ஆரியன் வந்தான்!  சாதியையும் சாத்திரத்தையும் விதைத்தான் ஏமார்ந்தான் தமிழன்.

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, January 11, 2011

பயங்கரவாதிகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம்: என்.ஐ.ஏ அறிவிப்பு

ஜன.11 : சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என தேசிய புலனாய்வு ஏஜென்சி(NIA) அறிவித்துள்ளது.
 
சமீபத்தில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் பயங்கரவாதி அஸிமானந்தா அளித்த வாக்குமூலத்தின் மூலம் கடந்த 2007ம் ஆண்டு மே18-ல் 68 பேர் பலியாக காரணமான சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்திலும் ஹிந்து பயங்கரவாதிகளின் பங்கு வெட்டவெளிச்சமானது.

அச்சமயத்தில் நடைபெற்ற அஜ்மீர், மற்றும் மலேகான் குண்டுவெடிப்பில் பங்குகொண்ட தீவிரவாதிகளான சந்தீப் டாங்கே மற்றும் ராம்சந்ர கல்சங்கரா ஆகியோருக்கும் சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பது தேசிய புலனாய்வு ஏஜென்சியின் விசாரணையில் தெரியவந்தது.

ஆகவே தலைமறைவான சந்தீப் டாங்கே மற்றும் ராம்சந்ர கல்சங்கரா ஆகியோர் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என தேசிய புலனாய்வு ஏஜென்சி அறிவித்துள்ளது.

முன்னதாக சி.பி.ஐ-யால் விசாரிக்கப்பட்டுவரும் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட சந்தீப் டாங்கே மற்றும் ராம்சந்ர கல்சங்கரா ஆகியோர் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் புதுடெல்லியிலுள்ள என்.ஐ.ஏ அலுவலக எண்ணை(1-29947020, 011-29947021) தொடர்பு கொள்ளவும்.

Siasat

Reactions:

0 comments:

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!