Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, March 31, 2011

இக்கட்டான நிலையில் இறுதிப்போட்டி?

மொஹாலியில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அரை இறுதிப் போட்டிக்கு டிக்கெட் வாங்க ரசிகர்கள் பெருமளவு குவிந்து மோதல் நிகழ்ந்த சம்பவத்தைப் போலவே மும்பையிலும் நிகழ வாய்ப்புள்ளது. ரசிகர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தாலும் இருக்கைகள் குறைவாகவே உள்ளன.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான 40 பெட்டிகளில் பெரும்பாலானாவை ஏற்கனவே சராசரியாக ஒரு பெட்டி ரூ 3.75 கோடி என்ற அளவில் விற்றுவிட்டது. ஒவ்வொரு பெட்டியிலும் 15 பேர் வரை அமரலாம்.

ரிலையன்ஸ் நிறுவனம்தான் அதிக பெட்டிகளை வாங்கியுள்ளது. ரூ 11 கோடிக்கும் அதிகமாகக் கொடுத்து 3 பெட்டிகளை வாங்கியுள்ளது. எஸ்ஸார் இன்டஸ்ட்ரீஸ், கிங்ஃபிஷர், ஐடியா, பஜாஜ், டாடா கன்சல்டன்சி உள்ளிட்ட நிறுவனங்கள் இதர பெட்டிகளை வாங்கியுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான பெட்டிகளின் விலையே இறுதிப் போட்டி டிக்கெட்டுக்கு அதிக தேவை இருப்பதைக் காட்டுகிறது.

பொதுமக்களுக்கு குறைவான டிக்கெட்டுகளே விற்பனை செய்யப்படுகின்றன. வான்கடே ஸ்டேடியத்தில் 32,000 பேர் வரை அமரலாம். ஆனால் 4000 டிக்கெட்டுகள் மட்டுமே சாதாரண பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த இருக்கைகளில் 12.5 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கணினியை பார்ப்பவர்கள் கவனத்திற்கு!!

எந்தவொரு உடல் உறுப்பும் ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ அல்லது அதிகப்படியான வேலையை செய்யும் போதோ பாதிப்பு ஏற்படுகிறது.

உடல் உறுப்பில் மிக முக்கியமானது கண். சாதாரணமாக நாம் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணணியைத் தொடர்ந்து பல மணி நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் பாதிக்கப்படுகிறது.

கண்களுக்கு ஓய்வு என்றால் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல் மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும். தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஓர் அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓய்வாக அமையும். பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது.

அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும். அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும் போது உள்ளங்கைகள் இரண்டையும் நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

அப்படி செய்யும் போது உள்ளங்கைகளை எடுத்து விட்டு சிறிது நேரம் கழித்து மெதுவாக கண்களைத் திறக்க வேண்டும். மேலும் இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும்.

அதாவது ஈரத் துணியை பின்பக்க கழுத்தில் போட்டு விட்டு சிறிது எண்ணெய்யை புருவங்களில் தடவி விட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும் போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும் ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.

புருவம் என்பது கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஓர் இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால் தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால் அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணணியில் இருந்து பெற்று வருகிறது.

எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும். பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால் எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலே போதும்.

அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போது தான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றினால் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

இன்று ஒட்டு! நாளை வேட்டு!!

செல்போன் மெசேஜ் மூலம் நூதன பிரசாரம் துவங்கியுள்ளது. தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் முடிந்ததை தொடர்ந்து பிரசாரம் உச்சகட்டத்தில் நடந்து வருகிறது. ஆடம்பர பிரசாரத்தை விட சைலண்ட் பிரசாரமே முன்னிலைப்படுத்தி நடந்து வருகிறது.

இந்த தேர்தல் மாவட்டத்தில் சில கட்சிகளுக்கு கவுரவ பிரச்னையாக உள்ளது. தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் சார்பில் செல்போனில் மெசேஜ் மூலம் நூதன பிரசாரம் நடந்து வருகிறது. தற்போது தேர்தல் களத்தில் உள்ள ஒரு முக்கிய அணி சார்பில் அனுப்பப்பட்ட செல்போன் மெசேஜில் அணிக்கு ஓட்டு கொடுத்தால் இலவசம் கிடைக்கும்.

ஆனால் பெட்ரோல், டீசல் விலை மற்றும் பஸ் கட்டணம் உயரும். ஊழல் தற்போதைய சாதனையை விட அதிகரிக்கும் போன்ற வாசகங்கள் இடம்பெறுகிறது. மெசேஜ் பிரசாரம் துவங்கிய நிலையில் தேர்தல் நாள் நெருங்கும் போது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

உங்கள் ஓட்டோ உங்கள் கையில், நிதானமாக யோசித்து நல்லவர்களை தேர்ந்தெடுங்கள். ஜெயா முன்பு சேர்த்ததை சிலவு செய்துகொண்டுள்ளார், முதல்வர் சேர்த்துக்கொண்டு இருக்கிறார் இதுதான் வித்தியாசம்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு? சிந்திப்பாரா ஜெயா??

சட்டசபை தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில், தி.மு.க., கூட்டணியில் பக்காவாக திட்டமிடப்பட்டு, தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அன்புமணி, வி.சி., தலைவர் திருமாவளவன் என காங்கிரஸ் தவிர மற்ற கட்சி கூட்டணித் தலைவர்கள், "ரவுண்டு கட்டி' பிரசாரம் செய்து வருகின்றனர்.

காங்கிரசிலோ இப்பொழுது தான் தேர்தல் பணிக்குழுவே நியமிக்கப் பட்டுள்ளது. தி.மு.க., போட்டியிடும் 119 தொகுதிகளிலும், வாக்காளர்களுக்கு ராஜ உபச்சாரம் நடந்து வருகிறது. கணக்கு வழக்கின்றி, பணம் வாரி இறைக்கப்படுகிறது. வாக்காளர்கள் மட்டுமின்றி, தி.மு.க., தொண்டர்களும், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் கவனிக்கப்பட்டு வருகின்றனர். தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கைகளால் எத்தனை வழக்குகள் வந்தாலும், அது ஒருபுறம் இருக்கட்டும் என ஒதுக்கிவிட்டு, தி.மு.க., நிர்வாகிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.காங்கிரஸ் போட்டியிடும் ஒரு சில தொகுதிகளைத் தவிர, தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில், தி.மு.க.,வின், கொல்லை பக்கப் பிரசாரம் களை கட்டி வருகிறது.

அ.தி.மு.க., அணியில் அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கம்யூனிஸ்ட் தலைவர்கள் தா.பாண்டியன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஜெயலலிதா மற்றும் விஜயகாந்தின் பிரசாரத்திற்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. மக்கள் கூட்டம், பெரியளவில் வருகிறது. தலைவர்கள் இப்படி சூறாவளி சுற்றுப் பயணம் சென்று கொண்டிருக்கும் நிலையில், அ.தி.மு.க., வேட்பாளர்கள், தங்கள் கட்சியினரைக் கூடக் கவனிப்பதில்லை; கூட்டணிக் கட்சியினரை கண்டுகொள்வதேயில்லை. தே.மு.தி.க., - கம்யூனிஸ்ட்கள் உட்பட, கூட்டணிக் கட்சியினருடன் அ.தி.மு.க., வேட்பாளர்கள் ஒத்துப்போகாத நிலையே பல இடங்களில் நிலவுகிறது. அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை என்ற குற்றச்சாட்டை தி.மு.க., கூட்டணித் தலைவர்கள் பிரசாரமாக செய்யுமளவுக்கு, விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால், ஜெயலலிதா, விஜயகாந்த் மற்றும் கூட்டணித் தலைவர்கள் இணைந்து ஒரு மேடையில் தோன்றி இந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்

Wednesday, March 30, 2011

ஒபாமா நிர்வாகத்தில் முக்கிய பதவி? இந்தியர்களுக்கு!

வாஷிங்டன் : தேசிய கலை கவுன்சில் உறுப்பினராக சிகாகோவைச் சேர்ந்த தீபா குப்தா நியமிக்கப் பட்டுள்ளார். சீன குடியரசுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல் குழுவின் உறுப்பினராக நிஷா தேசாய் பிஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் தங்களது பதவியை ஏற்க முன்வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர்களுக்கு தான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருப்பதாகவும் அதிபர் ஒபாமா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்கள் தங்களது பதவியின் பொறுப்பை உணர்ந்து செயல்படுவர் என நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

சிகாகோவில் உள்ள ஜான் டி & கேத்தரீன் டி மேக் ஆர்தர் அறக்கட்டளையில் ஊடகங்களுக்கான திட்ட அதிகாரியாக உள்ள தீபா குப்தா இப்போது புதிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறக்கட்டளையின் நிதியத்தை கலை, கலாசாரத்தை வளர்க்கும் பணிக்கு இவர் பயன்படுத்துகிறார். கெல்லாக் நிர்வாகவியல் கல்லூரியில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.

சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க ஏஜென்சியில் ஆசிய பிரிவுக்கான துணை நிர்வாகியாக நிஷா தேசாய் உள்ளார். அவர் அந்தப் பதவியுடன் புதிய பதவியை கூடுதலாக வகிப்பார் என வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களிருவர் தவிர மேலும் 7 பேர் வெவ்வேறு பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

சூடு பிடித்த தேர்தல் பிரச்சாரம், வாபஸ் பெறப்பட்ட மனுக்கள்?

தமிழக சட்டசபை தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 19ம் தேதி துவங்கி, 26ம் தேதி முடிந்தது. இதில், 4,280 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மனுக்கள் கடந்த திங்கள்கிழமை (28ம் தேதி) பரிசீலிக்கப்பட்டன. இதில், 1,153 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன; சிலர் வாபஸ் பெற்றுஇருந்தனர். மீதம் 3,082 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதில், அதிகபட்சமாக சென்னையில் 294 மனுக்கள் ஏற்கப்பட்டன.

திருப்பூர் வடக்கு தொகுதியில் 70 மனுக்கள் ஏற்கப்பட்டன.மனுக்களை வாபஸ் பெற நேற்று மாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இதில், ஏராளமானோர் வாபஸ் பெற்றனர். இதுதவிர, அதிகாரபூர்வ வேட்பாளர்களின் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்தவர்களும் வாபஸ் பெற்றனர். இதையடுத்து, வேட்பாளர்களது இறுதிப் பட்டியல் நேற்று இரவு தயாரிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கியது போக, மற்ற பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுக்குசின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

தே.மு.தி.க.,வுக்கு முரசு சின்னமும், ஐ.ஜே.கே., கட்சிக்கு மோதிரம்சின்னமும் ஒதுக்கப்பட்டன. மற்ற கட்சிகளுக்கு, தேர்தல் கமிஷனின் 53 சின்னங்களில் ஒன்று, அவர்களது விருப்பப்படி ஒதுக்கப்பட்டது.முதலில், பதிவு செய்த கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. அதன்பின், சுயேச்சைகளுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. வேட்பு மனு பரிசீலனையின் போது, மயிலாப்பூர் தொகுதிகாங்கிரஸ் வேட்பாளராக மனுதாக்கல் செய்திருந்த, ஜெயந்தியின் மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த அவரதுகணவர் தங்கபாலுவின் மனு ஏற்கப்பட்டது.

அதேபோல, கிருஷ்ணகிரிதொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஹசீனா சையதுக்கு பதில், மக்பூல் ஜானை புதிய வேட்பாளராக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. ஆனால், அவர் குறிப்பிட்ட நேரத்துக்குள் மனுதாக்கல் செய்யவில்லை. இதை யடுத்து, ஹசீனாவே காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் எனக் கருதப்பட்டது. ஆனால், இதில் திடீர் திருப்பமாக, அவர் தனது மனுவை நேற்று வாபஸ் பெற்றார். மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த அவரது கணவர் சையத், காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரானார்.ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளதால், பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. இந்த அனல் பறக்கும் பிரசாரம், ஏப்ரல் 11ம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 13ம் தேதி பதிவாகும் ஓட்டுக்கள் எல்லாம், மே மாதம் 13ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்தலுக்குப்பிறகு கோடா நாடு? ஸ்டாலின்

திருநெல்வேலி மாவட்டம் சங்கர்நகர் தனியார் ஆலை சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த துணை முதல்வர் ஸ்டாலின் 3 மணிக்கு பிரச்சாரத்தை துவக்கினார். தச்சநல்லூர், டவுனில் நெல்லை வேட்பாளர் லட்சுமணனையும், பாளையங்கோட்டை, மேலப்பாளையத்தில் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கானையும் ஆதரித்து பேசினார்.

முதல்வர் கருணாநிதி, தாம் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். நாங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திக்க வருபவர்கள் அல்ல. எப்போதும் உங்களுடன் இருக்கிறோம். ஆனால் அ.தி.மு.க.,விற்கு தலைமை வகிக்கும் அம்மையார் தமிழ்நாட்டை பற்றி கவலைப்படாதவர். தேர்தல் நேரத்தில் மட்டும் வருவார். அப்புறம் கதை முடிஞ்சதுன்னு கொடநாட்டிற்கு கிளம்பிவிடுவார். அவருக்கு தமிழக மக்களை விட கொடநாட்டின் மீதுதான் அக்கறை அதிகம். கூட்டணி கட்சி தலைவர்களுக்கு மரியாதை தர தெரியாதவர். மரியாதை இல்லாமல் நடத்துபவர்.

கடந்த தேர்தலிலும் இதனை நேரடியாக பார்த்திருக்கிறீர்கள். இந்துமுறையும் அவர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும்போது எவ்வாறு நடந்துகொண்டார் என்பதை பார்த்திருப்பீர்கள். அந்த கூட்டணியில் இருக்கும் மார்க்கெட் போன முன்னாள் கதாநாயகன் பிரச்சாரத்தின்போதே தமது கட்சி வேட்பாளரை அடிக்கிறார். அவருடன் கட்சியினர் பிரச்சாரத்திற்க செல்வதாக இருந்தால் தலையில் ஹெல்மெட் அணிந்துகொண்டுதான் செல்லவேண்டும். இதுதான் அந்த கூட்டணியில் கட்சிகள் தரும் மரியாதையாகும். ஆனால் தி.மு.க.,.கூட்டணியில் முதல்வர் கருணாநிதி அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்துபேசி மரியாதையுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார். எனவேதிட்டங்கள்தொடர தி.மு.க.,கூட்டணிக்கு ஆதரவாக தாருங்கள் என்றார்.

வடிவேலுக்கு எதிராக கலமிரக்கிறது,. தே மு தி க!

தி.மு.க.,வுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு பிரசாரம் செய்துவரும் வேளையில் தே.மு.தி.க.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய நடிகர் சிங்கமுத்து களமிறங்குகிறார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் வேளையில் கட்சிகளின் பிரசாரம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. பிரசாரத்திற்கு கட்சி தொண்டர்களில் இருந்து நடிகர், நடிகையர் வரை பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தி.மு.க.,வுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு பிரசாரம் செய்து போல தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை வசைபாடி வருகிறார்.

இந்நிலையில் வடிவேலுவுக்கு போட்டியாக தே.மு.தி.க.,விலும் ஒரு நடிகரை களமிறக்க அந்தகட்சி திட்டமிட்டது. அதன்படி யாரை பிரச்சாரம் செய்ய வைக்கலாம் என்று எண்ணிய போது நடிகர் சிங்கமுத்துவை வைத்து பிரசாரம் செய்யலாம் என்று கட்சியினர் தெரிவிக்க அவரை அழைத்துள்ளது. அவரும் பிரச்சாரத்திற்கு வருவதாக கூறியிருக்கிறார்.இன்னும் ஓரிரு நாளில் தே.மு.தி.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய களமிறங்குகிறார். ஏற்கனவே வடிவேலுவுக்கும், சிங்கமுத்துவுக்கு பிரச்சனை இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, March 29, 2011

கலை கட்டுமா இந்தியா! 4 ஆண்டுகளுக்குப்பின்?

இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று மொகாலியில் நடக்கும் அரையிறுதி போட்டியில் (பகலிரவு), இந்திய அணி, பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை மேற்கொள்கிறது.

இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக காட்சி அளிக்கிறது. வங்கதேச அணிக்கு எதிராக சதம் கடந்த சேவக் (342 ரன்கள்), அதன்பின் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனவே இவர், இன்று தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் மழை பொழியலாம். "சூப்பர் பார்மில் உள்ள "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (379 ரன்கள்), சதத்தில் சதம் கடந்து சாதிக்கலாம். மூன்றாவது வீரராக களமிறங்கும் காம்பிர் (269 ரன்கள்), தனது பொறுப்பான ஆட்டத்தை தொடரலாம்.

இன்றைய அரையிறுதிப் போட்டியின் மூலம், பாகிஸ்தான் அணி சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது. கடைசியாக, கடந்த 2007ல் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க சோயப் மாலிக் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியா வந்தது. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்தியா லீக் சுற்று

1. 87 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்துடன் வெற்றி.
2. இங்கிலாந்துக்கு எதிரான போட்டி "டை ஆனது.
3. அயர்லாந்துடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
4. 5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வென்றது.
5. தென் ஆப்ரிக்காவுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
6. வெஸ்ட் இண்டீசை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

காலிறுதி

7. ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பாகிஸ்தான்

லீக் சுற்று

1. கென்யாவுக்கு எதிராக 205 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
2. 11 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் வெற்றி.
3. கனடாவை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
4. நியூசிலாந்திடம் 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.
5. 7 விக்கெட் வித்தியாத்தில் ஜிம்பாப்வேயை வென்றது.
6. ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

காலிறுதி

7. வெஸ்ட் இண்டீசை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஜுரத்தில் ஒட்டுமொத்த ஆசிய நாடுகள்?

பத்தாவது உலககோப்பை கிரிக்கெட் போட்டி, இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச நாடுகளில் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் தொடர், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா கோப்பையை வெல்லும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய கேப்டன் பதவியிலிருந்து திங்கட்கிழமை விலகிய ரிக்கி பாண்டிங்கும், இந்திய அணி அரையிறுதிப் ‌போட்டியில் பாகிஸ்தானை வென்று, பைனலில் கோப்பையை கைப்பற்றும் என்று கூறியிருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மேலும் உற்சாகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வெற்றியைக் கொண்டாட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களும் தற்போது தயாராகி வருகி்ன்றன. அதற்குச் சான்றாக, பார்தி ஆக்சா நிறுவனம், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்காக, நாளைய தினத்தில், தங்களது வழக்கமான பணிநேரத்தை மாற்றியமைத்து, நாளைய தினம் மட்டும் காலை 8 மணியிலிருந்து மதியம் 2 மணிநேரம் வரை மட்டும் அலுவலகம் செயல்படும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல, ஷிப்‌ட் முறையில் செயல்பட்டு வரும் முன்னணி இ-லேர்னிங் நிறுவனமான டாடா இண்ட்ராக்டிவ் சர்வீசஸ் நிறுவனம், நாளைய தினத்தில் மட்டும், எந்த ஷிப்டில் பணிபுரிந்து வருவோரும் காலை 08.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரையிலான ஷிப்டில் பணிபுரிய அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளது. அதிதி் ‌டெக்னாலஜிஸ் நிறுவனம், இதற்கு மேல் ஒருபடி சென்று, ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு வரலாம் என்றும், போட்டி துவங்கிய உடன் அவர்கள் கிளம்பி, கிரிக்கெட் ஜோதியில் ஐக்கியமாகலாம் என்று தெரிவி்த்துள்ளது.

இந்த நிறுவனங்கள், பணிநேரத்தை மட்டும் மாற்றி அமைத்துள்ளன என்பதை நினைத்துக் கொண்டிருக்கும் போது, மேக் மை டிரிப் மற்றும் கோகோபெரி நிறுவனங்கள், நாளை விடுமுறை நாளாகவே அறிவித்து தங்கள் ஊழியர்கள் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. மகிந்திரா சத்யம் நிறுவனம், கிரிக்கெட் வெற்றியை அலுவலகத்தில் கொண்டாடும் வகையில், தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு நாளைய தினத்தில் டிரஸ் கோட் கிடையாது என்றும், அலுவலகத்திலேயே, ‌பெரிய திரையில் சிற்றுண்டிகளுடன் போட்டியை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாபியண்ட் நிறுவனம், தங்கள் நிறுவன ஊழியர்கள் இந்திய அணி சீருடையில் பணிக்கு வரலாம் என்றும், ஜென்பேக்ட் நிறுவனம், அலுவலகத்தில் பெரிய திரையில் போட்டியை காண ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த கொண்டாட்டங்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல், நாட்டின் எல்லையையும் கடந்து லாகூரில், பாகிஸ்தான் பேஷன் டிசைன் கவுன்சில் ( பிஎப்டிசி) சார்பில் செவ்வாய்க்கிழமை அன்று (29-03-11) துவங்கவிருந்த 4 நாட்கள் பேஷன் திருவிழா, கிரிக்கெட் போட்டி காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வாயிக்கு வந்த வாக்குறுதிகளை வழங்கிவரும், வடிவேல்!

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடிகர் வடிவேலு 28.03.2011 அன்று மாலை கொளத்தூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது,

கொளத்தூர் தொகுதியை சொர்க்க பூமியாக மாற்றுவதற்கு, துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கே போட்டியிடுகிறார். கடந்த 5 ஆண்டு காலத்தில் எண்ணற்ற பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி இருக்கிறது.

இப்போதும் தேர்தல் அறிக்கையில், மிக்சி, கிரைண்டர் என்று அறிவித்து இருக்கிறார்கள். கலைஞர் ஆட்சியில், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு கூட, திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அன்னை போல் தாய்மை உள்ளம் கொண்டவராக கருணாநிதி விளங்கி வருகிறார்.

கண் கலங்கிய சினேகா!!

காஞ்சிபுரம் மாவட்டம், பூந்தமல்லி அருகேயுள்ள பனிமலர் பொறியியல் கல்லூரியில் கலை விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை சினேகா பங்கேற்றார். விழாவில் சினேகாவை கண்டதும் மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர். அவருக்கு தங்கள் பாணியில் ஒரு பெரி‌ய வரவேற்பு கொடுத்ததுடன் புன்னகை இளவரசி என்று கரகோஷம் போட்டனர்.

விழாவில் சினேகாவை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்த ஒரு விஷேச டிரைலர் ஒன்றை தயார் செய்து அவருக்கு திரையிட்டு காட்டினர். டிரைலரை பார்த்ததும் மிகவும் பரவசமடைந்த சினேகா கண்கலங்கி போய்விட்டார்.

பின்னர் மேடையில் பேசிய சினேகா, எத்தனையோ கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறேன். ஆனால் உங்‌களை போன்ற ஒரு மாணவர்களை எங்கும் கண்டதில்லை. என்மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பு என்னை நெகிழ செய்தது. என் வாழ்க்கையில் இந்த தருணத்தை என்‌றுமே மறக்க மாட்டேன். எந்தவொரு நடிகைக்கும் கிடைக்காத பெருமை எனக்கு கிடைத்திருக்கிறது. இங்கு இருக்கும் ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் வாழ்வில் ஒரு உயர்வான நிலையை அடைய அந்த ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் என்று மனம் உருகி பேசினார்.

மோதிக்கொண்ட அரசியல் கட்சிகள்? காயம் 3!

ஸ்ரீபெரும்புதூர் : அ.தி.மு.க.,வினருக்கும் பா.ம.க.,வினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அ.தி.மு.க.,வினர் 3 பேர் காயமடைந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்கவார்சத்திரம் பகுதியில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உருவபொம்மையை பா.ம.க.,வினர் எரிக்க முயற்சி செய்தனர். தகவலறிந்து வந்த அ.தி.மு.க.,வினருக்கும் பா.ம.க.,வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அ.தி.மு.க.,வினர் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறைந்த சம்பளம்! கவலை?

நியூயார்க் : அமெரிக்கா பணிபுரியும் பெண்களில் 38 சதவீதம் பேர் தங்களுக்கு ஆண்களுக்கு நிகரான திறமையும், அனுபவமும் ‌இருக்கும் போதும் கூட அவர்களை வி‌ட குறைவாகவே சம்பளம் தருவதாக தெரிவித்துள்ளனர்.

பணியிடத்தில் ஆண்-பெண் சமத்துவம் பற்றி அமெரிக்காவில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்து கணிப்பில் அமெரிக்க பெண்கள் பலர் பணியிடத்தில் தங்களுக்கு சமத்துவம் இல்லை என தெரிவித்துள்ளனர். 39 சதவீத பெண்கள் பணியில் புரோமோஷன் வழங்குவதில் தாங்கள் சற்று பின்னுக்குத் தள்ளப்படுவதாக தெரிவித்துள்ளனர். ஆன்லைன் மூலம் இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது.

Monday, March 28, 2011

விஜய்க்கு எதிர்ப்பு வலுக்கிறது?

நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் வரும் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படும் என்று அதன் கெüரவத் தலைவரும், விஜயின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சேலம் அழகாபுரம் பெரிய புதூர் மாரியம்மன் கோயில் பகுதியில் திங்கள்கிழமை மாலை ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்பகுதியைச் சேர்ந்த போக்கிரி மக்கள் இயக்கத் தலைவர் ஆதி ஆசைத்தம்பி தலைமையிலான விஜய் ரசிகர்கள் ரசிகர் மன்ற பேனர், உறுப்பினர் படிவங்கள், அடையாள அட்டைகளை தீ வைத்து எரித்தனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, நடிகர் விஜய் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள் திமுகவில் இருக்கிறோம். ஒருவேளை ரசிகர் மன்றத்துக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுத்திருந்தாலோ, தனித்துப் போட்டியிட்டிருந்தாலோ நாங்கள் ஆதரவு அளித்திருப்போம் என்றனர்.

இதற்கிடையே நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் ஆ. பார்த்திபன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜய் மக்கள் இயக்கத்தின் கெüரவத் தலைவர் இயக்குநர் சந்திரசேகரனின் வேண்டுகோளை ஏற்று அதன்படி செயல்பட வேண்டும் என்று மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், ரசிகர்களை கேட்டு கொள்கிறேன்.

டென்சனும்!,. எதிர்பார்ப்பும்?

இந்திய அணி இரண்டாவது முறையாக உலக கோப்பை வெல்லும் நேரம் நெருங்கி விட்டது. இதற்கான திறமை தோனி தலைமையிலான அணியிடம் உள்ளது. அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 28 ஆண்டுகளாக உலக கோப்பை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையுடன், நான் மட்டும் தனிமையில் இருக்கிறேன். என்னோடு யாராவது சேர வேண்டும் என விரும்புகிறேன்.

இதற்கேற்ப, உலக கோப்பை வென்ற இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையை தோனி பெறலாம். இம்முறை நல்லதே நடக்கும் என நம்புவோம். வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வுடன் தான் ஒவ்வொருவரும் மைதானத்தில் களமிறங்குகிறோம். தற்போதைய இந்திய அணி சாதித்துக் காட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்திய அணியின் பவுலிங் பலவீனமாக உள்ளது என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள இயலாது. இதே பவுலர்களுடன் தான் லீக் சுற்று முதல் காலிறுதி வரை வென்றுள்ளோம். இவர்களது சிறப்பான செயல்பாடு காரணமாக தான் அரையிறுதியை எட்டியுள்ளோம். மிக முக்கியமான அரையிறுதியில் பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்புடன் ஆட வேண்டும்.

மொகாலியில் நாளை நடக்க உள்ள இந்தியா, பாகிஸ்தான் இடையிலான அரையிறுதி மிகவும் "டென்ஷனாக இருக்கும். இதில், இரு அணி வீரர்களும் வார்த்தை போரில் ஈடுபட வாய்ப்பு இல்லை. இவ்விஷயத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மிகவும் கண்டிப்பாக உள்ளது. சம்பந்தப்பட்ட வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும். "மைக்ரோபோன் போன்ற நவீன தொழில்நுட்பம் இருப்பதால், வீரர்களின் தவறை எளிதில் கண்டுபிடித்து விடலாம். எனவே, எந்த ஒரு வீரரும் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆபத்து ஏற்படும் செயல்களில் ஈடுபடமாட்டார். தற்போது களத்திற்கு வெளியே தான் அதிகளவில் வார்த்தை போர் நடக்கிறது.

வாக்காளர்களை கவனிக்கும் அரசியல் கட்சிகள்?

வாக்காளர்களை கவர விதவித லஞ்சம் கொடுக்கும் அரசியல் கட்சி பிரியாணியும், சரக்கும் கொடுத்தால் போதும் கணிசமான ஓட்டகளை பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கின்றன. பெருந்துறை அருகே காஞ்சிக்கோவிலில், கூட்டணி கட்சியினர் மற்றும் வாக்காளர்களை அழைத்து, மூடிக் கிடந்த தியேட்டருக்குள் சரக்குடன் விருந்து வைத்த, கொ.மு.க., வேட்பாளர் உட்பட 300 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதி தி.மு.க., கூட்டணியில் கொ.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.,வின் கோட்டையாக விளங்கும் இத்தொகுதியில், கொ.மு.க., சார்பில் மாவட்ட செயலர் கே.கே.சி.பாலசுப்பிரமணி நிறுத்தப்பட்டுள்ளார். அ.தி.மு.க., சார்பில் புறநகர் மாவட்ட செயலர் தோப்பு வெங்கடாசலம் போட்டியிடுகிறார். தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்ற கொள்கையோடு உள்ள கொ.மு.க., கட்சி, வாக்காளர்களை சந்திப்பதில் தயக்கம் காட்டி வருகிறது. 30ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடும் போது தான், அக்கட்சிக்கான சின்னம் குறித்த விவரம் தெரியவரும். இங்கு, அ.தி.மு.க.,வினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கொ.மு.க., தரப்பில் அதற்கான அறிகுறியே தென்படவில்லை. லாரி தொழிலில் கொடிகட்டி பறக்கும் வேட்பாளர் பாலு, வாக்காளர்களை கவனித்து தொகுதியை கைப்பற்றி விடலாம் என்ற முயற்சியில் உள்ளார். நேற்று முன்தினம், பெருந்துறை - காஞ்சிகோவில் ரோட்டில் உள்ள கவிதா தியேட்டரில், கூட்டணி கட்சி தொண்டர்களுக்கும், வாக்காளர்களுக்கும் மறைமுக விருந்து வைத்துள்ளார். பிரியாணி பொட்டலத்துடன் சரக்கு வழங்கப்பட்டது.

தகவல் அறிந்து போலீசார் வருவதற்குள், கூட்டத்தை முடித்துக் கொண்டு கட்சியினர் "எஸ்கேப்' ஆகினர். இது தொடர்பாக காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொ.மு.க., வேட்பாளர் பாலு, தி.மு.க., ஒன்றிய செயலர் சாமி உட்பட 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் குணசேகரன் கூறியதாவது: கொ.மு.க., சார்பில் கவிதா தியேட்டரில் செயல்வீரர் கூட்டம் நடத்தி உள்ளனர். அதற்கான எந்தவித அனுமதியும் பெறவில்லை. கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டதால் பிரியாணி விருந்து வைத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டோம். வேட்பாளர் உட்பட, 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இணையத்தில் இணைத்த உறவு!

கிழக்கு லண்டன் பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் (47) என்பவர் பொழுதுபோக்காக இணையதளத்தில் சாட்டிங்கில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாரா கேம்ப் (42) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது.

பல்வேறு விஷயங்களைப் பேசியபின் தங்கள் சிறுவயது குடும்பத்துடன் பொழுதைப் போக்கிய அனுபவங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர். அப்போது இருவரும் ஒரே மாதிரியான சம்பவங்களைக் கூறினர். அப்போதுதான் சாரா சிறுவயதில் தன்னை விட்டுப் பிரிந்து சென்ற தங்கை என்பது ஜார்ஜுக்கு தெரியவந்தது.

சாரா தனது பெயரை மாற்றிக் கொண்டதால் அவரை முதலிலேயே ஜார்ஜால் அடையாளம் காண முடியவில்லை. 1975-ம் ஆண்டு இவர்களது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அப்போது ஜார்ஜுக்கு வயது 11, சாராவின் வயது 6. ஜார்ஜ் தந்தையுடன் கிழக்கு லண்டனுக்குச் சென்றார். தாயுடன் சென்ற சாரா, திருமணமாகி எடின்பர்க் நகரில் வசித்து வந்தார்.

இந்நிலையில் 35 ஆண்டுகளுக்குப்பின் இணையதளத்தின் மூலம் இவர்கள் தங்கள் உறவை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் பிரிட்டன் பத்திரிகைகளில் வெளியாகி நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

எங்களை பிரிக்க சதி? நடக்கிறது!

கூட்டணியை பிரிக்க சிலர் சதி செய்து வருகின்றனர். அதற்கு இடம் கொடுக்காமல், கூட்டணி கட்சி தொண்டர்கள் ஒன்று சேர்ந்து, வெற்றிக்கு பாடுபட வேண்டும்,'' என, திருத்தணியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார்.

திருத்தணி தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் தே.மு.தி.க., வேட்பாளர் அருண் சுப்பிரமணியத்தை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், நான் அ.தி.மு.க., கூட்டணியில் சேரக்கூடாது என, பலர் எதிர்க்கட்சிகளிடம் 100 கோடி, 200 கோடி, 500 கோடி ரூபாய் பணம் வாங்கிவிட்டதாக வதந்தி பரப்பினர். மக்களிடம் கூட்டணி வைத்துள்ளேன். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

தமிழக மக்களுக்காக தான் அ.தி.மு.க.,வுடன் கூட்டு சேர்ந்தேன். இது எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த கட்சி என்பதால் தான் கூட்டணி வைக்க சம்மதித்தேன். கூட்டணி வைத்துள்ளதால் ஆட்சியில் பங்கோ, துணை முதல்வர் பதவியோ கேட்க மாட்டேன். ஏழைகளுக்கு தி.மு.க., ஆட்சியில் எந்தவித நன்மையும் செய்யவில்லை. விவசாயிகள் மின்தடையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டு போட வேண்டும். தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பேசினார்.

Sunday, March 27, 2011

இந்திய இளம் தலைவி, ஐ. நா. மாநாட்டில்!

நியூயார்க், மார்ச் 27: மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஐ.நா.வின் 11-வது வறுமை ஒழிப்பு மாநாட்டில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பஞ்சாயத்து தலைவி சாவி ரஜாவத் கலந்து கொண்டார்.

அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும், வெளிநாட்டு தூதர்களும் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள குக்கிராமம் ஒன்றின் பஞ்சாயத்து தலைவி சாவி ரஜாவத்தும் கலந்து கொண்டார். 30 வயதான அவர் ஜீன்ஸ் அணிந்த நவீன மங்கை என்பதும் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏர் டெல் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிந்த அவர் கிராம முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு அந்த பதவியை துறந்து ராஜஸ்தான் மாநிலம் சோடா கிராமத்துக்கான பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வென்று பஞ்சாயத்து தலைவியாக மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்.

மாநாட்டில் பேசிய ரஜாவத், "கடந்த 65 ஆண்டுகளில் இந்திய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, குடிநீர் வசதி, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான வசதிகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையை மாற்ற வேண்டும். அதற்காகத் தான் போராடி வருகிறோம். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் நான் பஞ்சாயத்து தலைவியாக பொறுப்பு வகிக்கும் சோடா கிராமத்தில் துரிதமாக பல வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாங்கள் இதுவரை தனியார் நிறுவனங்களிடம் இருந்தோ, தொண்டு நிறுவனங்களிடம் இருந்தோ எந்த உதவியும் பெறவில்லை. எங்களது இலக்கை எட்ட வெளியில் இருந்தும் நிறுவனங்களிடம் இருந்தும் உதவி கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும்' என்றார் அவர்.

ஜப்பான் மக்கள் ஆறுதலுக்காக? ரஜினி!!

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற நடிகர் ரஜினிகாந்த் ஜப்பான் செல்லத் திட்டமிட்டிருப்பதாக தொழிலதிபர் ஜெம் ஆர். வீரமணி தெரிவித்தார்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மக்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்கான கூட்டம் மார்ச் 21-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. ஜெம் குழும நிறுவனங்களின் தலைவர் ஜெம்.ஆர். வீரமணி ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தில் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சிவக்குமார், சென்னைக்கான ஜப்பான் தூதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் ஜப்பான் மக்களுக்கு உதவுவது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து ஜெம் வீரமணி ஆலோசனை நடத்தினார். ஜப்பான் மக்களுக்கு ஆறுதல் கூறவும், அவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்யவும் விரைவில் அந்நாட்டுக்கு செல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் ரஜினி தெரிவித்தார்.

உலக அழகி பட்டம்! அழகுக்கு மட்டுமல்ல?

ஐஸ்வர்யா ராய் உலக அழகியெல்லாம் இல்லை என்று ஹாலிவுட் நடிகர் ஜாக்மேன் கூறியுள்ளார். மும்பையில் எப்.ஐ.சி.சி. அமைப்பின் 3 நாள் மாநாடு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக ஜாக்மேன் கலந்து கொண்டார். அவரை வரவேற்றார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

நிகழ்ச்சியில் பேசிய ஜாக்மேன், ஐஸ்வர்யா ராயை அழகியே அல்ல... என்று கூறி விழாவுக்கு வந்தவர்களின் புருவத்தை உயர வைத்தார். அவர் பேசுகையில், உலகத்திலேயே அழகான பெண் உங்களை வரவேற்பார் என்று கூறினார்கள். உடனே என்ககு ஒரே மகிழ்ச்சி. ஏனென்றால் அந்த உலக அழகி எனது மனைவி டெபோரா என்று நினைத்தேன். கடைசியில் பார்த்தால் அது ஐஸ்வர்யா ராய். நடிகை ஐஸ்வர்யா ராய் அழகு தான். ஆனால் உலகத்திலேயே அழகான பெண்ணல்ல. என்னைப் பொருத்தவரையில் என் மனைவி டெபோராதான் மிகவும் அழகான பெண், என்றார்.

தன் இமேஜை இப்படி ஏகத்துக்கும் டேமேஜ் செய்த ஜாக்மேன் பற்றி ஐஸ்வர்யா ராய் பேசுகையில், நான் ஹ்யூ ஜாக்மேனை இந்தியாவுக்கு வரவேற்கிறேன். சினிமாத்துறையில் உள்ள அழகான மற்றும் திறமையான நடிகர்களில் ஜாக்மேனும் ஒருவர். இந்தியர்கள் சார்பில் அவரை நான் இந்தியாவுக்கு வரவேற்கிறேன், என்றார்.

உலக அழகி பட்டம்! அழகுக்கு மட்டுமல்ல? அறிவு, திறமை ஒருகினைத்தது.

வடிவேல் வாய்க்கு பூட்டு?

திருவாரூர் : திருவாரூரில் கடந்த 23ம் தேதி தி.மு.க., தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக சென்னை தே.மு.தி.க., உயர்மட்ட குழு உறுப்பினர் திலீப்குமார் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தார். இந்த பூகாரின் பேரில் கலெக்டர் உத்தரவின் பேரில் திருவாரூர் டவுன் போலீசார் அவதூறாக பேசுவது, ப‌கைமையை ஏற்படுத்துவது, தனிப்பட்ட நபரை விமர்சிப்பது ஆகிய வழக்குகளின் கீழ் வழக்கு திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரிமோட் மூலம் இயங்கும் மேகம்? துபாயில்!

துபாய் : விளையாட்டு மைதானங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்காக, செயற்கை மேகத்தை கல்லூரி பேராசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார். இந்த செயற்கை மேகம், 2022ல் நடக்க உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியில் பயன்படுத்தப்பட உள்ளது. கத்தார் பல்கலைக்கழகத்தில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் சாவூத் அப்துல் கனி. இவரது தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர், திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில், வெயில் மற்றும் வெப்பத்தை தடுத்து, குளுமையாக வைத்திருப்பதற்காக, செயற்கை மேகத்தை உருவாக்கி வருகின்றனர்.

இது குறித்து, சாவூத் அப்துல் கனி கூறியதாவது: திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில், வெயிலை தடுப்பதற்காக, செயற்கை மேகத்தை உருவாக்கி வருகிறோம். இது, 100 சதவீத கார்போனிக் பொருட்களாலானது. இந்த செயற்கை மேகத்தை, "ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்க முடியும். இதனால், நாம் விரும்பும் இடத்தில், இந்த மேகத்தை நகர்த்தி வைத்து கொள்ளலாம். 2022ம் ஆண்டில், தோகா நாட்டில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது, இந்த செயற்கை மேகம் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், கடற்கரை, கார் நிறுத்துமிடங்கள் போன்ற இடங்களில் பயன்படுத்தும் விதத்தில், செயற்கை மேகங்களை உருவாக்கி வருகிறோம். இதை, மொபைல் போன்கள் மூலம் இயக்கலாம். இதன் துவக்க விலை, 23 லட்ச ரூபாய். எனினும், இது விற்பனைக்கு வரும் போது, இதன் விலை, கூடவோ, குறையவோ செய்யலாம். இவ்வாறு சாவூத் அப்துல் கனி கூறினார்.

Saturday, March 26, 2011

ஆ.ராசாவை ஆதரிப்பேன், கனிமொழி!

புதுதில்லி, மார்ச் : முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு திமுக ஆதரவளிக்கும் வரை நானும் ஆதரவளிப்பேன் என்று முதல்வர் கருணாநிதியின் மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

2ஜி விவகாரம் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்ய இருக்கும் குற்றப்பத்திரிகையில் உங்கள் பெயர் இடம்பெற்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, "எதுவாக இருந்தாலும் எதிர்த்து நின்று போராடி வெற்றிபெறுவேன் என்றார்' கனிமொழி.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஊகத்தின் அடிப்படையானவே. அதைத்தான் நாங்கள் தொடக்கத்திலிருந்தே கூறி வருகிறோம். இப்போது விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. நாங்கள் குற்றச்சாட்டுகளை எப்படி முறியடிக்கிறோம் என்று பாருங்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் என்கிற கருத்தை அவர் மறுத்தார். ஊகத்தின் அடிப்படையிலான குற்றச்சாட்டுகளைப் பொறுத்து தேர்தல் முடிவுகள் அமையும் என்று எனக்குத் தோன்றவில்லை. அரசு என்ன செய்திருக்கிறது, என்ன செய்கிறது என்பவைதான் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் என்றார் அவர்.

இரண்டாவது முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்து, அமைச்சரவை அமைக்கப்பட்டபோது, முதல்வர் குடும்பத்தில் பூசல் ஏற்பட்டது உண்மைதான் என்று ஒப்புக் கொண்ட கனிமொழி, "இது எல்லாக் குடும்பத்திலும் நடப்பதுதான். அதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள்?' என்று கேட்டார்.

இந்திய பெருமை யு.எஸ், ல் ரூ 6.3 கோடி!

புது தில்லி, மார்ச் : இந்தியாவைச் சேர்ந்த ஓவியர் அக்பர் பதம்சீயின் ஓவியம் ஒன்று வெள்ளிக்கிழமை நியூயார்க் நகரில் ரூ.6.3 கோடிக்கு ஏலம் விடப்பட்டு சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள சோத்பி அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஏலத்தில், 1959-60-ம் ஆண்டுகளில் பதம்சேயால் உருவாக்கப்பட்ட, 10-க்கு 3-அடி அளவுள்ள இந்த ஓவியம் உள்பட ஏராளமான ஓவியங்கள், அமெரிக்க மதிப்பில் 4,028,250 டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளன. ரபீந்திரநாத் தாகூர், ஜெமினி, ரவீந்தர் ரெட்டி, பாரதி கெர் ஆகியோரது ஓவியங்களும் இங்கு ஏலம் விடப்பட்டன. பதம்சீயின் ஓவியம் 1960-ல் வட அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது. 1960 முதல் மாண்டிரியல் நகரிலுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இப்போது ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

கல்வியறிவும்., கம்ப்யூட்டரும் (பெற்றோருக்கு)

பிள்ளைகளுக்கு எது சரியாக வரும் என்பதை அறிந்து, அதற்கேற்ற படிப்பை தேர்ந்தெடுக்க வைப்பது தான் பெற்றோர்களின் கடமை. தமிழ், ஆங்கில மொழியை தேர்ந்தெடுத்து படித்தால் பேராசிரியராகலாம். அரசுப் பணி மட்டுமல்லாமல், தனியார் கல்லூரிகளில் கூட அதிகளவு சம்பளம் தருகின்றனர்.

வெறும் படிப்போடு நிறுத்தி விடாமல் பிற திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தற்போதைய காலத்திற்கு கம்ப்யூட்டர் கல்வியறிவு முக்கியம். கம்ப்யூட்டரும், இணையதளமும் பழகிவிட்டால் உலகமே உங்கள் கைகளில் நிற்கும். அடுத்து வரும் காலங்களில் ஆசிரியர்களே இல்லாத கம்ப்யூட்டர் கல்வி வரும் போது, மாணவர்களுக்கு கை கொடுக்கும்.

பிள்ளைகள் கதை, கவிதை, கட்டுரை எழுதி வீட்டில் காண்பித்தால், அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். கவிதை எழுதுவதன் மூலம் மன அழுத்தம் குறையும். இத்தகைய மாணவர்கள் மொழிப்பாடத்தை தேர்ந்தெடுத்து படித்தால், உச்சரிப்பு, வாசிப்பு மூலம் நிறைய சம்பாதிக்கலாம். ரேடியோ, டிவியில் கதை வசனம் எழுத முடியும். எந்த மொழி படித்தாலும் ஆங்கிலத்தை முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும். இருமொழி படித்தால், மொழி பெயர்ப்பு துறையில் சாதிக்கலாம். வெளியில் சென்று வேலை பார்க்க வேண்டியதில்லை. வீட்டிலிருந்தபடியே கம்ப்யூட்டரில் மொழிபெயர்ப்பு செய்யமுடியும்.

மொழியை கையாளத் தெரிந்தவர்கள் "ஸ்கிரிப்ட்" தயாரிக்கலாம். சினிமா, டிவி... என மீடியாத் துறையில் மொழி தெரிந்தவர்களுக்கு எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உள்ளன. மேலை நாடுகளில் 16 வயது நிரம்பினால், மகனோ, மகளோ சுயமாக வேலைதேடி, அந்த பணத்தைக் கொண்டு மேற்படிப்பு படிக்கின்றனர். இங்கே அனைத்தும் செலவு செய்தால் கூட, மாணவர்கள் விருப்பப்பட்ட பாடத்தை தேர்ந்தெடுக்க முடியாது. இல்லாவிட்டால் மாணவருக்கு படிக்க விருப்பமிருக்காது.

எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும் இலக்கியத்தைப் போல இனிக்காது. இலக்கியம் தெரிந்தால் பிற துறை வல்லுனர்களையும் பேச்சு, செயலின் மூலம் சந்தோஷப்படுத்தலாம். உலக இலக்கியங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதால் ஆங்கில மொழி படிப்பது அவசியம்.

கமண்ட் அடிக்கும் கலைஞர்??

சென்னை : இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டை, தான் ஆட்சிக்கு வந்தால் மேலும் உயர்த்துவதாக ஜெயலலிதா கூறியுள்ளதற்கு முதல்வர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.

ஜெ.,வின் இந்த கூற்று முதலைக்கண்ணீர் என்றும் அவர் வர்ணித்துள்ளார். திருச்சியில் பிரசாரம் மேற்கொண்ட அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு தற்போதுள்ள 3.5 சதவீத இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா முதலைக்கண்ணீர் வடிப்பதாகவும், இதைப்பார்த்து இஸ்லாமியர்கள் ஏமாறமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும்? விலையோ குபீர்?

மொகாலி : வரும் 30ம் தேதி நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள், மொகாலியில் நடக்கிறது. இந்த உலக கோப்பை கிரிக்கெட்டின், மிக முக்கியமான போட்டியாக இது எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், போட்டிக்கான டிக்கெட்டை பெறுவதில் பயங்கர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலும் டிக்கெட்டுகள் "பிளாக்கில்' தான் விற்கப்படுகின்றன. 250 ரூபாய் டிக்கெட், எட்டு மடங்கு அதிகமாக ரூ. 2000 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. இதேபோல, ரூ. 500 டிக்கெட் ரூ. 4000த்துக்கும், ரூ. 1000 மதிப்புள்ள டிக்கெட், 6,500 முதல் 7000 ரூபாய் வரை உயர்த்தி விற்கப்படுகிறது. இதுகுறித்து "பிளாக்' டிக்கெட் விற்கும் நபர் ஒருவர் கூறுகையில்,"" அனைவருமே இந்த மோதலுக்காகத்தான் காத்திருந்தனர். இது இரு நாடுகள் இடையில் நடக்கும் சண்டைக்கு சமமானது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றதும், டிக்கெட்டின் விலை பல மடங்கு அதிகரித்துவிட்டது. தவிர, இது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.

இதுகுறித்து மொகாலி மாவட்ட போலீஸ் அதிகாரி குர்பிரீத் சிங் புல்லார் கூறுகையில், ரசிகர்கள் எப்படியும் டிக்கெட் வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர். இருப்பினும், எங்களது குழு, மைதானம் மற்றும் பிற இடங்களில் மாறுவேடங்களில், "பிளாக்' டிக்கெட் விற்பவர்களை தேடிக்கொண்டு தான் உள்ளது,'' என்றார். டிக்கெட் கிடைக்காத ரசிகர் ஒருவர் கூறுகையில்,"" ஆறு மணி நேரமாக வரிசையில் நின்றும் டிக்கெட் கிடைக்கவில்லை. ஆனால் மைதானத்தின் அருகில், "பிளாக்' டிக்கெட் விற்கும் நபர்கள் சாதாரணமாக திரிகின்றனர். அவர்களுக்கு மட்டும் எப்படி டிக்கெட் கிடைக்கிறது,'' என்றார்.

Friday, March 25, 2011

உணவு கட்டுப்பாடும், உடல் பயிற்சியும், அவசியமான ஒன்று?

எடையைக் குறைக்க உண்ணும் பழக்க வழக்கங்களையும், உடற் பயிற்சியையும் கவனித்தாலே போதுமானது.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் செய்ய வேண்டியவைகள்:

1. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

2. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து அதிகம் உள்ள உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

3. காபி, டீ அதிகம் குடிக்கக் கூடாது.

4. பச்சைக் காய்கறிகள், கீரை, பழ வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

5. இரவு உணவை 8 மணிக்குச் சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அப்படி சாப்பிட முடியாதவர்கள் இரவு உணவை பச்சைக் காய்கறிகள், பழங்கள் என மாற்றிக் கொள்ள வேண்டும்.

6. படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னரே இரவு உணவை முடித்துக் கொள்ள வேண்டும்.

7. இனிப்பு, புளிப்பு உள்ள உணவு வகைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

8. தினமும் 30 முதல் 45 நிமிஷங்கள் வரை நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

9. முடிந்த அளவு பகலில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

10. பாஸ்ட்புட், ஐஸ்கிரீம், சாக்லேட் உள்ளிட்ட நொறுக்குத் தீனி அதிகம் கூடாது.

மூடப்படும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம்?

கொழும்பு, மார்ச் 25: இலங்கையின் வடக்குப் பகுதியிலிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் இப்போது மூடப்பட்டுள்ளது.

இலங்கையில், விடுதலைப்புலிகளுடன் பிரச்னையை துவங்கியபோது 1987-ல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வவுனியாவில் துவங்கப்பட்டது. 2009-ல் விடுதலைப்புலிகளுடன் நடந்த போருக்குப் பின்னர் பல்வேறு செஞ்சிலுவை சங்கங்கள் மூடப்பட்டுவிட்டன.

ஆனாலும் வவுனியாவில் இருந்த சங்கம் மட்டும் தொடர்ந்து இயங்கி வந்தது. இந்த நிலையில் இந்த சங்கம் இப்போது மூடப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து மட்டும் செஞ்சிலுவை சங்கம் செயல்படவேண்டும் என்று இலங்கை அரசு கேட்டுக்கொண்டது. இதையடுத்து வவுனியாவில் இருந்த செஞ்சிலுவைச் சங்கம் மூடப்படுகிறது.

அனைவரும் ஏற்கும் தீர்வை விரும்புகிறோம் - ராஜபட்ச: தமிழர்கள் பிரச்னையில் அனைவரும் ஏற்கும் தீர்வை மட்டுமே விரும்புகிறோம் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச கூறினார். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: தமிழர்கள் பிரச்னை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டணிக் கட்சியினருடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அனைவரும் ஏற்கக்கூடிய சிறந்தத் தீர்வை அடைவதே எனது குறிக்கோள்.

விடுதலைப்புலிகளின் கோரிக்கையான தனி நாடு என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. 60 ஆண்டுகளாக இந்த பிரச்னை நீடித்து வருகிறது. இதை மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவேண்டும். தமிழ் தேசிய கூட்டணியுடன் இதுவரை 3 சுற்று பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு, தமிழ் தேசிய கூட்டணியுடன் பேச்சு நடத்தி வருகிறது என்றார் அவர்.

சிறுவனுக்கு துப்பாக்கி லைசென்ஸ்! கலிகாலம போச்சு?

லண்டன் : பிரிட்டனில் 7 வயது சிறுவனுக்கு துப்பாக்‌கி லைசென்ஸ் வழங்கியுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்நாட்டிலிருந்து வெளிவரும் ஒரு முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் பிரிட்டனின் தகவல் பெரும் சுதந்திர சட்டத்தின் கீழ் , பிரிட்டனில் படைப்பிரிவில் துப்பாக்கி லைசென்ஸ் தொடர்பான விவரங்களை கேட்டிருந்தது. பிரிட்டனில் உள்ள குளுசெஸ்டர்ஸ் மாகாணத்தில் 7 வயது சிறுவனுக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்கியிருப்பதும், அதே மாகாணத்தில் மேற்குமெர்ஸியா போலீஸ் நிலையத்தில் 8 வயது சிறுவன் துப்பாக்கி லைசென்ஸ்ஸிற்காக மனு செய்திருப்பதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும் பல விபரங்கள் கேட்டதில் கடந்த 2008-2010 ஆண்டுகால கட்டத்தில் 10வயது பூரத்தியான 12 சிறுவர்களுக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்கியிருப்பது தெரிவந்தது. மேலும் விவரங்களை சேகரித்ததில் 18 வயதிற்கு குறைந்த டீன்ஏஜ்கள 7 ஆயிரத்து 71 பேருக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது. பிரிட்டனில் டீன்ஏஜ் குற்றங்கள் பெருகி வரும் நிலையில் விவரம் அறியாத சிறுவர்களுக்கு துப்பாக்கி லைசென்‌ஸ் வ‌ழங்கியிருப்பது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது

சிறப்பான வரவேற்பு, ஜெயாவுக்கு!

திருச்சி : இலவசங்கள் மூலம் மட்டுமே மக்களை கவரும் நிலையில் அ.தி.மு.க., இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மக்களிடையே அ.தி.மு.க.,விற்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. எனவே இலவசங்கள் மூலம் மட்டுமே அ.தி.மு.க., வாக்காளர்களை கவர நினைப்பதாக கூறுவது தவறானது என்று தெரிவித்துள்ளார்.

அழகிரிக்காக கட்சை கட்டிய, குஷ்பு!

மதுரையில் நடிகை குஷ்பு. தேர்தல் பிரசாரத்துக்காக இன்று வெள்ளிக்கிழை காலை மதுரை வந்தார் குஷ்பு. அவர் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இல்லத்துக்கு சென்று அவருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

பின்னர் பிரசாரம் வியூகம் குறித்து சுமார் 1 மணி நேரம் அவருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவருடன் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு உடன் இருந்தார். மதுரை மேற்கு தொகுதி திமுக வேட்பாளரர் கோ. தளபதியை ஆதரித்து வெள்ளிக்கிழமை காலை நடிகை குஷ்பு மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் திறந்த வெளி வேனில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது, முதல் அமைச்சர் கருணாநிதி தேர்தல் அறிக்கையில் அழகான கதாநாயகியை உருவாக்கி உள்ளார். கடந்த தேர்தலில் தேர்தல் அறிக்கையில் கூறியபடி இலவச டி.வி., கேஸ் வழங்கி உள்ளார். இந்த தேர்தல் அறிக்கையில் மிக்ஸி, கிரைண்டர், தருவதாக கூறியுள்ளார். சொல்வதை செய்பவர்தான் முதல்வர் கருணாநிதி. மீண்டும் அவர் தமிழகத்தில் முதல்வராவது உறுதி.

முதல்-அமைச்சர் கருணாநிதி, மத்திய அமைச்சர் அழகிரி ஆசிபெற்ற வேட்பாளர் தளபதிக்கு வருகிற தேர்தலில் ஆதரவு தரவேண்டும். தேர்தல் அறிக்கையில் கூறியபடி 35 கிலோ இலவச அரிசி, 58 வயது முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ், வீடு தேடு வரும் மருத்துவம் போன்ற நல்ல திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கப்போகிறது எனக் குஷ்பு தனது பிரச்சாரத்தில் பேசினார்.

Thursday, March 24, 2011

ஜெ,யின் வாக்குறுதி, அரசியல் ஸ்டேண்ட்?

- வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும்.

- 6 கிராமங்களில் 60 ஆயிரம் பால் கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்படும்.

- கரும்பு கொள்முதல் விலையை ரூ.2500 ஆக அதிகரிக்க நடவடிக்கை

- வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வீடுகளுக்கு சூரிய ஒளி மின்சாரம் இலவசம்

- கிராமப்புற தெரு விளக்களுக்கு சூரிய மின்சாரம்

- மீனவர் பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.

- மீனவர்கள் நலனுக்காக கப்பல் பூங்கா அமைக்கப்படும்.

- மீனவர் குடும்பத்திற்கான உதவித் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்.

- தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் அரசுடமையாக்கப்படும். அரசு மானியத்தில் குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி வழங்கப்படும்.

- இலங்கை அகதிகள் அனைவரும் தமிழகத்திலேயே கெளரவமாக வாழ நடவடிக்கை எடுக்கப்படும்.

- கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் நலன்கள் காக்கப்படும்.

திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள பல அறிவிப்புகள் இதிலும் உள்ளன.

அதேசமயம், திமுக திட்டங்களின் விரிவாக்கமாக இவை அமைந்துள்ளது.

ஆனால் இரு கட்சிகளும் இரண்டு முக்கிய பிரச்சனைகளை மறந்தே விட்டன.
அவை, 1.வேலை வாய்ப்பு, 2.விலைவாசி உயர்வு.

இலவசங்களை வழங்கியே தமிழக மக்களை சோம்பேறிகளாகவும், கையேந்துபவர்களாகவும் மாற்றுவதுதான் இரண்டு கட்சியினரின் நோக்கமாகும். இதனை தமிழக வாக்காளர்கள் புரிந்துக் கொள்வார்களா?

சிறுபான்மை சமுதாயத்தை மறந்த ஜெ.?? ஈழத்திற்காக ஒரு அறிக்கைகூட அறிவிக்காத, ஜே, ஆட்சிக்கு வந்து என்ன செய்யப்போகிறார். எல்லாம் ஓட்டுக்காகவே.

இன்ஜினியரிங் படித்தவரா? ஜெர்மனியில் வரவேற்பு!

பெர்லின் : வெளிநாடுகளை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக ஜெர்மன் நாட்டின் சட்டதிட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு.

ஜெர்மன் நாட்டில் இன்ஜினியரிங் மற்றும் அதன் தொடர்புடைய பணிகளுக்கு சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பற்றாக்குறையாக காணப்படுகிறது. இந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அதிபர் ஏஞ்சலா தலைமையிலான அரசு வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக அந்நாட்டின் சட்டதிட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி படித்த இளைஞர்கள் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் உடனடியாக அந்நாட்டில் பணிபுரியத்தக்க வகையில் சட்டங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மாற்றம் உடனடியாக பார்லி மென்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பணம் வாங்கினாலும், கொடுத்தாலும் கைக்கு வரும் காப்பு?

சென்னை : ஓட்டுக்கு பணம் கொடுத்தால் மட்டுமல்ல,ஓட்டுக்காக பணம்,பரிசுப் பொருட்கள் வாங்கினாலும் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தில் வழக்கு பதியப்படும் என, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.

‘ஓட்டுகளை விற்காதீர்; பணம் வாங்காதீர்’ என்ற கோஷத்துடன் கூடிய வாக்காளர் விழிப்புணர்வு பாடலை, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டார். இளைஞர் எக்ஸ்னோரா அமைப்பு சார்பில், இந்த பாடல் ‘சிடி’ வெளியிடப்பட்டது. பின், தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அளித்த பேட்டி: பணம் வாங்காதீர்; ஓட்டுகளை விற்காதீர் என,விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோ கண்காணிப்பு, பறக்கும் படை, தேர்தல் மேற்பார்வையாளர்கள் என, பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். எங்கெங்கு புகார் வருகிறதோ, அங்கெல்லாம் எங்கள் அதிகாரிகள், ‘ரெய்டு’ நடத்துகின்றனர்.

ஓட்டுக்கு பணம் அல்லது பரிசு கொடுப்பது மற்றும் தேர்தல் விதிமீறல்கள் தெரிந்தால், அதை யார் வேண்டுமானாலும் மொபைல் போனில் புகைப்படம் எடுத்து, ஆதாரமாக தரலாம்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம், பரிசு தருவதாக புகார் எழுந்ததால், அவர்களை கண்காணித்து வருகிறோம். தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் ஓட்டு இயந்திரங்கள் தயாராக உள்ளன. இதற்குத் தேவையான மாற்று இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. பாரபட்சமாக செயல்படும் போலீஸ் அதிகாரிகள் மீது புகார் வந்தால், அதை கலெக்டர்கள் எங்களுக்கு அனுப்புவர். பின், இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓட்டுக்கு பணம்,பரிசு கொடுத்தால் வழக்கு பதிவு செய்வோம். அதேபோல், ஓட்டுக்காக பணம்,பரிசு வாங்கினால் சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் மீது, லஞ்ச ஒழிப்பு சட்டத்தில் வழக்கு பதியப்படும், என்றார்.

‘ஓட்டுக்கு பணமோ, பரிசோ வாங்குவது குற்றம். பணம், பிரியாணி, மது பாட்டில் போன்றவற்றுக்காக ஓட்டை விற்றால், அடுத்த ஐந்து ஆண்டுகள் உங்களுக்கு வீணாகி விடும். எனவே நல்லவர்களை, ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுங்கள்’ என்றார்.

பா​.ஜ.க, தனியார் சேனலும் திட்டமிட்டு விரித்த வலை?

புதுடெல்லி:அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக எம்.பிக்களுக்கு லஞ்சம் அளித்ததாக கூறும் விவகாரத்தை பா.ஜ.கவும், ஐ.பி.என் – சி.என்.என் தொலைக்காட்சி சேனலும் திட்டம் தீட்டி விரித்த வலை என டெஹல்கா வெளிக் கொணர்ந்துள்ளது.

விக்கிலீக்ஸ் வசமிருக்கும் அமெரிக்கா தூதரகம் அனுப்பிய ரகசியத் தகவல்கள் அடங்கிய இந்தியா தொடர்பான கேபிள் செய்திகளை ‘தி ஹிந்து’ பத்திரிகை வெளியிட்டு வருகிறது. இச்செய்தியில்தான் காங்கிரஸ் எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம் வெளியானது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகிறது பா.ஜ.க.

இந்நிலையில் டெஹல்காவில் வெளியான செய்தியானது௦ காங்கிரஸிற்கு பா.ஜ.கவுக்கு எதிரான தற்காப்பு ஆயுதமாக மாறியுள்ளது. பா.ஜ.கவின் மூத்ததலைவர் எல்.கே.அத்வானி,மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் அருண் ஜெட்லி, சுதீந்தர் குல்கர்னி ஆகியோரின் ஆதரவுடன் சி.என்.என்.-ஐ.பி.என் சேனலுடன் இணைந்து நடத்திய ரகசிய கேமரா ஆபரேசனின் மோசடியை டெஹல்கா வெளிப்படுத்தியுள்ளது.

இதுத் தொடர்பான 10 தொலைபேசி உரையாடல்களின் ஆவணங்களை டெஹல்கா தம் வசம் வைத்துள்ளது.

BJPMPAshokArgal_Call_1., BJPMPAshokArgal_Call_2

சி.என்.என்.-ஐ.பி.என் தொலைக்காட்சிக்காக கேமரா ஒளிப்பதிவுக்கு தலைமை வகித்த செய்தியாளர் சித்தார்த் கவுதம் வெளியிட்ட தகவல்களுடன் டெஹல்கா இதனை தெரிவித்துள்ளது.

ரகசிய ஆபரேசனுக்கு கவுதமிற்கு கட்டளை பிறப்பித்தவர் பா.ஜ.கவின் மாநிலங்களவை தலைவரான அருண் ஜெட்லியாவார். சுதீந்தர் குல்கர்னி சேனல் குழுவினருக்கு தேவையான வசதிகளை செய்துக் கொடுத்துள்ளார்.

ரகசிய கேமரா ஆபரேசனுக்கு பிறகு எல்.கே.அத்வானி நேரடியாக கவுதமை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பாராட்டு தெரிவித்துள்ளார். அசோக் அர்கார்,ஃபகான் சிங் குல்ஸ்தே,மகாவீர் பகோரா ஆகிய பா.ஜ.க எம்.பிக்கள் ரகசிய கேமரா ஆபரேசனில் பங்கேற்றுள்ளனர்.

சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அஹ்மத் பட்டேல் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் அமர்சிங் ஆகியோரை இந்த ரகசிய கேமரா ஆபரேசனில் சிக்கவைக்க திட்டமிட்டப் பொழுதும் அவர்கள் அதில் சிக்காமல் தப்பிவிட்டனர்.

இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக 2008 ஜூலை 22-ஆம் தேதி பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான விவாதத்தின்போது பாராளுமன்ற அவையின் நடுவே பா.ஜ.க எம்.பிக்கள் பண கட்டுகளுடன் வந்து தங்களுக்கு லஞ்சமாக வழங்கப்பட்டது எனக்கூறி உயர்த்தி காண்பித்தனர்.

இச்சம்பவம் இந்திய தேசத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க சமாஜ்வாதி கட்சியின் அமர்சிங் அளித்த லஞ்சப் பணம் என அவர்கள் குறிப்பிட்டனர். லஞ்சப் புகாரை விசாரித்த கிஷோர் சந்திரதேவ் கமிட்டி அமர்சிங்கையும், அஹ்மத் பட்டேலையும் குற்றமற்றவர்கள் என கூறியது.

நேற்று பாராளுமன்றத்தில் டெஹல்காவின் அறிக்கையை உயர்த்திக்காட்டி பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்ஸால் பிரதமருக்கெதிரான பா.ஜ.கவின் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜ.க தலைமையின் ஆசீர்வாதத்துடன் சேனல் இந்த ரகசிய கேமரா ஆபரேசனை நடத்தியதாக பன்ஸால் தெரிவித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.பிக்களுக்கு காங்கிரஸோ,சமாஜ்வாதிக் கட்சியோ எம்.பிக்களை விலைக்கொடுத்து வாங்கவில்லை என டெஹல்கா தெரிவித்துள்ளதாக பன்ஸால் தெரிவித்தார்.

ஜெ, க்கு செருப்பு வீசப்பட்டதா?

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெ., இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது இவருடன் வந்த அ.தி.மு.க., தொண்டர்கள் மீது செருப்பு வீசப்பட்டதால் .அ.தி.மு.க., - தி.மு.க., தொண்டர்கள் மோதும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர்.

அ.தி.மு.க., பொதுசெயலர் இன்று வேட்பு மனுத்தாக்கல் ஜெ., தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். 11 மணி அளவில் திருச்சி கலெக்டர் ஆபீசுக்கு தங்களுடைய தொண்டர்கள் புடைசூழ வந்தார். இவர் முன்பு செல்ல இவரது பின்னால் அ.தி.மு.க., தொண்டர்கள் சாரை,சாரையாக வந்து கொண்டிருந்தனர்.

இவர் மனுத்தாக்கல் செய்ய வரும்போது ஜெ., வை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் ஆனந்தும் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் நேருவும், தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்தனர். இந்நேரத்தில் இருதரப்பு தொண்டர்கள் குவிந்திருந்ததால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜெ.., மனுத்தாக்கல் செய்ய கலெக்டர் ஆபீஸ் வளாகத்திற்குள் சென்ற போது, தி.மு.க.,வினர் அ.தி.மு.க.,வினரை நோக்கி செருப்பு வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருதரப்பும் பலத்த குரலில் கத்தியபடி மோதும் சூழல் ஏற்பட்டது. வன்முறை ஏதும் நிகழாமல் தடுக்க போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். தொடர்ந்து அங்கு பதட்டம் தொற்றிக்கொண்டது இருதரப்பினர் நடத்திய கல்வீச்சில் இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி மண்டை உடைந்தது. ரத்தம் சொட்ட, சொட்ட, ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்திய, பாகிஸ்தான் அரையிறுதியில்!

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் சேர்த்தது.

அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் வாட்சன் 25 ரன்களையும், ஹதீன் 53 ரன்களையும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் பான்டிங் அபாரமாக பேட் செய்து சதமடித்து, ஆஸ்திரேலிய அணியின் ரன் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தினார். 104 ரன்கள் குவித்த அவர், அஸ்வின் பந்துவீச்சில் ஜாகீர் கானிடம் கேட்ச் தந்து அவுட்டானார்.

மைக்கேல் கிளார்க் 8 ரன்களிலும், ஹஸ்சி 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒயிட் 12 ரன்களே எடுத்த நிலையில், பான்டிங்குக்கு உறுதுணையாக இருந்த ஹஸ்சி 38 ரன்கள் எடுத்தார். ஜான்சன் 6 ரன்கள் எடுத்தார்.

இந்திய தரப்பில் யுவராஜ் சிங், அஸ்வின், ஜாகீர்கான், ஹர்பஜன் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியின் ரன் எண்ணிக்கை ஓரளவு கட்டுப்படுத்தினர்.

அஸ்வின், ஜாகீர் கான், யுவராஜ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, பாகிஸ்தானை அரையிறுதியில் பலப்பரீட்சை காணவுள்ளது.

Wednesday, March 23, 2011

கூட்டனி கட்சிகளுடன் வேகத்துடன் களமிறங்கியது?

இன்று நல்ல நாள் என்பதால், தமிழக முதல்வர் கருணாநிதி, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டவர்களும், மற்ற வேட்பாளர்களும் இன்று மனு தாக்கல் செய்கின்றனர். அ.தி.மு.க., தலைமை ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி, அனைத்து அ.தி.மு.க., வேட்பாளர்களும் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.

மனு தாக்கலுக்கு, 26ம் தேதி கடைசி நாள். மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றை வாபஸ் பெற, 30ம் தேதி கடைசி நாள். எனவே, இறுதி வேட்பாளர் பட்டியல், 30ம் தேதி வெளியாகிறது. ஓட்டுப்பதிவுக்கு இன்னும், 20 நாட்கள் இருந்தாலும், ஏப்ரல் 11ம் தேதி பிரசாரத்தை முடிக்க வேண்டும். எனவே, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பின், பிரசாரத்துக்கு, 12 நாட்களே இருக்கும். அதற்குள் தலைவர்களது வருகை போன்ற வற்றில் கவனம் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படும். எனவே, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்காக காத்திருக்காமல், இன்றே தீவிர பிரசாரத்தை துவக்க, வேட்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். அவ்வாறு பிரசாரம் செய்தாலும், ஒவ்வொரு தொகுதியிலும் வீடு வீடாக வாக்காளர்களை சந்தித்து, பிரசாரம் செய்வதற்கான அவகாசமும் குறைவாகவே உள்ளது.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், நேற்றே தனது பிரசாரத்தை, திருவாரூரில் துவக்கிவிட்டார். இன்று வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு, தஞ்சாவூர், திருச்சியில் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்யவுள்ளார். ஸ்ரீரங்கம் தொகுதியில் இன்று, வேட்புமனு தாக்கல் செய்யும் ஜெயலலிதா, தேர்தல் அறிக்கையையும் வெளியிடவுள்ளார். தனது தொகுதியில் பிரசாரத்தைத் துவங்கும் அவர், தொடர்ந்து தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். தலைவர்களது பிரசாரம் மட்டுமன்றி, திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பிரசாரமும் இன்று முதல் துவங்குகிறது. முதல்வரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய அமைச்சர் அழகிரியும், துணை முதல்வர் ஸ்டாலினும் தான், தி.மு.க., கூட்டணி பிரசாரத்தை தோளில் சுமக்க உள்ளனர்.

காங்கிரசைப் பொறுத்தவரை, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன் போன்றோர் பார்லிமென்ட் கூட்டத் தொடரிலும் கலந்துகொள்ள வேண்டியுள்ளதால், விடுமுறை நாட்களில் தீவிர பிரசாரம் செய்ய உள்ளனர். அ.தி.மு.க., அணியில் உள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்களாக விஜயகாந்த், தா.பாண்டியன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் ஜெயலலிதாவுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட மனவருத்தங்களை சரிசெய்து, தொண்டர்களை தீவிர களப்பணியாற்ற வைக்க, இந்த ஒரே மேடை பிரசாரம் உதவும் என்று நிர்வாகிகள் நம்புகின்றனர்.

அறிமுக தொகுதி, தேர்தல் அதிகாரி / தொடர்பு எண்

* தொகுதி பெயர் : வானூர் (தனி)

* தொகுதி எண் : 73

* அறிமுகம் : 1957-ம் ஆண்டு முதல் தனி தொகுதியாக இருந்து தற்போதும் அதே நிலையில் நீடிக்கிறது.

* எல்லை :

மறுசீரமைப்பில் சிறிதளவு உருமாறிய வானூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கண்டமங்கலம் ஒன்றியத்தில் 33 ஊராட்சிகள்

சேர்க்கப்பட்டுள்ளன. வானூர் ஒன்றியத்தில் 65 ஊராட்சிகள்,கோட்டக்குப்பம் பேரூராட்சியில் 18 வார்டுகள் மாற்றமின்றி வானூர் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இந்தத் தொகுதியில் இருந்த மரக்காணம் பேரூராட்சி மற்றும் சில ஊராட்சிகள்

திண்டிவனம் தொகுதியில் இணைக்கப்பட்டுவிட்டன.
* தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

÷÷பேரூராட்சி: 1

கோட்டக்குப்பம் - 18 வார்டுகள்

ஊராட்சிகள்: 98

கண்டமங்கலம் ஒன்றியம் (33): ஆழியூர், சின்னபாபுசமுத்திரம், கலித்திரம்பட்டு, கலிஞ்சிகுப்பம், கண்டமங்கலம், கொடுக்கூர், கோண்டூர், கொங்கம்பட்டு, கிருஷ்ணாபுரம், கொத்தம்பாக்கம், வி.மாத்தூர், மிட்டாமண்டகப்பட்டு, முட்ராம்பட்டு, நவமால்காப்பேர், நவமால்மருதூர், நெற்குனம், பக்கிரிபாளையம், பாக்கம், பள்ளிநெளியனூர், பள்ளிபுதுப்பட்டு, பள்ளிதென்னல், பெரியபாபுசமுத்தரம், ராம்பாக்கம், சேஷாங்கனூர், சித்தலம்பட்டு, சொரப்பூர்,சொர்னாவூர்மேல்பாதி,சொர்னாவூர் கீழ்பாதி, திருமங்கலம்,தாண்டவமூர்த்திக்குப்பம்,வாதானூர்,வழுதாவூர், வீராணம்.

வானூர் ஒன்றியம் (65): தென்கோடிப்பாக்கம், பேராவூர்,

நல்லாவூர், உலகபுரம், டி.பரங்கினி, உப்புவேலூர், கொமடிப்பட்டு, காயல்மேடு, கிளப்பாக்கம், காரட்டை, தலக்காணிகுப்பம், புதக்குப்பம், கொஞ்சிமங்கலம், கிளியனூர், கொந்தமூர்,

அருவாப்பாக்கம், தேற்குணம், முருக்கம், கீழ்கூத்தப்பாக்கம், தென்சிறுவளூர், ஆதனப்பட்டு, பெரும்பாக்கம், குன்னம்,

கரசானூர், எறையூர், நெமிலி, சிறுவை, ராவுத்தன்குப்பம், பொம்பூர், ஐவேலி, இளையாண்டிப்பட்டு, கோரைக்கேணி, பொன்னம்பூண்டி, திருவக்கரை, தொள்ளாமூர், கடகம்பட்டு, செங்கமேடு, வி.பரங்கினி, வி.புதுப்பாக்கம், சே.மங்கலம், ரங்கநாதபுரம், காட்ராம்பாக்கம்,வி.கேணிப்பட்டு, தைலாபுரம்,ஒழுந்தியாப்பட்டு,கொடூர், கழுப்பெரும்பாக்கம் வில்வநத்தம், கொழவாரி, மாத்தூர், நெசல், ஆப்பிரம்பட்டு, ராயபுதுப்பாக்கம், தூருவை, புளிச்சப்பள்ளம், வானூர், ஒட்டை, அச்சரம்பட்டு, கடபேரிக்குப்பம், இரும்பை,பொம்மையார்பாளையம், திருச்சிற்றம்பளம், பூத்தூரை, பெரம்பை,

நாராயணபுரம்

* வாக்காளர்கள் : ஆண் : 98,161 பெண் :96,348

திருநங்கைகள் : 6

மொத்தம் : 6 1,94,515

* வாக்குச்சாவடிகள் : மொத்தம் : 247

* தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண்:

÷ பூபதி, தனித் துணை வட்டாட்சியர் - 9442235190.

முதல்வருக்கு அல்வா கொடுத்த?

முதல்வர் கருணாநிதி, சென்னையிலிருந்து திருவாரூர் சென்றபோது, அவருக்கு, "பரங்கிப்பேட்டை அல்வா'வை முன்னாள் எம்.எல்.ஏ., மகன் கொடுத்தார். தி.மு.க., கூட்டணி தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் கருணாநிதி, இன்று காலை, சென்னையிலிருந்து காரில் திருவாரூர் சென்றார்.

வழியில் பல இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், முதல்வருக்கு கொடுக்க கொண்டு வந்த சால்வைகள் மற்றும் பூங்கொத்துக்கள் சோதனையிட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டது. பரங்கிப்பேட்டை நகர தி.மு.க., சார்பில், பு.முட்லூரில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது, முன்னாள் எம்.எல்.ஏ., சிவலோகம் மகன் சண்முகம், தான் கொண்டு வந்த, "பரங்கிப்பேட்டை அல்வா'வை கொடுக்க முயன்றார். பதறிப்போன பாதுகாப்புப் படையினர், அந்த பொட்டலத்தை பிரித்து சோதனை செய்த பின்னரே முதல்வரிடம் கொடுக்க அனுமதித்தனர்.

மன்மத ராசா புகழ், சின்னத்திரையில்

"திருடா திருடி" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயா சிங். அந்தபடத்தில் தனுஷூடன் இவர் ஆடிய "மன்மத ராசா..." பாடல் பட்டிதொட்டியெல்லாம் பரவியது. இந்தபடத்திற்கு பின்னர் நடிக்க வாய்ப்பு வரும் என்று காத்திருந்தார். ஆனால் மன்மத ராசா பாடல் மாதிரி ஒத்த பாட்டுக்கு ஆடத்தான் நிறைய வாய்ப்புகள் வந்தன. இருந்தாலும் அம்மணி அதனை மறுக்கவில்லை. வந்தவரைக்கும் லாபம் என்பது போல ஒத்தபாட்டுக்கு ஆடத் தொடங்கினார்.

மன்மத ராசாவை தொடர்ந்து, விக்ரமுடன் "அருள்" படத்தில் ஒரு பாடல், விஜய்யுடன் "திருப்பாச்சி" படத்தில் "கும்பிடபோன தெய்வம்..." என்று நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் பார்த்திபனுடன் "வல்லமை தாராயோ" படத்தில் நடித்தார். அதன்பின்னர் சிறிது இடைவெளிக்கு பின்னர் ஷங்கரின் "அனந்தபுரத்து வீடு" படத்தில் நடித்தார். தொடர்ந்து படவாய்ப்புகள் ஏதும் வராததால் சின்னத்திரையில் களம் இறங்கிவிட்டார். தமிழில் முன்னணி டி.வி., சானல் ஒன்றில் சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் நிறைந்த தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.

இதுகுறித்து சாயா சிங் கூறுகையில், சின்னத்திரையில் நடிக்க இருந்தது உண்மை தான். ஆனால் அது இவ்வளவு சீக்கிரமாக நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்ததொடரின் கதை மிகவும் பிடித்து இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

Tuesday, March 22, 2011

வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா குறைப்பு? பிரிட்டன்!

லண்டன்:உயர்கல்வி படிப்பதற்காக ஒவ்வொரு நாட்டிலிருந்தும் இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு மாணவர்கள் செல்வது வழக்கம். மேலும் அந்நாடுகளுக்கு செல்லும் மாணவர்கள் முறையானவிசா,முறையற்ற விசா மூலமும் செல்வதால் இரு நாடுகளிடையேயான உறவில் சிக்கல் எழுகின்றன. இதனை தவிர்ப்பதற்காக வழிமுறைகளை இங்கிலாந்து அரசு முயன்று வருகிறது.

உலகம் முழுவதிலும் இருந்து ஆண்டு தோறும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயர் கல்வி படிக்க இங்கிலாந்திற்கு வருகின்றனர். இந்த எண்ணிக்கையை குறைப்பதற்காக முதற்கட்டமாக வெளிநாட்டு மாணவர்களை கவர்ந்திழுக்கும் போலியான கல்வி நிறுவனங்களை அடையாளம் காணப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு மாணவர்களில் ஏழு பேரில் ஒருவர் போலியான கல்விநிறுவனங்களில் பயின்று வருகின்றனர் என ஆய்வுஒன்று தெரிவிக்கிறது.

மேலும்வெளிநாட்டிலிருந்து வரும் மாணவர்களுக்கு ஆங்கில அறிவு கட்டாயமாக இருக்க வேண்டும் என்பது. வெளிநாட்டு மாணவர்களில் குறிப்பாக சீனா, இந்தியா போன்ற நாட்டில் இருந்து செல்லும் மாணவர்களின் ஆங்கில அறிவு குறைவுகாரணமாக இங்கிலாந்து மாண வர்களுடன் ஒன்று சேர முடியாமல் அவர்களுடன் பழக முடியாமல் தனித்து விடப்படுகின்றனர். இதனால் இன வெறி போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் விதமாக விசா வழங்கும் படிவத்தில் ஆங்கில அறிவு கட்டாயம் என்ற விதியை சேர்க்கும் பட்சத்தில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் திருமணம் அடுத்த மாதம் 29-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு அல்காடெல் நிறுவனம் சிறப்பு செல்போனையும் ஜி.ஈ. நிறுவனம் சிறப்பு குளிர்சாதன பெட்டியையும் விற்பனைக்கு விடுகின்றன.

இளவரசர் வில்லியம்ஸýக்கும் கேட் மிடில்டனுக்கும் ஏப்ரல் மாதம் 29-ம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற உள்ளது. இவர்களது திருமணத்தை முன்னிட்டு அல்காடெல் நிறுவனம் சிறப்பு செல்போன் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. 

அந்த செல்போனின் திரையில் இளவரசர் வில்லியம் மற்றும் மணமகள் மிடில்டன் ஆகியோரது படங்கள் இருக்கும். அதில் திருமண நாளைக் குறிக்கும் வகையில் ஏப்ரல் - 29 என்று பொறிக்கப்பட்டிருக்கும். இதன் விலை ரூ. 1100 ஆக இருக்கும். இதே போல் ஜி.ஆர். நிறுவனம் பிரிட்ஜ் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு விடவுள்ளது. அந்த பிரிட்ஜின் வெளிப்பகுதியில் திருமணத் தம்பதியரின் படம் பொறிக்கப்பட்டிருக்கும். இதை அந்த நிறுவனத்தின் வர்த்தக பிரிவு இயக்குநர் டேவிட் கார்டன் தெரிவித்துள்ளார்.

சொன்னதை செய்வோம்! சொல்லாததையும் செய்வோம்?

வாஷிங்மெஷின், பிரிட்ஜ் ஆகியவற்றை முதல்வர் கலைஞர் வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என, மு.க.ஸ்டாலின் பேசினார்.

துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் திருப்பூர் அல்தாப் போட்டியிடுகிறார். துறைமுகம் இந்திய முஸ்லீம் லீக் வேட்பாளரை ஆதரித்து செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், 2006ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையின் வாக்குறுதிகள் அனைத்து வாக்குறுதிகளையும் முதல்வர் கலைஞர் நிறைவேற்றியுள்ளார்.

தற்போது தேர்தல் அறிக்கையில் கிரைண்டர் அல்லது மிக்ஸி அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு எப்போதும் சொன்னதையும் செய்யும், சொல்லாததையும் செய்யும். வாஷிங்மெஷின், பிரிட்ஜ் ஆகியவற்றை முதல்வர் கலைஞர் வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் மக்கள் மத்தியில் நம்பிக்கை வந்துள்ளது என்றார்.

பற்களை பாதுகாக்கலமா!

பல் போனால் சொல் போச்சு என்று சொல்வார்கள். உண்மைதான்… வாயில் வரிசையாக பற்கள் இல்லாவிட்டால், சுத்தமான பேச்சு வராது. அதேபோல், முக அழகை பேணிக்காப்பதிலும் பற்களுக்கு முக்கிய பங்கு உண்டு. பற்கள் விழ ஆரம்பித்துவிட்டால் அழகும் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட ஆரம்பித்துவிடும்.

சிலர் வாயைத் திறந்தாலே கப்பென்று ஒரு வாடை அடிக்கும். அவர்கள் சரியாக பல் துலக்காததுதான் அதற்கு காரணம். பற்களை முறையாக பராமரிக்காவிட்டால், பல் சொத்தையாவதோடு பல நோய்களும் அடிக்கடி வந்து தொல்லை செய்யும். அதனால், பற்களை தகுந்த முறையில் பேணிக்காப்பது அவசியமாகிறது. அதற்கு என்ன செய்யலாம்? குழந்தைப் பருவம் முதலே பற்களை முறையாக சுத்தம் செய்துவர வேண்டும். தினமும் இரண்டு வேளை பல் துலக்கவும், சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிக்க வேண்டும்.

சிலருக்கு சின்ன வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால் அவர்களது முக அமைப்பே மாறிவிடும். குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே இதற்கு முக்கிய காரணம். பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் வளரும் பருவத்தில் இந்தப் பழக்கம் தொடரும்போது பற்களின் நேரான வளர்ச்சிக்கு விரல்கள் இடைறாக இருப்பதால் பற்கள் தங்கள் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு வளர ஆரம்பித்து விடுகின்றன. அதனால், 3 முதல் 4 வயது வரை உள்ள குழந்தைகள் விரல் சூப்பினால் பரவாயில்லை. அதற்கு மேல் அந்தப் பழக்கத்தை அனுமதிக்கக் கூடாது.

நம்மில் பலர் பல் துலக்கும்போது இன்னொரு பெரிய தவறையும் தெரியாமல் செய்துவிடுகிறோம். அதாவது, பற்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பல் ஈறுகளுக்கு கொடுக்க மறந்துவிடுகிறோம். ஈறுகளுக்கும், பற்களுக்கும் இடையில் உள்ள சின்ன இடைவெளிகளில் நாம் சாப்பிடும் பொருட்கள் தங்குவதுதான் ஈறு தொடர்பான பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது. குழந்தை பருவத்தில் இருந்தே, பல் ஈறுகளுக்கு இடையிலும் சுத்தம் செய்வது எப்படி என்று கற்றுக்கொடுத்தால் பிற்காலத்தில் ஏற்படும் அவதியை தவிர்க்கலாம்.

இலவச வெப்சைட் பேக்கேஜ்!

சென்னை : புதிய வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்க்கும் பொருட்டு, தங்கள் நிறுவனத்தின் சேவையை புதிதாக பெறும் வாடிக்கையாளர்களுக்கு இலவச வெப்சைட் பேக்கேஜை வழங்க திட்டமிட்டிருப்பதாக ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் ( 3ஜி சேவை பிரிவு) உயர் அதிகாரி பிரசாந்த் கோகர்ன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இந்தியாவில், 2013ம் ஆண்டிற்குள், இணையதளத்தில் உலவுபவர்களின் எண்ணிக்கை 8 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆனால், தற்போதைய அளவில் இந்தியாவில் 8 லட்சம் இணையதளங்களே புழக்கத்தில் உள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகர்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்த பெரும்பாலும் இணையதளங்களை நாடுகின்றன. அவர்களுக்கு சேவை செய்யும் விதமாக, தங்கள் நிறுவனம், நெட்கனெக்ட் சேவையை புதிதாக பெறும் வாடிக்கையாளர்களுக்கு இலவச வெப்சைட் பேக்கேஜை ஒரு ஆண்டிற்கு இலவசமாக வழங்குகிறது.

இந்த பேக்கேஜின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப டொமைன் நேமை பெற்றுக்கொள்ளலாம். அதோடுமட்டுமல்லாமல், ஹோஸ்டிங் மற்றும் பிசினஸ் இ-மெயில் அக்கவுண்ட் வசதிகளுடன் கூடிய ‌வெப்சைட்டை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புடன், அவர்களுக்கு தேவையான உதவிகளையும் நாங்கள் இலவசமாக ஒரு ஆண்டிற்கு வழங்க உள்‌ளோம். இதற்காக, வெப் ஹோஸ்டிங் சேவைகள் வழங்குவதில் முன்னணி நிறுவனமாக உள்ள பிக்ராக்குடன் கைகோர்த்துள்ளோம். இதன்மூலம், எங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் உயரும் என்று எதிர்பார்க்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, March 21, 2011

வை.கோ.வுக்கு ஆதரவு கரம் நீட்டும், கி.வீரமணி

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உங்களுக்கு இழைக்கப்பட்ட "பொடா' கொடுமையை அரசியல் காரணமாக நீங்கள் மறந்திருக்கலாம். ஆனால், இன உணர்வுள்ள நாங்கள் என்றும் மறந்ததில்லை. சகோதர பாசம் என்பது தேவை வரும்போது பீறிட்டுக் கிளம்பும் என்பது இயல்பானதே.

அரசியலில் இன்னொரு தேர்தல் வரும்வரை சும்மா இருப்போம் என்ற நிலைப்பாடு சரியானதுதானா என்பதை சற்று நிதானமாக யோசியுங்கள். ம.தி.மு.க.வின் எதிர்காலத்தைப் பற்றி உணர்ச்சி வயப்படாமல் யோசியுங்கள். அரசியல் கட்சி நடத்துவோர் ஜனநாயகத்தில் வாக்களிக்காமல் புறக்கணிப்பது நல்லதா?

சுயமரியாதையோடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளீர்கள் என்றாலும் தங்களது அரசியல் பாதையை தீர்மானியுங்கள். தி.மு.க.வோடு ஒன்றாக இணைந்துவிட வேண்டும் என்று கூட சொல்ல மாட்டேன். தனித்தனி அரசியல் கட்சிகளானாலும் தாய்க் கழகமான தி.மு.க.வின் கொள்கைகளும், லட்சியங்களும், ம.தி.மு.க.வின் லட்சியங்களும் ஒன்றுதான். ஆயிரம் கோபதாபங்கள் நமக்குள் இருப்பினும் நீரடித்து நீர் விலகாது என்ற பழமொழிக்கேற்ப நாம் அனைவரும் ஓர் அணியில் நிற்க வேண்டும்.

எனவே, தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கும் நிலைப்பாட்டினை எடுங்கள். நிதானமாக யோசியுங்கள். தோழர்களுடன் கலந்து துணிந்து முடிவெடுங்கள். ஆட்சிக்கு வரும் முன்னரே இப்படி அலட்சியப்படுத்தும் ஜெயலலிதா, தப்பித்தவறி ஆட்சிக்கு வந்தால் எப்படி விஸ்வரூபம் எடுத்து அழிக்க முற்படக்கூடும் என்பதையும் எண்ணிப்பாருங்கள். எந்த உள்நோக்கமோ, அரசியல் லாபங்களோ இல்லாமல் விடுக்கப்படும் வேண்டுகோள் இது. தங்களது மனப் புண்ணுக்கு மருந்து என்று கருதியே இந்த யோசனை. இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு அவர் திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார். நாம் தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்க கடமைப்பட்டவர்கள் என்பதால்தான் இந்த வேண்டுகோள்' என்று கி. வீரமணி கூறியுள்ளார்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!