Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, June 30, 2012

விஜய்யின் துப்பாக்கி தடையை தாண்டி வெளிவருமா?

நடிகர் கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்தவர் தயாரிப்பாளார் ரவிதேவன். இவரது தயாரிப்பில் லோகியாஸ் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு ‘கள்ளத்துப்பாக்கி’ என்ற படத்தலைப்பு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு துப்பாக்கி என்று டைட்டில் வைக்கப்பட்டது. துப்பாக்கி படத்தின் டைட்டில் டிசைனும் கள்ளத்துப்பாக்கி படத்தின் டைட்டில் பாணியில் இருந்தது.

இதையடுத்து கள்ளத்துப்பாக்கி குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆதிக்கம் இருந்ததால் இவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. இதனால் கோர்ட்டுக்கு சென்றனர்.

கள்ளத்துப்பாக்கி குழுவினரின் மனுவை விசாரித்த நீதிபதி, விஜய் நடித்து வரும் படத்திற்கு துப்பாக்கி என்று டைட்டில் வைக்கக்கூடாது என அந்த டைட்டிலுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இது விஷயமாக கள்ளதுப்பாக்கி பட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவத்தார். சுமூக தீர்வுகண்டு படம் துப்பாக்கி பெயரிலேயே வெளியாகுமா? wait & see.

Friday, June 29, 2012

இனி அல்கஹால் தேடி அலைய வேண்டியதில்லை?

உலக முழுவதும் பிரபலமான கோக கோலா, பெப்சி போன்ற குளிர்பானங்களை 6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அருந்துகின்றனர்.

ஆனால், இந்தக் குளிர்பானங்களில் 10 மில்லிகிராம் அளவுக்கு ஆல்கஹால் கலப்பு உள்ளதாக, பிரான்ஸ் நாட்டின் நுகர்வோர் தேசிய மையத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கோலாவில் சேர்க்கும் நச்சு கலந்த அமிலம் கேன்சரை உண்டு செய்யும், சிறுக சிறுக உள் எலும்புகளை அறித்துவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்., உலக சுகாதார மையமும் எச்சரித்துள்ளது இத்தயாரிப்பை.

வெளிநாட்டு மோகத்தில் இதை அருந்துவதை தவிர்த்து உடல் நலம் பேணுவோமா நாம்.

Thursday, June 28, 2012

தொற்று கிருமிகளாலும் புற்றுநோய் வர வாய்ப்பு! புதிய ஆய்வு!!

பாரிஸ்: பிரான்சில் உள்ள சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு (International Agency for Research on Cancer in Lyon) நடத்திய ஆய்வில் உலக அளவில் புற்றுநோய் வரும் நபர்களில் ஆறில் ஒருவருக்கு இந்த நோய் கிருமித் தொற்றுக்களினால் (Bacteria, viruses and parasites) ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

மக்களுக்கு வருகின்ற புற்றுநோய்களில் ஒரு பங்கு தவிர்க்கக்கூடிய மற்றும் குணப்படுத்தக்கூடிய கிருமித் தொற்றுகளினால் ஏற்படுகிறது என இந்த ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது. அவ்வாறெனில்,கிருமித் தொற்றினால் புற்றுநோய் வருபவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு கிட்டத்தட்ட இருபது லட்சம் ஆகும்.

வளர்ந்து வரும் நாடுகள் என்று எடுத்துக்கொண்டால் கிருமித் தொற்றினால் ஏற்படுகின்ற புற்றுநோய்களின் விகிதாச்சாரம் மேலும் அதிகம் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கிருமித் தொற்றுக்களை தடுப்பூசிகள் மற்றும் கிருமித் தொற்று சிகிச்சை முறைகள் கொண்டு கட்டுப்படுத்த கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்த அமைப்பு வாதிடுகிறது. புற்றுநோயையும் தொற்று நோயாக அங்கீகரிக்க வேண்டும் என இந்த அமைப்பு கோருகிறது.

Wednesday, June 27, 2012

சகுனி நாயகன் அரசியல் பிரவேசமா?

கார்த்தி நடித்த 'சகுனி' படம் கடந்த 22-ந்தேதி ரிலீசானது. மொத்தம் 1,154 தியேட்டர்களில் 'சகுனி' திரையிடப்பட்டு 'சிறுத்தை' படத்தின் வசூலை 3 நாட்களில் முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து 'சகுனி' படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. விழாவில் கமலா தியேட்டர் அதிபர் வள்ளியப்பன் பேசும்போது, சினிமாவில் தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வரும் கார்த்தி அரசியலுக்கு வர வேண்டும் என்றார். அதற்கு முன்னோட்டமாக அரசியல் படமான 'சகுனி'யில் நடித்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

சென்னை, செங்கல்பட்டு விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன் பேசும்போது, கார்த்தி தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்து வருகிறார். அதற்காக அவர் அரசியலுக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. கார்த்தி அரசியலுக்கு வரக்கூடாது என்றார். நடிகர் நாசர் பேசும்போது, கார்த்தியை அரசியலுக்கு அழைக்க வேண்டாம் என்றார்.

பின்னர் கார்த்தி பேசிய தாவது: சகுனி' படத்தில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை சிரித்து ரசித்து பார்க்கிறார்கள். வசூலில் எனது முந்தைய படத்தை விட பெரிய அளவில் சகுனி போய் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சகுனி அரசியல் கதையாக இருந்தாலும் வலுவாக அரசியலுக்குள் செல்லாமல் காமெடியாக நகர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த உணர்வில்தான் இந்த படத்தில் நடிக்கவும் செய்தேன்.

படத்தில் ரஜினி, கமல் என பெயர் சொல்லி அழைப்பது ரசிக்கும்படி இருந்தது. ராதிகா, பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்ட அனைத்து கேரக்டர்களும் சிறப்பாக அமைந்தன. ஆக்ஷன் இல்லாமல் ஜாலியாக இருக்க ஆசைப்பட்டோம். அப்படியே கதை அமைந்தது. வெற்றியும் பெற்றுள்ளது, இவ்வாறு கார்த்தி பேசினார்.

Tuesday, June 26, 2012

விமானத்தில் பறந்தபடி பேசும் புது வசதி அறிமுகம்!

விமானத்தில் செல்லும்போதும், "மொபைல் போனில்' பேசுவது, உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்ட புதிய விமானத்தை, பிரிட்டனின் விர்ஜின் நிறுவனம், விரைவில் டில்லியிலிருந்து லண்டனுக்கு இயக்கவுள்ளது.

இதுகுறித்து பிரிட்டனின் விர்ஜின் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டீவ் ரிக்வே கூறியதாவது:

தற்போது விமானங்களில் பயணிப்போர், "மொபைல் போனில்' பேச முடியாது. ஆனால், நாங்கள் புதிதாக, டில்லியிலிருந்து லண்டனுக்கு, அடுத்த மாதம், 11ம் தேதியில் இருந்து இயக்கவுள்ள, ஏ 330 ரக விமானத்தில், "மொபைல் போனில்' பேசும் வசதியை ஏற்படுத்த உள்ளோம். இதற்காக, அந்த விமானத்தில் "ஏரோ மொபைல்' தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தவுள்ளோம்.

இதன் மூலம், அந்த விமானம், தரையிலிருந்து 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும், அதிலிருந்தபடி "மொபைல் போனில்' பேசவும், குறுந்தகவல்களை அனுப்பவும் முடியும். இதுதவிர, தொடு திரை பொழுபோக்கு வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளோம். அந்த விமானத்தில் மேலும் பல வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு ஸ்டீவ் ரிக்வே கூறினார்.

Monday, June 25, 2012

சொந்த மாநிலத்தில் அகதிகளாக வாழும் முதல் மாநிலம்!?


அஹ்மதாபாத்: 2002-ஆம் ஆண்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நரேந்திர மோடியின் ஆசீர்வாதத்துடன் கட்டவிழ்த்துவிட்ட இனப் படுகொலையில் அகதிகளாக்கப்பட்ட 2 லட்சம் முஸ்லிம்களில் 16 ஆயிரம் பேர் இன்றும் தற்காலிக அகதிகள் முகாமில் வாழ்வதாக அரசு சாரா நிறுவனமான ஜன்விகாஸ் கூறுகிறது.


அடிப்படை வசதிகளான சாலை, மின்சாரம், சாக்கடை வசதி எதுவும் இல்லாமல் முற்றிலும் சுகாதாரமற்ற சூழலில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் விஷயத்தில் மோடி அரசு முற்றிலும் புறக்கணிக்கும் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது.

குப்பை மேடுகளுக்கு அருகே 10 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இனப் படுகொலையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள், ஜன்விகாஸுடன் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

ஜன்விகாஸ் ஏற்பாடுச் செய்த இன்ஸாஃபி தகர்பர் என்ற நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தங்களது துயரமான வாழ்க்கையைக் குறித்து விவரித்தனர்.

தங்களின் புகார்களை கூட கேட்க அதிகாரிகள் தயாரில்லை என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷாமா பானு அன்ஸாரி கூறினார்.

நிரம்பி வழியும் சாக்கடைகளில் கழிவு நீர் தங்களின் காலனிக்கு வருவதாகவும், சாக்கடையில் ஒரு குழந்தை சிக்கி இறந்ததாகவும், தொற்று நோய்களும், இதர நோய்களும் பரவுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் எவரும் இல்லை என்பதை நம்பச்செய்ய முயற்சிக்கும் அரசு, உண்மைகளின் பால் கண்ணைத் திறக்கவேண்டிய நேரம் இது என்று பீப்பிள்ஸ் யூனியன் ஃபார் சிவில் லிபர்டீஸ்(பி.யு.சி.எல்) செயலாளர் ரோஹித் பிரஜாபதி தெரிவித்தார்.


தங்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால் அகதிகள் காலனியில் வசிக்கும் முஸ்லிம்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயங்குகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

மூவ்மெண்ட் ஃபார் செகுலர் டெமோக்ரஸியின் பிரகாஷ் ஷா, ஜன்விகாஸ் சி.இ.ஒ விஜய் பார்மர் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த இனப் படுகொலைகளில் அகதிகளாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்களில் 10 ஆண்டுகள் கழிந்த பிறகும் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் என்.ஜி.ஓக்கள், முஸ்லிம் ஜீவகாருண்ய அமைப்புகள் ஆகியன நிர்மாணித்த தற்காலிக மையங்களில் வசித்து வருகின்றனர்.

Sunday, June 24, 2012

சக்கரை நோயாளிகளுக்கு புதிய மாற்று கண்டுபிடிப்பு!!

அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலை கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் சர்க்கரை நோயாளிகளுக்காக ஒரு புதிய பயனுள்ள சிகிச்சையை கண்டறிந்துள்ளனர்.

இது சக்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்த சிகிச்சைக்காக ஒரு புதிய ஹார்மோன் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய ஹார்மோன் இன்சுலினுக்கு ஒரு பயனுள்ள மாற்றாக இருக்கிறது. இது இன்சுலின் செய்யும் அதே வேலையை செய்கிறது.

இதற்குண்டான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார் இதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.

Saturday, June 23, 2012

வாய்க்கொளுப்பு நடிகருக்கு வாய்ப்பு கிடைக்குமா?

அரசியல் பிரச்னைகள், தனிப்பட்ட பிரச்னைகள் உள்ளிட்ட காரணங்களால் வடிவேலு எந்த படங்களிலும் நடிக்க முடியாமல் இருந்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த மறுபடியும் ஒரு காதல் படத்தில் கூட காமெடியில் அசத்தி இருந்தாலும் கூட இப்படம் நீண்ட இடைவெளிக்கு முன் எடுக்கப்பட்ட படமே.

இந்நிலையில், ஷங்கர் தன் சொந்த பட நிறுவனம் மூலம், எஸ். பிக்சர்ஸ் சார்பில் காதல், கல்லூரி, இம்சை அரசன் 23ம் புலிகேசி, ரெட்டைச்சுழி உள்ளிட்ட படங்களை எடுத்தார். அதில் சில படங்கள் தோல்வியை சந்தித்தால் கொஞ்சம் காலம் பட தயாரிப்பை நிறுத்தி இருந்தார்.

இந்நிலையில் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை சிம்புதேவன் இயக்குவதாகவும், அதில் ஹீரோவாக வடிவேலுவே நடிப்பார் என்றும், அதை ஷங்கரே தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வந்தன. அதுஇப்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. சமீபத்தில் டைரக்டர் சிம்புதேவன் திருமண விழாவில் கலந்து கொண்ட டைரக்டர் ஷங்கர், அங்கு வந்த சினிமா பிரபலங்களோடு மனம்விட்டு பேசியிருக்கிறார். பின்னர் சிம்புதேவனுடன் நீண்ட நேரம் அமர்ந்து‌ பேசியுள்ளார் ஷங்கர்.

சிம்புதேவன் தனது உதவியாளர் என்பதால் கூடுதல் அக்கறை எடுத்து கொண்ட ஷங்கர் தயாரிப்பு பொறுப்பை ஏற்க ஓ.கே., சொன்னதும், இயக்குநர் சிம்புதேவன் கல்யாண மகிழ்ச்சியோடு மதுரையிலேயே கதை விவாதத்தில் உட்கார்ந்து விட்டாராம். இவை எல்லாவற்றையும் பார்க்கும்போது, கண்டிப்பாக ஷங்கர் வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுப்பார் என தெரிகிறது.

Thursday, June 21, 2012

வரலாறை எதிர்நோக்கி இந்திய ரூபாயின் மதிப்பு!?

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. (வரலாறை எதிர்நோக்கி உள்ளது)

சர்வதேச பங்குச் சந்தை இன்று துவங்கியதுமே இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை நோக்கி நகர்ந்தது. ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் மிகவும் சரிந்து 56.48 என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது.

பிறகு 11.35 மணியளவில் அதில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு, 56.39 என்ற அளவிற்கு உயர்ந்த நிலையில்,பிற்பகல் மீண்டும் சரிந்து 56.57 என்ற அளவிற்கு மிகககடுமையான மற்றும் வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டது. மேலும் இது வரலாறை எதிர்நோக்கி 60 டாலருக்கு கூடும் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது.

நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும் போது இந்திய ரூபாயின் மதிப்பு 56.15 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்து வருவதால் இந்திய ரிசர்வ் வங்கி அவசர கதியில் செயல்பட்டு ரூபாயைக் காப்பாற்ற நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று தெரிகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வெளிநாட்டு நிதிகள் பெருமளவில் வந்ததால், ரூபாயின் மதிப்பு பெருமளவில் அடி வாங்காமல் தப்பியது. ஆனால் ஏப்ரல், மே மாதத்தில் அன்னிய முதலீடுகள் குறைந்ததாலும், நிதி வரவு இறங்கியதாலும் தற்போது ரூபாயின் மதிப்பு கிடுகிடுவென சரிந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து இந்த நிலை நீடிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். அடுத்த சில நாட்களில் இது மேலும் மோசமாகி ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 60 ஆக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

(படத்தில் உள்ள குமார் என்பவர்தான் இந்த ரூபாயின் சிம்பிளை வடிவமைத்தார் இவருக்கு பாராட்டும், பணமும் கிடைத்தது மத்திய அரசாங்கத்தால் ஆனால் கோயிலில் மந்திரம் சொல்லும் பார்ப்பன குசும்பு இதை வடிவமைத்தலில் தவறு ஆதலால்தான் ரூபாயின் இந்த வீழ்ச்சி என்று இல்லாததை அவுத்து விட்டது, இதை பிரபல தொலைகாட்சியும் ஒளிபரப்பியது)

Wednesday, June 20, 2012

கல்லூரி மாணவர்களுக்கு காப்புகட்ட வருகிறது இன்பாக்ஸ்!

கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவ, மாணவியரை, சீனியர் மாணவர்கள், "ராகிங்' செய்வதும், கிண்டல் கேலி செய்வதும், காலகாலமாக நடந்து வருகிறது. இந்த கிண்டலும், கேலியும் அதிகரித்து, ஒரு கட்டத்தில் தற்கொலை மற்றும் விபத்து, கொலை, ஆசிட் வீச்சு உள்ளிட்ட அசம்பாவிதங்களும் நடந்து விடுகின்றன.

நடப்பு கல்வியாண்டில், கல்லூரிகள் திறக்க உள்ள நிலையில், அனைத்து கல்லூரிகளிலும், "ராகிங்'கை தடுக்க, புகார் பெட்டி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை, தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஒவ்வொரு உயர்கல்வித் துறை அமைப்புக்கும், தமிழக டி.ஜி.பி., தனிப்பட்ட முறையில், நடவடிக்கை எடுக்கக்கோரி, கடிதம் அனுப்பியுள்ளார்.

இதில் கூறியிருப்பதாவது:""கல்லூரிகளில் எக்காரணம் கொண்டும், ராகிங், கேலி, கிண்டல் உள்ளிட்ட எவ்வித செயல்பாடுகளாலும், மாணவ, மாணவியர் பாதிக்கப்படக் கூடாது. இதற்காக ஒவ்வொரு கல்லூரியிலும் முதல்வரின் அறை முன், "புகார் பெட்டி' ஒன்றை அமைக்க வேண்டும்.கல்லூரி முதல்வர் தலைமையில், "ராகிங்' தடுப்பு நடவடிக்கைக் குழு ஒன்றை அமைத்து, இப்புகார் பெட்டியில் மாணவ, மாணவியர் ரகசியமாக சேர்க்கும் கடிதங்களின் மீது, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் போலீசாரின் உதவியையும் முதல்வர் கேட்டுப் பெறலாம்.

மேலும், பேராசிரியர் தலைமையிலான, கண்காணிப்புக் குழு அமைத்து, கல்லூரியில், "ராகிங்' நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். "ராகிங்' உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் மாணவ, மாணவியர் மீது, போலீஸ் புகார் அளிக்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.''இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, June 19, 2012

சின்னத்திரைக்கு மாற காரணம் கூறும் சீரியல் நாயகி?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவையானி. டைரக்டர் ராஜகுமாரனை திருமணம் செய்த பின்னர் வெள்ளித்திரையில் வாய்ப்பை குறைத்து கொண்டு, சின்னத்திரையில் களம் இறங்கினார்.

இருந்தும் அவ்வப்போது வெள்ளித்திரையில் கிடைக்கும் வேடங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் தனியார் நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் நடிகை தேவையானி தனது கணவர் ராஜகுமாரனுடன் பங்கேற்றார்.

கடைதிறப்பு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவையானி, வெள்ளித்திரையை போல சின்னத்திரையிலும் சவாலான வேடங்கள் கிடைக்கின்றன. தற்போது முத்தாரம் என்ற தொடரில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். போலீஸ் உடையை போட்டதும் அதற்குரிய கம்பீரம் வந்து விடுகிறது.

போலீஸ் வேடத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களை கவனிப்பதற்காகவே வெளியூர் ஷூட்டிங் எதிலும் நான் பங்கேற்பது இல்லை. ஏனென்றால் முதலில் குடும்பம் தான் முக்கியம், அப்புறம் தான் சினிமா எல்லாம் என்றார்.

Monday, June 18, 2012

பார்ப்பனிய சடங்கை புகுத்தும் பரதேசி...?


இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 1006 ஜோடிகளுக்கு முதல்வர் இன்று இலவசத் திருமணங்களை செய்துவைத்துள்ளார். மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்ட இந்த திருமண நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கில் அரசுப் பணம் வாரி இறைக்கப்பட்டுள்ளது.


முதல்வரை வரவேற்று சென்னை போயஸ் தோட்டத்தில் தொடங்கி திருவேற்காடு வரை சுமார் 20 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை நெடுகிலும் வாழை மரங்களும்,தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன. இலவச திருமணம் என்ற பெயரில் ஆடம்பர விழாக்களை நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் அரசுப் பணத்தை வீணாக செலவழிப்பது சரியல்ல.

முதல்வருக்கு ஏற்பட்டுள்ள தோஷக் கோளாறை (செல்வி ஜெயாவுக்கு கன்னி கழிக்க) போக்குவதற்குத்தான் இந்த இலவசத் திருமணம் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் தீர்க்கப்படாத பிரச்னைகள் எவ்வளவோ உள்ளன. இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்காக கோடிக்கணக்கில் பணத்தை செலவிடுவது நியாயம்தானா என்பதை ஆட்சியாளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இனியாவது தனி மனிதர்களின் நலனுக்காக இதுபோன்ற வீண் நிகழ்ச்சிகளை நடத்துவதை விட்டுவிட்டு உண்மையான வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

மக்களும் சிந்துத்து இதுபோன்ற தேச நலன் கருதாத ஆடம்பர பேர்வழிகளை ஓட்டுபோட்டு ஆட்சியில் அமர்த்துவதை நிறுத்தவேண்டும், சிந்திப்பார்களா?

Sunday, June 17, 2012

விஜய்க்காக ஆக்க்ஷனில்! கவுதம் மேனன்!!

நடிகர் விஜய்க்காக தான் எழுதிய கதையை விரைவில் தொடங்க ஆயத்தமாகிவிட்ட மேனன் இது குறித்து அவர் கூறியதாவது:

விஜய் ஆக்க்ஷன் ஹீரோவாக நடிக்கும் யோஹன் அத்தியாயம் ஒன்று திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என்று கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

இந்த படம் ஆக்க்ஷன், காதல், காமெடியும் உண்டு என்றார். மேலும் ஜெய் மற்றும் ரிச்சா நடிப்பில் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்தையும், தங்க மீன்கள் என்ற திரைப்படத்தையும் தயாரித்து வருவதாகவும் கவுதம் கூறியுள்ளார்.

Saturday, June 16, 2012

கொடிகாய்களிலே சிறந்தது அவரைக்காய்


*கொடிகாய்களிலே சிறந்தது அவரைக்காய் மலிவான விலையில் நிறைய ஊட்டசத்துகளை தருவது அவரை.புரதம் சுண்ணாம்புசத்து, இரும்பு, வைட்டமின் சத்துகள் இதில் உள்ளன.

*மிக எளிதில் செரிமானமாகக் கூடியது.அவரை பலவீனமான குடல் உடையவர்களுக்கு இரவு நேரத்தில் பத்திய உணவாகவும் இது உண்பதற்கு ஏற்றது. முற்றிய அவரைகாயை விட அவரை பிஞ்சே உடலுக்கு நல்லது.

*வெண்ணிற அவரைகாய் வாயு பித்தம் இவற்றை கண்டிக்கும்,உள்ளுறுப்புகளின் அழற்சியைப் போக்கும் எரிச்சலை அடக்கும்.

*நீரிழிவு நோய் பேதி தொல்லை,அடிக்கடி தலை நோய் வருதல் ஜிரணக்கோளாறு,சீதபேதி,இவற்றிற்கு அவரையை அடிக்கடி உணவில் சேர்த்தால் பலனுன்டு.அஸ்ஸாமில் காது வலிக்கும்,தொண்டை வலிக்கும்,அவரைகாயின் சாறைப் பயன்படுத்துகின்றனர்.

*இரத்த கொதிப்பை தடுக்கும் ஆற்றல் இதற்குண்டு என்பது அறிய கண்டுபிடிப்பு.

Friday, June 15, 2012

கொரியாபோல் குருக்களுக்கு (சாமியார்கள்) காய் அடித்தால்!!


சியோல்: தென்கொரியாவில், 45 வயதான நபர், 13 வயதுக்குட்பட்ட சிறுமியர் பலரை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நான்கு முறை இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தன்னுடைய தவறை திருத்தி கொள்ளாத இந்த நபருக்கு காயடிக்க, சட்டத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கான மருந்தை, அவருக்கு ஊசி மூலம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மருந்தை செலுத்த அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், கூடுதலாக அவர் ஏழாண்டு சிறைதண்டனையை அனுபவிக்க வேண்டி வரும். காயடிக்கும் மருந்தை அவர் ஏற்றுக்கொண்டால், வரும் ஜூலை மாதம் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என, சட்ட அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை, ரசாயன மருந்து செலுத்தி காயடிக்கும் சட்டம் தென்கொரியாவில் கடந்த 2010ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

கோயில் குருக்களுக்கும் இதுபோல் காய்யடித்து மந்திரம் சொல்ல வைத்தால் இதுபோல் (செக்ஸ் சமாச்சாரம்) அனாச்சாரம் நடக்க வாய்ப்பு குறையும் அபிஷ்ட்டு அம்பி. (உதாரணம். சங்கராச்சாரி, நித்யானந்தா, இன்னும் நீண்டு கொண்டே போகும் பல குருக்கள்)

Thursday, June 14, 2012

ஏமாற்றும் ஏஜன்ட்டுகள்! ஏமாறும் அப்பாவிகள்!!


வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை,கட்டட வேலை,தோட்டம், பெட்ரோல் பம்ப் போன்ற வேலைகளுக்கு சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து அதிகமானோர் செல்கின்றனர்.


அங்குசெல்ல, ரூ.80 ஆயிரம் முதல் ஒன்றரை லட்சம் வரை ஏஜன்ட்களிடம் கொடுக்கின்றனர். ஆனால், இவர்களுக்கு ஏஜன்ட்கள் சொல்லி அனுப்பும் வேலையோ, வேலை நேரமோ, சம்பளமோ, தங்கும் இடமோ, சாப்பாடு வசதியோ, விடுமுறையோ கிடைப்பது இல்லை. சுமார் 30 சதவீதம் பேர் கொத்தடிமைகளாக வேலை வாங்கப்படுகின்றனர். இவர்களுடைய பாஸ்போர்ட்களை முதலாளிகள் வைத்துக் கொண்டு, இவர்களை ஊர் திரும்ப அனுமதிப்பதில்லை.

இவர்களது உறவினர்கள் ,"வீட்டில் தாய், தந்தைக்கு உடல்நலம் சரியில்லை; மகனை ஊருக்கு அனுப்பி வையுங்கள்,' என்று கெஞ்சி "பேக்ஸ்' அனுப்பி வருகின்றனர். கடந்த ஓராண்டாக, வளைகுடா நாடுகளுக்கு இது போன்று தினமும் நூற்றுக்கணக்கான "பேக்ஸ்'கள் அனுப்பப்படுகின்றன. அங்குள்ள நமது தூதரகங்கள் தமிழர்களை மீட்டு, சொந்த ஊருக்கு அனுப்புவதில் பாராமுகமாக இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. அண்மையில், குவைத்தில் உடல்நலமில்லாத திருப்புத்தூர் பகுதி வாலிபர் ஒருவரை மீட்க, தூதரகம் தலையிட்டும் 3 மாதங்கள் ஆகி விட்டன.

முன்பு, இப்பிரச்னையை சமாளிக்க, மத்திய அரசு "பிலிப்பைன்ஸ் நாட்டைப் போல' ஒரு திட்டம் தயாரிக்க முடிவு செய்தது. பிலிப்பைன்ஸ் நாட்டவருக்கு வளைகுடா நாடுகளில் வேலை பார்க்க, அந்நாடு ரூ.16 ஆயிரம் குறைந்த பட்ச சம்பளமாக நிர்ணயித்து உள்ளது. இந்தியத் தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச சம்பளத்தை நிர்ணயிக்கவும், வேலை நேரம், விடுமுறைகளை வரையறுக்க சவுதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரசு குடியரசு, கத்தார், பக்ரைன், ஏமன், குவைத் மற்றும் சிரியா,லெபனான் போன்ற நாடுகளை வலியுறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு முன் வந்தால் தான், வெளிநாட்டில் கொத்தடிமையாகும் இந்தியர்களின் நிலை மாறும்.

Wednesday, June 13, 2012

மத(ம்) தீவிரவாதியின் அரைவேக்காடுத்தன பேச்சு!!


பாட்னா:’ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்’ – இந்த பழமொழி குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைப் புகழ் மதம் பிடித்த தீவிரவாதி மோடிக்கு கனகச்சிதமாக பொருந்தும்.


குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று முன் தினம் நடந்த மாநில பா.ஜ.க செயற்குழு கூட்டத்தில் பேசிய மோடி, ‘ஒருகாலத்தில் பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் வலம் வந்த காலம்போய் சாதிய அரசியலால் அவை மிகவும் பின்தங்கிப் போய்விட்டன’ என்று கூறியிருந்தார்.

தீவிரவாதி மோடியின் இந்த அரைவேக்காட்டுத் தனமான பேச்சு பீகார் அரசியல் தலைவர்கள் இடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. பா.ஜ.கவின் தோழமை கட்சியும் பீகாரின் ஆளுங்கட்சியுமான ஐக்கிய ஜனதா தளத்தின் முதல்வர் நிதீஷ் குமார் மோடியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘மோடி பிறரைக் குறித்து கருத்து தெரிவிக்கும் முன்னர், தமது மாநிலத்தைக் குறித்து சிந்திக்கவேண்டும். குஜராத்தில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அங்குள்ள சில பிரச்சனைகள் குறித்து அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். அது சுகாதாரத்துறை ஆனாலும் சரி, பொருளாதாரத்துறை ஆனாலும் சரி. பீகாரில் பிரச்சனைகள் குறித்து தீர்வு காண பிறரின் உபதேசம் எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் பிரச்சனைகளை தீர்த்து வருகிறோம். மாநில மக்களுக்கு உபதேசம் செய்பவரின் கடந்த காலத்தை (குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைப் புகழ் மோடி) அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.’ என்று நிதீஷ் குமார் தெரிவித்தார்.

நாட்டுப்புற பழமொழிகளை (pot calling kettle black) கூறி நிதீஷ் குமார் மோடியை விமர்சித்தார். பழமொழிகளை கூறிய பிறகு, செய்தியாளர்களிடம், இதற்கு நீங்களே விளக்கமளித்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

அதேவேளையில், தேசம் முழுவதும் சாதிய பிரச்சனை நீடிப்பதாக ஒப்புக்கொண்ட ஐக்கிய ஜனதா தள தலைவரும் என்.டி.ஏ கன்வீனருமான சரத் யாதவ், குஜராத்தில் சாதி வெறியை தூண்டி மக்களை கொல்லவில்லையா என கேள்வி எழுப்பினார். மோடிக்கு வரலாற்றைக் குறித்து குறைந்தே அளவே அறிவுள்ளது என்று சரத் யாதவ் கிண்டலாக கூறினார்.

மத சிறுபான்மையினரை கூட்டுப் படுகொலைச் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தீவிரவாதி மோடி என்று ஐக்கிய ஜனதாதளம் குற்றம் சாட்டியுள்ளது.

குஜராத்தில் மதத்தை சொல்லி மக்களை தூண்டி சிறுபான்மையின மக்களை கொல்லவிலையா? மத தீவிரவாதி மோடியின் பேச்சுக்கு முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லல்லுபிரசாத் யாதவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tuesday, June 12, 2012

சிம்பு உனக்கு எதற்கு வம்பு!

தனுஷை வம்புக்கு இழுப்பதே சிம்புவுக்கு வேலையாகிவிட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இவரின் வாலு படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.

இப்படத்தின் அறிமுக டிரைலரில் சிம்புவைப் பார்த்து ஹன்சிகா, ஒரு சில பசங்கள பாக்க பாக்கத்தான் பிடிக்கும், ஆனா உன்ன மாறி பசங்கள பாத்த உடனே பிடிச்சிடும் என்று வசனம் பேசுகிறார். இது படிக்காதவன் படத்தில் தனுஷ், தமன்னாவை பார்த்து பேசும் படத்தின் டயலாக்கின் உல்டாவாகும். ஆனால் இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, டைரக்டர் தான் அப்படி வைத்தார், நான் யாரையும் வம்புக்கு இழுக்கவில்லை என்று ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்தார் சிம்பு.

இந்நிலையில் தனுஷை மீண்டும் வம்புக்கு இழுப்பது போன்று பேசியுள்ளார் சிம்பு. செல்வராகவன், பாலா போன்றோர்களின் படங்களின் நடிக்க விருப்பம் இல்லையா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, அவர்களின் படங்களில் நடிக்க நான் விரும்பமாட்டேன். அதுபோன்ற கதைகள் தனுஷூக்கு தான் செட் ஆகும். என் படங்கள் அனைத்தும் பொழுதுபோக்கு படங்களாக இருக்கும். எனக்கு தேசிய விருதோ, ஆஸ்காரோ தேவையில்லை. என் படங்கள் ஓடும் தியேட்டர்களில் கைதட்டலும், விசில் சத்தமும் கேட்டாலே போதும் என்று சிம்பு கூறியுள்ளார்.

Monday, June 11, 2012

அலறும் பார்ப்பன ஊடகங்கள் அடக்கி வாசிப்பதேன்?


சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் பெருமளவிலான வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட பிறகும் அதனை ஒரு சாதாரண செய்தியாகவே ஊடகங்கள் வெளியிட்டன.


அண்மையில் பா.ஜ.க மதுரை மாநாட்டிற்கு முன்பாக சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த வீரியம் குறைந்த எவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத குண்டுவெடிப்பு தொடர்பாக முஸ்லிம்கள் மீது பழியைப் போட்டு தொந்தரவுச் செய்த போலீசாரும், அதனை பரபரப்பான செய்தியாக வெளியிட்ட ஊடகங்களும் மிகப்பெரிய அளவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ள வெடிப்பொருட்கள் குறித்து எவ்வித பரபரப்பையும் காட்டவில்லை.

ஊடகங்களின் இத்தகைய போக்கு புதிதல்ல என்றாலும் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதன் பின்னணியில் பலத்த மர்மம் நீடிக்கிறது.

கடந்த சிலநாட்களில் தமிழகத்தில் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன., அவை பின் வருமாறு:

அரூர் அருகே வெடிபொருட்கள் கடத்திய வழக்கில் மினி லாரி உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர். அரூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீஸார் கடந்த 24ம் தேதி காலை 11.30 மணியளவில் அரூர்-சேலம் பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருப்பத்தூரிலிருந்து- சேலம் நோக்கி வந்த ஒரு மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். மினிலாரியின் பின்புறம் ரகசிய அறை அமைத்து, 40 பெட்டிகளில் தலா, 500 டெட்டனேட்டர்கள் வீதம், 20,000 டெட்டனேட்டர்கள் வெடிக்க பயன்படும் திரிகள் 54 ரோல்கள் என 4 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெடிப்பொருட்கள் ரகசிய அறையில் இருந்தது. மினி லாரியையும், வெடி பொருட்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் மினி லாரியை ஓட்டிவந்த திருப்பத்தூர் தண்டபாட கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ்(26) என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான மினி லாரி உரிமையாளர் சேலம் அம்மா பேட்டையை சேர்ந்த சங்கர்(26) என்பவரை கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலை பகுதியில் வெடிப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என இன்ஸ்பெக்டர் பெலிக்ஸ் சுரேஷ்பீட்டர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். முத்தம்மாள்புரத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் பம்புசெட் அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,530 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள், சிலரி, 200 கிலோ அம்மோனியம் நைட்ரேட் உப்பு பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தோட்டத்தின் உரிமையாளர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த பால்ராஜ்(61), அவர் மகன் சவுந்தரராஜ்(33) கைது செய்யப்பட்டனர். லோடு ஆட்டோ கைப்பற்றப்பட்டது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு சம்பவங்களின் பின்னணிக் குறித்து போலீசாரும் துருவிதுருவி விசாரணை நடத்தப் போவதில்லை. ஊடகங்களும் இதன் பின்னணி குறித்து தோண்டி துருவப்போவதில்லை. ஆனால், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் பொழுது முஸ்லிம்கள் மீது பழியைப்போட்டு சில முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து அவர்களது வாழ்க்கையை நாசம் செய்வதிலேயே இவர்கள் குறியாக இருப்பார்கள்.

முஸ்லிம் அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் இதுக்குறித்து என்ன நடவடிக்கையை எடுக்கப் போகிறார்கள்? (அனைத்துக்கும் அலறும் பார்ப்பன ஊடகங்கள் அடக்கி வாசிப்பது ஹிந்துத்துவ தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக உதவி புரிகிறார்களா?)

Sunday, June 10, 2012

சிறைச்சாலையயையும் விட்டுவைக்காத தீவிரவாதிகள்!!

புனே: பெங்களூர், புனே குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர் முஹம்மது கத்தீல் சித்தீக் சிறையில் கழுத்து நெரித்துக் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.

புனேயில் உள்ள உயர்பாதுகாப்பு மிக்க ஏரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கத்தீலை சக சிறைக் கைதிகள் கழுத்தை நெரித்துக் கொலைச் செய்ததாக போலீஸ் கூறுகிறது.

சம்பவத்தைக் குறித்து சி.ஐ.டி விசாரணைக்கு மஹராஷ்ட்ரா அரசு உத்தரவிட்டுள்ளது., சிறை சூப்பிரண்ட் எஸ்.பி.கதாப்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

2011 செப்டம்பர் 22-ஆம் தேதி டெல்லி போலீசின் ஸ்பெஷல் பிரிவு இந்திய முஜாஹிதீன் உறுப்பினர் என குற்றம் சாட்டி கத்தீலை கைது செய்தது. தொடர்ந்து புனே பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கும், பெங்களூர் சின்னச்சுவாமி ஸ்டேடிய வழக்கும் இவர் மீது சுமத்தப்பட்டது.

புனேயில் ஸ்ரீமந்த் பக்துஷேத் எல்வாயி விநாயகர் கோயிலுக்கு வெளியே குண்டுவைக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது சுமத்தப்பட்டது.

கொலைக்கான காரணத்தை விசாரித்து வருவதாக போலீஸ் கூறுகிறது. புனே ஏரவாடா சிறையில் அதீத பாதுகாப்பு மிகுந்த சிறையில் வைத்துதான் கத்தீல் கழுத்தை நெரித்துக் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வளவு பாதுகாப்பு மிகுந்த சிறை அறையில் எவ்வாறு இதர கைதிகள் வந்து கத்தீலை கழுத்தை நெரித்துக் கொலைச் செய்தனர்? என்பது குறித்து பலத்த சந்தேகம் நிலவுகிறது.

இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர் என்று கத்தீலை போலீஸ் குற்றம் சாட்டிய பொழுதும் அவருக்கு எதிரான எவ்வித ஆதாரத்தையும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இச்சூழலில் போலீஸார்தாம் இக்கொலையின் பின்னணியில் செயல்பட்டிருக்கலாம் என மனித உரிமை ஆர்வலர்கள் சந்தேகத்தை எழுப்புகின்றனர்.

பீகாரில் தற்பொழுது இந்திய பாதுகாப்பு அதிகாரிகளின் முஸ்லிம் வேட்டை கிராமமாக மாறியுள்ள தர்பாங்கா மாவட்டத்தில் பரஹ் ஸமேலா கிராமத்தைச் சார்ந்தவர்தாம் கத்தீல். இச்சம்பவத்தைக் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்களான மனீஷா சேத்தி, ஷப்னம் ஹாஷ்மி, காலின் கான்ஸால்வ்ஸ், மஹ்தாப் ஆலம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

கத்தீலின் மனைவிக்கு இழப்பீடு வழங்கவும், அவருடைய உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் செலவை அரசு ஏற்றுக்கொள்ளவும் இவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதிக பாதுகாப்பு நிறைந்த சிறைச்சாலையிலும் கா(வி)க்கி உடையில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் கரம் படர்ந்த்துள்ளது என்பதையே இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

Saturday, June 9, 2012

விஜய் நடிக்கும் படத்திற்கு தலைப்பை தேடும் விஜய்!!

மதராஸப்பட்டினம், தெய்வத்திருமகள் புகழ் விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்., இப்படத்திற்கு தலைவன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தின் தலைப்பு மாற்றம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

படத்தின் தலைப்புக்கும், கதைக்கும் பொருத்தம் இல்லை என்றும், இதனால் வேறு ஒரு புதிய தலைப்பை டைரக்டர் விஜய் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே படத்தின் தலைப்பை மாற்றுவது டைரக்டர் விஜய்க்கு சென்டிமென்ட்டும், ஏற்கனவே இவருடைய தெய்வத்திருமகள் படத்திற்கு மூன்று தலைப்பு மாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

Friday, June 8, 2012

நாங்க வல்லர (சாகப்) போகிறோம்!?


புதுடெல்லி: இந்திய திருநாட்டின் தலைநகராம் டெல்லியில் 1,600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள பள்ளியில் ஒரு ஆசிரியர் கூட இல்லாத நிலை உள்ளது என்று தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் மூன்று பள்ளிகளில் ஆசிரியர்கள் இருந்தும் மாணவர்கள் ஒருவர் கூட இல்லாத நிலையும் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதம் மிக மோசமாக இருப்பதாகவும், மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட பிரபலமான திட்டங்கள் சரிவர செயல்படுத்தப்படவில்லை என்றும் சிஏஜி சுட்டிக்காட்டியுள்ளது., ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

லை நகரில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் பாதிக்கும் மேலானவற்றில் வகுப்பறை போதிய எண்ணிக்கையில் இல்லை என்றும், கட்டுமானப் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுகின்றன என்றும் துறை ரீதியான உள் ஆய்வு மிகவும் மெத்தனமாக காலதாமதமாக நடைபெறுவதால் பணிகள் உரிய காலத்தில் முடிக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2008-09-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையான காலத்தில் அரசுப் பள்ளிகளின் நிலை குறித்து ஆய்வு செய்த சிஏஜி, ஒரு ஆசிரியருக்கு 276 மாணவர்கள் என்ற விகிதம் இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் கல்வியை கட்டாயமாக்கும் சட்டத்தின்படி ஒரு ஆசிரியருக்கு 40 மாணவர்கள் என்ற விகிதாசாரம் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை அளித்துள்ள தகவலின்படி 3 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியருடன் இயங்குவதாகவும், ஒரு பள்ளியில் 1,676 மாணவர்கள் இருந்தபோதிலும் ஆசிரியர்கள் இல்லை என்றும், 3 பள்ளிகளில் மாணவர்களே இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில் 106 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளும் செய்துதரப்படவில்லை. மொத்தம் ஆய்வு செய்யப்பட்ட 143 பள்ளிகளில் 61 பள்ளிகளில் போதிய எண்ணிக்கையில் வகுப்பறைகளே இல்லை என்றும், 33 பள்ளிகளில் மைதானங்களே இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஏஜி அறிக்கை தில்லி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

டெல்லி உணவுத் துறை செயல்பாடு ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்ட சிஏஜி, உரிய பயனாளிகளைக் கண்டறிய துறை தவறிவிட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்துக்கு 1.57 லட்சம் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டாலும், 56,000 குடும்பங்களே பயனடைந்துள்ளன. ரேஷன் அட்டை விநியோகத்திலும் 332 நாள்கள் வரை தாமதம் ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு 1,36,436 அட்டைகள் தயார்படுத்தப்பட்டபோதிலும் 54,378 அட்டைகள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளன. விநியோகிக்கப்படாத அட்டைகளுக்கு மண்ணெண்ணெய் மற்றும் அரிசி ஆகியவை விநியோகிக்கப்பட்டதையும் சிஏஜி சுட்டிக்காட்டியுள்ளது.

நாங்கள் வல்லரசாகப்போகிறோம் என்று வாய் வார்த்தைகளில் சொல்லாமல் (மாணவர்களின்) இக்கல்வி விஷயங்களில் கொஞ்சம் கவனம் செலுத்தி இவ்விஷயங்களை கலைத்தால் ஒழிய நாம் வல்லர (சாகப்) போவதில்லை.

Thursday, June 7, 2012

ஆகா என்ன பொருத்தம்! விஜய் அஜித்துக்கு என்ன பொருத்தம்?

சென்னை: அஜித், பார்வதி ஓமனக்குட்டன் நடித்துள்ள புதிய படம் பில்லா-2. சக்ரி டோல்ட்டி இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன் என்டர்டெயின்மெட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், அஜித் ரசிகர்களை கவரும் வகையில் பிரமாண்டமாய் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். தற்போது பில்லா-2 படம் சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பில்லா 2 ரிலீஸ் தேதி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இப்போது தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து அறிவித்துள்ளது. அதவாது வரும் ஜூன் 22ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என படதயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் அறிவித்துள்ளார். ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் துப்பாக்கி அஜித் பிறந்த நாள் அன்று ரிலீஸ் ஆகுமோ..?

Wednesday, June 6, 2012

நம் உணவு பழக்கங்களில் உள்ளது ஆயுர்வேதம்!!

ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் பெரும்பாலானவை நம் உணவுப்பொருட்கள் காய்கறி, கீரைகளில் அதிமாக உள்ளது.

ஆதலால், நாம் சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை. முதலில் கீரை வகைகளை பார்க்கலாம்.

கீரைகளை நீரில் நன்றாக கழுவிவிட்டு சமைக்கவேண்டும். பழங்காலத்தில் இரவில் கீரையை சாப்பிடக்கூடாது என்பார்கள். அதற்கு காரணம் இருந்தது. அதாவது கீரைகளில் சிறுசிறு பூச்சிகள் அதிகம். இரவு என்றால் நமக்கு தெரியாது என்பதால் அப்படி சொன்னார்கள். கீரைகள் அனைத்துமே ரத்த விருத்தியை உண்டாக்கும்.

தூதுவளை கீரையை சாப்பிட்டால் இருமல், சளி மாறும். அகத்திக்கீரையை சாப்பிட்டால் கடுப்பு மாறும். கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டால் சுக்ல விருத்தி உண்டாகும். கரி சலாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டால் கண்களுக்கு பலம் கிடைக்கும். சிறுகீரை சாப்பிட்டால் கண்புகைச்சல் குறையும். புதினா சாப்பிட்டால் பசியை தூண்டும். கீழா நெல்லியை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் மறையும்.

இதேபோல் பால் மற்றும் பால் பொருட்களும் நமது உடலுக்கு பலவிதத்தில் பலன் தருகின்றன. பசும்பால் தாதுக்கள் மற்றும் ஆண்மையை அதிகரிக்கும். எருமைப்பால் புத்தியை மந்தம் அடையச்செய்யும். ஆட்டின் பால் சாப்பிட்டால் ரத்தப்போக்கு நோய்கள் குறையும். மோர் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். வெண்ணை ஆண்மையை பெருக்கும். நெய் சாப்பிட்டால் புத்தி, ஞாபக சக்தி, ஆயுள் ஆகியவை அதிகரிக்கும். கரும்புச்சாறு ஆண்மையை உண்டாக்கும். தேன் கண்களுக்கு நல்லது. நல்லெண்ணை குளிர்த் தன்மை உடையது.

நீர் மனிதனுக்கு இன்றியமையாதது. கொதிக்க வைத்து ஆறிய நீர் மிகவும் நல்லது. குழந்தைகள், வாதநோயாளிகள், பத்தியமுள்ளவர்களுக்கு புழுங்கல் அரிசி நல்லது. அவல் பலத்தை அதிகரிக்கும். கோதுமை ஆண்மையை பெருக்கும். வெந்தயம் கசப்பு சுவை உடையது. சீதக்காய்ச் சலுக்கு சிறந்தது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். எள் எலும்புகளுக்கு பலம் தரும். கூந்தலுக்கு வலுவை தரும். இதை சாப்பிட்ட பின் குளிர்ந்த நீரை அருந்த வேண்டும்.

உளுந்து உணவுப் பொருட்களில் சிறந்தது. ஆண்மையை பெருக்கும். பெண்களுக்கு இடுப்புக்கு வலிமை கொடுக்கும். மாதவிலக்கை சீராக்கும். இதை சாப்பிட்டால் உடல் பருக்கும். அதேபோல் சவ்வரிசியும் சுக்லத்தை அதிகரிக்கும்.

பயறு வகைகள் உடலுக்கு நல்லது. தானியங்களில் பயறு சிறந்தது. பாசிப்பயறு நோயாளிகளுக்கு நல்லது. வேர்க்கடலையை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் வளரும், ஆண்மை உண்டாகும். பாதாம் பருப்பு உடலுக்கு புஷ்டியை தந்து, ஆண்மையைப் பெருக்கும். பெருஞ்சீரகம் பசியைத் தூண்டி, வயிற்று நோயை அகற்றும். பெருங்காயம் தேக வாயுவை குறைத்து, வயிற்று நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் அமைகிறது. மஞ்சள் ரத்ததை சுத்திகரிக்கும். புண்களை ஆற்றும். மிளகு இருமல், சளியை குறைக்கும். தினமும் இரண்டு மிளகை சாப்பிட்டால் இருதயநோய் வராது.

சேனைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால் ரத்தமில்லா மூலம் குணமாகும். இஞ்சி வயிற்றை சுத்தம் செய்யும். கத்திரிப் பிஞ்சு வயிற்று வலிக்கு நல்லது. கோவைக்காயை சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் மறையும். அதேபோல் மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமாகும். தேங்காய் குளிர்ச்சித்தன்மை உடையது. தோல் நோய்களைக் குணமாக்கும் சக்தி உண்டு. வெள்ளரிப்பிஞ்சு உடலுக்கு மிகவும் நல்லது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் நமக்கு பயன்படுகின்றன. வாழைப்பூ ரத்த மூலத்திற்கு சிறந்தது. வாழைப்பிஞ்சு சர்க்கரை நோய்க்கு நல்லது. அனைத்து வகை காய்கறிகளும் நமது உடலுக்கு மிகவும் நல்லது.

Tuesday, June 5, 2012

16 வயதிலே! நினைவுக்கு கொண்டுவரும் புதுப்படம்!!

தமிழ் சினிமா வரலாற்றில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி ஆகியோர் இணைந்து நடித்த படங்கள் சக்கை போடு போட்டு புது சகாப்தத்தை ஏற்படுத்திய காலம் உண்டு.

ரசிகர்கள் அவர்களின் கதாபாத்திரங்களை ரொம்பவே ரசித்து கொண்டாடினார்கள். இப்போது மீண்டும் இந்த கூட்டணி பெயரில் ஒரு படம் வெளியாக இருக்கிறது. அந்த படத்தின் பெயர் சகுனி. புதுமுகம் ஷங்கர் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கார்த்தி நாயகனாகவும், ப்ரணீதா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இந்தபடத்தில் கார்த்தி பெயர் ரஜினி, சந்தானம் பெயர் கமல், ப்ரணீதா பெயர் ஸ்ரீதேவியாம். நிச்சயம் இவர்களது கூட்டணியை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று சகுனி படத்தின் மொத்த டீமே நம்புகிறது.

Monday, June 4, 2012

இந்திய ராணுவ உளவுத்துறையில் கரும்புள்ளி கைது?

புதுடில்லி: இந்திய ராணுவத்தின் உளவுத்துறை முக்கிய யூனிட்டில் இருந்து ரகசிய விவகாரங்களை பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ., உளவுத்துறைக்கு விற்க முயற்சித்த தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த ஒருவரை பிடித்து ரகசியமாக விசாரணை நடத்தப்படுகிறது.

ராணுவ உளவுப்பிரிவு யூனிட்டில் தலைமை எழுத்தராக பணியாற்றி வந்தவர் சிவதாசன். இவர் சொந்த மாநிலம் கேரளா. துபையில் உள்ள ஒரு உறவினர் மூலம் பாக்., ஐ.எஸ்.ஐ ஏஜென்ட்டை அணுகியுள்ளார். ரகசிய தகவல்கள் தருவதாக ஒப்புக்கொண்டு பெரும் பணமும் பரிமாற்றம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.

இது உளவு வருவாய்பிரிவு இயக்குனரக அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிவதாசன் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தார். இவரை இன்று அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகின்றனர். இவரிடம் இருந்து சிடி.,க்கள், பென்டிரைவ், மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்பறபட்டுள்ளன. இந்த விசாரணை நடத்தப்படாமல் இருந்திருந்தால் இது பாகிஸ்தானுக்கு சென்றிருக்கும்.

கூடுதல் உளவுத்துறை அதிகாரி கூறும்போது: தொழில்நுட்பம் அனைத்தும் பாகிஸ்தானுக்கு பரிமாற்றம் நடந்திற்குமானால் போர் மூளும் அபாயமும் உண்டு என்றார், மேலும் சிவதாசன் ஆர் எஸ் எஸ்" ன் உறுப்பினர் என்பது குறுப்பிடதக்கது என்றார்.

Sunday, June 3, 2012

உறக்கத்தில் கனவு வரலாம் உறக்கமே கனவாகிவிடுகிறதா?

உறக்கத்தில் வருவது கனவாக இருக்கலாம். ஆனால் சிலருக்கு உறக்கமே கனவாகி விடுகிறது.

என்னதான் படுத்துப் புரண்டாலும் உறக்கம் அவ்வளவு சீக்கிரம் வருவதில்லை என்ற புலம்பும் பலரைக் காணலாம்.

உடலில் சோரோடோனின் மற்றும் மெலடோனின் ஆகிய சுரப்பிகள்தான் உறக்கத்திற்கு உதவுகின்றன. இவை குறைவாக சுரந்தாலோ, சுரப்பது தாமதப்பட்டாலோ உறக்கம் வருவது பாதிக்கப்படுகிறது.

இதற்காக மருந்துகளை எடுத்துக் கொள்வதை விட உணவுப் பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள்., இரவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய சில உணவுப் பொருட்களைப் பார்க்கலாம்.

உணவு சாப்பிட்டு 1 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான பால் அருந்தலாம். இரவு உணவில் கோதுமையால் ஆன உணவுப் பொருட்களை சாப்பிடலாம்.

ஜீரணத்திற்கு கடினமான உணவுப் பொருட்களை தவிர்த்துவிட்டு காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.

கார்போஹைட்ரேட் அதிகம் கொண்ட உணவுகளை தேர்வு செய்து சாப்பிடலாம். சாப்பிட்டு முடித்து ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் தூக்கம் எளிதாக வரும்.

Saturday, June 2, 2012

முதல் மூன்று இடங்கள் அமெரிக்க வாழ் இந்திய மாணவர்கள்!!

நியூயார்க்: அமெரிக்காவில் எழுத்து கூட்டு போட்டி (`ஸ்பெல்லிங்' போட்டி) பிரபலமானது. இந்த ஆண்டு நடந்த போட்டியில் அமெரிக்க வாழ் இந்திய மாணவர்கள் முதல் 3 இடங்களை கைப்பற்றி அபார சாதனை படைத்துள்ளனர்.

கலிபோர்னியா மாகாணத்தில் 8-வது கிரேடு படித்து வரும் 14 வயது மாணவி சினிக்தா நந்திபதி, ஒரு பிரெஞ்சு வார்த்தையை சரியாக எழுத்துக்கூட்டி எழுதி தேசிய சாம்பியன் பட்டம் (முதலிடம்) கைப்பற்றினார்.

இதற்காக இவருக்கு ரூ.221/2 லட்சம் மதிப்பிலான பரிசு, கல்வி ஊக்கத்தொகை உள்ளிட்டவை வழங்கப்படும். இரண்டாம் இடம், புளோரிடாவில் படித்து வரும் 14 வயது ஸ்டுதி மிஷ்ராவுக்கும், மூன்றாம் இடம் நியூயார்க்கில் படித்து வருகிற 12 வயது அரவிந்த் மகாம்களி என்பவருக்கும் கிடை த்துள்ளது.

தேசிய அளவில் 278 பேர் கலந்து கொண்ட போட்டியில் இந்த 3 பேரும் சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Friday, June 1, 2012

செல்போன் ரோமிங் கட்டணத்துக்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு!

புதுடெல்லி: இந்தியா முழுவதும் செல்போன் ரோமிங் கட்டணம் ரத்து செய்யும் வழிமுறைகளைக் கொண்ட புதிய தொலை தொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி, இந்தியாவின் எந்த மாநிலத்துக்கு சென்றாலும் இனி ரோமிங் கட்டணம் கிடையாது. வேறு மாநிலத்திற்கு சென்றாலும் அதே செல்போன் எண்ணை வைத்து கொள்ள அனுமதி அளிக்கப்படும்.

தேசிய தொலைதொடர்பு கொள்கை 2012 என்ற இப்புதிய கொள்கைக்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. செல்போன் சேவைகளை எளிமைப் படுத்தும் விதமாகவும், வாடிக்கையாளர்களுக்கு தகுந்தாற்போல தரமான சேவைகளை வழங்குவதையும் இப்புதிய கொள்கை உறுதி செய்கிறது என்று அமைச்சர் கபில் சிபல் ஒருவர் கூறினார்.

தற்போதுள்ள நிலவரப்படி தமிழகத்தை சேர்ந்த செல்போன் சந்தாதாரர் பிற மாநிலங்களுக்கு செல்லும் போது வரும் அழைப்புகளுக்கு ரோமிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வேறு மாநிலத்திற்கு சென்றால், அங்கு ‘மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி’ எனப்படும் ஒரு நெட்வொர்க்கிலிருந்து வேறு நெட்வொர்க்கிற்கு மாறும் போது அதே செல்போன் எண்ணை தரமாட்டார்கள். இந்த நிலை, புதிய தொலை தொடர்புக் கொள்கையின் மூலம் மாற இருக்கிறது.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!