Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, December 31, 2012

பல நூறுகளை தாண்டிய பாலியல்! தண்டனையோ!?

புதுடெல்லி: இவ்வாண்டு(2012) இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் 635 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், இவ்வழக்குகளில் ஒன்றுக்கு மட்டுமே குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை 635 வழக்குகளில் 754 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட மிகவும் உயர்ந்த எண்ணிக்கை என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

இவர்களில் ஒருவர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளார். 403 பேர் விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர். 348பேர் மீதான விசாரணை நடைபெற்றுள்ளது. 2 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 572 பாலியல் வன்கொடுமை வழக்குகளை டெல்லி போலீஸ் பதிவுச் செய்தது. 2010-ஆம் ஆண்டு 466 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு இவ்வழக்குகளில் 745 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில்18 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். 34 பேர் விடுவிக்கப்பட்டனர். 597 பேர் பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணையை எதிர்கொள்கின்றனர். 86 பேர் மீது விசாரணை நடைபெற்றுவருகிறது. 10 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், 2010-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட 685 பேரில் 37 பேர் தண்டிக்கப்பட்டனர். 107 பேர் விடுவிக்கப்பட்டனர். 518 பேர் விசாரணையை எதிர்கொள்கின்றனர். 13 பேர் மீது விசாரணை நடைபெற்றுவருகிறது. 2009-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 675 பேரும், 2008-ஆம் ஆண்டு 604 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 2009-ஆம் ஆண்டு 82 பேரும், 2008-ஆம் ஆண்டு 52 பேரும் தண்டிக்கப்பட்டனர்.

Sunday, December 30, 2012

நீரழிவு நோயை கொண்டு வரும் உணவுகள்

சென்னையில் உள்ள பெரும்பாலான நகர்ப்புற மக்கள் கொழுப்பு அதிகமுள்ள உணவு பொருட்களையே அதிக அளவில் எடுத்துக் கொள்கின்றனர் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

பொறித்த உணவு பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்வதால் கொழுப்பு அதிகரித்து நீரிழிவு நோய் அதிகம் தாக்கும் வாய்ப்புள்ளது. மற்ற நகரங்களைக் காட்டிலும் சென்னை மற்றும் கொச்சியில் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி 74% நகர்ப்புற இந்தியர்கள் இருதய நோயும் தாக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் 30 முதல் 44 வயதுக்கு இடைப்பட்டவர்கள் அதிக பாதிப்புக்குட்பட்டுள்ளனர்.

இந்தியர்கள் பொறித்த உணவு பொருட்களில் செலுத்தும் நாட்டம் பழங்கள் மற்றும் தானியங்களில் அதிக ஆர்வம் செலுத்துவதில்லை. எனவே மனிதர்களின் ஆயுள் குறைய அதிக வாய்ப்புள்ளது என்று மருத்துவ ஆய்வு கூறுகின்றது. (பொறித்த உணவுகளை ஒதுக்கினாலே போதும் பாதி நோய் தீர்ந்தது.)

Saturday, December 29, 2012

சந்தானத்திற்கு சங்கு ஊதிய கார்த்தி!!

கார்த்தி, சந்தானம் இணைந்து நடித்த சிறுத்தை படத்தின் ஹிட் இருவரையும் மிகவும் நெருக்கமாக்கியது. முழுவதும் காமெடி எண்டர்டெயினராக இருந்த சிறுத்தை படத்தின் பிரஸ்மீட்டில் கார்த்தி “ நானும் சந்தானமும் நெருங்கிய நண்பர்கள்.

நண்பர்கள் என சொல்வதை விட, லவ்வர்ஸ் என சொல்லலாம். ஆனால் இந்த காலத்தில் அதுவும் தப்பாகிவிடும்” என்று பேசினார். சிறுத்தையில் துவங்கி ஆல் இன் ஆல் அழகுராஜா வரை கார்த்தியின் 4 படங்களிலும் அவருடன் ஜோடிபோட்டு நடித்து வருகிறார் சந்தானம். இந்த அளவிற்கு நெருக்கமாக பழகிக்கொண்டிருந்த இருவருக்கிடையேயும் சமீபத்தில் புயல் வீசியிருக்கிறது.

கார்த்தி நடிப்பில் ஜனவரி ரிலீஸாகவிருக்கும் ‘அலெக்ஸ்பாண்டியன்’ படத்தின் திரைக்கதை அப்புடி, இப்புடி என தன் மணக்கணக்கில் திரையுலகம் முழுவதும் சந்தானம் பரப்பிவிட்டது தான் இந்த புயலுக்கு காரணம் என்கிறது கோடம்பாக்கம். இனி துவங்கவிருக்கு ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் சந்தானம் கார்த்தியுடன் இணைவாரா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

Friday, December 28, 2012

செல்போனின் சிக்கி சீரழிந்த இளம்பெண்!

கும்பளா(கேரளா): ஒரு நாட்டின் சட்டம் சரியாக இருந்தால்தான் தவறுகள் குறையும் ஆனால் இந்தியாவிலோ, அரசியல்வாதியோ, பணமும் புகழும் உள்ளவர்களோ ஏதாவது தவறு செய்தாலும் சட்டத்திலிருந்து தப்பிவிடலாம். ஆளுக்கு தகுந்தாற்போல் மாறும் சட்டம். இதுதான் இந்தியாவின் எப்போதும் உள்ள நிலை.

மொபைல் ஃபோனில் அறிமுகமான இளைஞரை சந்திக்க கேரளா மாநிலம் உப்பளாவிற்கு வந்த கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்த இளம் பெண்ணொருவரை காம வெறிப்பிடித்த கயவர்கள் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். போனில் அறிமுகமான இளைஞனும், அவனது இரண்டு நண்பர்களும் சேர்ந்து ஆம்னி வேனில் இளம் பெண்ணை உப்பளாவில் இருந்து மங்களூர் வரை அழைத்து சென்று பாலியல் வல்லுறவு செய்துள்ளனர்.

கும்பளாவில் நடக்க கூட முடியாமல் சோர்ந்து போய் இறக்கிவிடப்பட்ட பெண், அங்கு வந்த ஆட்டோவில் ஏறி அனாதை நிலையத்திற்கு கொண்டு போகுமாறு கூறியுள்ளார். ஆனால், ஆட்டோ டிரைவரும் ஒரு காம வெறிப்பிடித்த கயவன் ஆவான். அவன், இப்பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துஸ் சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளான். கிறிஸ்துமஸ் இரவில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இவ்வழக்கில் கும்பளாவில் உள்ள ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரான கணேஷனை போலீஸ் கைது செய்துள்ளது. கர்நாடகா மாநிலம் கன்யானா பகுதியை சார்ந்த இளம்பெண், தந்தை மரணித்தவுடன், தாயார் மறு திருமணம் புரிந்துள்ளார். இதனால், மங்களூரில் ஒரு வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்பொழுது ஃபோனில் அறிமுகமான இளைஞர், அப்பெண்ணை உப்பளாவிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

உப்பளாவிற்கு வந்த பொழுது அந்த இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆம்னி வேனில் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிவிட்டு ரெயில்வே ஸ்டேசனில் தள்ளிவிட்டு சென்றுள்ளனர். அப்பொழுது அந்த பெண் பேருந்து நிலையத்திற்கு வந்த ஆட்டோ டிரைவர் கணேஷனிடம் தன்னை அனாதை நிலையத்திற்கு கொண்டு விடுமாறு கூறிய பொழுதும், கணேஷன் அந்த பெண்ணை ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸ் கூறுகிறது.

கணேஷன் அழைத்து சென்ற வேறு சிலரும் அந்த பெண்ணை வேட்டையாடியதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு காரணமான குற்றவாளிகளை போலீஸ் பாதுகாப்பதாக குற்றம் சாட்டி டி.ஒய்.எஃப்.ஐ தர்ணா போராட்டம் நடத்தியது.

Wednesday, December 26, 2012

கிழிபட்ட காவி முகம்?

புதுடெல்லி: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியை, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாதி ராஜேந்தர் சவுத்ரி கொலைச்செய்ததாக கருதப்படுகிறது.

2007-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனில் ஜோஷி மர்மமான முறையில் கொலைச் செய்யப்பட்டான். இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளி அண்மையில் மத்திய பிரதேச மாநிலத்தில் வைத்து கைதுச் செய்யப்பட்ட ராஜேந்தர் சவுத்ரி என்று என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தங்களின் ரகசியங்கள் வெளியுலகிற்கு தெரியாமலிருக்க சுனில் ஜோஷியை ஹிந்துத்துவா சக்திகள் கொலைச் செய்துள்ளனர்.

2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்த மாலேகான் குண்டுவெடிப்பு, 2007 பெப்ருவரி மாதம் நிகழ்ந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, 2007 அக்டோபரில் அஜ்மீர் தர்காவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு, 2008-ஆம் ஆண்டு மலேகானிலும், மொடாஸாவிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்பு ஆகியவற்றை சதித்திட்டம் தீட்டியதில் ஜோஷி முக்கிய பங்கு வகித்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதில் அஜ்மீர் தர்காவில் குண்டுவைப்பதற்கான திட்டம் வெற்றிப் பெற்றதில் ஜோஷிக்கும் அளவுக்கதிகமான தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது.இவ்வழக்கில் போலீசார், அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதுச்செய்ததும், மக்களிடையே முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வு வளர்ந்ததும், ஜோஷிக்கு சந்தோசத்தை ஏற்படுத்தியது.தங்களின் பின்னால் புலனாய்வு ஏஜன்சிகள் வராததும், சதித்திட்டங்கள் தீட்டுவது, இயக்கத்தை வழி நடத்துவது ஆகியவற்றில் ஜோஷிக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியதோடு காரியங்களை எளிதாக கையாளவும் வழிவகுத்தது. இதனைத்தொடர்ந்து பலரிடம் ரகசியங்களை ஜோஷி பகிர்ந்துகொண்டுள்ளான். இதனை இயக்கத்தின் இதர தீவிரவாதிகள் அச்சுறுத்தலாககண்டனர். இதன் மூலம் ஜோஷியை கொலைச்செய்வதை தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை.

மத்தியபிரதேச மாநிலம் மோவ் பிரதேசத்தில் ஜோஷி கொலைச்செய்யப்பட்டான். இதைப்போலவே பல்வேறு கொலைகள் நடந்துள்ளன.இதனைக்குறித்தும் என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது. தற்போது சம்ஜோதா எக்ஸ்பிரஸ்,மக்கா மஸ்ஜித், மலேகான் குண்டுவெடிப்புகளில் தனது பங்கினை ராஜேந்தர்சவுத்ரி ஒப்புக்கொண்டுள்ளான். சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வைக்கப்பட்ட நான்கு குண்டுகளில் ஒன்றை வைத்தவன் ராஜேந்தர் சவுத்ரி ஆவான், மோடியின் தூண்டுதலின் பெயரிலேயே.

Tuesday, December 25, 2012

பஸ்ஸில் மட்டும்தானா பாலியல்!?

புதுடில்லி: பெண்களுக்கு எதிராக வன்முறைகள், பாலியல் பலாத்கார குற்றங்கள் வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பெண்களுக்கு எதிராக கற்பழிப்பு மற்றும் பாலியல் தொல்லைகள் போன்ற சம்பவங்கள் ஓடும் ரயில்களில் அதிகரிப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள ‌தகவலில், இந்தியா முழுவதும் 8000-த்திற்கும் மேற்பட்ட ரயில் நிலயங்கள் உள்ளன. மிகவும் முக்கிய ரயில்நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு கேமிராக்கள் வைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 3,500 எக்ஸ்பிரஸ் ரயில்கள், உள்ளூர் ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. ரயில்களில் பயணிப்போரில் பெண்களுக்கு பாதுகாப்பு வசதிகள் போதிய அளவில் இல்லையென புகார் எழுந்துள்ளது.

அதன்படி கிடைத்த புள்ளி விவரப்படி கடந்த ஆண்டு ரயில்களில் பயணிக்கும் பெண்களிடம் சிலுமிஷம் செய்வது , பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது, மற்றும் கற்பழி்த்து கொலை செய்தது என 712 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2010-ம் ஆண்டில் 501 ஆக இருந்தது.

இதில் கடந்த 2011-ம் ஆண்டில் 15 கற்பழிப்பு வழக்குகள், பெண்களிடம் சிலுமிஷம் மற்றும் தவறாக நடக்க முயன்றதாக 362 வழக்குகளும், கடந்த 2010-ம் ஆண்டில் 10 கற்பழிப்பு வழக்குகளும், 352 ஈவ் டீசிங் வழக்குகளும் பதிவாகியுள்ளன.

Monday, December 24, 2012

நெய் சேர்ப்பதன் பயன்களும் பலன்களும்!

தினமும் உணவில் நெய் சேர்ப்பதால் ஏற்படும் பலன்கள். உடல் ஆரோக்கியம் பெற ஏழு விளக்கங்கள் கீழே.

1) தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன நலனுக்கு உகந்தது, இதனால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

2) உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.

3) வெண்ணெய்யை விட உருக்கப்பட்ட சுத்தமான நெய்யில் கொழுப்பு குறைவாக உள்ளதால், வேகமாக செரிக்கும்.

4) நெய்யை பிரிட்ஜில் வைக்க வேண்டியதில்லை, அதை கைபடாமல் வெளியில் வைத்திருந்தாலே நீண்ட காலத்துக்கு கெடாது, அதனால் நெய்யில் மாற்றம் ஏற்படாது.

5) நெய் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும், செரிமானத்தை ஊக்குவிப்பதால் நாம் எடுத்து கொள்ளும் உணவில் எடை குறையாமல் சமநிலையில் வைக்க உதவும்,

6) விட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை நெய்யில் உள்ளதால் உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும்,

7) உடல் செயல்பாட்டுக்கு சில கொழுப்பு சத்துகள் தேவை, அதை நெய் சாப்பிடுவதால் பெறலாம். தினம் நாம் உணவில் நெய் சேர்த்து உடல் ஆரோக்கியம் பெறலாம்.

Saturday, December 22, 2012

கமலுக்கு கடிவாலமிட்ட திரை அரங்குகள் ?

எதிர்பார்க்கப்பட்ட கமலின் விஸ்பரூபம் படத்திற்கு திரை அரங்குகள் கமலுக்கு கடிவாலமிட்டுள்ளது.

கமல் தயாரித்து நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை டிடிஎச்சில் ஒலிபரப்ப முடிவு செய்துள்ளதால், இந்தப் படத்தை திரையரங்குகளில் திரையிட முடியாது என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்த திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், இந்தப் பிரச்னை தொடர்பாக நடந்த அவசரக் கூட்டத்தில் இந்த முடிவினை எடுத்துள்ளனர்.

இப்படம் பற்றி கோடம்பாக்கத்தில் செய்திகள் வெளியாகி உள்ளது, என்னவென்றால் சிறு வயதிலேயே நடிக்கவந்தும் இதுவரை உலக மிகப்பெரிய விருதான "ஆஸ்கார்" விருதை தன்னால் இதுவரை பெறமுடியவில்ல என்கிற ஆதங்கத்தால் படம் முழுக்க அமெரிக்க ஆதரித்தே இருக்கும் என்கிறார்கள்.(இம்முறையாவது ஆஸ்கார் கிடைக்குமா.?)

Friday, December 21, 2012

ஆட்டக்காரியின் அளப்பறிய சேவை!

ஆரிய சாயம் வெளுத்து போச்சு டும் டும் டும். இந்த ஆரிய கூத்தாடியின் ஆசை எது என்று தெரிந்து போச்சு டும் டும் டும். (நீலச்சாயம் வெளுத்துப் போச்சு! ராஜா(காவிசாயம்)வேஷம் கலைஞ்சு போச்ச)

உண்மை முகத்தைக் காட்டிய காவி ஜெயலலிதாவின் பயங்கரவாத பேச்சு!(தினமல செய்தியின் ஒரு பகுதி)

அடுத்த மத்திய அரசில் நாம் இருப்போம்: ஜெ., சூளுரை?

வாஜ்பாயை பிரதமராக்கி, பா.ஜ., கட்சிக்கு முதன் முதலாக, இந்த தேசத்தை ஆளுகிற வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்ததில் நம் பங்கு அளவற்றது. நாம் ஒரு அனைத்திந்திய அரசியல் இயக்கம் என்பதை அப்போதே நிரூபித்தோம். இப்போதும், அதை மேலும் பலப்படுத்தி, இந்திய ஆட்சி அதிகாரத்தில் அமரப்போகிற, பிரதமரை தீர்மானிக்கிற சக்தியாக நாம் திகழ்வதற்கான தருணம் கனிந்து கொண்டிருக்கிறது. அடுத்து அமையப் போகும், மத்திய அரசில் நாம் இருப்போம்; நாமும் இருப்போம் என்பது திண்ணம். நீங்கள் நினைக்கலாம், லோக்சபா தேர்தலுக்கு இன்னும் இரண்டாண்டு காலம் இருக்கிறதே? இப்போது தானே இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றோம் என நினைத்து விடக் கூடாது.

தேர்தல் அறிக்கையில் இதைசொல்லி ஓட்டு கேட்டு இருந்தால் அதிமுக அப்போதே தமிழகத்தை விட்டு துடைத்து எறியப்பட்டு இருக்கும். காவிகளுக்கு மறைமுக ஆதரவாக இருந்த ஜெயா தம்மை காவிதான் எனது பிறப்பு என்பதை வெளிச்சம் போட்டுகாட்டி இருக்கிறார் இந்த ஆரிய கூத்தாடி, காட்டியதற்கு நன்றி. சமுதாய சேவை!?

Thursday, December 20, 2012

பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் பாவிகள்?

புதுடெல்லி: கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க அரசு பள்ளிக்கூட பாடப்புத்தகங்களை காவி மயமாக்கியது தொடர்பாக என்.சி.இ.ஆர்.டி விசாரணை நடத்துகிறது. பிஞ்சு உள்ளங்களை வகுப்புவாத நஞ்சை விதைக்க பா.ஜ.க நடத்திய முயற்சிகள் குறித்து என்.சி.இ.ஆர்.டி விசாரணை நடத்த உள்ளது.

பாடப்புத்தகங்கள் குறித்து ஏராளமான புகார்கள் வந்ததையடுத்து விளக்கம் கேட்டு என்.சி.இ.ஆர்.டி தலைவர் பர்வீன் சின்க்ளெயர், பள்ளிக்கூட கல்வி செயலாளருக்கும் , டி.சி.ஆர்.டி தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அடுத்த புதன்கிழமைக்குள் டி.சி.ஆர்.டி தலைவர் ஹெச்.எஸ்.ராமராவுடன் என்.சி.இ.ஆர்.டி கவுன்சில் விவாதிக்கும்.

இவ்வாண்டு ஜூலையில் வெளியான ஐந்தாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு சமூகவியல் பாடத்திட்டத்தில் ஹிந்துத்துவா சக்திகள் வரலாற்றை வளைத்துள்ளனர். எட்டாம் வகுப்பு சமூகவியல் பாடத்திட்டத்தின் ஒரு அத்தியாயத்தில் வேதகாலங்களிலேயே பசுவதை அமலில் இருந்தது என கூறப்பட்டுள்ளது.

ஆனால், வேத காலத்தில் பசு இறைச்சி சாப்பிட்டனர் என்பதற்கும், அதற்கான பிரச்சாரம் நடந்துள்ளது என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன. ஆரிய நாகரீகமும், ஹரப்பா நாகரீகமும் ஒன்று தான் என்று எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆரியர்கள் வந்தேறிகள் என்ற வரலாற்று உண்மையை மூடிமறைத்துவிட்டு அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்று வடிகட்டிய பொய்யை நியாயப்படுத்துவதற்கான முயற்சியாகும். கார்ட்டூன் மற்றும் இதர புகார்கள் தொடர்பாக என்.சி.இ.ஆர்.டி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துவரும் சூழலில் காவிமயமாக்கல் தொடர்பான குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

Wednesday, December 19, 2012

அதென்னெங்க அசிடிட்டி..,?

அசிடிட்டி பிரச்சினை இன்றைக்கு பெரும்பாலனவர்களை பாதிக்கிறது. வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாயில் திரும்பி வருவதால், வயிறு அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

இதனால் வயிற்றில் வலி, வயிற்றில் உப்புசம் கூட ஏற்படும். சரியான உணவுப்பழக்கத்தை கொள்வதன் மூலம் அசிடிட்டி பிரச்சினையை நீக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவதாலும் அசிடிட்டி உருவாகிறது. மன அழுத்தத்தின் போது, அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள ரத்தத்தின் மூலமாக தசைகளுக்கு ஆற்றல் அனுப்பப்படுகிறது.

இதனால் செரிமான உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இருக்காது. இதனால் செரிமான நிகழ்வு குறைந்து, வயிற்றில் நீண்ட நேரம் உணவு தங்குவதால், அமிலம் பின்னோக்கி திரும்பும் வாய்ப்பு உள்ளது.

பப்பாளி மற்றும் அன்னாசி போன்ற பழங்களில் உணவு செரிமானத்திற்கு உதவும் பாப்பெயின் மற்றும் புரோமிலெய்ன் ஆகிய என்சைம்கள் அதிகளவில் உள்ளன. எனவே இப்பழங்களை அதிகளவில் சாப்பிடலாம்.

முட்டைகோசு சாறு நெஞ்செரிச்சலுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பாதைக்கு மிகவும் பயன்படும் குளூட்டாமின் எனும் அமினோ அமிலம் முட்டைகோசில் அதிகளவில் காணப்படுகிறது. முட்டைகோசு சாறை தனியே சாப்பிட முடியாவிட்டால் மற்ற காய்கறிகளின் சாறுடன் கலந்து சாப்பிடலாம்.

சீரகம், புதினா, சோம்பு ஆகியவற்றுக்கு ஜீரண சக்தியை அதிகரித்தல், வாயு தொல்லை மற்றும் வயிற்றுவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் தன்மை உண்டு. எனவே இவற்றை தினசரி சமையலில் சேர்த்துக் கொள்வது நல்லது.

முட்டையின் வெள்ளைக்கரு அசிடிட்டி பிரச்சினையை தீர்க்கும் சரியான உணவாக உள்ளது. அதேபோல் மீன், சிக்கன் அதிக காரமில்லாமல் சேர்த்து சாப்பிடலாம்.

குறைந்த கொழுப்பு சத்துள்ள சீஸ் அசிடிட்டி பிரச்சினையை தீர்க்கும். அதேபோல் கொழுப்புச் சத்து குறைவான பாலும் ஏற்றது. மேலும் அசிடிட்டி உள்ளவர்கள் அதனைப் போக்க தானிய உணவுகள், கோதுமை, ப்ரௌவுன் அரிசி போன்றவைகளை சேர்த்து கொள்ளலாம்.

சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இஞ்சி டீ குடிக்கலாம். இவை செரிமானத்திற்கு தேவையான சுரப்பிகளின் செயல்பாடுகளை தூண்டி விடுகிறது.

எதை சாப்பிடக்கூடாது: அடிசிட்டியினால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் மசாலா கலந்த கார உணவுகளை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இதை தவிர்க்க முடியவில்லை என்றால் வாரத்திற்கு 1-2 முறை மட்டும் சாப்பிடலாம்.

அசிடிட்டி உடையவர்கள், அமிலத்தன்மை நிறைந்தவைகளான சிட்ரஸ் பழங்கள் மற்றும் தக்காளி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்., அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமான அமைப்பிற்கும் அதிக பளுவை உண்டாக்குகிறது. எனவே அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

காபி, டீ போன்ற உணவுகளை கண்டிப்பாக கட் செய்ய வேண்டும். அதற்கு மாறாக கிரீன் டீ சாப்பிடலாம்., காபின் நிறைந்த சொக்லேட் போன்ற உணவுப் பொருட்கள் இயற்கையிலேயே அமிலத் தன்மை நிறைந்தவை என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது.

Tuesday, December 18, 2012

தமிழை முணுமுணுக்கும் ஹாலிவுட் நடிகை!?

பாலிவுட், கோலிவுட் இரண்டிலும் நடித்த இவர் மீண்டும் தமிழுக்கு வருகிறார், ஆனால் தமிழ் தெரியாததால் தமிழ் கற்று வருகிறார். படபிடிப்பு இடைவேளையிலும்.

மதராசபட்டணம் படத்தின் மூலம், ஹாலிவுட்டிலிருந்து, கோலிவுட்டுக்கு இறக்குமதியான, எமி ஜாக்சன், அதன் பின், தமிழில், "தாண்டவம் படத்தில் நடித்தார். இடையில், பாலிவுட்டுக்கும் படையெடுத்து, "விண்ணை தாண்டி வருவாயா இந்தி ரீமேக்கில், ஹீரோயினாக நடித்தார்.

தற்போது, ஷங்கர் இயக்கும்,"ஐ படத்தில், விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக சீனாவில், 45 நாட்கள் முகாமிட்டு நடித்தார், எமி. தற்போது, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, சென்னையில் நடக்கிறது. இதில், விக்ரம் - எமி ஜாக்சன் நடிக்கும் காதல் காட்சிகள் படமாகிறதாம்.

எமி ஜாக்சனுக்கு இந்த படத்தில், அதிகமான வசனங்கள் உள்ளதாம். இதனால், தமிழ் வசனங்கள் அனைத்தையும், தன் தாய்மொழியான ஆங்கிலத்தில் எழுதி, அதை இரவு, பகலாக மனப்பாடம் செய்து வருகிறாராம். படப்பிடிப்புகளின் இடைவெளியில் கூட, அவர், தமிழில் முணு முணுத்தபடி வலம் வருவதை பார்த்து, படக் குழுவினர், ஆச்சர்யப்பட்டு போனார்களாம்.

Monday, December 17, 2012

ஆரோக்கியத்திற்கு ஆறு நிமிடங்கள்!

லண்டன்: ஒவ்வொருவரும் உடல் ஆரோக்கியம் வேண்டி மருத்துவரையும், மருந்து மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டு நேரத்தையும், பணத்தையும் சிலவு செய்கிறோம் சிலவே இல்லாமல் ஒரு நாளைக்கு வெறும் 6 நிமிடங்களே போதும் உங்களுக்கு.

சிரிப்பு ஒன்றே உடல் நலத்துக்கு அரிதான மருந்தாக திகழ்கிறது. இதன் மூலம் மகிழ்ச்சி மற்றும் சந்தோஷம் ஏற்படுகிறது அதற்காக நாள் ஒன்றுக்கு 18 நிமிடங்கள் சிரிக்க வேண்டும் என ஆய்வறிக்கை தெரிவித்தது.

ஆனால், தற்போது ஒரு நாளைக்கு 6 நிமிடங்கள் மட்டுமே சிரித்து மகிழ்ந்தாலே போதும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

இங்கிலாந்தில் 17 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரிய வந்துள்ளது.

இதையும்தான் செய்து பார்க்கலாமே! காசா பணமா என்ன!?

Sunday, December 16, 2012

ஆண்களுக்கு ஆப்பு வைத்த நீதி மன்றம்!?

மும்பை: விபச்சாரம் என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணையும் சார்ந்ததுதான் என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மும்பை, கிரான்ட் ரோடு பகுதியில் உள்ள சிம்ப்ளக்ஸ் கட்டிடத்தில் போலீசார் கடந்த அக்டோபர் 4ம் தேதி அதிரடி சோதனை நடத்தி 400 பெண்களை மீட்டனர். அப்போது அங்கிருந்த வாடிக்கையாளர்கள் 124 பேரையும் அவர்கள் கைது செய்து விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இவர்களை கைது செய்தது சட்ட விரோதமானது என்று அறிவிக்க கோரி பிரபான்ஜன் தவே என்ற வழக்கறிஞர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கன்வில்கர், தானுகா அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கூறுகையில், “வாடிக்கையாளர்களை கைது செய்தது சரியா, தவறா என்பது, ஒவ்வொரு வழக்கின் தன்மை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும். பாலியல் தொழில் பெண்களிடம் செல்லும் வாடிக்கையாளர்களை கைது செய்யலாம் என்றனர். மேலும், வழக்கறிஞர் தவேக்கு 25,000 அபராதம் விதிக்கவும், அதை ஒரு வாரத்தில் செலுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Saturday, December 15, 2012

நனைந்து நடிக்க பிடித்தமான நடிகை!

மழையில் நனைந்து நடிக்க மிகவும் பிடிக்கும் எம்கிறார் இந்த தம்மு நடிகை!

பையா, படத்தில் மழையில் நனைந்தபடி இளவட்ட ரசிகர்களை அவர் பரவசப்படுத்தியதால் தமிழில் இன்னும் பத்து வருடங்களுக்கு தமன்னாவை அடிச்சிக்க ஆளில்லை என்று சொன்னவர்களும் உண்டு.

இருப்பினும் வேங்கை படம் தமன்னாவை கோலிவுட்டிலிருந்து வெளியேற்றி விட்டது. அதனால் மீண்டும் தெலுங்கு தேசத்து நடிகையானார் தமன்னா. இந்த நிலையில், சிறுத்தை சிவா இயக்கும் அஜீத் படத்தின் மூலம் மீண்டும் கோடம்பாக்கத்துக்கு வருகை தர இருக்கிறார் தமன்னா.

இதையடுத்து மார்க்கெட்டில் இருக்கும் அனுஷ்கா, நயன்தாரா உள்ளிட்ட நடிகைகளை அதிர்ச்சியடையச் செயயும் வகையில் தற்போது திடீர் திடீரென்று சென்னைக்கு விஜயம் செய்கிறார் தமன்னா. அப்படி வரும்போது தனது அபிமான ஹீரோக்களை அவர்கள் நடிக்கிற படப்பிடிப்பு தளங்களுக்கு சென்றே பார்த்து பேசி நட்பை புதுப்பிக்கிறார். அப்படி வரும்போது படங்களில் தோன்றுவது போலவே கவர்ச்சி உடைதரித்து வருகிறாராம் அம்மணி.

உடம்பை உளுக்கி குலுக்கி, வளைந்து, நிமிர்ந்து பேசும் அந்த மோக வீச்சில், எதிரில் இருக்கும் நடிகர்கள் வெட வெடத்துப்போகிறார்களாம். இதைப்பார்த்து, இரண்டாவது ரவுண்டுல தமன்னாவின் ஆரம்பமே தூக்கலா இருக்கு. இந்த முறை மொத்த ஜொள் பார்ட்டிகளும் தமன்னாவிடம் சரணடைவது உறுதி என்கிறார்கள்.(இந்த குழுக்களெல்லாம் கோடம்பாக்கத்தை வளைக்க புது உத்திதான் என்கிறது கோலிவுட்).

Friday, December 14, 2012

கள்ள தொடர்பை கண்டுக்காத கடவுள்!?

நம் நாட்டில் ஒரு பழமொழி சொல்வார்கள்., கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனா அங்கே ஒரு கொடுமை அவுத்து போட்டு ஆடிச்சி என்று.?

அது தான் எனக்கு இப்பொழுது நினைவுக்கு வருகிறது.

துப்புரவு பெண்ணுடன் கள்ள இன்பம் - திருப்பதி தேவஸ்தான ஊழியர் சமீபத்தில் கைது.

திருப்பதி திருமலையில் பிரபலமான வெங்கடாசலபதி கோயில் உள்ளது, இந்தக் கோயிலின் தேவஸ்தான ஊழியர் ஒருவர் பெண் துப்புரவு தொழிலாளியுடன் கள்ளத்தனமாக சிற்றின்பம் துய்த்து பிடிபட்டுள்ளார்.

திருமலை ஏழுமலையான் கோயில் உள்ள தேவஸ்தானத்தின் எஸ்.எம்.சி. பக்தர்கள் ஓய்வறையில் சரக்குக் காப்பாளராகப் பணிபுரிந்துவரும் கோபி(40) என்பவரே இவ்வாறு பிடிபட்டுள்ளார்.

கோபியும், அதே தேவஸ்தான அலுலகத்தில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரியும் 30 வயது இளம்பெண்ணும் அடிக்கடி கள்ளத்தனமாக தனிமையில் சந்தித்து தகாத உறவு கொண்டு இருப்பதாக கண்காணிப்பு அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது,

காவல் கண்காணிப்பு பிரிவு மாவட்ட துணை கண்காணிப்பாளர் நஞ்சுண்டப்பா, துணை ஆய்வாளர் மல்லிகார்ஜூனா மற்றும் காவலணியினர் நேற்றிரவு அப்பகுதியில் சோதனை நடத்தியபோது அங்குள்ள ஒரு அறையில் கோபி, பெண் துப்புரவு தொழிலாளியுடன் தகாத உறவு கொண்டிருந்தது தெரியவந்தது, இதையடுத்து காவல் அதிகாரிகள் கோபியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

தேவஸ்தான ஊழியர் பாலியல் குற்றத்தில் கைது செய்யப்பட்ட செய்தி திருமலையில் இதெல்லாம் சகஜம்பா! விஷயம் அதுவல்ல இதையெல்லாம் ஆரிய வந்தேறி தின மல(ம்)ர்,மாலை மலம், தினமனி (பண்ணி) ஊடகங்கள் ஒழித்து மறைத்து விட்டது.(மனிதனால், கல்லில் செய்த கடவுள் கண்டுக்கவா போகுது)

Thursday, December 13, 2012

பழங்கள் உண்பது உணவுக்கு முன்பா பின்பா?

எளிதில் ஜீரணமாகி உடலுக்குத் தேவையான சக்தியையும் மூளைக்குத் தேவையான குளுக்கோஸையும் அளிப்பதில் பழங்களுக்கு இணையே இல்லை. ஆகையால், பழங்களை உணவுக்கு முன் அல்லது பின் என்று சாப்பிடுவதைக் காட்டிலும் தனித்து- அதையே உணவாகக் கருதிச் சாப்பிடுவதே சிறந்த முறை.

அப்போதுதான் அதில் உள்ள சத்துகள் சிதையாமல் அப்படியே நம் உடலுக்குக் கிடைக்கும். பழங்களில் உள்ள நார்ச்சத்து. பழங்களை அரைத்து, வடிகட்டி சாறை மட்டும் குடிக்கும்போது, பெரும்பான்மை நார்ச் சத்தை அது இழந்திருக்கும். நார்ச் சத்து இருந்தால், மலச் சிக்கலை அது களைந்துவிடும். மலச் சிக்கல் அகன்றால், செரிமானக் கோளாறு ஏற்படாது.

இப்படி ஒவ்வொரு சத்தின் பயன்களையும் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம். தவிர, பழங்களைச் சாறாக்கி, பால், சர்க்கரை சேர்த்துக் குடிக்கும் போது, அதில் சேர்க்கப்படும் சர்க்கரையும் பாலும், பழச்சாறின் இயல்பையே குலைத்துவிடும். செரிமானக் கோளாறையும் உருவாக்கக்கூடும்.

அதேபோல, உணவுக்குப் பிறகு பழங்களைச் சாப்பிட்டால், அது ஏற்கெனவே வயிற்றில் இருக்கும் உணவு செரிமானம் ஆவதற்காகக் காத்திருக்காமல், (ஓவர்டேக் செய்து) முன்கூட்டியே ஜீரணமாகிவிடும். அதன் தொடர்ச்சியாக சத்துக்களும் கிரகிக்கப்பட்டுவிடும். இதனால், சிலருக்கு ஏப்பம் போன்ற தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

எனவே, பழங்களைத் தனித்துச் சாப்பிடுவதையே வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். சாப்பிட்ட பிறகுதான் பழம் சாப்பிட வேண்டும் என்று விரும்பினால், சாப்பாட்டுக்கு முன்போ, பின்போ இரண்டு மணி நேர இடைவெளியில் பழங்களைச் சாப்பிடலாம்.''

Wednesday, December 12, 2012

கவலை தரும் கைபேசியிலிருந்து காத்துக்கொள்ள?

வாழ்க்கை தரமும் தொழில்நுட்பமும் மாற நம் லைப் ஸ்டையிலும் மாறி நமக்கு புது புது தொந்தரவுகள் தினம் தினம் சந்திக்க நேரிடுகிறது. இதில் செல்போன் குறுந்தகவல்கள், இதிலிருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி.?

* ஆண்களுடன் தனிமையில் பேசுவதை தவிர்த்திடுங்கள். அதுவும் காட்சியாக பதிவாகி விடக்கூடும்.

* பழகும் நபர் எப்படிப்பட்டவர் என்று தெரியாத நிலையில் தன் நட்பை உறுதி செய்யும் வகையிலான எஸ்.எம்.எஸ்.களை பெண்கள் தவிர்த்திடவேண்டும்.

* மகளிர் விடுதிகளில் தங்கும் பெண்கள் அதிகமான அளவில், எந்தத்தவறும் செய்யாமல் இந்த சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

* திருமணமான ஒரு சில பெண்கள், இத்தகைய ஆண்களிடம் சிக்கிக்கொண்டு தப்பமுடியாமல் தற்கொலையும் செய்திருக்கிறார்கள். ஆனால் தற்கொலை இதற்கு தீர்வு அல்ல. பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக போலீஸ் உதவியை நாடவேண்டும்.

* பெண்கள் சிக்கலில் மாட்டிய பிறகு எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் தவிக்காமல், முதலிலே கவனமாக இருந்து இந்த விஞ்ஞான நாசகர வலைக்குள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதே சிறந்தது.

@ மச்சி சாப்பிட்டாயா?’ என்று கேட்பதில் தொடங்கி, 'குட் நைட் டியர்' என்று வழிவது வரை, செல்போன் வழியே குறுஞ்செய்திகளை (எஸ்.எம்.எஸ்) அனுப்புகிறார்கள். இதுபோலவே படங்கள், வீடியோக்கள், ரெக்கார்டிங் தகவல்களை எம். எம்.எஸ். என்ற முறையில் அனுப்புகிறார்கள்.

அறிவியல் நவீன தொழில்நுட்பமான எம்.எம்.எஸ்., தகவல் தொடர்புக்கு அவசியமான அற்புத தொழில்நுட்பம் என்றால் அதில் மிகையில்லை. ஆனால் அவற்றால் எல்லையற்ற பிரச்சினைகள் முளைத்திருப்பதால் குற்றம் சொல்லாமலும் இருக்க முடிவதில்லை. படம்பிடிக்கவும், பிறகு பயமுறுத்தவும் பயன்படும் ‘எம்.எம்.எஸ்’கள் பல பெண்களின் வாழ்க்கையை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது.

இன்னொருபுறத்தில் எம்.எம்.எஸ். ஆபாசக் காட்சிகள் இளைஞர்களை செக்ஸ் போதை அடிமைகளாக மாற்றிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் பாதிப்பு என்னவோ பெண்களுக்குத்தான் அதிகம். அதனால் பெண்கள் இதில் மிகுந்த விழிப்புணர்வு பெறவேண்டும்., குறிப்பாக ரீ சார்ஜ் செய்யும்போது மிக மிக கவனமாக இருங்கள் இவர்கள்தான் மற்ற நண்பர்களுக்கு உங்கள் செல் நம்பரை தருவது.

Tuesday, December 11, 2012

தோழிக்கும் போலிக்கும் பிடி வாரண்ட்?

ஒரு அரசு பதவியில் இருப்பவர் நீதி மன்றத்தையும், சட்டத்தையும் மதிக்கவேண்டும் அதைப்பார்த்து மக்கள் பின் பற்றுவார்கள், அனால் தமிழ் நாட்டில் நிலையோ வேறு? அடாவடி அராஜகம் செய்தாலும் அரசியலில் இருந்தால் தப்பித்துக்கொள்ளலாம் என்பது தான் இந்தியாவில் நடைமுறை ஆக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா (சொத்துக்கள் போலி பினாமி பெயரில்) மீதான சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சசிகலா (11.12.2012) ஆஜராக வேண்டும் என்றும் இல்லையென்றால் கைது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு கடந்த 20.11.2012 அன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்எஸ் பாலகிருஷ்ணா டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக கூறினார்.

அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் சசிகலா ஆஜராக வேண்டும். இல்லையென்றால் பிடிபிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி கூறினார். இதேபோல் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் ஆஜராக வேண்டும் என்றும் கூறியுள்ளார். அராஜக ஆணவக்காரி ஆட்டக்காரி ஜெயாவுக்கு பிடிவாரண்டு எப்போது பிறப்பிக்கப்படும்?.

Monday, December 10, 2012

மனித உரிமை தினத்தில் உரிமை உண்டா!?

புதுடெல்லி: டிசம்பர் 10-ஆம் தேதி மனித உரிமை தினம் கடைப்பிடிக்கப்படும் இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், ஒடுக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களும் தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்று நம்புவதாக ஐக்கிய நாடுகள் அவையின் வர்கிங் க்ரூப் ஆன் ஹியூமன் ரைட்ஸ் கூறுகிறது.

மனித உரிமை மீறல்களை தடுக்க மத்திய அரசு உடனடியாக தலையிடவேண்டும் என்று மனித உரிமைகள் தொடர்பான வருடாந்திர அறிக்கையை வெளியிட்ட W.G.H.R கன்வீனர் மிலூன் கோத்தாரி கூறினார்.

கடந்த 4 ஆண்டுகளில் பெருமளவில் ராணுவம் மயமாக்கல் நடந்துள்ளதாக வருடாந்திர அறிக்கை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மனித உரிமை ஆர்வலர் பிருந்தா க்ரோவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியது: “இந்தியாவில் பெருமளவில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு கறுப்புச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சமூக-பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களையும், அரசியல் எதிரிகளையும் அடக்கு ஒடுக்கவும், வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் அரசு இவற்றைச் செய்துள்ளது. ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவை மற்றும் மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கையை அரசு இதுவரை பரிசீலிக்கவில்லை. சட்டம் ஒழுங்கை பேணுகிறோம் என்ற பெயரில் சட்டத்தின் பாதுகாவலர்கள் அக்கிரமங்களுக்கு தலைமை வகிக்கின்றனர். போலி என்கவுண்டர்களும், அநீதமான சிறைக்காவல்களும், பாலியல் வன்கொடுமைகளும் நாட்டின் பல பகுதிகளில் நடந்தேறிவருகிறது. அமைதியான முறையில் போராடுபவர்களை கூட கொடுமைப்படுத்தும் செயல் நடக்கிறது” என்று பிருந்தா க்ரோவர் கூறினார்.

பொருளாதார வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மேலும் ஏழ்மையையும், மனித உரிமை மீறல்களையுமே உருவாக்குகிறது என்று ஹவுஸிங் அண்ட் லாண்ட் ரைட்ஸ் நெட்வர்கின் நிர்வாகி சிவானி சவுதரி கூறினார். உலகில் அதிகமான மக்கள் பட்டினியில் வாடும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வளர்ச்சிக்கு பலியாகி வருடந்தோறும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடிபெயர்க்கப்படுகின்றனர். பொருளாதார வளர்ச்சி குறையும் வேளையில் அவசரக் கூட்டங்களை நடத்தி தீர்வு காண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசு, சமூக பிரச்சனைகளை தீவிரவமாக கருதுவதில்லை என்று சிவானி சவுதரி குற்றம் சாட்டினார்.

Saturday, December 8, 2012

எந்திரன் நண்பனை தொடர்ந்து புது வியூகம்

பிரமாண்டமான வித்தியாசத்திற்கு பெயர்பெற்ற இவரின் அடுத்த பட வேளையில் மும்முரமாக உள்ளார்., எதையும் உலக தரத்தில் அமைய ஆசைபடுபவர்.

எந்திரன் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ‘நண்பன்’ படத்தை வெற்றிகரமாக இயக்கிவிட்டு மறுபடியும் சீரியசான புராஜெக்டிற்குள் இறங்கியிருக்கிறார் ஷங்கர். ஷங்கருடன் இந்த முறை இணைந்திருப்பவர் நடிகர் விக்ரம்.

முன்பு ஷங்கரும் விக்ரமும் இணைந்த அந்நியன் சூப்பர் ஹிட் படம் என்பதால், ஷங்கர் இயக்கும் ‘ஐ’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது சீனாவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருக்கும் ‘ஐ’ படக்குழுவில் ஷங்கர் இணைத்துள்ளது ஹாலிவுட்டின் மிகச்சிறந்த சண்டைப் பயிற்சியாளர் ’யூன் வூ பிங்’.

இவர் மேட்ரிக்ஸ், கில் பில், க்ரௌச்சிங் டைகர் & ஹிட்டன் டிராகன் ஆகிய படங்களுக்கு ஆக்‌ஷன் காட்சிகள் அமைத்துக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டாக ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்யும் விக்ரம், ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு எப்படி பதக்கம் வெல்கிறார் என்பது தான் ’ஐ’ படத்தின் கதை எனப் பேசப்பட்டு வரும் நிலையில், ஒலிம்பிக்கில் நடக்கும் முறைகேடுகளும் படத்தில் அலசப்படும் என்று ’ஐ’ படத்தை பற்றி பல செய்திகள் கோடம்பாக்கத்தில் உலா வருகின்றன.

Friday, December 7, 2012

காதலர்களுடன் ஓடுவதை தடுக்க கட்டுப்பாடு?

பாட்னா: காதலர்களுடன் ஓடுவதை தடுக்க பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என பீகார் மாநிலம் கிசன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சுந்தர்வாடி பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்கள் சிலர் தங்கள் காதலர்களுடன் ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் புகார்களைத் தொடர்ந்து பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதன்படி, கோச்சடம் வட்டாரத்தின் கீழுள்ள சுந்தர்வாடி பஞ்சாயத்துப் பகுதியில் பெண்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது. மீறிப் பயன்படுத்தினால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என பஞ்சாயத்துக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இம்முடிவை அமல்படுத்துவதை மேற்பார்வையிட ஊர்க்குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த விசித்திர உத்தரவு பற்றி மாவட்ட நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதே போல, கடந்த ஜூலை மாதம் உத்தரப் பிரதேசத்திலும் நவம்பரில் ராஜஸ்தானிலும் பெண்கள் செல்போன் பயன்படுத்த தடையுத்தரவு போடப்பட்டது குறிப்பிடத் தக்கது.

Thursday, December 6, 2012

பலர் வாழ்க்கையை புரட்டி போட்ட மினாமி?

பலர் வாழ்க்கையை புரட்டி போட சுனாமியால் மாத்திரம்தான் முடியுமா?, தகுதி இல்லாதவரை தேர்ந்தெடுத்தாலும் பலர் வாழ்க்கை இப்படித்தான். முதாளியாக இருந்தவர் இப்போது காவலாளி., ஆரிய கூத்தாடி ஜெயா' ஆட்சியில்.

நாள் ஒன்றுக்கு 16 முதல் 18 மணி நேரம் மின்வெட்டு நிலவுவதால் பல குறுந்தொழில் முனைவோரின் ஜாப் ஆர்டர் பறிபோய் விட்டது. இந்த ஆர்டர்எல்லாம் சமீப காலமாக ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு சென்றுவிட்டன.

ஜாப் ஆர்டர் பறிபோன காரணத்தால் நிறைய குறுந்தொழில் முனைவோர் தங்களது நிறுவனங்களை மூடிவிட்டு, வேறு தொழிலை தேட துவங்கியுள்ளனர். இப்படிப்பட்டவர்களில் கணபதியை சேர்ந்த செல்வம் (32) என்பவரும் ஒருவர். இவர், கணபதியில் உள்ள பாலாஜி காம்ப்ளக்ஸ் நடேச கவுண்டர் 2வது வீதியில் முகுந்தன் பாலிமர்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். பிளாஸ்டிக் மோல்டர் உதிரி பாகங்கள் தயாரித்து சப்ளை செய்து வந்தார். மின்வெட்டு காரணமாக உற்பத்தி குறைந்துவிட்டது. இதனால், ஜாப் ஆர்டர்களை இழந்தார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கம்பெனியை பூட்டிவிட்டு �காவலாளி’ வேலைக்கு சென்று வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக முதலாளி’யாக இருந்து வந்த இவர், மின்வெட்டு காரணமாக காவலாளி’யாக மாறி விட்டார்.

இதுபற்றி செல்வம் கூறியதாவது: என்னால் முடிந்த அளவுக்கு முதலீடு செய்து ஆலையை இயக்கி வந்தேன். முன்பு, கம்பெனி வாடகை, வீட்டு வாடகை, வங்கி வட்டி, பிள்ளைகள் கல்வி கட்டணம் என எல்லா செலவுகளும் போக மீதம் 5 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்தது. ஆனால், தற்போது, பகலில் 4 மணி நேரம்கூட தொடர்ச்சியாக மின்சாரம் இல்லை. இதனால், ஆலையை இயக்க முடியவில்லை. பிளாஸ்டிக் மோல்டு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக 8 மணி நேரம் மின்சாரம் இருந்தால்தான் ஆலைகளை இயக்க முடியும். ஏனென்றால் இங்குள்ள மெஷினரிகள் அப்படிப்பட்டவை. நன்றாக சூடேறிக்கொண்டு இருக்கும்போது மின்சாரம் போய்விட்டால் மீண்டும் அதை தயார்படுத்த இரண்டு மணி நேரம் ஆகும். தயாராகி வரும்போது மீண்டும் மின்சாரம் போய்விடுகிறது. இதனால், ஆலையை இயக்கவே முடியவில்லை.

என்னைப்போலவே இதர பிளாஸ்டிக் மோல்டு நிறுவனங்களும் மின்வெட்டு காரணமாக அடியோடு முடங்கி விட்டன. மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. வங்கியில் நகைகளை அடமானம் வைத்து ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். இதற்கு வட்டிகூட செலுத்த முடியவில்லை. எனது குடும்பத்தினர் என்னை கேவலமாக பார்க்க துவங்கினர். எனது நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு கடன் வாங்கி இந்த ஆண்டு தீபாவளி போனஸ் கொடுத்தேன்.

இதற்கு பிறகும் கம்பெனியை நடத்த முடியாது என்ற சூழ்நிலை வந்துவிட்டதால் குடும்ப வருமானம் கருதி காவலாளி வேலைக்கு செல்ல துவங்கி விட்டேன். மாதம் ரூபாய் 8 ஆயிரம் சம்பளம் தருவதாக கூறியுள்ளனர். இரண்டு வாரம்தான் ஆகிறது. இன்னும் முதல் மாத சம்பளம் வாங்கவில்லை. பல குறுந்தொழில் முனைவோர் மின்வெட்டு காரணமாக படாதபாடுபடுகின்றனர். அவர்களால், கீழே இறங்கி வந்து வேறு வேலை பார்க்க முடியவில்லை. அதற்கு மனம் இடம்கொடுக்கவில்லை. ஆனால், குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதால் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் மூலம் காவலாளி வேலைக்கு சென்று வருகிறேன். மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்ட பிறகுதான் என்னால் மீண்டும் கம்பெனியை நடத்த முடியும். தற்போது வாங்கும் சம்பளத்தை வைத்து வங்கி கடனுக்கு வட்டி செலுத்துவேன். மின்வெட்டு பிரச்னை என்னை தெருவுக்கு இழுத்து வந்துவிட்டது’ என கூறினார்.

தொடர்ச்சியாக 8 மணி நேரம் மின்சாரம் இருந்தால்தான் ஆலைகளை இயக்க முடியும். பிளாஸ்டிக் மோல்டு நிறுவனங்களும் மின்வெட்டு காரணமாக முடங்கி விட்டன.மாதம் ஒன்றுக்கு ரூபாய் 10 ஆயிரம் நஷ்டம் ஏற்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். இதற்கு வட்டிகூட செலுத்த முடியவில்லை.எனது குடும்பத்தினர் என்னை கேவலமாக பார்க்க துவங்கினர். காவலாளி வேளையில் மாதம் ரூ.8ஆயிரம் சம்பளம் தருவதாக கூறியுள்ளனர்.

Wednesday, December 5, 2012

பெரிய ஹீரோக்கள் இல்லாமல் பெரிய ஹிட்!

பெரிய ஹீரோவோ, ஹீரோயினோ இல்லாமல். பெரிய நட்சத்திரங்கள் யாரும் நடிக்கவில்லை, மாறுபட்ட லொக்கேஷன்கள் இல்லை, பறந்து பறந்து படப்பிடிப்புகள் இல்லை. இப்படி எதுவுமே இல்லாமல் ஒரு படம் உருவாகி பெரிய ஸ்டார் பட்ஜெட் படங்களின் வசூலையெல்லாம் தூக்கிக் சாப்பிட்டு விட்டது என்றால் நம்பத்தான் முடியவில்லை.

ஆனால் இது நிஜம். அந்தப்படம் தான் ஹோட்டல் ட்ரான்சில்வேனியா இது ஒரு 3டி அனிமேஷன் படம். முழுக்க சோனி பிக்சர்ஸ் அனிமேஷன் கற்பனையில் வடிவமைப்பில் உருவான படம். இயக்கியுள்ளவர் கெண்டி தார்த்தா கோவ்ஸ்கி.

ட்ராகுலா என்றால் ரத்தம்,பீதி மனிதர்களை கொல்வது என்று இதுவரை பயமுறுத்தியே வந்திருக்கிறார்கள். டிராகுலாவை வைத்து வயிறு வலிக்க சிரிக்க வைக்க முடியும் அதுவும் குழந்தைகளை கவர முடியும் நிரூபித்துள்ள படம்தான் ஹோட்டல் ட்ரான்சில்வேனியா அனிமேஷன் பாத்திரங்களுக்கு ஆடம் சாண்ட்லர்,ஆன்டி சம்பெர்க்,ஜெயின் ஜெம்ஸ் போன்ற நட்சத்திரங்கள் குரல் கொடுத்துள்ளனர்.

85 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் செப்டம்பர் 28-ல் வெளியானது. முதல் இரண்டாடு நாட்களிலேயே 4,25,22,194 டாலர்களை வசூல் செய்தது. இந்த வசூல் வீச்சு பிற படங்களை பின்னுக்குத் தள்ளி விட்டது. நவம்பர் 25 வரையிலான வசூல் 291 455 525 டாலர்கள். அதாவது குறுகிய காலத்தில் 291 மில்லியன் டாலர்களை அள்ளியிருக்கிறது. இதில் உள்நாட்டு வசூல் 49.3% என்றால் சில வெளிநாட்டு வசூல் 50.7% இன்னும் ஏராளமான வெளிநாடுகளில் வெளியாக வேண்டியும் உள்ளது. நம் நாட்டில் வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கிறது இப்படம்.

Tuesday, December 4, 2012

அதிக கோபத்தை வரவழைக்கும் தருணங்கள்!

லண்டன்: லண்டனில், 2,000க்கும் அதிகமானவர்களிடம், கோபம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. 10ல் ஆறு பேர், காரணமில்லாமல் கோப்படுவதாகவும், நான்கில் ஒருவர், கோபப்படும் போது, கட்டுப்பாட்டை இழந்து விடுவதாகவும் தெரிவித்து உள்ளனர்.

பிரிட்டனை பொறுத்தவரை, ஒருமாதத்துக்கு ஒவ்வொருவரும், 28 முறை கோபப்படுவதாகவும், சராசரியாக ஆண்டுக்கு, 336 முறை கோபப்படுவதாக தெரியவந்து உள்ளது. அதாவது ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.

உறவினர்களால், நான்கில் ஒருவர் கோபப்படுவதாக தெரிவிக்கின்றனர். தொலைபேசியில் வரும் தேவையில்லாத அழைப்புகள், இன்டர்நெட் கோளாறுகள், சரியான பொருட்களை வினியோகிக்காதது, நிகழ்ச்சிகள் கடைசி நேரத்தில் ரத்தாவது, உள்ளிட்ட பல்வேறு காரணங்கள், பலருக்கும் கோபத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலை நேரத்தில் தான், குறிப்பாக திங்கட்கிழமைகளில், அலுவலக நேரங்களில், கோபம் அதிகமாக ஏற்படுவதாகவும், இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Monday, December 3, 2012

முச்சதமடித்து நிருபித்த ஜடேஜா!

ராஜ்கோட், டிச.4: ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற போட்டியில் ரயில்வே அணிக்கு எதிராக ரவீந்திர ஜடேஜா 331 ரன்கள் குவித்தார். இதன்மூலம் முதல்தர போட்டிகளில் 3 முறை முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதன்மூலம் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஜடேஜா.

சவுராஷ்டிரா ஆல்ரவுண்டரான ஜடேஜா இதுபற்றி மேலும் கூறுகையில், ‘கடந்த ஆறேழு மாதங்களாக தேசிய அணியில் இல்லாத நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறேன். தற்போது முச்சதம் அடித்த பிறகு, களத்தில் நீண்ட நேரம் நின்று ஆட முடியும் என்பதை நிரூபித்திருக்கிறேன். மேலும், ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிக்கு நான் தகுதியானவன் என்பதையும் நிரூபித்திருக்கிறேன்.

தேசிய அணியில் இருந்து நிறுத்தப்பட்ட பிறகு, எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருந்தேன். இதற்காக கடுமையாக உழைத்தேன். ஒரு சீசனில் இரண்டு முச்சதம் அடிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில், அது அவ்வளவு எளிதானதல்ல. குஜராத் அணிக்கு எதிரான துவக்க ஆட்டத்தில் 303 ரன்கள் எடுத்தது எனது சிறப்பான ஸ்கோர் ஆகும்’ என்றார்.

Sunday, December 2, 2012

முதலிடம் வகிக்கும் தமிழகம் குஜராத்?

புதுடெல்லி:. மகளிருக்கு எதிரான குடும்ப வன்முறை வழக்குகள் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-வது இடத்தை மோடி ஆளும் குஜராத் பிடித்துள்ளது.

ஒரு பெண் முதல்வராக உள்ள தமிழகத்தில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மக்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தில், மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சர் கிருஷ்ணா தீரத் கூறியது: தேசிய குற்றப் பதிவேடு ஆணையகத்தின் புள்ளிவிவரங்களின் படி, இந்தியாவில் 2011ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பாக 9,431 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் அதிகளவாக 3,983 வழக்குகள் பதிவாகியுள்ளன. குஜராத்தில் 3,266 வழக்குகளும், மேற்கு வங்கத்தில் 1,661 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, 36 புகார்களை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரித்து வருகிறது. இவற்றில், 21 சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்றவை என்றார் அவர். (மோடியோ முதல் மாநிலம் ஆக்குவேன் என்று சொல்லி மகளிருக்கு எதிராக அரவேக்காடு அறிக்கைகளை விட்டு மாட்டிக்கொண்டார்., ஆட்சியில் அமர்ந்த ஜெயாவோ தமிழகத்தை குஜராத்தை போல் மாற்றுவேன் என்று அடாவடி ஆட்சி நடத்துகிறார் மோ(கே)டியைப்போல். அயோக்கியத்தனம் செய்யவே அரசியலுக்கு வந்தவர்கள் இருவரும்).

Saturday, December 1, 2012

ஐயோ! அதுவா!! ச்சீய் ச்சீய் உ(ணவு)வே!!!

கடல் வாழ் உயிரினம்!! இதில் ஏராளமான் ஒமேகா-3- கொழுப்பு அமிலம் (Omega-3 Fatty Acids) உள்ளதால், இது மூளைக்கும், இதயத்திற்கும் நல்லது. இதனால் நினைவுத் திறன் அதிகரிக்கும். நினைவு மறதி நோய் (Dementia and Alzheimer's Disease) பாதிக்காது. இப்படி கடல் மீனை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், குழந்தைகளுக்கு பலவகை பிரச்சினைகளுக்கு தீர்வு தருகிறதாம். இதுலுள்ள DHA (Docosahexaenoic Acid) என்ற வேதிப்பொருள் அவர்களின் அதிகமான் செயல்திறனையும் (Hyperactivity), நடத்தை கோளாறுகளையும் (Behavioural Problems) சரிசெய்வதாகவும், மேலும் அவர்களின் கல்வி தொடர்பான திறமைகளை அதிகரிப்பதாகவும், கவன ஈர்ப்புத் திறன் கூடுவதாகவும் ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கடல் உணவுப்பொருள்கள் இதயத்தின் நலத்துக்கும், அதனைப் பராமரிக்கவும் மிகவும் உதவுவதாக பல ஆதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாரம் ஒரு முறை மீன் சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு வருவது பாதியாக குறைக்கப்படுகிறதாம். பாரம்பரியமாக மீனை தொடர்ந்து உண்ணும் இந்நூட் இன மக்கள் மற்றும் ஜப்பானியர்களுக்கு இதயப் பிரச்சினைகள் மற்றும் மாரடைப்பு போன்றவை மிகக் குறைவாகவே வருகிறதாம். மீன் சாப்பிடுபவர்கள் மற்றும் மீன் சாப்பிடாதவர்களிடையே கணக்கெடுப்பு உலகம் முழுவதும் நடத்தியதில்தான் இந்த தகவல்கள் கிடைத்தன. மேலும் அமெரிக்க வாழ் செவிலிகளிடம் மீன் மற்றும் கடல் உணவு உண்ணுவது தொடர்பாக தகவல் சேகரித்ததில் அவர்களுக்கு இதயப் பிரச்சினை 50%, சர்க்கரை நோயின் வாய்ப்பு 60% குறைந்தது தெரிய வந்தது.

மாதம் மூன்று முறை மீன்/கடல் உணவு உண்டால் உங்களின் இதயத்திற்கு, சிக்கல் வராதாம். மாரடைப்பு, ஸ்ட்ரோக்கிலிருந்து தப்பிக்கலாமாம். மீன் இரத்தக் குழாய்களில் இரத்தம் கட்டியாகி அடைப்பதை தவிர்க்கிறது. அதிக கொழுப்பு உள்ள உணவு மீனின் எண்ணெயிலுள்ள EPA, (Eicosapentaenoic Acid (EPA) and Docosahexaenoic Acid (DHA) & இயற்கையான ஒமேகா-3 - கொழுப்பு அமிலம் போன்றவை தற்காப்பு சக்தியை அதிகரிக்கிறது.இவர்களுக்கு DHA என்பது பொதுவாக கருவில் வளரும் குழந்தையின் துவக்க காலத்தில் மூளை மற்றும் கண்ணின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. இது மூளை வளரும்போது தகவல்களுக்கு பதிலிறுக்க மூளையின் செல்களைத் தூண்டுகிறது. கருவுற்றிருக்கும் தாய் மற்றும் குழந்தை பெற்ற தாய்க்கும் மிகவும் நெருங்கிய நன்மை செய்யும் நண்பன்.

தாய்ப்பாலில் DHA மற்றும் அரக்டானிக் அமிலம் (Arachidonic Acid) இருப்பதால், தாயப்பால் குடித்த குழந்தைகளின் கண்பார்வை நன்றாகவும், மூளைத்திறன் அதிகமாகவும் இருக்கிறது. DHA மகப்பேறு காலத்தில் உண்டாகும் மனவழுத்தத்தைக் குறைக்கிறது. பொதுவாக கடல் மீன் உண்பதன் மூலம் மன இறுக்க நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

சில நாடுகளில் இந்த DHA மற்றும் ஒமேகா-3 -கொழுப்பு அமிலம் குறைவால் குழந்தைகள் மிகவும் பாதிக்கப் படுகின்றனர். இதற்கு நிகரான வெளி உணவையோ/ மாற்றுப் பொருள்களையோ கொடுப்பது சிரமம். முதுமைக் காலத்தில் நமக்கு ஏற்படும் நினைவு மறதி நோய் மற்றும் மூளையின் செயல்பாட்டுத் திறன் (Dementia and Alzheimer's Disease) பிரச்சினைகள் வரும் அளவை கடல் மீன்/உணவு பெருமளவு குறைக்கிறது. உடல் பருமன் வராமல் தடுக்கிறது.

கண்ணின் பல பிரச்சினைகளுக்கு கடல் மீன் உணவு நல்லது. புற்று நோய் வரும் அபாயத்தை தவிர்க்கிறது. இரண்டாம் வகை சர்க்கரை நோயும் இதனால் குறைகிறது. இரத்தக் குழாயினுள் இரத்தம் உறைதலை, இரத்தக் கட்டியைத் தவிர்க்கிறது. மூட்டு வலி மற்றும் கீல்வாத வலியைக் குறைக்கிறது. நுரையீரலைக் கண்காணித்து, பாதுகாத்து, சுவாசம் தொடர்பான சங்கடங்கள் வராமல் கவனித்துக் கொள்கிறது.

ஒமேகா-3 -கொழுப்புகள் (Omega-3 Fats) நமது தோலை பளபளவென மினுக்கும் அழகுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. தோல் நோய்களை அண்டவிடாமல் பார்த்துக் கொள்கிறது. முதுமைக் காலத்தில் கொலாஜென் (Collagen) சிதைவால் ஏற்படும் தோல் சுருக்கத்தையும் குறைக்கிறதாம். பொதுவாக ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் சீரணப் பிரச்சினைகளைத் தவிர்க்கிறது. உடல் வளர்ச்சிக்கு பிரமாதாய் உதவுகிறது.

குறிப்பு: இத்தனை பயன்களும் குழம்பு மீனால்தான். வருக்கும் மீனில் கொஞ்சம் குறையும். வறுத்த மீனில் கொலஸ்டிரால் வரும்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!