புதுடில்லி : கடந்த சில தினங்களுக்கு முன்பு டில்லி விமான நிலையத்தில் தனியார் நிறுவன விமானம் ஒன்று தரையிறங்கும் முறை குறித்து டைரக்டரேட் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேசன் துறை ஆராயந்தது. இதில் இண்டிகோ என்ற தனியார் நிறுவனத்தை சேர்ந்த பெண் விமானி மீனாட்சி ஷேகல் என்பவர் விமானத்தை இறக்கும் விதத்தில் தவறு இருப்பதை கண்டறியப்பட்டது.
தொடர்ந்து மற்றொரு விமான பைலட்டான ஸ்வரண் சிங் தல்வார் என்பவரும் இதுபோன்ற தவறை செய்தது கண்டறியப்பட்டது. இது குறித்து டைரக்டரேட் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேசன் அமைப்பின் தலைமை அதிகாரி பாரத் புஷான் , தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து விமானியும் தரைகட்டுப்பாட்டு அதிகாரியுமான பர்மிந்தர் கவுர் என்பவர் விசாரணை நடத்தினார். விசாரணையில் விமான பயற்சி பெற்று அதற்கான லைசென்ஸ் வழங்கும் நிறுவனமான ஏர்லைன் டிரான்ஸ் போர்ட் பைலட் லைசென்ஸ் (ஏடிபிஎல்) சில் போலியான மதிப்பெண்சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.. மேலும் சாதாரணமாக ஒரு பயிற்சி விமானி தனது பயிற்சி காலத்தில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் மணிகள் வரை பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் மேற்கண்ட இருவரும் வெறும் ஆயிரத்து 500 மணி நேரம் மட்டுமே பயிற்சி பெற்றுள்ளனர் . விமானத்தை தரையிறக்கும் போது முதலில் பின் பக்க சக்கரத்தை கீழிறக்க வேண்டும். ஆனால் இண்டிகோ பெண் விமானி முன்பக்க சக்கரத்தை தொடர்ந்து கீழிறக்கி விமானத்தை இயக்கியுள்ளதன் மூலம் அவரின் தவறு அவர் மூலமே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இத்தகைய தவறுகள் குறித்து கவலை தெரிவித்துள்ள டைரக்டரேட் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேசன் துறையின் தலைமை அதிகாரி பாரத் புஷான் இவர் போன்ற பைலட்டுகளால் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் போகிறது. மேலும் விமான நிறுவனங்களின் போட்டிகளால் போலியாக சான்றிதழ் கொடுத்த பைலட்டுகளான விமானிகளின் தரம் குறித்து விமான நிறுவனங்கள் பரிசோதனையும் நடத்துவதில்லை என்பது கவலை அளிப்பதாக உள்ளது. மேலும் பைலட்டுகளின் தரம் மற்றும் அவர்களின் லைசென்சுகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். அவ்வாறு போலி சான்றிதழ் மூலம் லைசென்ஸ் பெற்றது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






0 comments:
Post a Comment