ஆரியன் வந்தான்!  சாதியையும் சாத்திரத்தையும் விதைத்தான் ஏமார்ந்தான் தமிழன்.

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, January 13, 2011

வேலியே பயிரை மேய்த்தது, ரூ.23 கோடி மோசடி

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் கோர்ட்டில், 23 கோடி ரூபாய் அளவுக்கு, பி.எப்., நிதி மோசடி நடந்த வழக்கில், ஆறு நீதிபதிகளுக்கு பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கும் படி, சி.பி.ஐ., கோரியுள்ளது.   காசியாபாத்  கோர்ட்டில் பணியாற்றியவர்.  அஷுதோஸ் அஸ்தானா. இவர், கோர்ட் ஊழியர்களின் பி.எப்., பணத்தில், 23 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்தது கண்டு பிடிக்கப்பட்டு, கடந்தாண்டு ஜனவரியில் கைது செய்யப்பட்டார்.கடந்த 2008ல் நடந்த இந்த மோசடியில், நீதிபதிகள் பலருக்கும் தொடர்பு இருப்பதாக, இவர், தன் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், கடந்த அக்டோபரில் இவர் மர்மமான முறையில் இறந்து விட்டார்.காசியாபாத் நிர்வாகம் மற்றும் போலீசார், இந்த வழக்கு தொடர்பாக ஒத்துழைக்க மறுப்பதால், இவ்வழக்கை டில்லிக்கு மாற்றும் படி சி.பி.ஐ., கோரியிருந்தது.இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக, 78 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் மூன்று பேர், அலகாபாத் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதிகள், மேலும் மூன்று பேர், மாவட்ட நீதிபதிகள். விசாரணைக்கு ஆஜராகும் படி நீதிபதிகளுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும், ஆஜராகாததால், அவர்களுக்கு, பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கும் படி, காசியாபாத் சிறப்பு கோர்ட்டில், சி.பி.ஐ., கோரியுள்ளது.

Reactions:

0 comments:

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!