நம்பிக்கை வையுங்கள் வெற்றி கிடைக்கும்! உண்மையாய், உறுதியோடு உழைத்து பாருங்கள் வாழ்க்கையில் எல்லாமே கிடைக்கும்

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, January 14, 2011

இந்தியாவிலும் புதிய கிளை

ஆன்-லைன் என்சைக்ளோபீடியா என்று அழைக்கப்படுகிறது விக்கிபீடியா. இணையதளத்தில் தேடும் விவரங்களை உடனுக்குடன் முழு தகவல்களை தரும் வகையில் விக்கிபீடியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  தற்போது முதல்முறையாக அமெரிக்காவைத் தவிர இந்தியாவிலும் கிளையைத் துவங்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து விக்கிபீடியா தலைவர் சூ கார்ட்னர் செய்தி நிறுவனத்துக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:  முதலில் ஹிந்தியிலும், அதன் பின்னர் இந்திய நாட்டின் அனைத்து அதிகாரப்பூர்வ மொழிகளிலும் தகவல்களை அளிக்கவுள்ளோம். மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எனவே முதலில் இந்தியாவில் கிளையைத் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்திய மக்களுக்குத் தேவையான தகவல்களை, அவர்களது மொழியிலேயே வழங்குவது சரியாக இருக்கும். இதன்மூலம் விக்கிபீடியாவும் இந்தியாவில் வேரூன்றும்.  விக்கிபீடியா என்சைக் ளோபீடியாவில் உள்ள விவரங்கள், கட்டுரைகள், தகவல்களை மேலும் அதிகரிப்பதற்காக பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். ஒரு சம்பவம் அல்லது இடம் தொடர்பான கூடுதல் விவரங்கள் தெரியவந்தால் அதை எங்களுக்கு அவர்கள் அளிக்கலாம். இந்தியாவைத் தொடர்ந்து பிரேசில், மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்பிரிக்க நாடுகளில் கிளைகள் துவங்கப்படும் என்றார் அவர்.

Reactions:

0 comments:

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!