Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, September 30, 2011

விடுதலை சிறுத்தைகளுடன் தேர்தல் கூட்டணி SDPI

சென்னை : தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக சென்னை மற்றும் ஈரோடு மாநகராட்சிகளில் SDPI வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள், SDPI, விடுதலைச் சிறுத்தைகள், கிறிஸ்தவ அமைப்புகள் ஆகியவை இணைந்து கூட்டணியாகவும்; திமுக, அதிமுக, காங்கிரஸ் பாமக, மமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தனித்தனியாகவும் தேமுதிக மற்றும் கம்யூனிஸ்டுகள் கூட்டணி அமைத்தும் போட்டியிடுகின்றன.

இநிலையில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக சென்னை மற்றும் ஈரோடு மாநகராட்சிகளில் SDPI வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சென்னையில் உள்ள ரிப்பன் கட்டிடத்தில் SDPI-ன் சென்னை மேயர் வேட்பாளர் S.அமீர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மற்றும் முஸ்லீம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகமது ஹனீபா, சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையின் தலைவர் மேலை நாசர் உள்ளிட்ட கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதே போல் ஈரோடு மாநகராட்சியின் SDPI வேட்பாளர் யூனுஸ் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இருதய நோய் ரத்த சுத்திகரிப்புக்கு வெங்காயம் !!

மனிதனோட மிகப்பழமையான உணவுகள்ல முக்கியமானது, வெங்காயம். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் என்கிற நம்பிக்கை இருந்ததால, பண்டைய கிரீஸைச் சேர்ந்த வீரர்கள் வெங்காயத்தை அதிகமா சாப்பிட்டாங்க. ரோமைச் சேர்ந்த மல்யுத்த வீரர்கள், வெங்காயத்தை அரைச்சி, உடம்புல பூசிக்குவாங்களாம்.

உடல்வலிமையை அது கூட்டும் என்ற நம்பிக்கை தான் காரணமாம். வெயில்ல அலைஞ்சி திரிஞ்சி, வியர்க்க விறுவிறுக்க வீட்டுக்குள்ள வந்ததுமே சிலருக்கு நீர்ச்சுருக்கு வந்துடும். ஒரு வெங்காயத்தைப் பொடியா நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீர்ல போட்டு கொதிக்க வச்சி, அந்தத் தண்ணீரைக் குடிச்சா நீர்க்கடுப்பு உடனே நின்னுடும்.

வெங்காயத்தை தண்ணீர்ல போட்டு கொதிக்க வைக்குற அளவுக்கு பொறுமை இல்லையா? அப்படியே பச்சையாக வெங்காயத்தை மென்று தின்னுங்கள். சில நிமிடங்களில் நீர்க்கடுப்பு காணாமல் போயிடும். வெயில் காலத்துல உடல்ல ஏற்படுற கட்டிகளுக்கு வெங்காயம் மூலமா நிவாரணம் பெறலாம்.

வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கொப்புளங்கள்ல பூசினா, கொப்புளம் உடைந்து சீழும், கிருமிகளும் வெளியேறும். வெங்காயத்தை துண்டுகளாக்கி, நெய்யில் வதக்கி சாப்பிட்டாலும் உடல் சூடு தணியும்.

வெயிலுக்கேத்தது மட்டுமல்ல ஹார்ட் சம்பந்தமான நோய்களுக்கும் இது நல்ல மருந்து என்பது கூடுதல் தகவல்.

Thursday, September 29, 2011

மாப்பு மறுபடியும் வேண்டாண்டா ஆப்பு !!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., ஆதரவாக நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தது போல், இம்முறை உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.,வுக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்வாரா...? என்ற ஆவல் எழுந்துள்ளது.

விஜயகாந்த் மீதுள்ள காழ்புணர்ச்சியால், தே.மு.தி.க., வும் எதிராகவும், தி.மு.க.,வுக்கு ஆதரவாகவும் சட்டமன்ற தேர்தலில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் வடிவேலு. சகநடிகர், ஒரு கட்சிக்கு தலைவர் என்று கூட பாராமல் விஜயகாந்தை கன்னா, பின்னா என்று வசைபடினார். செல்லும் இடமெல்லாம் வடிவேலு பிரச்சாரத்திற்கு ஏகப்பட்ட கூட்டம் கூடியது. வர்றகூட்டம் எல்லாம், நிச்சயமாக திமுக.வுக்கு தான் ஓட்டு போடுவார்கள் என்று மனக்கணக்கு போட்ட வடிவேலுவுக்கு, தேர்தல் முடிவு பேரிடியை தந்தது.

தேர்தல் முடிவு திமுக.வுக்கு மட்டுமல்லாமல், வடிவேலுவுக்கும் நிச்சயம் ஒரு பேரிடி தான். தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடியனாக இருந்த வடிவேலுக்கு தேர்தல் முடிவுக்கு பின்னர் படவாய்ப்புகள் கூட எதுவும் இல்லாமல் போய்விட்டது. தமிழகத்தில் தான் வடிவேலு இருக்கிறாரா...? என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் களைகட்ட தொடங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தல் போல், உள்ளாட்சி‌ தேர்தலிலும் தி.மு.க.வுக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்ய வருவாரா...? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே வடிவேலுவை தேர்தல் களத்தில் மீண்டும் இறக்க முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் வடிவேலு தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.

ஒருவேளை, மாப்பு... மறுபடியும் வேண்டான்டா ஆப்பு... என்று வடிவேலு ஒதுங்கி கொண்டாரோ என்னமோ..?

உலக இதய நாள் ! 60 சதவிகிதம் இந்தியர்கள் !!

துபாய் : இன்று உலக இதய நாள்(World Heart Day), ஐந்தில் ஒருவர் மாரடைப்பால் மரணிப்பதாக அமீரக ஆரோக்கியத் துறை அறிவித்துள்ளது.

19% மக்கள் மட்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான உடற்பயிற்சி செய்வதாகவும் அது கூறியுள்ளது.

இன்று உலகில் மாரடைப்பே ஆட்கொல்லி நோயாக மனிதர்களை பயமுறுத்தி வருகிறது, அதிகமான மக்கள் இருதய சம்பந்தமான நோய்களிலாயே மரணிப்பதாக உலக சுகாதார துறையும் அறிவித்துள்ளது.

உயர் இரத்த அழுத்தம், உடலில் உள்ள சிதையா கொழுப்பு, ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள்,போதிய உடற்பயிற்சி இல்லாமை போன்ற காரணங்களால்தான் இருதய சம்பந்தமான நோய்கள் தாக்குவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றது.

மக்களிடையே மாரடைப்பு நோய்களை பற்றிய விழிப்புணர்வு வளர வேண்டும் என்றும், தினம்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்து உடலில் உள்ள கொழுப்புகளை எரித்து ஆரோக்கியமாக இருந்தால் மாரடைப்பு நோய்களை தவிர்க்கலாம் என்றும் உலக சுகாதார துறை அறிவித்துள்ளது.

@ உலக இதய நோயாளிகளில் 60 சதவீதம் பேர் இந்தியர்களாக இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சிக்கு உரிய விஷயமாக இருக்கிறது. @

அமெரிக்க ஐரோப்பியர்களைவிட 4 மடங்கும் சீனர்களைவிட 10 மடங்கும் ஜப்பானியர்களைவிட 20 மடங்கும் இந்தியர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்கின்றனர் இதயநோய் நிபுணர்கள்.

25 முதல் 30 வயதுள்ள இளைஞர்களை மாரடைப்பு தாக்குவது தான் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்கின்றனர்., இன்றைக்கு பதினைந்து வயது பிள்ளைகளுக்கு கூட மாரடைப்பு வருகிறது. அதற்கு காரணம் லைஃப் ஸ்டைல் மாறுதல் மற்றும் நம் ஃபாஸ்ட் புட் உணவு பழக்கம்தான்..!

இந்த இதய தினத்தில் நம் இதயத்தை காப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதோடு, முக்கியமாக இன்னொன்றையும் எடுக்க வேண்டும். இதற்கு 3 வழிகள் உள்ளன. உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, பணியின் போது மன இறுக்கத்தை தவிர்த்தல்
போன்ற மூன்று விஷயங்களும் இருதய நோய் வராமல் பார்த்துக் கொள்கின்றன.

ஒரு காலகட்டத்தில் பின்லாந்து மற்றும் மொரீஷியஸ் நாட்டில் அதிகமாக இருதய நோய் உள்ளவர்கள் இருந்தனர். அந்த நாடுகள் முறையே பால் மற்றும் பாம்ஆயில் உபயோகத்தை மிகவும் குறைக்க நடவடிக்கை எடுத்ததன் விளைவாக இருதய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

இந்தியாவில் பல எண்ணெய்களை உபயோகிக்கிறோம். கொழுப்பு சத்து குறைவாக உள்ள எண்ணெயைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று ஒவ்வொரு குடும்பத்தினரும் முடிவு செய்ய வேண்டும்., உடற்பயிற்சி, திட்டமிட்ட அன்றாட வாழ்க்கை இல்லாமல் சோம்பேறித்தனமாக வாழ்ந்தால் இருதய நோய் நிச்சயம் வரும்.

சரியான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தால் இருதயம் 100 வருடங்களுக்கு மேலாக செயல்படும். நாம் எந்த உணவையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அதை கல்லீரல் கொழுப்பாக (கொலஸ்ட்ரால்) மாற்றுகிறது. புகைபிடித்தல், அதிகமாக மது அருந்துதல், அளவுக்கு அதிகமாக சாப்பிடுதல், உடல் உழைப்பு இல்லாமை, டென்சன் ஆகியவற்றால் இருதயம் பாதிக்கப்படுகிறது. இதனால் இப்போது 19 வயது வாலிபருக்கு கூட மாரடைப்பு ஏற்படுகிறது.

ஆண்டுக்கு 100 மணிநேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். தினமும் இரண்டு டம்ளருக்கு மேல் தேநீர் அதிகமாக குடிக்காதீர்கள். சாப்பாட்டில் கட்டுப்பாட்டை எப்போதும் பின்பற்றுங்கள். அரைவயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். காலையில் நன்றாக சாப்பிட வேண்டும். மதியம் காலையில் சாப்பிட்டதைவிட சற்று குறைவாகவும் இரவில் அதைவிட குறைவாகவும் சாப்பிடுங்கள். இரவில் குறைந்தபட்சம் 5 மணிநேரமாவது தூங்கவேண்டும். இப்படி இருந்தால் இருதயத்தை நாம் பாதுகாக்க முடியும்.

விஜய்க்காக கோடிகளை கொட்டி கொடுக்கும் டெலிகாம் நிறுவனம் !!

சினிமாவை தொடர்ந்து விளம்பரங்களிலும் நடித்து வரும் விஜய், அடுத்து ஒரு பிரபல டெலிகாம் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமாவுக்கு அடுத்தபடியாக பணம் அதிகம் கொழிக்கும் துறை என்றால் அது விளம்பர துறை தான். பாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரைக்கும் முன்னணி நடிகர், நடிகையர் பலரும் இதில் காசு பார்த்து வருகின்றனர். அந்தவகையில் தமிழில் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய்யும் சமீபகாலமாக விளம்பரங்களிலும் அதிகம் தலைகாட்ட துவங்கியுள்ளார்.

இதுவரை பேஃண்டா, கோக்க கோலா, ஜோஸ் ஆலுக்காஸ் போன்ற விளம்பரங்களில் நடித்து வந்த விஜய், இப்போது முதன்முறையாக பிரபல டெலிகாம் நிறுவனத்தின் விளம்பரம் ‌ஒன்றில் நடிக்க போகிறார்.

இந்த விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ‌‌பேசப்பட்டிருக்கும் தொகை ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது.

விழிப்புணர்வு பிரச்சாரத்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதா ?

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வருவதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடுமையான சட்டங்களும், பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும், இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வருவதாக கூறுவதை ஏற்க முடியாது என்றும், அது குறித்த விழிப்புணர்வு மட்டுமே கொஞ்சம் அதிகரித்துள்ளது என்றும், பெண்களுக்காக பாடுபடும் தனியார் தொண்டு அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல வகை. கற்பழிப்பு, கடத்தல், பலாத்காரம், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரால் துன்புறுத்தப்படுதல், வரதட்சணை கொடுமை, குழந்தை திருமணம் உள்ளிட்ட இனங்களில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்படுகின்றன. பெண்களுக்கான குற்றங்களை குறைக்க, அரசு தரப்பில், பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மற்றொருபுறம், பெண்களுக்காக பாடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம், விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2007ம் ஆண்டை ஒப்பிடுகையில், கடந்தாண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஓரளவிற்கு குறைந்துள்ளன. நடப்பாண்டில், இதுவரை 4,036 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி, இந்தாண்டு பெண்களுக்கான குற்றங்கள் மேலும், குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரி ஒருவரை கேட்டபோது, "தமிழகத்தை பொறுத்த வரையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரதட்சணை கொடுமை, வரதட்சணை கொடுமையால் உயிரிழப்பு, கற்பழிப்பு போன்ற வழக்குகளில் எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கை, அதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சட்டப்பூர்வமான அணுகுமுறை, உடனடி தீர்ப்பு, கடுமையான தண்டனைகள் ஆகியவை, பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்க உதவுகின்றன' என்றார்.

ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான நடவடிக்கை போதுமானதாக இல்லை என்றும், குற்றங்கள் குறைகின்றன என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், பெயரிட விரும்பாத, தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறினார்.

அதிகம் தண்ணிர் அருந்துவது ஆபத்தா? ஆம் என்கிறது ஆய்வு!?

பாரிஸ் : உடலின் கலோரியை நீடிக்கச் செய்யவும், நீர்ச்சத்துக் குறைப்பாட்டை போக்கவும் எப்பொழுதும் பாட்டில் தண்ணீரும் கையுமாக திரிந்து சிறந்த ஆரோக்கிய வாழ்வை கனவு காண்பவர்கள் ஏராளம். ஆனால் அத்தகையோர் தங்களது நேரத்தை வீணாக்குகின்றார்கள் என கூறுகிறது ஒரு ஆய்வு.

தினமும் ஆறு அல்லது எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்கவேண்டும் என்ற மருத்துவ நிபுணர்களின் உபதேசம் இன்னொரு நிபுணத்துவ பொய் என புதிய ஆய்வு கூறுகிறது.

ஸ்காட்லாந்து மருத்துவ விஞ்ஞானி ஒருவர் இதுத் தொடர்பாக மெடிக்கல் ஜெர்னல் என்ற பத்திரிகையில் ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். ’தினமும் கூடுதலாக தண்ணீர் குடிப்பது மூலம் தனியாக ஏதேனும் ஆரோக்கிய பலன்கள் உண்டா? ஒருபோதும் இல்லை. பிரிட்டன் நேசனல் ஹெல்த் சர்வீஸ் வெளியிட்ட ஒரு கற்பனையே இது’-என டாக்டர்.மார்கரெட் மாஸ் கார்ட்னெ தனது கட்டுரையில் கூறுகிறார்.

தினமும் எட்டு டம்ளர் தண்ணீராவது அருந்தவேண்டும் என கூறியது கனடா நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகமாகும். கூடுதலாக தண்ணீர் அருந்துவது உடலிலுள்ள கழிவுகள் வெளியேற உதவும் ஆதலால் ஆண்கள் 9 டம்ளரும், பெண்கள் 13 டம்ளரும் நீர் அருந்தவேண்டும் என கனடா அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். ஏராளமான பள்ளிக்கூடங்களும், நிறுவனங்களும் மாணவர்களை பாட்டில் தண்ணீர் கொண்டுவர உபதேசிப்பதாகவும், பாட்டில் தண்ணீர் நிறுவனங்களுக்கும் இத்தகைய தவறான செய்திகளை பரப்புரைச் செய்வதில் பெரிய பங்கிருப்பதாகவும் டாக்டர்.கார்ட்னெ கூறியுள்ளார்.

ஆனால் சிறுநீரில் கற்கள் போன்ற நோயுடையவர்கள் கூடுதலாக தண்ணீர் குடிப்பது சிறந்தது என அவர் தெரிவித்துள்ளார். தினமும் தண்ணீர் அதிகமாக குடிப்பதன் மூலம் இரத்தத்தில் சோடியத்தின் அளவு குறைவதால் ஹிபோனாட்ரீமியா என்ற நோய்க்கு காரணமாவதாக ஆய்வாளர் கூறுகிறார்.

Wednesday, September 28, 2011

ஒரு நாள் கிரிக்கெட் அணி இன்று அறிவிப்பு ! இம்முறை வெல்லுமா !?

சென்னை : இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. காயம் காரணமாக சச்சின், யுவராஜ் சிங் இம்முறையும் அணியில் இடம்பெற மாட்டார்கள்.

ஐந்து ஒருநாள் போட்டி, ஒரு "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இங்கிலாந்து அணி இந்தியா வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் போட்டி வரும் அக்., 14ல் ஐதராபாத்தில் நடக்கிறது. இதற்கான இந்திய அணித் தேர்வு, இன்று சென்னையில் நடக்கிறது.

இங்கிலாந்து தொடரில் சச்சின், ஜாகிர்கான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் 9 பேர் காயம் அடைந்தனர். இதனால் இன்று வலிமையான இந்திய அணியை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்படுவது உறுதி. ஏனெனில் சச்சின், யுவராஜ் சிங் இருவரும் காயத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை.

இதனால் தான் சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் சச்சின் பங்கேற்கவில்லை. இவர் முதல் இரு போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என்று தெரிகிறது. பின்தலையில் அடிபட்ட காம்பிர், கோல்கட்டா அணிக்காக தற்போது விளையாடி வருகிறார். இதனால் இவரை தேர்வுசெய்வதில் எந்த சிக்கலும் இருக்காது., ஆனால், பவுலர்களை தேர்வு செய்வது பெரும் தொல்லையாக இருப்பது உறுதி. ஏனெனில், முன்னணி வீரர்கள் ஜாகிர் கான், முனாப் படேல், இஷாந்த் சர்மா ஆகியோர் காயத்தில் இருந்து மீளவில்லை.

சேவக் சந்தேகம் : காதுகேளாமை மற்றும் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்ட சேவக் உடற்தகுதி குறித்து தெளிவான அறிக்கை கிடைக்கவில்லை. வயிற்று பிடிப்பால் அவதிப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தற்போது மும்பை அணிக்காக பேட்டிங், பவுலிங்கில் அசத்துகிறார். இதனால், ஹர்பஜன் அணிக்கு திரும்புவது உறுதி.

லண்டனில் பிடிபட்ட 27 இந்தியர்கள் ! நிறுவனத்திற்கு அபராதம் !!

லண்டன், செப். 28 : வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு வந்து பணியாற்றுபவர்கள் அந்நாட்டு சட்டவிதிகளுக்கேற்ப சில நடைமுறைகளை கடைபிடிக்கவேண்டும்.

இந்நிலையில் உரிய அனுமதியின்றி வெளிநாட்டவர் பலர் லண்டன் கம்பெனிகளில் வேலை செய்துவருகின்றனர் என்று புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து லண்டன் குடியுரிமை அதிகாரிகள் கடந்த 2 வாரங்களாக பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது லண்டன் மேற்கு பகுதியில் உள்ள ஆசியன் சூப்பர் மார்க்கெட்டில் உரிய அனுமதியின்றி பணியாற்றிய 25 பேர் பிடிபட்டனர். இதில் 23 பேர் இந்தியர்கள். இதே போன்று லண்டன், மான்செஸ்டர் பகுதியில் கட்டுமானப் பணியாற்றிய 4 இந்தியர்கள் பிடிபட்டனர். அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் முயற்சி நடந்து வருகிறது.

அவர்களை பணியமர்த்திய நிறுவனங்களுக்கு ஊழியர் ஒருவருக்கு தலா ரூ. 7.5 லட்சம் என்ற வீதத்தில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

கொல்லுதே பாடகியை பாராட்டும் ஹாரிஸ் ஜெயராஜ் !

இந்தியாவின் தலைசிறந்த பாடகர்களில் ஸ்ருதிஹாசனும் ஒருவர், நடிப்போடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அவர் படங்களுக்கு இசையமைக்கவும் செய்ய வேண்டும் என்று பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், உன்னைப்போல் ஒருவன் படத்தில் ஸ்ருதிஹாசனின் இசை மிகவும் அருமையாக இருந்தது. அவரது இசை, என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. இசைமட்டுமல்லாது, அவருக்கு இயற்கையிலேயே நல்ல குரல் வளமும் உள்ளது.

"வாரணம் ஆயிரம்" படத்தில் அவர் பாடிய அடியே கொல்லுதே... என்ற பாடலை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். இந்தியாவில் உள்ள தலைசிறந்த பாடகர்களில் ஸ்ருதிஹாசனும் ஒருவர் என்றால் அது மிகையல்ல. ஸ்ருதி, நடிப்போடு மட்டும் நின்றுவிடாமல், தொடர்ந்து படங்களுக்கு இசையமைக்கவும் செய்ய வேண்டும் என்று தனது பேட்டியில் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

தன்னை மறக்க வேண்டுமா புகை பிடியுங்கள்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள நார்தம பிரியா பல்கலைக்கழகம் சார்பில் சமீபத்தில் புகைப் பழக்கம் உள்ளவர்களிடம் உள்ள ஞாபகசக்தி பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. புகைப்பிடிக்கும் சமயத்தில் அவர்களுக்கு ஞாபகசக்திக்கான சில போட்டிகள் நடத்தப்பட்டன.

அப்போது அவர்களால் தன்னை மறந்த நிலையில் சரிவர பதில் அளிக்க முடியவில்லை. புகை பிடிக்காதவர்கள் ஞாபக சக்திக்கான போட்டியில் அதிக புள்ளிகள் பெற்றனர். ஆய்வு நடத்திய பேராசிரியர் டாக்டர் டாம் பெடிபர் மேன் கூறும்போது, இங்கிலாந்தில் 1 கோடி பேரும், அமெரிக்காவில் 4.5 கோடி பேரும் புகை பிரியர்களாக உள்ளனர்.

அவர்கள் புகை பழக்கத்தில் இருந்து விடுபட்டால் நல்ல உடல்நிலையைப் பெற முடியும். தங்களது வேலையையும் சிறந்த முறையில் செய்ய முடியும் என்றார்.

Tuesday, September 27, 2011

தொல்லை தரும் தொலைபேசி விளம்பரங்களுக்கு கிடுக்குபிடி !?

டெல்லி : செல்போன் இணைப்புச் சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விளம்பரங்கள் சேவை விபரங்கள், அழைப்பு திட்டங்கள் என இடையிடையே அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகின்றன. இதனால், சிலர் கட்டண சேவைகளில் சிக்கி பணத்தை இழப்பதும் உண்டு.

இந்த பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. “தேவையற்ற அழைப்புகளின் பதிவு” (Registration of unwanted calls) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தேவையற்ற அழைப்புகளை விரும்பாத நுகர்வோர் இதில் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இதில் பதிவு செய்ய 1909 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.nccptrai.gov.in என்ற இணையதளத்தில் சென்று உங்கள் செல்போன் எண்ணை பதிய வேண்டும். நீங்கள் பதிவு செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு விளம்பர அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்-கள் வந்தால் நீங்கள் பயன்படுத்தும் செல்போன் நிறுவனத்திடம் புகார் கொடுக்கலாம். அவ்வாறு புகார் கொடுக்கையில் விளம்பர அழைப்பு வந்த நேரம், தேதி ஆகியவற்றையும் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் ஆன்லைனிலும் புகார் கொடுக்கலாம்.

தொல்லை செய்ய வேண்டாம் என்று பதிவு செய்தவர்களுக்கு விளம்பர அழைப்புகள் வந்தால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.2.5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

டாப் 25 ஹிந்தி லகான்! யு எஸ் டைம்ஸ்

அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம்ஸ் இதழில், உலகின் டாப்-25 விளையாட்டு சம்பந்தப்பட்ட படங்களில், இந்தியாவின் "லகான்" படமும் இடம்பிடித்திருக்கிறது.

கடந்த 2001ம் ஆண்டு அமீர்கானின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளிவந்த "லகான்" படத்தை, அசுதோஷ் குவாரிகர் இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு, ஆஸ்கர் விருது பட்டியலில் சிறந்த வெளிநாட்டு பட வரிசையில், இறுதிச் சுற்று வரை முன்னேறியது.

இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற டைம்ஸ் நாளிதழ், விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்த டாப்-25 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் இருந்து அமீர்கான் நடித்த லகான் படமும் இடம்பெற்றுள்ளது. லகான் படத்திற்கு 14வது இடத்தை வழங்கியிருக்கும் டைம்ஸ் நாளிதழ், படத்தின் இயக்குநர் அசுதோஷ் குவாரிகர் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவரையும் வெகுவாக பாராட்டியுள்ளது.

இந்தபட்டியலில் 1998ம் ஆண்டு வெளிவந்த தி பிக் லெபோவ்ஸ்கி முதலிடத்தையும், பாடி அன்ட் சோல்(1947), ப்ரேகிங் அவே(1979), புல் தர்ஹாம்(1988), கேடிசேக்(1980) போன்ற படங்கள் அடுத்தடுத்த படங்களை பிடித்துள்ளன.

பரமக்குடி துப்பாக்கி சூடு பதில் கேட்டு ஐகோர்ட் நோட்டீஸ் !

தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற ஜான்பாண்டியனை கடந்த 11ந் தேதி போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் 13ந் தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஜான்பாண்டியனை காவலில் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் ரஜினிகாந்த் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாராயணன் ஆகியோர் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜான்பாண்டியன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது: அரசும், போலீசாரும் எனது வளர்ச்சியை பொறுக்காமல் என்னை தடுத்து வருகின்றனர். இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பரமக்குடி செல்ல இருந்த என்னை வல்லநாட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். 2 நாட்கள் சட்ட விரோதமாக காவலில் போலீசார் என்னை தடுத்து வைத்திருந்தனர். இதற்காக அரசு ரூ.10 லட்சம் நஷ்டஈடு கொடுக்கும்படி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

இந்த வழக்கில் அரசு வக்கீல் மகாராஜன் ஆஜராகி வாதாடுகையில், பரமக்குடியில் அசாதாரண சூழ்நிலை நிலவியதால் ஜான்பாண்டியன் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார். இதில் எந்த சட்ட மீறலும் இல்லை என்றார். இந்த வழக்கை நீதிபதிகள் 3 வார காலத்துக்கு தள்ளி வைத்தனர்.

இதற்கிடையே பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மாவட்ட கலெக்டர், போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியோரை சஸ்பெண்டு செய்ய கேட்டு வக்கீல் புகழேந்தி தாக்கல் செய்த மனு நீதிபதிகள் தர்மாராவ், சசிதரன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு அரசுக்கும் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

அந்த விசயத்தில் ஆர்வமில்லாமல் போய்விடும் ! ஆய்வில்!!

சிலருக்கு படுக்கையில் படுத்தவுடன் தூக்கம் வந்துவிடும். இன்னும் சிலர் எவ்வளவுதான் உருண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வராமல் தவிப்பார்கள்.

நீங்களும் அந்த சூழ்நிலையில் உள்ளவரா? இன்றே சரியான டாக்டரைப் போய் பாருங்கள். இல்லையென்றால், உங்களது தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கிறது ஒரு ஆய்வு.

அமெரிக்க மருத்துவ அமைப்பின் சார்பில் சமீபத்தில் அங்கு ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், வாரம் முழுவதும் ஒரு நாளைக்கு 5 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குவது, நீண்ட நாட்கள் குறைவான நேரமே தூக்கம் மேற்கொள்வது ஆகியவற்றால் டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோன் அளவு குறைவதும், அதனால் தாம்பத்யத்தில் ஆர்வம் குறைந்து போவதும் தெரிய வந்தது.

மேலும், தசைகளில் தளர்ச்சி, வலுவிழந்த எலும்புகள், ஆற்றல் குறைந்து போதல் மற்றும் கவனமின்மை ஆகியவையும் தூக்கமின்மையால் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலை நீடித்தால், உடலின் வளர்சிதை மாற்றத்தில் தாக்கம் ஏற்பட்டு இதய நோய்கள், பக்கவாதம் மற்றும் இரண்டாம் வகை சர்க்கரை நோய் ஆகியவை ஏற்படுவதும் ஆய்வில் தெரிய வந்தது.

Monday, September 26, 2011

சவுதி பெண்களுக்கு ஓட்டுரிமை மன்னர் அறிவிப்பு!

ரியாத், செப்.26 : சவுதிஅரேபியாவில் முதன் முறையாக பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. அங்கு பெண்கள் ஓட்டு போடக்கூடாது. மற்றும் ஓட்டு போடுவதற்கும் உரிமை இல்லை.

இந்த நிலையில் சவுதி அரேபியாவில் வாழும் பெண்கள் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள நகரசபை தேர்தலில் போட்டியிடவும், ஓட்டு போடவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா (87) நேற்று அறிவித்தார். அப்போது அடுத்து நடைபெற உள்ள நகராட்சி கவுன்சிலர்கள் தேர்தலில் (ஷீரா) பெண்களையும் பங்குபெற செய்ய முடிவு செய்துள்ளோம் என அறிவித்தார்.

சவுதிஅரேபியாவில் வருகிற 29-ந்தேதி 285 நகராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடக்கிறது. அதில் 5 ஆயிரம் ஆண்கள் போட்டியிடுகின்றனர். இதைத் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தேர்தலில் பெண்களும் பங்கேற்க முடியும். தேர்தலில் அவர்களும் போட்டியிடலாம். ஓட்டு போடலாம். உரிமைகளுக்காக கடந்த சில மாதங்களாக முஸ்லிம் நாடுகளில் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. அந்த நிலை இங்கும் ஏற்படக்கூடாது என கருதி அரசியல் சட்டத்தில் மாற்றம் செய்து சவுதி அரேபிய மன்னர் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்ததாக தெரிகிறது.

ஆஸ்கார் களத்தில் குதிக்கும் தமிழ் பிரபலங்களின் படங்கள் ?

2011-ம் ஆண்டிற்கான பிராந்திய மொழி படங்களுக்குரிய ஆஸ்கார் விருது செலக்ஷ்னுக்கு, 16 இந்‌திய மொழிபடங்களை செலக்ஷ்ன் செய்து, திரையிட்டு பார்த்தது ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா. அதில் ஆறு இந்தி படங்களும், ஐந்து தமிழ் படங்களும், இரண்டு மலையாள படங்களும், ஒரு தெலுங்கு, ஒரு மராத்தி, ஒரு பெங்காலி படமும் அடக்கம்.

இதில் முதல் இரண்டு இடங்களை மலையாள படங்கள் இரண்டும் பிடித்தன. அ‌தாமின்டே மகன் அபு, உருமி இந்த இரண்டு படங்களில் ஆதாமின்டே மகன் அபு படம்தான் இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட படமாகும்.

செலக்ஷ்னுக்கு சென்ற எந்திரன், கோ, தெய்வத்திருமகள், முரண், ஆடுகளம் உள்ளிட்ட ஐந்து தமிழ் படங்களிலும், ஹாலிவுட் படங்களில் இருந்து நிறைய சீன்களும், அதில் சில படங்களின் கதைகளமும் உருவப்பட்டிருந்தது அப்பட்டமாக தெரிந்ததால், அந்த 5 படங்களும் பேக்-டூ-தி ‌பெவிலியன் ஆகிவிட்டதாம். இப்படி சொன்னார்கள் ஆஸ்கர் பரிந்துரைக்கான, ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா குழுவில் இருந்த எல்.சுரேஷ், கங்கை அமரன் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள்.

இந்த விஷயம், தமிழ் சினிமாவை தங்களது சட்டை பாக்கெட்டுக்குள் ‌வைத்திருப்பதாக பேசிவரும் இன்றைய இளம் இயக்குநர்களுக்கு தெரியுமா...!

களத்தில் இறங்க காரணம் கூறும் அழகிரி !?

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.

திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கே.சி.பழனிச்சாமி, சவுந்திரபாண்டியன், மண்டி சேகர், குடமுருட்டி சேகர் ஆகியோரை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,. திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும். திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் வெற்றிப் பெறுவதற்காகவே திமுக களம் இறங்குகிறது. திமுக தலைமை அறிவித்தவுடன் பிரச்சாரத்தை தொடங்க தயாராக இருக்கிறோம் என்றார்.

அதிக ஊனும் உறக்கமும் எடை மட்டுமல்ல இடையும் கூடும் !!

உலக அளவில் உடல் பருமனை அதிகரிக்கும் பொதுவான 2 விஷயங்கள் டி.வி.யும், நொறுக்குத் தீனியும் என்கிறது அமெரிக்காவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு. எண்ணெயில் பொரித்தெடுக்கும் உருளைக் கிழங்கு வறுவல் நாக்கை சுண்டியிழுக்கும் சுவை உடையதுதான்.

ஆனால் இதைச் சுவைப்பதால் உடலுக்கு ஏற்படும் கெடுதல் சிறிதல்ல என்கிறது இந்த ஆய்வு. இதுபோன்ற எண்ணெய் உணவுகள் அதிகப்படியான கொழுப்பு சத்தை உடலில் சேர்த்துவிடும் என்பது பல ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. ஆனால் இப்படி சேரும் கொழுப்புகள் எளிதில் கரைவதில்லை என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.

எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வரும் இளைஞர்களுக்கு நான்கு வருடத்தில் அதிகப்படியாக 1.5 கிலோ எடை அதிகரிக்கிறதாம். ஒரே இடத்தில் உட்கார்ந்தபடியே பலமணி நேரம் வேலை பார்ப்பது, அதிக நேரம் டி.வி. பார்ப்பது, சிகரெட் புகைப்பது, மதுபானம் அருந்துவது ஆகியவையும் உடலைப் பருமனாக்குகிறது என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

"உருளைக் கிழங்கு உணவுகளை வெகுவாக குறைத்துக் கொண்டு, காய்கறிகள், நவதானியங்கள், பழவகைகளை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள முடியும்'' என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆறுமணி நேரத்துக்கு குறைவாக தூங்கினாலும் அல்லது எட்டு மணி நேரத்துக்கு அதிகமாக தூங்கினாலும் உடல் எடை அதிகரிக்குமாம். உடல் நலம் சீராக இருக்க சின்னச்சின்ன விஷயங்களிலும் கவனமா இருங்க என்கிறது ஆய்வு!

Sunday, September 25, 2011

கற்பிக்கும் திறன் அதிகரிக்க கணினிகள் வளங்குகியது இலங்கைக்கு!

கொழும்பு, செப். 25 : இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள பள்ளிகளுக்கு 1,200 கணினிகளை இந்தியா வழங்கியுள்ளது.

இதற்கான நிகழ்ச்சி திரிகோணமலையில் நடைபெற்றது. அப்போது, இந்திய தூதரக ஆணையர் அசோக் கே. காந்தா, 1200 கணினிகளையும், 160 லேசர் பிரிண்டர்களையும் வழங்கினார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் கற்பிக்கும் திறனை அதிகரிக்க உதவும் வகையில் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், திரிகோணமலை-மட்டக்களப்பு பகுதிகளுக்கு இடையே ரயில், சாலை வசதிகளை மேம்படுத்த இந்தியா உதவி செய்துள்ளது. இலங்கை போக்குவரத்துக் கழகத்துக்கு 20 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன' என்று அவர் தெரிவித்தார்.

சம்பூர் பகுதியில் அனல் மின் நிலையம் அமைக்க 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

விழுந்தது சுற்றலா விமானம் பலி 19 ( தமிழர்கள் 8 )

காத்மாண்டு : நேபாளத் தலைநகர் காத்மாண்டுப் பள்ளத்தாக்கில் பனி மூட்டத்தில் சிக்கி சிறிய ரக சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானது.

இதிலிருந்த விமான ஊழியர்கள் மூன்று பேர் உட்பட அதில் பயணம் செய்த 16 சுற்றுலா பயணிகளும் உயிரிழந்தனர்.

16 சுற்றுலாப் பயணிகளில் 12 பேர் இந்தியர்கள், இவர்களில் 8 பேர் தமிழர்கள், திருச்சியைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் ஐரோப்பியர்கள்.

புத்தா ஏர் என்ற தனியார் விமானம் இதுபோல சுற்றுலாப் பயணிகளுக்கு எவரெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சுற்றிக் காட்டுவதற்காகக் கிளம்பியது. எவரெஸ்ட் உள்ளிட் பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர் விமானம் காத்மாண்டுத் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது காத்மாண்டுப் பள்ளத்தாக்கில் உள்ள திடீரென பனி மூட்டத்தில் சிக்கி விமானம் விபத்துக்குள்ளானது.

குட்டி புட்டியுடன் மாணவ மாணவிகள் கைது ?

சென்னையில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகமும், வேலூரில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த மாணவ, மாணவிகள் 72 பேர் வேலூரில் சுற்றுலாத்தலமான ஏலகிரியில் தங்கும் விடுதியில் மது, விருந்து நடத்தியுள்ளனர்.

இதில் இப்பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் சென்னை, பெங்களூரில் பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியர் என 80 பேர் கலந்துகொண்ட மது விருந்தில் கஞ்சா, அபின் போன்றவையும், பயன்படுத் தியதாக போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது.

இதையடுத்து வேலூர் எஸ்.பி. பாபு தலைமையில் 100க்கணக்கான போலீசார் ஏலகிரியில் உள்ள தனியார் கெஸ்ட் அவுஸ், விடுதிகள், ஓட்டல்களில் அதிரடியாக ரெய்டு நடத்தினர்.

அப்போது ஆரோவில் என்ற கெஸ்ட் அவுஸில் இந்த விருந்து நடப்பது தெரியவந்தது. 74 பேரை கைது செய்தனர். இதில் 6 பேரை மற்ற அனைவரையும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வந்துட்டார்யா வந்துட்டார்யா வடிவு மீண்டும் ?

இவர் இயக்கத்தை கைவிட்டு நடிகராக களமிரங்கிய படங்களில் ‘தலைநகரம்’ என்ற ஒரு படத்தை தவிர வேறு எந்த படமும் போனியாக வில்லை.

கடைசியாக இவர் நடித்த முரட்டுக் காளை படத்தை யாரும் வாங்க முன் வராததால் படம் தயாரகியும் இன்னும் பெட்டிக்குள்ளேயே இருகிறது., ஆனால் இதற்கெல்லாம் என்றைக்குமே கலங்கியதில்லை சுந்தர்.சி.

கலைஞர் டிவியில் ஒரு பக்கம் பாக்கியராஜுடன் இணைந்து ‘நாளைய இயக்குனர் நிகழ்சியை ‘ தொகுத்து வழங்குகிறார். இன்னோரு பக்கம், மனைவி குஷ்பூ இழுத்துக்கொண்டு வரும் வழக்குகள் பிரச்சனைகளை கவனமாக பார்த்துக் கொள்கிறார்.

ஆனால் இனி நடிப்பு மட்டும் வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டாராம் சுந்தர். சி. இதனால் இயகத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார்., ஒரு இயகுனராக உள்ளத்தை அள்ளித்தா, கிரி உட்பட பல கமர்ஷியல் ஹிட் படங்களை இயக்கியவர் சுந்தர்.சி.

கமல் நடிப்பில் ‘அன்பே சிவம் படத்தை இயக்கி பெருமை தேடிக்கொண்டார். தற்போது மீண்டும் இயக்கம் என்று வந்தபிறகு ஹீரோக்க்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டுமே!? அந்த புண்ணியத்தை கட்டிக்கொண்டிருகிறார்கள் விமல், மிர்ச்சி சிவா இருவரும் .

சுந்தர் .சி இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். இதை விட ஹாட்டான நியூஸ் இந்தப் படத்தில் வடிவேலும் மீண்டும் தனது இன்னிங்ஸை தொடங்குகிறார்., வந்துட்டார்யா வந்துட்டார்யா வடிவு.

Saturday, September 24, 2011

முடங்கியது இயல்பு வாழ்க்கை முடக்கியது தெலுங்கானா ?

ஐதராபாத், செப்.25 : ரயில் நிறுத்த போராட்டத்தால் தெலுங்கானா பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

ஆந்திர மாநிலத்தை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று தெலுங்கானா மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இம்மாத இறுதிக்குள் தனி மாநிலம் குறித்து தெளிவான முடிவை மத்திய அரசு அறிவிக்காவிட்டால் தங்களது பதவிகளை கூண்டோடு ராஜினமா செய்யப்போவதாக தெலுங்கானா பிராந்தியத்தை சேர்ந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தெலுங்கானா போராட்டத்தை ஒட்டி தெலுங்கானா பிராந்தியத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்களில் ஏற்கனவே அரசு பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத் உள்ளிட்ட இந்த 10 மாவட்டங்களிலும் 10,000 பேருந்துகள் ஓடவில்லை., இரண்டு நாள் ரயில் நிறுத்த போராட்டத்திற்கு தெலுங்கானா ஆதரவு அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இதனால் ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானா பிராந்தியத்தில் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன., மேலும் இந்த வழியாக ஓடும் ரயில்கள் மாற்று வழித்தடங்களில் திருப்பி விடப்பட்டுள்ளன., ரயில் நிறுத்த போராட்டத்தால் தெலுங்கானா பகுதியில் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்து 3 லட்சம் ஆட்டோ ரிக்ஷாக்களும் ஓடவில்லை.

ஐதராபாத்தில் மட்டும் 60,000 ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் பயணிகள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தெலுங்கானா கூட்டு குழுவை சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நூற்றுக்கணக்கான இடங்களில் ரயில் பாதைகளில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பாரதீய ஜனதா கட்சி, எம்.எல். கம்யூனிஸ்டு கட்சி, போன்ற அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் ரயில் பாதைகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐதராபாத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள் வெறிச்சோடிக் கிடந்தன.

வெளியூர்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் வேண்டிய மக்கள் எந்த வாகன போக்குவரத்தும் கிடைக்காமல் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள். மொத்தத்தில் நேற்று தெலுங்கானா பிராந்தியம் முழுவதும் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போனது. இந்த போராட்டத்தை முன்னிட்டு தெலுங்கானா பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஒரு நடிகையின் வாக்குமூலம்" கெஞ்சும் சோனியா !!

செல்வராகவனுடனான விவாகரத்தி்ற்கு பிறகு நடிகை சோனியா அகர்வால் ஹீரோயினாக நடித்து வரும் படம் ஒரு நடிகையின் வாக்குமூலம்.

இந்தபடத்தில் சோனியாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் படமாக இருப்பதாகவும், சோனியாவின் முன்னாள் கணவரான செல்வராகவன் தோற்றத்தில் ஒருவர் தோன்றபோவதாகவும், அதற்கான நடிகர் வேட்டை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை சோனியா மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு நடிகையின் வாக்குமூலம் படம் நடிகைகளின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது தான். ஆனால் இது என்னுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்ட படம் அல்ல. இதில் செல்வராகவன் போன்று எந்த கதாபாத்திரமும் இல்லை. அதற்காக யாரையும் தேடவும் இல்லை. அதில் இருப்பதே ஒரு ஆண் கதாபாத்திரம் மட்டும் தான். அவரும் தற்போது நடித்து வருகிறார்.

என் வாழ்க்கையில் அவ்வளவு பரபரப்பான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. தயவு செய்து என்னை செல்வராகவனுடன் இணைத்துப் பேசாதீர்கள். நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் நல்ல மரியாதை வைத்துள்ளோம், அதை கெடுத்து விடாதீர்கள் என்று கூறியுள்ளார்.

ஹிந்துத்துவா தீவிரவாதிகளால் இன்னல் படும் இந்திய மக்கள் !?

புதுடெல்லி : நாட்டில் நடைபெற்ற பதினாறுக்கும் மேற்ப்பட்ட குண்டு வெடிப்புக்கு ஹிந்துத்துவா அமைப்புகள் தான் காரணம் என டி.ஐ.ஜிக்கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மெக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா மற்றும் மாலேகான் குண்டுவெடிப்புகள்(1&2 )ஆகிய முக்கிய குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஹிந்துத்துவா அமைப்புகளே முக்கிய காரணமாக உள்ளது என்று டெல்லியில் நடைபெற்ற டி.ஐ.ஜிக்களின் ஆண்டு மாநாட்டில் புலானாய்வுக் குழுவின் சிறப்பு இயக்குநர் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் அவர்கள் தெரிவித்தாவது; ‘காவி தீவிரவாத அமைப்பு தங்கள் முகத்தை இந்த தாக்குதல்களில் வெளியே கொண்டு வந்துள்ளது என்றும், இந்த நான்கு சம்பவங்களை வெளிப்படையாக தெரிவித்த அவர்கள், மீதி 12 தாக்குதல்கள் பற்றி எந்த வித செய்தியையும் வெளியிடவில்லை.

ஏழு பேரை கொன்று குவித்த மாலேகான் குண்டுவெடிப்பில் பெண் தீவிரவாதி பிரக்யா சிங் தாகூர் மற்றும் ஸ்ரீகாந்த் புரோஹித் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக 2008-ல் கைது செய்யப்பட்டு 2009-ல் அவர்கள் மீதும் மற்றும் சிலர் மீதும் குற்றப்பத்திரிக்கை அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த நான்கு முக்கிய சம்பவங்களுக்கும் இவர்களே காரணம் என்ற உண்மை கண்டறியப்பட்டு முக்கிய குற்றவாளியான ஆர்.எஸ்.எஸ்ஸை சேர்ந்த சுவாமி அசீமானந்தாவை நவம்பர் 2010-ல் கைது செய்தனர்.

மேலும் 2007-ல் நடைபெற்ற பல தீவிராவாத தாக்குதலுக்குப் பின், நாட்டின் முக்கிய நகரங்களான ஜெய்பூர், அஹமதாபாத் மற்றும் டெல்லியில் நடைப்பெற்ற அனைத்து குண்டு வெடிப்பிலும், நூற்றுக்கும் மேற்ப்பட்ட முஸ்லிம் இளைஞர்களே காரணம் என்று விசாரணையின் பெயரில் கைது செய்ததோடு, இந்த தாக்குதலுக்கு இந்தியன் முஜாஹிதீன் அமைப்பே காரணம் என்று பெயர் சூட்டியது. ஆனால் உண்மையில் இவை அனைத்திற்கும் பின்னால் காவி தீவிரவாதமே காரணம் என்பதை யாரும் வெளிபடுத்தவில்லை.

மேலும் சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற நேசனல் இன்டகிரேஷன் கவுன்சிலிலும் இதைப்பற்றி உரையாடப்பட்டது. நாட்டின் சட்டம் மற்றும் விசாரணை குழு அனைத்தும் சிறுபான்மையினருக்கு எதிராகவே நடத்தப்படுகிறது. இதை மாற்றியமைக்க வேண்டும் என்றும், உண்மையை கண்டறிய தகுந்த விசாரணை நடத்த வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார் என்றும் இந்த மாநாட்டில் தெரிவித்தனர்.

ஆண்மை குறைவு போக்கும் அற்புத பழம்

ஆசியக் கண்டத்தில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள ஊட்டியில் விளையும் ஒரு வகைப்பழம் துரியன்.

இது பலாப்பழம் போல இருக்கும். பலாப்பழத்தில் முட்கள் இருப்பது போல இதன் மேல்தோல் கரடுமுரடாக இருக்கும். ஆனால், பலாப்பழத்தை விட, அளவில் சிறிய பழம் இது.

ஆகஸ்டு மாதம் இந்த பழத்தை அறுவடை செய்வர். ஆண்மை குறைவு போக்கும் அற்புத சக்தி இதற்கு உண்டு. அதனால் இதன் விலையும் அதிகம்தான். மஞ்சள் காமாலை நோயையும் குணப்படுத்தும் சக்தி உடையது. சாக்லேட், கேக், ஐஸ்கிரீம், பானங்கள் போன்றவை தயாரிப்பிலும் துரியன் பழம் பயன்படுகிறது.

Friday, September 23, 2011

தேர்தல் பணிக்காக துணை ராணுவம் அழைப்பு ! பிரவீன் குமார் !

சென்னை, செப்.23 : திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலை கண்காணிப்பதற்காக 3 பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

இந்த தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 5 கம்பெனி துணை ராணுவம் திருச்சி வருகிறது என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் ,தமிழ்நாட்டில் 18 வயது முடிந்தவர்கள் அடுத்த மாதம் 24-ந் தேதி தொடங்கும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது தங்களது பெயர்களை சேர்த்துக்கொள்ளலாம் என தெரிவித்தார் .

காசு உண்டாக்க காரியத்தில் கண்ணாயிருக்கும் பத்மப்ரியா !

தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு மலையாள படங்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருபவர் நடிகை பத்மப்ரியா. மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பத்மப்ரியா.

தற்போது நயிகா என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். அந்த காலத்து அழகு நடிகை சாரதாவின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். ஜெயராஜ் இயக்கத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், என்னைப் பொறுத்தவரை நல்ல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளதாக கருதுகிறேன். அதேசமயம், கிளாமராக நடிப்பதிலும் ஆட்சேபனை இல்லை. அப்படி வாய்ப்பு வரவில்லை. இதனால் பெரிய அளவில் நடிக்கவில்லை. ஆனால் அது கஷ்டமான விஷயமும் இல்லை. கதைக்குத் தேவைப்பட்டால் நிர்வாணமாகக் கூட நடிக்கலாம் என்பதுதான் எனது பாலிசி. பெண்களை கவர்ச்சியை விட்டுத் தனித்துப் பார்க்க முடியாது. அதேசமயம், அவர்களை செக்ஸியாக மட்டுமே சித்தரிப்பது என்பதை என்னால் ஏற்க முடியாது, என்று கூறியுள்ளார்.

முதுகில் குத்திய அ தி மு க, மூக்கு அறுபட்ட தே மு தி க !!

அதிமுக உள்ளாட்சிதேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. இதையடுத்து வேறு வழியின்றி தேமுதிகவும் தனித்து போட்டி என்று அறிவித்துள்ளது.

அதிமுகவின் புறக்கணிப்பு குறித்து அமைதி காத்து வந்த விஜயகாந்த், அதிமுகவுக்கு எதிராக தனது கட்சியினர் மத்தியில் நிலவி வந்த கொந்தளிப்பை உணர்ந்தே தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் ஒதுக்கவில்லை என்று தேமுதிக தொண்டர்கள் ஆவேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல் இப்போதும் அதிமுகவுக்கு எதிராக கிளம்பியுள்ளனர்.

இன்று தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்ற அறிவிப்பு வந்ததை சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் கல்யாண மண்டப வளாகத்தில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் குவிந்திருந்த தேமுதிகவினர் வரவேற்று கொண்டாடினர்.

அப்போது தேமுதிக தொண்டர்கள், தனித்துப் போட்டியிடுவது என்பது எங்களுக்குப் புதிதல்ல. ஆரம்பத்திலிருந்தே நாங்கள் தனித்தே செயல்பட்டு வந்துள்ளோம். அப்படித்தான் நாங்கள் வளர்ந்தோம். எனவே இது எங்களுக்குப் புதிதல்ல.

புரட்சிக் கலைஞர் கூறியதால்தான் கடந்த தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து செயல்பட்டோம். ஆனால் எங்களை முதுகில் குத்தி விட்டது அதிமுக.

இந்தத் தேர்தலில் அதிமுகவை எதிர்த்து நாங்கள் போட்டியிடப் போகிறோம். அவர்களை தோற்கடிப்பதோடு மட்டுமல்லாமல் டெபாசிட் இழக்க வைத்து நாங்கள் யார் என்பதைக் காட்டுவோம்’’ என்று கொதித்தனர்.

ஆதரவற்றவர்களுக்கு ஆதரவாக பிரிட்டன் தமிழர்கள் ! Heart 2 heart !!

பிரிட்டன் வாழ் தமிழர்கள் எதிர் வரும் நவம்பர் 2 ஆம் தேதி அன்று “Heart 2 Heart” என்னும் நடை பயணம் ஒன்றை பேர்மிங்காமில் இருந்து ஆரம்பித்து லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் வரை தொடரவுள்ளனர்.

இந்த நடை பயணத்திற்கு பிரிட்டன் வாழும் அனைத்து சமூகத்தவரையும் உள்வாங்கி அவர்களுக்கிடையில் உள்ள வேறுபாடுகளையும் கடந்து முதன் முதலாக நடத்தப்படும் நடைபயணமாக இருக்குமென நம்பப்படுகிறது. இப்பயணமானது “The Royal British Legion” க்கும் ஈழத்தில் உள்ள ஆதரவற்றோர் இலங்களுக்கும் ஆதரவையும் நிதியையும் திரட்டும் நோக்கில் நடாத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு நாள் நடைபயணத்தை பிரிட்டனின் சுதந்திரத்துக்கும் பாதுகாப்புக்கும் போராடி மடிந்த, மடிந்து கொண்டிருக்கின்ற மறவர்களை நினைவுகூரும் நவம்பர் இரண்டாம் தேதியில் பர்மிங்காமில் ஆரம்பிக்கவுள்ளதாக பிரிட்டன் தமிழர்கள் அறிவித்துள்ளனர்.

அத்துடன் எமது இளைய சமுதாயத்தினர் இன்று இந்நாடுகளின் அனுபவிக்கும் சுதந்திரத்தினை அடைவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட தியாகங்களை நினைவுகூருவதோடு இன்றும் விடுதலைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடும் மக்களுக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதும் இப்பாதயாத்திரையை ஏற்பாடு செய்பவர்களின் நம்பிக்கையாகும். ஆகவே பிரிட்டன் வாழ் அனைத்து மக்களின் பங்களிப்பினையும் ஆதரவினையும் அவர்கள் வேண்டி நிற்கிறார்கள்.

Thursday, September 22, 2011

பாசிச ஜெயா வுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் பாஸ்வான்

செய்தியாளர்களிடம் பாஸ்வான் கூறியது., பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து பல நாள்கள் ஆன பிறகும் முதலமைச்சர் ஜெயலலிதா அங்குச் செல்லவில்லை., பாசிச போக்கையே அறிவுருத்துகிறது, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறவில்லை. அங்கு என்ன நடந்தது என்பதை ஆராயாமல் போலீஸôருக்கு சாதகமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

காவல் துறை கைகளில் துப்பாக்கிகள் கொடுக்கப்பட்டிருப்பது, பொது மக்களை துப்பாக்கியால் சுட்டு கொல்வதற்கு அல்ல. மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி கொண்டு அவர்களை பாதுகாப்பதை விட்டவிட்டு கலவரத்தை சமாளிக்க முடியாமல் துப்பாக்கி மூலம் உயிர்களை பறித்தது கடைந்தெடுத்த பாசிச பயங்கரவாதம்.

இது தமிழ்நாடு அளவிலான பிரச்னை மட்டும் இல்லை. தேசிய அளவிலான பிரச்னை., சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரி, செப்டம்பர் 30-ல் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தமிழக அரசைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைப்போம்.

தமிழ்நாடு சமூக நல்லிணக்கம் போற்றப்பட்டு வந்த மண்.,மேலும் இந்த பாசிச வாதிகளை ஆட்சியில் வைத்திருப்பது அதிக ஆபத்து இங்கு இனிமேலும் இதுபோன்றச் சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்றார்.

அறிமுக மொழி முக்கியமல்ல உணர்த்தும் தமிழ் சினிமா !

சினமாவில் அறிமுகமாக மொழி முக்கியம் அல்ல என்பதை நெடுங்காலமாக உணர்த்தி வருகிறது தமிழ் சினிமா துறை. அவ்வப்போது புதுமுகங்களை இறக்குமதி செய்து ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்து வருகின்றனர்.

அந்தவரிசையில் தமிழ்சினிமாவின் இப்போதைய புதுவரவு ரிச்சா. தெலுங்கில் ரானாவுடன் லீடம் படம் மூலம் அறிமுகமாகி, முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தவர். இதுதவிர சந்திரமுகி-2 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கில் நடித்து வந்த ரிச்சாவை, தமிழில் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் டைரக்டர் செல்வராகவன். அவர் இயக்கியுள்ள மயக்கம் என்ன படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளார். இந்தபடம் வெளிவருவதற்கு முன்பே அடுத்தபடியாக சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் ஜோடி போட்டு இருக்கிறார்.

ஒஸ்தியில் நடித்து வரும் ரிச்சாவிடம், தனுஷ், சிம்பு இருவரில் யார் உங்க பெஸ்ட் ப்ரெண்ட் என்று கேட்டால் ரொம்ப விவரமாக இரண்டு பேருமே தான் என்கிறார். நடிப்பு விஷயத்தில் தனுஷ் நிறைய விஷயங்கள் சொல்லி கொடுத்தார். சிம்புவை பொறுத்தவரை நடன காட்சியின் போது பொறுமையாக இருந்து எனக்கு ஸ்‌டெப்பெல்லாம் சொல்லி கொடுத்தார். தனுஷ், சிம்பு தவிர இன்னும் நிறைய நடிகர்கள் என் லிஸ்ட்டில் இருக்காங்க என்று ரிச்சாக சொல்லுகிறார் ரிச்சா.

ஜெ வால் கலட்டிவிடப்பட்ட கேப்டனுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

கோவையில் வருகிற 25 - ந் தேதி தே.மு.தி.க. 7 - ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நடைபெறுகிறது என்றும், இதில் கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசுகிறார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து விஜயகாந்தை வரவேற்று பல்வேறு இடங்களில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் பஸ் நிறுத்தத்தில் மிகப் பெரிய பேனர் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த பேனரை நேற்று இரவு மர்ம ஆசாமிகள் பிளடோல் கிழித்து சேதப்படுத்தி விட்டனர்.

இந்த தகவல் கிடைத்ததும் தே.மு.தி.க. வினர் 50 - க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். இதனால் பரபரப்பு உருவானது. பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

பேனர் கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஆனாலும் அங்கு பதட்டம் நிலவுகிறது., விஜயகாந்த் வரவேற்பு பேனர் கிழிக்கப்பட்டதற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் கீர்த்தி சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

@ நேற்று ஜெ வால் கலட்டிவிடப்பட்டது வை கோ, இன்று கேப்டன் நாளை..,?

அரசியல்வாதியிடம் கேள்விகேட்கும் ரோஜா? அரசியல் பிரவேசமா!?

நகரி, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபுநாயுடு தனக்கு ரூ.39 லட்சம் சொத்து மட்டுமே இருப்பதாக அறிவித்துள்ளார். இதற்கு நடிகை ரோஜா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐதராபாத்தில் ரோஜா கூறியதாவது : ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகி விடாது. சந்திரபாபு நாயுடுவிடம் வேலை பார்க்கும் காவலாளிக்கு கூட அவரை விட அதிகமாக சொத்து இருக்கும். சந்திரபாபுநாயுடு பொது மக்களை ஏமாற்றுகிறார்.

9 ஆண்டு முதல்- மந்திரியாக இருந்த சந்திரபாபு நாயுடுவுக்கு இவ்வளவுதான் சொத்தா? எங்களுக்கு அதை விட அதிகமாக இருக்கிறதே என்று அவரைப்பார்த்து பொதுமக்கள் சிரிக்கிறார்கள். அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களும் அவரை கிண்டலாக பார்க்கிறார்கள்.

சந்திரபாபுநாயுடு பினாமி பெயரில் பல இடங்களில் சொத்து வைத்துள்ளார். அவரது சொந்த தொகுதியான குப்பந்தில் 100 ஏக்கர் விவசாய பண்ணை வைத்துள்ளார். சென்னை, பெங்களூர், சிங்கப்பூரிலும் அவருக்கு சொத்து உள்ளது. அவர் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக 10 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி சிவபார்வதி வழக்கு தொடர்ந்தார். அதற்கு சந்திரபாபுநாயுடு தடை வாங்கி விட்டார்.

தைரியம் இருந்தால் அவர் வழக்கை சந்திக்க வேண்டியதுதானே. சந்திரபாபுநாயுடு தனது சொத்துக்கள் ரூ.39 லட்சம் மட்டுமே என்பதை நிரூபிக்க அவராகவே சி.பி.ஐ. விசாரணை வைத்துக்கொள்வாரா?, இவ்வாறு நடிகை ரோஜா கூறினார்.

Wednesday, September 21, 2011

சொத்து குவிப்பு முதல் ஸ்பெக்ட்ரம் வரை இருந்தும் மூன்றாம் இடத்தில் !?

இந்த ஆண்டில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் 3ம் இடத்தில் இருந்த ஜப்பான் 4வது இடத்துக்குத் தள்ளப்படும்.

கடந்த 2010ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அடிப்படையில் அமெரிக்க முதலிடத்திலும் சீனா மற்றும் ஜப்பான் ஆகியவை முறை யே 2 மற்றும் 3ம் இடத்திலும் உள்ளன. இந்தியா 4வது இடத்தில் இருந்தது. அதாவது இந்தியாவின் ஜிடிபி 190.82 லட்சம் கோடியாக இருந்தது. இது ஜப்பானின் ஜிடிபியான 202.57 லட்சம் கோடியைவிட சிறிதளவு குறைவு.

அப்போதைய பொருளாதார வளர்ச்சி விகிதத்தின்படி 2013&14 நிதியாண்டில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்திய பொருளாதாரம் 3ம் இடம் பிடிக்கும் என மதிப்பிடப்பட்டது.

ஆனால், அண்மையில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, இந்த ஆண்டிலேயே இந்தியா 3ம் இடம் பிடிக்கும் என கிரிசில் பொருளாதார வல்லுநர் சுனில் சின்ஹா கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமி ஜப்பானை தாக்கியது. இதனால் அந்நாட்டு பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த ஆண்டில் ஜப்பான் பொருளாதார வளர்ச்சி 0.7 சதவீதமாக சரியும் என ஐஎம்எப் கூறியுள்ளது. அதேநேரம் இந்திய பொருளாதாரம் 8.2 சதவீதம் வளரும் என கூறியுள்ளது. இந்த ஆண்டில் ஜப்பானும், இந்தியாவும் 3ம் இடத்துக் போட்டி போடும் முன்கூட்டியே ஐஎம்எப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகாலை எழுபவருக்கு அதிக ஆயுள் ! ஆய்வில்!!

இரவில் முன் கூட்டியே தூங்க சென்று அதிகாலையில் கண் விழிப்பது உடல் நலத்துக்கு நல்லது. அவர்கள் சொல்வாக்கு மற்றும் அதிக ஆயுளுடன் திகழ்வார்கள் என கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்னரே பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர் தெரிவித்து இருந்தார். அது முற்றிலும் உண்மை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கிலாந்தில் உள்ள ரோம்ப்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக சுமார் 1100 ஆண்கள் மற்றும் பெண்களை தேர்ந்தெடுத்தனர். அவர்களில் அதிகாலையிலேயே எழுபவர்கள் ஒல்லியாகவும், நல்ல உடல் நலத்துடனும் இருந்தனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

அதே நேரத்தில் ஆந்தை போன்று இரவு முழுவதும் கண் விழித்து விட்டு மிகவும் தாமதமாக படுக்கையை விட்டு எழுபவர்கள் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் தொலைத்தவர்களாக இருந்தனர். எனவே அதிகாலையிலேயே எழுந்து வழக்கமான தங்கள் பணிகளை தொடங்குபவர்கள் உடல் நலத்துடன் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மூத்த வீரர்கள் ஒய்வு பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கங்குலி

புதுடெல்லி, செப் 21 ; இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் சவுரவ் கங்குலி கூறுகையில், மூத்த வீரர்கள் இந்த நேரத்தில் ஓய்வு பெறுவது சரி இல்லை மற்றும் தேர்வாளர்கள் அவர்களை விளையாட்டை விட்டு விலகவும் கட்டாயப்படுத்த கூடாது என்றார்.

சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் வி.வி.எஸ்.லக்ஷ்மண் போன்ற வீரர்கள் தங்கள் செயல் திறன் எப்போது குறைகிறது என்று தீர்மானிக்கிறார்களோ அப்போது தாங்களாகவே விலகலாம் என கங்குலி தெரிவித்தார் .

தீவிரவாத அமைப்புகளை சீல் வைக்க சொல்லும் மகாராஷ்டிரா போலீஸ்!!

புதுடெல்லி : தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் இரண்டு ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளான சனாதன் சஸ்தா மற்றும் அபினவ் பாரத் ஆகிய அமைப்புகளை முழுமையாக தடைச் செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிரா போலீஸ் பரிந்துரை செய்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற கோவா குண்டுவெடிப்பில் சனாதன் சாஸ்தாவின் பங்கு நிரூபணம் ஆனது மேலும் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பில் அபிநவ் பாரத்தின் பங்கு அம்பலம் ஆனது.

லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த ப்ரோகித், அஜய் ரஹீர்கர், ரமேஷ் உபாதை மற்றும் சம்மர் குல்கர்னி ஆகிய அபினவ் பாரத்தின் உறுப்பினர்கள் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பில் மும்பை தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் சிபிஐ யால் கைது செய்யப்பட்டு குற்றவாளிகள் என்று தெரியவந்தது.

அதேபோல் சனாதன் சாஸ்தாவின் பதினோரு உறுப்பினர்கள் கோவா குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டிருப்பதை தேசிய புலானாய்வுக் குழு கண்டறிந்தது.

மகாராஷ்டிரா போலீஸின் இந்த நடவடிக்கை இம்மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து மாநில உள்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவிக்கையில், இவ்வமைப்புகள் தடைச் செய்யப்படுவது குறித்து விசாரணை நடந்து வருகிறது. எனினும் தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து அபினவ் பாரத் மற்றும் சனாதன் சாஸ்தாவை தீவிரவாத தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் தடை செய்யக்கோரி மகாராஷ்டிரா காவல்துறை பரிந்துரை செய்ததாகவும் கூறியுள்ளார்.

குண்டுவெடிப்பில் தொடர்புடைய இவ்வமைப்புகளுக்கு எதிராக அரசின் நடவடிக்கை என்ன என்றும் இவ்வமைப்புகள் தடை செய்யப்படுமா என்றும் கேட்கப்பட்டதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் சம்ஜோதா எக்ஸ்பிரஸ், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் மற்றும் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் இதுவரை எந்த குறிப்பிட்ட அமைப்பின் செயலும் உறுதி செய்யப்படவில்லை. எனினும் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுவாமி அசீமானந்,தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் ஷர்மா ஆகியோர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

தேசிய புலனாய்வுக் குழு இம்மூன்று வழக்கிகளிலும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 2006 மாலேகான் குண்டு வெடிப்பில் மும்பை தீவிரவாத தடுப்பு பிரிவும், சிபிஐ-யும் சிமி மீது குற்றம் சாட்டினர். ஆனால் சுவாமி அசீமானந்த் மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடையது தங்கள் அமைப்புதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததால் இவ்வழக்கு தேசிய புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இனப் (ஈழ) படுகொளையாளன் கைது செய்யப்படுவார ? யு எஸ் சில் !?

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே நியூயார்க் சென்றுள்ளார்.

எதிர்வரும் 23ம் தேதி நடைபெறும் மாநாட்டில் ராஜபட்சே உரையாற்றுகிறார்.

இந்த நிலையில் இலங்கை அரசு மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுத்து, ஐ.நா. மாநாட்டில் கலந்து கொள்ள வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அங்கேயே கைது செய்ய வேண்டும் என்றும், தனி தமிழ் ஈழம் அமைய ஐ.நா. தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், இந்தியா போன்ற நாடுகள் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொங்குதமிழ் உரிமை முழுக்கம் என்ற பெயரில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஐ.நா. அலுவலகம் இருக்கும் ஜெனீவா நோக்கி புறப்புட்டுக்கொண்டிருக்கின்றனர்.

Tuesday, September 20, 2011

அன்றும் இன்றும் என்றும் நடிகவேல்! பி.வாசு !!

மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் 32ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு செப்டம்பர் 17ம் ‌தேதி, சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக வளாகத்தில் நடிகர் எம்.ஆர்.ராதா பற்றிய கல்லூரி மாணவர்கள் சிலர் இணைந்து இயக்கி தயாரித்திருந்த, "என் பார்வையில் நடிகவேள்" எனும் குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது. முனைவர் அகிலா சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், குறுந்தகட்டின் முதல் பிரதியை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு வெளியிட, இயக்குநர் பி.வாசு பெற்றுக் கொண்டார்.

திரையுலக பிரபலங்கள் முக்தா சீனிவாசன், கவிஞர் பிறைசூடன், நடிகர்கள் சார்லி, வாசு விக்ரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசிய இவ்விழாவில், இயக்குநர் பி.வாசு பேசுகையில், இந்த ஜென்ரேஷன் இளைஞர்களையும், மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதா கவர்ந்திருப்பதற்கு சான்று தான் இங்கு குழுமியிருக்கும் இளைஞர்கள் கூட்டம். அவர்கள் இக்குறும்படத்தை தயாரித்து இயக்கி இருக்கும் தங்களது நண்பருக்காக வந்திருந்தாலும் சரி, எம்.ஆர்.ராதாவிற்காக வந்திருந்தாலும் சரி, நான் எல்லாம் எம்.ஆர்.ராதாவின் தீவிர ரசிகனாக, அவரது படங்களை பார்த்து வளர்ந்தவன். அந்த காலங்களில் சில படங்கள் நாயகர்களுக்காக ஓடும். சில படங்கள் பேனருக்காக ஓடும், சில படங்களோ அப்பட நாயகர்களுக்காக ஓடும். ஆனால் எம்.ஆர்.ராதா நடித்த ரத்தக்கண்ணீர் அவரது நடிப்பிற்காக மட்டுமே ஓடிய படம். அவர் தனது வாரிசுகளுக்கு விட்டுச் சென்ற மாபெரும் சொத்து ரத்தக்கண்ணீர் படம் தான் என்றால் மிகையல்ல.

நான் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் படம் இயக்க செய்கிறேன். அங்கெல்லாம் எம்.ஜி.ஆர்.,சிவாஜிக்கு ஈக்குவலாக தெரிந்த போன தலைமுறை தமிழ் நடிகர் எம்.ஆர்.ராதா அண்ணன் மட்டுமே. கன்னடத்தில் என்னை ரத்தக்கண்ணீர் படத்தின் செகண்டு பார்ட்டை இயக்கித்தரச் சொன்னார்கள். அவர்களிடம் நான் ஒரு வருடம் டைம் கேட்டிருக்கிறேன். காரணம் அவரது நடிப்பு, அதன் மீதான பயம் தான்.

நடிகர் திலகம் சிவாஜியே ஒருமுறை என்னிடம், டேய் நான் ஷூட்டிங்போனா அந்தப்படத்துல, ஸ்பாட்டுல ரங்காராவ், ராதா அண்ணன் இரண்டுபேரும் இருந்தா உஷாரா இருப்பேன். காரணம் கொஞ்சம் ஏமாந்தா அவங்க இரண்டு பேருமே நம்மை தூக்கி சாப்பிட்டு விடுவார்கள்... என்பார். அப்படிப்பட்ட மாபெரும் நடிகர் எம்.ஆர்.ராதா என்ற பி.வாசு, என் பார்வையில் நடிகவேள் குறும்படத்தை இயக்கி, தயாரித்த எஸ்.மதன், ஆர்.தினேஷ் இருவரையும் பாராட்டினார்., முன்னதாக இந்நிகழ்ச்சியை தயாரிப்பாளர் ஆர்.தினேஷின் தந்தை எம்.ரமேஷ் பாபு ஒருங்கிணைப்பு செய்து வரவேற்புரையாற்றினார்.

விபரீதத்தில் முடிந்த இணையதள காதல்!?

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்தவர் மாலினி முர்மு. இவருக்கு வயது 22. இவர் பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) நிறுவனத்தில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், சில நாட்களாக வகுப்புக்கு செல்லாமல் விடுதியில் உள்ள தனது அறையில் முடங்கி கிடந்தார். 19.09.2011 அன்று மாலை அவரது தோழிகள் வந்து பார்த்தபோது, அறையின் கதவு பூட்டிக்கிடந்தது. பல முறை தட்டியும் திறக்காததால், காவலாளிகள் கதை உடைத்தனர். உள்ளே மாலினி முர்மு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இணையதளத்தின் மூலம் அவர் வாலிபர் ஒருவரை தீவிரமாக காதலித்ததும், அவருடனான உறவு முறிந்ததால் ஏற்பட்ட விரத்தியின் காரணமாகவே, மாலினி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தற்கொலைக்கு முன்பு அந்த வாலிபருக்கு இணையதளம் மூலம் மாலினி எழுதியுள்ள கடிதத்தையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த தற்கொலை சம்பவம் ஐஐஎம் கல்லூரி நிர்வாகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மாலினியின் பெற்றோரும் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். உடலை பெற்றுக்கொள்ளுவதற்காக மாணவியின் பெற்றோர் ஜார்க்கண்டில் இருந்து பெங்களூருக்கு வந்தனர்.

தற்கொலைக்கான காரணத்தை தனது லேப்டாப்பில் மாலினி குறித்துவைத்துள்ளார். தனது நண்பர் தன்னைவிட்டு பிரிந்துவிட்டதால் தற்கொலை செய்துகொள்வதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

மாலினி அந்த அறையில் வேறு மாணவிகளின் துணை இல்லாமல் தனியாகத்தான் தங்கியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். பெங்களூரில்தான் அவரது நண்பரும் இருந்துள்ளார் என்றும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அவர்கள் பிரிந்துள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்தனர். ஃபேஸ்புக் சமூகவலைத்தளம் மூலம் போலீசார் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.

ஃபேஸ்புக்கில் அந்த நண்பர் மாலினியைப் பிரிவது குறித்து கருத்து தெரிவிக்கையில், என்னுடைய கேர்ள்ஃபிரண்டை விட்டு விலகிவிட்டேன். இன்று சுதந்திரமான நாளாக உணர்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஐஐஎம் அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். நண்பர் பிரிந்ததால் ஐஐஎம் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசி (யி) ன் கேலி கூத்து பாவப்பட்ட பள்ளி குழந்தைகள் !!

சென்னை, செப். 20 : அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் 35 நிமிடம் பாட நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட குழப்பத்தால் பள்ளிகள் 15 நாட்கள் தாமதமாக திறக்கப்பட்டன.

பள்ளிகள் தாமதமாக ஜூன் 15-ந்தேதி தொடங்கின. சமச்சீர் கல்வியை அமல் படுத்துவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப் படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டன.

இதையடுத்து ஆகஸ்டு மாதம் 2-வது வாரத்தில் இருந்து பள்ளிகளுக்கு சமச்சீர் புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டன. காலாண்டு தேர்வு 22ந்தேதி தொடங்குகிறது.மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த போதிய காலம் இல்லாததால் பாட வேளை நேரத்தை 35 நிமிடம் அதிகரித்து நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல் நிலைப்பள்ளிகள், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை உள்ள மாணவர்களுக்கு பாடங்களை முடிக்கும் வகையில் பள்ளி பாடவேளை நேரம் 40 முதல் 45 நிமிடங்கள் இருக்க வேண்டும். இத்துடன் மாதந்தோறும் இரண்டு சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த வேண்டும். பாட வேளை நேரத்தை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்பி பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி !

லண்டன், செப். 20 : லண்டனில் சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவு, காபி பிரியர்களுக்கு மட்டுமல்ல, காபி கடை உரிமையாளர்களுக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் காபி குடிப்பதால் ஏற்படும் சாதக, பாதகம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

1960-ம் ஆண்டு முதல் பல லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளையும் இவர்கள் அடிப்படையாக எடுத்துக்கொண்டனர்., அதில் கண்டறியப்பட்ட முடிவுகள் குறித்து "டெய்லி எக்ஸ்பிரஸ்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது., தினமும் ஒரு கோப்பை காபி குடித்தால் மூளை நாளங்களில் ரத்தம் உறையும் அபாயம் 14 சதவீதம் வரை குறைகிறது.

மூன்று முதல் நான்கு கோப்பை காபி குடிப்போருக்கு 17 சதவீதம் வரை இந்த அபாயம் குறையும் என குறிப்பிடப்பட்டுள்ளது., தேநீர் போன்ற பானங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் என்ற வேதிப்பொருள் உள்ளது. இவை பக்கவாதம் போன்ற அபாயங்களை தடுப்பதில்லை. ஆனால், காபியில் இந்த வேதிப் பொருள் இல்லை என்பதால் தாராளமாக குடிக்கலாம்.

இதன் மூலம் மூளை நாளங்களில் படியக்கூடிய கொழுப்பு கரைக்கப்படுகிறது. அதே நேரம், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் அபாயம் காபி குடிப்பதால் உருவாகும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

@ அதற்காக காலை முதல் இரவு வரை அல்ல, இரண்டு அல்லது மூன்று கப் போதுமானது., மீறினால் அமிர்தமும்,...

Monday, September 19, 2011

புதிய வாக்காளர் அட்டை புகைப்படத்துடன் ( I D )

தேனி,செப் 20 : தமிழகத்தில், புகைப்பட வாக்காளர் பட்டியலை வெளியிட்டதில், தேனி மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்களில், இதுவரை புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல், இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் வெளியிடவில்லை, தமிழகத்தில், மற்ற மாவட்டங்களில் புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி, முழுமை அடையவில்லை.

தேனி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் என, அனைத்து உள்ளாட்சி அமைப்பு வாரியாக, புகைப்பட வாக்காளர் பட்டியல் முழுமையாக வெளியிடப்பட்டதாக, கலெக்டர் பழனிசாமி தெரிவித்தார்.

சிம்புவுடன் இணையும் புதுப்படம் ஓகே சொன்ன அஜித்

மங்காத்தாவின் சூப்பர் ஹிட் வெற்றியால், மீண்டும் வெங்கட்பிரபு கூட்டணியில், அஜித் ஒரு படம் பண்ணப்போவதாகவும், அந்தபடத்தில் அஜித்துடன், சிம்புவும் சேர்ந்து நடிக்க போவதாகவும், இப்படத்தை பல வெற்றி படங்களை கொடுத்த ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருப்பதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தல ஓகே சொன்னதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பது ஏ.எம்.ரத்னம் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், இப்படத்தை வெங்கட்பிரபு இயக்கவில்லை என்பதும் தெளிவாகியுள்ளது. மேலும் இப்படத்தை அஜித்திற்கு, பில்லா படத்தை கொடுத்த விஷ்ணுவர்தனே இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அஜி்த் இப்போது நடித்து வரும் பில்லா-2-வை, விஷ்ணுவர்தன் தான் முதலில் இயக்குவதாக இருந்து, பின்னர் அவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சக்ரி டோல்டி அந்த பொறுப்பை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!