Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, January 31, 2013

விஷரூபம் கமலுக்கு ஓர் கடிதம்

அன்புள்ள கமல் அவர்களுக்கு வணக்கம் ....1992-93 ஆம் ஆண்டுகளில் இயங்கிய கமல் நற்பணி இயக்க அனைதுக்கல்லூரி மாணவர் அமைப்பின் பச்சையப்பன் கல்லூரி பொறுப்பாளர் செங்குட்டுவன் எழுதுவது! இன்றைக்கு யாதவர் சங்கத்தில் உள்ள நண்பர் குணசீலன் அன்று உங்கள் நற்பணி இயக்கத்தின் தலைவர். நாங்கள் படித்த சென்னை முத்தையா செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் நீங்களும் படித்தீர்கள் என்று அன்றைக்கு பெருமைகொள்வோம் நாங்கள். 1992 ஆம் ஆண்டு தாகம் அனைதுக்கல்லூரி மாணவர் இதழாய் வெளியிடும் விழாவுக்கு நீங்கள் வருவதாக இருந்து,குணா படத்தின் படப்பிடிப்புக் காரணமாக நீங்கள் வாழ்த்து செய்தி மட்டும் அனுப்புனீர்கள். தாகத்தின் முதல் ஆண்டு விழாவில் கலந்துக்கொள்வேன் என்று சொன்னீர்கள். "சுட்டி" "தேன்மழை " போன்ற மாணவர் இதழ்கள் போல மாணவர் பருவத்தோடு நின்றுவிடாமல் "தாகம் " தொடர்ந்து வெளிவரவேண்டும் என்று வாழ்த்தினீர்கள்.

இந்த 22 ஆண்டுகளில் தாகத்தில் உங்களை விமர்சித்து எத்தனையோ கட்டுரைகள் வெளிவந்து விட்டது. இன்றைக்கு விஸ்வரூபத்திற்காக நீங்கள் தமிழ் நாட்டை விட்டே செல்கிறேன் என்று சொன்னபோது எனக்கும் கண் கலங்கியது ...ஆனால் கமல், உங்களை 5 வயது முதல் பாராட்டி சீராட்டி இன்று உங்களை கலைஞானியாக, கோடீஸ்வரனாக உயர்த்திய தமிழ் நாட்டை எவ்வளவு எளிதாக உங்களால் தூக்கி வீச முடிகிறது . காஷ்மீர் முதல் கேரளா வரை என்று தமிழ் நாட்டை நீங்கள் தவிர்தபோது இஸ்லாமிய சகோதரனை விட எனக்கு உங்கள் மீது கடும் கோபம் வந்தது! 50 ஆண்டுகாலம் உங்களை சுமந்த நாட்டிற்கு ,உங்கள் நாத்துடுக்கால் சிதம்பரம் நிகழ்ச்சியில் பேசிய காரணத்தால், உங்களை இன்றைய அரசு பந்தாடும் நிலையில்,தமிழர்களும் தமிழ் நாடும் என்ன பாவம் செய்தது உங்களை வளர்த்ததை த்தவிர ? ராசி அழகப்பன், குணசீலன், உங்கள் ராஜ்கமல் நிறுவனத்தின் நிழலாக இருந்த டி.என் .யெஸ் (குணா படத்தை தயாரித்து அழிந்து போனவர்) அய்யா அவர்களின் மகன் சக்தி, புதுக்கல்லூரி இப்ராஹிம் இப்படி எத்தனையோ தளபதிகள் அன்று உங்களுடன் இருந்தனர். இன்று அவர்கள் எல்லாம் எங்கே ? இந்தியாவில் ஏதேனும் ஒரு மதசார்பற்ற மாநிலத்தில் தங்குவேன் என்று சொல்கிறீர்களே ...கமல் உண்ட வீட்டிற்க்கே ரெண்டகம் செய்கிறீர்களே.

இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர ஒரு மதசார்பற்ற நாட்டை உங்களால் சொல்லமுடியுமா ? அக்ரகாரத்தில் பிறந்த உங்களை இன்று இந்த மதச்சார்பற்ற நாடுதானே உச்சியில் நிற்க்கவைத்துள்ளது ?ஏதாவது ஒரே ஒரு அக்ரகாரத்து அம்பி உங்களுக்காக இன்று சாலை மறியல் செய்திருப்பானா ? உங்கள் அக்ரகாரத்து எழுத்தாளர்கள் சோ, மதன், s .v .சேகர், உங்கள் குரு பாலச்சந்தர் உங்களை சந்தித்திருப்பார்களா ? இன்று உங்கள் வீட்டின் முன் அழுதவன் எல்லாம் இளிச்சவாய தமிழன் தானே ?எனக்கு அரசியல் கிடையாது ..மதம் கிடையாது என்று சிறு பிள்ளை தனமாக புலம்புகிறீர்களே கமல்,ஹேராம்,உன்னைப் போல் ஒருவன்,விஸ்வரூபம்,அன்பேசிவம் போன்றப் படங்கள் அரசியல் பேசாமல் எதை ப்பேசின ?மதம் பேசாமல் எதை பேசின ?.

1983 இல் ஈழப் படுகொலைக்காக உங்கள் தலைமையில் பல்லாயிரம் ரசிகர்கள் ஒன்று திரண்டு பேரணி நடத்தினார்களே இன்று உங்களுக்கு அந்த உணர்வே இல்லையா ? ஏன் இலங்கை தீவிரவாதம் பற்றி உங்களால் படம் எடுக்க இயலாதா ?அதற்கு ஒபாமா ஒப்புதல் தரமாட்டாரா ? காரணம் நீங்கள் இந்தியனாகி பல காலம் ஆகிவிட்டது கமல் ! தமிழனாக ..பிறகு இந்தியனாக, இந்தியாவில் வாழ முடியாதப் பட்சத்தில் அமெரிக்கனாக, ...அடடா...என்ன ஒரு மனித நேயம் உள்ள மனிதர். நடிகர்! இன்றைக்கு இங்கு நடக்கும் கூத்து, உலகில் எங்காவது நடக்குமா கமல்? உங்களை ஆளாக்கிய மண்ணிற்காக நீங்கள் ஒரே ஒரு படம் எடுத்ததில்லை.

ஆனால், உங்களை அமெரிக்காவின் விசுவாசியாக காட்டிக்கொள்ள, கேவலம் ஆஸ்கார் விருதுக்காக பலநூறு ஆண்டுகளாக நம்முடன் பிணைந்திருக்கும் இஸ்லாமிய சகோதரர்களை தொடர்ந்துக் கொச்சைப் படுத்திக்கொண்டே இருப்பீர்கள் ? உங்களுக்கு தமிழக மக்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற உடன் இங்கிருந்து வெளியேறுவேன் என்று அழுகிறீர்கள் ! வெட்கம் வெட்கம் ! நீங்கள் தமிழர்கள் படும் அவலங்களை வைத்து ஒரு படம் எடுத்து அதற்க்கு தடை என்றால் தமிழகம் உங்களை விட்டுக்கொடுத்திருக்குமா ? நீங்கள் சிறந்த நடிகர்தான் ..ஆனால் தமிழகத்திற்கு நண்றி உள்ள மனிதனா ? என்று உங்களை தொட்டுக்கேட்டுப்பாருங்கள்.

இந்த தமிழ்நாடும் தமிழனும் உங்களுக்கு கோடி கோடியாக அள்ளித்தரவேண்டும், ஆனால் நீங்கள் இந்த மக்களைப் பற்றி படம் எடுக்கவில்லை என்றால் கூடப் பரவாயில்லை எதாவது ஒரே ஒரு தமிழர் பிரச்சனைக்காக நீங்கள் குரல் கொடுத்தது உண்டா கமல் ? தயவுசெய்து நீங்கள் போகும் ஊரில் உள்ள மக்களுக்காகவாவது குரல் கொடுங்கள்...அவர்களையும் ஏமாற்றி விடாதீர்கள் ? எங்களைப் போல் அவர்கள் ஏமாற மாட்டார்கள்! போகும் போது இன்று தமிழக ரசிகர்கள் உங்கள் கடன் அடைக்க அனுப்பும் பணத்தையும் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள் !அடுத்த ப் படம் எடுக்க உதவும் ! இந்தக் கடிதம் உங்களுக்கு மட்டும் அல்ல. எங்களை இன்றைக்கு சுரண்டிக்கொண்டிருக்கும் அத்தனை நடிகர்களுக்கும்தான். தயவு செய்து அவர்களையும் உங்களுடன் மதச்சார்பற்ற நாடான குஜராத்திற்கு அழைத்துச் சென்று விடுங்கள் ! நாங்கள் நிம்மதியாக வாழ்கிறோம் !!

என்று அன்புடன்
தாகம் செங்குட்டுவன் மற்றும் பழைய நற்பணி மன்ற தோழர்கள்.

Wednesday, January 30, 2013

குடியுரிமை கிடைக்குமா யு எஸ் சில்?

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 2,40,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படுவது குறித்து பேசப்பட்டு வருகிறது. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாராளுமன்ற பிரதிநிதிகளால் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சட்டவிரோதமாக அமெரிக்காவில் வாழ்ந்து வரும் 1 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து பெரிய ஒப்பந்தத்திற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மிகவும் திறமையான ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு கிரீன் கார்டு வழங்குவது சம்பந்தமான விஷயத்தில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.

பக்கத்து நாடான மெக்சிகோ நாட்டில் இருந்து மட்டும் 60 லட்சத்திற்கு மேற்பட்டோர் அங்கு சட்டவிரோதமாக குடியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.(முன்பு இருமுறை முயற்சித்து அமெரிக்க செனட்டில் வெற்றிபெறாமல் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது நினைவில் கொள்க.)

Tuesday, January 29, 2013

இளமை இதோ இதோ!

ஏன்னென்றும் இளமையுடன் இருக்கத்தான் மனிதனாக பிறந்த எவரும் ஆசைப்படுவர், அந்த வகையில் என்றென்றும் இளமைக்கு இதோ. முதுமையை ஓட ஓட விரட்ட.

உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும், கடந்த 100 ஆண்டுகளாக சீனர்களும் கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்கர்களும் நி பித்துள்ளனர்.

சர்வ ரோக நிவாரணி: ஓட்ஸ் உணவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் இ , துத்தநாகம், செலினியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ் போன்றவை காணப்படுகின்றன. இதில் அதிக அளவு புரதமும் உள்ளது.

நீரிழிவு நோயாளிகளும், கொழுப்பு சத்து, உடல்பருமன் கொண்டவர்களும், உயர் ரத்த அழுத்தம் உடையவர்களும் தினசரி ஒரு கப் ஓட்ஸ் உட்கொள்வதன் மூலம் இந்த நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

தினமும் ஒரு கப் ஓட்ஸ்: தினசரி காலை ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி பருகுவதன் மூலம் அதில் உள்ள நார்ச்சத்து புற்றுநோய் செல்களை அகற்றுகிறதாம். இதில் உள்ள ரசாயனம் புற்றுநோய் செல்களை எதிர்த்து அவற்றை அழிக்கின்றனவாம். கெட்ட கொழுப்புகளை நீக்குகிறதாம். நீரிழிவு நோயாளிகள் ஓட்ஸ் பருகுவதன் மூலம் அவர்களுக்கு ஜீரணம் மெதுவாக நடைபெற்று ரத்தத்தில் சர்க்கரை உடனே கலப்பது தடுக்கப்பட்டது.

இதயநோய்: இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி ஓட்ஸ் உணவு கொடுத்து வந்ததன் மூலம் இதயத்தில் ரத்த நாளங்களில் படிந்திருந்த கெட்ட கொழுப்புகள் அகன்றன. தமனி இறுக்கம் நீங்கி மூச்சு விடுவதில் இருந்த சிரமம் குறைந்தது. உயர் ரத்த அழுத்தம் தவிர்க்கப்பட்டது. உடலில் உடல் பலவீனம் மறைந்தது. இறந்து போன செல்களுக்கு பதிலாக புதிய செல்கள் உருவானது.

இளமையை தக்கவைக்கும் ஒட்ஸ் சத்துக்கள்: பெண்கள் அழகாக, இளமையாகத் தோன்ற ஓட்ஸ் உணவுடன் 50 கிராம் பச்சை வெங்காயத்தை பச்சையாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வரவும். கோதுமையும், பாதாம் பருப்பையும் ஓட்ஸ் சாப்பிடும்போது சேர்த்துச் சாப்பிடவும், இதனால் கோபமும், கவலையும் பறந்து போகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மகிழ்ச்சியான வாழ்க்கை: 11, 12 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து மக்கள் ஓட்ஸ் சாப்பிட்டார்கள். அதற்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாகத்தான் இவர்கள் சீனர்களைப் பார்த்து ஓட்ஸ் சாப்பிட ஆரம்பித்தார்கள். இன்றும் உலகில் ஓட்ஸ் அதிகம் சாப்பிடுகிறவர்கள் சுவிஸ் மக்கள்தான். இவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நல்ல வருமானத்துடன், சேமிப்புடன் வாழ்கின்றனர். அதற்கு ஓட்ஸ் உணவு கொடுக்கும் உற்சாகம்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஓட்ஸ் உணவானது குதிரையின் நரம்பு மண்டலத்தைப் போல மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தையும் இது கிளர்ச்சியுடன் வைத்திருக்கிறது என்பதிலிருந்து கண்டுபிடித்துள்ளனர். எனவே தினசரி ஒரு கப் ஓட்ஸ் உணவை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது என்று அறிவுத்துகின்றனர் உணவியல் வல்லுநர்கள்..........

Monday, January 28, 2013

எகுதி வலையில் விழுந்தது எப்படி! கமல்!?

கமலின், விஸ்வரூபம் படத்தின் தடையால் கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.30 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தடை தொடர்ந்தால் மேலும் இது அதிகரிக்க கூடும்.

விஸ்வரூபம் படம் முழுக்க முழுக்க இஸ்ரேல் தயாரிப்பு என்று கோடம்பாக்க செய்திகள். இப்படத்தில் இயக்கி நடித்த கமலுக்கு இஸ்ரேல் நிறுவனம் ஒன்று ஒப்புக்கொண்ட பணத்தில் மீதியை வசூலிக்க அமெரிக்கா வந்திருப்பதாக செய்திகள் உலா வந்தவண்ணம் உள்ளது.

அவர்களும் படம் உலகம் முழுவதும் வெளியாகட்டும் மீதியை தருவதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆக எது எப்படியோ கமல் என்கிற நல்ல நடிகன் இப்படி காசுக்காக எதையும் செய்ய துணித்து விட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை.

இப்படம் பற்றி சினி துறையை சார்ந்தவர்கள் கூறும்போது கமல் இஸ்ரேலின் வலையில் விழுந்துவிட்டதாக கூறுகின்றனர்.

Sunday, January 27, 2013

அமெரிக்காவில் அடைபட்ட ஹிந்து சாமியார்?

சிகாகோ: அடிக்கடி செக்ஸ் லீலைகளில்தான் ஹிந்து சாமியார்கள் மாட்டிக்கொள்வார்கள் ஆனால் இப்போது மாட்டிக்கொண்ட ஹிந்து சாமியார் வேறுவிதம்.

விசா மோசடி வழக்கில் குற்றவாளி என கண்டுபிடிக்கப்பட்ட இந்தியாவைச் சார்ந்த இந்து சாமியாருக்கு அமெரிக்கா நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

கவுடியா வைஷ்ணவ சொஸைட்டி(ஜி.வி.எஸ்) தலைவரும், மில்வாகி ஹரே கிருஷ்ணா கோயிலில் முக்கிய சன்னியாசியுமான கோபால் ஹரிதாஸ் என்ற ஸகர்ஸென் ஹல்தார்(வயது-32) என்பவர் தாம் விசா மோசடிக்காக சிறைத் தண்டனை பெற்றவர் ஆவார். சிறைத் தண்டனை முடிந்த பிறகு ஹரிதாஸ், இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்.

மத நிகழ்ச்சிகளில் பங்கேற்க வழங்கப்படும் ஆர்-1 விசாவை சட்டவிரோதமாக பெற்று ஏராளமானோரை இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு அழைத்து வந்ததாக நீதிமன்றம் கண்டறிந்தது. 12க்கும் மேற்பட்ட நபர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு வந்ததாக போலீஸ் கூறுகிறது. ஒவ்வொரு நபரிடமும் 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஜி.வி.எஸ்ஸின் பெயரில் ஏராளமான விசா மனுக்கள் அளிக்கப்படுவதை கண்காணித்த போலீஸ் நடத்திய விசாரணையில் ஹரிதாஸ் சிக்கினார். விசா மோசடி வெளியானதை தொடர்ந்து கடந்த 2010ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார் (தினம் அறுபடும் ஆரிய அசிங்கம்).

Saturday, January 26, 2013

கூறுபோட வந்த கொள்ளிகட்டைகள்!?

தேசத்தை கூறுபோட வந்த கொள்ளிகட்டைகள் யார் என்பது சொல்லாமலே புரிந்துவிடும். தேசத்தின் பல பாகங்களிலும் குண்டுகள் வெடிக்கச்செய்து அதை சிறுபான்மையினர் தலையில் போட்டுவிட்டு ஒன்று அறியாதவர்கள் போல் இந்தனை காலங்கள் ஒதுங்கி,ஒளிந்து இருந்தனர். அது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேசத் துரோகிகள்ளின் முகம்.

“நாட்டில் நடக்கும் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு இந்துத்துவ பயங்கரவாதிகள்தான் காரணம்” என்று உள்துறை அமைச்சர் ஷிண்டே கூறியதுதான் தாமதம்- உடனே நாலா பக்கங்களிலிருந்தும் அவர்மீது கண்டனக் கணைகள் பாய்கின்றன. ‘பதவி விலகு, மன்னிப்பு கேள், தேசத் துரோகம்’ என்றெல்லாம் அம்புகள் பாய்கின்றன.

அரசியல்வாதிகள் எப்போதாவதுதான் உண்மை பேசுவார்கள். இப்போது ஷிண்டே கூறியிருப்பது
கலப்படமற்ற உண்மையாகும். சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, அஜ்மீர்குண்டுவெடிப்பு, மாலேகாவ் குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு முதலிய பயங்கரவாதச் செயல்களை எல்லாம் அரங்கேற்றியவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகள்தாம் என்று எந்தவிதமான விசாரணையும் இல்லாமல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுத் தீர்ப்பையும் வழங்கி ஒரு சமுதாயத்தையே அவமானப்படுத்தின.

ஆனால் 2011ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தெஹல்காவுக்காக ஆஷிஷ் கேதான் நடத்திய புலனாய்வில்தான் பல உண்மைகள் தெரியவந்தன.

இரண்டு ஆண்டு கழிந்த நிலையில் இதோ, இப்போது தேசியப் புலனாய்வுக் குழுவின் (என் ஐ ஏ) விசாரணை முடிவுகள் வெளிவந்திருக்கின்றன.

இன்னும் முழுமை அடையாத அந்தப் பட்டியல் வருமாறு: *சம்ஜவ்தா குண்டுவெடிப்பு- முக்கிய குற்றவாளி ராஜேந்தர் கைது(2012, டிசம்பர் 15) என் ஐஏவின் குற்றவாளிகள் பட்டியலில் இருப்பவர்கள்- சுவாமி அசிமானந்தா, சாத்வி பிரக்யா சிங், கொல்லப்பட்ட ஆர் எஸ் எஸ் ஊழியர் சுனில் ஜோஷி, சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல்சம்கிரா, கமால் சவ்ஹான், அமித்.

* மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பிலும் ராஜேந்தர் சவ்தரிக்குப் பங்குண்டு. அபிநவ் பாரத் என்னும் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த இந்த ஆள் சம்ஜவ்தா, மாலேகாவ், அஜ்மீர் குண்டுவெடிப்பிலும் தொடர்புடையவர் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* (டிசம்பர் 16) மக்கா மஸ்ஜித் வழக்கில் அபிநவ் பாரத் அமைப்பைச் சேர்ந்த ஜேத்ராம் கைது செய்யப்பட்டார்.

* (டிசம்பர் 26) 2004 இல் ஜம்மு பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியது சம்ஜவ்தா குற்றவாளிகள்தான் என என் ஐ ஏ உறுதி.

* (டிசம்பர் 27) மாலேகாவ் வழக்கிலும் ராஜேந்தர் சவ்தரிக்குத் தொடர்பு உண்டு, அவர் கைதுசெய்யப்படுவார்.

* இந்தூரில் குற்றவாளிகள் வெடிகுண்டு வைப்பதற்கான பயிற்சி எடுத்தனர் என்று என் ஐ ஏ கூறுகிறது.

* (ஜனவரி 2) மாலேகானில் வெடிகுண்டு வைப்பதற்கு முன்பு விரிவாக சர்வே செய்ததாக யான்சிங் ஒப்புதல் வாக்குமூலம்.

* (ஜனவரி 5) பயங்கரவாதக் குற்றச்சாட்டின் அடிப்படையில் லோகேஷ் சர்மா கைது செய்யப்பட்டார்.

* (ஜனவரி 7) மேற்சொன்ன வழக்குகளில் தடய அறிவியல் ஆதாரங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன.

* (ஜனவரி 9) இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு கோத்ரா ரயில் எரிப்பிலும் தொடர்பு என்று
தேசியப் புலனாய்வுக் குழு அறிக்கை.

முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாய்ச் சித்திரித்த ஊடகங்கள் இந்தச் செய்திகளையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.

அப்படியே செய்தி வெளியிட்டாலும் எங்கோ ஒரு மூலையில் நாலுவரியில் இந்தச் செய்திகள்
முடிந்துவிட்டன.

இத்தனை உறுதியான சான்றுகளின் அடிப்படையில்தான் ஷிண்டே இந்துத்துவ பயங்கரவாதம் குறித்த உண்மையை இனியும் மறைக்க முடியாது என்ற நிலையில் குறிப்பிட்டுள்ளார்.

அது தேசத் துரோகம் என்றால் நாடு முழுக்க குண்டுவைத்த இந்துத்துவத் தீவிரவாதிகளின்
செயல்களுக்கு என்ன பெயர்?

Friday, January 25, 2013

விஸ்பரூபம் முன்னும் பின்னும்!

விஸ்வரூபம் படம் தடை உத்தரவு, முன்னும் பின்னும். நடந்த பின்னணி என்ன?

ஓர் அலசல் ரிப்போர்ட்....!!?

கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்துக்கு மிகப் பெரிய சிக்கல் வந்துள்ளது. இஸ்லாமிய அமைப்புகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து விஸ்வரூபம் படத்தை 2 வாரங்களுக்கு திரையிட தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் படத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தாமல் இருப்பதற்காக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. சமீபத்தில் இப்படம் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்குப் போட்டுக் காட்டப்பட்டது. அதைப் பார்தத் இஸ்லாமிய அமைப்பினர் படத்தில் இஸ்லாமும், இஸ்லாமியர்களும் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் அமைப்பின் தலைவர்கள் கூறியுள்ளனர்,

திருக்குர்ஆனை தீவிரவாதிகளின் கையேடு போல காட்டியுள்ளதாகவும், மதுரை, கோவை போன்ற நகரங்கள் தீவிரவாதிகளின் புகலிடம் போல காட்டப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனவே படத்தை வெளியிட விட மாட்டோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மீலாடி நபியன்று ரிலீஸுக்குத் திட்டம் : விஸ்வரூபம் படத்தை மிலாடி நபி தினமான நாளை கமல்ஹாசன் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தார். இதுதான் இஸ்லாமியர்களை கடும் கொதிப்புக்குள்ளாக்கி விட்டது.

பெரும் போராட்டத்துக்கு முஸ்லீம்கள் திட்டம் : இதையடுத்து அவசர கூட்டத்துக்கு தமிழ்நாடு தெளஹீத் ஜமாத், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் அழைப்பு விடுத்தன. படத்தை வெளியிட விடாமல் தடுப்போம் என்றும் இவை சூளுரைத்தன.

கமிஷனர் அலுவலகம் விரைந்த சந்திரஹாசன் : இதையடுத்து கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு விரைந்தார். ஆனால் அங்கு கமிஷனர் ஜார்ஜ் இல்லை. இதையடுத்து சில உயர் அதிகாரிகளை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் கிளம்பிச் சென்றார்.

உள்துறை செயலாளரை சந்தித்த தவ்ஹீத் ஜமாஅத் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் தமிழக அரசின் உள்துறை செயலாளரை சந்தித்து இந்திய வரலாற்றில் இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தி இந்த அளவிற்கு எந்த படமும் வெளிவந்ததில்லை எனவும்,

இந்த படம் திரைக்கு வருமேயானால் நிச்சயம் நாட்டில் சட்டம் ஒழுங்கு ஏற்படும் என்றும், ஒட்டு மொத்த சமுதாயமும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இத்திரைப்படத்தை தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்,

கமிஷனர் அலுவலகம் விரைந்த முஸ்லிம் தலைவர்கள் : இந்த நிலையில் முஸ்லிம் அமைப்பு கூட்டமைப்பின் சார்பாக கமிஷனர் அலுவலகம் விரைந்து இப்படம் குறித்து தெளிவாக விளக்கம் அளித்து திரைப்படத்தை தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்,

கோவை கலெக்டரின் திடீர் அறிக்கை : இந்த நிலையில்தான் கோவை மாவட்ட கலெக்டர் கருணாகரன் தமிழக உள்துறைச் செயலாளர் ராஜகோபாலுக்கு ஒரு அறிக்கை அனுப்பி வைத்தார். அதில் கோவை மாவட்டம் பதட்டமான பகுதியாகும்.இங்கு தற்போது அமைதி நிலவுகிறது. ஆனால் விஸ்வரூபம் படம் வெளிவந்தால் பெரும் கலவரம் வெடிக்கும் சூழல் உருவாகும். எனவே அப்படத்தைத் திரையிட அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.

மாவட்ட எஸ்.பிக்களும் கவலை : அதேபோல பல்வேறு மாவட்ட எஸ்.பிக்களும் படத்தைத் திரையிட்டால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வரும் என்று உள்துறை செயலாளருக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர்.

2 வாரங்களுக்குத் தடை : இதையடுத்து நேற்று உள்துறைச் செயலாளர் ராஜகோபால் அதிரடியாக படத்தை 2 வாரங்களுக்குத் திரையிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் போராட்டங்கள், பிரச்சினைகள் வெடிப்பதைத் தவிர்க்கும் வகையில் 144 தடை உத்தரவை தேவைப்படும் இடங்களில் பிறப்பிக்கவும் அவர் மாவட்ட எஸ்.பிக்கள், கமிஷனர்களுக்கு உத்தரவிட்டார்.

கமல் அலுவலகத்தை முற்றுகையிட்ட முஸ்லீம்கள் : இந்த நிலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் அலுவலகத்தை இந்திய தேசிய லீக் கட்சியினர் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

@ நம் தேசத்தந்தை மகாத்மா அவர்களை கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியை கொன்றவன் யார்? அந்த ஆரிய கும்பலை சேர்ந்தவர்தான் இந்த கமல். தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ? இதை பற்றியெல்லாம் படமெடுக்க கேடுகெட்ட கமல், விஜய், மணிரத்னம், முருகதாஸ் போறவர்களுக்கு துணிவு இருக்கா ?.

Wednesday, January 23, 2013

நிர்வாண ஆசிரியர்கள்! ஆவேசத்தில் மக்கள்!!

வால்பாறை அடுத்துள்ள காடம்பாறையில் பணிபுரிந்து வந்த மின்வாரிய இன்ஜினியர் சுப்ரமணியம், சமீபத்தில், செக்ஸ் புகாருக்கு உள்ளாகி கைதானார். இவரிடம் இருந்து எண்ணற்ற பெண்களின் ஆபாசப் படக் காட்சிகள், "சிடி'க்களாக பறிமுதல் செய்யப்பட்டன. இவரே வீடியோ எடுத்திருந்ததும் அம்பலமானது.

இந்த அசிங்கமே இன்னும் மறையாத நிலையில், அடுத்ததாக, வால்பாறை தாசில்தார் குணாளன் மீது, அலுவலகத்தில் தற்காலிக எழுத்தராக பணிபுரிந்து வந்த காளீஸ்வரி என்ற பெண், செக்ஸ் புகார் அளித்து, பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவ்விரு சம்பவங்களின் பரபரப்பே அடங்காத நிலையில், மூன்றாவது சம்பவமாக, பள்ளி ஆசிரியர், ஆசிரியையின் ஆபாச காட்சிப் படங்கள் இணையதளத்தில் வெளியாகி, போராட்டத்தில் மக்கள் குதிக்கும் அளவுக்கு, பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கோவை மாவட்டம், வால்பாறையில், சோலையாறு எஸ்டேட் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது; 150 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர், வேறு ஒரு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியையுடன், நிர்வாணமாக இருப்பது போன்ற ஆபாசப் படங்கள், சமீபத்தில் இணையதளம் ஒன்றில் வெளியானது.

இது, இப்பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி, பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள், வால்பாறை - பொள்ளாச்சி மெயின் ரோட்டில், நேற்று காலை, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வால்பாறை இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது, ஆபாச ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக, அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து, பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் முனியசாமி மற்றும் பொதுமக்கள், ’’வால்பாறை, சோலையாறு எஸ்டேட் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் உதயன், 49, வேறு ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியையுடன், பள்ளி வகுப்பறையில் உல்லாசமாக இருப்பது போன்ற காட்சிகள், இணையதளத்தில் வெளியாகியுள்ளன.

இது போன்ற சம்பவங்களை பார்க்கும் போது, பள்ளியில் பயிலும் மாணவியருக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை காணப்படுகிறது. எனவே, ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்’’என்று கூறினர்.

பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தலைமை ஆசிரியர்கள் விவகாரம் குறித்து, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் காளிமுத்துவிடம் கேட்ட போது, இத்தகைய செயலில் ஈடுபட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருவர் மீதும், துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து, விரைவில், "சஸ்பெண்ட்' செய்யப்படுவர்,'' என்றார்.

Tuesday, January 22, 2013

நாம் மறந்த நீராகாத்தில் நிறைய இருக்கு!

நம் முன்னோர்கள் சொல்லி தந்த உணவு முறையை விட்டுவிட்டு பிஜா, பர்கர் என்று துரித உணவுக்கு மாறியதால் புது புது நோய்களுடன் வாழவேண்டியுள்ளது.

முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில:

1. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.

3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.

6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.

10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".

பழைய சாதத்தை எப்படி செய்வது: பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான். ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.)

மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!

Monday, January 21, 2013

கடல் கரையை கடக்குமா?

ராவணன் படத்திற்கு பிறகு மணிரத்னம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இயக்கியுள்ள படம் கடல்.

இப்படத்தில் கார்த்திக் மகன் கவுதம் ஹீரோவாகவும், ராதாவின் 2வது மகள் துளசி ஹீரோயினாகவும் அறிமுகமாகின்றனர். இவர்களுடன் அர்ஜூன், அரவிந்தசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கடற்கரையோர மக்களின் வாழ்க்கை பதி‌வுடன் ஒரு அழகிய காதலுமே கடல் படத்தின் கதை. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.

இந்நிலையில் கடல் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், கடல் படத்திற்கு யு சான்று அளித்துள்ளனர். படத்திற்கு யு சான்று கிடைத்த மகிழ்ச்சியோடு ரிலீஸ்க்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. பிப்ரவரி முதல்வாரத்தில் கடல் திரைக்கு வர இருக்கிறது. (அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ராவணன் எந்த பலனும் தரவில்லை. கடலாவது மணிக்கு கை கொடுக்குமா? படம் வெளிவந்ததும் தெரிந்துவிடும்.)

Sunday, January 20, 2013

நீங்களும் தெரிஞ்சுகொங்கோ!!

உலகிலேயே தெரிஞ்சுக்கவேண்டியது நிறைய உள்ளது அதில் சிலவற்றை நாம் இங்கு பார்ப்போம். நீங்களும் தெரிச்சுகொங்கோ!!

உல‌‌கிலேயே ‌‌மிக‌ப்பெ‌‌ரிய ‌விஷய‌ங்க‌ள் எ‌ன்று ‌சில இரு‌க்‌கி‌ன்றன. அவ‌ற்‌றி‌ன் ப‌ட்டியலை‌ப் பா‌ர்‌ப்போ‌ம்.

உலகிலேயே மிகப்பெரிய நீர்வீழ்ச்சி நயாகரா.

உலகிலேயே மிகப்பெரிய மலை இந்தியாவின் வடக்கில் உள்ள இமயமலை

உலகிலேயே மிகப்பெரிய நதி எகிப்தில் ஓடும் நைல் நதி.

உலகிலேயே மிகப்பெரிய வைரச் சுரங்கம் தென்னாப்ரிக்காவின் கிம்பர்லீ வைரச் சுரங்கம்.

உலகிலேயே மிகப்பெரிய வளைகுடா மெக்சிகோ வளைகுடாதான்.

உலகிலேயே மிகப்பெரிய கடல் பசுபிக் கடல்

உலகிலேயே மிகப்பெரிய கண்டம் ஆசியக் கண்டம்.

உலகிலேயே அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் ஆப்ரிக்கா.

உலகிலேயே மிகப்பெரிய ஓட்டல் அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரின் ஹில்டன் ஓட்டல்.

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் தென் அரேபியாவின் ரியாத் பன்னாட்டு விமான நிலையமாகும்.

உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு அரங்கம், செக்கோஸ்லோவேக்கியா நாட்டில் உள்ள ஸ்ட்ராஹோவ் ஸ்டேடியம்.

உலகிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடு ரஷ்யா.

உலகிலேயே மிக உயரமான ஏரி திபெத்தில் உள்ள நாம்ஸோ எனும் ஏரி.

இ‌‌ன்னு‌ம் இதுபோ‌ல் ஏராளமானவை உ‌ள்ளன.

Saturday, January 19, 2013

சிலைக்கு சீல் வைத்த உச்ச நீதிமன்றம்!!

புதுடெல்லி: சாலை மற்றும் பொது இடங்களில் சிலைகளை நிறுவுதல் மற்றும் இதர கட்டுமானங்களை மேற்கொள்ள மாநில அரசுகள் அனுமதி அளிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றங்கரையில் தேசிய நெடுஞ்சாலையில், மறைந்த காங்கிரஸ் தலைவர் என்.சுந்தரத்தின் சிலையை நிறுவ கேரள அரசு அனுமதியளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்
தொடரப்பட்டது.

இது தொடர்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம். லோதா, எஸ்.ஜே. முகோபாத்யாய ஆகியோரடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை வழங்கிய தீர்ப்பு:

பொது இடங்கள், சாலைகள், பொது மக்கள் பயன்பாட்டுக்கான இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் சிலை மற்றும் இதர கட்டுமானங்களை மேற்கொள்ள கேரள அரசு அனுமதி வழங்கக் கூடாது. போக்குவரத்து வசதிக்காக தெருவிளக்கு போன்றவற்றை நிறுவுவதற்கு எவ்வித தடையுமில்லை.

இந்த உத்தரவானது, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, சிலையை நிறுவ அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்றும், பணிகளை நிறுத்திவைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கேரள அரசுக்கு உத்தரவிட்டனர்.

அவர்கள் மேலும் கூறியதாவது: பொது மக்களின் நலனே முக்கியம். ஒவ்வொரு குடிமகனும் சாலையில் எளிதாக நடக்க உரிமை உண்டு. சாலைகள் மற்றும் பொதுஇடங்களில் சிலைகளை நிறுவுதல், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை அமைப்பதன் மூலம் அந்த உரிமை பறிக்கப்பட்டு விடக்கூடாது. சட்டம்- ஒழுங்கு பிரச்னை வராமல், சாலைகளில் இடையூறாக உள்ள வழிபாட்டுத் தலங்கள் அகற்றப்பட வேண்டும்.

குறிப்பிட்ட ஒருவருக்கு புகழ் சேர்க்க மக்களின் பணத்தை ஏன் பயன்படுத்த வேண்டும்? அந்த நிதியை ஏழைகளின் மேம்பாட்டுக்காகச் செலவிடலாமே என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Friday, January 18, 2013

பாலுணர்வு பக்தியும் குத்தாட்ட கூத்தாடிகளும்!!

மகாத்மா காந்தி அவர்களுக்கு பகுத்தறிவு சிந்தனை சிறுவயது முதலே வந்து விட்டது. அவர் சொன்னதை இங்கு தந்துள்ளோம்.

கோயில்கள் விபச்சார விடுதிகள் -காந்தியார் சொன்னது சரியா?

பார், பார், ஜப்பான் பார், ஜெர்மன் பார்! என்று சாலையோரத்தில் பயாஸ்கோப் வைத்துப் படம் காட்டுவார்கள். அதற்குக் கட்டணமும் வசூலித்து விடுவார்கள் அது ஒரு காலம்.

இப்பொழுது சிறுவர்களும் பார்ப்பது சின்னத்திரைகள்தான்_ சினிமாக்கள்தான். வாலிப வயதில் தெரிந்துகொள்ள வேண்டியவைகளை தப்பும் தவறுமாக தொடக்கப்பள்ளிகளிலேயே தெரிந்துகொண்டு சீர்கேடு என்னும் சாக்கடையில் வீழ்கிறார்கள்.

காதல் என்று அறியப்பட்டதெல்லாம் காமம் என்னும் புரையேறிய சமாச்சாரமாகிவிட்டது. விளம்பரங்கள் எல்லாம் இந்த விகாரப் புற்றுநோய்களாகிவிட்டன.

வார ஏடுகள், இதழ்களுக்கிடையே நிர்வாணமாக, பெண்களைப் போட்டுத் தள்ளுவதிலேதானே போட்டா போட்டி!

இன்றைய சமூக சூழலில் பாலியல் உணர்வுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் செய்யப்படும் பிரச்சாரம் நாகரிக சமூகச் சீர்மையையே குப்புறத்தள்ளி உதைத்தே கொன்றுவிடும் போல் தோன்றுகிறது.

குஜராத்தில் சவுமிய நாராயண் கோயில் கருவறை அக்கோயில் புரோகிதர்களுக்கு கிருஷ்ண லீலை நடத்தும் படுக்கையறையான செய்தி படங்களுடன் வெளியானதுண்டு.

அய்யப்பன் கோயில் தாந்திரிகளுக்கு (அர்ச்சகமாருகளுக்கு) அவர்களின் ஓய்வறைகள் பாராக மாறிவிட்டன.

திருவனந்தபுரம் விபச்சார விடுதிகள்தான் அவர்களின் பொழுது போக்கு!

இப்பொழுது என்னவென்றால், பஞ்சாபில் லுதியானா நகரில் உள்ள ஜார்சாகேப் குருத்வாரா கோயில் பூசாரிக்கு ஃப்ளூ பிலிம் பார்க்கும் கிளப்பாக மாறிவிட்டது கம்பி எண்ணுகிறார் இப்போது.

சின்னஞ்சிறு பெண்களைப் பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்திய ஆயிரக்கணக்கான பாதிரியார்களுக்கு ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் பாவ மன்னிப்பு வழங்கிவிட்டார் வாடிகன் போப்.

ஆனால், நாட்டில் என்ன சொல்லுகிறார்கள்? பக்தி குறைந்ததால்தான் நாட்டில் ஒழுக்கம் குறைந்துவிட்டது என்று மூக்கால் அழுகிறார்கள்.

கோயிலுக்குப் போவது மனதை ஒருமுகப்படுத்த என்று கொஞ்சம்கூட மனச்சான்று இல்லாமல் பொய் பேசுகிறார்கள் பெரிய மனுஷர்கள்.

நம் நாட்டுக் கோயில்களைப்பற்றி தெரியாதா? கொக்கோகம் என்று சொல்கிறார்களே, அவையெல்லாம் பிச்சை வாங்கவேண்டும் இந்துக் கோயில்களில்.

கோயில்கள் விபச்சார விடுதிகள் என்று விளையாட்டாகவா சொன்னார் ஆன்மிகவாதியான காந்தியார்?

கோபுரங்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் எல்லாம் பட்டப் பகலில் காட்டப்படும் படுக்கையறைக் காட்சிகள்தானே? தேர்களில் என்ன வாழ்கிறது?

உண்மையை அறவே பேசக்கூடாது, ஒழுக்கமே பரவிடக் கூடாது என்று சத்தியம் செய்துகொண்டு செயல்படும் ஒரு கூட்டம் ஆன்மிகப் போர்வையில் விளையாடிக் கொண்டிருக்கிறது.

பாலுணர்வு தூண்டல் மூலம்தான் பக்தியைப் பரப்ப முடியும் என்பது அவாளின் அசைக்க முடியாத திட்டம் குத்தாட்டம் காட்டிதான் சினிமாவை ஓட்ட முடியும் என்று திரைப்பட உலகினரும், பத்திரிகையாளர்களும் தொழில் நடத்தவில்லையா? எல்லாம் ஒரே குட்டையின் மட்டைகள்தான்!

Thursday, January 17, 2013

சிக்குவார்களா இந்த சண்டாலன்கள்!?

புதுடெல்லி.Jan 17: நாட்டில் பல பாகங்களிலும் குண்டு வெடிப்புக்கள் மூலம் மக்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் இந்(து)த இயக்கம் இம்முறையாவது சிக்குமா இதுதான் அனைவருடைய கேள்வியும்.?

காஸியாபாத்திற்கு அருகில் உள்ள தஸ்னாவில் உள்ள முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலமான மஸ்ஜிதில் திங்கள் கிழமை இரவு 10:20க்கு குண்டுவெடித்தது. குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குண்டு வெடிப்பிற்கான காரணம் தெரியவரவில்லை.

எனினும், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் சதித்திட்டங்கள் வெளியாகி தீவிரவாதிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல தீவிரவாதிகள் தலைமறைவாக உள்ளனர்.

இந்நிலையில் காஸியாபாத் அருகே உள்ள மஸ்ஜிதில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் கரங்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குண்டு வெடிப்பில் அருகில் உள்ள வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட இரசாயனப்பொருட்கள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக துணை போலீஸ் சூப்பிரண்ட் ரண்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

Wednesday, January 16, 2013

ஆறு ஆறு ஆரை நம்பியிருக்கும் ஷ்யாம்!

என்னதான் வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும் நான் இன்னும் முன்னணி ஹீரோவாக ஆகவில்லை., அதற்காக ஆறு ஆறு ஆரை கையில் எடுத்துள்ளார்.

அப்படி ஆவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தபோது என்னையே வருத்திக் கொண்டு ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்போதுதான் நண்பர் வி.இசட்.துரை இந்தப் படத்தின் கதையை சொன்னார். சாதரணமாக சந்தோஷமாக வாழும் ஒருவன் வாழ்க்கையில் திடீரென ஒரு புயல் அடித்து அவனை இந்தியா முழுவதும் அலைய வைக்கிறது. அது என்ன என்பதுதான் கதை.

இந்தப் படத்துக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பது கஷ்டம் காரணம் ஷாமை நம்பி பத்து கோடி யாரும் செலவு செய்ய மாட்டார்கள். இதனை என் அண்ணனிடம் சொன்னேன். மறுநாளே 5 கோடியை கையில் கொடுத்து படத்தை ஆரம்பி நான் பார்த்துக்கிறேன் என்று சொன்னார். அப்படித்தான் நான் தயாரிப்பாளர் ஆனேன். என் அண்ணன் பணம் திருப்பி வரவேண்டும், ஒரு ஹீரோவாக நான் ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியோடு இதில் என் உழைப்பு முழுவதை கொடுத்திருக்கிறேன்.

அதனால் இந்த 6 என் வாழ்க்கையை தீர்மானிக்கப்போகும் படம். 6 என்று பெயர் வைத்திருப்பதற்கு காரணம். கதை 6 வருடம், 6 மாதம் 6 வாரம், 6 மணி நேரத்தில் நடக்கிறது. 6 மாநிலங்களுக்கு கதை செல்கிறது.

Tuesday, January 15, 2013

தமிழன் என்று சொல்லடா தனித்து சாவுடா!?

தமிழன் என்று சொல்லடா.... தண்ணியடித்து சாவுடா..., தென்னிந்தியாவிலேயே தமிழகம் முதலிடம். தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு சென்ற புகழும் பெருமையும் இந்த ஆரிய ஆட்டக்கரியை சாரும்.

தென்னிந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை முந்தி மது விற்பனையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் மதுப்பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் வழி தெரிய வந்துள்ளது.

கடந்த 2011 ஏப்ரல் முதல் 2012 மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டு காலத்தில் தமிழகத்தில் 23 ஆயிரத்து 505 கோடியே 50 லட்சம் ரூபாய் அளவுக்கு மதுபானங்கள் விற்றுத் தீர்ந்தன. இதில் அரசுக்கு 18,081 கோடியே 16 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது.

Monday, January 14, 2013

இவ்ளோ விஷயங்களா இவ்வாழையில்!!

வாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ குணமுள்ளவை வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விசையம் தான் அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து விடுகின்றனர்.

நம் உடலுக்கு நன்மையளிக்கும் பொருட்களில் வாழைப்பூவும் ஒன்றாகும். பெண்களின் கர்ப்பப்பைக்கு நல்ல பலமளிக்க இது உகந்தது. பூவினை ஆய்ந்து கள்ளனை எடுப்பது சற்று வேலை அதிகம் வாங்கும் சமாச்சாரம் என்றாலும் மாதத்தில் இரண்டு-மூன்று நாள்களாவது உணவில் இதை சேர்த்துக் கொண்டால் நல்லது

அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு ‘பி’ விற்றமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதே நிதர்சன உண்மை.

வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதையும் தெரிந்து கொள்வோம். வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்சு வீதம் தினமும் குடித்து வந்தால், வறட்டு இருமல் நீங்கும்

சர்க்கரை நோயாளிகளுக்கு: சர்க்கரை நோயை சித்த மருத்துவத்தில் மதுமேக நோய் என்பார்கள்., குறிப்பாக தென்னிந்தியாவிலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழ்பவர்களில் 60 சதவீதத்திற்கு மேல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்னர். சர்க்கரை நோய்க்கு மூலகாரணம் நம் உணவு முறையே.

தற்போது நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதில்லை. இரசாயனம் கலந்த உணவையே சாப்பிட நேரிடுகிறது. மேலும், போதிய உடற்பயிற்சியின்மை, சில நேரங்களில் அதிக வேலைப்பளு, சரியான நேரத்திற்கு உணவருந்தாமை போன்றவையால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழந்து சர்க்கரை நோயை உண்டாக்குகின்றன. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

இரத்த மூலம்: மலம் வெளியேறும்போது இரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை இரத்த மூலம் என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும்.

உடல் சூடு: உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.

வயிற்றுக் கடுப்பு நீங்க: சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

பெண்களுக்கு: பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.

வெள்ளைப்படுதல்: வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை இரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

கைகால் எரிச்சல் நீங்க: கை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும்.

இருமல் நீங்க: வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ இரசம் செய்து அருந்திவந்தால் இருமல் நீங்கும்.

தாது விருத்திக்கு: வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து உண்டுவந்தால் தாது விருத்தியடையும்.

மலட்டுத்தன்மை நீங்க: சிலர் குழந்தையின்மையால் பல மன வேதனைக்கு ஆளாவர். இவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.

Sunday, January 13, 2013

காம வெறியில் அலையும் இந்திய சிப்பாய்?

நாட்டு குடி மக்களுக்கு பாதுகாப்புக்குத்தான் ராணுவம், ஆனால் இங்கு இந்திய ராணுவ (அ)யோக்கியர்கள் என்ன செய்கிறார்கள் கொஞ்சம் நீங்கள்தான் பாருங்களேன். (இந்திய இராணுவ சிப்பாயின் காம வெறி).

இது அசாமில் அண்மையில் நடந்த உண்மைச் சம்பவம். தன்னை பலாத்காரமாக பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்த முனைந்த இந்திய இராணுவ வெறியனை மக்கள் பார்வைக்கு முன்பாகவே கையில் கிடைத்த கற்களைக் கொண்டு தாக்கி விரட்டும் ஒரு அஸ்சாமிய பெண்.
(வலது புறம் கீழே உள்ள விடியோவை கிளிக் செய்து பாருங்கள்).

அசாமை ஆக்கிரமித்துள்ள இந்திய அரசால் ஏவிவிடப்பட்டுள்ள இராணுவம் இவ்வாறான பல அப்பாவி மக்கள் மீதான சட்டவிரோத செயல்களை புரிவது இயல்பான ஒன்றே. இராணுவ அடக்கு முறைக்கு எதிராக மக்கள் உணர்வு பூர்வமானபோராட்டத்தை அங்னே முன்னெடுத்து வருகிறார்கள்.

காஸ்மீரில் இந்திய இராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட பெண்கள் ஏராளம் ஏராளம். அங்கே பெண் ஒருவர் இவ்வாறு கல்லெறிந்தால் லக்ஸர் ஈ தொய்பா அங்கத்தவர் என பயங்கரவாத முத்திரை குத்த தயங்காது இந்திய அரசு.

காஷ்மீரில் தந்தயின் கண்முன்னே ,கணவன் கண்முன்னே மனைவி சகோதரன் கண்முன்னே சகோதரி என்று கற்பழிப்பு நடந்து இருக்கிறது இதை எல்லாம் கோப பட்டு தட்டி கேட்டால் அடுத்தநாள் செய்தில் வருவார்கள் இவர்கள் எப்படி தெரியுமா ? கஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டு கொள்ள பட்டனர் என்று மீடியாக்கள் பாராட்டுடன். காம கொடூரர்களின் ஆசைக்கு இணைக்கவில்லை என்றால் அவர்கள் கையில் இருக்கவே இருக்கு முஸ்லிம் தீவிரவாதி என்ற ஆயுதம் அதை பயன்படுத்தி அவர்களை கொலை செய்துவிடுவது இப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். இவர்களின் அநியாயங்களுக்கு பெரும்பாலான மீடியாக்கள் துணை போகிறது அவன் அவன் கஷ்டத்தை அவன் அவன் உணரும் வரை தெரியாது வேதனையும் வலியும்.

நமது கேள்வி: டெல்லி மாணவியை பாலியல் பலாத்கார ஆளாக்கப்பட்டதை ஊடகங்கள் ஊதி பெரிதாக்கின, பற்றாக்குறைக்கு நாமளும் அவனை அப்படி செய்ய வேண்டும் இப்படி செய்யவேண்டுமேன்றோம். தினம் நடக்கும் அசாமிலும், காஷ்மீரிலும் இன்னும் பிற மாநிலத்திலும் ராணுவ உடையில் இருந்துகொண்டு அயோக்கிய தனங்கள் செய்யும் இந்திய இராணுவத்திற்கு என்ன தண்டனை கொடுப்பது.?

Saturday, January 12, 2013

ஹன்சிகாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய.,?

திரைப்படத்தில் நடித்ததை தவிர வேறு எந்த பொது காரியங்கள் செய்யாமலேயே இவருடைய பெயர் பரிந்துறைக்கபட்டதால் ரொம்ப குசியாக உள்ளார் ஹன்சிகா.

இந்தியாவின் நூறு பிரபலங்களின் பட்டியல் ஒன்றை ஃபோப்ஸ் பத்திரிகை வெளியிட இருக்கிறது. இந்த பட்டியலில் நடிகை ஹன்சிகா மோத்வானி பெயரும் பரிசீலனையில் உள்ளது.

இந்நிலையில் பிரபல ஆங்கில பத்திரிக்கையான போர்ப்ஸ், இந்தியாவில் உள்ள 100 பிரபலங்களின் பட்டியலில், இளம் வயது பிரபலங்கள் பட்டியலில் ஹன்சிகாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதனால் அளவு கடந்த சந்தோஷத்தில் இருக்கிறார் ஹன்சிகா.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, இந்த அங்கீகாரத்திற்கு நன்றி. எந்த பொது காரியங்கள் செய்யாமலேயே என்னுடைய பெயர் பரிந்துறைக்கபட்டதால் ரொம்ப சந்தோசமும், ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது என்றார் ஹன்சிகா.

Friday, January 11, 2013

பாலியலுக்கு பட்டு குஞ்சம் வேண்டுமாம்!?

புதுடெல்லி: திருட்டும், வழிப்பறியும் அதிகரிக்கிறது ஆகையால் திருட்டை ஒரு தொழிலாக அங்கீகரியுங்கள்! கொலை அதிகமாக நிகழுகிறது ஆகையால கொலைச் செய்ய அனுமதியுங்கள்! என்று கோரிக்கை விடுப்பது எவ்வளவு தூரம் அறிவீனமோ அதைப் போன்றதே பாலியல் வன்கொடுமைகளை தடுக்க பாலியல் தொழிலை அங்கீகரிப்பது என்பதை அறிவுடையோர் புரிந்துகொள்வர். ஆனால், தன்னார்வ தொண்டு என்ற பெயரில் இயங்கும் பாரதிய பதிதா உத்தார் சபாவுக்கு இதுவெல்லாம் புரியவா போகிறது.

பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் மேம்பாட்டுக்காக சேவை செய்து வருவதாக கூறும் பாரதிய பதிதா உத்தார் சபா வர்மா மத்திய குழுவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பலாத்காரத்தால் டெல்லி மாணவி உயிரிழந்தது வருந்தத்தக்கது. பாலியல் தொழிலை சட்டப் பூர்வமாக அங்கீகரிக்காதது பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெறுவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இந்தத் தருணத்தில் இந்தத் தொழிலை அங்கீகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். ஏற்கெனவே 164 நாடுகளில் பாலியல் தொழில் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்ததையடுத்து, பலாத்கார சட்டத்தை கடுமையாக்குவது குறித்து ஆலோசனை வழங்க, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வர்மா தலைமையில் 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆலோசனைகளை யார் வேண்டுமானாலும் அக்குழுவுக்கு அனுப்பலாம் என அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Thursday, January 10, 2013

ஆடு மாடுகளுடன் வந்த அசிங்கங்கள்?

ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு அடுத்த வேலைக்கு உணவோ, உடையோ, தங்க இடமோ இல்லாமல் இந்தியாவுக்குள் வந்த ஒரு கூட்டம் யார் என்று சொல்லத்தேவையில்லை.? அவர்கள் செய்யும் அயோக்கியத்தனங்களை இங்கே தந்துள்ளோம்.

கடந்த வாரத்திற்கு முன்பு மலத்தில் வந்த செய்தியை மீள்பதிவு செய்து தந்துள்ளார் தோழர். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

காவிவெறி பிடித்த பத்திரிக்கையான மாலைமலர் ஜெர்மனியில் உள்ள ஒரு இந்தியர் ரோட்டில் நடந்து செல்லும்போது திடீரென இரண்டு தீவிரவாதிகள் இஸ்லாத்திற்கு மாறுமாறு மிரட்டினார்களாம். அந்த இந்தியர் இஸ்லாத்திற்கு வரமருத்துவிட்டாராம், ஆகையால் அவருடைய நாக்கை தீவிரவாதிகள் அறுத்து விட்டார்கள் என பொய்யான செய்தியை வெளியிட்டு முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக்கருத்தை விதைத்துள்ளது மாலைமலர்.

மாலைமலர் எடுத்த அதே வாந்தியை ஒன் இந்தியா தளமும், விகடன் செய்திகள் தளமும் அதே செய்தியை வெளியிட்டு தானும் ஒரு காவிக்கூட்டம் என்பதை தெளிவாகவே நிரூபித்து இருந்தது.

இந்த செய்தியை முகநூலிலுள்ள சுவாமி வித்தியானந்தா என்பவர் வெளியிட்டு ஒன்றும் அறியாத மக்களுக்கு மேலும் விஷக்கருத்தை பாய்ச்சுகிறார்.

ஒரு பொய்யான செய்தியை தொடர்ந்து வெளியிடும் காவிக்கூட்டங்களே....?

1) இந்தியரின் நாக்கு துண்டிக்கப்பட்டது என்று கூறுகிறீர்களே, அந்த இந்தியரின் பெயர் என்ன? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

2) ஜெர்மனியில் ஒரு இந்தியருக்கு பாதிப்பு என்றால் இந்திய அரசு இதுவரை ஜெர்மனி அரசுக்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்?

3) பாதிக்கப்பட்ட இந்தியர் தற்போது என்ன நிலையில் இருக்கிறார், அவரை எந்த மருத்துவமனையில் வைத்து மருத்துவம் செய்யப்படுகிறது.

4) இந்தியரின் நாக்கை ஜெர்மனியில் உள்ள முஸ்லிம் தீவிரவாதிகள் துண்டித்தார்கள் என பொய்யை விதைக்கிறாயே. அந்த முஸ்லிம் இயக்கத்தின் பெயர் என்ன? அந்த இயக்கத்தினரை ஜெர்மனி காவல்துறை கைது செய்ததா?

5) மேலும் ஜெர்மனியில் நடைபெற்ற அந்த சம்பவம் BBC, Gulf News, Yahoo News உள்ளிட்ட உலகளாவிய ஊடகங்களில் வெளிவராத செய்தி எப்படி மாலைமலர், ஒன் இந்தியா, ஆனந்த விகடன் உள்ளிட்ட பார்ப்பன வந்தேறி ஊடகங்களில் வந்தது எப்படி? உங்களுக்கு செய்தி சொன்ன செய்தியாளர் யார்? இப்படி எந்த கேள்வியை கேட்டாலும் உங்களால் பதில் சொல்லமுடியாது, ஏனென்றால் உன்னிடம் உண்மை இல்லை என்பது முஸ்லிம்களுக்கு எப்பொழுதோ தெரியும் ஆனால் உங்களையும் நல்லவர்களாக நினைத்து கொண்டிருக்கும் எங்களுடன் ஒரு தாய் வயிற்று மக்களாக வாழ்ந்து வரும் எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளுக்கு உண்மை நிலையை புரியவைக்கவே.

ஜெர்மனியில் இஸ்லாத்திற்கு வராவிட்டால் நாக்கை அறுப்பதாக இருந்தால் ஜெர்மனியில் யாராவது இஸ்லாத்திற்கு வருவார்களா? ஆனால் அங்கு உள்ள நிலை என்ன? கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

இஸ்லாத்தில் எந்தவித நிர்பந்தமும் இல்லை என்பதை உலக மக்கள் நன்கு அறிந்துள்ள நிலையிலும் இப்படிபட்ட உன் நச்சுக்கருத்தை விதைத்தால் மக்களுக்கு எடுபடும் என நினைக்கிறாயோ?

இதிலிருந்தே மாலைமலர், ஒன் இந்தியா, விகடன் செய்திகள்(ஆரியர்கள் மட்டுமல்ல அயோக்கியர்கள் என்பதை தினம் நிரூபிக்கிறார்கள்) உள்ளிட்ட குள்ளநரி கூட்டங்கள் உண்மைக்கு மாறான நச்சுக்கருத்தை மக்கள் மனதில் விதைத்துள்ளன என்பது திட்டவட்டமாக புரிகிறது.

அப்படி நீங்கள் சொல்வது போல் உண்மையாக இருந்தால்ஸ அதாவது ஒரு இந்தியர் இஸ்லாத்திற்கு மாறுமாறு வற்புருத்தப்பட்டு அவர் மாற மறுத்த காரணத்தினால் தீவிரவாத இயக்கத்தினர் அவருடைய நாக்கை துண்டித்து இருப்பார்களேயானால்.

அந்த கேவலத்தை நீ மக்களுக்கு கொண்டு சென்றதை விட நாங்கள் கொண்டு செல்கிறோம், நாங்களும் இந்தியர்கள் தான், எங்கள் சக இந்தியனுக்கு ஒரு பாதிப்பு என்றால் நாங்கள் பார்த்து கொண்டு சும்மா இருக்க வேண்டிய அவசியமே இல்லை.(பார்ப்பன வந்தேறி கூட்டம் அப்ப அப்ப வாந்தியெடுக்கும் இதை அறியாதவருக்கு தெரிவிக்கவே மீள்பதிவு.)

குறிப்பு: போதையால் ஊட்டப்படும் வெறி, வெட்கப்படக்கூடிய அறிவை மழுங்கடிக்கும். சுயநலக் கோழைகள் மிகுந்த சமுதாயமும், அதைச் சுலபமாய் ஆட்டி வைக்கும் மோசடித் தலைமையும் “தொற்று நோய்’ போல நாடு முழுவதும் பரவும். அந்த ஆதாரக் கிருமியை அழித்தால்தான் வருங்காலத்திற்குப் பாதுகாப்பு –இது அவசியமானது மட்டுமல்ல, அவசரமாகவும் செய்ய வேண்டிய காரியம்.

Wednesday, January 9, 2013

ஈனச்செயலில் ஈடுபடும் ஏழு பெரும் நரகம்!

புதுடெல்லி: இந்தியாவின் ஏழு பெரும் நகரங்களில் பாலியல் வல்லுறவில் டெல்லி முதலிடத்தை பிடித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்: கடந்த, 2011ம் ஆண்டில், டில்லியில், 453, குஜராத் 343, மும்பையில், 221, பெங்களூர், 97, சென்னை, 76, ஐதராபாத், 59, கோல்கட்டாவில், 46 கற்பழிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதேநேரத்தில், 2009ல் 404ம், 2010ல் 414 கற்பழிப்பு குற்றங்கள், டில்லியில் நிகழ்ந்துள்ளன. சென்னையில், 2009ல், 39 மற்றும் 2010ல் 47 கற்பழிப்புகள் நிகழ்ந்ததாக வழக்குகள் பதிவாகியுள்ளன.பெண்கள் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவங்களிலும், டில்லியே முதலிடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டில், இதுதொடர்பாக, 556 வழக்குகள் பதிவாகியுள்ளன.அதற்கு முந்தைய ஆண்டுகளான, 2010ல், 550 மற்றும், 2009ல், 491 வழக்குகள் பதிவாகியுள்ளன. பெண்கள் மானபங்கம் தொடர்பாக, சென்னையில், கடந்த ஆண்டில், 73 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

Tuesday, January 8, 2013

இந்த நடிகைக்கு இப்படி ஒரு ஆசை!

இந்த வயதிலும் நாட்டியத்தில் அளவு கடந்த ஆசையில் மேடையில் ஆடிக்கொண்டு இருக்கிறார் நிர்மலா.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சிக்காக சிதம்பரம் வந்திருந்த நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பரத நாட்டியம் ஆடுவதால் உடல்வலிமை, உற்சாகமும் இருக்கும். இதை மறந்தவிட்டு, நம்மிடையே மேற்கத்திய நடன கலாச்சாரம் அதிகமாகியுள்ளது.

இக்காலக்கட்டத்திலும், பரத நாட்டியத்தை முறைப்படியாக கற்றுக்கொள்ள இளம் தலைமுறைகள் சிலர் வருகின்றனர். நான் சென்னை, திருவள்ளூர் ஆகிய இடங்களில் நிர்மலாஸ் அகாடமி பைன் ஆர்ட்ஸ் என்ற பெயரில் பரத நாட்டிய பள்ளி அமைத்து மாணவ, மாணவிகளுக்கு நாட்டிய பயிற்சி அளித்து வருகின்றேன். பரத நாட்டியத்தை முறைப்படி இலக்கணத்துடன் கற்று கொள்வது அவசியமாகும், என்றார்.

இன்றைய சினிமா குறித்த கேள்விக்கு பதில் அளித்த நிர்மலா, அந்த காலத்தில் நல்ல கதைகள் வைத்து நடிகை, நடிகர்களை களம் இறக்கி படமாக்கப்படும். ஆனால், தற்போது இளம் இயக்குநர்கள் பல நல்ல கதைகளை உருவாக்கி, அதற்கு ஏற்ப புதுநடிகை, நடிகர்களாக இருந்தாலும் தேர்வு செய்து படமாக்கியுள்ளனர். இது ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உதாரணமாக ஆட்டோகிராப், மைனா, வாகைசூடவா உள்ளிட்ட பல திரைப்படங்களை சொல்லலாம். எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் பிடிக்கும். அந்தவகையில் நடிகர் தனுஷ் பல்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வருகிறார். இதனால் அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன், என்று கூறினார்.

@ நல்ல வேலையாய்போனது தனுசுக்கு ஜோடியாய் நடிக்க ஆசை என்று சொல்லாமல் விட்டாரே? அவர பிறந்த தேதி கொஞ்சம்தான். 19.Aug.1936.

Monday, January 7, 2013

உலகம் அறிய வேண்டும்! "ஜோதி"ன் தந்தை!?

டெல்லி: இந்தியாவின் நடக்கும் அயோக்கியத்தனங்ககளை உலகம் அறிய வேண்டும் என டெல்லி பாலியல் வன்முறையில் மரணமடைந்த மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேட்டியளித்த மாணவியின் தந்தையான பத்ரி; “இந்த உலகத்திற்கு என் மகளின் உண்மையான பெயர் தெரிய வேண்டும். என் மகள் தவறு எதுவும் செய்யவில்லை, அவள் துணிவுடன் தன்னை தற்காத்துக்கொள்ள கடுமையாக போராடி உயிரிழந்துள்ளாள். நான் அவளை பற்றி பெருமைப்படுகிறேன். எனது மகளின் பெயரை வெளிப்படுத்தும் போது இதுபோன்ற தாக்குதல்ளை எதிர்கொள்ளும் மற்ற பெண்களும் அவளைப் போன்று வலிமையை கடைப்பிடிப்பார்கள். ” என்று கூறி தனது மகளின் பெயர் ஜோதி சிங் பாண்டே என தெரிவித்தார்.

பஞ்சாப், ஒரிஸா, அஸ்ஸாம், குஜராத் உள்ளிட்ட இந்தியாவில் நடக்கும் பல கலவரங்களில் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமை, குஜராத்தில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளால் நடேந்தேரியது எத்தனை எத்தனை!. மோடி போன்ற அயோக்கியர்களுக்கு என்ன தண்டனை.?அண்டை நாடான இலங்கையில் நடந்த இனக்கொடுமைகளை பார்த்துக்கொண்டுதானே இருந்தது கயவாளி காங்கிரஸ். கண்டுகொள்ளாத வந்தேறி ஊடகங்கள், அரசு எந்திரம் இது அனைத்துக்கும் பங்குண்டு., அப்போது வாய் திறந்திருந்தால் இப்போது இக்கொரச்சம்பவம் நடந்திருக்குமா?

Sunday, January 6, 2013

குண்டு வெடிப்பில் கைதானவர் கிரிக்கெட்டில்!

மும்பை: பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்த பிறகு விடுவிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் வீரர் பர்வேஸ் ரசூல், இந்தியா “A” கிரிக்கெட் அனிக்கு தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். காஷ்மீரை சேர்ந்த வீரர் ஒருவர், இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறுவதும் இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக, சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியில் கலந்து கொண்டது. கடந்த 2009 அக்டோபர் 17 அன்று, இந்த அணியினர் தங்கியிருந்த அறையில் புகுந்த கர்நாடகா காவல்துறை, ஜம்மு காஷ்மீர் அணியினரின் பைகளைச் சோதனை செய்தது. இதில், இருவரின் பைகளிலிருந்து சந்தேகத்திற்கு இடமான சப்தம் வந்தது எனக் கூறி, அவர்களைக் கைது செய்தது. இதற்கு பல தரப்புகளிலிருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், தவறான தகவல்களின் அடிப்படையில் அவர்களைக் கைது செய்து விட்டதாக கூறி கர்நாடகா காவல்துறை இருவரையும் விடுவித்தது.

காஷ்மீர் இந்தியாவைச் சேர்ந்தது என்று நாம் தொடர்ந்து கூக்குரலிட்டு வருகிறோம் .ஆனால் காஷ்மீரிகளை இந்தியர்களாக, குறிப்பாக காஷ்மீர் முஸ்லிம்களை இந்தியர்களாக நாம் மதிக்கவில்லை என்பதையே இது போன்ற நடவடிக்கைகள் காட்டுகின்றன. மாநிலத்தின் அணியில் பங்குகொண்ட ஒரு வீரருக்கே இந்தியாவில் இது போன்ற கொடுமைகள் இழைக்கப்படுகிறது என்றால் காஷ்மீரில் வாழும் சாதாரண முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை கற்பனை கூட செய்ய முடியவில்லை.

Saturday, January 5, 2013

பா(ர்)ட்டி வைத்தியம் செய்பரா பார்த்துகுங்க!

லண்டன்: பாட்டி வைத்தியம்' என்ற பெயரில், பருக்கள் மீது வினிகர் பூசுவது, சரும பளபளப்பிற்கு எலுமிச்சை சாறு பயன்படுத்துவது போன்றவை பிரச்னையை மேலும் அதிகரிக்கத் தான் செய்யும் என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பிரிட்டனைச் சேர்ந்த, "கேர்' என்ற நிறுவனம் இது குறித்து ஆய்வு நடத்தியது. சருமத்தை மிருதுவாக்க பற்பசையை பயன்படுத்துவதாக 18 சதவீதம் தெரிவித்தனர். மற்றவர்கள் சமையல் எண்ணெய், எலுமிச்சை சாறு, தேன் போன்றவற்றை பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனர். 65 சதவீதம் பேர், வீட்டில் இருக்கும் சமையலறை பொருட்களை, சரும பிரச்னைகளைச் சமாளிக்க தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்..

சரும வறட்சிக்கு, 20 சதவீதம் பேர், கை வைத்தியத்தை பின்பற்றுகின்றனர். மேலும், 19 சதவீதம் பேர், கரும்புள்ளிகளுக்கும், 18 சதவீதம் பேர், சொறி மற்றும் படைக்கும், 8 சதவீதம் பேர், "சோரியாசிஸ்' நோய்க்கும் கை வைத்தியத்தைப் பின்பற்றுகின்றனர். கடையில் வாங்கும் மருந்துகள், தங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதாலேயே, கை வைத்தியத்தைப் பின்பற்றுவதாக பலர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, மருந்து கம்பெனி அதிகாரி ஸ்டீவ் ரைலி கூறுகையில், "இது போன்ற பொருட்கள், சருமத்தின் மேல் உபயோகத்திற்கு உகந்ததல்ல. பற்பசை, சருமத்திலுள்ள எண்ணெயை ஈர்த்து பருக்கள் காய்ந்து உதிர்வதற்கு உதவி புரிந்தாலும், செல்களில் அரிப்பையும், எரிச்சலையும் ஏற்படுத்தும். வினிகர், எலுமிச்சை சாறு இரண்டுமே அமில சத்து கொண்டவை என்பதால், அவை சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும்' என்றார்.

Friday, January 4, 2013

சாமியாருக்கு மனைவியை காவு கொடுத்த?

மேற்கு வங்க மாநிலம் ஜபல்பூரி மாவட்டம் காமக்யாகுரி பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். இவரது மனைவி ஸ்வப்னா(வயது 39). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால் ஆண் குழந்தை இல்லாததை ஒரு குறையாகக் கருதி ஸ்வப்னாவை அவரது கணவன் மற்றும் அவரது உறவினர்கள் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இந்த கொடுமையின் உச்சகட்டமாக, கடந்த டிசம்பர் மாதம் ஒரு சாமியாரை சுகுமார் அழைத்து வந்துள்ளார். பின்னர் அந்த சாமியாருடன், தன் மனைவியை கட்டாயப்படுத்தி உறவு வைக்கச் செய்துள்ளார். இவ்வாறு 3 நாட்கள் சாமியாரின் பிடியில் சிக்கிச் சீரழிந்த ஸ்வப்னா, கடந்த 17-ம் தேதி தீக்குளித்தார்.

பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரிடம் வாக்குமூலம் வாங்கக்கூட முடியவில்லை. அந்த அளவுக்கு உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில் அவர் 28-ம் தேதி இறந்தார். இறப்பதற்கு முன் அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை தன் தாயாரிடம் கூறி அழுதிருக்கிறார்.

இதுபற்றி ஸ்வப்னாவின் தாயார் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்வப்னாவின் கணவர் சுகுமார், மாமனார் சுரேன், மாமியார் ஷோபா ராணி, மைத்துனி திரவுபதி ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஸ்வப்னாவின் சாவுக்கு மூல காரணமாக இருந்த சாமியார், அசாமில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Thursday, January 3, 2013

ஹிந்து முஸ்லிம்களிடையே மிக குறைவு!?

நியூயார்க்: குடும்ப கட்டமைப்பை சீர்குலைப்பதில் முக்கிய பங்கினை வகிக்கும் திருமண உறவு வெளியேயான முறைகேடான பாலியல் உறவுகள் முஸ்லிம், ஹிந்து சமூகத்தில் மிகவும் குறைவு என்று அமெரிக்கன் சோசியலாஜிக்கல் ரிவியூ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

31 வளர்ச்சியடைந்த நாடுகளில் 15-59 வயது வரையிலான ஆறுலட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்ற ஆய்வில் பொதுவாகவே பாலியல் ஒழுக்கங்களை பேணுவதில் முஸ்லிம் நாடுகள் முன்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அனைத்து மதங்களும் திருமண உறவிற்கு வெளியே உள்ள முறைகேடான பாலியல் உறவுகளை ஊக்கப்படுத்துவதில்லை. ஆனால், அனைத்து மத நம்பிக்கையாளர்களும் ஒன்றுபோல் இல்லை என்று இந்த ஆய்விற்கு தலைமை தாங்கிய ஆமி ஆடம்ஸிக் சுட்டிக்காட்டுகிறார்.

முஸ்லிம் நாடுகளில் எய்ட்ஸ் நோய் மிகக் குறைவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் மற்றும் ஹிந்துக்களின் எண்ணிக்கை கூடுவதையொட்டி சமூகத்தில் திருமணத்திற்கு வெளியேயான முறைகேடான பாலியல் உறவுகளும் குறைந்து வருகின்றன. திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவுகள் யூதர்களில் 94 சதவீதமாகும். கிறிஸ்தவர்களில் 79 சதவீதம் காணப்படுகிறது. புத்தர்களில் 65 சதவீதம். ஹிந்துக்களில் 13 சதவீதம் காணப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் முறைகேடான பாலியல் உறவுகள் யூதர்களிடம் 4 சதவீதமும், கிறிஸ்தவர்களிடம் 3 சதவீதமும், ஹிந்து, பெளத்த, முஸ்லிம்களிடம் ஒரு சதவீதமாகவும் உள்ளது.

இந்த ஆய்வுக் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்காவின் கத்தோலிக் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த சோசியாலஜிஸ்ட் ரெவ.பால் சுல்லின்ஸ் கூறுகையில், “இந்த ஆய்வின் முடிவுகள் ஆச்சரியமானதல்ல. ஏனெனில் இவை பாரம்பரிய இஸ்லாமிய நாடுகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. புர்கா(உடலை மறைக்கும் ஆடை) உண்மையிலேயே இவ்விஷயத்தில் நன்றாக வேலை செய்கிறது. ஆண்களிலிருந்து முற்றிலும் வேறுபடுத்தி உடல் முழுவதும் மறைத்தால் பெண்களை அவர்களது திருமணம் முடியும் வரை முந்தைய முறைகேடான பாலியல் உறவுகளில் இருந்து பாதுகாக்க முடியும்” என கூறுகிறார்.

சூசி இஸ்மாயில், இவர் திருமணம் மற்றும் விவகாரத்துக்கான மனவளவாளர்(கவுன்சலர்) ஆவார். இவர் கூறுகையில், “திருமணத்திற்கு முந்தையை, பிந்தைய முறைகேடான பாலியல் உறவுகள் முஸ்லிம்களிடம் குறைவாக இருப்பதற்கு அவர்களது மார்க்க ரீதியான வேர் காரணமாகும். இஸ்லாம் விபச்சாரத்தை தடைச் செய்கிறது. இளம் வயதில் இருந்தே முஸ்லிம்கள் பாலியல் ஒழுக்கம் குறித்து பயிற்றுவிக்கப்படுகின்றார்கள்.” என தெரிவித்துள்ளார்.

Wednesday, January 2, 2013

மோடியால் பழிவாங்கப்பட்டவருக்கு விருது!

அஹ்மதாபாத்: சமூக நீதிக்காக வழங்கப்படும் 5-வது அன்னை தெரசா சர்வதேச விருது குஜராத் மாநிலத்தில் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோ(கே)டியால் பழிவாங்கப்பட்ட மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுக்குறித்து அன்னை தெரசா விருதுக்காக சஞ்சீவ் பட், தேர்வுச் செய்யப்பட்டுள்ள தகவலை வெளியிட்ட அன்னை தெரசா ஃபவுண்டேசனின் தலைவர் ஆப்ரஹாம் மத்தாய் கூறியிருப்பதாவது:

பாதுகாப்பற்ற சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்காக வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக உறுதியாக நிற்கும் நபர் தாம் சஞ்சீவ் பட். அவருக்கு இவ்விருதை வழங்குவதில் திருப்தி அடைகிறோம் என்று மத்தாய் கூறியுள்ளார்.

அதேவேளையில், இவ்விருதை மரணித்த தனது தாயாருக்கு சமர்ப்பணம் செய்வதாக சஞ்சீவ் பட் கூறியுள்ளார்.விருது தனது நிலைபாடுகளுக்கான அங்கீகாரம் என்றும்,போராட்டத்தை வீரியத்துடன் எடுத்துச் செல்ல போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் மோடியின் பங்கினைக் குறித்து உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த சஞ்சீவ் பட் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக மோடி அரசு அவரை பதவியில் இருந்து இடை நீக்கம் செய்திருந்தது.

இவ்விருது இதற்கு முன்பு திபெத்தின் ஆன்மீக தலைவர் தலைலாமா, மனித உரிமை ஆர்வலரும், பாகிஸ்தனின் முன்னாள் அமைச்சருமான அன்ஸார் பர்ணி, மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர்.மஹாதீர் முஹம்மது ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Tuesday, January 1, 2013

வியந்துதான் போவீர்கள்!!!

வியக்க வைத்த என்னை உங்களையும் வியக்கவைக்க வியந்துதான் போவீர்கள்,. வியந்து தான் போவீர்கள் - 2

எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார். அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.

இலைகள் உதிர்க்காத மரம் - ஊசி இலை மரம்.

காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும்.

குளிர் காலத்தில் குயில் கூவாது.

வால்ட் டிஸ்னி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.

தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான் கராத்தே வீரர் ஆனார் - புருஸ்லீ.

லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர். அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

கரப்பான் பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.

கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.

1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.

ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் - ஈரிதழ் சிட்டு.

பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணி நேரம் பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.

ஒட்டகம் ஒரே சமயத்தில் ௦90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.

காரல் மார்க்ஸ் தனக்கு பிடிக்காத பக்கங்களை எல்லாம் புத்தகத்தில் இருந்து கிழித்துவிடுவாராம். தன் நூலகத்தில் கிழியாத பக்கங்களை உடைய புத்தகம் எதுவும் கிடையாது. தாஸ் காப்பிட்டல் நூல் எழுத அவருக்கு 14 ஆண்டுகள் தேவைப்பட்டது.

சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.

விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

* சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
* யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.
* நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
* டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்
* புழுக்களுக்கு தூக்கமே கிடையாது.

மரங்கொத்தி பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தை கொத்தும்.

எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்கும். ஆனா நீங்க?

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!