Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, September 30, 2012

தனியா போய் வாய்ப்பு கேட்ட தகராறு! தண்ணியோட போய் கேட்ட வரலாறு

தவளை தன் வாயால் கெடுவது போல, சட்டசபை தேர்தலில், திமுக.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக சொல்லி எக்கு தப்பா பேசி, சினிமா வாய்பே இல்லாத அளவுக்கு தள்ளப்பட்டார் நடிகர் வடிவேலு.

இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகம், தெனாலிராமன் ஆகிய இரண்டு கதைகளை ஓ.கே செய்து வைத்திருக்கிறார். ஆனால் இந்த படங்களை பணம் போட்டு தயாரிக்கத்தான் யாரும் முன்வரவில்லை. இதனால் அடுத்து நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொல்லிக்கொண்டு மதுரைக்கும் சென்னைக்கும் பறந்து கொண்டிருக்கிறார் வடிவேலு.

இந்த நிலையில், சமீபத்தில் வடிவேலு சொந்தமாக படம் தயாரித்து நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதைப்பற்றி வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் நடிக்கும் சில நடிகர்களிடம் விசாரித்தபோது, அவராவது சொந்த காசில் படம் எடுப்பதாவது என்கிறார்.

யாராவது பணம் போட்டால் வேண்டுமானால் நடிப்பார். ஒருநாளும் சொந்த காசில் படம் எடுக்க மாட்டார் அவர். அவருடன் எந்நேரமும் இருக்கும் நடிகர்கள் நாங்கள். அவர் எவ்வளவு பெரிய கஞ்சன்,வறட்டு கவுரவம் பிடிப்பவர் என்று எங்களுக்குத்தானே தெரியும். அதனால் அந்த செய்தி கண்டிப்பாக உண்மையாக இருக்காது என்கிறார்.

Saturday, September 29, 2012

சிக்கு புக்குவில் சிக்கும் எதிர்கால மாண(னை)விகள்!!

ஆடலுடன் பாடலைக்கேக்க சுகம் சுகம் இது பாட்டு அதே போன்று பிஞ்சுக்களின் எண்ணமும் நச்சத்திர ஹோட்டல்களில் மதுக்கூடங்களில் பாடல்களுடன். 'பப்பு'களில் "டிஸ்கொ'வாக. (இன்று மாணவி நாளை ஒருத்தருக்கு மனைவியாக போகிறவள்)

தலைநகரில் பதினெட்டைத் தொடாத சிறுவர்கள் மதுக்கோப்பைகளுடன் ஆ(கூ)டல் அழகியருடன் மயங்கி சரிந்து சீரழியும் காட்சிகளை இந்த இடங்களில் அன்றாடம் காண முடிகிறது.

சென்னை எழும்பூர் ஸ்டார் ஓட்டலில் ப்ளஸ்-டூ படிக்கும் மாணவர்கள் சிலர் உடன்படிக்கும் மாணவிகளோடு வந்து மதுபோதையில் குத்தாட்டம் போட்டு அதன் உச்சகட்டமாக தாக்குதலில் ஈடுபட்டது லேட்டஸ்ட் அவலம். மற்ற இடங்களில் உள்ள ஓட்டல்களில் நிலவரம் எப்படி? விசாரித்தோம்.

மூன்று மற்றும் ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஓட்டல்கள் அந்தந்த அடையாளத்துடன் அழைக்கப் பட அதற்கு கீழுள்ளவைகள் வெறுமனே நட்சத்திர ஓட்டல்கள் என்ற அடையாளத்துடன் ஜொலிக்கின்றன.

இது தவிர பண்ணை வீடுகள், "பொட்டீக்' என்ற பெயரில் அழைக்கப்படும் சிறு சிறு சொகுசு குத்தாட்ட விடுதிகள், "பார்'களுடன் நடனமிடும் "பப்'பு வகைகள் என்று சீரழிவுக்கு பல முகங்கள் கணக்கில் காட்டப்படுகின்றன.

முதலில் "பப்'புகள் பற்றி விசாரித்தோம். சனி, ஞாயிறுகளில் "பப்'பே கதியாக கிடந்து பொருளாதார ரீதியாக சுருண்டிருக்கும் கோபி என்ற இளைஞர் நம்மிடம், ""கிழக்கு கடற்கரைச் சாலையில் கண்ணுக்குத் தெரிகிற அளவில் 36 "பப்'புகள் உள்ளன. தெரியாதவை நிறைய... பார் லைசென்ஸை மட்டுமே வாங்கிக் கொண்டு நடனம், சூதாட்டம் என அத்தனை அம்சங்களையும் இங்கே செய்து கொண்டி ருக்கிறார்கள். மற்ற நாட்களில் எப்படியோ தெரியாது. சனி, ஞாயிறுகளில் இரவு 7 மணிக்கு நான் உள்பட குறைந்தபட்சம் நூறு பேராவது "பப்'புகளில் டான்ஸ் ஆடுவோம் என்றார் மப்பில் இல்லை இல்லை பப்பில்.

Friday, September 28, 2012

பிழைக்க வந்தவருக்கு ஒட்டு போட்டா ..! தன் புத்தியை காண்பிக்கிறார்!?


தமிழகத்தில் இன்று ஹாட் டாபிக் பவர் கட், நாயை குளுப்பாட்டி நாடு வீட்டில் வைத்தாலும் அது என்னத்தையோ கிளப்பிக்கிட்டு அதை துன்னதான் போகும் என்பார்கள்.


வேலை தேடி வந்தவருக்கு (படத்தில் நடிக்க) ஒட்டு போட்டால் அவர் தன் புத்தியைத்தான் காண்பிக்கிறார். அந்தவகையில் தமிழகத்துக்கு கிடைத்த தரித்திரியம் பாசிச ஜெயா செய்யும் அடாவடி அரசியலும், கூடங்குளத்திற்கு வலு சேர்ப்பதற்காக பாசிச புத்தியை கையாளுகிறார். மின்  வெட்டை அதிகமாக்கி  மக்களை தவிக்கவைத்து கூடன்குள அணு மின் நிலையம் வேண்டும் என நியாயப்படுத்த பார்ப்பனிய தந்திர  புத்தியை கையாளுகிறார்.

ஒருமணி நேரத்திற்கொருமுறை பவர் கட் என்பதுதான் தமிழகத்தின் தற்போதைய நிலவரம். (நாடுவிட்டு நாடு வந்தவர்). நாளொன்றுக்கு 12 மணி நேரத்திற்கும் குறையாமல் இருளில் மூழ்கிக் கிடக்கிறது தமிழகம். பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களையும் வாட்டி வதைக்கும் ஜெ. அரசின் இந்த துன்பச் சாதனைக்கு எதிராக மக்கள் கிளர்ந் தெழுந்துப் போராடுவதைப் பல ஊர்களிலும் காண முடிகிறது.

அரசியல் கட்சிகளின் ஆதரவை எதிர்பார்க்காமல், அந்தந்த பகுதியில் உள்ள மக்களும் தெருவுக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கோஷங்களிலும் கோப வார்த்தை களிலும் ஜெ.அரசு வறுத்தெடுக்கப்படுகிறது. "கரண்ட்டு தர முடியாத கையாலாகாத அரசு' என்று வெளிப்படையாக விமர்சிக்கிறார்கள் மக்கள்.

அவர்களின் பாதிப்பை தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேரில் காண முடிந்தது. டாலர்களில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் தொழில்நகரங் களான கோவை, திருப்பூர் பகுதிகளில் தற்போது நாள்தோறும் 16 மணி நேரம் பவர் கட். அதனால் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட, 8 லட்சத்திற்கும் அதிகமானத் தொழிலாளர்கள் நடுரோட்டில் நிற்கிறார்கள். பொது மக்கள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி யுள்ளனர்.

பவுண்டரி நடத்தும் ரங்கராஜன், "நான் காஸ்டிங் ஜாப் ஆர்டர் எடுத்துட்டுப்பண்ணிட்டிருக்கேன். என்கிட்ட 20 பேர் வேலை செய்றாங்க. ஒரு மாசத்துல மட்டும் 60 டன் காஸ்டிங் டெலிவரி கொடுத்துக்கிட்டிருந்தேன். உற்பத்தி செலவு போக மாசம் 60ஆயிரம் ரூபாய் நிற்கும். இப்போது கரண்ட் கட்டால மாசம் 40ஆயிரம் லாஸ் ஆகுது.

தொழிலாளர்களும் 500, 600ன்னு சம்பாதிச்சிக்கிட்டிருக்காங்க. இப்ப எப்ப கரண்ட்டு வரும்னு 12 மணி நேரம் காத்திருந்து, ஒரு மூணு மணி நேரம் வேலை செஞ்சி 150 ரூபாய் சம்பாதிக்கிறாங்க.. அவங்களால எப்படி குடும்பத்தைக் காப்பாத்த முடியும்? இப்படித் தினமும் கரண்ட்டை கட் பண்றதுக்கு, வாரத்தில் மூணு நாள் முழுசா கரண்ட்டைக் கட் பண்ணி, தொழிற்சாலைகளுக்கு லீவு விட்டுட்டு, மீதி நாலு நாள் கரண்ட் சப்ளை பண்ணி முழுசா வேலை பார்க்க அனுமதிச்சா முதலாளி-தொழிலாளி இரண்டு பேருக்குமே நல்லது'' என்கிறார்.

Thursday, September 27, 2012

அதிபர் தேர்தலுக்காக ஆடைகளை துறக்க தயாராகும் ஆடல் அழகி!

எதற்கெடுத்தாலும் ஆடைகளை துறக்க தயாராகுவது தற்போது ஒரு பேசனாக மாறிவிட்டது இப்போது., அந்த வகையில்.

வாஷிங்டனில் கடந்த திங்கட்கிழமை இரவு, பாப் பாடகி மடோனாவின் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் ரசிகர்களின் மத்தியில் மடோனா பேசுகையில்:

தேர்தலில் அவர் 2வது முறையாக வெற்றி பெற்றால், எல்லாவற்றையும் துறக்க நான் தயார். என் ஆடைகளை துறக்க தயார். நல்லதோ கெட்டதோ அவருக்கு ஓட்டு போடுங்கள். அவர் நாட்டுக்கு நம்பிக்கை அளிப்பவராக இருக்கிறார்’’என்று கூறினார்.

அத்துடன் திடீரென தனது மேலாடையை கழற்றி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அவரது முதுகில் ஒபாமா என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

Wednesday, September 26, 2012

காவலர்களா க(போ)வோதிகளா இந்திய காவல்துறை?

புதுடெல்லி: முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க அரபு மற்றும் உருது மொழியில் எழுதப்பட்ட நர்ஸரி புத்தகங்களையும், கவிதைகளையும் ஆதாரமாக காட்டும் இழிவான நிலைக்கு இந்திய போலீஸ் தள்ளப்பட்டுள்ளது.

தடைச் செய்யப்படாத புத்தகங்களையும், திருக்குர்ஆன் வசனங்களையும், இஸ்லாத்தைக் குறித்த பாடப் புத்தகங்களையும் கைப்பற்றி இவை ‘நாங்கள் தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றிய ஆதாரங்கள்’ என்று போலீஸ் கூறியுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்திய அரசால் அநியாயமாக தடைச் செய்யப்பட்ட சிமி என்ற இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் உறுப்பினர்களான அப்பாவி இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க நீதிமன்றத்தில் போலீஸ் ஆதாரமாக இவற்றை தாக்கல் செய்துள்ளது. இத்தகவலை பிரபல ஆங்கில ஏடான த இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

சிமி இயக்கம் தடைச் செய்யப்பட்ட பிறகு அந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் என்று குற்றம் சாட்டி போலீஸ் கைது செய்து பின்னர் மலேகான் குண்டுவெடிப்பின் சூத்திரதாரி என குற்றம் சாட்டிய ஷபீர் அஹ்மத் மஸீஹுல்லாஹ் மற்றும் மும்பையில் இருந்து கைது செய்யப்பட்ட நஃபீஸ் அஹ்மத் ஆகியோரிடமிருந்து கைப்பற்றியது இத்தகைய புத்தகங்களாகும்.

2006-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி நஃபீஸ் மற்றும் ஷபீரை கைது செய்த பிறகு போலீஸ் நஃபீஸின் வீட்டில் சோதனை நாடகத்தை நடத்தியது. அப்பொழுது அங்கிருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் கறுப்பு ரெக்ஸின் பையில் இருந்தவை குழந்தைகளுக்கான மாத இதழ் உமங், சிமி தடைச்செய்யப்படுவதற்கு முன்பாக அந்த இயக்கத்தை அறிமுகப்படுத்தும் கட்டுரைகள் ஆகியனவாகும்.

2008-ஆம் ஆண்டு இந்தூரில் இருந்து சிமி உறுப்பினர் என குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட யூனுஸ் கானுக்கு எதிராக போலீஸ் தாக்கல் செய்த ஆதாரம், இந்தியாவில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் நிலைமையை விளக்கும் கட்டுரையாகும். சிமி தலைவர்களுக்கு நார்கோ அனாலிஸிஸ் (உண்மைக் கண்டறியும் சோதனை) டெஸ்ட் குறித்து 2008 ஏப்ரல்9-ஆம் தேதி தைனிக் ஜாக்ரன் பத்திரிகையும் இதனை ஆதாரமாக வெளியிட்டது. யூனுஸ் 1999-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரை சோட்டி காவல் டோலி மஸ்ஜிதில் திருக்குர்ஆனை கற்றுக் கொடுத்தார் என்ற மிகப்பெரிய அதிர்ச்சி(???)யான தகவலும் நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டது.

மத்தியபிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்ட ஃபைஸல், இர்ஃபான், ஷாக்கிர் ஆகியோருக்கு எதிராக தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ் ஆகிய கட்டாயக் கடமைகள் குறித்து ஒரு முஸ்லிம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய சட்டத்திட்டங்கள் அடங்கிய உருது புத்தகத்தை விசாரணை அதிகாரி விக்ரம்சிங் தீவிரவாதத்திற்கு ஆதாரமாக தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தார்.

இந்தூரில் அப்துல் ரஸ்ஸாக்கிற்கு எதிராக தாக்கல் செய்த ஆதாரம் என்ன தெரியுமா? புதுடெல்லியில் ஒரு பதிப்பகம் வெளியிட்ட முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ‘லைஃப் ஆஃப் முஹம்மது’ என்ற நூலாகும். மேலும் ‘ஹிந்து மதமும் ஏகத்துவக் கொள்கையும்’, ‘திருக்குர்ஆனை கற்கும் முறை’ ஆகிய நூல்களும் தீவிரவாதத்திற்கு ஆதாரமாக தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

மத்தியபிரதேசத்தைச் சார்ந்த ஜாமீருக்கு எதிராக தாக்கல் செய்த ஆதாரம் – ஹிந்து ஐக்கியவேதி என்ற ஹிந்துத்துவா அமைப்பின் வகுப்புவாத செயல்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்கள் ஆகும்.

மஹாராஷ்ட்ராவில் ஃகாலித் முச்சாலாவுக்கு எதிரான ஆதாரம் முஸ்லிம்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த புகாராகும். முஸ்லிம்-கிறிஸ்தவ மக்கள் தொகை சதவீதம் அதிகரிப்பதாக குற்றம் சாட்டி ராஷ்ட்ரீய விசார் மஞ்ச் வெளியிட்ட கட்டுரையை கைவசம் வைத்திருந்தது ஜாமீர் செய்த மகா பாவமாக போலீஸ் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

Tuesday, September 25, 2012

விநாயக சதுர்த்தியில் தக்காளி முட்டையில் பரபரப்பு!!

விநாய சதுர்த்தி கடந்த பத்து வருடங்களாக தமிழகத்தில் கோலாகலமாக நடந்து வருகிறது.

இது கோலாகலம் என்ன வென்றால் கொலை கலமாக நடப்பதுதான் இதில் வருந்ததக்கது, என்னவெனில் சாதாரணமாக குளக்கரையில் அமர்ந்திருந்த பிள்ளையாரை தெருவுக்குள் கொண்டுவந்து கொட்டமடித்து மாற்றுமத வணக்ககச்தலத்தில் வேண்டமென்றே அவர்களை வெறுப்பேத்தும் வகையில் கூப்பாடு போடுவது, கற்கள், முட்டை, தக்காளி போன்றவற்றை உள்ளுக்குள் வீசுவதும், ஜன்னல் கண்ணாடிகளை கற்களை எறிந்து உடைப்பதும் இதுதான் இவர்களால் கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி விழாவா?

மேலும் இத்தனை அழகாக செய்தவற்றை வேடிக்கையாக கடலில் கறைப்பதுதான் இன்னும் வேடிக்கை இதனால் கடல் அசுத்தமடைகிறது அதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு இந்த நச்சுத்தன்மையால் உயிரிழக்கவும் நேரிடகிறது. இந்த ஊர்வலத்தால் அரசு, காவல்த்துறை, பொதுமக்கள் அனைவருக்கும் இடையூறாக ஆவது மட்டுமே மிச்சம்.(சில இடங்களில் பரபரப்பு பல இடங்களில் மண்டை உடைப்பு)

இப்பதிவு யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல புரிந்து கொள்வதற்கு மட்டுமே.(ஆரியமே! உன் சூது தெரியாதர்களிடம் உன் சொரூபத்தை காட்டு, இன உணர்ச்சியை இலக்காதிற்கும் எங்கனிடம் காட்டாதே உன் இறுமாப்பை.  ஆரியம அசுத்தமடைகிறது!)

Monday, September 24, 2012

பெயரை மாற்றி தீபாவளிக்கு வெளியட துடிக்கும் துப்பாக்கி டீம்!

விஜய் - காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் படம் ‘துப்பாக்கி’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது.

இதற்கிடையில் ‘துப்பாக்கி’ தலைப்பை விஜய் படத்துக்கு பயன்படுத்தக்கூடாது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.‘கள்ளத்துப்பாக்கி’ என்ற பெயரில் இன்னொரு படம் தயாராகிறது. லோகியாஸ் இப்படத்தை இயக்குகிறார்.

‘கள்ளத்துப்பாக்கி’ படக்குழுவினர் ‘துப்பாக்கி’ தலைப்பை விஜய் படத்துக்கு வைக்ககூடாது என்று கோர்ட்டுக்கு போய் உள்ளனர். இதன் மீது விசாரணை நடந்து வருகிறது. இந்த சர்ச்சையால் ‘துப்பாக்கி’ படத்தை விளம்பரப்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

எனவே தலைப்பை மாற்றலாமா? என ஏ.ஆர்.முருகதாஸ் யோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைப்பு மாற்றப்பட்டால் ‘சரவெடி’ அல்லது ‘மும்பை தமிழன்’ பெயர் வைக்கப்படலாம் என தெரிகிறது.

‘சரவெடி’ தலைப்பு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய பொருத்தமாக இருக்கும் என கருதுகின்றனர். படத்தின் பெரும் பகுதி கதை மும்பையில் நடப்பதால் ‘மும்பை தமிழன்’ பெயரையும் தேர்வு செய்துள்ளனர்.

Sunday, September 23, 2012

இரவல் கொடுக்கும் முன் இரகசியத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்?

கோவை நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைபர் சொசைட்டி கோவை கிளை அமைப்பு தலைவர் எஸ்.என். ரவிச்சந்திரன் மாணவ-மாணவிகளிடையே கணினி தொடர்பான விஷயங்களில் மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை அம்சங்கள் குறித்து விளக்கினார்.

சமூக வலைத் தளங்களை கையாளும்போது அதிக கவனமும், முன்னெச்சரிக்கையோடும் செயல்பட வேண்டும். அந்தரங்க தகவல்களை கணினி, மொபைல், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதை தவிர்க்க வேண்டும். கணினி, கைப்பேசிகளை யாரிடமும் இரவல் தருவது நல்லதல்ல. வலைத்தளத்தில் பதிவாவது எதுவுமே அழியாது.

உங்களுடைய பிறந்த தேதி, உங்கள் தாயார் பிறந்த தேதி இரண்டு இருந்தாலே போதும், உங்களுடைய ஏ.டி.எம். கணக்கு, கடன் அட்டைச் செயல்பாடு ஆகியவற்றை தவறான வழியில் சமூக விரோதிகள் பயன்படுத்தவோ, முடக்கவோ முடியும். அறிமுகமில்லாத குறுந்தகவல்கள், மெயில்களுக்கு நீங்கள் பதிலளிக்கவோ, திறந்து பார்க்கவோ செய்வது ஆபத்தில் முடியும். கணினியில் எண்டர் எனும் பொத்தான் தான் படுபயங்கரமானது.

புத்தி நுட்பத்தோடும், எச்சரிக்கையோடும் எண்டர் பட்டனை கையாள வேண்டும் என்றார்.,மேற் சொன்னவைகளில் அதிக கவனமாக இருந்து உங்கள் தகவல்களை பாதுகாத்துக்கொளுங்கள்.

Saturday, September 22, 2012

பரபரப்புக்கு பஞ்சமில்லா நித்யாவின் அடுத்த பரபரப்பு!!

மதுரை இளைய ஆதீனமான நித்யானந்தா பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாதவர்.

பிரபல நடிகையுடன் சல்லாப வீடியோ, மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பேற்ற சர்ச்சைக்குப்பின் தற்போது நித்யானந்தா குறித்த பரபரப்பு சற்று அடங்கியுள்ள நிலையில், வந்தேன் பார் என வந்துள்ளது பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் நித்யானந்தா பங்கேற்கும் செய்தி.

இதுகுறித்து அவரது உதவியாளர் டலே பக்வாகர், நித்யானந்தாவை பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு நிகழ்ச்சி நிர்வாகம் தங்களை அணுகியதாகவும், ஆனால் அவர் கலந்து கொள்வாரா இல்லையா என்பது குறித்து இப்போதைக்கு தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் பிரபல சமூக சேவகர் அக்னிவேஷ் கலந்து கொண்டு பல்வேறு சமூக அவலங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்., நித்தியின் நீல சுருளையும் இதில் காண்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எங்கே போனார்கள் ஹிந்துயிசம் பேசுபர்கள்.?

Friday, September 21, 2012

ஆண்களுக்கு அதை (ஆண்மை) அதிகரிக்க சில டிப்ஸ்

கருவுறுதலில் ஏற்படும் பிரச்சனை பெண்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை, ஆண்களுக்கும் தான் ஏற்படுகிறது. ஆனால் அத்தகைய பிரச்சனை தற்போது இந்தியாவில் ஆண்களிடையே அதிக அளவில் உள்ளது என்று தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு காரணம் ஆண்களின் ஸ்பெர்ம்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதற்கு ஆண்களது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் தம்பதியரிடையே சரியான அன்பு வெளிப்படுத்த முடியாதது என்பனவையே காரணங்களாக இருக்கும். ஆகவே இத்தகையவற்றை சரியாக போக்கி, ஸ்பெர்ம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சில டிப்ஸ் இருக்கிறது.

* ஆரோக்கியமான, ஊட்டச்சத்துள்ள உணவுகள் ஆண்களின் ஸ்பெர்ம்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். ஆகவே தேவையில்லாமல் மருத்துவர்களிடம் சென்று பணத்தை செலவழிப்பதை விட, ஆரோக்கிய மற்றும் பாலுணர்வை, ஆண்மையைத் தூண்டும் உணவுகளான சீஸ், சிக்கன், ஓட்ஸ், கடல் உணவுகள், பச்சை காய்கறிகள், கேரட், மிளகு, முக்கியமாக மீனில் சாலமனை சாப்பிட வேண்டும்.

* புகைபிடித்தல் மற்றும் ஆல்கஹால் சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். நிறைய ஆண்களுக்கு இந்த பழக்கம் தேவையில்லாமல் இருக்கிறது. இவற்றை பிடிப்பதால், ஆண்மை மட்டும் குறைவதில்லை, உடலும் தான் பாதிக்கப்படுகிறது. ஆகவே இதனை நிறுத்த வேண்டும். முடியவில்லை என்றால் கர்ப்பமாகும் வரையிலாவது சாப்பிடாமல் இருக்க முயற்சியுங்கள்.

* அளவுக்கு அதிகமான எடை மற்றும் குண்டாக இருப்பது கூட, ஆண்களின் ஸ்பெர்ம்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. ஆகவே அனைத்து ஆண்களும் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று அளவுக்கு அதிகமாகவும், குறைவாகவும் உடல் எடை இருக்கக்கூடாது. மேலும் இனப்பெருக்கத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் மற்றும் உறுப்புகள் நன்கு செயல்பட, ஆரோக்கியமான டயட் மற்றும் உடல் எடை இருக்க வேண்டும். எப்போதும் உடலை நன்கு பிட்டாக வைத்திருக்க வேண்டும். வேண்டுமென்றால் தினமும் யோகா அல்லது உடற்பயிற்சி போன்றவற்றை செய்யலாம்.

* ஆண்களின் ஸ்பெர்ம்கள் எந்த நேரத்தில் சரியான அளவு இருக்கும் என்பதைப் பற்றி ஆய்வு மேற்கொண்ட போது, காலை நேரம் தான் அதற்கு சரியான நேரம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இரவு நேரத்தில் காதலை வெளிப்படுத்துவதற்கு, காலை நேரத்தில் காதலை வெளிப்படுத்தினால் மிகவும் சரியாக இருக்கும் என்று கூறுகின்றனர். அதுவும் இருவருக்கும் பிடித்திருந்தால் மட்டும் காலையில் செய்ய வேண்டும்.

* நிறைய ஆய்வுகள் அதிக அழுத்தத்தின் காரணமாக, தம்பதியர்களுக்கிடையே உள்ள காதல் தடைப்பட்டு, ஆண்களின் ஸ்பெர்ம்களின் எண்ணிக்கை குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே எப்போதும் அமைதியாக, எதற்கும் டென்சன் ஆகாமல், அடிக்கடி யோகா செய்தால், வாழ்க்கை நன்கு அமைதியாக, அன்பாக போவதோடு, மனமும் ரிலாக்ஸ் ஆகும்., எனவே ஆண்கள் மேற்கூறிய அனைத்தையும் நினைவில் கொண்டு வாழ்ந்து வந்தால், ஆண்மை அதிகரிப்பதோடு, வாழ்க்கையும் சந்தோஷமாக செல்லும்.

Thursday, September 20, 2012

நீரழிவு நோயாளிகளுக்கு ஓர் வரப்பிரசாதம்

மெல்போர்ன்: உணவில் இஞ்சி சேர்த்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும் என கண்டறியப்பட்டுள்ளது.

இஞ்சி மிக சிறந்த மருத்துவ பொருள். இந்தியாவில் இது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதை சமையலில் சேர்த்து சாப்பிடுகின்றனர். இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு சீரமைக்கப்பட்டு நீரிழிவு நோய் வராமல் கட்டுப்படுத்தப்படும் என தெரிய வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத்தில் இஞ்சியின் பயன்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரை போதுமான அளவு மட்டும் இன்சுலின் சுரக்க உதவுவது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, இஞ்சி சாப்பிட்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர் பாசில் கூறியுள்ளார்.

Tuesday, September 18, 2012

யூதனின் யூ டூப் பால் கலகலத்துப்போன சென்னை மாநகரம்!!

சென்னை: இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் திரைப்படத்தின் காட்சிகள் யூ ட்யூபில் வெளியானதை தொடர்ந்து முஸ்லிம் உலகம் கொந்தளித்துப் போனது. பல்வேறு நாடுகளில்போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவின் தென்கோடி பகுதியான தமிழகத்திலும் தினந்தோறும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து கூட்டுப் போராட்டத்தை சென்னையில் இன்று நடத்தின. இதனால் சென்னை அண்ணா சாலை ஸ்தம்பித்துப் போனது.

இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் முன் இன்று 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் கூட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அமெரிக்க துணை தூதரகம் 3 நாட்களுக்கு மூடப்பட்டது. மேலும், தூதரகத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டது. மேலும் அமெரிக்க தூதரகத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்துவதற்கு அண்ணா சாலை தர்கா அருகே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அண்ணா சாலையில் இதுவரை எந்தப் போராட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டதில்லை. மேலும் போராட்டத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் மாலை 3 மணி முதலே போக்குவரத்துக்கு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

அண்ணா சாலை முழுவதும் இஸ்லாமியர்கள் கொடிகளை ஏந்தியபடி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே அமெரிக்க தேசியக் கொடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும் அண்ணா சாலை தர்கா அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று அமெரிக்காவுக்கு எதிராக கண்டனக் குரல்களைப் பதிவு செய்தனர்.

உலக மக்கள் அனைவருக்கும் உன்னத தத்துவங்களை போதித்த இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும் இந்த திரைப்படம் இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்தியிருப்பதால் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும், இந்தியா தனது கண்டனத்தை பதிவுச் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வற்புறுத்தினர்.

20க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அங்கு குவிந்ததால் அண்ணா சாலை வரலாறு காணாத அளவுக்கு ஸ்தம்பித்தது.

இப்போராட்டத்தால் மயிலாப்பூர், ராயப்பேட்டை , அண்ணாசாலை ஆகிய தென்சென்னை பகுதிகள் ஸ்தம்பித்துப் போயிருந்தன. மேலும் மத்திய சென்னை பகுதிகளான எழும்பூர், சிந்ததாரிப் பேட்டை வழியே பேருந்துகள் திருப்பிவிடப்பட்டதால் அந்தப் பக்கமும் வாகனங்களால் நிலைகுலைந்து போனது. சென்னையில் பல மணிநேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.(இதில் முக்கிய விடயம் என்னவென்றால் எந்த பார்ப்பன ஊடகங்களும் இச்செய்தியை வெளியிடவில்லை,.தின மலம் மா(மூ)த்திரம் சிறிய கொசுறு செய்தி வெளியிட்டது.)

Monday, September 17, 2012

ஏகப்பட்ட அறிவு படம் ஆஸ்கார் குழுவினரின் பார்வையில்!

ஒவ்வொரு வருடமும் ரிலீஸாகும் சிறந்த படங்களை ஒவ்வொரு பிரிவுகளாக வகைப்படுத்தி அந்தந்த பிரிவில் சிறந்த படத்திற்கு ஆஸ்கார் விருது வழங்கப்படும்.

இந்திய மொழிப்படங்களை ஆஸ்கார் குழு ’சிறந்த அயல்நாட்டுத் திரைப்படம்(Best Foreign Film)’ என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தி விருது வழங்கும்.

இந்த வருடம் வெளியான சிறந்த படங்களை ஆஸ்காருக்கு தேர்ந்தெடுக்க 16 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது ஆஸ்கார். இந்த வார இறுதியில் ஆஸ்காரின் குழு படங்களை பார்த்து தேர்வு செய்ய உள்ளது. அந்த வரிசையில் தமிழிலிருந்து ஏழாம் அறிவு, வழக்கு எண் 18/9 ஆகிய படங்கள் இருக்கின்றதாம்.

புதுமையான கதைகள் என ஆஸ்கார் குழுவினர் இந்த படங்களை பாராட்டியுள்ளனர். இந்திய அளவில் இந்தி படங்களான ‘தி டர்ட்டி பிக்சர்’, ‘கஹானி’, ‘கேங்ஸ் ஆஃப் வேசிபூர்’ ஆகிய படங்களும், தெலுங்கில் ‘ஈகா’ படமும் ஆஸ்கார் குழுவினரின் பார்வையில் இருக்கிறதாம்.

கூடங்குள போராட்டத்தை கொச்சை படுத்தும் தீ(ய)விரவாத அமைப்பு!?

புதுடெல்லி: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா செயல்படுவதாக ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளது. போராட்டத்திற்கு தலைமை தாங்கும் அரசு சாரா இயக்கங்களுக்கு தாராளமாக பணம் வருவதாக ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ ஏடான ‘ஆர்கனைஸரில்’ எழுதியுள்ள கட்டுரையில் இந்த குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. கூடங்குளம் மற்றும் ஜெய்தாப்பூர் அணுமின் நிலையங்களை எதிர்ப்பதன் பின்னணியில் அமெரிக்காவின் விருப்பம் உள்ளதாம். இதன் ஒரு பகுதியாகத்தான் ‘மாற்று பாதுகாப்பு திட்டம்’ என்ற கொள்கை முன்வைக்கப்படுவதாக அப்பத்திரிகை கூறுகிறது. அரசியல் கட்சி உருவாக்குவதற்கான முயற்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக ஆர்கனைஸர் கூறுகிறது.

மில்லியன் கணக்கில் பணம் வரும் சில என்.ஜி.ஓக்கள் பிஷப்புகளுக்கு கீழ் இயங்குவதாகவும், போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் கிறிஸ்தவ சபைகளுக்கு அமெரிக்க ஆதரவளிப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ ஏடு குற்றம் சாட்டுகிறது.

ஐ.டி.ஆர்.எஃப் போன்ற அமைப்புகளின் மூலம் சமூக சேவை என்ற பெயரால் இந்தியாவில் வகுப்புவாதத்தை விதைக்க கோடிக்கணக்கான பணம் வெளிநாடுகளில் இருந்து ஆர்.எஸ்.எஸ்ஸின் துணை அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டு வரும் சூழலில் ஆர்.எஸ்.எஸ் ஏட்டின் குற்றச்சாட்டு கேலிக்கூத்தாக அமைந்துள்ளது.

வெளிநாட்டு நிதியிலிருந்து தீவிரவாதம் செய்வது யார்? வெளிநாட்டு நிதியிலிருந்து இந்தியாவை பல மடங்காக உடைக்க துடிப்பவர்கள் இந்த காவி கயவர்கள் என்பது நாடறிந்த உண்மை. இதற்கு பல உதாரங்கள் உண்டு அதில் குஜராத் தீர்ப்பு ஒன்றே போதும் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மோடி என்கிற அயோக்கியன் உதவியுடன் செய்த அக்கிரமங்கள்தான் என்ன என்ன., இப்படி நீண்டுகொண்டே போகும் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத அமைப்பின் பட்டியல்.

Sunday, September 16, 2012

உங்களை பாதுகாத்துக்கொள்ள உப்பை ஒதுக்குங்கள்!

லண்டன்: புற்றுநோய் பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாப்பது எப்படி? என்பது குறித்த விளக்கங்களை இங்கிலாந்து சேரிட்டி மற்றும் டபிள் யூ.சி.ஆர்.இ. ஆகிய அமைப்புகள் வெளியிட்டுள்ளன.

அதில் உணவுகளில் உப்பை குறைத்து சாப்பிடுவதே அதற்கு சிறந்த மருந்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அதிக உப்பு சேர்ப்பதன் மூலம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

இதன்மூலம் இருதய நோய்கள், பக்கவாதம் போன்றவை ஏற்படுகிறது. அதனுடன் வயிற்றில் புற்றுநோய் உருவாகவும் இது வழிவகை செய்கிறது. மக்கள் நாள் ஒன்றுக்கு தங்கள் உணவில் 8.6 கிராம் உப்பு சேர்க்கின்றனர். இது அதிக அளவாகும். அதை 6 கிராம் ஆக குறைக்க வேண்டும் என உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியகம் தெரிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் தங்கள் உணவு வகைகள் மற்றும் ரொட்டி போன்றவற்றில் குறைந்த அளவு உப்பு சேர்த்து அதன் மூலம் புற்றுநோயில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Saturday, September 15, 2012

எதிர்ப்பு வலுக்கும் இத் (தீவிர) ரைப்படத்தின் மர்ம முடிச்சு?

வாஷிங்டன்: இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுகள் இன்னமும் அவிழவில்லை.

கலிஃபோர்னியாவில் வசிக்கும் இஸ்ரேல் வம்சாவழியைச் சார்ந்த ஸாம் பசிலி என்பவன் தாம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளதாகவும், கிறிஸ்தவ-யூத அமைப்புகளின் உதவியுடன் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் முன்னர் செய்திகள் வெளிவந்தன.

இஸ்லாம் ஓர் புற்றுநோய் என்றும், முஹம்மது நபியை மோசமாக சித்தரித்தும் பசிலி ஊடகங்களுக்கு பேட்டியளித்ததாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் பசிலி என்பவன் போலி என்றும், இது ஒரு போலியான தகவல் என்றும் கூறி இத்திரைப்படத்தின் கன்ஸல்டண்ட் என கூறும் ஸ்டீவ் க்ளீன் என்பவர் AFP செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பசிலி தலைமறைவாகிவிட்டதாக முன்னர் செய்திகள் வெளியாகின.ஆனால், இது தொடர்பாக எ.எஃப்.பி செய்தியாளர்கள் நடத்திய விசாரணையில் பசிலி என்பவர் கலிஃபோர்னியாவைச் சார்ந்த காப்டிக் கிறிஸ்தவர் என்பது தெரியவந்துள்ளது. நகவ்லா பசிலி நகவ்லா என்ற 55 வயதான நபருக்கு, பசிலியைக் குறித்து முதலில் வெளியான தகவல்களுக்கும் பொருத்தம் இருப்பதாக எ.எஃப்.பி கூறுகிறது. ஆனால், பசிலி என்ற பெயரில் தான் தன்னை அறிமுகப்படுத்தவில்லை என்று நகவ்லா கூறுகிறான்.

நகவ்லா பசிலி மீது ஏற்கனவே போலி பெயர்களில் மோசடி நடத்தியது தொடர்பாக வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. இறைத்தூதரை அவமதிக்கும் ‘innocence muslims’ என்ற திரைப்படம் 2 மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் வெளியானது. ஆனால், எகிப்தில் ஒரு காப்டிக் கிறிஸ்தவ விஷமி ஒருவன், இத்திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய 13 நிமிடங்கள் ஓடும் வீடியோவை அரபு மொழியில் மொழிமாற்றம் செய்து யூ ட்யூபில் பதிவு ஏற்ற்றம் செய்துள்ளான். இதனைத்தொடர்ந்து எகிப்து, லிபியா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பெரும் கொந்தளிப்பு அடைந்தனர். தொடர்ந்து அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டன. யூத லாபிதான் இத்திரைப்படத்தின் பின்னணியில் செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் ஃப்ளோரிடாவைச் சார்ந்த வலதுசாரி கிறிஸ்தவ பயங்கரவாதி டெர்ரி ஜோன்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்த நபருடன் நெருங்கிய தொடர்புடையவன் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம் ஒரு சதித்திட்டம் என்று முஸ்லிம் அறிஞர்கள் கூறுகின்றனர். இதனிடையே, திரைப்பட தயாரிப்பாளர் தங்களை ஏமாற்றிவிட்டதாக இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் கூறுகின்றனர். இத்திரைப்படத்தின் கதையில் மாற்றம் செய்துள்ளார்கள் என்று திரைப்படத்தில் நடித்த சிண்டி லிகோர்ஷியா கூறுகிறார்.

இஸ்ரேல் நினைத்து செய்தது தற்போது நடந்துள்ளது. உலகம் முழுவதும் இஸ்ரேலின் (மொசாத்) தீவிரவாத அமைப்பு அனைத்து காரியங்களும் செய்து கொண்டு வருகிறது என்பதை வரும் நாட்களில் உலகம் அறியும்.

Friday, September 14, 2012

குண்டூசி முதல் குக்கர் சட்டி வரை இணைய தளத்தில்!!

தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக, மொபைல் போன், கம்ப்யூட்டர், லேப்-டாப், டேப்லெட் கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களால், இணைய தள பயன்பாடு அதிகரித்துள்ளது.

மக்கள், தாங்கள் விரும்பும் பொருட்களை, இணையதளம் வழியாக, "கிரெடிட்' மற்றும் "டெபிட்' அட்டைகளை பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே வாங்க முடிகிறது. குண்டூசி முதல் குக்கர் வரை,வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும், இணையதளத்தின் மூலம் வாங்கும் வசதி உள்ளதால், இல்லத்தர சிகளிடையே, இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இ-பே இந்தியா, ஜங்லீ டாட் காம், ஜபாங் டாட் காம், மிந்த்ரா டாட் காம் என, நூற்றுக் கணக்கான நிறுவனங்கள், இணையதளத்தில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.பாரம்பரிய கடைகளை விட, இணைய தளத்தில் பல பொருட்களின் விலை குறைவாக உள்ளது. இதனால், கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கு வோரின் பார்வை, தற்போது, இணையதள கடைகளின் பக்கம் திரும்பி வருகிறது. நேரம், அலைச்சல், செலவு மிச்சம் என்பதால், இணையதள வர்த்தகச் சந்தையை நாடுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

தள்ளுபடி:ஆசிய பசிபிக் நாடுகளை பொறுத்தவரை, இந்தியாவில் இணையதளம் வாயிலாக பொருட்களை வாங்குவோர் எண்ணிக்கை, குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்து வருகிறது.

இணையதளத்தில்,நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும் பல நிறுவனங்கள், சென்ற ஆண்டு தீபாவளிக்கு, 10-15 சதவீதம் முதல், 80-90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கியதுடன், பரிசு கூப்பன், இலவச வினியோகம், பரிசுப் பொருட்கள் உள்ளிட் டவற்றை வழங்கின.

இதுபோன்ற காரணங்களால், சென்ற 2011ம் ஆண்டில், 1.25 கோடி வாடிக்கையாளர்கள், இணையதளம் வாயி லாக, 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்முதல் செய்துள்ளதாக, மதிப்பிடப்பட்டுள்ளது. தற் போது, இந்தியாவில்,இணையதள வர்த்தக சந்தையின் மதிப்பு,6,000 கோடி ரூபாய் என,மதிப்பிடப் பட்டுள்ளது.

தீபாவளி:இச்சந்தை மதிப்பு, ஆண்டுக்கு250 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. நாடு தழுவிய அளவில், 12 கோடிக்கும் அதிகமானோர், இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். இதில், பாதிக்கும் மேற்பட் டோர், இணையம் மூலம் பொருட்களை கொள்முதல் செய்கின்றனர்.

சென்ற ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, இணையதளம் மூலம் பொருட்களை வாங்கியோரில், வெளி நாடு வாழ் இந்தியரின் பங்களிப்பு, 40-50 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, வரும் தீபாவளிக்கு, 85 சத வீதமாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.

Thursday, September 13, 2012

கொந்தளிக்கும் தமிழக மக்களுக்கு தீர்வுதான் எப்போது?

இன்று தமிழக முழுவதும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது இந்த மின் தடை. இந்த மின் தடையால் விவசாயிகள், மாணவர்கள், பச்சிளம் குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

கடந்த சில வாரமாக காலை 6 மணி முதல் 9 மணி வரையும் பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் அதிகாலை ஒரு மணி நேரமும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் விசைத்தறி தொழில் முடங்கியுள்ளது. நெசவாளர்கள் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அரிசி ஆலையில் அரவை நடக்கவில்லை.

பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் திண்டாடுகின்றனர். வசதி படைத்த சிலர், டீசல் இன்ஜின் மூலம் தண்ணீர் பாய்ச்சி ஓரளவு பயிர்களை காப்பாற்றி வருகின்றனர்.

இந்த பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 10, 12ம் வகுப்பு பொது தேர்வுக்கு படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். சிம்னி விளக்கு ஏற்றிவைத்து அந்த வெளிச்சத்தில் படிக்கின்றனர். ரயில் நிலையங்களில் கம்ப்யூட்டர் செயல்படவில்லை. இதனால் சீசன் டிக்கெட் வாங்க வரிசையில் பயணிகள் காத்து இருக்கின்றனர். அன்றாட டிக்கெட் கொடுப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, மின்வாரியத்துக்கு மக்கள் பலமுறை புகார் தெரிவித்துவிட்டனர். மின் தட்டுப்பாடு நிலவுவதால் நாங்கள் என்ன செய்ய முடியும்? என அதிகாரிகள் கைவிரிப்பதாக பொது மக்கள் கூறுகின்றனர்.

இது போல பல நகரங்களிலும் மின் தடை ஏற்படுகிறது. இந்த மின் தடையால் மாணவர்கள் அதிக அளவு மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இருளில் சிக்கித் தவிக்கும் தமிழகதிற்கு தீர்வு எப்போது? என்பதே ஒட்டு மொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பு!

Wednesday, September 12, 2012

இந்நாள் சூர்யாவின் பொன் நாள் செப்டம்பர் சிக்ஸ்!!

இயகுனர் கே.வி.ஆனந்த் இயகத்தில் சூர்யா, காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் படம் மாற்றான். பலவித புது முயற்சிகளையும். புது தொழில்நுட்பங்களையும் உபயோகப்படுத்தி கடின உழைப்புடன் உருவாகியிருக்கும் மாற்றான் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் ரிலீஸாகிறது.

சூர்யாவிற்கு தெலுங்கில் அவ்வளவாக ரசிகர்கள் இல்லாவிட்டாலும் காஜல் அகர்வாலுக்கு ஏராளமான ரசிகர்கள். காஜல் அகர்வால் தோன்றினாலே விசில் சத்தம் தியேட்டரையே பறக்கவிடும் அளவிற்கு செய்துவிடுவார்கள் காஜலின் ரசிகர்கள். எனவே மாற்றான் படத்தை தெலுங்கில் “பிரதர்ஸ்” என்ற பெயரில் ரிலீஸ் செய்கிறார்கள்.

சூர்யா முதல்முறையாக தனது சொந்தக் குரலிலேயே தெலுங்கில் பேசவிருக்கிறார். சூர்யா தன் குரலிலேயே டப் செய்வதால் இந்த படத்திற்கு தெலுங்கிலும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் சூர்யாவிற்கு இன்று ஒரு முக்கியமான நாள். சூர்யா நடிக்க வந்து இன்றுடன்(06.09.12) 15 வருடம் ஆகிறது. 06.09.1997 -ல் நேருக்கு நேர் படத்தில் சூர்யா அறிமுகமானார்.

Tuesday, September 11, 2012

அடாவடி அயோக்கியன்களை அடக்க முடியா ஆண்மை இழந்த காங்கிரஸ்!

கருப்பையில் இருந்து பாதுகாப்பாக சிசுவை வெளியே எடுக்கவேண்டிய ஒரு கைனோகாலஜிஸ்ட், கர்ப்பிணியின் வயிற்றைக் கீறி சிசுவை திரிசூலத்தில் குத்தியெடுத்து ஆனந்த நடனம் ஆடும் இரத்த வெறிப்பிடித்த கும்பலுக்கு தலைமை வகிக்கிறார். அந்த கொலைக்கார பெண்மணிக்கு மாநில மகளிர் மற்றும் சிசு நலத்துறை அமைச்சர் பதவி பரிசாக வழங்கப்படுகிறது. மாநில முதல்வரும், அமைச்சர் பரிவாரங்களும், மத வெறிப்பிடித்த அதிகாரிகளும் இணைந்து கூட்டுப் படுகொலைகளுக்கு தலைமையேற்கின்றனர்.

கூட்டாக நடக்கும் பாலியல் வன்புணர்வுகளை போலீசார் கண்டு ரசிக்கின்றனர். ஆதாரங்களை எல்லாம் அழிக்கின்றனர். ஆவணங்களை மறைக்கின்றனர். சாட்சிகளை கொலைச் செய்கின்றனர். பணத்தை வாரியிறைத்து தங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குகின்றனர். தங்களது கரங்களால் புரிந்த கர்ண கொடூரங்களை வாய் கூசாமல் பெருமையாக பகிரங்கமாக கூறுகின்றனர்.

சிலருக்கு மேலும் 500 முஸ்லிம்களை கொலைச் செய்வது பொழுதுபோக்கு. வேறு சிலருக்கோ முஸ்லிம் இளம் பெண்கள் வேண்டுமாம். இவர்கள் அனைவரும் நரேந்திர மோடி என்ற நரமாமிச உண்ணியின் சீடர்கள். குற்றங்களை புரிந்தது மட்டுமல்ல, கொடூரங்களின் ஆதாரங்களையெல்லாம் குழி தோண்டி புதைக்கவும் தங்களது கரங்களை பரிசுத்தமாக காட்டவும் இவர்கள் தயங்கவில்லை.

நான் குஜராத்தின் சர்வாதிகாரி மட்டுமல்ல, மத்திய அரசையும் ஆட்டிவைக்கும் மோசடி வித்தைக்காரன் என கூறி என்ன பலன்?சத்தியத்திற்கும், நீதிக்கும் சில அடிப்படைகள் உள்ளன. இறைவனின் நீதியை எவராலும் தடுக்க முடியாது. தர்மம் எப்பொழுதெல்லாம் தோல்வியை சந்திக்கும் சூழல் உருவாகிறதோ அப்பொழுதெல்லாம் மரண வியாபாரிகளுக்கு விலங்கிட சிலர் இவ்வுலகில் பிறக்கத்தான் செய்வார்கள்.

பாசிசத்தின் காரிருள் இந்நாட்டின் ஆட்சி, அதிகார, நீதி, ஊடக துறைகளையெல்லாம் சூறையாடி வரும் வேளையிலும் நீதியை நிலைநாட்டும் உறுதியுடன் சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களில் ஒருவர் தாம் குஜராத் கூடுதல் முதன்மை நீதிபதி ஜோல்ஸ்னா யக்னிக். மற்றொருவர், முன்னாள் குஜராத் மாநில டி.ஜி.பி ஸ்ரீகுமார்.

அமைச்சர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்களை பதிவுச் செய்து பாதுகாத்த நேர்மையான ஐ.பி.எஸ் அதிகாரி ராகுல்சர்மா கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார், 10 வருடங்கள் கழித்து நீதி நிலைநாட்டப்படும் என்று.

தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அம்பலப்படுத்த டெஹல்கா இதழ் ஆபத்பாந்தவனாக வரும் என்று எல்லாவற்றையும் இழந்து நிற்கும் குஜராத் முஸ்லிம்களோ, பாதுகாப்பற்ற சூழலில் வாழும் இந்திய முஸ்லிம்களோ கற்பனையில் கூட எண்ணியிருக்கமாட்டார்கள்.

மும்பையில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரத்தால் விழிப்புணர்வு பெற்ற பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான தீஸ்டா ஸெடல்வாட் போன்றவர்கள் எவருக்கும் அஞ்சாமல் ஆற்றிய பணிகளை யாரும் விலைக்கொடுத்து வாங்கவில்லை. எந்தவொரு முஸ்லிம் அமைப்புகளும் செய்ய இயலாத அர்ப்பணிப்புமிக்க காரியங்களை இவர்கள் செய்து முடித்தார்கள். உயிரை பணயம் வைத்து 6 மாத காலம் டெஹல்காவுக்காக ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை நேரடியாக சந்தித்து பேட்டியெடுத்து உலகிற்கு அவர்களின் கோர முகத்தை அம்பலப்படுத்திய ஆஷிஷ் கேதான் என்ற பத்திரிகையாளரை இந்திய முஸ்லிம்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

போலீஸ், அரசு, அதிகார, நீதித்துறை, பத்திரிகைத் துறைகளிலும், குடிமக்களிலும் நேர்மையை இழக்காத காவியின் காரிருளில் சிக்காதவர்கள் இருக்கின்றார்கள் என்பது ஆச்சரியமான விஷயம் தான்.

தனது அமைச்சரவையில் பணியாற்றிய கில்லர் டாக்டரும், இதர அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்கு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் உள்ளங்கை நெல்லிக்கனியாக தெள்ளந்தெளிவாக வெளியான பிறகும் மோடி ராஜினாமாச் செய்வார் என கருதுவது முட்டாள்தனமாகும். இந்த கொலையாளியின் ஆட்சியை தொடர அனுமதிப்பதா ராஜதர்மம்? என்பதே மனிதநேயம் கொண்ட இந்திய குடிமக்களின் கேள்வியாகும்.

இரத்தவெறிப் பிடித்த கொலைக்காரக் கும்பல்களின் தலைவன் என்று வெட்ட வெளிச்சமான பிறகும் பயங்கரவாதி என்ன தீவிரவாதியாக கூட மோடி கருதப்படவில்லை என்பது இந்த தேசத்திற்கே வெட்க கேடாகும். மன்னர்களின் ஆட்சியில் அவர்கள் புரிந்த கொலை, கொள்ளைகளுக்கு ஆதரவாக புகழ் பாடிய அரசவை கவிஞர்களை விட கேவலமாக மோடிக்கு புகழாரம் சூட்டும் ஊடகங்கள் இருக்கும் தேசத்தில் தாம் நாம் வாழ்ந்து வருகிறோம்.

தற்போதைய நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை வழக்கின் தீர்ப்பும், இதற்கு முன்பு வெளியான நீதிமன்ற தீர்ப்புகளும் மோடி பதவி விலக தாராளம் போதுமானவையாகும். ஆனால், யாரும் இத்தகையதொரு கோரிக்கையை எழுப்பவில்லை. குஜராத் மாநில மக்களோ, ஹிட்லரின் ஜெர்மனிக்கு சமமாக மோடியின் கொடூரங்களை கண்ணால் கண்டும் கூட மெளனம் சாதித்து வருகின்றனர்.

அவ்வளவு தூரம் பாசிசம் பலரது உள்ளங்களிலும் ஆழமாக வேரூன்றியுள்ளது. ஆகையால் மோடிக்கு எதிரான குரல் குஜராத்தில் இருந்து எழும் என கருதவேண்டாம். கேசுபாய் பட்டேலும் ஸதாஃபியாவும் மோடிக்கு எதிராக குரல் கொடுப்பதன் பின்னணி அதிகாரப் போட்டியே தவிர முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கு எதிரானது அல்ல.

விசாரணை கமிஷன்களின் கண்டுபிடிப்புகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் மத்திய அரசுக்கு நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீராக்கவும், கொலையாளிகளுக்கு தண்டனை வழங்கவும் போதிய காரணம் இல்லையா?

குடிமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய மத்திய அரசுக்கு தலைமை தாங்கும் காங்கிரஸ் மெளனம் சாதிப்பது ஏன்?

மிதவாத ஹிந்துத்துவா என்ற பாராட்டைப் பெறவும், ஹிந்துத்துவா வாதிகளின் வாக்குகளைப் பெறவும் தான் மன்மோகன்சிங்கும், சோனியாவும் மெளனம் சாதிக்கின்றார்கள் போலும்!

பாராளுமன்றத்தை முடக்கி பிரதமர் மன்மோகன்சிங்கின் ராஜினாமாவைக் கோரும் பா.ஜ.கவுக்கு எவ்வளவு தூரம் காங்கிரசு கட்சி அஞ்சுகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் தேவையா?

பாப்ரி மஸ்ஜித் இடித்துத் தள்ளப்பட்ட போது காட்டிய அதே மெளனத்தை குஜராத் இனப்படுகொலை வழக்குகளின் தீர்ப்பின் போதும் காங்கிரஸ் கடைப்பிடித்து வருகிறது. பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு அடுத்து வந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் அளித்த தண்டனையில் பாடம் பெறாவிட்டால், வருகிற தேர்தலிலும் பழைய நிலைமையே உருவாகும்.

நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.கவின் முகம் அகோரமாக மாறும் வேளையில் அதனை மூடி மறைத்து நாட்டு மக்களின் கவனத்தை திசைத்திருப்ப பெங்களூர், ஹைதராபாத், நந்தத் ஆகிய இடங்களில் முற்றிலும் அப்பாவியான உயர்கல்விப் பின்னணிக் கொண்ட முஸ்லிம் இளைஞர்கள் அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது படலங்கள் முஸ்லிம் இனப்படுகொலையை நியாயப்படுத்த நடந்த முயற்சியே அன்றி வேறொன்றும் இல்லை.

இரண்டு செய்திகளையும் ஒரே நேரத்தில் மக்களை வாசிக்கச் செய்வதே சங்க்பரிவார்களின் நோக்கமாகும். இதனை ஆறுதலாக கொலைக்கார கும்பல்களை தாலாட்டி, சீராட்டி வளர்த்தும் பா.ஜ.க கருதுமானால் வரலாற்றில் மேலும் பின்னடைவை அவர்கள் எதிர்பார்க்கலாம்.

எஸ்.எம்.எஸ் வதந்தி உள்பட இந்தியாவில் நிகழும் அசம்பாவிதங்களுக்கு எல்லாம் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது பழிசுமத்தி கைது செய்து அப்துல் நாஸர் மஃதனியைப் போல சிறைக் கொட்டகைகளில் அடைக்கும் மோடிக்கும், கர்நாடகாவின் பாசிச பாரதீய ஜனதா அரசுக்கும் காங்கிரஸ் கட்சியின் மெளன அனுமதி உண்டு என்பதில் சந்தேகம் இல்லை.

முஸ்லிம்கள் மீது சுமத்தப்படும் ஒவ்வொரு குற்றமும், பொய்யென நிரூபணமாகும் வேளையிலும், முஸ்லிம் இளைஞர்கள் நிரபராதிகள் என நீதிமன்ற தீர்ப்புகள் வெளியாகும் வேளையிலும் இந்தியாவில் நிகழ்ந்த நாசவேலைகளில் சங்க்பரிவார பாசிஸ்டுகளின் பங்கு வெட்ட வெளிச்சமாகிறது. ஆனாலும் காங்கிரஸ் கட்சியால் தனது ஆண்மைத் தன்மையை நிரூபிக்க முடியவில்லை.

தீஸ்டா ஸெடல்வாட் உள்ளிட்ட மனித உரிமைப் போராளிகளின் நீண்டகால போராட்டத்தின் இறுதியில் கிடைத்த வெற்றியே அஹ்மதாபாத் கூடுதல் முதன்மை நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு. அதுமட்டுமல்ல கொடும் பயங்கரவாதியான பாபு பஜ்ரங்கி, தானே நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கொன்றொழித்து, கர்ப்பிணி தாயின் வயிற்றைக் கிழித்து சிசுவை திரிசூலத்தால் குத்தி எடுத்து தீயில் பொசுக்கியதை விவரித்த பிறகும், புலனாய்வு குழுக்களின் மேலிட கனவான்கள் சிலரின் தயவால் மோடிக்கு சிறைக்கு வெளியே சுதந்திரமாக நடமாடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோத்ராவுக்கு வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் பெட்டியில் கரசேவகர்களை திட்டமிட்டு தீயில் பொசுக்கிவிட்டு முஸ்லிம்கள் மீது பழியை சுமத்தினர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள். பின்னர் 2002 பிப்ருவரி 27-ஆம் தேதி நள்ளிரவு கூட்டப்பட்ட உயர் அதிகாரிகளின் கூட்டத்தில் மதவெறி தலைக்கு ஏறியதாl மதம் பிடித்த யானையாக மாறிய நரேந்திர மோடி அடுத்து வரும் தினங்களில் ஹிந்துக்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்த அவகாசம் வழங்கி முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உண்மையை அம்பலப்படுத்தி உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் தாக்கல் செய்தார். பட்டின் உயிருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. சஞ்சிவ் பட்டைப் போலவே காலம் கடந்தேனும் விவேக் ஸ்ரீவஸ்தவா, சதீஷ் சர்மா, ஹிமான்ஷு பட் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் குஜராத்தில் யதார்த்தத்தில் என்ன நிகழ்ந்தது என்ற உண்மையை உலகுக்கு அறிவித்தனர்.

இஹ்ஸான் ஜாஃப்ரி என்ற முன்னாள் காங்கிரஸ் எம்.பி உள்பட 69 முஸ்லிம்கள் தீயிலிட்டு பொசுக்கி கொலைச் செய்யப்பட்ட குல்பர்கா சொஸைட்டி கூட்டுப் படுகொலை வழக்கிலும் மோடியின் பங்கினைக் குறித்து மேற்கூறிய போலீஸ் அதிகாரிகள் தங்களது பிரமாணப் பத்திரத்தில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

நரோடா பாட்டியாவில் 97 முஸ்லிம்களை (200 பேர் கொலைச் செய்யப்பட்டதாக ஊர்மக்கள் கூறுகின்றனர்) கசாப்புச் செய்த காட்சியை மோடி நேரடியாக வந்து பார்த்து கொலையாளிகளை பாராட்டியதாக சம்பவத்தை நேரில் கண்ட சுரேஷ் என்பவர் கூறுகிறார்.

பாலியல் வன்புணர்வுக்கு பிறகு இளம் பெண்களின் பிறப்பு உறுப்புகளில் மரக்கட்டைகளை செருகியதும், கர்ப்பிணியின் வயிற்றை கிழித்ததும் நரோடா பாட்டியாவில்தான் அரங்கேறியது. மூன்று தினங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று மோடியும், பாபு பஜ்ரங்கியும் நேரடியாகவே அனுமதி அளித்ததாக நேரில் கண்டவர்கள் டெஹல்காவிடம் தெரிவித்தனர்.

மோடியிடம் விசாரணை என்ற பெயரில் நாடகம் நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவரான முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் மோடிக்கு நற்சான்றிதழை வழங்கினார். சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த குஜராத்தைச் சார்ந்த கீதா ஜோஹ்ரி, சிவானந்த் ஜா, ஆஷிஷ் பாட்டியா ஆகியோர் மோடியின் ஆதரவாளர்கள் ஆவர். இவர்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம்பெற்றதே மிகப்பெரிய அநீதமாகும். இந்த மோடியின் பக்தர்கள்தாம் அவரிடம் விசாரணையை நடத்தினார்கள்.

மோடியை குற்றவாளியாக அறிவிப்பதற்கு காங்கிரஸ் கட்சி அஞ்சுகிறது. மோடி குஜராத்தில் முதல்வராக தொடர்வதையே அவர்கள் விரும்புகின்றார்கள். கடந்த 10 ஆண்டுகளாக மோடியிடம் விசாரணைச் செய்யப்படவில்லை. இதனால் இந்தியாவில் எதுவும் சம்பவித்து விடவில்லை. இதன் மூலம் மோடியை சுட்டிக்காட்டி இதர மாநிலங்களில் முஸ்லிம்களின் வாக்கு வங்கியை கவர்ந்துவிடலாம் என்பதே காங்கிரஸின் திட்டமாகும். எனவே காங்கிரஸ் கட்சி மோடியை சிறையில் தள்ளும் என எதிர்பார்ப்பது கற்பனை உலகில் சஞ்சரிப்பது போன்றாகும்.

தற்பொழுது மிச்சமிருக்கும் கேள்வி என்னவெனில் “மோடி என்கிற அயோக்கியன் கரங்களில் விலங்கிட்டு அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கடமையை நிறைவேற்றப் போவது யார்?” என்பதாகும்.

Monday, September 10, 2012

கூடங்குளம் அணு உலையில் அறப்போர்!!

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின்நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணியை உடனே நிறுத்தக்கோரி ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கடற்கரை வழியே பேரணியாக சென்றுள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரையில் பல்லாயிரக்கணக்கில் குவிந்திருக்கும் எதிர்ப்பாளர்களிடம் அரசுத் தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணியை உடனே நிறுத்த வலியுறுத்தி அணு உலை எதிர்ப்பாளர்கள் கூட்டமைப்பு சார்பாக கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று காலை இடிந்தகரை சர்ச்சில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூடி பிரார்த்தனை செய்தனர். பின்னர் அங்கிருந்து கிளம்பி கூடங்குளத்தை நோக்கிச் சென்றனர். இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். ஆனால் அறிவித்த பாதையில் வராமல் இடிந்தகரையில் இருந்து கடற்கரை வழியாக சென்று கூடங்குளத்தின் பின்பகுதி வழியாக முற்றுகையிட பேரணியின் பாதை திடீரென மாற்றப்பட்டது.

இதனையடுத்து போலீசார் தங்களின் பாதுகாப்பு பணியை மாற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. அதற்குள் கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் அணுமின் நிலையத்துக்கு மிக அருகில் கடற்கரையில் குவிந்துள்ளனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் வைராவி கிணறு கடற்கரை பகுதியில் அமர்ந்து பொதுமக்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

கூடங்குளம் அணுஉலையில் எரிபொருளை நிரப்பக் கூடாது என்றும், அணுஉலையின் பணிகளை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களின் கோரிக்கைகையை ஏற்கும்வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் செல்வராஜ், காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரிஉள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் அவர்களின் சமரச முயற்சியை போராட்டக் குழுவினர் ஏற்கவில்லை.

அணு உலைக்கு எதிரான போராட்டத்தையடுத்து மத்திய ரிசர்வ் போலீசார் மற்றும் மாநில போலீசார் என சுமார் 4 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Sunday, September 9, 2012

சாயம் பூசி நடிப்பவர்களின் சாயம் வெளுத்தது!

சிவாகாசி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 38 பேர் இறந்துள்ளனர். நிதி உதவி அளிக்க வேண்டாம். அல்லது அளிப்பதாக வெட்டி பந்தா அறிக்கை விட வேண்டாம். குறைந்த பட்சம் அனுதாப செய்தியாவது வெளியிட்டார்களா என்றால் இல்லை. எங்கே பணம் கொடுக்க வேண்டியது வருமோ என்று யாரும் வாய் திறக்கவில்லை.

"என்னை வளர்த்து ஆளாக்கிய மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்" என்று புலம்பிய சூப்பர் ஸ்டார்கூட இப்படி ஒரு சம்பவம் நடந்ததை கண்டுகொள்ள வில்லை. சிவகாசி என்ற படத்தில் நடித்த விஜய்க்கு, காஜல் அகர்வாலோடு டூயட் பாடுவதற்குதான் நேரம் இருக்கிறது. அவரது கவலை இப்போது அவரது துப்பாக்கி தீபாவளிக்கு வெடிக்குமா வெடிக்காதா என்பது பற்றித்தானே தவிர சிவாகாசி பட்டாசை பற்றியும், அங்கே வெடித்து சிதறிய அப்பாவி தொழிலாளர்களையும் பற்றி அல்ல.

ஆனால் இந்த ஹீரோக்களின் முகத்தில் அடித்த மாதிரி ஒரு காரியத்தைச் செய்திருக்கிறார் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி. யாரும் கேட்காமல், யாரும் கோரிக்கை வைக்காமல் தனது மருந்து கம்பெனியில் இருந்து சுமார் 35 லட்சம் மதிப்புள்ள தீக்காய மருந்துகளை சிவகாசிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் மம்முட்டி.

தீகாயங்களுக்கான மருந்து தயாரிப்பதில் மம்முட்டிக்கு சொந்தமான பதஞ்சலி ஆயுர்வேத மருந்து தொழிற்சாலை புகழ்பெற்றது. அக்னிஜித் என்ற மருந்து ரொம்பவே பிரபலம். இந்த மருத்துவமனைக்கு சிவகாசி மருத்துவமனையிலிருந்து அக்ஜினித் மருந்து கேட்டு 35 லட்சம் ரூபாய்கு ஆர்டர் கொடுத்தது. இதைக் கேள்விப்பட்ட மம்முட்டி சிவாகாசிக்கு தேவையான அனைத்து தீக்காய மருந்துகளையும் இலவசமா அனுப்பி வைக்கும்படியும். இன்னும் மருந்துகள் எவ்வளவு தேவைப்படுகிறதோ அவை அனைத்தையும் அனுப்பி வைக்கும்படியும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் வெடி விபத்தில் காயமடைந்த, 40 பேருக்கு, இலவச ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்கு, பிரபல நடிகர் மம்முட்டி ஏற்பாடு செய்துள்ளார். கேரளா, கொச்சியில், நடிகர் மம்முட்டி நிர்வகித்து வரும், "பதஞ்சலி ஹெர்பல்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில், காயமடைந்தவர்களுக்கு, "அக்னி ஜித்து என்ற, மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த சிகிச்சைக்கு, 25 லட்சம் ரூபாய் செலவாகும்.

இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க, ஏற்பாடு செய்துள்ள நடிகர் மம்முட்டிக்கு நேற்று பிறந்தநாள். இதுதொடர்பாக, நடிகர் மம்முட்டி கூறுகையில், ""நான், எந்த ஆண்டிலும் பிறந்த நாளை கொண்டாடியதில்லை. இவ்வாண்டும் அப்படியே. சிவகாசி வெடி விபத்து குறித்து அறிந்ததும், மிகுந்த வேதனை அடைந்தேன். காயமடைந்தவர்களுக்கு, நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம் என நினைத்து, மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளேன், என்றார். (ஹீரோக்களே சினிமாவில் மட்டுமல்ல... நிஜத்திலும் ஹீரோவாக இருக்க முயற்சி செய்யுங்கள்.)

Saturday, September 8, 2012

சில நூறுக்கு ஆசைப்பட்டு இழந்ததோ பல நூறுகள்!

வங்கியில் பணம் எடுப்போரை கவனித்து, அவர்களை பல்வேறு வழிகளில் ஏமாற்றி, பணத்தை பறித்துச் செல்லும் கும்பல், எல்லா இடங்களிலும் உள்ளது.

சில நூறு ரூபாய்களை கீழே போட்டு, ஏமாற்றுவது, பணம் வைத்திருப்போர் சட்டையில் எச்சிலை துப்பி, அதை கூறி, சம்பந்தப்பட்ட நபர் துடைக்கும் போது பணத்தை பறித்துச் செல்வது, சைக்கிள், பைக் சக்கரங்களில் கயிறை சுற்றி வைத்து, அதை எடுக்கும் போது பணப்பையை பறிப்பது என, பல கைவரிசைகளை காட்டி, திருட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் பணத்தை பறித்துச் செல்கின்றனர். ஒரு சில ரூபாய்களுக்காக, பல ஆயிரங்களை இழப்போர் அதிகம். இந்த வகையில், முதியவர் ஒருவர் மோசடி நபர்களால் ஏமாற்றப்பட்டுள்ளார்.

காரியமங்களம், நடுத்தெருவைச் சேர்ந்தவர் கணேசன்,60. நேற்று உத்திரமேரூரில் உள்ள கனரா வங்கியில், ஏழு சவரன் தங்க நகைகளை அடமானம் வைத்து, 70 ஆயிரம் ரூபாய் வாங்கினார். பணத்தை ஒரு துணிப் பையில் வைத்துக் கொண்டு, சைக்கிளில் வீட்டிற்குச் சென்றார்.

தனியார் திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த, மர்ம நபர்கள் இருவர், 500 ரூபாய் நோட்டை காற்றில் பறக்க விட்டு, கணேசனிடம் காற்றில் பணம் பறக்கிறது என்றனர். இதை கேட்டதும், கணேசன் சைக்கிளை நிறுத்திவிட்டு, பணப்பையை அதில் வைத்துவிட்டு, 500 ரூபாயை எடுக்க வேகமாகச் சென்றார். அப்போது, சைக்கிளில் மாட்டியிருந்த பணப்பையை மர்ம நபர்கள் எடுத்துக் கொண்டு தப்பினர்.

Friday, September 7, 2012

நீலச்சுருள் நித்திக்கு ஆப்பு?

மதுரை ஆதீனமாக அருணகிரிநாதர் உள்ளார். இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்தார். இது பலத்த சர்ச்சையை கிளப்பியது. சென்னை ஐகோர்ட்டிலும், மதுரை கிளையிலும் வழக்குகள் தொடரப்பட்டன. மதுரை ஆதீனத்தை இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என, ஐகோர்ட் வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி மனு அனுப்பினார்.

மதுரை ஆதீனம், இந்து பொது மத நிறுவனம். அறநிலையத் துறை சட்டத்தின் கீழான பட்டியலில், மதுரை ஆதீனம் இடம் பெற்றுள்ளது. ஆதீனத்தின் தலைவராகவும், அறங்காவலராகவும் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார். ஆதீனத்தின் நடவடிக்கைகளை நிர்வகிக்க, மதுரை ஆதீனம் அறக்கட்டளையை அருணகிரிநாதரும், நித்யானந்தவும் உருவாக்கியுள்ளனர். இந்து சமய அறநிலையத் துறை சட்டப்படி, இது முறையானது அல்ல.இந்த அறக்கட்டளையை உருவாக்கிய பின், தனது வாரிசாக நித்யானந்தாவை நியமிப்பதாக, கர்நாடகாவில் உள்ள "நோட்டரி பப்ளிக்' முன், ஒரு மனுவை அருணகிரிநாதர் தாக்கல் செய்துள்ளார்.

ஆதீனத்தின் சொத்துகளை நிர்வகிக்க, தனது சட்டப்பூர்வ வாரிசாக செயல்பட, நித்யானந்தாவுக்கு தகுதியுள்ளது என்றும், இந்தச் சொத்துகளின் மீது அவருக்கு முழு உரிமை உள்ளது என்றும் மனுவில், அருணகிரிநாதர் கூறியுள்ளார்.குறிப்பிட்ட காரணங்களுக்காக தவிர, மற்றபடி மடத்தின் அறங்காவலரை நீக்க, சட்டத்தில் இடமில்லை. அறங்காவலர் பதவி காலியாகும் போது, வாரிசு உரிமையில் பிரச்னை ஏற்பட்டாலோ அல்லது உடனடியாக அந்த காலியிடத்தை நிரப்ப முடியாமல் போனாலோ, உதவி கமிஷனர் அதற்கான ஏற்பாட்டை செய்யலாம்.மதுரை ஆதீனத்தின் அறங்காவலராக அருணகிரிநாதர் மட்டுமே செயல்படுகிறார். தற்போது, மடத்தின் தலைவராக, ஆதீனகர்த்தராக செயல்பட, நித்யானந்தாவுக்கு சட்டப்பூர்வ உரிமையில்லை. அறங்காவலர் பதவி காலியானால் மட்டுமே, அவர் செயல்பட முடியும்.

Thursday, September 6, 2012

"தீ" பாவ(லி)ளி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே முதலிப்பட்டியில் இன்று பிற்கபல்நிகழ்ந்த கோர தீ விபத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கருகி உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. நெஞ்சை உறைய வைக்கும் இந்த தீவிபத்து.

ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாக சிவகாசி சுற்றுவட்டாரத்தில் இத்தகைய தீ விபத்துகள் நடப்பதும் கொத்து கொத்தாக மனித உயிர்கள் கருகிப்பலியாவதும் வாடிக்கையாகிவருகிறது.

எந்தவித பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் இல்லாமல், அபாயகரமான வெடி மருந்துகளைக் கையாண்டிருப்பதே அசம்பாவிதத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இனியாவது இப்படி மனித உயிர்கள் கருகிப்பலியாவதைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

பட்டாசு ஆலைகளில் போதுமான ஏற்பாடுகள் செய்யப்படாமல் இருப்பதும் இதை அரசுஅதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதும்தான் தீ விபத்துக்குக் காரணம். இத்தகைய தீ விபத்துக்கு என்ன காரணம் என்பதை கண்டறிவதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் பட்டாசு ஆலை நிர்வாகங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இத்தகைய தீ விபத்து நிகழும்போது உரிய சிகிச்சை பெற அங்குபோதுமான மருத்துவவசதி இல்லை. ஏற்கெனவே விருதுநகரில் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு கூட அறிவிப்போடுதான் இருக்கிறது. அங்கு இனியாவது நவீனவசதிகளுடன் கூடிய மருத்துவமனையை விரைந்து அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த துயர சம்பவத்துக்கு பிறகாவது மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கையில் இறங்குமா அல்லது தன் பையை நிரப்பிக்கொண்டு ஒதுங்குமா ..?

Wednesday, September 5, 2012

எத்தனை மருத்துவ குணம் இப்பூவில்

வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டால் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். வேப்பம் பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த தன்மை தீரும். வேப்பங்காயை வெயிலில் உலர்த்தி அந்த பொடியை வெந்நீரில் கலந்து கொடுக்க மலேரியாக் காய்ச்சல் குணமாகும். வேப்பம்பழ சர்பத்தை குடித்து வந்தால் படிப்படியாக சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.

வேப்பம் பூ உடலில் உள்ள கொட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும். வேப்பம்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். குஷ்ட நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.

3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் சேர்த்து அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் போன்ற தொந்தரவு நீங்கும். வாயுத்தொல்லை,​ ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும்.

Monday, September 3, 2012

அமீர்கானை உலக உச்சிக்கே கொன்று சென்ற ஒரு நிகழ்ச்சி!!

பல வெற்றி படங்களில் நடித்து கிடைத்த பெயர், புகழ் எல்லாவற்றையும் காட்டிலும் சத்யமேவ ஜெயதே எனும் ஒரே ஒரு நிகழ்ச்சி அமீர்கானை எங்கோ கொண்டு போய் சென்றுவிட்டது.

தனியார் டி.வி. ஒன்றில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் நடிகர் அமீர்கான். சமூகப் பிரச்னைகளை அலசி, ஆராய்ந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சி பொதுமக்கள் இடையே பெரிதும் வரவேற்பு பெற்றது. இதன்தொடர்ச்சி 2ம் பாகமும் வரவேண்டும் என்றும், அதில் அமீர்கானே வரவேண்டும் என்று ரசிகர்களும் பலரும் விரும்பி வருகின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி இப்போது அமெரிக்கா வரை பிரபலமாகியுள்ளது.

அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான டைம் பத்திரிக்கையில் இந்நிகழ்ச்சி பற்றிய கட்டுரை வந்துள்ளது. அது மட்டுமி்ன்றி அட்டைப்படத்தில் ஆமீர் கானின் போட்டோவைப் போட்டுள்ளனர். இதன் மூலம் டைம் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் வந்த முதல் இந்திய ஹீரோ என்ற பெருமையைப் பெற்றுள்ளார் அமீர்.

முன்னதாக இதற்கு முன் முன்னாள் பிரதமர் இந்திரா, ராஜீவ், தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், பர்வின் பாபி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், சானியா மிர்சா ஆகியோரது படங்கள் டைம் பத்திரிகையின் அட்டைப்பக்கத்தில் வந்துள்ளது.

Sunday, September 2, 2012

ஒரு பயங்கரவாதியின் வாக்குமூலம்

“அவர்களை(முஸ்லிம்களை) நாங்கள் விரட்டிச் சென்று ஒரு குழியில் தள்ளினோம். அவர்கள் அஞ்சி நடுங்கி ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டனர். முந்தையதினம் சேகரித்த பெட்ரோலையும், டீசலையும் அவர்கள் மீது ஊற்றினோம். பின்னர் டயர்களை தீவைத்து அவர்கள் மீது வீசினோம்”- இரத்தத்தை உறைய வைக்கும் இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரன் தாம் பாபு பஜ்ரங்கி என்ற இந்தியா கண்ட மிகக்கொடிய ஹிந்து பயங்கரவாதி.

நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை வழக்கில் சங்க்பரிவார பஜ்ரங் தள தலைவனான இக்கொடியவனுக்கு நீதிமன்றம் மரணிக்கும் வரையிலான ஆயுள் தண்டனையை தீர்ப்பாக அளித்துள்ளது.

ஐந்து அடி மூன்று இஞ்ச் உயரம் கொண்ட பாபு பஜ்ரங்கி, பட்டேல் சமுதாயத்தைச் சார்ந்த கீரிடம் சூட்டாத ராஜாவாக திகழ்ந்தான். 22 ஆண்டுகள் விசுவ ஹிந்து பரிஷத்தின் இளைஞர் பிரிவில் பணியாற்றினான். பின்னர் பஜ்ரங்தளம் மற்றும் சிவசேனாவில் இணைந்து பணியாற்றினான்.

நரோடா பாட்டியாவில் ஒரு தெருவில் அலுவலகத்தை அமைத்திருந்த பாபு பஜ்ரங்கியின் முக்கிய பொழுதுபோக்கே முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் துன்புறுத்துவதாகும்.

“அவர்களை(முஸ்லிம்களை) நான் வெறுக்கிறேன்”- டெஹல்காவிடம் பாபு பஜ்ரங்கி கூறினான்.

“முஸ்லிம் இளைஞர்களுடன் ஓடிய இளம்பெண்களின் பெற்றோர்கள் என்னை சந்திக்க வருவார்கள். போலீசாரிடம் புகார் அளிக்க சென்ற அவர்களை, போலீசாரே என்னிடம் தீர்வுக்காக என்னிடம் அனுப்பி வைப்பார்கள். இவ்வாறு 957 ஹிந்து இளம்பெண்களை நான் காப்பாற்றியுள்ளேன். ஹிந்து இளம் பெண்ணொருத்தி முஸ்லிம் இளைஞனை திருமணம் முடித்தால், குறைந்தது 5 குழந்தைகளை பிரசவிப்பாள். அவ்வாறெனில், இவ்வளவு பெண்களை காப்பாற்றியதன் மூலம் 5 ஆயிரம் முஸ்லிம்கள் பிறப்பதற்கு முன்பே தடுத்துவிட்டேன்” – பஜ்ரங்கி புள்ளிவிபரத்தோடு கூறுகிறான்.

“முஸ்லிம்” பிரச்சனையை தீர்க்க வேறு சில வழிகளையும்கூறுகிறான்: “(முஸ்லிம்களை) கொலைச் செய்ய டெல்லியே(மத்திய அரசு) உத்தரவிட வேண்டும். உயர்ஜாதியினரும், பணக்காரர்களும் கொலைச் செய்ய களமிறங்கமாட்டார்கள். சேரிவாழ் மக்களும், வறியவர்களும் களமிறங்குவார்கள். முஸ்லிம்களை கொலைச்செய்து அவர்களின் சொத்துக்களை சொந்தமாக்கலாம் என கூறினால் போதும், 3 தினங்களிலேயே இந்தியாவில் முஸ்லிம்கள் துடைத்தெறியப்படுவார்கள்.”

முஸ்லிம்களின் மக்கள் தொகையை குறைக்க பஜ்ரங்கி சொல்லும் ஆலோசனை: “முஸ்லிம்களுக்கு ஒரு திருமணமும், ஒரு குழந்தையும் என்ற சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்”

2007-ஆம் ஆண்டு டெஹல்கா மாத இதழின் பத்திரிகையாளர் ஆஷிஷ் கேதானின் துணிச்சலுடன் நடத்திய ஸ்டிங் கேமரா ஆபரேசன் மூலம் பாபு பஜ்ரங்கி என்ற கொடிய ஹிந்துத்துவா பயங்கரவாதியின் முகம் உலக சமூகத்தின் முன்னால் பகிரங்கப்படுத்தப்பட்டது. நரோடா பாட்டியாவில் 97 முஸ்லிம்களை கூட்டுப் படுகொலைச் செய்த சம்பவத்திற்கு தலைமை தாங்கியதாகவும், முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்களிடமிருந்து ஆதரவு கிடைத்ததாகவும் பஜ்ரங்கி விவரிக்கிறான்.

“கர்ப்பிணியான கவுஸர் பானுவின் வயிற்றை சூலாயுதத்தால் கிழித்து சிசுவை வெளியே எடுத்து தீயில் போட்டு பொசுக்கியது நான் தான்” என பகிரங்கமாக தெரிவித்த பஜ்ரங்கி, இனியும் வாய்ப்புக் கிடைத்தால் கொலைச் செய்வேன் என வெறியுடன் தெரிவித்தான்.

2002 பிப்ரவரி 27-ஆம் தேதி கோத்ரா ரெயில் பெட்டியில் தீப்பற்றிய தினத்தன்று அங்கு வந்த பஜ்ரங்கி, தீயில் கருகிக் கிடந்த உடல்களை பார்த்து, அங்கே வைத்து உறுதிமொழியொன்றை எடுத்ததாக டெஹல்காவிடம் தெரிவித்தான்.” கோத்ராவுக்காக பழிவாங்குவதை அடுத்த தினமே நடைமுறைப்படுத்துவேன். கோத்ராவில் மரணித்தவர்களைவிட நான்கு மடங்கு நரோடா பாட்டியாவில் மரணிக்கவேண்டும். நரோடா பாட்டியாவுக்கு சென்றுவிட்டு அஹ்மதாபாத்திற்கு வந்து கூட்டுப் படுகொலைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்தேன்”- என்று பஜ்ரங்கி கூறினான்., இதற்கெல்லாம் உதவியாக இருந்த முதல்வர் என்று சொல்ல தகுதியல்லாத மோ(கே)டிக்கு எப்போது தண்டனை...?(மொத்தத்தில் நரோடா பாட்டியா தீர்ப்பால் கிழிந்து தொங்குகியது மோடியின் முகமூடி)

Saturday, September 1, 2012

கன்னியாஸ்திரியை கர்ப்பமாக்கிய பாதிரியார்?

பாதிரியார் ராஜரத்தினம் பதவி உயர்வு பெற்று திருச்சி ஜோசப் கல்லூரிக்கு முதல்வர் ஆனார். நெல்லையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் திருச்சியில் நீடித்தது. இசை ஆர்வமாக இருவரும் அடிக்கடி சந்தித்து (பாதிரியார் ராஜரத்தினம் பிளாரன்சுமேரி) இசை ஆல்பம் தயாரிப்பது குறித்து விவாதித்தனர்.

பாதிரியார் ராஜரத்தினம் தனது செல்வாக்கை பயன்படுத்தி பிளாரன்சுமேரி பாட “ரதியின் கீதம்” என்ற ஆல்பம் தயாரித்தார். அந்த ஆல்பம் கிறிஸ்தவ மக்களிடையே பிரபலமாக தொடங்கியது. இதனால் இருவரது சந்திப்பும் தினமும் நடக்க தொடங்கியது. அவரை சந்திக்க ஜோசப்கல்லூரிக்கு பிளாரன்சுமேரி செல்வது உண்டு. அவரும் தினமும் விரும்பி அழைப்பது உண்டு.

இந்தநிலையில்தான் 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ந்தேதி பிளாரன்சுமேரி கற்பு பறிபோனதாக கூறப்படும் நாள். வழக்கமாக இருவரும் சந்திக்கும் அதே கல்லூரி அறையில் தான் கற்பு பறிபோனதாக பிளாரன்சு மேரி கூறியுள்ளார்.

பாதிரியார் கொடுத்த குளிர்பானத்தை குடித்ததும் அவருக்கு தலைகனக்க தொடங்கியது. மயங்கி விழுந்தார். சிலமணிநேரம் கழித்து மயக்கம் தெளிந்தது. நடக்க கூடாதது நடந்து விட்டதாக அறிந்தார். இதுபோன்ற சம்பவம் மீண்டும் மீண்டும் நடந்ததாக பிளாரன்சுமேரி கூறியுள்ளார். சிலநாள் கழித்து அவரது உடலில் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார். வயிறு சற்று பெரிதாக இருப்பதை அறிந்தார். உடனே நம்பதகுந்த பெண் டாக்டர் ஒருவர் உதவியை நாடினார். கர்ப்பம் அடைந்து இருப்பதாக டாக்டர் தெரிவித்தார்.

என் கற்பை பலமுறை சூறையாடிய பாதிரியார் முகமூடியை கிழிக்காமல் விட மாட்டேன்: கன்னியாஸ்திரி சபதம் ஏற்றுள்ளார். தயவுசெய்து கல்யாணம் பண்ணி தொலைங்க பாதிரிமார்களே! கள்ள சாமியார்களே!?

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!