என்னடா இது நம்ம சாமியார்களின் கொட்டம் கொஞ்ச நாள் அடங்கி இருக்குதேன்னு பார்த்தேன், இதோ ஆரம்பித்து விட்டார்கள் மீண்டும் காம லீலைகள்.
ஓ நம லீலைகள் நமக,, பாரத் மாதாக்கி ஜே ஜே!!! (கள்ள சாமியுடன் குஜராத் கேடி கலிகாலம் கொடுமடா).
சென்னை பெரம்பூரை சேர்ந்த அந்த 13 வயது சிறுமி தனது தந்தையை இழந்து தாயின் துணையுடன் வாழ்ந்து வந்தாள்,, இந்நிலையில் தாயாரான சசிகலா அவர்கள் கடந்த ஆண்டு பெரம்பூரில் உள்ள ஆசிரமத்தில் அறவழி சித்தர் எனும் குறி சொல்லும் சாமியாரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார், அவனின் வயது 48.
அந்த சாமியார் நள்ளிரவு பூஜை செய்ய வேண்டும் என்று சசிகலாவிடம் கூறி பூஜைக்கு ஏற்பாடு செய்து கடந்த அண்டு நவம்பர் மாதம் அந்த சிறுமியை கற்பழித்துள்ளான், இதனை சிறுமி தன் தாயிடம் சொல்லி அழுதப்போது அதற்கு தாய் சாமியார் எது செய்தாலும் நல்லதுக்காகத்தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சாமியார் தன் நண்பர்கள் குமார், செல்வம் ஆகியோருடன் ஒப்படைத்து இவளை விபச்சாரத்தில் ஈடுபடுத்துமாரு கூறியுள்ளான், அந்த கயவர்களும் இவளை அனுபவித்து பின்பு தங்களது குடும்பத்திடம் ஒப்படைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.
இதிலிருந்து ஒருவழியாக தப்பித்து திருப்பதிக்கு தப்பித்த சிறுமி அங்கு பக்தர்களோடு சேர்ந்து சில நாட்கள் தூங்கியுள்ளார், அங்கிருந்தவர்கள் சந்தேகப்பட்டு போலிசாரிடம் ஒப்படைத்தனர் போலிசார் விசாரித்ததில் நடந்ததை விவரித்தால் சிறுமி.
இதை தொடர்ந்து சாமியார், சிறுமியின் பெற்றோர் ஆகியோரை போலிசார் கைது செய்துள்ளனர், மேலும் பலரை தேடி வருகின்றனர். ஆசிரமத்தில் சோதனையிட்ட போது பல பெண்களின் புகைப்படங்கள் சிக்கி உள்ளது.. மேலும் இவன் இன்னும் எத்தனை பெண்களின் வாழ்க்கையை அழித்துள்ளான் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

அடப் பாவிகளா...!
ReplyDeleteada paavikalaa...
ReplyDelete