
பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் புதிய படமொன்றில் ரோபோ வேடத்தில் நடிக்கிறார். டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ரோபோட் படத்தில் முதலில் ஷாரூக் கான்தான் நடிப்பதாக இருந்தது. பின்னர் சிலபல காரணங்களால் அவர் அப்படத்தில் இருந்து விலகிக் கொண்டார். இந்நிலையில் ரா.ஒன் என்ற பெயரில் உருவாகப் போகும் படமொன்றில் கமிட் ஆகியிருக்கிறார் ஷாரூக். முழுக்க முழுக்க ரோபோக்கள் நடிக்கும் இப்படத்தில் ஷாரூக் கானும் ரோபோவாகவே வருகிறார். மனித குணம் படைந்த ரோபோவின் கதைதான் இது. ரா.ஒன் என்றால் ரேண்டம் ஆக்சஸ் வெர்ஷன் 1.0 என்று அர்த்தமாம். ரோபோ தோற்றத்தில் இருக்கும் ஷாரூக்கின் போஸ்டர்கள் மும்பை பத்திரிகைகளை இப்போதே அலங்கரிக்கத் தொடங்கி விட்டது. அனுபவ் சின்கா இயக்கத்தில் முழுக்க முழுக்க வித்தியாசமாக எடுக்கப்படவிருக்கும் இந்த படம் ரோபோட் படத்தை விட தொழில்நுட்பத்தில் பல மடங்கு புதுமைகளை புகுத்தி உருவாகப்போகிறதாம்.






0 comments:
Post a Comment