Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, August 31, 2012

குறையை குறைப்பதால் குற்றம் ஏதுமில்லையே!

சிலர் எதற்கெடுத்தாலும் பிறரை குறை சொல்லுவதியே வழக்கமாக கொண்டிருப்பர் எடுத்துக்காட்டாக எனது பக்கத்து வீட்டு நபர்களையோ அல்லது எனது ஆசிரியருக்கு பாடம் நடத்தவே தெரியல..இரு பெண்கள் சந்தித்துக்கொண்டால், அவங்க குடும்பமே அப்படித்தான் ... என குறை சொல்லி கொண்டிருப்பதே வழக்கமாக கொண்டிருப்பர்.

நாமும் பல நேரங்களில் யாரையாவது குறை சொல்லிக்கொண்டே இருப்போம் இரண்டு மூன்று பெண்கள் கூடி பேச தொடங்கினாலே அடுத்த வீட்டு கதையைத்தான் அசைப்போட்டு ஐயோ அவள் அப்படி ...அட இவன் இப்படி...என்று வாய்க்கு வந்தபடி குறை சொல்லிவிடுகிறோம் அடுத்தகணமே நாம் குறை சொன்ன நபர் வந்துவிட்டால் வாங்க வாங்க...எப்படி நல்லா இருக்கியளா? என்ன உடம்பு ரொம்ப இளைச்சு போச்சு? இந்த பக்கமே வர மாட்டேன்கிரீங்க? என்று புன்னகை பொங்க அன்பு வார்த்தைகளை அப்படியே அள்ளி வீசிடுவோம்..

யாரிடம் தான் குறை இல்லை யாரிடம்தான் பலவீனம் இல்லை? நான் மட்டும் ரொம்ப யோக்கியமா?நான் தவறே செய்வதில்லையா? என்று திறந்த மனதுடன் நம்மை நாமே கேட்டு பாப்போம். அடுத்த மனிதர்களிடம் நல்ல குணங்கள் ஏராளமாக காணப்படுகின்றன அவற்றைப்பற்றி தாராளமாகவும் ஏராளமாகவும் பேசுவோம். அடுத்தவரின் நல்ல குணங்களை நம் கண்கள் நன்றாக பார்க்கட்டும் அடுத்தவரை பற்றி நல்லது பேசுவதால் நாம் எதையும் இழந்து விடப்போவது இல்லை பிறர் நம்மை வெறுத்தாலும் அவர்களை குறை சொல்வதை மனதார மன்னித்து ஏற்றுகொல்வதே சிறந்தது. *பல நல்ல மனிதர்கள் அதைதான் செய்தார்கள்.

அடுத்தவர்கள் விஷயத்தை நொண்டி நொங்கு எடுப்பதை விட்டுவிட்டு நம் வேலைகளை கவனம் செலுத்தினால் எவ்வளவு பயனளிக்கும், வீண் சண்டையிலிருந்தும் தப்பிக்கலாம் செய்யலாமா....

Thursday, August 30, 2012

விஜய்க்கு பதில் கமல்! க.மேனன்!!

விஜய்யை வைத்து யோஹான் என்கிற திரைப்படத்தை கவுதம் மேனன் இயக்குவதாக இருந்து சில பல காரணங்களால் அப்படத்தை டிராப் செய்தார் என்று எல்லாரும் அறிந்த செய்தி. ஆனால் அப்படத்தை அவர் கைவிடவில்லை என்கிறது கோலிவுட்.

அதே கதையை தற்போது கமலை வைத்து படத்தை தொடங்கப்போவதாகவும் கமலிடம் கதையை சொல்லி ஒ.கே வாங்கிவிட்டதாக கோலிவுட் செய்தி.

மேலும் இதற்கு முன்பு இவர்கள் இருவரும் தந்த படம் ஒரு வெற்றிப்படம் என்பது குறப்பிடதக்கது.

Wednesday, August 29, 2012

கலக்கிய குட்டையில் மீன்பிடிக்க துடிக்கும் தீவிரவாத அமைப்புகள்?

குவஹாத்தி: கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும் நோக்கத்துடன், அஸ்ஸாம் மாநிலத்தில் சங்க்பரிவார தீவிரவாத அமைப்பான பஜ்ரங்தள் அழைப்பு விடுத்த முழு அடைப்பால் மக்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அஸ்ஸாமில் நடந்த கலவரத்தை கண்டிக்கிறோம் என்ற பெயரில் நேற்று(திங்கள்கிழமை) 12 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு பஜ்ரங்தள் அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.

வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பல்வேறு பகுதிகளில் டயர்களை எரித்தும், வாகனங்கள் மீது கற்களையும் வீசியும் சிலர் தாக்குதலில் ஈடுபட்டனர். கடைகள், கல்வி நிறுவனங்கள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. அரசு அலுவலகங்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.

ஒரு சில அரசு பேருந்துகள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆனாலும், எந்தவித வன்முறை சம்பவங்கள் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. கொக்ரஜார், சிராங், துப்ரி மாவட்டங்களில் மட்டும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு இன்னும் அமலில் உள்ளன. ராணுவம் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

அஸ்ஸாம் மாநிலத்தில் கலவரத்தை ஒடுக்க மாநில அரசு விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் கூறியுள்ளார். போதுமான மத்திய படை அஸ்ஸாமிற்கு அனுப்பப்பட்டுள்ளது. சமூக நல்லிணத்தை வலுப்படுத்த அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Tuesday, August 28, 2012

நீரழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் மருந்தாகுமா?

பாகற்காய் வேக வைத்த நீரை மதிய உணவிற்கு முன்பாக பருகுவதும் வாரம் 2-3 முறை பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்வதும் நீரிழிவுக்காரர்களின் கட்டுப்படாத சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் பயன்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பு: நீரிழிவு என்பது ஒரு நோயல்ல. அது உடலில் உள்ள ஒருவிதமான வளர்சிதை மாற்றக் கோளாறே ஆகும். எனவும் நீரிழிவை முழுமையாக குணப்படுத்த இயலாது. கட்டுப்பாட்டில் வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அதிலும் பாகற்காயை நம்பி எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளை நிறுத்துவதும் கூடாது.

மருந்து மாத்திரைகளுடன் பாகற்காயையும் வேண்டுமானால் சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்க பயன்படுத்தலாம். வெறும் பாகற்காய் மட்டும் நீரிழிவு நோய்க்கு மருந்தல்ல.

மூலம்: தினசரி காலை 2 தேக்கரண்டி அளவு பாகற்காய் இலைகளின் சாற்றை அரை டம்ளர் அளவு மோரில் கலந்து 30 நாட்கள் காலை வெறும் வயிற்றில் பருகி வர மூல நோய் குணமாகும்.

பித்தம்: பித்தம் அதிகமாக உள்ளவர்களும் கல்லீரல் பாதிப்பிற்கு உள்ளானவர்களும் காலை வெறும் வயிற்றில் 2-3 தேக்கரண்டி அளவு பாகற்காய் சாற்றை தண்ணீரில் கலந்து பருகிவர நல்ல பலன் தெரியும்.

மூட்டுவலி: ரத்தத்தில் அதிகமான யூரிக் அமிலம் உள்ளதால் ஏற்படக்கூடிய ரூமாட்டிஸம், ஆர்த்ரைடிஸ் மற்றும் கவுட் போன்ற மூட்டுவலி உடையவர்கள் பாகற்காயை உண்டுவர நல்ல பலன் தெரியும். வலி அதிகமாக உள்ள இடங்களில் பாகற்காயை அரைத்து பற்று போல போட்டு வர வலி குறையும். மூட்டுவலி நிவாரணம் கிடைக்கும்.

Monday, August 27, 2012

பென்ஷனுக்காக பொட்டிலக்கும் பெண்கள்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தகுதியில்லாத நபர்கள் விதவைகள் பென்ஷன் பெற்றுள்ளனர். இது தொடர்பாக சமூக நலத்துறை அதிகாரிகள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் பல போலி பென்ஷன்தாரர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

திருமணமான பெண்கள் 131 பேர் தங்கள் கணவர் இறந்துவிட்டதாக போலியான தகவல்களை கொடுத்து மாதம் 300 ரூபாய் பென்ஷன் பெற்று வந்துள்ளனர்.

மேலும் விதவை பென்ஷன் பட்டியலில் உள்ள 299 பேர் இறந்த பிறகும், அவர்களின் பெயரில் மாதந்தோறும் பென்ஷன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொகையினை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெற்று வந்துள்ளதை இப்போது அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து விதவை பென்ஷன்தாரர்களை முறைப் படுத்த சமூக நலத்துறை தீவிர நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

Sunday, August 26, 2012

மூட்டை முடிச்சுகளுடன் கிளம்பிய சகுனி நாயகி!

தமிழில் மாஸ் ஹீரோவுடன் நடித்தபோதும் சகுனி நடிகைக்கு தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இருந்தும் வரும்.... வரும்.... என சென்னையிலேயே காத்துக் கொண்டிருந்த நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதனால் கடுப்பாகிய நடிகை, தற்போது தான் தங்கியிருந்த ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு தனது சொந்த ஊரான பெங்களூருக்கே மூட்டை முடிச்சுகளுடன் பறந்துவிட்டாராம்.

இப்போது 3 கன்னட படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் ரொம்ப குசியாகிவிட்டார் அம்மணி.

Saturday, August 25, 2012

ஆன் லைனில் அறிந்து கொள்ளும் புது வசதி அறிமுகம்

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் கல்வித் உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளும் இணையதளம் மூலமே ஆன்லைனில் உதவித் தொகைக்கு வி்ண்ணப்பிக்கும் புதிய திட்டம் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டம் திருவாரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூ், கோவை ஆகிய 5 மாவட்டங்களில் ரூ.12.58 கோடி மதிப்பீ்ட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக நெல்லையில் உயர் நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதற்கு முன்பு உதவித் தொகை கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பம் ஏற்று கொள்ளப்பட்டதா, பணம் பட்டுவாடா செய்யப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள முடியாது. பள்ளிகளிலும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது.

இந்த புதிய திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் பிரத்யேக 19 இலக்க எண் வழங்கபட உள்ளது. இந்த 19 இலக்க எண்ணை பதிவு செய்து மாணவர்கள் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து சமர்பிக்கலாம்.

இதன் மூலம் சம்பந்தப்பட்ட மாணவரே விண்ணப்பத்தின் நிலவரம், உதவித் தொகையின் நிலவரம் ஆகியவற்றை பிரத்யேக எண் மூலம் அறிந்து கொள்ள முடியும். இந்த புதிய திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் மாதம் அமலுக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

Thursday, August 23, 2012

ஆசிரியையின் கவர்ச்சியும் மாணவனின் மிரச்சியும்!!

இன்று இந்தியா முழுவதும் ஒரு விஷயம் பரவலாக்கப்பட்டு வருகிறது அது என்னவென்றால் பள்ளி ஆசிரியைகள் தங்களது ஆடையை கண்ணியமிக்கதாக சரியாக போட்டுவரவேண்டும். உடலை அரைகுறையாக காட்டிக்கொண்டு வரக்கூடாது முடிந்தால் ஸ்கர்ட் போன்றவைகளை தவிர்த்து விட்டு சேலை போன்றவைகளை கட்டிக்கொண்டு வரவேண்டும் என்கின்ற இந்த விஷயம் நாம் அடிக்கடி கேள்விப்பட்டு வருகிறோம்.

ஏன்? இப்படி. எதற்காக இந்த விஷயம் பிரபுலப்படுத்தப்படுகிறது. என்னவென்றால் பல கல்விக் கூடங்களில் ஆசிரியைகளின் அரை குறை ஆடைகளால் பாடம் கற்க வந்த பள்ளி மாணவர்கள் பாடத்தை விட்டு விட்டு ஆசிரியைகளின் உடல் அழகை படிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதன் காரணத்தால் சில இடங்களில் ஆசிரியைகள் மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமும் நாம் அறிவோம்.

இன்னும் சில இடங்களில் ஆசிரியைகள் தங்களிடம் பாடம் கற்க வந்த மாணவர்களை அவர்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களிடம் பாலியல் தொடர்பு கொண்ட செய்திகளும் நமக்கு தெரியும். நியூயார்க்கில் பதிமூன்று வயது மாணவர்களுடன் ஒன்பது வருடம் உடல் உறவு கொண்ட லீனா என்ற இந்திய ஆசிரியைக்கு அந்த நாட்டு அரசு பதினான்கு வருடம் கடுங்காவல் தண்டனை கொடுத்துள்ளது.

மேற்குலகம் இன்றுவரை இஸ்லாம் பெண்களை பர்தாவால் அடிமைப்படுத்தி உள்ளது என்கின்ற கூப்பாட்டோடு அதை தடை செய்யும் செயலை பிரான்ஸ் போன்ற நாடுகளில் நடைமுறைப்படுத்தி உள்ளது. மீறி பர்தா அணிந்தால் அவர்களுக்கு கடுமையான சட்டத்தின் மூலம் தண்டனை கொடுத்து உள்ளது. ஆனால் அதே மேற்குலகம் பெண்களின் சுதந்திரம் என்கின்ற போர்வையில் தனது மனைவியையும், தான்பெற்ற பெண் பிள்ளைகளையும், தனது சமூக மக்களையும் அரைகுறை ஆடைகளால் பார்த்து பார்த்து மனதுக்குள் ஆனந்தம் அடைந்தது. இதைவிட கொஞ்சம் மேலேபோய் அவர்களுக்கு வேலைவாய்ப்பு என்கின்ற போர்வையில் அவர்களின் கற்ப்பு சூறையாடப்பட்டு வருகிறது. அமெரிக்க இராணுவத்தில் பணிபுரியும் பல பெண்களின் கர்ப்பை அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளே சூறையாடிய சம்பவம் நாம் அனைவரும் அறிந்ததே.

ஆகமொத்தம் அந்நிய பெண்களை அவர்களின் உடல் அழகை காணவேண்டும் என்கின்ற வக்கிரக்கப் புத்தியுடன் அவர்களின் நடவடிக்கைகள் இருக்கின்றன. அதனால் தான் பாலியல் வன்முறைகள் மேலை நாடுகளில் அன்றாட நிகழ்ச்சியாக நடந்து வருகிறது. ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் நடத்தும் ஓரினச்சேர்க்கையை அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ நடைமுறைப்படுத்தி வருகிறார்கள் .

என்ன காரணம் இறைவன் பெண்களின் உடலில் ஒரு கவர்ச்சியை இயற்கையாகவே கொடுத்து உள்ளான். அதனால் தான் அவர்களைப் படைத்த இறைவன் அவர்களுக்கு அவர்களின் உடல் அழகை யாருக்காக அவர்கள் காட்டவேண்டும் என்கின்ற சுதந்திரத்தை அவர்களுக்கு கொடுத்து உள்ளான். தன்னுடைய கணவருக்காக காட்டவேண்டிய தங்களது பொன்னான உடல் அழகை, பெண் கண்ணியத்தை, கர்ப்பை அந்நிய ஓநாய்களுக்கு காட்டவேண்டாம் என அறிவுறுத்துகிறது.

மிகவும் இறுக்கமான ஆடைகளால் தங்களது உடல் அழகு வெளியில் தெரியும்படி நடக்க வேண்டாம் ஓசை கேட்கும்படி தங்களது கால்களில் சலங்கையை கட்டிக்கொண்டு திரியவேண்டாம். இதன்மூலம் அந்நிய ஆடவரின் மனதில் வீணான என்னத்தை விதைக்கவேண்டாம். பெண்கள் தங்களது ஆடைகளால் தங்களது உடலை அழகாக மறைக்கவேண்டும் மேலும் தங்களது முந்தானைகளால் தங்களது மேல் முகத்தை மூட வேண்டும் அந்நிய ஆடவர்கள் தங்களது பக்கம் திரும்பாமல் தங்களது குரலை குளைத்துப் பேசவேண்டாம் என்கின்ற அன்புக் கட்டளையை இஸ்லாம் குடும்ப பெண்களுக்கு கற்றுக் கொடுக்கிறது.

அதே நேரம் ஆண்களையும் இஸ்லாம் செதுக்குகிறது அன்னியப் பென்களைப் பார்த்தால் உங்களது பார்வையை கீழே தாழ்த்திக் கொள்ளுங்கள், நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்களோ அவ்வாறுதான் உங்களுக்கு மனைவி கிடைப்பாள் எனவே உங்களை ஈமானுடன் தொடர்பை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள் கண்ணியத்தோடு நடந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறது.

இந்த பெண்களுக்கான கண்ணியத்தை ஆயிரத்தி நானூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே இஸ்லாம் மனிதர்களுக்கு கொடுத்து உள்ளது. அதனால்தான் இஸ்லாமிய உலகில் பெண் சிசுக்கொலை கிடையாது கற்பழிப்பு கிடையாது எனவே இஸ்லாம் கூறும் இந்த பர்தா என்கின்ற பெண்களின் பாதுகாப்பு கவசத்தை முஸ்லிம்களுக்கு மட்டும் என்று எடுத்துக்கொள்ளாமல் அனைத்து சமுதாய பெண் மக்களும் எடுத்துக்கொண்டால் வரக்கூடிய சமுதாயம் பெண்களைப் பற்றிய கண்ணியத்தை தெரிந்து அவர்களிடம் பழகுவார்கள் பலவிதமான தவறுகள் இல்லாத சமுதாயமாக மாறுவார்கள் என்பதை புரிந்து கொண்டு நடக்கவேண்டும்.

Tuesday, August 21, 2012

அதிர்ச்சி கொடுத்த விஜய் அதிர்ந்த இயக்குனர்!

சட்டம் ஒரு இருட்டறை ரீமேக் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு விஜய் திடீர் விஜயம் செய்தார். அவரது வருகையை சற்றும் எதிர்பாராத படக்குழுவினர் இன்ப அதிர்ச்சியில் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.அப்போது என்னைப் பார்த்ததும் ஏன் வேலை எல்லாம் அப்படியே நிற்கிறது? நடக்கட்டும், நான் வேடிக்கை பார்க்கி‌றேன் என்று இயக்குனர் சினேகா பிரிட்டோவிடம் இயல்பாக சொல்லிவிட்டு ஒரு ஓரமாகப் போய் அமர்ந்து கொண்டார் விஜய்.

இயக்குனர் சினேகா பிரிட்டோவை அருகில் அழைத்து, ஷாட் எடுங்கள் என்று ஊக்கப்படுத்திய விஜய், நடன இயக்குனர் ராபர்ட்டைப் பார்த்து, "ஸ்டெப் சொல்லிக் கொடுங்கள்" என்றார். நிமிர்ந்து நில், துணிந்து செல் என்ற பாடல் ஒலிக்க நடன அசைவுகளைப் பார்த்த விஜய், நடன இயக்குனருக்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது, படத் தொகுப்பாளர் ராஜேஷ், அதுவரை எடுத்த காட்சிகளை லாப் டாப்பில் எடிட் பண்ணிக்காட்டி தன் பங்குக்கு பாராட்டுகளை வாங்கிக் கொண்டார். அந்த நேரத்தில் நானும் உள்ளேன் ஐயா என்று ஃபிரேமுக்குள் நுழைந்த ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமாருக்கு பாராட்டு கிடைத்தது. அது சரி, இது என்ன? பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? பெரி‌ய செட் என்று எதுவும் போடவில்லையே? என்று வியப்புமாக இயக்குனர் சினேகா பிரிட்டோவிடம் கேள்வி எழுப்பினார் விஜய்.

"அதுதான் எங்கள் கலை இயக்குனர் வனராஜின் கைவண்ணம். ‌செட் போடாதது போல் இயற்கையான சூழலை ஏற்படுத்தியிருக்கிறார் என்றார் இயக்குனர் சினேகா பிரிட்டோ. மேலும், "தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, லேசர் ஒளியை பயன்படுத்தி நடனக்காட்சியை எடுக்கிறோம். அது மட்டுமின்றி, 40க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் கதாநாயகி பிந்து மாதவியும் கதாநாயகன் தருண்குமாரும் ஆடும் இந்த பாடல் காட்சிக்காக 20க்கும் மேற்பட்ட மும்பை நடனக் கலைஞர்களை வரவழைத்திருக்கிறோம். இந்த நடனக் காட்சி தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக அமையும் என்று சினேகா பிரிட்டோ கூறியதைக் கேட்டதும், தனக்கே உரிய பாணியில் புன்னகையை பரிசாக வழங்கினார் இளைய தளபதி.

Monday, August 20, 2012

கொழுத்திவிட்டது தீயா அல்லது அண்டை நாட்டின் மீது பழியா?

சென்னை: தமிழகத்தில் முஸ்லிம்களின் ஈதுல் ஃபித்ர் பெருநாள் தினத்தில் மெஹந்தி எனப்படும் மருதாணி வைத்துக்கொண்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்ற எஸ்.எம்.எஸ் செய்தி தீவிரமாக பரவியுள்ளது. இதனால் பீதியடைந்த மக்கள் மருத்துவமனையை நாடியுள்ளனர். இந்த எஸ்.எம்.எஸ் செய்தியின் பின்னணியில் இருப்பவர்கள் ஹிந்துத்துவா சக்திகளா? என சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் குமரி மாவட்டம் தவிர(நேற்று இங்கு ஈதுல் ஃபித்ர் பெருநாள் கொண்டாடப்பட்டது) இதர மாவட்டங்களில் இன்று ஈதுல் ஃபித்ர் என அழைக்கப்படும் சிறிய பெருநாள் ஆகும். இதையொட்டி முஸ்லிம் பெண்களும், குழந்தைகளும் பெருநாளுக்கு முந்தைய இரவில் மெஹந்தி என அழைக்கப்படும் மருதாணியை கை, கால்களில் போட்டு அலங்கரித்துக் கொண்டனர். பெரும்பாலானோர் கோன் வடிவில் உள்ள ரெடிமேட் மெஹந்தியால் அலங்காரம் செய்வர்.

இந்த நிலையில், மெகந்தி போட்டவர்களுக்கு கைகளில் அரிப்பு ஏற்படுவதாகவும், வாந்தி மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும் செய்தி பரவியது. இதனால் பீதி அடைந்த பெண்கள் அச்சத்துடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகினர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில பெண்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திலும் மெகந்தி பீதியினால் அச்சமடைந்தவர்கள் இரவு நேரத்தில் மருத்துவமனையில் குவிந்தனர்.

நெல்லை மாவட்டத்தில் மூன்று பேர் பலியானதாக வந்த வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது. மேலும் பள்ளிவாசல்களில் ஒலிப்பெருக்கி மூலம் தகவல்கள் பரப்பப்பட்டதால் மக்கள் பெரும் பீதி வயப்பட்டனர். மாவட்டத்தின் களக்காடு பகுதிகளில் வீடு வீடாக சென்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மேலும் கலக்கமடைந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணற நேரிட்டது. அச்சமடைந்துள்ள தங்களுக்கு மருத்துவர்கள் எந்தவித சிகிச்சையும் அளிக்காமல் தட்டிக்கழிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் பரவிய பீதியால் விடிய விடிய பெண்களும், குழந்தைகளும் தூங்காமல் அச்சத்துடன் விழித்திருந்தனர். இதனிடையே இது வதந்திதான் என்று ஈதுல் ஃபித்ர் பெருநாள் தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க செய்த சதி என்று முஸ்லிம் சமுதாய தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் காட்டுத்தீயாக பரவிய வதந்தியால் முஸ்லிம் மக்கள் பெரும் அச்சத்துடனும், பதற்றத்துடனும் காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வதந்தி காட்டுத் தீயாக பரவ ஒரு எஸ்எம்எஸ்ஸும் காரணமாக அமைந்தது. அதாவது, மும்பையில் ஒரு பெண் தனது மகளுக்கு மெஹந்தி வைத்ததாகவும், அதனால் கெமிக்கல் உடலில் பிரச்சினையை ஏற்படுத்தி அந்தப் பெண்ணின் கை, கால்கள் பாதிக்கப்பட்டு துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டு விட்டதாகவும், இதைப் பார்க்க முடியாத பெற்றோர் அந்தப் பெண்ணை விஷம் கொடுத்துக் கொன்று விட்டதாகவும் எஸ்.எம்.எஸ் மூலம் பரவியது. இதுதான் பலரையும் பீதிக்குள்ளாக்கி விட்டது.

இருப்பினும் தமிழகத்தின் எந்த இடத்திலும் யாருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்று டாக்டர்கள் மற்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். யாரும் மரணம் அடையவில்லை, உள் நோயாளியாகக் கூட அனுமதிக்கப்படவில்லை. எஸ்.எம்.எஸ். வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஏற்கனவே வட கிழக்கு இந்தியர்கள் குறித்த வதந்தியால் முஸ்லிம்கள் பெரும் மன வேதனையில் உள்ளனர். இந்த நிலையில் ஈதுல் ஃபித்ர் கொண்டாடும் நேரத்தில் தங்களைக் குறி வைத்து பரப்பப்பட்ட இந்த வதந்தியால் அவர்கள் பெரும் வருத்தமடைந்துள்ளனர்.

இந்த வதந்தி செய்தி வளைகுடாவில் வேலைப்பார்க்கும் முஸ்லிம்களின் மத்தியிலும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த வதந்திகளின் பின்னணியில் ஹிந்துத்துவா சதி இருக்குமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தவேண்டும்! செய்வார்களா? அல்லது அண்டை நாட்டின் மீது பழியை போட்டு தப்பிக்க பார்ப்பார்களா?

Sunday, August 19, 2012

காம சாமியும் மடிசார் மாமியும்!

லீலை சாமியைப்பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தியாக வளம்வந்து கொண்டுயிருக்கிறது. இதில் நித்யானந்தாவுக்கு முழு ஆதரவு தருவது யார் என்று பார்த்தால் அவரே தந்த பதில் இதோ.

நான் (நித்தியானந்தன் சுவாமிகள்) தெளிவாக சொல்லிவிட்டார் தமிழக அரசு என்னை ஆதரிக்கிறது தமிழக அரசின் பாதுகாப்பில்தான் நான் உள்ளேன் என்று இவரின் லீலைகளை வெளியிட்ட மீடியாக்களை ஆட்சி மாறிய உடன் மிக துணிச்சலாக கூறுகிறார்.

நான் என்னை பற்றி செய்தி வெளியிட்டவர்களை விடமாட்டேன் என்று தற்போதைய தமிழக அரசு எந்த அளவிற்கு இந்த சுவாமிகளை ஆதரிக்கிறது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் தமிழ் நாட்டில் கோவில் கூடாது என்பதல்ல இது போன்ற காம கொடூரன்களுடைய கூடாரமாக (விபச்சார விடுதி) ஆகிவிட கூடாது என்பதுதான் அனைவருடைய ஆசையும்.

இன்று வரை பெண்கள் கேட்ட பாடில்லை, எத்தனையோ கோவில்கள் தமிழ் நாட்டின் உள்ளன ஆனால் பெண்கள் இது போன்ற அயோக்கியர்களின் பித்தலாட்ட வலையில் விழுவது வேதனை தரக்கூடிய ஒன்றாக உள்ளது.

தமிழ் நாட்டில் பெண் முதல்வர் இருந்தும் இந்த காம கயவர்களுக்கு வாழ் பிடிப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது என்கின்றனர் அறிந்தவர்கள்.

Saturday, August 18, 2012

பெண்களுக்காக பெண்கள் மட்டும் சவுதியில்!!

ரியாத்: சவுதி அரேபியாவில் பெண்களுக்கான தனி நகரம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் புனித யாத்திரை செல்லும் மெக்கா நகரம், சவுதி அரேபியாவில் தான் உள்ளது. எனவே, இந்த நாடு முஸ்லிம்களின் நடைமுறைகளை தவறாமல் கடை பிடிக்கிறது.

குறிப்பாக, பெண்கள் விஷயத்தில் ஷரியத் சட்டம் கடுமையாக பின்பற்றப் படுகிறது. இதன் காரணமாக, இந்த நாட்டில் பெண்கள் கார் ஓட்டவோ, தேர்தலில் ஓட்டு போடவோ அனுமதியில்லை.ஆண்களுடன் இணைந்து பெண்கள் பணியாற்ற வாய்ப்பில்லாத காரணத்தால், படித்த பெண்கள் கூட வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். எனவே, இளம் பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ள சவுதி அரசு, தற்போது பெண்களுக்கான தனி நகரை உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்த நகரை உருவாக்கும் பணிகள் அடுத்த ஆண்டு துவங்க உள்ளன. இந்த புதிய நகரில் பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

சவுதியில், தற்போது வெளிநாட்டுப் பெண்கள் தான் அதிக அளவில் வேலை செய்கின்றனர். புதிய நகரம் உருவாகும் பட்சத்தில், உள்ளூர் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் அதிக பங்களிப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

Friday, August 17, 2012

விஜய்யின் துப்பாக்கிக்கு தடைமேல் தடை?

விஜய் நடிப்பில் ஆக்க்ஷன் படமாக உருவாகி வரும் திரைப்படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்துக்கு தடைமேல் தடை வந்த வண்ணம் உள்ளது, பிரச்சினை பட தலைப்பில்தான்.

விஜய்-முருகதாஸ் கூட்டணி முதன் முறையாக இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு கடந்த இரண்டு மாதங்களாக நிலுவையில் உள்ளது.

இதனிடையே வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள் மீண்டும் தலைப்பு மீதான தடையை நீடித்து, வழக்கினை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார். பெயரை மாற்றினால் தடை நீங்கலாம் ஆனால், இந்த பிரபலமான பெயரை மாற்ற மனதில்லை என்கிறது துப்பாக்கி டீம்.

Thursday, August 16, 2012

வழக்கிலிருந்து விடுபட வழக்குரைஞரை நடுநடுங்க வைத்த ஜெயா!?

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கு, உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரிக்க 2003 நவம்பர் 18-ம் தேதி பெங்களூரில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அன்றுமுதல் இந்த வழக்கில் அரசுத் தரப்பு மூத்த வழக்குரைஞராக பி.வி.ஆச்சார்யா செயல்பட்டு வந்தார். இந்த வழக்கிலிருந்து அவரை வெளியேற்ற (ஜெயா) அரசியல் ரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அரசு மூத்த வழக்குரைஞர் பதவியுடன், கர்நாடக மாநில அரசு தலைமை வழக்குரைஞராகவும் பணியாற்றினார். இதை ஆட்சேபித்து சிலர் நீதிமன்றங்களில் முறையிட்டனர். இந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு மூத்த வழக்குரைஞராக தொடர விரும்புவதால், அரசு தலைமை வழக்குரைஞர் பதவியை அண்மையில் ராஜிநாமா செய்தார்.

தனது பதவியை ராஜினாமாச் செய்தது குறித்து பி.வி.ஆச்சார்யா கூறியது: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் அரசுத் தரப்பு மூத்த வழக்குரைஞர் பதவியை ராஜிநாமா செய்து கடிதம் அளித்துள்ளேன்.

இந்த வழக்கு விசாரணை அவசியமில்லாமல் காலதாமதமாகி வருகிறது. இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது, அத்துடன் தன்னையும் தன் குடும்பத்தாரையும் மிரட்டினார்கள்.

மேலும், இந்தப் பதவியிலிருந்து என்னை நீக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை என் மனதை ஆழமாகக் காயப்படுத்தியது. என் பொறுப்புகளில் இருந்து நான் விடுபட்டுள்ளதால் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

7 ஆண்டுகளுக்கு முன்பு அரசுத் தரப்பு மூத்த வழக்குரைஞர் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். 6 மாதங்கள் அல்லது ஓராண்டில் வழக்கு முடிவடையும் என்று எதிர்ப்பார்த்தேன். ஆனால், 7 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும், வழக்கு விசாரணை முடிவடையவில்லை.

தற்போதைய நிலையில், இந்தப் பதவியால் ஏற்படும் மன உளைச்சலை தாங்கும் ஆற்றல் எனக்கில்லை. மேலும், எனக்கு எதிராகப் பொய்யான புகார் அளித்து இந்தப் பதவியில் இருந்து என்னை நீக்க இதற்கு முன்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அந்தப் புகார் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தாலும், அதுபோன்ற சம்பவங்கள் என்னை மிகவும் காயப்படுத்தியது. மேலும், இதுபோன்ற முயற்சிகள் மனதளவில் வேதனையையும், எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளன. எனவே, இந்தப் பதவியில் தொடர நான் விரும்பவில்லை என்றார் அவர்.

Wednesday, August 15, 2012

தம்பதிகளின் சண்டைக்கு சமரச தீர்வு!


தம்பதிகளிடம் ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் விவாகரத்துகள் அதிகரித்து வருவது உலகம் முழுவதும் அன்றாட நிகழ்வாகி விட்டது. ஈகோ பிரச்னையால் உப்பு பெறாத விஷயம் கூட விவாகரத்தில் முடிவது தொடர் கதையாகிவிட்டது.

தம்பதிகளின் கருத்து வேறுபாடுகளை களைந்து விவாகரத்தை தடுக்க பல்வேறு அமைப்புகள் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. விவாகரத்துகளை தடுக்கும் வழிமுறை குறித்த பல்வேறு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று புதிய நேசல் ஸ்ப்ரே ஒன்றை தம்பதிகளின் சண்டைக்கு சமரச தீர்வாக அறிமுகப்படுத்தி உள்ளது. ஜூரிச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு இது.

மன உளைச்சலும் அதனால் ஏற்படும் நரம்பு மண்டல பாதிப்புகளும் குறித்த ஆய்வில் இத்தகவல் வெளியாகி உள்ளது. ஆய்வுக்காக அடிக்கடி சண்டையிடும் சுமார் 47 தம்பதிகள் தேர்வு செய்யப்பட்டு 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.

ஒரு பிரிவினருக்கு புதிய நேசல் ஸ்ப்ரே, சண்டையின் போது 5 முறை பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டது. இவர்களிடையே நேசல் ஸ்ப்ரே அடித்த 45 நிமிடங்களில் கோபம், ஈகோ குறைந்து சமரசம் ஏற்பட துவங்கியது. மற்றொரு பிரிவினரிடையே சண்டையில் சமரசம் இல்லை. ஆண், பெண் வேறுபாடின்றி தம்பதிகளில் இருவரும் இதனை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வில், "தம்பதிகளிடையே சண்டை தவிர்க்க முடியாதது என்ற நிலையில், ஆக்சிடோசின் ரசாயன கலப்புள்ள ஸ்பிரேயை சிறிது மூக்கில் அடித்துக் கொண்டால் போதும். வந்த வேகத்தில் கோபம் மறைந்து விடும். சண்டை வலுக்காது சமரசம் நிச்சயம்.

இந்த ஸ்பிரே கோபத்தை குறைப்பதுடன் எதிர்பார்ப்பு, ஏமாற்றம், உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தி சூழ்நிலைக்கு தகுந்தவாறு சுமூகமான மனநிலையை உருவாக்கும். உடலில் உள்ள சுரப்பிகளில் ஆக்சிடோசின் சுரப்பியும் ஒன்று. இது மூளையின் ஹைப்போதாலமஸ் பகுதியில் உள்ளது.

பெண்களுக்கு பிரசவ காலத்தில் இந்த சுரப்பி செர்விக்ஸ் பகுதியை விரிவடைய செய்து பிரசவத்தை எளிதாக்குகிறது. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் இது காரணமாகிறது. உடலின் பல்வேறு உறுப்புகளையும் கட்டுப்படுத்துகிறது. இதனால் கோபம், ஆவேசம், ஆத்திரம், சுமூகமான மனநிலைகள் ஏற்படுகின்றன.

எதிர்மறை எண்ணங்கள் தோன்றும் போது இதயத் துடிப்பு, கோபம் அதிகரிக்கும். இந்நிலை தொடர்ந்தால் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படும். இந்த நிலையை ஆக்சி டோசின் நேசல் ஸ்பிரே மாற்றும். இதனால் பாதிப்பும் பக்க விளைவுகளும்’’ கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, August 14, 2012

தாது பலம் பெருக அருகம்புல்!

உடல் ஆரோக்கியம் காக்கப் அருகம்புல்லை பயன்படுத்துகிறோமா என்பது கேள்விக்குறி, அந்த நேரத்திற்கு முன்பும் இதை கீழ்க்கண்டவாறு பயன்படுத்தலாம்.
I
பல்வேறு ஊட்டச்சத்து பானங்களைப் பருகும் நமக்கு, அருகம்புல்லே அருமையான ஊட்டச்சத்து மூலிகை என்ற உண்மை தெரியவில்லை.

நல்ல தளிர் அருகம்புல்லைச் சேகரித்து, சுத்தமாக நீரில் கழுவி, நைய அரைத்து பசும்பாலுடன் சேர்த்து சுண்டக் காய்ச்சி, இரவில் படுக்கச் செல்லும் முன் சாப்பிட்டு வந்தால், பலவீனமான உடல் நன்கு தேறி, நல்ல பலம் பெறும்., அடிக்கடி அதிகம் களைப்பு எற்படுவர்களுக்கும் இது உகந்தது.

வளரும் குழந்தைகள் எளிதாக ஊட்டச்சத்துப் பெற இதே முறையைக் கையாளலாம். அருகம்புல்லை நீரில் இட்டு நன்கு காய்ச்சி, அந்த நீரைப் பதமான சூட்டில் பருகி வந்தால் இதயத்துக்கு நலம் அளிக்கும்.

Monday, August 13, 2012

காணாமல் போகும் பெண்(கள்) குழந்தைகள் கடத்தப்படுகிரார்களா?

ஆந்திராவில் (2012-ம் ஆண்டு) தினமும் 22 பெண்களும் பெண் குழந்தைகளும் காணாமல் போயிருக் கிறார்கள் என்று ஆந்திர மாநில போலீசார் கூறுகின்றனர். கடந்த நான்காண்டுகளில் 23,760 பெண்கள் காணாமல் போயிருக்கின்றனர்.

சென்ற ஜூலை மாதம் காணாமல் போன 2,786 குழந்தைகளில் 70 சதவிகிதம் (1,955 பேர்) பெண் குழந்தைகள். அதாவது, தினமும் 10 பெண் குழந்தைகள் காணாமல் போகின்றன. அதேபோல், கடந்த ஜூலையில் 2,519 பெண்கள் காணாமல் போயிருக்கின்றனர். அதாவது, தினமும் 12 பெண்கள் காணாமல் போகின்றனர் என்று ஆந்திர மாநில போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மும்பை, கல்கத்தா போன்ற நகரங்களில் பாலியல் தொழிலுக்கு விற்கலாம் என்கிறார் மனித ஆர்வலர் ஒருவர். மேலும் மத்திய, மாநில அரசுகள் இதில் முழு கவனம் செலுத்தி இதன் மூளையாக செயல்படுபவர்களை உடன் கைது செய்து தண்டனை தரவேண்டும் என்றார்.

Sunday, August 12, 2012

பேஸ் புக்கில் சீரலலிந்த இளம் பெண்கள் உஷார் ரிப்போர்ட்!!

பேஸ் புக் மூலம் ஏமாந்தது குறித்து, பாதிக்கப்பட்ட பெண்கள் பல தகவல்களை தெரிவித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த கஜித்ரா, காயத்ரி, கஜித்ராவை ஏமாற்றிய சதீஷ் மற்றும் ஆனந்த் பாபு, வேறு சில பெண்களையும், அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளனர். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு நாள், கிழமை என முறை வைத்து, அழைத்து வந்துள்ளனர். இதற்கு ஏற்றவாறு பேஸ் புக்கில் தகவல் அனுப்புவர். ஒரு பெண்ணை அழைத்து வருவது, மற்ற பெண்ணுக்கு தெரியாது. இதற்கு ஏற்றபடி, ஊர், லாட்ஜ்களை மாற்றி, மாற்றி தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர். கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் உல்லாசமாக இருந்ததால், இவர்களுக்கு உல்லாசம் மட்டுமே குறிக்கோள் என்ற சந்தேகம், கஜித்ராவுக்கு வந்தது. இதை காயத்ரி தேவியிடம் சொன்ன போது, அவர் நம்பவில்லை. இதனால், ஆனந்த்பாபுவின் தொடர்பை துண்டித்தபோது தான், வீடியோ பிரச்னை வெடித்து, வேறு வழியின்றி அவர் சொல்லும்படி கேட்க நேர்ந்துள்ளது.

ஆனந்த்பாபுவின் நண்பர் திலீப். இவர், மரைன் இன்ஜினியரிங் படித்து விட்டு, சிங்கப்பூரில் உள்ள கப்பல் கம்பெனியில் பணிபுரிகிறார். ஆறு மாதம் விடுமுறையில், சொந்த ஊரான ராணிப்பேட்டைக்கு வந்தார். ஆனந்த்பாபு, பேஸ் புக் விஷயத்தை சொல்லவே, அவரும் சில பெண்களுக்கு தகவல் அனுப்பி, அவர்களை வேலூர், திருவண்ணாமலை, சேலம் என அழைத்துச் சென்று, உல்லாசமாக இருந்துள்ளார். பின் திலீப், நண்பர்கள் லூயிஸ், ஆனந்த்ராஜ் ஆகியோருக்கும், பேஸ் புக் மூலம் தகவல் தெரிய வர, அவர்களும் இதே முறையை பின்பற்றி, பல பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதில், இவர்கள் உல்லாசமாக இருக்க ஆன செலவுகள் அனைத்தும், அந்தந்த பெண்களே ஏற்றுக் கொண்டுள்ளனர். கஜித்ரா போல, 16 பெண்கள் சீரழிக்கப்பட்டதாக தெரிகிறது.பேஸ் புக் மோசடியில் சிக்கிய சதீஷ், ஆனந்த்பாபு ஆகியோர், சில மாதங்களுக்கு முன், ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில், நட்சத்திர ஓட்டலில் உல்லாசமாக இருந்தபோது, பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி கைதாகி, ஜாமினில் வந்துள்ளனர். தற்போது, சதீஷ், ஆனந்த்பாபு, திலீப், நித்தியானந்தம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தன்னேச்சையாக முடிவெடுக்கும் பெண்கள், பெற்றோர்களை உதாசினப்படுத்திவிட்டு வெளிடில் செல்லும் மாணவிகள், இளம் பெண்கள்தான் இந்த வலையில் அதிகம் சிக்குகிறார்கள்.

Saturday, August 11, 2012

விலங்கினத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் தொழில்நுட்பம்!

செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சினால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படு வதால், காடுகளைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு, புதிய கோபுரங்களை நிறுவ அனுமதி வழங்கக்கூடாது என தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்துக்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆலோசனை கூறியுள்ளது.

இதுபற்றி தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்துக்கு வழங்கியுள்ள ஆலோசனையில், ‘கதிர்வீச்சின் அளவைக் குறைப்பதற்காக சாத்தியமான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் பறவைகள் மற்றும் தேனீக்கள் உள்ளிட்ட வனவிலங்குகளை கடுமையாக பாதிக்கின்றன.

இவற்றை தடுப்பதற்காக காடுகளைச் சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு இதுபோன்ற கோபுரங்கள் நிறுவ அனுமதி வழங்கக்கூடாது.

எனவே புதிய கோபுரங்கள் நிறுவ அனுமதிக்காமல், பழைய கோபுர கதிர்வீச்சுகளை பகிர்ந்துகொள்வதை கட்டாயமாக்க வேண்டும்’ என சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், செல்போன் கோபுரங்கள் மற்றும் கதிர்வீச் சுகளை உமிழக்கூடிய பிற கோபுரங்களின் இருப் பிடம் மற்றும் அதிர்வெண்கள் குறித்த விவரங்களை தயார் செய்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும்படியும் அந்த ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.

செல்போன் கோபுரங்களால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக கடந்த 2010-ம் ஆண்டு சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையின்படி இந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

Friday, August 10, 2012

50% ஞாபக மறதியை கட்டுப்படுத்தலாம்! ஆய்வில்!!

வாஷிங்டன்: குறித்த நேரத்தில் இஸ்லாம் விதித்துள்ள ஐங்கால கடமையான தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் அல்ஸிமர்ஸ் எனும் ஞாபக மறதி நோயை 50% கட்டுப்படுத்தலாம் என அமெரிக்க-இஸ்ரேலிய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

டெல் அவீவ், யாஃபா, அமெரிக்காவின் இதர பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

நினைவாற்றல் குறையாமலிருக்க பயிற்சி மையங்கள் மற்றும் இதர வழிகளில் பயிற்சி மேற்கொள்பவர்களை விட குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை பேணுபவர்களுக்கு அல்ஸிமர்ஸ் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவாகும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இத்தகைய நபர்களுக்கு நோயின் கடுமை 24 சதவீதம் குறைவாக இருக்கும் என ஆய்வில் கூறப்படுகிறது. அல்ஸிமர்ஸ் நோயை தடுக்க இதர பயிற்சி வகைகளை விட குறித்த நேரத்தில் தொழுவதால் இரட்டிப்பு பலன் கிடைப்பதாக ஆய்வு கூறுகிறது.

குறித்த நேரத்தில் தொழுகையை பேணுவது அல்ஷிமர்ஸ் நோயிலிருந்து காப்பாற்றுவதுடன் புத்தியாகவும், சிந்தனை ரீதியாகவும் பேசுவதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைப்பதாக இந்த ஆய்வுக் குழுவின் தலைவராக பணியாற்றிய பேராசிரியர் Rivka Inzelberg கூறுகிறார்.

65 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 92 பேருக்கு மட்டுமே ஞாபக மறதி நோய் பாதித்துள்ளது. 300 பேருக்கு சிறிய அளவில் பாதித்துள்ளது. மீதமுள்ளோருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

Thursday, August 9, 2012

ஆண் சாமியாரை தொடர்ந்து பெண் சாமியார்?

கொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கருணாநாக பள்ளிக்கு அருகே உள்ள வள்ளிக்காவு பகுதியில் பெண்சாமியாராக வலம் வரும் அமிர்தானந்தாமயியின் ஆசிரமம் உள்ளது. கடந்த 1-ஆம் தேதி இவர் ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது திரண்ட கூட்டத்திற்கு மத்தியில் திடீரென ஒரு இளைஞர் பெண் சாமியாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இவரை போலீசார் கைது செய்தனர். அந்த நபர் பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சார்ந்தவர் ஆவார். அவரது பெயர் சத்னம் சிங். இவர் மன நோயாளியாவார். கடந்த 3 மாதங்களுக்கு முன் திடீரென காணாமல் போன சத்னம் சிங் குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அவர்களின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் வாலிபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் கேரளா வந்த அவர் கொல்லம் ஆசிரமத்தில் வைத்து மாதா அமிர்தானந்தமயியை தாக்க முயன்றதாக கூறி கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கொல்லம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கொல்லம் அரசு மருத்துவமனையிலும் பின்னர் திருவனந்தபுரம் போரூர்கடை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மனநல மருத்துவமனையில் உள்ள குளியலறையில் மயக்கமடைந்த நிலையில் சத்னம் சிங் கிடந்தார். உடனடியாக அவரை திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் அவரது உடலை பரிசோதித்த பொழுது 30க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்துள்ளன. அவரது உள் உறுப்புகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா? என்பது இன்று நடக்கும் போஸ்ட் மார்ட்டத்தில் தெரியவரும்.

இதனிடையே திருவனந்தபுரம் வருகை தந்த ஆஜ்தக் தொலைக்காட்சி செய்தியாளரும், சத்னம் சிங்கின் உறவினருமான விமல் கிஷோர், போலீஸ் சித்திரவதையில் சத்னம் சிங் கொலைச் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

போலீஸ் கஸ்டடியிலோ, சிறையிலோ, பேரூர்கடை மனநிலை மருத்துவமனையில் வைத்தோ அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. சிறையில் வைத்து சத்னம் சிங்கிற்கு காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். மனநோயால் பாதிக்கப்பட்டவரை ஏன் சிறைக்கு கொண்டு சென்றார்கள் என்பது மர்மமாக உள்ளது. இரும்பு கம்பியால் சத்னம் சிங் தாக்கப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு சத்னம் சிங்கை கொண்டுவரும் பொழுது அவரது உடலில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட காயங்கள் இருந்ததாக மருத்துவமனை நர்ஸிங் அஸிஸ்டெண்ட் வாக்குமூலம் அளித்துள்ளார்.

எல்.எல்.பி நுழைவுத்தேர்வு எழுதி வெற்றிப் பெற்ற சத்னம் சிங் படிப்பதில் கெட்டிக்காரர் என அவரது உறவினர் விமல் கிஷோர் கூறுகிறார். 2 ஆண்டுகளாக அவர் மனநோயால் பாதிக்கப்பட்டார் என்றும் இது தொடர்பான ஆவணங்கள் தனது வசம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சத்னம் சிங்கின் உறவினர்கள் வெளிநாட்டில் நல்ல வேலையில் உள்ளார்கள். போலீஸாரின் தாக்குதலால் சத்னம் சிங் இறந்ததாக விமல் கிஷோர் குற்றம் சாட்டுகிறார்.

இதற்கிடையே வகுப்புவாதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் மூளை குழம்பிய பா.ஜ.க, மாதா அமிர்தானந்தமயியை தாக்க முயன்ற நபருக்கு தீவிரவாத தொடர்பு இருப்பதாகவும், முழுமையான விசாரணை தேவை எனவும் முட்டாள்தனமான கோரிக்கையை முன்வைத்துள்ளது.

ஏற்கனவே சாய்பாபாவின் ஆசிரமத்தில் 1993 ஜூன் 6-ஆம் நாள் 25 க்கும் 40 வயதுக்குமிடையேயான பருவமுடைய நான்கு மாணவர்கள் அவரை தாக்க முயன்றார்கள் என குற்றம் சாட்டி சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்பொழுது மாதா அமிர்தானந்தமயி என்ற பெண் சாமியாரை தாக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட அப்பாவி மன நிலை பாதிக்கப்பட்ட இளைஞர் தாக்குதலால் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.

அரசு, அதிகார வர்க்கங்கள் ஆன்மீக வியாபாரிகளான சாமியார்களின் காலடியில் வீழ்ந்து கிடப்பதால் இத்தகைய கொடூரங்கள் அரங்கேறுவது வழக்கமாகிவிட்டது.

Wednesday, August 8, 2012

வளர்ச்சியால் நூற்றாண்டு என புகழப்படும் யுஹத்தின் அவமானம்!!

லண்டன்: உலகில் ஒரு பில்லியன் மக்கள்(நூறு கோடி) கொடிய பட்டினியால் வாடுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆக்ஸ்ஃபாம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் 7இல் ஒரு பகுதியாகும்.

பொருளாதார முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியின் நூற்றாண்டு என புகழப்படும் இந்த யுகத்திலும் இவ்வளவு மனிதர்கள் பட்டினியால் வாடுவது உலக மக்கள் சமூகத்திற்கு அவமானமாகும்.

வளர்ச்சியடைந்த நாடுகளிலும் வித்தியாசம் எதுவும் இல்லை என்பது உலகமக்களை மாத்தியோசிக்க தூண்டவேண்டும்.

இந்த ஆண்டு மட்டும் 4 கோடியே 30 லட்சம் பேர் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

கோடிக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவினால் துயரத்தை அனுபவிக்கின்றனர் என்று ஆக்ஸ்ஃபாம் அறிக்கை கூறுகிறது.

Tuesday, August 7, 2012

விஜய்யை இயக்கும் இயக்குனருக்கு தூதுவிடும் நடிகைகள்!

விஜய்யுடன் நடிக்க விருப்பப்பட்டு விஜய்யை இயக்கும் இயக்குனருக்கு தூதுவிடும் நடிகைகள் அதிகம் என கோலிவுட் கிசுகிசு.

அந்தவகையில் ஒரு பாடகியாக தனது சினிமா வாழ்க்கையை துவங்கிய நடிகை ஆண்ட்ரியா முதலில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடித்தார். பின்பு சில படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த ஆண்ட்ரியா ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா போன்ற வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும் மார்கெட் இல்லாத நடிகையாகவே இருந்தார்.

திடீரென்று கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தில் ஒப்பந்தமாகி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஸ்வரூபம் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் ஆண்ட்ரியாவுக்கு விஜய் நடித்துக்கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தில் பாட்டு பாட வாய்ப்பு வந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி முருகதாஸிடம் இந்த படத்தில் தனக்குமொரு வாய்ப்பு தரும்படி அவராகவே வ்முன்வந்தௌ கேட்டுள்ளார் ஆண்ட்ரியா.

முருகதாஸும் யோசித்து சொல்வதாக கூறிவிட்டாராம். நடிகை லட்சுமி ராய் இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் அடுத்ததாக நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் அவரது படத்தில் வாய்ப்பு தருமாரு கேட்டுள்ளாராம். லட்சுமிராய் ஏ.எல்.விஜய் இயக்கிய தாண்டவம் படத்தில் நடித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் நடிக்க பல நடிகைகளும் ஆர்வமாக உள்ளனர்.

Monday, August 6, 2012

நிர்வாண நடைக்கு இனி தடை?

பாரிஸ்: முஸ்லிம் பெண்கள் தங்களது கண்ணியத்தை பேணும்நோக்கில் முகத்தை மூடும் நிகாபை அணிய தடைவிதித்து உலக முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிய நாடுதான் பிரான்சு. மேலும் கல்வி நிலையங்களில், வேலைபார்க்கும் இடங்களில் ஹிஜாபை அணியக் கூடாது என உத்தரவிட்டது அந்நாட்டு அரசு.

ஆனால் அதே பிரான்சில் தற்பொழுது பெண்கள் நிர்வாண கோலத்தில் நடப்பதால் பெரும் சிக்கலை அனுபவித்து வருகிறது. பெண்கள் நிர்வாணமாக நடந்தால் கடுமையான தண்டனைகளை அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என பிரான்சு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெயில் காலத்தில் உடலை மறைத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே வரவேண்டும் என்றும், இல்லையெனில் அபராதமோ, சிறைத்தண்டனையோ அனுபவிக்க வேண்டிவரும் என போலீஸ் எச்சரித்துள்ளது.

கோடை கால வெப்பத்தை பொறுக்கமுடியாமல் பிரான்சு நாட்டைச் சார்ந்த குடிமக்களில் சிலர் முழு நிர்வாணமாக கூட சாலையில் நடக்க துவங்கியதை தொடர்ந்து புதிய சட்டத்தை இயற்றும் நிர்பந்தம் பிரான்சு அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

பிறருக்கு எவ்வித தொந்தரவையும் ஏற்படுத்தாத, சமூகத்தில் ஒழுக்கத்தை பேணும் முஸ்லிம் பெண்களின் நிகாபை எதிர்க்கும் பிரான்சு அரசு, சமூக கலாச்சாரத்தையும், ஒழுக்கத்தையும் சீரழிக்கும் ஆபாச உடைகள், நிர்வாண கோலங்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்குமா? என்பது கேள்விக் குறியாகவும் மாறியுள்ளது.

Sunday, August 5, 2012

ஆண்களை கவர சிறு உத்தி?

லண்டன்: கண்களால் மட்டுமல்ல, அழகிய பல் வரிசையாலும் ஆண்களை கவர முடியும் என்று பெண்கள் பற்றிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெண்களே நீங்கள் அடுத்த முறை புன்னகைக்கும் போது, கவனமாக இருங்கள், உங்கள் புன்னகை நீங்கள் விரும்பியதை விட அதிகமானதை வெளிப்படுத்திவிடலாம். உங்கள் வயதையும் காட்டிக் கொடுத்து விடும்.

லண்டனை சேர்ந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பல் வரிசையை வைத்து ஆராய்ச்சி செய்ய முடிவு செய்தனர். இதற்காக பல்வேறு வகையான பல் வரிசை மாதிரிகள் தயாரிக்கப்பட்டன. அதே போல, பளிச்சிடும் வெள்ளை நிறம், லேசான பழுப்பு நிறம் கொண்டதாகவும் பல் செட்டுகள் தயார் செய்யப்பட்டன. தவிர 150 இளைஞர்கள், பெண்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு, பல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டனர். இதில் பல விஷயங்கள் தெரிய வந்தன. அது பற்றிய விவரம் வருமாறு:

ஒழுங்கான பல் வரிசை மற்றவர்களை பெரிதும் கவர்கிறது. பழுப்பு நிற அல்லது மஞ்சள் நிற பற்கள் பற்றி பெரும்பாலோருக்கு தெரியவில்லை. அதேபோல, தெத்துப்பல், மற்றும் அதிக இடை வெளி கொண்ட பல் வரிசையை பெரும்பாலானோர் விரும்ப வில்லை. ஆனால், முறையாக நல்ல விதமாக அமைந்த பல்வரிசை பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

பெண்களின் பல்லை வைத்து அவர்களது வயதை தீர்மானித்து விடலாம். இறுதி மாத விடாய் ஏற்பட்டு எவ்வளவு காலம் ஆகிறது என்பதையும் கண்டு பிடித்து விடலாம். கண்கள் மட்டுமின்றி வெண்மையான ஒழுங்கான பல் வரிசையாலும் ஆண்களை மயக்கி விட முடியும்.

ஆண்கள் பெண்களையும், பெண்கள் மற்ற பெண்களையும் பார்க்கும் போது, அமைதியான முறையில் பலமான விளைவு உண்டாகிறது. பெண்களின் அழகிய புன்னகையை ஆண்கள் பார்க்கும் போது, அது அவர்களை கவருகிறது. பெண்கள் பெண்களை பார்க்கும் போது பரஸ்பரம் போட்டியும், பொறாமையும் ஏற்படுகின்றன.

நமது பற்கள், இளவயதில் ஏற்பட்ட சுகவீனங்கள், உணவு முறை மற்றும் மரபு வழி கோளாறுகளையும் வெளிப்படுத்துகின்றன. மொத்தத்தில் நமது கதையை பற்களே சொல்லி விடும்.

Saturday, August 4, 2012

ஆசை நாயகியுடன் ஓடியதால் குப்பிற படுத்து குமுறும் மடாதிபதி!?

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் (நித்தி ஆசை நாயகி ரஞ்சிதாவுடன்) திபெத்தில் உள்ள கைலாய மலைக்கு புறப்பட்டு சென்றார். நேபாளம் வழியாக அவர் சென்றதாக கூறப்படுகிறது., இன்று மதுரையில் ஆதீனம் அருணகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் நித்தி -ரஞ்சிதா கைலாய மலை பயணம் குறித்து கேட்டபோது, ‘’ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா சென்றது எனக்கு தெரியாது. அவர்களது பாஸ்போர்ட் சிக்கிய விவகாரம் செய்திகள் மூலம் தெரிந்துகொண்டு வருத்தப்பட்டேன்.

ரஞ்சிதாவுடன் செல்வது பற்றி நித்தியானந்தா என்னிடம் கூறவில்லை. இதனால் எனக்கு மிகுந்த வருத்தம். அவர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்று தெரியவில்லை’’ என்று கூறினார்.

அவர் மேலும், ‘’மதுரை ஆதீன மடத்து சொத்துக்களை மீட்டு தருவதாக கூறினார் நித்தியானந்தா. அதற்காகத்தான் அவரை இளைய ஆதீனமாக அறிவித்தேன். ஆனால் அவர் தொடர்ந்து மடத்துக்கு எதிரான செய்கைகளில் ஈடுபட்டு வருகிறார்’’ என்று புலம்பினார்.

Friday, August 3, 2012

இ (ரவு) ப்பணிகளால் இருதய நோய் வர வாய்ப்பு அதிகம் ஆய்வில்!!

லண்டனில் உள்ள இதயம், வலிப்பு நோய்த் தடுப்பு மருத்துவ ஆய்வு மையம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு, வலிப்பு நோய் ஏற்படும் அபாயம் 40 சதவீதம் அதிகம் என்று தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பிரிட்டிஷ் மருத்துவ கவுன்சில் இணையதளத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

வழக்கமான பகல் நேரத்தில் பணிபுரிபவர்களை விட இரவு நேரத்தில் கண் விழித்துப் பணியாற்றுபவர்கள் டீ, காபி போன்றவற்றை அதிகம் குடிக்கின்றனர். அவர்களது உணவுப் பழக்கத்திலும் மாற்றம் ஏற்பட்டு விடுகிறது. உடலில் கொழுப்பை அதிகரிக்கும் உணவையே அதிகம் சாப்பிடுகின்றனர்.

இரவுப் பணியில் இருப்பவர்கள் சிறிய அளவில் கூட உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படாமல் போகிறது. இவை அனைத்துமே இதயம் தொடர்பான நோய்களுடன் நேரடியாகத் தொடர்புடையவை.

இது தொடர்பாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தொடர்ந்து இரவுப் பணியில் இருப்பவர்கள், இரவு, பகல், மாலை என மாறி மாறி பணிபுரிபவர்களின் உடல் ஆரோக்கியத்தில் பிரச்னை உள்ளது தெரியவந்தது.

மாரடைப்பு, வலிப்புநோய் போன்றவை மற்றவர்களுக்கு வருவதைவிட இவர்களுக்கு ஏற்பட 40 சதவீதம் அதிகம் வாய்ப்பு உள்ளது.

இரவு என்பது தூங்குவதற்கான நேரம் என்ற இயற்கை விதி. இதற்கு மாறாக இரவில் வெகுநேரம் கண்விழித்துப் பணியாற்றுவது உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல என்பது பொதுவான உண்மை. இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இரவுப் பணி என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

எனினும் இப்போதைய இளைஞர்கள் இரவுப் பணியின்போது தவறான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். மேலும், இரவுப் பணியின் இடையே புகைப்பிடிப்பது போன்றவை அவர்களை மேலும் ஆபத்தில் தள்ளுகிறது என்று அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Thursday, August 2, 2012

கோயிலை உல்லாச விடுதியாக்கி உல்லாசம் அடைந்த குருக்கள்?

செங்குன்றம் அருகே பாடியநல்லூர் பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் ராஜகுமாரி (27). இவர், ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில்,

ஆவடி அருகே திருமுல்லைவாயலில் உள்ள சிவன் கோயிலுக்கு அடிக்கடி செல்வேன். திருமுல்லைவாயல் மாசிலாமணீஸ்வரர் நகரை சேர்ந்த ராகவேந்திரன் (36) கோயிலில் குருக்களாக இருக்கிறார். அவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலித்தோம். பிறகு அவருடன் சேர்ந்து இன்சூரன்ஸ் கம்பெனியில் ஏஜென்டாக பணியாற்றினேன்.

கடந்த மார்ச் 21ம் தேதி ராகவேந்திரன் என்னை மூச்சு பயிற்சி செய்ய அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். வீட்டில் யாரும் இல்லை. வீட்டில் உள்ள சாமி படத்துக்கு முன் சத்தியம் செய்து, என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி கூறினார்.

பின், வீட்டிலும், கோயிலிலும் என்னுடன் உல்லாசமாக இருந்தார். இதன்பிறகு, நண்பர்கள் முன்னிலையில் பதிவு திருமணம் செய்துகொள்வோம் என கூறி அனுப்பி விட்டார். ஆனால் என்னை திருமணம் செய்யாமல் காலம் கடத்தினார்.

கடந்த ஜூன் மாதம் அவரை சந்தித்து பேசினேன். என்னை திருமணம் செய்ய வேண்டும் என்றால் கார் மற்றும் ரூ.50 லட்சம் தரவேண்டும் என்றார். அவ்வளவு பணம் என்னால் கொடுக்க முடியாது என்றேன். திருமணம் செய்ய மறுத்துவிட்டார். என்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய குருக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

எஸ்ஐ மலர்ச்செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். இன்று காலை குருக்கள் ராகவேந்திரனை கைது செய்தார். அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.

Wednesday, August 1, 2012

மனிதனை முந்தும் ரோபோக்கள்!!

லண்டன்: மனிதனைவிட 3 மடங்கு வேகமாக நீந்தும் ரோபோவை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். ஒருவேளை அடுத்த ஒலிம்பிக் போட்டியின் நீச்சல் பிரிவில் இந்த ரோபோவை அனுமதித்தால் நிச்சயம் தங்கப் பதக்கத்தை வெல்லும்.

டோக்கியோ தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மொடோமு நகஷிமா தலைமையிலான குழுவினரின் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த ரோபோவின் பெயர் "ஸ்வுமனாய்ட்' ஆகும்.,நீச்சல் வீரரின் உடலமைப்புடன் ஒத்துப் போகும் வகையில் இந்த ரோபோ 3டி ஸ்கேனர் உடன் தயாரிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் நீந்துவது போலவே இது நீந்தும் திறன் கொண்டதாக உள்ளது.

நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளிப்பவர்களைக் காப்பாற்றுவதற்கு மட்டுமல்லாமல், நீச்சல் தொடர்பான ஆராய்ச்சிக்கும் ஸ்வுமனாய்ட் உதவும் என ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நீர்நிலைகளில், பாதுகாப்புப் பணி மற்றும் ரோந்து பணிகளிலும் இந்த ரோபோவை ஈடுபடுத்தலாம் என்பது அவர்களின் நம்பிக்கை.

நீர்நிலைகளில் இருக்கும் நீச்சல் வீரர்களின் இருப்பிடத்தைக் கண்டறியும் கருவிகளைப் பொருத்துவதும், செயல்பாடுகளை துல்லியமாக கணிப்பதும் சிரமம். ஆனால், இந்த ரோபோவில் இது சாத்தியமாகும். நீச்சல் வேகம் உள்பட பல்வேறு இயக்கங்களை துல்லியமாகக் கணிக்கவும் உதவியாக அமையும்.

முன்னோக்கியும், பின்னோக்கியும் நீந்திச் செல்லும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகின் அதிவேக நீச்சல் வீரர் என்ற சாதனை படைத்தவரைப் போல மூன்று மடங்கு வேகத்தில் நீந்தும் திறன் படைத்தது ஸ்வுமனாய்ட்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!