புது தில்லி, அரசின் மொத்த கடன் 2011-12-ம் நிதி ஆண்டில் ரூ. 4.17 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நடப்பு நிதி ஆண்டில் உள்ளதை விட ரூ. 40 ஆயிரம் கோடி குறைவாகும்.
பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த பட்ஜெட்டில் அரசு பெரும்பாலும் கடனை நம்பியிருக்கவில்லை என்பது ஓரளவு ஆறுதல் அளிக்கும் விஷயமாகும். 2011-12-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஒரு ரூபாயில் 22 காசுகள் திட்டச் செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடனுக்கான வட்டியை செலுத்த 18 காசுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் வரி மூலமான வரவு 24 காசுகளாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நடப்பு நிதி ஆண்டில் 23 காசுகளாக உள்ளது. ஒரு ரூபாயில் 11 காசுகள் வருமான வரியாக அரசுக்குக் கிடைக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் இது 9 காசுகளாக உள்ளது. இதிலிருந்து நேரடி வரிவிதிப்பு மூலம் ஒரு ரூபாயில் அரசுக்கு 35 காசுகள் கிடைக்கிறது.
இது தவிர மறைமுக வரிகளான சேவை வரி உள்ளிட்டவை மூலம் அரசுக்கு ஒரு ரூபாயில் 27 காசுகள் கிடைக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் இது 25 காசுகளாக உள்ளது. வரியற்ற வருவாய் மூலம் அரசுக்கு ஒரு ரூபாயில் 8 காசுகள் கிடைக்கிறது. இது தற்போது 11 காசுகளாக உள்ளது. மானியத்துக்கான ஒதுக்கீடு 9 காசுகளாகும். ராணுவத்துக்கான செலவு 11 காசுகளாகும். திட்டம் சாரா செலவுகளுக்கான ஒதுக்கீடு 11 காசுகளாகும். இது 13 காசிலிருந்து குறைந்துள்ளது. மாநிலங்களுக்கு வரி உள்ளிட்டவற்றுக்கு அளிக்கப்படும் தொகை 17 காசுகளாகும். இது நடப்பு நிதி ஆண்டில் 16 காசுகளாக உள்ளது. மாநிலங்கள் யூனியன் பிரதேசங்ளின் திட்ட செலவுக்கான உதவித் தொகை 7 காசுகளாக உள்ளது.