Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, December 31, 2010

பாகிஸ்தானி கொலை வழக்கில் சிக்கிய 17 இந்தியர்கள்!

ஷார்ஜாவில் நிகழ்ந்த பாகிஸ்தானி கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப் பட்ட 17 இந்தியர்களும் கொலையான நபரின் நெருங்கிய உறவினருக்கு, நஷ்ட ஈட்டுத் தொகையை தர மறுத்து விட்டனர். "தாங்கள் அப்பாவி என்பதால், பணம் தரத் தேவையில்லை' என்றும் கூறியுள்ளனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் மிஸ்ரி நசீர் கான். கடந்த 2009 ஜனவரியில் ஷார்ஜா தொழிலாளர் முகாம் அருகே கொலை செய்யப்பட்டார். கள்ளச் சாராயம் விற்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக, ஷார்ஜா வில் வேலை பார்த்த பஞ்சாபை சேர்ந்த 16 பேர், அரியானாவைச் சேர்ந்த ஒருவர் என, 17 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த 17 பேருக்கும் இந்த ஆண்டு மார்ச் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

ஷார்ஜா கோர்ட் இந்தத் தண்டனையை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், மரண தண்டனையில் இருந்து தப்ப வேண்டும் எனில், கொலையான பாகிஸ்தானியின் நெருங்கிய உறவினருக்கு இவர்கள் 17 பேரும் நஷ்ட ஈட்டுத் தொகை தர வேண்டும். ஆனால், அதைத் தர இந்தியர்கள் 17 பேரும் மறுத்து விட்டனர். தங்கள் பக்கம் நியாயம் இருப்பதால், நஷ்டஈடு தொகை தர வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக இந்தியர்கள் 17 பேரின் வக்கீல் பிந்து சுரேஷ் செட்டூர் கூறுகையில், ""தண்டனை பெற்ற 17 பேரும் இழப்பீட்டுத் தொகை தர ஒப்புக் கொண்டால், அதை ஏற்றுக் கொள்ளத் தயார் என கொலையான பாகிஸ்தானியின் உறவினர் தெரிவித்தார். ஆனால், எனது கட்சிக்காரர்கள் அப்பாவி. அவர்கள் பக்கம் நியாயம் உள்ளது என்பதால், இழப்பீட்டுத் தொகை தர மறுத்து விட்டோம். பாகிஸ்தானி கொலைக்கும், அதற்கு பயன்படுத்திய ஆயுதத்திற்கும் இடையேயான தொடர்பை நிரூபிக்க போலீஸ் தரப்பினர் தவறி விட்டனர். கொலைக்கு பயன்படுத்தியதாக எந்த ஆயுதமும் இதுவரை கோர்ட்டில் ஒப்படைக்கப்படவில்லை,'' என்றார்.

கேரளாவை மிஞ்சியது உத்தர பிரதேச மாநிலம்!


இந்தியாவிலிருந்து கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களே இதுவரை அதிக அளவில் வெளிநாட்டு வேலைக்கு சென்றனர். தற்போது அந்த இடத்தை உ.பி., மாநிலம் பிடித்துள்ளது.


பல்வேறு நாடுகளில் கார்பென்டர், எலக்ட்ரீஷியன், கட்டட மேஸ்திரிகள், டிரைவர்கள் உள்ளிட்ட கட்டடத் தொழிலாளர்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. தற்போது, வெளிநாடுகளில் ஏராளமான இந்தியர்கள் கட்டடத் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இப்படி வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் குறித்த புள்ளிவிவரம் ஒன்றை, மத்திய வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில், பணியின் நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களில் 80 சதவீதத்தினர் கட்டட தொழிலாளர்களாக உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இந்தியாவிலிருந்து கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களே இதுவரை அதிக அளவில் வெளிநாட்டு வேலைக்கு சென்றனர். தற்போது அந்த இடத்தை உ.பி., மாநிலம் பிடித்துள்ளது. இந்த மாநிலத்தில் இருந்து கடந்த 2009 ம் ஆண்டில் 1.25 லட்சம் பேர் வெளிநாட்டு வேலைக்குச் சென்றுள்ளனர். அதே ஆண்டில் கேரள மாநிலத்தில் 1.19 லட்சம் பேர் சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் 78 ஆயிரத்து 841 பேரும், ஆந்திராவில் 69 ஆயிரத்து 233 பேரும் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றுள்ளனர்.

கடந்த 2010 ம் ஆண்டில் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் உத்தரப் பிரதேசத்தில் 68 ஆயிரத்து 375 பேரும், கேரளாவில் 45 ஆயிரத்து 278 பேரும் வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் சென்றுள்ளனர். இது, தொழிலாளர்களாக வேலைக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை மட்டுமே. அலுவலக வேலைகள் தொடர்பான பணிகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை. தென்னிந்தியாவில், கேரளா தவிர தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலிருந்தும் அதிமானோர் வெளிநாடுகளுக்கு தொழிலாளர்களாக வேலைக்குச் செல்கின்றனர். வட மாநிலங்களில், பீகார், ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்து செல்கின்றனர்.

எதிர்காலம்... கிரிக்கெட்!

உலக அரங்கில் கால்பந்துக்கு அடுத்து அதிக ரசிகர்களை கொண்டது கிரிக்கெட் தான்.விரைவில் கால்பந்துக்கு நிகராக கிரிக்கெட்டுக்கு ரசிகர் பட்டாளம்விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியகாரணம்"டுவென்டி-20' போட்டிகள் தான். இது வளமான வளர்ச்சிஎன்றாலும், மறுபுறம் பாரம்பரியமிக்க டெஸ்ட், ஒரு நாள் போட்டிகள் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டுள்ளன. எதிர்காலத்தில் "டுவென்டி-20' போட்டிகள் மட்டுமே இருக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பல்வேறு பரிமாணம்

கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு பரிமாணங்கள் இல்லை. ஆனால் கிரிக்கெட்டில் மட்டும் டெஸ்ட்,ஒரு நாள் மற்றும்"டுவென்டி-20' என மூன்று பரிமாணங் கள் காணப்படுகிறது. இதில் ஒன்று எழுச்சி பெற்றால், மற்றொன்று வீழ்ச்சி அடைய துவங்குகிறது. "டுவென்டி-20' போட்டிகளின் அசுர வளர்ச்சியின் காரணமாக, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் தொய்வை எதிர் கொண் டுள்ளன.

காயம்காரணம்

கிரிக் கெட் என் றாலே டெஸ்ட் போட்டிகள் என்ற காலம் தற் போது மலையேறி விட்டது. வீரர்களின் உண்மையான திறமையை வெளிக் கொணரும் ஆற்றல் டெஸ்ட் போட்டிகளுக்கு உண்டு. ஓவர்வரையறை இல்லாததால், பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் திறமையை நிரூபிக்க அதிக காலம் எடுத்துக் கொள்வர். இதன் மூலம் பெரும்பாலான வீரர்கள் அடிக்கடி காயத்துக்கு உள்ளாயினர். அதற்குப் பின் வந்த ஒரு நாள் போட்டிகளில், 50 ஓவர்கள் என்ற வரையறை இருந்தது.தற்போது "டுவென்டி-20' போட்டிகளில் 20 ஓவர்மட்டுமே என்பதால், பவுலர்கள் தலா 4 ஓவர்கள் மட்டுமேவீச வேண்டிய நிலை ஏற்பட்டது. தவிர, இவ்வகைப் போட்டிகளில் விளையாடுவதால் வீரர்கள்காயத்திலிருந்து தப்ப முடிகிறது.

பணம் முக்கியம்

இதன் காரணமாக பெரும்பாலான வீரர்கள் ஒரு நாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளில் மட்டுமே பங்கேற்க விரும்புகின்றனர். சமீபத்தில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பிளின்டாப், டெஸ்ட் போட்டிகளிலிருந்து மட்டும் ஓய்வு பெற்றார். இதற்கு முக்கிய காரணம் காயம் தான். காயம் தொடர்பான பிரச்னை ஒரு புறம் இருக்க, மற்றொரு முக்கிய காரணம் பணம். ஒரு டெஸ்ட் போட்டிக்கு வீரர்கள் பெறும் சம்பளம் சுமார் 2 லட்சம் ரூபாய். ஒரு நாள் போட்டிக்கு 1.5 லட்சம் ரூபாய். ஆனால் இந்தியன் பரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) உள்ளிட்ட "டுவென்டி-20' போட்டிகளில் வீரர்கள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்படுகின்றனர். இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்களையும் புறக்கணித்து விட்டு, இவ்வகைப் போட்டிகளில் பங்கேற்க வீரர்கள் விரும்புகின்றனர். கடந்த 2008 ம் ஆண்டு இந்தியாவில் நடந்த முதல் ஐ.பி.எல்., தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, தான் அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் ரூ. 1.5 லட்சம் ரூபாய் பெற்றார்.

நன்மை உண்டு

ஐ.பி.எல்., என்ற ஒரு அமைப்பு துவங்கியதற்கே, டெஸ்ட் போட்டிகள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் இங்கிலாந்து பிரிமியர் லீக் (இ.பி.எல்.,), அமெரிக்கன் பிரிமியர் லீக் (ஏ.பி.எல்.,) அமைப்புகள் துவங்கப்பட உள்ளன. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகள் கூடுதலாக பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.

எதிர்காலம்

பணம் மற்றும் காயத்தின் அடிப்படையில் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர். இதே கருத்தை சமீபத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டனும் தெரிவித்துள்ளார். வீரர்களின் மனநிலை மற்றுமின்றி ரசிகர்களின் மனநிலையும் மாறத் துவங்கி உள்ளது. டெஸ்ட் போட்டிகளை பார்க்க ரசிகர்கள் தற்போது விரும்புவதில்லை. ஒரு போட்டியின் முடிவுக்கு ஐந்து நாட்கள் காத்திருக்க அவர்கள் விரும்பவில்லை. 3 மணி நேரத்தில் முடிவு கிடைக்கும் டுவென்டி-20' போட்டிகள் ரசிகர்களை பெருமளவு கவர்ந்து விட்டது. இதே நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் "டுவென்டி-20' போட்டிகள் மட்டுமே நிலைத்து இருக்கும். பாரம்பரியமிக்க டெஸ்ட் போட்டிகள் பெயரளவுக்கு மட்டுமே இருக்கும்.

இனி "ஸ்ரீலங்கா'

சிலோன்' இனி "ஸ்ரீலங்கா' என்று அழைக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இலங்கை தற்போது, "சிலோன்' என்றும், "ஸ்ரீலங்கா' என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. அரசு ஆவணங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் வெவ்வேறு பெயர்களே குறிப்பிடப்பட்டு வருகின்றன. அந்நாட்டு மின்சார வாரியம், "சிலோன் மின்சார வாரியம்' என்றும், பெட்ரோலிய நிறுவனம், "சிலோன் பெட்ரோலிய நிறுவனம்' என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்நாட்டு அரசு சிலோன் என்ற பெயரை அனைத்து ஆவணங்களிலும் ஸ்ரீலங்கா என்று ஒரே பெயராக மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு தகவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: பிரிட்டிஷ் ஆட்சி காலத்திற்கு முன்பு ஸ்ரீலங்கா "செய்லாவோ' என்று அழைக்கப்பட்டு வந்தது. பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் இந்த பெயர் மருவி "சிலோன்' ஆனது. விடுதலைக்குப் பின்னர், குடியரசானதும், "சிலோன்' என்றே அழைக்கப்பட்டு வந்தது. தற்போது, ஸ்ரீலங்கா, சிலோன் ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறது. இதனை மாற்றி ஸ்ரீலங்கா என்று ஒரே பெயராக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. எனவே, இனி அனைத்து ஆவணங்களிலும், ஸ்ரீலங்கா என்றே அழைக்கப்படும். சிலோன் என்ற பெயரில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பெயரும் விரைவில் மாற்றப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Thursday, December 30, 2010

இரு தலைகள் மறுபடியும் சந்திக்குமா ?

அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைக்கும் நிகழ்ச்சி, திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், இந்திய அறிவியல் மாநாட்டை துவக்கி வைக்க வரும் 2ம் தேதி இரவு சென்னை வருகிறார். 3ம் தேதி காலை, அறிவியல் மாநாட்டை துவக்கி வைக்கிறார். அதன்பின், அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவை பிரதமர் துவக்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான அழைப்பிதழை, துணை முதல்வர் ஸ்டாலின் பிரதமரை நேரில் சந்தித்து வழங்கியிருந்தார்.

இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கு பின், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் பிரச்னை நிலவி வருகிறது. முதல்வருடன் ஒரே மேடையில் பிரதமர் கலந்து கொள்ள கூடாது என, காங்கிரசார் சிலர் வலியுறுத்தி வந்தனர். இதுதவிர, விடுதலைப்புலிகளால் பிரதமர், உள்துறை அமைச்சர், முதல்வர் போன்றவர்களுக்கு ஆபத்து இருப்பதாக, உளவுத் துறை எச்சரித்திருந்தது.

இந்நிலையில், பிரதமரின் அடையாறு பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவை திறக்க பிரதமருக்கு தமிழக அரசின் சார்பில் அழைப்பு விடப்பட்டிருந்தது. தமிழக கடற்கரை மண்டல மேலாண் குழுமம், இப்பூங்காவை அமைக்க தனது பரிந்துரையை, மத்திய அரசுக்கு ஏற்கனவே அனுப்பியிருந்தது.

ஆனால், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் இதுவரை பெறப்படாததால், பிரதமர் மன்மோகன் சிங் ஜனவரி 3ம் தேதி, இந்திய அறிவியல் மாநாட்டில் பங்கேற்க வரும் போது, பூங்கா திறப்பு நிகழ்ச்சியை சேர்க்க இயலவில்லை.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பின், பூங்கா திறக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமருடன் தமிழக அரசு நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பங்கேற்காவிட்டாலும், சென்னையில் தங்கும் அவரை முதல்வர் சந்தித்து பேச நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சென்னை வரும் பிரதமரை துணை முதல்வர், மத்திய, மாநில அமைச்சர்கள், விமான நிலையத்தில் வரவேற்க உள்ளனர்.

இஸ்லாமிய பங்கு வர்த்தகம்

மும்பை பங்கு சந்தையில் இஸ்லாமிய முறையிலான பங்கு வர்த்தகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான வசதியை தக்வா அட்வைசரி & சரீஅத் சொலுசன்ஸ் என்ற அமைப்புடன் இனைந்து மும்பை பங்கு சந்தை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த வர்த்தகத்தில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களும் இஸ்லாமிய நிதி கொள்கைகளை பின்பற்ற கூடியவையாக இருக்கும். இதில் தற்போது டாடா கன்ஷல்டன்ஸி சர்வீஸஸ், பாரதி டெல், ரிலையன்ஸ், மாருதி சுசுகி போன்ற நிறுவனங்கள் இனணைந்துள்ளன. இஸ்லாமிய பங்கு வர்த்தகத்தில் இணையும் நிறுவனங்கள், தக்வா அட்வைசரி நிறுவனத்தின் கடுமையான பரிசீலனைக்கு பிறகே வர்த்தகத்தில் ஈடுபட முடியும். இதில் இனைய விரும்பும் நிறுவனங்கள், மது, சூதாட்டம், வட்டி போன்ற வர்த்தகத்தில் ஈடுபட முடியாது.
இந்த பங்கு வர்த்தகத்தில் மத ரீதியான எந்த வித தடங்கலும் இல்லை. யார் வேண்டுமானலும் முதலீடு செய்யலாம். ஆரம்பித்த நாள் முதல் இஸ்லாமிய முறையிலான பங்கு வர்த்தகத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்து இருப்பதாக மும்பை பங்கு சந்தை தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு, இந்தியாவில் முஸ்லிம்களி நிலை குறித்து ஆராய்ந்த சச்சார் கமிட்டி, முஸ்லிம்கள் முதலீட்டு விவகாரங்களில் மிகவும் பின் தங்கியுள்ளனர் என்று கூறியிருந்தது குறிப்பிட தக்கது .

ஹார்ட் அட்டாக்! முதல் உதவி!!

ஹார்ட் அட்டாக் இந்த வார்த்தையே பயத்தை உண்டாக்கும், இதனால் ஏற்படும் பதட்டமோ பிரச்சனையை அதிகமாக்கும். நிதானமாக இக்கட்டுரையில் இருப்பது போல் செயல்பட்டால் ஹார்ட் அட்டாக்கிலிருந்து மிகவும் எளிதாக விடுபடலாம். 

இதயம் இதன் அழகிய துடிப்புகளின் ஏற்ற இறக்கமே நோய்களின் விளக்கம். துடிப்புகளின் மவுனம் அதுதான் மரணம். இறைவன் நம்உடல் இயக்கத்திற்காக அளித்த ஓர் அற்புத தொழிற்சாலை. இதயம் அது தானாக இயங்குவதில்லை உடல் உறுப்புகள் பாதிப்பு அடையும் போது அவை தன் நிலையை மூளைக்கு தெரிவிக்க மூளை இதயத்திற்கு உத்திரவிடுகின்றது. இதயம் இரத்த ஓட்டம் மூலம் பாதிக்கப்பட்ட உறுப்புக்கு சக்திஅளித்து அதன் சக்தியை சமநிலைப்படுத்தி உறுப்பை சீராக இயங்க வைக்கின்றது. பாதிப்படைந்த உறுப்பு அனுப்பும் தகவல் இதயத்திற்கு கிடைக்காமல் போனாலோ, இதயத்திற்கு தகவல் கிடைத்து இரத்தத்தை (சக்தியை) அனுப்பும்போது தடங்கல் ஏற்பட்டாலோ (இரத்த குழாய் அடைப்பு போன்ற காரணங்களால்) பல உறுப்புகள் பாதிப்படைந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு உறுப்புக்க போதுமான இரத்தத்தை அனுப்ப முடியாமல் போனாலே ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது.

ஆனால் நவீன மருத்துவத்தில் இதயம் தானாகவே இயங்குவதாக நினைத்து அதன் வேகத்தைக் குறைக்க மருந்து, மாத்திரைகள் கொடுத்து நன்றாக இருக்கும் இதயத்தை அநியாயமாக கெடுத்துவிடுகின்றனர்.

நுரையீரல், பெருங்குடல், வயிறு, மண்ணீரல், இதயம், சிறுகுடல், சிறுநீரகம் (கிட்னி), சிறுநீர் பை, பித்தப்பை மற்றும் கல்லீரல் போன்றவைகள் மிக மிக முக்கியமான உடல் உறுப்புகள். மற்றவை அனைத்தும் இந்த உறுப்புகளை சார்ந்தவையே. இந்த உறுப்புகள் எவ்வாறு இதயத்தோடு சம்பந்தப்படுகிறது என்பதையும் எந்தெந்த உறுப்பு பாதிப்படைந்தால் எந்தெந்த நேரத்தில் ஹார்ட் அட்டாக் வரும், எந்த சூழ்நிலைகள் மற்றும் சந்தற்பங்களில் வரும் இதற்கான முதல் உதவி முறைகள் என்ன? எப்படி செய்வது என்பதை இன்ஷா அல்லாஹ் இத்தொடரில் நாம் தெரிந்துகொள்வோம்

கல்லீரல் (Liver) பித்தப்பை (Gall Bladder) சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்:

ஆரம்ப கால அறிகுறிகள்:

பித்தப்பை : அதிகமாகக் கோபம் வரும், ஒரு பக்கத்தலைவலி, கண்களில் எரிச்சல், பித்தப்பையில் கல், வாய்ப்புண், வாந்தி, வாய் நாற்றம், காதுவலி, அடிக்கடி ஏற்படும் ஜுரம், தொடையில் வெளிப்பக்கத்தில் ஆரம்பித்து கால் சுண்டு விரல் வரை வரும் வலி அதனால் நடக்க இயலாமை, வாயில் கசப்புச் சுவை, கிறுகிறுப்பு, காது அடைத்தல், மசலா அதிகம் சாப்பிடுபவர்களுக்கு பித்தப்பை பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்புண்டு, உடம்பில் ஏற்படும் எரிச்சலோடு கூடிய வலி, துணி உடம்பில் பட்டால் கூட எரிச்சல் உண்டாகும். கால் கைகளை படுக்கைக்கு வெளியே நீட்டி விட்டுக் கொண்டு தூங்குவார்கள்.

கல்லீரல் : கண் நோய்கள், பசியின்மை, தலைவலி, கோபம், மஞ்சள் காமாலை, வயிற்றுவலி, மலச்சிக்கல், குழந்தைகளின் வளர்ச்சி பாதித்தல், வாந்தி, மன அழுத்தம், முதுகுவலி, சிறுநீர் பிரியாமை, ஹெரனியா, அடிவயிற்று வலி, இரவு 1 மணிக்கு தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு பிறகு 3 மணிக்கு மீண்டும் தூங்க ஆரம்பித்தல், தூக்கத்தில் ஏற்படும் அரிப்பு, அலர்ஜி.

வரும் நேரம்: இரவு 11 மணியிலிருந்து 3 வரை.

மற்ற சூழ்நிலைகள்: குடிகாரர்களுக்கும், விடிய விடிய கண்விழிப்பவர்களுக்கும், ஓய்வில்லாமல் செயல்படுபவர்களுக்கும், மேற்குறிப்பிட்ட நேரம் இல்லாமல் மற்ற நேரத்திலும் வரும்.

அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இடம்: கை சுண்டு விரல் (small finger) நகத்தின் மேற்புறத்தில் உள் பக்க ஓரத்தில் ஆட்காட்டி விரலால் அழுத்தி லேசாக மசாஜ் செய்ய வேண்டும்

இதயம் (Heart) சிறுகுடல் (Small Intestine) இதய மேல்உறை (Pericardium) உடல் வெப்பம் (மூவெப்ப மண்டலம் -Triple Warmer) சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்

ஆரம்ப கால அறிகுறிகள்:

இதயம்: நெஞ்சுவலி, இதயத்திற்கு மேல் பகுதி தோள்பட்டை பகுதியில் ஏற்படும் வலி, போலியோ, அதிகமாக தாகம் எடுத்தல், சிறுநீர் மஞ்சள் நிறம், கை சுண்டு விரலில் உள்பக்க சைடில் ஆரம்பித்து அக்குள் வரை செல்லும் வலி, மஞ்சள் காமாலை, உள்ளங் கையில் சூடு அதிகமாகுதல், மனதில் பயம், நாக்கின் மேல் பகுதி சிகப்பு நிறமாகுதல், ஞாபக சக்தி குறைவு, மார்பு பகுதியில் தோன்றும் புண், மூச்சுவிட சிரமம், திடீர் வியர்வை, தூக்கமின்மை படபடப்பு, மணிக்கட்டு வலி, விரைவாகக் களைப்புத் தோன்றுதல், தூக்கத்தில் தொடர் கனவுகள், தூங்க ஆரம்பித்தவுடன் கனவும் ஆரம்பித்து விடும், நெருப்பு சம்பந்தப்பட்ட கனவுகள் தான் அதிகம் வரும்.

இதயமேல் உறை: இதயத்தில் மேல்உறை பாதிப்புக்கு உள்ளாகும் போது நெஞ்சுவலி, படபடப்பு, மார்பு நெஞ்சுப் பகுதி அடைத்தது போலிருத்தல், மன அமைதியின்மை, முழங்கையில் ஏற்படும் வலி, உள்ளங்கையில் சூடு பரவுதல், கைகளில் ஏற்படும் தசைவலி, கடுமையான நெஞ்சுவலி, (இதயத் தசைகளில் இரத்தக் கசிவினால் ஏற்படும் நெஞ்சுவலி வலது முழங்கை வரை கடுமையாக இருக்கும்.) தலைவலி, தூங்கும் போது நெஞ்சு பாரமாக இருப்பது போல் உணர்வு, யாரோ அமுக்குவது போன்று உணர்வு இதனால் தூக்கத்தில் எழுந்து விடுதல்.

உடல் வெப்பம் (மூவெப்ப மண்டலம்): உடம்பில் சில பகுதிகள் சூடாகவும் சில பகுதிகள் குளிர்ச்சியாகவும் இருப்பதற்கு இது தான் காரணம். உடம்பு முழுவதும் வெப்பத்தை சீர்படுத்தும். இது பாதிப்படைந்தால், காது மந்தம், காது செவிடு, காது இரைச்சல், கண்ணத்தில் வீக்கம், காதுகளில் வலி, முழங்கை வலி, தொண்டை வறட்சி, உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை அல்லது அதிக சூடு அல்லது அதிக குளிர்ச்சி ஏற்படுதல், தலை மிகவும் சூடாக இருப்பது. ஆடை மூடிய பகுதிகள் சூடாக இருப்பது, வயிறு உப்புதல், காற்று அடைத்தது போல் தசைகளில் வீக்கம், (விரல் கொண்டு அழுத்தினால் பள்ளம் ஏற்படும்), சிறுநீரை அடக்க முடியாமை, தூக்கத்தில் சிறுநீர் கழித்தல், நீர் கடுப்பு, வெளிச்சத்தில் தூங்க இவர்களுக்கு மிகவும் பிடிக்கும், சிறு வெளிச்சம் இவர்களுக்குத் தேவை.

சிறுகுடல்: அடிவயிற்று வலி, காது பிரச்னைகள், கன்னம் வீக்கம், தொண்டைப் புண், மலச்சிக்கல், மலத்துடன் இரத்தம், கழுத்தில் சுளுக்கு, வயிறு உப்புசம், வாய்வுத் தொந்தரவு, அடிக்கடி ஏப்பம், வயிறு மந்தம், நெஞ்செரிச்சல், வாயில் புண்கள், வயிறு பெறுத்தல், சிறு குடலில் ஏற்படும் அஜீரணமே கெட்ட வாய்வுக்கு மூலகாரணம். மதியம் சாப்பிட்டவுடன் தூங்க நினைப்பவர்கள், சிறிது நேரமாவது மதியம் சாப்பிட்டவுடன் தூங்கியே ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் சிறுகுடல் பாதிக்கப்பட்டவர்களே. அக்குள், அக்குள் மடிப்புகளிலும் மார்புப் பக்கவாட்டிலும் இவர்களுக்கு சதை விழும்.

வரும் நேரம்: காலை 11 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை

மற்ற சூழ்நிலைகள்: இதயம், இதயமேல் உறை, சிறுகுடல், உடல் வெப்பம் இவையெல்லாம் வெப்பம் எனும் அடிப்படையை சார்ந்தவை இவைகளில் எவை பாதிக்கப்பட்டாலும் கீழ் குறிப்பிட்ட இடத்தில் சிகிச்சை அளித்தாலே போதும் இன்ஷா அல்லாஹ். சிறுகுடல் பாதிப்பால் வரும் ஹார்ட் அட்டாக் மதியம் 1 மணியிலிருந்து 3 மணிக்குள் வரும். இதயத்தால் பாதிப்பு ஏற்பட்டால் காலை 11 முதல் மதியம் 1 மணிக்குள் வரும். இதய மேல் உறையால் பாதிப்பு ஏற்பட்டால் இரவு 7 முதல் 9 மணிக்குள் வரும், உடல் வெப்பத்தால் (Triple Warmer) பாதிப்பு ஏற்பட்டால் இரவு 9 மணியிலிருந்து இரவு 11 மணிக்குள் வரும். இவற்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இடம்:
சுண்டு விரலையும் மோதிர விரலையும் உள்ளங்கை பக்கம் மடக்குங்கள் உள்ளங்கையில் விரல்களுக்கு அருகிலிருக்கும் ரேகைக்கு ம் நடுரேகைக்கும் இரண்டு விரல்களுக்கும் இரண்டு ரேகைக்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கும் சிறிய இடத்தில் அழுத்தம் கொடுத்து ஆட்காட்டி விரலால் கசக்கி விடுங்கள்.

வயிறு (Stomach) மண்ணீரல் (Spleen) சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்:

ஆரம்ப கால அறிகுறிகள்:

வயிறு: அல்சர், வாய்வுத் தொல்லை, நாக்கு மஞ்சளாக மாறும், பற்களில் இரத்தக் கசிவு, கால் வலி, வாந்தி, முகவாதம், தொண்டை வறட்சி, இரத்தக் கசிவு நோய், கண் கீழ் இமை துடிப்பு, முகத்தில் தோன்றும் நரம்புவலி, வயிற்றுப் பொறுமல், பசியின்மை, கெட்ட கனவுகள், உணவிருந்தும் சாப்பிட முடியாமல் போவது போலவும் கனவுகள் உண்டாகும்.

மண்ணீரல்:

உடம்பில் அதிக எடை கூடுதல், அடிவயிற்று வலி, நாக்கில் ஏற்படும் விறைப்பு, மற்றும் வலி, வாய்வுகளால் ஏற்படும் வலி, மஞ்சள் காமாலை, வாந்தி, உடல் பலவீனம், உடல் பாரமாகத் தெரிதல், கால் பகுதிகளில் ஏற்படும் வீக்கம், வலி, காலை 10 மணிக்கு தூக்கம் வந்து அசத்தும், சாப்பிட்டவுடன் தூங்கச் சொல்லும் சோம்பேறித்தனத்தைக் கொடுக்கும், தூக்கத்தில் இருமல் வந்து தூக்கத்தைக் கெடுக்கும், இடுப்பில் பக்க வாட்டில் மடிப்புகளுடன் சதை உண்டாகும்.

வரும் நேரம்: காலை 7 மணியிலிருந்து 11 மணி வரை

மற்ற சூழ்நிலைகள்: சாப்பிடும் போது, அளவுக்கதிகமான மனவேதனையின் போது அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இடம்: கை மணிகட்டு ரேகை சுண்டு விரல் பக்கம் முடியும் இடத்தின் அருகே ஆட்காட்டி விரலால் அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். (உள் எலும்பின் பக்கம்).

நுரையீரல் (Lungs) பெருங்குடல் (Large Intestine) சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்:

ஆரம்ப கால அறிகுறிகள்:

நுரையீரல்: மூச்சுத் திணறல், இருமல், சளி, ஆஸ்துமா, கைகளில் கட்டை விரல் ஆரம்பித்து மார்பு மேல் முடியும் வலி, Frozen Shoulder என்னும் கைகளை அசைக்க முடியாத நிலை (பெண்களுக்கு அதிகம் வரும்), உடம்பில் உள்ள முடி கொட்டுதல் (தாடி, மீசை, புருவம் உள் உறுப்புக்கள்) மார்பகம் அடைத்தது போல் பாரமாக இருப்பது, தொண்டை காய்ந்து போதல், பேச முடியாத நிலை, டான்சில் கோளாறுகள், தோள்பட்டை வலிகள், தோல் வியாதிகள், அலர்ஜி, அக்குள், கழுத்து, தொடை பகுதிகளில் வியர்வை, 3 மணிக்கு விழிப்பு வந்து விடும், தூக்கத்தில் நெஞ்சை அடைப்பது போன்று மூச்சு முட்டுவது போல் இருக்கும், உட்கார்ந்து சாய்ந்தபடி தூங்குவார்கள், கைகளை அகற்றி வைத்து குப்புறப்படுத்துக் கொண்டு தூங்குதல்.

பெருங்குடல்: அடிவயிற்றுவலி, மலச்சிக்கல், வயிற்றுப் பொறுமல், பல்வலி, வயிற்றுப் போக்கு, உதடு வறட்சி, நாக்கு வறட்சி, மூச்சுவிடச் சிரமம், தொப்புளைச் சுற்றிலும் வலி, தோல் வியாதிகள், இருமல், மூக்கு வழியாக இரத்தம் கசிதல், முகவாதம், தோள்பட்டை வலி, இடுப்புவலி, சைனஸ், நெஞ்சு எரிச்சல், புட்டமும் இடுப்பும் சேருமிடத்தில் சதை ஏற்படும்.

வரும் நேரம்: காலை 3 மணியிலிருந்து 7 மணி வரை

மற்ற சூழ்நிலைகள்: வேகமாக சிரிக்கும் போதும் மற்றும் ஓடும் போது

அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இடம்: கை மணிகட்டு ரேகை ஓரத்திலிருந்து (சுண்டு விரல் பக்கத்திலிருந்து கீழ் நோக்கி மணிகட்டு பக்கம்) கீழ்நோக்கி 1½ இன்ஞ்சில் (பாதிக்கப்பட்டவரின் விரலில் அளவு எடுக்கவேண்டும்) ஆட்காட்டி விரலால் அழுத்தி லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.

சிறுநீரகம் (Kidney) சிறுநீர் பை (Urinary Bladder) சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்:

ஆரம்ப கால அறிகுறிகள்:

சிறுநீரகம்: பயம், சிறுநீரகக் கல், மூட்டு வலி, கால்களில் வீக்கம், முகத்தில் வீக்கம், முகம் கருப்பாக மாறுதல், பிறப்பு உறுப்பில் வலி, பல் வலி, கால் பாதங்கள் சூடாக இருப்பது, முதுகு வலி, நாக்கு உலர்ந்து விடுதல், தொண்டைப் புண், வீக்கம், மலச்சிக்கல், மூச்சுத் திணறல், தசைகள் சுருங்குதல், சிறுநீரகங்களில் ஏற்படும் வலி, தலைமுடி கொட்டுதல், மாதவிடாய்ப் பிரச்னைகள், ஆண்மைக் குறைவு, மனநோய், இரவில் வியர்த்தல், விதைகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம், கர்ப்பப்பை இறங்குதல், டான்சில், மார்பக அழற்சி, கழுத்தில் முன்புறம் சதை போடுதல், மாலை நேரத்தில் 5 மணிக்கு மேல் உடல் சோர்ந்து விடுதல், உடல் மிகவும் பலவீனமாய் மாறுதல், கைகள் நடுக்கம், இவர்கள் குப்புறப்படுத்துத் தான் தூங்குவார்கள். அப்போது தான் இவர்களுக்கு தூக்கம் வரும்.

சிறுநீர் பை: சிறுநீர் பிரியாமை, சிறுநீர் அடக்க முடியாமை, இரு கண்களுக்கு நேர்மேல் பக்கமாக ஏற்பட்டு பின்னால் போகும் தலைவலிகள், கண் நோய்கள், இடுப்புவலி, முதுகுவலி, கழுத்துவலி, சிறுநீர்ப் பையில் கல், முழங்கை வலி, குதிகால் வலி, உடம்பு அசதி, பய உணர்ச்சி, இரண்டு புட்டங்களிலும் அதிகமான சதை போடுதல், தொடைகளின் பின்புறம் அதிக சதை போடுதல், அடிக்கடி மலம் கழித்தல், தூக்கத்தில் மாறி மாறி புரண்டு கொண்டிருத்தல், இவர்களின் கழுத்துக்குப் பின்புறம்சதை போடும்

வரும் நேரம்: காலை 3 மணியிலிருந்து 7 மணி வரை.

மற்ற சூழ்நிலைகள்: உணவை மென்று சுவைத்து சாப்பிடாமல் மிக வேகமாக அப்படியே விழுங்குபவர்கள். மருந்து மாத்திரைகள் அதிகம் சாப்பிடுபவர்கள்.

அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இடம்: கையை செங்குத்தாக (90 டிகிரி) மடக்கும் போது முழங்கைக்கு மேலே சுண்டு விரலிருந்து நேர் கீழே முழங்கைக்கு மேற்புறத்திலிருந்து வரும் கோடு முடியும் இடம்.

டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD., (Chin.Med), A.T.C.M (CHINA) Zhejiang University, Hangzhou, (China) (Chinese Traditional Medicine).

தேர்தல்? மே முதல் வாரத்தில்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. இதனிடையே, பி.எட். உள்பட அனைத்து  வகையான கல்லூரி படிப்புகளுக்கான தேர்வையும் ஏப்ரலிலேயே முடிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  தமிழகத்தில் திமுக அரசின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. மாநிலத்தில் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஆயத்தப் பணிகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. புதிய வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கும் பணி ஜனவரி 25-ம் தேதி தொடங்குகிறது. முன்னதாக, இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 10-ம் தேதி வெளியிடப்படுகிறது. வாக்காளர் அடையாள அட்டைகள் ஒருபுறம் தயாராகிக் கொண்டிருக்க, அரசியல் கட்சிகளுடனும் தேர்தல் ஆணையம் தவிரமாக ஆலோசித்து வருகிறது.
 
 இதுவரை இரண்டு கட்டமாக ஆலோசனைகளை நடத்தியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. முதலில் நடந்த ஆலோசனையில், தமிழகத்தில் எத்தனை கட்டங்களாக தேர்தலை நடத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
 
 இரண்டாவதாக அண்மையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேட்பாளர்களின் வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைத்து அதிலிருந்து தேர்தல் செலவுகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தலைமைத் தேர்தல் ஆணையருடன்...இரண்டு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷியும் அரசியல் கட்சிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.
 
 "சட்டப் பேரவைத் தேர்தலை நடத்துவது குறித்து பொதுவாக மட்டுமே ஆலோசிக்கப்படுகிறது' என தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், எத்தனை கட்டங்களாக தேர்தலை நடத்துவது? பண பட்டுவாடாவைத் தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுப்பது? என்பன குறித்து அரசியல் கட்சிகளுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தப்படுகிறது.  அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 
தேர்வுகளும்...தேர்தலும்...சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுவதால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வாக்குச் சாவடிகளாக மாறும். எனவே, தேர்தல் நேரத்தில் அவைகள் அனைத்தும் தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படும்.  இதனால், அனைத்துத் தேர்வுகளையும் ஏப்ரலுக்குள் முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 2-ல் தொடங்கி 28-க்குள் முடிந்து விடுகின்றன.
  பி.எட். போன்ற கல்லூரித் தேர்வுகள் ஏப்ரல் 26-ம் தேதிக்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பி.எட். தேர்வு ஏப்ரல் 22-ல் தொடங்கி 26-ல் முடிவடைகிறது. ஏப்ரலுக்குள் தேர்வுகள் நிறைவடைவதால் அதன்பின் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேட்புமனுக்கள் ஏப்ரல் இறுதி வரை பெறப்பட்டு, மே முதல் வாரத்தில் தேர்தல் நடத்த வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

அசாருதீனை முந்துகிறார் தோனி

டர்பன் : டர்பனில் ந‌டந்த தென் ஆப்ரிக்காவிற்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 14 டெஸ்ட்கள் வெற்றி பெற்று, முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொள்கிறார் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. அடுத்து, கேப்டவுனிலும் துவங்க உள்ள போட்டியில் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றும் பட்சத்தில், தோனி இரண்டாவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டு, அசாருதீனை 3வது இடத்திற்கு செல்வார். 21 டெஸ்ட் போ்டடிகளில் வெற்றிபெற்று முதலிடத்தில் வங்கப்புலியான

முதல் பிரசவத்தில் 6 கண்மணிகள்

12 வருட காத்திருப்பிற்கு இறைவன் சுரய்யா ஃபவ்லிக்கு 6 குழந்தைகளை அளித்துள்ளான். இதனால் மகிழ்ச்சியடைந்த எகிப்திய தம்பதியினர் செலவுகளை நினைத்து வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். அபுதாபியில் 2000 திர்ஹம் சம்பளத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் சுரய்யாவின் கணவர் ஸாயித் முஹம்மது. குழந்தைகள் இல்லாததன் காரணத்தினால் பல ஆண்டுகளாக சிகிட்சைப் பெற்றுவந்தனர் இருவரும்.

சிகிட்சைக்கான செலவு இவர்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாழ்ந்த இவர்களுக்கு இறைவனின் கருணையினால் 6 குழந்தைகள் என டாக்டர்கள் அறிவித்தவுடன் மகிழ்ச்சியில் திளைத்தவர்கள் செலவுகளை நினைத்து வருந்துகின்றனர்.  3 ஆண் குழந்தைகளும், 3 பெண் குழந்தைகளும் மாதம் முழுமை அடையுமுன்பே பிறந்துள்ளதால் அவர்களுக்கு உடல்நல பிரச்சனைகள் உள்ளன.

2000 திர்ஹம் சம்பளத்தில் 1500 திர்ஹம் அபுதாபி ஏர்போர்ட் சாலையில் அமைந்துள்ள சிறிய வீட்டு வாடகையாக ஸாயித் முஹம்மது செலுத்துகிறார். மீதமுள்ள 500 திர்ஹத்தில் குடும்பத்தை சிரமத்தில் ஓட்டவேண்டும் அவருக்கு. குழந்தைகளின் ஹெல்த் இன்ஸூரன்சுக்கு கூட தன்னிடம் பணமில்லை என கவலைக்கொள்கிறார் ஸாயித்.

கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி குழந்தைகள் பிறந்த பொழுதும் இதுவரை மருத்துவமனையை விட்டு செல்லவில்லை அவர்கள். கார்னிச் மருத்துவமனையில் சில நாட்கள் அவசர சிகிட்சை வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் குழந்தைகள். ஒரு பெண் குழந்தைக்கு அடி வயிற்றில் அறுவை சிகிட்சைக்காக வேறொரு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

செய்தி:தேஜஸ்

Wednesday, December 29, 2010

கவுன்ட் டவுண்,. உலக கோப்பை கிரிக்கெட்


ஒன்பதாவது உலக கோப்பை தொடர் கடந்த 2007ல், முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்தது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. இவை நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பெற்ற அணிகள் "சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறின.

இத்தொடரின் லீக் சுற்றில் அதிர்ச்சி முடிவுகளை காண முடிந்தது. அனுபவ பாகிஸ்தான் அணி(132), அயர்லாந்திடம்(133/7) வீழ்ந்தது. இதே போல முக்கிய லீக் போட்டியில் இந்திய அணி(191), வங்கதேசத்திடம்(192/5) தோல்வி அடைந்தது. இதையடுத்து, இந்திய துணை கண்டத்தின் இரண்டு நட்சத்திர அணிகளும் லீக் சுற்றுடன் வெளியேற, உலக கோப்பை போட்டிகள் களை இழந்தன.

முதலாவது அரையிறுதியில் இலங்கை அணி, நியூசிலாந்தை வென்றது. இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது.

ஓவர் குறைப்பு:பார்படாசில் நடந்த பைனலில் முன்னாள் சாம்பியன்களான ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதின. மழை காரணமாக ஓவர்களின் எண்ணிக்கை 38 ஆக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு கில்கிறிஸ்ட் அதிரடி துவக்கம் தந்தார். பவுண்டரி, சிக்சர் மழை பொழிந்த இவர், 149 ரன்கள் விளாசினார். இதன் மூலம் உலக கோப்பை பைனலில் அதிக ரன் எடுத்து சாதனை படைத்தார். ஹைடன்(38), கேப்டன் பாண்டிங்(37) அசத்த, 38 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்தது.

இலக்கு மாற்றம்:கடின இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு ஜெயசூர்யா(63), சங்ககரா(54) நம்பிக்கை தந்தனர். அடுத்த வந்தவர்கள் ஏமாற்றினர். இந்த நேரத்தில் மீண்டும் மழை குறுக்கிட, 36 ஓவரில் 269 ரன்கள் எடுக்க வேண்டுமென இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. 33வது ஓவரில் வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. இப்போட்டியை அடுத்த நாள் நடத்தலாம் என அம்பயர்கள் தெரிவித்தனர். ஆனால், இலங்கை கேப்டன் ஜெயவர்தனா ஆட்டத்தை தொடர விருப்பம் தெரிவித்தார். ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் சுழற்பந்துவீச்சாளர்களை மட்டும் பயன்படுத்த ஒத்துக் கொண்டார். இறுதியில் இலங்கை அணி 36 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்து, தோல்வி அடைந்தது. "டக்வொர்த்-லீவிஸ்' விதிமுறைப்படி 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி, தொடர்ந்து மூன்றாவது முறையாக உலக கோப்பை வென்று சாதனை படைத்தது

சிறுபான்மையினர் வாக்குகளுக்காக மோதும் கலைஞரும், ஜெயலலிதாவும்

அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிறுபான்மை இன மக்களை திசை திருப்பும் நோக்கத்துடன், கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தைப் பற்றி மக்கள் மத்தியில், குறிப்பாக சிறுபான்மை இன மக்களிடையே தவறான பிரசாரத்தை செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் 18.5.2004 அன்று எனது தலைமையிலான அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தின் வாயிலாக அறவே ரத்து செய்யப்பட்டது என்பதை அனைவரும் அறிவர். நடைமுறையில் உள்ள ஒரு சட்டம், ஓர் அவசரச் சட்டத்தின் வாயிலாக ரத்து செய்யப்பட்ட பிறகு, அந்த அவசரச் சட்டத்திற்கு சட்டப்பேரவையின் அனுமதி பெறப்படாவிட்டாலும் கூட, அவசரச் சட்டத்தின் மூலம் ரத்தான சட்டம் தொடர்ந்து ரத்தானதாகவே இருக்கும், மீண்டும் உயிர் பெறாது. இதுதான் சட்ட நிலைப்பாடு.

சட்டப்பேரவைக்கு கொண்டு வந்தால் தான் ரத்தாகும் என்றில்லை. இது 1985ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில்  5  நீதிபதிகள்  வழங்கிய  தீர்ப்பிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஏற்கெனவே நான் முதல்வராக இருந்தபோது, 21.5.2005 அன்று தெளிவுபட எனது அறிக்கையின் வாயிலாகவும், 2006 சட்டப்பேரவை பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போதும், அதற்குப் பின்பும் பல சூழ்நிலைகளில் தெரிவித்திருக்கிறேன்.

2006ல் கருணாநிதி ஆட்சி அமைத்த பிறகு இந்த அவசரச் சட்டத்தை மீண்டும் சட்டப்பேரவைக்கு கொண்டு வந்து அதனை அவரது அரசு தான் ரத்து செய்தது என்று கூறுவது, ஏற்கனவே ஒருவரால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட ஒரு பிரேதத்தை தோண்டி வெளியே எடுத்து, மீண்டும் அதில் வேலை பாய்ச்சி "நான் தான் கொன்றேன்" என்று கூறுவதற்கு சமமாகும் என்பதை 2006-லேயே தெளிவுபடுத்தி இருந்தேன். அதையே மீண்டும் கூறுகிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

தானே ரத்து செய்த இந்தச் சட்டத்தை, முதலில் என்ன காரணத்துக்காக கொண்டு வந்தார் என்பதையும், பின்னர் எதற்காக தானே கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்தார் என்பதையும் ஜெயலலிதா விளக்கினால் நல்லது.

கருணா தவறான கருத்துகளை வெளியிடுகிறார்: எரிக்


அரசியல் காரணங்களுக்காக இலங்கை அமைச்சர் கருணா அடிக்கடி தவறான கருத்துகளை வெளியிடுகிறார் என்று நார்வே அமைச்சரும் முன்னாள் சமாதானத் தூதருமான எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கருணா அளித்துள்ள சாட்சியத்தில் தெரிவித்துள்ள கருத்துகள் அனைத்தும் முழுப்பொய் என்றும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருப்பதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது."விடுதலைப் புலிகளுக்கும் நார்வே அரசுக்கும் இடையிலான தொடர்பு குறித்து கருணா தெரிவித்துள்ள கருத்துகள் பொய்யானவை. அவர் கூறுவது போல் போர்நிறுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் வாங்குவதற்கு நார்வே அரசு நிதியுதவி எதுவும் செய்யவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கூறுவதெல்லாம் அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்துகளாக உள்ளன. அவற்றில் எள் அளவும் உண்மையில்லை." என்று எரி்க் சொல்ஹெய்ம் கூறியிருப்பதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உதவித் தொகை

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களை கண்டறிந்து, வீடுகளுக்கே விண்ணப்பங்களை அனுப்பி, உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணை இயக்குனர்கள் ஜெயச்சந்திரன், சேகர் ஆகியோர் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்களுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில், பதிவு, வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்குதல் குறித்து ஆலோசனை நடத்தினர். வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தில், அதிக அக்கறை எடுக்கவும், இன்னும் அதிகம் பேருக்கு உதவித்தொகை வழங்கவும் அறிவுரை வழங்கினர். சமீபத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்து பதிவு செய்தவர்களுக்கும், மாதம் 100 ரூபாய் உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டு சில மாதங்கள் ஆகியும், யாரும் ஆர்வம் காட்டவில்லை. உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் செய்வோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், 10ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்களை கண்டறியவும், அவர்களின் வீடுகளுக்கே விண்ணப்பங்களை அனுப்பி, பூர்த்தி செய்து பெறவும் அறிவுறுத்தப்பட்டது.

அமெரிக்க வாழ் இந்தியர்கள் புகார்?

அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள், தங்களுக்கு விசா கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். 

மும்பை தாக்குதல் சம்பவத்தில் சதி திட்டம் தீட்டிய அமெரிக்காவில் வாழும்  டேவிட் கோல்மேன் ஹெட்லி, விசாவில் மோசடி செய்து இந்தியாவுக்கு பலமுறை வந்து சென்றார். இதுபோன்ற தவறுகள் மீண்டும் ஏற்படக் கூடாது என்பதற்காக, விசா வேண்டி விண்ணப்பிப்பவர்கள் பழைய பாஸ்போர்ட்டை சமர்பிக்கும் நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்களில் போதிய ஊழியர்கள் இல்லாத காரணத்தால், 

ஒரு நாளில் வழங்கக்கூடிய விசாவுக்காக ஒரு மாத காலம் இழுத்தடிப்பதாக, அமெரிக்க வாழ் இந்தியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். விசா வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை கண்டித்து ஹூஸ்டன், சிகாகோ, சான்பிரான்ஸ்சிஸ்கோ நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்கள் முன்பாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் சமீபத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தியுள்ளனர். டில்லியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர் மாநாட்டின் போது, இப்பிரச்னையை கிளப்பப்போவதாக, சர்வதேச இந்திய வம்சா வழி அமைப்பின் தலைவர் இந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கு வந்த மாணவிக்கு திடீரென பிறந்தது குழந்தை!

உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவிக்கு அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்ததால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அடுத்த சேந்தமங்கலம் காலனியை சேர்ந்தவர் மல்லிகா (17) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். வழக்கம்போல் நேற்று காலை பள்ளிக்கு வந்த மல்லிகா, தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறியதால், ஆசிரியர்கள் அவரை ஆட்டோ ஒன்றில் வகுப்பு தோழிகள் இருவருடன் வீட்டுக்கு அனுப்பினர். ஆனால், 

வீட்டிற்கு செல்லாமல், மல்லிகா உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சென்றதும் மருத்துவமனையில் உள்ள கழிவறைக்குள் சென்று சத்தம்போட்டு கதறினார். இதனால், மருத்துவமனை பணியாளர்கள் பதட்டமடைந்து கதவை திறந்து பார்த்த போது, மல்லிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது.தாயையும், குழந்தையையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். 

தகவலறிந்த ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள், மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்டர்நெட், "டிவி'யால் குடும்ப உறவுகள்!

குழந்தைகளிடம் உள்ள நற்பண்புகளை சீரழிப்பதில் "டிவி' மற்றும் இன்டர்நெட் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் பேசிக்கொள்ள குறைவான நேரமே செலவிடுகின்றனர்' என, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் உள்ள சவுத் கலிபோர்னியா பல்கலை சார்பில், "நவீன தொழில்நுட்ப காலத்தில் குடும்ப உறவுகளின் நிலை' குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 57 சதவீத வீடுகளில் இன்டர்நெட் பயன்படுத்தவும், 60 சதவீத வீடுகளில் "டிவி' பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிந்தது. ஆய்வுக்குழுத் தலைவர் மைக்கேல் கில்பர்ட் இதுகுறித்து கூறியதாவது: தொலைபேசி வழியாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், அவர்களின் பெற்றோர்கள் என இரண்டாயிரம் பேர் கலந்து கொண்டனர். அப்போது, பெரும்பாலான பெற்றோர்கள் "டிவி' மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டுக்கு தடைவிதிப்பதும், அமெரிக்க சிறுவர்கள் உண்மையான நண்பர்களை விட, ஆன்-லைன் நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளவே ஆர்வம் காட்டுகின்றனர் என்பதும் தெரிந்தது.

"டிவி' மற்றும் இன்டர்நெட் காரணமாக, சிறுவர்கள் தங்கள் நண்பர்களுடன் போதிய நேரம் செலவிடுவதில்லை. அவர்களின் விளையாட்டு நேரமும் குறைகிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் நேரடியாக தங்களுக்குள் பேசிக்கொள்வதும் குறைந்து வருகிறது. கடந்த 2000ம் ஆண்டுகளில், சிறுவர் சிறுமியர் ஒரு நாளில் நான்கு மணிநேரம் தங்கள் பெற்றோருடன் செலவிட்டனர். இப்போது, இரண்டு மணிக்கும் குறைவான நேரமே ஒதுக்குகின்றனர். இதனால், குடும்ப உறவுகள் பலவீனமடைகின்றன; தேவையற்ற மன அழுத்தமும் ஏற்படுகிறது. ஆன்-லைன் வீடியோ கேம்ஸ் மற்றும் சமூக வலைதளங்கள் தான் இதற்கு முக்கிய காரணம். நவீன தொழில்நுட்பத்தால், குடும்ப உறவுகள் பலப்படுவதற்கு மாறாக, பலவீனமடைந்து வருகின்றன. அதேசமயம், செல்போன் போன்ற தொலைத்தொடர்பு வசதிகள் தங்களுக்கு பெரும் உதவிபுரிவதாகவும் ஆய்வில் பங்கேற்றவர்கள் கூறினர். இவ்வாறு மைக்கேல் கில்பர்ட் கூறினார்.

இந்தியா வெற்றி


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானஇரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றிபெற்றது.இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது இந்தியா.டர்பனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வி.வி.எஸ்.லட்சுமண் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார்.தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.பின்னர் தனது முதல் இன்னிங்ûஸ விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய வீரர்கள் ஜாகீர்கான் 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 228 ரன்களை குவித்தது. லட்சுமண் அதிகபட்சமாக 96 ரன்கள் குவித்தார்.  தென்னாப்பிரிக்கத் தரப்பில் மோர்கல், சோட்சோபி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.முன்னதாக 3-வது நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. காலிஸ் 12 ரன்களுடனும், டிவில்லியர்ஸ் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 4-வது நாள் ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய பெüலர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அணியின் ஸ்கோர் 123 ரன்களை எட்டியபோது காலிஸ் 17 ரன்களில் ஸ்ரீசாந்த் பந்துவீச்சில் வீழ்ந்தார். ஸ்ரீசாந்த் வீசிய பவுன்சரை காலிஸ் தவிர்க்க முயன்றபோது பந்து அவரது குளோவ்ஸில் பட்டு சேவாக்கின் கையில் தஞ்சம் புகுந்தது. அடுத்து டிவில்லியர்ûஸ 33 ரன்களில் ஹர்பஜன் வெளியேற்ற இந்திய வீரர்களிடையே நம்பிக்கை அதிகரித்தது.பின்னர் வந்த பவுச்சர் (1), ஸ்டெயின் (10), ஹாரிஸ் (7) ஆகியோரை இந்திய வீரர் ஜாகீர்கான் அடுத்தடுத்து வீழ்த்தி தென்னாப்பிரிக்காவை தோல்வியின் விளிம்பிற்குக் கொண்டுவந்தார். பின்னர் வந்த மோர்கல் 20 ரன்களில் ஆட்டமிழக்கவே, அடுத்துவந்த சோட்சோபி ரன் எடுக்காமலேயே ரன் அவுட் ஆனார். இதனால் தென்னாப்பிரிக்காவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆஸ்வெல் பிரின்ஸ் 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்திய வீரர்கள் ஜாகீர்கான், ஸ்ரீசாந்த் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.சிறப்பாக விளையாடி ரன் குவித்து அணியின் வெற்றிக்கு உதவிய லட்சுமண் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.இதன்மூலம் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றுள்ளன.

பி.எஸ்சி பட்டப்படிப்பில் 10 வயது சிறுமி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 10 வயது சிறுமி ஒருவர் பி.எஸ்சி பட்டப்படிப்பில் சேர அனுமதி பெற்றுள்ளார்.லக்னோ பல்கலைக்கழகத்துடன் இணைந்த சிஎம்எஸ் கல்லூரியில், சுஷ்மா வர்மா என்னும் சிறுமி பட்டப்படிப்பில் சேர விண்ணப்பம் அனுப்பியிருந்தார். இதுகுறித்து தீவிரமாக பரிசீலித்த பல்கலைக்கழகத்தின் சேர்க்கை குழு அவருக்கு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.சுஷ்மாவின் அண்ணன் சைலேந்திரா தனது 14 வயதிலேயே கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்று சாதனை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.சுஷ்மாவின் தந்தை தேஜ் பகதூர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.   

Tuesday, December 28, 2010

மின் கட்டணம் இணைய தளத்தில்

இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் சேவை மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது,' என, மதுரை மண்டல மின் வாரிய தலைமை பொறியாளர் ஆ. நச்சாடலிங்கம் தெரிவித்தார்.


அவரது அறிக்கை: தாழ்வழுத்த நுகர்வோர் தங்களின் மின் கட்டணத்தை இணைய தளம் மூலம் செலுத்தும் வசதியை வாரியம் ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கோவையை அடுத்து இத்திட்டம் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை மண்டலத்திலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை இணைய தளம் வழியாக கடன் அட்டை, வங்கி அட்டை மற்றும் வங்கி இணைய தள சேவை மூலம் பயன்படுத்தி கொள்ளலாம்.கடன் அட்டை: ஆக்ஸீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிகளின் கடன் அட்டைகளுக்கு 2.09 சதவீதம் சேவை கட்டணம்.

வங்கி அட்டை: இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கிகளின் கடன் அட்டைகளுக்கு 5 முதல் 10 ரூபாய் வரை சேவை கட்டணம்.வங்கி இணைய தள சேவை: இந்தியன் வங்கி, ஆக்ஸீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., சிட்டி யூனியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில் சேவை கட்டணம் இல்லை. இச்சேவை எஸ்.பி.ஐ., எச்.டி.எப்.சி., உட்பட பல வங்கிகளில் விரிவுபடுத்தப்படவுள்ளது.

நுகர்வோர் தங்களது இணைய தள சேவையை பெற தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோக கழகத்தின் அலுவலக இணைய தளம் http://www.tneb.in க்கு சென்று முதல் முறை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு கட்டணம் கிடையாது. பின், எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தும் மின் இணைப்பிற்கு கம்ப்யூட்டர் மூலம் பணம் செலுத்தலாம்.நுகர்வோர்கள் தாங்கள் பணம் செலுத்திய விவரங்கள் மற்றும் கட்டண விவரங்களை http:www.tnebnet.org/newlt/menu2/html என்ற இணைய தளத்தின் மூலம், தங்களது மண்டலம் (உதாரணம் மதுரை, கோவை) மற்றும் பத்து இலக்க மின் இணைப்பு எண்ணை குறிப்பிட்டு அறிந்து கொள்ளலாம். பணம் செலுத்தும் சேவையை நேரிடையாக பெற httb://www.tnebnet.org/awp/TNEB/index.php என்ற இளைய தளத்தின் மூலமாகவும் பெறலாம். இணைய தள கட்டணம் செலுத்தும் சேவையில் வரும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய ltbill@tnebnet.org. என்ற இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை

ஈரானின் உளவுபார்த்ததாக இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு செய்தி ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது. 

இது குறித்து ஐ.ஆர்.ஏன்.ஏ. ஏனும் ஈரான் குடியரசு செய்தி நிறுவனம் கூறியிருப்பதாவது: ஈரானின் கடந்த 2004-ம் ஆண்டு முக்கிய ரகசியங்கள் வெளியானது குறித்து விசாரணை நடைபெற்றது.அப்போது இஸ்ரேல் நாட்டைச்சேர்ந்த அலி அக்பர் சிதாத் என்பவர் தனது மனைவியுடன் சுற்றுலா வந்ததாகவும் பின்பு ஈரானின் ராணுவ நடவடிக்கைகளை வேவு பார்த்து வந்ததுடன் , இஸ்ரேல் நாட்டின் உளவாளியாக செயல்பட்டதாக கைதுசெய்யப்பட்டார். 

பின்னர் நீதித்துறையின் விசாரணையில் இவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால் சிதாத்திற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதன்படி ஈரானின் ஈவின் எனும் சிறையில் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்த செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது. தூக்கலிடப்பட்ட சிதாத்திற்கு துருக்கி, தாய்லாந்து, நெதர்லாந்து நாடுகளிலும் ரகசிய தொடர்பு வைத்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

எனது எதிரிகள்...

நமது சமுதாயத்தில் தினமும் நாம் பல முகங்களை பார்க்கிறோம், பழகுகிறோம் நமக்கு அனைவரும் பிடிப்பதில்லை வெகு சிலரே நம்மை கவருகின்றனர் மீண்டும் அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நண்பர்கள் ஆகிவிடுகிறோம். இதில் நண்பர்கள் குறைவு, பிடிக்காதவர்கள் (எதிரிகள்) அதிகம். ஏன் அவர்கள்  பிடிக்கவில்லை இதுவே எனது எதிரிகள்.....

பொது இடத்தில்
புகை பிடிப்பவர்கள்.......

எச்சில் துப்புபவர்கள்.....

தண்ணி அடித்து விட்டு
வாகனம் ஓட்டுபவர்கள்...
பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்.....

பேசுகிறேன் என்று சொல்லி
மொக்கை போடுபவர்கள்......

நான் சொல்வது தான் சரி
என்பவர்கள்.......

தனது தவறை
ஓத்துக்கொள்ளாதவர்கள்......

மனைவியை அடிப்பவர்கள்.......

முககவசம் அணியாமல்
வாகனம் ஓட்டுபவர்கள்.......

ஏழை மக்களை வயிற்றில்
அடிப்பவர்கள்.......

வேலை வாங்கித்தருகிறேன் என்று
அப்பாவிகளை ஏமாற்றுபவர்கள்.......

கூடவே இருந்து குழி
பறிப்பவர்கள்........

என்னிடம் பணம் இருக்கிறது
என்னால் எல்லாம் செய்யமுடியும்
என்று அகந்தையில் இருப்பவர்கள்........

மக்களுக்கு சேவை செய்கிறேன்
என்று சுருட்டும் ஓட்டுப்பொறுக்கிகள்.......

இவை அனைத்தையும் விட
நம் வீட்டில் பழகி நமது நண்பன் / தோழி
என்னும் பெயரில் நம்பிக்கைத் துரோகம் செய்யும்
துரோகிகள்.......

இன்னும் நிறைய இருக்கு.........
என்ன செய்வது இதுதான் நமது சமுதாயம்..

வெள்ளத்தில் மூழ்கிய,..ஆஸ்திரேலியா


ஆஸ்திரேலியாவில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மழையால் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள நதிகளில் அபாய அளவைத் தாண்டி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில நதிகளில் வெள்ளப்பெருக்கெடுத்து நகரங்களுக்குள் புகுந்துவிட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.  நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் பிரிஸ்பேன் உள்ளிட்ட 30 நகரங்கள் கடுமையாகப் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.  சின்சில்லா,டால்பி, தியோடர் ஆகிய நகரங்களுக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்த மூன்று நகரங்களையும் வெள்ளத்தால் பாதித்தவையாக அரசு அறிவித்துள்ளது. ஆல்பா,ஜெரிசோ, வாரா, பகுதிகளுக்குள் எந்த நேரத்திலும் வெள்ளம் புகலாம் என்ற அபாயகர நிலை உருவாகியுள்ளது. இதனால் இப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் வீடுகளை காலி செய்து கொண்டு பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் 1956-ல் வரலாறு காணாத வகையில் மழை பெய்தது. இதில் லட்சக்கணக்கான மக்கள் உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்டனர். அதையடுத்து இப்போதுதான் பலத்த மழை பெய்து வருகிறது.  அங்குள்ள டேவ்சன் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 1956-க்கு பின்னர் இப்போதுதான் டேவ்சன் நதியில் இந்த அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நதிகளின் நீர்மட்ட அளவு வேகமாக உயர்ந்து வருகிறது. இதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். முடிந்த அளவுக்கு மக்களை பாதிக்காத வண்ணம் நீரை வேறு பகுதிக்குள் திருப்பிவிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வெள்ளம் பாதிப்பதை தடுக்க வழியே இல்லாத பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றி வருகின்றனர். மீட்புப் பணியில் லட்சக்கணக்கான பாதுகாப்புப் படை வீரர்களும், தன்னார்வத் தொண்டர்களும் ஈடுபட்டுள்ளனர்.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவியையும் செய்வதற்கு அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இஸ்ரேலின் காஸ்ஸா மீதான கொடூரத் தாக்குதலுக்கு இரண்டாவது ஆண்டு நிறைவு

காஸ்ஸா,டிச.29:1400 பேர் உயிரிழப்பு, 5000க்கும் அதிகமானோர் காயம், 4000 வீடுகள் தகர்ப்பு- 22 தினங்கள் நீண்ட இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலுக்கு ஃபலஸ்தீன மக்கள் இழந்தவைகள் இவை.

2009 ஆண்டு புது வருடத்தை எதிர் நோக்கியிருந்த ஃபலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் வெறித்தனத்தின் உச்சக்கட்டத்தில் கோரத்தாண்டவமாடிய பொழுது உலக சமூகம் மெளனம் சாதித்தது.

தடைகளினால் தீரா துயரத்திற்கு ஆளாக்கப்பட்ட காஸ்ஸாவின் ஃபலஸ்தீன் மக்களை ஆயுதங்களால் எதிர்கொண்டு தங்களது வலிமையை வெளிப்படுத்தியது இஸ்ரேல்.

மூன்று வாரங்கள் நீண்ட இந்த போரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காஸ்ஸா மக்கள் தங்கள் வீடுகளை இழந்தார்கள். ஐ.நா சபையினால் நடத்தப்படும் பள்ளிக்கூடங்களிலும் இதர மக்கள் கூடும் இடங்களிலெல்லாம் இஸ்ரேல் ஏவுகணைகளையும், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசியது.

காஸ்ஸா மீது இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலைக் குறித்து விசாரிக்க ஐ.நாவால் நியமிக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவைச் சார்ந்த நீதிபதி ரிச்சார்டு கோல்ட்ஸ்டோன் இஸ்ரேலின் போர்க்குற்றம் தொடர்பாக ஆதாரங்களை திரட்டி அறிக்கையை சமர்ப்பித்த பொழுதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இஸ்ரேலின் மீது எடுக்கப்படவில்லை.

சிறுவர்களை மனித கேடயமாக பயன்படுத்தி ஃபலஸ்தீன் போராளிகளை இஸ்ரேல் ராணுவம் எதிர்கொண்டது என 575 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் கோல்ட்ஸ்டோன் தெரிவிக்கிறார்.

போராளிகள் உள்ளே இருக்கின்றார்கள் என்ற சந்தேகத்தில் கட்டிடங்களிலும், வீடுகளிலும் முதலில் ஃபலஸ்தீன் சிறுவர்களை அனுப்பியது இஸ்ரேல் ராணுவம்.

பல தலைமுறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சர்வதேச அளவில் தடைச் செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை காஸ்ஸா மக்கள் மீது இஸ்ரேல் வீசியதாகவும் ஆதாரங்கள் கிடைத்தன.

இஸ்ரேலின் கொடூர தாக்குதல் நிகழ்ந்து இரண்டாவது வருடம் நிறைவுறுவதையொட்டி ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீனர்கள் காஸ்ஸாவின் வீதிகளில் இறங்கி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
செய்தி:தேஜஸ்

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!