Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, January 31, 2011

மைக்ரோ ஓவனைப்பற்றி தெரிந்தும் தெரியாததும்?

மைக்ரோ அவன் இல்லாத வீடே தற்போது இல்லை. அதில் உள்ள நன்மை, தீமைகளை பார்த்து செய்வது சாலச் சிறந்தது.

தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இவர்கள் ஏன் இப்படிக்கூறுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, Microwave Oven எனப்படும் நுண்ணலை அடுப்புகளின் அடிப்படையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சாதாரண அடுப்பில் சமைக்கும்போது, முதலில் வெப்பம் பாத்திரத்தை அடைந்து, பின்னர் அதனுள்ளிருக்கும் பதார்த்தத்தினுள் நுழைகிறது. அதாவது, சாதாரண வெப்பக்கடத்தல் முறை மூலம் அங்கு சமையல் நடைபெறுகிறது. நுண்ணலை அடுப்பின் அமைப்பு முற்றிலும் வேறுமாதிரியானது. சாதாரண Electric Ovenகளில் வெப்பத்தை உண்டாக்க heaterகள் இருக்கும்.

ஆனால்,அப்படியொரு அமைப்பே இல்லாதபோது Microwave Oven களில் எவ்வாறு வெப்பம் உண்டாக்கப்படுகிறது?

இந்த விந்தையை நுண்ணலைதான் செய்கிறது.மின்சாரத்தின் மூலம் சக்திவாய்ந்த மைக்ரோ அலைகள் Microwave Oven இனுள் உருவாக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்படும் மைக்ரோ அலைகள் சாதாரணமாக, செக்கனுக்கு 45 கோடி அதிர்வுகள் என்ற எண்ணிக்கையில் இருக்கும்.

இந்த நுண்ணலைகள், சூடாக்குவதற்காக உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பதார்த்தத்தின் மூலக்கூறுகளை அசைத்து - அவற்றை அதிர்வுறச் செய்கின்றன. இவ்வாறு ஏற்படும் அதிர்வில் மூலக்கூறுகள் ஒன்றோடொன்று உராய, வெப்பம் பிறப்பிக்கப்படுகிறது. இந்தச் செயற்பாடு பதார்த்தத்தின் சகல பாகங்களிலும் நிகழ்வதால் பதார்த்தம் முழுவதும் ஒரே நேரத்தில் விரைவாகச் சூடேறிவிடுகிறது.

podiyan.com micro மைக்ரோ அலைகளினால் அசைக்கக்கூடிய மூலக்கூறுகளைக்கொண்ட பொருட்களை மட்டுமே Microwave Ovenமூலம் சூடாக்க இயலும். பீங்கான், கண்ணடி போன்றவற்றின் மூலக்கூறுகளை மைக்ரோ - வேவினால் அசைக்க இயலாது.

எனவே இவற்றினால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில்வைத்துச் சமைத்தால் பாத்திரம் சூடேறாது - ஆனால் பதார்த்தம் சமைக்கப்பட்டுவிடும். இதனால் பாத்திரத்தைச் சூடாக்கச் செலவழிக்கப்படவேண்டிய சக்தி மீதமாகிறது. உலோகப் பாத்திரங்களை Microwave Oven இனுள் உபயோகிப்பதைத் தவிர்க்கவேண்டும். ஏனெனில், உலோகம் -- மின்காந்த அலைகளை, அதாவது மைக்ரோவேவை தன்னுள் ஊடுருவ அனுமதிக்காது.

இதெல்லாம் சரி, தண்ணீரை Microwave Oven இல் சூடேற்றினால் அப்படி என்ன தகாத விளைவு நேரும்?

சாதாரண அடுப்பில் தண்ணீரைச் சூடக்கினால், பாத்திரத்தின் அடியில் ஏற்படுத்தப்படும் வெப்பத்தினால் பாத்திரத்தின் உள்ளே வாயுக் குமிழிகள் உருவாகி, அவை மெல்ல மேலெழுந்து - மேற்பரப்பை அடைந்தவுடன் வெடித்து நீராவியையும் வெளியேற்றும். இந்தச் செயற்பாடு, தண்ணீர் அதிகமாக வெப்பமாவதைத் தடுத்து, தண்ணீரின் கொதி நிலையான 100 செல்ஸியஸ் அளவிலேயே தொடர்ந்து பேண உதவுகிறது.

இவ்வாறான நிகழ்வு Microwave Oven இல் ஏற்படுவதில்லை. Microwave Oven இனுள் தண்ணீரின் மூலக்கூறுகள் அசைக்கப்பட்டு தண்ணீர் சூடாகும். ஆனால், வெப்பத்தின் சீர்ப் பரம்பலால் வாயுக் குமிழிகள் ஏற்படுவதில்லை. நீராவி வெளியேறாததால் தண்ணீரின் சூடு அதன் கொதி நிலையான 100 செல்ஸியஸ் அளவையும் கடக்கிறது. இந்த நிலை, Super Heat நிலை என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் தூசி போன்ற சிறு பொருள் தண்ணீரில் புகுமானால் அது வாயுக் குமிழிகள் உண்டாகும் வாய்ப்பைத்தோற்றுவித்துவிடும். ஏற்கனவே மைக்ரோ அலைகளின் தூண்டலால் உராய்வுநிலையில் இருக்கும் தண்ணீர் மூலக்கூறுகள் - வாயுக் குமிழிகளை உயர் அழுத்தத்துடன் வெளியேற்ற - அவை வெடித்துச்சிதறி அடர்த்தியான நீராவியை உருவாக்கும். இந்த நிலையில் மின்கசிவு, சடுதியான வெடிப்பு போன்ற விபத்துக்கள் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம்.

எனவேதான், Microwave Oven களில் தண்ணீரைச் சூடாக்காதீர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

மைக்ரோ அவனில் செய்யக் கூடாதவை:

1. மைக்ரோ அவனின் கதவை திறந்து வைக்கக்கூடாது. உணவு சமைக்கும் போது அடிக்கடி திறந்து மூடக்கூடாது.

2. குறுகிய வாயுள்ள பாத்திரம் உபயோகிக்கக்கூடாது.

3. டின் உணவை டீஃப்ராஸ்ட் செய்யக்கூடாது.

4. முட்டையை ஓட்டுடன் சமைக்கக்கூடாது.

5. ரோஸ்ட் செய்யும் போது உப்பு போடக்கூடாது, வறுத்த பின்பு உப்பு போடவும், இல்லாவிடில் கரிந்து, தீய்ந்து விடும்.

6. டீப் ஃப்ரை செய்ய முயற்சிக்கக்கூடாது.

7. ப்ளாஸ்டிக்,காகித பொருட்கள் உபயோகிக்ககூடாது, அவை உருகி, எரிந்து போகும்.

8. தண்ணீர் உள்ளே சிந்தக்கூடாது, இதனால் வெளிப்புற கண்ணாடி உடைய வாய்ப்புண்டு.

9. உணவு பொருட்கள் இல்லாமல் அவனை ( சும்மா ஓடவிடக்கூடாது) உபயோகிக்ககூடாது.

சினிமாவா, அரசியலா. விஜய்!

அரசியல் பிரவேசத்தில் இன்னும் குழப்பமாகவே இருக்கிறார் விஜய். அரசியலில் ஆர்வம் இருக்கு. ஆனா இப்போதைக்கு இல்லை, என்று சொன்னாலும், வருகிற சட்டபேரவைத் தேர்தலை சந்தித்தே ஆக வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்களாம் விஜயின் விசுவாசிகள். வேலாயுதமும் இறுதி கட்டத்தை எட்ட, அடுத்தது சீமானின் "பகலவனுக்கு' முன் சங்கரின் 3 இடியட்ஸில் நடிக்கிறார் விஜய். படத்தின் பெயர் நண்பன்.

காவலன் படத்தை ரிலீஸ் செய்வதற்குள் நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாகி விட்டது. சில படங்களில் பிரச்னைகள் வந்தது உண்டு. பொருளாதார ரீதியாக பல படங்களுக்கு உதவி செய்து இருக்கிறேன். பணம் பெரிய பிரச்சினையே அல்ல. காவலன் படத்தில் சில மோசமான பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருந்தது. அந்த பிரச்சினைகளுக்கு காரணம் யார், யார் தூண்டிவிடுகிறார்கள்? என்று எனக்கு தெரியவில்லை. புது அனுபவமாக இருந்தது. பிரச்சினைக்கு காரணம் தெரியவில்லை. இன்றுவரை அது புரியவில்லை. சில பல பிரச்னைகள் காரணமாக, காவலன் படத்தை ஜனவரி 14ம்தேதி கொண்டுவர முடியவில்லை. என்றாலும், அந்த பிரச்சினைகளை எல்லாம் தாண்டி காவலன் படத்துக்கு மக்கள் வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 350 தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. கஷ்டமான சூழ்நிலையில், என் கூட இருந்து உதவி செய்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி.

4 குழந்தைகள் ஒரே பிரசவத்தில்!

சென்னை, கீழ்ப்பாக்கம் பராக்கா சாலை வர்தமான் கார்டனை சேர்ந்தவர் ஆனந்த்(28). தனியார் நிறுவன சேல்ஸ்மேன். இவரது மனைவி சாந்தி(24). கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடந்தது. இரண்டு ஆண்டுகளாக குழந்தையில்லாமல் இருந்த தம்பதிகள், குழந்தை பாக்கியம் வேண்டி பல்வேறு கோவில்களுக்கு சென்றனர். பல மருத்துவமனைகளுக்கு சென்று டாக்டர்களிடம் சிகிச்சை மேற்கொண்டனர். இந்நிலையில், கடந்தாண்டு சாந்தி கர்ப்பமடைந்தார். கடந்த 28ம்தேதி பிரசவ வலி ஏற்பட்டது. அவரை கீழ்ப்பாக்கம், நியூ ஆவடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் பிரசவத்திலேயே நான்கு குழந்தைகள் பிறந்தன. அதில், இரண்டு ஆண் மற்றும் பெண் குழந்தைகள். மருத்துவமனையில் சாந்தியும், அவரது நான்கு குழந்தைகளும் நலமாக உள்ளனர்.

சாந்தியின் கணவர் ஆனந்த் கூறியதாவது: கடவுள் அருளால் நான்கு குழந்தைகள் கிடைத்துள்ளது. மாத சம்பளமாக 5,000 ரூபாய் சம்பாதிக்கிறேன். குடும்ப செலவுகளுக்கே அந்த பணம் போதுமானதாக இல்லை. நான்கு குழந்தைகளுக்கு பால், மருந்து, ஆடைகள் உள்ளிட்ட பராமரிப்பு செலவிற்கு பணம் தேவைப்படும். இப்போதுள்ள பொருளாதார நெருக்கடியை நினைத்தால், குழந்தைகளை எப்படி பராமரிப்பது என்றே தெரியவில்லை. எனவே, எனது குழந்தைகள் பராமரிக்க தேவையான உதவிகளை அரசு தரப்பில் எதிர் பார்த்து காத்திருக்கிறேன்.

புரோகித் தலைமையில் கிறிஸ்தவர்களையும் கொலைச் செய்துள்ளனர் - ராணுவ புலனாய்வு அறிக்கை

புதுடெல்லி: முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதுடன் ஹிந்துத்துவா பயங்கரவாதி புரோகித்தும் அவனது பயங்கரவாத குழுவினரும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ராணுவ புலனாய்வு அறிக்கை கூறுகிறது.

ஒரிஸ்ஸாவில் கண்டமால், வடக்கு கர்நாடகா மாநிலத்தில் சில பகுதிகள், புனே, ஜபல்பூர், போபால் ஆகிய இடங்களில் கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவ மெஷினரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் புரோகித்திற்கு அவனது பயங்கரவாத கும்பலுக்கும் தொடர்புள்ளது.

2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரிஸ்ஸாவில் இரண்டு கிறிஸ்தவர்களை கொலைச் செய்ததில் புரோகித்தின் நெருங்கிய கூட்டாளியும் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியுமான ஸமீர் குல்கர்னிக்கு பங்குண்டு என அவ்வறிக்கை கூறுகிறது.

ராணுவம் நேரடியாக நடத்திய புலனாய்வு மட்டுமல்லாமல், புரோகித் மற்றும் பிரக்யாசிங் தாக்கூர் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் கிடைத்த தகவல்களும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

மஹாராஷ்ட்ரா மாநிலம் காண்டாலாவில் வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி மஹாராஷ்ட்ரா பயங்கரவாத எதிர்ப்புப் படையினருடன் இணைந்து ராணுவம் புரோகித்திடம் விசாரணை மேற்கொண்டது.

2008 அக்டோபர் மாதம் தான் புரோகித்தை சந்தித்ததாகவும், மலேகானில் குண்டுவெடிப்பை நடத்தியதாகவும், 2008 ஆகஸ்ட் மாதம் ஒரிஸ்ஸாவில் இரண்டு கிறிஸ்தவர்களைக் கொலைச் செய்ததாகவும் பிரக்யாசிங் தாக்கூர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வடக்கு கர்நாடகாவில் கிறிஸ்தவ மையங்களுக்கு தீ வைத்ததையும் பிரக்யாசிங் ஒப்புக்கொண்டுள்ளார். இவற்றையெல்லாம் புரோகித்தும் சம்மதித்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஸமீர் குல்கர்னி மூலமாகத்தான் கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. குல்கர்னியை புரோகித் 'சாணக்கியன்' என அழைத்திருந்தார்.

தாக்குதல்களைக் குறித்து திட்டங்களை தீட்ட 2008 மார்ச் மாதம் தேசிய புலனாய்வு ஏஜன்சியால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் சந்தீப் டாங்கேயும், ராம்ஜி கல்சங்கராவும் புரோகித்தின் பஞ்ச்மஹரியிலுள்ள வீட்டில் வைத்து ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தியதாக அறிக்கை கூறுகிறது.
புனே,ஜபல்பூர்,போபால் ஆகிய இடங்களில் கிறிஸ்தவர்களுக்கெதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களில் இவர்களின் பங்கினை குறித்து போலீஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களுக்கு எதிராக தாக்குதலை நடத்துவதற்கு தனியாக ஒரு இயக்கத்தை உருவாக்க புரோகித் திட்டம் தயாரித்துள்ளான்.

2007-08 காலக்கட்டங்களில் அஸிமானந்தா புனேயில் அனில் மகாஜனின் வீட்டில் வைத்து நடத்திய ரகசிய கூட்டத்தில் புரோகித் பங்கேற்றுள்ளான்.

ஸ்ரீராம சேனாவின் பிரமோத் முத்தலிக், ஹிந்துஸ்தான் ராஷ்ட்ரிய சேனாவின் விலாஸ் பவார், குஜராத்தைச் சார்ந்த பாரத் ரதேஷ்வர், ஆந்திரபிரதேசத்தைச் சார்ந்த டாக்டர்.சீதாராமைய்யா, சுதாகர் சதுர்வேதி, அஜய் ராய்வார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டங்கள் ஒன்றில் அஸிமானந்தா அபினவ் பாரத்தை இதர இயக்கங்களுடன் இணைய முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் அது வெற்றிப்பெறவில்லை என ராணுவ புலனாய்வு அறிக்கை கூறுகிறது.

தேஜஸ்

எப்பொழுது மறையும் இந்த தீட்டு?

உத்தப்புரத்தில் இரு பிரிவினர்களுக்கும் இடையே அரச மர வழிபாடு, நிழற்குடை அமைத்தல் போன்ற பிரச்னைகளால் பல ஆண்டுகளாக தகராறு இருந்து வருகிறது. உத்தப்புரம் பஸ் நிறுத்தத்தில் ஒரு பிரிவினருக்கு சொந்தமான மாரியம்மன்- சத்திய முத்தாலம்மன் கோயில் உள்ளது. இரு பிரிவினரின் மோதலால் இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடக்கவில்லை. நேற்று இக்கோயிலுக்குள் ஒரு பிரிவினருடன் நுழையப் போவதாக மார்க்சிஸ்ட் கட்சியினர் அறிவித்து இருந்தனர். இதனால் உத்தப்புரம், எழுமலை பகுதிகளில் பதட்டம் நிலவியது. 

பேரையூர் தாசில்தார் வரும் 12 ம் தேதி வரை உத்தப்புரத்தில் 144 தடையுத்தரவு பிறப்பித்தார். விருதுநகர், மதுரை எஸ்.பி.,க்கள் பிரபாகரன், மனோகர், ஏ.டி.எஸ்.பி., மயில்வாகனன் தலைமையில் 1,500 பேர் பல இடங்களில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உத்தப்புரம் வருவதற்குரிய 14 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மதுரை டி.ஐ.ஜி., சந்தீப் மிட்டல் உத்தப்புரம் வந்து பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார். உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., சங்கர், பேரையூர் தாசில்தார் மங்கள ராமசுப்பிரமணியன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முகாமிட்டு இருந்தனர்.

நுழைய முயற்சி: நேற்று காலையில் இருந்து உத்தப்புரத்தில் பதட்டம் அதிகரித்தது. உசிலம்பட்டியில் இருந்து எழுமலை வரும் அனைத்து பஸ்களும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. எழுமலை, உத்தப்புரத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் இயங்கவில்லை. வேலைக்கு செல்பவர்கள் நடந்து சென்றனர். திடீரென்று காலை 10.45 மணிக்கு தெற்குத் தெருவில் பெரம்பலூர் எம்.எல்.ஏ., மகேந்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் சாமுவேல்ராஜ், மார்க்சிஸ்ட் மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொன்னுத்தாய் உட்பட 300க்கு மேற்பட்டவர்கள் பொங்கல் பானை, மாலைகள், வழிபாட்டு பொருள்கள் ஆகியவற்றோடு ஆலயப் பிரவேசம் செய்ய முயன்றனர். உடனே அந்த தெருவிலேயே போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தினர். கோயிலுக்கு நுழையக் கூடாது என போலீசார் கூறியதால் போலீசாருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் நடந்தது. பின்னர் சாமுவேல்ராஜ், மகேந்திரன் எம்.எல்.ஏ., ஆகியோர் சிறிது நேரம் போராட்டம் குறித்து பேசினர். பின்னர் எம்.எல்.ஏ., உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் இரண்டு நாள் பதட்டம் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

315 பேர் மதுரையில் கைது: மதுரையில் தடையை மீறி, உத்தப்புரம் புறப்பட்ட மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், நன்மாறன் எம்.எல்.ஏ.,, நகர் செயலாளர் அண்ணாதுரை உட்பட 315 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று மார்க்சிஸ்ட், கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆலயப்பிரவேசம் செய்ய முடிவு செய்யப்பட்டது. நேற்று கட்சி நிர்வாகிகளுடன் கலெக்டர் காமராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் கட்சி அலுவலகத்திலிருந்து மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் சம்பத் தலைமையில் உத்தப்புரத்திற்கு புறப்பட்டனர். அவர்களை தடுத்த போலீஸ் துணை கமிஷனர் சின்னசாமி, உதவிகமிஷனர் கணேசன், "நகருக்குள் போலீஸ் அனுமதியின்றி ஊர்வலமாக செல்லக்கூடாது' என்றனர். இதை ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகள், அருகில் உள்ள ஜின்னா திடலுக்கு ஊர்வலமாக வந்து, போலீசாருக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து கைது செய்யப்பட்ட 53 பெண்கள் உட்பட 315 பேர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

பக்சே! ஒரு நவீன ஹிட்லர்!!

இலங்கையில் புகழ்பெற்ற பத்திரிகை வரிசையில் உள்ளது லங்காஇநியூஸ்.காம் இந்த பத்திரிகை ஆங்கிலம் , சிங்களம், தமிழ் உள்ளிட்ட மும்மொழிகளில் தனது பதிப்புகளை வெளியிட்டு வருகிறது.கொழும்பு அருகே உள்ள இந்த இணையதள ஆபீசுக்கு வந்த மர்மக்கும்பல் ஒன்று அலுவலக முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தது. பின்னர் தீயை வைத்து கொளுத்தி விட்டு கும்பல் தப்பி ஓடி விட்டது. இதில் ஆபீசின் கம்ப்யூட்டர் அறை மற்றும் நூலகம் முழுவதும் எரிந்து சாம்பலானது.

தீ எரிந்த சம்பவம் குறித்து அக்கம், பக்கம் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தீயணைக்கும் படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். இந்த இணையதள ஆபீஸ் தீ வைப்பு சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. போலீசார் குற்றவாளிகளை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

பிரபல கார்ட்டூனிஸ்ட் மாயம், இந்த இணையதள பிரபல கார்ட்டூனிஸ்ட் பிரகீத் என்பவர் காணாமால் போனார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் ராஜபக்சே இந்த சம்பவம் குறித்து முழு அளவில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

17 பத்திரிகையாளர்கள் கொலை : அதிபர் ராஜபக்சே காலத்தில் பத்திரிகையாளர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதாக மனித உரிமை கமிஷன் தெரிவித்துள்ளது. இதுவரை 17 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாகவும், இரண்டு அலுவலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டள்ளதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

Sunday, January 30, 2011

சாக்லேட் பற்றாக்குறை ஏற்படும் 2014-ல்

ஜன.31:ஐவரிகோஸ்ட் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல்களால், கோகோ பீன்ஸ் விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது. இதனால் 2014-ல் உலகில் சாக்லேட் பற்றாக்குறை ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சாக்லேட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. சாக்லேட் தயாரிக்க முக்கியமான பொருள் கோகோ. கோகோ பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படும் கோகோ தான் சாக்லேட்டின் இன்றியமையாத மூலதனப் பொருள்.

உலகளவில் விளைவிக்கப்படும் கோகோ பீன்ஸில் பாதி ஐவரிகோஸ்ட் நாட்டில் இருந்து தான் பெறப்படுகிறது. தற்பொழுது அந்நாட்டு அரசியலில் சிக்கல்கள் உள்ளன. இதனால் விவசாயிகள் கோகோ பீன்ஸ் தயாரிப்பை பாதியளவாக குறைத்துள்ளன. பலர் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். விளைவிக்கப்படும் சிறிதளவு கோகோவையும் கானா நாட்டிற்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்கின்றனர்.

சர்வதேச நாடுகளுக்கு கோகோ பீன்ஸை ஏற்றுமதி செய்ய அந்நாட்டு அதிபர் அலஸ்சேன் குவட்டாரா தடை விதித்துள்ளார். இதன் எதிரொலியாக நடப்பு மாதத்தில் மட்டும் கோகோ விலை 10 சதவீதம் அதிகரித்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாதிக்க துடிக்கும் இளம் வீரர்கள்,ஹர்பஜன்

சுரேஷ் ரெய்னா, விராத் கோஹ்லி, யூசுப் பதான் உள்ளிட்ட இளம் வீரர்கள் உலக கோப்பை தொடரில் சாதிப்பார்கள் '' என, இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரில் அசத்தியது. ஒருநாள் தொடரை வெல்லவில்லை என்றாலும், கடைசி வரை போராடித்தான் வீழ்ந்தது. இந்த அனுபவம் குறித்து ஹர்பஜன் சிங் கூறியது,பொதுவாக பவுலர்கள் தேவையான நேரங்களில் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று தான் கேப்டன்கள் எதிர்பார்ப்பார்கள். இது தான் அடிப்படை. முன்னாள் கேப்டன் கங்குலி, தற்போதைய கேப்டன் தோனி இருவருமே, என்னிடம் இருந்து இதைத்தான் எதிர்பார்த்தனர். ஸ்ரீநாத், ஜாகிர் கானிடம் கங்குலி எதிர்பார்த்தது என்னவோ, அதைத்தான் தோனி இப்போது என்னிடம் எதிர்பார்க்கிறார்.

அடுத்து பவுலிங்கிற்கு ஏற்ப சரியாக பீல்டிங் அமைக்க வேண்டும். இதில் இரு கேப்டன்களுமே, என் மீது நம்பிக்கை வைத்து, பீல்டிங்கை என் விருப்பப்படி விட்டுவிடுவார்கள். இதனால் தான் சிறப்பாக செயல்படுகிறேன். இந்த இரு கேப்டன்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவெனில், தோனி அமைதியாக இருப்பார். ஆனால், கங்குலி தனது உணர்ச்சிகளை உடல் அசைவுகள் மூலம் வெளிப்படுத்தி விடுவார்.

பேட்டிங்கின் போது ஆரம்பத்தில் சரியான முறையில் பந்து வந்தால் போதும், அதை அடித்து விடுவேன், அவ்வளவு தான். ஆனால், இப்போது பந்தை நன்கு கவனித்து பிறகு அடிக்க முயற்சிக்கிறேன். பந்துகள் அளவுக்கு அதிகமாக "பவுன்ஸ்' ஆன தென் ஆப்ரிக்காவில், என்னைப் பொறுத்தவரையில் சிறப்பாகத் தான் செயல்பட்டோம். இது உலக கோப்பை தொடர் துவங்கவுள்ள நிலையில் லேசான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன் கடந்த 2002ல் நியூசிலாந்து சென்ற இந்திய அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை மோசமாக இழந்து திரும்பியது. பின் 2003 உலக கோப்பை தொடரில், முற்றிலும் வித்தியாசமாக செயல்பட்ட இந்திய அணி பைனலுக்கு முன்னேறியது. இதே போல மீண்டும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று தான் உண்மையில் நம்புகிறேன். அதைவிட ஒருபடி மேலாக கோப்பை வென்றால், கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பரிசாக அமையும். இதற்காக ரசிகர்கள் எங்களுக்கு 100 சதவீதத்துக்கும் மேலான ஆதரவை தருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

2003ல் அணியில் இருந்த ஜாகிர் கான், நெஹ்ரா, சேவக் ஆகியோர் அப்போது, குறைந்த அளவிலான போட்டிகளில் தான் பங்கேற்று இருந்தனர். இம்முறை "சீனியர்' சச்சின், ஆலோசகராக கங்குலி போன்றவர்கள் எங்களுடன் உள்ளனர். தவிர<, இளம் வீரர்கள் ரெய்னா, யூசுப் பதான், விராத் கோஹ்லி ஆகியோரிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கிறோம். நெருக்கடியான நேரங்களில் இவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். சர்வதேச அளவில் போதிய அனுபவம் பெற்றுள்ள இவர்கள், அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.

தி.மு.க., வில் அதிரடி கருணாநிதி

சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் தி.மு.க., தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை துவங்கிவிட்டன. தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெறுகின்றன என, டில்லியில் முதல்வர் நேற்று அறிவித்துள்ளார்.

காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தையை, காங்., தலைவர் சோனியாவிடம் இன்று முதல்வர் கருணாநிதி நடத்துகிறார். அ.தி.மு.க.,வுடன் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளன.மே மாதம் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலைச் சந்திக்க, அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தீவிரமாக நடத்தி வருகின்றன. தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

"பா.ம.க.,வும் தி.மு.க., கூட்டணியில் இடம் பெறும்' என, டில்லியில் முதல்வர் கருணாநிதி நேற்று அதிரடியாக அறிவித்தார். இன்று மதியம் 12 மணிக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்கிறார். காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தையை நடத்துகிறார்.

முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க டில்லிக்கு நேற்று வந்த முதல்வர்.

நிருபர்களிடம் கூறும் போது, ""தலைநகரில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் போது சோனியா, பிரதமரை சந்திப்பேன். சோனியாவை சந்திக்கும் போது, வரும் சட்டசபைத் தேர்தலில் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது, அவை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறேன். இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சொல்ல முடியாது. தி.மு.க., கூட்டணியில் காங்கிரசைத் தவிர விடுதலை சிறுத்தைகள், பா.ம.க., முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளும் இடம் பெறும் என்றார்.

இன்னும் 10 நாட்களுக்குள் தனது முடிவை அறிவிப்பதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதேபோல், தே.மு.தி.க.,வும் தனது இறுதி முடிவை அறிவித்ததும், கூட்டணிக் கட்சிகளுக்கான உடன்பாட்டில் இறுதி முடிவு எட்டி விடும்.பிப்ரவரி இரண்டாவது வாரத்திற்குள் எந்தெந்த அணியில் யார் யார்? இடம் பெறுவர் என்பதும், யார், யாருக்கு எத்தனை தொகுதிகள் என்ற முடிவும் தெரிந்து விடும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டசபைத் தேர்தலுக்கான சுறுசுறுப்பு, கட்சிகளிடம் அதிகரித்து பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Saturday, January 29, 2011

போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை, நிறுத்துமாறு ஒபாமா கோரிக்கை

வாஷிங்டன்,ஜன. 30: எகிப்து அரசுக்கெதிராக போராட்டம் நடத்திவரும் மக்களுக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்வதை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அந்நாட்டு சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கிடம் வலியுறுத்தியுள்ளார்.

எகிப்து நாட்டு மக்களின் உரிமைகளுக்காக பாடுபடுவோம் எனவும் தேசத்தின் சிறந்ததொரு எதிர்காலத்திற்காக அரசுடன் இணந்து செயல்படுவோம் எனவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோர் மீதான நடவடிக்கையை கைவிடுமாறு ஒபாமா முபாரக்குடன் நடத்திய அரை மணிநேர தொலைபேசி உரையாடலில் தெரிவித்துள்ளார்.

உலகில் இதர நாட்டு மக்களைப்போல் அமைதியாக ஒன்றுகூடவும், சுதந்திரமாக கருத்துக்களை கூறவும் தங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கவும் எகிப்து நாட்டு மக்களுக்கு உரிமை உண்டு. எங்கேயும் இத்தகைய உரிமைகளுக்காக அமெரிக்கா பாடுபடும் என ஒபாமா தெரிவித்துள்ளார்.

போராட்டத்தைத் தொடர்ந்து தடைச் செய்யப்பட்ட இணையதளம், தொலைபேசி தொடர்புகளை மீண்டும் செயல்படவைக்குமாறு ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

மேற்காசியா விவகாரங்களில் என்றைக்குமே அமெரிக்காவுடன் ஒத்துழைத்த முபாரக்கை நெருக்கடியான காலக்கட்டங்களில் அமெரிக்கா கைகழுவுகிறது என்பதைத்தான் ஒபாமாவின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தேஜஸ்.

தனியார் மயமாகப்போகும் சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில், 'கிரவுண்ட் ஹேண்ட்லிங்' எனப்படும் சரக்குகளை கையாளும் பணியை தனியாரிடம் ஒப்படைத் துள்ளது, விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் திட்டத்திற்கு இது முதற்கட்டம் தான்' என, விமான நிலைய ஊழியர்கள் குற்றம் சாட்டி யுள்ளனர். விமான நிலையத்தில் நவீன சரக்கு வளாகம் விரைவில் செயல்பட துவங்கவுள்ள நிலையில், விமான நிலைய ஆணையத்தின் இந்த நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர்கள் குறிப்பிட்டுள் ளனர்.தென்னிந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமாக சென்னை விமான நிலையம் திகழ்கிறது. டில்லி, மும்பையை அடுத்து சென்னை விமான நிலையத்தில் தான் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து அதிகம். இந்த வகையில் நாட்டின் மூன்றாவது பெரிய விமான நிலையமாக சென்னை விமான நிலையம் உள்ளது.கடந்த 2009-10ம் ஆண்டில் மட்டும் ஒரு கோடியே 5 லட்சம் பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர். 1.10 லட்சம் விமானங்கள் வந்து, சென்றுள்ளன. மொத்தம் 3.23 லட்சம் டன் அளவிற்கு சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.கடந்த 10 மாதங்களில் சரக்குகள் கையாள்வதில் இறக்குமதி 15 சதவீதமும், ஏற்றுமதி 35 சதவீதமும் அதிகரித்துள்ளன. அதிகரித்து வரும் சரக்கு மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, 1,800 கோடி ரூபாய் செலவில் சென்னை விமான நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, நவீன கார்கோ காம்ப்ளக்ஸ் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த சில மாதங்களில் இது பயன்பாட்டிற்கு வரும். தற்போது ஆண்டுக்கு 2.5 லட்சம் டன்கள் என்ற அளவிலான பொருள்களை கையாளும் திறனில் தான், 'ஏர்கார்கோ' பிரிவு செயல்படுகிறது. நவீன, 'ஏர்கார்கோ காம்ப்ளக்ஸ்' பயன்பாட்டிற்கு வரும்போது, 6 லட்சம் டன்களை கையாள முடியும்.இங்கு, ஆட்கள் சரக்குகளை கையாள்வது முற்றிலும் தவிர்க்கப்பட்டு, அனைத்து பணிகளும் இயந்திரங்கள் மூலம் செய்யப்படும். இதற்கான ஏ.எஸ்.ஆர்.எஸ். திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அடுக்கி வைக்கப்பட்டுள்ள சரக்கு பார்சலை இயந்திரமே இறக்கி, கீழே வைத்துவிடும். இதனால், நேரம் மீதமாவதுடன், சரக்குகள் சேதமடைவதும் தவிர்க்கப்படும்.

இந்நிலையில், 'கிரவுண்ட் ஹேண்ட்லிங்' எனப்படும் சரக்குகளை கையாளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது விமான நிலைய ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், எதிர்ப்பையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விமான நிலைய ஊழியர்கள் கூறியதாவது டெண்டர் விதிமுறைகளை மீறி, ஒரு தனியார் நிறுவனத்திற்கு, 'கிரவுண்ட் ஹேண்ட்லிங்' செய்வது ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சென்னை விமான நிலைய ஆணையத்தின் உயர் பதவிகளில் இருந்த சிலர், ஆணையத்திடம் சம்பளம் பெற்றுக் கொண்டு, குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திற்கு அலுவலக ரகசியங்களை கொடுத்து வந்தனர்.இதற்கு பிரதிபலனாக, ஓய்வு பெற்றதும் அந்நிறுவனத்தில் பொது மேலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை பெற்றுக் கொண்டனர். இவர்கள் பதவியில் இருக்கும்போதே, கிரவுண்ட் ஹேண்ட்லிங்கை தனியாருக்கு தாரை வார்க்க தேவையான ஏற்பாடுகளை செய்து விட்டனர். ஓய்வு பெற்றதும் அதை செயல்படுத்தி, பல கோடி ரூபாய் வருவாய் வரும் 'கிரவுண்ட் ஹேண்ட்லிங்'கை குறிப்பிட்ட தனியார் நிறுவனம் பெற்றுள்ளது. இது சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தின் முதற்கட்டமாகும். பல எதிர்ப்புகளையும் மீறி, ஏற்கனவே டில்லி, மும்பை விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக, சென்னை விமான நிலையத்தையும் தனியார் மயமாக்க சில ஓய்வு பெற்ற அதிகாரிகள் பின்னணியில் இருந்து செயல்படுகின்றனர்.

இந்திய அணி "நம்பர்-1' சச்சின்

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக டெஸ்ட் அரங்கில் தோனி தலைமையிலான இந்திய அணி "நம்பர்-1' இடத்தில் உள்ளது. இதில், இடம் பெற்றிருப்பது மிகவும் பெருமையாக உள்ளது என, சச்சின் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன்கள், டெஸ்டில் 50 சதம் அடித்து அசத்தியவர் இந்திய சாதனை பேட்ஸ்மேன் சச்சின். இவருக்கு இந்த ஆண்டின் சிறந்த இந்திய வீரர் மற்றும் ஸ்பெஷல் டெஸ்ட் வீரர் என்ற விருதை, "காஸ்டிரால்' நிறுவனம் வழங்கியது. இதற்கு முன் கடந்த 2009ல், இதே நிறுவனம் வழங்கிய சிறந்த டெஸ்ட் வீரர் விருதும் பெற்றுள்ளார். இவர் தவிர, தோனி, ஹர்பஜன், டிராவிட், யூசுப் பதான் ஆகியோரும் விருது பெற்றனர். விழாவில் பங்கேற்ற சச்சின் கூறியது,இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியை தோற்கடித்து, இந்திய அணி "நம்பர்-1' டெஸ்ட் அணி என்ற அந்தஸ்தை முதன் முதலாக பெற்றது. அப்போது, இது 30 அல்லது 40 நாட்களுக்குத் தான் நீடிக்கும் என்று, பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். அடுத்து வந்த தென் ஆப்ரிக்க தொடரில் முதல் டெஸ்டில் தோல்வியடைந்தோம். உடனே "நம்பர்-1' இடம் பறிபோகும் என்றனர். ஆனால், இப்போது ஒரு ஆண்டுக்கும் மேலாக இதே இடத்தில் நீடிக்கிறோம்.

இந்த இடத்தை பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல. இதற்காக பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளோம். கடினமாக உழைத்துள்ளோம். பயிற்சியாளர் கிறிஸ்டனும் அணியில் வியக்கத்தக்க வகையில் மாற்றம் கொண்டு வந்தார். கடந்த 2007க்கு பின் அணியில் உள்ள அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இத்தகைய அணியில் இருப்பதை மிகவும் பெருமையாக கருதுகிறேன்.

வயது தடையல்ல,இதுவரை நான்கு முறை காயத்துக்கு "ஆப்பரேஷன்' செய்துள்ளேன். இந்த நேரத்தில் அணியில் வருவதும், போவதுமாக இருந்தேன். பின் 2007க்குப் பின் பெரிய அளவில் காயம் எதுவுமில்லாததால், மகிழ்ச்சியாக உணர்கிறேன். என்னைப் பொறுத்த வரையில் கிரிக்கெட்டில், நீடிக்க வயது ஒரு தடையே அல்ல. நான் 16 வயதில் போட்டிகளில் பங்கேற்க துவங்கினேன். இது போல யாரும் எந்த வயதிலும் துவங்கலாம், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விளையாடலாம். ஆனால் எப்படி விளையாடு கின்றோம் என்பது தான் முக்கியம். இந்த உலக கோப்பை தொடரில் சிலவற்றை நிறைவேற்ற விரும்புகிறேன். அது என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்.
இவ்வாறு சச்சின் கூறினார்.

எந்த வயதில் ஆசைவரும்!

லண்டன் : எந்த வயதில் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது என்பது குறித்து, பிரிட்டனில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 50 வயதைக் கடந்த 1,500 ஆண், பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

பெரும்பாலானோர், 50 வயதைக் கடந்த பின்னரே சந்தோஷத்தை உணருவதாக தெரிவித்தனர். கல்வியை முடித்ததும், தொழில் தொடங்குவது, வேலையில் சேருவது என்று ஆண்களும், பெண்களும் தங்கள் எதிர்காலத்தை நோக்கி ஓடத் தொடங்குகின்றனர். இடையில் திருமணம், குழந்தைகள், பின், குழந்தைகளின் கல்வி, வேலை என்று அவர்களை கவனிக்க வேண்டியிருக்கிறது. இதனால், குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரம் செலவிடவோ, சமூகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கு பெறவோ முடியாத நிலை ஏற்படுகிறது.

தங்களது பிள்ளைகள் சொந்தக் காலில் நிற்கத் தொடங்கும் போதும், தங்களது வாழ்க்கையில் சந்தோஷத்தை உணரத் தொடங்குவதாக பெரும்பாலானோர் கூறுகின்றனர். அதன் பின்னரே, தங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் நேரத்தை செலவிட முடிவதாகவும், தங்களுக்குப் பிடித்த செயல்களில் ஈடுபட முடிவதாகவும் கூறுகின்றனர். மேலும், இந்த ஆய்வில் பங்கேற்ற பத்தில் நான்கு பேர், தாங்கள் எல்லா வயதிலும் சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு பேர், தங்கள் லட்சியத்தை அடைந்த பின்னரே, வாழ்க்கையில் சந்தோஷம் தொடங்கியதாக கூறுகின்றனர்.

ஐம்பது வயதைக் கடந்த பின்னரே, தங்களது வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதாக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தங்கம் பரிசு! இந்தியச் சிறுமிக்கு

துபை ஜன.29 : துபையில் இப்போது அங்காடித் திருவிழா நடைபெறுகிறது. அங்கே கடைகளில் நாம் வாங்கும் ஒவ்வொரு விலையுயர்ந்த பொருளுடனும் பரிசுக் கூப்பன் கொடுக்கிறார்கள். அதில் சிறப்புப் பரிசுக்குரியவரை அன்றாடம் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள்.

கேரளத்தைச் சேர்ந்த சாஜு மேத்யு தன்னுடைய மனைவி எல்மாவுடன் இந்த அங்காடித் திருவிழாவுக்குச் சென்றார். சில பொருள்களை வாங்கிய பிறகு தன்னுடைய 4 வயது மகள் ஜேஸ் எல்மா மேத்யூ பெயரில் பில் போடச் சொன்னார். எனவே கடைக்காரர்கள் அவருடைய மகள் பெயரிலேயே கூப்பன்களைப் பூர்த்தி செய்து அளித்தார்கள். அந்தப் பரிசுக் கூப்பன்களைக் குலுக்கலில் சேர்த்து குலுக்கியதில் ஜேஸ் எல்மா மேத்யூவுக்கு அரை கிலோ தங்கம் பரிசாகக் கிடைத்தது.

இந்தத் தகவல் கிடைத்ததும் சாஜியும் அவருடைய மனைவியும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்தியர்களுக்குத் தங்கம் என்றால் உயிர். எனக்குப் பிறந்தவள் பெண் குழந்தையாக இருப்பதால் திருமணத்துக்கு தங்க நகை போட்டாக வேண்டும். இந்த அரை கிலோ தங்கம் எங்களுக்குப் பேருதவியாக இருக்கும். துபையில் இருக்கும்வரை இத்தகைய அங்காடித் திருவிழாக்களில் கட்டாயம் கலந்து கொள்வோம். எங்களுடைய குடும்பத்தில் இதுவரை யாருக்கும் லாட்டரி மூலம்கூட அதிருஷ்டப் பரிசு கிடைத்ததில்லை, என்னுடைய மகள் அதிருஷ்டக்காரி என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினர் சாஜுவும் எல்மாவும்.

துபை செல்ல வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் பரிசு பெறலாம். பிப்ரவரி 20 வரை இந்த அங்காடித் திருவிழா நடைபெறுகிறது.

ம,அன்புக்கு பிறகு மீண்டும் கமல் செல்வராகவன்


மன்மதன் அம்பு" படத்திற்கு பிறகு டைரக்டர் செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். இதனால் தலைவன் இருக்கிறான் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

"ஆயிரத்தில் ஒருவன்" படத்திற்கு செல்வராகவன் விக்ரமுடன் ஒரு படம் பண்ணப் போவதாகவும், விஜய்யை வைத்து ஒரு படம் பண்ணப்போவதாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால் அவையாவும் உண்மையில்லை. செல்வா, தனது தம்பி தனுஷை வைத்து "இரண்டாம் உலகம்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே கமலை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து கமல் இயக்க இருந்த "தலைவன் இருக்கிறான்" படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தபடத்திற்கான கதையை எழுதி கமலிடம் ‌‌கொடுத்ததாகவும், கமல் அதை படித்து பார்த்து, கமல் ஓ.கே. சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதற்கான அறிவிப்பை கமல் வெளியிடுவார் எனத் தெரிகிறது.

வந்துடோமுலே!!

பெண்ணினத்தை இழிவுபடுத்தியும், தன் பெயரை களங்கப்படுத்திய, லெனின் கருப்பன் உட்பட மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, ராம்நகர் கோர்ட்டில் நடிகை ரஞ்சிதா, நேரில் ஆஜராகி மனுதாக்கல் செய்தார்.

சாமியார் நித்யானந்தாவுடன், நடிகை ரஞ்சிதா நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகளை, சாமியாரிடம் டிரைவராக இருந்த லெனின் கருப்பன் வெளியிட்டார். இதைத் தொடந்து, சாமியார் நித்யானந்தா விவகாரம் விஸ்வரூபமடைந்தது. கடந்த டிச., 30ம் தேதி, ராம்நகர் கோர்ட்டில், தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய லெனின் கருப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நடிகை ரஞ்சிதா, நேரில் ஆஜராகி மனு கொடுத்தார்.

இந்த மனு, நீதிபதி ரூபா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. காலை, 10.30 மணிக்கு, கோர்ட்டுக்கு ரஞ்சிதா, அவரது வக்கீல்களுடன் வந்தார். பகல், 2.30 மணி வரை கோர்ட்டில் இருந்தார். நிருபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ரஞ்சிதா தரப்பில் நேற்று மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: என் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையல்ல. லெனின் கருப்பன், பொய்யான தகவல் கொடுத்துள்ளார். எனக்கும், அந்த வீடியோ காட்சிக்கும் சம்பந்தம் இல்லை. என் பெயரை களங்கப்படுத்துவதற்காக ஜோடிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டால், என் மனம் மிகவும் புண்பட்டு விட்டது. பெண்ணினத்தை இழிவுபடுத்தி விட்டனர். இதற்கு காரணமான நித்யானந்தாவின், முன்னாள் டிரைவர் லெனின் கருப்பன், அவரது வக்கீல் ஸ்ரீதர், ஆர்த்திராவ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கை, பிப்., 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார். ராம்நகர் கோர்ட்டில், இரண்டாவது முறையாக ரஞ்சிதா ஆஜரானார். கழுத்தில் ஜெபமாலை அணிந்திருந்தார். நீதிபதி வருவதற்கு முன்னரே, கோர்ட் அறைக்குள் வந்து விட்டார்.

Friday, January 28, 2011

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு

சிட்னி : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான நாதன் பிராக்கென், சர்வதேச கிரிக்கெட் ‌போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சிட்னியில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிராக்கென் கூறியதாவது, 2001ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கிய நான், தற்போது ஓய்வு பெறுவது ஒருபுறம் வருத்தமளித்தாலும், ஆஸி., அணியின் வெற்றிக்கு என் பங்கும் உள்ளது என்பதை நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 2009ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸி., அணி சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை வென்றது. அந்த வெற்றி அணியில் தானும் இருந்தது குறி்ப்பிடத்தக்கது. முழங்காலில் ஏற்பட்ட காரணமாக, நீண்ட காலம் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தேன். டாக்டர்கள், தான் உடல்நலத்தில் தகுதி பெறவில்லை என்றும், மீண்டம் அறுவை சிகிச்சை மேற்கொள் வேண்டிய காரணத்தினால், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற தீர்மானித்ததாக அவர் தெரிவித்தார். தான் போட்டிகளிலிருந்து மட்டுமே ஓய்வு பெற்றுள்ளதாகவும், கிரி்க்கெட் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று, இளைய சமுதாயத்தினருக்கு உதவிகள் புரிய தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலகுவான கல்வி யு.எஸ், சில்

அமெரிக்க கல்வியின் முக்கிய அம்சமே, அந்நாட்டு கல்வி நிறுவனங்களுக்கு இருக்கும் சுயாட்சி உரிமைதான்.

அங்குள்ள கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் எந்த தனிப்பட்ட அமைச்சகத்தின் கீழும் வருவதில்லை.

ஒவ்வொரு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகமும், தனக்கென தனி பாடத்திட்டம், மாணவர் சேர்க்கை விதிமுறைகள்(உள்நாடு மற்றும் வெளிநாட்டு மாணவர்) ஆகியவற்றை கொண்டுள்ளன. மாணவர்களை சேர்ப்பதில் சில கல்வி நிறுவனங்கள் கடுமையான விதிமுறைகளையும், சில கல்வி நிறுவனங்கள் இலகுவான விதிமுறைகளையும் கொண்டுள்ளன.

அமெரிக்க கல்வியின் மற்றொரு முக்கிய அம்சம் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம்(தரச்சான்று பெறுதல்) ஆகும். அரசை சாராத தனியார் அங்கீகரிப்பு ஏஜென்சிகள் இப்பணியில் ஈடுபடுகின்றன. இந்த ஏஜென்சிகள் அங்கீகரிப்புக்கென்று பல விதிமுறைகளை வகுத்துள்ளன. அமெரிக்காவில் பல்கலைக்கழகங்களை மதிப்பிடுவதற்கு இருக்கும் ஒரே முக்கிய அம்சம் இந்த அங்கீகாரமாகும். இந்த அங்கீகாரத்தை பெற்ற கல்வி நிறுவனங்கள், தங்கள் மாணவர்களை பரஸ்பரம் மாற்றிக்கொள்ள முடியும். எனவே அமெரிக்காவில் படிக்க விரும்புபவர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களையே தேர்ந்தெடுக்கவும். இந்திய அரசும் தரச்சான்று பெற்ற அமெரிக்க கல்வி நிறுவனங்களையே அங்கீகரிக்கிறது.

அமெரிக்காவின் கல்விமுறை அதிகம் நடைமுறை சார்ந்தது. பகுப்பாய்வு மற்றும் மையக் கருத்துக்களை புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவேதான் ஆராய்ச்சிகள் மற்றும் புராஜக்டுகள் போன்றவை அமெரிக்க கல்வியின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இதனால் ஒரு படிப்பின் கால அளவிற்கு பெரியளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.

உதாரணமாக, அமெரிக்காவில் ஒரு இளநிலை படிப்பு 4 ஆண்டுகள் கால அளவு உடையது. ஆனால் அந்த படிப்பை முடிக்க 3 வருடங்களும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது 5 வருடங்களும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு வருடமானது 2 செமஸ்டர் கொண்டதாகவோ அல்லது 3 செமஸ்டர் கொண்டதாகவோ பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் வைக்கப்படும் தேர்வுகளின் மூலம், தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யும் முறை இங்குள்ளது.

அமெரிக்கா எச்-1பி'விசா

வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாக்களுக்கான விண்ணப்பங்கள், அரசு நிர்ணயித்த இலக்கை எட்டி விட்டதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்கத் துறை கூறியதாவது அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள், வெளி நாடுகளைச் சேர்ந்தவர்களை தற்காலிகமாக வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்காக, அரசு சார்பில் "எச்-1பி' விசாக்கள் வழங்கப்படுகின்றன. ஆண்டுக்கு 65 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள், இந்த விசாக்களை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடந்த 2008 பொறுத்தவரை, ஏப்., 8ல், 65 ஆயிரம் என்ற இலக்கை விண்ணப்பங்கள் எட்டின. 2009ல் டிச, 21ல் இந்த இலக்கு எட்டப்பட்டது. இந்நிலையில், 2011ம் நிதியாண்டுக்கான எச்-1பி' விசாக்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த சில நாட்களாக பெறப்பட்டு வந்தன. கடந்த நான்கு வாரங் களுக்குள்ளேயே, ஏராளமான விண்ணப்பங்கள் வந்து குவிந்து விட்டன. தற்போது விசா கோரி வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்தை எட்டி விட்டது.இவ்வாறு அமெரிக்க குடியேற்ற துறை தெரிவித்தன.

ஆர் எஸ் எஸ்,க்கு ஆதரவு, நிதி புலனாயவேண்டும்?

புதுதில்லி, ஜன.28 குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர்களுக்கு பாஜக ஆளும் மாநிலங்கள் அடைக்கலம் தருகின்றன என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளின் செயல்பாட்டை அவர் "சங்கி தீவிரவாதம்" என்றும் வர்ணித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தில்லியில், மனித உரிமை அமைப்புகள் தொடர்பாக இன்று நடைபெற்ற தேசிய கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், இஸ்லாமிய இளைஞர்கள் தவறுதலாக தீவிரவாத வழக்குகளில் கைது செய்யப்படுகின்றனர் என்றும் அவர் கூறினார்.

ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் சார்பு நிறுவனங்களுக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்பது குறித்து விசாரணை நடத்தவேண்டும். சுவாமி அசிமானந்த் போன்றவர்களுக்கு குஜராத் அடைக்கலம் வழங்குகிறது." என்றும் திக்விஜய் சிங் குறிப்பிட்டார்.

அஜித்துடன் இணைகிறார் அனுஷ்கா

பில்லா 2 படத்தின் சூட்டிங் ஏப்ரலில் தொடங்கவிருப்பதாகவும், அப்படத்தில் அஜித் ஜோடியாக அனுஷ்கா நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி யுள்ளன. அஜித் நடித்த பில்லா ரீ-மேக் படம் திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அஜித்தின் அதிரடி நடிப்பும், நயன்தாரா - நமீதாவின் கவர்ச்சியும், ஒளிப்பதிவும் படத்திற்கு வெற்றியை தேடித் தந்தது.

பில்லா வெற்றிக்கு பிறகு பில்லா பார்ட் 2 படம் எடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் அஜி்த அடுத்த படங்களில் பிஸியாகி விட்டதால் பில்லா 2 தள்ளிப்போனது. இந்நிலையில் இப்போது மீண்டும் பில்லா பற்றிய பேச்சு எழுந்துள்ளது. டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சுரேஷ் பாலாஜி தயாரிக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏப்ரல் மாதம் பில்லா 2  படத்தின் சூட்டிங் தொடங்குகிறது. அஜித் ஜோடியாக நடிக‌ை அனுஷ்கா நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே பில்லா தெலுங்கு பதிப்பில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, January 27, 2011

அவசர உலகத்தில்,.கொஞ்சம் இதை படியுங்கள்!

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த அவசர உலகில் Fast Foods எனப்படும் அவசர உணவுகளின் தேவைகள் அதிகரித்து விட்டன. அதற்கேற்றாற் போல் வீதிக்கு வீதி, முக்குக்குமுக்கு அவசர உணவு விடுதிகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன.

பாரம்பரியமான உணவுகளை ஆற அமர ரசித்து ருசித்துச் சாப்பிடும் காலம் மெல்ல மெல்ல மலையேறி வருகிறது. இன்று அவசர உணவுகளை அள்ளி விழுங்கிவிட்டு ஓடும் அவல நிலையே எங்கும் நிலவுகிறது. குறிப்பாக குழந்தைகளை இந்த வகை உணவுகள் அதிகம் கவர்கின்றன. விளைவு - சிறு வயது முதல் அவர்களுக்குப் பலவித நோய்கள் தாக்குகின்றன. குறிப்பாக உடல் பருமன் (Obesity) ஏற்படுகிறது.

இதனாலேயே பிரிட்டிஷ் அரசு தொலைக்காட்சிகளில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் அவசர உணவுகளின் விளம்பரங்களை 2006-ம் ஆண்டு தடை செய்தது.

நகர வாழ்க்கையும், அவசர உணவுகளும் இணைக்க முடியா ஜோடிகளாக மாறிவிட்டன.

2006-ம் ஆண்டு மட்டும் உலக அவசர உணவுச் சந்தையின் வளர்ச்சி 4.8 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய சந்தையான இந்தியாவில் வருடத்திற்கு 4.1 சதவீதம் இது வளர்ச்சியடைந்து வருகின்றது.

அவசர உணவின் ஜாம்பவானான மெக்டோனால்ட் 6 கண்டங்களில், 126 நாடுகளில் தனது கிளைகளைப் பரப்பியுள்ளது. மொத்தம் 31,000 கடைகள் அதற்கு உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எந்த அளவுக்கு அவசர உணவுகளின் சந்தைகள் அதிகரித்து வருகின்றன என்பது இதன் மூலம் விளங்கும்.

மெக்டோனால்டுக்கு அடுத்து அவசர உலகின் ஜாம்பவானாக விளங்கும் பிஸ்ஸா ஹட் 97 நாடுகளில் கால் பதித்துள்ளது. அவசர உணவுகளில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதன்மையானதாக வருவது அமெரிக்காதான்.

கடந்த 2003ல் எடுத்த கணக்கெடுப்பின்படி, உடல் பருமன்தான் அமெரிக்கர்களின் உடல்நலப் பாதிப்புகளுக்கு தலையாய காரணம் எனக் கண்டுபிடித்துள்ளார்கள். இதனால் ஒவ்வொரு வருடமும் சுமார் நான்கு லட்சம் அமெரிக்கர்கள் மரணிக்கிறார்களாம். சுமார் 6 கோடி பேர் உடல் பருமனுள்ளவர்களாக அமெரிக்காவில் உள்ளனர். சுமார் 12.7 கோடி பேர் அதிக எடையுள்ளவர்களாக இருக்கின்றனர்.

அவசர உணவுகள் ஏற்படுத்தும் விளைவுகளைப் பார்த்தீர்களா? இந்த நிலை நமது நாட்டுக்கும் வரவேண்டுமா?

MSAH

இந்திய இருட்டு சட்டம்!

புலிகள் இயக்கத்திற்கு தடை விதித்தது செல்லும் என தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வைகோ தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 10ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது.

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ தாக்கல் செய்த மனுவுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு:சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் படி, பாதிக்கப்பட்ட நபராக மனுதாரரை கருத முடியாது. அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தான் பாதிக்கப்பட்டதை ஆதாரங்களுடன் விளக்காமல் இருக்கும் வரை இந்த ரிட் மனு விசாரணைக்கு உகந்ததல்ல.அவர் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் கூட ஐகோர்ட்டுக்கு உள்ள அதிகாரவரம்பை பயன்படுத்த வேண்டும் என கோர முடியாது. தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. டில்லியில் இது அமைந்துள்ளது.

இம்மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு தகுதியில்லை. எனவே, இதை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.வைகோ தாக்கல் செய்த மனு: விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு, 1992ம் ஆண்டு மே மாதம் மத்திய அரசு தடை விதித்தது. அதன் பின், அவ்வப் போது தடை நீட்டிக்கப்பட்டது. கடைசியாக, கடந்த மே மாதம் தடை நீட்டிக்கப்பட்டது. தடை விதிக்க போதிய காரணங்கள் உள்ளதா, இல்லையா என்பதை முடிவு செய்ய, தீர்ப்பாயத்திற்கு இந்த வழக்கு அனுப்பப்பட்டது.தீர்ப்பாயத்தில், என் மனுவை தாக்கல் செய்தேன். சென்னை, ஊட்டியில் தீர்ப்பாயம் நடத்திய விசாரணையில், கலந்து கொண்டேன். சாட்சிகள் தாக்கல் செய்த மனுக்களின் நகல்களை எனக்கு தீர்ப்பாயம் வழங்கவில்லை. தடை செய்ததற்கு ஆதாரமாக சரியான காரணங்களை மத்திய அரசு காட்டவில்லை, என தீர்ப்பாயத்தில் கூறினேன்.

என் கருத்தை தீர்ப்பாயம் நிராகரித்து விட்டது. புலிகள் இயக்கத்தின் மீதான தடையை உறுதி செய்ய, போதிய காரணங்கள் உள்ளது என தீர்ப்பாயம் முடிவுக்கு வந்துள்ளது. புலிகள்ஆதரவு அமைப்பு, தனி நபர்கள், அனுதாபிகள் ஆகியோரின் நடவடிக்கைகளை காரணம் காட்டி, புலிகள் இயக்கத்தை சட்டவிரோத அமைப்பு என அறிவிக்க முடியாது.
புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களால், குறிப்பிட்ட செயல்கள் செய்யப்பட்டன என்பதை நிரூபிக்க, மத்திய அரசு தரப்பில் எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை. எனவே, கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஹாட்டாபிக்ஸ்!நயன்

நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள ரூட் கிளியர் ஆனதில் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறாராம் பிரபுதேவா. பிரபுதேவா வாங்கி கொடுத்த வீட்டில் தான் கேரளாவில் குடி இருக்கிறாராம் நயன்.

நயன்தாரா-பிரபுதேவா காதலுக்கு ஆரம்பத்தில் தடைபோட்ட தன் ‌பெற்றோர் வீட்டிற்கு கூப்பிட்டும், அவங்க வீட்டில் தங்காமல் பிரபுதேவா கேரளாவில் தனக்கு காதல் பரிசளித்த வீட்டிலேயே தனிக் குடித்தனம் இருக்கிறாராம் நயன். இதுதான் கோலிவுட்டில் நயன்-பிரபு பற்றி லேட்டஸ் ஹாட்டஸ்ட் தகவல்கள்!

எல்லாம் சரி, முதல்மனைவி ரமலத்தை முறைப்படி பிரிய பிரபுதேவா 30கோடி செலவு செய்தாரமே, இந்த சங்கதி நயனுக்கு தெரியுமா?

இணையத்தளத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட்

மும்பை, ஜன.27: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) யாகூ இந்தியா ஆகியவை இணைந்து அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடங்குகிறது.

iccevents.yahoo.com என்ற பெயரில் இந்த இணையதளம் தொடங்கப்படுகிறது.

கிரிக்கெட் போட்டிகள் மற்றும் அதுதொடர்பான தகவல்கள், ஆட்டம் நடைபெறும்போது அதுதொடர்பான விவரங்கள், விடியோ காட்சிகள் உள்ளிட்ட விவரங்களை இந்த இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

இணையதளம் மூலம் கேப், டி சர்ட் உள்ளிட்ட பொருள்களையும் வாங்கிக்கொள்ளலாம். இந்தத் தகவல்களை ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

3 ஜி,அதிநவீன வசதி.,ஏர்டெல்

சென்னை : கர்நாடகாவைத் தொடர்ந்து அதிவேக டேட்டா டவுன்லோட், வீடியோ அழைப்புக்கள், நேரடி டிவி ஒளிபரப்புக்கள் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடனான 3 ஜி சேவையை சென்னை மற்றும் கோவையில் ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. டாடா, ரிலையன்ஸ் கம்யூனிக்கேஷனை தொடர்ந்து 3ஜி உரிமம் பெற்ற 3வது நிறுவனம் ஏர்டெல் ஆகும். இவை தவிர பிஎஸ்என்எல்., எம்டிஎன்எல் உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்களும் இச்சேவைக்கான உரிமத்தை பெற்றுள்ளன. ஏர்டெல் வாடிக்கையாளர்கள் சிம் கார்டை மாற்றாமலேயே இந்த வசதியை பெற முடியும் எனவும், லேப்டாப் பயன்படுத்துவோரும் இந்த சேவையை பெறலாம் எனவும் பாரதி ஏர்டெல் தலைவர் அடுல் பின்தல் தெரிவித்துள்ளார்.

Wednesday, January 26, 2011

முயற்சி திருவினையாக்கும், யூசுப் தன்னம்பிக்கை

உலக கோப்பை தொடரில் ஏற்படும் நெருக்கடி குறித்து கவலையில்லை. இந்திய ரசிகர்கள் எந்த சூழ்நிலையிலும் எங்கள் பக்கம் இருந்து ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன். என இந்திய வீரர் யூசுப் பதான் தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தது. செஞ்சுரியனில் நடந்த கடைசி போட்டியில், எழுச்சி கண்ட யூசுப் பதான், தென் ஆப்ரிக்க வீரர்களின் "ஷார்ட் பிட்ச்' பந்துகளை, விளாசி அதிரடியாக சதம் அடித்தார். இதனிடையே எதிர்வரும் உலக கோப்பை தொடர் குறித்து யூசுப் பதான் கூறியது.

தென் ஆப்ரிக்கா தொடரில் சீனியர்' வீரர்கள் சச்சின், சேவக், காம்பிர் ஆகியோர் இல்லாத நிலையிலும் எங்களது தன்னம்பிக்கை அதிகமாக இருந்தது. ஒவ்வொருவரும் கடுமையாக போராடினோம். இதற்கு முக்கிய காரணம் பயிற்சியாளர் கிறிஸ்டன் தான். அங்குள்ள சூழ்நிலைகளை நன்கு அறிந்த அவர், மிகவும் உதவியாக இருந்தார். அணி நிர்வாகமும் பல திட்டங்களை செயல்படுத்தியது.

இதற்கேற்ப, கடைசி போட்டியில் வென்று, ஒருநாள் தொடரை வெல்ல முடியும் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது. என்ன செய்ய? நினைத்ததெல்லாம் நடப்பது இல்லையே. இருந்தாலும், கடந்த சில தொடர்களை விட, தென் ஆப்ரிக்க மண்ணில் இம்முறை வியக்கத்தக்க வகையில் விளையாடினோம். ஒருநாள் தொடரை வென்று இருந்தால் முத்தாய்ப்பாக இருந்து இருக்கும். அடுத்து உலக கோப்பை தொடர் வரவுள்ள நிலையில், அது குறித்து தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க முடியாது.

உலக கோப்பை தொடரில் நெருக்கடி குறித்தெல்லாம் அதிக கவலையில்லை. இறைவன் கொடுத்த இயற்கையான திறமையை நம்பினால் போதும், மற்றவை தானாக நடக்கும். இந்திய அணிக்காக எந்த சிக்கலும் இல்லாமல் விளையாட வேண்டும். அணி வெற்றி பெறும் வரை, களத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என நினைத்துள்ளேன்.

உலககோப்பை தொடரில் சிறப்பான மற்றும் மோசமான நேரங்களில் ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். போட்டியில் தோற்கும் நேரங்களில், இழந்த தன்னம்பிக்கையை மீண்டும் பெற இந்த ஆதரவு உதவும். இத்தொடரில் இந்திய ரசிகர்கள் எப்போதும் எங்கள் பக்கம் இருப்பார்கள் என, உறுதியாக நம்புகிறேன்.

உள்ளூர் மற்றும் ஐ.பி.எல்., போட்டிகளில் பல இடங்களில் களமிறங்கி பேட்டிங் செய்து, அணியை தோல்வியில் இருந்து மீட்டு, வெற்றிபெறச் செய்துள்ளேன். சர்வதேச அளவில் நியூசிலாந்து அணிக்கு எதிரான சதம், நம்பிக்கையை அதிகரித்தது. ஆனால் தென் ஆப்ரிக்காவில் கடைசி வரை களத்தில் இருந்து, எந்த போட்டியிலும் வெற்றி தேடித் தராதது மிகவும் ஏமாற்றமாக இருந்தது. எதிர்வரும் உலக கோப்பை தொடரில் இதை நிறைவேற்றுவேன் என நம்புகிறேன்.
இவ்வாறு யூசுப் பதான் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர் முதல் ஸ்பெக்ட்ரம் வரை

முதல்வர் கருணாநிதி மஞ்சள் துண்டு போட்டிருப்பதோடு தமிழ்நாட்டிற்கும் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து விட்டார், என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கடும் குற்றம் சாட்டினார். திருக்கழுக்குன்றம் அடுத்த காட்டூர் கிராமத்தில், ஒன்றிய கவுன்சிலர் ராஜா- வெண்ணிலா ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்து வைகோ பேசியதாவது: திருக்கழுக்குன்றத்தில் நடந்த தி.மு.க., கூட்டத்தில் எம்.ஜி.ஆர்., கணக்கு கேட்டதால் அவரை கட்சியை விட்டு கருணாநிதி நீக்கினார். என்னையும் கொலைப்பழி சுமத்தி வெளியேற்றினார்.

தமிழகத்தில் தற்போது பாதுகாப்பு இல்லை. போலியோ சொட்டு மருந்து போட்டுவிட்டு பாதுகாப்பாக குழந்தைகள் திரும்ப முடியாது. பெண்களும் பாதுகாப்புடன் செல்ல முடிவதில்லை. உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பில்லை. உங்கள் நிலத்தை அபகரிக்கும் நிலைதான் உள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் நகரத்து மக்களுக்கு மட்டும்தான் தெரியும் என, உளவுப் பிரிவு போலீசார் அரசுக்கு கருத்து சொல்லி வருகின்றனர். நகர மக்கள் செய்தித்தாளை மேலோட்டமாக படித்தும், "டிவி' பார்த்தும் விட்டு விடுகின்றனர். கிராம மக்களோ,முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை படித்து விட்டு விவாதிக்கின்றனர்.

பின்னர் நிருபர்களிடம் பேசும்போது: ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில், 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக, உச்சநீதிமன்றம் சவுக்கடி கொடுத்த பின்னரே, சி.பி.ஐ., விசாரணை செய்வதாக பாவலா காட்டுகிறது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல், இமயமலையையே மறைக்கப் பார்க்கின்றனர்.

மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுக்கிறார். கார்கில் வீரர்களுக்கு வீடு ஒதுக்கியதில் காங்கிரஸ் கட்சியினர், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் என பல தரப்பினரும் ஊழல் செய்துள்ளனர். காமன்வெல்த் விளையாட்டிலும் 71 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளனர். காங்கிரஸ் அவர்களை பாதுகாக்கிறது. காங்கிரஸ் ஆட்சி வீழும். இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர் பட்டம்,சச்சினுக்கு

டெண்டுல்கர் உட்பட நான்கு பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க, புதுச்சேரி பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. புதுச்சேரி பல்கலைக் கழக அகடமி கவுன்சில் கூட்டம், துணைவேந்தர் தரீன் தலைமையில் நடந்தது. இதில், நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளக்குபவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதன்படி இந்தாண்டு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், உலக அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த வாங்முக்தா முத்தையா, வேதியியல் துறையில் சிறந்து விளங்கியதற்காக அண்மையில் நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராம கிருஷ்ணன், மருத்துவத் துறையின் பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் செரியன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக் கழக செயற்குழுவில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு, ஜனாதிபதியின் மேற்பார்வைக்கு அனுப்பப்பட உள்ளது. மார்ச் மாதம் நடைபெற உள்ள பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில், டெண்டுல்கர் உட்பட நான்கு பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க அனைத்து ஏற்பாடுகளை, புதுச்சேரி பல்கலைக் கழகம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

Tuesday, January 25, 2011

வரதட்சணை கொடுமை, சபாஸ் போலீஸ்

அமெரிக்காவுக்கு தப்பிச்செல்ல இருந்த கணவனை, தகுந்த நேரத்தில் போலீசில் முறையிட்டு மடக்கினார் மனைவி. சாப்ட்வேர் இன்ஜியரான கணவன், மும்பை ஏர்போர்ட்டில் குடியுரிமைப்பிரிவு அதிகாரிகளிடம் சிக்கி திருதிருவென விழித்தார். இவரை விசாரணைக்காக கோவைக்கு அழைத்து வர தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

கோவை, ராமநாதபுரம், டி.நகர், அய்யப்பன் கோவில் வீதியில் வசிப்பவர் சுமித்ரா(29) எம்.பி.ஏ., பட்டதாரி. இவருக்கும் திருச்சி, முசிறியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சரவணகுமார்(31) என்பவருக்கும், 2006ல் ஆடம்பர திருமணம் நடந்தது. பெண் வீட்டார் 50 சவரன் நகை கொடுத்து, 10 லட்ச ரூபாய் செலவில் திருமணத்தை விமரிசையாக நடத்தினர். திருமணம் நடந்த போது, சுமித்ரா கோவையிலுள்ள தனியார் வங்கியிலும் சரவணகுமார் பெங்களூரிலுள்ள விப்ரோ நிறுவனத்திலும் பணியாற்றினர். அடுத்த சில நாட்களிலேயே சரவணகுமாருக்கு அமெரிக்காவிலுள்ள நிறுவனத்தில் வேலை கிடைத்து அங்கு சென்றுவிட்டார். அதன்பின், கோவையிலுள்ள மனைவி சுமித்ராவுக்கு போன் செய்த அவர், "உனது மாத சம்பளத்தை என் வங்கிக் கணக்கில் தவறாமல் செலுத்த வேண்டும் ஏற்கனவே, நீ வாங்கிய இரண்டு மாத சம்பளம் 50 ஆயிரம் ரூபாயை வங்கியில் செலுத்து' என, கட்டளையிட்டார். பணத்தின் மீது கணவன் குறியாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த சுமித்ரா, அதன்படியே செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2009, மே மாதம் கோவைக்கு வந்த சரவணகுமார், மனைவியையும் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும், சரவணகுமாரின் உண்மையான முகம் வெளிப்பட்டது. "நீ, படித்துவிட்டு வீட்டில் சும்மா இருக்க வேண்டாம்' எனக்கூறி, மனைவிக்கு அங்கேயே வேலை தேடினார். இதற்காக, சுமித்ராவின், "பயோ-டேட்டோ'வை பல்வேறு நிறுவனங்களும் இணையதளம் வழியே அனுப்பினார். வேலைக்குச் செல்ல மறுத்த சுமித்ரா, தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்ததும் அடித்து துன்புறுத்த துவங்கினார். கருக்கலைப்பு செய்யாவிடில், விவாகரத்து செய்துவிடுவேன் எனவும் மிரட்டினார். மிரண்டு போன சுமித்ரா, கருக்கலைப்பு செய்து கொண்டார். கணவரின் தொல்லை தாங்காமல் அடுத்த சில நாட்களிலேயே கோவை வந்துவிட்டார். தன் நோக்கத்துக்கு உடன்படாததால் ஆத்திரமடைந்த சரவணகுமார், மனைவியுடன் போனில் பேசுவதை தவிர்த்தார்; தன் மொபைல் போன் எண்களையும் மாற்றிவிட்டார். கணவருடன் தொடர்பு கொள்ள முடியாமல் சுமித்ரா பரிவித்து வந்த நிலையில், எவ்வித தகவலும் தெரிவிக்காமல் கோவை வந்திறங்கினார் சரவணகுமார். அவருடன் சேர்ந்து வாழும் முயற்சியில் ஈடுபட்ட சுமித்ராவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அதிருப்தி அடைந்த அவர், போலீசில் முறையிடுவதாக எச்சரித்துள்ளார். போலீசார் கைது செய்துவிடுவார்களோ என உஷாரான சரவணகுமார், அமெரிக்காவுக்கு தப்பிச் செல்லும் முயற்சியில் இறங்கினார். இதுகுறித்து, கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் அளித்த சுமித்ரா, அமெரிக்காவுக்கு தப்பிச்செல்லும் முன் தன் கணவரை பிடிக்க வேண்டுமென்றும், அவர் வரதட்சணை துன்புறுத்தலில் ஈடுபட்டார் என்றும் தெரிவித் திருந்தார். ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சரவணகுமார் அமெரிக்காவுக்கு தப்பிச் செல்லும் முயற்சியை முறியடிக்கும் விதமாக, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து, முக்கிய விமான நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது பாஸ்போர்ட் மற்றும் போட்டோ விவரங்கள் பரிமாறப்பட்டன. இந்நிலையில், கடந்த 21ம் தேதி அமெரிக்காவுக்கு செல்வதற்காக மும்பை விமான நிலையம் சென்ற சரவணகுமாரை, அங்குள்ள குடியுரிமைப்பிரிவு அதிகாரிகள், விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்; காவலில் வைக்கப்பட்டார். இதுகுறித்த தகவல் கோவை மாநகர போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. சரவணகுமாரை கோவைக்கு அழைத்துவர, கமிஷனர் சைலேந்திரபாபு உத்தரவுப்படி, தனிப்படை போலீசார் மும்பை விரைந்துள்ளனர்.

பா.ஜ.க வுக்கு வைத்த ஆப்பு! ரயில்வே??

மும்பை: ஸ்ரீநகரில் லால்சவுக்கில் தேசிய கொடியை ஏற்றுவதற்காக ரெயிலில் புறப்பட்ட கர்நாடகா மாநில பா.ஜ.க தொண்டர்கள் தூக்கத்திலிருந்து விழித்த பொழுது தாங்கள் பயணித்த ரெயில் வந்த வழியிலேயே வேகமாக திரும்பிச் செல்வதை கண்டனர்.

நீண்டகால மக்கள் போராட்டத்தினால் அமைதியை இழந்த கஷ்மீர் சில நாட்களாக அமைதியாக உள்ளது. அமைதியை குலைப்பதையே வழக்கமாகக் கொண்ட பாசிச சங்க்பரிவாரின் அரசியல் முகமூடியான பா.ஜ.கவின் லால்சவுக்கில் தேசியகொடியை ஏற்றும் நாடகம் மீண்டும் கஷ்மீரில் அமைதியை குலைத்துவிடும் என கருதி மத்திய-மாநில அரசுகளின் உத்தரவின்பேரில் பாதுகாப்பு ஏஜன்சிகள் தலையிட்டு 1800க்கும் அதிகமானோரை ஏற்றிச் சென்ற ரெயிலை திருப்பி அனுப்பினர்.

சிறப்பு ரெயில் மூலம்தான் பா.ஜ.க மற்றும் அக்கட்சியின் இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சா தொண்டர்கள் ஸ்ரீநகருக்கு புறப்பட்டிருந்தனர்.

ஜம்முகஷ்மீருக்கு வெளியேயிருந்து போராட்டக்காரகள் எவரும் உள்ளே நுழையாமலிருக்க மாநில அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதிக மானோர் கஷ்மீருக்கு வந்தால் பிரச்சனை இன்னும் மோசமாகும் எனக் கருதி மத்திய பாதுகாப்பு ஏஜன்சிகளும், ரெயில்வே பாதுகாப்பு படையும் மாநில போலீசாரும் இணைந்து பெங்களூரிலிருந்து புறப்பட்ட ரெயிலை திருப்பி அனுப்பினர்.

பெங்களூரிலிருந்து புறப்பட்ட ரெயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மஹராஷ்ட்ரா மாநிலத்தை வந்தடைந்தது. அஹ்மத் நகருக்கு அடுத்துள்ள தவ்த் ரெயில்வே ஸ்டேசனுக்கு ரெயில் வந்தபொழுதே முன்னரே தயாராக்கிய திட்டத்தின் படி 2 பெட்டிகள் ரெயிலுடன் இணைக்கப்பட்டது. அவற்றில் 200 போலீசார் ஏறினர். தொடர்ந்து ரெயில் அடுத்துள்ள ஸரோல-கஸர் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டது. அங்கு ரெயில் எஞ்சின் பிரித்தெடுக்கப்பட்டு ரெயிலுக்கு எதிர் பக்கம் பொருத்தப்பட்டது.

இங்குதான் ரெயில் பெங்களூருக்கு திரும்பிச் செல்வதாக அறிவிப்புச் செய்யப்பட்டது. விழித்திருந்த சிலர் அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டனர். ஆனால், காலம் கடந்துவிட்டது. ரெயில் கர்நாடகா மாநிலம் குல்பர்காவை நோக்கி வந்துக்கொண்டிருக்கும் பொழுதுதான் தூங்கிக் கொண்டிருந்த நபர்களுக்கு ரெயில் பெங்களூரை நோக்கி திரும்பிச்செல்வது புரிந்தது.

பாவத்திற்கு பரிகாரம்? ரஞ்சிதா

நீண்ட இடைவெளிக்கு பின் நடிகை ரஞ்சிதா, பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரது நடை, உடை, பாவனை அனைத்தும் சாமியார் நித்யானந்தாவை போன்றிருந்தது.

சாமியார் நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகளின் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா, சில மாதங்களாக எங்கிருந்தார் என்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த டிச, 31ம் தேதி பெங்களூரில் தனியார் ஓட்டலில் நிருபர்களை சந்தித்து தன் மீது எந்த தவறும் இல்லை என தன்னிலை விளக்கம் அளித்தார்.

பின்னர் வெளியில் தலை காட்டாமல் இருந்த ரஞ்சிதா, நேற்று பெங்களூரு, காக்ஸ்டவுனில் பாரதிநகர் மக்கள் நல சங்கத்தினரின், இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். காலை 10.30 வருவார் என, அறிவிக்கபட்டிருந்த நிலையில், காலதாமதமாக, 11.15 மணிக்கு ரஞ்சிதா வந்தார். அவருடன் ஆசிரம பெண் ஒருவர் உடன் வந்தார். இதிலிருந்து அவர், ஆசிரமத்தில் தான் தங்கியிருக்கிறார் என உறுதி செய்யமுடிந்தது. ரஞ்சிதா காரை விட்டு இறங்கியதும், நேராக அங்கிருந்த காக்ஸ்டவுன் கங்கம்மா கோவிலுக்கு சென்று, சாமி தரிசனம் செய்தார். இலவச சேலை வழங்கிய ரஞ்சிதா மூதாட்டிகளிடம் சிரித்தபடி நலம் விசாரித்தார். மூதாட்டி ஒருவர், ரஞ்சிதாவை, தலையில் இருந்து, கால் வரை தடவிக்கொடுத்து நலம் விசாரித்தார். ஜந்து நிமிடம் மட்டுமே அங்கிருந்த ரஞ்சிதா, புறப்பட்டுச் சென்றார்.

அவரிடம் நிருபர்கள் பேட்டி கேட்டதற்கு, மீடியா என்னை மிக அதிகமாக விளம்பரம் செய்துவிட்டது. வேறு சொல்வதற்கு என்ன இருக்கிறது என்று சிரித்தபடி கூறியபடி சென்றார். நிருபர்கள் மீண்டும் பேட்டி கேட்ட போது, நான் போனில் பேசுகிறேன் போன் செய்யுங்கள் என்று கூறிவிட்டு சென்று விட்டார். நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் இறுதி வரை சாமியார் நித்யானந்தா போன்றே நடிகை ரஞ்சிதா நடந்து கொண்டார்.

எதிப்புகளை மீறி எகிறிய, காவலன்!

பெரிய பெரிய நிறுவனங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் சினிமா தயாரிப்பில் இறங்கியுள்ள நிலையில், அந்நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல் சிறுபட்ஜெட் படங்கள் பல பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன. அப்படியே ரீலிஸ் ஆனாலும் அது கடலுக்குள் எதிர் நீச்சல் போட்ட கதையாகவே இருக்கிறது. எதிர்நீச்சல் போட்டு ஜெயிப்பது என்பது? எவ்வளவு பெரிய விஷயம் என்பது தெரியும்தானே!

அப்படி பெரிய நிறுவன படங்களுடன் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றிருக்கிறது காவலன் படம். படப்பிடிப்பில் ஆரம்பித்த பிரச்னை படம் முடிந்து பெட்டிகளை தியேட்டருக்கு அனுப்பும் வரை நீடித்துக் கொண்டே இருந்தது. ஆரம்பத்தில் அசினுக்கு எதிர்ப்பு என்று கிளம்பிய சிலர், பின்பு விஜய்க்கு எதிராக பிரச்னையை திசை திருப்பினார்கள். இது ஒருபுறமென்றால் படத்தை ரீலிஸ் செய்ய விடாமல் கடைசி நேரத்தில் பண நெருக்கடி‌யும் ஏற்படுத்தப்பட்டது. இதுவரை விநியோகஸ்தராக, தயாரிப்பாளராக பல வருட அனுபவம் பெற்ற விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரையே நிலைகுலையச் செய்யும் அளவுக்கு மலை‌போல வந்த பிரச்னைகளையும், சவால்களையும் திறம்பட எதிர்கொண்டு பொங்கல் தினத்தில் படத்தை ரீலிஸ் செய்து விட்டனர். ரீலிஸ் முயற்சியில் பெற்ற வெற்றி, பட ரிசல்ட்டிலும் கிடைத்து விட்டது.

இத்தனைக்கும் காவலனுடன் போட்டியிட்ட முதல்வர் கருணாநிதி கதை, வசனத்தில் உருவான இளைஞன் உள்ளிட்ட படங்களுக்கு டி.வி. சேனல்கள் மற்றும் எப்.எம். ரேடியோக்களில் 10 நிமிடத்துக்கு ஒருமுறை விளம்பரப்படுத்தப்பட்டது. இன்னமும் விளம்பரங்கள் தொடர்கின்றன. காவலன் விளம்பரம் வெளியிடுவதற்கும் சிலபல சிக்கல்கள் உருவாக்கப்பட்டதால் எந்தவித விளம்பரமும் இல்லாமல் களத்தை சந்தித்து வெற்றி பெற்றது.

காவலனுக்கு பல சிக்கல்களால் விளம்பரம் செய்ய இயலாமல் போனது. ஆனால் இதேபோல இதற்கு முன்பு சில படங்கள் எந்தவித விளம்பரங்களும் இன்றி வெற்றியடைந்திருக்கின்றன. நாடோடிகள் படம் ரீலிஸ் ஆகும்வரை டி.வி., எப்.எம்.களில் விளம்பரப்படுத்தப்பட வில்லை. பட ரிசல்ட் வந்த பிறகுதான் படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி என்று விளம்பரம் கொடுக்கப்பட்டது. அதேபோலதான் மொழி, அபியும் நானும் உள்ளிட்ட படங்களுக்கும். விளம்பரத்தின் துணையின்றி வெற்றி பெற்ற படங்கள் அத்தனையும் தரமான படங்கள் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

நந்தலாலா, தா, தென்மேற்கு பருவக்காற்று போன்ற பல தரமான படங்கள் சரியான தியேட்டர் கிடைக்காததாலும், விளம்பரங்கள் இல்லாததாலும் வெற்றி நூலிழையில் கைவிட்ட படங்கள். இதி்ல தா படத்தை மீண்டும் ரீலிஸ் செய்யும் திட்டத்துடன் அதன் தயாரிப்பாளர்கள் அதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்கள். மைனா என்ற வெற்றிப்படம், உதயநிதி ஸ்டாலின் என்ற பெரிய தயாரிப்பாளர் மூலம் வெளியானதால் வெற்றி பெற முடிந்தது. அந்த படத்தை அவர் வாங்கி வெளியிடாமல் இருந்திருந்தால் தா, நந்தலாலா, தென்மேற்கு பருவக்காற்று போன்ற படங்களின் நிலைதான் மைனாவிற்கும் ஏற்பட்டிருக்கும் என்பது விவரமறிந்தவர்களின் கருத்து.

எந்தவித கதையம்சமும் இல்லாத படத்தில் இடம்பெறும் ஒரு சில நல்ல வசனங்களை மட்டும் எடுத்து விளம்பரமாக்கி, அந்த விளம்பரத்தை நிமிடத்திற்கு நிமிடம் டி.வி. மற்றும் எப்.எம். ரேடியோக்களில் வெளியிட்டு படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டி விடுகிறார்கள். விளம்பரத்தை நம்பி படத்தை பார்க்கப் போன பலருக்கு தலைவலி வந்ததுதான் மிச்சம். சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் இந்த விவகாரத்தை சற்று மறைமுகமாக சாடிய சங்கத்தலைவர் இராம.நாராயணன், டி.வி., விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும், என்று ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றினார். எப்போதும்போலவே அந்த தீர்மானமும் ஏட்டிலேயே தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கும் என்பது மற்ற சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு தெரியாதா என்ன?

பண பலம், அதிகார பலம் உள்ள பெரிய நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் இன்று தமிழ்சினிமா தலைகீழாக போய்க் கொண்டிருக்கிறது என்று கூறும் முன்னணி இயக்குனர் ஒருவர், ‌ரீலிசுக்கு தயாராகி நூற்றுக்கணக்கான படங்கள் தியேட்டர் கிடைக்காமல் பெட்டிக்கும் முடங்கிக் கிடக்கிறது என்கிற அதிர்ச்சி தகவலையும் தெரிவிக்கிறார்.

Monday, January 24, 2011

உலகிலேயே 122வது மாடியில் அமைக்கப்பட்ட உணவு விடுதி

துபாய் : உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபாவின் 122வது மாடியில் அமைக்கப்பட்ட உணவு விடுதியின் திறப்பு விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. இதன் மூலம் உலகில் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள உணவு விடுதி என்ற பெருமையை இது பெற்றுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில், உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா அமைந்துள்ளது. இது மொத்தம் 828 மீ., உயரம் கொண்டது.

இதில், 442 வது மீ., உயரத்தில் 122 வது மாடியில் நேற்று புதிய உணவு விடுதி ஒன்று திறக்கப்பட்டது. இதன் மூலம் உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த உணவுவிடுதி இது என்ற பெருமையைப் பெற்றுள்ளது. கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள சி.என்.டவர் கட்டடத்தில் அமைந்துள்ள 360 உணவு விடுதிதான் இதுவரை உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த உணவு விடுதி என்ற இடத்தைப் பெற்றிருந்தது.

புர்ஜ் கலிபாவின் உயரமான புதிய உணவு விடுதியில் அடுத்த இரண்டு நாட்களுக்கான பதிவு அனைத்தும் முடிந்து விட்டன. இந்த விடுதியில் இருந்து துபாயின் அனைத்துப் பகுதிகளையும் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விடுதியில் தனியாக அமர்ந்து சாப்பிட பதிவு செய்வதற்கு எட்டாயிரம் ரூபாயும், டீ சாப்பிடுவதற்கு 4,500 ரூபாயும், முற்றத்தில் அமர்ந்தபடி மதுபானம் மற்றும் நொறுவைகள் சாப்பிட இரண்டாயிரத்து 500 ரூபாயும் வசூலிக்கப்படுகின்றன.

கிறிஸ்டன் பணி தொடருமா?

உலக கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ்டன் விலகுவது உறுதியாகியுள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளராக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தமானவர் தென் ஆப்ரிக்காவின் கிறிஸ்டன். இவரது பயிற்சியில் இந்திய அணி, டெஸ்ட் தரவரிசையில் நம்பர்-1' இடத்தை பெற்றது. ஒருநாள் வரிசையில் 2ம் இடம் பெற்றது. இதனிடையே, வரும் உலக கோப்பை தொடருடன், கிறிஸ்டனின் பதவிக்காலம் முடிகிறது.
இதற்குப் பின், தனது குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புவதால், பதவியில் நீடிக்க விருப்பமில்லை என கிறிஸ்டன் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) நிர்வாகி ஒருவர் கூறியது

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு கிறிஸ்டன் பயிற்சியாளராக தொடர வேண்டும் என அனைவருமே விரும்புகின்றனர். ஏனெனில் இவரது பயிற்சியில் இந்திய அணி சிறப்பான வெற்றிகளை பெற்றது. இந்த வெற்றிகள் அனைத்திலும் அவருக்கும் பங்குள்ளது. அணியில் ஒற்றுமை ஏற்படுத்தி, வலிமையானதாக மாற்றினார்.

மீண்டும் பதவியில் தொடர்வது குறித்து அவரிடம் நீண்ட நேரம் பேசினோம். ஆனால், உலக கோப்பை தொடருக்குப் பின், பதவியில் இருந்து விலகுவது என்ற முடிவில் உறுதியாக உள்ளார். குடும்பத்தினருடன் நேரம் செலவிட வேண்டும் என்ற, அவரது முடிவுக்கு நாங்கள் மரியாதை தருகிறோம்.

நெத்தியில் பட்டையும் திருநீறு கோட்டையும்!

கோத்ராவிற்க்கப்புறம் குஜராத்தில் நடந்தது தற்செயல் அல்ல. ஏதோ கட்டுப்படுத்த முடியாத, திட்டமிடப்படாத சமூக வன்முறையுமில்லை. வேண்டுமென்றே ஒரு இன மக்களை அழிக்கப் போடப்பட்ட செயல் திட்டம். ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட படுகொலைகள்.

திட்டமிட்டபடி, தொலை நோக்குப்பார்வையுடன் நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற எந்த வித்தியாசமுமின்றி முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் குறிவைக்கப்பட்டது. பெருமளவில் காவிக்கும்பல் ஒரே நோக்கத்தின்கீழ் ஒன்று சேர்ந்தது. எந்த வகையிலேனும் முஸ்லிம்களை கொல்லவேண்டும். குத்தி, கிழித்து முடமாக்கப்பட்டபின் உயிரோடோ, இல்லாமலோ தீக்கிரையாக்கியது, இந்தப் பரதேசி நாய்களுக்கு என்ன யோக்கியதை உள்ளது? தாய்மையை-பெண்மையை மதிக்கும் இந்த வெறி நாய்களின் யோக்கியதை குஜராத்தில் பல்லிளித்தது. வயிற்றில் குழந்தையுடன் இருந்த ஒரு தாயின் வயிற்றைக் கீறி, சிசுவை எடுத்து கண்டம் துண்டமாக வெட்டி தீக்கிரையாக்கியதோடு, அத்தாயையும் கொடூரமாகக் கொன்று விட்டு அதனைக் கூறி புளகாங்கிதப்பட்ட வெறி நாயின் குதூகலத்தை சமீபத்தில் தெஹல்கா வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. இது தான் இந்த வந்தேறிப் பன்னாடை வெறி நாய்கள் தாய்மைக்குக் கொடுக்கும் மரியாதை, கண்ணியம்.
இதில் பங்கெடுத்துக்கொண்ட காவிக் கும்பல்களில் சிலர் தெஹல்காவிடம், இஸ்லாம் எரியூட்டுவதை அனுமதிக்கவில்லை என்பதால் முஸ்லிம்களை உயிரோடு எரித்துக் கொல்வதிலேயே ஆனந்தமடைந்ததாக சொன்னார்கள்.

பெப்ருவரி 27 க்குப்பிறகு, மூன்று நாட்கள் குஜராத்தின் பிஜெபி அரசை இந்துத்வ காவிக்கும்பல் கையிலெடுத்துக்கொண்டு, காட்டுமிராண்டித்தனத்தின் உச்சக்கட்டதிற்க்கு இட்டுச்சென்றது. ஆர்எஸ்எஸ், விஹெச்பி, பஜ்ரங்தள், கிசான் சங்க், அகிலபாரதீய வித்யார்தி பரிஷத், பிஜெபி, கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட கொலைப்படை உருவாக்கப்பட்டது. மாநிலமெங்கும் பள்ளிவாசல்கள், தர்காக்கள் அழிக்கப்பட்டன. 73 முஸ்லிம் வழிபாட்டுத்தலங்கள் அஹமதாபாதில் மட்டும் தீக்கிரையாக்கப்பட்டது. சபர்கந்தாவில் 55 ம் வடோடராவில் 22ம் பின்னர் கொளுத்தப்பட்டது.

மஹாத்மாவின் பூமிக்கு நீங்கா களங்கத்தை ஏற்படுத்திய இந்த காவிக் கும்பல் அடியாட்கள் இரு வகைப்பட்டனர். திரைமறைவிலிருந்து சதித் திட்டம் தீட்டிய கட்சிநிர்வாகிகள் மற்றும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சிசுக்கொலைகள் நடத்திய காலாட்படை. சிலசமயம் தலைவர்களே காலாட்படையிலும் தைரியமாக பங்கெடுத்தார்கள்…

தெஹல்கா.காம்.

காசுமேல காசுவந்து தேர்தலில் கொட்டுகிற!

மேலவை தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் கமிஷனர் அறிவித்த பின் தான், அடுத்த கட்ட நடவடிக் கைகளை துவக்க முடியும். பட்டதாரி தொகுதிகளில் போட்டியிட, பட்டதாரிகளாக இருக்க வேண்டு மென்ற அவசியம் இல்லை. சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள எவரும், பட்டதாரி தொகுதிகளில் போட்டியிடலாம். சென்னை அயனாவரத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சமுதாய கூடத்தை பொறுத்தவரை, அந்த கூடத்தை நடத்துவதற்கான டெண்டர் ஆறு மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது.

பீகார் சட்டசபை தேர்தலின் போது பின்பற்றப்பட்ட கடுமையான விதிமுறைகள், தமிழகத்திலும் பின்பற்றப்படும். சட்டசபை தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை தவிர, இதர அடையாள ஆவணங்களை அனுமதிக்க வேண்டிய அவசியம் இருக்காது, என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், நிருபர்களிடம் கூறியதாவது தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் வெளியான போதிலும் பட்டியலில் தொடர்ந்து பெயர் சேர்க்கப்படும். தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன் வரை பெறப்படும், விண்ணப்பங்களுக்கு,வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். மனு தாக்கலை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளுக்கு பத்து நாட்கள் முன் வரை, பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். சிலர் அடையாள அட்டைகளை தொலைத்துள்ளனர். அவர்கள் விண்ணப்பித்து புதிய அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.தற்போது, தமிழகத்தில், 99.88 சதவீத வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. எனவே, மற்ற அடையாள ஆவணங்களை காண்பித்து ஓட்டுப் போட வேண்டிய அவசியம், வரும் தேர்தலில் இருக்காது.தேர்தலில், பண பலம், ஆட்பலம் போன்றவற்றை தடுக்க, பீகார் தேர்தலின் போது பின்பற்றப்பட்ட வழிமுறைகள் பின்பற்றப்படும்.

இதுதவிர, புதிய வழிமுறைகளையும், இன்னும், 15 நாட்களுக்குள் தேர்தல் கமிஷன் வெளியிடும். ஒவ்வொரு வேட்பாளரும், வங்கிக் கணக்கை துவக்கி, அதன் மூலம் தான் அனைத்து செலவுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படும். பினாமி மூலம் செலவுகள் செய்தாலும், வங்கி பரிமாற்ற முறைகள் கண்காணிக்கப்பட்டு, அவ்வாறு தேர்தலுக்காக செய்யப்படும் செலவுகள், அந்தந்த வேட்பாளரது கணக்கில் சேர்க்கப்படும். கட்சி செய்யும் செலவுகளும், வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப் படும். கடந்த முறை சட்டசபை தேர்தலுக்கான பொதுத் தேர்தல் மார்ச் முதல் தேதி அறிவிக்கப்பட்டது. ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளதால், அனைத்துக்கும் சேர்த்து ஒரே சமயத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.

ஓட்டுப் போட்டதும், அவர்கள் யாருக்கு ஓட்டுப் போட்டனர் என்பதற்கான அத்தாட்சி ரசீது பெறும் வகையில் மாற்றம் செய்ய வேண்டுமென பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அவ்வாறு செய்தால், ஓட்டுரிமையின் ரகசியம் வெளியாகிவிடும்.எனவே, இவ்விஷயத்தில் எந்த மாதிரியான ஆவணங்கள் வழங்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்து, புதிய கருவியை கண்டுபிடித்தல் போன்றவை குறித்து பரிந்துரைக்க, ஓய்வு பெற்ற ஐ.ஐ.டி., இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வல்லுனர் குழுவின் அறிக்கை வந்த பின், இதுபற்றி முடிவு செய்யப்படும்.

இடைத்தேர்தல் போல, பொதுத் தேர்தலின் போது அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் பதிவு செய்யப்படும் வீடியோ காட்சிகளை, இணையதளம் மூலம் பெறுவது கடினமானது. எனவே, பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் மட்டும் இந்த கண்காணிப்பு முறை அமல்படுத்தப்படும். இவ்வாறு பிரவீன் குமார் கூறினார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரி்மை அளிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு பரிந்துரை அனுப்பியுள்ளது என்று மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் வயலார் ரவி நேற்று தெரிவித்தார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைச்சர் வயலார் ரவி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது; தற்போது அமலில் உள்ள சட்டவிதிப்படி வெளிநாட்டில் 6 மாதங்களுக்கு மேல் தொடர்ந்து வசிக்கும் இந்தியர்களுக்கு வாக்குரிமை கிடையாது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரி்மை அளிப்பது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய பாஸ்போர்டு வைத்திருந்தால் அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கலாம். இதற்காக அவர்கள் இமெயில் மூலம் வி்ண்ணப்பிக்கலாம். இந்த வாக்காளர்களின அடையாளத்தில் சந்தேகம் ஏற்பட்டால் வழக்கமான முறையில் அரசியல் கட்சிகள் புகார் கொடுக்கலாம் என மத்திய அரசு கருதுகிறது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மத்திய சட்ட அமைச்சகமும், வெளிநாட்டு இந்தியர் விவகாரத்துறை அமைச்சகமும் பரிந்துரைத்துள்ளன. தேர்தல் ஆணையம் இது பற்றி பரீசிலித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு பின் விரைவில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Sunday, January 23, 2011

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மற்றுமொரு விருது

புது தில்லி, ஜன. : சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் நடக்கவுள்ள உலக பொருளாதார அமைப்பு மாநாட்டில் பிரபல இசை அமைப்பாளரும் ஆஸ்கர் விருது பெற்றவருமான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிரிஸ்டல் விருது வழங்கப்பட உள்ளது.

கலை, இசைத் துறையில் இவரது அரிய பங்களிப்பை கெüரவித்து இந்த விருது வழங்கப்படுகிறது.

வரும் 26ம் தேதி டாவோஸில் தொடங்கும் இந்த மாநாடு 5 நாள்கள் நடைபெறும். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கமல் நாத் உள்ளிட்ட 6 அமைச்சர்கள், திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா முதலியோர் இதில் பங்கேற்கின்றனர், ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலக பொருளாதார அமைப்பில் இடம்பெற்றுள்ள சிஐஐ (இந்திய தொழிலகக் கூட்டமைப்பு) சார்பில் 139 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

11 நாடுகளின் தொழிலதிபர்கள், அதிபர்கள், பிரதமர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள், ஆன்மிகத் தலைவர்கள் என சுமார் 2500 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

இலங்கை கடற்படைக்கு சாவு மணி என்று அடிக்கப்படும்?

வேதாரண்யம், ஜன. 23: நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தினர். வேதாரண்யம் பகுதி மீனவர் ஜெயக்குமாரின் கழுத்தில் கயிற்றினால் சுருக்கிட்டு இழுத்துக் கொன்றிருக்கின்றனர். பின்னர், படகில் பிரேதத்தை அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

கடலில் குதித்து நீந்திக் கொண்டிருந்த ராஜேந்திரனும், செந்திலும் ஜெயக்குமாரின் சடலத்துடன் கரை திரும்பி உள்ளனர். ஜெயக்குமாரைக் கொன்ற இலங்கை கடற்படையின் காட்டுமிராண்டித்தனமான கொடுஞ் செயலுக்கும், கடிதம் எழுதுதல், தந்தி அடித்தல் போன்ற கபட நாடகங்களை நடத்தியே, தமிழக மீனவர்கள் அன்றாடம் கொல்லப்படுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் முதல்வர் கருணாநிதிக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது என்பது தொடர் கதையாக ஆகிவிட்டது. இலங்கை அரசை இந்திய அரசு கடுமையாக எச்சரிக்காததே இது போன்ற அவல நிலைமைக்கு காரணம். இது போன்ற மனிதாபிமானமற்ற செயல்கள் இலங்கை கடற்படையினரால் இனி நடத்தப்பட்டால் இலங்கை அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற வகையில் மத்திய அரசின் நடவடிக்கை அமைய வேண்டும்.

அரசியல் மட்டுமே, கேப்டன்!

நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்த் ‌சினிமாவுக்கு முழுக்கு போட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடை‌பெறவிருப்பதைத் தொடர்ந்து அரசியலில் முழு கவனம் செலுத்துவதற்காக சினிமாவுக்கு முழுக்கு போட்டிருக்கிறார்.

சினிமாவையும், அரசியலையும் தமது இரண்டு கண்ணாக பார்த்தவர் எம்.ஜி.ஆர். அவரைபோலவே வரவேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல் களம் புகுந்துள்ள விஜயகாந்த் நடிப்பு, அரசியல் என்றில்லாமல் சமீபத்தில் வெளியான விருதகிரி படம் மூலம் இயக்குநர் அவதாரமும் எடுத்தார். ஆனால் விருதகிரி படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் தமது அடுத்தபடத்தையும் இவரே இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாயின. இதற்கான அறிவிப்பு வெளிவர இருந்தநிலையில் அதனை தள்ளிப்போட்டுள்ளார் கேப்டன். இதுகுறித்து விசாரித்தபோது, தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தற்காலிகமாக தமது அடுத்தபட படத்திற்கான வேலையை தள்ளிபோட்டதாக தெரிகிறது.

தற்போது அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள விஜயகாந்த், எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் சேலத்தில் நடந்த மாநாட்டில் தி.மு.க., அரசை தாக்கி பேசினார். மேலும் முதல்வர் கருணாநிதி போட்டியிடும் தொகுதியில், அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சிஎன்என்.

வருகிறது தடா?

ஜெனீவா : பிட்சா, பர்கர் போன்ற, "ஜங்க் புட்' உணவு விற்பனையைத் தடை செய்வது குறித்து, விரைவில் முடிவெடுக்கப்படும் என, ஐ.நா.,வின் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலகளவில் பிட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்ற விரைவு வகை உணவுகளை உண்பதன் மூலம், நான்கு கோடி குழந்தைகள், அதிக எடை மற்றும் குண்டாக இருப்பதாக, ஐ.நா.,வின் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்த வகை உணவுகளை உண்பதன் மூலம், கட்டுப்படுத்த முடியாத அளவில் உடலில் கொழுப்பு அதிகரித்து, அதனால், ஆண்டுதோறும் எதிர்பாராத மரணங்களும் நிகழ்கின்றன.இதனால், இவ்வகை உணவுகள் விற்பனையைக் கட்டுப்படுத்துவது அல்லது தடை செய்வது குறித்து, இந்தாண்டு செப்டம்பர் 19 மற்றும் 20 தேதிகளில் நடக்கும் ஐ.நா., பொதுக் குழுவில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்தாலோசிக்க உள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

Saturday, January 22, 2011

அமெரிக்க விஞ்ஞானிகள் பரபரப்பு!

வேற்றுக் கிரகவாசிகள் (ஏலியன்) பூமிக்கு வந்து மனிதர்களுடன் சண்டையிடுவது போல் ஹாலிவுட் திரைப்படங்களில் நாம் பார்ப்பது விரைவில் நிஜமாக வாய்ப்பு உண்டு, என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க விண்வெளி அமைதி நடவடிக்கைகள் கமிட்டி சார்பில் "ஏலியன்கள் பூமியை தாக்கினால் என்ன செய்வது' என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி பூமிக்கு வரும் ஏலியன்கள் வன்முறை வெறியர்களாக இருப்பர் எனவும், இங்குள்ள இயற்கை வளங்களை சுயநலம் காரணமாக சுரண்டுவர் எனவும் அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அறிவியல் முதல் மதம் வரையில் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்தி, பூமியை தாண்டியுள்ள கிரகங்களில் ஏலியன் போன்ற உயிரினங்கள் ஏதேனும் இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்படி ஏலியன் அல்லது பிற உயிரினங்கள் இருந்தால், அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

அவ்வாறு ஏலியன்கள் பூமிக்கு வரும்போது, நாம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பூமிக்கு வரும் ஏலியன்கள் வன்முறையில் ஈடுபட்டால், அவர்களை விண்வெளி அமைதி நடவடிக் கைகளில் ஈடுபடுவதற்காக, அமெரிக்கா சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பிரிவினர் சமாளிப்பர் எனவும்; உலக நாடுகள் அனைத்தும் இந்த விஷயத்தில் அரசியல் மற்றும் ஜாதி மதபேதம் ஏதும் இல்லாமல் ஒருங்கிணைந்து செயல்படுவதோடு, இதற்காக சர்வதேச கண்காணிப்புக் குழு ஒன்றையும் ஏற்படுத்த வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க விஞ்ஞானிகளின் கருத்து, அறிவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பரிணாமவியல் பேராசிரியர் சைமன் கான்வே மோரிஸ் கூறும்போது, "பூமியை தாண்டியுள்ள இந்த பிரபஞ்சத்தில் "ஏலியன்' என குறிப்பிட்ட யாரும் இருக்க வாய்ப்பில்லை. மற்ற கிரகங்களில் உயிரினங்கள் இருந்தால், அது டார்வின் கொள்கை அடிப்படையில் தான் தோன்றி வளர்ச்சி பெற்றிருக்க முடியும்.ஹாலிவுட் படங்களில் வருவது போல், விகாரமான தோற்றங்களில் இருக்க வாய்ப்பில்லை. மேலும், அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு, பூமியில் உள்ள வளங்களை ஒருபோதும் சுரண்டவும் வாய்ப்பில்லை. ஏலியன் குறித்த அச்சம் தேவையற்றது' என்றார்.

காதல்,சண்டைக்கு முக்கியத்துவம், விஜய்

தொடர்ந்து ஆக்ஷன் படங்களாக நடித்துவந்த விஜய் மீண்டும் "பூவே உனக்காக", "காதலுக்கு மரியாதை" படங்களின் பாணியில் சென்டிமெண்ட் கலந்த ஒரு காதல் கதையில் நடிக்கிறார். வழக்கமான பஞ்ச் டயலாக்குகள் இல்லை. அதே நேரத்தில் அசினிடம் விஜய் பேசும் காதல்மொழிகள் நெஞ்சம் தொடுமாம்.

காதல்படம்தான் என்றாலும் சண்டைக்காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக் கிறார்கள். பாங்காங்கில் பரபரப்பான சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப் பட்டிருக்கிறது. சண்டைக்காட்சியில் டூப் இல்லாமல் விஜய் நடித்ததைப் பார்த்து அசந்துபோன மார்ஷியஸ் ஆர்ட்ஸ் மாஸ்டர் அவரைப் பாராட்டி கேடயம் ஒன்றை வழங்கி இருக்கிறார். மேட்டுப்பாளையத்தில் ஓடும் ரயில் ஒன்றிலும் சில சண்டைக்காட்சிகளைப் படமாக்கியுள்ளனர். இதிலும் டூப் போடாமல் மொத்த யூனிட்டையும் அலற அடித்திருக்கிறார் விஜய்.

புனே'யில் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் ஒரு பாடலையும், மலேசியாவில் நடுக்கடலில் ஒரு பாடலையும் படமாக்கி இருக்கிறார்கள்.

ஒரிஜினல் பாடிகாட் படத்தில் நாயகியாக நடித்திருந்தது நயன்தாரா. என்றாலும் ரீமேக்கில் விஜயோடு ஜோடி சேர்ந்திருப்பது அஸின். படத்தின் முக்கியமான மற்றொரு பலம் ராஜ்கிரண். டப்பிங் பேசும்போது அவரே கண்கலங்கிவிட்டார் என்கின்றன தகவல்கள்.

படத்தின் கடைசி இருபது நிமிடங்களும் "காதலுக்கு மரியாதை" படத்தில் இடம்பெற்றதைப்போல உள்ளத்தை உருக்கும்வகையில் எடுக்கப்பட்டுள்ளதாம்.

நடிப்பு: விஜய், அஸின், ராஜ்கிரண், வடிவேலு இசை: வித்யாசாகர், இயக்கம்-சித்திக்.

நடிகர் விஜய், இயக்குநர் சித்திக் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் படம். ப்ரெண்ட்ஸ் படத்தில் நடித்த வடிவேலுவும் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருப்பது கூடுதல் பலம்.

நம் மன்னர்கள் வெல்வார்களா? இன்று!

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என் முன்னிலையில் இருந்தது.

போர்ட் எலிசபெத்தில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்க அணி 7 விக்கெட்டுக்கு 265 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி சொதப்பியது. ரோகித் சர்மா(1), யுவராஜ்(12), ரெய்னா(20), தோனி(2), யூசுப் பதான்(2) ஏமாற்றினர். துணிச்சலாக போராடிய விராத் கோஹ்லி அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார். இந்திய அணி 32.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. ஆட்டத்தை தொடர முடியாததால், "டக்வொர்த் - லீவிஸ்' விதிமுறைப்படி இந்திய அணி, தென் ஆப்ரிக்காவிடம் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தொடர் 2-2 என சம நிலையை எட்டியது. விராத் கோஹ்லி 87 ரன்களுடன் அவுட்டகாமல் இருந்தார்.

தென் ஆப்ரிக்க அணியின் பலம் வேகப்பந்து வீச்சுதான். இதுவரை 11 விக்கெட் வீழ்த்திய டிசோட்சபே, மார்கல் (8), ஸ்டைன் (6) ஆகியோர் மிரட்டலான பார்மில் உள்ளனர். சுழலில் போத்தா, பீட்டர்சன், டுமினியும் அவ்வப்போது அசத்துவது அணியின் வெற்றிக்கு உதவியாக உள்ளது.

பைனல் போன்ற இன்றைய போட்டியில், சாதிக்க தோனி தலைமையிலான இந்திய அணியும், சொந்த மண்ணில் சோகத்தை தவிர்க்க, தென் ஆப்ரிக்க அணியும் போராடும் என்பதால், கடுமையான போட்டியை எதிர்பார்க்கலாம்.

தோனி ராசி,ஒருநாள் அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்ற பின், அன்னிய மண்ணில் நடந்த இரு அணிகள் இடையிலான ஒருநாள் போட்டித் தொடரில், இந்திய அணி தான் கோப்பை வென்றுள்ளது. இலங்கையில் இரு முறை 3-2, 4-1 (2008-2009), நியூசிலாந்தில் 3-1 (2009), வெஸ்ட் இண்டீசில் 2-1 (2009) என, தொடர்ந்து நான்கு தொடர்களில் வெற்றிக் கோப்பையுடன் திரும்பியது. இம்முறை, இந்த ராசி தொடருமா?
இம்மைதானத்தில் இதுவரை.

இந்தியாவுக்குக் சாதகமான மைதானமாக செஞ்சுரியனை குறிப்பிடலாம். இங்கு பங்கேற்ற 9 போட்டிகளில் 4ல் வெற்றி, 4ல் தோல்வியடைந்தது. ஒரு போட்டிக்கு முடிவில்லை. இதில் தென் ஆப்ரிக்காவுடன் பங்கேற்ற 3 போட்டியில் 2ல் வென்றுள்ளது.

இந்தியா அதிகபட்சமாக 276/4 (பாகிஸ்தான், 2003) ரன்கள் எடுத்தது. தென் ஆப்ரிக்க அணி அதிகமாக 392/6 (பாகிஸ்தான், 2007) ரன்கள் எடுத்துள்ளது.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!