Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, December 31, 2011

மத்திய அரசின் புத்தாண்டு பரிசு !!

புதுடில்லி: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு அதிகரித்துள்ளது.

இழப்பை குறைக்கும் வகையில், உள்நாட்டில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு, குறைந்தது ரூ.2.10லிருந்து, அதிகபட்சமாக ரூ.2.13 வரை அதிகரிக்க, எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்றபடி, ஒவ்வொரு மாதமும், முதல் தேதியும், 15ம் தேதியும், பெட்ரோல் விலையை மாற்றி அமைக்கும் உரிமை, எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, பெட்ரோல் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு, நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல் விலை உயர்வை அறிவிப்பது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இருக்குமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. எனவே, விலை உயர்வு அறிவிப்பை வெளியிடுவதற்கு முன், அரசியல் ரீதியான ஒப்புதலையும் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்தன.

year 12 ல் ஜொலிக்கப்போவது யார்!?

2012ன் நம்பிக்கை நட்சத்திரங்களாக ஜொலிக்க இருப்பது யார்? என்பது தற்போது வரை புரியாத புதிராகவே இருக்கிறது. காரணம் ஸ்ருதிஹாசன், ரிச்சா கங்கோபாத்யாயா, டாப்ஸி, கார்த்திகா, இனியா, நித்யா மேனன், ப்ரணீதா, பிந்து மாதவி, யாஸ்மின், ஜனனி அய்யர், தீக்ஷா சேத் உள்ளிட்ட ஒரு டஜன் புதுமுக நடிகைகள் தங்களது முதல் படம் மூலமே கவனம் ஈர்த்த கதாநாயகிகளாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் அமலாபால், அஞ்சலி, அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி, சமீரா ரெட்டி, அனன்யா, த்ரிஷா, ஸ்ரேயா உள்ளிட்ட கதாநாயகிகளுடன் மேற்படி ஒரு டஜன் அறிமுக(2011) நாயகிகளும் சபாஷ் சரியான போட்டி! என மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு 2012ல் போட்டி போடுவார்கள் என்பது திண்ணம்!

இதுத்தவிர நண்பன் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வர இருக்கும் இலியானா மற்றும் 2012-ல் வெளிவர இருக்கும் இஷ்டம் படத்தில் விமல் ஜோடியாக நடித்து வரும் நிஷா அகர்வால்(காஜல் அகர்வாலின் தங்கை) உள்ளிட்ட 2012 புதுமுக நடிகைகளின் வரவு வேறு. தற்போதைய தமிழ் முன்னணி நடிகைகளுக்கும், 2011ல் அறிமுக நடிகைகளுக்கும் கடும் போட்டியை உண்டாக்கும்! இதையெல்லாம் கூட்டி கழித்துப்பார்த்து 2012-ல் ஜொலிக்க இருக்கும் ஒரு டஜன் நடிகைகளை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம்.

அவர்களின் விவரம் வருமாறு : அமலா பால், அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி, அஞ்சலி, ஸ்ருதிஹாசன், ரிச்சா கங்கோபாத்யாயா, தீக்ஷா சேத், காஜல் அகர்வால், இனியா, கார்த்திகா, பிந்து மாதவி, நித்யா மேனன் உள்ளிட்டவர்கள் பழசும், புதுசுமான அந்த ஒரு டஜன் நடிகைகள்!

நடிகைகள் மீது தீராத காதல் ‌கொண்ட தமிழ் சினிமா ரசிகர்களே அப்புறமென்ன? நமது 2012ன் நம்பிக்கை நட்சத்திரங்கள் பட்டியலை, புதிதாக பிறக்கும் ஆண்டில், தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் நடிகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து நீங்களே சொல்லுங்கள்...!

பெண்கள் இருதய நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள

குழந்தை செல்வத்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு அமெரிக்காவில் உள்ள வடகரோலினா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அரிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளனர்.

குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுத்தால் இருதய நோயில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதே அதுவாகும்.

குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுத்தால் எதிர்காலத்தில் இவர்களுக்கு இருதய நோய் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். சுமார் 56 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டு இந்த முடிவை வெளியிட்டுள்ளார்கள்.

Friday, December 30, 2011

கமலின் இளைய மகளை தேடி பிடித்துள்ளார் மணிரத்தனம்

புது முகத்தை தேடியலைந்த மணிரத்தனம் கடைசியாக கமலின் இளைய மகளை பிடித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கும் பூக்கடை படத்தில் கார்த்திக் மகன் கவுதம் நாயகனாகிறார். அர்ஜுன், லட்சுமி மஞ்சு, ஆகியோரும் உள்ளனர்.

பசுபதி, லால் ஆகியோரையும் ஒப்பந்தம் செய்துள்ளனர். நாயகிக்கு கமலின் இளைய மகள் அக்ஷராவிடம் பேசி வருகிறாராம் மணிரத்தனம்.

Thursday, December 29, 2011

அடுத்த படத்திற்காக விறுவிறுப்பில் விஜய்!!

எல்லா படத்திலும் ஒரே கெட்டப்பில் நடிக்கும் நடிகர் என்ற பெயர் விஜய்க்கு உண்டு. விஜய்யும், கெட்டப் மாற்றுவதில் நம்பிக்கை கிடையாது என்று கூறி வருபவர்.

வசீகரா படத்திற்கு பிறகு நடித்த படங்களில் பாடல்களுக்கு தேவைப்படும் போது மட்டும் தனது கெட்டப்பை மாற்றி வந்தார். காவலன், வேட்டைக்காரன் படங்களில் பாடல் காட்சிகளில் விதவிதமாக விக் மட்டும் மாற்றியுள்ளார். மற்ற எல்லா படங்களிலும் அவரது தோற்றம் ஒரே மாதிரிதான்.

இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் துப்பாக்கி படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றியுள்ளாராம் விஜய். இந்தப் படம் தனது இமேஜை வேறு ரேஞ்சுக்கு கொண்டு போகும் என அவர் நம்புவதால், மிக அதிக கவனம் காட்டி வருகிறார். படத்தை குறித்த நேரத்தில் முடித்துவிட அனைத்து வழிகளிலும் இயக்குனருக்கு ஒத்துழைத்து வருகிறாராம். மும்பையில் விறுவிறுப்பாக இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இந்தப் படம் முடிந்த கையோடு கவுதம் மேனன் படத்தில் நடிக்கப் போகிறார் விஜய்.

நாவின் சுவை தேட நமக்கு வந்ததோ புது புது நோய்கள்!

மனித இனம், நாகரீகம் வளர வளர தன் சுவை தேவைக்காக உணவை பல வகையில் தயாரித்து உண்ண ஆரம்பித்தது. பச்சையாக தின்ற மனிதர்கள், பின் வேகவைத்து உண்டு வந்தனர். இப்படி ஆரம்பித்த உணவு வளர்ச்சி ஒரு கட்டத்தில் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளையே உண்ண ஆரம்பித்தனர்.

பின் வரும் காலங்களில் உணவே மருந்து, மருந்தே உணவு என்ற நிலை வந்தது. இக்காலத்தில் மனிதர்கள் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். நம் முன்னோர்களும் மேற்கண்ட நிலையையே கடைப்பிடித்து வந்தனர். ஆனால் நாம் ஆண்டாண்டு காலமாக நம் முன்னோர்கள் கடைபிடித்த முறைகளை கைவிட்டு நாவின் சுவையைத் தேட ஆரம்பித்தோம். அதன் பயன் இன்று நோய்கள் பலவற்றின் தாக்குதலுக்கு ஆளாகி மருந்து, மாத்திரை என தினமும் பொழுதைக் கழிக்கிறோம்.

இப்படி நாம் மறந்த உணவு முறையில் உள்ள பொருட்களுள் ஒன்றான வெள்ளைப் பூண்டின் மருத்துவக் குணம் பற்றி அறிந்துகொள்வோம்.

இது இந்தியாவில் எல்லா பாகங்களிலும் பயிராகும் ஒருவகை பூண்டாகும். நெடிய மணமுடைய, குமிழ் வடிவ கிழங்காகக் காணப்படும். ஒரு பூண்டில் 10 முதல் 12 பற்கள் வரை இருக்கும்.

தற்போது சீனாவிலிருந்து பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும், இந்திய பூண்டு வகைகள் அதிகம் மருத்துவக் குணம் கொண்டதாக மேற்கத்திய நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

வெள்ளைப் பூண்டில் பசைத்தன்மை அதிகமாக இருப்பதால், நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். வெள்ளைப் பூண்டானது சைவச் சமையலிலும் சரி, அசைவ சமையலிலும் சரி முக்கியப் பொருளாக சேர்க்கப்படுகிறது.

வெள்ளைப் பூண்டின் பயன்பாடு கி.மு.2600 ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வந்துள்ளது.

வெள்ளைப் பூண்டை வெள்ளுள்ளி, வெள்வங்காயம், இலசுனம் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

Wednesday, December 28, 2011

9 மாதங்களாக காத்திருக்கும் டெண்டுல்கர்!

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான தெண்டுல்கர் தனது 100-வது சதத்துக்காக இன்னும் காத்திருக்கிறார்., ஆஸ்திரேலியா முன்னாள் வேகப்பந்து வீரர் மெர்வ் ஹியூக்ஸ் கூறியதாவது:-

தெண்டுல்கரின் 100-வது சதத்தை ஒவ்வொரு வரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மீடியாவிலும் அதுபற்றிய செய்திகள் தான் வருகின்றன. 100-வது சதத்துக்காக நீண்டநாள் ஆகிவிட்டதால் அதிகமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தெண்டுல்கரும் 100-வது சதம் சாதனையை மனதில் வைத்து தான் விளையாடுகிறார். இதை உறுதியாக சொல்ல முடியும். அதில் எந்தவித சந்தேகம் இல்லை.

தெண்டுல்கரின் ஆட்டம் நேற்று சிறப்பாக இருந்தது. 9 மாதங்களாக அவர் சதம் அடிக்க வில்லை. இந்த டெஸ்டில் சதம் அடிப்பதற்கான வாய்ப்பு இல்லை. பாண்டிங்குடன் ஒப்பிடுகையில் தெண்டுல்கர் நன்றாகத்தான் விளையாடுகிறார். சதம் அடிக்கா விட்டாலும் 60, 70 மற்றும் 80 ரன்கள் வரை எடுக்கிறார். அவர் 80 ரன் வரை வரும்போதே பரபரப்பு ஏற்பட்டுவிடுகிறது.

கொலவெறி" பாடல்! கொதிப்பில் இசையமைப்பாளர்!!

உலகம் கடந்து ஒலித்துக் கொண்டிருக்கும் "கொலை வெறி' பாடலுக்கு இசையமைத்த அனிருத் படத்தின் நாயகன் தனுஷ் மீதும் இயக்குநர் ஐஸ்வர்யா மீதும் அதிருப்தியில் இருக்கிறாராம்.

பாடலின் வெற்றிக்கு அவர்கள் மட்டுமே சொந்தம் கொண்டாடுவதும் அதில் இசையமைப்பாளரின் பங்கு என எதுவுமே இல்லாதது போலும் அவர்கள் காட்டிக்கொள்வதுதானாம்.

அதற்கேற்றாற்போல இந்த நட்சத்திரத் தம்பதியும் இசையமைப்பாளரின் பங்கு குறித்து பெரிய அளவில் அலட்டிக்கொள்ளவில்லை.

படம் வருமுன்னே இத்தனை பப்ளிசிட்டி தேடிகொண்டுள்ளது இப்பாடல், படம் வந்தால்தான் தெரியும் தேறுமா என்று.

Tuesday, December 27, 2011

சிம்புவுக்கு ரெட் கார்ட்! தீவிர ஆலோசனையில் வினியோகஸ்தர்கள்!!

சல்மான் கான் தமிழில் இருந்து இந்தியில் டப் செய்த படத்திலும் வெற்றி பெறுகிறார், இந்தியில் ஒரிஜினலாக நடித்தாலும் ஆஹா ஓஹோ வெற்றி பெறுகிறார் என்ற கேள்வியோடும், நானும் கொடுக்கிறேன் மெகா ஹிட் என்ற ஒசத்தியான சபதத்தோடும், ஒஸ்தி படத்தில் நடித்தார் சிம்பு.

இந்தியில் சல்மான் கான் நடித்த தபாங் சூப்பர் டூப்பர் பாக்ஸ் ஆபீஸ் ஹிட். ஆனால் தமிழில் ஒஸ்தி பிசுபிசுத்து விட்டது, ஒஸ்தி படம் பார்த்த எல்லோரும் சிம்புவுக்கு இது ரொம்ப ஜாஸ்தி என்று கமென்ட் கொடுக்கிறார்களாம்.

ஒஸ்தி படத்தால் சிம்புவின் தந்தை டி.ஆருக்கு மட்டுமல்ல திரைப்பட வினியோகஸ்தர்களுக்கும் பெருத்த நஷ்டமாம்! இதனால், நஷ்டமடைந்த திரைப்பட வினியோகஸ்தர்கள் ஒன்று கூடி சிம்புவுக்கு ரெட் கார்ட் காட்டினால் என்ன என தீவிரமாக ஆலோசித்து வருகின்றனராம்.

Monday, December 26, 2011

கயவர்களுடன் கள்ள தொடர்பை வெளியிட்டது நய் துன்யா நாளிதழ்

புதுடெல்லி:ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக்குடன் அன்னா ஹஸாரே இணைந்து பணியாற்றிய செய்தி ‘நய் துன்யா’ என்ற ஹிந்தி பத்திரிகையில் வெளியானது.

இந்நிலையில் அன்னா ஹஸாரே ஆர்.எஸ்.எஸ்ஸின் பின்புலத்தில் செயல்படுகிறார் என தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் திக்விஜய்சிங் இவ்விவகாரம் தொடர்பாக ட்விட்டர் சமூக இணையதளத்தில் கூறியிருப்பதாவது:

ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக்குடன் இணைந்து ஹஸாரே பணியாற்றியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டாவில் 1983-ல் ஆர்.எஸ்.எஸ். பணிகளில் நானாஜியின் செயலராக ஹஸாரே இருந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ள ‘நய் துன்யா’ பத்திரிகையின் முகப்புப் பக்கத்தைப் பாருங்கள்.

ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் தொடர்பு இல்லை என ஹஸாரே மீண்டும் மீண்டும் கூறுகிறார். அவர் கூறுவதை நம்புவதா, இல்லை பத்திரிகையில் வெளியாகி உள்ள புகைப்படத்தை நம்புவதா? நான் ஏற்கெனவே கூறியது சரிதான் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

புது டெல்லியில் அதிக குளிர் என்பதால் உண்ணாவிரதம் இருக்க மும்பையை ஹஸாரே தேர்வு செய்யவில்லை. அதிக நிதி திரட்டுவதற்காகத்தான் அவர் மும்பையைத் தேர்வு செய்துள்ளார் என்றும் திக்விஜய் தெரிவித்துள்ளார்.

நடிகருக்காக கோடிகளை கொட்டும் இந்திய நிறுவனம் !!

புதுடில்லி : ‌தொலைத்தொடர்பு துறை நிறுவனமான எம்.டி.எஸ்., இந்தியா, பாலிவுட் நடிகர் இம்ரான் கானை தனது புதிய விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்துள்ளது.

ரூ.10 கோடிக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்காக இம்ரான் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஒப்பந்த விழா டில்லியில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

இவ்விழாவில் பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான், அபிஷேக் பச்சன், இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி, முன்னணி தொலைத் தொடர்பு துறை நிறுவனர்கள் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இம்ரான் கான் ஏற்கனவே கோக் மற்றும் லிவிஸ் ஜீன்ஸ் ஆகியவற்றின் விளம்பர தூதராக இருந்து வருகிறார்.

மாரடைப்பு வருவதற்கான காரணிகள்??

டான்சில் மற்றும் குடல் இறக்கம் உள்ளவர்களுக்கு இதயநோய் வருவதற்கான சூழ்நிலைகள் அதிகம் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சுவீடனில் டான்சிலால் பாதிக்கப்பட்ட 5,500 பேரும், குடல் இறக்கத்தால் பாதிப்பட்ட 2,800 பேரும் இந்த மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதில் டான்சிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு 44 சதவீத வாய்ப்பு இருப்பதாக தெரியவந்தது. குடல் இறக்கம் உள்ளவர்களுக்கு 33 சதவீதம் மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதாம்.

ஒரே நபருக்கு டான்சில் மற்றும் குடல் இறக்க பாதிப்பு இருந்தால் மிக அதிக அளவில் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஐரோப்பிய இதயநோய் ஆய்வுப் பத்திரிகை இத்தகவலை வெளியிட்டுள்ளது.

Sunday, December 25, 2011

பலமடங்காக போட்டுகொடுக்கும் பத்திரிகைகள் A.R.R காட்டம்

சென்னை: ஆக்ராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,சக இசையமைப்பாளர் என்ற வகையில், டேம் 999 திரைப்பட இசையமைப்பாளர் அவுசுபச்சனுக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

ஆனால் அதை சில ஊடகங்கள் திரித்து கூறிவிட்டன. இது மிகவும் வருந்தத்தக்கது என்று கூறியுள்ளார்.

கடந்த 3 வாரங்களாக தான் அமெரிக்காவில் இருந்ததால் முல்லைப்பெரியாறு பிரச்னையின் தாக்கம் குறித்து அறியவில்லை என்றும், எனினும் தான் தமிழ் மக்களுக்கு கடன்பட்டிருப்பதாகவும், அவர்களே தனது வளர்ச்சிக்கு தூணாக இருந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்.

சொந்த சோகங்களை சொல்லும் சோனியா அகர்வால்!

நடிகை சோனியாக அகர்வால். செல்வராகவன் உடனான விவாகரத்துக்கு பின்னர், சினிமாவில் தனது 2வது இன்னிங்சை தொடங்கியிருக்கிறார் நடிகை சோனியா அகர்வால். தற்போது ராஜ்கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு நடிகையின் வாக்குமூலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது.

படத்தின் ஆடியோ சி.டி.,யை வெளியிட்டு பேசிய டைரக்டரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான எஸ்.ஏ.சந்திரசேகர், எல்லோருடைய வாழ்க்கையையும் போல் நடிகைகளின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, சோகம், இன்பம், துன்பம், ரகசியம் இருக்கும். குறிப்பாக, நடிகையின் வாழ்க்கையில் பல ரகசியங்கள் இருக்கும். வெளியே தெரியாத பக்கங்கள் இருக்கும். அந்த பக்கங்களை இந்த படத்தில் காட்டியிருப்பதாக சொன்னார்கள். நடிகையின் வாழ்க்கையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று எல்லோருக்கும் ஆவல் இருக்கும். அதுவே இந்த படத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றார்.

சோனியா அகர்வால் பேசும்போது, நான் மூன்று வருடங்களாக நடிக்கவில்லை. மறுபடியும் நடிக்க வந்தபோது, ஒரு புதுமுகம் போல் உணர்ந்தேன். எல்லோருடைய வாழ்க்கையிலும் ரகசியங்கள் இருக்கும். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல. என் வாழ்க்கையிலும் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு சில ரகசியங்கள் உள்ளன. நான் நடிகையாக இருப்பதால், என் மீது அதிக கவனம் செலுத்துகிறார்கள். என் வாழ்க்கையில் உள்ள ரகசியங்களை வெளியில் சொல்ல விரும்பவில்லை. `ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தின் கதைக்கும், என் சொந்த வாழ்க்கைக்கும் தொடர்பே இல்லை. ஒரு சதவீதம் கூட, என் சொந்த வாழ்க்கைக்கு சம்பந்தமில்லை. எனக்கு கதாநாயகியாக நடிக்க அதிக சந்தர்ப்பங்கள் வருகின்றன. அதனால், குணச்சித்ர வேடங்களில் நடிக்க மாட்டேன்.

Saturday, December 24, 2011

எல்லாருக்கும் பிடிக்கும் இளைய தளபதியை ஷங்கர்

"எந்திரன்" திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருந்தோம். அங்கு தேசிய நெடுஞ்சாலையில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம். ஆனால் அன்றைய தினம் அனுமதி கிடைக்கவில்லை. படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு, “த்ரி இடியட்ஸ்” திரைப்படத்தைப் பார்க்கச் சென்றேன்.

திரையரங்கை விட்டு வெளியே வரும்போது இந்த படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. நண்பன் திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. ரஜினிகாந்துக்கு பிறகு கடமையுணர்வு மிக்க நடிகராக விஜய் இருக்கிறார்.

நடிகர் விஜயை அனைவருக்கும் பிடிக்கும். யாருக்கெல்லாம் பிடிக்காதோ அவர்களுக்கும் நண்பன் திரைப்படத்தை பார்த்தால் அவரை பிடிக்கும்.

நண்பனில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். நிச்சயம் அவர் எனக்காக இந்த படத்தில் நடிக்கவில்லை. அவர் ஒரு சீனியர் நடிகர் என்பதை நிரூபித்துவிட்டார்.

சிவாஜி, எந்திரன் படங்களை போல நினைத்துக் கொண்டு நண்பன் படத்தை பார்க்க வரவேண்டாம். எந்திரன் படம் போல அனிமேட்ரானிக்ஸ், கிராபிக்ஸ் காட்சிகள் கிடையாது. ஆனால் நண்பனில் நல்ல கதை உள்ளது. எனவே எந்திரனை மறந்துவிட்டு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நண்பன் படத்தை பார்க்க வாருங்கள்’’ என்று தெரிவித்தார்.

ப. சிதம்பரத்தை குறி வைக்கும் தீவிரவாதிகள் !?

புதுடெல்லி: தீவிரவாத வழக்குகளை முடக்க தீவிரவாத சங்க்பரிவார் சதி செய்வதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் கூறியுள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு பின்னணியில் உள்ள தீவிரவாத சங்க்பரிவார பாசிஸ்டுகள் மீது நடந்து வரும் விசாரணையை முடக்கவே பாரதிய ஜனதா கட்சியினர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை குறிவைத்து வருகின்றனர்.

இந்தியாவில் நடந்த பல குண்டுவெடிப்புகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் சுனில்ஜோஷி படுகொலை ஆகியவற்றின் சூத்திரதாரியான ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ்குமார் உட்பட சங்க்பரிவார் மீது நடத்தப்பட்டு வரும் விசாரணையின் வேகம் குறைந்து வருவதை பார்க்கும்போது பாரதிய ஜனதா செய்து வரும் சதித்திட்டம் வெற்றி பெற்று வருவதை நம்மால் உணரமுடிகின்றது.

இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளான மலேகான்,மக்கா மஸ்ஜித், அஜ்மீர், சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு ஆகியவற்றின் பின்னணியில் இருப்பது தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்ஸின் மத்திய தலைமை என்.ஐ.ஏ மற்றும் இன்ன பிற விசாரணை குழுக்கள் நிரூபித்தன.

ஒரு குழு திட்டமிட்டு குண்டுவெடிப்புகளை நடத்தியிருப்பதையும், ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினர் அந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு செயல்பட்டதையும் பட்டவர்த்தனமாக கண்டுபிடித்த பின்பும் அவரை இன்னும் கைது செய்யாமல் இருப்பது ஆச்சரியமளிக்கின்றது. அதே போன்று இன்னும் 16 வழக்குகளில் இவர்களுடைய தொடர்பு குறித்து விசாரணைக் குழுக்கள் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கானல் நீராகி வருகின்றது.

ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக பதவியேற்ற பின்புதான் பா.ஜ.க மற்றும் அதன் சக அமைப்புகள் செய்து வந்த குண்டுவெடிப்பு மற்றும் தகிடுதத்தங்கள் வெளி உலகிற்கு தெரியவந்தது. மேலும் இந்துத்துவா செய்து வந்த குண்டுவெடிப்புகளை தைரியமாக பகிரங்கப்படுத்தியவரும் இவரே! இவற்றையெல்லாம் மனதிற்கொண்டுதான் திருடனுக்கு தேள் கொட்டியது போன்று பா.ஜ.கவினர் ப.சிதம்பரத்திற்கு எதிராக ‘சதி’களை அரங்கேற்றி வருகின்றனர்.

ஊழலுக்கு எதிரானவர்கள், நேர்மையானவர் என்று போலி பிரச்சாரம் செய்து வரும் பா.ஜ.க மற்றும் தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்ஸின் மதவாத வன்முறை செயல் திட்டத்தை மனதிற்கொண்டு இவர்கள் மீது மதசார்பற்ற கட்சிகள் ஒரு கண் வைத்திருக்க வேண்டும்.’ இவ்வாறு இ.எம்.அப்துற்றஹ்மான் கூறியுள்ளார்.

Friday, December 23, 2011

"குஷி" யில் விஜய் ரசிகர்கள் !!

தற்போது ஷங்கரின் இயக்கத்தில் தான் நடித்திருக்கும் "நண்பன்" படத்தின் ஆடியோ வெளியீட்டை கோவையில் இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நாளை (டிசம்பர் 23ம்) தேதி, மாலை 5 மணிக்கு மேலும் பிரமாண்டமாக நடத்தி கோலோச்ச இருக்கிறார்!

ஷங்கரின் இயக்கத்தில் "நண்பன்" திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதுமே இப்படத்தின் ஆடியோ வெளியீட்டை கோவையில் நடத்த வேண்டும் என்பது தான் விஜய் போட்ட ஒரே கண்டிஷனாம்!

மதுரை, கோவை, அடுத்து திருச்சி, திருநெல்வேலி அப்புறம் இளையதளபதியின் அரசியல் பிரவேசம் தான் என குஷியில் இருக்கிறது விஜய் ரசிகர்கள் வட்டாரம்!

ஆடியோ ரிலீஸ் மூலம் அரசியல் பிரவேசம் கணக்குப் போடும் நடிகர் இவராகத்தான் இருக்கமுடியும் என சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறதாம், வெல்டன் விஜய்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும் முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் ஒன்று திரண்டு எதிர்ப்பை காட்டி வரும் நேரத்தில் தமிழகத்தில் உள்ள திரைப்படத்துறையினர் மவுனம் சாதித்து வருவது ஆச்சரியமாக இருக்கிறது(எல்லாம் தன்னுடைய படங்களை கேரளாவில் திரையிட எதிர்ப்பு கிளம்பும் என்கிற பயத்தில்,அவர்களுக்கென்ன கையும், பையும் நிறைந்தால் போதும்)

கர்ப்ப காலத்தில் இவ்வகையான சத்துக்கள் தேவை

கர்ப்ப காலங்களில் பெண்களின் உடலில் உள்ள இரத்தத்தின் கொள்ளளவு 50 சதவிகிதம் அதிகமாகும். எனவே அவர்களுக்கு இந்த சமயத்தில் இரும்பு சத்து தேவை இரட்டிப்பாகும்.

உண்மையில், கர்ப்பம் இல்லாவிட்டாலும், பெண்களுக்கு ஆண்களை விட அதிக அயன இரும்பு சத்து தேவை. கர்ப்ப காலத்தில் போதிய இரும்பு சக்தி கிடைக்காவிடில், சிக்கல்கள் ஏற்படலாம்.

பாதாம் பருப்பில் இரும்பு, வைட்டமின்கள் மட்டும் இல்லாமல், செம்பும் இருக்கிறது. செம்பு ஹேமோகுளோபின் உற்பத்தியை ஊக்குவிக்கும். ஏழு பாதாம் பருப்புக்களை வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைத்து, பின் தோல்களை உரித்துக் கொள்ளவும். இவற்றை அரைத்து அந்த கூழ் பசையை தினமும் காலையில் மூன்று மாதங்களுக்கு சாப்பிட்டு வரவும் கறுப்பு எள் இரும்புச்சத்து நிறைந்தது.

இதில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அரைத்து, வடிகட்டி, சர்க்கரை சேர்த்த பாலுடன் அருந்தவும். தேன் அயச்சத்து நிறைந்தது. சோகைக்கு மருந்து. பூசணிக்காய் இரத்த இழப்பு, சிறுநீரில் ரத்தம் போதல் இவற்றை கண்டிக்கும். எனவே சோகை வராமல் தடுக்கப்படுகிறது. வெங்காயமும் சோகைக்கு மருந்தாகும். பேரிச்சம்பழம், வெல்லம் இவைகள் சோகையை போக்கும்.

Thursday, December 22, 2011

டெண்டுல்கருக்கு முதன்மை ஆஸ்திரேலியா பல்கலைகழகம்

கிரிக்கெட் உலகின் சகாப்தங்கள் பிராட்மேன், தெண்டுல்கர். இந்த இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற விவாதம் எப்போதுமே இருக்கும்.

ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிபித் பல்கலைக் கழக பொருளாதார ஆராய்ச்சியாளர் டாக்டர் நிகோலஸ் ஆய்வின்படி பிராட்மேனை விட தெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் விளையாடிய கால கட்டத்தை வைத்து நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரிய வந்தது. 1989-ம் ஆண்டு டெஸ்டில் அறிமுகமான தெண்டுல்கர் 184 டெஸ்டில் 15,183 ரன் எடுத்துள்ளார். சராசரி 56.02 ஆகும். அவருக்கு தற்போது 38 வயதாகிறது. பிராட்மேன் 1928-ம் ஆண்டு முதல் 1948-ம் ஆண்டு வரை 52 டெஸ்டில் விளையாடி 6,996 ரன் எடுத்துள்ளார். சராசரி 99.94 ஆகும். அவர் 2001-ம் ஆண்டு தனது 92-வது வயதில் இறந்தார்.

பிந்துவின் புதுவித ஆர்வம்

1980களில் தென்னிந்திய சினிமாவை தன்னுடைய நடிப்பாலும், கவர்ச்சியாலும் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தவர் நடிகை சில்க்ஸ்மிதா.

மறைந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை சமீபத்தில், தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் இந்தியில் எடுத்தனர். இதில் சில்க்காக வித்யாபாலன் நடித்து இருந்தார். இதுவரை இல்லாத அளவுக்கு ரொம்பவும் கவர்ச்சி காட்டி நடித்து இருந்தார் வித்யா. படமும் சூப்பர்ஹிட்டாகி வசூலிலும் சாதனை படைத்திருக்கிறது.

இந்நிலையில் தமிழிலும் இம்மாதிரியான படங்கள் எடுக்கும் ஆர்வம் திரைவட்டாரத்தில் கிளம்பி இருக்கிறது. தமிழிலும் சில்க் கதை படமானால், அதில் நான் நடிக்க காத்திருக்கிறேன் என்று கூறி வருகிறார் வெப்பம், கழுகு படங்களின் நாயகி பிந்து மாதவி. பிந்து மாதவியின் இந்த ஆர்வத்திற்கு காரணம், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பிரபல டைரக்டர் ஒருவர் பிந்துமாதவியின் கண்களை பார்க்கும்போது சில்க்கை காண்கிறேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Wednesday, December 21, 2011

கவர்ச்சிகரமாக தோன்றும் ஆண் பெண்! ஆய்வில்!!

மனிதர்கள் எந்த வயதில் கவர்ச்சி ஆக காணப்படுகின்றனர் என்பது குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதுபற்றி ஆண்கள் மற்றும் பெண்களிடம் தனிதனியாக கருத்து கேட்கப்பட்டது. அதில், பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் செக்சுடன் கூடிய கவர்ச்சியாக தெரிகின்றனர்.

ஏனெனில், 40 வயதில் தான் ஆண்கள் அழகான கவர்ச்சியான உடல் அமைப்பை பெறுகின்றனர். அதுவே பெண்களை கவருகிறது. அதுபோன்று பெண்கள் தங்களது 30 வயதில்தான் கவர்ச்சிகரமான இருக்கின்றனர். அந்த வயதில்தான் கவர்ச்சியான உள்ளாடைகளையும், வாசனை திரவியங்களையும் பயன்படுத்த தொடங்குகின்றனர்.

ஆண்கள் தங்களது 40 வயதுக்கு பிறகுதான் ஆடம்பரமான ஆடைகளை அணிவதில் விருப்பம் கொள்கின்றனர். மேலும், விருந்து விழாக்களில் பங்கேற்று ஒயின் மற்றும் மதுவகைகளில் நாட்டம் கொள்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

பால் நடிகையுடன் முடிச்சு போட்டதால் வருத்தத்தில் டைரக்டர்!!

விஜய் மதராசபட்டணம் படத்தை இயக்கி பிரபலமானார். பின்னர் விக்ரமை வைத்து தெய்வத்திருமகள் படத்தை எடுத்து வெளியிட்டார். இப்படத்தில் அமலா பால் முக்கிய கேரக்டராக நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதுகுறித்து அமலாபாலிடம் இரு தினங்களுக்கு முன்னர் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சியில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் தவிர்த்தார் அமலா. இந்நிலையில் டைரக்டர் விஜய் இதற்கு பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கும் நடிகை அமலாபாலுக்கும் காதல் என வதந்தி பரவி இருப்பது வருத்தம் அளிக்கிறது. இதனால் என் குடும்பத்தினருக்கும் சங்கடம் ஏற்பட்டு உள்ளது.

எனக்கும், அமலா பாலுக்கும் இடையே வெறும் நட்புதான் உள்ளது. வேறு மாதிரி தொடர்பு எங்களுக்குள் இல்லை. நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை., எனது பணிகள் முழு நேரத்தையும் ஆக்கிரமித்து உள்ளது என்று கூறியிருக்கிறார்.

அஜீரணம் பல் ஈறுகளுக்கு உகந்தது கொத்தமல்லி கீரை

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் பச்சைக் கொத்து மல்லி இலையை தினமும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் நாற்றம் நீங்கும்.

கொத்து மல்லி கீரையை பிழிந்து கிடைக்கும் சாற்றை அம்மை மற்றும் பித்த தழும்புகளுக்கு மேல் தடவி வந்தால் அவைகளின் நிறம் தோலோடு பொருந்துவது போல மாறி வரும்.

முகத்தில் ஏற்படும் பருக்கட்டிகளுக்கு கொத்துமல்லி சாற்றை எடுத்து அதில் கொம்பு மஞ்சளை அரைத்து, அரைத்ததை பருக்கள் மீது பூசி வந்தால் பருக்கள் மறையும், முகம் பளபளப்பாகும்.

கொத்துமல்லி சாறுடன் சிறிது கற்பூரம் கலந்து பூசினால் தலைவலி குணமாகும்.

கொத்துமல்லி இலைகளை எண்ணெய் விட்டு வதக்கி வீக்கம், கட்டிகளுக்கு வைத்து கட்டி வர அவை சீக்கிரம் கரைந்து போகும் அல்லது பருத்து உடையும்.

கொத்துமல்லி சாற்றை தேனோடு கலந்து சாப்பிட்டு வர ரத்தத்தில் ஏற்பட்ட பித்த நோய் முற்றிலும் குணமாகும்.

கொத்து மல்லி கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் சிறிதளவு சர்க்கரை போட்டு அருந்தி வந்தால், உடல் உஷ்ணம் நீங்கும். அஜீரணம் உண்டாகாது.

Tuesday, December 20, 2011

சீண்டி பார்க்கிறார்கள் சீக்கிரம் முடிவு கட்டுவேன்! வடிவேல்!!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் சினிமாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார் நடிகர் வடிவேலு.

இந்நிலையில் அகில உலக அரிமா சங்க மாவட்ட 324 பி3ன் மண்டல எழுச்சி மாநாடு, மதுரை மாவட்டம் வரிச்சியூர் அருகே உள்ள பாத்திமா மைக்கேல் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் வடிவேலு பேசியதாவது, நீண்டநாட்களுக்கு பிறகு மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தேன். மற்றபடி யாருக்கும் பயந்து இந்த முடிவை எடுக்கவில்லை.

மதுரையில் பிறந்துவிட்டு இப்படி சீரழிகிறாயே என்று பலரும் கேட்டனர். சினிமா படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து சிரிக்க வைத்தாலும், எங்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கையும் உண்டு. சும்மா இருந்த என்னை சிலர் சீண்டிவிட்டனர். வடிவேலு கொலை செய்தான் என்றும், கொள்ளையடித்தான் என்றும் வீணாக அவதூறு பரப்புகிறார்கள். இந்த எல்லா பிரச்சனையும் சீக்கிரத்தில் முடிவு கட்டுவேன் என்றார்.

அந்த விஷயங்கள் 9 ?

அந்த 9 விஷயங்கள் இவை தான்.


1. ஒருவரது வயது, 2. பணம் கொடுக்கல் வாங்கல் 3. வீட்டு சச்சரவு, 4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள், 5. கணவன்-மனைவி அனுபவங்கள்,(ஊடல்)

6. செய்த தானம், 7. கிடைக்கும் புகழ், 8. சந்தித்த அவமானம். 9. கடந்து வந்த பாதை (கஷ்டமான) இந்த 9 விஷயங்களையும் என்றும் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

Monday, December 19, 2011

விஜய் தமிழனா இல்லை கலைஞனா? இயக்குனர் இமயம் !?

ஊழலுக்கு எதிராக டில்லி வரை சென்ற நடிகருக்கு, முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையை பற்றி எதுவும் தெரியாதா...படத்தில் மட்டும் பணத்திற்கு பாட்டு பாடும் கலைஞனா என்று நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்கியுள்ளார் டைரக்டர் பாரதிராஜா.

தமிழ்நாட்டிலோ அல்லது தமிழர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றாலோ உடனே தமிழ் திரையுலகத்தினரும் குரல் கொடுப்பார். அந்த வகையில் இப்போது தமிழ்நாட்டையை உலுக்கி கொண்டு இருக்கும் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் திரையுலகினர் யாரும் குரல் கொடுக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னணி ஹீரோ ஒருவரை பற்றி அதிரடியாக விமர்சனம் செய்து, ஒரு பெரும் புயலை கிளப்பியிருக்கிறார் டைரக்டர் பாரதிராஜா. பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் பாரதிராஜா, ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே டில்லியில் போராட்டம் நடத்தியபோது, இங்கே தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு கலைஞன், விமானம் ஏறி டில்லி சென்று ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ஏன் சம்பந்தப்பட்ட அந்த கலைஞனுக்கு இங்கே தேனியில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு துடிக்கும் தமிழன், அவரது கண்ணுக்கு தெரியவில்லையா? அல்லது அந்த நடிகருக்கு தேனிக்கு செல்லும் வழிதான் தெரியாதா? என்று கடுமையாக சாடியுள்ளார்.

பாரதிராஜா இப்படி கடுமையாக சாடியிருக்கும் அந்த நபர் வேறுயாரும் அல்ல, நடிகர் விஜய் தான். இதற்கு விஜய் என்ன பதில் சொல்ல போகிறாரோ...?மற்ற முன்னனி நடிகர்களும் வாய் திறக்காதது ஏன்? பையில் பணம் நிரப்பத்தான் சினிமாவுக்கு வருகிறார்கள், இன உணர்வை எப்படி எதிர்பார்ப்பது இவர்களிடம். (யாராவது ஸ்பான்சர் செய்தால் வருவார்கள்)

தொட்டு பேசும் தொழில்நுட்பம்

செல்போன்களில் புதுமையைப் புகுத்த நான், நீ என்று ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் சென்ஸ்செக் என்ற தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று செல்போன்களில் புதிய தொழில்நுட்பத்தைப் பொருத்தியுள்ளது. தொடுதிரையுள்ள செல்போன்கள், ஸ்மார்ட்ஃபோன், டேப் எனப்படும் செல்போன்களில் இந்தப் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.

அதாவது, செல்போனின் திரையைத் தொடும்போது அதிலுள்ள படங்கள், எழுத்துகள் போன்றவற்றை நாம் உணர முடியும். அதாவது செல்போனில் இருக்கும் ஒரு மலையின் புகைப்படத்தை தொட்டால் அது கரடுமுரடாக இருப்பதையும் நாம் உணர முடியும். செல்போன்களில் விளையாட, செல்போனில் திரைப்படம் பார்க்க போன்றவற்றுக்கு இந்த வசதி மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Sunday, December 18, 2011

இல்லறம் இன்பம் பெற மருந்து!! உஷார்!?

சேலம் குகையில் உள்ள பஞ்சந்தாங்கி ஏறி பகுதியை சேர்ந்தவர் செல்வம் வயது-40. இவர் பாம்புக்கறி விற்பதாக அந்தப்பகுதியில் கூறிக்கொண்டு, இவரது வீட்டில் சில பாம்புகளை வளர்த்து வருவதாக மாவட்ட வன அலுவலர் சுகிர்தராஜ் கோயில்பிள்ளைக்கு தகவல் வந்துள்ளது.

இது குறித்து விசாரணை செய்ய வனச்சரகர் பன்னீர்செல்வம், வனவர் மோகனவேலுவுக்கு உத்தரவிட்டார்., அதன்படி இன்று விசாரணை செய்ய சென்ற அதிகாரிகள் குழுவினர், செல்வத்தின் வீட்டில் இருந்த ஒரு கண்ணாடி விரியன், ஒரு நாகபாம்பு, ஒரு சாரைப்பாம்பு, ஒரு ராஜநாகம், ஒரு கோதுமை நாகம் என பலவகையான பாம்புகளை பறிமுதல் செய்தனர்.

பாம்புகளை வைத்து என்ன செய்கிறார் செல்வம்...? என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, முதலில் பதில் சொல்ல மறுத்த வானச்சரகர் பன்னீர் செல்வம், பின்னர் உயர் அதிகாரிகளின் ஆலோசனையின்படி பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது,

இல்லறத்தில் அதிக “இன்பம்” அனுபவிக்க இந்த பாம்புக்கறி ஆண்களுக்கு “கூடுதல் வீரியம்” கொடுக்கும் என்று பொது மக்களிடத்தில் புரளியை கிளப்பிவிடுவார். அதே போல தீர்க்க முடியாத எய்ட்ஸ் போன்ற நோய்களையும் குணப்படுத்தும் என்றும் வதந்தியை கிளப்பிவிடுவார்.

பின்னர் தன்னுடைய ஆட்கள் மூலம்மாக கண்ணாடி விரியன், ராஜநாகம் போன்ற அபூர்வ பாம்புகளை காட்டி அதன் கறி என்று சொல்லி சாதாரன சாரைப்பாம்பின் கறியை பொதுமக்களிடம் விற்பனை செய்து வந்துள்ளார். கிட்டத்தட்ட நாங்கள் ஒருவாரமாக செல்வத்தை பின் தொடர்ந்து இவர் பாம்புகறி விற்பதை உறுதி செய்து கொண்ட பின்னர்தான் இவரை கைது செய்துள்ளோம்.

தீராத நோய்களையும் தீர்க்கும், இல்லறத்தில் “ஊக்கம்” கிடைக்கும் என்ற பொய்யான வதந்திகளை நம்பவேண்டாம், அறிய வகை உயிரினங்களை கொலை செய்து கரியாக சமைக்கும் போது எங்களிடம் சிக்கிக்கொண்டால் உங்களுக்கு கட்டாயம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்’’ என்றார்.

இடமில்லாமல் வந் (தேறி) தவர்களுக்கு இட ஒதுக்கீடு பேச்சு?

கொச்சி: பிற்படுத்தப்பட்டோர்களுக்கான (ஒ.பி சி) 27 % இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற மத்திய அரசின் முடிவிற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ்-ன் கிளை அமைப்பான வி.எச்.பி திட்டமிட்டுள்ளதாக கடந்த வெள்ளியன்று தெரிவித்துள்ளது.

ஹிந்து வாக்கு வங்கியை குறிவைத்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக வி.எச்.பியின் சர்வதேச தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார்.

வி.எச்.பியின் மூன்று நாள் கூட்டம் கடந்த வெள்ளியன்று தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தில் மத ரீதியிலான இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே கேரளா,ஆந்திரா, தமிழ் நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் மத ரீதியிலான இட ஒதுக்கீடு அமலில் இருப்பதாகவும் அதை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் சமீபத்தில் முஸ்லிம்களுக்கு 6% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனை வி.எச்.பி முழுமையாக எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் வி.எச்.பி. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எந்த முறையில் இடஒதுக்கீடு வழங்குவதையும் எதிர்ப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் தாங்கள் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு அளிக்க நினைக்கும் மத்திய அரசின் இடஒதுக்கீட்டிற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைப் பொறுக்கிகளின் அழுகி நாறிப்போன மூளைகளில் உதயமான, இரத்தவெறிக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ், அதன் குடும்ப வெறி எடுபிடிகள் மற்றும் அதன் அரசியல் பொறுக்கிகளான பாஜக.,மொத்தத்தில் இது ஒரு தீவிரவாத கொலவெறி கூட்டம்.

ரூம் போட்டா தப்பில்லை ரிச்சா போட்டதுதான் தப்பு!!

'மயக்கம் என்ன,' 'ஒஸ்தி' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பவர், ரிச்சா கங்கோபாத்யாய். மும்பையை சேர்ந்த இவர்தான் தமிழில் இப்போதைய ஹாட் ஹீரோயின். தெலுங்கு மற்றும் இந்தியிலும் நடிக்கிறார். பொதுவாக மும்பை நடிகைகள் படப்பிடிப்புக்கே தங்கள் பாய் பிரண்டோடுதான் வருவார்கள். ரிச்சாவுக்கும் அப்படி ஒரு பாய் பிரண்ட் உண்டு. வெறும் பாய் பிரண்ட் மட்டுமல்ல... இவர் ரிச்சாவின் காதலரும்கூட.

அவர் பெயர், சுந்தர். ரிச்சா தமிழ் படப்பிடிப்புக்காக சென்னை வரும்போது, அவரை கவனித்துக் கொள்பவர், காதலர் சுந்தர்தான். சமீபத்தில் 'ஒஸ்தி' படத்தின் விளம்பரத்துக்காக ரிச்சா, சென்னை வந்திருந்தார். அவரும், காதலர் சுந்தரும் சென்னை நந்தனத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்குச் சென்று இருவருக்கும் ஒரே அறையை ஒதுக்கும்படி கேட்டார்கள். அதற்கு, ஓட்டல் நிர்வாகம் மறுத்துவிட்டது. ரிச்சா மட்டும் தங்குவதற்கு அறை தருவதாக ஓட்டல் நிர்வாகி கூறினார். அதற்கு, 'இவர் என் நண்பர். இவருக்கு என் கம்ப்யூட்டரில் கொஞ்சம் வேலை இருக்கிறது. அதற்காகவே என் அறையிலேயே தங்க அனுமதிக்கவும்' என்று ரிச்சா கூறினார்.

என்றாலும் ரிச்சாவுக்கும், அவருடைய காதலருக்கும் ஒரே அறையை ஒதுக்குவதற்கு ஓட்டல் நிர்வாகி பிடிவாதமாக மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த ரிச்சா அவருடன் தகராறு செய்தார். ஆனாலும் நிர்வாகம் பிடிவாதமாக இருந்ததால், இருவரும் தியாகராய நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு சென்று ஒரே அறையில் தங்கினார்கள்!

Saturday, December 17, 2011

ஆப்பிலை முந்திய 4ம் தலைமுறையின் செல்பொன்

லண்டன், டிச. 18: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை விட சாம்சங் நிறுவனத் தயாரிப்பான கேலக்ஸி நெக்சஸ் செல்போன் பிரபலமடைந்துள்ளது.

தங்கள் தயாரிப்பை பிரபலப்படுத்த சாம்சங் நிறுவனம் விளம்பரங்கள் மூலம் மேற்கொண்ட முயற்சியே இதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. மேலும் ஆப்பிள் ஐபோனில் உள்ள பாட்டரி குறைபாடு, இணையதளத்தை இணைப்பதில் உள்ள வேகம் ஆகியவையும் கேலக்ஸியின் பக்கம் வாடிக்கையாளர்களைத் திருப்பியுள்ளது. அமெரிக்க இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி நெக்சஸ் இந்தியாவுக்கு ஜனவரியில்தான் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.40 ஆயிரம் வரை இருக்கும். கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இந்த 4-ம் தலைமுறை செல்போனை சாம்சங் தயாரித்துள்ளது.

தண்ணீரை விட்டு மற்றதை (திரை நாயகிகள்) தாராளாமாக தரும் கேரளா?

"வேட்டை" படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியை செம்புலி ஜெகனும், மாடல் ரம்யாவும் தொகுத்து வழங்கினர்.

அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த "வேட்டை" பட ஹீரோயின் அமலா பாலை, மேடைக்கு வருமாறு ஜெகன் அழைத்தார். மேடைக்கு அமலா பால் வந்து கொண்டிருக்க... சந்தில் சிந்து பாடும் விதமாக ஜெகன் தன் வழக்கமான பாணியில் கிண்டலை அவிழ்த்து விட்டார். அமலா வரும் போது ஜெகன் " "கேரளாவில் இருந்து தண்ணி கேட்டா கொடுக்க மாட்டேங்குறாங்க, ஆனா அமலா பால் போன்ற நிறைய அழகான பொண்ணுங்கள மட்டும் அனுப்புறாங்க" அப்படின்னு கிண்டலாக சொல்ல, அதை கண்டும் காணாமல் இருந்து விட்டார் அமலா பால்.

அதோடு நிறுத்தினாரா ஜெகன் , மீண்டும் அமலாபாலை பார்த்து நாங்கள் எல்லாம் உங்களுக்கு தண்ணி கொடுத்து, டீக்கடைக்காரங்க டீ போட பால் கொடுத்து வியாபாரத்துக்கு உதவுகிறோம், ஆனால் நீங்கள் தண்ணீர் தர மாட்டேங்குறீங்க என்றார். அதுவரை அமைதியாகவே மேடையில் அமர்ந்திருந்த அமலா பால், நான் இந்த படத்தில் நடித்திருக்கிற செலபிரிட்டி, அதனால் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன், நீங்கள் பிரஸ் மீட்டில் கேள்வி கேட்கிற மாதிரி கேட்கிறீர்களே என்றார். அவருக்கு சப்போர்ட்டாக பேசிய ரம்யா : "ஜெகன் அவுங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்களா இல்லையா என்றார்". பின்னர் ஒரு வழியாக நிகழ்ச்சியும் நடந்தது.

நாம் அருந்தும் பாலில் முழு சத்து உள்ளதா?

பாலை பலமுறை சுட வைப்பது மிகத் தவறான பழக்கம். காய்ச்சிய பாலை, 2-3 நிமிடங்களுக்கு மேல் நீண்ட நேரம் சுட வைக்கும் போது, அதில் உள்ள வைட்டமின், பி காம்ப்ளக்ஸ் சத்துக்களான, பி1, பி2, பி12 ஆகியவை ஆவியாகிவிடும்.

கால்சியம், வைட்டமின் சத்துக்களுக்காகத்தான் பால் குடிக்கிறோம். ஆனால், பாலை அடிக்கடி சுட வைப்பதால், அந்த சத்துக்கள் வீணாகிவிடும். பால் குடிப்பதும் வீண் தான். பசும் பாலில் தீங்கு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள் இருக்கும். அவை காய்ச்சும் போது அழிந்துவிடும். இன்று பெரும்பாலும் பாக்கெட் பாலை வாங்குகிறோம். அது ஏற்கனவே, சுத்தம் செய்யப்பட்ட பின் தான், பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது என்பதால், அதை நீண்ட நேரம் காய்ச்ச வேண்டும் என்ற அவசியமில்லை. பாலைக் காய்ச்சியதும் குடித்து விடலாம். ஆறவிட்டு, மீண்டும் சூடாக்கி, சத்துக்களை அழித்த பாலைக் குடிப்பதைத் தவிர்க்கலாம்.

பசும் பால் வாங்குபவர்கள், பால் பொங்கியதும், உடனே இறக்கி விடாமல், 8-10 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். கரண்டியால், பாலைக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் பால், 100 டிகிரி செல்சியஸ் வரை சூடாகி, தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழியும். பதப்படுத் தப்பட்ட பாக்கெட் பாலில் ஏற்கனவே, பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டிருப்பதால், அதை, 6-8 நிமிடங்கள் சூடு செய்தால் போதும். பொதுவாக எந்த வகைப் பாலாக இருந்தாலும், அதை இரண்டு முறைக்கு மேல் சு ட வைக்க வேண்டாம். ஒருமுறை பாலைக் காய்ச்சியபின், அதை பிரிஜில் வைக் கலாம். காபி, டீ என தயார் செய்யும்போது, மீண்டும் மொத்தப் பாலையும் காய்ச்சாமல், எத்தனை டம்ளர் தேவைப்படுகிறதோ, அந்தளவிற்கு மட்டும் பாலை எடுத்து தயார் செய்யலாம்.

Friday, December 16, 2011

அய்யரை (வால்) கொண்டு ஆடு (கடா) வெட்ட சொல்லும் பாரதிராஜா!!

தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் உள்ள அய்யனார் கோயிலில் பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்துவக்க விழா இனிதே நடந்தது. படத்துவக்க விழா நிகழ்ச்சிக்கு கே.பாலச்சந்தர், மணிரத்னம்,வைரமுத்து உள்பட பல திரைக்கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், படக்குழுவினர் மற்றும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 30 வருடங்களாக பாரதிராஜாவின் பாதிப்பு இல்லாத இயக்குனர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. தென்னிந்தியா முழுக்க இதுதான் உண்மை என்று அழுத்தமாக சொன்னார் மணிரத்னம்.

அதன் பின் கவிஞர் வைரமுத்து பேசியதாவது, “ சினிமா உலகத்தின் மிகப்பெரிய பாகத்தை பாரதிராஜா இன்று எங்கள் ஊருக்கு கொண்டு வந்தது, அவர் செய்த மிகப்பெரிய சாதனைகளுள் ஒன்றாகும். 1976க்குப் பின் தமிழ் சினிமாவில் எந்த இயக்குனர் தலை தூக்கினாலும் அவர்களிடம் பாரதிராஜாவின் பாதிப்பு இருக்கும் என்று மணிரத்னம் கூறியது, ஒரு பல்கலைக்கழகமே அவருக்கு பட்டமளிப்பது போன்ற பெருமையை அளித்துவிட்டது. யாராக இருந்தாலும் கவிழ்த்துவிட்டு எதிர்நீச்சல் போடச் சொல்லி, கரையேறினால் உயர்த்திவிடுவது தமிழ் சினிமா. ஆனால் இங்கே 36 வருடமாக தனி இடத்தில் சிம்மாசனம் போட்டு உட்கர்ந்திருக்கிறார் பாரதிராஜா.

கலை,எழுத்து,கொண்டாட்டம் என்ற பெயரில் மக்களிடமிருந்து நிறைய சுரண்டி இருக்கிறோம். நம் காலத்திற்குள் இவர்களுக்கு ஏதாவது செய்துவிட வேண்டும் என முடிவெடுத்து அறக்கட்டளை ஒன்றை தொடங்க இருக்கிறோம். வார்த்தையை கற்றுக்கொடுத்தது தமிழ், எங்களுக்கு வாழ்க்கையை கற்றுக் கொடுத்தது நீங்கள். உங்களுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம். அறக்கட்டளைக்கு என் பங்காக ஐந்து லட்ச ரூபாய் காசோலையை தருகிறேன். மேலும் இந்த படத்தின் மூலம் எனக்கு வர வேண்டிய சம்பளப்பணத்தையும் இந்த அறக்கட்டளைக்கே தருகிறேன். எனது நண்பர் கோவில்பட்டி நாகஜோதி அவர் பங்காக பத்து லட்ச ரூபாய் காசோலையை கொடுத்துள்ளார் என்று கூறி தன் உரையை முடித்தார்.

பாலசந்தரும் மணிரத்னமும் எனக்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள். அய்யரைக் கூட்டி வந்து ஆடுவெடுகிற ஆள் நானாத்தான் இருப்பேன். வேற எங்கயாவது இவங்க இப்படி போனா ‘அவங்க’ விடுவாங்களா., பாலுமகேந்திரா நடந்து வரும்போது, அவரைத் தூக்கிக்கொண்டு வரலாம் என்று கூட நினைத்தேன். ஆனால் இந்த பூமியில் கால் பதிய வேண்டும் என்பதற்காக அதை செய்யவில்லை., இங்கு எனக்காக கூடியிருக்கும் அனைவருக்கும் நன்றி கூறி தன்னுடைய பேச்சை முடித்துகொண்டார் பாரதிராஜா.

இந்த விசயங்களில் ஒத்துபோகும் கணவன் மனைவியா !?

லண்டன்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ கணவன், மனைவி ஆகிய இருவருமே விட்டுக்கொடுத்துப் பழக வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

1,400 தம்பதிகளை ஆய்வு செய்த பிறகு இந்த முடிவுக்கு வந்துள்ளனர்., கணவனும் மனைவியும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று சொன்னால் அதற்கு 5 விஷயங்கள் அடிப்படையாக இருக்க வேண்டும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

அதில் முதலிடம் பிடிப்பது தாம்பத்ய உறவு. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அனுசரித்து நடப்பதன் மூலம் இதில் முழு திருப்தியையும் மகிழ்ச்சியையும் அடைய முடியும். இது இயற்கையானது என்பதால் இதில் கூச்சமோ, தயக்கமோ, குற்றவுணர்ச்சியோ தேவையில்லை. அதே சமயம் இலைமறை காயாக இருப்பது இந்தியச்சூழலுக்கு நல்லது.

மூன்றாவது அதே சமயம் முக்கியமானது விட்டுக்கொடுப்பது. இதற்குப் பரந்த மனது வேண்டும். வேலைப் பளு காரணமாகவோ வேறு நெருக்குதல் காரணமாகவோ வாழ்க்கைத்துணை எதையாவது கூறிவிட்டாலும் அதை பெரிதுபடுத்தாமல், அதே சமயம் அந்த விமர்சனம் அல்லது குற்றச்சாட்டு உண்மை என்று மனசாட்சி தெரிவித்தால் அந்தத் தவறை நீக்குவது அன்பு வளர மட்டும் அல்ல, குடும்பம் செழிக்கவும் நிச்சயம் உதவும்.

குழந்தைகளை நல்ல பண்புள்ளவர்களாகவும் உடல் நலம் உள்ளவர்களாகவும் கல்வி, கேள்விகளில் சிறந்தவர்களாகவும் வளர்க்க கணவன் மனைவி இருவருமே பாடுபட வேண்டும்., மனைவியர் தங்களுடைய வாழ்க்கையில் வெற்றிபெற அவருடைய குடும்ப உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரும் பக்கபலமாக இருக்க வேண்டும்.

கணவனும் மனைவியும் ஒருவர் மீது ஒருவர் அன்பு பாராட்டி, தவறுகளை நாசூக்காகச் சொல்லி திருத்தி, குழந்தைகளை நல்லபடியாக வளர்த்து படிக்க வைத்து பண்புள்ளவர்களாக ஆக்கினால் அவர்களால் அவர்களுடைய உறவினர்களுக்கும் சமூகத்துக்கும் நாட்டுக்கும் பெருமை ஏற்படும். நீ பெரியவளா, நான் பெரியவனா என்ற போட்டியெல்லாம் குடும்பம் சிதையவே வழி வகுக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

Thursday, December 15, 2011

நடிகைக்கு வைத்த பொறியில் தானே சிக்கிகொண்ட இயக்குனர் !

நடிகை அஞ்சலி வீட்டில் வெடிக்கும் என்று இயக்குனர் கம் "கருங்காலி" கதாநாயகர் மு.களஞ்சியம், "அஞ்சலிக்கும் தனக்கும் எப்பவோ மேரேஜ் முடிஞ்சாச்சு! என்று அஞ்சலியின் பெயரை டேமேஜ் செய்ய பார்த்தார்!" ஆனால் அது அவருக்கே ஆப்பாக மாறியுள்ளதாம்.

அஞ்சலியை ஆந்திராவில் இருந்து அழைத்து வந்து நடிகையாக்கியது நான் தான் என எப்போதுமே பெருமை பீத்திக் கொள்வார் களஞ்சியம். இந்த நன்றிக்கடனுக்காக அஞ்சலி "கருங்காலி" படத்தில் நடித்து கொடுத்திருக்கிறார் என்பது தனிக்கதை. ஆனால், வளர்த்த கடா மாரில் பாய்ந்த மாதிரி, தன்னை சமீப காலமாக அஞ்சலி மதிக்காமல் முன்னேற மனக்கலக்கத்தில் இப்படி கல்யாணக்கதையை கிளப்பினார் களஞ்சியம்.

ஆனால், இவர் வைத்த வெடி அஞ்சலி வீட்டில் வெடிக்காமல் இவர் குடும்பத்தில் குழப்பத்தை கிளப்பி விட்டுள்ளது தான் ஹைலைட்!. ஏற்கனவே தேவகி எனும் நடிகையுடன் ரகசியமாக குடும்பம் நடத்துவதாக சர்ச்சையில் சிக்கிய களஞ்சியம், இப்பொழுது அஞ்சலியுடனும. என்றால் அவர் வீட்டில் அடிவிழாத என்ன?!

தீவிரவாத மனதில் உதித்த தீவிர (வாத) சிந்தனை ?

கொச்சி: மத கலவரத்தை தடுப்பதற்கு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா ஹிந்துக்களுக்கு எதிரானது என சங்க்பரிவார தீவிரவாத அமைப்பான விசுவஹிந்து பரிஷத்தின் சர்வதேச தலைவர் அசோக்சிங்கால் கூறியுள்ளார்.

கேரள மாநிலத்தில் வி.ஹெச்.பியின் தேசிய மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக வருகை தந்த அசோக்சிங்கால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: “கலவர தடுப்பு மசோதாவின்படி வன்முறை சம்பவங்கள் நடந்தால் ஹிந்துக்களுக்கு எதிராக மட்டுமே வழக்கு பதிவுச்செய்யப்படும். மசோதாவை வாபஸ் பெறாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் துவக்கப்படும்.

2014-ஆம் ஆண்டு அயோத்தியில் ராமர்கோயில் எழும்பியிருக்கும். இதற்காக பாராளுமன்றத்தில் தீர்மானம் எடுக்கவேண்டிய சூழல் ஏற்படும். கோயிலின் 60 சதவீத பணிகளும் முடிவடைந்துவிட்டன.

முல்லைப் பெரியாறில் புதிய அணையை கட்டவேண்டும். இப்பிரச்சனையில் பிரதமர் தலையிடவேண்டும். ஹிந்துக்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை மத மாற்றமாகும். இதற்காக 42 ஆயிரம் கோடி ரூபாய் கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளது. நாடு சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை ஊழலாகும். இதற்கு எதிராக போராட எவரையும் அனுமதிப்பதில்லை. சபரிமலையை தேசிய புண்ணியஸ்தலமாக அறிவிக்கவேண்டும். இவ்வாறு அசோக் சிங்கால் கூறினார்.

Wednesday, December 14, 2011

குளியல் அறையில் ரகசிய கேமரா ! ஓர் எச்சரிக்கை !!

நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த ஆசிரியை ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று வீட்டில் உள்ள குளியலறையில் ஆசிரியையின் கணவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது வெளிச்சத்துக்காக வைக்கப்பட்டு இருந்த வெண்டிலேட்டர் ஜன்னலில் ஒரு கேமரா செல்போன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அந்த செல்போனை எடுத்து மெமரி கார்டில் பதிவான காட்சிகளை கம்ப்யூட்டரில் போட்டு பார்த்தார். அப்போது, ஆசிரியை உள்பட அவருடைய குடும்பத்தினர் குளித்த காட்சிகள் பதிவாகி இருந்தன. மேலும் அந்த செல்போன், பக்கத்து வீட்டை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் முத்துவிஜய் (வயது 18) என்பவருடையது என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஆசிரியையின் கணவர் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. வரதராஜுவிடம் புகார் செய்தார். அதன் பேரில், திசையன்விளை போலீசார் விசாரணை நடத்த போலீஸ் டி.ஐ.ஜி. உத்தரவிட்டார். திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொழில் நுட்பம் நல்ல விஷயங்களுக்காக பயன் படுதோ இல்லையோ இது போன்ற கெட்ட விஷயங்களில் முழுமையாக பயன்படுகிறது., எதற்கும் நாம் விழிப்புடன் இருந்தால் இவற்றை தவிற்கலாம்.

திரை உலக வாரிசுகளின் தினுசான ஆசை!!

பொதுவாக சினிமா பிரபலங்களின் வாரிசுகள், சினிமா துறைக்கே வர விரும்புவர். ஆண்கள்-நடிகர்களாகவும், பெண்கள்-நடிகைகளாகவும் வர விரும்புவர். ஆனால் சமீபத்திய தமிழ் சினிமாவில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்றே சொல்லலாம். பிரபலங்களின் பெண் வாரிசுகள் இப்போது டைரக்க்ஷன் துறையில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். அவர்கள் யார், யார் என்பதை இங்கே காணலாம்.

ஐஸ்வர்யா தனுஷ் : ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை வைத்து 3 என்ற படத்தை இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே டைரக்டர்கள் சுரேஷ் கோபி, செல்வராகவன் ஆகியோருடன் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

ஸ்ருதிஹாசன் : நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் முதலில் இசை மூலம் மக்களிடம் அறிமுகமானார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல்வேறு மொழிகளில் பிஸி நடிகையாக உள்ளார். ஆனால் இவருக்குள்ளும் இயக்குநர் ஆசை முதல் பல திறமைகள் பொதிந்து கிடக்கிறது. நடிப்பு, இசையை தவிர விரைவில் ஸ்ருதியின் அதிரடியான மற்றொரு பக்கத்தை பார்க்கலாம்.

அக்ஷ்ராஹாசன் : கமல்ஹாசனின் இரண்டாவது வாரிசான இவர் ஆரம்பத்திலிருந்தே நடிப்பு மீது ஆர்வம் இல்லை, டைரக்ஷ்னில் தான் ஆர்வம் இருக்கிறது என்று கூறி வருகிறார். தற்போது தன்னுடைய அப்பா இயக்கும் விஸ்வரூபம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். விரைவில் தன்னுடைய அப்பாவை வைத்தும் இயக்கும் எண்ணத்தில் உள்ளார். சமீபத்தில் ரஷ்யன் கல்ச்சரில் டான்ஸ் பயிற்சியின் போது நாம் அவரிடம் எப்போது நடிக்க வருவீங்க என்று கேட்டபோது, மணி அங்கிள் படத்தில் நடிக்க கேட்டாங்க, ஆனால் சாரி அங்கிள் என்று சொல்லிட்டேன். இப்ப டைரக்ஷ்னல கொஞ்சம் ஆர்வம் இருக்கு என்று அழகாக பேசி முடித்தார் அக்ஷ்ரா.

விஜயலெட்சுமி : டைரக்டர் அகத்தியனின் மகளான விஜயலெட்சுமி சென்னை 28, அஞ்சாதே உள்ளிட்ட படங்களில் தலைகாட்டினார். இப்போது இவர் தனது அக்கா கணவர் திரு டைரக்ஷ்னில், விஷால், த்ரிஷா நடித்து வரும் சமரன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

கீர்த்தனா : பார்த்திபன் மகளான கீர்த்தனா கன்னத்தில் முத்தமிட்டால் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பிறகு சினிமாவிற்காக நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டார். சமீபத்தில் இவரை நடிக்க கேட்டு வாய்ப்பு வந்தும் கூட வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம். இப்போது மணிரத்னம் இயக்கவுள்ள படத்தில் உதவி இயக்குநராக பணியாற்ற உள்ளாராம்., வாரிசுகளை இயக்குநர்களாக பார்க்கலாம் விரைவில்.

உலகத்தையே தன் கையில் அடக்கிவிடலாம் !!

உலகம் என் கையில்' என இனி தாராளமாகக் கூறலாம். கைகளிலேயே உலகத்தைக் காண்பிக்கும் விதமாக புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

"ஐ ஆம்' என்ற இந்தப் புதிய ரக வாட்ச் சிறிய கம்ப்யூட்டரைப் போன்று செயல்படுகிறது. அதில் எஸ்.எம்.எஸ். அனுப்பலாம், தொலைபேசி அழைப்புகள் செய்யலாம், இ-மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் மேயலாம் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

நமக்கு இ-மெயில், எஸ்.எம்.எஸ்.கள் வந்தால் அது உடனே வாட்சின் திரையில் தெரியும் வசதியும் உள்ளது. தொலைபேசி அழைப்புகளுக்கென்று இதில் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ப்ளூ டூத் கருவியின் மூலம் தொலைபேசி அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும். இதன் விலை ரூ. 18,165. இளைஞர்களைக் கவரும் வண்ணம் பல்வேறு கண்கவர் வண்ணங்களில் வாட்ச்கள் உலாவருகின்றன. நீங்கள் கேட்பது புரிகிறது. இதில் கண்டிப்பாக மணியும் பார்க்கலாம்.

Tuesday, December 13, 2011

நிமிடத்துக்கு நிமிடம் மாறும் போராட்டம் நிம்மதி இழந்த போலீஸ்!

தேனி : முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால், தேனி மாவட்டத்தில், பூதாகரமாக வெடித்துள்ள போராட்டங்களை சமாளிக்க முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர். எந்த அளவிற்கு, மக்கள் இந்த போராட்டங்களில் பங்கேற்க உள்ளனர் என்பது தொடர்பாக, உளவுத் துறையாலும் துல்லியமாக கணிக்க முடியவில்லை.

மேலும், போராட்டத்தில் பங்கேற்க வரும் கிராம மக்கள், திடீரென தங்கள் முடிவுகளை மாற்றுவதால், போலீசாருடன் தொடர்ந்து மோதும் நிலை ஏற்பட்டு வருகிறது. நேற்று, உத்தமபாளையம் மற்றும் சுற்றுப் பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள், உத்தமபாளையத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்ததால், உண்ணாவிரதம் இருந்த இடத்தில் இருந்து, கம்பம் நோக்கி செல்ல முயற்சித்தனர். இந்த நடவடிக்கையை எதிர்பாராத போலீசார், இவர்களை கம்பத்திற்கு முன், இரண்டு இடங்களில், போலீஸ் வாகனங்களை நிறுத்தி தடுத்தனர். இந்த பகுதிகளில், மோதல் ஏற்படும் நிலை உருவானது.

சிறிது நேரத்தில், போலீசார் அவர்களை அனுமதித்தனர். இப்பகுதியில் இருந்து சென்றவர்கள், கம்பம் மெட்டுக்கு செல்ல வேண்டும் என முயற்சிக்க, அந்த பாதையும் அடைக்கப்பட்டது. இதையடுத்து, குமுளிக்கு செல்ல திட்டமிட்டனர். கூடலூர் லோயர் கேம்ப் பகுதிக்கு செல்வதற்குள், நான்கு இடங்களில் போலீசார் தடுத்தனர். போலீசார் வழி மறிக்கும் இடங்களில், பொதுமக்களும் தடுப்புகள், கற்கள் வைத்தும், கொடும்பாவி எரித்தும், டயர் மற்றும் குப்பைகளை போட்டு எரித்தும், போலீஸ் வாகனங்களை தடுத்தனர். போராட்டம் துவங்கிய நாளில் இருந்து, இரண்டு நாட்களில் பிரச்னை ஓய்ந்துவிடும் என, உளவுத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து வருகின்றனர். ஆனால், உண்மை நிலை நேர் மாறாக உள்ளது.

அபிஷேக் பச்சனை ஹிந்தியில் இயக்க போகிறாரா ! தனுஷ் ?

தனுஷ் இந்தி படமொன்றை இயக்க முடிவு செய்துள்ளார். இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது.

கதாநாயனாக அபிஷேக்பச்சன் நடிக்கப் போவதாகவும், இதனால் தான் அவரை மும்பை சென்று, தனுஷ் சந்தித்ததாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாவை திருமணம் செய்ததில் இருந்து தனுஷை எனக்கு தெரியும். 2003ல் அவரது மன்மதராசா பாடலை படத்தில் பார்த்தேன். செல்வா இயக்கத்தில் அவர் நடித்த படங்களையும் பார்த்து இருக்கிறேன். தனுஷ் சிறந்த நடிகராக இருக்கிறார். தனுஷ் இயக்கத்தில் நான் நடிக்கப்போவதாக செய்திகள் வருகின்றன. அவை வெறும் செய்திகள் தான்.

தனுஷ் இந்திப் படம் இயக்கினால் அதில் நடிக்க மிகவும் சந்தோஷப்படுவேன். ஆனால் நாங்கள் அதுபற்றி எதுவும் விவாதிக்கவில்லை. தனுஷ் இயக்கும் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று அவர் நினைத்தால் அது பெரிய கவுரவம், என்று கூறியுள்ளார்.

இரத்த சோகை உள்ளதா! விரல் நகத்தில் கண்டுகொள்ளலாம்!!

சிலநேரங்களில் சிலரது கைவிரல் நகங்கள் வழக்கத்திற்கு மாறாக வெளுத்துப்போய் காணப்படும். அந்த மாற்றம் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.

ரத்த சோகை இருக்கிறது என்பதற்கான அறிகுறிதான், நகத்தின் இந்த திடீர் மாற்றம். ரத்தத்தில் உள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்.

மேலும், ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய `பிங்க்' நிறம் மறைந்து, வெளுத்து விடும். இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்பதால், அந்த சத்து அதிகம் உள்ள ஈரல், கீரைவகைகள் மற்றும் இறைச்சியை இந்த பாதிப்பு உள்ளவர்கள் உணவுடன் சேர்த்துக் கொள்வது அவசியம்.

அல்லது, தகுந்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு, வைட்டமின் பி-12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற சின்ன சின்ன விசயங்களை நாம் தெரிந்து வைத்திருந்தால் மருத்துவ சிலவும் நேரமும் மிச்சம்., செய்வோமா.

Monday, December 12, 2011

ஆந்திரத்திலிருந்து ஓட்டமெடுத்த அனுஷ்கா !!

நடிகை தமன்னா எப்படி தமிழ் சினிமாவில் இருந்து விலகி ஆந்திராவுக்கு ஓடினாரோ... அதேபோல நடிகை அனுஷ்கா ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஓடி வந்திருக்கிறார்.

தமன்னா விவகாரத்தில் மர்ம முடிச்சு பெரிதாக இல்லை; ஆனால் அனுஷ்கா விவகாரத்தில் அவிழாத மர்ம முடிச்சு இருப்பதாக ஆந்திர திரையுலகம் கூறுகிறது. 2012 முழுக்க நான் தமிழில் மட்டுமே நடிக்கணும். ஆந்திரா வேணாம். அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க என்று தனது மேனேஜரிடம் கூறியிருந்தாராம் அனுஷ்கா. அதன்படி பல்வேறு தமிழ் படங்களில் கமிட் ஆகியிருக்கிறார்.

அனுஷ்கா தமிழுக்கு ஓடி வந்த விவகாரத்திற்கு பின்னால் இருக்கிற காரணத்தையும், சமீபத்தில் அவர் வீட்டில் நடந்த இன்கம்டாக்ஸ் ரெய்டுக்கும் முடிச்சு போடுகிறார்கள் விவரமறிந்தவர்கள். மிகப்பெரிய அரசியல்வாதி ஒருவரின் தூண்டுதலின்படிதான் இந்த ரெய்டு நடந்ததாம். அவர் ஆந்திராக்காரர் என்பதால்தான் பொண்ணு தமிழ்நாட்டு எல்லையிலேயே தஞ்சம் புகுந்திருக்கிறார் என்கிறார்கள் அவர்கள். சிக்கல் என்னவாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு இன்னும் ஓராண்டு கொண்டாட்டம்தான்.

அரைக்கால் டவுசரின் அயோ (த்தி) க்கிய தனம் ?

பெங்களூர்: கேரளா மாநிலத்தை சார்ந்தவர் கெ.கெ.ஷாஹினா. இவர் டெஹல்கா பத்திரிகையில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.

கேரள மாநில பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனி பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சியான கே.கே.யோகானந்தா என்பவரை நேரில் சந்தித்து பேட்டியெடுத்து போலீசாரின் போலி வேடத்தை கலைத்தார் ஷாஹினா. இதனால் கோபமுற்ற கர்நாடகா மாநில பா.ஜ.கவின் பாசிச போலீஸ் ஷாஹினா மீது சாட்சியை மிரட்டியதாக வழக்கு பதிவுச்செய்தது. இதனைத் தொடர்ந்து ஷாஹினா பெங்களூர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவர் கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள சோம்வார்பேட் தாசில்தார் அலுவலகத்திற்கு இவ்வழக்கு சம்பந்தமாக சென்றார்.

அப்பொழுது அவரது வேனை சூழ்ந்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஷாஹினாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவ்வேளையில் சுற்றிலும் நின்றிருந்த 10க்கும் மேற்பட்ட போலீசார் ஹிந்துத்துவா தீவிரவாதிகளை கலைந்து செல்ல கோராமல் வேடிக்கை பார்த்தனர். இதனால் துணிச்சல் பெற்ற அவர்கள் ஷாஹினாவின் மீது கல்லை வீசி தாக்கினர்.

இத்தாக்குதல் குறித்து ஷாஹினா கூறுகையில்; “நான் முன்னரே மூத்த போலீஸ் அதிகாரியை அழைத்து பாதுகாப்பு அளிக்குமாறு கோரியிருந்தேன். ஆனால் சோம்வார்பேட் போலீஸ் எனக்கு பாதுகாப்பு அளிக்க மறுத்துவிட்டது.” என தெரிவித்துள்ளார்.

இதுத்தொடர்பாக ஷாஹினாவின் வழக்கறிஞர் பி.டி.வெங்கடேஷ் கூறுகையில்; “இச்சம்பவம் தொடர்பாக வழக்கு தொடர உள்ளோம். அதில் வட்டார போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதும் புகார் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்., தினம் கிழிக்கப்படும் தீவிரவாத ஆர் எஸ் எஸ்" ன் அரைக்கால் டவுசர்.

ஹிஜாபுடன் முதல் போலீஸ் அதிகாரி ஸ்வீடனில்

ஸ்டாக்ஹோம்: டோன்னா எல்ஜம்மால் என்கிற 26 வயது பெண்மணியே ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்து பணி புரியும் முதல் பெண் காவலதிகாரி என்று மெட்ரோ சே என்னும் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. அவர் ஹிஜாப் அணிவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே காவல்துறையில் தாம் இணைய விருப்பப்பட்டார் என்றும் அப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து டோன்னா எல்ஜம்மால் தாம் சிறுவயது முதலே மக்களுக்கு சேவை செய்ய ஆர்வம் கொண்டுள்ளதாகவும் கணினி முன் அமர்ந்து பொழுது போக்க தாம் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நீண்ட விவாதங்களுக்கு பின்னர் சில வருடங்களுக்கு முன்புதான் போலிஸ் சீருடையின் ஒரு பகுதியாக ஹிஜாப் அணிய தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அவரை பொறுத்தவரையில் ஸ்வீடன் ஒரு பன்முக கலாச்சாரத்தை கொண்ட நாடு எனவும் அனைத்து துறைகளிலும் பல்வேறுபட்ட மக்கள் பணிபுரிந்தால்தான் அறிவும் புரிதலும் வளரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டோன்னா எல்ஜம்மால் சிறுவயது முதலே மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க கூடியவர். மேலும் அவரின் குடும்பம் வெளிநாட்டிலிருந்து ஸ்வீடனில் போய் குடியேறியவர்கள். அவர் சிறைத்துறையில் பணிபுரியும்போதே ஹிஜாப் அணியும் பழக்கம் உடையவர் ஆவார். மேலும் முன்னதாக ஹிஜாப் பற்றி பலரும் விமர்சனம் செய்தனர் என்றும் பின்னர் தன்னை நன்றாக புரிந்துகொண்டதன் விளைவாக விமர்சனங்கள் நின்று போனது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஹிஜாப் எந்த வகையிலும் தனது பணிக்கு இடையூறாக இல்லை என்றும் அது தனது உடலில் ஒரு பகுதி என அவர் கருதுவதாகவும் மற்றும் ஹிஜாப் அணிந்து கொண்டே அணைத்து பணிகளையும் சிறப்பாக செய்ய முடிகிறது என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sunday, December 11, 2011

பணம் பறிக்கப்படும் மிஸ்டு கால்!! ப்ளஸ் 960 ?

வேலூர் மாவட்டத்தில், ஒரு மாதமாக மொபைலில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்து வருவது தெரிய வந்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு, "ப்ளஸ் 960' என்ற எண்களில் துவங்கும், 10 இலக்கம் கொண்ட நம்பரில் இருந்து மிஸ்டு கால் வருகிறது. வாடிக்கையாளர்கள் அந்த நம்பரை தொடர்பு கொண்டால், எதிர் முனையில் யாரும் பேசுவதில்லை. இணைப்பை துண்டிக்கும் போது, வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து, 40 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. பேலன்ஸை ஒரு சிலர் மட்டும் பார்ப்பதால், இது தெரியவில்லை.

இந்த மோசடியை அறியாத வாடிக்கையாளர்கள் பலர், மிஸ்டு கால்களை தொடர்பு கொண்டு, தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். குறிப்பாக, போஸ்ட் பெய்டு கணக்கில் இது போன்று நடப்பதில்லை. பெரும்பாலும், ப்ரீ பெய்டு கணக்கில் மட்டுமே இப்படி நடக்கிறது.

இது குறித்து பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியது: இதுபோன்ற மோசடிகள் சமீபகாலமாக நடந்து வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த மோசடிகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து மெசேஜ் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம் என்றார்.

கருத்தரிக்க கட்டாயம் கவனிக்கவேண்டிய விஷயங்கள்

லண்டன்: பிரிட்டனின் வார்விக்ஷைர் பகுதியில் உள்ள வார்விக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் ரீனா அகர்வால் என்ற இந்திய வம்சாவழி டாக்டர் தலைமையிலான குழு கருத்தரிக்காத 58 பெண்களை ஆய்வுக்குத் தேர்வு செய்து அவர்களை 30 - 28 என்று 2 பிரிவுகளாகப் பிரித்தனர். முதல் பிரிவில் உள்ளவர்களுக்கு சத்துள்ள உணவுடன் வைட்டமின் மாத்திரைகளையும் சேர்த்து அளித்தனர்.

இரண்டாவது பிரிவினருக்கு ஊட்டச்சத்துள்ள உணவுடன் போலிக் அமிலச் சத்து அளித்தனர்., முதல் பிரிவினரில் அதிகம் பேர் 12 வாரங்களுக்குள் - அதாவது 3 மாதங்களுக்குள் - கர்ப்பம் தரித்தனர். இந்தச் சோதனை தொடங்குவதற்கு முன் 58 பேருக்கும் மாதவிடாய் ஒழுங்காக இருக்கவில்லை. பலர் 12 மாதங்களாகக் கருத்தரிக்காமல்தான் இருந்துள்ளனர்.

ஆனால் இந்த சிகிச்சை தொடங்கிய பிறகு வைட்டமின் சத்துள்ள உணவைச் சாப்பிட்டவர்கள் வெகு வேகமாக கருத்தரித்தனர். அத்துடன் அவர்களுடைய கருவும் 12 வாரங்களுக்குப் பிறகும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வளர்ந்துகொண்டே வந்தது. வைட்டமின் சத்துள்ள உணவைச் சாப்பிட்ட 30 பேரில் 18 பேர் கருத்தரித்தனர். இது 60% ஆகும்.

போலிக் அமிலம் கலந்து சத்துணவைச் சாப்பிட்டவர்களும் உடல் நலத்துடனேயே இருந்தார்கள். ஆனால் 28 பேரில் 11 பேர்தான் கருத்தரித்தனர்., உடல் வளர்ச்சிக்கு மட்டும்தான் வைட்டமின் தேவை என்று இதுவரை கூறப்பட்டு வந்தது. குழந்தை பிறப்புக்கே அது தேவை என்று இப்போது தெரியவந்துள்ளது.

ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட மகளிர் அனைவருமே கிட்டத்தட்ட ஒரே வயதினர், ஒரே எடையினர், கருத்தரிக்காமல் இருந்த காலமும் ஒரே மாதிரியாக இருந்தவர்களாகவே தேர்வு செய்யப்பட்டனர்.

குழந்தை இல்லாதவர்கள் முதலில் தங்களை வலுப்படுத்திக் கொள்ள சத்துள்ள உணவை போதிய அளவு உட்கொள்ள வேண்டும். குழந்தை நல்ல வலுவுடனும் மூளைத் திறனுடனும் பிறக்க தாயாருக்கு சத்துள்ள, சரிவிகித உணவை அளிக்க வேண்டியது கட்டாயம். வைட்டமின் பி-12 சத்து அவசியம் தேவை என்பது இந்த ஆய்வு மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

(அதிக அளவில் மதுபானம் குடிப்பவர்கள், சிகரெட் புகைப்பவர்கள்,கணவன்மார்களின் உயிரணுக்களில் அடிக்கடி மாற்றம் இருப்பவர்கள் இந்த ஆய்வில் சேர்க்கப்படவில்லை. கர்ப்பம் தரிக்க இந்தக் காரணிகள் தடையாக இருப்பவை என்பதால் அவர்களைச் சேர்க்கவில்லை.)

Saturday, December 10, 2011

கிரிக்கெட் கொண்டாத்தத்தில் சென்னை சேப்பாக்கம்

சென்னை: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று சென்னையில் நடக்கிறது. ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக இந்திய அணி பங்கேற்கும் கடைசி போட்டி என்பதால், இதில் சேவக் மீண்டும் விளாசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. நான்கு போட்டிகளின் முடிவில், 3-1 என இந்திய அணி தொடரை வென்றது. முக்கியமில்லாத ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி, இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

சச்சின், தோனி, யுவராஜ் சிங் ஆகிய முன்னணி வீரர்கள் இல்லாத போதும், இளம் இந்திய அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் அசத்துகிறது. கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சேவக், முதன் முறையாக தொடரை வென்-றுள்ளார்.

சென்னையில் அன்வர் (பாக்.,1997) இதற்கு முன் 194 ரன்கள் விளாசியுள்ளார். இதனால் இன்று @சவவக் அதிரடி தொடரும் என எதிர்பார்க்கலாம். இத்தொடரில் இதுவரை 284 ரன்கள் குவித்துள்ள ரோகித் சர்மா, விராத் கோஹ்லி (163) நல்ல "பார்மில்' இருப்பதால் கவலை இல்லை. காம்பிர் (83), ரெய்னா (62) இருவரும் ரன்கள் சேர்க்க முயற்சிக்க வேண்டும்.

திரைப்பட கலைஞர்களின் வேண்டுகோள் ?

முல்லைப் பெரியாறு பற்றி நடிகர், நடிகைகள் தெரிவித்துள்ள கருத்துகள்., நடிகரும் இயக்குனருமான பார்த்திபன்: தமிழர்கள், மலையாளிகளுக்கு இடையேயான தாக்குதலை தடுக்க முதலில் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்னைபற்றி ஆலோசித்து முடிவெடுத்து நல்லதொரு அறிவிப்பை வெளியிட வேண்டும்.

இதனால் அப்பாவி மக்களுக்கிடையேயான கருத்து வேறுபாடு மறையும்., இப்பிரச்னையில் சினிமா கலைஞர்கள் தலையிடக்கூடாது ஏனென்றால் அவர்களுக்கு பிரச்னை பற்றி முழுமையாக யாரும் தெரிவிப்பதில்லை.

நடிகர் பிரசாந்த்: உயிர் வாழ முக்கிய ஆதாரம் தண்ணீர்தான். உயிரை காக்கக்கூடிய தண்ணீரை காரணம் காட்டி மனித உயிர்கள் பலியாகக்கூடாது. தமிழர்கள், மலையாளிகள் சகோதரர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். இப்பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் சுமூக தீர்வு காண வேண்டும்.

நடிகை குஷ்பு: இப்பிரச்னையில் மாநில எல்லைபகுதிகளில் வாழும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அணையை ஆராய்ந்து பார்த்து அதிகாரிகள் தந்த அறிக்கையில் அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறி உள்ளனர். எனவே இதில் வன்முறையில் ஈடுபடுவது தேவையற்றது. தமிழ் மக்களின் உயிர் எவ்வளவு முக்கியமோ அதுபோல கேரள மக்களின் உயிரும் முக்கியம். இப்பிரச்னைக்கு சுமூக காண முயற்சிக்க வேண்டும்.

நடிகை மம்தா: மக்களுக்காகத்தான் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மத்திய, மாநில அரசுகள் மறந்துவிட்டன. இப்பிரச்னையில் உடனடியாக தீர்வு காண்பதற்கு என்ன தடையாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. இதில் நீண்ட கலந்தாய்வுகள் தேவையற்றது. உடனடியாக தீர்வு காண வேண்டும். அணை உடைந்தால் இருதரப்பு மக்களுமே பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

நடிகர் சுரேஷ் கோபி: முல்லைபெரியாறு விவகாரத்தை தேசிய பாதுகாப்பு பிரச்னையாக மத்திய அரசு கருத வேண்டும். நீண்ட வருடமாக இருக்கும் இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!