ஆரியன் வந்தான்!  சாதியையும் சாத்திரத்தையும் விதைத்தான் ஏமார்ந்தான் தமிழன்.

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, March 12, 2011

தனி தெலுங்கான?.. தமிழகமும் தன்னிலை பெறுமா?

ஆந்திராவில் காங்கிரஸ் அரசுக்கு, ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வந்ததால், அவரை சமாளிக்கும் வகையில், பிரபல நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியை, தங்கள் கட்சியுடன் இணைத்துக் கொண்டது, காங்கிரஸ் மேலிடம். இதன் மூலம், ஆந்திராவில் தங்கள் கட்சியின் செல்வாக்கை அதிகரித்துக் கொண்டுள்ளது.

ஆந்திராவை பொறுத்தவரை, காங்கிரசுக்கு மட்டும் அன்றி, மத்திய அரசுக்கும் அடுத்தபடியாக பெரும் தலைவலியை ஏற்படுத்துவது, தெலுங்கானா விவகாரம் தான். சிறிது காலம் அடங்கியிருந்த தெலுங்கானா விவகாரம், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒத்துழையாமை போராட்டம், முற்றுகை போராட்டம் என, தெலுங்கானா விவகாரத்தால், ஆந்திராவே கலகலத்துப் போயுள்ளது.இந்த விவகாரத்தை, அரசியல் ரீதியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள, காங்., மேலிடம் திட்டமிட்டுள்ளது. தெலுங்கானா விவகாரத்தில், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க காங்., முடிவு செய்துள்ளது. முதல் மாங்காய், தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க அனுமதி அளிப்பது. இதன் மூலம், தெலுங்கானா மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய பெருமை, தங்களுக்கு கிடைக்கும் என்பதோடு, இந்த பகுதி மக்கள், தங்கள் கட்சியின் விசுவாசிகளாக மாறிவிடுவர் என்று, காங்., தலைவர்கள் நம்புகின்றனர்.

அடுத்த மாங்காய், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி. "தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க அனுமதித்து விட்டோம். இனிமேல், உங்கள் கட்சியை எங்கள் கட்சியுடன் இணைத்து விடுங்கள்' என, காங்., மேலிட தலைவர்கள், டி.ஆர்.எஸ்., தலைவர் சந்திரசேகர ராவை வற்புறுத்தவுள்ளனர். இதன் மூலம், தெலுங்கானா தனி மாநிலம் அமைந்தாலும், அங்கும் தங்கள் கட்சியே ஆளும் கட்சியாவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும் காங்., தலைவர்கள் நம்புகின்றனர்.ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் திட்டத்துக்கான, "அசைன்மென்ட்' தயாராகி விட்டது. தமிழகத்தில், தங்களுக்கு தேவையான தொகுதிகளை தி.மு.க.,வை ஒதுக்க வைத்து, சாதித்துக் காட்டிய குலாம் நபி ஆசாத்திடம் தான், இந்த "அசைன்மென்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. அவரும், தனது வேலைகளை தீவிரமாக துவக்கி விட்டார்.

பல போராட்டம், உண்ணாவிரதம் இருந்து காரியம் சாதித்தது தெலுங்கு தேசம், தனி தெலங்கான போல் தமிழகமும் தன்னிலை பெறுமா?, தேர்தலுக்குபிறகு என்னென்ன மாற்றங்கள் நிகழும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Reactions:

0 comments:

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!