Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, July 31, 2012

அலர்ஜி என்று அல்லல்படும் சமந்தா?

நடிகை சமந்தா நடித்த நான் ஈ படம் தமிழ், தெலுங்கில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகிறது. இந்த மகிழ்ச்சியை அவரால் கொண்டாட முடியவில்லை. ஏனென்றால் தோல் அலர்ஜியால் அல்லல்படுகிறார்.

தமிழ் திரையுல ஜாம்பவான்களான இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், ஆகியோர் தங்கள் படங்களில் நடிக்க சமந்தாவை அழைத்தனர். மணிரத்னம் படத்துக்கு கால்ஷீட் கொடுத்து சில நாட்கள் நடித்தார். ஆனால் தோல் அலர்ஜி காரணமாக அப்படத்தில் இருந்து விலகி விட்டார். ஷங்கர் பட வாய்ப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மறுத்து விட்டார். இதனால் சமந்தா விரக்தியில் உள்ளார்.

சரும நோயால் முகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து குணமாக்க யோசித்தார். ஆனால் இதற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யமுடியாது என டாக்டர்கள் கூறிவிட்டார்களாம். இதையடுத்து சினிமாவை விட்டு விலகி விடலாம் என அவர் யோசிப்பதாக நெருக்கமானவர்கள் கூறி வருகிறார்கள்.

Monday, July 30, 2012

மாணவிகளை பாலியலுக்கு அழைத்து வர மறுத்ததால் தாக்குதல்?

மங்களூர்: கலாச்சாரத்தை பாதுகாக்கும் பேர்வழிகளாக காட்டிக்கொண்டு மங்களூர் ஹோம் ஸ்டே ரிசார்டில் பாலியலுக்கு அழைத்து வர மறுத்த மாணவிகளை தாக்கிய வழக்கில் எட்டு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத செயல்கள் நடப்பதாக குற்றம் சாட்டி ஹிந்து ஜாக்ரண் வேதிகா என்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் கடந்த சனிக்கிழமை இரவு ஹோம் ஸ்டே ரிசார்டில் தாக்குதலை நடத்தினர். இச்சம்பவத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மங்களூர் நகரத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்பாக எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து பெங்களூரில் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த முதல்வர் ஜகதீஷ் ஷெட்டார், உள்துறை அமைச்சர் ஆர்.அசோகாவுடன் நிலைமைகள் குறித்து விவாதித்தார். இப்பிரச்சனையை அரசு பாரதூரமானதாக கருதுவதாக ஷெட்டார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மனிதத்தன்மையற்ற தாக்குதல்கள் நடந்ததாகவும், இத்தகைய சம்பவங்களை பொறுத்துக்கொள்ள இயலாது என்று உள்துறை அமைச்சர் ஆர்.அசோகா தெரிவித்துள்ளார்.

கூடுதல் டி.ஜி.பி கோபால்கிருஷ்ணா சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். கைது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்ததிட்டமிட்டிருப்பதால் மங்களூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் தொலைக்காட்சி சானல்கள் வெளியிட்டுள்ள தாக்குதல் தொடர்பான காட்சிகளை போலீஸ் பரிசோதித்து வருகிறது. மேலும் பலர் இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்படுவார்கள் என கருதப்படுகிறது.

பிறந்த தின கொண்டாட்டத்திற்கு மங்களூர் புறநகர் பகுதியான படில் அமைந்துள்ள ஹோம் ஸ்டே ரிசார்டில் மாணவிகள் உள்பட 13க்கும் மேற்பட்ட மாணவிகள் இரவில் கூடினர். இங்கு அத்துமீறி நுழைந்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மாணவிகளை கொடூரமாக தாக்கினர். பாதுகாக்க முயன்ற போலீசாரை அப்பகுதி மக்கள் தடுத்தனர். தொடர்ந்து போலீஸ் தடியடி நடத்தியது. குளிர்பானங்கள், பீர் பாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள் ஆகியவற்றை போலீசார் அங்கிருந்து கைப்பற்றினர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த இரண்டு பத்திரிகையாளர்கள் குறித்து போலீசார் விசாரணைச் செய்து வருகின்றனர். பெண்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்காமல் காட்சிகளை பதிவுச்செய்த செய்தியாளர்களின் நடவடிக்கை குறித்து பெண்கள் அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.

கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகளை விடுதலைச் செய்யக்கோரி கமிஷனர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்திய ஹிந்து ஜாக்ரண் வேதிகா இயக்கத்தைச் சார்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

கலாச்சாரத்தை காப்பாற்ற(?) தாங்கள் ஹோம்ஸ்டே ரிசார்டில் தாக்குதல் நடத்தியதாக போராட்டத்தில் கலந்துகொண்டோர் கூறினர். லைசன்ஸ் இல்லாமல் ஹோம்ஸ்டே நடந்து வந்ததாக மங்களூர் போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் கூறியுள்ளார்.

2009-ஆம் ஆண்டு ஸ்ரீராம சேனா ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கலாச்சாரத்தின் காவலர்களாக(?) மாறி பப்புகள் மீது தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் தேசிய அளவில் சர்ச்சையை கிளப்பியிருந்தது. அதன் பிறகு இச்சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், தாக்குதல் குறித்து சி.ஐ.டி விசாரணை நடத்தவேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஷ்வரா கோரிக்கை விடுத்துள்ளார்.

Sunday, July 29, 2012

ஆரோக்கியமானது பாப்கா(ர்)ன்! விஞ்ஞான தகவல்!!

சினிமா தியேட்டருக்கோ அல்லது பொது இடங்களுக்கோ செல்லும் போது, அங்கு விற்கும் பாப்கானை வாங்கி சாப்பிடாதவர்கள் இருக்க முடியாது. பாப்கான் நமக்கு நெருக்கமான பொருளாகி விட்டது.

இதை கொரிக்க கூடிய ஒரு உணவாக மட்டுமே நாம் பார்க்கிறோம். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் பாப்கானை சத்து நிறைந்த சீர்படுத்தப்படாத தங்கம் என்று வர்ணிக்கின்றனர்.

பென்சில் வேனியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி தலைமையில் தானியங்களில் காணப்படும் சத்துக்கள் பற்றி ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆராய்ச்சியில் மக்காச் சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கான் மிகவும் சத்தானது என்று கண்டு பிடித்துள்ளனர்.

உப்பு, எண்ணை, வெண்ணெய் போன்றவை சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படும் பாப்கான், காய்கறி, பழங்களைவிட சத்தானது என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

பாப்கான் பற்களுக்கும் மனதை ஒருமுகப்படுத்துவதற்கும் சிறந்த நொறுங்கு தீனியாகும். மற்ற தானியங்களில் உள்ளதை விட மக்காசோளத்தில் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் நார்சத்து அடங்கி இருப்பதால், பாப்கான் சத்தானது மட்டுமின்றி உடல் நலத்துக்கும் நல்லது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Saturday, July 28, 2012

கமலின் விஸ்வரூபமா! விஜய்யின் துப்பாக்கியா?

நடிகர் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தின் போட்டோக்கள் இணையதளத்தின் பல இடங்களில் உலா வந்துகொண்டிருக்கின்றன.

ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் செய்யும் வகையில் ‘துப்பாக்கி’ படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய வேண்டும் என முழு வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது துப்பாக்கி டீம்.

துப்பாக்கி படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதால் ஆகஸ்டு 15-ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்யும் முனைப்புடன் படக்குழு இருப்பதாக தெரிகிறது. ஆனால் ஆகஸ்டு மாதம் கமல் இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம்’ படமும் ரிலீசாக இருப்பது குரிப்பிடத்தக்கது.

இப்படம் கமல் படத்திற்கு போட்டியாக அமையும் என்று கோடம்பாக்கத்தில் இப்போதே கிசு கிசுக்க ஆரம்பித்து விட்டது., எல்லாம் ஆகஸ்ட் 15 பிறகு எந்த படம் என்று தெரிந்துவிடும். wait and see..? On Aug:15.

Friday, July 27, 2012

பற்றி எரிவதை பார்த்துக்கொண்டு இருக்கும் மத்திய மாநில அரசுகள்?

புதுடெல்லி: அஸ்ஸாம் மாநிலம் கொக்ராஜர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வகுப்புவாத கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர முதல்வர் தருண் கோகோய் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் என்றும், நீதி விசாரணை நடத்தவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடு, பணமும் இழந்தவர்களுக்கு அவசர நிவாரண உதவி வழங்கவேண்டும். பல்லாயிரக்கணக்கானோர் கலவரத்திற்கு பயந்து வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இவர்களது புனர்வாழ்வுக்கான பொறுப்பையும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என முதல்வர் கோகோய்க்கு எழுதியுள்ள கடிதத்தில் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டீஸ்டா ஸெடல்வாட், ஜாவேத் ஆனந்த், டாக்டர்.அஸ்கர் அலி எஞ்சீனியர், ராம்புன்யானி, இர்ஃபான் எஞ்சீனியர், ஸஃபர் ஆகா, ராஜேந்திர பிரசாத்(ஸஹ்மத்), ஹஸன் கமால் ஆகியோர் அஸ்ஸாம் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த கலவரம் பற்றி மனித ஆர்வலர் கூறும்போது: இது திட்டமிட்ட சதி முன்பு குஜராத்தில் மோடி செய்ததுபோல் இம்மாநில முதல்வர் அவசரகால நடவடிக்கை செய்ய தவறவிட்டார் அல்லது கண்டும் காணாததுபோல் இருந்து விட்டார் என்றார்.

Thursday, July 26, 2012

இனி யோசித்துதான் பெண்களிடம் கேள்வி கேட்கவேண்டும்! ஆய்வில்!

லண்டன்: ஆண் மற்றும் பெண்களிடம் கேட்கும் கேள்விகளையும், அதற்கு அவர்கள் பதிலளிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் மற்றும் சரியான பதிலை அடிப்படையாக வைத்து லண்டனில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பெண்களின் அறிவு வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதுவரை அறிவு வளர்ச்சியில் ஆண்களை விட 5 சதவீதம் பின்தங்கியிருந்த பெண்கள், தற்போது முன்னிலைக்கு வந்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன எனவும், மரபணுவையும் மீறி அறிவு வளர்ச்சியில் உயர முடியும் என்பதற்கு பெண்களின் இந்த வளர்ச்சியே உதாரணம் எனவும் அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.

மேலும் இனி பெண்களிடம் அறிவு தொடர்பாக ஏதேனும் கேள்வி கேட்க வேண்டும் என்றால் ஆண் ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும் என்றும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

Wednesday, July 25, 2012

கள்ளச்சாமிக்கு ஆதரவு அளிக்கும் ஆதினம்!

எத்தனை எதிர்ப்புகள் கிளம்பினாலும் மதுரை இளைய ஆதீனப் பொறுப்பில் இருந்து அவரை மாற்றும் எண்ணம் எனக்கு இல்லை.

நித்யானந்தர் என்னை வசியப்படுத்தி விட்டதாகக் கூறுகிறார்கள். என்னை யாரும் வசியப்படுத்தவில்லை. யாராலும் வசியப்படுத்தவும் முடியாது. எனக்குத்தான் மற்றவர்களை வசியப்படுத்தும் ஆற்றல் உள்ளது.

இதையடுத்து, மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தர் செய்தியாளர்களிடம் கூறியது: ஆர்த்தி ராவின் குற்றச்சாட்டுகள் முழுவதும் பொய்யானவை. தனது மகனை மீட்டுத் தருமாறு மதுரை ஆட்சியரிடம் பெற்றோர் புகார் கொடுத்துள்ளது, அந்த பெற்றோருக்கும், மகனுக்கும் இடையே இருந்த பிரச்னை. அதை அவர்கள் பேசித் தீர்த்துக் கொண்டார்கள்.

பெங்களூரில் இம்மாதம் 30-ம் தேதி ஆண்மைப் பரிசோதனைக்கு ஆஜராகுமாறு போலீஸôர் எனக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். நான் கையிலாய யாத்திரைக்குச் செல்வது 6 மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. எனவே, யாத்திரை முடிந்து வந்த பிறகு பரிசோதனைக்கு ஆஜராவதாக போலீஸில் மனு கொடுத்துள்ளோம்.

ஆதீன விதிமுறைகளை கடைப்பிடித்து, முறைப்படிதான் மதுரை ஆதீனமாக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். என்னை தேர்வு செய்ததில் எந்த முறைகேடும் இல்லை.

என் பெயரைப் பயன்படுத்தி யாரும் புதிய நிறுவனம், ஹோட்டல், டிராவல் ஏஜென்சி தொடங்கக் கூடாது என்று என் பக்தர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளேன் என்றார் நித்யானந்தர்.

ஆதினம் பணப் பெட்டியை பெற்றுக்கொண்டு விட்டாரோ என்கிறார்கள் கோயில் வட்டாரங்கள்.

Tuesday, July 24, 2012

உடலை கவனிக்காவிடில் உயிருக்கு அச்சுறுத்தல்! ஆய்வில்!!

லண்டன்: உடற்பயிற்சி இன்மையும் புகைப்பிடித்தல் போலவே உயிருக்கு அச்சுறுத்தல் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

புகைப்பிடித்தல் மற்றும் உடல் பருமனால் ஏற்படும் மரணங்களுக்கு சமமாக உடற்பயிற்சி குறைவும் உலகெங்கும் மக்களை கொல்வதாக மருத்துவ இதழான ‘த லான்செட்டில்’ வெளியான ஆய்வு அறிக்கை கூறுகிறது.

வாரத்திற்குக் குறைந்தது இரண்டரை மணி நேரமாவது, நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, தோட்டவேலை செய்வது போன்ற மிதமான உடற்பயிற்சிகளை செய்தால், 50 லட்சத்துக்கும் மேலானோர் இறப்பதைத் தவிர்க்கலாம் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

இதய நோய், சர்க்கரை வியாதி, சில ரக கேன்சர் வியாதிகள் ஏற்படுவது ஆறிலிருந்து பத்து சதவீதமாகக் குறையும்.

உலகின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த 33 ஆராய்ச்சியாளர்கள் இணைந்த குழு இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

உடற்பயிற்சியின்மை தற்பொழுது மிகப்பெரிய ஆரோக்கிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றும், அரசுகள் அவசரமாக இவ்விவகாரத்தில் ஏதேனும் செய்யவேண்டும் என்றும் அறிக்கையில் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

லண்டனில் ஒலிம்பிக்ஸ் நடைபெற உள்ள சூழலில் மக்களிடம் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Monday, July 23, 2012

பாதுகாப்பற்ற பாலஸ்தீனை விட்டு வெளியேறும் மக்கள்!

கெய்ரோ: எவ்வித ஆவணங்களும் இல்லாமல் வருகை தரும் ஃபலஸ்தீன் மக்கள் எகிப்தில் நுழையவும், தங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திங்கள் கிழமை காலை முதலே ஏர்போர்ட்டுகளிலும், இதர இடங்களிலும் ஃபலஸ்தீன் மக்கள் விசா இல்லாமலேயே நுழைய துவங்கியுள்ளனர். கெய்ரோ ஏர்போர்டின் பாதுகாப்பு பிரிவு இத்தகவலை தெரிவித்துள்ளது.

வெறும் பாஸ்போர்ட் மட்டுமே பரிசோதித்து அதில் ஸ்டாம்ப் செய்யப்படுகிறது., விசா பிரச்சனையின் காரணமாக முன்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களும் புதிய சட்டத்தின் அடிப்படையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலின் கொடூர தாக்குதலால் மக்கள் தினம் ஃபலஸ்தீனை விட்டு வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள்.

சொந்த மண்ணை விட்டு செல்ல என்ன தவறு செய்தார்கள் ஃபலஸ்தீனியர்கள், நாடு இல்லாமல் வந்தவர்களுக்கு (இஸ்ரேளிகளுக்கு)தங்க இடம் கொடுத்தது மட்டும்தான் இவர்கள் தவறு.

முன்பு இஸ்ரேல் என்கிற நாடே கிடையாது. 1963 முன்புள்ள உலக வரைபடத்தை பார்த்தவர்களுக்கு புரியும்.

Sunday, July 22, 2012

இதற்காக பல வாரங்களை செ(சி)லவிடும் பெண்கள்!?

லண்டன்: பிரிட்டனில் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம், சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டது.

ஆயிரத்துக்கும் அதிகமான பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு ஆண்டில் 91 மணி நேரமும், வாழ்நாளில் 43 வாரங்களும் ஒப்பனைக்காக பிரிட்டன் பெண்கள் செலவிடுவது தெரியவந்துள்ளது.

ஒப்பனை செய்யாமல் வீட்டை விட்டு வெளியே போவதில்லை என, பெரும்பாலான பெண்கள் தெரிவித்துள்ளனர்.

அழகுபடுத்திக் கொள்ளாமல் வெளியே செல்வோம்' என, 13 சதவீத பெண்கள் தைரியமாக தெரிவித்துள்ளனர். தங்கள் அழகை மேம்படுத்த, "பிளாஸ்டிக் சர்ஜரி' செய்து கொள்ளலாமா என யோசிப்பதாக 12 சதவீதம் பேரும், "எடையைக் குறைத்தாலே அழகு கூடி விடும்' என, நான்கு சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்திய பெண்களையும் இந்த நோய்(மேக் அப்)தொற்றிக்கொண்டுள்ளது., இதற்காக நேரத்தையும் பணத்தையும் செலவு செய்கிறர்கள்.

Saturday, July 21, 2012

விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டதா அதற்கான முதல் உதவி

மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே கீழ்க்கண்ட அவசர மருத்துவதத்தைப் பின்பற்றவும். பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்.

கண்ணாடி விரியன்: பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.

நல்ல பாம்பு: வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.

தேள்: கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.

வண்டு: கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர்.

சிலந்தி: ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்துக் கடிவாயில் கட்டவும்.

வெறிநாய்: மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.

எலி: வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.

பூனை: தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.

பூரான்: பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.

நட்டுவாக்காலி: கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும். இது அவசர உதவி மட்டுமெ பின் வைத்தியரை நாடவும்.

Friday, July 20, 2012

நித்திக்கு காய் அடிப்பு?

கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற கற்பழிப்பு வழக்கு தொடர்பாக நித்யானந்தா வரும் 30ம் தேதியன்று மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று ராமநகரம் ஜூடிஷியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதற்கான நோட்டீஸ் நித்யானந்தாவுக்கு இந்த வாரம் அனுப்பப்பட்டது என்று சி.ஐ.டி. போலீசார் கூறினார்கள்.

பல்வேறு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய மருத்துவப் பரிசோதனைக் குழு நித்யானந்தாவைப் பரிசோதிக்கும். முடிவு உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தவறாக இருக்கும் நிலையில், அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று சி.ஐ.டி. தரப்பில் தகவல் கூறப்படுகிறது.

அமெரிக்க கோர்ட் அதிரடி தீர்ப்பு: அமெரிக்காவில் வேத பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க நித்யானந்தா அறக்கட்டளைக்கு ரூ.8 கோடி ரூபாய் நன்கொடை நித்தி வாங்கிருந்தார், ஆனால் உறுதி அளித்தபடி பல்கலைக்கழகம் தொடங்கவில்லை.

மேலும் மனுதாரர் பாபட்லால் சாவ்லாவிடம் பெற்ற ரூ.8 கோடி பணத்தையும் நித்யானந்தா அறக்கட்டளை திருப்பி வழங்கவேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது. தொழிலதிபர் பாபட்லாலைத் தொடர்ந்து மேலும் பலர் நிதியை திருப்பி கேட்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

* அமெரிக்காவில் அதிரடியாக தீர்ப்பு வழங்கி காய் அடித்தது போல் இந்தியாவில் இது நடக்குமா இல்லை லஞ்சத்தால் தீர்ப்பை மாற்றிவிடுவாரா இக்கள்ளச்சாமி ..?

Thursday, July 19, 2012

உண்ணா நோன்பு முழு சுறுசுறுப்பில் மூளை இயங்கும்! ஆய்வில்!!

லண்டன்: இந்தியர்கள் ஏதாவது ஒரு காரணத்துக்காக விரதம் என்ற பெயரில் சாப்பிடாமல் இருப்பதுண்டு. அப்படி விரதம் இருப்பதால் நினைத்த காரியம் நடக்கிறதோ இல்லையோ, "நினைப்பு தவறாமல்' இருக்கும் என்கிறது லண்டனில் நடந்துள்ள மருத்துவ ஆய்வு.

அல்சமீர், பார்க்கின்சன் வியாதிகள் முதியோருக்கு வருவதைத் தடுப்பது எப்படி என்ற ஆராய்ச்சியின் போது இந்த விரத மகிமை டாக்டர்களுக்குத் தெரியவந்தது.

வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரு நாளோ உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு மூளையில் பாதிப்பு ஏற்படுவது இல்லை என்று தெரியவந்துள்ளது. சாப்பாடு அதிகம் இருந்தால் ஏராளமான கலோரி உடலுக்குள் செல்கிறது. அதை ஜீரணிக்க செரிமான உறுப்புகள்தான் உதவுகின்றன, மூளையை அது எப்படி வலுப்படுத்தும் என்று நீங்கள் கேட்கலாம்.

சாப்பிடாமல் இருக்கும்போது மூளையில் சுரக்கும் ஒரு திரவம் மூளையின் செயல்திறனைக் கூட்டுகிறதாம். இதனால் மூளைக்கு எந்தக் கேடும் வருவதில்லையாம். இதை முதலில் எலிகளிடத்திலிருந்து அறிந்தார்கள். பிறகு சில முதியவர்களிடமும் சோதித்ததில் உறுதி செய்துகொண்டார்கள்., அளவோடு உண்டு (நீங்காத) நினைவோடு வாழ்வோம். இது ஒரு ஒழுக்கப் பயிற்சிககளும் கூட, நாமும் இவ்விடயத்தை கடை பிடித்து மூளையை எந்நேரமும் சுறுசுறுப்பாக வைத்திருக்கலாமே.

Wednesday, July 18, 2012

தமிழ் தெர்தா நடிகையை கழட்டிவிடும் சுந்தர் .சி

சமீபமாக வெளிவந்த கலகலப்பு படத்தை சுந்தர்.சி தான் இயக்கி இருந்தார். கலகலப்பான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சுந்தர்.சி அடுத்து விஷால் நடிக்கும் மத கஜ ராஜா (எம்.ஜி.ஆர்) படத்தை இயக்க இருக்கிறார். இதில் நடிகை ராதாவின் மகள் ஹீரோயினாக நடிக்கிறார்.

இனி வரும் படங்களில் தமிழ் தெரிந்த நடிகைகளைத் தான் என் படத்தில் நடிக்க வைப்பேன் என்ற முடிவை எடுத்துள்ளார் சுந்தர்.சி. தமிழ் பேசும் நடிகைகளையே என் படங்களில் தேர்வு செய்கிறேன். மொழி தெரியாதவர்களை நடிக்க வைப்பது இல்லை. தமிழ் தெரிந்த நடிகைகளால் மட்டுமே வசனத்தையும் புரிந்து கொண்டு ஈடுபாட்டோடு நடிக்க முடியும். உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியும். அவர்களை நடிக்க வைப்பதும் எளிதாக இருக்கிறது. மொழி தெரியாதவர்களால் சிறப்பாக நடிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

சுந்தர்.சியின் இந்த முடிவு தமிழ் திரைவட்டாரத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ரம்பா, நக்மா, கிரண், ரீமாசென், அனுஷ்கா என்று தமிழ் பேசத்தெரியாத நடிகைகளை தன் படத்தில் நடிக்க வைத்தவர் சுந்தர்.சி. ரம்பாவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தவரே சுந்தர்.சி என்பதும் குறிப்பிடத்தக்கது., குஷ்புவை தவிர எல்லா நடிகையும் கழட்டிவிடும் முயற்சியில் சுந்தர் சி.

Tuesday, July 17, 2012

சென்னை மெரினாவில் காதல் ஜோடியிடம் காசு கறந்த வாலிபர்கள் ?

சென்னை: மெரினா கடற்கரையில் காதல் ஜோடிகளை குறிவைத்து ஒரு கும்பல் பணம் பறிப்பதாக போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதுபற்றி கமிஷனர் திரிபாதியிடமும் நேரில் சிலர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கடற்கரையில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கிழக்கு மண்டல இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் புகழேந்தி ஆகியோர் ஆலோசனையின் பேரில் மெரினா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி கடந்த சில நாட்களாக கண்காணித்து வந்தார். நேற்று இரவு கடற்கரையில் கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஸ்டீபன் கென்னடி என்பவர் காற்று வாங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த காதல் ஜோடிகளிடம் சிலர் போலீஸ் என்று மிரட்டி பணம் பறித்துக் கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்த ஸ்டீபன் கென்னடி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனே கட்டுப்பாட்டு அறையில் இருந்து மெரினா போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பாண்டி ஸ்டீபன் கென்னடி தகவலின் பேரில் கலங்கரை விளக்கம் அருகில் சென்றார். அங்கு 3 வாலிபர்கள் பணம் பிடுங்கியதை நேரில் பார்த்தார். உடனே அவர்களை கையும் களவுமாக பிடித்தார்.

Monday, July 16, 2012

எதிர்ப்பை மீறி இந்தியா வருமா பாகிஸ்தான் அணி?

பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட அனுமதி அளித்த பிசிசிஐக்கு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். சிவசேனாவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னாள் கேப்டன் என்ற முறையில் கருத்து தெரிவிக்க கவாஸ்கருக்கு உரிமை உள்ளது என்று பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார். சிவசேனா கண்டனம் தெரிவித்திருப்பது குறித்து கேட்டபோது, ‘பிசிசிஐ இந்த முடிவை எடுத்தபோது எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி உடனிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்வாக நிறைய பிரச்சினைகளை யார் வேண்டுமானாலும் எழுப்பலாம். ஆனால் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளை காண்பதில் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

இரு நாட்டு அரசியல் சூழ்நிலை ஸ்திரமற்றதாக இருக் கும் நிலையிலும், கிரிக்கெட் வாரியங்கள் மனப்பூ ர்வமாக இணைந்து செயல்படுகின்றன’ என்றார்.

பாகிஸ்தான் அணி வருகைக்குப் பிறகு இந்திய அணிபாகிஸ்தான் செல்லும் வாய்ப்பு பற்றி கேட்டதற்கு, பாகிஸ்தானில் பாதுகாப்பு திருப்தி அளிக்கும் பட்சத்தில் இருந்தால் கண்டிப்பாக இந்திய அணி அங்கு செல்லும், என்று சுக்லா தெரிவித்தார்.

பிசிசிஐ-ன் இந்த முடிவை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாகீர் அப்பாஸ், இதன்மூலம் இந்திய-பாகிஸ்தான் உறவு வலுப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பாகிஸ்தான் மக்களும் இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உலக கிரிக்கெட் அரங்கில் வலுவான அணியாக திகழும் இந்திய அணியுடன் விளையாடுவதால் பாகிஸ்தான் வீரர்களும் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும் என்றார் ஜாகீர் அப்பாஸ்.

# இந்தியா நடுநிலை நாடு என்றால் மதவாத மிரட்டலுக்கு அடிபணியாமல் கிரிக்கெட் விளையாட்டை நடத்தவேண்டும்., எல்லா எதிப்பையும் மீறி பாகிஸ்தான் அணி இந்தியா வருமானால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த சந்தோசமடைவார்கள் நடக்கும்மா அது காண கிடைக்குமா...?

Sunday, July 15, 2012

செல்போன் சில்மிஷம்! சீரழியும் சிறார்கள்!!

"டச் ஸ்கிரீன்' மொபைல் போன்களில், வக்கிர உணர்வைத் தூண்டும் விதமாக, ஆபாச விளையாட்டுகள் இருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்தியாவில், மொபைல் போன்கள், பட்டி தொட்டி வரை பரவ, சீன மொபைல்களே காரணம். நோகியா, சாம்சங், மோட்டரோலா உள்ளிட்ட மொபைல் போன் நிறுவனங்கள், ஒரு புதிய தயாரிப்பை உருவாக்கி, மார்க்கெட்டில் அறிமுகம் செய்தால், மறு வாரமே, அதே மாடல்களில், நெட், விளையாட்டுகள், இதர வசதிகளைக் கொண்ட, சீன மொபைல்கள் விற்பனைக்கு வந்து விடுகின்றன.

இந்நிறுவனங்களின் மொபைல் போன் ஒன்றின் விலை, 15 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய் என்றால், அதே அளவு வசதியுடன் கூடிய, சீன மொபைல், வெறும், 1,000 ரூபாயில் துவங்கி, அதிகபட்சமாக, 5,000 ரூபாய்க்கு கிடைக்கிறது. அதிகப்படியான மாடல்கள், குறைந்த விலை என்பதால், இதையே மக்கள் அதிகம் வாங்கிப் பயன்படுத்துகின்றனர்."கீ பேட்' இல்லாமல், "டச் ஸ்கிரீன்' மாடலில் மொபைல் போன்கள், விற்பனைக்கு வந்துள்ளன.

கம்பெனி தயாரிப்புகளைப் போல வசதியும், இளைஞர், சிறுவர்களைக் கவரும் வகையில், ஆபாச விளையாட்டுகளுடனும் விற்பனை செய்கின்றனர். பெண்களை இழிவுபடுத்தும் விதமான விளையாட்டுகள், இந்த போன்களில் உள்ளன.ஒரு பெண், முழுமையான ஆடையுடன் நிற்கும் படம் உள்ளது. "டச் ஸ்கிரீனில்' கை வைத்து சுரண்டினால், அப்பெண் போட்டுள்ள ஆடை, கொஞ்சம் கொஞ்சமாக உரிகிறது. ஒரு கட்டத்தில், "டூ பீஸ்' ஆடையுடன் பெண் இருப்பது போல படம் வருகிறது.மற்றொரு படத்தில், பெண் ஒருவர் நிற்கிறார். டச் ஸ்கிரீனில் இருந்து, நாம் காற்றை ஊதினால், அந்த பெண்ணின் ஆடை மேல் நோக்கி பறக்கிறது. வெட்கத்தில் அந்தப் பெண் கத்தும் சத்தத்தை மொபைல் வெளிப்படுத்துகிறது.

இது போன்று பல விளையாட்டுகளை, இணையதளத்தில் இருந்து, மொபைல் போனில், பதிவு இறக்கம் செய்து, விற்பனை செய்கின்றனர். கம்பெனி தயாரிப்புகளில், இது போன்ற ஆபாச விளையாட்டுகள் இல்லை; சீன போன்களில் மட்டுமே உள்ளது. கடைக்காரர்கள், வியாபார உத்திக்காக, இதுபோன்ற பதிவு இறக்கத்தை செய்துள்ளனர்.

தற்போது, இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் காட்டுத் தீ போல பரவி, தங்களின் சாதாரண மொபைல்களைக் கொடுத்து, இது போன்ற, "டச் ஸ்கிரீன்' மொபைல்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். சைபர் கிரைம் போலீசார், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரது எதிபார்ப்பு?.

உணவில் மீன் சேர்த்துக்கொண்டால் இரத்த புற்று நோயை தவிர்க்கலாம்!

மீனிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் இரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் தன்மையுடையது என இந்திய ஆராய்ச்சியாளர் சந்தீப் பிரபு கூறுயுள்ளார்.

மீன்களில் உள்ள ஒமேகா-3 என்னும் அமிலத்தில் இருந்து தயாரிக்கப்படும் டெல்டா-12-ப்ரோடாக்லாண்டின் ஜே3 அல்லது டி12-பிஜிஜே3 என்ற சேர்மம் ரத்த புற்றுநோய்க்கு காரணமாக இருக்கும் திசுக்களை அழிக்கும் சக்தி உள்ளது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியில் ரத்த புற்றுநோய் உள்ள எலிகளுக்கு 7 நாட்கள் இந்த சேர்மம் கொடுக்கப்பட்டது. பின்னர் பரிசோதித்தபோது அந்த எலிகள் அனைத்தும் குணமடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. ரத்தத்தில் அணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இருந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Friday, July 13, 2012

ஹாலிவுடை கொண்டுவரும் முயற்சியில் யோஹன் டீம்!

விஜய்-கவுதம் மேனன் கூட்டணி, விரைவில் யோஹன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தின் மூலம் இணைய உள்ளது. படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தை உலகளவில் கொண்டு செல்ல இயக்குனர் திட்டமிட்டுள்ளார். அதன் முதற்படியாக படத்துக்கு யோஹன் என பெயரிடப்பட்டுள்ளது. இது உலகளவில் நன்கு பிரபலம் அடைந்த பெயர்.

இதன் அடுத்த கட்டமாக படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகையை நடிக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதற்குண்டான பணிகளில் கவுதம் மேனன் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொருளாதாரமோ தளர்ச்சி! அரசியல் கட்சிகளோ அபார வளர்ச்சி??

புதுடெல்லி: இந்திய தேசம் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைந்துள்ள சூழலில் முன்னணி அரசியல் கட்சிகளின் கஜானா நிரம்பி வருகிறது. ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் பெற்ற தொகை 1,662 கோடி ரூபாய். முக்கிய எதிர்கட்சியான பா.ஜ.கவுக்கு 852 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

த அசோசியேசன் ஃபார் டெமோக்ரெடிக் ரிஃபார்ம் என்ற அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற 2009-ஆம் ஆண்டு கட்சிகளுக்கு அதிக அளவில் வருமானம் கிடைத்துள்ளது. 2008-09 ஆண்டு காலக்கட்டத்தில் 220 கோடி ரூபாயாக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஆண்டு வருமானம் அடுத்த ஆண்டு 497 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பா.ஜ.கவுக்கு 124 கோடி ருபாயில் இருந்து 220 கோடி ரூபாயாக வருமானம் உயர்ந்தது.

கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு 307 கோடி ரூபாய் வருமானமாக கிடைத்தபொழுது பா.ஜ.கவுக்கு 168 கோடி ரூபாய் கிடைத்தது. மாயாவதியின் பகுஜன் சமாஜ்கட்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் 425 கோடி ரூபாயை வருமானமாக பெற்றுள்ளது. 335 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4-வது இடத்தில் உள்ளது. 5-வது இடத்தில் சமாஜ்வாதிக் கட்சியும்(220கோடி), 6-வது இடத்தில் தேசிய வாத காங்கிரஸ்(என்.சி.பி) கட்சியும் (140 கோடி)உள்ளன.

அதேவேளையில் தங்களுக்கு வருமானம் வந்த வழிகளைக் குறித்து இக்கட்சிகள் வருமான வரித்துறைக்கு அளித்துள்ள ஆவணங்களில் குறிப்பிடவில்லை. இதுத்தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி த அசோசியேசன் ஃபார் டெமோக்ரேடிக் ரிஃபார்ம் அமைப்பு வருமான வரித்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

Thursday, July 12, 2012

ஈழத்திற்கு உதவுமா இப்படம் தல..?

தல நடித்து இன்னும் இரு தினங்களில் ரிலீஸ் ஆக இருக்கும் பில்லா-2வின் கதையும், அஜித்தின் ஆஸ்தான ஹீரோ அல்பச்சுனோ நடித்து 1983ம் வருடத்தில் ஹாலிவுட்டில் வெளிவந்த ஸகார்பேஸ் படத்தின் கதையை தழுவிதான் எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

அதில் ஹீரோ அல்பச்சுனோ கியூபா நாட்டிலிருந்து அமெரிக்காவில் அகதியாக தஞ்சம் புகுந்து, அங்கே மியாமி பீச் பகுதிகளில் போதை பொருள் கடத்தல் மன்னனாக வளர்ந்து ஆளாக, அதில் கிடைக்கும் பணத்தில் கியூபா புரட்சி போருக்கு உத‌விடும் கேரக்டரில் நடித்திருப்பார்.

அதேப்போல் பில்லா-2வில் தல அஜித் இலங்கை அகதியாக இந்தியாவில் தஞ்சம் புகுந்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு இண்டர்நேஷனல் அளவில் ஈழப்புரட்சிக்கு உதவுவதாக கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறதாம்!

இப்படம் மூலம் ஈழத்திற்கு உதவியால் சரிதானே,நெசந்தானா. நடக்குமா தல?...?

Wednesday, July 11, 2012

பெண் முதல்வரால் பெண்களுக்கு எதிரான குற்றம் குறைவா?

தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. கடந்தாண்டில் மட்டும், கடத்தல், பலவந்தப்படுத்துதல் தொடர்பான சம்பவங்கள், முந்தைய ஆண்டை விட, 19 சதவீதம் அதிகரித்து உள்ளது.

பெண்களுக்கு, சமுதாயத்தில் ஓரளவு அங்கீகாரம் கிடைத்தாலும், அவர்கள் மீதான அடக்குமுறைகள், தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இது, வளர்ந்து வரும் சமுதாயத்தில், ஆண், பெண் இனப் பாகுபாட்டை அதிகரிக்குமே தவிர, பெண்களுக்குரிய முறையான அந்தஸ்தை தராது.

தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்தமட்டில், கற்பழிப்பு, மானபங்கம், கடத்தல், வரதட்சணை கொடுமை, பெண் குழந்தைகள் இறக்குமதி, பாலியல் துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ், வழக்குகள் பதியப் படுகின்றன. பெண்கள் வன்கொடுமைச் சட்டம் வந்த பிறகு, இதர சட்டப் பிரிவுகளுடன் சேர்த்து, இப்பிரிவின் கீழும் வழக்கு பதியப்படுகிறது.

சினிமா மோகத்தில் உள்ள சிறுமியரை, வேறு மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் சம்பவங்கள், முந்தைய காலகட்டங்களில் அதிகளவில் நடந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளில், இதுபோன்ற குற்றங்கள் குறைந்துள்ளன.மேலும், வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் வரும் புகார்கள் மற்றும் பாலியல் கொடுமைகள் குறித்த புகார்களின் எண்ணிக்கையும், கணிசமாக குறைந்துள்ளன.

தமிழகத்தில் சிறுமிகள் உள்பட பெண்கள் கடத்தல் சம்பவங்கள் 1743 நடந்துள்ளது. ஆந்திராவில் இது 1612 ஆகவும், கர்நாடகத்தில் 1395 ஆகவும், கேரளாவில் 299 ஆகவும் இருந்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பெண்கள், சிறுமிகள் கடத்தல் தவிர மற்ற கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை 241 ஆக இருந்தது. இதையும் சேர்த்தால்மொத்தம் 1984 கடத்தல் சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன.

* அமெரிக்க அதிபர் ஒபாமாவோ துப்புரவு தொழிலாளிக்கு சாதாரணமாக கை கொடுக்கிறார், ஆனால் இந்த மிருகொமோ காலில் விழ வைக்கிறது என்ன கொடுமை. காலில் விழுபவரை வேண்டாம் என்று கூட தடுப்பதில்லை.

Tuesday, July 10, 2012

சிறுபான்மையினர் பயத்ததுடன் வாழும் முதல் மாநிலம்! கேசுபாய்!?

அஹ்மதாபாத்: குஜராத் மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க முதல்வரும், முன்னணி தலைவர்களில் ஒருவருமான கேசுபாய் பட்டேல், குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியை சராமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.

பா.ஜ.க வின் முன்னணி அமைப்பு ஒன்று நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு அவர் கூறியது:

“உங்களுக்கு தெரியும், இங்கு ஒருவர் பொய் பேசுவதில் ஏகாதிபத்தியவாதியாக திகழ்கிறார் என்பது. ‘ஸத்பாவனா மிஷன்’ என்ற பெயரில் மோடி மக்களுக்கு சேவைபுரிய திட்டம் ஒன்றை துவக்கினார். ஆனால், உண்மையில் என்ன நடந்தது? என்பதை தாமதிக்காமல் அனைவரும் கண்டுகொண்டனர்., மேலும் சிறுபான்மையினர் பயத்ததுடன் வாழும் முதல் மாநிலம் இந்தியாவிலே குஜராத்தான் என்றார்.

இதர சமூகத்தினருக்கு கொடுமை இழைக்கவும், அவர்களுடன் சகிப்புத் தன்மையற்ற முறையில் பழகவுமே இத்திட்டம் உபயோகமானது.

சிறந்த நிர்வாகம் என்பது அன்பு மற்றும் அச்சமில்லாத சூழலாகும். ஆனால், எதிர்பாராதவிதமாக இன்று குஜராத்தில் அன்பு என்பது காணாமல் போய்விட்டது. மக்கள் பயத்தில் வாழ்கின்றனர். இதே ரீதியில் சென்றால் அடுத்த தேர்தலில் பலன் மாற்றமாக இருக்கும்.

பா.ஜ.க உறுப்பினர் பதவியை புதுப்பிக்க மாட்டேன். அடுத்த தேர்தலில் 3-வது அணியை உருவாக்குவதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளேன்.” என்று கேசுபாய் கூறினார்.

“குஜராத்தில் மக்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. 6 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலைச் செய்துள்ளனர். ஃபெஸ்டிவெல்கள்(திருவிழாக்கள்) நடத்தி மக்களை மயக்கி அவர்களை எதிர்க்கும் வலுவில்லாதவர்களாக மோடி மாற்றி வருகிறார்” என்று இன்னொரு முன்னாள் முதல்வரும், பா.ஜ.கவின் தலைவர்களில் ஒருவருமான சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.

Monday, July 9, 2012

கர்ப்பிணி பெண்கள் கவனிக்க வேண்டியவை!

லண்டன்: பெண்கள் கர்ப்ப காலங்களில் சரியான முறையில் உணவுக்கட்டுப்பாட்டை பேணுவது அவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஆரோக்கியத்திற்கு ஒரு சேர நன்மை விளைவிக்கும் என பிரிட்டீஷ் மெடிக்கல் இதழில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது.

உணவுக் கட்டுப்பாடு குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பு அளிப்பதுடன் பிரசவ வேளையில் அபாய சூழலை குறைக்கவும் உதவிகரமானது.

ஏழாயிரத்திற்கும் அதிகமான கர்ப்பிணிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வை அடிப்படையாக கொண்டு பிரிட்டீஷ் மருத்துவ இதழ் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

கர்ப்ப கால வேளைகளில் பெண்களின் உடல் எடை அதிகரிப்பது வழக்கமானது என்பதால் பெரும்பாலும் அவர்களது ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு காரணமாக அமைவது ஆய்வில் கண்டறியப்பட்டது என லண்டன் பல்கலைக்கழக டாக்டர் ஷக்கீலா தங்கரத்தினம் கூறுகிறார்.

உணவுக் கட்டுப்பாட்டிற்கும், குழந்தையின் எடைக்கும் தொடர்பில்லை என்று அவர் கூறினார். உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு கேடாகும் என்பதில் உண்மை இல்லை என்று இந்த ஆய்விற்கு தலைமை தாங்கிய டாக்டர்.ஷக்கீலா ராஜரத்தினம் விளக்கமளிக்கிறார்.

Sunday, July 8, 2012

புதிய மாடல்கள் மேல் பிரியப்படும் விஜய்!!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரியம் இருக்கும் ஆனால் தளபதிக்கோ டிரைவிங் செய்வதென்றால் செம பிரியம், அதுவும் புது மாடல் கார்கள் என்றால் சொல்லவேண்டியதில்லை.

அதனால், தன் நட்புவட்டார நடிகர்கள் யாராவது, புதிதாக கார் வாங்கி இருப்பதாக சொன்னால், படப்பிடிப்பு இல்லாமல் ஓய்வாக இருக்கும் நாளில், அந்த காரை தனது வீட்டுக்கு கொண்டு வரச்சொல்லி ஓட்டி மகிழ்கிறார்.

சமீபத்தில் கூட காமெடி நடிகர், "புரோட்டா சூரி, தான் புதிதாக கார் வாங்கி இருக்கும் சந்தோஷத்தை விஜய்யிடம் பகிர்ந்தார். காரை கொண்டு வரச் சொல்லி, தன் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் சிறிது நேரம் ஓட்டிப் பார்த்து விட்டு, சூரிக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து, கார் வாங்கியதற்காக வாழ்த்து சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார் விஜய்.

Saturday, July 7, 2012

நவம்பரில் உலாவவிட்ட வைரஸ் வரும் 9ல் ஆக்டிவ்! ஓர் எச்சரிக்கை!!

வாஷிங்டன்: ஏய் வைரஸ் வரப்போகுதாமே என்ன செய்யப்போகிறாய் என்ற பேச்சுத்தான் தற்போது எங்குப்பார்த்தாலும் தகவல் பரிமாறக்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் இணையத்தை முடக்கி உங்களின் கணினியை செயல் இழக்கச்செய்து விடும். இது புதிதாக தாக்குதலை தரப்போவதில்லை என்ற நிம்மதியான தகவல் வல்லுநர்கள் தெரிவித்தாலும் ஏற்கனவே உங்கள் கம்ப்யூட்டரில் இந்த வைரஸ் இருந்தால் வரும் 9 ம்தேதி அம்பேல்தான் என்கின்றனர். கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள்.

டி.என்.எஸ்.,( டொமைன் நேம் சிஸ்டம் ) என்பது நாம் வைத்துள்ள தளத்தின் முகவரியை கணினிக்கு புரியும் வகையில் ஐ.பி.எண்ணாக மாற்றி அந்த தளங்கள் திறக்க உதவுகிறது. தற்போது டி.என்.எஸ்.,சேஞ்சர் ( அலூரியன் மால்வேர் ) என்ற வைரஸ் உருவாக்கி இதன் மூலம் உங்கள் சிஸ்டத்தை செயல் இழக்கச்செய்யும் நாச வேலையில் அயல்நாட்டவர்கள் 7 பேர் இறங்கினர். இது கடந்த நவம்பரில் பரப்பி விடப்பட்டது. இதன் மூலம் பல கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டன. மேலும் பாதிப்பில் இருந்து தப்பிக்க இதனை அமெரிக்க உளவு பிரிவு எப்.பி.ஐ., மாற்று சர்வரை நிறுவி உதவியது. இந்த சர்வரை நிறுத்திட முடிவு செய்திருப்பதால் இந்த வைரஸ் மீண்டும் வரும் 9 ம் தேதி செயல்பட துவங்கி விடுமாம். இதனால் உலகம் முழுவதும் பல லட்ச கம்யூட்டர்கள் செயல் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறியுங்கள் : எனவே டி.என்.எஸ்., சேஞ்சர் என்ற வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று அறிந்து முன்சோதனை செய்து கொள்ளவும். பெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆண்டி வைரஸ் வைத்திருப்பதால் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். நடுத்தரமானவர்கள் இது போன்று ஆண்டிவைரஸ் வைக்காத பட்சத்தில் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம். எனவே தங்களின் கம்ப்யூட்டர்களில் இது போன்று வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறிய நீங்கள் www.dns-ok.us கிளிக் செய்தால் பாதிக்கப்டாமல் இருந்தால் பச்சைக்கலரில் வரும். பாதிக்கப்பட்டிருக்குமானால் சிவப்பு நிற இமேஜ் வரும். வரும் 9 ம்தேதி என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் இன்டர்நெட் உபயோகிப்பாளர்கள்.

வைரசை முற்றிலுமாக அழிக்க : ஒருவேளை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் முதலில் இந்த படிவத்தை forms.fbi.gov/dnsmalware பூர்த்தி செய்யவும்.

உங்கள் கணினியில் இருந்து அந்த வைரசை நீக்குவது எப்படி என இங்‌கே விளக்கம் தரப்பட்டுள்ளது. விண்டோஸ் XP, Vista, 7 கணினிகளுக்கு: DNS Changer வைரசை கணினியில் இருந்து நீக்குவதற்காக பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான அவிரா ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி உள்ளனர். இந்த லிங்கில் Avira DNS Repair சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் ஆகியதும் exe பைலை இரண்டு கிளிக் செய்து இன்ஸ்டால் செய்ய தொடங்கியவுடன் கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதுக்காப்பாக உள்ளது. ஆகவே இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகாது.ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மென்பொருள் அந்த வைரசை கண்டறிந்து உங்கள் கணினியில் இருந்து அழித்து விடும்.

மேக்(Mac) கணினிகளுக்கு: மேக் கணினிகளில் இருந்து இந்த வைரசை நீக்க இந்த மென்பொருளை DNS Changer Removal Tool டவுன்லோட் செய்து நீக்கி கொள்ளலாம்.

Friday, July 6, 2012

ரத்த தானம் யார் கொடுக்க கூடாது? தானம் கொடுக்கும் முன்பு!?

உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி.சி. வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் ஆகியோர் ரத்ததானம் செய்யக்கூடாது.

மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா?

தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒருமுறை ரத்தம் தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.

தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?

புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்திரியை நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.

ரத்ததானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. ரத்ததானம் செய்ய 10 நிமிடங்களே ஆகும். ஒருவருக்கு தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தை விடக் குறைவுதான்.

Thursday, July 5, 2012

அபாயத்தை நோக்கி இருக்கிறோம்! அமெரிக்க ஆய்வு மையம்!!

பருவநிலை மாறுபாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அமெரிக்காவின் தேசிய வளிமண்டல ஆய்வு மையம் ஒரு ஆய்வு நடத்தியது. ஆராய்ச்சி மற்றும் இதில் தெரியவந்த தகவல்கள் பற்றி விஞ்ஞானிகள் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளனர்:

’’இயற்கை மற்றும் மனித இடர்பாடுகளால் பருவநிலையில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பருவநிலை மாறுபாடுகள், தொடர்ந்து அதிகரித்து வரும் புவி வெப்பம், இதனால் பனிப்பாறை மற்றும் பனிப்படலங்கள் வேகமாக உருகுதல், கிரீன் ஹவுஸ் வாயுக்கள் அதிகம் வெளியாவது, ஓசோன் படலத்தில் ஓட்டை உருவாவது போன்றவற்றால் மனித இனம் மட்டுமின்றி கடல்வாழ் உயிரினங்கள் உள்பட சகல ஜீவராசிகளும் பாதிக்கப்படுகின்றன.

சுற்றுச்சூழல் பாதிப்பு, பருவநிலை மாற்றம் ஆகியவை காரணமாக 1980&ம் ஆண்டில் இருந்ததைவிட புவி வெப்பம் 2010&ல் 0.17 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருப்பதாக பல்வேறு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

பனிப்பாறைகள், பனித்தீவுகள் உருகுவதால் 2005&ம் ஆண்டில் இருந்து சராசரியாக ஆண்டுக்கு 2.3 மில்லிமீட்டர் என்ற அளவில் கடல் மட்டம் உயர்வதாகவும் தெரிகிறது. தொடர்ந்து கடல் மட்டம் உயரும் பட்சத்தில் கரீபியன் தீவுகள், மாலத்தீவு, ஆசிய பசிபிக் தீவுக்கூட்டங்கள் உள்ளிட்ட தாழ்வான பகுதிகள் மூழ்கிப் போகும் அபாயம் இருக்கிறது.

பூமியில் மட்டுமின்றி ஆழ்கடல் பகுதியிலும் வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்தே காணப் படுகிறது. இது கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. வரும் 2020&ம் ஆண்டுக்குள் சுமார் 180 நாடுகளில் பருவநிலைகளில் மிகப்பெரும் மாற்றங்கள் இருக்கும்.

உலக நாடுகள் அனைத்தும் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க 100 சதவீத நடவடிக்கை எடுத்து 2100&ம் ஆண்டில் புவி வெப்பத்தை 0.83 டிகிரியாக குறைத்தாலும்கூட, கடல் மட்டம் 14.2 செ.மீ. (ஏறக்குறைய அரை அடி) அளவுக்கும், 2300&ம் ஆண்டில் 24.2 செ.மீ. அளவுக்கும் உயரும்.

மாறாக, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஏனோதானோவென்ற நடவடிக்கை எடுத்தால், 2100&ல் புவி வெப்பநிலை 3.91 டிகிரியாக இருக்கும். இதனால், கடல் மட்டம் 32.3 செ.மீ. (ஒரு அடிக்கு மேல்) உயரும். 2300&ல் கடல் மட்டம் 139.3 செ.மீ. (4.6 அடி) அதிகரிக்கும். பல தொலைவுக்கு ஊருக்குள் கடல் நீர் புகுந்து, பல நகரங்கள், கடலை ஒட்டிய சிறிய நாடுகள், தீவுகள் அழியும்.’’

Wednesday, July 4, 2012

வெற்றி அடைந்த போராட்டம் வாயடைத்த ஜெயா! ஸ்டாலின்!!

சென்னை: சிறை நிரப்பும் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஸ்டாலின் மாலை விடுதலை செய்யப்பட்டார்.

மாலையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், அரசின் அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் தி.மு.க.,வினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் போலீசாரின் தகவல்படி 93 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளது.,ஜெயில் நிரம்பியதை கேட்டு வாயடைத்து போனார் ஜெயா, என்றார் ஸ்டாலின்.

சிறையில் அடைக்க வழியில்லாததால் போலீசார் விடுதலை செய்துள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட கட்சி தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சிறையில் அடைக்க முடியாத அளவிற்கு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது என கூறினார்.

எழுச்சியைப் பார்த்த பிறகாவது ஜெ., திருந்த வேண்டும். திருந்துவது மனித இனம் திருந்தாது மிருக ஜெ இனம்.

பதவி விலகுவாரா ப. சிதம்பரம்!!

டெல்லி: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் அப்பாவி கிராமவாசிகளை சுட்டுக் கொலைச் செய்துவிட்டு 20 மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றதாக சி.ஆர்.பி.எப் படையால் கூறப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் 200 சி.ஆர்.பி.எப். வீரர்கள் சுற்றி வளைத்து நடத்திய தாக்குதலில் 20 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் சி.ஆர்.பி.எப். முகாமிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த அப்பாவிகளையே படையினர் சுட்டுக் கொன்றதாக கூறப்பட்டது.

இச்சம்பவத்தை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடங்கிய பிரதிநிதிக் குழுவும் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து உறுதிச்செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து மாவட்ட மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் நீதிபதி சச்சார், சுவாமி அக்னிவேஷ், பி.டி. சர்மா போன்ற மனித உரிமை ஆர்வலர்கள், இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் பகிரங்க மன்னிப்பு கோரவும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலகவும் வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் உள்துறை அமைச்சக அதிகாரிகள் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். சுட்டுக் கொன்றது மாவோயிஸ்டுகள்தான் என்றும் சிறுவர்களை மாவோயிஸ்டுகள் தங்களது படையில் சேர்த்திருக்கின்றனர் என்றும் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் குற்றத்தை மறைக்கும் நோக்கில் மழுப்பலான பதில்களை கூறி வருகின்றன.

Tuesday, July 3, 2012

இல்லத்தரசிகள் இக்கொடுமைகளுக்கு ஆளாவதேன்?

புதுடெல்லி: இந்தியாவில் ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கு ஒருமுறை தற்கொலை நிகழ்வதாக அரசு அறிக்கை கூறுகிறது. தற்கொலை செய்வோரில் ஐந்து பேரில் ஒருவர் இல்லத்தரசிகள் என்று அவ்வறிக்கை கூறுகிறது.

அண்மையில் வெளியிடப்பட்ட ’இந்தியாவில் விபத்து மரணங்களும், தற்கொலையும்(‘Accidental Deaths and Suicides in India 2011′) என்ற அறிக்கையில் இத்தகவல்கள் அடங்கியுள்ளன.

முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் தற்கொலை சதவீதம் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது. 2010-ஆம் ஆண்டு 1,34,599 பேர் தற்கொலைச் செய்துள்ளனர். 2011-ஆம் ஆண்டு 1,35,585 ஆக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேற்குவங்காளம் தற்கொலையில் முதலிடத்தில் உள்ளது.

குடும்ப பிரச்சனைகள் காரணமாக தற்கொலையில் முதலிடத்தை ராஜஸ்தான் வகிக்கிறது. அடுத்த இடத்தை கேரளா பெற்றுள்ளது.

இதர மாநிலங்களில் கடந்த ஆண்டு தற்கொலைச் செய்துக் கொண்டோரின் எண்ணிக்கை:

தமிழ்நாடு – 15,963, மஹராஷ்ட்ரா – 15,947, ஆந்திரபிரதேசம் – 15,077, கர்நாடகா-12,622

மேற்கண்ட ஐந்து மாநிலங்களில் தற்கொலைச் செய்துக்கொண்டார் நாட்டின் மொத்தம் தற்கொலைச் செய்துக்கொண்டோரின் 56.2 சதவீதம் ஆகும்.

* இல்லத்தரசிலே! எந்த பிரச்சினை வந்தாலும் துணிவோடு எதிர்கொள்ளும் முடியவில்லையா உங்கள்மேல் அக்கறை உள்ளவர்களிடம் உங்கள் பிரச்சினைகளை பகிர்ந்துகொள்ளுங்கள். அவசரப்பட்டு எதையும் ஆராயாமல் செய்யாதீர்,ப்ளீஸ்.

Sunday, July 1, 2012

நித்திக்கு 144..,

கொடைக்கானல்: தியான முகாம் நடத்துவதற்காக கொடைக்கானலில் முகாமிட்டுள்ள நித்யானந்தாவுக்கு, ஓட்டலை விட்டு வெளியில் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் அட்டுவம்பட்டி "ஸ்டெர்லிங்' ஓட்டலுக்கு, நேற்று இரவு 10 மணிக்கு, நித்யானந்தா, ஏழு சீடர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். ஜூலை 22 வரை இங்கு தங்கி, வெளிநாட்டு பக்தர்களுக்கு தியான முகாம் நடத்த திட்டமிட்டுள்ளார்.

ஓட்டலில் 60 அறைகள், நித்யானந்தா குழுவினருக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள், தங்கியிருக்கும் பயணிகள் தவிர யாரும் ஓட்டலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஐந்து சீடர்கள் வாசலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அனுமதி பெறாமல் வெளியில் செல்லவேண்டாம் என, நித்யானந்தாவிடம் கூறியுள்ளோம், என்றார்.

* இம்முறையாவது காய் அடிப்பார்களா இக்கள்ளச்சாமிக்கு..???

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!