Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, July 31, 2011

தன்னை மறந்து தத்தளிக்கும் நவோமி! 17 வருட மறதி!!

இங்கிலாந்தை சேர்ந்தவர் நவோமி ஜாக்கப்ஸ் (34). இவருக்கு 11 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு ஒரு நாள் காலையில் தனது படுக்கையில் இருந்து எழுந்தார். அப்போது அவரது 17 வருட நினைவுகள் அனைத்தும் மறந்து போயின.

கடந்த 1992-ம் ஆண்டு அவர் 15 வயது சிறுமியாக இருந்த போது பள்ளியில் முழு ஆண்டு தேர்வு எழுதியது தான் நினைவுக்கு வந்தது. அவரது மகன் அம்மா என்று அழைத்ததை அவரால் எற்றுக் கொள்ள முடியவில்லை.

தன்னை ஒரு சிறுமி போன்று பாவித்தார். எனவே, அவரை டாக்டரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். ஞாபக மறதி நோய் பாதிக்கும் முன்பு அவர் மன நலம் குறித்த கல்வி படித்து வந்தார். அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மூளையில் பாதிப்பு ஏற்பட்டு இந்த ஞாபக மறதி வந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

3 ஆண்டு சிகிச்சைக்கு பிறகு தற்போது இவருக்கு ஓரளவு பழைய நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்துள்ளன. ஞாபக மறதியால் தான் பட்ட கஷ்டங்களை அவர் புத்தகமாக எழுதியுள்ளார். தனது நோய் முற்றிலும் குணமடைந்தததும் முகத்தை கண்ணாடியில் பார்த்ததாகவும் அப்போது சுருக்கமடைந்த முகத்துடன் வயதான தோற்றத்தில் தான் தெரிந்ததாகவும் கூறியுள்ளார். அப்போது மகன் தன்னை அம்மா என்று அழைத்த போதுதான் தனது நிலையை புரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு அணி தலைவனாக இருக்கலாம் அதற்காக இப்படியா!?

‘ராஞ்சி’ என்ற ஒரு ஊர் இருப்பதே, தோனி இந்தியாவின் கேப்டனான பிறகு தான் பலருக்கு தெரியும். அண்மையில் உலக கோப்பையை வென்ற கையோடு அவர் ஓய்வு எடுத்துக்கொள்ள புறப்பட்டதும் ராஞ்சிக்கு தான்.

இன்று ராஞ்சியிலிருந்து தான் அவருக்கு அதிகமான வாக்குகளும் சென்று கொண்டிருக்கின்றன. எதற்கு என்கிறீர்களா? ஐசிசியின் மக்கள் தெரிவு விருதுக்காகத்தான்.

மொத்த ஊருமே தோனிக்கு தான் வாக்கு போட்டிருக்கிறது. கடந்த வருடம் சச்சின் டெண்டுல்கர் தெரிவானார். இம்முறை எப்படியும் தோனியை ஜெயிக்க வைக்கிறோம் என்கிறார்கள் சபதம் போட்டு.

உலக கோப்பை, டுவெண்டி 20 என அடுத்தடுத்து தோனியின் தலைமைத்துவத்திலான இந்திய அணி தான் வெற்றி பெற்றிருகின்றது. இதற்கு நன்றிக்கடனாக எப்படியும் தோனியை வெற்றிபெற செய்ய வேண்டும் என்கிறார்கள்.

இம்முறை ஐசிசியின் மக்கள் தெரிவு விருதுக்காக தோனியுடன், இலங்கையின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககார, இங்கிலாந்தின் ஜோனதான் ட்ரோட், தென் ஆபிரிக்காவின் ஹசிம் அம்லா, மேற்கு இந்தியாவின் கிரிஸ் கேய்ல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

www.lgpeopleschoice.com என்ற முகவரிக்கு சென்று உங்கள் விருப்ப நாயகனை தெரிவு செய்யுங்கள். வாக்களிக்கும் இறுதி திகதி ஆகஸ்ட் 25., முடிவுகள் செப்டெம்பர் 12 ஐசிசியால் வெளியிடப்படவிருக்கிறது.

* இதற்க்கு முன்பு கங்குலியையும் இப்படித்தான் முன் நிருத்தினார்கள் பின்பு ஒரு முறை தோற்ததும் தூக்கி எரிந்தவர்கள்தான் இந்த ரசிகர்கள் உஷார் *

மெய் சிலிர்க்க வைக்கும் பொன்னீஸ்வரி !!

சோழவந்தான் : சோழவந்தானை சேர்ந்த பெற்றோரை இழந்த மாணவி பொன்னீஸ்வரி(17) கல்லூரியில் கட்டணம் செலுத்த வேலை உறுதி திட்டத்தில் வேலைக்கு செல்கிறார்.

விருதுநகர் ராஜபாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பொன்னுச்சாமியின் மகள் பொன்னீஸ்வரி. சில ஆண்டுகளுக்கு முன் தந்தையும், தாயும் இறந்தனர். பெற்றோர் இல்லாததால் மேல்நிலை கல்வியை தொடர முடியாமல் கஷ்டப்பட்டார். சோழவந்தான் அருகே தென்கரையில் பாட்டி தனலட்சுமியுடன்(64) தற்போது இவர் வசிக்கிறார்.

தனலட்சுமி, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்து அதில் கிடைத்த கூலி தொகையில் பொன்னீஸ்வரியை சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 வை முடிக்க வைத்தார். பொன்னீஸ்வரிக்கு பரவை மங்கையர்க்கரசி கல்லூரியில் பி.எஸ்.சி.,(கணிதம்)சீட் கிடைத்தது.

கல்லூரி சேர்க்கை கட்டணம், பஸ், புத்தகம், படிப்பு தொடர்பாக மூன்று ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் வரை தேவைப்படுகிறது. தனலட்சுமியிடம் அந்தளவுக்கு வசதியில்லை. இதனால் பொன்னீஸ்வரி பணம் கட்ட வழியின்றி, கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ளார். தற்போது பாட்டியுடன் பொன்னீஸ்வரியும் வேலை உறுதி திட்டத்தில் வேலைக்கு செல்கிறார். இவரின் படிப்புக்கு உதவ விரும்புவோர் மொபைல் போனில் (98659 95883) தொடர்பு கொள்ளலாம்.

Saturday, July 30, 2011

புது மண தம்பதியா நீங்கள் மேலே படியுங்கள் புரியும்!?

இப்போதெல்லாம் திருமணம் செய்து கொள்ளும் இளம் ஜோடிகள், குழந்தை பெற்றுக்கொள்வதை சிறிது காலத்திற்கு தள்ளிப்போட்டுவிடுகிறார்கள். ஒன்றிரண்டு வருடத்திற்கு வாழ்க்கையை அனுபவித்துவிட்டும், எதிர்காலத்திற்கு தேவையானதை சேர்த்துவிட்டும் குழந்தை பற்றி பார்த்துக்கொள்ளலாம் என்பது அவர்களது கணிப்பாக இருக்கிறது.

இப்படி தள்ளிப்போடுவதில் தவறில்லை. குறிப்பிட்ட வயதையும் மீறித் தள்ளிப்போடுவது குழந்தையின்மைக்கு காரணமாகிவிடலாம் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள். குழந்தையை தள்ளிப்போடுவது பற்றி யோசிப்பவர்களுக்கு டாக்டர்கள் கூறும் அறிவுரை:

முக்கியமான காரணம் என்றால் அதிகப்பட்சம் ஒரு வருடத்திற்கு மட்டும் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுங்கள். அதுவும் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் செய்ய வேண்டும். குழந்தையை தள்ளிப்போடுவதற்காக மருந்துகளையும், ஊசியினையும் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

உங்கள் கட்டுப்பாட்டையும் மீறி கர்ப்பம் தரித்துவிட்டால் கருக்கலைப்பு செய்ய வேண்டாம். அதிகப்பட்சம் 30-35 வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்வது நல்லது. இந்த வயதில்தான் பெண்களின் உடல் நிலை சீராக இருக்கும். கருமுட்டையின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும், இடுப்பு எலும்புகள் எல்லாம் நன்றாக வளைந்து கொடுத்து சுகப்பிரசவம் ஆகும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

காலம் தாழ்த்தி குழந்தை பெற்றுக்கொள்ளும்போது, அந்த குழந்தை வளர்ந்து ஆளாகும்போது, அதன் பெற்றோர் தாத்தா, பாட்டிபோல் ஆகிவிடுவார்கள். அந்த குழந்தைக்கு திருமணம் செய்து பேரன், பேத்தியை பார்ப்பது என்பது சாத்தியமற்று போகலாம். 35 அல்லது அந்த வயதுக்கு மேல் குழந்தையைப் பெற்றுக்கொள்வது, அந்த தாய்க்கும், குழந்தைக்கும் உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

சிலருக்கு குழந்தை பிறப்பதிலேயே பிரச்சினைகள் வரலாம். குழந்தை பாக்கியம் என்பது மிகப்பெரிய `கிப்ட்'. எல்லாவித வசதி வாய்ப்புகள் இருந்தும் அந்த `கிப்ட்' கிடைக்காமல் ஏங்கும் தம்பதியர் பலரை பார்க்கலாம். அதனால், குறிப்பிட்ட வயதிற்குள் குழந்தை பெற்றுக்கொள்வதுதான் ஆனந்தமான வாழ்க்கைக்கு வழிக்காட்டும்.

Friday, July 29, 2011

இரு த(ல)லை மோதுகின்றது வெற்றி யாருக்கு? நடுக்கத்தில் ரசிகர்கள்!?

ஒரே மாதத்தில் இரு இளம் முன்னணி நாயகர்களின் படம் ரிலீஸ் ஆகவிருப்பதால் எந்த படம் வெற்றி பெறும்? என்ற பட்டிமன்றத்தை கேரள ரசிகர்கள் இப்போதே நடுங்க தொடங்கி விட்டார்கள்.

ஏன் கேரள ரசிகர்கள் அஜித், விஜய் படங்களுக்கு பட்டிமன்றம் நடத்துகிறார்கள்? படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது கேரளாவில்தான். தமிழில் இந்த படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையில், கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு 3 வாரங்களுக்கு முன்னதாக மேற்படி படங்களை வெளியிட கேரள விநியோகஸ்தர்கள் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி மங்காத்தா படம் ஆகஸ்ட் 19ம்தேதியும், வேலாயுதம் படம் ஆகஸ்ட் 31ம்தேதியும் ரிலீஸ் ஆகவிருக்கிறது. அஜித் படத்தை விட விஜய் படம் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே விஜய்க்கு சிலை வைத்து கொண்டாடியது கேரள மக்கள்தான் என்பது நினைவிருக்கலாம். அதேபோல அஜித்தின் பில்லா படம் கேரளாவில் நல்ல வசூலை வாரி குவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில மங்காத்தாவும், வேலாயுதமும் ஒரே மாதத்தில் கேரள திரையரங்ககளை ஆக்கிரமிக்க இருப்பதால், யாருக்கு வெற்றி கிடைக்கும்? என்ற பட்டிமன்றத்தை கேரள ரசிகர்கள் இப்போதே நடத்தத் தொடங்கி விட்டார்கள்.

சுய நல போக்கால் போனது ஒரு உயிர் !!!

சென்னை, ஜூலை: 30 தி.மு.க.வினர் நேற்று 29 ம் தேதி நடத்திய போராட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவன் பலியானான்.

சமச்சீர் கல்வி குறித்து தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு மனு விசாரணையில் இருக்கும் நிலையில், சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தக் கோரி நேற்று (29.7.2011) போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என தி.மு.க. அழைப்பு விடுத்ததோடு, வகுப்புகளை மாணவ​மாணவியர் புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.

இந்தச் சூழ்நிலையில், திருவாரூர் மாவட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லவில்லை, 153 மாணவர்கள் மட்டுமே வகுப்புகளுக்கு சென்றனர், அவர்களும் அவர்களும் சில நொடியில் பள்ளியிலிருந்து வெளியேறினர்.

இதனையடுத்து, இவர்களில் சிலர் தங்கள் இல்லங்களுக்கு செல்வதற்காக வேளாங்கண்ணி தஞ்சாவூர் அரசுப் பேருந்தில் பயணித்ததாகவும், மஞ்சக்கொல்லை என்ற இடத்தில் திருச்சியிலிருந்து ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த லாரியின் மீது அரசுப் பேருந்து மோதி, அருகில் உள்ள சிறிய கால்வாயில் பேருந்து கவிழ்ந்ததாகவும், அதில் மாணவன் விஜய் மரணம் அடைந்தான் என்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

* தான் என்ற போக்கும் தான்தான் என்கிற அகங்காரமும் இருக்கும் வரை இவர் மாறவில்லை, மாறவும் மாட்டார்., திருந்தினால் மனிதன், திருந்தாவர் ....*

உலக அதிசயத்தில் மற்றுமோர் அதிசயம் !!

புதுடில்லி : ஆக்ராவில் அமைந்துள்ள காதல் நினைவுச் சின்னமான தாஜ்மகால், மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

தாஜ்மகாலைப் பார்க்க தினந்தோறும், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால், நுழைவுச் சீட்டு விற்பனை மூலம், தாஜ்மகால் கடந்த ஆண்டில், ரூ. 20 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இந்த வருவாய், முந்தைய ஆண்டைவிட 15 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2008-09ம் ஆண்டில் நுழைவுச் சீட்டு மூலம், ரூ. 14.36 கோடியும், 2009-10ம் ஆண்டில், ரூ. 17.24 கோடியும், 2010-11ம் ஆண்டில் ரூ.19.89 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.

இந்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில், நாடு முழுவதும் 116 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் உள்ளன. இந்த நினைவுச் சின்னங்கள் மூலம், இந்திய தொல்பொருள் துறைக்கு, கடந்த 2010-11ம் ஆண்டில் ரூ. 87 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில், டில்லியில் உள்ள குதூப் மினார் மூலம், ரூ. 10 கோடியும், ஹூமாயூன் கல்லறை மூலம் ரூ. 6.15 கோடியும், செங்கோட்டை மூலம் ரூ. 5.90 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.

Thursday, July 28, 2011

ஹெச் ஐ வி யுடன் உல்லாசம் மடக்கியது லண்டன் போலீஸ்

லண்டன் : பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டதன் மூலம் ஏழு பெண்களுக்கு எச்.ஐ.வி. கிருமியை பரப்பியதாக எழுந்த புகாரின் பேரி்ல் ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவரை இங்கிலாந்து போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த நிக்கோஸிநாடி மபான்டா (44) என்பவர் இங்கிலாந்து குடியேற்ற உரிமை பெற்று லண்டன் வந்திருந்தார். இங்கிலாந்து சில சமூகவிரோத செயல்களிலும் ஈடுபட்டார். இந்நிலையில் அவருக்கு ஏற்கனவே எச்.ஐ.வி. கிருமி தொற்றியிருப்பதை மறைந்து ஏழு பெண்களுடன் உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது. இதனை நிக்கோஸிநாடியின் செல்போனில் ,அவருடன் நெருங்கி பழகிய ஒரு பெண், அனுபபிய எஸ்.எம்.எஸ் ஒன்றில் உனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு உள்ளது. உடனடியாக பரிசோதனை செய்து கொள் என அனுப்பியதன் மூலம் தெரியவந்தது.

இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டதன் பேரில் நிக்கோஸிநாடியை போலீசார் கைது செய்து வொல்வோர்ஹாம்டன் கோர்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தண்டனை காலம் முடிந்ததும் நாட்டைவிட்டு வெளியேற்றவும் உத்தரவிட்டது. மேலும் இவருடன் உடலுறவு கொண்டதாக கூறப்படும் மற்ற பெண்‌களை கண்டுபிடிக்குமாறு போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டது.

பரதேசிக்கு ஓட்டு போட்டு பல்லித்தவர்களே படுங்கள் கஷ்டம் !?

புதுடெல்லி, ஜூலை.28 சமச்சீர் கல்வி பிரச்சினையில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இந்த கல்வியாண்டில் இருந்தே சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. சமச்சீர் கல்வியை ரத்து செய்து தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தையும் ஐகோர்ட்டு ரத்து செய்தது.

இதை எதிர்த்தும், ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. நீதிபதிகள் ஜே.எம்.பாஞ்சாலி, தீபக்வர்மா, பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் விசாரணை தொடங்கியது. முதல் 2 நாளும் தமிழக அரசின் சார்பில் வக்கீல் பி.பி.ராவ் வாதாடினார்.

இன்று 3-வது நாளாக விசாரணை நடந்தது. அப்போது மாணவர்- பெற்றோர் தரப்பில் ஆஜரான வக்கீல் அர்ஜுனாவாதாடியதாவது., சமச்சீர் கல்வியை அரசு நிறுத்தி வைத்தது தேவையற்றது. தமிழ்நாட்டில் மாணவர்களின் கல்வி கட்டி போடப்பட்டுள்ளது., அ.தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கையால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து பெற்றோர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

முந்தைய தி.மு.க. அரசு நிபுணர்களின் கருத்தை கேட்ட பிறகே சமச்சீர் கல்வியை கொண்டு வந்தது. தி.மு.க. அரசு கொண்டு வந்ததாலேயே சமச்சீர் கல்வியை நிறுத்தி வைத்துள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி கரணமாக அ.தி.மு.க. அரசு எடுத்த இந்த முடிவால் மாணவர்களின் நலன் பாதிக்கப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்கும் முன்பு நிபுணர்களின் கருத்தை அ.தி.மு.க. அரசு கேட்கவில்லை., இவ்வாறு அவர் வாதாடினார்.

*பள்ளிகள் திறந்து பல நாட்கள் ஆகியும் பாடங்கள் துவங்கவில்லை இவர் என்ன எதிர்பார்கிறார்?, சசிகலாவுடன் கோடா நாடு செல்ல வேண்டியதுதானே.

Wednesday, July 27, 2011

ஹை டெக் சாமியார் மேல் ஆசைப்படும் பாலிவுட் நடிகை !!

யோகா குரு பாபா ராம்தேவ்வை பார்க்கும் போதெல்லாம் தனக்குள் ஒரு உணர்வு ஏற்படுவதாகவும், அவர் சம்மதித்தால், அவரையே திருமணம் செய்யத் தயார் என்று கவர்ச்சி குயின் ராக்கி சவந்த் பகிரங்கமாக கூறியுள்ளார்.

பாலிவுட்டின் கவர்ச்சி குயின் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரர் நடிகை ராக்கி சவந்த். அத்துடன் பல்வேறு சர்ச்சைகளின் ராணி என்று கூட இவரை சொல்லலாம். அதிலும் தன்னுடைய ‌திருமணத்திற்காக இவர் பண்ணிய கூத்துகளை யாரும் மறந்‌திருக்க மாட்டார்கள்.

அந்தகாலத்தில் வாழ்ந்த ராஜாக்கள் தன்னுடைய மகளை திருமணம் செய்து கொடுக்க சுயம்வரம் நடத்துவார்கள். அதுபோல, இவரும் தன்னுடைய திருமணத்திற்காக சுயம்வரம் நடத்தினார். பலரும் இவரை திருமணம் செய்ய வந்தனர். கடைசியாக ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை திருமணம் செய்யப்போவதாக அறிவித்து, பின்னர் அவருடன் பழகி பார்த்ததில் தனக்கு ஒத்துவரவில்லை என்று அவருக்கும் டாட்டா காட்டினார்.

இப்போதும் தனக்கேற்ற ஆண்மகன் ஒருவரை தேடிவரும் ராக்கி சவந்த், சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், யோகா குரு பாபா ராம்தேவ்வை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறினார். எல்லோரும் அவரை பாபாவாக பார்க்கிறார்கள். ஆனால் நான் அவரை செக்ஸ் குருவாக பார்க்கிறேன். அவரை பார்க்கும் போதெல்லாம், என்னுள் ஒருவித மாற்றம் ஏற்படுகிறது. அவர் சம்மதித்தால், அவரையே நான் திருமணம் செய்வேன் என்று கூறினார்.

ராக்கி சவந்த்தின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் ‌பொதுச் செயலாளர் ராகுலை திருமணம் செய்ய ஆசை என்று கூறி சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சியின் அவசியம் (pregnancy)

கர்ப்பமாக இருக்கும் போது உங்கள் எடை அதிகரிக்கும். அதை சமாளிக்கவும், பிரசவத்தின் போது ஏற்படும் வலியை சமாளிக்கவும் உடற்பயிற்சி செய்வது அவசியம். குழந்தை பிறந்த பிறகு உங்களது பழைய உடற்கட்டை மீண்டும் பெற இந்த உடற்பயிற்சி உதவும்.

உற்சாகமான மனநிலையுடன் இருக்கவும் கர்ப்பத்தின் போது ஏற்படும் மனத்தொய்வை தவிர்க்கவும் உடற்பயிற்சி உதவும். நடப்பது, நீச்சல் மற்றும் யோகா போன்ற எளிதான, மென்மையான உடற்பயிற்சிகளை செய்யவும்.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற பெண்கள் தும்மும் போதோ, சிரிக்கும் போதோ அல்லது உடற்பயிற்சி செய்யும் போதோ சிறிய அளவில் சிறுநீர் கசிவு ஏற்படுவது சாதாரணமான ஒன்று. இடுப்பிற்கான உடற்பயிற்சிகளை கர்ப்பமாகும் முன்பே செய்யத் துவங்கி கர்ப்ப காலத்தின் போதும் தொடர்ந்து செய்து வந்தால் இதை தடுக்கலாம்.

* மேலும் சிசரினிலிருந்து தவிர்க்கலாம்., இதைப் பற்றி மேலும் அறிய உங்கள் டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள்.

கேரளத்தை தொடந்து தமிழக சினி கலைஞர்கள் பீதியில் !!

தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்துப் பிரபலமான, நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி ஆகியோருக்குச் சொந்தமான சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், கொச்சி ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், நிறுவனங்கள், அலுவலகங்கள், அவர்களுக்கு நெருங்கிய திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள் வீடுகளில், 22ம்தேதி காலை 6.30 மணிக்கு ஒரே நாளில், ஒரே நேரத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.

அப்போது கொச்சி தேவரையில் உள்ள மோகன்லாலின் வீட்டில் இரு அறைகள், பயோ மெட்ரிக் தொழில்நுட்பத்தில் பூட்டப்பட்டிருந்தன. அவற்றை மோகன்லாலோ அல்லது அவரது மனைவி சுசித்ராவோ, விரல் அடையாளம் வைத்தால்தான் திறக்க முடியும் என்பதால், அதிகாரிகள் அவ்வறைகளில் சோதனை நடத்த முடியாமல் திரும்பி விட்டனர். இதுகுறித்து, மோகன்லாலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் நேற்று கொச்சிக்கு வந்தார். அவர் வந்து விட்ட விவரம் அறிந்ததும், நேற்று மதியம் 12 மணியளவில் வருமான வரித் துறை அதிகாரிகள் நான்கு பேர் கொண்ட குழு அவரது வீட்டுக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டது.

இதற்கு முன்னர் நடத்தப்பட்ட ரெய்டில், இவ்வீட்டில் இருந்து இரு யானைத் தந்தங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்று, விசாரித்து வருகின்றனர். இது தமிழகத்தில் உள்ள சினி கலைஞர்களை பீதியடைய செய்துள்ளது.

Tuesday, July 26, 2011

பாலியலில் சிங்களத்தி சிக்கினார் கொழும்பில் ?

கொழும்பு : இலங்கையில் தலைநகர் கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத்தலங்களில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது 4 அழகிகளை பிடித்து விசாரணை நடத்தியதில அவர்கள் இலங்கையில் டி.வி. சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மிகப்பெரிய அளவிலான நெட்வொர்க் மூலம் விபச்சார தொழில் நடந்து வந்ததும், இதில் 20-க்கும் மேற்பட்ட டி.வி. நடிகைகள் ‌சம்பந்தப்படிருப்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையின் தேசிய குழந்தைகள்பாதுகாப்பு ஆணையம் நடத்திய ஆய்வில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பெண் பாலியல் தொழிலாளர்கள் இத்தகைய தொழிலில்ஈடுபட்டடிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இலங்கையில் மத்திய பகுதியான அனுராதாபுரத்தில் தான் பாலியல் தொழிலாளர்கள் அதிகம் வசிப்பதும் இவர்கள்தான் நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் உள்ள மசாஜ் கிளப்புகளில் பணியாற்றுவதுடன் விபச்சார ‌ தொழிலிலும் ஈடுபட்டது தெரியவந்துளளது.

டெஸ்ட் தோல்வியால் பின்னுக்கு தள்ளப்பட்ட இந்திய வீரர்கள் !

லண்டன், ஜூலை 26 : லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முடிவடைந்த இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட இந்திய வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் பின் தங்கினர்.

ஐசிசி டெஸ்ட் ரேங்கிங் படி, சச்சின் டெண்டுல்கர் இரண்டு இடங்கள் பின் தங்கி, 4வது இடத்தில் உள்ளார். 771 புள்ளிகள் பெற்ற விவிஎஸ் லட்சுமண் 7வது இடத்துக்குத் தள்ளப்பட்டார். காயம் காரணமாக இந்தத் தொடரில் விளையாட இயலாமல் போன வீரேந்திர சேவாக் 10 வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

அதேநேரம் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், முதல் போட்டியில் வலுக்கட்டாயமாக விளையாடிய ஜாஹிர் கான் அதே 5வது இடத்தில் நீடிக்கிறார். ஆனால் ஹர்பஜன் சிங் 4 இடங்கள் பின்தள்ளி ஸ்டீவர்ட் பிராடுடன் 11 வது இடத்தைப் பகிர்ந்து கொண்டார்.

பிராட் ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் முன்னேற்றம் கண்டு 5வது இடத்தைப் பிடித்தார். இவர் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்க்ஸில் 74 ரன்களும் 7 விக்கெட்களும் பெற்றதால் இந்த முன்னேற்றம்.

தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டைன் அதே முதல் இடத்தில் நீடிக்கிறார். 800 புள்ளிகளுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டாவது இடத்துக்கு முன்னேற்றம் கண்டார்., முதல் இடத்தில் உள்ள ஜாக் காலிஸ்ஸைத் தொடர்ந்து இடம்பெற்றார் இங்கிலாந்தின் ஜோனாதன் ட்ராட்.

இந்தப் போட்டியில் இரட்டை சதம் அடித்த கெவின் பீட்டர்சன் 14 இடங்கள் முன்னேறி ராகுல் டிராவிட்டுடன் 15வது இடத்தைப் பகிர்ந்து கொண்டார். ராகுல் டிராவிட் மட்டும் முதல் இன்னிங்க்ஸில் அடித்த சதத்தைத் தொடர்ந்து ஏழு இடங்கள் முன்னேற்றம் கண்டு இந்த இடத்தைப் பிடித்தார்.

பயங்கரவாதிகள் பாம்ப் தயாரித்ததற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது திக்விஜய் சிங்

புதுடெல்லி : ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் வெடிக்குண்டு தயாரிப்பதற்கு பயிற்சி அளிப்பதைக் குறித்த முக்கிய ஆதாரம் இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.

எல்.கே.அத்வானி தீவிரவாதத்தை வகுப்புவாதமயமாக மாற்றிவருகிறார் என திக்விஜய்சிங் குற்றம் சாட்டினார். மும்பை குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவ வாதிகளின் பங்கினைக் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்ற எனது அறிக்கையை சில பத்திரிகைகள் திரித்து வெளியிட்டன.

சங்க்பரிவார தீவிரவாதத்தைக் குறித்த என்னிடம் வீடியோ உள்பட முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரங்கள் உள்ளன. 2002-ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவீசியதற்கு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களை மத்திய பிரதேச போலீஸ் கைதுச்செய்தது. 2006 ஆம் ஆண்டு நந்தத்திலும், 2008 ஆம் ஆண்டு கான்பூரிலும் வெடிக்குண்டை தயாரிக்கும் வேளையில் ஏற்பட்ட விபத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் சுனில்ஜோஷிதான் மலேகான் வழக்கில் தொடர்புடையவர். அவரை அவரது அமைப்பினரே கொலைச் செய்தனர். இவ்வழக்கின் விசாரணையில் மத்தியபிரதேச அரசு(பா.ஜ.க) தலையிடுகிறது. இவ்விஷயம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் பேசினேன். பின்னர் இவ்விசாரணை என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை வகுப்புவாதமயமாக்குவதாக பா.ஜ.க தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டை திக் விஜய்சிங் மறுத்தார்.

தீவிரவாதத்தை வகுப்புவாதமயமாக மாற்றியது எல்.கே.அத்வானி போன்றவர்களாவர். நான் ராகுல்காந்தியின் ஆலோசகர் அல்ல. மத்திய பிரதேச மாநில முதல்வராக பதவி வகித்தபொழுது ஹிந்து தீவிரவாதத்தை எதிர்த்து கடுமையாக நடவடிக்கை மேற்கொண்டேன். இவ்வாறு திக்விஜய்சிங் தெரிவித்தார்.

Monday, July 25, 2011

"அரபு' லகில் அதிசயம் செய்து அசத்திய அரபி !!

துபாய், ஜூலை.25 ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த கோடீசுவரர் ஹமாத். சமீபத்தில் அவர் அபுதாபி அருகே உள்ள அல்புடய்சி என்ற தீவை விலைக்கு வாங்கினார். அதில் தனது பெயரை 3 கி.மீட்டர் நீளத்துக்கு எழுதி வைத்தார்.

தனது பெயரின் ஒவ்வொரு எழுத்தையும் சுமார் 0.5 கி.மீட்டர் நீளத்துக்கு ஆங்கில எழுத்தில் பொறித்து தரையில் பதித்து வைத்துள்ளார். அந்த எழுத்துக்களை விண்ணில் பறந்தபடியே பார்க்க முடிகிறது. இந்த எழுத்துக்கள் “பேஷ்புக்” இணைய தளத்தில் இடம்பெற்றுள்ளன. அவற்றை தண்ணீரால் அழிக்க முடியாதபடி எழுதப்பட்டுள்ளது.

சமீபத்தில், இவர் ரூ.12 கோடிக்கு உலகின் மிக விலை உயர்ந்த அதிநவீன காரை வாங்கினார். அபுதாபியில் இவருக்கு ஆட்டோமொபைல் மியூசியம் உள்ளது. அதில் கவர்ச்சிகரமான 200 வெளிநாட்டு கார்கள் உள்ளன. இவர் மிகப்பெரிய ஒரு லாரியை வடிவமைத்துள்ளார். அது அவரது மாளிகையை விட 64 மடங்கு பெரியது.

* நாமளும் முயற்சிக்கலாம் பணம்தான் இல்லை,..

ராம் தேவ் உதவியாளரை கிடுக்கு பிடி போட்ட சி பி ஐ !

புதுடில்லி : யோகா குரு ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும்படி, வெளியுறவு அமைச்சகத்திடம் சி.பி.ஐ., கோரியுள்ளது.

யோகா குரு ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணா, நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. போலி ஆவணங்களை தாக்கல் செய்து பாஸ்போர்ட் பெற்றுள்ளதாக இவர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.

இதையடுத்து, இவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்யும்படி வெளியுறவு அமைச்சகத்திடம் சி.பி.ஐ., கோரியுள்ளது. இதற்கான அறிவிப்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், நாட்டின் எல்லைப்புறங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழ கொலைகாரனுக்கு எதிராக அமோக வெற்றி, பதவி ஏற்பு புலி ஆதரவு

கிளிநொச்சி, ஜூலை. 25 இலங்கையில் நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்றன. இலங்கை முழுவதும் உள்ள 65 கவுன்சில்களுக்கு நடந்த தேர்தலில் விடுதலைப்புலிகள் ஆதரவு பெற்ற கட்சியினர் அமோக வெற்றி பெற்றனர். தமிழர் பகுதியான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மொத்தம் உள்ள 26 கவுன்சில்களில் 18 கவுன் சில்களை தமிழ் தேசிய கூட்டணி கைப்பற்றியது. இது விடுதலைப்புலிகள் ஆதரவு பெற்ற கட்சியாகும்.

இந்த நிலையில், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விடுதலைப்புலிகள் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவி ஏற்பு விழா கிளிநொச்சியில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) நடைபெற உள்ளது. அப்போது, அம்பாறை, திரிகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய மாவட்ட உள்ளாட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொள்வார்கள்.

இந்த தகவலை தமிழ் தேசிய கூட்ட மைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின், பதவி ஏற்பு விழா திரிகோண மலையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Sunday, July 24, 2011

தன்னைப்பற்றி தெரியாவிட்டாலும் தயிரய்ப்பற்றி தெரிந்து இருக்கணும்

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளன.

* கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் பிபி' யும் தயிரில் இருந்தே பெறப்படுகிறது.

* தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட விரைவில் ஜீரணமாகிவிடும்.

* பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும்.

* பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா, மனிதனின் குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

* தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவையும் உருவாக்குகிறது.

* ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்து குளித்தால் தூக்கம் நன்றாக வரும்.

* சூரிய ஒளியால் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.

* மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு தயிர் சிறந்த மருந்தும்கூட!

* அல்சர் மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் அழிக்கப்படுகிறது.

* மஞ்சள் காமாலையின்போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது நல்லது.

* சில தோல் நோய்களுக்கு மோரில் நனைந்த துணியை பாதித்த இடத்தில கட்டி வருவது நல்ல பலன் தரும். இந்த சிகிச்சையை தகுந்த சித்த மருத்துவர் உதவியுடனேயே மேற்கொள்வது நல்லது.

லாப் டாப் வாங்க போகிறீர்களா? இதோ சில டிப்ஸ் ,.

இன்றைய தொழில்நுட்ப உலகில் மடிக்கணணிகளை பயன்படுத்துபவர்கள் ஏராளம். ஏனெனில் எங்கு சென்றாலும் நாம் அதை எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும்.

நமது வேலைகளும் தடைபடாமல் இருக்கும். கடைகளிலிருந்து மடிக்கணணிகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்:

கடைக்காரரிடம் அவை Unlock செய்யப்பட்டுள்ளதா என்று முதலில் கேளுங்கள். திடமான, உறுதியான ஆனால் பாரமில்லாத மடிக்கணணிகளை தெரிவு செய்யுங்கள். கீபோர்ட்டை உபயோகித்துப் பாருங்கள்.

உங்களுக்கு அது சௌகரியமாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேசை மற்றும் உங்கள் மடி மீது வைத்து இயக்கி பரிசோதித்துப் பாருங்கள்.

Pointing Device, Track Pad போன்றவற்றையும் மாற்றீடாக உள்ள மவுசைனையும் பரிசோதித்துப் பார்க்க மறக்க வேண்டாம். Track Ball, External mouse களை நீங்கள் பயன்படுத்த முடியும்.

ஆனால் வெளியிடங்களுக்குக் கொண்டு செல்வதற்கு அது உகந்ததல்ல. மடிக்கணணி பயன்பாட்டில் இருக்கும் போது அளவுக்கதிகமாக சூடாகிறதா என்று அவதானியுங்கள்.

ஒருவேளை உங்கள் மடியில் வைத்துப் பாவிப்பதாலும் இந்தப் பிரச்சினை எழக்கூடும். Screenஇன் அளவு மற்றும் Resolution போன்றவை மீதும் கவனத்தை செலுத்துங்கள். தற்போதைய LCD Screen கள் 13 முதல் 21 இஞ்ச் அளவுகளில் கிடைக்கின்றன.

Screen Resolution மிகக் குறைந்தது 800-600 pixels முதல் 1600-1200 pixels வரை இருக்கக்கூடும். பலதரப்பட்ட Settingsகளை செய்து Screenஐப் பார்வையிடுங்கள்.

சாதாரண அறையினுடைய வெளிச்சத்தில் நன்றாகத் தெரியக்கூடிய Settings அதிக வெளிச்சம் அல்லது குறைந்த வெளிச்சத்தில் மிக மோசமாகத் தெரியக்கூடும்.

USB2 மற்றும் Firewire Connection இருக்கக்கூடிய மடிக்கணணிகளைத் தெரிவு செய்யுங்கள். இவை iPods, Digital iPods, Digital கமெராக்கள் மற்றும் சில கைத்தொலைபேசிகளை இணைக்க செய்வதற்கு பயன்படுகின்றன.

இணைய இணைப்புகளைப் பெறுவதற்கு வயர்களைப் பயன்படுத்துவதை விட Wireless Network Card பயன்படுத்தலாம். Bluetooth இணைப்பு இருப்பின் அதுவும் சிறந்தது தான். DVD Burner உள்ளதா என்பதையும் அவதானியுங்கள்.

கடுப்பாகிய சோனா ! கண்டு கொள்ளாத நமிதா ?

கவர்ச்சி நடிகை சோனா சினிமாவில் ஓரளவு சம்பாதித்த பின்னர் சொந்தமாக பிசினஸ் மற்றும் படங்களை தயாரிக்க செய்தார். ஆனால் அவர் தயாரித்த சில படங்கள் தொடர் தோல்வியை தழுவின. இதனால் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் கோ படத்தில் நடிகை நமீதா போன்ற கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார்.

இந்நிலையில் நமீதாவை போன்று நடித்ததற்காக ‌சோனா மீது நமீதா கடுப்பில் இருப்பதாக தகவல்கள் பரவியது. இதுகுறித்து கேள்விப்பட்ட சோனா, உடனடியாக நமீதாவிடம் மன்னிப்பு கேட்பதற்காக போன் செய்துள்ளார். ஆனால் அவர் ஒருதடவை கூட போனை எடுக்கவில்லை. இருந்தும் தொடர்ந்து போன் செய்துள்ளார் சோனா. கடைசி ஒருவழியாக போனை எடுத்த நமீதா கோபத்துடன் என்ன என்று கேட்டுள்ளார்.

சோனாவோ "கோ" படத்தில் நடித்தது பற்றி கூறியிருக்கிறார். நமீதாவும் சரி பரவாயில்லை ‌என்று சொன்னதுடன். இனிமேல் போன் செய்து என்னை தொந்தரவு செய்யாதே என்று கடுப்பாக சொல்லி போனை பட்டென்று வைத்துவிட்டாராம்., நமீதாவின் இந்த செயலால் அப்செட்டாகி உள்ளார் சோனா.

கலை இழந்த கட்சிக்கு காரணம் கூறும் கலைஞர் ?

கோவை : கோவையில், நடந்த தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், 2,050 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில், 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழு முடிவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

மத்திய அமைச்சரவையில் இரண்டு பதவிகள் காலியாக உள்ளன, அவை தி.மு.க.,வுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை நிரப்பும்படியும் பிரதமர் மன்மோகன் கேட்டுக்கொண்டார். ஆனால், அந்த காலியிடம் அப்படியே தான் இருக்கும். அவற்றை நிரப்ப தி.மு.க., முனையாது; ஆனாலும், கூட்டணி தொடரும். இது குறித்து, நானும், பொதுச்செயலர் அன்பழகனும், எம்.பி.,க்களிடம் பேசி எடுத்த முடிவு இது.காங்கிரஸ் கூட்டணியில் அதிருப்தி எதுவும் இல்லை. அதிருப்தி இருப்பதாக சிலர் கூட்டம் போட்டு பேசி வருகின்றனர். அவர்கள் குறித்தும் பொதுக்குழு கூட்டத்தில் பேசப்பட்டது.

ஒட்டு மொத்த சி.பி.ஐ.,யை நான் குறை கூறவில்லை. அதிலுள்ள அதிகாரிகள் சிலர், உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள் என்றுதான் குறிப்பிட்டிருந்தேன்.தி.மு.க., தலைமையை மாற்றுவது என்பது எளிதல்ல. மீடியாக்கள் தான் தி.மு.க., தலைமை எப்போது மாறும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கின்றன. தி.மு.க., தலைமை, சட்டதிட்டத்தின்படி தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்படுகிறது; இஷ்டத்துக்கு மாற்ற முடியாது. கீழ்மட்ட பொறுப்பிலும் இப்போது எந்த மாற்றமும் இருக்காது.

இந்த கூட்டத்தில் அழகிரி நேற்றும் பங்கேற்றார், இன்றும் பங்கேற்றார். அவர், கூட்டத்தை புறக்கணிப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது.தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் மற்றும் பா.ம.க., மாறி மாறி கருத்து தெரிவித்து வருவதாக கேட்கின்றனர். தேர்தல் தோல்விக்கு நானே காரணம் என்று பொதுக்குழுவில் கூட தெரிவித்துள்ளேன்.
இவ்வாறு, கருணாநிதி தெரிவித்தார்.

Saturday, July 23, 2011

கோடிகளை அள்ளி குவித்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் !!!

சென்னை: வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தாயகத்திற்கு பணம் அனுப்புவது கடந்த 7 ஆண்டுகளில் 100 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலகில், அதிக அளவில் தாயகத்திற்கு பணம் அனுப்புவோரில் இந்தியர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். உலகில், 190 நாடுகளில், 2கோடியே 70 லட்சம் இந்தியர்கள் வசிப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், பல்வேறு பணிகளில் ஈடுபட்டு, திரட்டும் வருவாயில், குறிப்பிடத்தக்க தொகையை, இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தாருக்கு அனுப்புகின்றனர். இந்தியாவில்கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் வெளிநாடுகளில்வேலை பார்த்து வருகின்றனர்.

குறிப்பாக, கேரளாவில் இருந்து பணி வாய்ப்புதேடி அரபு நாடுகளுக்கு செல்கின்றவர்கள், அதிக அளவில் தாயகத்திற்கு பணம் அனுப்புகின்றனர்.அதுபோன்று, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா,பிரான்ஸ் நாடுகளுக்கு செல்லும் பஞ்சாபியர்களும், அதிகத் தொகையை தாயகத்திற்கு அனுப்பி வருகின்றனர். இவ்வாறு உலகில் வசிக்கும் இந்தியர்கள், தாயகத்திற்கு அனுப்பும் தொகை கடந்த 8 ஆண்டுகளில் 162 சதவீதம் உயர்ந்துள்ளதாக, உலக வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2003ம் ஆண்டுவெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவிற்கு 2,100கோடி டாலர் அனுப்பி இருந்தனர். இது, சென்ற 2010ம் ஆண்டு 5,500கோடி டாலராக (2 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.உலகில், இந்தியர்களைப்போல், எந்த ஒரு வெளிநாட்டவரும், தங்கள் தாயகத்திற்கு இந்த அளவிற்கு பணம் அனுப்பியதில்லை. எனவே, வெளிநாடுகளில் வசிக்கும் அயல்நாட்டவர், தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடத்தை பிடித்துள்ளதாக, உலக வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளில் (2009ம் ஆண்டு நீங்கலாக), வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாயகத்திற்கு பணம் அனுப்புவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2004ம் ஆண்டு, வெளிநாடு வாழ்இந்தியர்கள், இந்தியாவிற்கு அனுப்பிய தொகை, 1,875கோடி டாலராக இருந்தது. இது, 2005ம் ஆண்டு 2,212கோடி டாலராகவும், 2006ம் ஆண்டு 2,833கோடி டாலர் என்ற அளவிலும்அதிகரித்துள்ளது.கடந்த 2007ம் ஆண்டு, வெளிநாடு வாழ் இந்தி யர்கள், தாயகத்திற்கு 3,721கோடி டாலர் அனுப்பியுள்ளனர். இது, 2008ம் ஆண்டு 4,994கோடி டாலராகவும், 2009ம் ஆண்டு 4,925கோடி டாலர் என்ற அளவிலும் உயர்ந்துள்ளது. 2008 ஆண்டு, உலக பொருளாதார நெருக்கடியின் எதிரொலியால், 2009ம் ஆண்டு இந்தியர்கள் அனுப்பிய தொகை சற்றே குறைந்தது.வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் பணம், அவர்களின் குடும்பத்தாருக்கு மட்டுமின்றி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மறைமுகமாக உதவுகிறது.

இந்தியாவில் ரியல் எஸ்டேட், கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில், அயல் நாட்டு இந்தியர்களின் முதலீடு குவிந்து வருகிறது.அதனால், வெளிநாடுகளில் பணியாற்றி விட்டு, இந்தியா திரும்பு வோரின் உடமைகளை பாதுகாக்கவும், ஆதரவளிக்கவும்தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டியது அவசி யம்.'இத்தகையோருக்கு வழி காட்டுவதற்காகவே உருவாக்கப்பட்டது தான், 'ரிடர்ன் டுஇந்தியா டாட் காம்' இணைய தளம்' என்கிறார் எனர்கேட்நிறுவன தலைமை செயல்அதிகாரி ரகு ராஜகோபால்.

இந்த இணையதளம், அமெரிக்காவில் இருந்து திரும்புவோரின் உடைமைகளை இந்தியாவிற்கு கொண்டு வந்துசேர்ப்பது முதல், பணிவாய்ப்பு, குடியிருப்பு உள்ளிட்ட அனைத்துவசதிகள் வரை செய்து தருகிறது.இதனால், இந்தியா திரும்புவோர், எவ்வித சிரமமுன்றி தாயகத் தில் வாழலாம் என்கிறார் ரகு ராஜகோபால்.வெளிநாடுகளில் இருந்து ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தாய்நாடு திரும்புவதாக கூறப்படுகிறது. அதே சமயம், இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் 6 முதல் 8 லட்சம்பேர் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.உலகளவில், சீனர்கள் தான் அதிக அளவில் வெளிநாடுகளில் வசிப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

சீனா, ஹாங்காங்,தைவான் ஆகிய நாடுகளைச்சேர்ந்த 3கோடியே 50 லட்சம்பேர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அதனால், வெளிநாடு வாழ் அன்னியர் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. எனினும், இந்த எண்ணிக்கையில் ஹாங்காங்,தைவான் நாடுகளைசேர்க்கக் கூடாது என்று புள்ளியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறுசேர்த்தால், இந்தியாவில் இருந்து பிரிந்த பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்த்து ஒன்றுபட்ட இந்தியாவாக கணக்கிடவேண்டும். இந்த கணக்கீட்டின் படி, அயல் நாடுகளில் வாழ்வோர் பட்டிய லில், இந்தியா முதலிடத்தை பெறும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இரண்டாவது இடத்தில் சீனாகடந்த 2010ம் ஆண்டு, தாயகத்திற்கு அதிக தொகை அனுப்பியநாட்டவரில் சீனர்கள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.வெளிநாடு வாழ்சீனர்கள், தங்கள் நாட்டிற்கு 5,100கோடி டாலர், அனுப்பி யுள்ளனர்.அடுத்த இடங்களில், மெக்சிகோ (2,260கோடி டாலர்),பிலிப்பைன்ஸ் (2,130கோடி டாலர்), பிரான்ஸ் (1,590 கோடி டாலர்) ஆகிய நாடுகள் உள்ளன.

கல்லூரிக்கு மட்டம் போட்டு காதலை வளர்க்க களம் தேடும் காதலர்கள் !

கல்லூரிக்கு மட்டம் போடும் இளம் பெண்கள், அடிக்கும் வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ளவும், தங்கள் காதலர்களுடன் மனம் விட்டு பேசவும் ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தை தேர்வு செய்து அங்கே தங்களது காதலை மற்றவர்களும் பார்க்கும் வகையில் நடத்தி வருகின்றனர்.

இதற்காக அவர்கள் குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் பிளாட்பார டிக்கெட்டுகளை வாங்கி வைத்துக்கொண்டு, பிளாட்பாரத்தில் உள்ள இருக்கைகளில் அமர்ந்துகொண்டு காதலை வளர்க்கின்றனர். சந்தேகப்பட்டு ரெயில்வே போலீசார் யாராவது அவர்களிடம் விசாரித்தால் நண்பர் ஒருவர் ரெயிலில் வருகிறார்.

அதற்காக காத்திருக்கிறோம் என்று கூறி விடுகின்றனர். அவர்கள் கையில் பிளாட்பார டிக்கெட்டுகள் இருப்பதால் மேற்கொண்டு அவர்களிடம் பேசாமல் போலீசாரும் சென்று விடுகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் காதலர்கள் ரெயில் நிலையத்திற்குள் ஆட்கள் குறைவாக இருக்கும் இடத்தை தேர்வு செய்து, மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் தங்கள் செயல்பாட்டை தொடங்கி விடுகின்றனர்.

அத்துமீறும் காதலர்களை கண்காணிக்கும் போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினாலும் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்த வண்ணமாக உள்ளன. இது குறித்து ரெயில்வே போலீசார் ஒருவர் கூறும்போது, பலதரப்பட்ட மக்கள் ரெயில் நிலையத்திற்கு வருகிறார்கள். கல்லூரி மாணவிகளும், பள்ளி மாணவிகளும் வருகிறார்கள்.

பள்ளி சீருடையில் வந்தால் நாங்களே பார்த்து எச்சரித்து அனுப்பி விடுவோம். ஆனால் வருபவர்கள் உறவினர்களா? என்பது எங்களுக்கு தெரியாது. நெருங்கி நெருங்கி பேசுவதை வைத்து சந்தேகப்பட்டு கேட்பது உண்டு. ஆனால் அப்படி எல்லோரிடமும் கேட்க முடியாது. இதெல்லாம் அவர்களாக பார்த்து திருந்த வேண்டிய விஷயம் என்றார் ஆதங்கத்துடன்.

ஆண்மை பெற ஆத்திசூடி படித்தானாம் ? ஒப்பாரி வைக்கும் பிரதமர் !?

கொழும்பு : அளவான குடும்பங்கள் பெருகி விட்டதால், சிங்கள இனம் அழியும் அபாயம் உள்ளது' என, இலங்கை பிரதமர் ஜெயரத்னே தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடந்த புத்த மதக் கூட்டத்தில் கலந்து கொண்டு, இலங்கை பிரதமர் ஜெயரத்னே பேசியதாவது: கடந்த 60ம் ஆண்டுகளிலிருந்து சிங்கள மக்கள் தொகை குறைந்து வருவதாக சர்வதேச குடும்ப கட்டுப்பாடு அறிக்கை தெரிவித்துள்ளது. 60ம் ஆண்டுகளில் ஒவ்வொரு சிங்கள பெண்ணும், மூன்று குழந்தைகளுக்கு குறைவாகவே பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விட்டது. சிங்கள குடும்பங்களில், தற்போது யாரும் தங்கள் குழந்தைகளை புத்த துறவியாக்க முன்வருவதில்லை. வயதான காலத்தில் தங்களை கவனிக்க குழந்தைகள் இல்லாமல் போகும் என்ற நிலையால், அவர்கள் புத்த துறவிகளை உருவாக்குவதில்லை. பொருளாதார நிலை காரணமாக சிங்கள குடும்பத்தினர் அளவான குழந்தைகளை பெற்றுக்கொள்கின்றனர்.

ஆனால், தமிழ் குடும்பத்தினர், ஏழு முதல் எட்டு குழந்தைகளை தற்காலத்திலும் பெற்றுக் கொள்கின்றனர். சிங்கள குடும்பத்தினர் குறைவான குழந்தைகளை பெற்றால், எதிர்காலத்தில் சிங்கள இனம் அழியும் அபாயம் உள்ளது. இவ்வாறு ஜெயரத்னே பேசினார்.

* கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன்,. மற்ற இனம் பற்றி பேச என்ன தகுதி உண்டு உமக்கு.

எவரெஸ்ட்டில் ஏறி சாதனை படைத்த இந்திய பெண்!!

பிரேமலதா அகர்வால். 45 வயதாகும் இவர், இரண்டு பெண்களுக்கு தாய். இவரது மூத்த பெண்ணுக்கு திருமணமாகி விட்டது. எப்போது வேண்டுமானாலும், பாட்டி என்ற அந்தஸ்து கிடைக்கலாம். சரி... இந்த விவரம் எல்லாம் எதற்காக என்கிறீர்களா?

இளைஞர்கள் பலர், ஏற முயன்று முடியாமல் உயிரை கொடுத்துள்ள, உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில், இந்த வருடம், மே 11ம் தேதி, ஏறி சாதனை படைத்துள்ளார். அந்த வகையில், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இந்தியாவின் வயதான பெண் என்ற சாதனையையும் பெற்றுள்ளார்.

இத்தனைக்கும் இவர் எவரெஸ்ட் சிகரம் ஏறும் போது ஏற்பட்ட சோதனைகள் ஏகப்பட்டவை. எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்காக அடிவாரத்தில் குழுமிய போது, இவரது குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள், இவரை கிண்டலும், கேலியும் செய்துள்ளனர். ஒரு சிலர், "ஏன் இந்த வீண் முயற்சி; பேசாமல் இப்படியே திரும்பி விடுங்கள்...' என்று சொல்லி, எச்சரித்துள்ளனர். ஆனால், அப்படிச் சொன்னவர்கள்தான் ஒரு கட்டத்திற்கு மேல் ஏற முடியாமல் திரும்பி விட்டனர். 23 ஆயிரம் அடிக்கு மேல் காற்று கிடையாது, செயற்கை சுவாசம்தான் துணை. இந்த செயற்கை சுவாசத்தின் துணையோடு, மேலும் 6,000 அடி ஏற வேண்டும்.

இன்னும் கொஞ்சம் உயரம் போனதும் மைனஸ், 100 - 150 டிகிரி வரை குளிர் காணப்படும். இவர் போன போது, உச்சபட்ச குளிர் நிலவியது., இன்னும் கொஞ்ச தூரத்தில் சிகரத்தை தொடப் போகிறோம் என்ற நிலையில், கையில் இருந்த கையுறை கழண்டு விழுந்து, காணாமல் போனது. எலும்பையே உருக்கும் குளிருக்கு முன், விரல்கள் எம்மாத்திரம் என்ற நிலையில், திரும்ப கையுறை கிடைக்கப் பெற்றார்.

இப்படிப்பட்ட சோதனைகளை எல்லாம் தாண்டி, எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு திரும்பி இருக்கிறார்., இவர், நாற்பது நாள், ஒட்டகத்திலேயே பாலைவனப் பயணம் மேற்கொண்டு, "லிம்கா' உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

இவரது பொழுதுபோக்கே மலை ஏறுவதுதான், எவரெஸ்ட் சிகரம் ஏற வேண்டும் என்பது இவரது கனவாக இருந்தது. அந்தக் கனவு நிறைவேற, நிறைய செலவு செய்ய வேண்டும். பின்தங்கிய ஜார்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த சாதாரண குடும்பத் தலைவியான இவருக்காக, செலவு செய்ய இப்போதுதான், டாடா ஸ்டீல் நிறுவனம் முன் வந்தது. இதையடுத்து, இப்போது அவரது கனவு நனவாகியுள்ளது., சாதனை செய்ய வயது ஒரு தடையில்லை என்று நிரூபித்துள்ள இவர், இப்போது சாதனைப் பெண் மட்டுமல்ல, எவரெஸ்ட் சிகரத்தின் சரித்திரத்திலும் இடம் பெற்ற பெண்ணாகி விட்டார்.

இமயமலையில், 29 ஆயிரத்து, 28 அடி உயரத்தில் உள்ளது எவரெஸ்ட் சிகரம். *சாதனை செய்பவர்களுக்கு மிகவும் சவாலான விஷயம், இந்த சிகரத்தை தொடுவதுதான். *இந்த சாகச பயணத்தில் இதுவரை, 216 பேர் உயிரிழந்துள்ளனர்., மே 29, 1953ல் தான், முதன் முதலாக டென்சிங் மற்றும் ஹிலாரி ஆகியோர் இந்த சிகரத்தில் ஏறி, சாதனை படைத்தனர்.

அரசியல் காமடியனுடன் ஐ எஸ் ஐ தொடர்பா ! மும்பை போலீஸ்

புதுடெல்லி : மேலை நாடுகளின் கைக்கூலியாகவும், அரசியல் கோமாளியாகவும் முன்பு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சுப்ரமணியம் சுவாமி தற்பொழுது தீவிர வலதுசாரி ஹிந்துத்துவா பயங்கரவாத ஆதரவாளராக தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஐ.எஸ்.ஐ ஏஜண்ட் என அமெரிக்காவில் எஃப்.பி.ஐ கைதுச்செய்த நபருடன் சுப்ரமணியம் சுவாமி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டது விவாதத்தை கிளப்பியுள்ளது.

கஷ்மீர் சுதந்திரத்திற்காக பாடுபட ஐ.எஸ்.ஐ அளித்த பணத்துடன் கைதுச் செய்யப்பட்டதாக கூறப்படும் டாக்டர்.குலாம் நபி ஃபாய் உடன் கஷ்மீர் தொடர்பாக ஏற்பாடுச் செய்யப்பட்ட கருத்தரங்கில் சுப்ரமணியம் சுவாமி கலந்துக்கொண்டுள்ளார்.

2003-ஆம் ஆண்டு வாஷிங்டனில் அமெரிக்க செனட் கட்டிடத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய சுப்ரமணிய சுவாமி கஷ்மீரைக் குறித்து உரை நிகழ்த்தினார். குலாம் நபி ஃபாயியின் தலைமையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கஷ்மீர் அமெரிக்க கவுன்சில்தான் கருத்தரங்கை ஏற்பாடுச்செய்தது. ஆனால் ஐ.எஸ்.ஐ ஏஜண்ட் என தெரியாமல் கருத்தரங்கில் கலந்துக் கொண்டதாக சமாளிக்கிறார் கோமாளி சுவாமி. இந்நிகழ்ச்சியைக் குறித்து இந்திய தூதரகத்தில் விசாரணைச் செய்தபோது இந்தியாவிற்கு எதிரான அமைப்பு என பதில் கிடைத்ததாகவும், ஆனால் ஐ.எஸ்.ஐ தொடர்பு கிடையாது என தெரிவித்ததாகவும் சுவாமி கூறுகிறார்.

மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷத்தை பரப்பும் வகையில் அரசியல் புகலிடம் இல்லாமல் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளிடம் தஞ்சம் அடைந்துள்ள சுப்ரமணியம் சுவாமி எழுதிய கட்டுரை பெரும் விவாதத்தை கிளப்பிய வேளையில் ஐ.எஸ்.ஐ நடத்திய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சம்பவம் வெளியாகியுள்ளது.

சுப்ரமணியம் சுவாமி முஸ்லிம்களுக்கு எதிராக துவேசமான கட்டுரையில், சில ஆண்டுகளில் தாலிபான் பாகிஸ்தானை தனது ஆளுகைக்கு கொண்டுவருமாம். பின்னர் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற முஸ்லிம்கள் முயல்வார்கள் என எழுதியுள்ளார். மேலும், இந்திய அரசியல் சட்டத்தையும், சட்டத்தையும் மீறி ஹிந்துக்கள் இதற்கு எதிராக ஒன்றிணைய முன்வர வேண்டுமாம். முஸ்லிம்களின் நோக்கம் ஹிந்துக்களை கொல்வதும், கோயில்களை தகர்ப்பதும்தான். இந்தியா ஹிந்து நாடு என அங்கீகரிக்கும் முஸ்லிம்களுக்கு மட்டுமே இந்தியாவில் வாழ முடியும்- என தொடர்கிறது அரசியல் அனாதையாகி ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களின் அனுதாபத்தை பெற துடிக்கும் சுப்ரமணிய சுவாமியின் கட்டுரை.

இக்கட்டுரையின் பெயரில் சுப்ரமணிய சுவாமியின் மீது நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வருவதாக மும்பை போலீஸ் நேற்று முன்தினம் கூறியிருந்தது.

Friday, July 22, 2011

சதமடிப்பாரா சச்சின்! கொடி கட்டி பறக்கும் சூதாட்டம்!?

புதுடில்லி : சச்சின் 100வது சதம் தொடர்பாக கிரிக்கெட் சூதாட்டம் கொடி கட்டிப் பறக்கிறது. இதுவரை 200 கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய உலக கோப்பை தொடரில் போலீசாரின் கடும் நடவடிக்கை காரணமாக பெரிய அளவில் சூதாட்டம் நடக்கவில்லை. அடுத்து நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சச்சின், சேவக் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம் பெறாததால் சூதாட்டம் நடக்க வாய்ப்பே இல்லாமல் போனது. இதனால் நொந்து போன கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு, தற்போதைய இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் "ஜாக்பாட்' காத்திருக்கிறது. இத்தொடரில் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சர்வதேச அளவில் தனது 100வது சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் அடிப்படையில் பெருமளவில் சூதாட்டம் நடக்கிறதாம்.

முக்கிய நகரங்களில் போலீசாரின் கண்காணிப்பு அதிகமாக இருப்பதால், இம்முறை சூதாட்டக்காரர்கள் காசியாபாத், ஹரித்வார் போன்ற சிறிய நகரங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். சச்சின் 100வது சதம் அடிப்பார் என்று நம்பி பணம் செலுத்தியவர்களுக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உதாரணமாக சச்சின் 100வது சதம் அடிப்பார் என்று கூறி 40 ரூபாய் செலுத்த வேண்டும். அவர் சதம் அடித்தால், 90 ரூபாய் கிடைக்கும். லட்சம் மற்றும் கோடிகளில் கட்டும் போது, அதற்கேற்ப பணம் கிடைக்கும். சச்சின் ஒருவேளை அரைசதம் அடித்தால், பாதி தொகை தான் வழங்கப்படும். அவர் சதம் அடிக்க தவறினால், பணம் கட்டியவர்களின் கதி "அம்போ' தான். சச்சினுக்கு அடுத்து, காம்பிர் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறதாம். இவர் குறைந்தபட்சம் அரைசதம் அடிப்பார் என ஏராளமானோர் பணம் கட்டியுள்ளனர்.

இது குறித்து சூதாட்டப் புள்ளி ஒருவர் கூறுகையில்,""லார்ட்சில் வரலாற்று சிறப்புமிக்க 2000வது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இங்கு சச்சின் 100வது சதம் அடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் "பெட்டிங்' படுஜோராக நடக்கிறது. அனைவரும் சச்சின் சதத்தில் சதம் காண்பார் என்று தான் பணம் செலுத்துகின்றனர். இதுவரை 200 கோடி ரூபாய் அளவுக்கு பணம் கட்டப்பட்டுள்ளது. இந்திய அணி இரண்டாவதாக பேட் செய்வதால், தொகை இன்னும் பல மடங்கு அதிகரிக்கலாம்,''என்றார்.

காய்கறி எண்ணையா ! ரொம்ப கவனம் தேவை !!

காய்கறிகளின் விதைகள் மற்றும் கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் ஆரோக்கியமானது என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. ஏனெனில் அவை இயற்கையான காய்கறி பொருட்களில் இருந்து கிடைப்பதாக நினைக்கிறார்கள். இந்த நம்பிக்கை ஆரோக்கியத்திற்கு அபாயமானது.

காய்கறி எண்ணெய்கள் துரித உணவுகள் போலவே ஆபத்தானது. ஏனெனில் `ஜங்புட்' உணவுகள் எப்படி தயாரிக்கப்படுகிறதோ அதுபோன்ற முறையிலேயே காய்கறி எண்ணெய்களும் தயாரிக்கப்படுகிறது. காய்கறிகளிலுள்ள சத்துக்கள் எல்லாம் எண்ணெய் தயாரிக்கும் முறையில் நீக்கப்பட்டு விடுகிறது.

இறுதியாக எண்ணெயாக மிஞ்சி இருப்பது வெறும் கொழுப்புகள் மட்டுமே. இந்தக் கொழுப்புகள் கல்லீரலை தூண்டி உடலில் அதிகப்படியான கொலஸ்டிரால் உற்பத்தியாக காரணமாக அமைந்துவிடுகிறது. தொடர்ந்து அதிகப்படியாக காய்கறி எண்ணெய்களை பயன்படுத்தி வந்தால் சீக்கிரமாகவே கல்லீரலானது உடலின் தேவைக்கு அதிகமான கொலஸ்டிராலை உற்பத்தி செய்துவிடுகிறது.

இது இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. பெரும்பாலும் காய்கறி எண்ணெய்கள் மரபு வழி முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது உடலுக்கு ஏற்றதல்ல. சோயா எண்ணெய், பருத்திக்கொட்டை எண்ணெய், மக்காச்சோள எண்ணெய், முந்திரி எண்ணெய் போன்றவை அதிகமாக மரபு வழியில் தயாராகிறது.

வேறு சில எண்ணெய்கள் அதிகமாக ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்டு தயாராகிறது. இப்படி தயாராகும் எண்ணெய்கள் அதிகமாக கொலஸ்டிரால் உருவாக காரணமாக இருப்பதுடன் ரத்தக் குழாய்களை பாதிக்கும். இந்த எண்ணெய்களால் உடலில் அதிகப்படியாக உருவாகும் பலபூரிதமாகாத கொழுப்புகள் இதய வியாதிகள், நீரிழிவு மற்றும் வேறுசில அபாயமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

அதேபோல சுவை தருவதற்காக மேற்கொள்ளப்படும் ரீபைன்ட் முறையானது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் விஷத் தன்மையுள்ள ரசாயனங்கள் சுரப்பதை தூண்டுகிறது. இது ரத்த சுழற்சியை குறைக்கும். மூளை நரம்புகள் இயக்கத்தை பாதிக்கும்.

ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாடுகளை குறைத்து ஜீரணத்தையும் தாமதப்படுத்தும். எனவே காய்கறி எண்ணெயையும் அளவுடன் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

கதை சொல்லி கரடிவிடும் விஜய்யின் தந்தை !!

நடந்த முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி ஜெயலலிதா தலைமையில் அமைய வேண்டும் என்று விஜய் விரும்பினார். அதை நான் உங்களுக்கு சொன்னேன். அ.தி.மு.க. அணி வெற்றி பெற கடுமையாக உழைத்தீர்கள்.அ.தி.மு.க. அணி அமோகமாக வெற்றி பெற்றது. விஜய் ஆசையை நிறைவேற்றி உள்ளோம்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் 80 லட்சம் இளைஞர்கள் புதியதாக ஓட்டுப்போட்டுள்ளனர். இதில் 50 சதவீதத்தினர் விஜய் ரசிகர்கள் என கணக்கெடுப்பு கூறுகிறது. விஜய் எனக்கு பிள்ளை. நீங்கள் கொடுத்த உற்சாகத்தில் தான் விஜய் இளைய தளபதியாகி உள்ளார். அவர் பெயரை வைத்து நீங்கள் வளரவேண்டும். மக்கள் இயக்கத்தில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தங்கள் பகுதியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்தால் நீங்கள் தேர்தலில் நிற்க நான் சீட் வாங்கி தருவேன்.

மக்களுக்கு சேவை செய்ய நீங்கள் அரசியல் மேடையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். லஞ்சம், ஊழலில் ஈடுபட்டால் வரும் காலத்தில் மக்கள் வீட்டுக்கு வந்து அடிப்பார்கள், அந்த அளவுக்கு மக்களிடையே இப்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

விஜய் இதுவரை 50 படத்தில் நடித்துவிட்டார். இன்னும் 25 படங்களிலாவது அவர் நடிக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். அதனால் அவர் முழு நேர நடிகராக இருப்பார். நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார். நான் நேரிடையாக ஈடுபட்டு உங்களுக்கு பலமாக இருப்பேன். இன்று முதல் இளைஞர் அணி மாவட்ட தலைவர் வேல்முருகன், விஜய் நற்பணி இயக்க மாவட் தலைவராகவும், நற்பணி இயக்க மாவட் தலைவர் நந்தகுமார் இளைஞர் அணி தலைவராகவும் நியமிக்கப்படுகின்றனர்., இவ்வாறு அவர் பேசினார்.

தன்னார்வத்தில் முன்னுரிமை கொடுக்கும் வெளிநாட்டவர்கள்

பந்தலூர் : "மனித சமுதாயத்தில் பிறருக்கு உதவிடும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள முன் வரவேண்டும்,' என்பதற்கு எடுத்துக்காட்டார் திகழ்ந்தனர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.

பந்தலூர் அருகே ஏலமன்னா சி.டி.ஆர்.டி., நிறுவனம், மைசூர் ராலி நிறுவனம் ஆகியவை இணைந்து ஜெர்மன் நாட்டு தன்னார்வலர்களை கொண்டு, கிராமப்புற மக்களுக்கு கழிப்பிடம், குடியிருப்பு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரும் பணி மேற்கொண்டன.

பொன்னானி பகுதியில் கழிப்பிட வசதியில்லாத, 11 பயனாளிகளை தேர்வு செய்து, கழிப்பிடம் கட்டி ஒப்படைக்கும் நிகழ்ச்சியும், பணி முடிந்து திரும்பும் தன்னார்வலர்களுக்கு பிரிவு உபசாரம், பாராட்டு விழா ஆகியவை பொன்னானியில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பள்ளி தலைமையாசிரியர் சமுத்திரபாண்டியன் பேசுகையில், ""ஒவ்வொரு மனிதனும் பிறருக்கு உதவிடும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொண்டால், நாட்டில் அமைதியும் அன்பும் பெருகும். அதில் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் வெளிநாட்டு தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டது பாராட்டுக்குரியது,'' என்றார். தன்னார்வலர்களின் மேலாளர் ஷாலி பேசுகையில், ""ஏழை மக்கள் வாழும் கிராமப்புறங்களில் இதுபோன்ற பணிகள் மேற்கொள்வதிலும், கிராமப்புற மக்கள் காட்டும் அன்பும் மறக்க இயலாது,'' என்றார்.

தலைமை வகித்த சி.டி.ஆர்.டி. துணை இயக்குநர் விஜயராஜூ பேசியது: நம்நாட்டு அரசு துறைகளுடன் இணைந்து ஏழை மக்கள், பழங்குடியினர்கள் பயன்பெறும் வகையில் பல பணிகளை மேற்கொண்டு வரும் சூழலில், சுற்றுலா போல வந்த வெளிநாட்டு தன்னார்வலர்கள் தங்களின் சொந்த பணத்தை செலவு செய்து இதுபோன்ற பணிகளை மேற்கொள்வதற்கு, முழுமையான ஒத்துழைப்பு வழங்கினீர்கள். கடந்த 17 நாட்களாக கடும் மழையிலும், கிராமப்புற மக்கள் உட்கொள்ளும் உணவுகளை உட்கொண்டு, தரையில் படுத்து உறங்கி தங்களது பணிகளை முடித்துக்கொடுத்த தன்னார்வலர்களின் பணிகளை பார்த்து நாமும் பிறர்க்கு உதவிடும் மனப்பாங்கினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும், என்றார்.

Thursday, July 21, 2011

முதன்மைக்கு முன்னேறிக்கொண்டிருக்கும் துபாய்!!

துபாய் : உலகின் மிகச் சிறந்த வர்த்தக நகரங்களுள் ஒன்றாக துபாய் தேர்வு செய்யப்பட்டுள்ளது.. உலகின் தலைசிறந்த 10 வர்த்தக நகரங்களுள் 9-வது இடத்தில் துபாய் உள்ளது., இது குறித்து சிபி ரிச்சர்ட் எல்லிஸ் நடத்திய ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாவது.

சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள 56 சதவீத நிறுவனங்கள் துபாயில் செயல்படுகின்றன என்றும், சர்வதேச அளவில் பிரபலமாக விளங்கும் வர்த்தக நகரங்கள் குறித்த ஆய்வை ரிச்சர்ட் எல்லிஸ் நேற்று பட்டியலிட்டு வெளியிட்டது. இதில் உலகளவில் அலுவலகம் அமைத்து செயல்படும் 280 முன்னணி நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. மொத்தம் 101 நாடுகளில் 232 நகரங்களில் ஆய்வு செய்து பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் துபாய் 9-வது இடம் பிடித்தது. முதல் இடத்தில் ஹாங்காங் ( 68.2 சதவீதம்) இதற்கு அடுத்தபடியாக சிங்கப்பூர் (67.5 சதவீதம்), டோக்கியோவுக்கு (63..9), லண்டன் (63.2) , ஷாங்காய் 61.4 சதவீத வர்த்தக நிறுவனங்களின் தேர்வாக உள்ளது. மேலும் துபாய் நகரமானது தொழில்துறை உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் 7-வது இடத்தில் உள்ளது . கடந்த 10 ஆண்டுகளாக சர்வதேச நிறுவனங்களை ஈர்க்கும் நகரமாக துபாய் மாறி வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மண்ணை கவ்விய ஜெயா? மகிழ்ச்சியில் மார்தட்டிய கலைஞர் !?

சமச்சீர் கல்வியை இந்தாண்டே நடைமுறைப்படுத்த வேண்டும். சமச்சீர் கல்விக்கான பொது பாடப்புத்தகங்களை ஜுலை 22க்குள் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என கடந்த 18ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

தமிழக மாணவர்களுக்கு சமமான மற்றும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்ற எல்லோராலும் வரவேற்கப்பட்ட தீர்ப்பு அது. ஆனாலும் அதை நடைமுறைப்படுத்த விரும்பாமல் அத்தீர்ப்புக்கு தடைக்கோரி உச்சநீதிமன்றம் சென்றது தமிழக அரசு.

ஏற்கனவே ஓன்னரை மாத காலமாக புத்தகங்கள் இல்லாமல் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பிடிவாதப் போக்கினால், குழப்பமான சூழல் உருவானது. பெற்றோர்கள், மாணவர்கள் கடும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளர்.

ஆனால், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஜூன் 21 அன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தும், சமச்சீர் பாடப்புத்தகங்கள் ஆகஸ்ட் 2க்குள் வழங்கப்படவேண்டும் என கால நீடிப்பு வழங்கியும் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவிற்கேற்ப ஆகளிட் 2 க்குள் அனைத்து பள்ளிகளுக்கும் சமச்சீர் பாடப்புத்தகங்களை அனுப்பிவைத்திட வேண்டும். சமச்சீர் பாடப்புத்தகங்களை நடத்துவதற்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் ஆசிரியர்களுக்கு உடனே வழங்கிட வேண்டும்.

இந்நிலையில் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமச்சீர் கல்வி வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், ஆகஸ்ட் 2ஆம் தேதிக்குள் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

கலாச்சாரத்தை கண்டுகொள்ள கப்பலேறிய அமெரிக்க மாணவர்கள் !

மதுரை : மதுரை மாவட்டத்திற்கு அமெரிக்க, கனடா நாட்டு மாணவர்கள் குழு வந்துள்ளது. இந்திய கலாச்சாரத்தை பற்றி அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் கிறிஸ் என்பவர் தலைமையில் வந்த இக்குழு, டி.கல்லுப்பட்டி அருகே தும்மநாயக்கன்பட்டி பஞ்., யூனியன் நடுநிலைப் பள்ளிக்கு சென்றனர்.

அவர்களை தலைமை ஆசிரியர் ரகுராமச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர். மாணவர்களுக்கு தன்சுத்தம் பேணுதல், நல்லொழுக்கம், பண்பாடு குறித்த ஆடல், பாடல், நாடகம் நடத்தினர். இந்திய உணவு, குடும்ப பழக்க வழக்கங்கள் உட்பட கலாச்சார விஷயங்களை கேட்டறிந்தனர். ஆசிரியர் ஜவஹர் ஏற்பாடுகளை செய்திருந்தார். பின் வாடிப்பட்டி, சேடப்பட்டி யூனியனில் உள்ள பள்ளிகளுக்குச் சென்றனர்.

Wednesday, July 20, 2011

மனைவி என்கிற துணைவி ( நண்பி )

மனைவியென்னும் மாதரசி நாடும் அன்பை
மகிழ்வுடனே மதித்திடுவோம் அவளின் பங்கை
நினைவிலென்றும் நீங்காது நெஞ்சில் மேவும்
நித்தமவள் வழங்கிவரு மின்பம் யாவும்
சுனைநீராய் வற்றாமல் தியாகம் செய்வாள்;
சுரக்குமன்பால் மறவாமல் நியாயம் செய்வோம்!
பனைமரமாய் நற்பலன்கள் தருவாள் என்றும்
பகுத்தறிவைப் பயன்படுத்திச் செய்வோம் நன்றி

சலவையும் சளைக்காமல் செய்வாள்;ஊணும்
சமைத்திடுவாள்; இல்லத்தில் தூய்மை காணும்
நிலவைப்போல் வெளிச்சமாக்கி வைத்துக் காத்து
நிற்குமவள் செயலுக்குச் சொல்வோம் வாழ்த்து
புலமையும் கூரறிவும் பெற்ற இல்லாள்
புத்தியுடன் கணவனுக்கு வழியும் சொல்வாள்
கலவரமாய் முகத்தினில் ரேகைப் பார்த்து
கவலைகள் போக்கிடுவாள் அன்பை ஈந்து

இல்லாளை மதிப்போர்க்கு வாழ்க்கை இன்பம்
இல்லாத சந்தேகம் கொண்டால் துன்பம்
பொல்லாதப் பழிகளையும் நம்ப வேண்டா
பொய்சொல்லி ஆபத்தில் சிக்க வேண்டா
நல்லோராய்க் குழந்தைகள் வளர வேண்டி
நாள்தோறும் கஷ்டங்கள் யாவும் தாண்டி
சொல்லொண்ணாப் பொறுமையை நெகிழ்ந்து யோசி
சொர்க்கமெனக் கொண்டாடி மகிழ்ந்து நேசி

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்.

குண்டான உடம்பையும் குறைக்க சுலப வழி இதோ !

வாஷிங்டன் : குண்டான உடலை குறைக்க ஆண்களும், பெண்களும் பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்கின்றனர். நடை பயிற்சி, கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர்.

விளம்பரங்களை நம்பி மாத்திரை, லேகியம் போன்றவற்றையும் வாங்கிச் சாப்பிட்டு, எப்படியாவது உடல் எடையை குறைக்க முயற்சிக்கின்றனர்., இப்போது, சிரமமே இல்லாத செலவே பிடிக்காத வழிமுறையை கண்டு பிடித்து, மருத்துவ வல்லுனர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் வருமாறு.

குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள், உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகிறது. உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.

பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரிய வரும். பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை குறைக்க கரும்பு பயன்படுகிறது.

தனக்கு தானே குழி பறித்துக்கொள்ளும் ஜெயா! ஸ்டாலின்?

திமுக சந்திக்காத தோல்வியும் இல்லை, பெறாத வெற்றியும் இல்லை. எப்படி வெற்றி பெற்றோம் என்று வெற்றி பெற்றவர்களுக்கும் புரியவில்லை. அதே போல், எப்படி தோற்றோம் என்று நமக்கும் புரியவில்லை. மீண்டும் நாம் ஆட்சிக்கு வருவோம். ஒரு வருடத்திலோ, 6 மாதத்திலோ இந்த ஆட்சி கவிழும். அதற்கு ஜெயலலிதாவே உறுதுணையாக இருப்பார்.

சமச்சீர் கல்வியை கருணாநிதி மட்டுமே உட்கார்ந்து தயாரிக்கவில்லை. கல்வியாளர்கள், பொருளாதார நிபுணர்கள், அறிவியலாளர்கள், சமூகநல ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் சேர்ந்து உருவாக்கியதுதான் சமச்சீர் கல்வி. 2010&11ல் 1 மற்றும் 6&ம் வகுப்புக்கு இந்த கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.

அப்போது, இதை எதிர்த்து சிலர், உயர்நீதிமன்றம் சென்றனர். அது ஏற்கப்படவில்லை. தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது. 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நாம் கொண்டு வந்த சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்தார்கள்.

நாம் குரல் கொடுத்தோம். அதையும் மீறி அதை ரத்து செய்து அரசு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், உயர்நீதிமன்றமோ, சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

கருணாநிதி ஆட்சியில் இதுபோன்ற தீர்ப்பு வந்திருந்தால், ‘கருணாநிதி ஏன் ராஜினாமா செய்யவில்லை?’ என்று ஜெயலலிதா கூறியிருப்பார்., அதையே பல்வேறு தலைவர்களும் வலியுறுத்தியிருப்பார்கள். ஆனால் ஜெயலலிதாவை ராஜினாமா செய்ய சொல்லி கருணாநிதி வற்புறுத்தவில்லை.

உயர்நீதிமன்ற தீர்ப்பு தவறு என்று எந்த தலைவர்களும் சுட்டிக் காட்டவில்லை.

ஜெயலலிதாவின் தவறுகளை எந்த நாளேடும் சுட்டிக் காட்டுவதில்லை. மாணவர்கள் நலன் கருதி கொண்டு வந்த சமச்சீர் கல்வி திட்டத்தை முடக்கியதால் 2 மாதங்களாக பாடங்கள் நடத்தப்படவில்லை. என்ன படித்து கிழித்தோம் என்று சொல்வார்கள்.

அதுபோல வாத்தியார்களும் என்ன பாடம் நடத்துவது என்று தெரியாமல் வெற்று பேப்பரை கிழித்து கொண்டிருக்கிறார்கள்., இந்நிலையில் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு செல்வோம் என்று அரசு கூறியுள்ளது. அப்படியென்றால் இன்னும் 6 மாதத்துக்கு படிப்பே இல்லை என்ற நிலை மாணவர்களுக்கு ஏற்படும். அதற்குத்தான் அந்த அம்மா, ஏற்கனவே ஒரு திட்டத்தை போட்டுள்ளார். அதுதான் ஆடு, மாடு வழங்கும் திட்டம்.

பல்வேறு வழக்குகளை போட்டு திமுகவினரை கைது செய்து வருகின்றனர். 2006 & 2011 வரை நடந்த பத்திரப்பதிவுகளில் மட்டும் ஏதோ மோசடி செய்திருப்பதாக கருத்தில் கொண்டு, குறிப்பாக திமுகவினர் பத்திரப்பதிவு செய்ததை மட்டும் எடுத்து பழி வாங்குகிறார்கள்.

அப்படியானால் இதே ஜெயலலிதா, 2001 & 2006 வரை நடந்த பத்திரப்பதிவை ஏன் எடுக்கவில்லை. அப்படி எடுத்தால் சிறுதாவூர், கொடநாடு அடங்கும் என்பதாலும், அதிமுகவினரின் பத்திரப்பதிவும் அடங்கும் என்பதாலும் எடுக்கவில்லை.

பத்திரப்பதிவு அதிகாரிகளுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் ஒன்றை கூறிக் கொள்கிறேன். ஆட்சியாளர்களின் அதிகாரத்துக்கு பயந்து, அவர்களின் பேச்சை கேட்டு திமுகவினர் மீது வழக்கு தொடர்ந்தால் அனைத்து அதிகாரிகளையும் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துவோம். நான் அதிகாரிகளை மிரட்டவில்லை. நியாயத்தைதான் சுட்டிக் காட்டுகிறேன்.

நில மோசடியில் வழக்கு பதிய வேண்டுமென்றால் எப்ஐஆர் போட்டிருக்க வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்க வேண்டும்., ஆனால் எதுவுமே இல்லாமல் திமுகவினருக்கு எதிராக கட்டாயப்படுத்தி புகார் வாங்குகிறார்கள். இது நியாயமில்லை. சட்டப்படி திமுக வழக்கறிஞர் அணி இதை சந்திக்கும்’’ என்று பேசினார்.

தமிழின "கொலை" காரனை புறக்கணித்த சினிமா பாடகர்கள் !!

இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த அதிபர் ராஜபக்ஷேவுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தும், அவரை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.

மேலும் இலங்கை சம்பந்தப்பட்ட எந்த விழாவிலும் தமிழகம் மற்றும் இந்தியாவை சேர்ந்த திரை நட்சத்திரங்கள் யாரும் பங்கேற்க கூடாது என்றும் தமிழ் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இதனால் தமிழ் உள்ளிட்ட பல்வேறு திரை நட்சத்திரங்களும் இலங்கை நடைபெறும் எந்த விழாவிலும் பங்கேற்காமல் உள்ளனர். கடந்த ஆண்டு கூட இஃபா விருது நிகழ்ச்சியை அமிதாப் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் புறக்கணித்தனர்.

இந்நிலையில் அந்நாட்டின் கிளிநொச்சியில் ஸ்டேடியம் ஒன்று திறப்பு விழாவில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்பதற்காக பிரபல பின்னணி பாடகர்கள் மனோ, கிரிஷ், சுஜித்ரா உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கை புறப்பட்டு சென்றனர். இந்த நிகழ்ச்சியில் அதிபர் ராஜபக்ஷேவும் பங்கேற்க இருக்கிறார். இதனால் மனோ உள்ளிட்ட பாடகர்கள் மூவருக்கும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை ரத்து செய்து விட்டனர் மூன்று பாடகர்களும்.

இதுகுறித்து கொழும்பில் இருந்து மனோ வெளிட்டுள்ள செய்தியில், கிளிநொச்சியில் ஒரு ஸ்டேடியம் திறப்பு விழாவுக்காக, இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று எங்களை கேட்டார்கள். தமிழ் மக்கள் முன்பு, தமிழ் பாட்டுகளை பாடலாம் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஆனால் இங்கு வந்து பார்க்கும்போது, அந்த நிகழ்ச்சியில் அதிபர் ராஜபக்ஷேவும் பங்கேற்பது எங்களுக்கு தெரிந்தது. இதனால் நிறைய பெரியவர்கள் எங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டதையடுத்து இந்த விழாவில் பங்கேற்பதை ரத்து செய்தோம்.

தமிழ் நெஞ்சங்களுக்கு சின்ன கஷ்டம் வருவதுபோல் நடந்து கொள்ள மாட்டோம். உறுதியாகச் சொல்கிறேன் நானும், பாடகி சுசித்ரா, பாடகர் கிரிஷ் ஆகியோரும் சென்னை திரும்புகிறோம். கிளிநொச்சி செல்ல மாட்டோம். தமிழ் மண்ணுக்கு, தமிழ் நெஞ்சங்களுக்கு என்றும் நன்றி உடையவர்களாக இருப்போம். தெரியாமல் வந்ததால் எங்களை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

Tuesday, July 19, 2011

காரசாரமான உணவுக்கும் ரத்த ஓட்டத்துக்கும் அருமருந்து !!

காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய். நமது சமையலில் மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு. இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என மூன்று வகைகளைக் கொண்டது.

இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன. குடமிளகாய் காரம் குறைந்தது. இத்தாவரத்தின் காய் சமையலுக்கும், கனிந்த கனிகள் மற்றும் விதைகள் நறுமணப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் : இத்தாவரத்தில் ஒலியோரெசின், கேப்சைசின், கரோடினாய்டுகள், பிளேவனாய்டுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் ஸ்டிராய்டல், சபோனின்கள், கெப்சைசிடின்ஸ் – விதைகள் ) பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் : விதைகளுடன் கனிகள், ஜீரணத்தை ஊக்குவித்து உடலுக்கு வலுவேற்றுகிறது. தசைக்குடைச்சல் வலியை போக்கும் தன்மை கொண்டது. கிருமி நாசினியாக செயல்படுகிறது. வியர்வை மற்றும் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும். வலிபோக்கும் மருத்துவத்தில் பயன்படுகிறது.

உடலுக்கு வெப்பத்தினை தரும் தன்மை. ரத்த ஓட்டத்தினை அதிகரிக்க உதவுகிறது. கை, கால், ஆகிய பகுதிகளுக்கும், மற்ற மைய உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டத்தினை சரி செய்கிறது. கெப்சைசின் எனும் வேதிப்பொருள் இத்தன்மைக்கு அடிப்படையாகிறது.

தோல் நோய்களை போக்கும் : தோல்களின் மீது தடவும் போது நரம்பு நுனிகளின் உணர்வினை மழுங்கச் செய்து ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது. தோல் வியாதியான சொரியாசிஸ், நியூரால்ஜியா மற்றும் தலைவலி, மூட்டுவலி, ஆகியவற்றையும் போக்க வல்லது.

பாக்டீரியங்களுக்கு எதிராக செயல்புரிகிறது. உள்ளுக்குள் சாப்பிடும் போது வயிற்றுவலி, வாயு தீர்க்கும். ஜீரண சுரப்பிகள் சுரக்க தூண்டும். ஜீரண மண்டல நோய்களைப் போக்கும். தொண்டை கரகரப்பு கொப்பளிப்பாக பயன்படுகிறது.

வலிகளைப் போக்கும் : சர்க்கரை மற்றும் குல்கந்த் சேர்த்து முக்கோண வில்லைகளாகச் செய்யப்பட்டு தொண்டை கரகரப்புக்கு மருந்தாகிறது. வலிகளைப் போக்க தேய்ப்புத் தைலமாக பயன்படுகிறது.

இந்திய மருத்துவத்தில் சின்கோனாவுடன் சேர்த்து நாட்பட்ட மூட்டுவலிக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பெருங்காயம் மற்றும் கற்பூரத்துடன் சேர்ந்து காலரா நோய்க்கு மருந்தாகிறது. தீப்புண் மேல் தூவப்படுகிறது.

செய்தி ரொம்பா காரமா கொஞ்சம் தண்ணிர் குடிங்க சாரி,.,

ஜெயாவுக்கு ஆணையிட்ட கேப்டன் !!

தமிழ்நாடு அரசு ஏற்கனவே கொண்டு வந்த பொதுப்பாடத் திட்டத்தை அப்படியே செயல்படுத்த வேண்டுமென்றும், அதை இன்றைய தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்ததை ஏற்க மறுத்தும் உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் பாடத்திட்டத்தில் நீக்க வேண்டியவற்றை நீக்கியும், சேர்க்க வேண்டியவற்றை சேர்த்தும் மூன்று மாத காலத்திற்குள் ஒரு துணை பாடப் புத்தகத்தை உருவாக்கவும் இந்தத் தீர்ப்பு வழி வகை செய்துள்ளது.

இந்த கல்வி ஆண்டு தொடங்கி ஏற்கனவே இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இன்னும் பாடப் புத்தகங்கள் கிடைக்கவில்லையே என்ற கவலையால் பீடிக்கப்பட்டுள்ளனர். எந்த பாடப் புத்தகத்தையாவது வைத்தால் போதும் என்ற நிலையே அவர்களிடம் உள்ளது.

இந்த சூழ்நிலையில் முந்தைய தி.மு.க. அரசு கொண்டு வந்த பாடத் திட்டத்தில் உள்ள கலைஞர் குடும்பத்தின் சுய புராணம் பாடும் பகுதிகளை நீக்கி, தரமுள்ள புதிய பாடத் திட்டங்களை கல்வி நிபுணர்களின் குழுவின் மூலம் சேர்த்து பாடத் திட்டத்தின் தரத்தை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதற்கிடையில் நாம் கேட்பது குதிரையானாலும் கிடைத்திருப்பது கழுதைதான் என்றாலும், குதிரை கிடைக்கும் வரை கழுதையை பயணத்திற்கு பயன்படுத்திக் கொள்வது தவறல்ல. தேவை மற்றும் உடனடித் தேவை என்று இருப்பதைப் போல, நமக்கு தேவை சமச்சீர் கல்வி என்றாலும் உடனடித் தேவையாக இருப்பது தற்போது திறந்துள்ள பள்ளிக் கூடங்களை பாடப் புத்தகங்கள் தந்து நடத்துவதுதான்.

ஆகவே தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்று உடனடியாக பள்ளிக் கூடங்கள் இயங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.,இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பிரச்சினையில் முடிந்த விஜய் விழா ?

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜெயிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அந்த என்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் தேர்தல் நேரத்தில் கடுமையாக உழைத்தீர்கள். அதற்கு பலன் கிடைத்தது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். இந்த விழா மேடையில் நான் நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் நீங்கள்தான். உங்களால் நான் உயர்ந்தேன். என்னைப் போன்று நல்ல நிலைக்கு, உயர்ந்த நிலைக்கு நீங்களும் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த சினிமா உலகில் நான் எத்தனையோ தோல்விகள், அவமானங்கள், கேலி கிண்டல்களை, தடைகளை சந்தித்தேன்., அதையெல்லாம் கண்டு நான் துவண்டு விடவில்லை. கடின முயற்சிகள் செய்து தொடர்ந்து உழைத்து இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன்.

ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு ஓடும்போது, தவறி விழுவது சகஜம்தான். ஆனால் விழுந்த இடத்திலேயே கிடக்காமல், மீண்டும் துள்ளி எழுந்து, முன்பைவிட வேகமாக ஓடினால் மட்டுமே நீங்கள் ஜெயிக்க முடியும். நீங்களும் அதேபோல் தொடர்ந்து முயற்சிகள் செய்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும்", என்று ரசிகர்களை உற்சாகமூட்டி பேசினார்.

அவர் பேசி முடித்ததும், நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொண்ட ரசிகர்கள் பலரும் விஜய்யிடம் கை குலுக்க மேடையை நோக்கி முன்னேறினர். அப்போது ரசிகர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதனால் போலீசுக்கும், ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ரசிகர்கள் சேர்களை தூக்கி போலீசார் மீது எறிந்தனர். சிறிது நேரம் அந்த பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. போலீசார் மைக்கில் எச்சரித்த வண்ணம் ரசிகர்களை கட்டுப்படுத்திய பின்னர் பரபரப்பு அடங்கியது.

Monday, July 18, 2011

இவர் அதுக்கு சரிபட்டு வருவாரா ....!?

சென்னை, ஜூலை 18: பத்தாம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் இந்த ஆண்டிலிருந்தே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியது.

சமச்சீர் கல்விக்கானப் புத்தகங்களை ஜூலை 22-ம் தேதிக்குள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுக அரசு அமைத்த நிபுணர் குழு உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியுள்ளது போல சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில் தேவையான திருத்தங்கள், மாற்றங்களை அரசு செய்து கொள்ளலாம். 3 மாதத்துக்குள் அத்தகைய மாற்றங்களை செய்து, தேவைப்பட்டால் துணைப் பாட நூல்களைக் கூட மாணவர்களுக்குக் கொடுக்கலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

சமச்சீர் கல்வி தொடர்பாக அதிமுக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்த நீதிமன்றம், வரும் 22-ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி பாட நூல்களை அங்கீகரித்துத் தமிழக அரசு அறிவிக்கை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது தொடர்பாக அதிமுக அரசு அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பிறகு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு இத்தீர்ப்பை அளித்தது.

கடந்த சட்டப்பேரவை தேர்தல் வெற்றியின் மூலம் தமிழகத்தில் கடந்த மே 16-ம் தேதி புதிய அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. மே 22-ம் தேதி சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற அதன் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்களோடு சமச்சீர் கல்வி பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கூட்டத்தில், உடனடியாக சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்கும் முடிவை எடுத்த அரசு, பழைய பாடத் திட்ட நூல்களை அச்சடிக்க மறுநாளே டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது.

நிபுணர் குழு பரிந்துரைகள் எதுவுமின்றி சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது என்ற தன்னிச்சையான முடிவுக்கு வந்த அரசு அதற்காக சட்ட திருத்தமும் செய்துள்ளது., சமச்சீர் கல்விச் சட்டம் செல்லும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில் அதன் அமலாக்கத்தை நிறுத்தி வைக்கும் வகையிலான இந்த சட்ட திருத்தத்தால் மாணவர்களின் நலன்கள் பாதிக்கப்படும்.

இன்றைய குழந்தைகளே நாட்டின் எதிர்காலம் என்பதைக் கருத்தில் கொண்டு சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்தி சிறப்பான இலக்கை எட்டும் நோக்கில் அரசு நடவடிக்கைகள் எடுக்கும் என நம்புகிறோம் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

* கல்வி பயிலும் பிள்ளைகள் நலன் காணாத இவள் எதுக்கும் சரிப்பட்டு வரமாட்டார். இவ அதுக்கு சரிப்பட்டு வருவாளா ....?

அதை" விட இதற்குத்தான் அதிகம் ஆசை படுகிறார்கள் பெண்கள் !!

லண்டன், பார்ட்னருடன் செக்ஸில் ஈடுபடுவதை விட, கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவதையே பெண்கள் அதிகம் விரும்புகின்றனர் என்று ஆய்வு என்று தெரிவிக்கிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த டொரிடோஸ் என்னும் நிறுவனம், கம்ப்யூட்டர் விளையாட்டுக்கள் தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில் தெரிய வந்துள்ள விபரங்கள் வருமாறு:-

ஆண்களை விட, பெண்கள்தான் அதிகமாக கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாட விரும்புகின்றனர். செக்ஸை அனுபவிப்பதை விட, கம்ப்யூட்டர் விளையாட்டில்தான் அதிக திருப்தி கிடைப்பதாக பெண்களில் பலர் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆண்கள் 22.3 சதவிகிதம் நேரத்தையும், பெண்கள் 23.2 சதவிகிதம் நேரத்தையும் விளையாட்டில் செலவிடுகின்றனர்.

பார்ட்னர்களுடன் படுக்கை அறையை பகிர்ந்து கொள்வதை விடுத்து, பெட் ரூமிலேயே விடிய விடிய கம்ப்யூட்டர் விளையாட்டில் மூழ்கும் பெண்களின் சதவிகி தமும் கணிசமாக உள்ளன. அதேபோல, கம்ப்யூட்டர் விளையாட்டுக்கு அடிமை யான பெண்களிடம் ஷாப்பிங் செய்வது குறைந்துள்ளது. இவர்கள் நண்பர்கள், கணவர்கள் உறவினர்களிடம் இருந்து தனிமைப்பட்டு வருகின்றனர்., இவ்வாறு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி, மனித உறவுகள் நிபுணர் டக்ளஸ் வீஸ் தெரிவித்துள்ள கருத்தில், கம்ப்யூட்டர் விளையாட்டில் மூழ்கிப்போகும் நபர்கள் தங்களது வாழ்க்கை துணை, நண்பர்கள், உறவுகள் போன்றவற்றை இழக்க நேரிடும். அவர்கள், தனிமையில் தள்ளப்பட்டு, ஒருவிதமன நோய்க்கு ஆளாகும் ஆபத்தும் உள்ளது என்று எச்சரித்துள்ளனர்.

கதை விடும் கள்ள "சாமி" யார் கல்லா கட்டும் பத்திரிக்கைகள் !

2010 மார்ச் முதல் வாரத்தில் வெளியான நித்யானந்தா - நடிகை ரஞ்சிதா சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் பெரும் அதிர்வை உண்டாக்கின. இதையடுத்து நித்யானந்தா தலைமறைவானார். பின்னர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே உள்ள நித்யானந்தா கடந்த 13.07.2011 அன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய நித்யானந்தா நக்கீரன் உள்ளிட்ட சில ஊடகங்கள் வழக்கறிஞர் ஸ்ரீதர் மூலம் பணம் கேட்டு மிரட்டியதாக பொய் குற்றச்சாட்டை கூறினார்., இதையடுத்து, 'நக்கீரன் வெளியிட்டது உண்மையான வீடியோ காட்சிகள்தான் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சட்டப்பூர்வமாகவும் இதனை நிரூபிப்போம். வீடியோ காட்சிகள் போலியானவை என்று சொல்லும் நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் நீதிமான்கள், சட்ட வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தடயவியல் நிபுணர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 100 பேர் முன்பாக இந்த வீடியோ காட்சிகள் போலியானவை என்பதை நிரூபிக்கத் தயாரா என்று நக்கீரன் பகிரங்கமாக சவால் விடுகிறது.

இந்த சவாலை எதிர்கொண்டு, தங்களின் பரிசுத்தத் தன்மையை நிரூபிக்க நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் தயாரா?' என்று நக்கீரன் கூறியிருந்தது.

இந்நிலையில் சென்னையில் 18.07.2011 அன்று செய்தியாளர்களை சந்தித்த நித்யானந்தாவின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர்., எனக்கும் நக்கீரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நித்யானந்தா தொடர்பான வழக்கை நான்தான் நக்கீரன் மீது தொடர்ந்தேன். நான் எந்தக் கட்சியையும் சாராதவன். நித்யானந்தா எனக்கு வந்து ஒரு கிளைண்ட்.

நித்தியானந்தாவுக்கு யாரோ தவறான ஒரு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். தேவையில்லாமல் அவர் நக்கீரன் மற்றும் சில ஊடங்களை மட்டும் குற்றம் சாட்டியிருக்கிறார். அன்றைக்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உள்பட அனைத்து ஊடங்களும் நித்யானந்தா பற்றிய செய்திகளை வெளியிட்டது. யாரும் நித்யானந்தாவை மிரட்டவில்லை.

இந்த சிடி விஷயம் பற்றி தெரிந்தது 5 பேர்தான். நித்யானந்தா, ரஞ்சிதா, லெனின் தர்மானந்தா, ஆர்த்திராவ். நித்யானந்தா என்னிடம் சொல்லும்போது, சிடி உண்மையானது என்றார். அப்போது அட்வைஸ் பண்ணினோம். உண்மையான சிடியாக இருந்தால் தாமதப்படுத்த வேண்டாம். கன்சல்டிங் பாட்னர் என்று சொல்லிவிட்டு கேஸில் இருந்து தப்பிக்க பாருங்க. அதைவிட்டுட்டு ரொம்ப டீப்பா போனீங்கன்னா டிரபுள் வரும். அதற்கேற்ற மாதிரி அவர் ஒத்துக்கிட்டார்.

இதையடுத்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் சிடியில் இருந்தது நான்தான் என்று ஒப்புக்கொண்டார். அப்போது யோக நிலையில் இருந்ததாக கூறியிருந்தார். அதைப்போல ரஞ்சிதாவும், ஆமாம் நான் சாமிக்கு சேவை செய்வேன் என்று பேட்டி கொடுத்தார்.

தற்போது சிடி பொய் என்று கூறுகின்றனர். இது வழக்கை திசை திருப்பும் செயல். அந்த சிடியை பார்த்தால் நித்யானந்தா எழுந்து கையை நீட்டி அங்கபாரு என்று சொல்லும்போது, ரஞ்சிதா அதுவெல்லாம் ஒன்றும் இல்லை படு என்று சொல்லுகிற மாதிரி இருக்கும். அதை உன்னிப்பா கவனித்தால் தெரியும். கண்டிப்பா ரஞ்சிதா படுக்கை அறை காட்சியை, போக்கஸ் லைட் நடுவில் எடுத்திருக்காங்க அப்படியின்னா வேர்க்க விறுவிறுத்துதான் எடுத்திருப்பாங்க.

Sunday, July 17, 2011

ஹிந்தி "கோ" வுக்கு இத்தனை போட்டியா?

தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டான கோ படம், இந்தியிலும் எடுக்கப்படுகிறது. இதில் ஜீவா கேரக்டரில் நடிக்க பாலிவுட் முன்னணி நடிகர்கள் ஷாகித் கபூர், ரன்பீர் கபூர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, அஜ்மல், கார்த்திகா, பியா ஆகியோர் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் கோ. இந்த படம் ஏற்கனவே தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு அங்கும் வசூலை குவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தை பார்த்த பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், கோ படத்தை இந்தியிலும் எடுக்க முடிவு செய்தார்.

ஆரம்பத்தில் இப்படத்தின் நாயகனான ஜீவா கேரக்டரில் அக்ஷய் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது அக்ஷய் அதில் நடிக்க விரும்பவில்லை என்றும், அதற்கு பதிலாக இளம் நடிகர் ஒருவரை நடிக்க முயற்சிப்பதாகவும், இதற்காக பாலிவுட்டின் இளம் மற்றும் முன்னணி நடிகர்களான ஷாகித் மற்றும் ரன்பீர் கபூர் இடையே கடும் போட்டி நிலவுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அஜ்மல் நடித்த வசந்த் கேரக்டரில் அவரே நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செக்ஸ் புகாரில் சிக்கிக்கொண்ட இந்தியன் டாக்டர் யு.எஸ்சில் !!

நியூயார்க், ஜூலை. 17 இந்தியாவைச் சேர்ந்தவர் ராகேஷ் பூன் (53). இவர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் குழந்தைகள் நல டாக்டராக பணி புரிகிறார். இவர் தன்னிடம் சிகிச்சை பெற வரும் சிறுமிகளை பரிசோதனை செய்ய வேண்டும் என தனியாக அழைத்து செல்வார்.

பின்னர் அவர்களை நிர்வாணமாக வீடியோ மற்றும் போட்டோ எடுத்து கொள்வார். அந்த போட்டோவுடன் தனது நிர்வாண படத்தை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்து வைத்து இருந்தார்.

இதை தொடர்ந்து அவர் மீது நியூயார்க் போலீசில் செக்ஸ் புகார் கூறப்பட்டது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், அவர் மீது 60 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

குடும்பம் செழிக்க பெண் கல்வி முக்கியமான ஒன்று

குடும்ப வளர்ச்சிக்கு பெண் கல்வி மிகவும் அவசியம். எனவே, பெண்கள் அனைவரும் கல்வி அறிவு பெற வேண்டும். பெண் குழந்தைகள் பிறந்தால், அதை சுமையாக கருதாமல், ஆரோக்கியமாக வளர்த்து, படிக்க வைக்க வேண்டும், என கலெக்டர் மதிவாணன் பேசினார்.

மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கு, திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நேற்று நடந்தது. சுகாதார பணிகள் இணை இயக்குனர் திருமலைசாமி பேசுகையில், "மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும்; வீட்டுக்கு ஒரு குழந்தை அவசியம்; இரண்டாவது குழந்தை ஆடம்பரம்; மூன்றாவது குழந்தை ஆபத்து என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தை திருமணம், சிசு கொலையை தடுக்க வேண்டும்" என்றார்.

கலெக்டர் மதிவாணன் பேசியதாவது: குடும்ப வளர்ச்சிக்கு பெண் கல்வி மிகவும் அவசியம். எனவே, பெண்கள் கல்வி அறிவு பெற வேண்டும். பெண் குழந்தை பிறந்தால், அதை சுமையாக கருதாமல், ஆரோக்கியமாக வளர்த்து, படிக்க வைக்க வேண்டும். பெண்கள் படிக்கும்போது விழிப்புணர்வு ஏற்படும். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்பும், பெண்கள் இருப்பார்கள் என்பது மாறி, தமிழக முதல்வரில் துவங்கி, அனைத்து இடங்களிலும் பெண்களே முன்னணி யில் உள்ளனர்.

கலங்கரை விளக்கை போன்றவர்கள் பெண்கள். அவ்விளக்கு வெளிச்சம் தரும் அளவுக்கு, குடும்பம் பிரகாசிக்கும். குடும்பம் முன்னேறினால், கிராமம் முன்னேறும்; கிராமம் முன்னேறினால் நாடு முன்னேறும், என்றார்.

Saturday, July 16, 2011

துபாயில் பெருந்தலைவருக்கு பெரும்விழா எடுத்த தமிழ் மக்கள்

துபாய் அல்நாதாவில் துபாய் நாடார் சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 109-வது பிறந்தாநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவினை தலைவர் செந்தில்குமார் நாடார் துவக்கி வாழ்த்துரையாற்ற, துணைத்தலைவர் ராமமூர்த்தி நாடார், மற்றும் செயலாளர் சுபாஷ் நாடார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.

தொடர்ந்து பிறந்தாநாள் விழாவினை கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் காமராஜர் பிறந்தநாளை உலக நாடார் தினமாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை ராமசந்திரன் நாடாருக்கு பொன்னாடை போர்த்தி முடிவில் மதகை பிரபு நாடார் நன்றி உரை நிகழ்த்தினார்.

# பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு சத்துணவு என்கிற திட்டத்தை ஆரம்பித்து வைத்த பெருந்ததலைவர் காமராஜ். #

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!