Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, June 30, 2011

இந்தியாவுக்கு ஆப்பு வைக்க தொடங்கியது இலங்கை! முன்னோட்டம்?

கொழும்பு, ஜூலை 01 : சீனாவின் கரன்சியை இலங்கையின் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த இலங்கை மத்திய வங்கி அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

சீனா-இலங்கை இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீனாவின் கரன்சி மட்டுமல்லாமல், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, டென்மார்க், கனடா, நியூஸிலாந்து, நார்வே, சிங்கப்பூர், சுவிஸ், ஜப்பான் ஆகிய நாடுகளின் கரன்சிகள் உட்பட மொத்தம் 13 நாடுகளின் கரன்சிக்கு இலங்கை மத்திய வங்கி அனுமதி அளித்துள்ளதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

# இந்திய அரசு தன்னுடைய சிறந்த நண்பனாக நடத்தும் இலங்கையில், இந்திய ரூபாய்க்கு அங்கீகாரம் கிடையாது. #

கமலிடம் கடிவாங்க பயந்து ஒதுங்கிய நடிகை !

கமல் படம் என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்காது. "விஸ்வரூபம்" படத்திற்கும் அப்படிதான். ஆரம்பத்தில் இந்தபடத்தை செல்வராகவன் இயக்குவதாக இருந்தது.

பின்னர் கமலுக்கும், செல்வாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட அப்படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டு படத்தின் டைரக்ஷன் பொறுப்பை கமல் ஏற்றார். பின்னர் ஜூன் மாதம் சூட்டிங் துவங்குவதாக இருந்தநிலையில், இதுவரை படத்தை துவங்குவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.

இந்நிலையில் "விஸ்வரூபம்" படத்தை ஆரம்பிக்காமல் இழுத்தடிப்பதாகவும், தான் தான் கொடுத்த கால்ஷீட் வீணாவதாகவும் கூறி படத்தின் நாயகி சோனாக்ஷி சின்ஹா விலகுவதாக அறிவித்துள்ளார். ஆரம்பத்தில் கமல் படத்தில் நடிக்க ரொம்ப ஆர்வம் காட்டியவர் சோனாக்ஷி தான்.

கமல் வயதில் பாதிகூட இல்லையே, அவருடன் எப்படி ஜோடி சேர்வீர்கள் என்று கேட்டபோது, காமிரா முன்னால் நின்றபிறகு நான் அதையெல்லாம் பார்ப்பதில்லை என்று கூறியவர், இப்போது என்னடானா...? படத்தை ஆரம்பிக்காமல் இழுத்தடிப்பதால், இந்தபடத்தை நம்பி மற்ற படங்களுக்கு என்னால் கால்ஷீட் தர முடியவில்லை, இதனால் நிறைய படவாய்ப்புகளை இழப்பதால் படத்திலிருந்து விலகுவதாக கூறியுள்ளார்.

இனப்பெருக்கத்திற்கு இடம் தேடிய ஆமைகள்!!

நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கென்னடி விமான நிலையத்தில், இன்று காலை விமானங்கள் புறப்பட தயாராக இருந்த போது, திடீரென ஆமைகள் "ரன்வே'யை நோக்கி படையெடுத்து வந்தன.

அவை முட்டை இடுவதற்காக கடற்கரை நோக்கி செல்வதற்கு மாறாக, விமான நிலையத்திற்குள் வந்தது தெரியவந்தது. துறைமுக ஆணையம் மற்றும் அமெரிக்க விவசாயிகள் துறை ஊழியர்கள் விரைந்து வந்து, இந்த ஆமைகளை ஒட்டு மொத்தமாக அள்ளி எடுத்து, விமான நிலையத்திற்கு வெளியே உள்ள கடற்கரை பகுதியில் கொண்டு போய் விட்டனர். இதனால், விமானங்கள் புறப்படுவதில், 30 நிமிடம் தாமதம் ஏற்பட்டது.

Wednesday, June 29, 2011

முக்கால்வாசி பெண்களுக்கு அதிகம்

ஆண்களை விட பெண்கள் தான் முதுகுவலியால் அதிகமாக அவதிப்படுகின்றனர். குதிகால் செருப்புகள்,நாகரீக செருப்புகள் அணிவதால், உடலின் புவியீர்ப்பு மையம் மாறுபாடு அடைகிறது. ஆங்கில எழுத்தான `எஸ்' வடிவில் அமைந்துள்ள முதுகுத் தண்டு வடம், பெண் மகப்பேறு அடையும் போது மேலும் வளைந்து விடுகிறது.

சிலருக்கு ஹார்மோன் மாறுபட்டால், முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு நழுவி, வலி ஏற்பட்டு வாழ்க்கை முழுவதும் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. உடல் உழைப்புக்கு பழக்கப்படாதோர், திடீரென குனிந்து, நிமிர்ந்து பணி செய்யும் போதோ, எடை அதிகம் கொண்ட பொருட்களை தூக்கும் போதோ, தசைகள் ஒத்துழைக்காமல் முதுகு வலி ஏற்படும்.

உடல் எடை அதிகரித்தாலும் முதுகுத் தண்டு வடத்தை பதம் பார்க்கும். நடக்கும் போதெல்லாம் உடல் எடையை தூக்கி கொண்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படுவதால், முதுகில் கடுமையான வலி ஏற்படும். வயது ஏற ஏற முள்ளெலும்புக்கு இடையில் உள்ள நீர் வற்றி தசைகள் சுருங்கி வலுவிழந்து விடுவதால், பயன்பாட்டுக்கு அப்பாற்பட்ட நிலையை எட்டி விடுகின்றனர்.

எலும்புகளில் சுண்ணாம்பு குறைவதால், அவையும் வலுவிழக்கின்றன. எலும்புகள் ஒன்றுக்கொன்று தாறுமாறாக ஒட்டிக் கொள்வதால், வயதானவர்களின் உயரமும் குறைகிறது. இதனால் அடிக்கடி முதுகு வலி ஏற்படுகிறது.

நானோ கார் வழங்கி கவ்ரவித்த பள்ளி நிர்வாகம்

மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த ஒசூர் ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகாவுக்கு பள்ளி நிர்வாகம் நானோ கார் வழங்கி கவ்ரவித்தது. 3ம் இடம் பிடித்த மாணவி பி.எஸ்.ரேகாவுக்கு மொபெட் வழங்கப்பட்டது.

மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் 1200 க்கு 1190 மதிப்பெண்கள் பெற்று கே.ரேகா முதலிடம் பிடித்தார். மேலும் அதே பள்ளி மாணவி பி.எஸ்.ரேகா 1200 க்கு 1186 பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்தார்.

இந்த மாணவிகளை கெளிரவிக்கும் வகையில் ஒசூர் ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி தாளாளர்கள் மணிவண்ணன் மற்றும் செல்வி மணிவண்ணன் ஆகியோர் பள்ளி நிர்வாகம் சார்பில் முதல் மாணவி கே.ரேகாவுக்கு நானோ காரையும், 3 ம் இடம் பிடித்த மாணவி பி.எஸ்.ரேகாவுக்கு மொபெட்டும் வழங்கி கெளிரவித்தனர்.

மேலும் பிளஸ் 2 வகுப்பில் பாடம் நடத்திய 8 ஆசிரியர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பிலான இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியர் சம்பத்குமாருக்கு சொகுசு கார் வழங்கப்பட்டது. மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழ் நாடு அறிவியல் இயக்கம் ஒப்புக்கொண்டதை தமிழக அரசு ஒப்புக்கொள்ளாதது ஏன்?

சமச்சீர் கல்வி திட்டத்தில் இடம்பெற்றுள்ள பாடங்கள் மிகவும் தரமானவை என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன்,. திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் மெட்ரிக்குலேசன், தேசிய கல்வி ஆராய்ச்சி வாரிய பாடநூல்கள் உள்ளிட்ட கல்வி முறைகளில் பயன்படுத்தப்படும், பாடத்திட்டங்களைக் காட்டிலும் மிகவும் தரமானதாக இருக்கிறது.

சமச்சீர் கல்வியை ஆராயும் நிபுணர் குழுவில் தனியார் பள்ளி தாளார்கள் இடம்பெற்றிருப்பது நல்லதல்ல. உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வியை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

# நல்லதை ஏற்று கொள்ளாதது இவர் இன்னும் மாறவில்லை என்பதையே தெரிவிக்கிறது, எத்தனை பட்டாலும் புத்தி வராது., அடுத்த தேர்தலில் மஞ்ச துண்டுக்கு இவரே வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திடுவார். #

இணைய தளத்திற்கு இணையான போட்டி! கூடுதல் வசதியுடன்

பாஸ்டன் : இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம், பேஸ்புக்கிற்கு போட்டியாக 'கூகுள் பிளஸ்' என்ற சோஷியல் நெட்வொர்க் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, கூகுள் நிறுவன பொறியியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளதாவது, சோஷியல் நெட்வொர்க் எனப்படும் சமூகவலை தளங்களில் மக்கள் பெரும் ஈடுபாடு க‌ாட்டி வருகின்றனர். அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக, சோஷியல் ‌நெட்வொர்க் தளத்தை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. தற்போது 'கூகுள் பிளஸ்' என்ற பெயரில் புதிய ‌தொழில்நுட்பத்திலான சோஷியல் நெட்வொர்க் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இந்த புதிய சோஷியல் நெட்வொர்க் தளம், பேஸ்புக் தளத்தை ஒத்திருக்கும் போதிலும், அதைவிட கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது. இந்த புதிய சேவையினை, ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ‌மொபைல்போன்கள் விற்கும் விற்பனை மையங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், தற்போதைய அளவில், சோதனைக்காக இது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பினும், வருங்காலங்களில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 சர்க்கிள்ஸ், ஸ்பார்க்ஸ், ஹேங்அவுட்ஸ் மற்றும் மொபைல் உள்ளிட்ட ‌சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளசில் உள்ள சர்க்கிள்கள், பேஸ்புக்கின் 'தகவல் பகிர்ந்து கொள்ளும்( இன்பர்மேசன் ஷேரிங்)' சேவையை ஒத்திருத்தாலும், இது பேஸ்புக்கைப்போல, தனது தகவலை அனைவருக்கும் தெரிவிக்காமல், உப‌யோகிப்பாளருக்கு நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது உபயோகிப்பாளர்களின் உண்மையான தகவல்களை உரிய நண்பர்களுக்கு மட்டும் தெரிவிப்பது என்ற கொள்கையுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிளவுட் தொழி்ல்நுட்பமுறையில் இங்கு போட்டோக்கள் அப்லோட் செய்யப்பட உள்ளதால், இன்ஸ்டன்ட அப்லோட் இதில் சாத்தியமாகிறது. இது, இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக, அதுவும் பேஸ்புக்கில் இல்லாத சிறப்பம்சமாக இதில் வீடியோ சாட் வசதி உள்ளது. ஒரே சமயத்தில் பல நண்பர்களுடன் வீடியோ சாட் முறையில் தொடர்பில் இருப்பது இந்த சேவையின் மூலமே சாத்தியமாகி உள்ளதாக அவர் அதில் தெரிவித்துள்ளார். 600 மில்லியன் பயனாளர்களைக் கொண்டு சோஷியல் நெட்வொர்க் உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய பேஸ்புக்கிற்கு, தங்கள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் கடும் சவாலாக அமையும் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, June 28, 2011

ஆண் நண்பர்களை அழைத்து வருவது ஆபத்து?

சண்டிகார் : அரியானா மாநிலம், சண்டிகார் அருகேயுள்ளது பஞ்ச்குலா. இப்பகுதியைச் சேர்ந்த, 10ம் வகுப்பு மாணவியை, கடந்த 26ல், இரண்டு இளைஞர்கள் வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றனர். பின், அந்த மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்துவிட்டு ஓடிவிட்டனர்.

மயக்கம் தெளிந்து வீட்டிற்கு வந்த மாணவி, தான் கற்பழிக்கப்பட்டது குறித்து, தன் தாயிடம் கூறியுள்ளார். இது குறித்து, பஞ்ச்குலா போலீசில் புகார் செய்யப்பட்டது. குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள், மாணவியுடைய சகோதரரின் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நண்பர்கள்தான் பெரும்பாலும் சகோதரிகளுக்கு தீங்கு செய்கிறார்கள்., காவல் காக்க வேண்டியவன் கம்பி நீட்டிவிடுகிறான்,ஆதலால் வீட்டுக்கு வெளியிலேயே வைத்துக்கொள்ளுங்கள் நண்பத்துவத்தை.

உடலுக்கு உறுதியையும் பாதுகாப்பையும் தரும் கொய்யா!!

குறைந்த விலையில் நிறைந்த தரம் என்றால் அதற்கு எடுத்துக்காட்டு கொய்யாப்பழம். அதன் சத்துக்களும், மருத்துவக்குணங்களும் வியப்பானவை.

* ஆரஞ்சை விட அதிக அளவில் வைட்டமின் `சி' உள்ள பழம் கொய்யா. இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி ஆகிய சத்துக்களும் அதிகமாக காணப்படுகின்றன. வாழைப்பழத்தில் உள்ளதை விட கூடுதலாக பொட்டாசியம் சத்தும் உள்ளது.

* கொய்யாக்காய் உடலுக்கு உறுதியையும், தோலுக்கு பாதுகாப்பையும் தருகிறது.

* தோல் நோய்களை நீக்கி, மென்மையான சருமத்தைப் பெறவும், சருமம் பளிச்சிடவும் கொய்யா உதவுகிறது.

* தோலில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி, இழந்த இளமைப் பொலிவை மீட்டுத்தருகிறது.

* அதிக உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மலச்சிக்கலைத் தீர்க்கிறது.

தினம் ஆப்பில் : மருத்துவரிடம் செல்லவேண்டாம்.

தினம் செர்ரி : மருத்துவமனை செல்லவேண்டாம்.

பெண் போ ( லி ) லீஸ் !!!

மதுரையில் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் போலீஸ் உடையில் இளம்பெண் ஒருவர் பொதுமக்களிடம் இன்று மிரட்டி வசூல் செய்துகொண்டிந்தார். அப்போது அந்த பக்கமாக வந்த அண்ணாநகர் காவல் நிலைய போலீஸுக்கு அந்த இளம்பெண்ணின் நடவடிக்கை சந்தேகத்தை கொடுத்தது.

அவரிடம் எந்த காவல் நிலையத்தில் பணிபுரிகிறீர்கள் என்று கேட்க, முன்னுக்குபின் முரணான பதிலைச்சொல்ல அவரை விசாரணைக்கு அழைத்துச்சென்றன., அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஏ.சி. வெள்ளைத்துறை தலைமையிலான டீம் தனி அறையில் வைத்து அந்த இளம்பெண்ணிடம் விசாரணை செய்தது.

விசாரணையில் தனது பெயர் ராணி என்றும், தனக்கு 18வயது ஆகிறது எனறும் குறிப்பிட்டுள்ளார்., அவர் மேலும், ‘’எனக்கு 10 போலீஸ் அதிகாரிகளூடன் தொடர்பு இருக்கிறது. அவர்கள் எனக்கு பண உதவி செய்து வந்தார்கள். தற்போது அந்த அதிகாரிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.

நான் கடந்த ஒரு வருடமாக போலீஸ் உடையில் பொதுமக்களை ஏமாற்றி வருகிறேன். எனக்கு அந்த 10 அதிகாரிகள் ஆதரவாக இருக்கின்றனர்’’ என்று அதிர்ச்சிகரமான வாக்குமூலம் அளித்துள்ளார்., ராணி சொல்வது உண்மைதானா என்று தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆஸியில், சில்மிசத்தில் சிக்கிக்கொண்ட இந்தியர்!!

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மூன்று இளம்பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இந்தியர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.

சிவகுமார் சிதம்பரம், 40, கடந்த 1995ம் ஆண்டில், ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார். இவர் பல்வேறு சந்தர்ப்பங்களில், 10 வயது மற்றும் ஏழு வயது அக்கா, தங்கைகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், மெல்போர்ன் நகரில் தாயை சந்திக்க, பஸ்சில் சென்ற பெண்ணிடம் இவர் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்பட்டது.

இந்து மற்றும் கிறிஸ்துவ மதம் சார்ந்த குழுக்கள் மூலம் இப்பெண்களின் அறிமுகம் இவருக்கு கிடைத்ததாகத் தெரிகிறது.இது தொடர்பான வழக்கு, விக்டோரியா கோர்ட்டில், விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவகுமாரின் வக்கீல் டேவிட் ரேக், "சிவகுமார் இந்து மதத்தில் பற்று கொண்டிருப்பவர்; அவர் தவறு செய்யவில்லை' என்றார். ஆனால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளி என கோர்ட் அறிவித்தது.

# காசு பார்க்க வந்துவிட்டு கட்சயை (ஜட்டி) அவிழ்த்தால் ,....

Monday, June 27, 2011

சுய மரியாதை சித்தாந்தம் பேசும் ஷ்ரேயா!

மதுபழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே போய்கிறது. குறிப்பாக இப்போது பெண்களும் அதிகளவில் குடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

மதுபழக்கத்தை ஒழிக்க இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்து பல்வேறு முயற்சிகளை எடுத்து கொண்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு 25வயதுக்கு உட்பட்டவர்கள் குடிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இதுபற்றி விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் நடிகை ஸ்ரேயா.

இதுகுறித்து தனது டுவிட்டர் இணையதளத்தில் அவர் கூறியிருப்பவதாது, 18வயதில் ஒருவருக்கு ஓட்டுபோடும் உரிமை, திருமணம் செய்யும் உரிமை வந்துவிடுகிறது. அப்படி இருக்கையில் தண்ணியடிக்க மட்டும் 25வயசா...? என்ன ஒரு முட்டாள்தனம் என்று கூறியிருக்கிறார். ஸ்ரேயாவின் இந்த பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் இந்தபிரச்சனை பூதாகரமாக வெடிக்கவும் அதற்கு ஸ்ரேயா மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, தனிமனிதன் ஒருவன் சுயமாக முடிவெடுக்க, அவனுக்கு முழுஅதிகாரமும் உண்டு. எந்த வயதில் எதை செய்யலாம், செய்யக்கூடாது என்று அவனுக்கு தெரியும். இதைத்தான் நான் கூறினேனே தவிர, மற்றபடி குடிபழக்கத்தை பற்றி நான் எதுவும் வாதம் செய்யவில்லை. இனி இதுபற்றி நான் ‌எதுவும் பேசவிரும்பவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

ஈழ தமிழர்கள் தங்களது பூர்வீகத்தை தெரிந்துகொள்ள?

கொழும்பு : இந்திய வெளியுறவு அமைச்சகம், "டிரேசிங் த ரூட்' என்ற பெயரில், இலங்கை வாழ் தமிழர்களின் பூர்வீகத்தை கண்டுபிடித்து தரும் பணியை துவக்கியுள்ளது.

இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், "இந்தியாவில் பூர்வீகத்தை அறிந்து கொள்ள விரும்பும் இலங்கை வாழ் தமிழ் மக்கள், கொழும்பில் உள்ள இந்திய தூதரகம், யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பன்தோட்டாவில் உள்ள இந்திய துணை தூதரகம், கண்டி நகரில் உள்ள துணை ஹை கமிஷன் அலுவலகம் ஆகியவற்றில் விண்ணப்பிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த 2008ம் ஆண்டில் துவங்கப்பட்டது.

விண்ணப்பத்திற்கான கட்டணத் தொகை 72 ஆயிரத்து 480 ரூபாய். விண்ணப்பிக்கும் போதே கட்டணத்தொகையை செலுத்திவிட வேண்டும். விண்ணப்பதாரரின் பூர்வீகத்தை கண்டுபிடிக்க முடியாவிட்டால், கட்டணத்தில், 48 ஆயிரத்து 320 ரூபாய் திரும்ப வழங்கப்படும்.

இலங்கையில், கடந்த 1981ம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அந்நாட்டு மொத்த மக்கள் தொகையில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் 5.5 சதவீதம், இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள் 12.7 சதவீதம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மத்தியில் உள்ள மலைப்பகுதிகளில் அதிகளவில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பலர், அரசியல், வர்த்தகம், விளையாட்டு ஆகிய துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். உதாரணத்திற்கு, விளையாட்டுத் துறையில், இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள விக்கெட்கீப்பர் முத்தையா முரளிதரனை கூறலாம்.

உலக மக்கள் தொகையைப்போல் இதிலும் போட்டி!!

பாஸ்டன் : "கடந்த 1980க்குப் பின், உலகளவில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரு மடங்காக, அதாவது 34.7 கோடியாக அதிகரித்துள்ளது. இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர், இந்தியா மற்றும் சீனாவில் உள்ளனர்' என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம், அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம், லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர் குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தின. இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் மஜீத் எஸ்ஸாடி தலைமையில் நடந்த இவ்வாய்வில் தெரிய வந்துள்ளதாவது:

கடந்த 1980ம் ஆண்டுகளில், வயது வந்தவர்களில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 15 கோடியே 30 லட்சமாக இருந்தது. 2009ல் இந்த எண்ணிக்கை 28 கோடியே 50 லட்சமாக உயர்ந்தது. தற்போது, இது 34 கோடியே 70 லட்சமாக அதிகரித்துள்ளது. இவர்களில், 13 கோடியே 80 லட்சம் பேர் இந்தியா மற்றும் சீனாவில் வசிப்பவர்கள். மூன்று கோடியே 60 லட்சம் பேர் ரஷ்யாவில் உள்ளனர். வளர்ந்த நாடுகளில் அமெரிக்காவில் தான் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. மேற்கு ஐரோப்பாவில் மிகக் குறைவாக உள்ளது.

உலகின் ஒவ்வொரு பகுதியில் உள்ளவர்களையும் நீரிழிவு நோய் பாதிப்பது பொதுவானதாக உள்ளது. அதற்கு காரணம், இந்த நோய் வராமல் தடுக்க முடியாது. இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, June 26, 2011

மதுவுக்கு அடிமையாகும் மங்கைகள்

மதுரை:  உலக மது, போதை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மதுரை மிஷன் மருத்துவமனை சார்பாக நடந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் பெண்களும் குடிபோதைக்கு அடிமையாகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

பேரணிக்கு தலைமை வகித்து பேசிய மருத்துவமனையின் மனநல மருத்துவர் டாக்டர் எம். கார்த்திகேயன் கூறுகையில், மது உடல் நலத்தை கெடுப்பதுடன், மன நலத்தையும் பாதிக்கிறது. குடும்ப பிரச்சனை, விவாகரத்து, சாலை விபத்து, பொருளாதார பிரச்சனைகள் மற்றும் வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு மிகப்பெரிய காரணமாக அமைகிறது.

குடும்பத்தில் அப்பா குடித்தால், மகனும் குடிக்கும் சூழல் உருவாகிறது. 14 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இப்போதை பழக்கத்திற்கு மிகவும் அடிமையாக உள்ளனர். ஆண்களில் பெரும்பாலானோர் வாழ்வில் ஒரு முறையாவது மது அருந்தியுள்ளனர். 35 சதவீதம் பேர் தொடர்ச்சியாக மது அருந்துகின்றனர். இதனை தனி மனித சீர்கேடாக பார்க்காமல் இதனை ஒரு நோய் எனக்கருதி சிகிச்சை மேற்கொள்ளவேண்டும், தகுந்த மருந்து மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம். டாக்டரின் ஆலோசனை இல்லாமல் மருந்துக்கடைகளில் தூக்க மாத்திரைகள், வலி மாத்திரைகள் வாங்கி உட்கொள்ளும் நிலை உள்ளது. இது தவறு. இவ்வாறு அவர் பேசினார்.

பேரணியை துவக்கி வைத்த தேசிய மாணவர் படை குரூப் கமாண்டர் கர்னல் பி.வேணுகோபால் கூறுகையில், என்.சி.சி. மாணவர் படையைச் சார்ந்தவர்கள் இன்று சமுதாயத்தில் வரதட்சணை கொடுமை, தீவிரவாதம் மற்றும் மது, போதை ஒழிப்பதற்கு முழுமையாக பாடுபடவேண்டும் என்றார். நேற்று நடைபெற்ற பேரணியில் லேடிடோக் கல்லூரி, செளராஸ்டிரா கல்லூரி, பாத்திமா கல்லூரி, மீனாட்சி கல்லூரியைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியில் பல்வேறு சமூக சீர்கேடுகளை விளக்கும் அரக்கன் போன்ற பொம்மை செய்யப்பட்டு ஊர்வலமாக வந்தது.

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு இங்கலாந்தில் விருதுடன் ரூ 7.5 லட்சம்!

லண்டன்: பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஞ்சலி ஜோசப்,33 என்ற பெண் எழுதிய நாவலுக்கு, உலகின் கவுரவமான இரு விருதுகள் கிடைத்துள்ளன.

கடந்த 1978ல் மும்பையில் பிறந்த அஞ்சலி ஜோசப், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் ஆங்கிலம் பயின்றார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சோர்போன் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலம் கற்பித்தார். இவர் எழுதிய முதல் நாவல் "சரஸ்வதி பார்க்'. ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட இந்நாவல், மும்பையின் புறநகர்ப் பகுதி ஒன்றில் நடக்கும் காதல் கதையை மையமாகக் கொண்டது.

லண்டனில் இயங்கும், "தி சொசைட்டி ஆப் ஆதர்ஸ்' என்ற அமைப்பு ஆண்டு தோறும், "பெட்டி பிராஸ்க்' என்ற விருதை வழங்குகிறது. காமன்வெல்த் நாடுகளில் வசிக்கும், 35 வயதுக்குட்பட்டவர்கள் முதன் முதலாக எழுதும் நாவல்களில் சிறந்தவற்றுக்கு இவ்விருது வழங்கப்படும். அதேபோல் லண்டனில், டெஸ்மாண்ட் எலியட் என்ற பதிப்பாசிரியரின் பெயரில் இயங்கி வரும் அறக்கட்டளையால் "டெஸ்மாண்ட் எலியட்' விருதும், ஆண்டுதோறும் சிறந்த ஆங்கில நாவலுக்கு வழங்கப்படும். இந்தாண்டுக்கான இந்த இரு விருதுகளும், அஞ்சலி ஜோசப் எழுதிய "சரஸ்வதி பார்க்' நாவலுக்குக் கிடைத்துள்ளன.

இரு விருதுகளும் தலா, 10 ஆயிரம் பவுண்டுகள் (ஏழரை லட்ச ரூபாய்) ரொக்கப் பரிசு கொண்டவை.லண்டனில் இருந்து வெளிவரும், "தி டெய்லி டெலிகிராப்' பத்திரிகை, இந்தாண்டுக்கான, 40 வயதுக்கும் குறைந்த 20 நாவலாசிரியர்களுள் ஒருவராக அஞ்சலியை தேர்ந்தெடுத்துள்ளது. தற்போது, பாரிஸ், லண்டன் மற்றும் மும்பையில் நடக்கும் கதை ஒன்றை மையமாகக் கொண்டு, தன் இரண்டாவது நாவலை எழுதி வருகிறார் அஞ்சலி.

நல்ல செய்தி, நன்மைக்கு உதவலாமே நாமும்

திருச்சியில் யூத் எக்ஸ் னோரா இன்டர் நேசனல் அமைப்பு மற்றும் நடிகர் விவேக் ரசிகர் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் விவேக் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்கி பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம், ‘’நான் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்த போது மரங்களின் நிலமை பற்றி ஒரு கவிதை புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். அதில் மரம் தனது அவலநிலைப்பற்றி கூறுவதுபோல கவிதை இருந்தது. இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் 100 கோடி மரக்கன்று நடவேண்டும்.

தமிழ் நாட்டில் 100 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து உள்ளோம். டிசம்பர் 2011க்குள் 10 லட்சம் மரக்கன்றுகளை நட முடிவு செய்து உள்ளோம். இதற்காக மரக்கன்றுகள் வழங்கி வருகிறோம். வனத்துறை அமைச்சர், சமூக நல ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உதவிகளையும் நாடி வருகிறோம்.

நான் அடுத்து கந்தா படத்தில் நடித்து வருகிறேன். இதில் மரங்களை அழித்து ரியல் எஸ்ட்டேட்டில் நிலத்தை விற்ற விவசாயி கடைசியில் சித்தாளாக மாறியதுடன் இலவச அரிசிக்கு வரிசையில் காத்திற்கும் அவலம் பற்றி கூறியுள்ளேன். மரங்களை வளர்த்தால் தான் எதிர்காலம் வளமாகும்’’ என்று கூறினார்.

நாமும் மரம் வளர்த்து பயனடைவோமா.

Saturday, June 25, 2011

சிறு நீரகம் (பிரச்சினை) என்றால் சிந்தனைக்கு வருவது

சிவப்பு, வெள்ளைன்னு ரெண்டு வகையான முள்ளங்கி இருக்குது. இதுல, வெள்ளை முள்ளங்கி தான் மருந்தாகவும், உணவாகவும் சாப்பிட ஏற்றது. சிவப்பு முள்ளங்கி கொஞ்சம் சுவையாக இருக்கும், அவ்வளவு தான்! முள்ளங்கியைப் பொறுத்தவரை, கிழங்கு, இலை, விதை மூன்றுமே மருத்துவக் குணமுள்ளவை.

சமைக்கும்போதும், சாப்பிடும்போதும் முள்ளங்கியில இருந்து வெளியாகுற வாசனை சிலருக்குப் பிடிக்காது. சாப்பிட்ட பிறகும் நாம விடுற மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும். கந்தகமும், பாஸ்பரசும் இதுல அதிகமா இருக்குறது தான் அதுக்கு காரணம்.

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி. பச்சிளம் குழந்தைகளைத் தாக்குற ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சோட சாறு நிவாரணம் தரும். இட்லி வேகவைப்பது மாதிரி முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில வேக வைத்து, அதுல இருந்து சாறு எடுத்து பாலாடையில வச்சி குழந்தைகளுக்கு ஊட்டலாம்.

குழந்தைகள் குடிக்க மறுத்தால், கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுக்கலாம். இப்படிச் செய்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் இருக்காது. சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.

முள்ளங்கிக்கீரையை எண்ணெய் விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டா நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும். இருந்தாலும், இதை அடிக்கடி சாப்பிட்டா வயிற்றில் பொருமல், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். எனவே, அளவா சாப்பிடுறது நல்லது.

மத்திய அமைச்சர் மாறன் சீட் இனி காலி?

புது டெல்லி ஜூன் : 26, "2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க.தலைவர் கருணாநிதியின் மகள் கனி மொழி ஆகியோர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

ஆனால் ஆ.ராசா பிரச்சினையை போல தயாநிதி மாறன் பிரச்சினயை கொண்டு போக காங்கிரஸ் விரும்பவில்லை என்று அதனால் தயாநிதி மாறனை அமைச்சர் பதவியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு தயாநிதி மாறனுக்கு காங்கிரஸ் சிக்னல் கொடுக்கலாம என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு தலைவர் கூறியுள்ளார்.

அமைச்சரவை கூட்டத்திலும் இதர அரசு விழாக்களிலும் கலந்து கொள்ளுமாறு மாறனுக்கு தி.மு.க. அனுமதி அளித்துள்ளது., தயாநிதி மாறன் ராஜிணாமா செய்து விட்டால் நிலைமை மேலும் மோசகமாகலாம் என்ற கோணத்தில் தி.மு.க.மேலிடம் இவ்வாறு கூறியிருக்கலாம எனறும் கூறப்படுகிறது., ஆனால் எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலால் மத்திய அமைச்சரவையிலிருந்து தயாநிதி மாறன் நீக்கப்படலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்போவதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார். எனவே இந்த அமைச்சரவை மாற்றம் விரைவில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது., அப்படி அமைச்சரவை மாற்றம் நடக்கும் பட்சத்தில் மத்திய அமைச்சரவையிலிருந்து தயாநிதி மாறன் நீக்கப்படலாம் என்று விஷமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தியரை நாடு கடத்தும் முயற்சி தற்காலிக நிறுத்திவைப்பு, அமெரிக்கா!

வாஷிங்டன் : இந்தியாவைச் சேர்ந்தவர் மந்தீப் சகால். கலிபோர்னியாவில் மருத்துவம் படித்து வருகிறார். இவரும், இவரது தாயார் ஜகதீஷ் கவுரும், 1997ல், இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறினர். இவர்களிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததை அறிந்த அமெரிக்க அதிகாரிகள், சட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதையடுத்து, தனக்கு அரசியல் தஞ்சம் அளிக்கும்படி அமெரிக்க அரசிடம், ஜகதீஷ் கவுர் மனு அளித்தார். இது தொடர்பான விசாரணை, ஆறு ஆண்டுகளாக நடந்து வந்தது. அரசியல் தஞ்சம் அளிக்க முடியாது என, அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஜகதீஷ் கவுர், கடந்தாண்டு கைது செய்யப்பட்டார். உடல்நல பிரச்னை காரணமாக, பின்னர் விடுவிக்கப்பட்டார். இருந்தாலும், ஜகதீஷ் கவுரும், மந்தீப் சகாலும், அமெரிக்க அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர். இருவரையும் இந்தியாவுக்கு ஜூன் 22 க்குள் நாடு கடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, மந்தீப் சகாலின் நண்பர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர், நாடு கடத்தும் முயற்சியை அமெரிக்க அரசு கைவிட வேண்டும் என, பிரசாரம் மேற்கொண்டனர்.

இந்நிலையில், நாடு கடத்தப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், அமெரிக்க அரசு, இந்த விவகாரத்தில் ஒரு முடிவை அறிவித்தது. இதன்படி, ஜகதீஷ் கவுரையும், மந்தீப் சகாலையும் இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக, அமெரிக்க அரசு அறிவித்தது.

இந்தா அந்தா என்று இழுத்தடிக்கப்பட்டு முடிவுக்கு வந்த படம்

"வேலாயுதம்", "நண்பன்" படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து, சீமான் இயக்கும் "பகலவன்" படத்தில் நடிக்கப்போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடிக்கப்போவதாக ஒரு செய்தி அடிபடுகிறது. இந்தா, அந்தா, என கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாக இழுத்தடித்து கொண்டே வருகிறது.

இதனையடுத்து விஜய், "வேலாயுதம்", "நண்பன்" படத்திற்கு கால்ஷீட் கொடுத்து அதில் நடிக்க தொடங்கிவிட்டார். சிறைவாசம் முடித்து வந்த சீமான் உடனே "பகலவன்" படத்திற்கான வேலையை தொடங்க ஆரம்பித்தார். இதுதொடர்பாக விஜய்யையும் சந்தித்து பேசினார். இதனால் "நண்பன்" படத்தை அடுத்து, "பகலவன்" படத்தில் தான் விஜய் நடிப்பார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய விஜய்யை டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் சந்தித்து பேசினார். அப்போது ஒரு அருமையான கதை ஒன்றை ‌ரெடி பண்ணி, அதை விஜய்யிடம் காண்பித்து இருக்கிறார். விஜய்க்கும் கதை பிடித்து போக அவரும் நடிப்பதாக கூறிவிட்டாராம். படத்தில் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சோனம் கபூர் நடிப்பதாகவும், விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை விஜய், முருகதாஸ் நடிக்க ஒப்புக்கொண்டால் அவரது படத்தில், விஜய் நடிப்பது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, June 24, 2011

மார்பக புற்று நோய்க்கு மருந்து !

எனக்குச் சாப்பாடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. காபி இல்லாமல் இருக்க முடியாது என்று பெருமையாகச் சொல்லிக் கொள்பவரா நீங்கள்? நீங்கள் பெருமைப்படுவதற்கு கூடுதலாக இன்னொரு விஷயம் இப்போது கிடைத்துவிட்டது.

காபி குடிப்பது மார்பகப் புற்றுநோய் வருவதைக் குறைத்துவிடுகிறதாம்., ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரே வயதிலுள்ள பெண்களை வைத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இது தெரிய வந்திருக்கிறது.

காபி குடித்த பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் மிகக் குறைவாகவும், காபி அருந்தாத பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் அதிகம் இருப்பதையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள் அவர்கள்.

ஆனால் காபி குடிப்பது, எந்தவிதத்தில் பெண்களின் உடலில் செயல்பட்டு புற்றுநோய் வருவதைக் குறைக்கிறது என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

நீங்கள் காபி பிரியரா?, இனிமேல் காலையில் எழுந்ததும் கண்களைத் திறக்காமலேயே காபியை ரசித்து அருந்தலாம்!

ஸ்பெக்ட்ராம் புகழ் ராஜா மனைவி வருமான வரித்துறை அழைப்பு?

திருச்சி,ஜூன் 25 முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் மனைவி மற்றும் உறவினர்களிடம் நேற்று திருச்சி வருமானவரி அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி நிர்வாக இயக்குநர் சரத்குமார் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். ராசா கைது செய்யப்பட்டபோது சி.பி.ஐ பெரம்பலூர் மற்றும் திருச்சியில் உள்ள அவரது வீடு மற்றும் உறவினர்களிடம் ஊழல் தொடர்பான விசாரணை நடைபெற்றது.

அப்போது ராசாவிற்கு சொந்தமான சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். கைப்பற்ற பட்ட சொத்து ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை துணை இயக்குநர் ஆல்பர்ட் மனோகரன் தலைமையில் திருச்சி, பெரம்பலூரில் விசாரணை நடைபெற்றுவந்தது. இது தொடர்பாக ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ராசாவின் சகோதரர் ராமச்சந்திரன், சகோதரி மகன் பரமேஸ்குமார், சகோதரி மகள் மற்றும் ஆடிட்டர்களான பிரான்சிஸ், முத்துக்குமாரசாமி, சுரேஷ்குமார் ஆகியோரும் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். அதன்படி நேற்று காலை அந்த 7 பேரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகினர்.

ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ராமச்சந்திரன், பரமேஸ்குமார் ஆகிய 3 பேரிடம் வருமான வரித்துறை அலுவலகத்தில் தனி அறையில் விசாரணை நடத்தினர்.

உற்பத்தியில் உலக சாதனை படைக்கபோகுது! ஐ நா தகவல்

புதுடில்லி : நடப்பு 2011ல், உலகளவில் நெல் உற்பத்தி 71.30 கோடி டன்னாக உயர்ந்து, புதிய சாதனை படைக்கும் என, ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் துறை தெரிவித்துள்ளது.

சென்ற 2010ம் ஆண்டு, சர்வதேச அளவில் நெல் உற்பத்தி, 69.60 கோடி டன் என்ற புதிய சாதனை அளவை எட்டியது. மேலும், நெல் அரவைக்கு பிறகான அரிசியின் அளவு, முந்தைய ஆண்டை விட, 1.8 சதவீதம் அதிகரித்து, 46.40 கோடி டன்னாக உயர்ந்து, புதிய சாதனை படைக்கப்பட்டது. நடப்பாண்டு, இந்த சாதனை முறியடிக்கப்படும் என, ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் துறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் பருவ நிலை சாதகமாக உள்ளதால், சர்வதேச அளவில் நெல் உற்பத்தி, சென்ற ஆண்டை விட, 2.5 சதவீதம் அதிகரித்து, 71.13 கோடி டன்னாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து நெல் அரவைக்கு பிறகான அரிசியின் அளவும், 47.60 டன் என்ற அளவில் அதிகரிக்கும் என மதிப் பிடப்பட்டுள்ளது.ஆசிய அளவில் நெல் உற்பத்தி 2.5 சதவீதம் உயர்ந்து, 64.50 கோடி டன் என்ற அளவை எட்டும். நெல் அரவைக்கு பிறகான அரிசியின் அளவும் 43 கோடி டன்னாக உயரும். இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகளில் நடப்பாண்டு நெல் விளைச்சல் அதிகம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்தியாவை பொறுத்தவரை, நடப்பு 2010-11ம் பருவத்தில், நெல் அரவைக்கு பிறகு கிடைக்கும்,அரிசியின் அளவு அரிசி உற்பத்தி 9.41 கோடி டன்னாக இருக்கும் என,மத்திய வேளாண் அமைச்சகத்தின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக இலங்கையின் நெல் உற்பத்தி குறையும். நிலநடுக்கம், ”னாமி தாக்குதல், அணு உலை கசிவு உள்ளிட்டவற்றால் ஜப்பானிலும் நெல் உற்பத்தி சரிவடையும் என கணிக்கப்பட்டுள்ளது.ஜப்பானில், ”னாமி தாக்குதலால் டொஹொகு மாவட்டத்தில் நெல் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் 43 ஆயிரம் எக்டேர் பயிர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதால், 3 லட்சம் டன் நெல் உற்பத்தி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ஜப்பானில் நெல் உற்பத்தி 3 சதவீதம் குறைந்து, ஒரு கோடி டன் என்ற அளவிற்கு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆப்ரிக்காவில் நடப்பாண்டு நெல் உற்பத்தி, கடந்தாண்டு போலவே இருக்கும். மேற்கு ஆப்ரிக்காவில் நெல் உற்பத்தி உயரும் என்ற போதிலும், எகிப்து, மடகாஸ்கர் நாடுகளில் நெல் உற்பத்தி குறையும் என, ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் துறை தெரிவித்துள்ளது.கடந்தாண்டு லத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகளில் குறைந்திருந்த நெல் உற்பத்தி நடப்பாண்டில் அதிகரித்துள்ளது. அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, உருகுவே, வெனி”லா நாடுகளில் நெல் உற்பத்தி உயர்ந்துள்ளது.

பெண் முன்னேற்றம் ஆணுக்கு தடையா?

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வெகுவாக முன்னேறி விட்டார்கள்தான். பெண்களின் பங்கு என்பது உலகில் மிக முக்கியமானது. அவர்கள் இல்லாமல் ஆண்களால் பெரிதாக எதையும் சாதித்து விட முடியாது.

உண்மையில் ஒரு ஆணை விட ஒரு பெண்ணால்தான் ஒரு வியாபார ஸ்தலத்தையோ, அல்லது ஒரு பெரிய நிறுவனத்தையோ கூட்டாகக் கொண்டு நடத்தி கூடுதலாக வெற்றி பெற வைக்க முடியும்.

ஓரு விஷயத்தைச் சொன்னால் அதைக் கிரகித்து அதற்குப் பதில் சொல்லும் தன்மை ஆண்களின் மூளையில் ஒரு பங்கு என்றால் அதைக் கிரகித்து பதில் சொல்லும் தன்மை பெண்களின் மூளையில் ஆறு பங்கு. இவைகள் ஆய்வாளர்களின் கண்டு பிடிப்புகள் ஓரு ஆணின் மூளை ஓரு பெண்ணின்; மூளையை விட 130 கிராம் நிறை அதிகமானது.

ஆனால் இரு மூளைகளினதும் செயற்பாடுகள் - ஆதிகாலத்திலிருந்து இன்றைக்கு வரைக்குமான சூழ்நிலைகளுக்கும் வாழ்க்கை முறைகளுக்குமேற்ப இசைவாக்கம் பெற்று வெவ்வேறு வழிகளில் செயற்படுகின்றன.

இங்கு ஆண் உசத்தி என்றோ பெண் உசத்தி என்றோ எதுவும் இல்லை.முன்னர் பெண்கள் வீட்டுக்குள் முடங்க வேண்டியதற்கு காரணங்கள் இருந்தன. இன்று வெளியே சென்றாலும் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று சில பெண்கள் சிந்திக்கவும் தவறவில்லை.

சிந்திக்கத் தொடங்கிய இப்பெண்களின் விழிப்பு நிலையே இன்று சில ஆண்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது. பெண்களிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்தை ஆண்களின் மூளை ஏற்றுக் கொள்ள முடியாமல் திண்டாடுகிறது.

இந்த உண்மைக் காரணங்களை ஆண் பெண் இருபாலாரும் உணர்ந்து செயற்படும் பட்சத்தில் இந்தப் பெண்ணடிமை, பெண்அடக்குமுறை, பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் தன்மை எல்லாமே அர்த்தமற்ற செயல்கள் என்பது நன்கு புலப்படும்.

உண்மையில் பெண்ணுக்கு இன்னும் முழுமையான விடுதலை கிடைக்கவில்லை. வெறும் சலுகை மட்டும் வாழ்க்கையில்லை என்பதை பெண்கள் உணர தொடங்கிவிட்டனர்.

புலிகள்மேல் பொய் பிரச்சாரம் செய்யும், குண இரத்தின

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படுவதற்கு முன்வரும் சகலரும் விடுதலைப் புலிகளிடமிருந்து பணம் பெற்றுக் கொள்வதாக பேராசிரியர் ரொஹான் குணரத்தின குற்றம் சாட்டுகின்றார்.

உலகின் முன்னணி மனித உரிமை அமைப்புக்கள் மட்டுமன்றி சில நாடுகளின் அரசியல்வாதிகளும் அவ்வாறு விடுதலைப் புலிகளிடம் நிதியுதவி பெற்றுக் கொள்வதாக பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச நெருக்கடிக் குழு உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விடுதலைப் புலிகள் நிதி உதவி வழங்கி வருகின்றனர். அது மட்டுமன்றி ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சில அரசியல்வாதிகளும் விடுதலைப் புலிகளின் நிதியைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளே பாரியளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர். மனித உரிமை அமைப்புக்களை புலிகள் தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர். சிலர் அந்தப் பொறிக்குள் சிக்கியுள்ளனர்.

உலகின் முன்னணி பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியான போராட்டத்திலிருந்து இலங்கைக்கு எதிரான பிரச்சாரப் போராட்டத்திற்கு மாறியுள்ளனர். ஆனால் விடுதலைப் புலிகளின் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கக் கூடிய சரியான இராஜதந்திர பொறிமுறை இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்படவில்லை.

புலிகளின் பிரச்சாரப் போராட்டத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதனை இலங்கை அரசியல் தலைமைத்துவங்கள் இன்னமும் தெளிவாக விளங்கிக்கொள்ளாததே அதற்காக காரணமாகும். போலியான தகவல்களின் மூலம் இலங்கையின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Thursday, June 23, 2011

சாய்பாபா ரகசியத்தை வெளியிட போவதாக, மிரட்டும் அமெரிக்க பக்தர்

நகரி,  - சத்ய சாய்பாபாவின் உயில் ரகசியத்தை ஆறு வாரங்களில் வளியிடப் போவதாக அமெரிக்க பக்தர் ஒருவர் கூறியுள்ளார். புட்டபர்த்தி ஸ்ரீசத்யசாய்பாபா சமீபத்தில் மரணமடைந்தார். இவரது ஆசிரம, அறக்கட்டளை, கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களின் சொத்துக்கள் தொடர்பாக பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபாவின் ஆசிரமத்தில் இருந்து சமீபத்தில் ரூ. 35 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்பணம் கொடிகொண்டா போலீசார் நடத்திய வாகன பரிசோதனையின் போது சிக்கியது. இதையடுத்து கார் டிரைவர் ஹரீஷ்நந்தா, சென்னை தொழிலதிபர் ஒருவரின் கார் டிரைவரான சந்திரசேகர், பெங்களூரைச் சேர்ந்த ஷோகன் ஷெட்டி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதேபோல சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து சொகுசு பஸ் ஒன்றில் கடத்தப்பட்ட பலகோடி பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து புட்டபர்த்தி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். அறக்கட்டளை அறக்கட்டளை உறுப்பினர் ரத்னாகர் மற்றும் சென்னை தொழில் அதிபர் ஒருவருக்கும் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ஆனால் அவர்கள் இதுவரை ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.

இந்நிலையில் சாய்பாபாவுக்கு நெருக்கமான அமெரிக்க பக்தர் ஜசஸ் டிரிகேட் புட்டபர்த்தியில் செய்தியாளர்களுக்கு பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது அமெரிக்காவில் தான் ஒரு பீர் கம்பெனி நடத்தியதாகவும், அதில் பல ஆயிரம் கோடி பணம் கிடைத்ததாகவும் ஆனாலும் நிம்மதி கிடைக்காததால் போதைக்கு அடிமையானதாகவும் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் எனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் சாய்பாபாவைப் பற்றி கேள்விப்பட்டு இந்தியாவுக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

அடிக்கடி புட்டபர்த்தி வந்து சாய்பாபாவை சந்தித்து சென்றதாகவும் அவர் தெரிவித்தார். தனக்கும் சாய்பாபாவுக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது என்றும், கடந்த சில ஆண்டுகளாக புட்டபர்த்தியில் தங்கி இருந்ததாகவும், சாய்பாபா தன்னிடம் மனம் திறந்து பேசியதாகவும், அப்போது அவர் தனக்கு பிறகு வாரிசாக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக ஒரு உயிலை எழுதப்போவதாகவும், சாய்பாபா தன்னிடம் கூறியதாக ஐசக் டிரிகேட் தெரிவித்தார். இந்த உயில் ரகசியங்கள் தனக்கு தெரியும் என்றும் அந்த விபரங்களை இன்னும் ஆறு வாரத்திற்குள் வெளியிடப் போவதாகவும் அவர் கூறினார்.

# எந்த தேவைகளும் அற்றவன் எவனோ அவனே இறைவனாக இருக்கமுடியும், மேலே நீங்கள் படித்த செய்தி மனிதரை பற்றி #

பெண்களுக்கு பாதுகாப்பு உண்டா பனி இடங்களில் ..,

இவ்வுலகிலே ஏற்படும் எவ்வித பிரச்சினையாக இருந்தாலும் அதில் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் பெண்களும், குழந்தைகளுமே. பெண்களின் நிலையை சற்று ஆராய்ந்து பார்த்தால் எந்த அளவுக்கு அவர்கள் சமுதாயத்திலே பல வகையான வன்முறைகளால் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பது தெளிவாக தெரியும்.

15 முதல் 45 வயதான பெண்களுள் மூன்றில் ஒரு பங்கினர் ஏதாவது ஒரு வகையான வன்முறைக்கு ஆளாகுகின்றனர். ஒட்டு மொத்த பெண்களில் 35% பேர் உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர். திருமணமான பெண்களில் 46% பேர் பல்வேறு வகையான வன்முறைகளால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வைத் தொடருகின்றனர்.

பெண்கள் கல்வி கற்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள் என்று வெளிப்படையாகத் தெரிந்தாலும், அந்த துறைகளில் உள்ள பெண்கள் பாதுகாப்போடு பணி செய்ய முடிகிறதா என்றால் இல்லை. பெரும்பாலான துறைகள் ஆண்களால் நடத்தப்படுவதாலும் பெரும்பான்மையான உயர் அதிகாரிகள் ஆண்களாக இருப்பதாலும் பெண்கள் எவ்வளவுதான் கல்வி கற்றிருந்தவர்களாக இருந்தாலும் அந்த துறைகளில் உள்ளவர்களால் பலவகை பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.

இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு 2010-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ""பணி இடங்களில் பாலியல் வன்முறைக்கு எதிரான பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 2010''. இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் பெண்களுக்கான முழுமையான பாதுகாப்பினை வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை.

இச்சட்டத்தின் முக்கிய நோக்கமே, பணி இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருவதே ஆகும். அரசின் இந்த அரிய சட்ட முயற்சி பெண்கள் முன்னேற்றத்திற்கு மிகுந்த பயனளிக்கும். இச்சட்டம் எல்லா இடங்களிலும் பணி செய்யும் பெண்களுக்கு பொருத்தமானதாக உள்ளது.

அரசுத்துறையாகவோ, தனியார் துறையாகவோ, வேறு எந்த நிறுவனங்களாக இருந்தாலோ அங்கு பெண்கள் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்பட்டால் இச்சட்டம் மூலம் நீதி பெறலாம். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்த 90 நாட்களில் விசாரணையை முடித்து நடவடிக்கையை எடுக்க இச்சட்டம் வலியுறுத்துகிறது.

இச்சட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வருவது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொறுப்பாகும். பெண்களின் பாதுகாப்பு கருதி, அவர்களின் பணி இடங்களில் தேவையற்ற வன்முறைச் செயல்களை ஒழிக்கும் முயற்சியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இச்சட்டம் மிகவும் வரவேற்கப்பட வேண்டியது.

பெண்களின் பாதுகாப்பிற்கு மிகவும் உதவி செய்திடும் வகையில் இச்சட்டம் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. கூடிய விரைவில் தாமதமின்றி இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், கண்டிப்பாக தொடர்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

காங், (கை) விட்டதால், (கை) தொழில் ஒன்று கற்றுக்கொள் மகளே!

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, அங்கு பெண் கைதிகளுக்கான 6ம் எண் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கனிமொழி மெழுகுவர்த்தி செய்யக் கற்று வருவதாக சிறைதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். கைதிகள் உபயோகமாக நேரத்தை செலவிடும் வகையில் இந்த தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மெழுகுவர்த்திகள் சிறையிலுள்ள விற்பனை மையத்தின் மூலமாகவே பொது மக்களுக்கு விற்கப்படுகின்றன.

இந்த மையத்தில்தான் சக கைதிகளிடம் மெழுகுவர்த்தி செய்ய கனிமொழி கற்று வருகிறார். அதே நேரத்தில் தனது பெரும்பாலான நேரத்தை புத்தகங்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் செலவிட்டு வருகிறார்.

தனது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டாலும் அதை சாதாரணமாகவே எடுத்துக் கொண்டு சக கைதிகள், காவலர்களிடம் இயல்பாகப் பழகி வருவதாகவும் கூறுகின்றனர்.

# (கை) தொழில் ஒன்று கற்றுக்கொள் கவலையெல்லாம் மாற மகளே! என்று தந்தை அட்வைஸ் செய்திருப்பாரோ.#

கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா?

மதுரை மேலூரை சேர்ந்தவர் சின்னகுரும்பன். இவரது மகள் 2009ல் தனது காதலனுடன தலைமறைவு ஆனார்.

இதையடுத்து மகளைக்காணவில்லை என்று சின்னகுரும்பன், மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பின்னர் மதுரை நீதிமன்றத்தில் காதலனுடன் ஆஜராகி காதலனுடந்தான் செல்ல விருப்பம் என்று தெரிவித்தார் சின்னகுரும்பன் மகள்.

ஆனால் மேஜர் ஆகாததால், அரசு இல்லத்திற்கு அனுப்பியது நீதிமன்றம்., இந்நிலையில் கடந்த வாரம் தந்தைக்கு கடிதம் எழுதி, என்னை அழைத்துச்செல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

இதையடுத்து தனது மகளின் கடிதத்தை காட்டி தன்னுடன் அழைத்துசெல்ல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் சின்னகுரும்பன்., இதனால் இன்று கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள் சின்னகுரும்பனுன் அவரது மகளும். மகளின் காதலனுன் அங்கே ஆஜராகவும் அதிர்ச்சியானார் சின்னகுரும்பன்.

அடுத்த அதிர்ச்சியாக, நீதிமன்றத்தில், நான் இப்போது மேஜர். அதனால் எனக்கு காதலனுடன் போகத்தான் விருப்பம்ம். இதைச்சொன்னால் என் அப்பா கோர்ட்டுக்கு வரமாட்டார். அதனால்தான் அவரிடம் பொய்சொன்னேன் என்று சொன்னார்.

கோர்ட்டும் மகளை காதலனுடன் செல்ல உத்தரவிட்டதால் கலங்கிய கண்களூடன் வீடு திரும்பினார் சின்னகுரும்பன்.

Wednesday, June 22, 2011

கலைஞர் மேல் அக்கறைபடும் ஜெயா?

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை, முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாபஸ் பெற்றுக்கொண்டார். நாடாளுமன்ற வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலையை நிறுவுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் பற்றி முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 22.11.06 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்து இருந்தார்.

இந்த அறிக்கை தன்னை அவதூறு செய்வதாக கூறி, ஜெயலலிதா மீது, கருணாநிதி வழக்கு தொடர்வதற்கு அனுமதி அளித்து 28.12.06 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில் கருணாநிதி சார்பில் அப்போதைய சென்னை நகர குற்றவியல் அரசு வக்கீல் 12.1.07 அன்று ஜெயலலிதா மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ஜெயலலிதா 17.1.07 அன்று மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் பொதுத்துறை செயலாளர், சென்னை நகர குற்றவியல் அரசு வக்கீல், கருணாநிதி ஆகியோரை பிரதிவாதியாக ஜெயலலிதா சேர்த்திருந்தார். அந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.ஜோதிமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்ள மனுதாரர் விரும்புவதாக கூறினார். அதைத்தொடர்ந்து நீதிபதி பி.ஜோதிமணி, `ஜெயலலிதா தொடர்ந்துள்ள வழக்கை திரும்ப பெறுவதாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் வாதிட்டார்.

அதற்கான மனுவையும் அவர் தாக்கல் செய்தார். வழக்கு வாபஸ் பெறப்படுவதை அடுத்து, அந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று உத்தரவு பிறப்பித்தார்.

இரு ஸ்டார்கள் சந்தித்துக்கொண்டனர்

சென்னை, ஜூன் 23: சிங்கப்பூரில் ஓய்வெடுத்து வரும் நடிகர் ரஜினிகாந்தை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும், கன்னட நடிகர் அம்பரீஷும் புதன்கிழமை சந்தித்து நலம் விசாரித்தனர்.

சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்புக்காக ரஜினிகாந்த் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், அவர் கடந்த 15-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதையடுத்து சிங்கப்பூரில் அவர் ஓய்வெடுத்து வருகிறார். ரஜினிகாந்தைப் பார்க்க அவரது நெருங்கிய நண்பர்களும் நடிகர்களுமான சிரஞ்சீவி, அம்பரீஷ் ஆகியோர் சிங்கப்பூர் சென்றார்கள்., ரஜினிகாந்த் தங்கியுள்ள குடியிருப்புக்கு சென்று அவரிடம் உடல் நலம் விசாரித்தனர். "ரஜினி குணமடைந்துவருகிறார். சென்னை திரும்புவதற்கு ஆர்வமாக இருக்கிறார்' என்று சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

ரஜினியைச் சந்திக்க சிங்கப்பூர் சென்ற சிரஞ்சீவியும், அம்பரீஷும் மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கும் சென்று வந்ததாகத் தெரிகிறது.

பெற்ற பெண் குழந்தையை புறக்கணிக்கும் பெற்றோர்கள்!?

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் கருணை இல்லம் நடத்தி வரும், மேரி. இவரது வீட்டுக்கு பக்கத்தில் கடந்த 18.06.2011 அன்று இரவு, முப்பது வயது மதிக்கத்தக்க, மனநலம் பதிக்கப்பட்ட ஒரு பெண் பிறந்து சில நிமிடங்களே ஆன ஒரு குழந்தையை கையில் வைத்துக்கொடிருந்தார்.

அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் மேரிக்கு தகவல் கொடுத்ததால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்த அந்த குழந்தையை மீட்ட மேரி, மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்து, கடந்த 20.06.2011 அன்று சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூசனத்தை சந்தித்து இக்குழந்தையை தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் ஒப்படைத்தார்.

சேலம் மாவட்டத்தில் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில், கடந்த 1991 ம் அண்டு முதல் 989 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்., இவற்றில், 69 ஆண் குழந்தைகளும், 916 பெண்குழந்தைகளும், 3 பாலினம் அறிய முடியாத குழந்தைகளும் உள்ளார்கள் என்று சமூகநலத்துறை அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

அரசு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டிருந்த தொட்டிலில் போடப்பட்ட இக்குழந்தைகள், அரசால் அங்கீகரிக்கப்பட தத்து மையங்கள் மூலம் தகுதி வாய்ந்த பெற்றோர்களுக்கு தத்து கொடுக்கப்பட்டுள்ளர்கள் என்று தெரிவித்தார்கள்

A T M மெசினில் இத்தனை விசயங்களா? பெண்களுக்காக

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கைரேகையால் இயக்கும் சிறப்பு ஏடிஎம் மையம் மாவட்டத்தில் முதல்முறையாக திண்டுக்கல்லில் அமைக்கப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக்குழு மூலம் பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெறுவதுடன் அவர்கள் சார்ந்த குடும்பமும் வளர்ச்சி பெற்று வருகிறது. பெற்ற கடனை முறையாக அவர்கள் திரும்ப செலுத்துவதால் வங்கிகளும் போட்டி போட்டுக் கொண்டு கடனுதவி அளித்து வருகின்றன. மேலும் இவர்களின் விற்பனைப் பொருட்களைச் சந்தைப்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டன.

தொடர்ந்து சந்தைப்படுத்தல் நுணுக்கம், வித்தியாசமான பொருட்களை உருவாக்குதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன., இதன் அடுத்தகட்டமாக இந்தியன் வங்கி இவர்களுக்கு சிறப்பு வசதியை செய்து தந்துள்ளது. இதன்படி இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள சுய உதவிக்குழுவினர் கடன் பணம், சிறுசேமிப்புப் பணம் உள்ளிட்டவற்றை கையாள தனி ஏடிஎம் மையத்தை அமைத்துள்ளது., இதில் சுய உதவிக்குழுத் தலைவி, பொருளாளர் இருவரும் தனித்தனியாக தங்கள் கைரேகைகளைப் பதிவு செய்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

ஒருவர் கைரேகை வைத்ததும் அடுத்தவருடைய கைரேகையை வைக்கக் கூறும் வகையில் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், தவறான ரேகைப்பதிவு இருந்தாலும் அவற்றை தெரிவிக்கும்.

Tuesday, June 21, 2011

நெல்லிக்காய் (கனி) எத்தனை மருத்துவ குணம்!

நெல்லிக்காயோட அறிவியல் பேரு... பைலாந்தஸ் எம்ப்ளிகா. நெல்லிக்காய் மரத்தின் இலைகளோட சாறு ரொம்ப நாளா ஆறாம இருக்குற புண்ணுக்கு நல்ல மருந்து. இலையோட வடிசாற்றையும், வெந்தயத்தையும் கலந்து சாப்பிட்டா, வயிற்றுப்போக்கு குணமாகும்.

பட்டையும், வேரும் உடலுக்கு வலு சேர்க்கும். மலர்கள் குளிர்ச்சி தருபவை. வைட்டமின் சி குறைவால வரும் ஸ்கர்வி நோயைத் தீர்க்குது. குளிர்ச்சியைத் தருது. ஜீரணத்தை ஊக்குவிக்குது. சிறுநீரக கோளாறுகளைப் போக்கும். ரத்த சோகை, மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்து இந்த நெல்லிக்காய்தான்.

அது மட்டுமா...இதோட விதைகளை அரைச்சிக் கண்வலிக்கு பூசினா உடனே குணமாகும். இதோட வடிசாறு ஆஸ்துமா கோளாறுக்கும், மூச்சுக்குழல் அழற்சியையும் போக்குது., இப்பவே நெல்லிக்காய சாப்பிட ஆரம்பிச்சிட்டீங்களா..?! நெல்லிக்காய்ன உடனே உங்களுக்கு வேற ஒண்ணும் ஞாபகத்துக்கு வரணுமே...!

கரெக்ட்...நீங்க நெனச்சது சரிதான்.! சங்க இலக்கியத்துல தமிழ் நீண்ட நாள் வாழனும்னு ஆசைப்பட்டு, அதியமான், நம்ம அவ்வையாருக்கு கொடுத்ததும் இதே நெல்லிக்கனிதான்.

கடல் கடந்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் இந்திய தூதரகம்!

நியூயார்க், ஜூன் 22 அமெரிக்காவில் இந்தியத் தூதருக்கு எதிராக அவரது வீட்டின் முன்னாள் பணிப்பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பிரபு தயாள் தூதராக பணிபுரிகிறார். அவரது வீட்டில் பர்த்வாய் (45) என்பவர் பணிப்பெண்ணாக முன்பு வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், பிரபு தயாள் மீது அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மாதம் 300 டாலர் சம்பளத்திற்கு, தன்னை பிரபு தயாள் நீண்ட நேரம் வேலை வாங்கியதாகவும், தனது பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு அவர் தர மறுப்பதாகவும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும், வீட்டில் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு அறையில் தான், தனக்கு தூங்குவதற்கு இடம் ஒதுக்கினர் என்றும், பாலியல் ரீதியான முயற்சிகளையும் பிரபு தயாள் மேற்கொண்டார் என்றும் பர்த்வாய் தனது மனுவில் கூறியுள்ளார்., பர்த்வாய்க்கு உதவி வரும் சட்ட உதவி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

# இந்தியருக்கு உதவி செய்வதற்குத்தான் தூதரககங்கள் ஆனால் இவாக்கள் மறக்காமல் உபத்திரம் செய்வார்கள்,. பாஸ்போர்ட் புதுப்பிக்க அல்லாது அவுட் பாசில் நாட்டை விட்டு வெளியேற (travel document) போன்ற பணிகளுக்கு சென்றால் குறித்த காலத்தில் செய்து தருவதில்லை, இது போன்று பல விஷயங்கள். இந்திய அரசுதான் இதற்கு தக்க நடவடிக்கை எடுத்து உதவனும். #

இந்நாள், முன்னாள், துணை முதல்வர் தேர்தல் சிலவு கணக்கு!!

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது தேர்தல் செலவுக் கணக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளனர். சட்டசபைத் தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.16 லட்சம் வரை செலவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது.

ஆனால் முதல்வர் ஜெயலலிதா, ரூ.9.5லட்சமும், திமுக தலைவர் கருணாநிதி ரூ.4.47 லட்சம் மட்டுமே செலவு செய்ததாக கணக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா பொதுக் கூட்டங்களுக்காக-ரூ.20,650 துண்டுப் பிரசுரங்கள், போஸ்டர்கள், பிரச்சார வீடியோ-ஆடியோ செலவு-ரூ.14,170 டிவி, ரேடியோ, பத்திரிக்கை விளம்பரம்-ரூ.58,300 வாகன செலவு-ரூ.65,700 அலங்காரங்கள் மற்றும் பேனர்கள்-ரூ.32,300 செலவு செய்துள்ளார்

முன்னாள் முதல்வர் கருணாநிதி தேர்தலுக்காக ரூ.4,47,615 மட்டுமே செலவு செய்துள்ளதாகவும், இதில் வாகனங்களுக்கு மட்டும் ரூ.2 லட்சம் செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் வெறும் ரூ 3.32 லட்சம் மட்டுமே தேர்தலுக்காக செலவிட்டதாகவும், இதில் பொதுக் கூட்டங்களுக்காக ரூ.66,700ம் கட்அவுட்டுகள், பேனர்கள், அலங்கார வளைவுகளுக்காக வெறும் ரூ.980ம் செலவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தலுக்காக ரூ.7.97 லட்சம் செலவு செய்துள்ளதாகவும், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ரூ.4.04 லட்சமும் செலவு செய்துள்ளதாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர்., மேலும் தேர்தல் ஆணைய வட்டாரத் தகவலின்படி 223 வேட்பாளர்கள் இதுவரை தங்கள் செலவுக்கணக்கை தாக்கல் செய்யவில்லை. அவர்கள் மீது 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Monday, June 20, 2011

பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?

கடந்த 17ம் தேதி திரைக்கு வந்தபடம் அவன் இவன். பாலா படமா அல்லது பலான படமான என்று சந்தேகத்தை ஏற்படுத்தும் படமாக அவன் இவன் படம் அமைந்திருப்பதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தபடத்திற்கு சிங்கப்பட்டி ஜமீன் தரப்பில் இருந்து பயங்கர எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அதாவது படத்தில் ஜமீன் தீர்த்தபதி என்று ஒரு கிராமத்தை காட்டுகிறார்கள். அதில் தீர்த்தபதி எனும் கேரக்டரில் நடித்திருப்பவர், குடிப்பது போன்றும், படத்தின் முடிவில் அவரை நிர்வாணமாய் ஓடவிடுவது போன்றும் காட்சி அமைப்புகள் உள்ளன. அதேபோல் மற்றொரு காட்சியில் சொரிமுத்து என்ற கேரக்டரை உருவாக்கி இந்த கோவிலை நம்பிதான் நீங்க வாழ்ந்திட்டிருக்கிறீங்க என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. இதற்கு அம்பை,ஆலங்குளம் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அம்பை,சிங்கை மற்றும் நெல்லையில் பல இடங்களில் இதுபற்றிய கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவன்-இவன் படத்துக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக சிங்கம்பட்டி சமஸ்தானம் அறிவித்து உள்ளது.

மேலும் இதில் உள்ள வசனம் ஹிந்துத்துவ சிந்தனை : ஆர்.எஸ்.எஸ்.காரன் மாடு மற்றும் ஒட்டகக் கறி உண்பவர்களை மனுதர்ம அடிப்படையில் தண்டிக்க வேண்டும் என்கிறான். ஆனால் நமது பாலாவோ, ஒட்டக இறைச்சி சாப்பிடுபவனை, மாட்டிறைச்சி சாப்பிடுகிறவன் தண்டிக்க வேண்டும் என்று விரும்புகிறார். இராமகோபாலனுக்கே ஒரு படி மேலே போய் ‘இந்துத்துவ’ வகுப்பு எடுக்கிறார் நமது பாலா.

இந்த இடத்தில் ‘பாலா’வின் முந்தைய படைப்பான “நான் கடவுள்” திரைப்பட வசனம் நினைவுக்கு வருகிறது. ‘மாட்டுக்கறி தின்னாலும் மலையாளி புத்திசாலியாத்தாண்டா இருக்கான்’ என்று வில்லன் ஒரு வசனம் பேசுவான். அந்த வசனத்திற்கு முழுமுதற்பொறுப்பு ஜெயமோகன் என்னும் எழுத்தாளர். மேற்கூறிய வசனத்தில் இரண்டு செய்திகள் நாம் கவனிக்க வேண்டும்

(1) மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களுக்கு புத்தி கிடையாது. (2) மலையாளிகள் புத்திசாலி. ஜெயமோகன் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்று சொல்லும்போது, அவரின் இந்துத்துவ அரசியல் மனநிலை அப்பட்டமாக வெளிப்படுகிறது. அதே சமயம், தன்னுடைய மலையாளி இன பாசத்தையும் விட்டுக் கொடுக்காமல், மலையாளிகள் புத்திசாலிகள் என்று ஒரு கருத்தினை பதிவு செய்கிறார். எஸ்.ராமகிருஷ்ணன்தான் அவன் - இவன் படத்திற்கு செயமோகன் பாணியில் ஒரு வசனத்தை எழுதியிருக்கிறார்.##

காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா? புரோகிதர் மந்திரம் சொல்ல

காத்மாண்டு: நேபாள் நாட்டில் முதன்முறையாக இந்து கோயில் ஒன்றில் இந்து மதசடங்கு முறைப்படி அமெரிக்காவைச் சேர்ந்த ஒரினச்சேர்க்கை (‌லெஸ்பியன்) தோழிகள் இருவர் திருமணம் செய்துகொண்டனர்.

புரோகிதர் மந்திரம் சொல்ல , அங்குள்ள இந்து கோயில் அர்ச்சகர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்தது. இந்த திருமணம் ஆசியாவின் முதன்முதலாக வெளிப்படையாக நடந்த லெஸ்பியன் திருமணம் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் கலேரோடோவைச் சேர்ந்தவர் கர்டினி மிட்செல் (41) இவர் ஒரு பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சாராவெல்டன் (48) இவர் அமெரிக்காவில் வக்கீலாக உள்ளார். இவரும் நீண்ட நாட்களாக நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதில் ஷாராவெல்டன் , நேபாள் வம்சத்து அமெரிக்க வாழ் பெண் ஆவார். எனவே அவரது விருப்படி நோபள் நாட்டிலேயே இந்து முறைப்படி திருமணம் செய்ய கர்டினி மிட்செல் சம்மதித்தார். இருவரும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நேபாள் வந்தனர். திருமணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஷாப்பிங் செய்தனர். நேற்று காத்மண்டுவில் உள்ள தக்ஷின்காளி எனும் புகழ்பெற்ற இந்து கோயிலில் , இந்து சமய சடங்குகளின்படி, புரோகிதர்கள் மந்திரம் சொல்ல இவர்களது திருமணம் நடந்தது. இவர்களது திருமணத்தை நேபாள் நாட்டின் ஓரினச்சேர்க்கை திருமண உரிமையை ஆதரிக்கும், புளு டைமன்ட் சமூகம் மற்றும் பிங்க் மவுன்டைன் ,எனும் அமைப்புகள் முன்னின்று நடத்தி வைத்தது. இதில் இருவீட்டு குடும்ப உறுப்பினர்கள், திருநங்கைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இதற்கிடையே நேபாள் கோர்ட்டில் ஏற்கனவே ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அனுமதியளித்திருந்தது. அதுமட்டுமின்றி, ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பெண் லெஸ்பியன்களுக்கு சட்ட பாதுகாப்புக்கென புதிய அரசியல் சட்டத்தையும் இயற்றியுள்ளது. இந்த லெஸ்பியன் திருமணம் ஆசியாவின் முதல் லெஸ்பியன் திருமணம் என கூறப்படுகிறது. இந்த திருமணம் மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிலும் ஓரினச்சேர்க்கையாளர்கள்,லெஸ்பியன்கள் வருகை அதிகரிக்கும் அரசுக்கு அன்னிய செலாவணி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நேபாள் நாட்டில் நிலவுகிறது.

நீதி மன்றத்தையே அவமதித்தது தமிழக அரசு!

சமச்சீர் கல்வி திட்டம் முதல் கட்டமாக 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே, மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்படுத்துவது குறித்து நிபுணர் குழு அமைத்து 3 வாரங்களுக்குள் அறிக்கை சமர்பிக்கும்படியும் அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.,இதனால் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழக அரசு மீது ஆசிரியர் மனோன்மணியம் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார் .

அதில் 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்பு பாடப் புத்தகங்களில் சில பக்கங்கள் கிழிக்கபடுவதாகவும் , திருத்தம் செய்யபடுவதாகவும், சமச்சீர் கல்வியினை நடைமுறைப்படுத்தாமல் கடந்த ஆண்டு பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன.,மேலும், சமச்சீர் கல்வி வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. ஆனால் நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு அவமதிப்பு செய்கின்றது என கூறியுள்ளார்.

#தன்னுடைய சொத்து குவிப்பு வழக்கில் ஒரு தடவை கூட கோர்ட் வாசலை மிதிக்காதவர் இது எம்மாத்திரம்.#

Sunday, June 19, 2011

இந்திய டாக்டர் ஒருவரை தேடும் பனி மும்முரம் அமெரிக்க எஃப் பி ஐ

சிகாகோ, ஜூன்.20: இந்தியாவில் பிறந்த டாக்டர் கெளதம் குப்தாவை அமெரிக்காவின் எஃப் பி ஐ தீவிரமாகத் தேடி வருகிறது. அவரைப் பிடிக்குமாறு சர்வதேச போலீசையும் அமெரிக்கா உஷார்படுத்தியுள்ளது.

டாக்டர் கெளதம் குப்தாவின் எடைக் குறைப்பு விளம்பரங்கள் மிகவும் பிரபலமானவை. அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க இன்சூரன்ஸ் நிறுவனங்களை 25 மில்லியன் டாலர் அளவுக்கு மோசடி செய்துள்ளதாக எஃப்பிஐ குற்றம்சாட்டியுள்ளது.

புளு கிராஸ், இல்லினாய்ஸ் புளு ஷீல்டு மற்றும் இல்லினாய்ஸ் மெடிகெய்ட் ஆகிய நிறுவனங்களில் அவர் போலியாக உரிமை கோரியதாக சிகாகோ டிரிபியூன் தெரிவிக்கிறது., மெடிகெய்ட் குறைந்த வருவாய் உடைய குடும்பங்களுக்கான ஓர் அமெரிக்க மருத்துவத் திட்டமாகும். இதற்கு அமெரிக்க அரசும், பல்வேறு மாநிலங்களும் நிதி உதவி அளிக்கின்றன. மாநில அரசால் இந்த் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மோசடி செய்ததாக குப்தா மீது புகார் வந்ததையடுத்து, அவருடைய மருத்துவமனையின் முன்னாள், இந்நாள் ஊழியர்கள் மற்றும் நோயாளிகளிடம் எஃப்பிஐ அதிகாரிகளும், இல்லினாய்ஸ் மாநில போலீசாரும் விசாரணை நடத்தினர்., கெளதம் குப்தா தற்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என எஃப்பிஐ செய்தித்தொடர்பாளர் ரோஸ் ரைஸ் தெரிவித்தார்.

குப்தாவின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 35 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என சிகாகோ டிரிபியூன் தெரிவிக்கிறது,. குப்தா அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என ஸ்பிரிங்ஃபீல்டு நீதிமன்றத்தில் அமெரிக்க போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடைசி ச்சான்ஸ் கலைஞருக்கு...!?

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்றதாகக் கூறப்படும் டி.பி.ரியாலிட்டி நிறுவனம், அதற்குப் பிரதிபலனாக தனது துணை நிறுவனங்கள் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி வழங்கியதாக சிபிஐ துணைக் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள கனிமொழியும், சரத்குமாரும் ஜாமீன் கோரி தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அவர்களது மனுக்களை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து இருவரும் தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால், தில்லி உயர் நீதிமன்றமும் அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று சிபிஐ தரப்பில் கடந்த 17-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கனிமொழியும், சரத்குமாரும் முக்கிய சதியாளர்கள். அவர்களை விடுவித்தால் சாட்சிகளையும், ஆதாரங்களையும் அழித்து விடுவார்கள், எனவே அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று சிபிஐ மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் டி.வி.க்கு பரிமாற்றம் செய்யப்பட்ட ரூ.214 கோடி ஊழல் பணம்தான், இருவரும் கூறுவதுபோல் கடன்தொகை அல்ல என்றும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. சிறப்பு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் ஜாமீன் மனுக்களை தீவிரமாகப் பரிசீலித்து தள்ளுபடி செய்து விட்டன. 2ஜி வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இருவருக்கும் ஜாமீன் வழங்குவது முறையாக இருக்காது என்று சிபிஐ தனது மனுவில் மேலும் கூறியுள்ளது. இந்தப் பின்னணியில் கனிமொழி, சரத்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.

சிறுமியை சீறலளித்த காவல்துறையின் காமுகன்

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் 14 வயது சிறுமி போலீஸ் நிலையத்தில் கற்பழித்து கொல்லப்பட்டார். இந்த நிலையில் அங்கு மீண்டும் ஒரு கொடூரம் சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

உத்தரபிரதேச மாநிலம் கன்னூஜ் மாவட்டம் குர்புர்வா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரீத்தி. 14 வயதான அவளை அந்த கிராமத்தைச் சேர்ந்த குல்தீப், நிரஞ்சன் ஆகியோர் கற்பழிக்க முயன்றனர். இதை தடுக்க சிறுமி போராடினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சிறுமியின் கண்களை கத்தியால் குத்தி கற்பழித்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் அந்த சிறுமியின் இடது கண் பார்வை பறிபோனது. வலது கண் அதிகமாக சேதம் அடைந்து உள்ளது.

இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ய மறுத்த சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் ஆகிய 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

காவல்துறையை கிலி பிடிக்கச்செய்யும் தமிழக அரசு!!

திருவனந்தபுரம்:கேரள மாநில காவல் துறையில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முதல், அனைத்து உயரதிகாரிகளும் தங்களது சொத்துக் கணக்கு விவரங்களை, தங்களது மேல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என, மாநில டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.

மாநிலத்தில் பல்வேறு மோசடி நிதி நிறுவனங்களில், கேரள மாநில காவல் துறையைச் சேர்ந்த சிலர், பங்குதாரர்களாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, நிதி முதலீடு சம்பந்தமான எந்த நிறுவனங்களையும் மறைமுகமாக நிர்வகிக்கவோ, பங்குதாரர்களாகவோ கூடாது என, மாநில போலீஸ் டி.ஜி.பி.,ஜேக்கப் புன்னூஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாநில காவல் துறையில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முதல், அவருக்கும் மேல் உள்ள அனைத்து உயரதிகாரிகளும் தங்களது சொத்துக் கணக்கு விவரங்களை உடனடியாக தங்களது மேல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மாநிலத்தில் பல்வேறு நிலைகளில் உள்ள போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த உத்தரவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.போலீசார் இடமாற்றத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என, போலீஸ் சங்கத்தின் சார்பில் முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது என்றாலும் அதை அவர் நிராகரித்து விட்டார். போலீஸ் உயரதிகாரிகள் இடமாற்றம் தொடர்ந்து நடந்து வருகிறது.

Saturday, June 18, 2011

ஆப்ரேசன் செய்து அசத்திய இங்கிலாந்து விஞ்ஞானிகள், வயது 20

இங்கிலாந்தை சேர்ந்தவர் பெக்கி ஜோன்ஸ். 20 வயது பெண்ணான இவர் கடுமையான மூச்சு திணறல் நோயினால் அவதிப்பட்டார். இவரை தெற்கு மான்லுஸ்டரில் உள்ள பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவரது நுரையீரலில் பூஞ்சைக்காளான் நோய் பாதித்து இருப்பதை கண்டறிந்தனர். எனவே, நுரையீரலில் உள்ள பூஞ்சைக்காளானை அகற்ற மருந்து மாத்திரைகளை வழங்கினர்.ஆனால், அந்த நோய் குணமாகவில்லை. மாறாக அதிக அளவில் பரவியது. முன்பை விட மூச்சு திணறல் அதிகமானது.

எனவே நுரையீரல் மாற்று ஆபரேசன் நடத்த முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து பெக்கி ஜோன்ஸ்சுக்கு நுரையீரல் மாற்று ஆபரேசனை வெற்றிகரமாக செய்து முடித்தனர். தற்போது அவர் எந்தவித பிரச்சினையும் இன்றி வழக்கமாக சுவாசிக்கிறார்.

இதற்கு முன்பு அமெரிக்காவில் 2 வயது சிறுவனுக்கு செயற்கை நுரையீரல் பொருத்தப்பட்டது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இந்த அறுவை சிகிச்சையை நிகழ்த்தினர். அதுவே மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டது. தற்போது உலகிலேயே முதல்முறையாக நுரையீரல் மாற்று ஆபரேசன் செய்து இங்கிலாந்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இந்நாள் முதல்வருக்கு முன்னாள் முதல்வர் எழுதிக்கொள்வது

முதல்-அமைச்சராக 3 வது முறை பதவியேற்றுள்ள ஜெயலலிதா தனனை பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும் , தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச்செயலகத்தை ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியது தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்தினால் தான் புதிய தலைமைச்செயலகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பணத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை புறக்கணிப்பது என்பது மக்களையே அவமதிப்பது போல் ஆகும். தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட பல பாலங்களில் தான் முதல்வரின் கார் செல்கிறது . கோட்டையில் உள்ள நாமக்கல் கவிஞர் கட்டடம் தி.மு.க., ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டது. ஜெயலலிதாவின் பிடிவாதம் அவரது பதவிக்கு அழகல்ல என்று கூறியுள்ளார்.

உள்ளமே உங்களுக்குத்தான் உருகிப்போன ரஜினி

சென்னை : உங்களை மகிழ்விப்பது தான் என் லட்சியம்' என, ரசிகர்களுக்கு நடிகர் ரஜினி கடிதம் எழுதியுள்ளார்,சிறுநீரக கோளாறு காரணமாக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினி, தீவிர சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறி, மருத்துவமனையிலிருந்து திரும்பியுள்ளார். தற்போது, சிங்கப்பூரில் தங்கியுள்ள அவர், தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆகியோருடன் தொலைபேசி மூலம் பேசிய ரஜினி, ரசிகர்களுக்கு தன் கைப்பட நான்கு பக்க கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:வாழ்க்கை என்ற விளையாட்டில், காசை மேலே சுண்டிவிடுவது தான் மனிதனின் வேலை, அது கீழே விழும்போது, பூவா, தலையா என்பதை ஆண்டவன் முடிவு செய்கிறான்., என் மீது அவர்கள் காட்டிய அன்பும் தான், என்னைக் காப்பாற்றி உள்ளது. விரைவில், "ராணா' படம் மூலம் ரசிகர்களை மகிழ்விப்பேன். அது தான் என் லட்சியம். இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.

ரசிகர்களுக்கு கடிதம் எழுதுவதற்காக, பேப்பர் மற்றும் பேனாவை கொண்டு வரச் சொல்லி, ரஜினியே கடிதத்தை எழுதியதாக, ரஜினியின் பி.ஆர்.ஓ., கூறியுள்ளார்.உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை இசபெல்லா மருத்துவமனையில் ஏப்ரல் 29ம் தேதி ரஜினி சேர்க்கப்பட்டார். அன்றைய தினமே வீடு திரும்பிய ரஜினி, மீண்டும் இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு, மே 13ம் தேதி மாற்றப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு, மே 27ம் தேதி சென்றார்.

உலகெங்கும் அகோரமாய் காட்சி அளிக்கும் பயங்கரவாதம்!?

பாஞ்ச்குலா: சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆர் எஸ் எஸ் தீவிரவாதி லோகேஷ்குமார் சர்மாவுக்கு காவல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலம் பானிபட் அருகில் உள்ள திவானா கிராமத்தில் கடந்த 2007-ம் ஆண்டு சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தில் 68 பேர் இறந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள். ÷இது தொடர்பாக ஹிந்து தீவிரவாதி சுவாமி அசீமானந்தா கைது செய்யப்பட்டு அம்பாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆர் எஸ் எஸ் தீவிரவாதி லோகேஷ்குமார் சர்மா கடந்த மே மாதம் 15-ம் தேதி கைது செய்யப்பட்டார். இவரிடம் போலீஸôர் தீவிர விசாரணை நடத்தினர். சனிக்கிழமை இவர் பாஞ்குலா கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு ஜூலை 1-ம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டார்.
------------------------
# கோத்ராவிற்க்கப்புறம் குஜராத்தில் நடந்தது தற்செயல் அல்ல. ஏதோ கட்டுப்படுத்த முடியாத, திட்டமிடப்படாத சமூக வன்முறையுமில்லை. வேண்டுமென்றே ஒரு இன மக்களை அழிக்கப் போடப்பட்ட செயல் திட்டம். ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட படுகொலைகள்.

திட்டமிட்டபடி, தொலை நோக்குப்பார்வையுடன் நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற எந்த வித்தியாசமுமின்றி முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் குறிவைக்கப்பட்டது. பெருமளவில் காவிக்கும்பல் ஒரே நோக்கத்தின்கீழ் ஒன்று சேர்ந்தது. எந்த வகையிலேனும் முஸ்லிம்களை கொல்லவேண்டும். குத்தி, கிழித்து முடமாக்கப்பட்டபின் உயிரோடோ, இல்லாமலோ எரியூட்டினார்கள்.

இதில் பங்கெடுத்துக்கொண்ட காவிக் கும்பல்களில் சிலர் தெஹல்காவிடம், இஸ்லாம் எரியூட்டுவதை அனுமதிக்கவில்லை என்பதால் முஸ்லிம்களை உயிரோடு எரித்துக் கொல்வதிலேயே ஆனந்தமடைந்ததாக சொன்னார்கள்.

பெப்ருவரி 27 க்குப்பிறகு, மூன்று நாட்கள் குஜராத்தின் பிஜெபி அரசை இந்துத்வ காவிக்கும்பல் கையிலெடுத்துக்கொண்டு, காட்டுமிராண்டித்தனத்தின் உச்சக்கட்டதிற்க்கு இட்டுச்சென்றது. ஆர்எஸ்எஸ், விஹெச்பி, பஜ்ரங்தள், கிசான் சங்க், அகிலபாரதீய வித்யார்தி பரிஷத், பிஜெபி, கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட கொலைப்படை உருவாக்கப்பட்டது. மாநிலமெங்கும் பள்ளிவாசல்கள், தர்காக்கள் அழிக்கப்பட்டன. 73 முஸ்லிம் வழிபாட்டுத்தலங்கள் அஹமதாபாதில் மட்டும் தீக்கிரையாக்கப்பட்டது. சபர்கந்தாவில் 55 ம் வடோடராவில் 22ம் பின்னர் கொளுத்தப்பட்டது.

மஹாத்மாவின் பூமிக்கு நீங்கா களங்கத்தை ஏற்படுத்திய இந்த காவிக் கும்பல் அடியாட்கள் இரு வகைப்பட்டனர். திரைமறைவிலிருந்து சதித் திட்டம் தீட்டிய கட்சிநிர்வாகிகள் மற்றும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சிசுக்கொலைகள் நடத்திய காலாட்படை. சிலசமயம் தலைவர்களே காலாட்படையிலும் தைரியமாக பங்கெடுத்தார்கள் இதையெல்லாம் முன்னின்று நடத்தி ஆலோசனை வழங்கியது ஒரு மாநில முதல்வர் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை, ஆகையால் இவரை மோடி என்பதற்கு பதிலாக நரமாமிச கேடி என்பதே பொருத்தமான இருக்கும் #

தொடங்கியது கட்டவுட் கலாச்சாரம், தொடங்கப்போகுது ட்ராபிக் ஜாம்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்றார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக நாளை முதல் 3 நாட்கள் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

இதையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அண்டை மாவட்டங்களில் இருந்து போலீசார் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இருந்து 54 போலீசார், டிஎஸ்பி ராஜமன்னார் தலைமையில் இன்று காலை திருச்சி புறப்பட்டுச் சென்றனர்.

#பந்தாவுக்கு குறைவில்லாமல் பகட்டும் ஜெ!#

இலங்கை செல்ல அனுமதி மறுப்பு?

புதுடில்லி : இலங்கை நடத்தவுள்ள இலங்கை பிரீமியர் லீக் தொடரில் கலந்து கொள்ள இந்திய அணி வீரர்களுக்கு அனுமதி கிடைக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தொடரில் கலந்து கொள்ள இந்திய அணி வீரர்களுக்கு அனுமதி வழங்குவதில் பி.சி.சி.ஐ.,க்கு விருப்பமில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படியே கப்பல் போக்கு வாரத்திற்கும் தடை விதித்தால் நன்று.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!