Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, February 28, 2013

அலைபேசி எண்ணை அறிய தராதீர்கள்!!

 (மொபைல்) கை தொலைபேசி உபயோகிக்கும் ஆண், பெண் இருபாலாருக்கும் இது பொருந்தும் என எண்ணுகிறேன். நண்பிக்கு நடந்த கொடுமை, வாங்க பார்ப்போம். 


சில நாட்களுக்கு முன் என் தோழி ஒருவருக்கு நடந்த நிகழ்ச்சி இது . அவர் வைத்திருக்கும் மொபைல்க்கு தேவை இல்லாத SMS மற்றும,  தவறான கால்கள் வந்துள்ளது. இவர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து வந்துள்ளது. வீட்டில் சொன்னால் நீ இனி மொபைல் பயன்படுத்தாதே என சொல்லி விடுவார்கள் என பயந்து இவர் வேறு எண் மாற்றி விட்டார் . ஆனால் சில நாட்கள் கழித்து மீண்டும் அதே என்னில் இருந்து பிரச்னை. நம்பர் மாற்றியும் எப்படி இதுபோல கால், SMS வருகிறது என குழம்பி போனார். என்னிடம் வந்து என்ன செய்யலாம் என கேட்டார் . அவருக்காக எனது நண்பர்கள் துணையுடன் விசாரித்ததில் சில அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.

இவர் வழக்கமாக ரீ- சார்ஜ் செய்யும் இடத்தில் இவர் நம்பரை குடுத்து விட்டு E.C பண்ண சொல்லிவிட்டு போய் விடுவார் . இந்த நம்பரை வைத்து அங்கு உள்ள சிலர் செய்த செயல்தான் இது .இதுபோல ஆபத்தில் நீங்கள் மாட்டாமல் இருக்க சில வழிமுறைகள் .

முடிந்த வரை ரீ-சார்ஜ் கார்ட் வாங்கி ரீ –சார்ஜ் செய்யுங்கள் . E.C செய்யவேண்டிய நிலை வந்தால் முடிந்த வரை நன்றாக தெரிந்த கடையில் மட்டும் செய்யவும் .


இல்லை என்றால் உங்கள் சகோதரர்களை அல்லது ஆண் நண்பர்களை விட்டு செய்ய சொல்லவும், பேருந்தில் அல்லது கூட்டமாக உள்ள இடத்தில் சத்தமாக உங்கள் நம்பரை சொல்லாதிர்கள். தெரியாத நபர்களிடம் நம்பர் தராதீர்கள்.


உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் நண்பர்கள் உங்கள் நம்பரை யாரிடமும் குடுக்க கூடாது என சொல்லுங்கள். தவறான SMS வந்தால் யார் என கேட்டு பதில் அனுப்பாதிர்கள் . அப்படி அனுப்பினால் அதுமுலமாக உங்களிடம் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள்.


WRONG CALL வந்தால் உடனடியான துண்டித்து விடுங்கள் . அடிகடி வந்தால் வீட்டில் உள்ளவர்களை அல்லது உங்களுக்கு நம்பிக்கையான ஆண்களை பேச சொல்லுங்கள்


பேருந்தில் அமர்ந்து SMS அனுப்பினால் சுற்றுபுறம் பார்த்து அனுப்புங்கள். நீங்கள் அனுப்பும் செய்தியை அடுத்தவர்கள் படிக்க வாய்ப்புள்ளது.

மொபைலை பழுது பார்க்க கொடுத்தால் அதில் உள்ள SIM கார்டு மற்றும் Memory Card இரண்டையும் கழட்டிவிட்டு கொடுக்கவும். மெமெரி கார்ட்களில் பாடல் பதிவு செய்ய கொடுப்பதாக இருந்தால் நன்றாக தெரிந்த இடத்தில் மட்டும் கொடுக்கவும் . இல்லை எனில் நீங்கள் அழித்த புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தையும் திருப்ப எடுத்துவிடுவார்கள் .

 

Tuesday, February 26, 2013

கற்பழிப்புக்கு காரணம் கூறும் அவா"க்கள்!?

கற்பழிப்புக்கு காரணம் கறி மீன் உண்பது தானாம்! அரங்கேறும் வக்கிரங்கள் என்ற தலைப்பில் வக்கிரத்தை கொட்டியிருக்கிறது தினமணி தலையங்கம் (19-02-2013) 

அதில், தெருவெங்கும் அசைவ உணவைப் பரிமாறும் துரித உணவகங்களும், கையேந்தி பவன்களும், அதிகரித்து விட்டிருக்கும் அசைவ உணவுப் பழக்கமும் உணர்ச்சிகளை அதிகரித்து, சாத்வீக குணத்தை மழுங்கடித்து விடுகின்றன . என்கிற உண்மையை நாம் எப்போது உணரப் போகிறோம்? அவை மனிதனுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் மிருக உணர்வுகளைத் தூண்டிவிடும் என்பது விஞ்ஞானம் ஏற்றுக்கொண்டிருக்கும் உண்மை.

வக்கிரத்தை கொட்டிருக்கும் தினமணியே...... 

இப்படி வக்கிரத்தை கொட்டிருக்கும் தினமணியே குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களை சூறையாடி கொன்று குவித்தது அசைவம் தின்றவனா? ஆர் எஸ் எஸ் காரனா ?

ஈழ பெண்களை கற்பழித்து கருவறுத்தது புலால் உண்ணக்கூடாதுன்னு சொல்லும் பௌத்தர்கள் தானே? நித்யானந்தாவும் தேவநாதனும் எந்த கசாப்பு கடையில் கறிவாங்கி தின்கிறார்கள் ?

ஒரிசாவில் பாதிரியாரையும் அவர் பிள்ளைகளையும் உயிருடன் எரித்து கொன்ற தாராசிங் , காந்தியை கொன்ற கோட்சே இவர்கள் எல்லாம் உன் வகைறாக்கள் தானே?

மரக்கறி மட்டும் திங்கனும்டு சொல்லிட்டு நரகறியை தின்கிறீர்கள் என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள்.  இன்னும் அடுக்கலாம் உன் "அவாள்" களின் வண்டவாலத்தை.., மூளையுள்ளவனுக்கு இதுவே போதுமானது..., கோயில்களில் நடப்பதை விவரித்தால் ஆரிய கூத்து அசிங்கங்கம் ஆகிவிடும். 

Monday, February 25, 2013

விடை தெரியா வினாக்கள் விடை உண்டா!?

மக்களின் திடுக்கிடும் சந்தேகங்கள்...............!!

விடை தெரியாத கேள்விகள்.............??? விடை உண்டா! உங்களிடம்!?


இன்றைய தினம் மகாராஷ்டிரா மாநிலத்தில் கூலிப்படை தீவிரவாதியான அஜ்மல் கசாபை தூக்கில் போடப்பட்டது...... இந்த தூக்கு தண்டனையை காவல்துறையின் இரகசிய பிரிவு அதிகாரிகள் தூக்கிலிட்டதாக கூறப்படுகிறது.....


பாகிஸ்தானிலிருந்து வரவழைக்கப்பட்ட கூலிப்படை தீவிரவாதிகள் மும்பையிலுள்ள தாஜ் ஓட்டலை தாக்கினர் அந்த தாக்குதலில் 160 க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்,

அந்த தாக்குதலின் போது கூலிப்படை தீவிரவாதிகள் மீது எதிர்தாக்குதல் நடத்திய மகாராஷ்டிரா மாநில தீவிரவாத தடுப்பு பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரே அவர்களும் கொல்லப்பட்டார்கள்,

அந்த எதிர்த்தாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், சிலர் தப்பியோடினர்..... அந்த தீவிரவாதிகளில் சிக்கிய ஒருவன் தான் இந்த அஜ்மல் கசாப் 

அந்த அஜ்மல் கசாபிடம் 3 ஆண்டுகளாக விசாரணை செய்து இப்பொழுது தூக்கிலிடப்பட்டுள்ளது 

இந்நிலையில் இது பற்றிய திடுக்கிடும் சந்தேகங்கள் மக்கள் மனதில் எழுந்துள்ளது...... 

அவைகளில் அது பற்றி விடை தெரியாத கேள்விகள் :- 

1) 3 ஆண்டுகளாக காவல்துறை விசாரணை மேற்கொண்டதே.... அவன் என்ன உண்மையை சொன்னான்........? அவனையும், அவனது கூலிப்படை தீவிரவாதிகளையும் இந்தியாவிற்குள் கொண்டு வந்தது யார்..........? 

2) கடல் வழியாக வந்தார்கள் என்று கூறும் காவல்துறை கடல் பகுதிகளை பாதுகாக்க இந்தியாவில் கடற்படை அதிகாரிகளே இல்லையா.......? 

3) காவல்துறையின் இரகசிய பிரிவு அதிகாரிகள் யாருக்கும் தெரியாமல் தூக்கிலிட்டார்கள் என்று கூறும் போது இன்றைய தினம் கருத்து தெரிவித்த "சோ" அவர்கள் இது ஒன்றும் புதிய செய்தி இல்லையே என கூறியுள்ளார், 

புதிய செய்தி இல்லையென்றால் தீவிரவாதி அஜ்மல் கசாபை இன்றைய தினம் தூக்கிலிடப்போகிறார்கள் என்ற இரகசியம் "சோ" வுக்கு எப்படி தெரிந்தது..........?

4) 3 ஆண்டுகளாக 30 கோடி ரூபாய் செலவு செய்து புது மாப்பிள்ளையை போல் கவனித்து கொண்டு விசாரணை செய்து வந்த அஜ்மல் கசாபை அதே மும்பை நகரத்தின் முக்கிய புள்ளியான பால்தாக்கரே மரணித்து 3 நாட்களில் தூக்கிலிடும் மர்மம் என்ன...............? 

5) பால்தாக்கரே உயிருடன் இருக்கும் வரை அஜ்மல் கசாப் உண்மையை வெளியில் சொல்ல மாட்டான், பால்தாக்கரே மரணத்திற்கு பிறகு உண்மையை உளறிவிடுவானோ என்ற அச்சத்தின் காரணமாக அதிரடியாக தூக்கிலிட்டதன் மர்மம் என்ன...........? 

6) அந்த தாக்குதலின் போது முக்கிய அதிகாரியும், காவி பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை வெளிக்காட்டியவருமான மகாராஷ்டிரா மாநில தீவிரவாத தடுப்பு பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரே அவர்களை கொலை செய்துள்ளார்கள், அப்படிப்பட்ட உயரிய, நேர்மையான அதிகாரியை திட்டமிட்டு படுகொலை செய்தும் அது சம்பந்தமாக எந்த வித துப்பும் கிடைக்கவில்லை என்றால்..... 

அந்த அதிகாரி மும்பைக்கு தேவையில்லை.... அவரை விட்டு வைத்தால் நம்முடைய உண்மை முகத்தை வெளிக்காட்டிவிடுவார் என்ற நெருக்கடியின் காரணமாக ஒருவரை கொன்றால் கொலை, பலரை கொள்ளும் போது சேர்த்து ஹேமந்த் கர்கறேவை கொலை செய்தால் அந்த ஆவணங்களை இலகுவாக மூடிவிடலாம் என்ற எண்ணத்தின் அடிப்படியில் திட்டமிட்டு நடத்திய மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதலின் பின்னணியில் உள்ள பிரபல தாதா யார்.........?

7) ஹேமந்த் கர்கரே மரணித்து சில மாதங்கள் கழித்து அவரது மனைவிக்கு நரேந்திர மோடி அன்பளிப்பு தொகையாக 2 கோடி ருபாய் கொடுக்கும் போது அதை வாங்க மறுத்ததன் பின்னணி என்ன..........?

8) ஹேமந்த் கர்கரே அவர்கள் மரணிப்பதற்கும் ஒரு வாரத்திற்கும் பிறகு இந்தியாவை அச்சுறுத்தும் காவி பயங்கரவாதம் எனும் தலைப்பில் இந்துத்துவ காவி பயங்கரவாதிகளின் உண்மைகளை முக்கிய புள்ளிகளை வைத்து புத்தகம் வெளியிட முடிவு செய்து வைத்திருந்தார்,

அந்த புத்தகம் வெளியிடக்கூடாது அவ்வாறு புத்தகத்தை வெளியிட்டால் யாருக்கு ஆபத்து உள்ளதோ அவர்கள் தான் ஹேமந்த் கர்கரேயை திட்டம் தீட்டி கொலை செய்துள்ளார்கள், மேலும் அனைத்து உண்மைகளும் ஹேமந்த் கர்கரே அவர்களின் மனைவிக்கு தெரிந்திருப்பதால் நரேந்திர மோடி கொடுத்த 2 கோடி ரூபாயையும் முகத்திற்கு நேராகவே வாங்க மறுத்துள்ளதை மக்கள் சந்தேகிக்கின்றனர்

Saturday, February 23, 2013

ஐம்பதிலும் அழகாக காண்பிக்கலாம்!

ஆண்களில் சிலரை பார்த்தால், வயது 50 அல்லது 60 ஐ தாண்டினாலும், என்றும் மார்க்கண்டேயனாகவே தோற்றமளிப்பர். . இந்த மார்க்கண்டேய தோற்றத்தை தக்க வைத்துக்கொள்வது ஒன்றும் பெரிய வித்தையோ அல்ல….! மாறாக கொஞ்சம் மெனக்கிட்டால் வயது ஏறிக்கொண்டு போனாலும், குறைந்த வயது தோற்றத்துடன் நீண்ட காலம் இருக்க முடியும்.

நமது வயதை முதலில் வெளிப்படுத்துவது சருமம் தான், அதனை ஒழுங்காக, சீராக பராமரித்தாலே நமது ஆயுட் காலமும் நீடித்து இருக்கும். அப்படி என்றும் இளமையுடன் இருக்க இதோ சில டிப்ஸ்.

நாம் அதிகமாக சூரிய வெளிச்சத்தில் பயணிப்பதாலும், எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும், மாசுள்ள காற்றை சுவாசிப்பதாலும் நமது சருமத்தில் முதுமை தோற்றம் தெரிகிறது. இதனை தடுக்க, சிறந்த முதுமை தடுப்பு (ஆன்டி ஏஜிங்) தயாரிப்புகளை பயன்படுத்தவது நல்லது. மேலும் அதிகமான தண்ணீர் பருகுதல் சருமத்தை பாதுகாக்கும்.

பெண்களின் சருமத்தை காட்டிலும் ஆண்களின் சருமம் 20 சதவீதம் கூடுதல் கடினத்தன்மையுடன் இருக்கும். ஆயினும் வயது கூடும்போது கொல்லாஜன் எனும் புரதம் குறைவதால் சருமத்தில் சுருக்கம் ஏற்படுகிறது. உடல் கூறுவியலின்படி பெண்களை காட்டிலும் ஆண்களின் முதிர்ச்சி சில காலத்திற்கு பிறகு தான் தோன்றும், ஆனால் ஒரு சில பழக்கவழக்கங்களினால் ஆண்களுக்கு இயல்பான வயதை காட்டிலும் முதுமையான தோற்றம் காணப்படுகிறது.

தொடர்ந்து ஷேவிங் செய்வதன் காரணமாக முகத்தில் முதிர்ச்சி தோன்றும், அதனால் ஈரப்பதத்துடன் கூடிய ஷேவிங் கிரீமை பயன்படுத்துவது நல்லது. மேலும் ஷேவிங் செய்யும்போது முடிகள் வளர்ந்திருக்கும் திசையில் ஷேவ் செய்து, வெதுவெதுப்பான தண்ணிரால் முகத்தை கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் முகம் வாடாமல் புத்துணர்ச்சியுடன் தோன்றும்.

ஆண்கள் என்றும் இளமையுடன் இருக்க தொடர்ந்த உடற்பயிற்சியும் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், உடலுக்கு குளிர்ச்சி தரும் இறைச்சிகள் மற்றும் மீன் போன்ற ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல் திசுக்களை புதுப்பிக்கும் திறனுடைய ஆன்டிஆக்ஸிடன்ட் குணம் நிறைந்த பேக் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வதால், முகம் சுருக்கம் இல்லாமலும் மென்மையாகவும் காணப்படும்.

மேலும் பசலை கீரை, அவுரிநெல்லிகள், கேரட், தக்காளி, பச்சை தேநீர் போன்றவற்றையும் சேர்த்துகொள்வது மிகவும் நல்லது.

சருமத்தை இளமையுடன் வைத்திருக்க மது மற்றும் புகைப்பிடித்தலை தவிர்க்கவும். சிகரெட்டுகளில் உள்ள நிக்கோட்டின் உடலின் இரத்த ஓட்டத்தை குறைப்பதால் சருமத்திற்கு தேவையான சத்துகள் சென்று அடைவதில்லை, ஆகையால் சுருக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

தூக்கம் கெடுவதால் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்படும் என்பதை அநேகமானோர் அறிவதில்லை. இரவில் குறைந்தது 6-7 மணி நேர ஆழ்ந்த உறக்கம் அவசியம் என்பதும் இதைத் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் மனதில் புத்துணர்ச்சி மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திலும் குறிப்பாக சருமத்திலும் பொலிவு ஏற்படும்.

இது தவிர, உடல் ஆரோக்கியத்திற்கும், உடலுறவு பழக்க வழக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், அதுகுறித்த விழிப்புணர்வை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இவையெல்லாவற்றிற்கும் மேலாக, ஆண்கள் தனது கவலைகளை மறந்து மகிழ்ச்சியுடன் இருந்தாலே, முகத்தில் பொலிவும் இளமையும் கூடிக்கொண்டே போகும். . . !

Friday, February 22, 2013

கல்லறையில் நடக்கும் விந்தை!!

கருவறையை விட கல்லறையில்தான் அதிகம்   விந்தை நடைபெறுவதாக என்ன தோன்றுகிறது.


மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்....

60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன...

3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன...

4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன...

5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை...

6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு...

2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது...

எத்தனை ஆணவம் ! எத்தனை பேராசை, எத்தனை கோபம் ! எத்தனை கெடுமதி ? எத்தனை சாதி, மத சண்டைகள். 


Thursday, February 21, 2013

பாசிஸ்டுகளிடம் மண்டியிட்ட உள்துறை?

புதுடெல்லி: தற்போது இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பை நிகழ்த்தி இரத்த ஆறை ஓடச் செய்த சங்க்பரிவாரத்தின் உண்மையான முகத்தை திறந்த காட்டும் விதமாக நடந்து விசாரணையில் கிடைத்த தகவல்களின் படி ஜெய்ப்பூர் சிந்தனை அமர்வில் ஹிந்துத்துவா தீவிரவாதம் குறித்து பேசியதற்காக உள்துறை அமைச்சர் ஷிண்டே வருத்தம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் காவி பயங்கரவாதிகளுக்கு மிதவாத ஹிந்துத்துவாவை கடைப் பிடித்துவரும் காங்கிரஸ் அரசு மீண்டும் மண்டியிட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத பயிற்சி அளிக்கும் முகாம்களை நடத்துவதாக ஷிண்டே கூறியது சங்க்பரிவாரத்திற்கு ரோஷத்தை ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து ஷிண்டே, தனது அறிக்கையை வாபஸ் பெற்று மன்னிப்புக்கோரவேண்டும், இல்லையெனில் பாராளுமன்றத்தை முடக்குவோம் என்று பா.ஜ.க மிரட்டியது. கடந்த புதன்கிழமை ஷிண்டேயின் வீட்டை நோக்கி பா.ஜ.க தலைவர்கள் அடங்கிய குழு கண்டன ஊர்வலம் நடத்தியது.
இந்நிலையில், ஷிண்டே தனது ஹிந்துத்துவா தீவிரவாதம் குறித்து தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.ஜெய்ப்பூரில் கூறிய கருத்துக்கள் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டதாகவும், எந்த மதத்தையும் தீவிரவாதத்துடன் தொடர்புப்படுத்துவது தமது நோக்கமல்ல என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். 
சங்க்பரிவார பாசிஸ்டுகள் தங்கள் மீதான குற்றச்சாட்டிற்கு நேர்மையாக பதிலளிக்கவோ அதனை சட்டரீதியாக எதிர்கொள்ளவோ துணிச்சல் இல்லாத கோழைகள் ஆவர். இதற்கு பதிலாக அரசை மிரட்டி காரியம் சாதிப்பதில் அவர்கள் கெட்டிக்காரர்கள் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. (கூட்டு மனசாட்சியின் படி சங்க்பரிவாரை திருப்திப் படுத்த அப்பாவி அப்ஸல் குருவை தூக்கிலிட்டு படுகொலைச் செய்தது காங்கிரஸ் அரசு. )

Wednesday, February 20, 2013

இனப்படுகொலை, இன வாதத்தில் புத்தா?


கொழும்பு: இலங்கையில் முஸ்லிம்கள் உணவு பொருட்களில் ஹலால் முறையை ஒழிக்கவேண்டும் என்று அந்நாட்டின் புத்த தீவிரவாத அமைப்பான பொதுபல சேனா கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை தலைநகரான கொழும்புவின் மகரகமாவில் புத்த தீவிரவாத அமைப்பான பொதுபலசேனாவின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான பல்வேறு துவேச தீர்மானங்களை அவ்வமைப்பு நிறைவேற்றியுள்ளது.
வெளிநாடுகளுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கை பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாக அனுப்பப்படுவதை நிறுத்த வேண்டும், இலங்கையில் பல பிரச்சனைகளுக்கு முஸ்லிம்களின் உலமா சபைகளே காரணம் என்றும் எனவே உலமா சபையை தடைச்செய்யவேண்டும், போன்றவை அக்கூட்டத்தில் பேசப்பட்டுள்ளன.
முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அக்கூட்டத்தில் பேசிய தீவிரவாத புத்த சாமியார் ஒருவர் கூறியுள்ளார். மேலும் ஒருமாத காலத்திற்குள் இலங்கையில் உள்ள வெளிநாட்டு போதகர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் அவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Monday, February 18, 2013

விஷரூபம் மானமா! அவமானமா!?

உலக நாயகன் என்று தனக்கு தானே பெயர் சூடிக்கொண்ட கமல் உண்மையில் இவர் உலக நாயகன்தானா உலக அளவில் இவர் பெயர் பெற்றாரா? உலக பெயர் பெற, உலகப்பெயர் பெற்ற ஆஸ்கர் விருது தனக்கு கிடைக்க சினிமாவில் சம்பாதித்த பொருள் அனைத்தையும் விஷரூபத்திற்காக சிலவு செய்ததாக கூறுகிறார். அதிலும் தமிழகத்தில் திரையிட தடை ஏற்பட்டதால் இது தேசிய அவமானம் ஹிந்துத்துவவாதிகள் கூறுகிறார்கள்.

இது தேசிய அவமானமில்லையா? 'தமிழனால் தயாரிக்கப்பட்டு, தமிழனால் உருவாக்கப்பட்டு, தமிழனால் நடிக்கப்பட்ட தமிழ் படம், தமிழ்நாட்டில் திரையிட முடியாத நிலை உள்ளது, தமிழகத்திற்கு ஏற்பட்ட அவமானம் ஆகும்.'' இந்த உலகமாக கருத்தை சொன்னவர் தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்.

அத்வானிக்கு செலக்டிவ் அம்னீசியா நோய் உள்ளாதோ என்று முன்பொருமுறை கேட்டார் ஜெயலலிதா. அத்வானி மட்டுமல்ல. காவிக் கட்சியினர் எல்லோரும் அந்த நோயால் பீடிக்கப் பட்டுல்லார்களோ என சந்தேகிக்கும் வண்ணன் அவர்களின் பேச்சும் செயலும் அமைகின்றது. கமலுக்கு வக்காலத்து வாங்கி கருத்து பேசும் இந்த பொன்னார், இவரது சகா பால்தாக்கரேயின் கட்சியினர் இரு ஆண்டுகளுக்கு முன்னால ஷாரூக் கானின் ''மை நேம் ஈஸ் கான்'' படத்திற்கு எதிராக ஆடிய ஆட்டமென்ன?

@_இதுபற்றிய அப்போதைய செய்தி:..? (Flash Back)

'சிவசேனா நடத்தி வரும் வன்முறை போராட்டங்கள் காரணமாக, ஷாரூக்கானின் மெகா பட்ஜட் படைப்பான மை நேம் ஈஸ் கான் திரைப்படத்தை மும்பையில் எந்தத் திரையரங்கிலும் வெளியிடுவதில்லை என தியேட்டர் உரிமையாளர்கள் முதல்கட்டமாக முடிவு செய்துள்ளனர். எனினும் இன்று இறுதி முடிவை அறிவிப்பதாகக் கூறியுள்ளனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் வீரர்களை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இது பற்றி கருத்து தெரிவித்த இந்தி நடிகர் ஷாரூக் கான் பாகிஸ்தான் வீரர்களை சேர்க்க வேண்டும் என்றார். இதே கருத்தை நடிகர் அமீர்கானும் தெரிவித்தார். இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஷாரூக் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா தலைவர் பால்தாக்கரே கூறினார். ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ஷாரூக் கான் உறுதியாக நின்றார். இதையடுத்து ஷாரூக் கானுக்கு எதிராக சிவசேனா கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர்.

ஷாரூக்கான் படம் எதையும் மும்பையில் திரையிட விட மாட்டோம் என்றும் சிவசேனா கட்சியினர் மிரட்டி வருகின்றனர். இந் நிலையில் ஷாரூக் கான் நடித்துள்ள மை நேம் இஸ் கான் படம் இன்று (வெள்ளிக்கிழமை) இந்தியா முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. மும்பையில் மட்டும் 63 தியேட்டர்களில் இந்தபடம் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனா கட்சி மிரட்டல் விடுத்தது. மை நேம் இஸ்கான் படம் திரையிட உள்ள தியேட்டர்களை சிவசேனா தொண்டர்கள் சூறையாடினார்கள். இதனால் பயந்துபோன தியேட்டர் உரிமையாளர்கள், ஷாரூக் கான் படத்தை வெளியிட தயக்கம் காட்டினார்கள். ஷாரூக் கான் படம் வெளியிடப்படும் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று மராட்டிய மாநில முதலவர்அசோக் சவான் அறிவித்தார். அவரது உத்தரவின் பேரில் மை நேரம் இஸ் கான் படம் திரையிடப்படும் தியேட்டர்களில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து மை நேம் இஸ் கான் படத்தின் வினியோக உரிமையை வாங்கியுள்ள பாக்ஸ் ஸ்டார் டிஸ்டிரிபியூசன் செயல் இயக்குனர் விஜய்சிங் கூறுகையில், மை நேம் இஸ்கான் படம் நாடெங்கும் வெள்ளிக்கிழமை திட்டமிட்டப்படி வெளியிடப்படும் என்றார். என்றாலும் தியேட்டர்காரர்கள் மை நேம் இஸ் கான் படத்தை திரையிட முன்வரவில்லை. மும்பையில் பெரும்பாலான தியேட்டர்களில் இன்று அந்த படம் வெளியாகவில்லை. மை நேம் இஸ் கான் படத்தை வெளியிடுவது குறித்து மும்பை தியேட்டர் உரிமையாளர்கள் நேற்றிரவு 2 தடவை கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது ஷாரூக் கான் படத்தை வெள்ளிக்கிழமை திரையிட வேண்டாம் என்று தீர்மானித்தனர். இன்று மீண்டும் தியேட்டர் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் ஷாரூக்கான் படத்தை வெளியிடுவது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.

டெல்லி, குஜராத், ஒரிஸ்ஸாவிலும் எதிர்ப்பு!: மை நேம் ஈஸ் கான் படத்தை நாட்டின் பிற பகுதிகளிலும் ஓட விடாமல் செய்ய வேண்டும் என்பதில் சிவசேனா தீவிரமாக உள்ளது. இதற்கு பஜ்ரங் தள் அமைப்பும் முழு ஆதரவு கொடுத்து வருகிறது. ஒரிஸா, குஜராத்தில் இந்தப் படத்தை ரிலீஸாக விடமாட்டோம் என பஜ்ரங் தள் அறிவித்துள்ளது. டெல்லியில் இந்தப் படம் திரையிடப்பட்ட சத்யம் திரையரங்கை சிவசேனா, பஜ்ரங் தள் தொண்டர்கள் சூறையாடினர். பாதுகாப்புக்கு இருந்த போலீசார் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, படம் பார்க்க வந்திருந்த மக்கள் பதறியடித்தபடி ஓடினர். தியேட்டர் கண்ணாடிகள், இருக்கைகள், ஏசி இயந்திரம் என அடித்து நொறுக்கப்பட்டன.

மிஸ்டர் காவி நாயகன், மத நல்லினக்கத்தை கெடுக்கும் வகையில் எடுத்த படத்தை சட்டம் ஒழுங்கை பேணவேண்டிய பொறுப்பிலுள்ள தமிழக அரசு தடை செய்தது தமிழகத்திற்கு ஏற்பட்ட அவமானம் என்றால், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் வீரர்களை சேர்க்க வேண்டும் என்று ஜனநாயகம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரம் அடிப்படையில் கருத்து சொன்ன ஷாரூக்கான் படத்திற்கு எதிராக உங்கள் வகையறாக்கள் வெறியாட்டம் ஆடியது தேசிய அவமானமில்லையா?

Saturday, February 16, 2013

அணுக்களை அதிகரிக்க செய்யும் உணவுகள்

ஒவ்வெருவரும் உடல் ஆரோக்கியத்திற்கு விட்டமின் மாத்திரைகள் மற்றும் பிற சத்து டானிக் உட்கொள்கிறார்கள் இதையெல்லாம் விட்டுவிட்டு இயற்கை நமக்கு தந்ததை உண்டாலே போதுமானது. உடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்.

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உடலில் நோய்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும். மேலும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவினால் ஏற்படும் நோய் தான் அனீமியா. ஆகவே அத்தகைய இரத்த அணுக்களை அதிகப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்து, உண்ணும் உணவுகளே. இரத்த அணுக்களை அதிகரிக்க அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். அத்தகைய உணவுகள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.

இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்: பீட்ரூட்: இதில் அதிகமான அளவு இரும்புச்சத்து இருப்பதோடு, உடலுக்கு தேவையான அளவு இரத்த அணுக்களை அதிகரிக்கும் புரோட்டீன் இருக்கிறது. மேலும் இதை உண்பதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் இது ஒரு சிறந்த இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுப் பொருள். ஆகவே இதனை டயர் இருப்பவர்கள் தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறைவதோடு, உடலில் இருக்கும் இரத்த அணுக்களும் அதிகரிக்கும். அதிலும் பீட்ரூட்டின் இலைகளில் வைட்டமின் ஏ-வும், அதன் வேர்களில் வைட்டமின் சி-யும் இருக்கின்றன.

கீரைகள்: காய்கறிகளான பசலைக் கீரை, ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், டர்னிப், காலிஃபிளவர், கீரை மற்றும் இனிப்பு உருளைக்கிழங்குகள் ஆகிய அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமானவை. மேலும் இவை அனைத்தும் உடல் எடையை கட்டுபடுத்துவதுடன், உடலில் இரத்த அணுக்களையும் அதிகரிக்கும். அதிலும் கீரைகள் செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்யும்.

இரும்புச்சத்து: இது உடலுக்கு மிகவும் தேவையான கனிமச்சத்து. இந்த சத்து எலும்புகளை மட்டும் வலுவாக்குவதில்லை, உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை விநியோகிக்கிறது. இந்த சத்து குறைவாக இருந்தால் அனீமியா நோயானது வரும். ஆகவே அந்த இரும்புச்சத்துக்கள் இறைச்சி, வெந்தயம், அஸ்பாரகஸ், பேரிச்சம் பழம், உருளைக்கிழங்கு, உலர்ந்த அத்திப்பழம், உலர் திராட்சை போன்றவற்றில் இருக்கும்.

பாதாம்: இரும்புச்சத்து மற்ற உணவுப் பொருட்களை விட பாதாம் பருப்பில் அதிகம் இருக்கிறது. ஒரு நாளைக்கு 1 அவுண்ஸ் பாதாம் பருப்பை சாப்பிட்டால், உடலுக்கு 6% இரும்புச்சத்தானது கிடைக்கும்.

பழங்கள்: அனீமியாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடச் சொல்வார்கள். இவற்றை உண்பதால் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடலில் உள்ள இரத்த அணுக்களின் அளவும் அதிகரிக்கும். மேலும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த பழங்களில் தர்பூசணி, ஆப்பிள், திராட்சை, அத்திப்பழம் போன்றவற்றை அதிகம் உண்ண வேண்டும்.

மேற்கூறிய உணவுப் பொருட்களை உண்பதால் உடலில் இரத்த அணுக்களின் அளவு அதிகரிப்பதோடு, உடல் எடை அதிகரிக்காமல், உடலை எந்த ஒரு நோயும் தாக்காமல் ஆரோக்கியமாக வாழலாம்.

Friday, February 15, 2013

இது காதலா காமமா!?

காதலர் தினமாம். அண்மைக் காலமாக இந்தியாவெங்கும் இளம் பருவத்தினர் இத்தினத்தை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இவ்வாண்டும் பல நாட்களுக்கு முன்பாகவே கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன. 
‘காதல் சாத்தியமானதே’ என்ற முழக்கத்துடன் அறிவுஜீவிகளும், பெண்ணீயவாதிகளும், உரிமைகளுக்காக முழக்கமிடும் சில அமைப்புகளும் காதலர்களுக்கு ஆதரவாக களத்தில் உள்ளனர்.
காதலர் தின அன்பு பரிசுகளுடன் சந்தையும் தீவிரமாக இயங்கி வருகிறது. இத்தகையதொரு அனுகூலமான சூழலில் பருவமடையாத பதின்பருவ பெண்கள் கூட காதல் ஜுரத்தில் சிக்குவதில் அதிசயம் ஒன்றுமில்லை. காதலிப்பது எப்படி? என்று பல்வேறு தனியார் ரேடியோக்களும் பாடம் நடத்துகின்றன.
பரஸ்பரம் புரிந்துகொள்ளும் விழிப்புணர்வு கொண்ட ஆணும், பெண்ணும் காதலிப்பதை குற்றப்படுத்த முடியாது என்று கூறலாம். சில வேளைகளில் சில காதல்கள் வெற்றிப் பெற்றிருக்கலாம். ஆனால், பதின் பருவத்திற்கும், இளம்பருவத்திற்கும் இடைப்பட்ட பல பெண்களின் நிலை அதுவல்ல.செக்ஸ் வியாபாரிகள் வலை வீசி காத்திருக்கின்றார்கள். ஒவ்வொரு நாளும் நிகழும் அசம்பாவிதங்களும், கூட்டு பாலியல் வன்புணர்வுகளும் வழக்கமான செய்திகளின் அந்தஸ்தை கூட இழந்துவிட்டன.
மொபைல் ஃபோனும், இணையதளமும் பெரும்பாலும் அப்பாவி இளம் பருவ பெண்களை காமுகர்களின் சதி வலையில் சிக்கவைக்கின்றன. இவற்றை எதிர்ப்பவர்கள் பழமைவாதிகளாக முத்திரைக் குத்தப்படுகின்றார்கள்.
எல்லாம் சம்பவித்த பிறகு கவலைப்பட்டு என்ன பயன்? சொந்த தந்தையையும், சகோதரனையும் கூட நம்பமுடியாத காலம். வழி தவறும் இளம் பருவ பெண்களை யார் பாதுகாக்கப் போகின்றார்கள்?(ஒன்று மட்டும் நிச்சயம் தொடக்கம் காதலாக இருக்கும் ஆனால் முடிவு காமம் காமம் காமம்)Thursday, February 14, 2013

குடியரசு தலைவரின் குறுகிய கால சாதனை

புதுடெல்லி: பாராளுமன்ற தாக்குதலில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு உச்சநீதிமன்றம் கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் தூக்குத் தண்டனை விதித்த அப்ஸல் குருவின் கருணை மனுவை நிராகரித்ததோடு மரணத்தண்டனையை உறுதிச் செய்ய கையெழுத்திட்ட பிரணாப் முகர்ஜி கடந்த 15 வருடங்களில் விரைவான நடவடிக்கை மேற்கொண்ட குடியரசு தலைவராக கருதப்படுகிறார்.

அப்ஸல் குருவின் மரணத்தண்டனைக்கு ஒப்புதல் அளிக்க கையெழுத்திடும் முன்பு அஜ்மல் கஸாப் (2012 நவம்பர் 5) மற்றும் ஸய்பன்னா நிஞ்சப்பா (2013 ஜனவரி 4) ஆகியோருக்கான தூக்குத் தண்டனையை உறுதிச் செய்தார்.

சொத்து தகராறில் குடும்பத்தில் 3 நபர்களை கொலைச் செய்த அல் பீருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையில் கருணை மனுவை ஏற்றுக்கொண்டார் பிரணாப்.

முன்னாள் குடியரசு தலைவர்களான பிரதீபா பாட்டீல், ஏ.பி.ஜே.அப்துல் கலாம், கே.ஆர்.நாராயணன் ஆகியோர் பிரணாபிடமிருந்து மாறுபட்ட நிலைப்பாட்டை கையாண்டனர். கே.ஆர்.நாராயணன் தன்னிடம் அளிக்கப்பட்ட கருணை மனுக்களில் எதனையும் தள்ளுபடிச் செய்யவில்லை. பிரதீபா பாட்டீலிடம் அளிக்கப்பட்ட கருணை மனுக்களில் நான்கு பாலியல் பலாத்கார கொலையாளிகள் உள்பட 34 பேர் இடம் பெற்றிருந்தனர்.

தேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை பிரதீபா பாட்டீல் பரிசீலிக்கவில்லை. கார் குண்டு வெடிப்பின் மூலம் ஒன்பது பேரை கொலைச் செய்த குற்றவாளி தேவீந்தர் சிங் புல்லார், கொலைக் குற்றவாளி மஹேந்திரநாத் தாஸ் ஆகியோரின் கருணை மனுக்கள் தள்ளுபடிச் செய்யப்பட்டன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கும், புல்லாரின் வழக்கும் உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளன. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலைச் செய்த வழக்கில் குற்றவாளியான தனஞ்செய் சாட்டர்ஜியின் கருணை மனுவை அப்துல் கலாம் நிராகரித்தார்., சங்கர் தயாள் சர்மாவின் முன்னால் வந்த 14 கருணை மனுக்களும் தள்ளுபடிச் செய்யப்பட்டன.

மனித ஆர்வலர் கூறும்போது: இந்தியா தவறான முன்னுதாரமாகவும், உலக நாடுகளின் அவப்பெயரையும் சம்பாதித்துகொண்டுள்ளது ஏனென்றால் மரண தண்டனைக்கு எதிராக ஐ நா வில் இந்தியா கையெலுத்திட்டுள்ளது குறுப்பிடத்தக்கது என்றார்.


Wednesday, February 13, 2013

காதலி தேவை! விண்ணப்பிக்கலாம்?

காதலி தேவை, காதலி தேவையானவர் விண்ணப்பிக்கலாம்?

காதலி தேர்வு செய்ய பட உள்ளது.

2013 ஆண்டு.

பெப்பரவரி 14ம் திகதி காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு காதலி தேவை. அதற்காக இப்போதே காதலி தேர்வு செய்யபட உள்ளது... விரும்பியவர்கள விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு :-
1) அனுபவம் ஏதும் இல்லாதவர் விரும்ப தக்கது.

2) அடக்கமான பெண்ணாக இருத்தல் அவசியம்.

3) மேக் அப் போட்டு யாரையும் பயப்பிடுத்தக் கூடாது.

4) வேலைக்கு போக கூடாது.

5) ஒரு காதில் ஒன்றுக்கு மேல் தோடு இருக்க கூடாது.

6) (முக்கியமான குறிப்பு ) வங்கி கணக்கு லட்சத்துக்கு மேல் இருப்பது நன்று.

7) அழகு முக்கியம் .

8) அடிக்கடி மௌன விரதம் இருக்க கூடாது.

9) நிறைய girls friend இருந்தால் நலம்.

10) அப்பா செல்லமாக இருக்கணும். இந்ததகமைகள் உள்ள அணைத்து பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

பிரப்வரி 14 காதலர் தினம் என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மீடியாக்கள் கொடுக்கும் முக்கியதுவத்தால் இந்த கற்பு கொள்ளையர் தினம் இன்றைக்கு இந்திய சமூகத்தில் புற்று நோய்போல் பரவி வருகின்றது. மக்களின் உணர்வுகளை தூண்டி அதை பணமாக்க துடிக்கும் மேற்கத்திய பண முதலைகளினால் உருவாக்கப்பட்ட இந்த தினம் இன்று இந்தியாவில் உள்ள இளம் வயதினரையும் தொற்றிக்கொண்டுள்ளது.

Monday, February 11, 2013

வி(ஷ)ஸ்வரூபத்தை இப்படியும் தடுக்கலாம்?

இந்திய திரு நாட்டில் எந்த ஒரு செயலுக்கும் மத சாயம் பூசுவது வழக்கமாகிவிட்டது, ஊடகங்கள் முதற்கொண்டு அரசியல்வாதிகள் மற்றும் கூத்தாடிகளையும் தொடர்கிறது., தீவிரவாதம் செய்கிறவன் மட்டும்தான் தீவிரவாதியா அதை விதைப்பவனும் தீவிரவாதிதான்.

எனதருமை இஸ்லாமிய சகோதரனே......ஒரு நிமிடம்...!?

நீ தீவிரவாதியா? உன்னுடைய மார்க்கம் உனக்கு அதைத்தான் கற்றுக்கொடுக்கிறதா?

நீ இந்தியாவில் இருந்து கொண்டு பாக்கிஸ்தானுக்கு நன்றி விசுவாசமாக நடந்து கொள்கிறாயா? அதைத்தான் உன்னுடைய சமூகம் உனக்கு கற்றுகொடுத்ததா?

நீ வாழும் நடுத்தர குடும்பம் அற்பத்தொகைக்காக நமது நாட்டு ரகசியங்களை தீவிரவாதிகளிடம் காட்டிக்கொடுத்ததா?

ஜிஹாத் என்றப்பெயரில் அப்பாவி மக்களை வேட்டையாட சொல்லி உன்னுடைய இஸ்லாம் உன்னை படிப்பிக்கிறதா?

ஆமாம் என்றால் விஜயும், கமலும், முருகதாசும் இன்னும் பிற கூத்தாடிகளும் அப்படி சொல்வதில் எந்த தவறும் இல்லை. துப்பாக்கி, விஸ்வரூபம் போன்ற படங்கள் வெள்ளிவிழா காண்பதற்கு உன்னுடைய முழுஒத்துழைப்பை தரலாம்.

இல்லையென்றால் இனி நீ செய்ய வேண்டியது.!?

கூத்தாடிகளுக்காக பரிந்து பேசுவதை முதலில் நிறுத்து. இனி இதுபோன்ற அயோக்கியர்களின் படத்தை ஒரு போதும் பார்க்கமாட்டேன் என்று நீ சபதம் எடுப்பதுடன் உன்னுடைய சக சகோதரனுக்கும் எடுத்து சொல்லி புரிய வை.

உலகிற்கே உதாரணமாக வாழ்ந்த உத்தம தலைவராம் உலக தூதர் நபிகள் நாயகத்தை(ஸல்) விட்டுவிட்டு பணத்திற்காக உடம்பைவிற்கும் விபச்சாரர்களை தலைவனாக்கி கொண்டதை நினைத்து மனமுருகி உங்களையும், உலகத்தையும் படைத்த அந்த ஒருவனிடம் மனமுறுகி மன்னிப்பு கேள்.

இது என் நாடு. நாங்களும் இந்நாட்டின் மைந்தர்களே... காந்தியை கொன்ற கோட்சே, அற்ப தொகைக்கு ஆங்கிலேயனிடம் ஒற்றுகொடுத்த எட்டப்பன் வர்க்கமல்ல நீங்கள்.(அவர்கள் வல்லரசுகளுக்கு வாலாட்டும் வந்தேறி கூட்டம் என்பதை மனதில் கொள்) இந்நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயனிடம் வாளேந்தி, நெஞ்சை நிமிர்த்து யுத்தம் செய்த திப்புசுல்தான் வகையறாக்கள் நீங்கள் என்பதை மக்களுக்கு புரியவை.

அன்பையும், சகோதரத்துவத்தையும் போதிக்கும் இஸ்லாம் போரில்கூட பெண்களையும், குழந்தைகளையும்,முதியவர்களையும், பலவீனமானவர்களையும், சரணடைந்தவர்களையும் விட்டுவிடுங்கள் என்று போதிக்கிறது. அப்படிப்பட்ட மார்க்கத்தை இழிவு படுத்தும் கயவர்களை எதிர்த்து போராட தயங்காதே.

வரலாறு தெரியுமா? இரண்டு சம்பவங்களுக்குப் பிறகே, இந்திய தேசம் மத மோதல்களால் தனது மண்ணில் ரத்தம் பூசிக் கொள்ளத் துவங்கியது. ஒன்று, பாபர் மசூதி இடிப்புச் சம்பவம். மற்றொன்று, அதற்கு முந்தையது... சுதந்திர போராட்ட காலத்தில், இந்து மகாசபா துவக்கப்பட்ட காலம். இந்தியா, இந்துக்களுக்கே என்ற வாதம் அழுத்தமாக முன்வைக்கப்பட்ட நேரத்தில், முதல் பிளவு உண்டானது. ஆனாலும், இஸ்லாமிய சகோதரர்கள் கைகோர்த்து, இணைந்து வாழவே விருப்பமாக இருந்திருக்கிறார்களே அன்றி, பிரிந்து செல்ல அல்ல. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறை படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்., நீயும் தெரிந்துகொள்.

நாட்டின் சட்டதிட்டங்களை மதிப்பவர்களில் எல்லோரையும் விட சிறந்தவர்கள் நீங்கள் என்பதை உணர்த்திகாட்டு. நடுநிலையாளர்கள் உன்னை நிச்சயம் புரிந்துக்கொள்வார்கள்.

Saturday, February 9, 2013

சரவணா என்கிற சவக்கிடங்கு!?

ஏழைகளின் உழைப்பை உறிஞ்சி குடிக்கும் முதலாளித்துவம், சென்னையில் இதுபோன்ற அதிகம் உள்ளது இது ஒரு சாம்பிள்.

சில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி. அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம்.

‘‘எந்த ஊர் நீங்க?’’
‘‘திருவண்ணாமலை பக்கம்..’’
‘‘திருநெல்வேலிகாரங்கதான் நிறைய இருப்பாங்கல்ல..’’
‘‘இப்போ அப்படி இல்ல... அவங்கல்லாம் வேற கடைக்குப் போயிட்டாங்க.. நாங்க திருவண்ணாமலை பிள்ளைங்க நிறைய பேரு இருக்கோம். 150 பேராச்சும் இருப்போம்..’’
‘‘தினமும் எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?’’
‘‘காலையில 9 மணிக்கு வரணும். நைட் 11 மணிக்கு முடியும்.’’
‘‘அப்படின்னா 14 மணி நேரம் வருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷிப்ட். இங்கே ஷிப்ட் கணக்கு எல்லாம் உண்டா?’’
‘‘ஷிப்டா... அதெல்லாம் தெரியாதுண்ணேன். காலையில வரணும். நைட் போகனும். அவ்வளவுதான்..’’
‘‘சாப்பாடு?’’
‘‘கேண்டீன் இருக்கு. கொஞ்ச, கொஞ்ச பேரா போய் சாப்பிட்டு வருவோம்.’’
‘‘எத்தனை மணிக்கு தினமும் தூங்குவீங்க?’’
‘‘12 மணி, 1 மணி ஆகும். காலையில எழுந்ததும் வந்திருவோம்’’
‘‘தங்குற இடம், சாப்பாடு எல்லாம் நல்லா இருக்குமா?’’
‘‘அது பரவாயில்லண்ணேன். நாள் முழுக்க நின்னுகிட்டே இருக்குறோமா... அதுதான் உடம்பு எல்லாம் வலிக்கும்.’’
‘‘உட்காரவே கூடாதா?’’
‘‘ம்ஹூம்.. உட்காரக் கூடாது. வேலையில சேர்க்கும்போதே அதை எல்லாம் சொல்லித்தான் சேர்ப்பாங்க. மீறி உட்கார்ந்தா கேமராவுல பார்த்துட்டு சூப்பரவைசர் வந்திடுவார்’’

- யாரோ ஒரு வாடிக்கையாளருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதையும் சூப்ரவைஸர் கேமராவில் பார்க்கக்கூடும். அதனால் அந்தப் பெண் இங்கும் அங்குமாக துணிகளை எடுத்து வைத்தபடியேப் பேசுகிறார்.

‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’
‘‘5,500 ரூபாய்.’’
‘‘வெறும் 5500 ரூபாய்தானா? வேற ஏதாவது முன்பணம், கல்யாணம் ஆகும்போது பணம் தர்றது... அதெல்லாம் உண்டா?’’
‘‘இல்லண்ணே... அது எதுவும் கிடையாது. இதான் மொத்த சம்பளம்.’’
‘‘இதை வெச்சு என்ன பண்ணுவீங்க?’’
‘‘தங்குறது, சாப்பாடு ஃப்ரீ. எனக்கு ஒண்ணும் செலவு இல்லை. சம்பளத்தை வீட்டுக்கு கொஞ்சம் அனுப்புவேன். மீதி பேங்க் அக்கவுண்டுல போட்டுருவேன்’’
‘‘எத்தனை வருஷமா இங்கே வேலைப் பார்க்குறீங்க?’’
‘‘அஞ்சு வருஷம் முடியப் போகுது. அப்பவுலேர்ந்து இதே சம்பளம்தான். இன்னும் ஏத்தலை..’’
‘‘வேலைக்கு சேர்ந்த முதல் மாசத்துலேர்ந்து மாசம் 5500 ரூபாய்தான் சம்பளமா?’’
‘‘ஆமாம்.’’
‘‘யாராச்சும் 10 ஆயிரம் சம்பளம் வாங்குறாங்களா?’’
‘‘சூப்ரவைசருங்க வாங்குவாங்க. அதுவும் பத்து வருஷம் வேலை பார்த்திருந்தாதான். இல்லேன்னா ஏழாயிரம், எட்டாயிரம்தான்.’’
‘‘லீவு எல்லாம் உண்டா?’’
‘‘மாசம் ரெண்டு நாள் லீவு உண்டு. அதுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பளத்துலப் பிடிச்சுக்குவாங்க.’’
‘‘பிடிச்சுக்குவாங்களா? அப்படின்னா லீவே கிடையாதா?’’
‘‘அதான் சொல்றனேண்ணே... லீவு உண்டு. ஆனால் சம்பளம் பிடிச்சுக்குவாங்க. அதனால நாங்க பெரும்பாலும் லீவு போட மாட்டோம்’’
‘‘அப்போ ஊருக்குப் போறது எல்லாம்?’’
‘‘ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ஒரு வாரம் ஊருக்குப் போயிட்டு வருவேன். அதுக்கு லீவு கொடுப்பாங்க. ஆனால் அந்த லீவுக்கும் சம்பளம் கிடையாது’’
‘‘ஊருக்குப் போகும்போது இங்கேருந்து துணி எடுத்துட்டுப் போவீங்களா?’’
‘‘இங்கே விற்குற விலைக்கு வாங்க முடியுமா? வெளியில பாண்டி பஜார்ல எடுத்துட்டுப் போவோம். இங்கே எடுத்தாலும் சில சுடிதார் மெட்டீரியல் கம்மியா இருந்தா எடுப்போம்’’
‘‘உங்களுக்கு விலை குறைச்சு தரமாட்டாங்களா?’’
‘‘ம்ஹூம்... அதெல்லாம் தரமாட்டாங்க. உங்களுக்கு என்ன விலையோ, அதான் எங்களுக்கும்’’
‘‘உங்களுக்கு எப்போ கல்யாணம்?’’
‘‘தெரியலை..’’
‘‘ஊர்ல என்ன பண்றாங்க..’’
‘‘நெல் விவசாயம்..’’
‘‘எவ்வளவு நிலம் இருக்கு?’’
‘‘தெரியலை.. ஆனால் கம்மியாதான் இருக்கு’’
‘‘இங்கே இப்படி கஷ்டப்பட்டு வேலைப் பார்க்குறதுக்குப் பதிலா ‘சரவணா ஸ்டோர்ஸ்ல வேலைப் பார்த்தேன்’னு சொல்லி திருவண்ணாமலையிலேயே ஒரு துணிக்கடையில வேலை வாங்க முடியாதா?’’
‘‘வாங்கலாம். ஆனா இதைவிட கம்மியா சம்பளம் கொடுப்பாங்க. இங்கன்னா வேலை கஷ்டமா இருந்தாலும் சாப்பாடும், தங்குறதும் ஃப்ரீ. சம்பளக் காசு மிச்சம். அங்கே அப்படி இல்லையே..

இதேபோன்ற உழைத்துக் களைத்த பெண்கள். அவர்களின் உழைப்பை உறிஞ்சி எழுந்து நிற்கும் சரவணா ஸ்டோர்ஸ் என்ற அந்த பிரமாண்ட கட்டடம் ஓர் ஆறடுக்கு சவக்கிடங்கு போலதே தோன்றியது.(வலியும், வேதனையும் தனக்கு வரும்போதுதான் அது புரியும்)

Thanks - Barathi Thambi

Friday, February 8, 2013

ஆடை அவிழ்ப்பும் அரசியல் ஆதாயமும்!?

லக்னோ: ஆடை அவிழ்ப்பதை கூட அரசியலாக்கும் இந்த அரசியல் அசிங்கங்கள் அடுத்து இவரை இந்திய உயர்ந்த பதவியான பிரமர் பதவியை இவருக்கு கிடைத்தால் என்ன நடக்கும் அறிவுள்ளவர்களே சிந்திப்பீர்.

அடுத்த வாரம் மகா கும்பமேளாவுக்கு வருகை தரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அரசியலை கலந்தால் தடுப்போம் என்று சமாஜ்வாதி கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுக் குறித்து சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் குஷவாஹா கூறியது:

“ஆன்மீகமும், மதரீதியான நிகழ்ச்சிதான் மகா கும்பமேளா. மோடி புண்ணியஸ்நானம்(?) செய்து சன்னியாசிகளின் ஆசியை வாங்கிவிட்டு செல்லலாம். ஆனால், மதத்தின் பெயரால் அரசியலை இலக்காக கொண்டால் மோடியை தடுப்போம். கும்பமேளா நடைபெறும் இடம் மதரீதியான ஸ்தலமாகும். அது அவ்வாறே தொடரட்டும். இது உபதேசமும், வேண்டுகோளுமாகும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அசிங்கங்களையும் அனாச்சாரங்களையும் ஆன்மிக போர்வையில் செய்கிறார்கள், அதிலும் பெண்கள், குழந்தைகள் முன்பு என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

Thursday, February 7, 2013

இனப்படுகொலையாலனை எதிர்த்து களத்தில் குத்தித்த மாணவர்கள் அணி!!

டெல்லி: குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி டெல்லி ஸ்ரீராம் காலேஜ் ஆஃப் காமர்ஸில் வளர்ச்சியைக் குறித்து உரை நிகழ்த்துவதை எதிர்த்து பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கேம்பஸ் ஃப்ரண்ட், எஸ்.ஐ.ஒ, டி.எஸ்.யு, ஐஸா உள்ளிட்ட மாணவர் அமைப்புகளின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பேராசிரியர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர்.

மாலை 3 மணி அளவில் ஆர்ட் காலரியின் அருகில் இருந்து துவங்கிய மோடி எதிர்ப்புப் பேரணியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர். இப்பேரணி ஸ்ரீராம் கல்லூரிக்கு செல்லும் வழியில் போலீஸ் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இதனை அகற்றிவிட்டு முன்னேறிய பேரணி மீது போலீசார் தடியடி மற்றும் தண்ணீரை பாய்ச்சினர்.

இதனிடையே பேரணியில் ஊடுருவிய ஏ.பி.வி.பி, பா.ஜ.க குண்டர்கள் குழப்பத்தை ஏற்படுத்த முனைந்தனர். சிறிய அளவிலான மோதலும் ஏற்பட்டது. பின்னர் போலீசார் மாணவர்களை கைது செய்தனர். போலீஸ் கைது செய்த மாணவர்களை ஏ.பி.வி.பி குண்டர்கள் தாக்குவதற்கான வாய்ப்பை போலீசார் ஏற்படுத்தியது மோதலுக்கு வழிவகுத்தது.

டெல்லி பல்கலைக்கழக மாணவரும், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினருமான முஹம்மது ஜாபிர் கூறியது: “மோடியின் வளர்ச்சி 2002-ஆம் ஆண்டு குஜராத் கண்ட இனப் படுகொலையாகும். வளர்ச்சியைக் குறித்து பேச மோடிக்கு உரிமை இல்லை” என்றார்.

ஹிந்து கல்லூரியின் மாணவி தீபா சர்மா கூறியது: “குஜரத்தின் வளர்ச்சி என்பது பா.ஜ.கவின் “இந்தியா ஒளிர்கிறது’ பிரச்சாரம் போலவே கற்பனையாகும். குழந்தைகளும், பெண்களும் அனீமியா மூலம் மரணிக்கும் குஜராத்தில் வளர்ச்சியைக் குறித்து பேச மோடிக்கு அருகதை இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய்யா பல்கலைக்கழக மாணவர் அஸத் அஷ்ரஃப் கூறியது: “மோடியின் கபட வளர்ச்சி வாதத்திற்கு எதிராக மாணவர்களின் எதிர்ப்பு தொடரும்” என்றார்.

போராட்டத்திற்கு பிறகு ஐந்தரை மணியளவில் போலீசார் கைது செய்தவர்களை விடுதலைச் செய்யக் கோரி மாணவர்களும், பேராசிரியர்களும் மவுரிஸ் நகர் போலீஸ் ஸ்டேசனை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.குழப்பத்தை ஏற்படுத்த முயன்ற ஏ.பி.வி.பி., பா.ஜ.கவினர் மீது புகார் அளித்தனர். கைது செய்தவர்களை விடுவித்த போலீஸ், ஏ.பி.வி.பி, பா.ஜ.கவினர் மீதான புகாரை பதிவுச் செய்ய மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து இரவு வரை மாணவர்கள் போலீஸ் ஸ்டேசன் முன்பாக தர்ணா போராட்டம் நடத்தினர்.

மோடி மூன்றாவது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் குஜராத் மாநிலத்தின் வெளியில் கலந்துகொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, February 6, 2013

ரத்த சுத்திகரிப்புக்கு ஏற்ற உணவுகள்!

உலகம் ஓடும் வேகத்தில் மனிதர்கள் தங்கள் உடம்பை கவனிக்க நாம் மறந்துவிடுகிறோம்., ரத்த சுத்திகரிப்புக்கு சிலதை இங்கு நாம் பார்ப்போம். இரத்தம் சுத்திகரிக்க உண்ண வேண்டிய உணவு வகைகள்.

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

1) பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

2) செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

3) முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

4) நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் இரத்தம் விருத்தி விருத்தியாகும்.

5) இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

6) தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

7) இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

8) விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

Tuesday, February 5, 2013

நிருவான கோலத்தில் தூக்கில் பெண் சடலம்!

ஒரு பெண் அரை நிருவானமாக தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளது. இது வேறு எங்குமல்ல மதசார்பற்ற இந்திய திருநாட்டில்தான். ஏனென்றால் இவள் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவள். இந்தியாவில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை பாரீர்.

பீகார் மாநிலத்தில் பகல்பூர் என்னும் இடத்தில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு தூக்கில் தொங்கவிட்டு கொல்லப்பட்டுள்ளார். அவருக்காக டில்லி பெண்கள் அமைப்புகள் இதுவரை குரல் கொடுக்கவில்லை. அவருக்காக சென்னை நடிகைகள் கடற்கரையில் ஊர்வலம் போகவில்லை. அவருக்காக அன்னை சோனியாவின் கண்களில் கண்ணீர் வரவில்லை. ஏனெனில் அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்.

இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் என்றால் அவர்களை தாராளமாக கற்பழிக்கலாம். தாராளமாக கொலை செய்யலாம். சித்திரவதை செய்யலாம். ஏனெனில் அவர்கள் மனிதர்களே அல்ல போலும். இதைத்தான் 2002 குஜராத்தில் ஹிந்துத்துவ தீவிரவாதிகள் மோடியின் ஆசிர்வாதத்துடன் செய்து முடித்தார்கள் இந்த (மோடி) கொடியவனைத்தான் பிரதமராக்க படாதபாடு படுகிறது பி ஜே பி, ஆர் எஸ் எஸ் போன்ற மத தீவிரவாத கட்சிகள்.

Monday, February 4, 2013

சிறுமிக்காக பாதையோரம் அமர்ந்த இளவரசர்

அரபியர்கள் என்றால் முட்டாள், மூளை இல்லாதவர்கள், ஈவு இறக்கமற்றவர்கள் என்று தான் நாம் கேள்வி பட்டிருந்தோம், ஆனால்ஒரு அரசர் எவ்வளவு இறக்கம், பொறுமையுடன் நடந்து கொள்கிறார்கள் என்பதை தொடர்ந்து படியுங்கள் உங்களுக்கே புரியும். பள்ளி சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அபுதாபி இளவரசர்!

பள்ளிக்கு வெளியே செய்வதறியாது தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர் வரும் வரை அவருக்கு துணையாக அபுதாபி இளவரசர் ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.

அபுதாபியின் இளவரசரும், ராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஒரு பள்ளிக்கு வெளியே சிறுமி ஒருவர் தொலைந்தது போன்று தனியாக நின்று கொண்டிருந்திருக்கிறார். இதைப் பார்த்த இளவரசர் காரை நிறுத்துமாறு கூறி தனது உதவியாளருடன் அந்த சிறுமி அருகே சென்று நீ ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு சிறுமி, தனது தந்தை வந்து அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் இன்னும் வரவில்லை, அதனால் தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

சிறுமியை தனது காரில் வீட்டில் இறக்கிவிடுவதாக இளவரசர் தெரிவித்தார். அதற்கு சிறுமியோ முன் பின் தெரியாதவர்களுடன் பேசக் கூடாது என்று தனது தந்தை தெரிவித்துள்ளதாக கூறினார். உடனே உதவியாளர் அச்சிறுமியிடம் இவர் யாரோ அல்ல அபுதாபியின் இளவரசர் என்று கூறினார். அதற்கு சிறுமி, அது எனக்குத் தெரியும். ஆனால் பழக்கமில்லாதவர்களுடன் செல்லக் கூடாது என்று என் தந்தை கூறியுள்ளார் என்றார்.

இதைக் கேட்ட இளவரசர் சிரித்துவிட்டார். சிறுமியின் தந்தை வரும்வரை அவருக்கு துணையாக சாலையோரத்தில் அமர்ந்திருந்தார். இளவரசர் சாலையோரத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்த மக்கள் ஆச்சரியப்பட்டனர்.

நம் ஊர் 'சாக்கடை கமிஷன்' கவுன்சிலர்களாவது இதைச் செய்வார்களா?(இதெல்லாம் நம் இந்திய ஊடகங்களுக்கு கண்ணுக்கு தெரியாது)

Sunday, February 3, 2013

மனிதர்கள் விற்பனைக்கு!?

பாங்காக்: புத்த தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அபயம் தேடி தாய்லாந்து நாட்டிற்கு செல்லும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் விற்பனைச் செய்யப்படும் கொடூரம் நடந்துவருகிறது. ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் படகுகள் மூலமாக அந்தமான் தீவு வழியாக அபயம் தேடி மலேசியாவுக்கு செல்கின்றனர். ஆனால், தாய்லாந்து கடற்படையும், போலீசும் சேர்ந்து படகுகளை தடுத்து நிறுத்தி அகதிகளை விற்பனைச் செய்வதாக பி.பி.சி கூறுகிறது.

கலவரத்தின்போது மீன்பிடி படகை இழந்த ரோஹிங்கியா முஸ்லிமான அஹ்மதின் கதையை மேற்கோள்காட்டி பி.பி.சி செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அஹ்மத் மற்றும் 60 நபர்களை கரையில் இருந்து அவ்வளவு தொலைவு இல்லாத இடத்தில் வைத்து கடற்படை கைது செய்துள்ளது. எல்லோரையும் பிடித்து கட்டிய பிறகு போலீஸ் வேனில் தாய்லாந்து-மலேசியா எல்லையில் உள்ள கடத்தல்காரர்களின் முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஒடுங்கிய இடத்தில் தங்குமிடம். உணவு, தூக்கம் எல்லாம் இங்கேதான். போலீசாருக்கு பணத்தைக் கொடுத்து ஆட்களை வாங்கியதாகவும், அவ்வளவு பணத்தையும் திரும்ப அளித்தால் அவர்களை விடுவிப்பதாகவும் கடத்தல்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

தனக்கு 1300 டாலர் விலை நிர்ணயித்தார்கள் என்று அஹ்மத் கூறுகிறார். ரோஹிங்கியா முஸ்லிம்களின் ஒரு குழுவினர் அங்கு வந்து கடத்தல்காரர்களிடமிருந்து அஹ்மத் உள்ளிட்டோரை மீட்டுள்ளனர்.

இச்செய்திக் குறித்து பதிலளித்துள்ள தாய்லாந்து அரசு இதுக்குறித்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது. உயர் ரேங்கில் உள்ள தாய்லாந்து ராணுவ அதிகாரி மற்றும் கர்னலை விசாரணை தொடர்பாக சஸ்பெண்ட் செய்துள்ளது அரசு. தெற்கு தாய்லாந்து மாகாணமான சுங்கலாவில் போலீஸ் சோதனை போட்டது. அப்பொழுது 800க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் கட்டிடத்தில் அடைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மனித கடத்தலுக்கு துணைபோன உயர் அரசியல் கட்சியின் தலைவர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது புத்த தீவிரவாதிகள் நடத்திய கூட்டுப்படுகொலையில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்தனர்.

Saturday, February 2, 2013

தலிபானுடன் உறவாடும் ஹிந்துக்கள்?

மும்பை: 2005-ஆம் ஆண்டு பா.ஜ.க மூத்த தலைவரும், பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றவாளியுமான எல்.கே.அத்வானியும் ஹிந்துத்துவா சங்க்பரிவார தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர்களும் பாகிஸ்தானில் இயங்கும் தாலிபான் ஆதரவு தலைவரான ஃபஸலுர் ரஹ்மானுடன் ரகசிய சந்திப்பை நடத்தியதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி திடுக்கிடும் தகவலை வெளிப்படுத்தியுள்ளது.

இதுக் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியது: பாகிஸ்தானில் எதிர்கட்சி தலைவரான ஃபஸலுர்ரஹ்மான் தனது அதிகாரப்பூர்வ பதவியை பயன்படுத்தி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்தார். அப்பொழுது டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அலுவலகத்தில் வைத்து எல்.கே.அத்வானி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் அவர் சந்திப்பை நடத்தினார்.

அந்த சந்திப்பின் போது என்ன பேசினார்கள் என்பதுக் குறித்து இதுவரை வெளிப்படுத்தவில்லை. 2005-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சந்திப்பு நடந்தது. அப்பொழுது எல்.கே.அத்வானி எதிர்கட்சி தலைவராக இருந்தார். டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் நடந்த ரகசிய கூட்டத்தில் மூத்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் 3 மணி நேரம் நடந்தது.

இவர்கள் இடையே என்ன பேசினார்கள்? என்பதுக் குறித்து அறிய பொதுமக்கள் விரும்புகின்றனர். அதனை வெளியிட சங்க்பரிவார தலைவர்கள் தயாராக வேண்டும். தீவிரவாதத்தை பா.ஜ.க அரசியல் மயமாக்கி வருகிறது. பா.ஜ.க தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளியான பிரக்யாசிங் தாக்கூரை சிறையில் சென்று சந்தித்துள்ளார். இவ்வாறு நவாப் மாலிக் கூறியுள்ளார்.

Friday, February 1, 2013

பாலியலுக்கு பக்காவான டிஷ்!!

உலக முழுவதும் நடக்கும் பாலியல் பலாத்காரத்திற்கு காரணம் ஒன்றே ஒன்றாகத்தான் இருக்கமுடியும்., அது என்ன வென்றால் போதை. தற்போது நடந்துள்ள டெல்லி சம்பவத்தையும் சேர்த்து.

மது பழக்கத்தால் சமூகத்தில் தலைகுனிவு ஏற்படுவதுடன் உடல் நலமும் சீர்கேடு அடைகிறது அதிகப்படியான ஆல்கஹால் போதையால் இளைஞர்களின் உணர்ச்சிகளை மிக வேகமாக தூண்டி விட்டு வெறி கொள்ளச் செய்கிறது.

பொதுவாக ஆண்களுக்கு உணர்ச்சிகள் இருக்கும். அந்த உணர்ச்சியை அடக்கிக் கொள்ளலாம். வெறியை அடக்க முடியாது. இந்த வெறியானது மது போதையால் வரக்கூடியது. ஒருவன் அதிகப்படியான மது போதையால் திடீரென உணர்ச்சியால் உந்தப்பட்டு கண்ணில் பார்க்க கூடியதை அடைய வெறி கொள்கிறான். இதற்காக அவனை வன்முறையில் ஈடுபடவும் தூண்டுகிறது. வெறிக்கும், ஆண்மைக்கும் வேறுபாடு உண்டு.

ஆண்மை இருப்பவன்தான் கற்பழிப்பில் ஈடுபடுகிறான் என்பது அல்ல. ஆண்மை எல்லோருக்கும் உண்டு. வெறிதான் ஒருவனை மிருகமாக்குகிறது. கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் வெறி பிடித்தவர்கள். அவர்களுக்கு மது போதை மற்றும் உணர்ச்சிகளை தூண்டும் செயல்கள்தான் வெறியைத் தூண்டுகிறது.

இது போன்ற மது போதை வெறியால் அவன் பார்க்கும் பெண்ணை அடையும் வெறி ஏற்பட்டு, அதற்கு தடையாக இருக்கும் போது அவர்களை தாக்கி பணிய வைக்கிறான். டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவமும் இந்த வெறியால் நடந்ததற்கு எடுத்துக்காட்டு. பிறகு அவன் தவறை உணர்ந்து செய்த தவறை நினைத்து வருத்தப்படுகிறான்.

அவனுக்கு தூக்கம் வராது. நாளடைவில் மனநிலை பாதிக்கப்பட்டு சைக்கோ நிலையை அடைந்து விடுகிறான். உடலில்நீர் பற்றாக்குறை, மயக்க நிலை, உடலுக்கு தேவையான ஆக்சிஜனை சுவாசிக்க முடியாமல் போவது போன்ற ஏராளமான பிரச்சினைகள் மதுவில் முக்கியமாக உள்ளன. எத்தனால் என்ற வேதிப் பொருள்தான் இத்தனை பாதிப்புகளுக்கும் காரணம். மது முதலில் உடலில் தாக்குவது நரம்பு மண்டலத்தைத் தான்.

அதன்பிறகு ஒவ்வொரு முக்கிய உறுப்பாகத் தாக்கி ஒட்டு மொத்த உடல் உறுப்புகளையும் செயல் இழக்கச் செய்யும். மதுவினால் உடலின் மிகப்பெரிய சுரப்பியான சுமார் 1 கிலோ எடையுள்ள கல்லீரல் பாதிக்கப்படுகிறது. இது 500 விதமான வேதியியல் மாற்றங்களை ஒரே நேரத்தில் செய்கிறது. கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்து விடும்.

மது அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் பின் விளைவுகள் மற்றும் அதனால் சமூகத்தில் ஏற்படும் தலைகுனிவு ஆகியவற்றை நன்கு அறிந்தும் கூட சிலர் தவிர்க்க முடியாமல் விருப்பத்திற்கு மாறாக, போதும் என்று கட்டப்படுத்த இயலாதவாறு தொடர்ந்து குடித்து, அந்த பழக்கத்தை விட முடியாமல் இருப்பார்கள். போதை மருந்துகளுக்கு அடிமையாவது போலவே, குடிப்பழக்கம் எனப்படும் இந்நோயும் மருத்துவத் துறையினரால் குணப்படுத்த முடியும் நோயாக வரையறுக்கப்படுகிறது.

இதுபோல் தான் கஞ்சா, அபின், பிரவுன்சுகர், புகை யிலை பழக்கங்களும் இவையும் ஹார்மோன் குறைபாடுகள், நரம்பு தளர்ச்சி, நரம்பில் உள்ள நியூட்ரான் செல்களின் குறைபாடு, நரம்பு இயக்க சக்தியின்மை, ஆண்மை குறைவு போன்ற குறைபாடுகளை உண்டு பண்ணுகிறது. கடைசியில் இதனால் மன வேதனைப்பட்டு தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறான்.

வட இந்தியாவில் போதையால் நடைபெறும் குற்றங்கள் அதிகம். பான்பராக், புகையிலை பழக்கத்தால் வாய்ப்புற்று நோய் வர வாய்ப்புள்ளது. இதற்கு ஒரே தீர்வு இளைஞர்களை மது போதையில் இருந்து விடுவித்து அவர்களை நல்வழிப்படுத்துவது தான் ஒரே வழி. இதுபோன்ற தீய பழக்கத்தை விட்டுவிட்டால் நாட்டுக்கும் வீட்டுக்கும் உங்கள் உடலுக்கும் நண்மை பயக்கும். புது மனிதனாக புத்துயிர் பெறலாம்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!