின் சராசரி எண்ணிக்கை 700. இப்போது அமெரிக்க மக்கள் தண்ணீர் அருந்துவதில்லை. தாகம் வந்தால் அவர்கள் நினைவுக்கு வருவது பெப்சி – கோக்கின் கோலாக்கள்தான். இப்படி நீர் குடிக்கும் பழக்கத்தை ஒழித்து, அமெரிக்க மக்களின் இரத்தத்தில் கலந்து விட்ட கோக் வெறும் குளர்பானம் மட்டுமல்ல. பெப்சி – கோக்கில் அப்படி எனன்தான் இருக்கிறது? அதைவிட அவற்றை மேற்கத்திய வாழ்வின் அங்கமாக ஒரு போதையாக எப்படி மாற்றினார்கள் என்பதே முக்கியமானது. அதில்தான் இரு சோடாக் கம்பெனிகள் பல்லாயிரம் கோடி சொத்துக்களுடன் ஒரு உலக சாம்ராஜ்ஜியம் நடத்தி வரும் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

இரண்டு அமெரிக்க சோடாக் கம்பெனிகள் உலகை ஆக்ரமித்த வரலாறு: 1886- ஆம் ஆண்டு, அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தில் ஜான் ஸ்டித் எனும் மருந்தாளுநர் கோக்கின் சோடா இனிப்பு கரைசலை உருவாக்கினார். அன்று நாளொன்றுக்கு 9 பாட்டில்கள் தலா 2 ரூபாய்க்கு விற்கப்பட்ட கோக், 2000ஆம் ஆண்டின் முதல் 4 மாத இலாபமாக மட்டும் 5000 கோடி ரூபாயை அள்ளியிருக்கிறது. மேலும் இன்று தனது சோடாக் கரைசலையும் கோக், கிளாசிக் கோக், காஃபின் இல்லாத கோக், டயட் கோக், செர்ரி கோக், ஃபேண்டா, ஸ்பிரிட், மிஸ்டர் பிப், மெல்லோ யெல்லோ என 25 வகைகளாய் பெருக்கியிருக்கிறது. இன்று அதன் சொத்து மதிப்பு சுமார் 85 ஆயிரம் கோடி ரூபாய்.

1898ஆம் ஆண்டு பெப்சியின் சோடாக் கரைசலை கால்ப் ப்ராதம் என்ற மருந்தாளுநர் உருவாக்கினார். குளிர்பானம், நொறுக்குத் தீனி, உணவகங்கள் என்று பெப்சியின் பேரரசு 150 நாடுகளில் 4,80,000 ஊழியர்களுடன் நடந்து வருகிறது. சொத்துமதிப்பு சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாய்.

உலக குளிர்பான சந்தையில் 46 சதம் வருவாய் கோக்கிற்கும், 21 சதம் பெப்சிக்கும் போய்ச் சேருகிறது. இப்படி இரண்டு நிறுவனங்ளும் உலகின் தாகம் தீர்க்கும் தேவன்களாக, பல்லாயிரம் கோடி ரூபாயை ஆண்டுதோறும் சுருட்டி வருவது எப்படி சாத்தியமானது? நம்மூரில் தயாரிக்கப்படும் கலர் கோலி சோடாவின் கரைசலை விட பெப்சி – கோக்கின் கரைசல் அப்படி ஒன்றும் உயர்ந்ததல்ல. கார்பன் வாயு, இனிப்பு, வண்ணம், நீர் கொண்டு கலக்கப்படும் இக்கரைசல் தயாரிப்பதற்கு எளிதானதே. அதி உயர் தொழில்நுட்பமோ, ரகசியமோ எதுவும் கிடையாது. அதே சமயம் இந்தக் கோலாக்களில் இருக்கும் மற்ற வேதிப்பொருட்கள், போதை போல அடிமைப்படுத்தும் பொருட்கள் எதுவும் மற்றவர்களுக்குத் தெரியாது. இவற்றை கண்டுபிடிப்பு இரகசியம் என்ற பெயரில் அந்த நிறுவனங்கள் வெளியிட மறுக்கின்றன.

ஆனாலும் உலகெங்கும் சாதாரணத் தொழிலாக நடத்தி வந்த இத்தகைய சிறு குளிர்பான உற்பத்தியாளர்களை இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் ஒரு நூற்றாண்டாய் ஒழித்து விட்டன. இந்த இரண்டு கோலாக்களும் ஏதோ சொர்க்கத்தில் தயாரித்து அளிக்கப்படும் அழகான, தரமான அமுது என்ற சித்திரத்தையும் தமது வஞ்சகமான பிரச்சாரத்தால் ஏற்படுத்தி விடட்ன.

கோக் – பெப்சி இந்தியாவைச் சூறையாடிய வரலாறு: இதற்கு நமது இந்திய எடுத்துக்காட்டையே பார்க்கலாம். 77இல் ஜனதா அரசால் கோக் வெளியேற்றப்பட்ட பிறகு குளிர்பானச் சந்தையில் பார்லே நிறுவனம் ஆதிக்கம் செலுத்தியது. பார்லேயின் தம்ஸ் அப், லிம்கா, கோல்டு ஸ்பாட் போன்ற பானங்கள் அப்போது பிரபலமாக இருந்தன. 90களின் ஆரம்பத்தில் 60 சதவீத சந்தையைக் கைப்பற்றிய பார்வே நிறுவனம் கேம்பா கோலா, த்ரில், டபுள் கோலா போன்ற போட்டி பானங்களை எளிதில் வென்றது. இவை இந்திய அளவில் விற்கப்பட்ட பானங்கள். இது போக மாநில, வட்டார, உள்ளூர் அளவில் ஏராளமான பானங்கள் இருந்தன.

தமிழகத்தில் காளிமார்க், வின்சென்ட், மாப்பிள்ளை விநாயகர் இன்னபிற நிறுவனங்கள் பிரபலமாயிருந்தன. விருதுநகரில் 1916இல் பழனியப்ப நாடாரால் துவங்கப்பட்ட காளிமார்க் 80கள் வரை 30 சதவீத தமிழக சந்தையை வைத்திருந்தது. மேலும் இந்திய அளவில் பழரச பானத்திற்கு கிராக்கி இருந்தது. பார்லேயின் ப்ரூட்டி, பயோமா இன்டஸ்ட்ரியின் ரசனா போன்றவை பழரச சந்தையில் ஆதிக்கம் செலுத்தின.

பெப்சி – கோக் வருகைக்குபிறகு இந்நிலைமை அடியோடு மாறியது. 1980களில் இருந்தே பெப்சி நிறுவனம் சில இந்திய தரகு முதலாளிகளின் உதவியுடன் இந்தியாவில் நுழைய முயன்று, இறுதியில் 1990ஆம் ஆண்டு வென்றது. 100 சதவீத பங்குகள் வைத்திருக்கவும், உள்நாட்டு பாட்டில் தொழிற்சாலைகளை வாங்கவும், காய்கனி, டப்பா உணவு ஏற்றுமதி செய்யவும்… என ஏராளமான சலுகைகள் இந்திய அரசால் பெப்சிக்கு வழங்கப்பட்டன. பெப்சியும் வந்த வேகத்தில் 20 சதவீத குளிர்பான சந்தையைக் கைப்பற்றியது.

இங்கிருந்து வெளியேற்றப்பட்ட கோக் 16 ஆண்டுகளுக்குப் பிறகு 1993ஆம் ஆண்டு மீண்டும் குதித்தது. கோத்ரெஜ், பிரிட்டானியா போன்ற நிறுவனங்கள் கோக்குடன் கூட்டு சேர்ந்தன. சந்திரசாமியின் அரசியல் பினாமியான சந்திரசேகர் தலைமையிலான மைய அரசு கோக்கிற்கு அனுமதி வழங்கியது. இப்படியாக அமெரிக்காவின் இரண்டு சோடாக் கம்பெனிகள் வறண்டு போன இந்தியாவைக் குளிப்பாட்டி கொள்ளையடிக்கும் வேலையை ஆரம்பித்தன.

அன்றைய இந்தியாவின் குளிர்பான சந்தை 1200 கோடி ரூபாய் மதிப்பைக் கொண்டிருந்தது. ஒரு இந்தியன் ஒராண்டுக்கு குடிக்கும் பாட்டில்கள் 3 மட்டுமே தனிநபர் சராசரியாய் இருந்தது. மொத்தத்தில் வளர்ச்சி விகிதம் 2.5 சதவீதம்தான். இன்றோ வளர்ச்சி விகிதம் 20 சதவீதமாக மாறிவிட்டது. அன்று விற்பனையான குளிர்பான பாட்டில்கள் 276 கோடி, இன்று 350 கோடி பாட்டில்களாக உயர்ந்து விட்டது. இன்னும் 5 ஆண்டுகளில் இதை 1200 கோடிப் பாட்டில்களாக உயர்த்தப் போவதாக கோக்கும் – பெப்சியும் மார்தட்டி வருகின்றன.

இன்று குளிர்பானச் சந்தையில் ஏக போகம் வகிக்கும் நிலையை கோக்கும் – பெப்சியும் அடைந்துவிட்டன. புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆதாயங்களை நேரடியாகவும், சதி, ஏமாற்று, மிரட்டல், கைப்பற்றுதல், பிரம்மாண்டமான விளம்பர இயக்கம் என மறைமுகமாகவும் பயன்படுத்தி இந்த ஏகபோகம் எட்டப்பட்டது.

கோக் வருகைக்கு முன்பு இங்கே கோலா வகை பானங்களுக்கு வரி அதிகமாகவும், பழரச வகைகளுக்கு குறைவாகவும் இருந்தது. இந்தியாவில் பழவகை விளைச்சல் அதிகம் என்பதால் விவசாயத்துக்கு ஆதரவாக அரசால் இக்கொள்கை பின்பற்றப்பட்டது. பின்னர் காட் ஒப்பந்தப் படி கோலாவுக்கான வரி குறைக்கப்பட்டது. அதன் பின்பே கோலாக்களின் விற்பனை பழரசத்தை விட உயர்ந்தது. இப்படி அரசால் பெற்ற சலுகைகள் ஏராளம்.

அடுத்து 50% குளிர்பான சந்தையை வைத்திருந்த பார்லே நிறுவனத்தை இந்தியா வந்த ஆறே மாதங்களில் கோக் 123 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதன் மூலம் 60 பாட்டில் தொழிலதிபர்களும், 2 இலட்சம் சில்லறை விற்பனையாளர்களும், நாடு தழுவிய வலுவான விற்பனை வலைப்பின்னலும் கோக்கிடம் சரணடைந்தன. தம்ஸ் அப்பும், லிம்காவும், கோக்கின் தயாரிப்பு என விற்கப்பட்டன. பார்லே நிறுவனத்தில் அதிபர் ரமேஷ் சவுகானும், கோக்கின் யானை பலத்துடன் போட்டியிட முடியாது எனத் தெரிந்து கொண்டு தனது நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு விற்று விட்டார்.

மிகப்பெரும் தரகு முதலாளியான பார்லேவுக்கே கதி இதுதான் எனும்போது காளிமார்க் போன்ற சிறுமுதலாளிகள் என்ன செய்வார்கள்? தினத்தந்தியின் உள்ளூர் பதிப்பில் விளம்பரம், காடாத் துணி பேனர் விளம்பரம் என்றிருந்த காளிமார்க், அமெரிக்க சோடாக் கம்பெனிகளின் அதிரடியான வானொளி விளம்பரத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இப்படியாக கோக் – பெப்சி எனும் அமெரிக்க கழுகுகள் ஆளின்றி நாட்டைக் கவ்வ ஆரம்பித்தன.

இவ்விரு பன்னாட்டு நிறுவனங்களும் பிரம்மாண்டமான முதலீடு, மிக விரிவான உற்பத்தி – வலைப் பின்னல், குண்டு வெடிப்பைப் போன்ற விளம்பரங்கள் ஆகிய முப்பெரும் அஸ்திரங்கள் கொண்டு இந்தியாவில் வேரூன்றி விட்டன. இன்று குளிர்பான சந்தையில் 53 சதவீதம் கோக்கிடமும், 40 சதவீதம் பெப்சியிடமும் உள்ளன. சந்தையின் மதிப்பு 5 ஆயிரம் கோடி ரூபாய்.

பிடித்த பொருள் கிடைக்க வில்லையென்றால் கிடைக்கும் பொருளை வாங்குவது நுகர்வோர் வழக்கம். அதன்படி தமது பானங்களை மட்டுமே கடைக்காரர் விற்க வேண்டும் என்பதை இந்நிறுவனங்கள் தமது வர்த்தகக் கொள்கையாக வைத்திருக்கின்றன. கடைக்காரருக்கு குளிர்பதன பெட்டியை மலிவு விலையில் அல்லது இலவசமாய் வழங்குவார்கள். முதல் மிச்சம் என கடைக்காரர் நினைப்பார். ஆனால் கோக் அல்லது பெப்சி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும், அதை விற்றே கடன் அடைக்க வேண்டும், அதனால் அதிகமாக அந்த பானங்களை இருப்பு வைக்க வேண்டும் என்ற சுழலில் தாம் சிக்குவோம் என்பதை அவர் அறியமாட்டார். மேலும் பெயர்ப் பலகைகள், சுவர்க்கடிகாரம், பனியன், தொப்பி என்ற பரிசுப் பொருட்கள், முதல் கொள்முதல் இலவசம் போன்ற சலுகைகளாலும் கடைக்காரர்களை அவர்களை அறியாமலே விலை போக வைத்துவிட்டனர்.

Saturday, March 30, 2013

பரபரப்புக்கு பஞ்சமில்லாத ராஜா?


சன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு ! சன் குழுமத்திற்கு வரலாற்று புகளை தேடி தந்துள்ளது.

நாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா?


மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை, ஹோட்டலில் வேலை செய்பவனுக்கு உணவு வகைகள்,போல் அவரவர் தொழில் சார்ந்த பொருள்கள் இலவசமாக கிடைப்பது போல், கனவு தொழிற்சாலையான சினிமா உலகில்தான் விபசாரத்திற்கு பஞ்சமில்லை என்று மக்கள் எண்ணி இருந்தனர்.ஆனால், பொழுது போக்கை மட்டுமே வைத்து காசு சம்பாதித்து வரும் தொலைக் காட்சி சேனல்களில் முதன்மையான சன் தொலைக் காட்சியில் வேலை பார்க்கும் செய்தி எடிட்டர் ராஜா போன்றோர் பெண் பணியாளர்களை பதம் பார்த்தது இன்று பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இவர்களால் வெளியிடப்படும் செய்திகளைத் தான் மக்கள் முக்கிய செய்திகளாக நம்பி வந்தனர். மானமுள்ள பெண்கள் இனி சன் தொலைக்காட்சியில் வேலை செய்வார்களா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த காலங்களில் செய்தி பெண் வாசிப்பாளர் வி ஐ பியால் பாதிக்கப்பட்ட வரலாற்றுப் புகழும் இந்த தொலைகாட்சிக்கு உண்டு.

                -----------///-------
சன் டிவி நிர்வாக பொறுப்பில் இருக்கும் கும்பலுக்கு கற்பு என்ற வாழ்க்கை தொலைத்த பெண்கள் ஏராளம். பாதிக்கப்பட்ட ஆண்கள் கணக்கில் அடங்காது. ஆனால் அதிகார பலம், பண பலத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அடங்கி போனார்கள். சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா, மீது சன் டிவியில் நிருபராக பணியாற்றிய அகிலா, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஐ.பி.எஸ்யிடம் புகார் கொடுத்தார். சென்னை மாநகர காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள், இணை ஆணையர் சேஷாயி ஐ.பி.எஸ் காதில் முணுமுணுக்க, மாறன் சகோதரர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றார் இணை ஆணையர் சேஷாயி ஐ.பி.எஸ்.

அகிலா கொடுத்த புகாரின் பேரில், சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா கைது செய்யப்பட்டார். நள்ளிரவு(19.3.13 இரவு 1மணிக்கு) புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.புழல் சிறையில் ராஜா, ராஜா மாதிரி இருக்கிறார். புழல் பகுதி காவல்துறை உதவி ஆணையர் கந்தசாமி, திமுக மாஜி அமைச்சர் முல்லை வேந்தனின் மருமகன்... அப்புறம் என்ன புழல் சிறையில் சன் டிவி ராஜா,ராஜா மாதிரி இருக்கிறார்.

சன் டிவி நிர்வாகத்தில் இருக்கும் சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா, தினகரன் நிர்வாக அதிகாரிஆர்.எம்.ரமேஷ் உள்ளிட்ட ஆறு பேர் கும்பல் ஆட்டத்தை தனி சினிமா படமே எடுக்கலாம்.ஆனால் இவர்களை மாறன் சகோதரர்களால் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான் உண்மை.

சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா, ஒரு காலத்தில் டாக்டர் ராமதாஸ் திண்டிவனத்தில் கிளினிக்வைத்திருந்த போது, எடுபிடி வேலை பார்த்து வந்தார்.குமரி முரசு நாளிதழில், புரூப் ரீடராகபணியில் சேர்ந்தார். புரூப் பார்க்கும் டேபிளின் கண்ணாடி உடைத்துவிட்டு, சொல்லாமல், குமரி முரசை நாளிதழிலிருந்து வெளியேறினார்..இப்படி வாழ்க்கை தொடங்கிய ராஜா சன் டிவியில் நுழைந்து, தற்போது கைதாகி உள்ளார்.

சன் டிவி ராஜாவுக்கு மாமா வேலை பார்ப்பவன் வெற்றி வேந்தன்.. வெற்றி வேந்தனிடம் சிக்காதபெண்களே கிடையாது.. வெற்றி வேந்தன் முதலில் பல பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்து, கைதாகி தலைமறைவாக இருக்கும் சன் டிவி இன்புட் எடிட்டர் ராஜராஜனுக்கு மாமா வேலைபார்த்து வந்தான்...பிறகு மூன்று மாதம் நிருபர் பணிக்கு ராஜா அனுப்பினார். மூன்று மாதத்தில் பலரை மிரட்டி பணம் வசூலிக்க, நிருபர் பணியிலிருந்து மீண்டும் மாமா வேலை பணிக்கு மாற்றப்பட்டார்.

வெற்றிவேந்தன், ராஜா சிக்கிய சங்கீதா, சென்னை மாநகர காவல்துறையிடம், வெற்றிவேந்தன், செய்தி ஆசிரியர் ராஜா, இன்புட் எடிட்டர் ராஜராஜன் மூவரைப்பற்றி புகார் கொடுத்தார். ஆனால் புகார் கொடுத்த இரண்டு நாட்களில் மின்சாரரயிலில் தற்கொலை செய்து கொண்டதாக நாளிதழிகளில்செய்தி வந்த்து இப்படி அகிலா, மின்சார ரயிலில் தற்கொலை செய்து கொண்டதாக, வராமல் தப்பித்து, தைரியமாக புகார் கொடுத்து சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜாவுக்கு மாமா வேலை பார்க்கும் வெற்றி வேந்தன் திருச்சிக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

இப்படி பொழப்புக்காக வேலை தேடி வரும் சன் டிவிக்கு நிருபர் பணிக்கு, செய்தி வாசிக்கும் பணிக்கும் வரும்பெண்களின் கற்போடு விளையாடுவது வெற்றி வேந்தன், ராஜராஜன், சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜாஇந்த மூவரின் அணிக்கு பொழுது போக்கு.

முதல் கட்டமாக வெற்றிவேந்தனிடம் சிக்கிய பெண்களின் படங்கள் கிடைக்க, அதை அப்படியே வெளியிட்டு உள்ளோம். இந்த மூவர் அணி, தினகரனில் உள்ள ஆறு பேர் அணி காமகளியாட்டத்தில் சிக்காத பெண்களே இருக்கமாட்டார்கள்.அப்படி ஒத்துவராத பெண்களை வேலையைவிட்டு அனுப்பிவிடுவார்கள்.. வேறு எங்கும்அவர்களை வேலைக்கு சேர்க்காதபடி தொடர்ந்து மிரட்டுவார்கள்.. வேறு வழியில்லாமல் அப்பாவி பெண்கள்,பத்திரிகை தொழிலுக்கு முழுக்கு போட்டுவிடுவார்கள்.

Thursday, March 28, 2013

உணவு பண்டங்களின் கோட்வேடின் உள்நோக்கம்

E. கோட் ஐரோப்பா மற்றும் மேலை நாடுகளில் மறைத்து எழுதுவது நோக்கம் ப்போது புரியும் மேலே படியுங்கள். E Code என்றால் என்ன? அது ஏன் உருவாக்கப்பட்டது? எந்த எந்த E Code (தவிர்க்க வேண்டியது.)

இங்கிலாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகளில், இறைச்சி உண்ண என்றால் முதல் இடம் பிடிப்பது பன்றி இறைச்சிதான். இறைச்சிக்காகவே ஏகப்பட்ட பன்றிப்பண்ணைகள் அங்கே உண்டு. உதாரணமாக பிரான்சில் மட்டுமே சுமார் 42,000 பன்றிப்பண்ணைகள் இருக்கின்றன சகோ..! அப்படியெனில், மொத்த ஐரோப்பாவில் எத்தனை பன்றிகள் ஒருநாளைக்கு இறைச்சிக்காக கொல்லப்படும்..?

பன்றி இறைச்சியில்தான் மிக மிக அதிக கொழுப்புகள் உள்ளன என்பதால் அவற்றை நீக்கி விட்டுத்தான் ஐரோப்பியர் இறைச்சி விற்பனை செய்வார்கள். அப்படியெனில், மொத்த ஐரோப்பாவிலும் எத்தனை டன் கொழுப்பு சேரும் ஒரு நாளைக்கு..? எனவே, இப்படி நீக்கப்பட்ட கொழுப்புகளை அப்புறப்படுத்துவது நாளடைவில் மிகக்கடினமான காரியமாக மாறியது. ஆரம்ப காலத்தில் அவற்றை தீயிட்டு எரித்தனர். அப்போது அவை எண்ணெயாக உருகி ஓடியதை கண்டபோது, சூடு ஆறியபின் இருகுவதை கண்டபோது, ஐடியா பிறந்தது. அப்படித்தான் பன்றி இறைச்சி அந்த தோட்டாக்களை பாதுகாக்கும் உறையாகவும், சோப்புக்கட்டிகள் செய்யவும், சோள எண்ணெய்க்கு மாற்றாகவும் இன்னும் பலவாறாகவும் பயன்படுத்தப்பட்டன.பின்னாளில், ஐரோப்பியர்கள் கடும் கொலஸ்டிரால் மூலம் பாதிக்கப்பட, அது பற்றியெல்லாம் அறிவியல் வளர்ந்து, அதன் காரணமாக மருத்துவ ரீதியில் உடல்நலக்குறைபாடு பிரச்சினை பற்றி அறிய ஆரம்பிக்க, இப்போது ஐரோப்பிய நாடுகள், ஒரு சட்டம் போட்டன. அதாவது, உணவுப்பண்டங்களில் பன்றிக்கொழுப்பை சேர்த்தால் அதனை பாக்கெட்டின் மீது எழுதவேண்டும் என..! அது மட்டுமில்லாது, அந்த விற்பனைக்குறிய பண்டத்தில் வேறு என்னன்ன மூலப்பொருட்கள் எல்லாம் சேர்க்கப்பட்டு உள்ளடங்கி உள்ளன என்பதையெல்லாம் ஒரு பட்டியலாக உறைமீது எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு போனது அந்த சட்டம். அதன்படி அப்படியே எழுதி உலகெங்கும் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்த ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களின் தலையில் அப்போதுதான் அந்த இடி இறங்கியது..!


அதாவது, உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒருபங்கு கொண்ட முஸ்லிம்கள், அந்த பொருட்களை புறக்கணிக்க ஆரம்பிக்க, அப்படிப்பட்ட பெரிய நஷ்டத்தை அந்த நிறுவனங்கள் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அதற்காக, மலிவான பன்றிக்கொழுப்பை விட்டுவிட்டு, கிராக்கியான தாவர எண்ணெய் உபயோகித்து லாபத்தை இழக்கவும் மனதில்லை. புறக்கணிக்கும் அந்த எண்ணெய் வள நாடுகளின் வணிகமும் அவசியம் வேண்டும். என்ன செய்யலாம்..?

உடனடியாக ரூம்போட்டு அதிதீவிர சிந்தனையில் யோசித்த அவர்களின் மூலையில் உதித்தது ஓர் உபாயம்..! அதாவது, இனி... எந்தெந்த மூலப்பொருட்களையெல்லாம் உணவுப்பொருட்களின் உறைமீது எழுதினால் பிரச்சினை/எதிர்ப்பு வருமோ அதையெல்லாம் பெயராக எழுதாமல்... சங்கேத வார்த்தைகளாக எழுதுவது என்று..!

அந்த ஐடியாதான்... (E codes) ஈ கோடுகள்...! இதில் 'E' என்பது Europe..! 'ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களின் மண்டையில் உதித்த கள்ளத்தனம்' என்பதை பேட்டன்ட் போட்டு பெருமையாக பறைசாற்றிக்கொள்கிறார்கள்..! வெட்கக்கேடு..! வேதனை..!

தற்போது சர்வதேச அளவில் பொருட்கள் சந்தைபடுத்தப்பட்ட நிலையில் நீங்கள் இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் பல பாக்கெட்/பாட்டிலில் அடைக்கப்பட்ட உணவுப்பொருளை ஒவ்வொன்றாக எடுத்துப்பாருங்களேன் சகோ..! அதில், ingredients என்ற பகுதியில், E-210, E473, E-904 என்று இப்படி சில ஈ கோட்ஸ் எழுதப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். அவையெல்லாம் என்ன என்று எப்போதேனும் சிந்தித்ததுண்டா சகோ..?

Tuesday, March 26, 2013

கூத்தாடி அரியணை (பிரதமர்) ஏறினா(ள்)ல்?


கூத்தாடி அரியணை (பிரதமர்) ஏறினாள் என்னென்ன நடக்கும் என்று நண்பரின் கற்பனையில் உத்தித்தது.

ரிலையன்சை எல்லாம் பின்னுக்குத் தள்ளி டாஸ்மாக் இந்தியாவின் முதன்மை நிறுவனமாகும். சிகரெட் விற்பனைக்கும் அரசே தனி கடைகளை ஆரம்பிக்கும், வியாபாரம் பிச்சுக்கும்.

பாராளுமன்றம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலாய்க் காட்சியளிக்கும் பின்னே 273 எம்.பிக்கள் குப்புற விழுந்து விழுந்து எழுந்தால்?ஒரு எம்.பி கூட லஞ்சம் வாங்க முடியாது. ஏன்னா அவரு அன்னிக்கி பதவில இருக்காரா? இல்லையானு ஆண்டவனுக்கு கூட தெரியாது, ஆண்டவனே 8 மணி நியூஸ் பார்த்துத்தான் தெரிஞ்சுக்குவாராம்.

குண்டு வெடிப்பைவிட பிரதமர் அறிக்கை அரசு அலுவலர்களுக்கு மிகப்பெரிய குண்டாய் இருக்கும்.

அவதூறு வழக்கிற்கென்றே தனி நீதிமன்றம் அமையும், அத்துனை அவதூறு வழக்குகள் போடப்படும், சில அவதூறு வழக்குகள் நீதிமன்றத்தின்மீதேகூட போடப்பட்டிருக்கலாம்.


தனது கட்சியில்  இருப்போர்மீதும் குண்டர் சட்டம் பாயும். பழைய ஆட்சியின் பாதி எம்.பிக்கள் நிலஅபகரிப்பு சட்டத்தில் ஜெயிலில் மண் எண்ணிக்கொண்டிருப்பர், எண்ணி முடிச்சாதான் ஜாமீன். சிலர் நிலா அபகரிப்பு சட்டத்திலும்கூட கைது செய்யப்படலாம்.

பிரதமர் பாராளுமன்றத்தில் பேச எழுந்தாலே எம்.பிக்கள் மேசையை தட்டுவார்கள், அவர் கொட்டாவி விட்டால்கூட மேசையை ஒருசேர தட்டி நன்றி தெரிவிப்பர். சிறப்பு விருந்தினராய் வரும் ஜப்பான் பிரதமர் அதை ஏதோ மியூசிக் பிரோக்கிராம் என நினைத்துக்கொள்ளவும் வாய்ப்புண்டு.


உலக சேட்டிலைட் மேப்பில் இரவில் இந்தியா தனியா கருப்பா தெரியும், வெளிச்சம் இருந்தாத்தானே? தீபாவளி பரிசாக மின்சாரத்தை சேமிக்கும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆட்டாங்கல்லும், அம்மிக்கல்லும் பரிசாய்க் கிடைக்கும்.

இந்தியாவில் மின்சாரம் இல்லாததற்கு காரணம் முன்பிருந்த மக்கள் விரோத காங்கிரஸ் ஆட்சிதான் என்று பிரதமரின் 5-ம் ஆண்டின் ஆட்சியில் அறிக்கை வரும். 

MGR சிலைகள் பறக்கும் குதிரையின் விரிந்த இறக்கைகளுடன் நாடு முழுவதும் அமைக்கப்படும், பாராளுமன்றம் குழந்தைகள் நல மருத்துவமனையாகும்,

சீனாவுக்கு ஒரு பயணம் போனால் அவர்கள் 200 கோடி செலவு செய்ய வேண்டியிருக்கும். இப்படியே ஒரு 100 தடவ பயணம்போய் சீனா வளச்சியை இப்படியும் தடுக்கலாம் :-)

இலங்கைல இருந்து வரும் விமானம் கூட தமிழ்நாட்டில் கீழே இறங்க அனுமதி இருக்காது. ஆனா பக்கத்து பாலக்காட்டிலே இறங்கிக் கொள்ளலாம்.

ராஜஸ்தானின் அஜ்மீர் நகரத்தின் 33-ம் வார்டின் முக்குச்சந்தில் வசிக்கும் ஒரு தொண்டர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டால்கூட அதை பிரதமரே அறிவிப்பார்.

சுதந்திர தினத்துலகூட பாரத தாய்க்கு பதிலாக அம்மாவின் புகைப்படம் போட்டு வாழ்த்த வயதில்லை போஸ்டரெல்லாம் கலக்கும். போஸ்டர் அடிச்சவன் வயசு 95 ஆக இருக்கும்.

பெட்ரோல், டீசல், பால் விலைகள் ஒரே நாளில் ரூ.50 ஏற்றப்படும். பிறகு 5 ஆண்டுகளுக்கு விலையேற்றமே இருக்காது. இளிச்சவாய மக்களும் 10 நாட்கள் போராடிவிட்டு பின் மறந்துவிடுவார்கள்.

அர்த்த ராத்திரியில்கூட எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்படலாம் - கொல்றாங்களே என்று கத்தி நாடகம் போட்டாலும்கூட.

ஒரு பய கற்பழிக்க முடியாது. அப்பிடி நினச்சாலே என்கவுண்டர்தான். கொள்ளை, திருட்டு என அல்லாத்துக்கும் என்கவுண்டர்தேன். (குஜராத் கேடி நர மாமிச மோடி போல்).

Sunday, March 24, 2013

ஆண்டிபயாட்டிஸ்க்கு கட்டுப்படா கிருமி! ஆய்வு அதிர்ச்சி?

லண்டன்: ஆண்டிபயாடிக்ஸ் எனப்படும் நுண்ணுயிர் எதிரிகளால் (மருந்துகளுக்கு) நோய்க் கிருமிகள் பாதிக்கப்படாத தன்மை அதிகரித்துவருவது, பயங்கரவாதத்தைவிட மேலும் பெரிய ஆபத்து என்று இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார்.

புதிய ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லையென்றால், சாதாரணமாக நடத்தப்படும் அறுவை சிகிச்சைகள் கூட இன்னும் 20 ஆண்டுகளில் மிகவும் ஆபத்தானவையாகக் கூடும் என்று தலைமை மருத்துவ அதிகாரி சேலி டேவிஸ் கூறினார்.
இது ஒரு உலகளாவிய பிரச்சினை என்றும் , எப்போது வெடிக்கக்கூடிய குண்டு என்றும் அவர் வர்ணித்தார். ஒரு புதிய வகையைச் சேர்ந்த ஆண்டிபயாடிக் மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு இப்போது 25 ஆண்டுகள் ஆகின்றன.
அதற்கு நேர் எதிராக, புதிய நோய்க் கிருமிகள் தினமும் உருவாகி வருகின்றன, மேலும், தற்போது இருக்கும் கிருமிகளும் சாதாரண சிகிச்சை முறைகளுக்கு கட்டுப்படாத தன்மை உருவாகி வருகிறது என்று அவர் கூறினார்.
புதிய நுண்ணுயிர் எதிரிகளை (ஆண்டிபயாடிக் மருந்துகள்) உருவாக்க, மருந்து நிறுவனங்களுக்கு ஊக்கம் தரப்படவேண்டும் என்றும் சேலி டேவிஸ் கூறினார்.

Friday, March 22, 2013

தலை சொறிதல் பழக்கம் உங்களிடம் உண்டா?

தலை சொறிதல் பழக்கம் உண்டா? உங்களிடம்., தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும் என்கிறது புது ஆய்வு ஒன்று.

என்ன... குழப்பமாக இருக்கிறதா? காலை எழுகிறீர்கள்... கைகளையும் கால்களையும் நீட்டி, உடலை அசைத்து சோம்பல் முறிக்கிறீர்களே... அது எதற்கென்று தெரிந்தா செய்கிறீர்கள்? உடல் அனிச்சையாக அதைச் செய்கிறது. அதன் மூலம் ஒரு உற்சாகத்தையும் அது அடைந்து விடுகிறது. எந்த வித ஊக்க மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல், நம் உடல் தானே முயன்று ஒரு உற்சாகத்தைப் பெற முடியுமென்றால், நோய்களுக்கான சிகிச்சையை மட்டும் ஏன் பெற முடியாது? இந்தக் கேள்வியில்தான் எழுகிறது அக்கு மருத்துவத்துக்கான அஸ்திவாரம்.

மனிதன் என்ன காரணங்களுக்காக தலையைச் சொறிகிறான்? பேன் தொல்லையால் மட்டும்தானா சொறிகிறான்? கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் தலையைச் சொறிந்து நிற்கும் மாணவர்களைப் பார்த்திருக்கிறீர்கள்தானே? பதில் தெரியாததற்கும் தலையை சொறிவதற்கும் என்ன சம்பந்தம்? தலையைச் சொறிந்தால் மறந்து போன ஒன்று நினைவுக்கு வர வாய்ப்பிருக்கிறதா? நிச்சயம் இருக்கிறது. நம் உடல் செய்யும் எந்த ஒரு அனிச்சை செயலுக்கும் அர்த்தம் இல்லாமல் இல்லை.

விரல்களில் அடிக்கடி சொடுக்கு எடுக்கிறோமே அது ஏன்? கடும் வேலைக்குப் பிறகு உடல் அசதியை நொடிகளில் போக்கி உற்சாகத்தை வரவழைக்கும் அந்த அக்கு சிகிச்சையை நமக்கு சொல்லித் தந்தது யார்? நாடியில் விரல் வைத்து யோசிக்கிறோம்... கோபத்தை அடக்கும்போது பல்லைக் கடிக்கிறோம்... இதெல்லாம் எதற்காக? ஒரு பதற்றம், எதிர்பார்ப்பு, சஸ்பென்ஸ் என்றால் கையைப் பிசைந்து குறுக்கும் நெடுக்கும் அலைவது நமக்கெல்லாம் இயல்பு. அந்தச் செயல் நமக்குள் ‘எண்டார்ஃபின்’ என்ற பொருளைச் சுரக்கச் செய்து, ஆசுவாசப்படுத்துகிறது என்பது தெரியுமா?

அதேபோலத்தான் கை தட்டுவதும். மகிழ்ச்சியின்போதும் மற்றவர்களைப் பாராட்டவும்தான் நாம் கை தட்டுவதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். கைதட்டலின்போது உள்ளுறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக, ‘அசிட்டைல் கொலைன்’ என்கிற சுரப்பு சுரந்து, உடலையும் மனதையும் ஒருசேர உற்சாகப்படுத்துகிறது. இந்த உண்மை தெரியாமலே அதைச் செய்து கொண்டிருக்கிறோம் நாம். சிரிப்பு சிகிச்சை, இசை சிகிச்சை போல டெல்லியில் ஒரு சாது, தனது பக்தர்களை கை தட்ட வைத்தே கவலைகளைப் போக்குகிறாராம். இப்படி நம்மைச் சுற்றிலும் நாம் அறியாமலே அக்கு சிகிச்சை நிறைந்திருக்கிறது.

பொதுவாகவே நம் ஊரில் ஒரு மனப்பான்மை இருக்கிறது, விலை உயர்ந்ததுதான் சிறந்தது என்று. சொத்தை எழுதிக் கேட்கும் மருத்துவ சிகிச்சைகளுக்கு மத்தியில், செலவே இல்லாத அக்கு மருத்துவம் செல்வாக்கு குன்றியிருப்பது இதனால்தான். ஆனால், இன்று மாற்று மருத்துவத்தை மக்கள் நம்பத் துவங்கியிருக்கிறார்கள். உலகம் முழுக்க அக்கு மருத்துவத்துக்கு செல்வாக்கு உயர்ந்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் மட்டும் அக்கு மருத்துவத்துக்கென 17 பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. இந்தியாவிலும் அக்கு மருத்துவத்தின் பலன் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் விருப்பம். பள்ளிக்கூடப் பாடத்திட்டத்திலேயே இதைக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்தால் இது சாத்தியமாகலாம். அது நடக்க காலங்கள் ஆகலாம். அதுவரை, உங்களுக்கு நீங்களே டாக்டர். உச்சிமுதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு பிரச்னைக்குமான அக்குபிரஷர் தீர்வுகளை இந்த தொடர் முழுக்கப் படித்திருக்கிறீர்கள். அதை வைத்தே உங்களுக்கு மட்டுமல்ல, உங்களின் சுற்றத்தார்களுக்கும் இந்த அதிசய அக்குபிரஷரை அப்ளை பண்ணி ஆரோக்கியமாக வாழுங்கள். ஆல் தி பெஸ்ட்.

Wednesday, March 20, 2013

அயோக்கியனுக்கு அடிமை சேவகம் செய்யும் ஊடகங்கள்!

புதுடெல்லி: 2002ல், நடந்த கலவரத்தின் சூத்திரதாரி, இனக்கலவரத்தை முன் நின்று நடத்தும் ஒரு அயோக்கிய முதல்வர் என்றால் மிகை இல்ல.

குஜராத்தில் மீண்டும் கலவரம் : முஸ்லிம் நிறுவனங்களுக்கு தீ வைப்பு; மீடியாக்கள் மூடி மறைப்பு!..... !! குஜராத் கலவரத்தின் 11ம் ஆண்டு நினைவாக, இந்த ஆண்டும் "VHP" குண்டர்கள், முஸ்லிம்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

தொழிற்சாலைகளை "தீ" வைத்து கொளுத்தியுள்ளனர். FIR போடப்பட்டும் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித்திரிந்துக் கொண்டிருக்கின்றனர். குஜராத்தின் "சோட்டா உதைப்பூரில்" (பரோடா/வடோதரா) இந்த ஆண்டு பிப்ரவரி 12, மார்ச் 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில், முஸ்லிம் நிறுவனங்கள் தீ வைத்துக்கொளுத்தப்பட்டுள்ளன. முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த சம்பவம் ஒன்றில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகம், காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றபோது, கலவரக்காரர்கள் ஒன்று திரண்டு, காவல் நிலையத்தின் மீது கல்லெறிந்தும், முஸ்லிம்களை "கொச்சையான" வார்த்தைகளில் திட்டியும், காவல் நிலையத்தை விட்டு முஸ்லிம்களை வெளியேற்றக்கோரியும் கலாட்டாவில் ஈடுபட்டனர். இதனால், காவல் நிலையத்தில் முஸ்லிம்கள் கொடுத்த புகாரை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 

அதை தொடர்ந்து, தாக்குதலுக்கு உள்ளான 200 முதல் 250 எண்ணிக்கையிலான முஸ்லிம்கள், மீண்டும் காவல் நிலையத்துக்கு புகாரளிக்க வந்தபோது, துப்பாக்கிகளை காட்டி போலீசார் முஸ்லிம்களை மிரட்டியுள்ளனர், ஒரு காவலர் முஸ்லிம் இளைஞர் ஒருவரின் மார்பில் துப்பாக்கியை பதித்து அச்சுறுத்தியும் உள்ளார். கூட்டம் களைய மறுக்கவே தடியடி நடத்தியும் - கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் சிதறடித்துள்ளனர். இத்தனை நடந்தும் "மரண வியாபாரி மோடியின் சாம்ராஜ்யத்தில்" எந்த மீடியாவும், இந்த சம்பவங்களை வெளிக்கொண்டு வரவில்லை. 

முன்னதாக, பிப்ரவரி 13 அன்று "சோட்டா உதைப்பூரில்" கடையடைப்பு நடத்தக்கோரி, இரு தினங்களாக (பிப்ரவரி 11&12) ஊர் முழுவதும் நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டன. அதில் மத துவேஷக் கருத்துக்களும், பொது அமைதிக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய அளவுக்கு முஸ்லிம்களுக்கு எதிராக, கடுமையான சொற்கள் பயன் படுத்தப்பட்டிருந்தது. இதனால் கடையடைப்புக்கு ஒரு நாள் முன்பே, பிப்ரவரி 12 அன்றே முஸ்லிம் நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. முஸ்லிம்களின் தொழிற்சாலைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. 

பிளாஸ்டிக் தொழிற்கூடம் ஒன்று முற்றாக எரிந்து நாசமானது. சம்பவ இடத்துக்கு SP, DIG என, உயர் போலீஸ் அதிகாரிகள் வந்தனர். FIR பதிவு செய்யப்பட்டது. ஒரு மாதத்துக்கு மேலாகியும் குற்றச்செயலுக்கு காரணமானவர்கள் - "FIR "ல் பெயர் உள்ளவர்கள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். இத்தகவல்கள் அனைத்தும், மனித உரிமை ஆர்வலர்களின் ANHAD (Act Now For Harmony and Democracy) என்ற அமைப்பின் சார்பில் "உண்மை அறியும் குழு" அமைக்கப்பட்டு, நேரடி விசாரணையின் மூலம் அறிக்கையாக தரப்பட்டுள்ளது. 

முன்னதாக இந்தக்குழு மாவட்ட கண்காணிப்பாளரை சந்தித்து கேட்டபோது, இந்தப்பிரச்சினையை தாங்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும், ஆட்சேபகரமான நோட்டீசை யார் அச்சடித்தது எனக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார், மாவட்ட கண்காணிப்பாளர். முஸ்லிம்களுக்கு சொந்தமான மினரல் பவுடர் தயாரிப்பு தொழிற்சாலைகள், சுரங்கங்கள், வியாபார நிறுவனங்கள், பண்ணைகள், ப்ளாஸ்டிக் குடோன்கள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

பல்வேறு காட்சி ஊடகங்கள் இங்குள்ள காட்சிகளை படம் பிடித்தபோதும் தொலைக்காட்சி சானல்கள் எதுவுமே இதுத்தொடர்பான செய்திகளையோ, காட்சிகளையோ நரேந்திர மோடியின் உத்தரவுக்கு கீழ்படியும் அடிமை சேவகம் புரியும் குஜராத் ஊடகங்கள் ஒளிபரப்பவில்லை.

Monday, March 18, 2013

ஆரோக்கியமே! அதிக செல்வம்!!


*நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஆரோக்கியமான வாழ்வே அருள் பெற்ற வாழ்வு.
*நடைப்பயிற்சியை ஒரு கடமையாகக் கொண்டால் நலமாக வாழலாம்.
*மாலை வெயிலில் ‘வைட்டமின் D சத்து’ உள்ளதால் மாலையில் நடப்பது நல்லது.
*தினமும் குறைந்தது 20 நிமடமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அல்லது குறைந்தது 45 நிமிடமாவது நடைப்பயிற்சி.
*நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதனால் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி அடையும். இதயத்தின் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
*நடைப்பயிற்சியினால் அதிக இரத்த அழுத்தம் குறைகிறது.
*சர்க்கரை நோய் உள்ளவர்கள் நடைப்பயிற்சியை மேற்கொண்டால் இரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். உடல் பருமன், தொந்தி குறையும்.
*தொடர் உடற்பயிற்சியினால் இரவில் நன்றாக தூக்கம் வரும். இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும். மலச்சிக்கல் வராது. அஜீரணக் கோளாறு நீங்கும்.
*உடற்பயிற்சியினால் இதயத்தில் சேரும் கெட்ட கொழுப்பு கரைந்து விடும். இதயம் புத்துணர்ச்சி பெறும்.
*“நபிகள் நாயகத்தின் நோய் நிவாரணி” என்ற நூலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தினமும் தன் வீட்டிலிருநது பேரீச்சம்பழத் தோட்டம் வரை நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
*மிதமாக உண்ண வேண்டும். மெதுவாக உண்ண வேண்டும். நன்றாகச் சவைத்து, சுவைத்து உண்ண வேண்டும்.
*எச்சில் நீர் உணவில் கலப்பதற்கு ஏதுவாக வாயை மூடி சவைக்க வேண்டும்.
*எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். சோம்பேறித்தனம் வந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
*உணவில் காய்கறிகள், பழங்கள் அதிகம் சேர்க்க வேண்டும்.
*இயற்கை உணவே இனிய உணவு. செயற்கை பானங்கள், அதிவேகமாகத் தயாரிக்கப்படும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
*சாப்பிட்ட பின் உடனே படுக்கக்கூடாது. குறைந்தது அரை மணி நேரம் கழித்துத்தான் தண்ணீர் அருந்த வேண்டும்.
*சாப்பிட்ட பின் உடனே படுத்தால் வயிற்றிலுள்ள உணவைச் செரிக்க சுரக்கும் அமிலம் உணவுக் குழாய் வழியாக மேலே வரும். உணவுக்குழாயின் சுவர்கள் அமிலத்தால் அரிக்கப்பட்டு, நெஞ்செறிச்சல் ஏற்படுகிறது.

Saturday, March 16, 2013

இதற்காக கமலுக்கு ஆஸ்கர் அவார்ட் தரலாம்


விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் தடை, இடைஞ்சல் செய்தால், இந்தியாவைவிட்டு வேறு நாட்டுக்குப் போய்விடுவேன் என்று கமலஹாஸன் அடிக்கடி கூறுகிறாரே, இதன் பொருள் என்ன?


விஸ்வரூபம் படத்திற்கு தமிழகத்தில்தான் பிரச்சினை ஏற்பட்டது. இது தனது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று அவர் கருதினால், இவருக்கு பட்டு கம்பளம் விரிக்கும் மராட்டியத்திற்கு இவர் போகலாம். அல்லது வேறு மாநிலத்திற்குப் போய்விடுவேன் என்று சொல்லலாம். தமிழகத்தில் பிரச்சினை என்பதற்காக இந்தியாவை விட்டே போய்விடுவேன் என்று யாராவது சொல்வார்களா?

இதைச் சிந்தித்தால், அவரது வார்த்தையின் அர்த்தம் உங்களுக்குப் புரிந்துவிடும்.

ஒருவர் பிறந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் மாறிக் கொள்வதாக அறிவித்தால், அதற்கான உரிமை அவருக்கு உண்டு. அதை அவரால் செய்ய முடியும். ஆனால் தனது நாட்டைவிட்டு வேறு நாட்டுக்குப் போவதாக யாரும் முடிவு செய்ய முடியாது. எந்த நாடாவது அவருக்கு அடைக்கலமும் குடியுரிமையும் தருவதாக உறுதி மொழி அளித்தால் மட்டுமே ஒருவரால் அப்படிக் கூற முடியும்.

எனக்கு இந்தியா பிடிக்கவில்லை. நான் வேறு நாட்டுக்குப் போய்விடுவேன் என்று ஒருவன் சொன்னால் அது சாத்தியப்படுமா? அவனை எந்த நாடாவது ஏற்றுக் கொண்டால்தான் இப்படி அவனால் சொல்ல முடியும். இதைச் சிந்தித்தாலும் கமலஹாஸனின் சொல்லுக்கு அர்த்தம் விளங்கிவிடும்.

விஸ்வரூபம் படத்தை அமெரிக்கத் தூதரகம் சென்று போட்டுக்காட்டி, தான் ஒரு அமெரிக்க அடிமை என்பதை முன்னரே ஒப்புக்கொண்டு அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்கும் அனுமதியை அவர் பெற்றிருக்கவேண்டும். விஸ்வரூபம் படத்திற்கு பிரச்சினை இல்லாவிட்டாலும், அவர் அமெரிக்காவில் செட்டில் ஆவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் முடித்திருக்க வேண்டும்.

கமலஹாஸன் அமெரிக்காவுக்குப் போய் செட்டிலாகி, அமெரிக்க நாகரிகத்துடன் கலந்துவிடும் முடிவு முன்னரே எடுக்கப்பட்டுவிட்டது. இவரது கலாச்சாரம் அந்நாட்டின் கலாச்சாரத்தோடு அப்படியே ஒத்துப் போகும் என்பதில் சந்தேகம் இல்லை.

விஸ்வரூபம் பிரச்சினையை அவர் காரணமாகச் சித்தரிப்பது ஏற்கத்தகாததாகும். அமெரிக்கா இவருக்கு பச்சைக் கொடி காட்டாமல் இருந்தால், நாட்டைவிட்டுப் போய்விடுவேன் என்று இவரால் சொல்ல முடியாது. அது அவர் அதிகாரத்தில் உள்ள விஷயம் அல்ல.

விஸ்வரூபத்தில் நடித்ததைவிட நாட்டை விட்டே போகப்போகிறேன் என்ற நாடகத்தில் மிகச் சிறப்பாக நடித்து நாட்டு மக்களை ஏமாற்றுவதில் அவார்டு பெற்றுவிட்டார் என்பதுதான் இதன் சரியான அர்த்தம்.,  இதற்காக வேண்டியாவது கமலுக்கு ஆஸ்கர் அவார்ட் தரலாம்.

Friday, March 15, 2013

மத(ம்)த்தால் வீழ்ந்த மகாத்மா?

மகாத்மாவை சூட்டு வீழ்த்த  மத(ம்) தீவிரவாதத்தால் முடியும் என்பதற்கு இது ஒன்றே போதும். 

இப்படியாவது. இப்பயாவது புரிந்து கொள்ளுங்க.

மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது பிரிட்டனின் பிரதமராக இருந்த விஸ்ட்டன் சர்ச்சில் ,  இந்திய பிரதமர் நேருவுக்கு ஒரு தந்தி கொடுத்தார். 

அதில் : " 40 ஆண்டுகாலமாக எங்களின் நேரடி விரோதியாகா இருந்த காந்தியைக் கொல்ல நாங்கள் நினைத்ததில்லை, சுதந்திரம் பெற்ற 2 ஆண்டுகளில் உங்கள் நாட்டு "மதவெறி கொன்றுவிட்டதே " (ஆர் எஸ் எஸ் தீவிரவாத இயக்கத்தின் "கோட்சே" என்கிற பார்பனன்  இதுதான் சகோதரர்களே உண்மை..


ஆட்சி அதிகாரத்தில் பார்ப்பனர்கள்: (கோட்சே குரூப்)

ஆளுனர்கள் 30 பேர். அதில் பிராமணர்கள் 13 பேர்! உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில் பிராமணர்கள் 9 பேர்! உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர். அதில் பிராமணர்கள் 166 பேர்! வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில் பிராமணர்கள் 58 பேர்! பல்கலைகழக துணைவேந்தர்கள் 98 பேர். அதில் பிராமணர்கள் 50 பேர்! மாவட்ட நீதிபதிகள் 438 பேர். அதில் பிராமணர்கள் 250 பேர்! கலெக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள் 3300 பேர். அதில் பிராமணர்கள் 2376 பேர்! பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர். அதில் பிராமணர்கள் 190 பேர்!  ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர். அதில் பிராமணர்கள் 89 பேர்!-குஷ்வந்த் சிங் (சண்டே 23-29 டிசம்பர் இதழ்)

மொத்த மக்கள்தொகையில் வெறும் மூன்று சதவீதம் மட்டுமே இருக்கும் இவர்கள் இடஒதுக்கீடுக்கு எதிராக ஏன் கிளர்ந்தெழுந்து பிறரை தூண்டி விடுகின்றனர் ? இடஒதுக்கீடுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர் என இப்போது புரிகிறதா ?


  1. இதுதான் உண்மை.! அறிந்து கொள்ளுங்கள்.!! அறியாதவர்களுக்கு அறிய செய்யுங்கள்..!!!

Thursday, March 14, 2013

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!


உலகில் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு ஒன்று உண்டா என்பதில் அனைவருக்கும் சந்தேகம் வருவது உண்மை, ஆனால் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாது நாடு ஒன்று உண்டு. அதை தான் இப்போ பார்க்கபோகிறோம்.

* 1951 யில் உலகின் மிக ஏழை நாடாக இருந்தது லிப்யா. 

* நேடோ படைகளின் தாக்குதலுக்கு முன்பு வரை மிகவும் வசதியான சூழலில் வாழும் மக்களை கொண்ட ஒரே ஆப்ரிக்க நாடு லிப்யா.

* லிபியாவில் வீடு ஒவ்வொரு மனிதுனுக்கும் உள்ள மனித உரிமையாக கருதப்பட்டது. 

* மின்சாரம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. 

* மருத்துவமும் கல்வியும் இலவசமாக வழங்கப்பட்டது. 

* மக்கள் தாங்கள் விரும்பும் கல்வியோ மருத்துவமோ லிபியாவில் கிடைக்காத பட்சத்தில் வெளிநாடு சென்று பெறுவதற்கு அரசே பொருளுதவி செய்தது. 

* வங்கிகளில் கடன் கோருபவர்களுக்கு வட்டியில்லா கடன்களாக மட்டுமே கொடுக்கப்பட்டது. 

* விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்கு இலவசமாக நிலமும் மற்றும் எல்லா உதவிகளும் இலவசமாக அரசே செய்தது. 

* உலகில் எவறு(னு)க்கும் கடன் படாத நாடு லிபியா!! (படம்: இளம் வயது முஹம்மர் கடாபி.) 

Wednesday, March 13, 2013

தயவு கூர்ந்து அவசரப்படுங்கள்!?

காவிப் பயங்கரவாதிகளின் அட்டூழியம் - முஸ்லிம்களின் மேல் இலங்கை வாழ் இயக்க அல்லது அமைப்பு ரீதியான குழுக்கள் இன்னும் தங்கள் வளையங்களுக்குள் மறைந்து கொண்டு மௌனமாக நகம் கடிக்கும் போக்கு சரியில்லை.

பசி பிடித்த இனவாத ஓநாய்கள் முஸ்லிம்களின் மேல் வெறி பிடித்து பாயும் காலம் வெகு தூரத்தல் இல்லை.

இப்படியே பிரச்சினை முற்றி தலை போகும் தருணத்தில் சர்வதேசத்திடம் ஒப்பாரி வைப்பதில் அர்த்தமில்லை. மியன்மாரில் கற்ற பாடம் நினைவில்லையா? உயிர்ச் சேதங்கள் அழிவுகளின் பின்னர் எகிப்தோ துர்க்கியோ வந்து நலம் விசாரித்து விட்டு அழுதுவிட்டு சில உதவிகளுடன் திரும்பி விடுவார்கள். அல்லது நாம் ஒருவரும் மீதம் இருக்க மாட்டோம்.

யாரையும் நோகடிக்க கருத்துக்கள் சொல்ல வரவில்லை காவிப் பயங்கரவாதிகளின் அட்டூழியம் தொடர்வதால் தான் சொலிகிறேன். தயவுசெய்து வறட்டு கௌரவங்களை தூக்கி வீசிவிட்டு எங்கள் மக்களை காக்கும் விடயத்தில் மட்டுமாவது முகத்துக்கு முகம் பாருங்கள்., மற்ற நேரங்களில் உங்கள் பிரச்சாரங்கள் அழைப்புகள் ஆட்சேர்ப்பு இதர பணிகளை தொடருங்கள் அல்லது உங்கள பெனர்களுடனேயே இருந்து கொண்டு மக்களைக் பாதுகாக்கும் வேலை திட்டமொன்றுக்காக எல்லோரும் ஏதாவதொரு கூட்டமைப்பபை உருவாக்கிட தயவு கூர்ந்து அவசரப்படுங்கள்.


புத்த மத தீவிரவாதிகள் ஈழத்தில் கொத்து கொத்தாக தமிழர்களை கொற்று குவித்தார்கள், இந்தியாவில் ஹிந்துத்துவா அமைப்பு நாட்டில் பல பாகங்களில் கலவரங்கள் முதல் குண்டு வெடிப்புகளை  நடத்தி மக்களை தினம் கொன்று குவித்துக்கொண்டு இருக்கிறார்கள் இதை காவல்துறை, உளவுத்துறை மற்றும் ஆரிய ஊடகங்கள் மூடிமறைத்துக்கொண்டு இருக்கிறது. இந்த  உண்மையை வெளி உலகத்திற்கு கொண்டு   செல்வது நம் கடமை.

Monday, March 11, 2013

பார்வையிலே பக்கத்தை புரட்டும் கைபேசி!

 பார்வையிலேயே (கண் அசைவு) பக்கத்தை புரட்டும் புது தொழில்நுட்ப கை பேசியை அறிமுகப்படுத்த உள்ளது சாம்சங் நிறுவனம்.

அப்பிள் நிறுவனத்தோடு போட்டி போட்டுக்கொண்டிருக்கும் சம்சுங் நிறுவனம் ஜ-போனை மிஞ்சும் வகையில் தன்னுடைய அடுத்த தயாரிப்பை வரும் 14ம் திகதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது.


Galaxy S4என்ற இந்தப் புதிய செல்போன், பார்ப்பவரின் கண் அசைவைக் கொண்டு பக்கங்களை நகர்த்தும் தன்மை உடையதாக இருக்கும் என்று சம்சுங் நிறுவன ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


5 அங்குல திரை கொண்ட இந்த செல்போனில், 13 மெகா பிக்ஸல் கமெராவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்சுங் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் ஐரோப்பாவில் ஐ-ஸ்க்ரோல் என்ற வணிக முத்திரைக்காகப் பதிவு செய்து பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் சம்சுங் ஐ-ஸ்க்ரோல் என்ற தலைப்பில் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கைபேசி மற்றும் மடிக்கணனி போன்றவற்றை கண்களின் அசைவைக் கொண்டு இயக்கக்கூடிய கணனி பயன்பாட்டு மென்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சம்சுங் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, மிகுந்த எதிர்பார்ப்புக்களும் ஊகங்களும் இந்த புதிய வெளியீடு குறித்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Saturday, March 9, 2013

முக நூலில் முகத்தை காட்டியதன் விளைவு?

முக நூலில் முகத்தை காட்டியதன் விளைவு? உயிர் பலியானது அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு.

பாருங்கள் சகோதரிகளே இதுக்குத்தான் நாங்க படிச்சு படிச்சு சொல்றோம். முகநூலில் முகத்தை காட்டியதால், பெண்ணின் உயிர்போன பரிதாபம்! 

சுஸ்மிதா என்ற இப்பெண் முகநூலில் தன்னுடைய படத்தை போட்டதை, பதிவிறக்கம் செய்து கூகுளில் விலைமகளிர் பட்டியலில் சேர்த்து தவறாக பயன்படுத்திய கயவர்களால், அவமானம் தாங்காமல் உயிரிழந்தார்.

இந்த பொம்புளை புள்ளங்களுக்கு அ..வே இருக்காதா...நாங்க எத்தன தடவ சொல்றோம் கேக்க மாட்டிகிறீங்க.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!