Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, March 31, 2012

வாக்கிட்ட மக்களுக்கு வாக்கரிசி போடும் ஜெயா அரசு!!

சென்னை: மின் தடையால் இருண்ட மாநிலமாக மாறிவரும் தமிழகத்தில் புதிய மின்கட்டண உயர்வு மூலம் தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஆளும் அ.இ.அ.தி.மு.க அரசு. ஏற்கனவே பேருந்து கட்டணம், பால் விலை உயர்வு ஆகியவற்றால் அவதிக்குள்ளாகும் மக்களை வாட்டும் விதமாக வெளியாகியுள்ள இக்கட்டண உயர்வு ஒரு வருடத்திற்காம். இந்த கட்டண உயர்வு வரும், ஏப்ரல் 1- முதல் அமலுக்கு வருகிறது.

எவ்வளவுதான் மக்களை விரோத ஆட்சியை நடத்தினாலும் காசு கொடுத்தால் ஓட்டுக்கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆட்சிபுரியும் அ.இ.அ.தி.மு.க அரசின் தொடர் அராஜ போக்கை இம்மின்கட்டண உயர்வு உணர்த்துகிறது.

மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது. கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவேயில்லை. கடந்த திமுக ஆட்சியில் ஒரு சில பிரிவுகளுக்கு மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இப்படி மின் கட்டணம் உயர்த்தப்படாமலேயே இருப்பதால் மின்வாரியம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது என்று தமிழக அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் எடுத்துரைத்தது. மேலும் எந்த பிரிவுக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்தலாம் என்பதையும் அரசு முடிவு செய்து ஆணையத்திடம் கடந்த நவம்பர் மாதம் தெரிவித்தது.

இதையடுத்து ஆணையம் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்டது. அதன் பிறகு மின் கட்டணத்தை எவ்வளவு உயர்த்துவது, வீடுகள், தொழிற்சாலைகள், உயர் அழுத்த மின்சார பயன்பாடிற்கான கட்டணத்தை எவ்வளவு அதிகரிப்பது என்பதை ஆணையம் முடிவு செய்தது.

மேலும் சிறு தொழில்கள், குடிசை தொழில்களுக்கான கட்டண உயர்வை அமுல்படுத்துவது குறித்தும் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர்கள் நாகல்சுவாமி, வேணுகோபால் ஆகியோர் மின்கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.

விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தொடரும் என்றும், விசைத்தறிக்கு 500 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது., இந்த கட்டண உயர்வு மூலம் ஓர் ஆண்டிற்கு ரூ.7874 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் அரசுக்கு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மக்களை ஏமாற்றும் இந்த த(பாசிச)அரசு இதன் அபாய காரணத்தை உணர்ந்தும் கூடங்குளம் மின்சாரம் முழுமையாக தமிழ் நாட்டுக்கே என்று மேலும் ஏமாற்ற பார்க்கிறார் ஜெயலலிதா.

Friday, March 30, 2012

மாரடைப்பை முன்கூட்டியே அறிய முடியும் விஞ்ஞானிகள்!

நியூயார்க்: சிகரெட் பிடிப்பவர்கள், உடல் குண்டானவர்கள் மற்றும் ரத்தத்தில் கொழுப்பு சத்து இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. ஆனால் இவர்களுக்கு எப்போது நெஞ்சுவலி மற்றும் மாரடைப்பு ஏற்படும் என்பதை டாக்டர்களால் முன் கூட்டியே அறிய முடிவதில்லை.

தற்போது ஒரு சிறிய ரத்த பரிசோதனை மூலம் மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகளை கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரத்தத்தில் உள்ள எண்டோ திலியல் செல் (உள் அடுக்கு படலம்) மாரடைப்பு நோயாளிகளுக்கு வழக்கத்தை விட மிகப் பெரிய மாறுபட்ட வடிவிலும், அதிக எண்ணிக்கையிலும் இருக்கும். அதை வைத்து மாரடைப்பு நோய் ஏற்படுவதை முன் கூட்டியே அறிய முடியும்.

இதற்கான சோதனையை மாரடைப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 50 பேரிடம் நடத்திய சோதனையில் நிபுணர்கள் கண்டுபிடித்தனர். இந்த சோதனை இன்னும் 2 ஆண்டுகளில் நடை முறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thursday, March 29, 2012

நயன் பிரபுவை ஒன்று சேர்த்து வைக்கிறாரா முன்னாள் நடிகை!

நயன்தாரா உடனான காதலுக்காக முதல் மனைவியை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. நயன்தாராவும், பிரபுதேவா மீதுள்ள காதலால் மதம் எல்லாம் மாறினார். இவருக்காக அவரும், அவருக்காக இவரும் என்று ஈருடல் ஓருயிராக இருந்த பிரபுதேவா-நயன்தாரா ஜோடி.

இப்போது அந்த காத‌லை உதறி தள்ளிவிட்டு தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிரபுதேவா தன்னுடைய இந்தி பட வேலைகளிலும், நயன்தாரா மீண்டும் சினிமாவிலும் நடிக்க தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் நயன்தாரா-பிரபுதேவா இடையே சமரம் செய்து வைக்க நடிகை குஷ்பு முயற்சி செய்வதாக தவகல் வெளியானது. ஆனால் இதனை அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, பிரபுதேவா-நயன்தாரா இருவருமே என்னுடைய நல்ல நண்பர்கள். அதிலும் பிரபுதேவா என்னுடைய நீண்டநாள் நண்பர். அவர் நடிக்க வருவதற்கு முன்பே அவரை எனக்கு தெரியும். என்னுடைய ஒரு படத்திற்கு அவர் தான் நடன அமைப்பாளர். எவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்க கூடாது.

நயன்தாரா-பிரபுதேவா விஷயத்திலும் அப்படிதான். அவர்கள் இருவருக்குள்ளும் என்ன பிரச்னையோ தெரியவில்லை அது அவர்களுடைய சொந்த விவகாரம். இதில் நான் தலையிட விரும்பவில்லை. நான் ஒன்றும் தரகர் கிடையாது. இதுபோன்ற செய்திகள் எல்லாம் எப்படி கிளம்புகிறது என்றே தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

Wednesday, March 28, 2012

மக்களை நம்ப வைக்க நாடக மாடிய போயஸ் கூட்டணி!?

சசிகலா புதன்கிழமை (28.03.2012) காலை விடுத்த அறிக்கையில்: ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் எனக்கு வேண்டாதவர்கள். அவருக்கு எதிராக துரோகம் இழைத்தவர்களை மன்னிக்க முடியாது. அவர்களின் உறவை துண்டித்து விட்டேன்.

எம்எல்ஏ, அமைச்சர் பதவியில் இருக்க வேண்டும், பொது வாழ்வில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. ஜெயலலிதாவுக்கு உண்மையான தங்கையாகவே இருக்க விரும்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்று சசிகலா சந்தித்தார்.

இச்சம்பவம் பற்றி தலைமை நீதிபதி கூறும்போது மக்களையும் நீதிமன்றத்தையும் நம்ப வைக்க நாடக மாடிய (ஜெயா சசி) போயஸ் கூட்டணி., மேலும் எவ்வளவு தற குறைவாக ஜெயா நடந்து கொண்டார் என்றார்.

Tuesday, March 27, 2012

எதிர்பார்ப்பில் A R R கம்போஸிங்கில் விஜய்!!

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், யோகன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இந்தபடத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்க இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்திதான்.

இப்போது புதிய செய்தி என்னவென்றால், யோகன் அத்தியாயம் படத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாட இருப்பது தான்.

விஜய்க்கு பாட்டு பாடுவது ஒன்றும் புதிதல்ல, ஏற்கனவே நிறைய படங்களில் பாடியுள்ளார். இப்போது கூட தான் நடித்து வரும் துப்பாக்கி படத்தில் அசத்தலான பாட்டு ஒன்று பாடியிருக்கிறார்.

அதனால் விஜய்-ஏ.ஆர்.ரஹ்மானின் காம்பினேஷன் எப்படி இருக்கும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Monday, March 26, 2012

காலவரையற்ற வேலை நிறுத்தம் குஜராத் மோ(கே)டிக்கு.எதிராக!

ஆமதாபாத்: குஜராத்தில் 6 மருத்துவ கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 2500 டாக்டர்களும், பல்வேறு மருத்துவமனை டாக்டர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கி உள்ளனர்.

அரசு அல்லாத மருத்துவ கல்லூரிகளை ஆசிரியர்களின் சம்பள அடிப்படையில் தங்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மருத்துவமனை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தலைமை டாக்டர் ஒருவர் கூறும்போது; இது பற்றி பலமுறை மாநில முதல்வர் நரேந்திர மோ(கே)டி யிடம் புகார் செய்தும் எந்த பலனுமில்லை ஆதலால் இம்முடிவை நாங்கள் எடுத்தோம் என்றார்.

குஜராத்தை முதல் மாநிலமாக மாற்றுவது இருக்கட்டும் முதலில் அரசு ஊழியர்களுக்கும், மக்களுக்கும் அவர்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு பின்பு செய்யட்டும். தன் புகழ் பாடும் குஜராத் கேடி.

Sunday, March 25, 2012

எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாயா (சச்சின்) நம்மாளு!!

மும்பை: சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக சதத்தில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் சச்சின். அவரின் சாதனையை பாராட்டி பத்திரிகை ஆசிரியர்கள் சார்பில் மும்பையில் பாராட்டு விழா நடந்தது.

விழா முடிந்ததும், பத்திரிகை ஆசிரியர்களுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கூறியதாவது: இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என நோக்கத்தில் தான் விளையாடி வருகிறேன். எனது சாதனைகளுக்காக நான் கிரிக்கெட் விளையாடவில்லை. சதத்தில் சதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது காலத்தில் உலகக்கோப்பையை இந்தியா வென்றது ஒரு மிகப்பெரிய சாதனையும், மகிழ்ச்சியும் ஆகும்.

எனது சாதனையை இந்தியர் முறியடிப்பார், எனது ஓய்வு குறித்து பல்வேறு செய்திகள் வருகின்றன. நான் எப்போது ஒய்வு ‌பெற வேண்டும் என்பதை யாரும் எனக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. நேரம் வரும்போது நானே ஓய்வை அறிவிப்பேன். இதுவரை ஓய்வு பற்றி சிந்திக்கவில்லை. விருப்பம் உள்ளவரை இந்தியாவுக்காக ஆடுவேவன்.

சச்சின் கூறுவது பொருத்தமாக பட்டாலும் இப்பெரும் புகழும் இருக்கும்போதே கிரிக்கெட்டிலிருந்து தானாக ஒய்வு பெற்றால் பெரும் புகழுடன் அவரிடமிருக்கும் இல்லையேல் ரசிகர்கள் மற்றும் செலக்ட்டர்களால் ஒதுக்கப்படுவார்.

உடல் பருமனுக்கு உணவுதான் காரணமா! ஆய்வு தகவல்!!

லண்டன்: பசி இல்லாவிட்டாலும், ஒரு சிலர் எப்போதும் எதையாவது சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள் அவர்கள் சாப்பாட்டு ராமன், பெருந்தீனி தின்பவர்கள் என்பன போன்ற ஏராள பேச்சுகளுக்கு ஆளாக்கின்றன.

அவர்கள் விரும்பி பெருந்தீனி சாப்பிடுவது இல்லை, அதற்கு அவர்களின் உடலில் உள்ள ஒருவித மரபணுவே காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழக மெடிக்கல் சென்டரின் விஞ்ஞானிகள் எலிகளிடம் இதுகுறித்து ஆய்வு நடத்தினார்கள். அப்போது அதில் இருந்த பி.டி.என்.எப். என்ற மரபணு உடைந்து அது சாப்பிட்டது போதும் என்ற கட்டளையை மூளைக்கு செல்லவிடாமல் தடுக்கிறது.

அதனால்தான் பசி இல்லாவிட்டாலும் எலி தொடர்ந்து எதையாவது தின்று கொண்டே இருந்தது. அதன் மூலம் உடல் எடை பெருத்து கொளுத்து விட்டது. இதை மரபணு மனிதர்களின் உடலிலும் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

எலிகளின் உடலில் நடப்பது போன்றே மனிதர்களின் உடம்பிலும் இதுபோன்ற மாற்றங்கள் நடக்கலாம் என கருதுகின்றனர். இதனால்தான் தொடர்ந்து சாப்பிட்டு உடல் குண்டாகி விடுகிறது.

இந்த பி.டி.என்.எப். மரபணுவை தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தைகளிடம் கண்டறிந்து அதற்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, March 24, 2012

கம்பி நீட்ட பார்த்த இளைஞனை கம்பி என்ன வைத்த இத்தாலி இளைஞி?

தேனி: திண்டுக்கல்லை சேர்ந்தவர் இந்தர்கணேஷ்,28. அமெரிக்காவில் கப்பலில் பணிபுரிகிறார். இவர், தன்னுடன் வேலை பார்க்கும் இத்தாலி பெண் லியோநினா,28,வுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். நிச்சயதார்த்தம்: இந்தர்கணேஷ் இரண்டு மாதங்களுக்கு முன், தேனியை சேர்ந்த மீன் வியாபாரி ஜெயபால் மகளை திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்தார்.

இத்தகவல் இந்தர்கணேஷ் நண்பர்கள் மூலம் லியோநினாவுக்கு தெரிய வந்துள்ளது.கெஞ்சல்: அமெரிக்காவில் இருந்து திண்டுக்கல் வந்த லியோநினா, இந்தர்கணேஷ் வீட்டிற்கு சென்றார். தனக்கும்-இந்தர்கணேஷிற்கும் உள்ள தொடர்பை கூறி, தேனி பெண்ணுடன் திருமணம் செய்யக்கூடாது என கணேஷின் பெற்றோரிடம் முறையிட்டுள்ளார். தீர்வு கிடைக்காததால், தேனி பெண் நிச்சயதார்த்த போட்டோ ஆல்பத்தில் இருந்த ஸ்டுடியோவிற்கு போன் செய்து, ஜெயபால் மொபைல் எண்ணை வாங்கி தகவல் தந்தார். ஜெயபால் தன் குடும்பத்துடன் இந்தர்கணேஷ் வீட்டிற்கு சென்றார். அங்கு ஜெயபால் காலில் விழுந்த லியோநினா கதறி அழுதுள்ளார்.

நான்கு ஆண்டுகளாக கணவன், மனைவியாக வாழ்வதாகவும், இனிமேல் ஒரு பெண் தங்கள் வாழ்க்கையில் குறுக்கே வரக்கூடாது. மீறி திருமணம் நடந்தால் வக்கீல் மூலம் அந்த திருமணத்தை எதிர்க்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து ஜெயபால் தனது மகளுக்கு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி போலீசில் புகார் செய்தார்.

வழக்கு: இந்தர்கணேஷ் மீது தேனி போலீசார் வழக்குபதிவு செய்ததை உறுதி செய்த பின் லியோநினா அமெரிக்கா கிளம்பினார். அதுவரை திண்டுக்கல்லில் 23 நாட்கள் இந்தர்கணேஷ் வீட்டில் தங்கியிருந்தார்.புத்திசாலி: ஜெயபால் கூறுகையில்,""லியோநினா புத்திசாலி. தங்கள் திருமண வாழ்க்கைக்கான ஆதாரங்களை சேர்த்து வைத்துள்ளார். திருமண ஆதாரமாக 63 போட்டோக்களை எங்களுக்கு அனுப்பி உள்ளார். எனது புகார்படி போலீசார் இந்தர் கணேஷை கைது செய்தனர்,'' என்றார்.

Friday, March 23, 2012

கூடங்குளம் போராட்டக்காரர்களை மிரட்டும் பாசிச அரசு!!

திருநெல்வேலி:கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்த கரை கிராமத்தில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அணு உலை எதிர்ப்புக்குழு தலைவர் உதயகுமார் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க செல்ல முயன்ற ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் நெல்லை முபாரக், பெரியார் திராவிட கழகத்தலைவர் கொளத்தூர் மணி, நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பு தலைவர் சீமான் உள்பட 500க்கும் மேற்பட்டோர் இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக பாளையங்கோட்டையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மறுமலர்ச்சி திமுக, எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் ஃப்ரண்ட் உட்பட பல்வேறு அமைப்பினர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் வைகோ, நெல்லை முபாரக், கொளத்தூர் மணி உள்ளிட்டோர் பேரணியாக இடிந்தகரை நோக்கிச் செல்ல முயற்சித்தனர். ஆனால் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் பாளையங்கோட்டை, கூடங்குளம் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இப்போராட்டம் பற்றி மனித ஆர்வலர் கூறும்போது: கூடங்குளம் போராட்டக்காரர்களை ஜெயா அரசு (பார்ப்பனிய பாசிச) அடக்குமுறையை கட்டவிழ்த்து உள்ளது என்றார், மேலும் அவர் கூறுகையில் இந்த அடக்கு முறையால் மக்கள் ஒன்றும் பயந்தவர்களாகவோ அல்லது இந்த போராட்டத்தை விட்டு ஒதுங்கிவிடுவார்கள் என்று மத்திய மாநில அரசுகள் நினைக்க வேண்டாம் என்றார்.

உடலுக்கு முக்கிய பங்காற்றும் முருங்கை!!!

* வாரத்தில் ஒருமுறையோ, இரண்டு முறையோ முருங்கைக்காயை உணவாக உபயோகித்து வந்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்திகரிக்கப்படும்.

* முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துகள் இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்தசோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். அதோடு, பல் கெட்டிப்படும். தோல் நோய்கள் நீங்கும்.

* முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். மேலும், தாது விருத்தியும் உண்டாகும்.

* முருங்கை இலைச்சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால் ரத்தம் சுத்தமாகும். எலும்புகள் வலுவாகும். கர்ப்பிணிப் பெண்களும் இதை உட்கொண்டு வரலாம்.

* முருங்கை இலை காம்புகளை நறுக்கி, மிளகு ரசம் வைத்து, சாப்பாட்டுடன் சேர்த்து உட்கொண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் நீங்கும். அதேவேளையில், அது சிறுநீரைப் பெருக்கும்.

* முக்கிய பங்காற்றும் முருங்கக்காயை உணவில் சேர்த்து நாமும் பலன் பெறலாமே.

Thursday, March 22, 2012

விஜய் அஜித்தை பார்த்து பிரமித்து புகழும் சூர்யா!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8 மணிக்கு ”நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” என்ற தலைப்பில் நடிகர் சூர்யா நடத்தும் ஒரு கோடிக்கான கேம் ஷோ ஒன்று ஒளிபரப்பாகிறது.

இதில் அவ்வளவு எளிதில் விடை கண்டுபிடிக்க முடியாத அறிவுப்பூர்வமான(!) பல கேள்விகள் தினமும் கேட்கப்படுகின்றன. சூர்யா ஒரு நடிகன் என்பதை ஒதுக்கிவிட்டு அனைத்து ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியை ரசித்து பார்க்கின்றனர். நிகழ்ச்சியில் மற்ற நடிகர்களைப் பற்றிய கேள்விகள் வரும் போது சூர்யாவிடம் அவர்களை பற்றி பேச மக்கள் சிறு தயக்கம் காட்டுகின்றனர்.

ஆனால் சூர்யா சாதாரணமாக அவர்களை பற்றி பேசுகிறார். அஜித், விஜய் ஆகியோரைப் பற்றி சூர்யா இந்நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். “ திருமணத்திற்குப் பிறகு புதுமணத் தம்பதிகள் கொண்டாடும் முதல் தீபாவளிக்கு பெயர் என்ன?” என்று சூர்யா கேட்ட போது நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தலை தீபாவளி என்பதை தல தீபாவளி என்று மாற்றி(எப்புடியெல்லாம் ட்விஸ்ட் பண்ணுறாங்க பாருங்க) ”உங்க முன்னாடி எப்படி தல பற்றி பேசுவது” என்று கேட்டார்.

அதற்கு சூர்யா “ஓ நீங்க அப்படி வர்றீங்களா. தல எப்பவுமே தல தாங்க” என்று கூறினார். மற்றொரு நாள் நடந்த நிகழ்ச்சியில் ”நண்பன் திரைபடத்தில் வரும் பிரபலமான ஆங்கில வசனம் எது?” என்று கேட்டார். நண்பன் படம் விஜய் நடித்த படம் என்பதால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர் சூர்யாவிடம் “விஜய் நல்லவரா? கெட்டவரா?” என்று கேட்டார்.

அந்த கேள்விக்கு சூர்யா “அவர் ஏன் கெட்டவரா இருக்கனும். அவரது படங்களை பார்த்து நான் பிரம்மித்துள்ளேன். கல்லூரியிலிருந்தே அவரது வளர்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பவன் நான். எனது ”அகரம் பவுண்டேஷனு”க்காக ஒரு குறும்படத்தில் நடிக்க அவருக்கு போன் செய்து கேட்ட போது ”அதுக்கென்ன மாமா பன்னிடலாம் மாமா” என்று கூறினார்.

அவருடைய காமெடியும், தன்னம்பிக்கையும் தான் அவரிடம் எனக்கு பிடித்தது” என்று பதிலளித்தார். அதன் பின் அந்த கேள்விக்கு மிகவும் யோசித்து(!) சரியான பதில் சொல்லப்பட்டது.

நடிகர்களிடமோ ஓர் ஒற்றுமை ஆனால் ரசிகர்களிடமோ வேற்றுமை!,ரசிகர்களான நாமும் இதை பின்பற்றலாமே!! செய்வோமா?.

Wednesday, March 21, 2012

கிரிக்கெட் ஆடிய ரெய்னா இப்போ நடிகையுடன்!

இந்திய கிரிக்கெட் வட்டாரத்திலும் கிசுகிசுக்கப்படுகிறது. பாலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகைகளில் அனுஷ்கா சர்மாவும் ஒருவர்.

யாஷ் சோப்ராவின், ரப் நே பனாதி ஜோடி என்ற படம் மூலம் அறிமுகமான அவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து இப்போது முன்னணி நடிகையாக உயர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இவர், இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான சுரேஷ் ரெய்னாவுடன் காதல் வலையில் சிக்கியுள்ளார். கடந்த சில மாதங்களாக இவருவரும் ஒன்றாக சுற்றி திரிவதாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த ஆண்டு இந்திய அணி ஆஸ்‌திரேலிய சுற்று பயணம் சென்ற போது, அனுஷ்கா தன்னுடைய சூட்டிங்கை ரத்து செய்துவிட்டு ரெய்னாவுடன் ஊர் சுற்றியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Tuesday, March 20, 2012

கூடங்குளம்! கலை கூத்தாடியின் கபட நாடகம் வெட்ட வெளிச்சம்?

நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்த தமிழக அரசின் (கூத்தாடி ஜெயா) நிலைப்பாடு நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தின் மூலம் வெட்ட வெளிச்சமானது. இதையடுத்து கூடங்குளம் போராட்டக் குழுவினரைக் கைது செய்ய ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து இடிந்தகரை விரைந்த உதயக்குமார், அங்குள்ள லூர்து மாதா சர்ச் வளாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுடன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.

தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்கும் அவர் இன்று 2வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரைக் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உதயக்குமார் அமர்ந்திருப்பதால் மக்கள் தடுப்பை மீறிச் சென்றால் ஏதாவது பிரச்சினையாகி விடுமோ என்று போலீஸார் அஞ்சுகின்றனர். இதனால் மக்களுடன் பேச்சுவார்த்தையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். உதயக்குமாரைக் கைது செய்ய ஒத்துழைப்பு தருமாறு அவர்கள் கோரி வருகின்றனர்.

இதுகுறித்து ஐஜி ராஜேஷ் தாஸ் கூறுகையில், உதயக்குமாரை போலீஸாரிடம் ஒப்படைக்கும்படி மக்களை கேட்டு வருகிறோம். இதற்காக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒத்துழைப்புடன் உதய குமாரைக் கைது செய்வோம். எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படுவார் என்றார்.

இந்நிலையில் தமிழக அரசின் இம்முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று மாவட்டங்களை சேர்ந்த 15,000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும் அவர்கள் கூடங்குளத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் அவர்கள் கடல் வழியாக கூடங்குளம் வர துவங்கியுள்ளனர். இதனால் இப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய விஷயங்களிலிருந்து விடுதலை!!

இஸ்தான்புல்: ஃபேஸ்புக், ட்வீட்டர் ஆகிய சமூக இணையதளங்களை போன்ற ஒரு புதிய சமூக இணைத்தளம் வருகின்ற ரமலான் மாதம் அறிமுகமாகவுள்ளது.

ஹலால் சம்மந்தமான இந்த இணைய தளத்திற்கு ‘சலாம் வேர்ல்ட் – Salam World’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களுக்கான ஒரு பாதுகாப்பு வலைத் தளமாகவும், பிரபல சமூக வலைத் தளமான ஃபேஸ்புக்கிற்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் இஸ்லாத்தில் அனுமதிக்கப் படாதவை இந்த வலைத் தளத்தில் அனுமதிக்கப்பட மாட்டது. உதாரணமாக குற்ற நடவடிக்கைகள், ஏமாற்றுதல், சூதாட்டம் மற்றும் போதை விளம்பரங்கள் போன்ற இஸ்லாத்திற்கு எதிரான அனைத்தும் இதில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

இது போன்ற வலைத் தளத்தினை உருவாக்குவதன் நோக்கமே தீங்கு விளைவிக்க கூடிய விசயங்களில் இருந்து விடுதலை பெறவும், கலாச்சாரம் மற்றும் குடும்ப பின்னணியின் மதிப்பை அங்கீகரிக்கவும், முஸ்லிகளின் தேவையை உணர்ந்தே இந்த ‘Salam World’ சமூக இணையத தளம் ஆரம்பிக்கப்படுகிறது.

மேலும் ஹுர்ரியத் தினசரி ஊடங்கத்திற்க்கு பேட்டி அளித்த வலைத் தளத்தின் உரிமையாளர் அப்துல் வாஹீத் நிஜாயோவ், முஸ்லிம்களுக்கு இணையத்தளத்தில் அத்துணை பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கிறது, நாம் இந்த சூழ்நிலையை மாற்ற வேண்டும், மேலும் இணையத்தள மஸ்ஜித்தை கட்டவில்லை, மாறாக ஹலாலான ஒரு சூழ்நிலை மாற்றத்தை முஸ்லிம்களுக்கு இடையில் ஏற்ப்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

இன்னும் மூன்று வருடங்களில் குறைந்தது 50–மில்லியன் பயனாளர்களை இந்த இஸ்லாமிய இணையதளம் கைப்பற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேசம் பற்றி பேசும் தேச துரோகிகள்??

கொச்சி:’ஆரோக்கிய உரிமை’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த மனித உரிமை ஆர்வலர் டாக்டர்.பினாயக்சென்னை தீவிரவாத சங்க்பரிவார மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியின் உறுப்பினர்கள் தடுக்க முயன்றது சட்டக்கல்லூரியில் சலசலப்பை உருவாக்கியது. போலீஸார் வந்து நிலைமையை அமைதிப்படுத்தினர்.

‘பினாயக் சென் வெளியேறு!’ என்று கோஷமிட்டு வந்தே மாதரம் என கூச்சலிட்ட ஏ.பி.வி.பியினர் நிகழ்ச்சி நடக்கும் ஹாலில் ஜன்னல் வழியாக காகிதங்களை சுருட்டி வீசினர். மாவோயிஸ்ட் என்றும் தேசத்தை காட்டிக் கொடுத்தவர் என்றும் தேசப்பக்தியில்(?) ஊறிப்போன ஏ.பி.வி.பியினர் பினாயக் சென்னை தடுக்க முயன்றனர். கருத்தரங்கை சீர்குலைக்க முயன்ற ஏ.பி.வி.பியினரை போலீஸார் வெளியேற்றினர்.

தேசத்தை காட்டி கொடுத்ததும், தேசத்தந்தை காந்திஜியை சுட்டு கொன்றதும் இந்த ஆர் எஸ் எஸ் தீவிரவாத அமைப்பு அதன் கிளைதான் சங்கபரிவாரம்தான் என்பது நாடறிந்த உண்மை.

தேச தந்தையை கொன்ற கும்பலுக்கு தேசப்பற்றை பற்றி பேச (ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு) என்ன தகுதி உள்ளது.

Monday, March 19, 2012

சிம்பு தனுசை தொடர்ந்து விஜய்க்கும் ஆசை

சிம்புவின் ‌லவ் ஆந்த்தம், தனுஷின் சச்சின் ஆந்த்தம் ஆகியோரைத் தொடர்ந்து இப்போது விஜய்க்கும் ஒரு ஆந்த்தம் உருவாகி இருக்கிறது. விஜய் ஆந்த்தம் என்ற பெயரில் உருவாகி இருக்கும் இந்த ஆல்பத்தை எங்கேயும் எப்போதும் படத்தில் பஸ்சில் இளம் பெண்ணை காதலிக்கும் கேரக்டரில் நடித்த வாட்சன் உருவாக்கி இருக்கிறார்.

விஜய்க்கு ஆந்த்தம் உருவாக்கியது ஏன்...? என்பது குறித்து வாட்சன் கூறுகையில், விஜய் தான் என்னுடைய பேவரேட் ஆக்டர். அவருடைய நடிப்பு, ஸ்டைல், நடனம் எல்லாமே எனக்கு பிடிக்கும். அவருக்காக ஒரு ஆல்பம் உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய ரொம்பநாள் ஆசை. அதன்படி இந்த ஆல்பத்தை உருவாக்கினேன்.

தற்போது யூ-டியூப்பில் இந்த ஆல்பம் வெளியாகி இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த ஆல்பத்தை பார்த்து ரசித்து இருக்கிறார்கள். மேலும் இந்த ஆல்பத்தை பார்த்து விஜய் சாரும் என்னையும் எனது குழுவையும் அழைத்து பாராட்டினார். அவர் அழைத்து பாராட்டியது ரொம்பவே மகிழ்ச்சி அளிப்பதாக கூறியிருக்கும் வாட்சன், இப்போது ஒரு பாட்டு தான் வெளியிட்டு இருக்கிறோம். இனி தொடர்ந்து இரண்டு-மூன்று பாடல்களை வெளியிட உள்ளோம் என்று கூறியுள்ளார்.

Sunday, March 18, 2012

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் மதவாத அமைப்பு!?

ஜெனீவா, மார்ச். 19: இலங்கை போர்க்குற்றம் இழைத்ததாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் தாக்கல் செய்துள்ளது. இந்த தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது.

ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், நார்வே, பெல்ஜியம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சீனா, ரஷியா உள்ளிட்ட நட்பு நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக உள்ளன.

ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியா தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது. இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது வருகிற 22-ந்தேதி (இந்திய நேரப்படி 23-ந்தேதி அதிகாலை) ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது.

தற்போதைய நிலவரப்படி இலங்கைக்கு 25 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவுக்கு 22 நாடுகள் மட்டுமே ஆதரவு உள்ளது.

எனவே இலங்கை மீதான போர்க்குற்றம் தீர்மானம் வெற்றி பெறுமா? என கேள்விக்குறி எழுந்துள்ளது. சமீபத்தில் சேனல்-4 தொலைக்காட்சி இறுதி கட்ட போரின் போது இலங்கை சிங்கள வெறி ராணுவத்தின் அட்டூழியங்களை வீடியோவாக வெளியிட்டது. இது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எனவே அமெரிக்காவுக்கு மேலும் பல நாடுகள் ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தீர்மானத்தை வெற்றிபெற செய்ய அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதற்காக 100 சிறப்பு பிரதிநிதிகளை ஜெனீவா அனுப்பியுள்ளது.

அதே நேரத்தில் இலங்கையும் இந்த தீர்மானத்தை தோற்கடித்த பகீரத பிரயோகத்தை மேற்கொண்டுள்ளது. தனது பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அனுப்பி ஆதரவு திரட்டி வருகிறது.

இப்படி இருக்க ஆர் எஸ் எஸ் தீவிர மதவாத கட்சி அதன் தொலமை கட்சிகளும் கொலைகாரனுக்கு ஆதரவாக இந்தியாவை இலங்கைக்கு எதிராக கையெழுத்து இடக்கூடாது என சொல்கிறது, ஏன் என்றால் இவர்கள் இந்தியாவுக்குள் பஞ்சம் பிளக்க வந்த (பார்ப்பன) வந்தேறிகள்.

சூர்யாவுடன் இணையும் தமிழ் மற்றும் ஆசிய சூப்பர் ஸ்டார்கள்!!

ஆஸ்கார் ரவிச்சந்திரன் படைப்பில் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் புதிய படம் தயாராகிறது., இப்படத்தில் விக்ரமிற்கு பதிலாக நடிகர் சூர்யா நடிக்கவிருக்கிறார் என்று புதிய தகவல் வந்துள்ளன.

மேலும், இந்த படத்தில் விஷேசம் என்னவென்றால்..? ஆசியாவின் முன்னணி ஹாலிவுட் நடிகர் ஜாக்கிஜான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இதை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவ தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். மொத்தத்தில் ஆசியா சூப்பர் ஸ்டார் ஜாக்கிஜானும், தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் இணைந்து சூர்யாவின் படத்தில் நடிக்கின்றனர்.

ரஜினி, ஜாக்கிசான், சூர்யா, இயக்குனர் ஷங்கர் ஆகியோர் ஒரே கூட்டணியில் இணைவதால், இப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

Saturday, March 17, 2012

பயங்கரவாதிகளுடன் தொடர்பு கான்க்ளேவ் 2012 பங்கேற்க மறுப்பு! யாதவ்?

லக்னோ: டெல்லியில் நடக்கவிருக்கும் இந்தியா டுடே கான்க்ளேவ் -2012 நிகழ்ச்சியில் உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கமாட்டார். பல்வேறு அதிகாரப்பூர்வ பணிகள் இருப்பதால் தன்னால் பங்கேற்க இயலாது என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

இதுக்குறித்து அவர் கூறியது: ’இந்தியா டுடே’ நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு நேரமில்லை. அமைச்சரவை கூட்டம் இருக்கிறது. அரசு தொடர்பான முக்கிய தீர்மானங்களை எடுக்கவேண்டும். அந்நிகழ்ச்சியை விட எனக்கு முக்கியமானவை இவையாகும்’ என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பங்கேற்கும் மாநாட்டில் கலந்துகொள்ள பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டனும், தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இன்று இந்தியா டுடேயின் 2 நாள் நிகழ்ச்சி துவங்குகிறது.

மனித உரிமை ஆர்வலர் கூறும்போது: சல்மான் ருச்டியை வரவேர்ப்பதன்மூலம் இந்தியா டுடே தனது பார்ப்பன பாசிச அரிப்பை தனித்துக்கொல்கிறது, ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளுடன் ருஷ்டிக்கு தொடர்பு இருப்பதாலும் அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்காமல் ஒதுங்கிக்கொள்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

வேட்டை வெற்றியால் பண வேட்டை இறங்கிய ஆர்யா!

நடிகர் ஆர்யா வேட்டை வெற்றிக்குப் பிறகு சம்பள வேட்டையில் இறங்கியிருக்கிறாரோ என்று சொல்லும் அளவிற்கு அவரது சம்பளத்தை எக்கு தப்பாக ஏற்றியிருக்கிறார் என்கிறது கோடம்பாக்கம்.

இந்தியில் வெளியான டில்லி பெல்லி காமெடி திரைப்படத்தினை யு.டி.,வி தமிழில் தயாரிக்க முடிவு செய்தது. இதற்காக அவர்கள் தேர்வு செய்த ஹீரோ ஆர்யா! கூடவே சந்தானத்தையும் புக் செய்ய முடிவு செய்தனர்.

காமெடி படமாக இருந்தாலும் நல்ல ஸ்கோப் உள்ள ஸ்கிரிப்ட் என்று சென்ற யு.டி.வி., குழுமத்தினருக்கு ஆர்யா கொடுத்த ஷாக் தான் 6 கோடி ரூபாய் சம்பளம் என்கிறது விவரமறிந்த வட்டாரம்.

ஆனால் ஆர்யாவோ..ஐய்யோ இது வரை நான் சம்பளம் பற்றி எதுவுமே பேசவில்லை, ஸ்கிரிப்ட் ரெடியான பிறகு தான் மற்ற விஷயங்களை முடிவு செய்ய வேண்டும் என்றார் கூலாக..!

Friday, March 16, 2012

தொட்டற்சினுங்கி பற்றி தெரிந்த மருத்துவ பயன்கள்

இதோட தாவரவியல் பேரு, மிமோசா புடிகா. இது இந்தியாவில் வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகள்ல காணப்படுது.

இது ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். தண்டு மற்றும் இலைக்காம்புகள் முட்களால் மூடி காணப்படும். இலைகள் இறகு வடிவ கூட்டிலையைச் சேர்ந்தது. இதோட சிற்றிலைகளுக்கு உணர்வு அதிகம்.

இதைத் தொட்டால் அவை மூடிக் கொள்ளும். அதனால் தான் இதுக்கு `தொட்டாற்சிணுங்கி'ன்னு பேரு வந்துடுச்சு. இதோட மலர்கள் பஞ்சு போன்று இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். கனிகள் தட்டையாக இருக்கும். இதோட இலைகள் மற்றும் வேர் மருந்தாகப் பயன்படுது.

இலைகளின் சாறு சைனஸ், மூல நோய், காயங்களுக்கு மருந்தாகுது. இதோட வேர் சிறுநீரக கோளாறுகளைப் போக்கும் மருந்துகள் தயாரிக்க பயன்படுது. இதில் இருந்து நார்எபிநெப்ரைன், மிமோலைன், டேனின் போன்ற வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுது.

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே! நினைவூட்டும் நித்யா?

சென்னை: தானும் பிரபல நடிகை ஒருவர் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ போலியானது என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார். (பழைய மேட்டரை அப்பப்ப ஞாபக படுத்துகிறார் சாமியார் நித்யா)

சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவைச் சேர்ந்த 4 தடவியல் ஏஜென்சிகள் இந்த வீடியோவை நன்கு ஆராய்ந்து அது போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளதாகவும், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட அந்த வீடியோ போலியானது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், சன் டிவி மீது 32 நாடுகளில் வழக்குகள் தொடுத்துள்ளார் நித்தியானந்தா. இக்கள்ளசாமியை ஹிந்துத்துவவாதிகள் கண்டுகொள்ளாதுதான் ஆச்சரியம் இவரையும் அயோத்தி ராமனுடன் ஒப்பிடுகிரார்களோ?

* அற்பமாக இருக்கும் 10 இளைஞர்களை கொண்டு வாருங்கள் சிற்பமாக ஆக்கி காட்டுகிறேன் , சுவாமி விவேகானந்தா!

* சிற்பமாக இருக்கும் 10 பெண்களை கொண்டு வாருங்கள் கர்ப்பம் ஆக்கி காட்டுகிறேன்., சாணி நித்யானந்தா !!!!

Thursday, March 15, 2012

ஹார்மோன் (வளர்வதை) கட்டுபடுத்திய வெர்ஜினியா மருத்துவத்துறை!!

வெர்ஜினியா, மார்ச். 16: உலகில் உயரமான மனிதராக துருக்கி நாட்டை சேர்ந்த சுல்தான்கோசனா இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு உலகில் உயரமான மனிதர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். அவருடைய உயரம் 8 அடி 3 அங்குலம்.

அவர் தொடர்ந்து உயரமாக வளர்ந்து கொண்டே இருந்தார். இது பல்வேறு சிரமத்தை ஏற்படுத்தியது. எனவே உயரத்தை கட்டுப்படுத்த அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஹார்மோன் கோளாறால் அவர் உயரமாக வளர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஹார்மோனை கட்டுப்படுத்தினார்கள். இதன் மூலம் சுல்தான்கோசனா தற்போது வளர்வது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

போர் குற்றத்தை மறைக்க படாத பாடுபடும் இலங்கை?

கொழும்பு: ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில், தனக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை முறியடிக்கும் வகையில், எல்.எல்.ஆர்.சி.,யின் பரிந்துரைகளை நடை முறைப் படுத்துவது குறித்த தனது திட்டத்தைத் தாக்கல் செய்ய, இலங்கை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சுவிட்சர்லாந்து ஜெனீவா நகரில் நடந்து வரும், ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலின் 19வது கூட்டத் தொடரில், கடந்த 7ம் தேதி இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. இந்த தீர்மானத்திற்கு இதுவரை, 22 நாடுகள் ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளன. ஆனால், 47 நாடுகள் உறுப்பினராக உள்ள கவுன்சிலில் ஒரு தீர்மானம் ஆதரவு பெற, 26 நாடுகளின் ஆதரவு தேவை. இதில், இந்தியாவின் நிலை இன்னும் இழுபறியிலேயே உள்ளது. இதற்கிடையில், மற்ற நாடுகளின் ஆதரவைப் பெறும் பல்வேறு முயற்சிகளில், இலங்கை தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க தீர்மானம், வரும் 20 அல்லது 23ம் தேதி ஓட்டெடுப்புக்கு விடப்படலாம் எனத் தெரிகிறது. இத்தீர்மானத்தை முறியடிக்க அல்லது ஓட்டெடுப்பு நடக்க விடாமல் தடுக்க அல்லது தீர்மானத்தின் சில பகுதிகளை திருத்தங்கள் மூலம் நீர்த்துப் போகச் செய்ய, இலங்கை முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஜெனீவா நகரில் திரண்டுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழுவினர், இலங்கை நியமித்த, கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் (எல்.எல்.ஆர்.சி.,) பரிந்துரைகள் எவ்விதத்தில் அமல்படுத்தப்பட உள்ளன என்பதை விளக்கும் வகையில் ஒரு திட்டத்தை, கவுன்சிலில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். அத்திட்டத்தை தயாரிக்கும் முயற்சியில் முழு மூச்சாக இறங்கியுள்ளனர் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களை (இலங்கை பக்சே, இந்தியாவில் மோடி) போன்ற போர்குற்றவாளிகளை தண்டிப்பது யார்?, ஐ நா வில் பக்சே எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளார்கள்,. அமெரிக்காவை பார்க்க பல முறை முயற்சித்தார் மோடி தூதரக அதிகார்கள் நீ ஒரு தீவிரவாதி என்று பாஸ்போர்ட்டை திருப்பி கொடுத்திருக்கிறார்கள் கொடுக்கும்போது இனி முயற்சிக்க வேண்டாம் என்று சொல்லி அவமான படுத்தி அனுப்பி இருக்கிறார்கள் தூதரக அதிகார்கள்.

விஜய்க்கு பிடித்தது ஆக்சனா! அரசியலா!?

ஆக்சனா அரசியலா என்று குழம்பி இருந்த ரசிகர்களுக்கு விஜய் அளித்த பேட்டியின் சுருக்கம்:

ஷங்கர் சாருடன் ஒர்க் பண்ணியது ஒரு வித அனுபவம். அதேபோல் முருகதாஸின் படம் எடுக்கும் பாணி ஒருவிதம். இரண்டு பேருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய மக்கள் இயக்கம் குறித்து கூறுகையில், இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை தென் மாவட்டங்களில் உள்ளவர்களை ரெகுலரா சந்தித்து பேசி வருகிறேன்.

மக்களுக்கான நற்பணிகளை மக்கள் இயக்க சகோதரர்கள் சிறப்பாக செய்து கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் கூட எங்கள் இயக்கத்தினர் தானே புயலுக்கு உதவி செய்தது உங்களுக்கு தெரியும். ரசிகர் மன்றமா இருந்ததை, என் அப்பா மக்கள் இயக்கமாக மாற்றி இருக்கிறார். அதை இப்போது வலிமைப்படுத்தி கொண்டு இருக்கிறோம்.

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. உடனே எதிர்காலத்தில் அரசியலில் குதிக்க போறதா இந்த பதிலை நீங்களா யூகம் பண்ணகூடாது. அரசியல் பற்றி இப்போதைக்கு எதுவும் கேட்காதீங்க ப்ளீஸ் என்றும், ரசிகர்கள் என்னை எப்பவும் ஆக்ஷ்ன் ஹீரோவாகத்தான் பார்க்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

Wednesday, March 14, 2012

கை பேசி வசதி உள்ளாவர்களிடம் கழிப்பறை வசதி இல்லை இந்தியாவில்?

புதுடெல்லி: புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்தியாவில் ஒவ்வொரு வீடுகளிலும் இருக்கும் வசதிகளை குறித்த புள்ளிவிபரங்களை பட்டியலிட்டு நேற்று மத்திய உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

கிராமப்புறங்களில் 65 சதவீதம் பேருக்கு விறகுதான் அடுப்பு எரிக்க உதவும் எரிபொருளாகும். 45 சதவீதம் பேருக்கு வாகனம் சைக்கிள் ஆகும்., பத்தில் ஒருவரின் வீட்டில் கம்ப்யூட்டர் உள்ளது., இணையதள தொடர்பு இருப்போர் 3 சதவீதம் மட்டுமே., இந்தியாவில் 24.66 கோடி வீடுகள் உள்ளன.

இவற்றில் 46.9 சதவீதம் பேருக்கும் வீடுகளில் டாய்லெட்(கழிப்பறை) இல்லை.,பாதிபேரும் காலைக் கடன்களை நிறைவேற்ற வெளிப் புறங்களை நாடுகின்றனர்., 3.2 சதவீதம் பேர் பொது கழிப்பறைகளை உபயோகிக்கின்றனர்.

இந்தியாவில் 63.2 சதவீதம் வீடுகளுக்கு ஃபோன் வசதி உள்ளது., இவற்றில் 53.2 சதவீதம் மொபைல் ஃபோன்களாகும்., ஜார்கண்டில் 77 சதவீத வீடுகளுக்கும் டாய்லெட், பாத்ரூம் இல்லை. இதில் ஜார்கண்டிற்கு அடுத்து ஒரிஸ்ஸாவும், பீகாரும் உள்ளன.

டெலிகம்யூனிகேஷனில் முன்னணியில் இருக்கும் பகுதி யூனியன் பிரதேசமான லட்சதீவு ஆகும். அங்கு நூற்றுக்கு 93-94 வீடுகளிலும் ஃபோன் வசதி உள்ளது. டெல்லி லட்சதீவை விட பின் தங்கியே உள்ளது. டெல்லியில் நூறு வீடுகளில் 90-91 வீடுகளில் மட்டுமே ஃபோன் வசதி உள்ளது.

வீடுகளில் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை 16 சதவீதம் அதிகரித்துள்ளது (இதில் பெரும்பாலும் முன்னணியில் இருப்பது தமிழகமாக இருக்கலாம்-இலவச டிவி) ரேடியோ உபயோகம் 15 சதவீதம் குறைந்துள்ளது.

கார் இந்தியாவில் 5 சதவீதம் பேரிடம் மட்டுமே உள்ளது., ஐந்தில் ஒருவர் பைக்/சைக்கிள் உபயோகிக்கின்றனர்., சைக்கிள் 45 சதவீதம் பேரிடம் உள்ளது. ஆனால் இத்தகைய வாகனங்கள் இல்லாத குடும்பத்தினர் 18 சதவீதம் ஆகும்.

நகரத்தைச் சார்ந்தவர்களில் 67 சதவீதம் பேரும் வங்கி வசதியை உபயோகிக்கின்றனர். கிராமப் புறங்களில் 54 சதவீதம் பேருக்கு இந்த வசதி இல்லை. போதுமான வங்கி வசதிகள் இல்லாத 296 மாவட்டங்கள் இந்தியாவில் உள்ளன. ஆறு லட்சம் கிராமங்களில் ஐந்து சதவீதமே வங்கிக் கிளைகள் உள்ளன.

இந்தியாவில் பாதி குடும்பத்தினருக்கே வீட்டில் குடிநீர் வசதி உள்ளது. 36 சதவீதம் பேர் அரைகிலோ மீட்டராவது நடந்து சென்று தண்ணீரை பெறுகின்றனர். ஆனாலும், குழாய்நீர், ஆழ்கிணறு நீர் என குடிநீர் வசதி 87 சதவீதம் பேருக்கு உள்ளது.

இந்தியாவில் 3 இல் ஒரு வீட்டிற்கு இதுவரை மின்சாரம் சென்று அடையவில்லை. சமையலறையில் எரிபொருளாக விறகை 3 இல் 2 பேர் உபயோகிக்கின்றனர். மண்ணெண்ணெய் உபயோகிப்போர் 3 சதவீதம் ஆகும்.

சமையல் எரிவாயுவை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 18 சதவீதம் அதிகரித்துள்ளது. 29 சதவீதம் பேர் சமையல் எரிவாயுவை பயன்படுத்துகின்றனர். தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதீதமாக இருந்தபோதிலும் மக்கள் தொகையில் பாதிபேரும் வெளியிடங்களை கழிப்பறை வசதிகளுக்காக உபயோகிப்பது புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு முடியும் வேளையில் சவாலாக தொடருகிறது.

இதற்கு பாரம்பரிய காரணங்கள், கல்வி அறிவின்மை, வறுமை, சுத்தமின்மை ஆகியன காரணங்களாகும் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு கமிஷனர் சி.சந்திரமவுலி கூறினார்.

வெளிநாட்டு கம்பெனிகளுடன் போட்டி புற்று நோய்க்கான மருந்து

புதுடெல்லி: 2.84 லட்சம ரூபாய் மதிப்புடைய புற்று நோய்க்கான மருந்து ரூ.8880 க்கு விற்பனைச் செய்ய மத்திய அரசு ஹைதராபாத்தை மையமாக கொண்டு இயங்கும் நாட்கோ ஃபார்மாவுக்கு(Natco Pharma) அனுமதி அளித்துள்ளது.

ஜெர்மன் பன்னாட்டு நிறுவனமான பேயர் கார்ப்பரேசன்(Bayer Corporation) தயாரிக்கும் நெக்ஸாவர்(Nexavar 200mg) 200 எம்.ஜி என்ற மருந்து தற்பொழுது கிடைக்கும் விலையில் 30 மடங்கு குறைந்த விலைக்கு தயாரிக்கவும், விற்பனைச் செய்யவும் ஹைதராபாத்தில் உள்ள மருந்து கம்பெனிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்திய காப்புரிமை(patent right) சட்டத்தின் 84-வது பிரிவு அடிப்படையில் மத்திய அரசு இந்திய நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

120 மாத்திரைகள் அடங்கிய நெக்ஸாவரின் விலை பாக்கெட் ஒன்றிற்கு 2.84 லட்சம் ரூபாய் ஆகும். இது நுரையீரல், கிட்னி கான்ஸரால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான மருந்தாகும்.

அதேவேளையில் இந்தியாவில் காப்புரிமை கட்டுப்பாட்டாளரின் முடிவு தங்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளதாகவும், தங்களது அறிவு சார்ந்த சொத்துரிமையை(intellectual patent rights) பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை குறித்து ஆலோசித்து வருவதாகவும் பேயர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

2008-ஆம் ஆண்டு பேயர் நிறுவனத்திற்கு காப்புரிமை வழங்கிய பிறகும் தேவைக்கு மருந்து அளிக்காத சூழலில் இந்திய நிறுவனத்திற்கு காப்புரிமையை வழங்கியதாக காப்புரிமை கட்டுப்பாட்டாளர் (patent controller) பி.ஹெச்.குரியன் கூறியுள்ளார்.

உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தப்படி தேவைப்பட்டால் தேசிய அரசுக்கு கட்டாய லைசென்ஸ் வழங்க உரிமை உண்டு.

Tuesday, March 13, 2012

இலவசம் கொடுத்து இடம் பிடிக்க பார்க்கும் ஜெயா! ஸ்டாலின்!!

சங்கரன்கோவில், மார்ச்.14: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிவு முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டுவதாக அமையும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சங்கரன்கோவிலில் 2-வது நாளாக பிரசாரம் மேற்கொண்டுவரும் ஸ்டாலின் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், எப்படியும் இந்த தேர்தலில் வெற்றி பெற பல கோடிகளை (இலவசம்-பணம், பொருள்கள்) ஜெயலலிதா சிலவு செய்கிறார்.

இத்தேர்தல் ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டும் விதத்தில் இருக்கும். தலைமை செயலகத்தை புதிய கட்டிடத்தில் இருந்து கோட்டைக்கு மாற்றினார்கள். தற்போது சங்கரன்கோவிலுக்கு மாற்றியுள்ளார்கள் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், திருமங்கலம் இடைத்தேர்தலைப் போன்று அழகிரியும் நானும் கூட்டாக பிரசாரம் செய்வோம். வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி உள்பட அனைத்து கிராமங்களிலும் பிரசாரம் செய்ய உள்ளேன் எனத் தெரிவித்தார்.

வாய்ப்பிழந்த வாய்கொழுப்பு நடிகரின் வறட்டு கவுரவம்?

தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடியனாக வலம் வந்த வடிவேலு, தி.மு.க.,வுக்கு ஆதரவாக சட்டசபை தேர்தலில் பிரச்சாரம் செய்யப்போய், அதன்பிறகு அவர் சந்தித்த பிரச்னைகள் எல்லாம் அனைவருக்கும் தெரிந்தது தான்.

இப்போது படவாய்ப்பு இன்றி தவித்து வரும் வடிவேலுவுக்கு, அமெரிக்காவில் தமிழ் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் பங்கேற்க அழைப்பு வந்திருக்கிறது. ஏற்கனவே பலமுறை இதுபோன்ற அழைப்புகள் வந்தபோது வடிவேலு சினிமாவில் பிஸியாக இருந்ததால் பங்கேற்க முடியவில்லை. இப்போது படவாய்ப்பு இல்லாததால் அவரும் பங்கேற்க ஓ.கே. சொல்லிவிட்டார்.

இது விழா குழுவினருக்கு ஒரு பக்கம் சந்தோஷத்தை ஏற்படுத்தினாலும், அதற்கு அடுத்து வடிவேலு கேட்ட டிமாண்ட், விழா குழுவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. நிகழ்ச்சியில் பங்கேற்க வடிவேலு ரூ.25 லட்சம் கேட்டாராம். இவ்வளவு பணம் கொடுத்து வடிவேலுவை விழாவுக்கு அழைத்து வர யாருக்கும் விருப்பம் இல்லையாம், அதனால் வடிவேலு இல்லாமலேயே விழாவை நடத்த முடிவு செய்துள்ளார்களாம்., வாய்கொழுப்பு நடிகரின் வறட்டு கவுரவம் சொல்லி மாலல என்கிறது கோடம்பாக்கம்.

Monday, March 12, 2012

தீவிரவா (தி) தத்துக்கு துணை போகாத இந்திய மக்கள்!

புதுடெல்லி: 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பா.ஜ.க ஆட்சியை பிடிப்பது சிரமமான காரியம் என்று சங்க்பரிவாரங்களின் தலைமை அமைப்பான ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ ஏடுகளான ‘ஆர்கனைசர்’ மற்றும் ‘பாஞ்சசன்யா’ ஆகியவற்றின் தலையங்கங்களில் இது தொடர்பாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

‘உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸின் அதே நிலைமை பா.ஜ.கவுக்கும் ஏற்பட்டுள்ளது. தொண்டர்களை விட பா.ஜ.கவில் தலைவர்கள்தாம் அதிகம். உ.பியில் மக்களுடனான உறவை பா.ஜ.க இழந்துவிட்டது’ என ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது.

2007 உ.பி சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற சீட்டுகளை விட தற்பொழுது 4 இடங்கள் குறைவாகவே பா.ஜ.க வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. உ.பி தேர்தலில் 47 இடங்கள் மட்டுமே அக்கட்சிக்கு கிடைத்தன.

இந்தியாவில் எங்கும் தோல்விகளே ஹிந்துத்துவவாதிகளுக்கு., தீவிரவாதத்தால் ஒன்றும் இந்தியாவில் (கோயில் கட்டுவேன் கும்பாபிசேகம் பண்ணுவேன்) செய்ய முடியாது என்பதை உணர்ந்தால் சரிதான் ஹிந்துத்துவவாதிகள்.

தெலுங்கில் தம்மு கட்டிய த்ரிஷா!!

நடிகை திரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்குப்படமான தம்மு படத்தில் அவர் துணிச்சலாக கவர்ச்சி காட்டியுள்ளார். இதுவரை நடித்த கவர்ச்சி எல்லையை இப்படத்தில் தாண்டி உள்ளதாக தெலுங்கு பட உலகம் கிசு கிசுக்கிறது.

ஆபாச படத்தில் நடிப்பது போன்று ஆடைகளை களைந்து ஒரு காட்சியில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதேநேரம் புதுமுக நடிகைகளின் போட்டியை சமாளிக்கத்தான் த்ரிஷா இதுபோன்ற காட்சிகளில் நடிக்க சம்மதித்து இருப்பதாகவும் திரையுலகில் பேசப்படுகிறது.

இதனால் கோபமடைந்த த்ரிஷா பேட்டியொன்றில், என்னை இளமையாக காட்ட கவர்ச்சி காட்சிகளில் துணிந்து நடிப்பதாக வெளியான செய்திகள் தவறானவை. தம்மு படத்தில் கதைக்கு தேவைப்பட்டதால் அப்படி நடித்தேன். படத்திற்கும், கதைக்கும் தேவைப்பட்டால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன், என்று கூறியிருக்கிறார்.

Sunday, March 11, 2012

இந்தியாவின் சூப்பர் பவர் கனவு நிறை வேறுமா...??

லண்டன்: உலகில் வல்லரசாக மாறவேண்டும் என்று கனவு காணும் இந்தியாவின் விருப்பம் அவ்வளவு எளிதாக நிறைவேறாது என்றும், அதற்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கணாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயன்ஸ் ஆய்வு இந்தியாவின் கனவுகளுக்கு கரி நிழலை சாத்துகிறது.

ஜனநாயகம், பொருளாதார வளர்ச்சி ஆகிய விஷயங்களில் இந்தியா வெகுவாக முன்னேறிய பொழுதும் உள்நாட்டு பிரச்சனைகள்தாம் இந்தியாவின் சூப்பர் பவர் நம்பிக்கைக்கு தடைகற்களாக மாறியுள்ளதாக ஆய்வு கூறுகிறது.

தீவிரமான ஊழல், திறமையற்ற ஆட்சியாளர்கள், பணக்காரர்-ஏழை இடைவெளி, சமூக மோதல்கள், உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், மத தீவிரவாதம் ஆகியன பலகீனத்திற்கு காரணமான காரணிகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு, நிர்வாகம், கலாச்சாரம், சுற்றுச்சூழல், சமூகம் ஆகிய துறைகளில் விரிவான ஆய்வை நடத்தி ஒன்பது வல்லுநர்கள் இணைந்து இந்தியா அடுத்த வல்லரசா? என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையை தயாரித்துள்ளனர்.

உள்நாட்டு பலகீனங்களில் உழலும் இந்தியாவுக்கு உலக வல்லரசு என்ற தகுதியை பெறுவதோ, சீனாவின் செல்வாக்கிற்கு இணையாக மாறுவதோ எளிதானதல்ல என அந்த ஆய்வு கூறுகிறது. நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்லும் அடிப்படை பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் சூப்பர் பவரை குறித்து கனவு காண்பது என்பது இந்தியாவுக்கு உகந்தது அல்ல என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

லண்டன் ஸ்கூல் வரலாற்றுப் பிரிவில் பேராசிரியர் ராமச்சந்திர குஹா, ராஜீவ் சிபல், இஷ்கந்தர் ரஹ்மான், நிகோலஸ் ப்ளேரல், ஓலிவர் ஸ்ட்ரூங்கல், ஹாரிஸ் வாங்கடே, முகுலிகா பானர்ஜி, ஆண்ட்ரூ சாஞ்சஸ் மற்றும் சந்தீப் சென்குப்தா ஆகியோர் ஆய்வறிக்கையை தயாரித்துள்ளனர்.

மாவோயிஸ்டுகளின் ஆயுத போராட்டம், தீவிர ஹிந்துத்துவா வாதிகளின் வகுப்புவாத மனோபாவம், தரமில்லாத அரசியல் தலைமை, பொறுப்புணர்வு இல்லாத ஊடகங்கள், வளங்கள் அளவுக்கு அதிகமாக சுரண்டப்படல், அரசியல் கூட்டணிகளின் காரணமாக உருவாகும் பொருத்தமில்லாத கொள்கைகள் ஆகியன இந்தியாவின் முக்கிய சவால்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

பன்முகத் தன்மையில் ஒருமை என்ற இந்தியாவின் சிறப்பை பாதுகாக்கும் நிறுவனங்கள் ஒவ்வொன்றின் பழுதுகளை சரி செய்வதும், புதிய நிறுவனங்களை உருவாக்குவதும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஒரே வழியாகும். இது கடினமான தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அதிக காலம் தேவைப்படும் பணியாகும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சர்வதேச அளவில் இந்தியாவின் பொருளாதார பலம் பிரதிபலிக்க இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது என்று பொருளாதார வல்லுநர் டி.ராஜீவ் சிபல் கூறுகிறார்.

சர்வதேச அளவில் தீரமிக்க முடிவுகளை எடுக்காமல் தயங்கி நிற்கும் இந்தியாவின் முன்னால் வளர்ச்சி சிரமமானது என்று இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையை குறித்து ஆய்வுச் செய்த ஓலிவர் ஸ்ட்ரூங்கல் கூறுகிறார்.

Saturday, March 10, 2012

கருப்பு பட்டியலில் இஸ்ரேலிய ராணுவ தொழிற்சாலை?

டெல்லி: இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான ராணுவ வர்த்தகம் சூடு பிடித்துள்ள நிலையில் இஸ்ரேலின் முக்கிய ராணுவ தளவாட உற்பத்தியாளரான இஸ்ரேல் ராணுவ தொழிற்சாலை (Isreal military industries ) இந்தியாவால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனம் ஒப்பந்தங்களை பெற லஞ்சம் தொடர்பான வேளைகளில் ஈடுபடுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளதால் இந்தியா இந்த முடிவினை எடுத்துள்ளது.

இஸ்ரேலின் நிறுவனம் உட்பட மேலும் ஐந்து நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் செய்தி குறிப்பு குறிப்பிடுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தங்களுக்கு இந்த 6 நிறுவனங்களில் நடக்கும் தில்லுமுல்லுகள் குறித்து தெளிவான ஆதாரம் கிடைத்துள்ளதை வைத்து தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் இஸ்ரேல் ராணுவ தொழிற்சாலை தரைப்படை, கப்பற்படை மற்றும் வான் படைகளுக்கு தேவையான ஆயுதங்களை தயாரித்து அளிக்கும் நிறுவனம் ஆகும். மேலும் இந்நிறுவனம் இஸ்ரேலின் அரசுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இஸ்ரேல் நிறுவனம் உட்பட கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் தாங்கள் ஒப்பந்தம் பெற சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்வதாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளது என்று சி.பி.ஐ யும் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு டாட்டா அஜ்மலுக்கு பேட்டா!!

டைரக்டர் ருத்ரன், வெற்றி செல்வன் என்ற பெயரில் ஒரு புதிய படத்தை உருவாக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் அஜ்மலும், அவருக்கு ஜோடியாக ராதிகா ஆப்டேவும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் கதையை முதலில் விஜய்க்காக தான் உருவாக்கினாராம் டைரக்டர் ருத்ரன். கதையையும் விஜய்யிடம் கூற அவரும் நடிப்பதாக சொல்லியிருந்தார். இந்நிலையில் சில பல காரணங்களால் விஜய் நடிக்க முடியாமல் போக, அவருக்கு பதிலாக அஜ்மலை நடிக்க வைத்திருக்கிறார்.

இப்படத்தின் சூட்டிங் வளர்ந்து வருகிறது. மதன் கார்கி பாடல் வரிகள் எழுத, மணிசர்மா இசையமைத்து வருகிறார். முன்னதாக இப்படத்திற்கு 3வது முறையாக தலைப்பை மாற்றியிருக்கிறார் இயக்குநர்., ஏற்கனவே ரணம் என்று வைத்து, பின்னர் சத்யவான் என்று மாற்றி, இப்போது வெற்றி செல்வன் என்று வைத்திருக்கிறார்.

Friday, March 9, 2012

நாப்கின் வழங்கி சாதனை படைக்கப்போகும் ஜெயா! தேர்தல் ஸ்பெஷல்?

தமிழகம் முழுவதும் கிராமப்புற வளர் இளம் பெண்களின் சுகாதாரத்தை காக்க இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் ரூ.42 கோடியில் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்படி, மாநிலம் முழுவதும் கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் 10 முதல் 19 வயதுள்ள வளர் இளம் பெண்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதற்கிடையில், பிரசவிக்கும் தாய்மார்கள் 7 லட்சம் மற்றும் 700 பெண் சிறை கைதிகளுக்கும் சேர்த்து கிராமப்புற பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது.

அதன்படி, சுமார் 40 லட்சம் பேருக்கு சானிட்டரி நாப்கின் வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின்படி, 2 மாதத்துக்கு ஒரு முறை 3 பாக்கெட் அடங்கிய 18 நாப்கின்கள் வழங்கப்படும்.

மேலும், நலவாழ்வு புத்தகம் ஒன்று தனியாக அளிக்கப் படும். அதில், வளர் இளம்பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் இடம்பெற்றிருக்கும். நாப்கின்கள் வழங்கும் தேதியும் குறிக்கப்படும்.

‘புது யுகம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் மாணவிகளுக்கு அந்தந்த பள்ளியில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும். அதேபோல் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அரசு மருத்துவமனை மற்றும் சிறை அதிகாரிகள் மூலம் மற்றவர் களுக்கு நாப்கின் வழங்கப்படும். ‘புது யுகம்’ திட்டத்தை மார்ச் 26க்குள் முதல்வர் தொடங்கி வைப்பார் என்று சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அன்றாட தேவைகளை விட்டுவிட்டு (மின்சாரம்,பால், பஸ் கட்டணம்) ஆடு கொடுக்கிறேன் ஆட்டுக்கல் கொடுக்கிறேன் என்று தேர்தல் பயத்தில் உளறிக்கொண்டு அலைகிறார் முதல்வருக்கு தகுதி அற்ற முதல்வர்.

ஹீரோக்களை வளைக்க கற்று வைத்திருக்கும் அங்காடித்தெரு நாயகி!!

"அங்காடித்தெரு’ அஞ்சலி என்பதே பெயராக மாறும் அளவிற்கு அந்த படத்தின் மூலம் புகழ்பெற்றார் நடிகை அஞ்சலி. கற்றது தமிழ், அங்காடித்தெரு படங்களுக்காக பிலிம் ஃபேர் அவார்ட் வாங்கினார் அதன் பின் மங்காத்தா எங்கேயும் எப்போது என எல்லாமே வெற்றிப் படங்கள் தான்.

முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கும் அளவிற்கு மார்கெட் வளர்ந்த பிறகு “யாரையாவது காதலிக்கிறீர்களா?“ என்பது அனைத்து நடிகைகளிடமும் கேட்கப்படும் கேள்வி தான் என்றாலும் அஞ்சலியிடம் கேட்காமல் விடவில்லை.

இந்த கேள்விக்கு அஞ்சலி “ ஆம் நான் கூட காதலிப்பேன். எல்லா நடிகர்களையும் காதலிப்பேன். அனைத்து நடிகர்களுடனும் நடித்து படத்தில் அவர்களை காதலித்துவிடுவேன். அதன் பிறகு தான் என் வாழ்வின் உண்மையான ஹீரோவை கண்டுபிடிக்க வேண்டும்“ என்று சிரித்த முகமாக பதிலளித்தார்.

அஞ்சலி அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் மசாலா கஃபே என்ற படத்தில் விமல், சிவா என இரண்டு கதாநாயகன்களுடன் நடிப்பதை பற்றி பேசும்போது அதை விடுங்க சார் என்று ஆர்வத்துடன் அஞ்சலி பேசுவது அவர் நடிக்கும் தெலுங்கு படத்தை பற்றித் தான்.

“மகேஷ் பாபு, வெங்கடேஷ் ஆகிய இரு டிரெண்ட்செட் தெலுங்கு நடிகர்களும் இணையும் படம் “சீதம்மா வகிட்லோ ஸ்ரீமல்லி செட்டு“. இந்த படத்தில் சீதம்மா என்ற கேரக்டரில் தான் நான் நடிக்கிறேன்“ என்று பெருமிதம் அடைகிறார். இந்த படம் தனக்கு நல்ல பிரேக்காக அமையும் என்பது அஞ்சலியின் எதிர்பார்ப்பு., ஹீரோக்களை எப்படி வளைக்கலாம் என்று அங்காடித்தெரு நாயகி கற்று வைத்துள்ளார். ஆல்த பெஸ்ட் அஞ்சலி.

Thursday, March 8, 2012

மகளிர் தின ஸ்பெஷல்!!

பெரம்பலூர்: இன்பத்தை கருவாக்கினாள் பெண், உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண், விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் விலையற்ற செல்வம் பெண் என்ற பாடல் வரிகள் பெண்ணின் பெருமையை விவரிக்கின்றன.

மனைவி, தாய், குடும்பத் தலைவி என பல பரிணாமங்களாக பெண்கள் திகழ்கின்றனர்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காட்டில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பில் மாபெரும் பெண்கள் விழுப்புணர்வு கருத்தரங்கம் MGM கோல்டன் மஹாலில் மார்ச் 3 தேதி மாலை 3:15 மணியளவில் கருத்தரங்கு நடைபெற்றது.

நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாவட்டத் தலைவர் ஆ.மெகராஜ் பேகம் ஆலிமா தலையுரையாற்றினார். NWF இன் மாநில தலைவர் A. பாத்திமா ஆலிமா மற்றும் மாநில செயலாளர் ரஜியா பானு ஆலிமா ஆகியோர் பெண்கள் விழிப்புணர்வு குறித்து சிறப்புரை ஆற்றினர்.

இக்கருத்தரங்கு நிகழ்ச்சியில் 600 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

புத்துணர்வுக்கு ஆரஞ்சு மிஸ் பண்ணிடாதிங்க!!

எல்லா சீசனிலும் மக்களை தேடி வரும் பழங்களுள் ஒன்று... ஆரஞ்சு. பல நோய்களை முன்கூட்டியே வராமல் தடுக்கும் மகத்துவமும் இதில் உண்டு. சில உணவுகளை சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன.

இந்த பித்த நீர், ரத்தத்தில் கலந்து ரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்து விடுகிறது. இதனால் ரத்தம் அசுத்த மடைகிறது. மேலும், பித்த நீர், தலைக்கேறி கண் பார்வை நரம்புகளை பாதிப்படையச் செய்கிறது. அதோடு ஞாபக மறதியும் ஏற்படுகிறது. சருமத்தை பாதித்து சுருங்கச் செய்கிறது. தலைமுடி நரைக்கச் செய்கிறது.

இதுபோல் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகளை 300 கலோரி அளவு சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து ரத்தத்தை பரிசோதித்துப் பார்த்தால் பித்த நீர் அதிகம் சுரந்து ரத்தத்தில் கலந்திருப்பதை அண்மையில் கண்டறிந்துள்ளனர். இந்த பித்த நீர் அதிகம் சுரப்பதை தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழங்களில் முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது ஆரஞ்சு.

ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டவர்களின் ரத்தத்தில் பித்த நீரில் அளவு குறைவாக இருப்பது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரஞ்சு பழச்சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கிறது. உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.

ஸோ... ஆரஞ்சை எங்கேப் பார்த்தாலும் `மிஸ்' பண்ணிடாதீங்க...

Wednesday, March 7, 2012

விஜய்க்கு தம்பி என்ற செய்தியால் கோபத்தின் உச்சியில் இயக்குனர்!

துப்பாக்கிப் படத்தில் இளையதளபதிக்கு தம்பியாக ஜெய் நடிக்கிறார் என்று வெளியானது செய்தியல்ல.. வெறும் வதந்தி தான் என்று தெளிவுபடுத்தியுள்ளார் அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.

துப்பாக்கிப் படத்தில் ஜெய் நடிக்கவேயில்லை. மேலும், விஜய்க்கு தம்பி என்ற ஒரு கதாபாத்திரமே படத்தில் இல்லை. இவ்வாறு இருக்கும் போது இப்படி ஒரு புரளி எவ்வாறு கிளம்பியது என்று கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் இயக்குனர்.

புரளிகளுக்கு பதில் சொல்வதற்காகவே பிளாக்குகளையும், டிவிட்டர் பக்கங்களையும் சினிமா உலகத்தினர் அதிகமாக பயன்படுத்த வேண்டி உள்ளது என்றும் அவர் வருத்தப்படுகிறார்.

துப்பாக்கிப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் ஆக்சன் ஹீரோவாக மிளிர்கிறார் என்கிறது படக்குழு.

Tuesday, March 6, 2012

தேர்தல் கோவாவை தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் ஒதுக்கப்பட்ட

டெல்லி: மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவின் படி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் முலாயாம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அக்கட்சியின் வேட்பாளர்கள் 224 தொகுதிகளில் வென்றுள்ளனர்.

இரண்டாவது இடத்தை ஆளும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், 3வது இடத்தை பாஜகவும் பிடித்துள்ளன. காங்கிரஸ் 4வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற கட்சிகளின் விபரம்:

உத்தர பிரதேசம் » சமாஜ்வாடி வெற்றி- 224

உத்தரகண்ட் » காங்கிரஸ் ‌வெற்றி- 32

பஞ்சாப் » அகாலி அணி வெற்றி- 68

மணிப்பூர் » காங்கிரஸ் வெற்றி- 42

கோவா » பா.ஜ., வெற்றி- 26

கோவாவை தவிர மற்ற எல்லா மாநிலங்களும் டெபாசிட் இழந்த ப ஜ க., மதத்ததை வைத்து ஆட்டம்போடும் ப ஜ க (ஹிந்துத்துவா கட்சிகளுக்கு) பெரிய அ(இ)டி .

(தேர்தல் முடிவுகளால் போயஸ் கார்டனில் இப்போதே கிளி பிடிக்க ஆரம்பித்துள்ளது.)

கண் பார்வைக்கும் உடல் சருமத்திற்கும் முட்டைக்கோஸ்

கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது.

மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.

சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.

வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.

எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.

நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.

உடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். குடல் சளியைப் போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். மயிர்க்கால்களுக்கு பலம் கொடுக்கும்.

முட்டைகோஸின் பயன்களை அறிந்து அதனை நம் உணவில் சேர்த்து நீண்ட ஆரோக்கியம் பெறுவோமாக..நாம்!

Monday, March 5, 2012

சினிமாவில் ஆட்டம்போட்ட குஷ்பூ இப்போ ஐ நா வில்?

நாட்டின் எதிர்காலமே அடுத்த தலைமுறையினரான இளைஞர்களின் கையில்தான் ஒப்படைக்கப்பட உள்ளது. 2013 இளைஞர்களின் தன்னிகரற்றத் திறமையை வெளிக்கொணர வேண்டும். அதற்கான சிறப்புக்கூட்டம் ஐ.நா. சபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்து கொள்ளவும், இளைஞர்களைப் பற்றியும், இளைய தலைமுறையினர் பற்றியும் சிறப்பு‌ரையாற்ற அழைப்பு விடுத்திருந்தனர்.

2013ல் இளைய தலைமுறையினரின் 70 சதவீத ஆற்றலை நாட்டின் வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் உபயோகிப்பது என்பது பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டு பேச வாய்ப்பளித்தமைக்கு ஐ.நா. சபைக்கு தமிழர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகில் தினமும் 20 டாலருக்கு குறைவாக வருமானம் உள்ள அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்த, இளைஞர்களை எத்தகைய முயற்சியில் ஈடுபட வைக்க வேண்டும் என்று பேச போகிறேன். அதற்கான கூட்டம் மார்ச் 15ம் முதல் 18ம் தேதி வரை ஐ.நா. சபை சார்பில், கென்யாவில் உள்ள நைரோபியில் நடைபெற இருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக கென்யாவுக்கு கிளம்புகிறேன்.

இன்றைய உலகின் ஒவ்வொருவரின் வெற்றியிலும் இளையதலைமுறையினரின் பங்கு அதிகம் இருக்கிறது. அது தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற கருத்தை பிரதிபலிப்பேன் என்று கூறியுள்ளார்.

மகாத்மா காந்தி கனவுகண்ட இந்தியா வேண்டுமா! இல்லை..!?

வாஷிங்டன்: இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மத சுதந்திரத்தை புனரமைக்க வேண்டும் என்று கோரி அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோத்ரா ரெயில் பெட்டி எரிப்பு சம்பவத்தின் 10-வது ஆண்டு நினைவு தினத்தில் கெய்த் எலிஸன் என்பவர் இத்தீர்மானத்தை கொண்டுவந்தார்.

டெமோர்க்ரேட்டுகளின் பிரதிநிதியான எலிஸன், 2007 முதல் பிரதிநிதிகள் சபையில் உறுப்பினர் ஆவார். மேல் நடவடிக்கைக்காக தீர்மானம் வெளியுறவு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குஜராத் இனப் படுகொலையில் கொலைச் செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் மோடியின் அரசு எடுக்கவில்லை என்று தீர்மானம் குற்றம் சாட்டுகிறது.

குஜராத்தில் மத சுதந்திரம் மறுக்கப்பட்டதை தொடர்ந்து 2005-ஆம் ஆண்டு நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா மறுத்தது. 1998-ஆம் ஆண்டு சர்வதேச மத சுதந்திர சட்டத்தில் இதற்கான அனுமதி உள்ளது என்று தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது. இத்தீர்மானத்தை இந்திய-அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் வரவேற்றுள்ளது. இனப் படுகொலையில் கொலைச் செய்யப்பட்டவர்கள் மீதான மிக சிறந்த மதிப்புதான் இந்த தீர்மானம் என்று கவுன்சிலின் அறிக்கை கூறுகிறது.

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடைபெற்ற வகுப்புக் கலவரங்களின் 10-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக அமெரிக்காவில் சனிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட இந்திய அமைப்புகள் ஒன்றிணைந்து, மெழுகுவர்த்தி ஏந்தி மோடிக்கு எதிராகவும், கலவரத்தின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டியும் கோஷமெழுப்பினர்.

"இனப்படுகொலைகளுக்கு எதிரான கூட்டமைப்பு' என்ற அணியாக 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டிருந்தனர். மன்ஹாட்டனில் நடைபெற்ற இந்தப் போராட்டம் காந்தி சிலைக்கு அருகில் நடபெற்றது.

குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும், குற்றவாளிகளை நீதிக்கு முன்னால் நிறுத்த வேண்டும் என்றும் இவர்கள் வலியுறுத்தினர். பெண்களும், சிறுவர்களும் மோடிக்கு எதிராகவும், குஜராத் அரசுக்கு எதிராகவும் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட "இந்திய-அமெரிக்க முஸ்லிம் கவுன்சிலின்' கிழக்குப் பகுதியின் துணைத் தலைவர் முகமது யூசுப் கடானி, "காந்தி கனவு கண்ட இந்தியா வேண்டுமா" அல்லது மோடியின் இந்தியா வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கவே காந்தி சிலைக்கு அருகில் போராட்டம் நடத்துவதாகத் தெரிவித்தார்.

அமெரிக்காவின் மக்கள் பிரதிநிதிகள் சபையில், குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கப்படவில்லை என்றும், மாநிலத்தில் மதச் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்று சமீபத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்தச் சூழ்நிலையிலேயே மோடிக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றுள்ளது.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!