Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, August 31, 2011

வெளிநாட்டில் கல்வி கற்க ஆசையா? இதோ அறிய வாய்ப்பு

சென்னை: வெளிநாட்டில் கல்வி கற்க செல்லும் மாணவர்களுக்கு, கடந்த 20 வருடங்களாக ஆலோசனை வழங்கிவரும், குளோபல் ரீச்(Global Reach) எனும் அமைப்பு, தற்போது, மாணவர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்கவுள்ளது.

சென்னையிலுள்ள பார்க் ஷெரட்டன் ஹோட்டலில், வரும் செப்டம்பர் 5ம் தேதி, நியூசிலாந்து நாட்டின் 8 பல்கலைக்கழகங்கள் கலந்துகொள்ளும் நேர்முக நிகழ்ச்சியை குளோபல் ரீச் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியானது, மதியம் 1pm முதல் மாலை 7pm மணிவரை நடைபெறவுள்ளது.

பொறியியல், வியாபாரம்(Business), தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு, இயற்பியல், வேதியியல், உயிரியல், பயோ-டெக்னாலஜி போன்ற அறிவியல் சார் படிப்புகளும், வரலாறு, இலக்கியம், வணிகம்(Commerce) மற்றும் அக்கவுண்டிங் போன்ற கலை சார் படிப்புகளும், மல்டிமீடியா, அனிமேஷன், ஸ்கிரிப்ட் எழுதுதல், திரைப்படம், தொலைக்காட்சி இயக்கம் மற்றும் நடிப்பு தொடர்பான படிப்புகளும் அந்தப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்றன.

இந்த 8 பல்கலைகளும், டிப்ளமோ, இளநிலைப் பட்டங்கள், பட்ட டிப்ளமோ(Graduate Diplomas), முதுநிலைப் பட்ட டிப்ளமோ மற்றும் ஆராய்ச்சி பட்டங்கள் போன்றவைகளை வழங்குகின்றன.

இந்த நேர்முக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, மாணவர்கள், முன்கூட்டியே குளோபல் ரீச் அமைப்பில் பதிவுசெய்ய வேண்டும். இதன்மூலம், அவர்களுக்கு மின்னணு அழைப்புகள்(E-invites) வரும். இதில் கலந்துகொள்ள வரும் மாணவர்கள், தங்களுடைய பிளஸ்2 சான்றிதழ்களின் நகல்களை எடுத்துவர வேண்டும். தங்களது சான்றிதழ்களை ஏற்கனவே குளோபல் ரீச் அமைப்பில் சமர்ப்பித்தவர்கள், நேரடியாக நேர்முக நிகழ்வில் பங்கேற்கலாம்.

Chennai@globalreachonline.com என்ற மின்னஞ்சல் முகவரியில், இதற்கான முன்பதிவு செய்யலாம்., இதுகுறித்து இன்னபிற தகவல்களை அறிந்துகொள்ள 91 9841014499 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

ஆரிய வந்தேறிகளை வந்த வழியே விரட்டப்பட வேண்டும்

சென்னை: இந்தியாவில் உள்ள தமிழர்கள் தாங்கள் முதலில் இந்தியர்கள் இல்லை என்றால் அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு செல்ல வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாம் அனைவரும் முதலில் இந்தியர்கள். இரண்டாவதாகத்தான் தமிழர்கள். வைகோ தெலுங்கில் இருந்து வந்தவர். இந்தியாவில் உள்ள தமிழர்கள் தாங்கள் முதலில் இந்தியர்கள் இல்லை என்றால் அவர்கள் யாழ்ப்பாணத்துக்குச் செல்ல வேண்டும் என்றார்.

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை தீர்மானம் கூறுகிறது. தமிழர்களின் உணர்வுகள் இது என்றால் இந்தியர்களின் உணர்வுகள் எப்படி இருக்கும்? என அவர் கேள்வி எழுப்பினார்.

**ஆரியர்கள் கைபர் கணவாய் வழியாக ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு இந்தியாவிற்குள் வரும்போது ஆட்சி அதிகாரம் நம் கையில், ஆடுமாடுகள் அவர்கள் கையில் ஆனால், இப்போது ஆட்சி அவா கையில் ஆடுமாடுகள் நம் கையில், பார்பனர்கள் ஆங்கிலேயருக்கு கூட்டிகொடுத்தும் காட்டிகொடுத்தும் ஆட்சியில் அமர்ந்தவர்கள் இந்த பரதேசிகள்,. ஈழ தமிழர்களும் இந்தியர்களே இது புரியாது ஆரிய வந்தேறிகளுக்கு.

ஐய்ஷுக்கு ஐய்சு வைக்க மற்றுமொரு விருந்து

மும்பை : பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய்க்கு, பழசி ராஜா புரஸ்காரம் சார்பில் அபிநயா கலா ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

போராட்ட வீரர் பழசி ராஜா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் ஆண்டுதோறும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவகக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஐஸ்வர்யா ராயை தவிர்த்து,

இந்த ஆண்டில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர், பாடகி லதா மங்கேஷ்கருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. திரைத்துறையில், அமிதாப் பச்சனிற்கு பிறகு, இந்த விருதை பெறும் நடிகை ஐஸ்வர்யா ராய் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, August 30, 2011

பெண்கள் வெட்கம் தயக்கத்தை விட்டு விழிப்புணர்வு வேண்டும்

பெண்கள் புற்றுநோய் பற்றி இன்னும் கூடுதல் விழிப்புணர்வு பெறவேண்டும். மார்பக புற்றுநோய் ஏற்பட்டால் வெட்கத்தோடு அதை மறைத்துவிடுகிறார்கள். முற்றிய பின்பே சிகிச்சைக்கு வருகிறார்கள்.

அதுபோல் கருப்பை வாய் புற்றுநோயிலும், நோய் அறிகுறிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறார்கள்., பெண்கள் வெட்கம், தயக்கத்தை விட்டுவிட்டு இன்னும் அதிக விழிப்புணர்வோடு இந்த நோயை அணுகி குணப்படுத்த வேண்டும்.

வயதுக்கும் - புற்று நோய் குணமாகும் தன்மைக்கும் தொடர்பு இருக்கிறதா?

40 வயதில் ஒருவருக்கு புற்று நோய் வந்தால் அதன் பரவும் தன்மையும், தாக்கமும் அதிகமாக இருக்கும். அதனால் அவர் பாதிப்பை அதிகமாக உணருவார். அதே நோய் 70 வயதானவருக்கு வந்தால், அதன் பரவும் தன்மையும் தாக்கமும் குறைவாகவே இருக்கும்.

வயதான பின்பு புற்றுநோய் வந்தால் கொடுக்கும் மருந்துகளின் அளவும், ரேடியேஷனின் அளவும் குறைவாகும். ஆனால் தைராய்டு புற்றுநோய் மட்டும் இதற்கு விதிவிலக்கு.இந்த புற்றுநோய் இளம் வயதில் ஏற்பட்டால் குணமாகிவிடும். வயதானவர்களுக்கு வந்தால், அவர்களுக்கு பாதிப்பின் தாக்கம் அதிகமாகத் தெரியும்.

** கருத்தடை மாத்திரைகளை அதிக காலம் பயன்படுத்தும் பெண்களுக்கும், கருப்பையை நீக்கம் செய்த பின்பு `ஹார்மோன் ரீ பிளேஸ்மெண்ட் தெரபி' பெறும் பெண்களுக்கும் புற்றுநோய் ஏற்படுமோ?' என்ற சந்தேகம் பெரும் பாலானவர்களுக்கு இருக்கிறது. இதில் ஓளரவு உண்மை இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சின்னத்திரையில் சிக்கிய ஹா(ர்)ட் செய்தி !!

சின்னத்திரை டாக் ஷோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் பார்த்திபன் ரூ. 1 கோடி சம்பளம் கேட்டதாக வெளியாகியிருக்கும் செய்திதான் இன்றைய சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையின் ஹாட் நியூஸ்.

தினம் தினம் புதிது புதிதாக முளைத்து வரும் சின்னத்திரைகளில் புதுமையான நிகழ்ச்சிகளை புகுத்துவதில் போட்டிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எப்படியாவது தங்கள் நிறுவனத்தை முன்னணிக்கு கொண்டு வர வேண்டும்; ரசிகர்களை பார்க்க வைத்து விட வேண்டும் என்று டிவி நிறுவனங்கள் போட்டி போட்டி நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றன.

அப்படி புதுமையான டாக் ஷோவை நடத்த முடிவு செய்த சில நிறுவனங்கள், அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக நடிகர் பார்த்திபனை அனுகியிருக்கிறது. ஆனால் பார்த்திபன்.... இனிமேல் நம்மை யாரும் தேடி வந்து அழைக்கக் கூடாது என்பதால் கேட்டாரா, அல்லது நிஜமாகவே தேவைப்பட்டதா தெரியவில்லை. ஒரு எபிசோடுக்கு இரண்டு லட்சம் கொடுங்க என்றாராம். ஐம்பது வாரங்களுக்கு தர வேண்டிய பணத்தையும் மொத்தமாக கொடுங்கள் என்று கேட்டது அதைவிட கொடுமை.

பார்த்திபனுக்கு மொத்தமாக ரூ.1 கோடியை கொடுக்க யார்தான் முன்வருவார்கள்? சைலண்ட்டாக இடத்தை காலி செய்து விட்டார்களாம். பார்த்திபன் கேட்ட சம்பளத்தை பார்த்து வாய் பிளந்து நிற்கும் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் சிலர், குறைந்த சம்பளத்தில் நிகழ்ச்சியை நடத்திக் கொடுக்க தயார் என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அணுகிக் கொண்டிருக்கிறார்களாம்.

வெளிநாடுகளிலிருந்து மனப்பெண்கள் இறக்குமதி !?

பெய்ஜிங், ஆக. 30சீனாவில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கட்டாய சட்டம் அமலில் உள்ளது. எனவே, அந்த குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என இந்நாட்டு மக்கள் விரும்புகின்றனர். எனவே, கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என ஸ்கேன் மூலம் கண்டறிகின்றனர்.

பெண் குழந்தையாக இருந்தால் அதை கருவிலேயே அழித்து விடுகின்றனர். இதனால் அங்கு பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது., எனவே, திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் லட்சக்கணக்கான சீன இளைஞர்கள் தவித்து வருகின்றனர்.

எனவே, இக்குறையை போக்க தங்களது பக்கத்து நாடுகளான வியட்நாம், லாவோஸ் மற்றும் வடகொரியாவில் இருந்து மணப்பெண்களை இறக்குமதி செய்ய சீன அரசு முடிவு செய்துள்ளது., முதலில் 36 ஆயிரம் மணப்பெண்கள் பக்கத்து நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளனர். தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சீனாவில் ஆண்களை விட 13 சதவீதம் பெண்கள் குறைவாக உள்ளனர்.

Monday, August 29, 2011

தமிழ் மக்களுக்கு செய்யாத இவா? ஈழத்திற்கா செய்யப்போகிறார்!?

29.8.2011 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண். 110 ன் கீழ் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் அளிக்கப்பட்ட அறிக்கை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இருப்பது போலவும், அந்த அதிகாரத்தை நான் பயன்படுத்தி அவர்களை காப்பாற்ற முடியும் என்பது போலவும் பேசப்படுவது சட்டத்தின்படி சரியானது அல்ல.

இருப்பினும் சூழ்நிலைகள் மாறுபட்டிருந்தாலோ அல்லது புதியதாக ஏதாவது ஆதாரம் இருந்தாலோ, மரண தண்டனை பெற்ற நபரோ அல்லது அவர் சார்பாக வேறு ஒருவரோ, குடியரசுத் தலைவரின் முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு புதியதாக ஒரு மனுவினை குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கலாம். குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னர், அது தொடர்பாக பின்னர் தாக்கல் செய்யப்படும் அனைத்து மனுக்களும் குடியரசுத் தலைவருக்கு தான் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இது குறித்து நடவடிக்கையை குடியரசுத் தலைவர் தான் எடுப்பார்.

எனவே, பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் கருணை மனு மேதகு குடியரசுத் தலைவர் அவர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்த வித அதிகாரமும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை என்பதை வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நிலையில் எனக்கு இதற்கான அதிகாரம் இருக்கிறது என்ற பிரச்சாரத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தப் பேரவையின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.

**இந்திய அரசு ராஜீவ் கொலை வழக்கில் காட்டிய தீவிரத்தை, ஈழத்தில் இந்தியப் படைகள் புரிந்த போர்க்குற்றங்களை விசாரிப்பதிலும் காட்ட வேண்டும். படுகொலைகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு காலந் தாழ்த்தியாவது தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டும்., தூக்குத் தண்டனை எதிர்த்துப் போராடுவதற்கு, சர்வதேச ஒற்றுமை இயக்கத்தை கட்டி எழுப்புவது அவசியம்.

குறுகிய இன மான உணர்வுகளை தூண்டி விடுவது, இந்திய அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியை நிறைவேற்றவே வழி வகுக்கும். ஏற்கனவே அப்சல் குரு, தேவேந்தர் பால் சிங் ஆகியோருக்கு இந்திய நடுவண் அரசால் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்த போராட்டத்தின் தொடர்ச்சி இது. வேலூர் சிறையில் தூக்குக் கயிற்றை முத்தமிடத் தயாராக உள்ள மூவருக்காக மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டுமென போராடுவோம்.

பாசிச ஜெயா மறுப்பு! பார்ப்பனியம் இதுவரை எதையாவது செய்து இருக்கிறதா தமிழ் மக்களுக்கு? அதுவும் ஈழ தமிழர்கள் ஒன்றும் பார்ப்பனீயம் இல்லையே, இந்த மூன்று உயிர்காக நாம் பல வழிகளிலும் போராடித்தான் ஆகவேண்டும் நம் உறவுகளுக்காக. **

இதயத்துக்கு இதம் தரும் பப்பாளி

கடுமையான காய்ச்சலைக் குணப்படுத்த உதவும் பப்பாளி இலை கஷாயம் இதய நோயாளிகளுக்கும் நல்லது.

முக்கியமாக அடிக்கடி இதயத் துடிப்பு அதிகரிப்பதால் அவதிப்படும் நோயாளிகளுக்கு பப்பாளி இலை கஷாயம் சிறந்த பலனளிக்கும்.பப்பாளி இலை கஷாயம் நோயாளியை அமைதிப்படுத்தி, இதயத்துடிப்பைக் குறைத்து நிவாரணம் அளிக்கிறது. இதய நோயாளிகளுக்கு நன்றாக முற்றி பழுத்த பப்பாளிப் பழம் மிகச் சிறந்த உணவாகும்.

பப்பாளிப் பழம் ரத்தத்தில் கொலஸ்டிராலின் அளவைக் குறைத்து, ரத்தக் குழாய்களை நெகிழக் கூடியவையாக ஆக்குவதால், இதய நோயாளிகள் பப்பாளிப் பழத்தைத் தவறாமல் கண்டிப்பாக அவர்களுடைய உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

காலை உணவாக பப்பாளிப் பழத்தை மட்டுமே சாப்பிடலாம். மாலையில் தேநீர் வேளையிலும் பப்பாளிப் பழம் சாப்பிடலாம். ஆனால் இரவில் பப்பாளிப் பழம் சாப்பிடக் கூடாது.

தயாரிப்பது எப்படி?. நிழலில் உலர்த்தப்பட்ட பப்பாளி இலையில் சுமார் 5 கிராம் முதல் 10 கிராம் வரை எடுத்துக் கொள்ளவும். அதை ஒரு கோப்பை வெந்நீரில் போட்டு 5 நிமிடங்களுக்கு நன்றாக ஊற விடவும். பின்னர் வடிகட்டி அந்த கஷாயத்தை நோயாளிகளுக்குக் குடிக்க கொடுக்கவும்., இந்த சிகிச்சையினால் நோயாளியின் உடல் வெப்ப நிலை தணியும். நாடித் துடிப்பின் வேகமும் குறையும்.

Sunday, August 28, 2011

தூக்கு தண்டனையை எதிர்த்து தமிழ் அமைப்புகள்

வேலூர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை செப்டம்பர் 9ம் தேதி நிறைவேற்றப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ள வேலூர் மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று பல்வேறு தமிழ் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. ஆதலால் வேலூர் மத்திய சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் மூன்று வளைய பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிறையைச் சுற்றிலும் ஆயுதம் தாங்கிய படை நிறுத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதி முழுவதும் அதிக போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சிறைக்கு அருகில் பொதுமக்கள் செல்வதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மரண தண்டனை நிறைவேற்றப்படக் கூடாது என்று கோரிக்கை வைத்து ம.தி.மு.க. தலைவர் வைகோ நேற்று உண்ணாவிரதம் இருந்தார். அந்தக் கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.

இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலையிடவேண்டும் என்று வைகோவும், பா.ம.க. தலைவர் ராமதாசும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சோனியா காந்தி தலையிட்டு மரணதண்டனையைச் சாதாரண தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு முன்பு சோனியா காந்தி தலையிட்டதனால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் வேலூர் மத்திய சிறையில் துவங்கிவிட்டன. இதற்கிடையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் இன்று தங்கள் தண்டனையை ரத்தாக்குவதற்கு கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை அணுகுவார்கள்.

விஜய்யின் பாதுகாப்புக்கு மேலிட உத்தரவு! பதற்றத்துடன் போலீஸ் !!

வேலாயுதம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்காக மதுரைக்கு நடிகர் விஜய் விமானம் மூலம் (28.08.2011) வந்தார். இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 1.40 மணிக்கு வந்திறங்கிய விஜய்யை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர். 75 வாகனங்களுக்கு மேல் விமான நிலைய வரவேற்பு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

மதுரை ஏடிஎஸ்பி மயில்வாகணன் அம்மாவின் அடிவருடி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் இருந்தனர். இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டருந்தது. விமான நிலையத்திற்குள் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கையெழுத்துட்ட ஒரு கடிதம் விமான நிலைய அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டது. அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த வெங்கடேஷ், பாஸ்கர், தஙகபாண்டி ஆகிய 3 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு காரில் வெளியே வந்த நடிகர் விஜய், அங்கிருந்து ஓய்வுக்காக பாண்டியன் ஹோட்டலுக்கு சென்றுவிட்டார். விஜய் வாகனத்துக்கு முன்னும் பின்னும் ரசிகர்களின் கார்களை அனுமதிக்கவில்லை போலீசார்.

விஜய்யை காண முடியாத ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததுடன், போலீசாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கொடுக்கும் பாதுகாப்பைப் போல, நடிகர் விஜய்க்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமா. ஏன் இவ்வளவு கெடுபிடிகள் செய்கிறீர்கள். விஜய் பேசாமல் போவார். தேவையில்லாமல் பாதுகாப்பு என்ற பெயரில் ரசிகர்களாகிய எங்களை ஏன் நெருங்க விடவில்லை என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மதுரை சர்வதேச விமான நிலைய பாதுகாப்புக்காக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதைத்தான் நாங்கள் செய்தோம் என்றும், விஜய்க்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கும்படி (ஜெயலலிதா) மேலிட உத்தரவு வந்ததால், அவருக்கும் கூடுதல் பாதுகாப்பு தர வேண்டியிருந்தது என்றும் போலீசார் ரசிகர்களிடம் சமாதானமாக பேசி அனுப்பி வைத்தனர்.

கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கிய உணவு வகைகள்

* ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் இவைகளை சேர்த்து முப்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.

* 2 அத்திப்பழங்கள், 2 பேரீச்சை, சிறிதளவு உலர் திராட்சை இவற்றை காலையில் சாப்பிட்டு வந்தால் கருத்தரித்த பெண்ககளுக்கு எடை குறைவு, இரத்தம் குறைதல் போன்ற பிரச்சனைகள் குறையும்.

* காய் வகைகளில் கேஸ் அயிட்டம் உருளை, சேனை, சீனி வள்ளி, மரவள்ளி இதெல்லாம் அளவாக சாப்பிடவும்.

* அன்னாச்சி பழம், கொய்யா, பப்பாளி இது மிகவும் சூடு. இதனால் கர்ப்பிணி பெண்கள் இதை தவிர்க்கவும். 7 மாதத்திற்கு மேல் சிறிது சாப்பிடலாம்.

* லவங்கத்தை இடித்து தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வற்றிய பிறகு வடிகட்டி அதை கர்ப்பிணி பெண்களுக்கு குடிக்க கொடுத்தல் வாந்தி குறையும்.

* 20 கிராம் சீரகத்தைப் போட்டு கஷாயம் காய்ச்சி அத்துடன் 20 கிராம் பசு வெண்ணெயைக் கலந்து கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க வயிற்று வலி குறையும்.

Saturday, August 27, 2011

மோடி அரசை மீறி லோகாயுக்த ! குஜராத் ஆளுநர் !?

காந்திநகர் : மோடி அரசை மீறி குஜராத் மாநில ஆளுநர் லோகாயுக்தாவை எதிர்பாராதவிதமாக நியமித்துள்ளார்.

முந்தைய வழக்கங்களை மீறி ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எ.மேத்தாவை ஆளுநர் தலைவராக தேர்வுச் செய்துள்ளார். முன்னர் ஆர்.எ.மேத்தாவை லோகாயுக்தவாக உயர்நீதிமன்றம் அரசுக்கு சிபாரிசுச் செய்திருந்தது. ஆனால்,இதுவரை அரசு நடவடிக்கை மேற்கொள்ளாததைத் தொடர்ந்து ஆளுநர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

எதிர்கட்சி தலைவர் சக்தி சிங் கோஹில் தலைமையிலான காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்தித்து லோகாயுக்தா தொடர்பாக விவாதித்தனர். தொடர்ந்து ஆளுநர் சட்டநிபுணர்களுடன் கலந்தாலோசித்து லோகாயுக்தாவை நியமித்துள்ளார்.

அரசின் நடவடிக்கைகளை கண்காணிக்க கடந்த ஏழு வருடங்களாக எவ்வித அமைப்பும் மாநிலத்தில் இருக்கவில்லை. அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தரும் மோடி லோகாயுக்தாவை நியமிக்காதது கவுரதரமானது என எதிர்கட்சி தலைவர் சக்தி சிங் கூறுகிறார். ஆளுநரின் நடவடிக்கையை பா.ஜ.க ஒரு தலைபட்சமானது என (இரட்டை வேடதாரியான) பா.ஜ.க பதில் அளித்துள்ளது.

குறைவான தூக்கம் உடலுக்கு கேடு விளைவிக்கும்! ஆய்வில் !

தூங்காதே தம்பி தூங்காதே என்ற பாட்டினை கேட்டிருப்பீர்கள்.ஆனால் தூங்கினால்தான் ஆற்றல் கிடைக்கும் என்பதையும் நாம் உணர வேண்டும். நாள் முழுவதும் உழைக்கும் நம்முடைய உடல் உறுப்புகள் ஓய்வெடுக்க தூக்கம் அவசியமாகிறது.

சில நாட்கள் தூங்காமல் இருந்தால் ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து நோய் எதிர்ப்பு தன்மையும் குறையும்..

தசைகளோட வலிமையும் குறையும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்காது. உடல் வெப்ப நிலை மாறுபடும். இது உடலுக்கு சிக்கலை உண்டாக்கும். உள்ளத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தும். தூங்காமல் இருந்தால் ரத்தத்தில் இருக்கும் மன அழுத்தத்திற்கு காரணமான கார்டிசோல் என்னும் ரசாயனத்தின் அளவு கூடுகிறது.

ஞாபக சக்தி குறைவு, வேலைகளில் தவறுகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் உண்டாகும். உடலையும் மனசையும் சேர்த்து பாதிக்கும் ஆற்றல் தூக்கமின்மைக்கு உண்டு . எளவே தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி ஓய்வு எடுப்பது நல்லது என்கிறது ஆய்வு.

** அதற்காக 24 மணி நேர்முமல்ல, ஒரு நாளைக்கு 8 மணி நேரம் முழுமையாக தூங்கினால் போதுமானது. **

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏத்த படம்! விஜய் !!

வேலாயுதம்" படம் பற்றியும், இசை வெளியீட்டு விழா குறித்தும், ரசிகர்களுக்கு விஜய் அளித்து பேட்டியில் கூறியிருப்பதாவது, நான் ரொம்ப நாளாக எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிற படம் "வேலாயுதம்". இப்படத்தை ரசிகர்களை கொண்டுதான் ஆரம்பித்தோம்.

அதுபோல் ஆடியோ ரிலீசையும் ரசிகர்கள் முன்னிலையில் நடத்த விரும்பினோம். அதற்காக நானும் தயாரிப்பாளர், டைரக்டர் ராஜா எல்லாரும் யோசித்தோம். ரசிகர்கள் மத்தியில் என்கிறபோது சரியான இடம் தேவை. எனக்கு எல்லாமே ரசிகர்களாகிய நீங்கள் தான். என் எல்லா காரியங்களிலும் நீங்கள் தான் கூட இருக்க வேண்டும். உங்கள் முன்னாடி தான் வேலாயுதம் ஆடியோ ரிலீஸ் நடக்க வேண்டும். அப்படி யோசித்த போதுதான் வேலாயுதம் ஆடியோவை மதுரையில் ரிலீஸ் செய்ய முடிவு செய்தோம். நாளை 28ம் தேதி இந்த நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

இந்த படத்தைபற்றி கேட்டால், எல்லா நடிகர்களுக்கும் சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் நடிக்க வேண்டும் என்று ஒரு கட்டத்தில் ஆசைப்படுவார்கள். அப்படி எனக்கும் ஆசை இருந்தது. அப்படிப்பட்ட ஒரு படம் தான் வேலாயுதம். ரசிகர்கள் எதிர்பார்க்கிற எல்லாமும் இந்தபடத்தில் இருக்கு.படத்தில் ஹீரோ செய்யும் ஒவ்வொரு செயலும் ரொம்பவும் லாஜிக்காக இருக்கும். வேலாயுதம் படத்தின் கதை பற்றி ராஜா சொல்ல வந்தபோது, படத்தின் கதைகேட்டு மிகவும் பிடித்து போனது. மேலும் படத்தில் அவர் சொன்ன கதை வலிமையாக இருந்ததால், உடன் நடிக்க ஒப்புக் கொண்டேன். படமும் ரொம்ப அழகாக வந்திருக்கிறது.

படத்தில் முக்கியமான விஷயம் ரயில் சண்டைக்காட்சி. இப்படிபட்ட சண்டைக்காட்சியில் நடிக்க ரொம்ப நாளா ஆசை. ஆனால் அதுவும் லாஜிக்காக இருக்க வேண்டும். இந்த ரயில் சண்டைக்காட்சிக்காக ஹாலிவுட் ஃபைட் மாஸ்டர் டாம்டேல்மரை வரவழைத்து சண்டைக்காட்சியை படமாக்கினோம். அதுஒரு புதிய அனுபவமாக இருந்தது. ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். அடுத்தது படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை பற்றி சொல்ல வேண்டும். விஜய் ஆண்டனியை பற்றி எல்லோருக்கும் தெரியும். எங்களோட காம்பினேஷன் எப்படி இருந்தது என்று வேட்டைக்காரன் படத்திலேயே தெரியும். அதேபோல் வேலாயுதமும், வேட்டைக்காரனை காட்டிலும் பலமடங்கு வெற்றி பெறும். அவரிடம் எனக்கு பிடித்தது என்ன தெரியுமா...? படத்தில் ஐந்தாறு பாட்டு இருந்தாலும், எல்லாவற்றிலும் மெலடி மிஸ் ஆகாது. குத்துப்பாட்டு, நாட்டுப்புறப்பாட்டு, வெஸ்டர்ன் என எல்லாவற்றிலும் சுகமான அந்த இனிமை ஏதாவது இருக்கும். அதுதான் நீண்டகாலம் நிலைக்கும் என்கிற எண்ணம் அவருக்கு உண்டு.

ரசிகர்களிடம் உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், படத்தின் ஆடியோ வெளிவரும் முன்னே, இணையதளங்களில் வெளிவரலாம். தயவு செய்து யாரும் திருட்டி வி.சி.டி-யை ஆதரிக்க வேண்டாம். இது என்னுடைய படத்திற்கு மட்டுமல்ல, மற்ற எல்லா தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், நடிகர்கள் படத்துக்கும் தான்., மொத்தத்தில் "வேலாயுதம்" படம் ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை குறைக்காது, கண்டிப்பாக அனைவரும் ரசிக்கும் படியாக இருக்கும்.

செப்டம்பர் 9 வேலூர் சிறை சாலை ! ரத்தாகுமா !?

புதுடெல்லி : முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 பேருக்கு வருகிற செப்டம்பர் 9-ஆம் தேதி தண்டனை நிறைவேற்றப்படும் என வேலூர் சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இவ்வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரரறிவாளன் ஆகியோரின் தண்டனை அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி அதிகாலையில் நிறைவேற்றப்படும். இவ்விபரத்தை தண்டனைப் பெற்றோரிடம் அறிவித்துவிட்டதாக சிறை சூப்பிரண்ட் ஆர்.அறிவுடை தம்பி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் படுகொலைவழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 3 பேரின் கருணை மனுவை குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் இம்மாதம் 11-ஆம் தேதி தள்ளுபடிச் செய்திருந்தார். இதுத்தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைத்துள்ளதாக சூப்பிரண்ட் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தூக்கிலிடுவதற்கான உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த முதல் கட்ட நடவடிக்கையாக சிறை அதிகாரிகள் தண்டனை விதிக்கப்பட்டோர் மீது ப்ளாக் வாரண்ட் உடனடியாக பிறப்பிப்பார்கள். மூவருக்கும் சிறையில் நடமாடுவது தடை விதிக்கப்பட்டுள்ளது. கருணை மனு சமர்ப்பித்து 11 ஆண்டுகளுக்கு பிறகு அதனை நிராகரித்த குடியரசு தலைவரின் நடவடிக்கைக்கு எதிராக தண்டனை விதிக்கப்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுவார்கள் என கருதப்படுகிறது.

1991-ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் வேளையில் ராஜீவ் காந்தியை உடலில் கட்டிய குண்டுடன் வந்த இளம்பெண் அதனை வெடிக்கச்செய்து கொலைச் செய்தார். மேலும் 14 பேரும் இக்குண்டுவெடிப்பில் கொலைச் செய்யப்பட்டனர். தமீழீழ விடுதலை புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவத்தினருக்கு உதவுவதற்காக படையை அனுப்பிய இந்தியாவின் நடவடிக்கைக்கு பழிவாங்கும் விதமாக ராஜீவ் படுகொலை நிகழ்த்தப்பட்டதாக கருதப்படுகிறது.

முருகன், சாந்தன், பேரரறிவாளன் ஆகியோர் உள்பட குற்றஞ்சாட்டப்பட்ட 26 பேரையும் தூக்கிலிட சிறப்பு நீதிமன்றம் 1998-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், 1999-ஆம் ஆண்டு இவர்களில் நான்குபேரின் மரணத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிச்செய்தது.

நான்காவது நபரான நளினியின் மரணத்தண்டனையை பின்னர் நீதிமன்றம் விலக்கியது. சிறையில் வைத்து முருகனை திருமணம் புரிந்து தாயான இவருடைய மனுவை பரிசீலித்து மரணத் தண்டனையை ஆயுள் தண்டனையாக நீதிமன்றம் குறைத்தது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களில் இருவர் இலங்கையைச் சார்ந்தவர்கள் ஆவர். பேரரறிவாளன் இந்தியாவைச் சார்ந்தவர். இதற்கிடையே, பல்வேறு தமிழக அரசியல் கட்சிகள் மரணத்தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று பாராளுமன்றத்தில் இந்த கோரிக்கையை எழுப்பினார். மரணத்தண்டனையிலிருந்து 3 பேரை விடுவிக்க சோனியா காந்தி உடனடியாக தலையிடவேண்டும் என தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

** இந்திய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு இவ்விடயத்தில் தெரிந்து விடும், வெறும் ஓட்டு பொரிக்கிகளா அல்லது உண்மையானவர்களா? சிந்திக்கட்டும்.

Friday, August 26, 2011

அவசர நிலை பிரகடனம் அமெரிக்காவில்!?

வாஷிங்டன், ஆக. 26 அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள தென்மேற்கு அட்லாண்டிக் கடலில் உள்ள பகாமாஸ் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளது. தற்போது அது கடும் புயலாக மாறியுள்ளது. அதற்கு “இரேனி” என பெயரிட்டுள்ளனர்.

அந்த புயல் நாளை (சனிக்கிழமை) வடக்கு கரோலினாவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது வாஷிங்டன் மற்றும் நியூயார்க் பகுதியில் பலத்த காற்றுடன், மழை கொட்டும் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கடும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாஷிங்டன் நகரில் சுமார் 56 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு குடிபெயரும்படி டுவிட்டர் இணையதளம் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், பொது மக்களின் பாதுகாப்புக்காக அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

வாஷிங்டனின் அருகே விர்ஜீனியா, மேரிலேண்ட் நகரங்கள் உள்ளன. இங்கும் புயல் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, அங்கும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

வாஷிங்டனில், கடந்த செவ்வாய்க்கிழமை 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள 126 பள்ளிகள் மூடப்பட்டன. நேற்றுதான் மீண்டும் திறக்கப்பட்டன.

இதயத்தை காப்போமா...! எப்படி?

1. மீன் தவிர அத்தனை அசைவ உணவுகளையும் தவிர்த்தல் நல்லது.

2. ஒரு முட்டையில் 210 மி.கி கொலஸ்ட்ரால் இருக்கின்ற காரணத்தினால் அது கூடவே கூடாது.

3. பேக்கிங் பவுடர் சேர்த்துச் செய்தவை, நெய், வெண்ணெய், சீஸ், தேங்காய், காபி, டீ, உருளைக்கிழங்கு சிப்ஸ், டின்னில் அடைச்ச உணவுகள், தக்காளி சாஸ் கெட்ச்சப், ப்ரோஸன் உணவுகள் – அதாவது உறைநிலை உணவுகள், அஜினோமோட்டோ இந்த எதுவும் வேண்டாம்.

4. ஊறுகாயும் அப்பளமும் இருந்தால் போதும், வேற எதுவும் வேணாம் என்று கூறுபவர்கள் பலர். இந்த இரண்டையும் போல ஆபத்தானது வேற இல்லை. காரணம் அதில் சேர்க்கப்படும் உப்பு.

சாப்பிடக்கூடிய உணவுகள்:
1. கீரை, முழு தானியங்கள், காய்கறிகள்.

2. அசைவத்தில் மீன் மட்டும்.(மீனில் இருக்கும் ஒமோக 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்கு நல்லது)

3. ஓட்ஸ், பூண்டு, சின்ன வெங்காயம்.

4. தினசரி சமைக்கும் போது சாதாரண புளிக்குப் பதிலா கொடம்புளி உபயோகிக்கலாம். ரத்தத்தில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதயத்தைப் பாதுகாத்து உடல் எடையையும் குறைக்கும்.

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் இல்லை என்கிறது! விஞ்ஞானம்?

லண்டன்: குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற கருத்து நிலவுகிறது. தற்போது எலி போன்ற விலங்கினத்தில் இருந்து தோன்றியதாக தெரிய வந்துள்ளது.

பாலூட்டி ஆன அந்த விலங்கினத்தின் பெயர் ஜுராமயா சினென்சிஸ். இவை “டயனோசரஸ்” வாழ்ந்த காலத்தில் வடகிழக்கு சீனாவில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இவற்றின் புதை படிவங்கள் சீனாவின் லியானிஸ் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

ஜுராமையா என்ற விலங்கினம் எலி போன்ற வடிவமைப்பு கொண்டது. இது மற்ற பாலூட்டிகளிடம் இருந்து வித்தியாசமாக உள்ளது. உடல் முழுவதும் முடிகளை கொண்டதாக இருந்திருக்கவேண்டும் என கருதப்படுகிறது. மரத்தில் ஏறக்கூடிய தகுதி பெற்று இருந்த அந்த விலங்கினம் புதர்களிலும் வாழ்த்திருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இன (ஈழ) கொலைகாரனுக்கு நெருக்கடிகள் தருமா யு எஸ் !?

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் சம்பந்தமாக ஐ.நா.சபை நடத்தவிருக்கும் கூட்டத்தை முன்னிட்டு, அடுத்த வாரம் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்கத்தூதர் ராபர்ட் பிளேக் இலங்கைக்கு வரவிருப்பதாகவும், அப்போது அவர் அரசு உயர் அதிகாரிகளிடம் பேசவிருப்பதாகவும் இலங்கையைச் சேர்ந்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இலங்கைப் போரின் போது நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் பற்றியும் பேச அமெரிக்க தூதர் ராபர்ட் இலங்கை வருவது இரண்டாவது முறை என்றும் அந்த இலங்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, வரும் செப்டம்பர் மாதம் நடககவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகவுன்சில் மாநாட்டில் பங்கேற்பதை இலங்கை தவிர்த்து வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

** வெறும் பார்வையாளராக செல்லாமல், இம்முறையாவது இக்கொலைகாரனுக்கு வல்லசுகள் நெருக்கடிகளை கொடுத்து தண்டிக்க வேண்டும்.,நம்புவோம். **

Thursday, August 25, 2011

அடங்கா பிடாரியை அடக்குவோம் ஆட்சிக்கு வந்ததும் அழகிரி!!

திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அட்டாக் பாண்டியை மு.க.அழகிரி இன்று (25.08.2011) சந்தித்துப் பேசினார்.

பின்னர் வெளியே வந்த மு.க.அழகிரியிடம், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கைது செய்யப்பட்டுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர்,

ஜெயலலிதா அரசின் 100 நாள் சாதனையில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆட்சிக்கு வந்ததும் இவருக்கு சரியான பாடம் புகட்டுவோம்., இது திமுகவினர் மீது பழிவாங்கும் நடவடிக்கை. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த நடவடிக்கை தொடரும். பொய் வழங்கு போடும் அதிகாரிகளை நாங்கள் கைது செய்வோம். பொய் வழக்கு போடும் அதிகாரிகள் மீது நாங்களும் வழக்குப் போட்டு கைது செய்வோம் என்றார்.

உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாக டானிக்!

உங்களுக்கு நீச்சல் தெரியுமா? என்று கேட்டால், நம்மில் பலர் தேமே என்று விழிப்பார்கள். கிராமப்புற மக்களின் வாழ்வியலோடு ஒன்றாக கலந்துவிட்ட நீச்சல், நகர்புறங்களில் நீச்சல் குளம் கொண்ட மிகப்பெரிய பங்களாக்கள், பண்ணை வீடுகளில் வசிக்கும் மேல் தட்டு மக்களுக்கு உரிய ஒன்றாகத்தான் இருந்து வருகிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், தண்ணீரில் அடிக்கடி நீந்துவதன் மூலம் மருத்துவ ரீதியான பல்வேறு பலன்களையும் நாம் பெறலாம். அவை...

* முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது நீச்சல்.

* இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் நீச்சல் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும்.

* நீச்சலின்போது நீரானது உடலுக்கு தேவையான இயற்கை தடுப்பு ஆற்றலாகப் பயன்படுகிறது.

* உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன.

* மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற உள்ளக் கோளாறுகள் நீங்குகின்றன. நீந்தும்போது மனச் சிதறல் நீங்கி, மனம் ஒருநிலை அடைகிறது.

* உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.

* கை, கால், தொடைப் பகுதி தசைகள் அதிக சக்தி பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்குகிறது.

* தொடர்ச்சியான இடுப்பு வலி உள்ளவர்களுக்கு அது குறைவதுடன், முதுகெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுகின்றன.

* கழுத்து வலி, தோள்பட்டை வலி போன்றவை நீங்குகிறது.

* செரிமான சக்தியைத் தூண்டுகிறது. அஜீரணக் கோளாறைப் போக்குகிறது. நன்கு பசியைத் தூண்டச் செய்கிறது. மலச்சிக்கல் பிரச்சினையும் நீங்குகிறது.

* மிக முக்கியமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு நீச்சல் அருமருந்தாகும். அதனால் நீங்களும் உடலுக்கும், உள்ளத்திற்கும் பயன்தரும் நீச்சல் பயிற்சியை இன்றே கற்று ஆரோக்கியமான வாழ்க்கை வாழப் பழகுங்கள்.

Wednesday, August 24, 2011

எத்தனை உயிரினங்கள் இவ்வுலகில் !?

லண்டன், ஆக 24:கனடாவில் உள்ள பல்ஹவுசி பல்கலைக்கழக விஞ்ஞானி போரிஸ்வோர்ம் தலைமையிலான குழுவினர் உலகில் வாழும் உயிரினங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.


படம் : காட்டெருமையை முழுங்கிய மலை பாம்பு
அதை தொடர்ந்து 87 லட்சத்து 40 ஆயிரம் உயிரினங்கள் உலகில் வாழ்ந்து வருகின்றன என தெரிவித்துள்ளனர். தற்போது 23 சதவித உயிரினங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 14 சதவிதம் உயிரினங்கள் நிலத்திலும், 9 சதவீதம் கடலிலும் வாழ்கின்றன.

அதன் மூலம் இதுவரை 10 லட்சத்து 30 ஆயிரம் உயிரினங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. இன்னும் 90 சதவித உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

பெரும் தலைகள் இணையும் விஜய்யின் புதுப்படம்

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக, "மதராசபட்டினம்" புகழ் எமி ஜாக்சன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலாயுதம், நண்பன் படத்தை தொடர்ந்து விஜய், அடுத்து கவுதம் மேனன் படத்தில் நடிக்கிறார். இந்தபடத்திற்கு "யோஹன் அத்தியாயம் ஒன்று" என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் சூட்டிங் 2012ம் ஆண்டு துவங்க இருக்கிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில், கதாநாயகியாக நடிக்க வைப்பதற்கு, மதராசபட்டினம் படத்தில் நடித்த எமி ஜாக்சனை நடிக்க வைக்க இயக்குநர் தரப்பு முடிவு செய்திருக்கிறதாம். தற்போது எமி ஜாக்சன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஹிந்தி ரீ-மேக்கில் நடித்து வருகிறார். இந்தபடத்தை முடித்தை பின்னர் விஜய் படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

சி டி யை கண்டு பயப்படும் கள்ளச்சாமியார்!

சென்னை: சங்கர்ராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் நீதிபதியுடன் ஜெயேந்திரர் தொலைபேசியில் பேசுவது போன்ற ஆடியோ சிடி வெளியாகியுள்ளது.

நீதிபதிக்கு பணம் கொடுத்து வழக்கிலிருந்து தப்பிக்க ஜெயேந்திரர் முயல்வதாக இந்த சிடி உரையாடல் மூலம் தெரிய வருவதாகவும், இதனால் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நீதிபதி ராமசாமி விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் இந்த விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுந்தர்ராஜன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ஜெயந்திரர், அவரது பெண் உதவியாளர், 2 இடைத்தரகர்கள் மற்றும் நீதிபதி ஆகியோர் பேசிக்கொள்ளும் உரையாடல் அடங்கிய சி.டி. வெளியாகி உள்ளது. இதை ஒரு தமிழ்த் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

அந்த சி.டி.யில் சங்கரராமன் கொலை குறித்தும், பணம் பட்டு வாடா குறித்தும் பேசுவது போன்று உரையாடல் உள்ளது. இந்தக் கொலை வழக்கிலிருந்து விடுதலையாக ஏதோ ‘டீல்’ நடந்துள்ளதாகத் தெரிகிறது.

அதில் பேசும் பெண் குரலுக்குச் சொந்தக்காரர் கெளரி என்பவர் ஆவார். இவர் ஜெயேந்திரரின் உதவியாளர் என்று அந்தத் தொலைக்காட்சி கூறியுள்ளது.

இந்த சி.டி. உண்மையானதா, உண்மை என்றால் பேசியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

அதுவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெறும் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீது வார இறுதியில் விசாரணை நடக்கும் என்று தெரிகிறது. இதன்மூலம் புதிய பிரச்சனையில் சிக்கியுள்ளார் ஜெயேந்திரர்.

இந்தக் கொலை வழக்கில் ஜெயேந்திரரைக் கைது செய்தவர் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாதான் என்பது குறிப்பிடத்தக்கது. இடையில் திமுக ஆட்சியின்போது இந்த வழக்கின் சாட்சிகள் அடுத்தடுத்து ஜெயேந்திரருக்கு ஆதரவாக பல்டியடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

**ஆன்மிக போர்வையில் ஒளிந்து கொண்டு இருக்கும் இக்கள்ளச்சாமியாரை கலை எடுப்பார்களா ஹிந்துத்துவவாதிகள்!?

Tuesday, August 23, 2011

இந்திய கார்கள் என்றால் அலறும் அமெரிக்கர்கள்

ஹூஸ்டன் : பெரும்பான்மையான அமெரிக்கர்கள், இந்தியா மற்றும் சீன கார் தயாரிப்பு நிறுவனங்களின் கார்களை வாங்க விரும்பவில்லை என, சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சீனாவின் பி.ஒய்.டி., செரி மற்றும் இந்தியாவின் மகிந்திரா போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள், விரைவில் அமெரிக்காவில் தங்கள் தொழிற்சாலைகளைத் துவக்க இருப்பதாகக் கூறி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் "ஜி,எப்.கே., ஆட்டோமோடிவ்' குழுமம், கார்கள் பற்றி மக்களிடையே பரவியுள்ள விழிப்புணர்வு குறித்து, ஓர் ஆய்வு நடத்தியது. அதில், 95 சதவீதம் பேர் அமெரிக்க கார் நிறுவனத் தயாரிப்புகளையும், 76 சதவீதம் பேர் ஜெர்மனி கார்களையும், 75 சதவீதம் பேர் ஜப்பான் கார்களையும், 49 சதவீதம் பேர் கொரிய கார்களையும் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், 38 சதவீதம் பேர் சீன கார்களையும், 30 சதவீதம் பேர் இந்திய கார்களையும் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் சீன, இந்திய கார் தயாரிப்பு நிறுவனங்கள், அமெரிக்க மக்களிடம் நம்பகத் தன்மை பெறுவதற்கு, கடும் சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என, அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

அறப்போராட்டம் என்ற பெயரில் சாராய பார்ட்டி?

புதுடெல்லி:வலுவான லோக்பால் சட்டத்தை வலியுறுத்தி அறப்போராட்டம் நடந்து வரும் ராம்லீலா மைதானத்தில் நேற்றிரவு சுமார் 30 பேர் அநாகரீகமாக நடந்து கொண்டனர். ராம்லீலா மைதானத்தில் தாராளமாக சாப்பாடும் சாராயமும் விநியோகித்தனர்., இதில் மப்பு ஏறிய சிலர் ரகளையில் ஈடுபட்டனர்.

நிருபர்கள் தங்கி இருந்த கூடாரத்துக்குள் நுழைந்த அவர் மோதலில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் வரவழைக்கப்பட்டு அவரை வெளியேற்றினார்கள். சுமார் 1 1/2 மணி நேரம் கழித்து அந்த வாலிபருடன் சுமார் 30 பேர் வந்தனர். அவர்கள் அனைவரும் நிற்க முடியாத அளவுக்கு மது போதை மயக்கத்தில் இருந்தனர். எங்களை பேட்டி காணுங்கள் என்று கூறி பிடிவாதம் பிடித்தனர்.மீண்டும் போலீசார் வரவழைக்கப்பட்டு 30 பேரும் அகற்றப்பட்டனர்.

இதையடுத்து 30 பேரும் ராம்லீலா மைதானத்துக்குள் பயங்கர ரகளையில் ஈடுபட்டனர். தடுப்புக் கட்டைகளை உடைத்தனர். இதனால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக மைதானத்தில் இருந்து வெளியேற்றினார்கள்., சாப்பாட்டுக்கும் சாராயத்துக்கும் கூடி கூத்தடிக்கும் ராம்லீலா மைதானம்.

Monday, August 22, 2011

அதிக வைட்டமின்களும் அதிக ஊட்ட சத்துக்களும் உள்ளது முட்டையில்

தேர்வுல `முட்டை' வாங்குன அனுபவம் உங்களுக்கு இருக்கா? நான் ரொம்ப சமத்துப்பா! எல்லாத்துலேயும் நூத்துக்கு நூறு வாங்கலாம்னு பார்ப்பேன். ஆனா, முடியாது. அதுக்காக முட்டையெல்லாம் வாங்க மாட்டேன். இன்னைக்கு நாம பார்க்கப்போறது தேர்வுல வாங்குற முட்டை இல்ல, சாப்பிடுற கோழி முட்டையில என்னென்ன சத்துகள் இருக்குதுன்னு தான் பார்க்கப் போறோம்.

அதிக அளவுல புரதம் மற்றும் கொழுப்பைக் கொண்டது முட்டை. இதன் வெள்ளைக்கரு 17கலோரியும், மஞ்சள்கரு 59 கலோரியும் கொண்டது. சமைக்கும் முறையைப் பொறுத்து, கலோரிகளின் அளவு மாறுபடும். உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் (ஏ, பி, சி, டி, இ) இதுல இருக்குது.

அதுமட்டுமல்ல, தைராய்டு ஹார்மோன் சுரக்குறதுக்குத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளோட ஆரோக்கியத்துக்கு தேவைப்படுற பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில உண்டு. காயங்களைக் குணமாக்குறதுக்கும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும் தேவைப்படுற துத்தநாகம் என்னும் தாதும் இதுல இருக்குது.

மற்ற அசைவ உணவுகளோட ஒப்பிடும்போது, செலவு குறைவு; சீக்கிரத்துல சமைக்க முடியும் போன்ற காரணங்களும் முட்டையை அதிகமானவங்க விரும்புறதுக்கு காரணமா அமையுது.

சர்வாதிகாரியாக நடந்து கொள்ளும் ஜெயா! ஸ்டாலின் காட்டம் !?

தஞ்சாவூர் திலகர் திடலில் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி தலைமையில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மு.க.ஸ்டாலின்,

தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. பொய் புகார் அளிப்பவர்கள் மீது உச்சநீதிமனறம் வரை சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கல்வியில் வேறுபாடு இருக்கக் கூடாது என்ற காரணத்தினால் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வியை ஜெயலலிதா அரசு ஏற்க மறுத்து அவசர சட்டம் கொண்டு வந்து ரத்து செய்தார். இந்த வழக்கில் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் சிறப்பான தீர்ப்பு வழங்கியதால், தமிழக மக்கள் வெற்றி அடைந்துள்ளனர்.

சமச்சீர் கல்வி வழக்கில் வழங்கப்பட்டதுபோல் புதிய தலைமைச் செயலக வழக்கிலும் எதிரான தீர்ப்பு வந்திடுமோ என்ற அச்சம் காரணமாகவே அதில் புதிய மருத்துவமனை செயல்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். சமச்சீர் கல்வி திட்டத்தில் ஜெயலலிதா செய்தது தவறு என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்களோ, ஏன் தலைமைச் செயலகமாக பயன்படுத்தவில்லை என்று சொன்னாலும் கூட வேறு ஏதாவது அரசு பணிகளுக்கு பயன்படுத்தலாம் என்று கேட்டுவிடுவார்களோ என்ற அச்சம், பயம் இன்றைக்கு ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அவசர அவசரமாக புதிய மருத்துவமனை செயல்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை வருவதிலே நாங்கள் எதிர்க்கிறோம் என்று யாரும் கருத வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அதற்கு ஏற்ற இடமா அது. மருத்துவ கல்லூரி, மருத்துவமனை என்றால் வெறும் நாடகமா. நீதிமன்றத்தை ஏமாற்றுகிற திட்டமா. இவர் அகங்காரத்தை ஒதிக்கி தள்ளவேண்டும்., இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருட்டு வி சி டி யை தடுக்க புதிய ஏற்பாடு

ஒரு படம் ரிலீசாவதற்கு முன்பே, அந்தபடம் திருட்டு வி.சி.டி.,யாகவும், ஆன்லைனிலும் ஒளிப்பரப்பாகி விடுகிறது. இதனை தடுக்க திரைத்துறையினரும், அரசும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில் இதனை தடுக்கும் பொருட்டு புதிய தொழில்நுட்பம் ஒன்றை புகுத்தியுள்ளது, பி.வாசு இயக்கத்தில், ஆர்.கே., நடித்து, விரைவில் வெளிவர இருக்கும் புலிவேஷம் படக்குழு.

படத்தில் ரூ.10லட்சம் செலவில் டிஜிட்டல் பாதுகாப்பு செய்துள்ளார் நடிகர் ஆர்.கே., இதன்படி படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், ஹீரோவின் அங்க அடையாளங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, ஒரு மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. எங்காவது ஆன்லைனில் இந்தபடத்தை டவுன்லோடு செய்தாலோ அல்லது அப்படியே திரையில் பார்த்தாலோ, அடுத்த 15நிமிடங்களில் புலிவேஷம் திருட்டு வி.சி.டி., கண்காணிப்பு குழுவுக்கு தெரிந்துவிடும். இந்த வகையில் திருட்டு விசிடி பார்ப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை சர்வதேச நிறுவனம் ஒன்று செய்து தருகிறது. மேலும் ஆன்லைன் தவிர்த்து, திருட்டு டி.வி.டியாக விற்பவர்களைக் கண்டுபிடிக்க தனி டீம் ஒன்றையும் உருவாக்கியுள்ளனர்.

இதுகுறித்து படத்தின் நாயகன் ஆர்.கே., கூறுகையில், ஆன்லைன் மூலம் திருட்டுதனமாக படம்பார்ப்பவர்களும், அதன்மூலம் திருட்டு டி.வி.டி., தயாரிப்பதை கண்டுபிடிக்கவும் புதிய தொழில்நுட்பத்தை, புலிவேஷம் படத்தில் புகுத்தியுள்ளனர். இதன்மூலம் எங்காவது இப்படத்தை டவுன்லோடு செய்தாலோ, பார்த்தாலோ உடன் எங்களுக்கு தெரிந்துவிடும். உடனே சம்மந்தப்பட்ட அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்ததொழில் நுட்பத்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். இந்தியாவிலேயே இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது இதுதான் முதல்முறை. புலிவேசம் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் திரைக்கு வர இருக்கிறது.

Sunday, August 21, 2011

செல்போன் மூலம் சேவை வங்கிகளில்

கோயம்பேடு : கரூர் வைஸ்யா வங்கியில் இருந்து மற்ற வங்கிகளுக்கு, பண பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து வங்கி சேவைகளையும், மொபைல்போன் மூலம் செயல்படுத்தும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது'' என, கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராமன் பேசினார்.

கரூர் வைஸ்யா வங்கியில் ஆண்டுக்கணக்கில் வாடிக்கையாளராக இருந்து வரும் மர வியாபாரிகளின் சந்திப்பு நிகழ்ச்சி, நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து மரங்களை இறக்குமதி செய்து வியாபாரம் செய்யும் அதிபர்கள், மொத்த மர வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் உள்ளிட்ட பலதரப்பிலும் இருந்தும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். குறிப்பாக வங்கி சேவையில் மர வியாபாரிகளின் எதிர்பார்ப்புகளையும், அவர்களது கோரிக்கைகளையும் அலசும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராமன் பேசியதாவது; எங்களது வங்கியின் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களாக நீங்கள் இருப்பது சிறப்பு. உங்களது வளர்ச்சியில் வங்கியின் பங்கு உள்ளது. இதே போல, எங்களது வளர்ச்சியில் உங்களது பங்கும் உள்ளது. மர வியாபாரிகளுடான சந்திப்பு நான்கு வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இனி, ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும்.மர வியாபாரிகளின் மூலம் மொத்தத்தில் 600 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு சென்னை மர வியாபாரிகளின் பங்கு உள்ளது. இந்த வகையில், உங்களை 40 ஆண்டுகளாக தக்க வைத்திருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.

மொத்தம் 372 வங்கி கிளைகள் உள்ள நிலையில், மேலும் 70 கிளைகள் திறக்கவுள்ளோம். வங்கியின் மொபைல்போன் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான விருது, சிறந்த வங்கிக்கான விருது என இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளோம். கரூர் வைஸ்யா வங்கியில் இருந்து மற்ற வங்கிகளுக்கு பண பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து வங்கி சேவைகளையும் மொபைல்போன் மூலம் செயல்படுத்தும் திட்டம் சோதனை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு வெங்கட்ராமன் பேசினார்.

வங்கியின் பொது மேலாளர் சுகுமார், துணை பொது மேலாளர் பாலாஜி, சென்னை மண்டல துணை பொது மேலாளர் சங்கரவடிவேல், சென்னை மண்டல உதவி பொது மேலாளர் ராமலிங்கம் உள்ளிட்டோர் வங்கியின் வளர்ச்சி குறித்தும், அதில் மர வியாபாரிகளின் பங்கு குறித்தும் பேசினர். இறுதியாக மர வியாபாரிகளுடன் வங்கி நிர்வாகத்தினர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதற்கான தீர்வுகளையும் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராமன் விளக்கினார்.

அமெரிக்க சந்தையில் அதிக வரவேற்பு இந்திய மாம்பலத்திற்கு

வாஷிங்டன் : சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட அல்பான்சோ மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட சவுசா உள்ளிட்ட ரக மாம்பழங்களுக்கு அமெரிக்க சந்தையில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

மாம்பழ பிரியர்களிடம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே மாம்பழம் ஏற்றுமதி செய்வதில் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அல்பான்சோ ரக மாம்பழங்களே அதிக விலை உயர்ந்த மாம்பழ ரகமாக அமெரிக்காவில் கருதப்பட்டு வருகிறது. 9 முதல் 12 மாம்பழங்கள் கொண்ட 3 கிலோ மாம்பழத்தின் விலை 40 முதல் 80 டாலர்களாகும்.

Saturday, August 20, 2011

இந்திய வீடுகளில் கொடுமைக்கு ஆளாகும் பெண்கள்

புதுடெல்லி : இந்தியாவில் 35 சதவீத பெண்கள் உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ கொடுமைகளை அனுபவிப்பதாக மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் கிருஷ்ணா தீரத் தெரிவித்துள்ளார்.

2005-2006 ஆண்டில் தேசிய குடும்ப நல சர்வேயில் இவ்விஷயம் தெரியவந்ததாக அவர் மக்களவையில் தெரிவித்தார். திருமணமான 40 சதவீதமான பெண்களும் கொடுமைக்கு ஆளாகிறார்கள். 6.7 சதவீதம் பெண்கள் உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் கொடுமைகளை அனுபவிக்கின்றனர்.

குடும்பக்கட்டுப்பாடு செய்த பின்பும் கர்ப்பம் தரித்த 531 பெண்கள்!!

புவனேஷ்வர் : ஒரிஸ்ஸா மாநிலத்தில் குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் குழந்தை பிறப்பதற்கு தடை ஏற்படுத்தும் அறுவை சிகிட்சை செய்துக் கொண்ட 531 பெண்கள் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளனர்.

சட்ட சபையில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் சுகாதாரத்துறை குடும்பநல அமைச்சர் பிரசன்னா ஆச்சார்யா இதனை தெரிவித்தார்., ஆனால் அறுவை சிகிட்சை செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அரசு தீர்மானித்துள்ளது என அவர் தெரிவித்தார்.

2006-11 காலக்கட்டத்தில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிட்சை செய்துக் கொண்டனர். இவர்களில் 531 பேர் மீண்டும் கர்ப்பம் தரித்தனர் எனவும், 236 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Friday, August 19, 2011

தனது துணை பற்றி கூறும் தமன்னா

நான் இன்னும் குட்டிப் பொண்ணுதான். 3 வருஷம் கழித்துதான் கல்யாணம் பற்றி யோசிப்பேன் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.

வேலூரில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை தமன்னா, ரசிகர்களின் கூட்டத்தை பார்த்து பிரமித்து விட்டாராம். ரசிகர்களிடம் இருந்து பாதுகாப்பாக கடைக்குள் சென்ற அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், எனக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த அளவுக்கு ரசிகர்கள் என் மீது அன்பு காட்டுகிறார்களே. அவர்கள் அன்பைப் பார்த்து நெகிழ்ந்து போனேன்.

நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. தற்போது தெலுங்கில் 3 படங்களில் நடித்து வருகிறேன். நான் இன்னும் குட்டிப் பொண்ணுதான். அதனால் 3 ஆண்டுகள் கழித்து தான் திருமணம் பற்றி யோசிப்பேன், என்றார்.

ஈடு இணை இல்லா செயல் புரியும் வாழை !

வாரம் ஒரு நாள் முழுவதும் வாழைப்பழங்களாகவே உண்டு வேறு எந்த உணவுகளையும் பானங்களும் அருந்தாமல் உபவாசம் போல் இருக்கலாம். 

நம் உடலில் சேர்ந்துவிடும் அமிலங்களை அழித்து வெளியேற்றுவதில் வாழைப்பழம் ஈடு இணைஇல்லாமல் செயல் புரிகிறது, இதர உணவுகளுடன் உண்ணப்படும் வாழைப்பழம் முழுமையாக செயல்பட இயலுவதில்லை.

ஒருநாள் முழுவதும் வாழைப்பழம் மட்டும் உண்டால், மிக விரைவில் ரத்தம் சுத்த மடையும் இதேபோல், சாத்துக்குடி மட்டும் ஒருநாள் முழுவதும், ஆரஞ்சுப் பழம் மட்டுமே உண்டாலும் இதே பலன் கிடைக்கும். பழங்கள் எதுவானாலும் பழங்களுடன் தண்ணீர் அல்லது வேறு உணவுகளை உண்ணுதல் கூடாது.

பழம் சாப்பிடுவதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்னாலும், 30 நிமிடங்களுக்குப் பின்னாலும் தண்ணீர் போன்றவை அருந்தலாம். எந்த வகை பழமானாலும் அதனுடன் வேறு பானங்களோ தண்ணீரோ சேர்ப்பதினால் பழங்களின் தன்மை கெட்டு விடுகிறது. அதனால் பழங்களின் பயன்களை நாம் அடைய முடியாது. தனியாக பழங்களை மட்டுமே உண்டால் முழுப்பயனும் கிடைக்கும்.

45 வயதை தாண்டியவர்களுக்கு

45வயதுக்கு மேற்பட்டவர்கள் தமது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், நோய்களின்றி வாழவும், எஞ்சிய காலத்தில் மற்றவர்களின் தயவின்றி சுதந்திரமாக உலா வரவும், அருகில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்று உடல் பயிற்சிகளில் ஈடுபட வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு புதிய ஆய்வறிக்கை ஒன்றில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுமையை அடைகின்ற போது இயலாமை மற்றும் நோய் வாய்ப்படல் என்பன பொதுவான அம்சங்கள்.

இவற்றின் காரணமாக முதுமையில் மனிதனின் சுதந்திரமும் அற்றுப் போகின்றது என்று ஆரோக்கிய உடற்பயிற்சி மற்றும் முதுமை ஆய்வு கூடம் என்ற அமைப்பின் ஆய்வாளர் கெரத் ஜோன்ஸ் கூறுகின்றார்.

போதிய உடல் ஆரோக்கியமின்மையே இதற்குக் காரணம். உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் இதுபோன்ற பல பிரச்சினைகளைத் தடுக்கலாம் என்றும் அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

45 வயதுக்குப் பின் முறையான உடற் பயிற்சிகள் மூலம் முதுமையில் ஏற்படும் பல பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ள முடியும் என்பது இவரின் யோசனையாகும்.

Thursday, August 18, 2011

வைரஸ் கிருமிகள் ஏற்படுத்தும் ரத்த மன அழுத்தம்

பெய்ஜிங்: மன அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றால் ரத்த அழுத்தம் நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது. தற்போது அந்த நோய்க்கு பொதுவான வைரஸ் கிருமிகளே காரணம் என தெரிய வந்துள்ளது.

சீனா தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சாயோயங் இருதய நோய் ஆஸ்பத்திரியின் டாக்டர் யங் தலைமையிலான குழுவினர் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மனித உடலில் உள்ள சைடோமெகலோ என்ற வகை வைரஸ் கிருமிகளுக்கும், உயர் ரத்த அழுத்த நோய்க்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வைரஸ் கிருமிகள் தாக்குதலினால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதை கண்டுபிடிப்பது சிரமம். ஏனெனில் அதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியாது. இந்த வைரஸ் கிருமிகளை தெளிவாக கண்டுபிடிப்பதன் மூலம் அதற்கான மருந்து மாத்திரைகளை கண்டுபிடிக்க முடியும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ரத்த அழுத்த நோயை மிக எளிதாக குணப்படுத்த முடியும் என்றும் கூறி உள்ளனர்.

போலி ஆவணங்களால் ஏமாற்றப்பட்ட வடிவேல் !?

சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பழனியப்பன், நடிகர் வடிவேலு மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.

தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் ஏலத்தில் விட்ட நிலத்தை ரூ. 20 லட்சத்துக்கு வாங்கியதாகவும், அதை போலி ஆவணங்கள் தயாரித்து நடிகர் சிங்கமுத்து மூலம் வடிவேலுக்கு விற்கப்பட்டு இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வடிவேலுவும், சிங்கமுத்துவும் போலி ஆவணங்கள் மூலம் ஏமாற்றப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. போலி தஸ்தாவேஜுகளை காட்டி நிலத்தை அவர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் : வடிவேலு வாங்கிய சர்ச்சைக்குரிய நிலம் டி.கே.ராமச்சந்திரன் உள்ளிட்ட 5 பேருக்கு உரிமையானது. இவர்கள் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி முதலீட்டு கழகத்திடம் ரூ. 8 லட்சம் கடன் வாங்கினர். அதற்கு பதிலாக இந்த நிலத்தை அடமானம் வைத்தனர். ஆனால் அதற்கு வட்டி செலுத்தவில்லை.

இதையடுத்து நிலத்தை டிக் நிறுவனம் ஏலத்துக்கு கொண்டு வந்தது. ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பழனியப்பன் அதை ஏலத்தில் வாங்கியுள்ளார்.

இதற்கிடையில் நிலத்தை அடமானம் வைத்தவர்கள் சிங்கமுத்துக்கு நிலத்துக்கான அதிகார பத்திரத்தை எழுதி கொடுத்துள்ளனர்.

2000-ம் ஆண்டில் இதனை எழுதி வாங்கியுள்ளார். பின்னர் 2002-ல் அதனை வடிவேலுக்கு சிங்கமுத்து விற்றுள்ளார். போலி ஆவணங்கள் மூலம் இருவரும் ஏமாந்துள்ளனர்.

வடிவேலு, சிங்கமுத்துவை ஏமாற்றிய 5 பேரும் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு நிலத்தில் உரிமை இல்லை. பழனியப்பனுக்கு தான் நிலம் சொந்தம்’’ என்று தெரிவித்துள்ளனர்.


குஜராத் கேடிக்கு செக் வைத்த காங்கிரஸ் !!

அஹ்மதாபாத் : ஊழலை விசாரிக்கும் லோகாயுக்தா என்றாலே மோடி மிரளுவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. நரேந்திரமோடியின் (நர மாமிச கேடி) ஆட்சியில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த உடனடியாக லோகாயுக்தாவை கொண்டுவரவேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுத்தொடர்பாக குஜராத் மாநில சட்டமன்ற எதிர்கட்சியான காங்கிரஸின் தலைவர் ஷாக்தீன்கோஹ்லி கூறியிருப்பதாவது:குஜராத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக மாநிலத்தில் லோகாயுக்தா அமைப்பை கொண்டுவர காங்கிரஸ் கட்சிதான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்து , குஜராத் மாநிலத்திற்கு லோகாயுக்தா அமைப்பை கொண்டுவர வலியுறுத்தி மனு கொடுத்தோம். அதனை ந‌ரேந்திர மோடி திட்டமிட்டு லோகாயுக்தாவை வரவிடாமல் தடுத்துவிட்டார்.

ஆனால் முதல்வர் நரேந்திரமோடி அதனை தடுக்கும் முயற்சியில் உள்ளார். அவர் லோகாயுக்தா என்றாலே மிரளுகிறார். லோகாயுக்தா சட்டத்தின் படி ஐகோர்ட் நீதிபதி பரிந்துரையில் பேரில் நீதிபதி ஆர்.ஏ. மெகதா என்பவரை லோகாயுக்தா நீதிபதியாக நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. முதல்வர் நரேந்திர மோடி அதனை தடுத்துவிட்டார். இந்நிலையில் முதல்வர் நரேந்திரமோடி காங்கிரஸ் கட்சியினர் மீதான ஊழல்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி எம்.பி.ஷா தலைமையிலான விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டுள்ளது வேடிக்கையானது என்றார்.

** மனித கரி (நர மாமிச) உண்ணும் தெரு பொருக்கி இஸ்ரேலின் உளவாளி இவனை கழுவில் ஏற்றி கொன்றாலும் தீராது. **

Wednesday, August 17, 2011

சீனாவுக்கு அடுத்து இந்திய மாணவர்கள் வருகை அதிகரிப்பு!

வாஷிங்டன் : அமெரிக்காவில் பல்வேறு பிரிவு பட்டப்படிப்புகளுக்கு படிப்பதற்காக வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தகவல்வெளியிட்டுள்ளது. எனினும் சீனா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

அமெரிக்காவில் சி.ஜி.எஸ் எனப்படும் பட்டப்படிப்பு தொடர்பான கல்லூரிக்கு இந்தியா மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. இந்நிலையில் சி.ஜி.எஸ். பட்டப்படிப்பு கல்வி நிறுவனத்தின் தலைவர் திப்ரா டபிள்யூ. ஸ்டீவார்ட் கூறுகையில், சி.ஜி.எஸ். பட்டப்படிப்பு கல்லூரிக்கு சர்‌வதேச நாடுகளிலிருந்து மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா, சீனா, தென்கொரியா நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர். கடந்த 2006-ம் ஆண்டிலிருந்து இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கடந்த 20010-2011-ம் ஆண்டுகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை 11 சதவீதமாக உள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் கணக்கிடும் போது 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனினும் சீன மாணவர்கள் எண்ணிக்கை 23 சதவீதமாக உள்ளது. இவர்‌கள் தான் தொடர்ந்து முதலிடம் வகிக்கி்ன்றனர். இந்த கல்லூரியில் வர்த்தகம், மேலான்மை படிப்புகளை தான் மாணவர்கள் விரும்பி தேர்வு செய்கின்றனர். வர்த்தகம் (பிஸினஸ்) ‌தொடர்பான படிப்புகளை 16 சதவீத மாணவர்களும், புவி அறிவியல் (ஈர்த் சயின்ஸ்) தொடர்பான படிப்புகளை 15 சதவீத மாணவர்களும், சமூக அறிவியில் (சோஸியல் சைன்ஸ்) படிப்புகளை 3 சதவீத மாணவர்களும் தேர்வு செய்து படிக்கின்றனர் என்றார்.

வம்பு மட்டுமல்ல இல்லறமும் பேசும் பெண்கள்!

லண்டன்: மற்றவர்கள் குறித்து ஊர் வம்பு பேசுவது பெண்களின் பிறவிக் குணம். அது எந்த காலத்திலும் மாறாது. சமீபத்தில் இது குறித்த ஆய்வு இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்டது. அதில், நாள் ஒன்றுக்கு 298 நிமிடங்கள் அதாவது 5 மணி நேரம் பிறரை குறித்து பெண்கள் ஊர்வம்பு பேசுவது தெரிய வந்தது.

குழந்தைகள் பற்றியும், கடைகள், உபயோகிக்கும் சோப்புகள், மற்றும் “செக்ஸ், இல்லறம், போன்ற பிரச்சினைகள் குறித்தும் பெண்கள் பேசுகின்றனர். அதே நேரத்தில் தங்களின் உடல் எடை, உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் உடை விவகாரங்கள் குறித்து மட் டும் 24 நிமிடங்கள் விவாதிக்கின்றனராம்.

ஆய்வு மேற்கொண்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் தங்களின் சாப்பாட்டு விஷயம் குறித்தே முக்கியமாக பேசுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் சிலரோ, தங்களின் உடல் அழகை அறுவை சிகிச்சை மூலம் சீரமைப்பது எப்படி என்பது குறித்து விவாதிக்கின்றனர்.

பொதுவாக தங்களின் தோழிகள், கணவன்மார்கள் மற்றும் தாயாருடன் பேசி வம்பு அளக்கின்றனர். இவர்களில் தோழிகளுடன் தான் அதிக ஊர்வம்பு பேசுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

** நம் ஊர் பெண்களே கொஞ்சம் தேவலை என்ன சரியா **

மாரடைப்பை தடுக்கும்(மெல்லோட்டம்)

மெல்லோட்டம் என்பது விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்துக்கும் இடைப்பட்ட சீரான தன்மை கொண்ட ஓட்டமாகும். இதை ஆங்கிலத்தில் ஜாக்கிங் (Jogging) என்பார்கள்.

உடலுக்கு ஏற்ற சீரிய உடற்பயிற்சிகளில் இதுவும் ஒன்று. இந்தப்பயிற்சியும் மாரடைப்பைத் தடுக்க உதவியாக இருக்கிறது. மேலை நாடுகளில் உள்ள பெரும்பான்மையான மருத்துவர்கள் தங்களை மாரடைப்பில் இருந்து காத்துக்கொள்ள தினமும் மெல்லோட்டத்தை மேற்கொள்கிறார்கள்.

மெல்லோட்டத்தின் பயன்கள் : இதயமானது சுருங்கும்போது உடலின் பல பகுதிகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவானது சாதாரண நிலையைவிட மெல்லோட்டத்தின்போது அதிகமாகிறது.

இதய ரத்தக் குழாய்களையும், ரத்தக் குழாய்களைச் சுற்றியுள்ள அமைப்புகளையும் வலுவாக்குகிறது., ரத்தக் குழாய்களின் உள்பகுதிகளில் ஏற்படும் சிதைவு மாற்றங்களைத் தடுக்கிறது., ரத்தமிகு அழுத்த நிலையைக் குறைக்கத் துணைபுரிகிறது.

இதயத் தமனிகளில் ஓடும் ரத்தத்தின் அளவானது அதிகமாவதால், இதயத் தமனிகளில் ரத்தம் உறைவதை தடுத்து மாரடைப்பு ஏற்படாமல் காக்கிறது.

ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலையும், டிரை கிளிசரைடையும் குறைக்க உதவுவதால், மாரடைப்புக்கான வாய்ப்பு குறைகிறது.

Tuesday, August 16, 2011

அத்வானி கைது அமெரிக்காவில்? ஒரு வருட சிறை !?

நியூயார்க் : உயரே பறந்து கொண்டிருந்த விமானத்தில் பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக அமெரிக்கவாழ் இந்தியர் கைதுசெய்யப்பட்டார்.

அவருக்கு ஒரு ஆண்டு சிறையும், 10 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் அத்வானி (65) ஹாங்காங் நகரிலிருந்து, அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள நியூவார்க் நோக்கி வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தனது பக்கவாட்டு இருக்கையில் ஒரு பெண் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ரமேஷ் அத்வானி முறை தவறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் அப்பெண்ணிடம் சிலுமிஷ வேலைகளிலும் இறங்கினார். ஒரு கட்டத்தில் வரம்பு மீறி போகவே, பெண் சக பயணிகளிடம் புகார் கூறினார்.இதைத்தொடர்ந்து அத்வானி மீது சக பயணிகள் தர்ம அடி கொடுத்தனர். இது தொடர்பாக அமெரிக்காவின் நியூவார்க் மாவட்டகோர்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கினை விசாரித்த நீதிபதி ரமேஷ் அத்வானிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் டாலர் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவர் கடந்த மே மாதம் இதே போன்று ஹாங்காங்க் நகரிலிருந்து நியூவார்க் நகரில் லிபர்டி விமான நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த கான்டினட்டல் விமானத்தில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கூறப்பட்டது. அப்போது இவர் கோர்டால் எச்சரித்துவிடப்பட்டார்.

கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் பரிசோதித்து கொள்ள வேண்டிய ஒன்று?

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் எச்.ஐ.வி., பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் "நம் நலம், நம் கையில்' என்ற தலைப்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நாட்டுப்புற கலைநிகழ்ச்சி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் மீனா பிரியாதர்ஷினி துவக்கி வைத்தார். நெகமம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் பூங்கொடி வரவேற்றார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையத்தின் திட்ட அலுவலர் முகமதுஅலி பேசியதாவது: மாவட்டம் முழுவதும் 50 நாட்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. கடந்த மாதம் 28ம் தேதி விழிப்புணர்வு பிரசாரம் துவங்கப்பட்டு, பெரியநாயக்கன்பாளையம், அன்னூர், கோவில்பாளையம், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு பகுதிகளில் நிறைவடைந்துள்ளது.

பொள்ளாச்சியில் வரும் 21ம் தேதி வரையிலும் வடக்கு, தெற்கு, ஆனைமலை ஒன்றியங்களில் மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடக்கவுள்ளது. பாதுகாப்பற்ற முறையில் பலருடன் உடலுறவு கொள்வதாலும், பரிசோதிக்கப்படாத எச்.ஐ.வி., கிருமி உள்ள ரத்தம் பெறுவதாலும், சுத்திகரிக்கப்படாத ஊசிகளை பயன்படுத்துவதாலும் எய்ட்ஸ் பரவுகிறது. கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் எச்.ஐ.வி., பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

எச்.ஐ.வி., தொற்றுள்ளோருடன் விளையாடுவதாலும், அவர்களின் இருமல் தும்மல் மூலமும், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மூலமும், கொசுக்கடிகள் மூலமும் எய்ட்ஸ் பரவாது. அதனால், எச்.ஐ.வி., பாதிக்கப்பட்டோரை ஒதுக்கி துன்புறுத்த வேண் டாம். அவர்களை அரவணைத்து ஆறுதலாக இருக்க வேண்டும். பாதுகாப்பான உடலுறவு முறைகளை கையாண்டால் எய்ட்ஸ் பரவுவதை தவிர்க்க முடியும் என்றார்.

Monday, August 15, 2011

கூல் வாட்டர் குடிப்பவர்களே, கவனியுங்கள்! டாக்டர் எச்சரிக்கை!!

இப்போதெல்லாம், நகர்புறங்களில் `பிரிட்ஜ்’ பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதனால், குளிர்ச்சியான தண்ணீர் குடிப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துவிட்டது. காலை உணவானாலும் சரி, இரவு உணவானாலும் சரி இந்த குளிர்ச்சியான தண்ணீர்தான் பலரது தாகத்தை தணிக்கிறது.

இது மிகவும் ஆபத்தான செயல் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள். அவர்கள் தரும் விளக்கம் இதுதான்… `சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது.

இதனால், சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம்’ என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்.

இதய நோயாளிகள் சாப்பிடும்போது கூல் வாட்டரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். டாக்டர்களின் இந்த எச்சரிக்கை உண்மைதானா? என்பதை நீங்களே ஆய்வு செய்து நிரூபித்துக் கொள்ளலாம். நீங்கள் அடிக்கடி அல்வா சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், அதில் சிறு பகுதியை எடுத்து அப்படியே பிரிட்ஜில் வைத்து விடுங்கள்.

சில மணி நேரம் கழித்து அதை எடுத்துப் பாருங்கள். அல்வா கெட்டியாகி இருக்கும். ஏற்கனவே அதில் இருந்த எண்ணெய்ப் பசை சுத்தமாக காணாமல் போய் இருப்பது போன்று தோன்றும். ஆனால், அந்த எண்ணெய் அல்வாவில் அப்படியே ஆங்காங்கே படிந்து திண்ணமாக வெள்ளை நிறத்தில் மாறியிருக்கும்.

உங்கள் விரலை அதில் வைத்தால் உடனே அது உருகிவிடும். சாப்பிட்டு முடித்ததும், நம் உடலுக்குள் ஐஸ் வாட்டர் சென்றால், எண்ணெய்த் துகள்கள் இதுபோன்றுதான் மாறி சிக்கலை ஏற்படுத்தி விடுகின்றன. இனி… கூல் வாட்டரை கண்டபடி பயன்படுத்தமாட்டீங்கதானே…?

* சரி அடிக்கிற வெயில்லே ரொம்ப தாகம் இருக்கு கொஞ்சம் கூல் வாட்டர் கொடுங்களேன்.

தினம் விலை உயரும் ஏரிவாயுக்கு பதிலாக இயற்கை எரிவாயு இறக்குமதி

புதுடெல்லி : டாடா மோட்டார்ஸ் மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனங்கள் பெட்ரோனெட் நிறுவனத்துடன் இணைந்து வாகனத்துக்கான திரவ இயற்கை எரிவாயு பயன்பாட்டை அறிமுகப்படுத்த உள்ளன.

இந்தியாவின் பெட்ரோனெட் எல்.என்.ஜி. லிமிடெட் (பி.எல்.எல்.) நிறுவனம்தான், வெளிநாடுகளில் இருந்து அதிகளவில், திரவ இயற்கை எரிவாயுவை (எல்.என்.ஜி) இறக்குமதி செய்து வருகிறது. வாகனங்களுக்கு மாற்று எரிபொருளாக இயற்கை எரிவாயு பயன்பாட்டை அறிமுகப்படுத்த பெட்ரோனெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நாட்டில் தற்போது வாகனங்களில் சி.என்.ஜி. எனப்படும் அடர்த்தியான இயற்கை எரிவாயு, எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.இதற்கு மாற்றாகவே, திரவ இயற்கை எரிவாயுவை அறிமுகப்படுத்த மேற்கண்ட இரண்டு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன. இது சிக்கனமானதும், மிகவும் பாதுகாப்பானதும் ஆகும்.

திரவ இயற்கை எரிவாயு திட்டத்தை பெட்ரோனெட் எல்.என்.ஜி. நிறுவனத்தின் கூட்டு முயற்சியுடன், டாடா, அசோக் லேலண்ட் நிறுவனங்கள் விரைவில் செயல்படுத்த உள்ளன.

இதுபற்றி, பெட்ரோனெட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஏ.கே. பலியான் கூறியதாவது : திரவ இயற்கை எரிவாயுவை சில்லறையில் நேரடியாக பயன்படுத்திக் கொள்வதை தற்போதைய தொழில்நுட்பம் சுலபமாக்கி இருக்கிறது. திரவ இயற்கை எரிவாயு சில்லறை பயன்பாட்டை குஜராத் மாநிலத் தில் சோதனை ரீதியில் செயல்படுத்த டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட் ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான, முயற்சியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கான ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படும்.

இந்த ஆண்டுக்குள் சோதனை ரீதியில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துவிடும். திரவ இயற்கை எரிவாயுக்கான கருவிகளை வாங்க, இந்த கருவிகளை தயாரிக்கும் அமெரிக்காவின் “சார்ட்” என்ற நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தமிழகத்தை அச்சத்துக்குள்ளாகிய காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிப்பு

வாஷிங்டன் : சிக்குன்-குனியா காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்தை, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடும் காய்ச்சலோடு மூட்டு வலியை ஏற்படுத்தும் சிக்குன்-குனியா நோய், சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தைப் பாதித்தது.

இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. தற்போது, அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சிக்குன்-குனியாவை தடுக்க வழி செய்யும் மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட சிக்குன்-குனியா வைரசைக் கொண்டு இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து, பரிசோதனை ரீதியாக எலிக்கு பயன்படுத்தப்பட்டு, அதில் வெற்றி காணப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த மருந்துக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

"மனிதர்களுக்கு இந்த மருந்து எந்த விதத்தில் வேலை செய்கிறது என்பது உள்ளிட்ட சோதனைகள் முடிந்த பின், இதற்கு அனுமதி கிடைக்கும். இந்த தடுப்பூசி தயாரிப்பு செலவும் குறைவு தான்' என, டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி ஸ்கேட் வீவர் தெரிவித்துள்ளார்.

Sunday, August 14, 2011

ராகு காலம் பார்க்கும் ராங்கி நாயகி !

65வது சுதந்திர தின விழா நாளை கொண் டாடப்படுகிறது. சுதந்திர மற்றும் குடியரசு தினத்தில் காலை 8 மணி முதல் 8.30 மணிக்குள் அரசு அலுவலகம், பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றப்படும். ஆனால், இந்தாண்டு தமிழகத்தில் காலை 9.30 மணிக்கு கொடியேற்றப்படும் என ஜெயா அரசு திடீரென அறிவித்துள்ளது.

திங்கட்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலம் என்பதால், கொடியேற்றும் நேரம் மாற்றப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது.

அதிமுக அரசு பொறுப்பேற்று முதல் சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. இதனால் ராகு காலத்தில் கொடியேற்றாமல், நல்ல நேரத்தில் கொடியேற்ற அரசு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்ற னர்.

முன்னதாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு அலுவலகங்களுக்கு அனுப்பிய அழைப்பிதழில் 15ம் தேதி காலை 8.30 மணிக்கு சுதந்திர தின விழாவில் கலெக்டர் கொடி ஏற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அழைப்பிதழ்கள் தற் போது திரும்ப பெறப்பட்டு, 15ம் தேதி 9.30 மணிக்கு சுதந்திர தின விழாக்கள் நடைபெறும் என புதிய அழைப்பிதழ் அரசு அலு வலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

** கொடியேற்ற நேரம் பார்க்கும் இவா (பார்ப்பனீயம்) நாடு எங்க விளங்கபோகுது.? **

Saturday, August 13, 2011

நன்மை பயக்கும் நடைப்பயிற்சி ...

நடைப்பயிற்சி ஓர் அற்புதமான பயிற்சியாகும். இது இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள தீய கொழுப்புச் சத்தின் (Low-density lipoprotein – LDL) அளவைக் குறைத்து, நரம்புகளுக்குப் புத்துணர்வு தந்து, எலும்புகளையும் உறுதியாக்குகிறது.

எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும், உடலுக்கு வலுவான கட்டமைப்பு அளித்து ஆரோக்கியமானதாக இருக்க விரும்புபவர்களுக்கும் நடைப் பயிற்சி ஓர் எளிய உடற்பயிற்சியாக உள்ளது.

வேகமாக நடத்தல் எனும் பயிற்சியை மேற்கொள்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் இதர இதயநோய்களின் தாக்குதல்கள் இப்பயிற்சியை மேற்கொள்ளாதவர்களோடு ஒப்பிடுகையில் பாதிக்கும் மேலாக குறைவாக உள்ளது என்று சமீபத்திய ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

நீங்கள் வேலைக்கு செல்லும் பயணத்தில் அதிகமாக நடக்க முனையுங்கள், இரயிலுக்கோ பேருந்துக்கோ நடந்து செல்லுங்கள் , உங்கள் வாகனங்களை அலுவலகத்திலிருந்து சற்று தொலைவில் நிறுத்தி வைத்து நடந்து செல்லுங்கள். கடைகளுக்கு நடந்து செல்லுங்கள்., நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் தூய்மையான காற்று வீசும் பகுதிகளில் நீண்ட நடை பயணம் சென்று மகிழுங்கள்.

1. நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கிப் பார்த்தவராக (தரையை பார்க்காமல்) இருபது அடி முன்னோக்கியவாறு நடங்கள்.

2. நெஞ்சை உயர்த்தியவாறு தோள்களைச் சாதாரணமாகவும் கைகளைத் தளர்வாகவும் வைத்திருங்கள்.

3. கைகளை முன்னும் பின்னும் ஒரே சீராக ஆட்டியவாறு (பக்கவாட்டில் ஆட்டாமல்), அதேவேளை நெஞ்சுப் பகுதியை விட உயர்த்திவிடாமல் நடந்து செல்லுங்கள். அதற்கேற்றவாறு உங்கள் கால்களும் பின் தொடரும்..

4. உங்கள் அடிவயிற்றை கெட்டியாகவும் உறுதியாகவும் வைத்த நிலையில் முதுகை சமமாக நிமிர்த்தியவாறு உடலைச் சற்றே முன்புறம் சாய்த்தவாறு நடங்கள்.

5. ஒரு நேர்கோட்டில் நடப்பதை போல் பாவனை செய்யுங்கள். அடிகளை சற்று அதிகமாக எட்டி வைத்து நடப்பதைக் கட்டுப்படுத்துங்கள். வேகமாக செல்ல வேண்டுமானால், காலடிகளை அருகருகே வைத்து விரைவாக நடங்கள்.

6. நடக்க காலை உயர்த்தும் போது உங்கள் முன்னங்கால் விரல்களால் உடலை உந்தித் தள்ளியவாறும், காலை பூமியில் வைக்கும் போது குதிகாலை பூமியில் முதலில் பதிய வைத்தவாறும் இதே சுழற்சியாக முன்னங்கால் விரல்களையும் இயற்கையான ஸ்ப்ரிங் போன்ற நரம்புகளின் உதவியால் உடலை முன்னோக்கி செலுத்துங்கள்.

7. இயல்பாக சுவாசியுங்கள். நடக்கும் போது ஆழமாக ஒரே சீரான வேகத்தில் சுவாசித்து உயிர்வளி (Oxygen) அதிகமான அளவில் உட்செலுத்திக்கொள்ளுங்கள். நடக்கும் போது வேகமாகவும் அதே நேரத்தில் மூச்சிறைக்கும் அளவிற்கு இல்லாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!