ஆரியன் வந்தான்!  சாதியையும் சாத்திரத்தையும் விதைத்தான் ஏமார்ந்தான் தமிழன்.

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, June 1, 2011

வருமான வரி ஏய்ப்புக்கு வருகிறது விளங்கு!?

புதுடில்லி : வருமான வரி கட்டாமல் ஏய்ப்பவர்களுக்கு எதிராக, கைது நடவடிக்கையை மேற்கொள்ள வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

கறுப்பு பணத்தை வைத்திருப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோத பணப் பரிமாற்றம் போன்ற சதிச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க, வருமான வரித்துறையின் கீழ் சிறப்பு அதிகாரங்களுடன் கூடிய குற்றப் புலனாய்வு பிரிவு துவக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, வருமான வரி கட்டாமல் ஏமாற்றும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய, தனது அதிகார எல்லையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது வருமான வரித்துறை. செலுத்தப்படாமல் இருக்கும் வருமான வரி பாக்கி மட்டும் இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. இதில், பெரும் பகுதியை வசூல் செய்வதில், வரி வசூலிப்பாளர்களுக்கு தலையாய பிரச்னையாக உள்ளது. தற்போது, இதை மீட்பதற்காக வருமான வரித் துறையில் வரி மீட்பு அதிகாரி (டி.ஆர்.ஓ.,) உள்ளார். இவர், வரி கட்டாத நபரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகாரம் பல ஆண்டுகளாக இருந்தாலும், வருமான வரித்துறையில் பின்பற்றப்பட்ட மென்மையான அணுகுமுறை காரணமாக உறுதியாக பின்பற்றப்படவில்லை. மேலும், வரி நிலுவை பிரச்னை, பொருளாதார குற்றப்பிரிவின் கீழ் வந்ததால் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது.தற்போது குற்றப் புலனாய்வு பிரிவு ஏற்படுத்தப்பட்டதன் மூலம், வரி மீட்பு அதிகாரிக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. வரி கட்டாத நபரை கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவும், சொத்துகளை ஜப்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரி கட்டாத நபரின் அசையும், அசையாத சொத்துகளை கைப்பற்றி அவற்றின் வரியை ஈடுகட்டுவதற்காக ரிசீவரை நியமிக்கவும் அதிகாரம் அளிக்கும் வகையில், வருமான வரிச் சட்டம் பிரிவு 222 கீழ் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

Reactions:

0 comments:

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!