ஆரியன் வந்தான்!  சாதியையும் சாத்திரத்தையும் விதைத்தான் ஏமார்ந்தான் தமிழன்.

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, May 31, 2011

அமலுக்கு வருகிறது, தொலைபேசி தொந்தறவை குறைக்க

புது தில்லி, ஜூன் 01: செல்போன் அழைப்பு எந்த இடத்தில் இருந்து வருகிறது என்பதும் இனிமேல் செல்போனில் தெரியும். இந்த வசதியை இன்னும் 1 முதல் 3 ஆண்டுகளில் முழுமையாக அமல்படுத்த வேண்டுமென செல்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காவும், செல்போனில் தேவையின்றி வரும் தொந்தரவுகளைக் குறைக்கும் வகையிலும் இதனை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்த வசதி வந்து விட்டால் செல்போன் மூலம் செய்யப்படும் குற்றங்கள் பெருமளவில் குறைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நமது செல்போனுக்கு அழைப்பு வந்தால், அது எந்த இடத்தில் (எந்த ஊர்) இருந்து வருகிறது என்பதும் நமக்குத் தெரியும்.

எல்பிஎஸ் (லோக்கேஷன் பேஸ்டு சர்வீஸ்) எனப்படும் இந்த வசதியை அறிமுகப்படுத்த செல்போன் நிறுவனங்களுக்கு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவு பிடிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் செல்போன் கட்டணங்கள் உயரக்கூடும்.

Reactions:

2 comments:

இந்த வசதி வந்து விட்டால் செல்போன் மூலம் செய்யப்படும் குற்றங்கள் பெருமளவில் குறைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.//

நல்ல வசதி.

சரியான முடிவை எடுத்து இருக்காங்க.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!