Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, May 31, 2012

தமிழகத்தை விட்டு ஓட்டம் பிடித்த காதலில் சொதப்புவது எப்படி நடிகை

சமீபத்தில் வெளியான "காதலில் சொதப்புவது எப்படி' என்ற படத்திலும் சிறிய வேடம் கிடைத்தது. இதையடுத்து, பெரிய நடிகையாகி விட்டோம் என்ற மிதப்பில், பேஸ்புக்கில் தமிழர்களையும், தமிழகத்தையும் தரக்குறைவாக எழுதினார் நடிகை தன்யா.

சென்னை மக்களை பிச்சைக்காரர்கள்' என்ற ரீதியில் அவரது கருத்து அமைந்திருந்தது. கர்நாடகா விடம் காவிரி தண்ணீர், மின்சாரம் தருமாறு தமிழகம் பிச்சை கேட்டது என விமர்சித்து பேஸ்புக்கில் எழுதியிருந்தார்.

தமிழ் சினிமாக்களில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கேட்டு முகாமிட்டிருந்த அவரது கருத்துக்களைப் படித்த தமிழகத்தைச் சேர்ந்த பலரும், பேஸ்புக்கில் நடிகை தன்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத தன்யா, பயந்து போய், பேஸ்புக்கில் மன்னிப்பு கோரினார்.

இனிமேலும் தமிழகத்தில் இருந்தால் பிரச்னை ஏற்படும் என்று பயந்து போய், இரவோடு இரவாக சென்னையிலிருந்து கிளம்பி பெங்களூருவுக்கு தப்பி ஓட்டம் பிடித்தார். பெங்களூரு வந்த பின், இனிமேல் நான் தமிழ்ப் படத்தில் நடிக்க மாட்டேன். தமிழ் சினிமா உலகை விட்டு விலகுகிறேன். தமிழ்ப் படங்களில் நடிப்பதற்கு போடப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்கிறேன். சென்னைக்கு செல்ல மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையறிந்த பெங்களூருவைச் சேர்ந்த சில தமிழ் அமைப்புகள், நடிகை தன்யா வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக கருத்து தெரிவித்துள்ளன. இதை கேள்விப்பட்ட அவர், போலீசிடம் பாதுகாப்பு கேட்க முடிவு செய்துள்ளார்.

இது குறித்து தமிழ் அமைப்புகள், ‘’தமிழகம், காவிரி நதி நீரில் தனக்குரிய பங்கைத் தான் கேட்கிறதே தவிர, பிச்சை கேட்கவில்லை. இது தெரியாமல், காவிரி நீரை தமிழகம் பிச்சை கேட்கிறது' என்று கூறியிருப்பது தமிழர்களிடையேயும், தமிழ் அமைப்புகளிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் எந்த காலகட்டத்திலும் கர்நாடகாவிடம் மின்சாரம் கேட்டதில்லை. தமிழகத்திலுள்ள நெய்வேலி அனல் மின்சார நிலையத்திலிருந்து கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவுபடி மின்சாரம் வழங்கி வருகிறது
.
பெங்களூருவில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் போது, கர்நாடக அணி இரண்டாவது இடத்துக்கு வந்த போது, அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முரண்டு பிடித்தனர். அவர்களிடம் எங்களுக்கு விட்டுக் கொடுங்கள் என்று தமிழக அணி கெஞ்சவில்லை.

இது போன்று உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறியுள்ளது, அவரது ஆணவத்தைக் காட்டுகிறது.இனிமேல், தமிழ் சினிமா படங்களில் அவருக்கு வாய்ப்பு அளிக்கக் கூடாது என, தமிழ் திரைப்பட உலகமும் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த தன்யா, பெங்களூருக்கு ஓடினார். அதை மூடி மறைக்கவே, தமிழகத்துக்கு செல்ல மாட்டேன், தமிழ்ப் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்’’ என்கின்றனர்.

Wednesday, May 30, 2012

சி பி எஸ் இ தேர்வில் சாதனை! இந்தியாவிலே முதலிடம்!!

இம்பால்: மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ)-2012 ஆம் ஆண்டிற்கான 12-வகுப்பு தேர்வில் இந்தியாவிலேயே முதலிடத்தை மணிப்பூரைச் சார்ந்த முஸ்லிம் மாணவன் முஹம்மது இஸ்மத் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

வடகிழக்கு மாநிலத்தில் இருந்து ஒரு மாணவர் இந்திய அளவிலான சி.பி.எஸ்.இ 12-ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெறுவது இதுவே முதன் முறையாகும்.

முஹம்மது இஸ்மத் சி.பி.எஸ்.இ +2 தேர்வில் 500க்கு 495 மதிப்பெண்களை (99.6%) பெற்றுள்ளார். இவர் மணிப்பூர் மாநிலம் தவ்பால் மாவட்டத்தில் லிலாங்கில் Haoreibi MayaiLeikai என்ற ஊரைச் சார்ந்தவர். இவரது தந்தை மவ்லானா பஸீருர் ரஹ்மான் ப்ரமைரி மதரஸா ஆசிரியர் ஆவார். தாயார் இஸ்மத்தின் சிறுவயதிலேயே மரணமடைந்துவிட்டார்.

7 சகோதரிகளை கொண்ட இஸ்மத் குடும்பத்தில் கடைசி நபர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தபோதும் இஸ்மத் படிப்பில் கெட்டிக்காரர். இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா?இவர் வசிக்கும் கிராமத்தில் தினமும் 2 அல்லது 3 மணிநேரமே மின்சாரம் இருக்கும். இதனால் அவர் தனது பெரும் பகுதி நேரத்தை பள்ளிக்கூடத்திலேயே கழிப்பார். தினமும் 8 to 10 மணிநேரம் படிப்பார்.

இவர் ஸெனித் அகாடமியில் பயின்று வந்தார். இஸ்மத்துக்கு +2 பயிலத் துவங்கும் பொழுது ரெஜிஸ்ட்ரேசன் ஃபீஸ் கட்ட இயலாத சூழல் இருந்தது அவரது நிலைமையை புரிந்துகொண்ட ஸெனித் அகாடமியின் செயலாளர் எஸ்.எம்.சிங், கட்டணத்தை செலுத்தியுள்ளார். மேலும் அவருக்கு படிப்பதற்கு தேவையான பொருட்களையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இஸ்மத் உடல்ரீதியாக பலவீனமானவர் என்பதால் நீண்ட படிப்பதையும் அவர் கைவிடும் சூழல் உருவானதாக எஸ்.எம்.சிங் கூறுகிறார்.

இவரது தந்தை கூறுகையில்,இஸ்மத்தின் பலவீனமான உடல்நிலையும், பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையும் கல்வி கற்க தடைக் கற்களாகும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர், தனது மகன் இத்தகைய தடைகளை தாண்டி வெற்றியை ஈட்டியுள்ளதற்கு உதவிய அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதாக கூறினார்.

இஸ்மத் டெல்லியில் உள்ள ஸ்டீஃபன் கல்லூரியில் பயில விரும்புகிறார். இயற்பியல்(பிசிக்ஸ்) பாடத்தை பயின்று விஞ்ஞானியாக மாறவேண்டும் என்பதே இஸ்மத்தின் நோக்கமாகும். மேலும் பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்த பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதவேண்டும் என்பதும் அவரது ஆர்வமாகும்.

ஸெனித் அகாடமி அவரது அடுத்த கட்ட படிப்பிற்கான அனைத்து பொருளாதார உதவிகளையும் அளிப்பதாக தெரிவித்துள்ளது. லிலாங் தொகுதி எம்.எல்.ஏவும் மாநில விவசாய அமைச்சருமான முஹம்மது அப்துல் நாஸிர் ரூ.1,11,111 பரிசுத் தொகையை அறிவித்துள்ளார்.

இஸ்மத் தனது வெற்றியின் சூத்திரமாக கூறுவது என்னவெனில், “ஒருவர் தனது ஆசையை கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நோக்கி அவரது நடவடிக்கைகள் அமையவேண்டும். ஆடம்பரமாக நவநாகரீகமாக வாழ்வதை விட எளிமையாக வாழ்வதிலும், அதிகமாக சிந்திப்பதிலும் ஒருவர் கவனம் செலுத்தவேண்டும். ஒரு மனிதன் தீர்மானித்து செயல்பட்டால் எல்லாம் சாத்தியமே.” என்றார்.!

Tuesday, May 29, 2012

உலக சந்தையில் உடல் (HUMAN) உறுப்புகள்! உலக சகாதார நிறுவனம்!?

உலகம் முழுவதும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மனிதனின் ஒவ்வொரு உறுப்பு விற்கப்படுகிறது. அதிலும் மனிதனின் சிறுநீரகம் கள்ளச் சந்தையில் அமோகமாக விற்பனையாகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

கள்ளச் சந்தையில் சிறுநீரக விற்பனைதான் அமோகமாக லாபத்தைப் பெற்றுத் தருவதாக உடல் உறுப்புகளை விற்பத்ற்கு என்றே உள்ள வியாபாரிகள் கூறுவதாக அந்த ஆய்வு கூறுகிறது. மாற்று சிறுநீரகம் தேவைப்படுவோரிடம் ரூ1,28,500 ரூபாய்க்கு விலை பேசிவிட்டு, வறுமையின் காரணமாகவோ அல்லது பொருளாதார தேவைக்காகவோ சிறுநீரக தானம் செய்வோரிடம் 3,200 ரூபாய் தரப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

சிறுநீரகத் தேவையும் அதிகரித்துள்ளது. அதேபோல், கள்ளச் சந்தையில் அதன் லாபமும் அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த டாக்டர் லியூ நோயல் கூறுகிறார்.

Monday, May 28, 2012

கோடை காலத்தில் உடலை குளிர்விக்க இதோ டிப்ஸ்!!

கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது.

அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும். இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.

வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த கொதிப்பு மற்றும் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

மேலும் வெந்தயத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், எடை அதிகரிக்க வழி இல்லை மற்றும் உடலில் கலொரி குறைவாக இருந்தாலும் எடை அதிகரிக்காது. இரவில் ஒரு ஸ்பூன் வெந்தய விதையை நீரில் ஊற வைத்து, காலையில் சுடு தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுப்பொருளை வெளியேற்றுவதோடு, உடல் எடையையும் குறைக்கும்.

வெந்தய விதையை சாதாரண தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதோடு, ஜீரண சக்தியும் கூடும்.

Saturday, May 26, 2012

விஜய் மீது ஏன் இந்த கொலவெறி...!?

"துப்பாக்கி" திரைப்படத்தின் இந்த விளம்பரத்தில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி பெரிய அளவிலும், முதன்மையாகவும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு புகைப்பிடிக்கும் காட்சி விளம்பரங்களில் இடம் பெற்றுள்ளது இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட இயக்குநர்கள் சங்கம், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், மத்திய திரைப்பட தணிக்கைக்குழு என திரைப்படம் தொடர்பான அனைத்து அமைப்புகளுக்கும் 29.11.2011 அன்று தமிழ்நாடு அரசின் பொதுச் சுகாதாரத்துறை எழுதிய கடிதத்தில்

திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்தும் நடுவண் அரசாணை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.26-03-2012 அன்று கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்தும் நடுவண் அரசாணையை
செயல்படுத்த உத்தரவிடப் பட்டுள்ளது.

இந்நிலையில் பசுமைத்தாயகத்தின் மாநில தலைவர் சௌமியா அன்புமணி கொடுத்துள்ள புகாரில் “ இவ்வாறாக, நடுவண் அரசு, தமிழ்நாடு அரசு, மத்திய திரைப்பட தணிக்கைத் துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அதிகார அமைப்புகளும் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை

கட்டுப்படுத்தும் நடுவண் அரசாணையை செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், விளம்பரங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவது சட்டப்படிக் குறறம் என்கிற உண்மையை அறிந்த பின்னரும், ‘துப்பாக்கி’ திரைப்படத்தின் விளம்பரத்தில் புகைபிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது

அதிர்ச்சி அளிக்கிறது. எனவே ‘துப்பாக்கி’ திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தரும், இயக்குநரும், நடிகரும் இத்திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறாமல் தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய அரசு புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தினை முழுமையாக பின்பற்ற வேண்டும்

என்றும் பசுமைத் தாயகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார். அஜித் நடித்த அசல் படத்திலும் இதேபோல் புகையிலை பயன்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அஜித் படத்திற்கு வராத பிரச்சனை விஜய் நடித்துள்ள படத்திற்கு வந்துள்ளது.

அஜித்தை கண்டுகொள்ளாத சட்ட பிரச்சனை, விஜய் மீது மட்டும் ஏன் இந்த கொலவெறி....? (படத்திலிருந்து சிகரெட் பிடிக்கும் காட்சியை நீக்கிய இயக்குனர் நடிகர் மற்றும் தயாரிப்பாளருக்கு ஒரு "ஒ" போடுவோம்)

Thursday, May 24, 2012

குரு குலத்தில் குமரிகளுடன் கும்மாளம்!!


ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள மாவடி கிராமத்தில் உள்ள பிரபல சுவாமி நாராயண் குருகுலத்தில், ஒரு பெண்ணுடன் பூட்டிய அறைக்குள் இருந்த 32 வயது துறவியை போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர்.

சுவாமி நாராயண் என்ற மதப் பிரிவைச் சேர்ந்த ஆனந்த் சொரூப்தாஸ் குரு குலம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த மதப் பிரிவின் விதிப்படி பெண்களின் முகத்தை சாமியார்கள் நேருக்கு நேர் பார்க்கக் கூடாதாம். மேலும் பெண்களை தனிமையிலும் சந்திக்கக் கூடாதாம். ஆனால் அதையெல்லாம் காற்றில் பறக்க விட்ட ஆனந்த் சொரூப்தாஸ் உபதேசமெல்லாம் மக்களுக்குத்தாம் தனக்கு இல்லை என நிரூபித்துள்ளார்.

நேற்று இரவு ஆனந்த் சொரூப்தாஸ் ஒரு இளம் பெண்ணுடன் தனது அறையில் தனிமையில் இருப்பதாக மாள்வியா நகர் காவல் நிலையத்திற்கு ரமேஷ் பாய் என்பவர் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர்.

சாமியாரின் கதவைத் தட்டி திறக்கச் செய்தனர். அப்போது உள்ளேயிருந்து தாஸும், 26 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணும் வெளியே வந்தனர். இருவரையும் போலீஸார் அங்கிருந்து அழைத்துச் சென்றபோது குருகுலத்து மாணவர்களும், சீடர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து சாமியாரையும், அந்தப் பெண்ணையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

சம்பந்தப்பட்ட பெண் கம்ப்யூட்டர் ஆசிரியையாம். குருகுலத்தில் பணியாற்றி வருகிறார். இருவரையும் கைது செய்த போலீஸார், குருகுலத்தில் பியூனாக பணியாற்றி வரும் ஜிதேந்திர தொபாரியா என்பவரையும் கைது செய்தனர்.

சாமியார் மற்றும் மற்ற இருவர் மீதும் மக்களின் மத நம்பிக்கையை பாதித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கீழ் உள்ள லிங்(கம்)கை காப்பி பேஸ்ட் செய்து பாருங்கள். முதல்வரின் கேடித்தனம்.
http://dinaex.blogspot.com/2012/11/blog-post_5.html

Wednesday, May 23, 2012

யு எஸ் திரைப்பட விழாவுக்கு பாரம்பரிய உடை! ஐஸ்வர்யா!!

3 படம் மூலம் இயக்குநராக அவதரித்தவர் ஐஸ்வர்யா தனுஷ். இப்படத்தின் நாயகனாக தனது கணவர் தனுஷை நடிக்க வைத்தார். நாயகியாக கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் நடித்தார்.

இப்படம் வெளியாவதற்கு முன்பு இப்படத்தில் உள்ள ஒய்திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுக்க பிரபலமாகி பட்டிதொட்டியெல்லாம் பரவியது. இதனால் இந்தபடத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டானது. சமீபத்தில் வெளியான இப்படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் நியூயார்க் திரைப்பட விழாவில் பங்கேற்க இருக்கிறது. இதற்காக ஆயத்தமாகி வருகிறார் ஐஸ்வர்யா.

இதுகுறித்து 3 படத்தின் டைரக்டரும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா கூறுகையில், என்னுடைய முதல்படமே சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க இருக்கிறது என்று எண்ணும்போது ரொம்ப பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்தவிழாவில் பங்கேற்பதற்காக நான் நம்ம நாட்டு பாரம்பரிய உடையில் செல்ல இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Tuesday, May 22, 2012

+2 வில் நமக்கல்கே முதலிடம் அதிலும் மாணவியே!!

சென்னை: ப்ளஸ்-2 தேர்வு முடிவு சற்று முன் வெளியிடப்பட்டது. மொத்த தேர்ச்சி விகிதம் 86 சதவிகிதம் என்றும், இதில் மாணவிகள் 89.7 சதவீதம் ,மாணவர்கள் 83.2 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாணவி 1189 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

இவர் இயற்பியல்,வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் ஆகிய 4 பாடங்களில் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்று இந்த சாதனையை புரிந்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக 1188 மதிப்பெண்களை பெற்று அதே நாமக்கல் பகுதியை சேர்ந்த கார்த்திகா ,அசோக் குமார் மற்றும் மணிகண்டன் ஆகியோர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.

மூன்றாம் இடத்தை 1187 மதிப்பெண்கள் பெற்று மூன்று பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

முதல் மூன்று இடங்கள் மட்டுமல்லாது, நான்காவது இடத்தையும் நாமக்கல் பகுதிகளை சேர்ந்தவர்களே பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,.

கணித பாடத்தில் 2,656 பேர் 200 க்கு 200 மதிப்பெண்கள் பிடித்துள்ளனர்.

Monday, May 21, 2012

அதிகமானோர் பார்வையிடும் 2வது இணையதளம் வரலாறு படைத்துள்ளது!

வாஷிங்டன்: உலகின் அதிகமானோர் பார்வையிடும் 2-வது இணையதளமான ஃபேஸ்புக் 10,400 கோடி டாலர் மதிப்பீடு கணக்கிட்டு உலகின் மிகப்பெரிய இணையதள சமூக நெட்வர்க் பங்கு சந்தையில் வரலாறு படைத்துள்ளது. ஒரு பங்கின் விலை 38 டாலர்.

பங்கு சந்தையின் தேவையை முன்னிட்டு முன்னர் திட்டமிட்டதை விட 25 சதவீதம் அதிகமாக பங்குகள் விற்பனையாகும் என கருதுவதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. ஆனால், ஃபேஸ்புக்கால் லாபத்தை உருவாக்கும் திறமை உள்ளதா? என்பது குறித்து பொருளாதார வல்லுநர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

42.1 கோடி பங்குகளை பங்குச் சந்தையில் ஃபேஸ்புக் அறிமுகப்படுத்துகிறது. 2004-ஆம் ஆண்டு மார்க் ஸுக்கர்பர்க் ஹாவர்ட் பல்கலைக்கழக கேம்பஸில் துவக்கிய ஃபேஸ்புக்கின் வளர்ச்சி அதிவேகமாக மாறியது. எட்டு வருடங்கள் கழிந்தபிறகு சிலிக்கன் வேலியை தலைமையகமாக கொண்டு செயல்படும் ஃபேஸ்புக் உலகின் அதிகமானோர் பார்வையிடும் 2-வது இணையதளமாகும்.

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னிக் ஃபேஸ்புக்கின் பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். ஃபேஸ்புக்கின் முக்கிய வருமானமே விளம்பரங்களாகும். 90 கோடி பயனீட்டாளர்களை கொண்ட இணையதளமான ஃபேஸ்புக், பணத்தை சம்பாதிக்க புதிய வழிகளை தேடும் என்று முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.

Sunday, May 20, 2012

தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு சென்ற குஜராத் காதலி!!

புதுடெல்லி: தமிழகத்தை குஜராத்தாக மாற்றுவோம் என்று தன் காதலன் மோடியை புகழும் இந்த கர்நாடக காதலி ஜெயலலிதா அடிக்கடி சொன்னதையே சொல்லிக்கொண்டு அலைகிறார். (குஜராத்தை இனப்படுகொலையில் முதல் மாநிலமாக்கினான் மோடி, அதே வழியில் மாணவர்களை பள்ளியில் கல்வி கற்பதற்கு பதிலாக காதல்வழியில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றினார் ஜெயா., இதில் சாமியார்களும் அடங்கும்.)

தமிழகம் முதலிடம்: பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு பாலியல் தொல்லைகள் உள்பட பல்வேறு தொல்லைகள் தரப்படுவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

மாநிலங்களவையில் நேற்று (வெள்ளிக்கிழமை) கேள்வி நேரத்தில் பதில் அளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் இ.அஹ்மத் இதுத்தொடர்பான விபரங்களை வெளியிட்டார்.

பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்குப் பாலியல் தொல்லைகள் உள்பட பல்வேறு தொல்லைகள் தரப்படுவதாக தமிழ்நாட்டிலிருந்துதான் 115 புகார்கள் 2012 மட்டும்,‘தேசிய குழந்தை நல உரிமைகள் பாதுகாப்பு கமிஷன்’ (என்.சி.பி.சி.ஆர்.) என்ற அமைப்புக்கு வந்துள்ளது.

மாணவ மாணவிகளை அடிப்பது, அலைக்கழிப்பது, அவமானப்படுத்துவது, பாலியல் ரீதியாகத் தொல்லை தருவது ஆகியவை தொடர்பானவை இந்தப் புகார்கள். மொத்தம் 570 புகார்கள் வந்தன. தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக தில்லியிலிருந்து 105 புகார்கள் வந்துள்ளன. ஆந்திரத்திலிருந்து 43 புகார்கள் வந்துள்ளன என்று இ.அஹ்மத் கூறினார்.

Friday, May 18, 2012

விஜய்யின் துப்பாக்கி செய்தியால் மிரண்ட சரத்!!

விஜய் நடிக்கும் துப்பாக்கிப் படத்தில் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால் அதில் உண்மையில்லை என்று சரத்குமார் மறுத்துள்ளார். இதுவரை துப்பாக்கிப் படக்குழுவைச் சேர்ந்த யாருமே என்னிடம் தொடர்பு கொண்டு பேசவில்லை. அப்படத்தில் நான் நடிப்பதாக வந்த செய்தியைப் பார்த்து நானே அசந்து போய்விட்டேன். அதில் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.

தற்போது கோச்சடையான், விடியல் மற்றும் மலையாளம், கன்னடப் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் சரத், விடியல் படப்பிடிப்பு ஸ்நேகாவிற்காக தள்ளிப்போடப்பட்டுள்ளது. அவர் வந்ததும் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறியுள்ளார்.

Thursday, May 17, 2012

குடிமகனுக்கு ஊத்திக்கொடுத்த பெருமை ஜெயாவுக்கு! கலைஞர்!!

சென்னை: ஜெயலலிதாவின் ஆட்சியில், மது விற்பனையை அதிகரித்தது தான் ஓராண்டு சாதனை,'' என்று, கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதாவின் ஓராண்டு ஆட்சியில், பழிவாங்கும் செயல், மக்களை அல்லல்படுத்தி கொடுமைப்படுத்தும் நடவடிக்கைகள், புதுப்புது ரகங்களை விளம்பரப்படுத்தி, மது விற்பனையை அதிகப்படுத்தியிருப்பது சாதனை. இவை அனைத்திற்கும் மேலாக, தமிழகத்தை இருண்டு போகச் செய்யும் அளவுக்கு, முன்னுக்குப்பின் முரணாக போராட்டத்தை, கூடங்குளத்தில் முதலில் தூண்டிவிட்டு, பிறகு அதை அடக்குவது போல் அடக்கி, தேவையில்லாமல் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது போன்ற செயல்களை, விரிவாக பிறகு எழுதுகிறேன்.

ஆடம்பரம் இல்லையா? அனைத்து பத்திரிகைகளிலும், முதல் நான்கு பக்கங்களுக்கு விளம்பரங்கள், கோட்டை வாயிலில், சட்டசபை வளாகத்தில் யானை, குதிரை, ஒட்டகம் வரவேற்க, செண்டை மேள, தாளங்கள் முழங்க, முதல்வருக்கு வரவேற்பு. இதெல்லாம் ஆடம்பரம் இல்லை என்றால், ஆடம்பரம் இல்லாத நிகழ்ச்சி தான் எது.

விதி 110க்கு வாழ்வு: தி.மு.க., ஆட்சியில் வைக்கப்பட்டிருந்த பெயரை, "தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுனர்கள் நல வாரியம்' என்று மாற்றி, முதல்வர் அறிவித்துள்ளார். இதற்காக முதல்வர் பெயரில், 110வது விதியின் கீழ் ஒரு அறிக்கை. அதற்கு ஒரு பாராட்டு. இந்த கூட்டத்தொடரில் மட்டும், விதி 110ன் கீழ் முதல்வர் படித்த அறிக்கைகளின் எண்ணிக்கை 39. மற்ற அமைச்சர்கள் இந்த விதியின் கீழ், படித்த அறிக்கைகளின் எண்ணிக்கை 0. இதற்கு முன் எந்த ஆட்சியிலும் இந்த அளவிற்கு, விதி 110ன் கீழ் முதல்வர்கள் அறிக்கை படித்ததில்லை. விதி 110க்கு, இந்த ஆட்சியில் வந்த வாழ்வு இது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Wednesday, May 16, 2012

ஐபாட் ஐபேட் உலகின் முடிசூட மன்னன் வெண் திரையில்!

கம்ப்யூட்டர் உலகில் மட்டுமின்றி ஐபாட், ஐபேட் உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவராவார்.

இவர் கடுமையான உழைப்பாளியாக இருந்தது மட்டுமின்றி புதுமையான சிந்தனைகளை கொண்டவராக இருந்தார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி புற்றுநோயால் இறந்து போனார்.

இவரின் வாழ்க்கை வரலாறு குறித்து புத்தகம் வெளிவந்திருக்கிறது. ஆனால் இவரைப்பற்றி எந்த ஒரு சினிமாவும் வெளிவந்ததில்லை. தற்போது ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாறு ஹாலிவுட்டில் படமாக்கப்பட இருக்கிறது.

'ஸ்டீவ் ஜாப்ஸ்' என்ற பெயரில் கடந்த 2011-ம் ஆண்டு வால்டர் ஐசக்சன் என்பவர், ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி வெளியிட்டார். இப்புத்தகம் விற்பனையில் சாதனை படைத்தது. இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்த ஹாலிவுட் படம் உருவாக இருக்கிறது.

இப்படத்தை சோனி பிக்சர்ஸ் எண்டெர்டெயிண்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தினை ஆஸ்கார் விருதுபெற்ற திரைக்கதையாசிரியரான ஆரோன் சோர்க்கின் எழுதி இயக்குவார் எனத் தெரிகிறது.

இவர் கடந்த ஆண்டு வெளியான 'தி சோஷியல் நெட்வொர்க்' என்ற ஆங்கில படத்திற்கு திரைக்கதை எழுதியமைக்காக ஆஸ்கார் விருது பெற்றிருக்கிறார். அதுமட்டுமின்றி 2012-ம் ஆண்டு 'மணிபால்' என்ற ஆங்கிலப்படத்திற்கு திரைக்கதை எழுதியமைக்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tuesday, May 15, 2012

புதிய சாதனை ஏற்படுத்திய ரியல் மாட்ரிட்!!

மாண்ரிட்: லா லிகா கால்பந்து போட்டியில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றதோடு, 100 புள்ளிகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது ரியல் மாட்ரிட் (REAL MADRID) அணி.

ஸ்பெயினில் நடைபெற்ற LA LIGA கால்பந்துப் போட்டியின் இறுதிகட்ட ஆட்டம் ஒன்றில், ஏற்கனவே சாம்பியன் பட்டத்தை தனதாக்கிய ரியல் மாட்ரிட்(REAL MADRID) அணி, மால்லோர்கா (MALLORCA) அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ரியல் மாட்ரிட்(REAL MADRID) அணி, 4-க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 100 புள்ளிகளை பெற்றது. லா லிகா LA LIGA தொடரில் 100 புள்ளிகளை வென்ற அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது ரியல் மாட்ரிட்(REAL MADRID) அணி. ஸ்பெயினின் 20 உள்ளூர் அணிகள் பங்கேற்ற லா லிகா(LA LIGA) கால்பந்துப் போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெற்று வந்தது. நான்கு ஆண்டுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றுள்ள ரியல் மாட்ரிட்(REAL MADRID) அணிக்கு, இது 32-வது சாம்பியன் பட்டமாகும்.

Monday, May 14, 2012

அங்க அழகுக்காக ஹன்சிகா அமெரிக்கா பயணம்!

மாப்பிள்ளை படம்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கொழுக் மொழுக் நடிகை ஹன்சிகா. தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களில் நடித்த ஹன்சிகா இப்போது, சிம்புவின் வேட்டை மன்னன், வாலு படங்களிலும், சிங்கம்-2 விலும் நடித்து வருகிறார்.

சின்ன குஷ்பு என்று வர்ணிக்கப்படும் ஹன்சிகாவுக்கு ஒரு கவலை. அதாவது சமீபகாலமாக தனது உடல் எடை அதிகரித்து வருகிறது என்பது தான். ஸ்லிம் நடிகைகளுக்கு மத்தியில் குண்டான தனது உடம்பால் வாய்ப்புகள் பறிபோய்விடும் என்று பதறிய ஹன்சிகா, தனது உடல் எடையை குறைக்க முடிவெடுத்து இருக்கிறார்.

இதற்காக அவர் அமெரிக்கா பறந்து இருப்பதாக கூறப்படுகிறது. இனி யாரும் தன்னை கொழுக் மொழுக் நடிகை என்று கூப்பிடாத அளவுக்கு தனது எடையை குறைத்து திரும்ப இருக்கிறாராம்., விரைவில் ‌கொழுக் மொழுக் ஹன்சிகா, ஸ்லிம் ஹன்சிகாவாக திரும்பி வர இருக்கிறார்.

Sunday, May 13, 2012

பாலியல் தொந்தரவுக்கு பாதுகாப்பு அளிக்க வருகிறது புது மசோதா!

புதுடெல்லி: வேலைப்பார்க்கும் இடங்களில் பெண்கள் நேரிடும் பாலியல் கொடுமைகளுக்கு எதிரான மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வேலைப்பார்க்கும் பெண்கள் தவிர மகளிர் நுகர்வோர், மாணவிகள், மகளிர் ஆய்வாளர்கள் ஆகியோருக்கும் பாதுகாப்பு அளிக்கும் பிரிவுகள் இம்மசோதாவில் இணைக்கப்பட்டுள்ளன.

இம்மசோதாவின் அடிப்படையில் அலுவலகங்கள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வேலைப்பார்க்கும் இடங்களிலும் பாலியல் கொடுமை தொடர்பான புகார்களை பதிவுச் செய்யவும், தீர்வு காணவும் சிறப்பு குழு உருவாக்கப்பட வேண்டும் என்று மசோதா கூறுகிறது.

Saturday, May 12, 2012

தல வந்து தலையை காப்பாத்துவரா! ஆஸ்கார் ரவிச்சந்திரன்?

அஜித் நடித்துள்ள பில்லா 2 படத்தின் இசை அஜித்தின் பிறந்தநாளான மே-1ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் படம் எப்போது ரிலீஸ் எப்போது என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.

பில்லா 2 படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை 28 கோடி ரூபாய் கொடுத்து ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் வாங்கியுள்ளார். கடைசியாக ரவிச்சந்திரன் விஜய் நடித்த வேலாயுதம் படத்தை தயாரித்து நஷ்டம் அடைந்தார்.

அதைத் தொடர்ந்து இப்போது இவ்வளவு பெரிய தொகை கொடுத்து பில்லா 2 படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருப்பதால், விஜய்யின் ‘காவலன்’ விநியோக உரிமையை வாங்கியது... விஜய்யை வைத்து ‘வேலாயுதம்’ படம் எடுத்தது... என நஷ்டம் மேல் நஷ்பட்டிருக்கும் ரவியின் தலையை ‘தல’ காப்பாத்துமா?

Friday, May 11, 2012

குண்டும் குழிக்கும் கூடுதல் கட்டணமும்?

புதுடெல்லி: குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகளுக்கு எதற்கு சுங்க கட்டணம்(டோல் ஃபீஸ்) வசூலிக்கப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் டோல் ஃபீஸ் குறித்து பொது நல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தது. இவ்வழக்கு நீதிபதிகள் டி.கே.ஜெயின் மற்றும் அனில் ஆர்.தேவ் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்பாக நேற்று(புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது நீதிபதிகள் கூறியது: “எந்த அடிப்படையில், எதற்காக இந்த சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது, இது எவ்வளவு காலத்துக்கு வசூலிக்கப்படும் என்ற விவரங்களை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்; அது கட்டுமான நிறுவனத்துக்கும், குத்தகைதாரர்களுக்கும் மட்டும் உரியது என்று இருத்தல் கூடாது.

மோசமான சாலைகளுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசின் கொள்கையை புரிந்துகொள்ள முடியவில்லை. சாலைகளின் அமைப்பு மற்றும் தரம் சரியில்லாதது ஆபத்தான விபத்துகளைக் கூட ஏற்படுத்துகின்றன. நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளில் முறையற்ற கட்டணம் வசூலிக்கப்படுவது அதிருப்தி அளிக்கிறது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரசு முதலில் எட்டு வழிச் சாலை அமைத்தது. இப்போது சில பகுதிகளில் மேம்பாலம் அமைப்பதற்காக சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது. இதுபோன்று இருப்பினும் அரசு தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலித்துக் கொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொரு 10-15 கிலோமீட்டருக்கு ஒரு பகுதியில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளிடமிருந்து பணத்தைப் பறிப்பதாக உள்ளது. சிறந்த சாலைகளை அமைத்துத் தருவது நிதியை திரட்டுவதற்காக அல்ல என்று அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பீம் சிங், வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுவது லாபகரமான தொழிலாகப் பார்க்கப்படுகிறது. இதுவரை எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது போன்ற எந்த விவரங்களையும் சுங்கச்சாவடிகளில் வெளிப்படையாகத் தெரிவிப்பதில்லை என்று சுட்டிக்காட்டினார்.

Thursday, May 10, 2012

முதன் முறையாக விஜய்யுடன் இணையும் விஜய்!

துப்பாக்கியில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக கவுதம் மேனனுடன் யோஹன் படத்தில் நடிக்கவுள்ளார். அதைத்தொடர்ந்து இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தலைவன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் புதிய படத்தை பிரபல சினிமா பைனான்ஸியர் சந்திரப் பிரகாஷ் ஜெயின் தயாரிக்கிறார். இந்த ஆண்டு இறுதியில், நவம்பர் அல்லது டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன் முறையாக இயக்குனர் விஜய்யும், நடிகர் விஜய்யும் இணைய உள்ளது இப்போதே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Wednesday, May 9, 2012

ஸ்கை டிரைவிற்கு போட்டியாக கூகுளின் டிரைவ்!!

வாஷிங்டன்: இணையதள உபயோகம் தவிர்க்க முடியாத காரியமாக மாறிவிட்ட இக்காலக்கட்டத்தில் பயனீட்டாளர்கள் ஆன்லைனில் தகவல்களை ஸ்டோரேஜ் செய்யும் வசதியை கூகிள் உருவாக்கி வருகிறது.

ஃபோட்டோக்கள், தகவல்கள் ஆகியவற்றை ஆன்லைனில் சேகரிக்கும் விதத்தில் வசதி கூகிள் ட்ரைவ் என்று அழைக்கப்படுகிறது. இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் இதனை உபயோகிக்கலாம்.

மைக்ரோ சாஃப்டின் ஸ்கை ட்ரைவிற்கு கூகிள் ட்ரைவ் பலத்த போட்டியை கொடுக்கும் என கருதப்படுகிறது.

ஐந்து ஜிகா பைட் வரை சேகரிக்கும் வெர்ஸனை பயனீட்டாளர்கள் இலவசமாக உபயோகிக்க கூகிள் அளிக்கிறது. ஐந்து ஜிகா பைட்டிற்கு மேல் தகவல்களை சேகரிக்க கட்டணம் செலுத்தவேண்டும். கூகிள் ட்ரை என்று முதல் செயல்படும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

ஃபோட்டோக்கள், டாக்குமெண்ட்கள், குறிப்புகளை பாதுகாப்பாக வைத்திருப்பதுடன், தேவையான தகவல்களை பெற சர்ச்(தேடுதல்) வசதியும் இதில் உள்ளது. இண்டர்நெட் கனெக்ஷன் கொண்ட எந்த உபரகரணத்திலும் கூகிள் ட்ரவை உபயோகிக்கலாம் என்பது இதன் தனிச்சிறப்பு.

Tuesday, May 8, 2012

சினி பிரச்சினையிலிருந்து வெளிவருமா சூர்யாவின் மாற்றான்?

சூர்யா - காஜர் அகர்வால் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் படம் மாற்றான். இப்படம் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளின் கதையை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் ரஷியாவின் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது கடைசி கட்டத்தை நெருங்கியுள்ளது. கோடையில் ரிலீசாகியிருக்க வேண்டிய இப்படம் சினிமா தொழிலாளர்களின் பிரச்சினை காரணமாக தள்ளிப் போய் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஜோத்பூர் பாலைவனப்பகுதியில் சுமார் 500 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதுபோன்று இன்னும் சுவாரஸ்யமான, பிரம்மாண்டமான காட்சிகளும் இப்படத்தில் உள்ளது.

இன்னும் சில தினங்களில் இப்படத்தை முடித்து, சீக்கிரமாக வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன., இப்படத்தில் விவேக், ஈஷா ஷர்வாணி ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

Monday, May 7, 2012

எத்தனை காலம் வாழ்தோம் என்பதைவிட! எப்படி,...?

நாம் உண்ணும் உணவுதான் நம் ஆயுளை தீர்மானிக்கிறது. கொழுப்பு சத்துள்ள உணவுகள்தான் ரத்தநாளங்களில் படிந்து இதயத்தை செயல்படவிடாமல் தடுக்கிறது. இதனால் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படவும் காரணமாகிறது. இதயத்திற்கு இதம் தரும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியத்தோடு ஆயுளை அதிகரிக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

ஆயுள் அதிகரிக்கும் தயிர்: தயிர் அதிசயம் மிக்க உயிருள்ள உணவு. தயிரின் மகத்துவம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே 3000 வருடங்களுக்கு முன்பே மொஹஞ்சோதாரே ஹரப்பா நகரத்தில் தெரிந்துள்ளது. அமெரிக்காவில் ஜலர்ஜியா மாகாணத்தில் மட்டும் அதிகம் பேர் 100 வயதிற்கு மேல் வாழ்வதை ஆராய்ந்தபோது அவர்கள் அதிகம் உணவில் தயிர் சேர்த்துக் கொள்கின்றனர் என தெரிய வந்தது.

தயிரில் லேக்டோடைசில்ஸ் மற்றும் லெபிடா என்ற நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. இவை நம் வயிற்றில் தீய கிருமிகள் வராமல் தடுக்கிறது. நமது கிராம மக்கள் கூறுவது போல் "ரத்தம் செத்துப்போகாமல்'' செய்து தயிரின் ஸ்பெஷல் ஆக்சன் குடல் சுழற்சி, குடல் புண், பெருங்குடல் புற்றுநோய் வராமல் தயிர் காப்பாற்றும்.

தயிரிலுள்ள கால்சியம் எலும்புகள் தேயாமல் காப்பாற்றுகிறது. எலும்பில் உள்ள மஜ்ஜையில் அதிக அளவில் செல் உருவாக தயிர் உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவை குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது. மலச்சிக்கல் இல்லாமல் வாழ ரத்தக்கசிவை தடுக்கும் விட்டமின் கே உருவாக உதவும். வழி வகுக்கிறது. இது பி. காம்ப்ளக்ஸ் வைட்டமின் குறைபாட்டை தவிர்க்கிறது. வயிற்றில் அதிக வாயு ஏற்படுவதை தடுக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. தோலை மினு மினுப்பாக வைக்கிறது.

இதயத்தை சீராக்கும் மீன்: மீன் மனிதனின் ஆயுள் மற்றும் அறிவை வளர்க்கும் திறன் கொண்டது. 30 வருடங்கள் முன்பு அலாஸ்காவில் மற்றும் பின்லாந்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு இதயநோய் வராமலே இருப்பது கண்டு ஆச்சரியப்பட்டு ஆராயும்போது அவர்கள் தினமும் அதிக அளவு மீன் சாப்பிடுவதுதான் காரணம் எனத் தெரிந்தது.

மீனிலிருந்து ஒமேகா-3 என்ற செறிவற்ற கொழுப்பு கிடைப்பதால் அது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது. இருதய துடிப்பை சீராக வைக்கும். திறமை மீனுக்கு உண்டு.

இதயத்திற்கு ஏற்ற சாக்லேட்: பனாமா நாட்டைச் சேர்ந்த சன்ப்ளாஸ் தீவில் வாழும் மக்களுக்கு உள்நாட்டு பகுதியில் வாழ்வோரைக் காட்டிலும் 6 மடங்கு குறைவாகவே இதயநோய் ஏற்படுகிறது. இதற்கு காரணம் நாம் தண்ணீர் சாப்பிடுவது போல அவர்கள் எக்கச்சக்கமாக தினம் கோகோ பானம் அருந்துவது தான். இதிலுள்ள இசபிளரனாய்ட்ஸ் என்ற பொருள். ரத்தக்குழாய்களை இளமையாக வைக்கிறது. இதனால் அவர்களின் உடலில் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி மடை திறந்த வெள்ளம் போல் உடலின் பல பாகங்களுக்கும் பாய்வதால் அவர்களிடம் ரத்தக் கொதிப்பு, சிறுநீரகக் கோளாறு சர்க்கரை நோய் மூளைச்சிதைவு நோய் எட்டியும் பார்ப்பதில்லை. ஆனால் டார்க் சாக்லேட்தான் சாப்பிடவேண்டும். மில்க் சாக்லேட்டில் செறிவு கொழுப்பு இருப்பதால் அதனால் இதுபோன்ற நன்மைகள் கிடைக்காது.

கருப்பு திராட்சை சத்துக்கள்: கருப்பு திராட்சையில் உள்ள சத்துக்கள் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும் உடலை ஆரோக்கியமாக வைக்கும். ஞாபகசக்தியை வளர்க்கும். தினம் தினம் கறுப்பு திராட்சை சாப்பிட்டால், தலைமுடி நரைக்காமல், இரும்பு போன்ற இதயத்துடன் வாழலாம். அதேபோல் பாதாம், முந்திரி, காரைப் பருப்பு, வால்நட் ஆகியவற்றில் செறிவற்ற கொழுப்பு உள்ளதால் அவை இதயத்தை பாதுகாக்கும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு: அமெரிக்காவை விட ஒகினாவா என்ற ஜப்பானிய தீவில் 100 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5 மடங்கு அதிகம். இதற்கு சர்க்கரை வள்ளிக்கிழங்குதான் காரணம் என்று கண்டறியப்பட்டது. ஆலிவ் எண்ணெய் அளவிற்கு சர்க்கரை வள்ளிக் கிழங்கு உடலை ஆரோக்கியமாக வைக்கின்றன. இவற்றில் வைட்டமின் தாதுப்பொருட்கள் மற்றும் அபூர்வமான ஆன்டி ஆக்சிடேன்ட்டு உள்ளன.

ஆலிவ் (olive) என்பதிலேயே Live என்று ஆசிர்வாதம் செய்வதும் பொதிந்துள்ளது. 40 வருடங்கள் மேலைநாடுகளில் செய்த ஆராய்ச்சிகளில் ஆலிவ் எண்ணெயில் செறிவற்ற கொழுப்பு இருப்பதால் அது நம் உடலில் ஆக்ஸிகரணம் ஏற்படுவதை தடுத்து மூப்பு ஏற்படாமல் தடுப்பது தெரிய வந்துள்ளது. ஆலிவ் எண்ணெயை நாம் செய்யும் காய்கறி சாலட்களில் கலந்து சாப்பிடுவது நல்லது. இது இதயத்தை காக்கும்.

Sunday, May 6, 2012

நண்பன்டா! நண்பனுக்காக!! விஜய்!!!

பிரபுதேவா இயக்கத்தில், அக்ஷ்ய் குமார், சோனாக்ஷி சின்ஹா நடித்து வரும் சிறுத்தை படத்தின் இந்தி ரீ-மேக் ரவுடி ரத்தோர்.

இப்படத்தின் சூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விஜய்யை அக்ஷ்ய் குமாருடன் ஒரு பாட்டுக்கு நடனம் ஆட திட்டமிட்டார் நடிகர் பிரபுதேவா. விஜய்யும், பிரபுதேவா மீதுள்ள நட்பால் ஓ.கே.‌ சொன்னார்.

அதன்படி விஜய் - அக்ஷ்யகுமார் இணைந்து ஆடிய நடன காட்சியை பிரபுதேவா படமாக்கினார். இருவருக்கும் பிரபுதேவாவே டான்ஸ் மாஸ்டராக இருந்து நடனம் சொல்லி கொடுத்து ஆட வைத்தார்.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸின் துப்பாக்கி படத்தில் பிஸியாக இருக்கும் விஜய், பிரபுதேவாவுக்காக சில நாட்கள் தேதி ஒதுக்கி இப்படத்துக்காக நடனம் ஆடி கொடுத்துள்ளார், அதுவும் சம்பளம் வாங்கமாலேயே...!

Saturday, May 5, 2012

ஆங்கிலம் என்று அசந்துவிட வேண்டாம்! வந்துவிட்டது கூகுளின் புது வசதி!!

ஹைதராபாத்: ஆங்கிலம் சரியாக புரியவில்லை என்ற கவலை உங்களுக்கு இனி தேவையில்லை. இனி எந்த மொழியில் மின்னஞ்சல் வந்தாலும் அதை உங்களுக்கு புரிந்த மொழியில் மாற்றிக்கொள்ள முடியும். இந்த வசதியை உங்களுக்கு கூகிள் இணையதள சேவை நிறுவனத்தின் ஜிமெயில் வழங்க உள்ளது.

ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இன்னும் ஓரிரு நாள்களில் இந்தச் சேவை கிடைக்கும். மின்னஞ்சலின் மேற்பகுதியில் இருக்கும் ‘டிரான்ஸலேட்’ என்கிற பொத்தானை இயக்குவதன் மூலம் தேவையான மொழிக்கு மின்னஞ்சலை மொழிபெயர்க்க முடியும் என்று கூகுள் ‘டிரான்ஸலேட்’ சேவையின் மேலாளர் ஜெஃப் சின் தெரிவித்தார்.

இந்தத் தகவல் கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பூவில் வெளியிடப்பட்டிருக்கிறது.

முன்னதாக கூகுளின் பரிசோதனை முயற்சிகள் இடம்பெறும் ‘லேப்ஸ்’ பகுதியில் வழங்கப்பட்டிருந்த தானியங்கி செய்தி மொழிமாற்ற சேவைக்கு ஜிமெயில் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால், ஜிமெயிலிலும் இதைப் பயன்படுத்தும் யோசனை முன்வைக்கப்பட்டது.

Friday, May 4, 2012

வயாகரா! உணர்வை தூண்டும் மாத்திரை இனி வேண்டாம்! ஆய்வில்!!

வயாகரா மாத்திரை ஆண்களின் பாலியல் உணர்வை தூண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது. இனி வயாகரா தேவையில்லை. சூரிய குளியலே போதும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

ஆஸ்திரியாவில் உள்ள கிரேஷ் மருத்துவ பல் கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பொதுவாக ஆண்களின் ரத்தத்தில் உள்ள டெஸ்டோ டெரோன் என்ற ஹார்மோன் “பாலியல்” ஆர்வத்தை தூண்டுகிறது. இதற்கு வைட்டமின் “டி” அதிக அளவில் தேவைப்படுகிறது.

வைட்டமின் டி சூரிய ஒளி மூலமும், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும் உற்பத்தி ஆகிறது. எனவே சூரிய குளியலே போதும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த புதிய ஆய்வின் மூலம் ஒரு மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் படுத்தபடி சூரிய குளியல் செய்தாலே போதும் ரத்தத்தில் பாலியல் உணர்வை தூண்டும் டெஸ்ட் டோடெரோன் அளவு 69 சதவீதம் உயர்கிறது என்று தெரிய வந்துள்ளது., இந்தியா வெப்ப நாடாக இருப்பதால்தான் இத்தனை மக்கள் தொகையோ.?

Thursday, May 3, 2012

எத்தனை மருத்துவ குணம் இப் (சீதா) பழத்தில்

சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது.

இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது

பழத்தில் உள்ள சத்துக்கள்: சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்: சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

முகப் பருக்கள் குணமடையும்: சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.

மேனி பளபளப்பாகும்: விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.

சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.

சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.

மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது. விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்

எலும்பு பலமடையும்: சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்: சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.

சீதாப்பழம் பற்றிய சில பொதுவான தகவல்கள்:
சீதா (Annona squamosa), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும்.

இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.

பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.

பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே (subtropical) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.

சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது.

காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.

சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.

Wednesday, May 2, 2012

செக்ஸ் சாமிக்கு சப்போர்ட் செய்யும் ஹிந்து மதவாதம்!?

பெங்களூர்: ஆபாசமாக மீடியாக்களில் வளம் வந்தவர் நித்யானந்தா இவருக்கு முன்பு காஞ்சி சங்கரச்சாரி இதற்கு முன்பு அயோத்தியை ஆண்டதாக கூறும் பரதேசி ராமன் இப்படி நீண்டு கொண்டே போகும் ஹிந்து கடவுள்கள். அந்தவரிசையில், இந்த ஆதீன பதவி ஒன்றும் புதிதல்ல இவர்களுக்கு.(செக்ஸ் சாமிகளுக்கு)

நடிகை ரஞ்சிதாவுடன் ஆபாச லீலைகளை அரங்கேற்றிய நித்தியானந்தாவுக்கு தமிழகத்தின் மிகப்பெரிய ஆதீனமாக கருதப்படும் மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீன பதவி வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூர் அருகே உள்ள பிடாதியில் உள்ள நித்தியானந்தாவின் தியான பீட தலைமை அலுவலக வளாகத்தில் வைத்து முடிசூட்டல் நிகழ்ச்சி நடந்துள்ளது. மதுரை ஆதீனமாக தற்போது உள்ள அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர், நித்தியானந்தாவுக்கு கிரீடம் சூட்டி தனது அடுத்த வாரிசாக நித்தியானந்தாவை அறிவித்தார்.

பின்னர் மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரை ஆதீனத்தின் 293வது குரு மகா சன்னிதானமாக நித்தியானந்தாவை நாங்கள் இன்று அறிவித்து பிரகடனம் செய்கிறோம். அவர்தான் மதுரை ஆதீனத்தின் சட்டப்பூர்வமான அடுத்த மகா குரு சன்னிதானம். அவர் இனி ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா ஸ்வாமிகள் என்று அழைக்கப்படுவார்.

மதுரை ஆதீன மடத்தின் வழிபாடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை ஆதீனத்தை அவர் இனி முழுமையாக செயல்படுத்துவார்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான 1250 ஏக்கர் நிலம், கோவில்கள் மற்றும் அனைத்து அசையும், அசைய சொத்துக்களையும் இனிமேல் நித்தியானந்தரே நிர்வகிப்பார் என்றார் அவர்.

ஆபாச லீலைகள் புரிந்து அசிங்கப்பட்ட ஒருவருக்கு மதுரை ஆதீன பட்டம் வழங்கப்பட்டதன் பின்னணி என்ன?

கோயில் நிர்வாகத்துறையை சேர்ந்த ஒருவர் கூறுகையில்: எல்லாம் அரசியல் பின்னணிதான், (சென்ற மாதம் அசோக் சின்காவை சந்தித்துவந்தார் நித்யானந்தா) மேலும் அவர் கூறுகையில் அடுத்தது பி ஜே பி, ல் சீட் கொடுத்து அரசியல் பிரவேசமும் உண்டு என்றார் அவர்., என்ன கருமமோ அந்த மாதிரியான தொழில் சொய்தால்தான் இதுபோன்ற பதவிகள் தேடி வருமோ?, வாழ்க இந்து சடங்குகளும் ச(ம்)மாச்சாரங்களும்!!! அன்பர்களுக்கு இந்து என்கிற இந்த மதம் தேவைதானா? யோசிப்பார்களா!

Tuesday, May 1, 2012

முதன் முறையாக விஜய்?

'
இது நாள் வரை செய்திராத விஜய் இப்போது டான்ஸ் களத்தில் கச்சை கட்டியுள்ளார்., அதுவும் இங்கு அல்ல வடக்கில்.

விக்ரமுடு' படம் தமிழ் மட்டுமின்றி, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படம் இந்தியிலும் ரவுடி ரத்தோர் என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது.

இந்தியில் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்க, சோனாக்ஷி சின்ஹா கதாநாயகியாக நடிக்க, பிரபுதேவா இப்படத்தை இயக்குகிறார்.

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி ரவுடி ரத்தோர் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் இளையதளபதி விஜய் நடனம் ஆட இருக்கிறார்.

இதுகுறித்து விஜயை பிரபுதேவா சந்தித்து பேசியபோது, விஜய் நடனம் ஆட சம்மதித்திருக்கிறார்.

ரவுடி ரத்தோர் படத்தின் பாடலில் ஆடுவதன் மூலம், முதல் முறையாக விஜய் இந்திக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது., வடக்கிலும் கலக்கல் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம் என்று சொல்லுங்க.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!