Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, February 29, 2012

வதந்திகளை ஒதுக்கிவிட்டு துப்பாக்கியில் சுறுசுறுப்பாகி விட்ட விஜய்!

துப்பாக்கி படத்தை பற்றி தினம் ஒரு செய்தி வெளிவந்து கொண்டு இருக்கிறது. இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு சுறுசுறுப்பாக பாடலில் இறங்கிவிட்டார் விஜய்.

துப்பாக்கியில் விஜய் ஹீரோவாக நடித்து இருப்பதுடன், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அசத்தலான பார்ட்டி சாங் ஒன்றும் பாடியிருக்கிறார்.

இதுகுறித்து ஹாரிஸ் தனது ப்ளாக்கில் கூறியிருப்பதாவது, சும்மா ஒரு முயற்சியாகத்தான் விஜய்யை பாட வைத்தோம். ஆனால் அதுவே ரொம்ப நன்றாக வந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். மேலும் ரெக்காரீடிங் தியேட்டரில் விஜய் பாடிய போட்‌டோவையும் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே விஜய் பல படங்களிலும், ரசிகர்களின் விருப்பத்திற்காக பல மேடைகளிலும் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிம்ம சொப்பனமாக உலவிய ஹாக்கர்ஸ் சிக்கினார்கள்! இண்டர்போல்

பாரிஸ்: உலக நாடுகளுக்கு தலைவலியை ஏற்படுத்திய ஹாக்கர்களின் குழு சிக்கியுள்ளது. தென் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நடந்த தீவிர பரிசோதனையில் ஹாக்கர்கள் என சந்தேகிக்கப்படும் இருபத்தைந்து நபர்கள் இண்டர்போல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனானிமஸ் ஹாக்கர் மூவ்மெண்ட் என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் கைதாகியுள்ளதாக கருதப்படுகிறது.

அர்ஜெண்டினா, சிலி, கொலம்பியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் உள்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் பரிசோதனை நடந்ததாக இண்டர்போல் அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் வயது 17-40 ஆகும்.

கொலம்பியாவின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அதிபரின் இணையதளங்களை சீர்குலைக்க இவர்கள் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. பிப்ரவரி மாதம் ஹாக்கர்கள் குறித்து இண்டர்போல் விசாரணையை தீவிரப்படுத்தியிருந்தது.

ஒழுக்கக்கேடான விசயத்தில் உள்துறை அமைச்சகத்தின் நிலைப்பாடு?

புதுடெல்லி: இந்தியாவில் ஓரினச் சேர்க்கையை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சகம் அவசர கதியில் அறிக்கையொன்றை வெளியிட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

ஓரினச் சேர்க்கை தவறல்ல எனறு கடந்த 2009-ம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஓரினச்சேர்க்கை முற்றிலும் ஒழுக்ககேடான செயல். இது இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், சமூக ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறைக்கு எதிரானது. மேலும் இது இயற்கைக்கும் முரணானதாகும்.

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் கலாச்சாரம் உலகளவில் பேசப்படும் உயர்வான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்திய கலாச்சாரம் மற்ற கலாச்சாரங்களை விட மாறுபட்டது. எனவே, ஓரினச் சேர்க்கையை இந்தியாவில் அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இதனை அடிசனல் சோலிசிட்டர் ஜெனரல் பி.பி.மல்ஹோத்ரா நீதிமன்றத்தில் அளித்தார். ஆனால் இதுக்குறித்த செய்திகள் வெளியான உடனே மத்திய உள்துறை அமைச்சகம் உடனடியாக மறுப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இவ்விவகாரம் கேபினடின் பரிசீலனையில் இருப்பதாகவும், உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து அப்பீல் அளிக்க முடிவாகவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, February 28, 2012

அமலுக்கு வருகிறது பிரிட்டன் விசா புதிய விதிமுறைகள்!

லண்டன், பிப். 29: பிரிட்டனின் குடியேற்ற விதிமுறைகளில் புதிய திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி அந்நாட்டில் நிரந்தரமாக வாழும் உரிமை பெற்றிருக்கும் இந்தியர்கள், பயோமெட்ரிக் குடியிருப்பு உரிமம் எனப்படும் புதிய அட்டையைப் பெற விண்ணப்பிக்க வேண்டும்.,சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பதற்காக இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டிருப்பதாக் கூறப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பாக பிரிட்டனில் குடியேறிய இந்தியர்களில் பெரும்பாலானவர்கள், அந்நாட்டு குடியுரிமையைப் பெறுவதற்குப் பதிலாக நிரந்தரமாக வாழும் உரிமையை மட்டும் பெற்றுக் கொண்டனர். அத்துடன் இந்தியக் குடியுரிமையையும் வைத்திருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் புதிய விதிமுறைகள் பொருந்தும்.

பயோமெட்ரிக் குடியிருப்பு உரிமம் என்பது ஒரு மின்னணு அடையாள அட்டையைப் போன்றதாகும். சம்பந்தப்பட்டவரின் பெயர், பிறந்தநாள், பிறந்த இடம் உள்ளிட்ட சுயவிவரங்களுடன், கைரேகை, முகப் பதிவு ஆகியவை அதில் அடங்கியிருக்கும்.

குடியேற்ற நிலை, பிரிட்டனில் அவர் பெற்றிருக்கும் உரிமைகள் போன்றவை பற்றி விவரங்களையும் இந்தஅட்டையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்தியர்கள் மட்டுமல்லாமல், பல ஆண்டுகளுக்கு முன் பிரிட்டனில் குடியேறிய பெரும்பாலான பிற நாட்டவர்களும் புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும்.

அனுமதியில்லாமல் பிரிட்டனில் பணிபுரிந்து வரும் பிற நாட்டவர்களை குடியேற்றத்துறை அதிகாரிகள் கைது செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. புதிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்தப்பட்டால், இதுபோன்ற சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டுபிடிக்க முடியும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாம்பா வடிவேலு சங்கரன் கோயில் செல்லவில்லையா?

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் நடிகர் வடிவேலு பங்கேற்பாரா, மாட்டாரா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்திலும், திரையுலக வட்டாரத்திலும் எழுந்துள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள வடிவேலு.

என் தாய் சரோஜினி உடல் நலக்குறைவு காரணமாக மதுரை ஐராவத நல்லூரில் மருத்துவமனையில் உள்ளார். அதனால் என்னால் சங்கரன்கோவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடமுடியவில்லை, என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் தனது பேட்டியில், வடிவேலுவுக்கு அரசியல் எல்லாம் தேவையா என்று சிலர் கேட்கிறார்கள். ஓட்டுப்போடும் அத்தனை பேரும் அரசியல்வாதிகள்தான். ஓட்டுப்போடும் மக்களில் நானும் ஒருவன் என்பதால் நானும் அரசியல்வாதிதான். தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று என்னை கேட்கிறார்கள். காலமும், சூழ்நிலையும் நிர்ப்பந்நதிக்கும்போது மக்களை சந்திப்பேன்.

நான் யாருக்கும் பயந்து ஓடி ஒளிந்து கொள்ளமாட்டேன். தீவிர அரசியலில் குதிப்பேன். அரசியலுக்கு நான் வரக்கூடாது என்று சொல்வது அபத்தம். நிச்சயமாக அரசியலுக்கு வந்தே தீருவேன். என்னை யாரும் தடுக்க முடியாது. திரையுலகம் என்னை ஒதுக்கி ஓரங்கட்டிவிட்டதாக சொல்கிறார்கள். விரைவில் நான் கதாநாயகனாக நடிக்கும் புதுப்பட அறிவிப்பு வெளிவரும் என்று கூறியிருக்கிறார், வடிவேலு.

Monday, February 27, 2012

சோடை போகும் கிரிக்கெட்! வாகை சூடப்போகும் ஹாக்கி!!

புதுடெல்லி: 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்கு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது.

இன்று புதுடெல்லியில் நடைபெற்ற தகுதிச்சுற்று இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை 8-1 என தோற்கடித்ததன் மூலம் 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் காலடி எடுத்து வைத்துள்ளது இந்திய அணி.

கடந்த 2008ம் ஆண்டு சீனாவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது., இன்றைய போட்டியில் சந்தீப் சிங் 5 கோல்கள் அடித்தார். இதன் மூலம் இத்தொடரில் அவர் அடித்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

8 முறை ஒலிம்பிக் சாம்பியனாக முடிசூடியுள்ள இந்திய ஹாக்கி அணி, இடையே திடீர் வீழ்ச்சிக்கு பிறகு மீண்டும் இப்போட்டிகளுக்கு தகுதி பெற்றிருப்பது இந்திய ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது. எனினும் நேற்று மகளிருக்கான தகுதி சுற்று இறுதி போட்டியில் இந்திய அணி தெ.ஆபிரிக்கவிடம் தோற்றதன் மூலம் ஒலிம்பிக்கில் நுழையும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

ஈழம் திரும்புபவர்களுக்கு மேலும் கொடுமை! சர்வததேச மனித உரிமை!!

கொழும்பு, பிப் 27: இலங்கையில் ராணுவ தாக்குதலுக்கு பயந்து வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றவர்கள் உலகில் பல்வேறு நாடுகளிலும் தஞ்சம் அடைந்து உள்ளனர். தற்போது இலங்கையில் போர் முடிந்து விட்டதால் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்து குடியுரிமை பெறாதவர்களை அந்த நாடுகள் இலங்கைக்கு திருப்பு அனுப்பி வருகின்றனர்.

அப்படி இலங்கைக்கு திரும்பி வருபவர்கள் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்படுவதாகவும், பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் புகார் கூறியுள்ளது. ஆடைகளை அகற்றியும், சிகரெட்டால் சுட்டும் சித்ரவதை செய்வதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறியுள்ளனர்.

இதேபோல தமிழ் பெண்கள் பலர் கற்பழிக்கப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக மனித உரிமை அமைப்பு கூறியிருக்கிறது. எனவே வெளிநாடுகள் தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்து உள்ளது.

இங்கிலாந்தில் இருந்து ஒரு குழுவை விரைவில் திருப்பி அனுப்புவதாக இருந்தது. அவர்களையும் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று மனித உரிமை அமைப்பு கேட்டு கொண்டுள்ளது.

Sunday, February 26, 2012

விஜய்யின் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் !!

துப்பாக்கி படத்தின் ஷூட்டிங் ஃபெப்சி தொழிளாலர்களின் சம்பளப் பிரச்சினைக்காக சில நாட்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது., அதோடு (இந்த சீனை அந்த நடிகர் நடிப்பது போல் நடியுங்கள்.. இந்த நடிகர் பெர்மார்மன்ஸ்சை கொஞ்சம் இமிடேட் பண்ணுங்க என்றெல்லாம் சொல்லி கடுப்பு ஏத்தியதால் விஜய் காட்டத்தில் இருந்தார் என்பது நமக்கு தெரிந்ததே)

போலிஸ் பின்னணியில் முருகதாஸ் இயக்கும் முதல் படம் இது தான். துப்பாக்கியில் விஜய் காவல் துறையின் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கிறாராம். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு.

ஹாரிஸ் ஜெயராஜ் காக்க காக்க, சாமி போன்ற படங்களில் போலிஸுக்கான பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியிருந்தார். அதை விட அதிகமாக இந்த படத்திற்கு உழைத்திருக்கிறாராம்.

என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் விஜய்யின் துப்பாக்கி சமாதனத்திற்கு பிறகு மீண்டும் துவக்கப்பட்டதாக கோலிவுட்டில் செய்திகள் வெளியாகி உள்ளது.

Saturday, February 25, 2012

கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற அரபு அமீரக துரித தொடர் வண்டி!

துபையில் செயல்பட்டு வரும் மெட்ரோ துரித தொடர் வண்டிச்சேவை கின்னஸ் உலக சாதனையில் இடம் பெறுகிறது.

துபையில் மெட்ரோ துரித தொடர்வண்டி சேவை நடைபெற்று வருகிறது. "ஓட்டுனர் இல்லாமல் இயங்கும்" இந்த மெட்ரோ சேவை 75 கிலோ மீட்டர் களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. சிகப்பு மற்றும் பச்சை வழி என இரண்டு வழிகளில் இந்த சேவை இயங்கி வருகிறது.

சிகப்பு வழி 52 கிலோ மீட்டர்களுக்கும் பச்சை வழி 22.69 கிலோமீட்டர்களுக்கும் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு செயல்படும் இந்த மெட்ரோ சே வை உலகத்தின் நீளமான ஆளில்லாத மெட்ரோ என்ற சிறப்பினைப் பெற்றுள்ளது.

இதற்காக கின்னஸ் உலக சாதனையில் இது இடம் பெறுகிறது. கின்னஸ் சான்றிதழை கின்னஸ் மத்திய கிழக்கின் பிராந்திய இயக்குனர் தலால் உமர், துபை சாலை மற்றும் போக்குவரத்து அதிகாரத்தின் தலைவர் மட்டார் அல் தாயிரிடம் வழங்கினார்.

இந்த பெருமையினை அமீரகத்தின் பிரதமரும் துபை அதிபருமான ஷேக் முஹம்மதுக்கு சமர்ப்பிப்பதாக மட்டார் அல் தாயிர் தெரிவித்துள்ளார்.

நடிகையை காப்பாற்றிய தமிழக காவல்துறையின் துணிகர செயல்!

கோவையில் ஆயிரக்கணக்கான ரசிகர்களிடம் சிக்கிக் கொண்டார் நடிகை ஹன்சிகா. அவரை தொட்டுப்பார்க்க ரசிகர்கள் பலர் முண்டியடித்ததால் கைகளிலும், இடுப்பிலும் லேசான சிராய்ப்பு ஏற்பட்டு அவதிக்குள்ளானார்.

கோவை நகருக்கு வந்திருந்த ஹன்சிகாவை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டனர். அவரை மிக அருகில் பார்க்கவும், தொட்டுப் பார்க்கவும் முண்டியடித்தனர். இதனால் திணறிப் போனார் ஹன்ஸிகா. பலர் அவரைக் கிள்ளினர். வேகமாக அவரைப் பிடித்து இழுத்ததால் அவர் உடலில் பல இடங்களில் சிராய்ப்பு ஏற்பட்டது.

இதனால் அலறித் துடித்த ஹன்ஸிகாவை பக்கத்திலிருந்த போலீசார் வந்து மீட்டனர். இதுகுறித்து ஹன்ஸிகா கூறுகையில், ரசிகர்கள் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டனர். நல்ல வேளை போலீசார் வந்து மீட்டனர். நிச்சயம் இனி செக்யூரிட்டியை பலப்படுத்தினால்தான் வெளியில் செல்ல முடியும் என்றார். ஏற்கெனவே சென்னையில் இதே போன்ற அனுபவத்துக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

(என்கவுண்டர் மூலம் புகழ்பெற்ற தமிழக காவல்துறை மேலும் புகழ் தேடிக்கொண்டது, தமிழகத்தை குஜராத்தாக மாற்றப்போவதாக ஜெயலலிதா கங்கணம் கட்டிக்கொண்டு உள்ளார் அதற்கு முதற்படிதான் இந்த என்கவுண்டர்.)

Friday, February 24, 2012

காவி கயவர்களின் கண்டிக்கத்தக்க செயல்!!

பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா மற்றும் அவரது உறவினரும், பட்டிமன்ற பேச்சாளருமான ராஜாவிற்கு எதிராக இந்துமுனன்ணியினர் கருப்புக்கொடி கட்டியுள்ள சம்பவம் நெல்லையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி டவுன் பகுதியில் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒருபகுதியாக, பட்டிமன்றத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதற்காக சாலமன் பாப்பையா மற்றும் ராஜா நெல்லைக்கு வருகை தர உள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில், மற்றொரு மத வழிபாட்டு தலத்தில் கலந்துகொண்ட இவர்கள் இந்து கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வருகை தரக் கூடாது என்பதை வலியுறுத்தி பாப்பையா மற்றும் ராஜா தங்க உள்ள ஹோட்டலைச் சுற்றிலும் இந்துமுன்னணி அமைப்பு சார்பில் கருப்புக்கொடிகள் கட்டப்பட்டுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் இச்சம்பவம் பற்றி மனித ஆர்வலர் ஒருவர்., காவி கயவர்களின் கண்டிக்கத்தக்க செயல் என்று அவர் சொன்னார்.

பணிப்பெண்ணிடம் பாலியல் வன்புணர்வு! நீதிபதிக்கு வலைவீச்சு!?

ஹைதராபாத்: வேலியே பயிரை மேய்ந்த கதைகளுக்கு இந்தியாவில் பஞ்சம் ஏது? காவல் நிலையங்களில் கொலைகளும், பாலியல் வன்புணர்வுகளும் நடந்த செய்திகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் வீட்டு பணிப் பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு முயன்ற சிவில் நீதிமன்ற நீதிபதியை போலீஸ் தேடி வருகிறதாம்.

ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் கிங்கின் ஜமெட்ல தன்டா பகுதியைச் சேர்ந்தவர் குரவத் பாலசந்தர். அவர் சட்டபள்ளி நகரில் உள்ள நீதிமன்றத்தில் சிவில் நீதிபதியாக உள்ளார்.

அவரது வீட்டில் வேலை பார்க்கும் பெண் 24 வயதாகும் கலா (பெயர் மாற்றம்). அவர் பார்க்க அழகாக இருப்பதால் அவர் மீது நீதிபதிக்கு மோகம் ஏற்பட்டது. அவரை எப்படியும் அடைந்தே தீர வேண்டும் என்று நீதிபதி நினைத்தார். ஆனால் வீட்டில் அனைவரும் இருப்பதால் தனது திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் இருந்தது.

இந்நிலையில் நீதிபதியின் குடும்பத்தார் அவரை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு வெளியூர் சென்றனர். இது தான் சமயம் என்று நீதிபதி வேலைக்காரப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். நீதிபதியிடம் இருந்து தப்பித்து வீட்டை விட்டு வெளியே ஓடிவிட்டார். உடனே இது குறித்து கம்மம் டி.எஸ்.பி. ரங்கன் கௌடிடம் புகார் கொடுத்தார்.

இதையடுத்து போலீசார் 354வது பிரிவின் கீழ் நீதிபதி பாலச்சந்தர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே பாலசந்தர் நேற்று மதியம் முதல் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு வெளியூர் சென்றுவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Thursday, February 23, 2012

சோனியா அகர்வாலின் அடித்த ஸ்டப்

திருமண வாழ்க்கைக்குப் பிறகு சினிமாவுக்கு நடிகைகள் திரும்புவது ஒன்றும் புதிதல்ல என்றாலும், கதாநாயகியாகவே திரும்பியிருக்கும் சோனியா அகர்வால் வானம் படத்தில் நடித்தார்.

தற்போது மேலும் 3 படங்கள் திரைக்கு வரத் தயாராகி வருகின்றன. இதற்காக அவருக்கு நிச்சயம் பாராட்டுக்களைக் கூறத்தான் வேண்டும்.

ஒரு பாராட்டு மட்டும் போதாது போலவே.. ஆம் இன்னும் ஒரு பாராட்டையும் தயாரித்துக் கொள்ளுங்கள். எதற்கு என்றால், வெறும் சினிமாவில் நடிப்பதோடு நின்றுவிடாமல், தற்போது இசைப் பள்ளி ஒன்றையும் துவக்க உள்ளார் சோனியா அகர்வால்.

சென்னையில் வரும் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று ஹாரிஸ் ஜெயராஜ் இசைப் பள்ளியை துவக்கி வைக்கிறார். இந்த இசைப் பள்ளியை அகர்வாலின் சகோதரர் நிர்வகிக்க உள்ளார். இவர் யுவன் சங்கர் ராஜாவிடம் இசைப் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடல்வால் நோய் அதை நீக்கும் எளிய முறை (Appendicities)

சிறுகுடலானது உடம்பின் இரைப்பையிலிருந்து தொடர்கின்றது. இக்குடலுக்குள் நுழையும் உணவானது, மெல்ல மெல்ல தள்ளப்படுகின்றது.

அதாவது கடல் அலையைப் போல், காற்றின் குவிதல், விரிதலால், உணவு தள்ளப்பட்டுச் சென்று, சீரணமாகிச் சத்து உறிஞ்சப்பட்ட பின்னர், சக்கை அல்லது மலம் பெருங்குடலின் மூலமாய் வெளியே கொண்டு போய்ச் சேர்க்கப் படுகின்றது.

அன்றாடம் உட்கொள்ளும் உணவில், நாம் அறியாமல் சேரும், சிறு கற்களும், குடலுக்குள் நுழைந்து, பின் மலத்துடன் வெளிப்பட்டுவிடும்.

சிலசமயம், குடலுக்குள் சேரும் கற்களானவை, குடலின் ஓரத்தில் பதிந்து விடுவதும் உண்டு. அப்படிப் படியுமானால், அந்த இடம் புண்ணாகும். பின் உணவைத் தள்ளும் காற்றின் மூலம் அக்கற்கள் குடலின் உட்புறம் படிந்துபோய் நின்றுவிடும். பின்னர் அது சிறிய வால் போல் வளர ஆரம்பிக்கும் இதைத்தான் குடல்வால்(APPENDICITIS) என்கிறோம். இதன்மேல் மேல் நாம் உண்ணும் உணவு தாக்கும் போதெல்லாம் ஈட்டியால் குத்தியது போன்ற வலி ஏற்படும்.

சிலருக்கு குடல் ஓரங்களில் உப்பு உறைந்து கல்லைப் போல் காரை கட்டிவிடும் இதனாலும் குடல்வால்(APPENDICITIS) ஏற்படும்.

சுத்தமான விளக்கெண்ணெய் 30 மில்லியும் வாழைக்கிழங்கு சாறு அல்லது வாழைத்தண்டு சாறு 30 மில்லியும் கலந்து காலை நேரத்தில் உணவிற்கு முன் கொடுக்க வேண்டும். இப்படி 3 நாட்கள் தரவேண்டும். பலன் குடல் வாலிலுள்ள கற்கள் வெளியேறிவிடும். முதல் நாளே வலி இருக்காது. 3 நாட்களில் பூரண குணம் தெரியும்.

Wednesday, February 22, 2012

அனைவருடைய எதிர்பார்ப்பையும் நிறைவேற்றுவாரா சச்சின்!?

மும்பை,பிப்.24: சச்சின், சத சாதனையை இன்று நிகழ்த்துவார், அடுத்த போட்டியில் நிகழ்த்துவார் என்று ஒவ்வொரு போட்டியையும் எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு தொடர்ந்து ஒரு வருட காலமாக ஏமாற்றம் அளித்து வரும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர்.

ரிக்கி பாண்டிங் வழியை பின்பற்றி ஒருநாள் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற வேண்டும் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பும்.

இந்திய அணியினர் தற்போதைய முத்தரப்புத் தொடரில் மோசமாக ஆடிவருவதால், ஆசிய கோப்பைக்கான அணியில் சில அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய கோப்பை போட்டிகள் மார்ச் 11-ல் தொடங்கி மார்ச் 20 வரை நடைபெறுகின்றன. இந்திய அணி மார்ச் 13-ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது.

வரும் போட்டிகளில் ஜூனியர்களுக்கு தனது இடத்தை கொடுத்து அவர்களை ஊக்குவிக்கலாம்.

ட்விட்டரில் பேத்திக்கு பெயர் தேடும் உலக அழகி மாமனார்!

முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கு கடந்த நவம்பர் மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போதைக்கு குழந்தைக்கு செல்லமாக "பேட்டி பி" என்ற பெயர் வைத்துள்ளனர்.

மேலும் குழந்தைக்கு "ஏ" வரிசையில் பெயர் வைக்க வேண்டும் என்றும், இதற்காக ரசிகர்களிடம் ஒரு நல்ல பெயரை சொல்லுங்கள் என்று அமிதாப் மற்றும் அபிஷேக் ஆகியோர் தங்களது ட்விட்டர் வலைதளத்தில் குறிப்பிட்டு இருந்தனர். இதையடுத்து லட்சக்கணக்கான பெயர்கள் வந்து குவிந்தன.

இந்நிலையில் மூன்று மாத தேடலுக்கு பின்னர் ஒரு நல்ல பெயரை தேர்ந்தெடுத்துள்ளனர் அபிஷேக்-ஐஸ்வர்யா தம்பதியினர். குழந்தைக்கு அபிலாஷா என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர்.

தற்போது அமிதாப், உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலமுடன் வீடு திரும்பிய பின்னர், குழந்தையின் பெயர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர்.

Tuesday, February 21, 2012

எல்லாமே இந்த ஒரு சாண் வயிற்றுக்குத்தான்

"எல்லாமே இந்த ஒரு சாண் வயிற்றுக்குத்தான்'' என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பசி மட்டும் இல்லாவிட்டால் இந்த உலகத்தில் எந்த பிரச்னையும் இருக்காது என்பார்கள்.

சித்தர்கள், முனிவர்கள் நூற்றுக்கணக்கான நாட்கள் எதையும் சாப்பிடாமல் காற்றை மட்டும் சுவாசித்து உயிர் வாழ்ந்தார்கள் என்று படித்திருப்பீர்கள்.

பசி எடுக்காமல் இருப்பதற்கு என்ன செய்வது?

அகத்திய மா முனிவர், பசி எடுக்காமல் இருக்க, ஓர் ஐடியா சொல்கிறார், அவர் எழுதிய பாடலொன்றில்.

நாயுருவி விதையை எடுத்துக் கொண்டு அதைத் தாய்ப் பாலை விட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு எட்டி விதை ஒன்றையும் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் பசும்பாலில் கலந்து கடவுளை வணங்கி கண்ணை மூடிக் கொண்டு "மடக்மடக்'கென்று குடித்துவிட வேண்டுமாம். அதற்குப் பின்பு எத்தனை நாளானாலும் பசி எடுக்கவே எடுக்காதாம்.

விலைவாசி உயர்ந்துள்ள இந்தக் காலத்தில் இந்த ஐடியா ரொம்ப நல்லாருக்கே என்று யோசிக்கிறீர்களா?

அப்படி பசியில்லாமல் இருப்பவர் பக்கத்து வீட்டுச் சமையல் வாசனையை முகர்ந்து சாப்பிட வேண்டும் என்று மனம் மாறிவிட்டால் என்ன செய்வது?

அதற்கும் வழி உண்டு, மூக்கை நன்றாக பொத்திக்கொல்லுங்கள்., அப்புறம் பசியால் உயிரே போச்சு என்பீர்கள்.

மன உறுதிமிக்க போராளியிடம் மண்டியிட்ட இஸ்ரேல் !?

டெல்அவீவ்: அரசு நிர்வாக சிறை (administrative detention) என்ற கருப்புச் சட்டத்தின் அடிப்படையில் விசாரணை இல்லாமல் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்ட ஃபலஸ்தீன் விடுதலை போராளி காதர் அத்னான் தனது 66 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

அத்னான் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டால் வருகிற ஏப்ரல் 17-ஆம் தேதி குற்றம் சுமத்தாமல் அவரை விடுதலைச் செய்வதாக இஸ்ரேலிய நீதி அமைச்சகம் உறுதியளித்தது. இதனை அத்னானின் வழக்கறிஞர்கள் அவரிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

33 வயதான அத்னான் இஸ்ரேலிய ராணுவத்தால் அநியாயமாக கைது செய்யப்பட்டு விசாரணை எதுவுமின்றி சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் விடுதலை கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். நாட்கள் செல்ல அத்னானின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவரது உயிருக்கு கூட ஆபத்து நேரும் என மருத்துவர்கள் எச்சரித்தனர். தனது மகளே தன்னை அடையாளம் காணமுடியாத அளவுக்கு அவரது உடல் நிலை மோசமடைந்தது.

இந்நிலையில் உலகின் மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் அவருடைய விடுதலைக்காக குரல் எழுப்பினர். ஃபலஸ்தீனில் அத்னானின் விடுதலையை கோரி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். அத்னானின் விடுதலை தொடர்பான மனு இஸ்ரேல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அத்னானின் விடுதலை குறித்து அறிவிப்பு வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் இம்மனுவை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Monday, February 20, 2012

துப்பாக்கிக்காக மீண்டும் மோதிக்கொண்ட விஜய்!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் கத்தி, கோடரி என்று இல்லாமல் பெயருக்கு ஏற்ற மாதிரி துப்பாக்கியுடன் சுற்றி வரும் டான் கேரக்டர் விஜய்க்கு.

வித்தியாச கெட்டப் என மகிழ்ச்சியில் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடித்து விட்டார் விஜய். முதல் ஷெட்யூல் சூட்டிங்கின் போதே, முருகதாஸ் இந்த சீனை அந்த நடிகர் நடிப்பது போல் நடியுங்கள்.. இந்த நடிகர் பெர்மார்மன்ஸ்சை கொஞ்சம் இமிடேட் பண்ணுங்க என்றெல்லாம் சொல்லி கடுப்பு ஏத்தியதால் விஜய் காட்டத்தில் இருந்தார் என்பது நமக்கு தெரிந்ததே.

இந்நிலையில் மீண்டும் இருவருக்கும் முட்டிக்கிச்சு என பரவி வரும் செய்தி தான் லேட்டஸ்ட் ஹைலைட்! துப்பாக்கி படம் கைவிடப்பட்டது என பல தரப்பிலும் செய்தி கிளம்பியிருப்பதே, முருகதாஸ் மீதான காட்டத்திற்கும், விஜய்யின் கடுப்பிற்கும் காரணம்.

பெப்ஸி பிரச்னையால் முருகதாஸ் குறும்படம் ஒன்றின் தயாரிப்புப் பணிகளில் தீவிரமாகிவிட்டதால், படம் கைவிடப்பட்டதாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இயக்குநரும் ஒன்றும் சொல்லாமல் அமைதி காப்பதால், ஒருவேளை செய்தி உண்மைதானோ என்ற நினைப்பில் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் விசாரித்து வருகிறார்களாம் ரசிகர்கள் பலர். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த விஜய்யிடம் இதுகுறித்து ரசிகர்கள் கேட்டதற்கு, "படம் ட்ராப்னு வர்ற செய்திகளை நம்பாதீங்க. பெப்சி பிரச்சினை போன்றவையெல்லாம் தீர்ந்ததும் படப்பிடிப்பு தொடங்கிடும்," என்றாராம் கொஞ்சம் கடுப்புடன்.

நிச்சயம் பாடம் புகட்டுவார்கள் மக்கள்! அழகிரி!!

திமுக முன்னாள் அமைப்புச் செயலாளர் எஸ்.எஸ்.தென்னரசுவின் 84வது பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவப்படத்திற்கு மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஜவகர் சூர்யகுமார், வரும் 27ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார். மனுதாக்கல் நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வேன். 28ஆம் தேதி கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் வருகிறார். அவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. தொடர்ந்து பிரச்சாரம் நடைபெறும் என்றார்.

கேள்வி: வெற்றி வாய்ப்பு எப்படி?

பதில்: நிச்சயம் திமுக வெற்றி பெறும் தி மு க., ஏனெறால். மாற்றம் வேண்டும் என்று ஓட்டு போட்டவர்களுக்கு வேட்டு வைத்தவர் ஜெயா., மின் வெட்டு, விலைவாசி உயர்வு எல்லாம் மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் நிச்சயம் வரும் தேர்தலில் (சங்கரன் கோயில்) பாடம் புகட்டுவார்கள் அ தி மு க வுக்கு என்றார்.

தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்!

தலைவலியில் 3 வகைகள் உண்டு.

* முதல் வகை சமூக மனவியல் காரணங்களால் டென்ஷன், களைப்பு, எரிச்சல் தரும் சம்பவங்கள் போன்ற காரணங்களால் உண்டாகுது.

* இரண்டாவது வகையில் உடல் வகை, மருத்துவம் போன்ற காரணங்களால் தலைவலி வருது. கண்ணில் அதிகப்படியான அழுத்தம், பல்வலி, `சைனஸைட்டிஸ்'ங்கற மூக்கடைப்பு, சில உணவுப்பொருட்கள் உட்கொள்வது, அலர்ஜி தரும் சில வகையான மருந்துகளைச் சாப்பிடுவது, தூக்கமின்மை, மிகவும் குளிர்ந்த நீரில் குளிப்பது, சினிமா பார்ப்பது, அருகில் இருந்து டி.வி. பார்ப்பது, காற்றோட்டம் இல்லாத சுகாதாரமற்ற அறையில் நீண்ட நேரம் இருப்பது போன்ற பல காரணங்களால் தலைவலி உண்டாகுது.

* மூன்றாவதாக, தலையில் யாராவது ஓங்கி அடித்தால், தலைவலி வந்துடும். அதனால, மூளைக்குள் சின்ன ரத்தக் கசிவுகள் உண்டாகி, அது தலைவலியாக மாறிடும். இது முதலில் மூளைக்குள் `ட்யூமர்'ங்கற வலியாக இருக்கும். தொடர்ந்து, `மெனிஞ்சைட்டிஸ்' என்ற காய்ச்சல் ஆரம்ப நோய்க்கான அறிகுறியாக வரும். `என்ஸெபலைட்டிஸ்' என்று சொல்லப்படும், மூளைக்குள் வீக்கம் போன்ற நோய்கள் எல்லாம் சேர்ந்து தலைவலியை உண்டாக்கிடும்.

பெரும்பாலானவங்களுக்கு முதல் வகையான தலைவலி தான் வரும். இந்த தலைவலி வருவதை வைத்து நாம இப்படியும் கணிக்கலாம். நீங்கள் எப்படிப்பட்டவங்க? எப்படி வாழ்கிறீங்க? எப்படி உணர்ச்சிவசப்படுகிறீங்க? எப்படி கோபப்படுகிறீங்க, எவ்வளவு பொறுமை உங்ககிட்ட இருக்குன்னு கண்டுபிடிச்சிடலாம்.

ஒற்றைத் தலைவலியை `மைக்ரேன்'னு சொல்வாங்க. இதனால் பாதிக்கப்படுறவங்களுக்கு தலையை ஒருபக்கமாக பிரிச்சி எடுத்த மாதிரி வலி, பின்னியெடுக்கும். இந்த தலைவலிக்குததான் நிறைய மருந்துகளும் கண்டுபிடிச்சிருக்காங்களாம்.

Sunday, February 19, 2012

இவர் தலைக்கு 10 லட்சம்! சி பி ஐ அறிவிப்பு !?

புதுடெல்லி: 2008-ஆம் ஆண்டு நடந்த போலி என்கவுண்டர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜஸ்தான் முன்னாள் கூடுதல் போலீஸ் இயக்குநர் ஜெனரல் ஏ.கே.ஜெயினை குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று சி.பி.ஐ அறிவித்துள்ளது.

முதல் முதலாக ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியை பிடிப்பதற்கு பரிசுத் தொகையை சி.பி.ஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போலி என்கவுண்டர் படுகொலை வழக்கில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர்களான ராஜேஷ் சவுதரி, சுல்ஃபிகார், துணை சப்-இன்ஸ்பெக்டரான அரவிந்த் ஆகியோரை குறித்து தகவல் அளித்தால் ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

போலி என்கவுண்டர் படுகொலை தொடர்பாக 16 போலீஸ் அதிகாரிகள் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்துள்ளது.

விருது வாங்கிய விஜய்யின் பேச்சு !?

உலகம் முழுவதும் இருக்கும் திரைப்பட ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வரும் எடிசன் விருது சிறப்பானதாக இருக்கிறது.

உலகத்தில் எது இல்லாமல் வேண்டுமானாலும் இருந்து விடலாம் நண்பர்கள் இல்லாமல் இருக்க முடியாது...அந்தப் படத்திற்கு பெருத்தவரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி...அதில் வருவது போலவே எல்லாமே நல்லதாக இருக்கட்டும் ஆல் இஸ் வெல்...” என்று கூற அரங்கில் அமர்ந்திருந்த அத்துனை ரசிகர்களும் ஆல் இஸ் வெல் என்று ஒரு மித்த குரலில் கூற அரங்கில் ஒரு நல்ல அதிர்வு ஏற்பட்டதை உணர முடிந்தது.

ரசிகர்களை மேலும் சந்தோஷப்படுத்தும் விதமாக நண்பன் படத்தில்வரும் என் நண்பன் போல யாரு மச்சான் என்கிற பாடலைப் பலத்த கரவொலிகளுக்கிடையே பாடினார் விஜய். மேலும் எடிசன் விருதுகள் பெற்ற சக நடிகர்களுக்கும் தொழில் நுட்பகலைஞர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்

சிறந்த ரொமாண்டிக் ஹீரோ விருது ஜெயம் ரவிக்கு வழங்கப்பட்டது. வெட்கத்துடனேயே அதனை விஜய் கைகளால் பெற்றுக் கொண்ட ஜெயம் ரவி, “சூப்பர் ஸ்டார் ரஜினி விருது விஜய்க்கு வழங்கப்பட்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி... இன்னும் சில வருடங்கள் கழித்து விஜய் பெயராலும் விருதுகள் வழங்கப்பட வேண்டும்..அந்த அளவிற்கு மிகவும் சிறந்த நடிகர் விஜய்” என்று பேசினார்.

Saturday, February 18, 2012

சசியின் சதி வலையில் சிக்கினாரா ஜெயா ?

வருமானத்திற்கு அதிகமான இந்த சொத்துக்கள் சேர்க்கப்பட்டது தொடர்பான வழக்கு பெங்களூரூ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

சசிகலா தன்னிடம் தமிழில் கேள்விகள் கேட்க வேண்டும் என்று கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை தனிக் கோர்ட்டும், ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே சொத்து சேர்ப்பு வழக்கு இன்று பெங்களூர் தனிக் கோர்ட்டில் நீதிபதி மல்லிகார் ஜூனையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அப்போது சசிகலாவிடம் தமிழில் கேள்வி கேட்க அனுமதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்து இருப்பதால் வழக்கை வருகிற மார்ச் 2-ந் தேதி வரை தள்ளி வைக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு வக்கீல் கோர்ட்டில் மனு கொடுத்தார். அதை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதைத் தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை தொடங்கியது. நீதிபதியின் கேள்விகளை சசிகலாவுக்கு மொழிப் பெயர்த்துச் சொல்ல ஹரீஸ் என்ற மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் நீதிபதியின் கேள்விகளை தமிழில் மொழி பெயர்த்து சொன்னார்.

சசிகலா அளித்த பதிலை அவர் நீதிபதியிடம் ஆங்கிலத்தில் திரும்ப சொன்னார்.

பெங்களூரூ நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சசிகலாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, வங்கிக் கணக்கை நான் மட்டுமே இயக்கி வந்தேன். அதில் முதலமைச்சர் ஜெயலலிதாவும் கூட்டாளிதான். ஆனால் அதைப் பற்றிய எந்த விவரமும் அவருக்குத் தெரியாது. அவர் குற்றமற்றவர். தவறுக்கு நானே பொறுப்பு என்று கூறி சசிகலா கண்ணீர் விட்டு அழுதார்.

ஜெயா, சசி பிறிவு இது ஒரு நாடகம் இதை இயக்குவது பிரபல வக்கீல் ஒருவர், இந்த கேசை உடைக்கவும் மக்களை நம்பவைக்கவும், சசியின் கண்ணீர் நடிப்பு.(தன்னை ஒதுக்கிவைத்தவரை கோபப்படாமல) அவரை இவ்வழக்கிலிருந்து காப்பாற்ற முயற்சிப்பதிலிருந்து புரியவில்லையா,மேலும் கபட நாடகமிடும் முதல்வருக்கு இது அழகல்ல என்றார். பெயர் சொல்ல விரும்பாத உயர் காவல் அதிகாரி ஒருவர்.

ஆபாச செல்போன் தகவலால் பறிபோனது மூன்று உயிர்கள்!!

பெர்ஹாம்பூர்: எம்எம்எஸ் வழியாக தான் ஆபாசமாக இருப்பது போன்று போலியாக தயாரித்து வெளியிடப்பட்ட புகைப்படத்தையடுத்து 2 குழந்தைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

மேற்குவங்க மாநிலத்தின் டோம்கால் பகுதியைச் சேர்ந்தவர் ஜெஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (28). எம்எம்எஸ்ஸில் தனது நிர்வாண புகைப்படம் வெளியானதையடுத்து அவமானம் தாங்கமுடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அவரது கணவர் பாப்லு போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில், தனது அண்டை வீட்டு பெண்ணின் உதவியுடன் ஜெஸ்மி முகத்தை நிர்வாணமான பெண்ணின் உடம்பில் ஒட்டி மொபைல் ஃபோனில் சில இளைஞர்கள் பரப்பியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த புகாரில் நிர்வாண புகைப்படம் ஒன்றுடன் ஜெஸ்மி முகத்தை இணைத்து போலியாக புகைப்படம் தயாரித்து உள்ளூர் இளைஞர்கள் சிலர் எம்எம்எஸ் மூலமாக வெளியிட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இளைஞர் சமுதாயம் எங்கு செல்கிறது? இதற்கு தங்கள் பிள்ளைகளை கவனத்துடன் வளர்ப்பது பெற்றோர்கள் கடமையும் கூட.

Friday, February 17, 2012

பிறந்த சில நேரத்தில் இறந்த அதிசய குழந்தை!

பாட்டியாலா,பிப்.18: பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் 2 தலை, 4 கை, கால்களுடன் பிறந்த அதிசயப் பெண்குழந்தது.


பிறந்த 2 மணி நேரத்தில் இறந்துள்ளது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.


முகம்மது ஆலம் என்பவரின் மனைவி நஹிதா என்பவருக்குப் பிறந்த, அந்தக்குழந்தையின் மற்ற உடல் உறுப்புகள் இயல்பாகவே இருந்திருக்கின்றன.

மத வாத இயக்கமல்ல! தீவிரவாத இயக்கம்!! யெச்சூரி!?

புது தில்லி: ஆர்எஸ்எஸ் இயக்கமானது மதவாத இயக்கம் மட்டுமல்ல, பயங்கரவாத இயக்கம் என்பது மீண்டும் நிரூபணமாகி யுள்ளது.

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த செüகான், நீண்ட காலமாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருப்பவர். இந்த அமைப்பின் பல்வேறு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

2008-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி மாலேகாவ்னில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல், ஹைதராபாத்தில் மெக்கா மஸ்ஜித்தில் 2007-ம் ஆண்டு மே 18-ம் தேதி நடைபெற்ற தாக்குதல் மற்றும் ஆஜ்மீர் தர்காவில் 2007-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு உள்ள தொடர்புகள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து இந்தியாவில் பரவிவரும் ஹிந்துத்வா பயங்கரவாதம் வெளி உலகுக்குத் தெரியவந்துள்ளது என்று யெச்சூரி கூறினார். பயங்கரவாதத்துக்கு ஜாதி,மத பேதம் இல்லை என்பது புலனாகியுள்ளது. 2008-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் கவுன்சில் கூட்டத்தில் நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தளம் அமைப்புகள் மேற்கொள்ள விருந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் பற்றிய தகவல் வெளியானது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீவிரவாதத் தன்மை, நாட்டின் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது குறைத்துக் காட்டப்பட்டது. நாட்டின் முக்கியப் பிரச்னைகள் கிடப்பில் போட்டப்பட்டன. தங்களது அரசு 5 ஆண்டுக்காலம் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக கூட்டணிக் கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டனர்.

2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறை போல நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். 2003-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரையான காலத்தில் பல்வேறு வழக்குகள் மீதான விசாரணை பாரபட்சமாக நடத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் நான்டெட், பார்பானி, ஜால்னா, ஜலேகாவ்ன் ஆகிய பகுதிகளிலும் உத்தரப் பிரதேச த்தில் மாவ் மற்றும் கான்பூரிலும், தமிழகத்தில் தென்காசியிலும் வழக்குகள் பாரபட்சமாக நடந்துள்ளன.

இத்தகைய மதவாத அமைப்புகளின் செயல்பாடுகளை சகித்துக்கொள்ளும் போக்கு ஏற்புடையதல்ல. தங்களது இயக்கத்தில் சிலரது செயல்பாடுகள் இயக்கக் கொள்கையிலிருந்து சற்று விலகிச் செல்வதாக ஆர்எஸ்எஸ் குறிப்பிடுகிறது. அதற்காக ஒட்டுமொத்த இயக்கத்தைக் குறைகூறாதீர்கள் என்றும் வலியுறுத்துகிறது.

ஆனால் இவ்விதம் கூறுவதில் அர்த்தமில்லை. மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேயின் சகோதரர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தீவிர உறுப்பினர்கள் என்று குறிப்பிட்டுள்ளார் என்பதையும் யெச்சூரி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் இயக்க நிறுவனரான டாக்டர் ஹெக்டேவாருக்கு முன்னு தாரணாக விளங்கியவர் பி.எஸ் மூன்ஞ்சே. இவர் இத்தாலிக்கு சென்று பாசிச சர்வாதிகாரி முசோலினியை 1931-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி சந்தித்துப் பேசியுள்ளார். மூன்ஞ்சே தனது டைரியில், மார்ச் 20-ம் தேதி எழுதிய விவரத்தில், பாசிச இயக்கத்தால் தான் ஈர்க்கப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர் படையை உருவாக்குவதன் மூலம் இதை சாத்தியமாக்கமுடியும் என்ற முசோலினியின் கருத்தை அவர் ஏற்றார். இதையடுத்து நாடு திரும்பிய அவர் நாசிக்கில் 1935-ம் ஆண்டு மத்திய ஹிந்து ராணுவ கல்வி மையத்தை தொடங்கினார். இந்த மையம்தான் இப்போது ஹிந்துத்வா தீவிரவாத பயிற்சி மையமாக மாறிவிட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மதச்சார்பற்ற நாடாக திகழும் இந்தியாவை, ஹிந்துக்களின் நாடாக மாற்றும் முயற்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தீவிரமாக உள்ளது என்று யெச்சூரி குறிப்பிட்டுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் சதியை முறியடிக்க வேண்டும் என்று கம்யூனிச தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Thursday, February 16, 2012

எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன்! தனுஷ்!!

மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தனுஷ், 2004-ம் ஆண்டு ஐஸ்வர்யாவை திருமணம் செய்த பின்னர், யாரும் என்னை ஒரு நடிகராகவோ அல்லது தனுஷ் என்றோ பார்ப்பதில்லை. ரஜினியின் மருமகனாகத்தான் பார்க்கின்றனர்.

அதற்கு முன்பு வரை எனக்கு இருந்த பெயர், புகழ் எல்லாம் ரஜினியின் மருமகன் ‌என்ற பட்டம் அடித்து சென்றுவிட்டது. இதனால் நான் என்னுடைய சுய அடையாளத்தையே இழந்துவிட்டேன்.

எந்த நிகழ்ச்சியில் பங்‌கேற்றாலோ அல்லது பத்திரிக்கையாளர்களை சந்தித்தாலோ அவர்கள் கேட்கும் முதல் கேள்வி, ரஜினியின் மருமகன் என்பதை எப்படி உணர்கிறீர்கள்.

திருமணம் ஆன பிறகு என்னிடம் அதிகம் கேட்கப்பட்ட கேள்வி இது தான். இப்போது அந்த கேள்வி படிப்படியாக குறைந்து இருக்கிறது. ஆனாலும் ஆரம்பத்தில் முதல் கேள்வியாய் கேட்டவர்கள் இப்போது இடையில் கேட்கின்றனர். இனி வருங்காலத்திலும் அதுவும் இருக்காது என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தனுஷ் இவ்வாறு கூறியிருப்பது ரஜினி குடும்பத்திலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.   அபிதாப்பச்சன், ஷாருக்கான் எல்லாம் தனுஷை புகழ்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் ரஜினிதான்.  

அவரால்தான் தனுஷ் என்கிற நடிகர் என்று பெரிய அளவில் அடையாளப்பட்டார். இவர் என்னடான்னா அடையாளத்தை இழந்துவிட்டேன் என்கிறாரே என்று ரஜினி ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்

பாதுகாப்பானதா பாராசிட்டமால்! மருத்துவ எச்சரிக்கை !!

பாராசிட்டமால் மாத்திரைகளையோ, சிரப் களையோ தொடர்ந்து உபயோகிப்பவர்களுக்கு லிவர் மற்றும் கிட்னி தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்பிருப்பதாக சமீபத்திய மருத்துவ ஆய்வறிக்கைகள் எச்சரிக்கின்றன.

இனி மேல் பாராசிட்டமால் (அசிட்டமி னோபென்) மருந்துகளை தயாரிப்பவர்கள் தங்களது நுகர்வோர்களுக்கு இந்த மருந்தை உட்கொள்வதால் லிவர் ,கிட்னி டேமேஜ் மற்றும் அலர்ஜியினால் உண்டாகும் பக்க விளைவுகள் ஏற்படும் என்று ஒவ்வொரு மருந்து பாட்டில் ரேப்பர்கள் மற்றும் மாத்திரைப் பட்டைகளில் எச்சரிக்கை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டாக்டர்கள் பரிந்துரைக்கும் பிரஸ்க்ரிப்சன் களை பேசன்டுகள் பெரும்பாலும் சரியாகப் புரிந்து கொள்வதே இல்லை.காய்ச்சல் என்று வரும் கைக்குழந்தைகளுக்கு டாக்டர்கள் 5 ml பாராசிட்டமால் சிரப்(டானிக்) பரிந்துரைத்தால் குழந் தையின் பெற்றோர்களில் சிலர் போதிய விஷய ஞானம் அற்று தவறுதலாக 5 ml அளவுக்கு பாராசிட்டமால் ட்ராப்ஸ் (சொட்டு மருந்து) கொடுத்து விடுகிறார்கள். சிரப்பை விட இந்த ட்ராப்ஸ்கள் அதிக செறிவானவை. இத்தனை செறிவான மருந்தை உட்கொள்வதால் குழந் தைக்கு அலர்ஜியாகி பக்க விளைவுகள் ஏற்பட்டு மறுபடியும் மருத்துவரை நாடும் நிலை ஏற்பட்டு விடுகிறது. மேலும் இப்படியே தொடர்ந்து மருந்துகளைக் கொடுத்து வந்தால் கடைசியாக அது கடுமையான ரீனல் டிஸ்ஆர்டர்களில் கொண்டு விடுகிறது. பெரும்பான்மையான லிவர் மற்றும் கிட்னி டேமேஜ்கள் ஏற்பட இப்படியான கவனக்குறைவே முதலும் முக்கியமுமான காரணமாகி விடுகிறது.

இவை தவிர லேசான காய்ச்சலுக்கும் கூட டெம்பரேச்சர் சோதித்துப் பார்க்காமல் டாக்டர்கள் கடுமையான காய்ச்சலுக்குப் பரிந்துரைத்த அதே அளவு பாராசிட்டமால் மருந்தை உட்கொள்வ தாலும் மேற்சொன்ன விளைவுகள் ஏற்படலாம். பெயின் கில்லர்கள் எடுத்துக் கொள்பவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தங்களது கிட்னி ஆரோக்யமாக இருக்கிறதா எனத் தொடர்ந்து பரிசோதிக்கத் தவறக்கூடாது. ஏனெனில் இன்றைய நிலையில் சிறுநீரக பாதிப்பு என்று வரும் நோயாளிகளில் 8 முதல் 10 சதவிகிதம் பேர்களுக்கு கடுமையான பாதிப்புகளுக்கு தொடர்ந்து பாராசிட்டமால் மருந்துகள் எடுத்துக் கொள்வதே காரணங்களாக இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

Wednesday, February 15, 2012

வெளிநாடுவாழ் இந்தியர்களின் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி! ரிசர்வ் வங்கி!!

மும்பை, பிப். 16: இந்தியாவில் சொத்துகளை வாங்கும்போது அது தொடர்பான பரிவர்த்தனை விவரங்களை வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாக்கல் செய்யத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி புதன்கிழமை தெரிவித்தது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கும் இது பொருந்தும்.

வெளிநாட்டினர் இந்தியாவில் அசையாச் சொத்துகளை வாங்கும்போது, அது தொடர்பான பரிவர்த்தனை விவரங்களை 90 நாள்களுக்குள் ரிசர்வ் வங்கியிடம் அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

வெளிநாடுவாழ் இந்தியருக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கும் இது பொருந்துமா என்கிற குழப்பம் நீடித்து வந்தது. இதைப் போக்கும் வகையிலேயே ரிசர்வ் வங்கி இப்போது விளக்கம் அளித்திருக்கிறது.

மீண்டும் சிம்பு வலையில் சிக்குமா இந்த சிட்டு?

பிரபுதேவாவை காதலிப்பதற்கு முன்னர் சிம்புவை காதலித்தவர் நடிகை நயன்தாரா. சிம்புவுடனான காதலும் முறிந்து, இப்போது பிரபுதேவாவுடனான காதலும் முறிந்து தவித்து வரும் நயன்தாரா, மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

 முதற்கட்டமாக தெலுங்கில் ஒருபடத்திலும் தமிழில் அஜித் ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் நயன்தாராவுக்கு தூது விட்டு இருக்கிறாராம் சிம்பு. அதாவது தன்னுடைய அடுத்த படத்தில் நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதற்காக இயக்குநர் ஒருவரும் நயன்தாராவிடம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

 மீண்டும் ரீ-என்ட்ரி ஆகியிருக்கும் நயன்தாராவை, சிம்புவுடன் ஜோடி சேர்த்து படம் இயக்கினால், படம் ஹிட்டாவதோடு, நல்ல வசூலும் பெறும் என்பது அந்த இயக்குநரின் நம்பிக்கை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்...!

ஆரோக்கியம் அதிகரிக்க அக்ரூட்! ஆய்வில்!!

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

 உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணம். இந்நிலையில் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் ‘வால்நட்’ எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு நடத்தினர். உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது. இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆய்வு முடிவு குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு: உடலில் கொழுப்புச்சத்து அளவாக இருப்பது அவசியம். உணவு முறைகளே உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணம். அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம். இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும். உரிய உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருத்துவ அறிவுரை மற்றும் சிகிச்சைகள் மூலம் உடல் கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tuesday, February 14, 2012

வயதை கேட்டு வம்பிளுப்பவர்களுக்கு! த்ரிஷா !!

அஹமது இயக்கத்தில் தன்னை விட சிறியவரான ஜீவாவுடன் கைகோர்த்து தனது இளமையை அவர்களுக்கு நிரூபிக்கப் போகிறாராம் த்ரிஷா. த்ரிஷா சில நாட்களாகவே நிகழ்ச்சிகளுக்கு வரும் போது மேக்கப் இல்லாமல் வந்தார்.

மூத்த நடிகை என்று மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஏன் மேக்கப் இல்லாமல் வெளியே வருகிறீர்கள் என்று கேட்ட போது த்ரிஷா “ யாருக்காகவும் மேக்கப் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. நான் நானாகவே இருக்கிறேன்.

மற்ற்வர்கள் பேசும் பேச்சு என்னை பாதிக்காது. நான் நடித்து வெளியான “பாடிகாட்” படத்தை பார்த்துவிட்டு பேசட்டும் நான் மூத்த நடிகையா? என்று. அடுத்து ஜூனியர் என்.டி.ஆர் உடன் ”தம்மு” என்ற படத்தில் நடித்து வருகிறேன். இயற்கையான தோற்றமே பெண்களுக்கு அழகு.

பெண்களுக்கே இருக்கும் ஆசையினால் தான் கண்களுக்கு மட்டும் சிறிது மேக்கப் போடுகிறேன். பொருத்தமான ஆடை அணிவதே எனக்கு அழகு. நான் நல்ல கதைக்காக காத்திருப்பதை உணராத சிலர் என் வயதை பற்றி குறை கூறுகின்றனர்.” என்று நன்றாக காய்ச்சி விட்டார்.

5 ஆண்டுகளாக தேடப்படும் தீவிரவாதி கைது ?

புதுடெல்லி, பிப். 14: 5 ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஜௌதா விரைவு ரயில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் ரயில்களில் குண்டுகளை வைத்து வெடிக்கச் செய்த இந்துவா தீவிரவாதி கமல் சௌஹான் ஞாயிறன்று இந்தூரில் கைது செய்யப்பட்டான்.

2007ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி டெல்லியில் இருந்து பாகிஸ்தானின் லாகூர் நகருக்குச் சென்ற சம்ஜௌதா ரயிலின் இரண்டு பெட்டிகளில் குண்டுகள் வெடித்தன. இந்த விபத்தில் பலியான 68 பேரில் ஏராளமானோர் பாகிஸ்தானியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, February 13, 2012

வேண்டாண்டா இந்த காதலர் தினம்!!

இனக் கவர்ச்சிக்காகவோ, அல்லது வெறும் சவால்களுகாக, போட்டிக்காக காதல் செய்யக்கூடாது. ஏன்னா காதல் விளையாட்டு பொருள் இல்லை..., வேணும்னா ஜெயிக்றதும், வேனாட்டி தோக்கிறதுக்கும்.

காதல் என்கிற மாயையில் இவர்கள் செய்யும் அனாச்சாரம் கண்டு சகிக்க முடியாத ஒன்று.,மேலும் இந்த காதலர்கள் தினம் வெளிநாடுகளில் வியாபார நோக்குடன் ஒரு விழா நடத்துகின்றனர் இதில் வேறு ஒன்றுமில்லை இதை கொண்டாட.

ஆனால் இந்தியாவில் இது ஒரு (பண்பாட்டு சீரழிவு) வெளிநாட்டு மாயை அன்றி வேறேதுமில்லை.,காதல் என்கிற பெயரில் சீறலியாதீர்கள், ஞாபகம் வச்சுக்கொள்ளுங்கள்.

பரபரப்பை ஏற்படுத்திய இணையதள செய்தி !!

மெக்சிகோ: மெக்சிகன் இணையதளம் ஒன்றில், அழகான குழந்தை விற்பனைக்கு உள்ளது. அதன் உறுப்புகள் தேவைப்படுவோர் வாங்கிக் கொள்ளலாம் என்ற விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விளம்பரத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விளம்பரம் நீக்கப்பட்டுவிட்டது. விளம்பரத்தை பதிவு செய்தவர் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த செயலை அடுத்து, இணையதளத்தில் மனிதர்களை, உடல் உறுப்புகள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது என்ற விதிமுறை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒபாமாவுக்கு பெருகிவரும் ஆதரவு !

வாஷிங்டன், பிப். 13: அமெரிக்காவில் விரைவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் ரிபப்லிகன் கட்சித் தலைவர் மிட் ரோம்னியை விட 6 புள்ளிகள் முன்னணியில் உள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

கடந்த வாரம் நடைபெற்ற இந்த கருத்துக் கணிப்பில் ஒபாமாவிற்கு 51% சதவீத வாக்குகளும், ரோம்னிக்கு 45% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

Sunday, February 12, 2012

மிக்சி கிரைண்டருக்கு மின்சாரம் யார் கொடுப்பார்! கேப்டன் ஆவேசம்!?

அருப்புக்கோட்டையில் நடந்த திருமண விழாவில் விஜயகாந்த் பேசியதாவது:

சட்டசபையில் என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். அதற்கு தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டும். என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தனர். எனக்கு எதைப் பற்றியும் பயம் கிடையாது. மக்கள் பிரச்னைகளைத் தான் பேசினேன்; இனியும் பேசுவேன். சபை நாகரிகம் எனக்கு தெரியும். 13 ஆண்டுகளாக பெங்களூரில் வழக்கு நடந்து வருகிறது. அதை உங்களால் தீர்க்க முடியவில்லை. தினமும் 8 மணி நேர மின் தடை, தொழில் முடக்கம், மாணவர்கள் படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மின்சாரத்திற்காக என்ன திட்டம் தீட்டினீர்கள்.

சங்கரன்கோவில் இடைத் தேர்தலுக்கு மிக்சி, கிரைண்டர் கொடுக்கப்படுகிறது. மின்சாரம் இருந்தால் தானே ஓடும். என்னை சீண்டிப் பார்க்காதீர்கள்; பல உண்மைகளை சொல்ல வேண்டியிருக்கும். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை சட்டசபையில் பேச விடுங்கள். நீங்களாகவே பேசுவதற்கு மட்டும் சட்டசபை கிடையாது. டான்சி வழக்கில் என் கையெழுத்து இல்லை என்று சொல்கிறீர்கள். என் வாயை கிளறாதீர்கள். நான் பேச ஆரம்பித்தால், கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாகி விடும்,'' என விஜயகாந்த் பேசினார்.

ஆசிரியயை கொலை செய்த மாணவனின் வாக்குமூலம்?

சென்னை பாரி முனையில் புனித மேரி மேல் நிலைப்பள்ளியில் 9-வது வகுப்பு பயிலும் மாணவன் கடந்த வியாழக்கிழமை தனது ஆசிரியை உமா மகேஷ்வரியை கத்தியால் குத்தி கொலைச் செய்தான். இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட மாணவனிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து பல மணிநேரம் விசாரணை நடத்தினர். அப்பொழுது மாணவன் கூறியது:

நான் எனது பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால் அவர்களுக்கு செல்லப் பிள்ளையாக இருந்தேன். தினமும் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை பாக்கெட் மணி கிடைக்கும். ஹிந்தி எனக்கு சரியாக புரியாது. ஆதலால் ஹிந்தி பாடத்தில் எனக்கு மதிப்பெண்கள் குறைவாக கிடைக்கும். இதனை எனது ஸ்கூல் டைரியில் எழுதி பெற்றோர்களிடமிருந்து கையெழுத்து வாங்கி வர ஆசிரியை உமா மகேஷ்வரி கூறினார். தொடர்ச்சியாக 13 தடவை இவ்வாறு டைரியில் எழுதினார். கடந்த மாதமும் டைரியில் என்னைப் பற்றி மோசமாக அறிக்கை எழுதியதால் பெற்றோர்கள் என்னை கண்டித்தனர். இதனால் ஆசிரியை மீது எனக்கு கோபம் ஏற்பட்டது.

மூன்று தினங்களுக்கு முன்பு தியேட்டருக்கு சென்று ‘அக்னிபாத்’ என்ற ஹிந்து சினிமாவை பார்த்தேன். அதில் வரும் கொலைக் காட்சிகளைப் போல உமா மகேஷ்வரியையும் கொலைச் செய்ய திட்டமிட்டேன். வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் இருந்து ரூ.20 கொடுத்து கத்தி ஒன்றை வாங்கினேன். அதனை காகிதத்தில் பொதிந்து பள்ளிக்கூடத்திற்கு சென்றேன். சினிமாவில் கண்டது போல ஆசிரியையின் கழுத்திலும், நெஞ்சிலுமாக ஐந்து இடங்களில் கத்தியால் குத்தினேன். இவ்வாறு மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

கொலைச் செய்த மாணவனுக்கு நண்பர்கள் யாரும் இல்லை என்றும், யாரிடமும் பேசாத குணமுடையவன் என்றும் போலீசார் கூறுகின்றனர். உடல் வளர்ச்சி அதிகமாக இருப்பதால் அவனது வயதை உறுதிச்செய்ய மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் ஜுவைனைல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு ரிமாண்ட் செய்து சிறுவர்கள் சிறையில் மாணவன் அடைக்கப்பட்டான். கொலைச் செய்யப்பட்ட ஆசிரியை உமா மகேஷ்வரியின் உடல் வெள்ளிக்கிழமை சென்னையில் அடக்கம் செய்யப்பட்டது.

தன்னுடைய பாக்கட்டை நிறப்புவதை விட்டுவிட்டு சமூக அக்கறையுடன் கொஞ்சம் படமெடுத்தால் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கலாம்.,சினி துறையை சார்ந்தவர்கள் சிந்திப்பார்களா?

Saturday, February 11, 2012

நாளுக்கு நாள் வெளுக்கும் மோடியின் காவி சாயம்!? சஞ்சீவ் பட்?

ஆமதாபாத்: குஜராத் கலவரம் தொடர்பான ஆவணங்களை அந்த மாநில அரசும், சிறப்பு விசாரணைக்குழுவும் சேர்ந்து அழித்துவிட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் குற்றம்சாட்டியுள்ளார்.

குஜராத் கலவரம் தொடர்பாக விசாரிக்கும் நானாவதி கமிஷனுக்கு சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் பட் மேலும் கூறியிருப்பது: 2002-ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப்பின் குஜராத்தில் நிகழ்ந்த கலவரம் தொடர்பான முக்கிய ஆதாரங்களை மோடி தலைமையிலான மாநில அரசும், கலவரத்தை விசாரிக்க மாநில அரசு அமைத்த சிறப்பு விசாரணைக்குழுவும் அழித்துவிட்டன.

அதிகாரத்தில் உள்ள நபர்கள், சட்டத்துக்குமுன் விசாரணைக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக மிகவும் மோசமான இந்த காரியத்தை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக மாநில நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி, உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று சஞ்சீவ் பட் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக குஜராத்தில் கலவரம் நடந்தபோது, "ஹிந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிக்காட்டுவதைத் தடுக்க வேண்டாம்' என்று மோடி கூறியதாக, நானாவதி கமிஷன் முன்பு சஞ்சீவ் பட் சாட்சியம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவுக்கு தூதுவிடும் விஜய் !?

மதுரையில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்ற விஜய் அங்கு ரசிகர்களிடம் பேசிவிட்டு அதன் பின் நிரூபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது விஜய் “ அரசியல் பற்றிய கேள்விகள் இங்கு வேண்டாம்.சினிமா பற்றி மட்டும் இப்போது பேசுவோம் என்றார்.

நண்பன் படம் போலவே இன்னொரு கதை அமைந்தால் கண்டிப்பாக இரண்டு ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பேன்.

ஒரு படம் ஓடுவதும் ஓடாததும் கதை மற்றும் திரைக்கதையின் கையில் தான் உள்ளது. அந்த கதைகளுக்கு நாங்களும் ரசிகர்களாகவே இருக்கிறோம். ஒரு ரசிகனாக அதை உங்களிடம் சேர்க்கிறோம்.

சூர்யாவுடன் நான் இணைந்து நடித்த படத்தின் கதையைப் போல் அமைந்தால் கண்டிப்பாக சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பேன். இப்போது துப்பாக்கி என்ற படத்தில் நடித்து வருகிறேன்.

சிறிய பட்ஜட் படங்கள் புதுமுகங்களுடன் வெற்றி பெற்று வருவது மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயம். அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். ஏனென்றால் நானும் ஒரு காலத்தில் புதுமுகமாக அறிமுகமானவன் தான்.” என்று கூறினார்.

Friday, February 10, 2012

கொலவெறி காமவெறி கதாநாயகர்களுக்கு மன்னர் ஜவஹர் கண்டனம்!?

சென்னையில் நேற்று பள்ளி ஆசிரியை ஒன்பதாம் வகுப்பு மாணவனால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் நகரையே உலுக்கிவிட்டது. சினிமா, டி.வி.க்களில் வரும் வன்முறை காட்சிகளே இந்த கொலைக்கு காரணம் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர்ஜவகர் வருத்தம் தெரிவித்தார்.

அவர் கூறும்போது, வகுப்பறையில் ஆசிரியை கொலை செய்யப்படும் சம்பவத்தை தமிழ்நாட்டில் கேள்விப்படுவது இதுதான் முதல்முறை. சினிமா, டி.வி.க்களில் வன்முறை தூண்டும் காட்சிகளால் மாணவன் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம்.

மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வி அவசியம் என்றார். புரசைவாக்கத்தைச் சேர்ந்த ரமேஷ், சினிமா பாடல்கள்மேல் சாடினார்.

'நல்லபேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே', 'திருடாதே பாப்பா திருடாதே', 'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி', 'வாழ நினைத்தால் வாழலாம்' என பழைய பாடல்கள் குழந்தைகளை ஒழுக்க சீலர்களாக வளர்க்க பயன்பட்டன.

ஆனால் இப்போது 'ஒய்திஸ் கொலைவெறிடி' 'உதடா அவளா வெட்டுடா அவள', 'எவன்டி உன்ன பெத்தான் கையில கிடைச்சா செத்தான்', 'லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே' என்றெல்லாம் பாடல்கள் வருகின்றன. இவை மாணவர்கள், இளைஞர்கள் மனதில் வன்முறை தனமான வக்கிரங்களை பதிய வைக்கின்றன. ஆசிரியையை மாணவன் கொன்றத்திற்கு இது போன்ற பாடல்கள்தான் காரணம் என்றார்.

மயிலாப்பூரைச் சேர்ந்த கவுதம் கூறும்போது, 'சினிமா பாடல்கள் இப்போதைய தலைமுறையை ஒழுக்கமில்லாதவர்களாக மாற்றி வருகின்றன. சினிமாவில் இருப்பவர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்' என்றார்.

அஜினா மோட்டோ! அறிந்ததும் அறியாததும் ?

அஜினா மோட்டோ என்பது கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றின் ஊரல்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. இதன் வேதிப் பெயர் மோனோ சோடியம் குளுடோமேட் ஆகும்.

இதை உணவுப் பொருட்களில் சேர்த்துக் கொள்வதால் உடல் நலத்திற்குக் கேடு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை உணவில் 3 கிராமுக்கு அதிகமாக அஜினாமோட்டா சேர்த்தால் தலைவலி, நெஞ்சு வலி, குமட்டல், கை கால் மரத்துப் போதல் போன்ற பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புளளது.

இது போன்ற பல்வேறு காரணங்களால் உணவுப் பொருட்களில் அஜினா மோட்டா சேர்ப்பது சுகாதாரக் கேட்டை உண்டாக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. 51 வகையான உணவுப் பொருட்களில் அஜினாமோட்டா சேர்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ருசிக்காக உங்களை நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள்.

Thursday, February 9, 2012

களவாணி ஜெயாவை காப்பாற்ற கை கோர்க்கும் காவி அரசு ?

அரசு தலைமை வழக்கறிஞர் பதவியில் இருந்து, ஆச்சார்யா நேற்று (08.02.2012) ராஜினாமா செய்தார். பதவி விலகியது ஏன் என்று ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து விலகுமாறு கர்நாடக அரசு என்னை தொடர்ந்து வற்புறுத்தியது. இந்த வழக்கு விசாரணையை ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திசை திருப்ப வேண்டும் என்பதற்காக, பாஜகவின் டெல்லி மேலிடத்தின் உத்தரவின் பேரிலேயே கர்நாடக அரசு எனக்கு நெருக்கடி கொடுத்தது.

பாஜக மேலிடத்தின் இந்த நெருக்கடி எடியூரப்பா முதல் அமைச்சராக இருக்கும் வரை எடுபடவில்லை. தற்போது முதல் அமைச்சர் சதானந்த கவுடா மூலம் அதனை நிறைவேற்ற பாஜக மேலிடம் முயற்சி செய்கிறது. அந்த நேரத்தில் ஆசை காட்டும் விதமாகவே, அரசு தலைமை வழக்கறிஞர் பதவி கொடுக்கப்பட்டது. அதனை ஏற்று சொத்து குவிப்பு வழக்கின் சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிடுவேன் என்று கர்நாடக அரசு தப்புக் கணக்கு போட்டுவிட்டது.

மேலும் ப ஜ க அரசு நெருக்குதல் தந்ததுதான் தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறியுள்ளார். (தேர்தல் நேரத்தில் அடி மேல் அடி ப ஜ க வுக்கு ஒருபக்கம் பார்லிமெண்டில் ஆபாச படம்பார்த்த ப ஜ க எம் பி, இன்னொரு பக்கம் இன்று இது, நாளை எதுவோ?)

முதலீட்டை திரும்ப பெரும் ஐக்கிய அரபு குடியரசு !?

புதுடில்லி: 2ஜி விவகாரத்தில், 122 தொலைத்தொடர்பு லைசன்ஸ்களை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்ததையடுத்து.

ஐக்கிய அரசு எமிரேட்சைச் சேர்ந்த எடிசலாட் நிறுவனம், இந்தியாவில் தனது 820 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை திரும்பப்பெற முடிவு செய்துள்ளது.

நம் அரசியல்வாதிகளின் பொரம் (பிற்) போக்கு தனத்தால் பல கோடிகள் இழப்பு?

குஷியாக இருந்த விஜய் ரசிகர்களை கோபப்பட வைத்த முருகதாஸ்?

நடிகர் விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தை திடீரென நிறுத்துவதாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அறிவித்துள்ளது விஜய் ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது.

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் திரைப்படத் தொழிலாளர் சம்மேளமான பெப்சிக்கும் இடையேயான மோதலால் தமிழ் திரைப்பட உலகம் முடங்கியுள்ளது.

இந்நிலையில் கலைப்புலி தாணு தயாரிப்பில் மும்பையில் விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் "துப்பாக்கி" என்ற படத்தை இயக்கி வந்தார்.

பெப்சி- தயாரிப்பாளர்கள் சங்க மோதல் நீடித்து வரும் நிலையில் திடீரென முருகதாஸ் அறிவித்திருப்பது விஜய் மற்றும் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பெப்சி, தயாரிப்பாளர் சங்க மோதல் எதிரொலியாக பல முக்கியப் படங்களின் படப்பிடிப்பு நடைபெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இயக்குநர் முருகதாஸ், தானாக முன்வந்து துப்பாக்கி படத்தின் ஷூட்டிங்கை காலவரையின்றி நிறுத்தி வைத்திருப்பது விஜய் தரப்பை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து விஜய்யிடம் முருகதாஸ் பேசினாரா என்பது தெரியவில்லை.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரேசகரின் மகன் படமே படப்பிடிப்பைத் தொடர முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது பெப்சி தொழிலாளர்களிடையே கேலியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Wednesday, February 8, 2012

வயதானவரை மணக்க மாட்டேன் அசின் புலம்பல்

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த அசின், கஜனி மூலம் இந்திக்கு போனார். முதல்படமே சூப்பர் ஹிட்டாக அங்கேயே டேரா போட்டார்.

தொடர்ந்து சல்மான் கானுடன் லண்டன் ட்ரீம்ஸ், ரெடி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் இந்தி படவுலகில் அவ்வப்போது அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜெனிலியா-ரித்தேஷ் திருமணத்தை தொடர்ந்து, சல்மான்கானுக்கும் அசினுக்கும் திருமணம் நடக்கப்போவதாக இந்தி பட உலகில் தகவல் பரவியிருக்கிறது. இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகை அசின் பேட்டியளித்துள்ளார். அதில் சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சல்மான் கானும் ஒருவர். அவருக்கும் எனக்கும் காதல் ஏதும் கிடையாது. வெறும் நட்பு மட்டும் தான்.

நிச்சயமாக அவரை நான் திருமணம் செய்ய மாட்டேன். காரணம் அவர் என்னை விட வயதில் ரொம்ப பெரியவர். அதுமட்டுமல்ல நான் கேரளாவை சேர்ந்தவள். அங்குள்ள பழக்க வழக்கங்களை பின்பற்றும் குடும்பத்தில் பிறந்தவள். எனவே எங்களது குடும்ப சம்பிரதாயப்படி தான் என்னுடைய திருமணம் நடக்கும். இப்போதைக்கு சினிமா மட்டும், திருமணத்திற்கு இன்னும் நான்கு ஆண்டுகள் ஆகும்.

ராமனை எலக்க்ஷன் ஏஜன்டாக பயன்படுத்தும் ப ஜ க ?

அயோத்தி: ஜாதீய காரணிகள் முடிவை தீர்மானிக்கும் உ.பி மாநில தேர்தலில் வகுப்புவாத பிரிவினை மூலமாக வாக்குகளை கவர பா.ஜ.க நடத்திவரும் முயற்சிகள் தோல்வியை தழுவும் என கருதப்படுகிறது.

அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் புராண ராமனின் கோயிலை கட்டுவது, சிறுபான்மை இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு உள்ளிட்ட பா.ஜ.கவின் பிரச்சாரம் போதுமான சலனத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை.

உமாபாரதியை கட்சியில் சேர்த்ததும், ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கிய பகுஜன் சமாஜ் தலைவர்களை கட்சியில் இணைத்ததும் முன்பு ஒருபோதும் இல்லாத அளவுக்கு பா.ஜ.கவில் உட்கட்சி பூசலை உருவாக்கியுள்ளது.

80 எம்.பிக்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பும் உ.பியில் பா.ஜ.கவின் நிலை பரிதாபமானால், 2014 ஆட்சி கனவு அதோகதிதான்! இதனை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க தலைமை உ.பி.யில் முகாமிட்டுள்ளது.

முன்னாள் மத்தியபிரதேச முதல்வர் உமாபாரதியை உ.பி அரசியல் களத்தில் இறக்கியதன் நோக்கம் வகுப்புவாத வெறியை தூண்டுவதற்காகும்.முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொண்டு பெரும்பான்மை உணர்ச்சியை தூண்டுவதும் பா.ஜ.கவின் திட்டமாகும். மேலும் அயோத்தியில் ராமனுக்கு கோயில் போன்ற ஹிந்துத்துவா அஜண்டாக்களையும் தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க வெளியிட்டது. ஆனால், இவையெல்லாம் அயோத்தியில் கூட பா.ஜ.கவுக்கு போதிய ஆதரவை பெற்றுத் தரவில்லை.

அயோத்தியின் டீ கடை பெஞ்சுகளில் கூட பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை குறித்துதான் மக்கள் விவாதிக்கின்றனர். அயோத்தி அடங்கிய ஃபைஸாபாத் மக்களவை தொகுதியில் கடந்தமுறை காங்கிரஸ் கட்சி எதிர்பாராத வெற்றியை பெற்றது. ஹிந்துத்துவா உணர்வை தூண்டிய பிறகும், அடித்தளமே ஆட்டம் கண்டு கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஃபைஸாபாத் மக்களவை தொகுதியில் மக்கள் அக்கட்சிக்கு அளித்தது பா.ஜ.கவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அயோத்தியா சட்டப்பேரவை தொகுதியில் ஐந்து தடவை வெற்றிபெற்ற லல்லுசிங் என்பவர்தாம் இம்முறையும் போட்டியிடுகிறார். ஆனால், கடுமையான போட்டி நிலவும் அயோத்தியில் லல்லுசிங் வெற்றி கேள்விகுறிதான். பல சன்னியாசிகளும் பா.ஜ.கவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ’தேர்தல் வரும் வேளையில் மட்டும் பா.ஜ.க ராமர் கோயிலை கூறி நாடகமாடும். ராமனை வெறும் எலக்‌ஷன் ஏஜண்டாக தரம் தாழ்த்திவிட்டது பா.ஜ.க’- என கொதிக்கிறார் ஆல் இந்தியா அகாடா பரிஷத் சேர்மன் மஹந்த் க்யான்தாஸ்.

கல்யாண் சிங்கைப் போல பிற்பட்ட மக்களின் பல்ஸை அறியும் தலைவர்கள் பா.ஜ.கவில் இல்லாதது அக்கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாகும் என அயோத்தி மற்றும் அதன் சுற்று வட்டார பா.ஜ.க தொண்டர்கள் கருதுகின்றனர். கடந்த முறை 51 தொகுதிகள் மட்டுமே பா.ஜ.கவுக்கு கிடைத்தது. இம்முறை காங்கிரஸ் கட்சியை விட குறைவான இடங்களே கிடைக்கும் என்ற கவலை கட்சியை வாட்டுகிறது.

உடல் வலிமை (ஆண்மை) க்கு கிஸ் மிஸ்!

கிஸ்மிஸ் பழம் என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை (ஆண்மைக்கு) தரும் சத்துக்கள் பல நிறைந்துள்ளன. இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. 

விட்டமின்களும் அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினமும் இருவேளை உலர் திராட்சையைச் சாப்பிட்டு வர காமாலை நோய் கு ணமடையும்.

உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலைக் குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்னை சரியாகும். இதில் உள்ள கால்சியத் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

குழந்தைக்கு பால் காய்ச்சும் போது அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சியபின் பாலை வடிகட்டிக் கொடுத்தால் தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடகாத்திரமாக வளரும்.

தொண்டைக்கட்டு பிரச்சனை இருந்தால் இரவு படுக்கும் முன் 20 உலர் திராட்சைப் பழங்களை சுத்தம் செய்து பசும்பாலில் போட்டுக் காய்ச்சி 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் நிவாரணம் பெறலாம்.

மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும் மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களைத் தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!